=======================================================================================
மணிராஜ் என்கிற
தளத்தில் ஆயிரக்கணக்கான ஆன்மீகப் பதிவுகள் வழங்கி வந்த பதிவர்
இராஜராஜேஸ்வரி 9-2-2016 அன்று வைகுண்டப் பதவி அடைந்தார் என்று அவர் மகன்,
மகள் மூலம் அவர் தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
======================================================================================
எப்படிச் சாப்பிடுவது... எப்போது சாப்பிடுவது?
நேற்று இரண்டு விசேஷங்களுக்குச் சென்று வந்தேன். ஒன்று கிரகப்ரவேசம். அங்கு காலை டிஃபன் முடித்து விட்டு, அடுத்த விசேஷம் ஒரு கனகாபிஷேகம். அங்கு மதியச் சாப்பாடு. இந்த லஞ்ச்சில் ஒரு விசேஷம், யூனிஃபார்ம் அணிந்த இளம்பெண்கள் நிறையப் பேர்கள் பரிமாறியது! ஹிஹிஹி...
நேற்று கோங்குரா சட்னி (துவையலோ), வேப்பிலைக் கட்டி எனப்படும் நாரத்தை இலைப்பொடி, இஞ்சித் தொக்கு, அப்புறம் (சஹிக்க முடியாத) ஒரு எலுமிச்சை ஊறுகாய் போட்டார்கள்.
தயிர்ப் பச்சடி, ஸ்வீட் பச்சடி, தேங்காய்க் கறி, உசிலி இத்யாதி, இத்யாதிகளுடன் பரிமாறப்படும் சில உதிரி ஐட்டங்கள் பற்றித்தான் இந்தப் பதிவு.
ஓகே,
முதலில் இலையின் வலது ஓரத்தில் சாஸ்திரத்துக்கு இடப்படும் துளிப் பாயசத்தை
நக்கி விட்டு (!) பருப்பு சாதம் (நேற்றைய மெனுவில் ஒரு வித்தியாசம்
பருப்புக்கு பதிலாக பருப்புப்பொடி போட்டார்கள்) கலந்து, சாம்பார் ஊற்றிச்
சாப்பிட்டு, சில சமயங்களில் சாம்பார் சாதமும் தனியாகச் சாப்பிட்டு,
(இடையிடையே மானே தேனே சேர்ப்பது போல தயிர்ப்பச்சடி, தேங்காய்க்கறி, அவியல்
இன்ன பிற ஸைடு ஐட்டங்களைத் தொட்டுக் கொண்டே) அடுத்ததாக மோர்க்குழம்போ,
வத்தக்குழம்போ சாப்பிட்டு, அடுத்ததாக ரசம் சாதம், பின்னர் கப்பில்
கொடுக்கப்பட்டிருக்கும் பாயசம் (சிலர் இதை சாப்பிட்டு முடித்த பிறகும்
சாப்பிடுவார்கள். அப்படிச் சாப்பிட்டால் அடுத்த பிறவியில் ராஜா
குடும்பத்தில் - அதாவது மன்னர் குடும்பத்தில் - பிறப்பார்களாம்!!!! )
அப்புறம் கொடுக்கப் பட்டிருக்கும் ஊறுகாயை வைத்துக் கொண்டு (அல்லது
வத்தக்குழம்பைத் தொட்டுக்கொண்டு) தயிர் சாதத்தை முடித்து, ஐஸ்க்ரீமுக்கு
வருவோம். பின்னர் பீடா!
ஆனால், என்ன குழப்பம் வரும் என்றால்,
நடுவில்
ஒரு கரண்டி லெமன் சாதமோ, புளியோதரையோ வைப்பார்கள். அப்புறம் ஒரு மசால்
வடை, அல்லது மிக்ஸர். கொஞ்சம் வாழைக்காய் சிப்ஸ். ஒரு ஜாங்கிரி அல்லது
மைசூர்ப்பாகு அல்லது பெங்கால் ஸ்வீட். அப்புறம் பதர்ப்பேணி.
பதர்ப்பேணியில் இருவகை உண்டு. ஒன்று சேமியா பதர்ப்பேணி. இன்னொன்று பூரி போல இருக்கும் பதர்ப்பேணி.
மேலே சொல்லி உள்ள பாராவில் இருப்பவற்றை எல்லாம், அதற்கு முந்தைய பெரிய பாராவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்... அந்த வரிசையின் நடுவே எங்கே நுழைத்துச் சாப்பிடுவது என்று குழப்பம் வந்து விடும். புளியோதரையோ லெமன் சாதமோ, அவை சாஸ்திரத்துக்குப் போடுவார்கள் என்பதால் அவற்றைச் சிறப்பான ருசியில், பதத்தில் எதிர்பார்க்க முடியாது. கடமைக்கு அள்ளி வாயில் போட்டுக்கொண்டு விடலாம். சில சமயம் இந்த ஐட்டம் சிறப்பானதாகவும் அமைந்து விடும். சிப்ஸ்... அட, அதை விடுங்கள்! எப்போது வேண்டுமானாலும் நொறுக்கலாம். வடையும், ஜாங்கிரி போன்ற ஸ்வீட் வகையறாவும் கொஞ்சம் குழப்பம் என்றால், இந்த பதர்ப்பேணி இருக்கிறது பாருங்கள், அது மகாக் குழப்பம்!
சில
திருமணங்களில் இதை முதலில் பரிமாறி விடுகிறார்கள். சில திருமணங்களில் இதை
நாம் சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்
வைக்கிறார்கள். இதற்கென்று ஓர் சாப்பிடும் வரிசை இருக்கிறதா, எப்போது
என்று (வழக்கம்போலத்) தெரியாமல் இடையில் கிடைத்த அவகாசத்தில் அதைச்
சாப்பிட்டு முடித்தேன்! அடுத்து அதைச் சாப்பிடும் முறை.
ஒரு தட்டில் அந்த வஸ்துவை முதலில் கொண்டு வந்து வைப்பார்கள். அப்படியே எடுத்துச் சாப்பிட்டால் 'சப்'பென்று ஒரு ருசியும் இல்லாமல் இருக்கும். அப்புறம் ஒரு கப்பில் பால் வைப்பார்கள். பதர்ப்பேணியில் சர்க்கரைத் துகள் கொஞ்சம் தூவுவார்கள். சிலர் இந்த பதர்ப்பேணியின் நடுவே லாடுத் துகள்கள் போல ஸ்வீட் ஏதாவது தூவுவார்கள். இந்தப் பாலை எடுத்து அந்தப் பதர்ப்பேணியில் ஊற்றி வைத்து, ஊறியவுடன் சாப்பிட வேண்டியதுதான். அப்பவுமே கூட பெரிதாக அதில் எந்தச் சுவையும் இருப்பது போலத் தோன்றுவதில்லை!
நிறையப்
பேர்கள் அடுத்தடுத்த இலையில் சாப்பிடுபவர்கள் எப்போது, எப்படிச்
சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து, அதே போலப் பின்பற்றுகிறார்கள். நான்
கவலையே படுவதில்லை. எப்போது சாப்பிடுகிறேனோ, அப்போதுதான். என்
அருகிலைக்காரர் நான் பாலை ஊற்றும்போது அவரும் ஊற்றி, நான் நொறுக்கிக் கலந்தபோது அவரும் கலந்து, நான் சாப்பிட்டபோது அவரும் சாப்பிட்டார்!
நண்பர்கள், தங்கள் அனுபவங்களையும், யோசனைகளையும் சொல்லலாம்.
சகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
பதிலளிநீக்குதம 1
என் தளத்தில் வெளியான சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ராஜி அனுப்பிய ஐந்து புகைப்படங்களில் இதுவும் ஒன்று. ஹ்ம்ம் அவரை இழந்துவிட்டோம் என்பதையே நம்ப முடியவில்லை. அதுவும் ஒரு மாதம் ஆகப் போகும் நிலையில் மனது ஏனோ வெறுமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபதிவர்கள் பலரும் வலையில் இருந்து காணாமல் போகிறார்கள். இராஜ இராஜேஷ்வரி அவர்களின் மறைவிற்கு இரங்கல்கள்.
பதிலளிநீக்குகல்யாணச் சாப்பாடும் பதார்த்தங்களும் பரிமாறும் முறையும் வரிசையும் தென் மாநிலங்களிலேயே வேறு படுகிறது. இந்த ஒற்றுமை வேற்றுமை பற்றி ஒன்று அல்லது இரண்டு பதிவு எழுதலாமே.
ஜெயகுமார்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபதிவர்கள் பலரும் வலையில் இருந்து காணாமல் போகிறார்கள். இராஜ இராஜேஷ்வரி அவர்களின் மறைவிற்கு இரங்கல்கள்.
பதிலளிநீக்குகல்யாணச் சாப்பாடும் பதார்த்தங்களும் பரிமாறும் முறையும் வரிசையும் தென் மாநிலங்களிலேயே வேறு படுகிறது. இந்த ஒற்றுமை வேற்றுமை பற்றி ஒன்று அல்லது இரண்டு பதிவு எழுதலாமே.
ஜெயகுமார்
அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்...
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்களுக்கு அப்புறம் இப்படி ஒரு ரெசிபி...?
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்............
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்............
பதிலளிநீக்குசெய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. வலையுலகில் அவருக்கென்று ஒரு நிரந்தர இடம் எப்போதும் உண்டு. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்,,
பதிலளிநீக்குதங்கள் தொகுப்பு நன்றாக இருக்கு,
மன வேதனை அடைந்தேன். சகோ. வலைப்பக்கம் வராததால் செய்தி அறிய முடியாமல் போய் விட்டது.
பதிலளிநீக்குதம 4
தேனம்மையின் சாட்டர்டே ஜாலி கார்னரில் தான் முதன் முதலில் அவர்களை பார்த்தது.
பதிலளிநீக்குஅவர்கள் கனிவான சிரித்தமுகம் மனதில் பதிந்து விட்டது.
அவர்கள் எப்படி ஆன்மீக பதிவே எழுதுகிறார்கள் என்பதற்கான அவர்களின் பேட்டி மிக அருமையாக இருந்தது.
அவர்களுக்கு என் அஞ்சலிகள். அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.
அவர்களைப் பற்றி வியந்து போவேன்.எப்படி இவர்களால் தினம் பதிவும் போட்டு எல்லோர் தளத்திற்கும் போய் கருத்தும் சொல்ல முடிகிறது என்று. ஆன்மீக பதிவுஎன்றால் இராஜராஜேஸ்வரி என்பதை யாராலும் மறக்க முடியாது. அவர்கள் இருந்தால் இன்று சிவராத்திரிபதிவு வந்து இருக்கும்.
பதிவுலகில் ஆன்மீகத்துக்கு ஒரு பெரிய இழப்பு!
பதிலளிநீக்குதிருமதி இராராவின் மறைவு ஈடு செய்ய இயலாதது. ஒரு பதிவில் உங்களுக்கு நாக்கு நீளம் என்று எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது எப்போதும் விருந்துகளில் உண்ணும்போது எனக்கு திருப்தி வராது நான் மிக மெதுவாகச் சாப்பிடுபவன் நீங்கள்குறிப்பிட்டிருக்கும் ஐட்டங்களை நோட்டம் இடுவதற்குள் ரசம் மோர் என்று வந்து விடுவார்கள் ஆகவே எனக்கு இந்த பஃப்ஃபே முறையே சரி.
பதிலளிநீக்குதிருமதி. ராஜராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஆழ்ந்த அனுதாபங்கள்!
பதிலளிநீக்குவிருந்து ,இத்தனை வகையா ? பார்க்கும் போதே மூச்சு திணறுதே :)
அவர்காலமாகி ஒருமாதத்திற்குப் பின்தான் செய்தி தெரிகிறது. எப்படிப்பட்ட ஆன்மீகமறிந்த உயர்ந்த பெண்மணி. இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.உன் உயர்வுக்கு என்சிரத்தாஞ்ஜலி.
பதிலளிநீக்குஆரம்பகாலம் (அதாவது-2011 ) முதல் நாளும் வந்து பின்னுட்டம் இடுவார்!அவர் பதிவுகள் அனைத்தும் தெய்வீக மணம் கமழும்!மறைந்தாலும் மனம் விட்டு மறையாத சகோதரி!
பதிலளிநீக்குஅஞ்சலி செய்தியையும் சாப்பாட்டையும் எப்படி ஒரே பதிவாக எழுதினீர்கள்? பதிவு பற்றி சரிவர கருத்து எழுத முடியாதல்லவா?
பதிலளிநீக்குநல்லவேளை... இரவு ரிஸப்ஷனுக்கு இன்விடேஷன் வரவில்லை. இல்லாவிட்டால், மூன்று வேளையும் நீங்கள் சாப்பிட்டதைப் படித்திருக்கலாம். அடுத்த வாரம் திங்கக் கிழமை, தீபாவளி லேகியத் தயாரிப்பு பற்றி உங்கள் குறிப்பையும் படித்திருக்கலாம்.
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி தேனம்மை லக்ஷ்மணன். நானே குறிப்பிட்டிருக்க வேண்டும். திரு தமிழ் இளங்கோ அந்தப் படத்தை உங்கள் தளத்திலிருந்து எடுத்ததாகச் சொல்லியிருந்தார்.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் ஸார். என்ன வேறுபாடு என்று நான் அறிகிலேன். நீங்கள் எழுதினால் நான் அதை எங்கள் ப்ளாக்கில் பிரசுரம் செய்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் மீரா. செல்வக்குமார். அது ஏற்கெனவே ஷெட்யூல் செய்யப் பட்டிருந்தது. அதனோடு அஞ்சலிச் செய்தியை இணைத்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் வலிப்போக்கன்.
பதிலளிநீக்குநன்றி கீத மஞ்சரி.
பதிலளிநீக்குநன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குநன்றி சென்னை பித்தன் ஸார்.
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மீகப் பதிவுகள் மட்டுமின்றி அன்றன்றைய தினங்களின் சிறப்புகள் குறித்தும் பகிருவார்.
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார். நீங்கள் சொல்வது சரி. விழாவுக்கு கூட்டம் அதிகம் வந்தால், நம் முதுகுக்குப் பின்னால் ஒருவர் நின்று கொண்டு 'இவன் எப்போது சாப்பிட்டு முடிப்பான்' என்று முறைத்தவாறே இருக்குபோது சாப்பிடுவது சிரமமாக இருக்கிறது....
பதிலளிநீக்கு:)))
நன்றி நண்பர் கில்லர்ஜி.
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி!
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குநன்றி நண்பர் நெல்லைத் தமிழன். திங்கள் கிழமை பதிவு ஏற்கெனவே தயார் செய்து வைத்து விட்டேன். ஞாயிறு காலை இராஜராஜேஸ்வரி மேடம் மறைவுச் செய்தி படித்ததும் மனம் தாங்காமல் அஞ்சலிச் செய்தியை இந்தப் பதிவில் இணைத்தேன்.
பதிலளிநீக்குராஜேஸ்வரி அம்மா எனக்கிருந்த மிகச்சில வலைப் பின்தொடர்பாளர்களில் ஒருவர். அவரிழப்பு நமக்கெல்லாம் பேரிழப்பு. அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அம்மாவின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும். வருத்தமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி நண்பர் உமேஷ் ஸ்ரீநிவாசன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.
பதிலளிநீக்குஎனது அஞ்சலிகளும்....
பதிலளிநீக்குஎனது இரங்கல்களையும் பதிவு செய்கிறேன் .இராஜேஸ்வரி அக்கா அவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களின் இழப்பை தாங்கும் சக்தியை தரவும் அவரது ஆன்ம சாந்திக்கும் பிரார்த்திப்போம்
பதிலளிநீக்குஇவ்வளவு பதார்த்தங்களையும் படத்தில் பார்க்க அழகா இருக்கும் ஆனா சாப்பிட நிச்சயம் முடியாது என்னால் :)
பதிலளிநீக்குஒரு குழம்பு ஒரு கூட்டு போதும் போதும்
நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின். தமிழகத் திருமணங்களில் / விசேஷங்களில் இத்தனை வகை உணவுகளும் பரிமாறப்படுகின்றன. எத்தனை பேர்கள் முழுதும் சாப்பிடுகிறார்கள்? பெரும்பாலான பேர்கள் வேண்டாம் / போதும் என்று கைகாட்டுவதுமில்லை. வீணாவது ஏராளம். !!!
பதிலளிநீக்குமனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...அருமையான செய்திகளை பகிர்ந்தவர் இன்று நம்மிடம் இல்லை .. ...
பதிலளிநீக்குபதர் பேணி மிகவும் சுவையான உணவு ... போன முறை ஒரு விருந்தில் தான் சுவைத்தேன் அருமை..
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம், மறைவுச் செய்தியைத் தனிப் பதிவாக ஆக்கி இருக்கலாமோ? இதில் இணைத்திருக்க வேண்டாமோ?
பதிலளிநீக்கு//பருப்புக்கு பதிலாக பருப்புப்பொடி போட்டார்கள்// ஆந்திராக்காரங்க அல்லது தமிழ்நாடு வாழ் தெலுங்கு? அவங்க தான் முதல்லே பருப்புப் பொடி, பபூல் பொடியெல்லாம் போட்டுச் சாப்பிடுவாங்க! :)
பதிலளிநீக்குநான் எப்போவுமே பாயசம் சாப்பிட்டால் நோ மோர் சாதம். மோர் சாதம் சாப்பிட யாரானும் வற்புறுத்தினால் பாயசம் மோருக்கு அப்புறம் தான்.
பதிலளிநீக்கு//http://geetha-sambasivam.blogspot.in/2016/01/blog-post.html// கல்யாணம், உபநயனம், சஷ்டி அப்தபூர்த்தி போன்ற விசேஷங்களில் பந்தி பரிமாறும் முறை குறித்து நான் எழுதிய பதிவு ஒன்று மேற்கண்ட சுட்டியில். நீங்கள் அந்தப் பதிவைப் படிக்கலை என்பதால் உங்களுக்குத் தெரியலை! :)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அவர்களின் முகம் எங்கேயோ பார்த்தது போன்று உள்ளது. எங்கு என்று சரியாக நினைவில் இல்லை..ஆனால் மிகவும் பரிச்சயமான முகமாகத் தோன்றுகின்றது....
பதிலளிநீக்குகீதா
சகோ இராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். செய்தியைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சி. நாங்கள் எழுதிக் கொண்டிருந்தபதிவைக் கூட அப்படியே நிறுத்திவிட்டு இரங்கல் செய்தியுடன் முடித்துக் கொண்டோம். மனம் நம்ப மறுத்தது நிகழ்வு நடந்து ஒரு மாதம் ஆகும் இந்த வேளையில் கூட....ஆன்மீகப் பதிவுகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர்கள் இராஜராஜேஸ்வரி அவர்களும் நம் துரை செல்வராஜு ஐயா அவர்களும். வலைச்சரத்தில் கூட இவர்களைத்தான் குறிப்பிட்டிருந்தோம் என்ற நினைவு...
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குஇப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். சகோதரி மணிராஜ் இராஜராஜேஸ்வரி அவர்களது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனை. இவரது படத்தை , சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களது பதிவினில் இருந்துதான் எடுத்து சேமித்து வைத்து இருந்தேன். திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கான எனது பதிவினிலும் குறிப்பிட்டு இருக்கிறேன். ( ஆரம்பத்தில் நிறைய வலைப்பதிவர்களின் புகைப்படங்களை அவ்வப்போது ஒரு போல்டரில் சேமித்து வைத்து இருந்தேன். ஒருமுறை கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறில் எல்லாமே அழிந்து விட்டன; இப்போது மறுபடியும் சேமித்து அவ்வப்போது பென்டிரைவில் சேமித்து விடுகிறேன்)
பதிலளிநீக்குநன்றி அனுராதா பிரேம். பதர்ப்பேணிக்கு ஓரு ரசிகை!
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம். ஏற்கெனவே சொன்னது போல தயாராய் இருந்த டிராஃப்டில் அஞ்சலிச் செய்தியை ஒட்டினேன். தனிப் பதிவாய்ப் போட்டிருக்கலாம். உங்கள் சுட்டியைப் பார்க்க வேண்டும். என்னுடைய கமெண்ட் இருக்கும் அங்கு.
பதிலளிநீக்குசுட்டி அந்தப் பக்கத்துக்கு இட்டுச் செல்கிறதே தவிர, குறிப்பாக அந்தப் பதிவுக்குச் செல்லவில்லை!
நன்றி துளசிஜி / கீதா.
பதிலளிநீக்குநன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ ஸார்.
பதிலளிநீக்குhttp://geetha-sambasivam.blogspot.in/2016/01/blog-post.html
பதிலளிநீக்குஒண்ணும்பிரச்னை இல்லை, இந்தச் சுட்டியில்! நேரே அந்தப் பதிவுப் பக்கமே செல்கிறது. //--// இரண்டையும் நீக்கலையோ? நீக்கிவிட்டுச் சுட்டியை மட்டும் ஒட்டி, ஒட்டிவிட்டுச் செல்(paste and go) க்ளிக்கினால் நேரே பதிவுப்பக்கமே செல்கிறது. :))) நான் பார்த்தவரையிலும் உங்களோட கருத்து அதிலே இல்லை! :)
இராஜராஜேஸ்வரி அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குநமக்கும் பாயாசத்துக்கும் ஆகாது... தொடுவதே இல்லை... பிடிப்பது இல்லை...