Monday, March 28, 2016

திங்கக்கிழமை160328 :: தனியாப்பொடி     சமீபத்தில் அவசர மற்றும் அவசிய காரணமாக மதுரை செல்ல வேண்டி இருந்ததால் ஐந்து நாட்களுக்கு வீட்டில் மகன்கள், மாமியாருக்கு உணவுப் பிரச்னை இல்லாதிருக்க என் பாஸ் அடைமாவு,  தோசை மாவு,  இட்லி மாவு, மற்றும்  மிளகாய்ப்பொடி,  பருப்புப்பொடி, தனியாப்பொடி செய்து வைத்து விட்டு வந்தார்.
 

     அவைகள் எல்லாம் நாங்கள் ஊரிலிருந்து வந்த பின்னும் மிச்சம் இருந்தன என்பது வேறு கதை!
 

     இதில் இன்று தனியாப்பொடி செய்வது எப்படி என்று மட்டும் சொல்லி விடுகிறேன்.  இதைப் பற்றி அறியாதவர்கள், தெரியாதவர்கள் யாராவது ஒருவராவது வந்து  'ஐயா... இது எனக்குப் புதுசு'  என்று சொன்னால் தன்யனாவேன்.  பதிவின் பலன் எனக்கும், ஒரு ஏழை அப்பாவிப் பதிவரை (ஹிஹிஹி... நான்தான்) மகிழ்வித்த புண்ணியம் அவர்களுக்கும் கிட்டும்!
 


                               Image result for coriander seed images  Image result for coriander seed images
 
     தனியாப்பொடி என்பது யாரும் இல்லாமல் தனியாகச் செய்யும் / சாப்பிடும் பொடி என்று நினைப்பவர்களை சுஜாதாவின் பசித்த புலி தின்னட்டும்!
                                      Image result for kadalai paruppu images     Image result for ulutham paruppu images
 
      ரெண்டு ஸ்பூன் கடலைப் பருப்பு, ரெண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு (சிறு) டம்ளர் தனியா, கொஞ்சம் பெருங்காயம், தேவையான அளவு காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒவோன்றாய்ப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு மிக்ஸியில் தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து விடவும்.
 

                       Image result for dry mirchi images  Image result for perungayam images    Image result for perungayam images

     இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.  மோர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.  தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்!


படங்கள்  :  நன்றி இணையம்.

28 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
தம +1

கோமதி அரசு said...


'ஐயா... இது எனக்குப் புதுசு' என்று சொன்னால் தன்யனாவேன். பதிவின் பலன் எனக்கும், ஒரு ஏழை அப்பாவிப் பதிவரை (ஹிஹிஹி... நான்தான்) மகிழ்வித்த புண்ணியம் அவர்களுக்கும் கிட்டும்!//

நீங்கள் சொல்லும் செய்முறை புதுசு தான்.

அம்மா சொல்லிக் கொடுத்த தனியா பொடியில் உளுந்து ஒரு கரண்டி, கடலைப்பருப்பு அரைக்கரண்டி, தனியா ஒரு கரண்டி, வற்றல் மிளகாய் மூன்று, பெருங்காயம் சிறு துண்டு, மிளகு கால்ஸ்பூன் உடனே பொடித்து உடனே சாப்பிடலாம் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடி செய்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். நாள்பட வைத்துக் கொள்வதாய் இருந்தால் எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

கோமதி அரசு said...

உளுத்தம் பருப்பு அரைக்கரண்டி தான் தவறுதலாய் ஒரு கரண்டி என்று எழுதி விட்டேன்.

பழனி.கந்தசாமி said...

ஆஹா, இதுவரைக்கும் கேள்விப்படாத சமாச்சாரமாக இருக்கிறதே? "தனியா", அப்படீன்னா என்னங்க?

துளசி கோபால் said...

இதை கொத்தமல்லி விதை சாதமுன்னு லஞ்சுக்குக் கொண்டுபோன நினைவு வந்துருச்சு!

துளசி கோபால் said...

இதை கொத்தமல்லி விதை சாதமுன்னு லஞ்சுக்குக் கொண்டுபோன நினைவு வந்துருச்சு!

சாந்தி மாரியப்பன் said...

புதியதொரு குறிப்பு.. பகிர்விற்கு நன்றி :-))

Geetha Sambasivam said...

புதுசுனு சொல்ல ஆசை தான். ஆனால் நான் சாப்பிட்ட தனியாப் பொடி நினைவில் வந்து தொண்டையை அடைக்கிறது.ஆகவே புதுசுனு சொல்ல முடியாது! :)

Geetha Sambasivam said...

இவற்றுக்கெல்லாம் நிறைய நல்லெண்ணெய் தேவைப்படும். அதுக்காகவே பலபேர் தவிர்ப்பாங்க. :)

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

ஓமப் பொடி
காரப் பொடி
உப்புப் பொடி
மிளகுப் பொடி
எல்லாம் படித்தேன்
ஆனால்,
தனியாப் பொடி பற்றி
இன்று தான் அறிந்தேன்!
சிறந்த வழிகாட்டல்

ராமலக்ஷ்மி said...

எனக்குப் புதுசு. நன்றி:)!

Ajai Sunilkar Joseph said...

தனியாப் பொடி தனியாக செய்ய போகிறேன்.....
செய்முறை அருமை ....நன்றி நட்பே

Avargal Unmaigal said...

ஐயா தனியா போடி எனக்கு புதுசு பதிவாக்கி தந்தைமைக்கு பாராட்டுக்கள் அப்புறமும் அடைமாவு தோசை மாவு இட்லிமாவு என்று சொல்லி இருக்கிறீர்களே அப்படின்ன என்னய்யா அது? அது பற்றியும் பதிவு வருமா?ஹீஹீஹீ

KILLERGEE Devakottai said...

புதுசு கண்ணா புதுசு.

Bagawanjee KA said...

தனியா ..ஒ ..தனியா ஹிந்தி பாட்டுதான் எனக்குத் தெரியும் :)

Angelin said...

தனியாபொடி இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை ஆகவே நன்றீஸ் :)

இந்த காம்பினேஷனில் தும்கூர் இட்லிபொடி என்று ஒன்றை எனது சமையல் கட்டிங் ..பேப்பர் கட்டிங்க்ஸ் :)
கலெக்ஷனில் பார்த்த நினைவு வந்து சென்றது ..

வல்லிசிம்ஹன் said...

இது கறிப்பொடி இல்லையோ. கத்திரிக்காய்க்கு கூடப் போடப்பட்டால் ருசி அமர்க்களம்.

ஆனாலும் தனியாஆஆஆஆ சாப்பிடுவதால் தனிப் பொடிதான். நல்லவாசனை இங்கயே வருகிறது. செய்து வைக்கிறேன். ஜீரணத்துக்கும் நல்லது. நன்றி ஸ்ரீராம்.

புலவர் இராமாநுசம் said...

எனக்கும் புதுசுதான்! மிக எளிபாக செய்யலாம் போல!

மனோ சாமிநாதன் said...

எனக்கும் இது புதியது தான்! குறிப்பிற்கு நன்றி!

ரூபன் said...

வணக்கம்
ஐயா.

புதிய விடயமாக இருக்கு ஐயா....த.ம 10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Ilangovan Rangarajan said...

ருசிகரமான பதிவு. இளங்கோவன்

Ilangovan Rangarajan said...

ருசிகரமான பதிவு. இளங்கோவன்

kg gouthaman said...

நன்றி + நன்றி இளங்கோவன் சார் !

'நெல்லைத் தமிழன் said...

இது வரை இதனை நான் கேள்விப்பட்டதே இல்லை. பொதுவாக கொத்தமல்லி விரைப் பொடியை (வெறும் கொத்தமல்லி விரையில் செய்தது) சாம்பாருக்குப் போட்டுத்தான் பழக்கம். கருவேப்பிலைப் பொடி, பருப்புப்பொடி போன்று தனியாப்பொடி ஒன்று உள்ளது என்று இப்போதுதான் தெரியும். நிறையப் பின்னூட்டம் வந்துள்ளதே என்று, இனிமேல், வெந்தயப்பொடி, உளுத்தம்பருப்புப்பொடி என்று பொடி வகைகளாகவே திங்கக் கிழமையை நிரப்பிவிடாதீர்கள்.

கோமதி அரசு said...

http://mathysblog.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF

திருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக சமையல் குறிப்பு வேண்டும் என்று ஜலீலா கேட்ட போது ”ஆஹா உருளை” என்ற தலைப்பில் கொடுத்த பதிவில் தனியா பொடி, உருளை காரக்கறி, தக்காளி சாதம். ஆப் பாயில் உருளை செய்முறை குறிப்பு கொடுத்து இருக்கிறேன்.

கோமதி அரசு said...

டிசம்பர் மாதம் 2012லில் கொடுத்த குறிப்பு.

பரிவை சே.குமார் said...

நல்ல குறிப்பு அண்ணா...

Thulasidharan V Thillaiakathu said...

இது புதுசுப்பா....

எங்க வீட்டுல எப்பவுமே ஸ்டாக் இருக்குமே....ஹிஹிஹி...(அப்ப ஏன் புதுசு..எல்லாம் பாவம் நீங்க கொஞ்சம் சந்தோஷப்படுங்களேன் அப்படினுதான்...இது ரெடியாக இருந்தால் இதையே தேங்காய் சேர்த்து அரைத்துக் கூட்டிற்கு விட்டால் ஆச்சு. காய் வதக்கலிலும் சேர்க்கலாம். இப்படிப் பல பயன்கள் என்பதால் எங்கள் வீட்டில் எப்பவுமே இருக்கும். இதோ இப்போது ஊருக்குப் போகும் மகனிற்கும் செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே கணவருக்குக் கொடுத்து விட்டாச்சு.

உங்கள் விவரணத்தை ரசித்தோம்...

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!