பெயர் சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பிறப்பு அலுவலகத்தில் ஐநூறு அடுத்த லஞ்சம்.
நல்ல பள்ளியில் சேர்க்க நன்கொடை என்ற பெயரில் லஞ்சம்.
நல்ல மதிப்பெண் பெற விடைத்தாள் துரத்தி லஞ்சம்.
மதிப்பான கல்லூரியில் இடம் கிடைக்க மேனேஜ்மென்ட் என்ற பெயரிலொரு லஞ்சம்.
கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை லஞ்சம்.
நல்ல வேலை கிடைக்க, நல்ல எதிர்காலம் கிடைக்க நாளும் கடவுளுக்கு லஞ்சம்.
வீடுகட்ட வில்லங்க சான்றிதழ் பெற கார்ப்பரேஷனுக்கு லஞ்சம்.
தொல்லை இல்லாமலிருக்க கவுன்சிலருக்கு லஞ்சம்.
வாட்டர் கனெக்ஷன், மின் கனெக்ஷன் எல்லாவற்றிலும் கலெக்ஷன் லஞ்சம்.
ரேஷன் கார்ட் வாங்க லஞ்சம்...பான் கார்ட் வாங்க லஞ்சம்.
பாஸ்போர்ட் வாங்க போலீசுக்கு லஞ்சம்.
விரைந்து விசா வாங்க அங்கும் லஞ்சம்.
பெண் பார்க்க ப்ரோக்கருக்கு லஞ்சம்..விரைந்து மணமுடிக்க ரெஜிஸ்டராருக்கு லஞ்சம்.
வெளியூர் சென்று வர விரைந்த பயணச் சீட்டுறுதிக்கு அரசாங்க அதிகாரபூர்வ தத்கால் லஞ்சம்.
வருமானவரி சரி செய்ய ஆடிட்டர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம்.
நல்ல கார் வாங்க சுங்கத்துறைக்கு லஞ்சம்.
எட்டு போடாமலிருக்க எக்கச்சக்க லஞ்சம்.
ஃபேன்சி நம்பர் வாங்க. கேஸ் சீக்கிரம் கிடைக்க லைன்மேனுக்கு லஞ்சம்.
வழக்கில் மாட்டினால் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம்.
ஹெல்மெட் போடாவிட்டால் ஐம்பது ரூபாய் லஞ்சம்.
ஆர்சி புக் இல்லாவிட்டால் ஐநூறு ரூபாய் லஞ்சம்.
வேண்டிய ஆளைப் பிடிக்க லஞ்சம்.
வேண்டாத ஆளை அடிக்க லஞ்சம்.
இறந்த பின்னும் சீக்கிரம் எரிக்க சுடுகாட்டில் லஞ்சம்.
இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம்.
லஞ்ச வழக்கில் சிக்கினால் மந்திரிக்கு லஞ்சம்.
கொடுத்த லஞ்சங்கள் போக, வாங்கும் லஞ்சம்?
காய்கறிக்காரன் தரும் கறிவேப்பிலை லஞ்சம்.
அரசியல்வாதி தரும் இலவச லஞ்சம்.
பத்திரிகைகள் தரும் இலவச இணைப்பு லஞ்சம்.
தொலைகாட்சி தரும் புதிய படங்கள் லஞ்சம்.
வாக்களிக்க வாங்குவோம் லஞ்சம்.
லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமாம்! ஓங்கிக் குரல் எழுகிறது.
ஆஹா, ஒழித்து விடலாம்.....
#மீள்#
ஆஹா முடிவில் ஸூப்பர் சவுக்கடி நண்பரே கடைசியில் எதுதான் மிஞ்சும் ?
பதிலளிநீக்குலஞ்ச ஒழிப்பு துறையே லஞ்சம் வாங்கும்போது லஞ்சத்தை எப்படிஃஃஃ ஒழிப்பது
பதிலளிநீக்குஎங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் ஒழிப்பது கஷ்டம்.
பதிலளிநீக்குமீளவே முடியாதா எனும் குமுறலாக.. இந்த #மீள்!
பதிலளிநீக்குலஞ்சமே கொடுக்காமலோ வாங்காமலோ வாழ்க்கையே இல்லையோ
பதிலளிநீக்குசரி தான்.....
பதிலளிநீக்குவாழ்க பாரத moneyத் திருநாடு :)
பதிலளிநீக்குலஞ்சத்திலே ..... நீ நேற்று வந்தாய் ....
பதிலளிநீக்குநேற்று முதல் ஓர் ..... நினைவு தந்தாய்.
நினைவு (பதிவு) தராமல் நீ ..... இருந்தால் ......
ஒழித்திருக்கலாம் இந்த லஞ்சம் என்ற பேயை. :)
இந்த ஒன்றுதான் என்னை பயமுறூத்துகிறது இந்தியா திரும்ப. மீளாத துயரம்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி. முடிவில் வெறுப்புதான் மிஞ்சும்!!!!!!
பதிலளிநீக்குநன்றி நண்பர் வலிப்போக்கன். நீங்கள் சொல்வதும் சரிதான். சமீபத்தில் பழைய ஜோக்கொன்று - ஸ்ரீதர் கார்ட்டூன் பாத்தேன். அதில் கூட இதே கருத்து இருந்தது! முடிந்தால் பின்னர் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி. 'மீளவே / மீள்' வார்த்தை விளையாட்டை ரசித்தேன்.
பதிலளிநீக்குஇல்லை ஜி எம் பி ஸார். வருகைக்கும் கருத்துக்கும்நன்றி.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... என்ன அருமையான ஒரு சுசீலாம்மா பாட்டை உல்டா செய்திருக்கிறீர்கள்! நன்றி வைகோ ஸார்.
பதிலளிநீக்குநன்றி வல்லிமா.
பதிலளிநீக்குலஞ்ச லாவண்யமற்ற ராமராஜ்ஜியம் மே மாதத்திற்குப் பிறகு இங்கே வருதா இல்லையா பாருங்களேன்.
பதிலளிநீக்குகொஞ்சம் லஞ்சம்
பதிலளிநீக்குகொடுக்கா விட்டால்
பின்னால் அலைந்து
கெஞ்ச வைக்கும் பாரதம்....
நன்றி அஜய்.
பதிலளிநீக்குநம்பிக்கைகள் வாழ்க! நன்றி மோகன்ஜி!
பதிலளிநீக்குஎல்லாவற்றிலும் லஞ்சம் புரையோடிக் கிடக்க ஒழிப்போம் என்று சொல்லி இயலாமையால் வெறுப்பு வந்தாலும், மீண்டும் நம்பிக்கையுடன்....
பதிலளிநீக்குவாக்களிக்க வாங்குவோம் லஞ்சம்...அதையாவது நாம் நிராகரித்து ஏதேனும் ஒரு வகையில் அப்பாடா லஞ்சத்துக்குத் துணை போகலைனு நம்மையே நம்மை மெச்சிக்கலாம்...ஒரு ஆறுதல்தான்..
அது சரி இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டதுக்கு????!!!!!!!!!!!!!!!!
ஜி + போட்டு, முகநூலில், முகநூல் ஆனந்தவிகடன் குழுவிலும் போட்டதற்கு என்ன லஞ்சம்??!!!! ஹிஹிஹிஹிஹிஹி
(அடப் பாவிங்களானு நீங்க சொல்றது காதுல விழுது!!! அஹஹ்ஹ்)
பட்டியல் இன்னும் முழுமை பெறவில்லையே!
பதிலளிநீக்குஇன்னும் நிரம்ப இருக்கே!
வாழ்க லஞ்சம்..... :(((((
பதிலளிநீக்குலஞ்சம்... லஞ்சம்...
பதிலளிநீக்குஎதற்கும் லஞ்சம்...
கடைசி வரி கலக்கல் அண்ணா...
இலஞ்சம் வாங்கதவர் இருக்கலாம்! அனால் இலஞ்சம் கொடுக்காதவர் எவருமே இலர் என்பதே என் கருத்து!
பதிலளிநீக்குகடவுளுக்கு லஞ்சம் கொடுக்கணும்னு அவர் கேட்கவே இல்லை. நீங்களாய்க் கொடுக்கறீங்க! ஆகவே அது எடுபடாது. அதேபோல் பாஸ்போர்ட் வாங்கப் போலீசுக்கு லஞ்சம் எல்லாம் கொடுக்க வேண்டாம். பாஸ்போர்ட்டில் போலீஸ் வெரிஃபிகேஷன் இருந்தால் ஒரு வேளை கேட்கிறாங்களோ என்னமோ! நாங்க கொடுத்தது இல்லை. அதே போல் விசாவுக்கும் நோ லஞ்சம்! :)
பதிலளிநீக்குசமையல் GAS CYLINDER DELIVERY செய்யப்படும்போது BILL AMOUNT தவிர EXTRA பணம் தராதவர்கள் யாரும் இருந்தால் தயவுசெய்து அறிய விரும்புகிறேன்.
பதிலளிநீக்குஇது விஷயத்தில் நாம் எல்லோருமே லஞ்சம் கொடுப்பவர்கள் அல்லது லஞ்சம் கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளவர்களாகவே ஆக்கப்பட்டுள்ளோம் என்பதே மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
ஏற்கனவே போட்ட காமேண்ட் காணோம்.
பதிலளிநீக்குappa thalaiviriththaadum Men padam pOdalaamnaal mukap puththakam pokaNum.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... நன்றி துளசிஜி / கீதா. தம வாக்கைப் பொறுத்தவரை அது கொடுத்து வாங்குவது! மியூச்சுவல் லஞ்சம். விகடன் தளத்திலா? அது எப்படி? நான் பார்த்ததில்லை இது வரை.
பதிலளிநீக்குநன்றி நிஷா.. பட்டியலை உங்கள் தளத்தில் தொடரலாமே...
பதிலளிநீக்கு:))))) நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி குமார்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம். மனிதர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து வழக்கம். அதனால் கடவுளுக்கும் அவர் கேட்கவில்லை என்றாலும் லஞ்சம் தரத் தொடங்கி விட்டான் மனிதன். அவரைச் சீக்கிரம் பார்ப்பதற்கே (சக மனிதனுக்குத்தான்) லஞ்சம் தந்து குறுக்கு வழியில் செல்கிறான். 'பாலும் தெளி தேனும் கலந்துனக்கு நான் தருவேன்.. நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா...' என்று அந்தக் காலத்திலேயே தொடங்கி விட்டது! :)))
பதிலளிநீக்குநன்றி வைகோ ஸார். ஏறி வாயு உருளைக்கு அதிக பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். எல்லோரும் முப்பது ரூபாய் வாங்குமிடத்தில் எங்கள் கொடு அணிதான் மட்டும் - அதுதான் லைன்மேன் - மட்டும் 50 ரூபாய் அதிகம் வாங்குகிறார். ஒருமுறை முக நூலில் இது பற்றிச் சொன்னபோது, அங்கு நிறைய பேர்கள் 'அது தப்பில்லை, முதுகு உடைய உருளையைத் தூக்கிக் கொண்டு மாடி எல்லாம் ஏறும் உழைக்கும் வர்க்கம்' என்று பதில் அளித்திருந்தார்கள்.
பதிலளிநீக்கு:)))
வல்லிமா. உங்கள் வேறு பழைய கமெண்ட் இல்லை. பதிவை விட்டு விட்டு, படத்தை மட்டும் பார்த்த உங்களை இந்தப் பதிவை மூன்று தரம் படிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! ஹிஹிஹி...
பதிலளிநீக்குஎரிவாயு உருளை என்பது ஏறி வாயு உருளை ஆனதற்கு வருந்துகிறேன் வைகோ ஸார்! தவறு என்னுடையதும்.
பதிலளிநீக்குஅதே போல 'கோடு மனிதன்' என்பது 'கொடு அணிதான்' என்று மாறிப் புரியாமல் குழம்ப வைப்பதற்கும்! :(
:))))
//எரிவாயு உருளை என்பது ஏறி வாயு உருளை ஆனதற்கு வருந்துகிறேன் வைகோ ஸார்! தவறு என்னுடையதும்.//
பதிலளிநீக்குஇதில் தவறேதும் (எழுத்துப்பிழை) உங்களுடையது இல்லை.
எல்லோரும் பொதுவாக 30 ரூபாய் லஞ்சம் தருவதாகவும், தாங்கள் மட்டும் 50 ரூபாய் லஞ்சம் தர வேண்டியிருப்பதாகவும், தங்கள் விஷயத்தில் லஞ்சம் ஏறி இருப்பதால் ..... ’எரி’ என்பதை ’ஏறி’ எனப்போட்டு இருக்கிறீர்கள், என நான் எனக்குள் நினைத்து சமாதானம் செய்துகொண்டேன்.
//அதே போல 'கோடு மனிதன்' என்பது 'கொடு அணிதான்' என்று மாறிப் புரியாமல் குழம்ப வைப்பதற்கும்! :( //
’லைன் மேன்’ எனத் தூய தமிழில் எழுதினால் மட்டுமே எனக்கு சுலபமாகப் புரியக்கூடியதாக இருக்கும். :)))))
//சமையல் GAS CYLINDER DELIVERY செய்யப்படும்போது BILL AMOUNT தவிர EXTRA பணம் தராதவர்கள் யாரும் இருந்தால் தயவுசெய்து அறிய விரும்புகிறேன். // எனக்குத் தெரிந்து ஐ.ஓ.சி. இதைத் தடை செய்திருக்கிறது. ஆனாலும் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துவரும் நபர் பணம் வாங்காமல் விடுவதில்லை. எங்க வீடு நாலாம் மாடி என்பதால் (லிஃப்ட் இருக்கு; அதில் தான் வரார்) பணமும் அதிகம். அதைத் தவிர தீபாவளி, பொங்கல் இனாம் வேறே. 50 ரூ. கொடுத்தால் கூட இவ்வளவு தானா என்ற அலட்சியத்தோடு பார்ப்பார்கள். இந்த தீபாவளி இனாமுக்கு மட்டும் நாங்க குறைந்த பட்சமாக ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கணும். பேப்பர் போடும் பையர், துணிகளை இஸ்திரி செய்யும் பெண்மணி, வளாகத்தில் வேலை செய்யும் பெண்கள், வளாகப் பாதுகாவலர்கள் என ஒரு பெரிய லிஸ்டே இருக்கு!
பதிலளிநீக்குஆயிரம் ரூபாய் வரை தீபாவளி இனாம் என்று படித்ததும் பயந்து போனேன் கீதா மேடம்! 'நல்ல வேளை, நம்முடைய ஆள் 100 ரூபாயில் திருப்தி அடைந்து விடுகிறாரே இந்த இனாம் விஷயத்தில்' என்று தோன்றியது. பின்னர் கீழே லிஸ்ட் பார்த்ததும்தான் புரிந்தது!
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... எரிவாயு ஜோக் நீங்கள் அடிப்பீர்கள் என்று கட்டாயம் எதிர்பார்த்தேன் வைகோ ஸார். தூய தமிழ் ஜோக் எதிர்பாராதது!
பதிலளிநீக்கு//ஒருமுறை முக நூலில் இது பற்றிச் சொன்னபோது, அங்கு நிறைய பேர்கள் 'அது தப்பில்லை, முதுகு உடைய உருளையைத் தூக்கிக் கொண்டு மாடி எல்லாம் ஏறும் உழைக்கும் வர்க்கம்' என்று பதில் அளித்திருந்தார்கள்.//
பதிலளிநீக்குஉழைக்கும் வர்க்கம்தான் .... ஒத்துக்கொள்வோம் !
சம்பளமே ஏதும் வாங்காமல் மிகக்கடுமையாக உ(பி)ழைக்கும் வர்க்கத்திற்கான இந்த லஞ்சத்திற்கு, சர்வீஸ் சார்ஜ் என நாகரீகமாக ஓர் பெயர் கொடுத்து, பில்லிலேயே ஏதோ ஒரு கணிசமான தொகையை நிர்ணயித்து சேர்த்துக் காட்டட்டுமே!!
டெலிவரி செய்ய வருபவர் நம்மிடம் தலையைச் சொறியாமல், இஷ்டப்படி கேட்காமல் இருக்கட்டுமே !!!
நாமும் மகிழ்ச்சியுடன் கொடுக்க ரெடியாகத்தானே இருக்கிறோம். எப்படியோ நம் வீட்டிலும் அடுப்பு எரிய வேண்டும் என்பது ஒன்று மட்டும் தானே அவரவர்களுக்கு இன்றைய கவலையாக உள்ளது. :(
லஞ்சம் என்ற பெயரினையாவது, பெயரளவிலாவது ஒழிக்க இந்த ஒரு நாகரீகமான மாற்று ஏற்பாட்டினையாவது செய்வார்களா? என நீங்களும் அவர்களைப்பார்த்துக் கேளுங்கள்.
முதுகு உடைகிறதாம். முதுகெலும்பே இல்லாத லஞ்சம் லாவண்ய ஆசாமிகளுக்கு.
உங்கள் கோபம் எனக்கும் உண்டு வைகோ ஸார். ஆனால் என்ன செய்ய? செய்தித் தாளில் 'இவர்கள் அதிகப் படியான பணம் கேட்கக் கூடாது. கேட்டால் எங்களுக்குச் சொல்லுங்கள்' என்கிற செய்தியையும் கத்தரித்து எடுத்து, கதவில் ஒட்டி, அவர்கள் வரும்போது காண்பிக்கவும் செய்தேன். நான் அந்த எக்ஸ்ட்ரா பணம்' எடுத்து வரும் வரை அதை மிகவும் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்!
பதிலளிநீக்குஇந்த இடுகையை மறு பதிவு செய்ய அனுமதி உண்டா? நன்றி!
பதிலளிநீக்குசெய்யலாம். எங்கள் லிங்க்கையும் கொடுத்துச் செய்யலாம்!! மறு பதிவு செய்து உங்கள் லிங்க்கையும் கொடுங்கள் டாக்டர்.
பதிலளிநீக்கு:))))
நன்றி! ஸ்ரீராம்! என் இடுகை!
பதிலளிநீக்குதமிழகத்தில் டாக்டர்கள் கமிஷன்-kick back வாங்குவது சரியா?தப்பா?
http://www.nambalki.com/2016/04/kick-back.html