புதன், 9 மார்ச், 2016

எம் ஆர் ராதா அன்று சொன்னது...


 Image result for M R Radha images
 
 
*  எவன் ஆண்டாலும், கடவுளே ஆண்டாலும்.. உழைச்சுதான் சாப்பிடணும்.  எவனும் வந்து வாயில் ஊட்ட மாட்டான்!
 
 
*  தமிழன் எப்போதும் வெளிநாட்டைப் பற்றித்தான் உயர்வாகப் பேசுவான்!
 
 
*  படமா எடுக்கிறார்கள் தமிழகத்தில்...  அவ்வளவு ஆபாசம்...  ஒவ்வொரு பாடல் வரிகளுக்கும் மூன்று அர்த்தங்கள்..  இதையெல்லாம் நாங்கள் சீர்திருத்தம் செய்கிறோம்.
 
 
*  கோவிலுக்குப் போனா சாமியைக் கும்பிட்டுட்டு வெளியே வந்துடுங்க..  அங்கேயே உட்கார்ந்து குடும்பம் நடத்தாதீங்க..
 
ங்களை எல்லாம் கூத்தாடின்னு கூப்பிடுவாங்க..  இப்பத்தான் கலைஞர்னு சொல்றாங்க..  இந்தப் பட்டத்த எவன் என்ன வாங்கிட்டு குடுத்தானோ!  நாங்கள் எல்லாம் இன்கம் டாக்ஸ் கட்ட மாட்டோம் - நான் உட்பட!   எங்களை தலைவர்னு கூப்பிட்டு பேச வைக்கறீங்க..  நாளைக்கு நீங்க தமிழகம் வந்தால் உங்களை கண்டுக்கவே மாட்டோம்...  வாசலில் கூர்க்கா போட்டு நிறுத்திடுவோம்.
 
              Image result for M R Radha images               Image result for M R Radha images            Image result for M R Radha images
 
*  தெருவுல ஒரு கார் போகுது.  ஒரு நாய் அதைப் பார்த்து குலைக்குது..  நமக்குத் தெரியும் காரைப்பார்த்துத்தான் அந்த நாய் குலைக்குதுன்னு அடுத்த தெருல இன்னொரு நாய் குலைக்குது..  
 
 
"நீ ஏன் குலைக்கிறே?"  "எனக்கு என்ன தெரியும்?  அங்க ஒரு நாய் குலைக்குது.. நானும் குலைக்கிறேன்"

 
 
*  நாங்க நண்பர்கள்..  நண்பர்களுக்குள்ள சண்ட வராதா?  அடிச்சுக்க மாட்டாங்களா?  அது மாதிரித்தான் நானும் எம் ஜி ஆரும் அடிச்சுகிட்டோம்.  கம்பு கைல இருந்தா கம்பால அடிச்சுப்பாங்க...  கத்தி இருந்தா அதால அடிச்சுப்பாங்க..  எங்க கிட்ட ரிவால்வர் இருந்தது.. சுட்டுகிட்டோம்.  ரிவால்வர்ல எட்டு தோட்டா உண்டு..  எட்டு தோட்டாவையுமா சுட்டோம்..இதைப் போய்ப் பெரிசா கேள்வி கேக்கறாங்க..
 
 
*  அன்பே சிவம்னு சொல்றாங்க...  சிவன் கைல பார்த்தா சூலம்..  ஆயுதம்!  காலைல எழுந்ததும் பின்னால போய் உகாருவான்...  கடவுளேன்னு உட்காருவான்..  கடவுளைக் கூப்பிடற இடமாடா அது?.....

 
 
===========================================

பயச்சிந்தனையா,  பயங்கர சிந்தனையா?

நல்லவேளை
சுயம்வரத்தில்
அர்ஜுனன் ஜெயித்தான்,
ஐவரோடு போச்சு..
துரியோதனன் ஜெயித்திருந்தால்...!
 

எங்கோ படித்தது..

=============================================




இளமையின் நினைவுகள் எத்தனையோ வகைகளில் நினைவு கூரப்படும்!  இதோ அதில் ஒரு வகை!   தினமணி ஞாயிறு மலரில் வெண்ணிக் குயத்தியாரின் இந்தப் பாடலை பார்த்ததும் அடுத்தடுத்த வரிகள் மனதில் தோன்ற,  அட, இது அந்தக் காலத்தில் "மனப்பாடப் பாட்டு" என்பது நினைவுக்கு வந்தது. 

                                                       Image result for karikala cholan images


இதே போல முன்னர் "கையில் ஊமன் கண்ணில் காக்கும்" பாடலும் இளமை நினைவை இசைத்தது நினைவுக்கு வருகிறது!


நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே.




=============================================================


Image result for fraud friend images


கொஞ்சம் பெரிய அளவில் எனது முதல் ஏமாந்த அனுபவம் நான் ஒன்பதாம் வகுப்புப் படித்த போது!


ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தின் புத்தகங்களை விற்று காசை அப்பாவிடம் தருவது வழக்கம்! தருவது என்ன, அவர் வாங்கிக் கொண்டு விடுவார்! 

ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்புப் போன உடன், என் நண்பன் ஒருவன் (அவன் பெயர் பாஸ்கர். போலீஸ்காரர் மகன்) தான் ஃபெயிலாகி விட்டதாகவும், வேறொரு (ப்ளேக் உயர்நிலைப் பள்ளி) பள்ளியில் சேரவிருப்பதாகவும், அங்கு ஒரு பரீட்சை எழுத இந்தப் புத்தகங்கள் தேவை என்றும் சொல்லி, என்னிடம் இருந்த ஒன்பதாம் வகுப்புக்கான பழைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு இரண்டு நாட்களில் திருப்பித் தருவதாகச் சொல்லிச் சென்றான். 


அப்புறம் ஆள் அட்ரஸே இல்லை. என் அப்பாவுக்குப் பயந்து, அவன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் அவன் வீட்டை விட்டு ஓடி விட்டானாம்!!! அவன் நண்பர்கள் பலரிடமும் இதே போல பழைய புத்தகங்கள் வாங்கி, விற்று விட்டு செலவுக்குக் காசு தேற்றிக் கொண்டு ஓடிப் போனான்!
அந்த வயதிலேயே வித்தியாசமாகச் சிந்தித்து ஏமாற்றினான் அவன்!  நானும் (நாங்களும்) சமர்த்தாய் ஏமாறினோம்!

[இது முதலில் ஜி எம் பி ஸார் பதிவில் பின்னூட்டமாக இட்டு, பின்னர் கொஞ்சமாக திருத்தி ஃபேஸ்புக்கில் போட்டது]


39 கருத்துகள்:

  1. எம்.ஆர்.ராதாவின் வசனங்கள் அருமை
    நண்பரே அருமையாக பதிவுகள் வழங்கி வருகிறீர்
    வாழ்த்துக்கள் தொடர்க பதிவுகள்...

    பதிலளிநீக்கு
  2. காலத்தால் அழியாத வசனங்கள். பெரும்பாலான வசங்கள் எம்.ஆர்.ராதாவே சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அவரே பேசி நடித்தது ஆகும்; ஸ்க்ரிப்ட்டில் இல்லாதது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எம்.ஆர்.ராதா பேசிய வசனங்களைப்படித்ததும் பழைய படங்களில் அவர் இது போல் பேசி நடித்த காட்சிகள் நினைவுக்கு வந்தன!

    ப்ளேக் ஹைஸ்கூல் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சிறுவயது படிப்பெல்லாம் தஞ்சையிலா?

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் நடைமுறை உண்மைகள் நண்பரே... அருமை.

    பதிலளிநீக்கு
  5. இன்றும் பொருந்தும் வசனங்கள் :)

    போலீஸ் மகன் போக்கிரி :)

    பதிலளிநீக்கு
  6. சாமர்த்திய நன்பன் இப்போது
    என்ன செய்கிறான் என்ப் பார்த்தால்
    நிச்சயம் ஒரு பெரிய அரசியல் தலைவனாகத்தான் இருப்பான்
    மிக்ஸராகப் பதிவு சுவாரஸ்யம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கலவையின் ஒவ்வொரு பகுதிக்கும் பின்னூட்டம் எழுதுவதாயிருந்தால் மிகவும் நீண்டுவிடும் ஆகவே ஒன்றே ஒன்றுக்கு மட்டும் எம் ஆர் ராதாவின் வசனங்கள் அர்த்தம் பொதிந்தவை. மேலோட்டமாகப் பார்த்து சிரிக்க அல்ல. அவர் சொன்னதால் இன்று ரசிக்கிறோம் பிறர் கூறுவதாயிருந்தால் தாண்டிப் போய் விடுவோம் எல்லாமே ரசிக்க வைத்தது வாழ்த்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஓ. தஞ்சாவூர்!!

    ப்ளேக் ஹை ஸ்கூல் குடந்தை, நாகையிலும் உண்டு என கேள்வி / எண்ணுகிறேன் (சரியாக, உறுதியாக தெரியாது).
    தஞ்சாவூரில் - கன்பர்ம்ட்.

    எம் ஆர் ராதா - Legend. Also visit nambalki.com

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    பதிலளிநீக்கு
  9. thamizmanam

    இடுகைத்தலைப்பு:
    எம் ஆர் ராதா அன்று சொன்னது...

    மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. TM10

    பதிலளிநீக்கு
  10. பொதுவாகவே நான் எந்த நடிகருக்கும், நடிகைக்கும் ரசிகை இல்லை. ஆகவே எம்.ஆர்.ராதா சொன்னதுக்கெல்லாம் கருத்துச் சொல்லும் அளவுக்கு ஏதும் தெரியாது. கடைசியில் நீங்க எழுதி இருக்கும் பள்ளி நினைவுகள் ஏற்கெனவே படித்தது தான். நாங்களும் இந்த வருஷப் புத்தகங்களை அடுத்த வருஷம் விற்றுவிட்டு அந்தக் காசுக்கு எங்களுக்குத் தேவையான அந்த வருடப் புதுப் புத்தகங்களை வாங்கிப்போம். நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கையில் தான் முற்றிலும் புதுப் புத்தகம். என் பெரியப்பா சென்னையிலிருந்து வாங்கி அனுப்பினார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும் வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் என்னிடம் புத்தகங்கள் இருந்தன. :)

    பதிலளிநீக்கு
  11. நன்றி தமிழ் இளங்கோ ஸார். இது படத்தில் பேசிய வனங்கள் அல்ல. மலேசியா பொதுக்கூட்டத்தில் பேசியது.

    பதிலளிநீக்கு
  12. நன்றி மனோ சாமிநாதன் மேடம். உங்களிடம் இது பற்றி முன்னரே சொன்ன நினைவு எனக்கு. என் பள்ளிப்படிப்பு தஞ்சையில். St. Antony's! மேரீஸ் கார்னரில் உள்ளது!

    பதிலளிநீக்கு
  13. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஜி எம் பி ஸார். ஏற்கெனவே சொல்லியிருக்கிறபடி, இவை படத்தில் வந்த வசனங்கள் அல்ல. ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியது!

    பதிலளிநீக்கு
  15. நன்றி iK Way. நம்பள்கி டாட் காம் சுட்டி திறக்கவில்லை!

    பதிலளிநீக்கு
  16. இராதா அவர்கள் நாடகத்தில் நாளுமொரு வசனம் பேசுவார்!

    பதிலளிநீக்கு
  17. இன்றும் பொருந்துகிறது...
    தம 13

    பதிலளிநீக்கு
  18. அவர் அன்று சொன்னது அர்த்தமுள்ளது இன்றும் நடக்கிறதே !
    தொகுப்பிற்கு நன்றி .
    ஏமாற்றின அந்த மாணவன் இப்போ எங்கே என்னவாக இருக்கிறர என்று தெரியுமா :)
    சும்மா ஒரு கியூரியாசிட்டி :)

    பதிலளிநீக்கு
  19. எம் ஆர். ராதா
    வசனங்கள் உண்மை அருமை. இது போல யாருக்குப் பேசத்தெரிந்தது. இது போல என் எஸ்கே வசனங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  20. எம்.ஆர்.ராதா... எம்.ஆர்.ராதாதான்... எல்லாமே உண்மை...
    சுட்டதைக் கூட எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்... நக்கல் நையாண்டி, கருத்துச் செறிவு நிறைந்த மனிதன்...

    ஏமாந்த அனுபவம் முகனூலில் படித்தேன் போல ஞாபகம்...

    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  21. எம்.ஆர்.ராதா... எம்.ஆர்.ராதாதான்... எல்லாமே உண்மை...
    சுட்டதைக் கூட எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்... நக்கல் நையாண்டி, கருத்துச் செறிவு நிறைந்த மனிதன்...

    ஏமாந்த அனுபவம் முகனூலில் படித்தேன் போல ஞாபகம்...

    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  22. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!