ஞாயிறு, 10 ஜூன், 2018

ஞாயிறு 180610 : மலரும் மனமும்




"செடியிலிருந்து மலரைப் பிரிக்கிறீர்களே...  நியாயமா?  பறித்த உடன் செடி மயங்கி நிற்கிறது.  மலர் மரணித்து விடுகிறது" என்றாள் அவள்.

"மலர் 24 மணி நேரம் உயிர்ப்புடனேயே இருக்கிறது - செடியில் இருந்தாலும், பறிக்கப் பட்டாலும்!   தவிர, ஒவ்வொன்றும் படைக்கப் பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது..


படகைத் தயாரித்து படித்துறையிலேயே கட்டி வைத்திருப்பதில் பயனுண்டா?"  என்றார் அவர்.



"படகும் மலரும் ஒன்றா?  எதை வேண்டுமானாலும் உதாரணமாய்ச் சொல்லி விடுவீர்களா?  படகுக்கு உயிர் இல்லை.  மலருக்கும் செடிக்கும் உயிர் இருக்கிறது..  ஏன், உணர்வுகள் கூட உண்டு" என்றாள் அவள்.


"சில மலர்கள் பறித்துப் பயன்படுத்தினால்தான் அழகு.  சில மலர்கள் செடியிலேயே இருந்தால் அழகு..."  என்றார் அவர்,  அவள் மனம் வாடாமல் இருக்கவேண்டி...    அவர் கண்களில் அவளும் ஒரு மலர் போலவே தெரிந்தாள். 



"பிறந்ததன் பயனை பெறவேண்டும் என்று சொல்லி, வலுக்கட்டாயமாக அவற்றை அடைய வைக்கிறீர்கள்" என்றாள் அவள் சற்றே வெறுப்புடன்.





"செடியில் இருப்பதைப் பறித்து குடுவையில் நீரூற்றி அதில் அவற்றைச் செருகி செயற்கையாய் உயிர் வாழ வைக்கிறீர்கள்...  அவை செடியிலேயே இருந்தால்தான் அழகு.."



"எனக்கு பூவால் பூஜை செய் என்று தெய்வம் உங்களிடம் கேட்டதா?  இவற்றை யார் உண்டாக்கினார்கள்?"  என்றாள்.  

அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர். 



"அங்கே பாருங்கள்...  செடியிலேயே இருந்தால் அவை எவ்வளவு மலர்ச்சியுடன் இருக்கின்றன?  பறித்து மேசையிலும், பூக்கூடையிலும் வைப்பதால் அவற்றைக் கொல்கிறோம் என்றே எனக்கு..."  மெல்லிய குரலில் விசும்பினாள்.


"தோட்டம் முழுவதும் மலர்கள்...  எவ்வளவு அழகு?  மலர்களில்லா செடிகளை யோசித்துப் பாருங்கள்...   நன்றாகவா இருக்கும்?  அவற்றைப் பறிக்காமலிருக்கப் பழகுவோமே." என்றவளை ஆதரவாய்ப் பார்த்தார் அவர்.



ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.  இருள்..   தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது.  இருளை உணரவைப்பது ஒளியா?  ஒளியின் அருமை இருளில்தான் தெரிகிறதா?  ஒளி இருளை விரட்டுகிறதா?  இருள் பாவமா?  சிலர் இருளைப் பார்க்கிறார்கள்.  சிலர் ஒளியைப் பார்க்கிறார்கள்...   அவள் இதற்கும் வாதம் செய்வாளோ...  

119 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…
    படம் பார்த்துட்டு ஓடிடுவேன்…..வாசிக்கும் பதிவுகள் எல்லாம் அப்பால் இன்று ,மதியம் மகன் வருகிறான்…..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மதியம் மகன் வருகிறான்..//

      மழை வருவது மயிலுக்குத் தெரியும்..
      மகன் வருவது மனதுக்குப் புரியும்..

      வாழ்க நலம்...

      நீக்கு
  2. ஹையோ ஹையோ துரை அண்ணன்.. கீசாக்கா யாருமே வரவில்லை எல்லோரும் நித்திரை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இடைக்கிடை இப்படி ஜம்ப் பண்ணினால்தான்.. சோர்ந்து போயிடாமல் டெய்லி எல்லொரும் அலேர்ட்டா இருப்பினம்:)) ஹா ஹா ஹா.

    எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்_()_

    பதிலளிநீக்கு
  3. நான் தான் ஃபர்ஸ்டுஊஊஊஊஊஊஒ ஆனால் என் கமென்ட் இவ்வலவு நேரம் அப்படியெ நின்று கொண்டிருட்ந்தது அதிரடி அதைத் தடுத்து நிறுத்திட்டார் ஹா ஹாஅ ஹாஅ

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் செம செம வித்தியயசமான கதை வடிவில் தலைப்பு ஒரு கதையே எழுதிட்டீங்க இருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா , அதிரடி அதிரா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் செம செம...ரொம்ப ரசித்தேன்...ஒரு சிறு கதையே படங்களை வைத்து வாவ்!!! வித்தியாசமான படைப்பு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பூ அழகு என்றால் அதை வைத்து அழகான இலக்கியமே...படைச்சுட்டீய்ங்க!! நிறைய சொல்லத் தோணுது...ஸ்ரீராம்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆ... ஆச்சர்யம்... வாங்க அதிரா.. காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் கீதா ரெங்கன்... உங்கள் மகன் வருகையால் மனம் பூரித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. கீதாவை இன்று நான் எதிர்பார்க்கவில்லை இங்கு.. ஓ எயார்போர்ட்டுக்கு மேக்கப் பண்ணுறீங்களோ?:) துரை அண்ணன் நீங்களும் கீசாக்காவைப்போல கஞ்சி ஆத்திட்டோ வந்தீங்க இன்று:)).. பானுமதி அக்காவும் வந்திட்டா:))

    ச் ரீராம் தான் ஊர் சுத்தப் போயிட்டார்போல:) ஐ மீன்ன்.. போஸ்ட்டைக் காவிப்போயிட்டார்ர் ஒட்டி விட்டு வர:)) ஹையோ நான் வந்த வேலையைக் கவனிப்போம்ம்:))

    பதிலளிநீக்கு
  11. அதிரா... உங்களை முதலாவதாக நானே எதிர்பார்க்கவில்லை. ஞாயிறு பதிவுகளை சமயங்களில் சாய்ஸில் விட்டு விடுகிறீர்கள் என்று நினைத்தேன். முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக வந்து அசத்தி விட்டீர்கள்!!

    பதிலளிநீக்கு
  12. எழுத்துகளின் கலர் வித்தியாசம் இருவர் பேசுவது என்று கலக்கல்...

    // அவர் கண்களில் அவளும் ஒரு மலர் போலவே தெரிந்தாள். //

    சூப்பர்....

    "பிறந்ததன் பயனை பெறவேண்டும் என்று சொல்லி, வலுக்கட்டாயமாக அவற்றை அடைய வைக்கிறீர்கள்" இதிலிருந்து ....பூசை செய் என்று சொல்கிறதா என்பது வரை கீதா பேசுவது போலவே இருக்கே,..ஆஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  13. //"செடியிலிருந்து மலரைப் பிரிக்கிறீர்களே...
    நியாயமா? பறித்த உடன் செடி மயங்கி நிற்கிறது.
    மலர் மரணித்து விடுகிறது"
    என்றாள் அவள்.///

    ஆஆஆ கவித கவித... இதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த ஒரு ஹைக்கூ:(

    “போய் வருகிறேன்
    என்றதாம் பூ!!
    போகும் நீ
    திரும்ப வரப்போவதில்லை
    கண்ணீர் விட்டதாம்
    காம்பு”

    பதிலளிநீக்கு
  14. வாங்க கீதா...
    மகன் வருகையால் நீங்களும்,
    ஞாயிறுகளில் வருவதில்லை என்பதால் அதிராவும்
    வராமல் இருந்து விடுவீர்களோ என்கிற கவலை எனக்கிருந்தது!

    பதிலளிநீக்கு
  15. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

    பதிலளிநீக்கு
  16. பாராட்டுகளுக்கும், ரசித்தமைக்கும் நன்றி கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  17. ஆனாலும்,
    மலர்களின் விஷயத்தில் இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன...

    செடியிலிருந்து பறிப்பதும்
    செடியிலேயே விடுவதும்
    அவரவர் விருப்பம்....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  18. நீல எழுத்துகள் அத்தனையும் கீதா பேசுவது போலவே இருக்கு...

    அவர் னினைக்கும் அந்தக் கடைசி வரிகள் செம செம வாவ்!! தத்துவமே இருக்கிறது!!! ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  19. //ஸ்ரீராம். said...
    அதிரா... உங்களை முதலாவதாக நானே எதிர்பார்க்கவில்லை. ஞாயிறு பதிவுகளை சமயங்களில் சாய்ஸில் விட்டு விடுகிறீர்கள் என்று நினைத்தேன். முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக வந்து அசத்தி விட்டீர்கள்!!//

    ஹா ஹா ஹா நான் எப்போ வருவேன் எதுக்கு வருவேன் என்பது எனக்கே தெரியாது:)).. அது ஞாயிறு சுற்றுலா தொடர்ப்படம் போய்க்கொண்டிருந்தமையாலதான் ஏதோ ஒரு வெறுப்பில் வருவது குறைஞ்சிருந்தது...:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))

    பதிலளிநீக்கு
  20. மகன் இலங்கை வந்தாச்சு......நான் வளர்ந்த ஊர்...சரி நான் போய்ட்டு வரேந்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. //"மலர் 24 மணி நேரம் உயிர்ப்புடனேயே இருக்கிறது - செடியில் இருந்தாலும், பறிக்கப் பட்டாலும்! தவிர, ஒவ்வொன்றும் படைக்கப் பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது..//

    எல்லா மலர்களும் வாடாமல் இருக்காதே.. செம்பரத்தை எல்லாம் 7,8 மணி நேரத்தில் வாடிவிடும்:).. அது உண்மைதான் ஒவ்வொரு படைப்புக்கும் காரணம் உண்டு என்பினம்.. ஆருக்குத்தெரியும் என்ன காரணமோ?:))

    பதிலளிநீக்கு
  22. வாவ்வ்வ்வ்வ் என்சோய்ய் கீதா.. பிளேனைச் செக் பண்ணிக் காத்திருப்பதும் ஒரு த்றிலிங்தான்ன்... ரேக் கெயார்.

    பதிலளிநீக்கு
  23. அதிரா..

    //கீதாவை இன்று நான் எதிர்பார்க்கவில்லை இங்கு.. ஓ எயார்போர்ட்டுக்கு மேக்கப் பண்ணுறீங்களோ?//

    அதிரா... அதற்கு இன்னும் சமயமிருக்கிறது!!!

    //துரை அண்ணன் நீங்களும் கீசாக்காவைப்போல கஞ்சி ஆத்திட்டோ வந்தீங்க இன்று//

    ஹா.. ஹா... ஹா...

    //பானு அக்காவும் வந்திட்டார் //

    அவர் எப்பவுமே வந்திடுவார்...!

    பதிலளிநீக்கு
  24. //அருமை... அழகிய படங்களுடன்!...//

    நன்றி துரை செல்வராஜூ ஸார்..

    // மழை வருவது மயிலுக்குத் தெரியும்..
    மகன் வருவது மனதுக்குப் புரியும்..//

    ஆஹா...

    பதிலளிநீக்கு
  25. // “போய் வருகிறேன்
    என்றதாம் பூ!!
    போகும் நீ
    திரும்ப வரப்போவதில்லை
    கண்ணீர் விட்டதாம்
    காம்பு”//

    ஆஹா... அருமை அதிரா... யார் எழுதியது?

    பதிலளிநீக்கு
  26. //படகைத் தயாரித்து படித்துறையிலேயே கட்டி வைத்திருப்பதில் பயனுண்டா?" என்றார் அவர்.//

    சிலது அழகுக்காகவாய் இருக்குமோ?:))..

    //"படகும் மலரும் ஒன்றா? //
    அதானே இதைப் புதன் கிழமை கேட்டிருக்கலாம்:))

    பதிலளிநீக்கு
  27. // //"படகும் மலரும் ஒன்றா? //
    அதானே இதைப் புதன் கிழமை கேட்டிருக்கலாம்:)) //

    ஹா... ஹா... ஹா... கௌ அங்கிள்.. நோட் பண்ணுங்க... நோட் பண்ணுங்க...!

    பதிலளிநீக்கு
  28. //"சில மலர்கள் பறித்துப் பயன்படுத்தினால்தான் அழகு. //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது சாட்டுக் காரணம்:))

    // சில மலர்கள் செடியிலேயே இருந்தால் அழகு..." என்றார் அவர்,//

    மலர் எங்கிருந்தாலும் அயகுதேன்ன்:))

    //அவர் கண்களில் அவளும் ஒரு மலர் போலவே தெரிந்தாள். //
    ஹையோ அவருக்கு கண்ணில ஏதும் கோளாறாக இருக்குமோ?:) சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) தொடர்ந்து படிப்போம்ம் கவிதையை..

    பதிலளிநீக்கு
  29. //ஆஹா... அருமை அதிரா... யார் எழுதியது?//

    தெரியல்ல ஸ்ரீராம்.. பெரிய கவிதைகள் படிக்கும்போது இப்படி இடையில் சில வரிகளை ஹைக்கூபோல நோட் பண்ணிடுவேன்...

    பதிலளிநீக்கு
  30. // தொடர்ந்து படிப்போம்ம் கவிதையை.. //

    கவிதையா க(வி)தையா?!!! மலர் எங்கிருந்தாலும் அழகுதான் ; அதுவும் சரிதான்!

    பதிலளிநீக்கு
  31. அந்த மஜந்தா மலர்கள் இப்போ இங்கும் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகிறன, அழகோஒ அழகு... இதை மார்கழிச் செவ்வந்தி என்போமோ ஊரில்??.

    //"பிறந்ததன் பயனை பெறவேண்டும் என்று சொல்லி, வலுக்கட்டாயமாக அவற்றை அடைய வைக்கிறீர்கள்" என்றாள் அவள் சற்றே வெறுப்புடன்.//
    ஹா ஹா ஹா கட்டாயத் தாலி கட்டுப்போல இருக்கே இது:))

    பதிலளிநீக்கு
  32. ///"செடியில் இருப்பதைப் பறித்து குடுவையில் நீரூற்றி அதில் அவற்றைச் செருகி செயற்கையாய் உயிர் வாழ வைக்கிறீர்கள்... அவை செடியிலேயே இருந்தால்தான் அழகு.."//

    ஆமாம் ..:))

    தோட்டக்காரர் சொன்னார்
    “பூக்களைப் பறிக்காதீர்கள்”
    பூக்கள் சொன்னதாம்..
    “செடியிலேயே கருகத்தானா
    நாம் பிறந்தோம்?:)”
    .....

    பதிலளிநீக்கு
  33. //"சில மலர்கள் பறித்துப் பயன்படுத்தினால்தான் அழகு. சில மலர்கள் செடியிலேயே இருந்தால் அழகு..." என்றார் அவர், அவள் மனம் வாடாமல் இருக்கவேண்டி... அவர் கண்களில் அவளும் ஒரு மலர் போலவே தெரிந்தாள்//
    "மலரும் மங்கையும் ஒரு ஜாதி" என்ற பாடல் நினைவுக்கு வருது அவர் கண்களில் அவளும் ஒரு மலர் போலவே தெரிந்தாள் என்ற வரியை படித்தவுடன்.

    மலர்களும், கவிதை வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  34. //கவிதையா க(வி)தையா?!!! மலர் எங்கிருந்தாலும் அழகுதான் ; அதுவும் சரிதான்!//

    கவிதையைப்போன்ற கதை.. அழகாக தொகுத்து வாறீங்க.. நில்லுங்கோ முடிவுவரை படிச்சிட்டே முடிவு ஜொள்ளுவேன்ன்:))

    பதிலளிநீக்கு
  35. // ஹா ஹா ஹா கட்டாயத் தாலி கட்டுப்போல இருக்கே இது:)) //

    அப்போ மலரும் மங்கையும் என்று தலைப்பிட்டிருக்கலாமோ!!!!

    பதிலளிநீக்கு
  36. // தோட்டக்காரர் சொன்னார்
    “பூக்களைப் பறிக்காதீர்கள்”
    பூக்கள் சொன்னதாம்..
    “செடியிலேயே கருகத்தானா
    நாம் பிறந்தோம்?:)”//

    ஆஹா... இது எதிர் சிந்தனை அதிரா...

    பதிலளிநீக்கு
  37. வாங்க கோமதி அக்கா.. காலை வணக்கம். பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. அதிரா..

    // நில்லுங்கோ முடிவுவரை படிச்சிட்டே முடிவு ஜொள்ளுவேன்ன்:)//

    நன்றி.

    தன்யனானேன்!

    தீர்ப்பை மட்டும் பார்த்துச் சொல்லுங்க...

    மாத்திச் சொல்லாதீங்க!!!

    பதிலளிநீக்கு
  39. //"எனக்கு பூவால் பூஜை செய் என்று தெய்வம் உங்களிடம் கேட்டதா? இவற்றை யார் உண்டாக்கினார்கள்?" என்றாள். //

    ஹையோ தெய்வம் எப்போ வாய் திறந்து பேசியிருக்கு? பூவைக் கேட்க கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. அது பூக்கள் கேட்டதாம் தம்மை தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்து:) தாம் பிறந்த பயனை அடைவதற்கு ஜெல்ப்ப்ப்ப்ப் பண்ணும்படி:))...

    கோயிலில் தேவிக்குப் பூஜை... இதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை...

    ஹையோ ஊமத்தம்பூ ஆசைப்படக்கூடாதா? அதுவும் பூத்தானே?:))

    பதிலளிநீக்கு
  40. // அது பூக்கள் கேட்டதாம் தம்மை தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்து:) தாம் பிறந்த பயனை அடைவதற்கு ஜெல்ப்ப்ப்ப்ப் பண்ணும்படி:))..//


    ஹையோ பூ எப்போ வாய் திறந்து பேசியிருக்கு? பூசைக்குக் கேட்க கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

    ஊமத்தம் பூவைப்போல சாமந்தியிலும் ஒருவகையை தெய்வத்துக்குப் படைக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  41. ///அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர். //
    இவர் மட்டும் என் கையில அகப்பட்டாரோ....:)))

    //"அங்கே பாருங்கள்... செடியிலேயே இருந்தால் அவை எவ்வளவு மலர்ச்சியுடன் இருக்கின்றன? பறித்து மேசையிலும், பூக்கூடையிலும் வைப்பதால் அவற்றைக் கொல்கிறோம் என்றே எனக்கு..." //

    அந்தக்காவின் தவிப்பிலயும் உண்மை இருக்கு:) ஆனா சில மலர்கள் செடியிலேயே இருந்தால் 1,2 நாட்களில் வாடிவிடும்.. ஆனா பறிச்சு தண்ணியில் வைத்தால் இன்னும் கூட நாட்கள் உயிர் வாழுமெல்லோ:)) இந்த விளக்கத்தைக் கொஞ்சம் அந்தக்காவுக்குச் சொல்லிடுங்கோ ஸ்ரீராம்:))

    பதிலளிநீக்கு
  42. // இந்த விளக்கத்தைக் கொஞ்சம் அந்தக்காவுக்குச் சொல்லிடுங்கோ ஸ்ரீராம்:)) //

    சொன்னேன் அதிரா... ஆனாலும் செடியிலிருந்து பிரித்து விட்டார்களே என்று கண்ணீர் சிந்துகிறாள்...

    // இவர் மட்டும் என் கையில அகப்பட்டாரோ....:)))//

    என்ன செய்வீங்க அதிரா?!!

    பதிலளிநீக்கு
  43. //"தோட்டம் முழுவதும் மலர்கள்... எவ்வளவு அழகு? மலர்களில்லா செடிகளை யோசித்துப் பாருங்கள்... நன்றாகவா இருக்கும்? அவற்றைப் பறிக்காமலிருக்கப் பழகுவோமே."//

    இப்போதான் என் கிட்னியில் ஒரு பொறி தட்டுப்படுது.. பூக்காத மரமும் உண்டோ??

    //ஆஹா... இது எதிர் சிந்தனை அதிரா...//
    பூக்களுக்கும் உணர்விருக்கு உயிர் இருக்கு என்றெல்லாம் ஜொள்ளுறீங்களே:).. அப்போ அவற்றுக்கு ஆசையும் இருக்குமெல்லோ:).. அதாவது அதிரா வீட்டுச் சோபாவுக்கு அருகில்.. அதிராவின் வைரவருக்கு அர்ச்சனை மலராக ஆகோணும் எண்டெல்லாம்:)) ஹா ஹா ஹா ஹையோ அப்பூடி என்ன டப்பாச் சொல்லிட்டேன் இப்போ?:))

    பதிலளிநீக்கு
  44. //என்ன செய்வீங்க அதிரா?!!//

    ஹா ஹா ஹா தள்ளி விட்டுப்போட்டு:) ஹையோ வைரவா பிளீஸ்ஸ் ஜெல்ப் மீஈஈஈஈஇ என ஓடித்தப்பிடுவேன்ன்:)) நான் தான் 1500 மீட்டரில 2 வதா வந்தேனெல்லோ:)) எங்கிட்டயேவா?:))

    பதிலளிநீக்கு
  45. // அதாவது அதிரா வீட்டுச் சோபாவுக்கு அருகில்.. அதிராவின் வைரவருக்கு அர்ச்சனை மலராக ஆகோணும் எண்டெல்லாம்:)) //

    'ஆஹா... இந்த வரியிலேயே தெரியவில்லையா இது மனிதர்களின் சுயநலம் என்று?' என்கிறாள் அந்தப் பெண்!

    பதிலளிநீக்கு

  46. ஹா ஹா ஹா தள்ளி விட்டுப்போட்டு:)//

    ஆஹா... தேம்ஸிலோ? எவ்வளவு பேரைத்தான் தாங்கும் தேம்ஸ்?!!

    பதிலளிநீக்கு
  47. //ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். இருள்.. தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது. இருளை உணரவைப்பது ஒளியா? ஒளியின் அருமை இருளில்தான் தெரிகிறதா? ஒளி இருளை விரட்டுகிறதா? இருள் பாவமா? சிலர் இருளைப் பார்க்கிறார்கள். சிலர் ஒளியைப் பார்க்கிறார்கள்... அவள் இதற்கும் வாதம் செய்வாளோ... //

    ஹா ஹா ஹா பாவம் அவர் பதில் சொல்லியே வேர்த்து விறுவிறுத்துப் போயிருக்கிறார்ர்:)) அதுதான் இருட்டைப்பார்த்தும் பயப்படுறார்ர்.. அதுக்கும் ஒரு குட்டிக் ஹைக்கூ உண்டே என்னிடம்...:))

    “இருளில் வழி தேடி எழுந்து வந்தேன்
    உன் கண்களின் வெளிச்சத்தை
    நீ காட்டிய பின்..
    வழியே தெரியாமல் திகைக்கிறேன்”.. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  48. // “இருளில் வழி தேடி எழுந்து வந்தேன்
    உன் கண்களின் வெளிச்சத்தை
    நீ காட்டிய பின்..
    வழியே தெரியாமல் திகைக்கிறேன்”.. //

    அவள் கண்கள் என்ன 1000 வாட்ஸ் வெளிச்சமோ!

    பதிலளிநீக்கு
  49. //ஊமத்தம் பூவைப்போல சாமந்தியிலும் ஒருவகையை தெய்வத்துக்குப் படைக்க மாட்டார்கள்.//

    இதெல்லாம் மக்கள் உருவாக்கிய சட்டம் தானே? சில பூக்கள் மட்டுமே தெய்வத்துக்கு.. சில மட்டுமே தலைக்கு.. சிலது மட்டுமே செடிக்கு:)) வேப்பம்பூ எல்லாம் உணவுக்கு ஹையோ ஹையோ:)) ஆனா நிட்சயம் ஒவ்வொன்றுக் காரணம் இருக்கும்தானே... காரணம் தெரியாமையாலதான் நகைக்கிறோம்:))

    பதிலளிநீக்கு
  50. // இதெல்லாம் மக்கள் உருவாக்கிய சட்டம் தானே? சில பூக்கள் மட்டுமே தெய்வத்துக்கு.. சில மட்டுமே தலைக்கு.. சிலது மட்டுமே செடிக்கு:)) வேப்பம்பூ எல்லாம் உணவுக்கு ஹையோ ஹையோ:)) ஆனா நிட்சயம் ஒவ்வொன்றுக் காரணம் இருக்கும்தானே... காரணம் தெரியாமையாலதான் நகைக்கிறோம்:)) //

    இதான்... இதான்... இதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் பின்னூட்டங்கள் உதவுது....

    பதிலளிநீக்கு
  51. //ஸ்ரீராம். said...

    ஹா ஹா ஹா தள்ளி விட்டுப்போட்டு:)//

    ஆஹா... தேம்ஸிலோ? எவ்வளவு பேரைத்தான் தாங்கும் தேம்ஸ்?!!//

    அது நிறையப்பேரைத் தாங்கும் ஸ்ரீராம் ஆனா அஞ்சுவைப் போட்டால் மட்டும்தான் பின்பு இடம் பத்தாமல் போயிடும்:)) ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சு மொட்டை மாடியில் ஒளிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்:)).. ஆள் இப்பொ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    //அவள் கண்கள் என்ன 1000 வாட்ஸ் வெளிச்சமோ!///

    ஹா ஹா ஹா இப்பூடி ஏதும் பொய் சொல்லி ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்துதானே தப்பி விடுகின்றனர் தெக்கினிக்கி:) தெரிஞ்ச ஆண்கள்:))

    பதிலளிநீக்கு
  52. வார்த்தைஜால வாதங்கள் இரசிக்க வைத்தன ஜி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  53. மொத்தத்தில இன்று அருமையான கவிதைபோன்ற தொகுப்பு:)) இதனால்தானாக்கும் நேக்கு நித்திரை வரவில்லை:)) தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத்தான் முடிவுக்கு வந்திருக்குது ஸ்ரீராம்:)) மிகுதியை என் செக்:) வந்து தொடர்வா:))

    ஊசிக்குறிப்பு:-
    நீங்க அண்டைக்கு கல்யாணமாகாத தேவியைப் போய்ப் பார்த்ததிலிருந்து உங்கட கிட்னி:) நன்றாகவே வேர்க் பண்ணுது:)).

    அது சரி அந்தக்காவும் மாமாவும் ஆரு?:)) எதுக்கு பூவைப்பற்றியே கதைக்கினம் வேற கதைக்க கதை ஏதும் இல்லையோ?:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..


    கீசாக்கா வந்தா ஜொள்ளிடுங்கோ அதிரா வந்து போன இடத்தில புல்லும் முளைச்சிட்டுது என ஹையோ ஹையோ:).. இனி இன்றும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டு வருவா லேட்டுக்கு:)) நேசறிப்பிள்ளைகள்மாதிரி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  54. // ஹா ஹா ஹா இப்பூடி ஏதும் பொய் சொல்லி ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்துதானே தப்பி விடுகின்றனர் தெக்கினிக்கி:) தெரிஞ்ச ஆண்கள்:)) //

    ஹா... ஹா... ஹா.. நீங்கதானே கண்ணு கூசி கண் தெரியாமல் போகுதுன்னு சொன்னீங்களே..!

    பதிலளிநீக்கு
  55. // மொத்தத்தில இன்று அருமையான கவிதைபோன்ற தொகுப்பு:)//

    மாத்தாத தீர்ப்புக்கு நன்றி அதிரா..

    // நீங்க அண்டைக்கு கல்யாணமாகாத தேவியைப் போய்ப் பார்த்ததிலிருந்து உங்கட கிட்னி//

    ஹா... ஹா... ஹா...

    // அது சரி அந்தக்காவும் மாமாவும் ஆரு?:)) எதுக்கு பூவைப்பற்றியே கதைக்கினம்//

    என்ன படம் கிடைக்கிறதோ அதற்கேற்பத்தானே கதைக்க முடியும்!

    // நேசறிப்பிள்ளைகள்மாதிரி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //

    அட, ஆமாம்.. இன்னும் கீசாக்கவைக் காணோம்!

    பதிலளிநீக்கு
  56. இன்னிக்கு பூவைப் பத்தி
    பதிவு வந்ததுக்கு அப்புறம்
    பூகம்பம் வந்த மாதிரி இருக்கு...

    பூவுக்குள் பூகம்பம்...என்றது ஒரு பாட்டு...

    பூ...ந்டால் பூவுன்னும் சொல்லலாம்..
    பூமி..ண்டும் ஜொல்லலாம்...

    இந்தப் பதிவை வச்சி
    நாம ஒரு பதிவு போட்டுடலாம்...ந்னு நெனச்சி முடிக்கிறதுக்குள்ளே
    பூமாரி பொழிஞ்ச மாதிரி ஆயிடுச்சி...

    நினைத்த விஷயங்கள் பலவும்
    அதிரடி அதிராவின் கருத்துகளில்...

    இவங்கள மட்டும் குருக்ஷேத்திரத்தில் முன்னால் நிறுத்தியிருந்தால்
    பதினெட்டு நொடியில் எல்லாம்
    முடிந்திருக்கும்...

    அர்ஜூனனின் கணைகளுக்கு வேலையே இருந்திருக்காது....

    சரமழையாய் கருத்துமழை....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  57. ஹையோ, அதுக்குள்ளே இத்தனை கருத்துக்கள்? கிழிஞ்சது போங்க! நான் தான் சீக்கிரமா வர முடியாதுனு ஜொன்னேனே அதிரடி, ஒழுங்காப் படிங்க! நானும் மத்தியானமா வரேன். ஶ்ரீராம் எழுதி இருக்கும் கதை பாதிலே முடிஞ்சிருக்கு! மிச்சம் எப்போ?

    பதிலளிநீக்கு
  58. கேஜிஜி சார் பண்ணீனீங்க? ஓடினது யாரு? (புதன் கிழமை கேள்விக்கும் வைச்சுக்குங்க! :))))

    பதிலளிநீக்கு
  59. கொடி அசைந்ததும் காற்று வந்ததா. கதையாக
    இருளுக்குப் பின் ஒளியா
    ஒளியினால் இருளா.

    மலர்கள் இறைவனை அடைவதும், மங்கை கூந்தல் அடைவதும்
    ஆயிரம் வருடங்களாக இருக்கின்றன.

    அந்தப் பெண் யாரோ. எங்கள் சிங்கத்தின் தங்கையோ.
    அன்புடன் பார்ப்பவர் பெற்றவரோ.

    பதிலளிநீக்கு
  60. /மலரும் மனமும்.. சிலர் இருளைப் பார்க்கிறார்கள். சிலர் ஒளியைப் பார்க்கிறார்கள்.../

    அருமை.

    பதிலளிநீக்கு
  61. Enjoyed pictures with story and comments! Thottam illadha veettil malargalai rasikka vazhi?!!

    பதிலளிநீக்கு
  62. உங்கள் கதைக்கவிதைக்கு அதிராவின் பரிமேலழகர் உரையைப் படித்து முடித்தேன். இனி விஷயத்துக்கு வருவோம்.

    // அவர் கண்களில் அவளும் ஒரு மலர் போலவே தெரிந்தாள். //
    உடனே பறிச்சு எந்த சாமியின் பாதத்திலாவது உருட்டிவிட்டுவிடவில்லையே?

    @ athira: ..சில பூக்கள் மட்டுமே தெய்வத்துக்கு.. சில மட்டுமே தலைக்கு.. சிலது மட்டுமே செடிக்கு:)) வேப்பம்பூ எல்லாம் உணவுக்கு ஹையோ ஹையோ:))

    ஒரு மாறுதலுக்கு இப்படி இருக்கலாமோ: வேப்பம்பூக்களை வேகவேகமாப் பறிச்சு தெய்வத்தின்பக்கம் தள்ளிவிட்டு, அந்த ரோஜாக்களை நைஸா ரசத்துக்குள் போட்டுவிடுங்களேன்.. புது ரெஸிப்பி கிடைத்துவிடுமே..!

    பதிலளிநீக்கு
  63. திரும்ப வரப் போவதில்லை என்றதாம் செடி
    "என்னை வளர்த்ததற்கு மீண்டும் உன் மடியில்
    பிறக்காமலா போய்விடுவேன்"
    "எத்தனைமுறை உன்னை வளர்த்து
    அழகிய பதுமையாக ஆகும்போது
    பிறர் பறித்துச் செல்லப் பார்த்திருப்பது" கண்ணீர் விட்டது செடி.
    "நான் பிறந்ததன் பயனே பிறருக்குப் பலனாக இருக்கத்தானே...
    இறைவனிடம் இருந்தாலும், வரவேற்பறையில் இருந்தாலும்
    பெண் கூந்தலில் இருந்தாலும் எல்லோரின் மனமகிழ்ச்சிக்கும்
    நான் காரணமாவேன் அல்லவோ....
    இங்கேயே இருந்து வாடிப்போவதில் பயன் என்ன அம்மா..
    முற்பிறவியில் என்னை மகளாகப் பெற்று
    பிறர் வீட்டுக்கு விளக்கேற்ற அனுப்பியவள் நீ அல்லவா?

    பதிலளிநீக்கு
  64. தாமஸ் க்ரேயின் An Elegy written in A Country Churchyard உலகப்புகழ்பெற்ற ஆங்கில இலக்கியம். மலர்களைப் பற்றி இவர் சொன்ன கருத்து:

    full many a flower is born to blush unseen,
    And waste its sweetness on the deser air.
    உங்கள் பதிவைப் படித்தபோது என் கல்லூரி நாட்களில் படித்த இந்த தாமஸ் க்ரேயின் கவிதை நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  65. @ அதிரா/ ஸ்ரீராம்: ..ஆனா சில மலர்கள் செடியிலேயே இருந்தால் 1,2 நாட்களில் வாடிவிடும். ஆனா பறிச்சு தண்ணியில் வைத்தால் இன்னும் கூட நாட்கள் உயிர் வாழுமெல்லோ.//

    அதிராவுக்கு அவ்வப்போது யாரையாவது, ஒரு இருபதுவருஷமாவது பின்னே தள்ளிவிடுவதில் ஒரு திருப்தி.. 1997, நைரோபி. எங்கள் காம்ப்ளெக்ஸில் ஏகப்பட்ட செடி, கொடிகள், மரங்கள். விதவிதமான பூக்கள். ஆப்பிரிக்காவில் பூக்களுக்கு கேட்கவேண்டுமா. ஒரு மாலையில் கிரிக்கெட் முடிந்து லேட்-ஈவனிங்க் ’வாக்’ போய்க்கொண்டிருக்கையில், கூட வந்த கன்னிகையிடம் இப்படிக் கேட்டுவைத்தேன். இந்தப்பூவெல்லாம் செடியில் எத்தனை அழகாக இருக்கு. இதப்போய் மெனக்கெட்டுப் பறிச்சு, பூஜாடிகளில் திணித்து நட்டுவெச்சு, ட்ராயிங் ரூமில் வைக்கிறீங்களே.. உங்களையெல்லாம் என்னதான் செய்யறதெனத் தெரியலையே..! என்றேன் மெதுவாக. (மெதுவாகத்தான். இல்லாவிட்டால் கேட்பவர்கள் அரைகுறையாகக் கேட்பதோடு கொளுத்தியும் போட்டுவிடுவார்களல்லவா?).
    பூப்போல பூப்போல சிரித்த அந்தப் பெண்ணும், கிட்டத்தட்ட நீங்கள் மேலே சொன்னதைப்போலவே பதில்சொல்லிவிட்டு ஒய்யாரமாய் நடந்து சென்றாள்.. இதன் மீள்பதிவு 2018-ல் எங்கள் ப்ளாகில் ரிலீஸ் ஆகும் என அப்போது நான் நினைத்திருக்கமுடியுமா!

    பதிலளிநீக்கு
  66. @ R Muthusamy : ..

    Full many a flower is born to blush unseen
    And waste its sweetness on the desert air

    .. கல்லூரி நாட்களில் படித்த இந்த தாமஸ் க்ரேயின் கவிதை நினைவு//

    Thomas Grey-ன் கவிதை வரிகளை எபி-யில் இறக்கிவிட்டதற்கு நன்றி. என் நினைவுகளைப் பல வருடங்கள் பின்னோக்கித் தள்ளிவிட்டீர்கள். புதுக்கோட்டையின் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்துக்கொண்டிருக்கையில், Thomas Grey-யின் ஒரு கவிதை - Ruin seize thee ruthless king! - என்று ஆரம்பிக்கும் - வந்திருந்தது. Wales நாட்டைப் படையெடுத்து வென்றபின் இங்கிலாந்து அரசனான Edward-I, அங்கிருந்த கவிஞர்கள் எல்லோரையும் கொன்று குவிக்கும்படி தன் வீரர்களுக்கு ஆணையிட்டான். அவ்வாறே வேல்ஸின் புகழ்பெற்ற பெருங்கவிஞர்களின் தலைகள் சீவப்பட்டன. அந்தக் கொடுங்கோலரசனை வேல்ஸ் கவிஞன் ஒருவன் எதிர்த்து சபித்துப் பாடுவதாக, தாமஸ் க்ரே எழுதிய கவிதை இது. ஆங்கிலப் பேராசிரியர் சி. ராஜசேகர் இதனைப் பாடமாக எங்களுக்கு நடத்திய கம்பீரம், ஸ்டைல், அவரது உருமும் குரல் - எல்லாம் நினைவில் இருக்கிறது இன்னும். எங்கிருக்கிறாரோ அவர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்ட இக்கவிதையை நானும் படித்திருக்கிறேன். H H Raja's College ஆங்கில வகுப்புகள் பற்றி நிறைய நண்பர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. நன்றி ஐயா.

      நீக்கு
  67. * கரெக்‌ஷன்: அவரது உறுமும் குரல்..

    பதிலளிநீக்கு
  68. வணக்கம் சகோதரரே

    மிக அழகான பூக்கள்.பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள். அது போல், பூக்களோடு இணைந்த நாராக பின்னிப் பிணைந்த கதை.. இரண்டுமே வாசமாக, ரசிக்கும்படி இருந்தது. மிக அருமையான கற்பனை வளத்துடன் நடந்த உரையாடல்கள் காட்சிகளை கண் முன் நிறுத்தியது. தலைப்பிலும் தங்கள் மனம் புரிந்து ரசித்தேன்.

    /இருள்.. தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது. இருளை உணரவைப்பது ஒளியா? ஒளியின் அருமை இருளில்தான் தெரிகிறதா? ஒளி இருளை விரட்டுகிறதா? இருள் பாவமா? சிலர் இருளைப் பார்க்கிறார்கள். சிலர் ஒளியைப் பார்க்கிறார்கள்.../

    மலரும் மணமும் ஒன்றிய மாதிரி, இருளும் ஒளியும் பிரிக்க முடியாதது.
    இருளுக்கு பெருமை சேர்ப்பது ஒளி... அது தரும் பெருமையோடு, தன்னழகை மெருகூட்டுவது இருள்.

    இரண்டுமே செடியிலிருக்கும் மலரைப் போல, அழகில் சளைத்தவர்களில்லை.

    சகோதரி அதிராவின் பின்னூட்டங்கள் திகைக்க வைத்தன. "விரைவு" "வேகம்" என்ற சொல்லுக்கு பதிலாக அகராதியில் வேறு சொல்லை கண்டு பிடிக்க வேண்டும். அவரது கவிதைகளும் தங்கள் பதில்களும் அருமை. இதை நான் தட்டச்சு செய்வதற்குள், மேலும் 100 பின்னூட்டகங்கள் தங்களுக்கு வந்திருக்கும் நினைக்கிறன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  69. இதமான காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியை தந்தன பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  70. //kg gouthaman said...
    பண்ணிட்டேன்.///

    ஆஆஆஆ புய்ப்பம் மட்டர் எண்டதும் கெள அண்ணனும் ஸ்பீட் லாண்டிங்ங்ங்ங்:)) ஹா ஹா ஹா:))

    //June 10, 2018 at 7:19 AM
    kg gouthaman said...
    மொத்தம் ஓடினதே ரெண்டு பேருங்கதானே!////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது 4 ஹவுஸஸ்:) ஒவ்வொன்றிலும் 4 பேர் ஓடியதாக நினைவு... ஆனா மீ 2 வதா வந்தேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா அது எப்பூடி என்பதே சஸ்பென்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  71. ///துரை செல்வராஜூ said...
    இந்தப் பதிவை வச்சி
    நாம ஒரு பதிவு போட்டுடலாம்...ந்னு நெனச்சி முடிக்கிறதுக்குள்ளே
    பூமாரி பொழிஞ்ச மாதிரி ஆயிடுச்சி...

    நினைத்த விஷயங்கள் பலவும்
    அதிரடி அதிராவின் கருத்துகளில்...////

    ஹா ஹா ஹா பூ எண்டுதானே ஸ்ரீராம் போட்டிருக்கிறார்:) நீங்க புய்ப்பமாக்கிப் போடலாமெல்லோ போஸ்ட்டை துரை அண்ணன்:))

    பதிலளிநீக்கு
  72. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. பதிவுலகின் அதிசயத் தோழி அதிரா.

    பதிலளிநீக்கு
  73. கேஜிஜி...

    //மொத்தம் ஓடினதே ரெண்டு பேருங்கதானே!//

    அபுரி.

    பதிலளிநீக்கு
  74. கீதாக்கா

    //ஶ்ரீராம் எழுதி இருக்கும் கதை பாதிலே முடிஞ்சிருக்கு! மிச்சம் எப்போ?//

    இன்னும் இருக்கா? எனக்குத் தெரியலையே... இருந்தா கொடுங்களேன்...! என்னைப் பொறுத்தவரை இது கதையே இல்லை.

    பதிலளிநீக்கு
  75. //அந்தப் பெண் யாரோ. எங்கள் சிங்கத்தின் தங்கையோ. அன்புடன் பார்ப்பவர் பெற்றவரோ.//

    வாங்க வல்லிம்மா... அம்மாவுக்குதான் கேள்வி வருகிறது பெற்றவரோ என்று... அப்படியே வச்சுக்கலாமே... சிங்கமும் இப்படிதானா?

    பதிலளிநீக்கு
  76. துரை செல்வராஜூ said...
    //இவங்கள மட்டும் குருக்ஷேத்திரத்தில் முன்னால் நிறுத்தியிருந்தால்
    பதினெட்டு நொடியில் எல்லாம்
    முடிந்திருக்கும்...

    அர்ஜூனனின் கணைகளுக்கு வேலையே இருந்திருக்காது....//

    ஹா ஹா ஹா ஒரு புய்ப்பப் பின்னூட்டத்தை வச்சூஊஊஊஉ குருசேத்திரம் வரை பின்னோக்கிப் போயிட்டீங்க:)).
    ஏகாந்தன் அண்ணன்கூட கல்லூரி நியாஆஆஆஆஆபகத்துக்கு மட்டுமே போனார்ர்:)) அதுக்கு முன் நடந்தவற்றை மறந்திட்டாரோ அவர்:)) சரி சரி ந்மக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. எனக்குத்தான் இண்டைக்கு நாள் சரியில்லையாமே.. வானம் எல்லாம் ஒரே மேக மூட்டமாய் இருக்குமாம்:)).. இரவுக்குத்தான் அவை விலகுமாம்:) .. சிவசம்போ.. சிவசம்போ...:) [இதில இருந்து என்ன புரியுது?:) மீ “நினைத்தாலே இனிக்கும்” பார்த்திட்டேன் எனப் புரியுதோ....].

    துரை அண்ணன் நான் இருந்திருந்தால்ல்.. கர்ணன் தாத்தாவை[நாம அங்கிள் எண்டால்.. எல்லோரும் ஓடிவந்து தாத்தா என்கினம்:)) அதனால விசயத்தில முந்திட்டேன்ன் பூஸோ கொக்கோ:)] காப்பாத்தி இருப்பேனே:)).. இப்போ தமிழ்நாடு முழுக்க கர்ணன் தாத்தாவின் பேரப்பிள்ளைகளாகவே இருந்திருக்கும்:)..

    பதிலளிநீக்கு
  77. நன்றி middleclassmadhavi. அதானே... தோட்டம் இல்லாத வீட்டில் மலர்களை ரசிக்க என்ன வழி? பக்கத்து வீட்டைப் பார்க்க வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  78. வாங்க ஏகாந்தன் ஸார்... மாத்தி யோசிக்கறதுங்கறது இதுதானா? வேப்பம்பூவை தெய்வத்துக்கு வைக்கக் கூடாதா? உங்களை இருபது இருபது வருடங்களாக பின்னால் இழுத்துச் செல்ல உதவிய ஏபி, அதிரா, நண்பர் முத்துசாமி அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். சுவாரஸ்யமான தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  79. வாங்க நெல்லைத்தமிழன்..

    //"நான் பிறந்ததன் பயனே பிறருக்குப் பலனாக இருக்கத்தானே... இறைவனிடம் இருந்தாலும், வரவேற்பறையில் இருந்தாலும் பெண் கூந்தலில் இருந்தாலும் எல்லோரின் மனமகிழ்ச்சிக்கும் நான் காரணமாவேன் அல்லவோ....//

    நல்ல சிந்தனைதான்.

    //முற்பிறவியில் என்னை மகளாகப் பெற்று பிறர் வீட்டுக்கு விளக்கேற்ற அனுப்பியவள் நீ அல்லவா?//

    ஆள் மாறி இருக்குமோ? பூ தாயாகவும், செடி மகளாகவும் இருந்திருக்குமோ!!

    பதிலளிநீக்கு
  80. நன்றி நண்பர் முத்துசாமி. உங்கள் பதில் ஏகாந்தன் ஸாரின் இன்னொரு பழைய நினைவைத் தூண்டி விட்டது.

    பதிலளிநீக்கு
  81. ஆஆஆஆஆஆஆஅ ஸ்ரீறாமும் கம்ம்ம்ம்பி மேலே:)))

    பதிலளிநீக்கு
  82. வாங்க கமலா ஹரிஹரன்...

    இன்று காலையே அதிரா வந்து அதிரடி செய்து பதிவுக்கு கனம் சேர்த்து விட்டார். கீதா ரெங்கனை மிஸ் செய்கிறோம். அவர் வந்திருந்தால் இன்னும் களை கட்டி இருந்திருக்கும்! உங்கள் பாராட்டுக்கும் ரசனைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  83. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  84. மீள் வருகைக்கு நன்றி அதிரா... கௌ அங்கிள் மொட்டையாக சொன்னதைப் புரிந்துகொண்ட பதிலளித்துள்ளீர்கள்!!!

    பதிலளிநீக்கு
  85. //மீ “நினைத்தாலே இனிக்கும்” பார்த்திட்டேன் எனப் புரியுதோ//

    அப்படியா அதிரா? பார்த்தாச்சா? என்ன விமர்சனம்?

    பதிலளிநீக்கு
  86. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    உங்கள் கதைக்கவிதைக்கு அதிராவின் பரிமேலழகர் உரையைப் படித்து முடித்தேன். இனி விஷயத்துக்கு வருவோம்./// ஹா ஹா ஹா பரி எண்டால் குதிரைதானே?.. இல்ல இது அஞ்சுவுக்குப் புரியாது பிறகு கழுதையோ என நினைச்சுடுவா.. என் இமேஜ் டமேஜ் ஆகிடுமெல்லோ:))..

    ///ஸ்ரீராம். said...
    மீள் வருகைக்கு நன்றி அதிரா... கௌ அங்கிள் மொட்டையாக சொன்னதைப் புரிந்துகொண்ட பதிலளித்துள்ளீர்கள்!!!//

    அது ஸ்ரீராம்.. ஒபைலில் பார்த்தேன் கரெக்க்ட்டாக் காட்டுது:)) அதனாலேயே கண்டு பிடிச்சேன்ன்.. கீசாக்காவும் நீங்களும் கொம் ல பார்ப்பதால் உங்களுக்கு ஆஆஆ..பூரி:))

    பதிலளிநீக்கு
  87. பூப்பதிவு பார்த்து நெ.தமிழன் “இன்ஸ்டண்ட் கவிஞர்” ஆகிட்டாஆஆஆஆஆஆஆர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  88. ஏகாந்தன் Aekaanthan ! said...
    //பூப்போல பூப்போல சிரித்த அந்தப் பெண்ணும், கிட்டத்தட்ட நீங்கள் மேலே சொன்னதைப்போலவே பதில்சொல்லிவிட்டு ஒய்யாரமாய் நடந்து சென்றாள்.. இதன் மீள்பதிவு 2018-ல் எங்கள் ப்ளாகில் ரிலீஸ் ஆகும் என அப்போது நான் நினைத்திருக்கமுடியுமா!///

    ஹா ஹா ஹா 97 இல அந்த அப்புறிக்கன்:) அக்கா:) சிரிச்ச சிரிப்பை... 2018 ல எவ்ளோ கிரிக்கெட் மச்..கள் பார்த்த பின்பும் ஏகாந்தன் அண்ணனால மறக்க முடியல்லே:)) ஹா ஹா ஹா.

    எங்கள் நாட்டில்.. 83 இல் பெரிய இனக்கலவரம் கொழும்பில வந்ததெல்லோ.. அப்போ ஒரு அங்கிள்.. தமிழ் ஆட்கள் தங்கியிருந்த முகாமில் ஓடி ஓடி கெல்ப் பண்ணியிருக்கிறார்.. அப்போ கொழும்பில் தனியாக ஒரு அக்கா வேர்க் பண்ணியிருக்கிறா.. அவவும் அந்த முகாமில் தஞ்சம் அடைஞ்சிருக்கிறா.. அங்கிருந்து பாதுகாப்பாக எல்லோரும் தத்தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் வரை முகாமில் இந்த அங்கிள் தலைமை ஏற்று உதவிகள் புரிந்திருக்கிறார்.

    அப்போ அங்கு தண்ணி வசதி.. ரொய்லெட்.. உணவு எதுவும் ஒழுங்காக கிடைக்கவில்லையாம்.. சுகமாக வாழ்ந்தோருக்கு மிக கஸ்டமாக இருந்திருக்கும்.. இந்த அக்காவுக்கு வேறு வழி தெரியாமல் அந்த அங்கிளிடம் போய் .. அடக்கி வச்சிருந்த கவலை எல்லாம் கொட்டி குமுறிக் குமுறி அழுதாவாம்ம் தன்னால ஒரு பொழுதுகூட அங்கிருக்க முடியவில்லை என.. அதை சமீபத்தில் அந்த அங்கிள் நினைவுபடுத்திச் சொன்னார்.. “அன்று அவ அழுத அழுகையை தன்னால மறக்கவே முடியாது, மனதில் பதிஞ்சிட்டுது” என... அவ ஆரென்றே தெரியாது அவருக்கு....

    சில நினைவுகள் மனதை விட்டகலாது நீறு பூத்த நெருப்பாக இருக்கும்:))

    பதிலளிநீக்கு
  89. ///சகோதரி அதிராவின் பின்னூட்டங்கள் திகைக்க வைத்தன. "விரைவு" "வேகம்" என்ற சொல்லுக்கு பதிலாக அகராதியில் வேறு சொல்லை கண்டு பிடிக்க வேண்டும். அவரது கவிதைகளும் தங்கள் பதில்களும் அருமை. இதை நான் தட்டச்சு செய்வதற்குள், மேலும் 100 பின்னூட்டகங்கள் தங்களுக்கு வந்திருக்கும் நினைக்கிறன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.///

    ஹா ஹா ஹா.. ரசித்தமைக்கு நன்றி... இல்ல நான் அத்தோடு ஓடிட்டேன்ன்:))... காத்துக் கறுப்பு + அநானி:) எல்லாம் உலாவுற நேரமெல்லோ ஹையோ ஹையோ:)

    எப்பவுமே போஸ்ட்ட்டையும்.. அதை வெளியிடும் ஓனரையும் பொறுத்தே பின்னூட்டங்கள் அமையும்..

    போஸ்ட் போடுபவர்... டக்கு டக்கெனக் கோபிப்பவராகவோ அல்லது சிலதை தப்பாக எடுத்திடுவார் நகைச்சுவையாக எடுக்க மாட்டார் என்றோ இருப்பின்.. இப்படி ஜிந்திக்காமல்:)) கண்ணை மூடிக்கொண்டு கடகடவெனக் கொமெண்ட்ஸ் ரைப் பண்ண முடியாது:))[மனம் பயப்படுமெல்லோ:))].. அதனால எல்லாப் புகழும்.. புய்ப்பப் போஸ்ட் போட்ட ஓனருக்கே:)).. கெள அண்ணனுக்கில்லை:)) ஹா ஹா ஹா மீக்கு வேலை இருக்கு ரன்னிங்ங்ங்ங்ங்:))

    பதிலளிநீக்கு
  90. ///ஸ்ரீராம். said...
    //மீ “நினைத்தாலே இனிக்கும்” பார்த்திட்டேன் எனப் புரியுதோ//

    அப்படியா அதிரா? பார்த்தாச்சா? என்ன விமர்சனம்?///
    ////
    எனக்கு என்னமோ கமல் அங்கிளின் எல்லாப் படங்களும் பிடிப்பதில்லை அதனாலேயே நிறையப்படங்கள் பார்க்கவில்லை.

    நினைத்தாலே இனிக்கும் பார்த்தேன் மிக அருமையான படம்.. கடசிவரை ஒரு புரியாத புதிர்போலவும் சோனா ஏமாத்துறா என கோபமாகவும் இருந்துது... கொஞ்சம் கவலை...
    கமல் அங்கிளின் காதல் காட்சிகள் மிக அருமை இதில்.

    அந்த சோனா என்பவ மிக அழகாக இருக்கிறா பின்பு நடிப்பதில்லையோ...

    அத்தனை பாடல்களும் அருமை.. பலதடவைகள் கேட்டிருக்கிறேன்ன்.. நீங்க வெள்ளி போட்டதைத்தவிர்த்து:))

    பதிலளிநீக்கு
  91. @ அதிரா: ..ஹா ஹா 97 இல அந்த அப்புறிக்கன்:) அக்கா:) சிரிச்ச சிரிப்பை...//

    அட வைரவரே! அந்த தேசந்தான் அப்புறிக்க தேசம். சிரிச்சுவச்சது நம்ம இந்தியப் பொண்ணுதேன்...
    ஆஹா, விளக்கி விளக்கியே விடிஞ்சுருமோ..!

    பதிலளிநீக்கு
  92. சில மலர்கள் செடியில் இருந்தாலே அழகு சில மங்கையர் கூந்தலிலிருந்தால் அழகு சில இறைவனுக்கு அர்ச்சிக்க அழகு என் வீட்டில் பூக்கும் ஃபுட் பால் லில்லி ஆண்டு ஒன்றுக்கு ஒரு முறைதான்பூக்கும் ஒரு வாரகாலம் செடியில் இருக்கும்நிச்சயமாக தலையில் சூட அல்ல . பள்ளியில் படிக்கும் போது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதிய டாஃபொடில்ஸ் நினைவுக்கு வந்தது இப்போது மீண்டும் படித்தால் ரசிப்பேனோ என்னவோ

    பதிலளிநீக்கு
  93. / அது ஸ்ரீராம்.. ஒபைலில் பார்த்தேன் கரெக்க்ட்டாக் காட்டுது:)) அதனாலேயே கண்டு பிடிச்சேன்ன்.. கீசாக்காவும் நீங்களும் கொம் ல பார்ப்பதால் உங்களுக்கு ஆஆஆ..பூரி:)//

    உண்மை அதிரா.. நான் கூட அப்புறம் மொபைலில் (ஒபைலில்!!) ஒரு தரம் பார்த்து அ வை எடுத்துடலாம்னு நினைத்தேன்!

    பதிலளிநீக்கு
  94. அதிரா...

    // நெ.தமிழன் “இன்ஸ்டண்ட் கவிஞர்” ஆகிட்டாஆஆஆஆஆஆஆர்ர்:)//

    நெல்லை இலக்கணங்கள் அறிந்த கவிஞர் அதிரா.. வெண்பா எல்லாம் எழுதுவார். இங்கு நான் எழுதும் கவிதைகளை பார்த்து வெறுத்துப்போய் சும்மா இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  95. // அதை சமீபத்தில் அந்த அங்கிள் நினைவுபடுத்திச் சொன்னார்.. “அன்று அவ அழுத அழுகையை தன்னால மறக்கவே முடியாது, மனதில் பதிஞ்சிட்டுது” என... அவ ஆரென்றே தெரியாது அவருக்கு....//

    யார் அவர்? உங்களுக்குத் தெரிந்தவரா?

    // அதனால எல்லாப் புகழும்.. புய்ப்பப் போஸ்ட் போட்ட ஓனருக்கே:)//

    அது யாரது?!!!

    பதிலளிநீக்கு
  96. அதிரா...

    // அந்த சோனா என்பவ மிக அழகாக இருக்கிறா பின்பு நடிப்பதில்லையோ...//

    என்ன இப்படிக்கு கேட்டுட்டீங்க... 47 நாட்கள், சலங்கை ஒலி, தசாவதாரத்தில் கூட ஒரு கமலுக்கு (சிங்) ஜோடி, நிறைய நடித்திருக்கிறார்...

    பதிலளிநீக்கு
  97. வாங்க ஜி எம் பி ஸார்..

    // சில மங்கையர் கூந்தலிலிருந்தால் அழகு//

    அந்தச் சில மங்கையர்கள் யார் என்பதை விளக்க முடியுமா ஸார்? :P

    பதிலளிநீக்கு
  98. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ அதிரா: ..ஹா ஹா 97 இல அந்த அப்புறிக்கன்:) அக்கா:) சிரிச்ச சிரிப்பை...//

    அட வைரவரே! அந்த தேசந்தான் அப்புறிக்க தேசம். சிரிச்சுவச்சது நம்ம இந்தியப் பொண்ணுதேன்...
    ஆஹா, விளக்கி விளக்கியே விடிஞ்சுருமோ..!//

    ஹா ஹா ஹா அதுதானே விக்கிப்போய் நிண்டென்:)) அப்புறிக்கன் அக்காவை எல்லாம் நினைவில வச்சிருக்கிறாரே இத்தனை வருசமா என:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  99. @சிறீராம்...:)

    //நெல்லை இலக்கணங்கள் அறிந்த கவிஞர் அதிரா.. வெண்பா எல்லாம் எழுதுவார். இங்கு நான் எழுதும் கவிதைகளை பார்த்து வெறுத்துப்போய் சும்மா இருக்கிறார்.//

    ஹா ஹா ஹா உண்மைதான்... ஆனா இப்போதெல்லாம் அவர் என் தமிழ்ப்புலமை பார்த்து விக்கித்துப்போய் நிற்கிறார்ர்:)) பிழை பிடிக்கவே முடியவில்லை அவரால ஹா ஹா ஹா ஹையோ என் செக் எங்கின போயிட்டா பீஸ்ஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈஈ:))..

    இன்னொன்று...சிறீராம்... ச்சும்மா இருப்பது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ?:)) வடிவேல் அங்கிள் ஜொன்னதைக் கேட்டிருப்பீங்கதானே?:))

    பதிலளிநீக்கு
  100. //ஸ்ரீராம். said...
    // அதை சமீபத்தில் அந்த அங்கிள் நினைவுபடுத்திச் சொன்னார்.. “அன்று அவ அழுத அழுகையை தன்னால மறக்கவே முடியாது, மனதில் பதிஞ்சிட்டுது” என... அவ ஆரென்றே தெரியாது அவருக்கு....//

    யார் அவர்? உங்களுக்குத் தெரிந்தவரா?//

    சொந்தக்கார அங்கிள்தான்.. கொமெடியாப் பேசுவார். அவர் அப்போ வாலிபத்தின் நடுப்பகுதியில் இருந்தார் அதனால அது ஆழமாப் பதிஞ்சிட்டுது போல:)) இப்போ வாலிபத்தின் விழிம்பில் இருக்கிறார்ர் அதாவது 65+ என நினைக்கிறேன்:)) ஹா ஹா ஹா.

    // அதனால எல்லாப் புகழும்.. புய்ப்பப் போஸ்ட் போட்ட ஓனருக்கே:)//

    அது யாரது?!!!//

    ஹையோ அடிக்கடி அந்த.. நான் கஸ்டப்பட்டு கீதாவிடம் கேட்டெல்லாம் கண்டு பிடிச்ச அந்த 4 வித்தியாசங்களின் ஜொந்தக்காரர்அவர்:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  101. //என்ன இப்படிக்கு கேட்டுட்டீங்க... 47 நாட்கள், சலங்கை ஒலி, தசாவதாரத்தில் கூட ஒரு கமலுக்கு (சிங்) ஜோடி, நிறைய நடித்திருக்கிறார்...//

    ஓ சலங்கை ஒலியில் வருபவ அவவோ.. ஓ சரிதான். சலங்கை ஒலி பார்த்தேன் ஆனா ஏனைய இரண்டும் பார்க்கவில்லை. பார்த்திடோணும்:))

    பதிலளிநீக்கு
  102. // சிறீராம்...:)/

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

    // இப்போதெல்லாம் அவர் என் தமிழ்ப்புலமை பார்த்து//

    ஆமாமாம்... நீங்கதான் தமிழ்ல டி ஆச்சே!

    4 வித்தியாசங்களும் கவுந்து விட்டதுவே, நினைவில்லையா?

    தசாவதாரம் பார்க்க ரொம்பப் பொறுமை வேண்டும்!

    பதிலளிநீக்கு
  103. காலையில் மலர்கள் படங்களும் கருத்துக்களும் பார்த்தேன். சற்று நேரம் கழித்து படித்து விட்டு பின்னூட்டமிடலாம் என்று நினைத்தேன். அடுத்தடுத்து வேலைகள், கொஞ்சம் வெளியில் வேறு செல்ல வேண்டி வந்தது. வந்து பார்த்தால்,113 பின்னூட்டங்கள்!!! அதிராவா கொக்கா? அவர் 100 நாட் அவுட்.
    //மலருக்கும் செடிக்கும் உயிர் இருக்கிறது.. ஏன், உணர்வுகள் கூட உண்டு"//
    //இருளை உணரவைப்பது ஒளியா? ஒளியின் அருமை இருளில்தான் தெரிகிறதா?//
    வாவ்! எங்கேயோ சென்று விட்டிர்கள்.

    பதிலளிநீக்கு
  104. // வாவ்! எங்கேயோ சென்று விட்டிர்கள். //

    நன்றி பானு அக்கா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!