சனி, 19 மார்ச், 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.



1)  ...... இந்த நிலையில் இந்த தொகுதி எம்எல்ஏ.,சிவசங்கர் கொளப்பாடிக்கு வந்திருக்கிறார்.தொகுதி மக்களிடம் ஏதாவது பிரச்னை உண்டா? என்று கேட்டு இருக்கிறார், ஆளாளுக்கு ரேஷன் கார்டு வரவில்லை முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை என்பது போன்ற சொந்த பிரச்னைகளைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர்.
அப்போதுதான்,' ஐயா எங்க ஊருக்கு ஒரு நுாலகம் கொடுங்கய்யா' என்று ஒரு குரல் ஒலித்தது.குரலுக்கு சொந்தக்காரர் செம்பருத்தி.'ஏ...புள்ள அவுரு யார் தெரியுமா? எம்எல்ஏ.,மட்டு மரியாதையில்லாம சத்தம் போட்டு கேட்டுப்புட்ட' என்று பக்கத்தில் இருந்தவர்கள் அதட்ட,'நான் ஒண்ணும் தப்பா கேட்கலையே,ஐயாதான் ஊருக்கு என்ன வேணும்னு கேட்டாங்க, அதான் சொன்னேன்' என்று உறுதி குலையாமல் சொன்னார் செம்பருத்தி.....
 
 


2)  இப்படியும் நல்லது செய்யலாம்.
 
 


3)  வாழ நினைத்தால் வாழலாம்...  வயதா இங்கே தடை?  77 வயது ராஜம் ராஜாமணி.  
 
 


4)  ராகவா லாரன்ஸைப் பாராட்டுவோம். 
 
 


5)  ஜியா என்னும் தேவதை.






6) 
ஒரு பத்திரிகையாளராக இருந்து இந்த பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியதோடு நம் பிரச்னை முடிந்துவிட்டதா?  இதனால் தீர்வு வந்துவிட்டதா? என்றெல்லாம் யோசித்தார்.  இனி எழுதியது போதும் செயலில் இறங்கு என மனது ஆணையிட தனது தாத்தா-பாட்டியின் பெயரில் சீனிவாசன்-வாலாம்பாள் அறக்கட்டளையை துவங்கிவிட்டார்.   குடும்ப செலவுகளை சுருக்கிக்கொள்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து முடிந்தளவு சிசுக்கொலைக்கு ஆளாகாமல் பெண் குழந்தைகளை பார்த்துக்கொள்வது, பராமரிப்பது என முடிவு செய்தார்.  இவரது எண்ணத்தை முறைப்படி நடைமுறைப்படுத்த வாத்சல்யம் அறக்கட்டளை கவுதமன் முன்வந்தார்.  இன்றைக்கு 62 வயதாகும் சி
யாமளா.



17 கருத்துகள்:

  1. அனைத்துமே அருமை.லாரன்ஸ் சேவை பாராட்டுக்குறியது.நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமையான செய்திகள்.

    அனைவருக்கும் பாராட்டுகள் - குறிப்பாக செல்வி செம்பருத்தி அவர்களுக்கு

    பதிலளிநீக்கு
  3. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    பாராட்டுவோம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  4. கொளப்பாடி எம் எல் ஏ க்கு ஒரு பெரிய பூங்கொத்து. மனம் மிகவும் பூரிப்படைந்தது. செம்பருத்தியின் ஆசையை, அரசியல்வாதிக்கே உரிய எந்தவித மெத்தனமும் இல்லாமல் நிறைவேற்றியதை. செம்பருத்தி மனதில் நிற்கின்றார். சுயநலம் இல்லாமல் கல்வி சார்ந்த எல்லோருக்கும் பொதுவான அறிவை வளர்க்கக் கூடிய நூலகம் வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துச் சாதித்தமைக்கு. வாழ்க செம்பருத்தி. இப்படி எல்லா குழந்தைகளும் சிந்தித்து, அதற்கு அரசியல்வாதிகளும் துணை நின்றால் நம்மூர் கல்விக் கண் நன்றாகத் திறந்திடாதோ. இதை வாசித்ததும் மனம் மிகவும் மகிழ்ந்தது. பரவசம்.

    இப்படிப்பட்ட பாசிட்டிவ் செய்திகள் தரும் எங்கள் ப்ளாகும் வாழ்க!! வளர்க!!!

    ராகவா லாரன்ஸ் செய்யும் பணிகள் அறிவோம். இப்போது செய்திருப்பது மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்று. பாராட்டுவோம் வாழ்த்துவோம்.

    அனைத்துச் செய்திகளும் அருமை...

    பதிலளிநீக்கு
  5. இதில் மிகவும் பாராட்டப்படவேண்டியது...எம்.எல்.ஏ வின் செயல்..
    அருமை...

    பதிலளிநீக்கு
  6. மக்கள் அறிவைப் பெருக்கி
    வாழ வழிகாட்ட
    செம்பருத்தி போன்ற
    துணிச்சலான பெண் பிள்ளைகள் தேவை

    பதிலளிநீக்கு
  7. என் முதல் பாராட்டு செம்பருத்திக்கே!

    பதிலளிநீக்கு
  8. செப்பருத்தி, ராகவா லாரன்ஸ் பாராட்டுக்குறியவர்கள் எம். எல் ஏ அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. போற்றுதலுக்கு உரியவர்கள் இவர்கள்.
    வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  10. நல்லவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். செம்பருத்தியை சந்தித்து, உச்சிமுகர்ந்து, நானேதும் புத்தகங்கள் தரவா என்று கேட்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  11. வித்தியாசமான நடிகர் ராகவா லாரென்ஸ் சேவை பாராட்டுக்குரியது !

    பதிலளிநீக்கு
  12. அனைத்துமே அருமையான பகிர்வுகள். செம்பருத்திக் கேட்டவுடன் நூலகம் திறந்து சிறந்த நூல்களும் இடம்பெறச் செய்த எம்.எல்.ஏ அவர்களும் உயர்ந்து நிற்கிறார். செம்பருத்தியின் கனவுகள் நிறைவேற வாழ்த்துகள். இந்த வயதிலும் உடல்நலக் குறைவிலும் படித்து பட்டம் பெற்ற ராஜம் அவர்கள், களமிறங்கிய சியாமளா அவர்கள், குழந்தைகள் உயிர் காக்கும் லாரன்ஸ் அவர்கள் அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள்..பலரும் இவர்களால் தூண்டப்பட்டால் அருமையாய் இருக்கும். ஜியாவை அழைத்துச் சென்ற பெற்றோருக்கு வாழ்த்துகள்.
    அனைத்தும் பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் செம்பருத்திக்கு ..இப்படி யும் நல்லது //நம்ம நாட்டுக்கு கட்டாயம் தேவை தான் .லாரன்ஸ் நிஜ ஹீரோ .ராஜம் அம்மா மற்றும் சீனியர் தேவதை சியாமளா மேடம் குட்டிதேவதை ஜியா அனைவருக்கும் வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!