பூனைக்கு வீடு கட்டினால் இப்படி கட்டவேண்டுமாம். ரொம்ப ரசிக்குமாம். நமக்கே வீடு இல்லை... நான் எங்கே பூனைக்கெல்லாம் வீடு கட்டப்போகிறேன்? அது வந்து தினம் காலை என் மடியில் செட்டில் ஆகிவிடுகிறது! இது அதிரா, ஏஞ்சலுக்கு உதவும். "அம்மாவும் அப்பாவும் வெள்ளைப்பூனைகள்.. அவர்களின் மகள் நான் சின்னப்பூனை.."
கண்ணால் பார்க்கும்போது ஏகப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் சுற்றிவர, ஆர்வத்தால் உந்தப்பட்டு செல்லக் கையிலெடுத்து கேமிராவில் பார்த்தால் சிக்கியது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு! "வண்ணத்துப்பூச்சி பறக்குது.. பல வண்ணங்கள் காட்டி சிரிக்குது..."
எங்கிருந்து கிளம்பி வருகின்றன என்று தெரியாமல் திடீரென கிளம்பி வருகின்றன. உப்புநீரை கரைத்து ஊற்றினால் கரைந்து விடுமாம். ஏஞ்சல் திட்டுவாரே என்று நான் அப்படிச் செய்யவில்லை. அங்கு தெரிகின்ற மரத்தின் அந்தக் கோலத்துக்கு இவைதான் காரணம் என்றால் நம்புவீர்களா!! (என்ன யோசித்தாலும் நத்தைக்கு பாட்டு இல்லை என்று தோன்றுகிறது. எனவே,) "நத்தை மகளே... போய்வரவா..."
எட்டிப்பார்க்கும் சூரியன். சில சமயங்களில் பாஸ் என்னிடம் வாட்ஸாப்பில் 'குட்மார்னிங் மெஸேஜ்' அனுப்ப படம் கேட்பார். இப்படி ஏதாவது படம் எடுத்து அதில் குட்மார்னிங் எழுதிக் கொடுத்து விடுவேன். பப்பாளி மரத்தின் இலைகளினூடே சிறு இழையாய் எட்டிப்பார்க்கிறது சூரியக் கதிர்! "காலை இளம் பரிதியிலே... அவளைக் கண்டேன்..."
அப்பப்போ விகடன் செய்த புதுமைகளில் இதுவும் ஒன்று. ஒரே சிறுகதைக்கு இரண்டு ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள். ஓவியர்கள் யார், யார் என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டுமா என்ன! கில்லாடிகளாச்சே நீங்கள். "நான் வரைந்த ஓவியமே... நல்ல தமிழ்க் காவியமே..."
அப்போது ஸூப்பர்ஹிட் அடித்த படம். நாகார்ஜூனுக்கும், அமலாவுக்கும் இந்தப் படத்தில்தான் காதல் வந்தது. நாகார்ஜூனுக்கு ஸூப்பர் ஹீரோ இமேஜ் இதிலிருந்துதான் வந்தது என்று நினைவு. தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழில் டப் செய்யப்பட்டு செம ஓட்டம் ஓடியது. ராம்கோபால் வர்மாவின் முதல் படம் என்று நினைவு. இளையராஜா இசை என்றாலும் சொல்லிக்கொள்ளும்படி பாடல் எதுவும் கிடையாது. ரொம்பச் சுமாரான பாடல் "இது நீயும் நானும் கதை பேசும் வேளைதானோ..."
மேகம் படங்கள் பகிர்கிறேன் என்று அதிராவிடம் சொல்லி இருந்தேன். சில சாதாரண மேகப் படங்களைப் பகிர்கிறேன். "இது ஒரு பொன்மாலைப் பொழுது..."
மேகம் காட்டும் காட்சிகள் நம் கற்பனையைப் பொறுத்தது. என் கண்களில் ராட்சத மனிதன் ஒருவன் (சிவாஜி சாயலில்) பெரிய சைஸில் புகை விடுவது போலத் தோன்றுகிறது... சிவாஜிக்கு எம் ஜி ஆர் பாட்டு! "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ..."
"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்..." தூரத்தில் தெரிவது பறவையா விமானமா? அடுத்த படத்தில் ஜூம் செய்து பார்த்து விடுவோம்...!
அடடே.. விமானம்தான்! இல்லாவிட்டால் "அதோ... அந்தப் பறவை போல வாழவேண்டும்..." என்று பாடிவிடலாம். என்ன இப்போ.. "அதோ அந்த இயந்திரப்பறவை போலப் பறக்கவேண்டும்" என்று பாடிவிடலாம்!!
வெளிச்சமும் நிழலுமாய் இந்த மேகங்கள் என்ன காட்சிகள் தருகின்றன? "மேகங்களே... பாருங்களேன்... அந்தியிலே சூரியனாம்... அஸ்தமனம் வைகறையாம்.. எங்கள் வாழ்விலே..."
இந்தியா - ஸ்ரீலங்கா மேட்ச். தனது காதல் கணவர் திடீரென எதிர்பாரா சூழ்நிலையில் கேப்டன் ஆகிவிட்ட நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது நூறை நெருங்கி கொண்டிருக்கும் கணவர் அதை நிறைவு செய்வாரா என்ற ஒரு மனைவியின் திக்திக் நிமிடங்கள்... "நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்... நானறிவேன் உன் ஆசைகளை.. கேட்டால்தான் கிடைக்கும்"
கிடைத்து விட்டது.. அந்த சந்தோஷ கணம்! ஆனந்தகி காண்ணேறும், புன்னகையுமாய் நெகிழ்ச்சியான கணங்கள். அப்போது ஆட்டத்தைப் பார்ப்பதைவிட இந்தக் காட்சிகள் சுவாரஸ்யமாய் இருந்தன. இந்நிகழ்ச்சி நடந்த தினம் மனைவியின் பிறந்த நாளோ (படத்தில் இருப்பவர்) அல்லது அவர்கள் திருமண நாளோ... நினைவில்லை. இந்தக் காட்சிகள் மீண்டும் காட்டப்படும்போது காத்திருந்து எங்கள் டீவியில் எடுத்த படங்கள்... "சந்தோஷம்... இன்று சந்தோஷம்... இந்தப் பொன் வீணையில் புது சங்கீதம்... உன் ஆட்டம் செந்தேனா... நன் மாட்டேன் என்பேனா..."
ஆமாம்.. யார் அந்தக் கணவர் என்கிறீர்களா? இவர்தான்! சாதனை எண்ணை (200) அடைந்ததும் கேலரியில் இருக்கும் மனைவிக்கு ஒரு அன்பு பறக்கும் முத்தம் பார்சல்.... "நினைப்பது நிறைவேறும்.. நீ இருந்தால் என்னோடு..."
முடிந்தவரை நான் புத்தகக் கண்காட்சி செல்லும் நாள் கூட்டமில்லாத நாளாய்ப் பார்த்துக் கொள்வேன். அப்போதுதான் பொறுமையாகப் பார்த்து வாங்க முடியும். விடுமுறை இல்லாத நாளாயிருக்க வேண்டும். காலையிலேயே சென்றுவிட வேண்டும்! அப்போதுதான் "புத்தம் புதிய புத்தகமே.. உனைப் புரட்டிப் பார்க்கும் ரசிகன் நான்.." என்று பாடிக்கொண்டே சுற்றலாம்! 2018 ஜனவரியில்...
நிற்பவருக்கு எதிரே நிற்கும் இயந்திர (குள்ளர்) ரோபாட் இந்தப் புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு ஏதோ பெயரும் வைத்திருந்தார்கள். இப்போது நினைவில்லை. அதனிடம் சென்று ஸ்டால் பெயரைச் சொல்லிக் கேட்டால் எங்கிருக்கிறது என்று சொல்லும். ஆனால் பாதியிலேயே பாயைப் பிறாண்டத் தொடங்கி விட்ட காரணத்தால் காணாமல் போனது! "இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ...."
கலைநயத்தோடு அடுக்கப்படும் புத்தகங்கள் அங்கு எப்போதுமே பார்வைக்கு விருந்துதான்! "சங்கம் வளர்த்த தமிழ்... தாய்ப்புலவர் காத்த தமிழ்..."
பெற்றமனம் பித்து. இலைக்கு வயதானாலும் மலரக்காத்திருக்கும் மொட்டுக்குக் காவலாய் அது வீழ்ந்து விடாமல், அப்படியே வீழ்ந்தாலும் தாங்கி நிற்கலாம் என்று (காவல்) காத்து நிற்கிறது.. (ஏற்கெனவே போட்டாச்சு என்று அங்கு ஒரு குரல் கேட்கிறதே... என் காதில் விழவில்லை...) "காலம் நமக்குத் தோழன்... காற்றும் மழையும் நண்பன்..."
வாழ்க...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்! இன்று என் பின்னே கில்லர்ஜி வந்து கொண்டிருக்கிறார். முந்திக் கொண்டு விட்டாரோ………தெரியலையே!! தில்லியிலிருந்து வரும் ஃப்ளைட் இறங்கினாத்தான் தெரியும்…. கில்லர்ஜி காலை வணக்கம்…!!
பதிலளிநீக்குகீதா
ஆ! துரை அண்ணா!!!!!
பதிலளிநீக்குகீதா
படங்கள் அட்டகாசமா இருக்கே இதோ பார்த்துவிட்டு வரேன்
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஸ்ரீராம் மற்றும் முந்தி வந்தோர் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரங்கன்.. முன்னால் ஓடிவரும் வேகத்தில் மூச்சு வாங்க மெஸேஜை மறந்து விட்டீர்கள்!!!
பதிலளிநீக்குஅந்த மஞ்சள் பேக் க்ரவுண்டில் அந்த மொட்டு என்ன அழகு! நீங்க மீண்டும் போட்டாலும் அதன் அழகு குறைந்துவிடுமா என்ன ஸ்ரீராம்..ஒவ்வொருமுறையும் மனதில் ஒவ்வொன்று தோன்றும் ஒரே படத்தைப் பார்க்கும் போதும்
பதிலளிநீக்குஅந்த மொட்டு உங்க கிட்ட சொல்லிச்சோ....சும்மா எடுக்காத என்னை இந்த மஞ்சள் பேக்ரவுண்டில் எடு என்று...எப்படி போஸ் கொடுத்துருக்கு பாருங்க....
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரங்கன்.. முன்னால் ஓடிவரும் வேகத்தில் மூச்சு வாங்க மெஸேஜை மறந்து விட்டீர்கள்!!!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹாஹா இல்லை ஸ்ரீராம் டெய்லி போட்டால் போரடிக்குமோ என்று 'கருத்து கந்தசாமி" போல ஆகிடுமோனுதான் போடலை... ஹா ஹா ஹாஹ்
கீதா
என்னாச்சு கில்லர்ஜியை காணலை பின்னாடி வந்துட்டுருந்தாரே...தில்லி ஏர்போர்ட்ல தூங்கிட்டார் போல ஃப்ளைட் மிஸ் ஆகிடுச்சு போல ஹா ஹாஅ ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
அந்த மொட்டு படம் முன்னால் தளத்தில் போட்டேனா, ஃபேஸ்புக்கில் போட்டேனா நினைவில்லை கீதா.. அப்போ கிட்டத்தட்ட இதேதான் எழுதி இருப்பேன்.
பதிலளிநீக்குஹாஹாஹா, படங்கள் அட்டகாசம்! அதற்கான வர்ணனைகள் கவித்துவமானவை! எல்லாமும் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு// ஸ்ரீராம் டெய்லி போட்டால் போரடிக்குமோ என்று 'கருத்து கந்தசாமி" போல ஆகிடுமோனுதான் போடலை... ஹா ஹா ஹாஹ் //
பதிலளிநீக்குஅதெல்லாம் இல்லை கீதா.. புது விஷயமாக நல்லா இருக்கேன்னு பார்த்தேன்.
// கில்லர்ஜியை காணலை பின்னாடி வந்துட்டுருந்தாரே...தில்லி ஏர்போர்ட்ல தூங்கிட்டார் போல ஃ//
பதிலளிநீக்குடிஃபன் சாப்பிடப் போயிட்டாரோ...!
பாட்டும் படமும் ஏக அமர்க்களம்...
பதிலளிநீக்குஇதில் அனுக்காவிற்கு இடம் இல்லாமல் போனது வருத்தம்....
ஆனாலும் மேகக்கூட்டத்தின் இடையே தத்தித் தாவும் தேவதையாய் -
தமன்னா!....
ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வராதது ..
- ஏமாற்றம் தான்..
துரை செல்வராஜு சார்... ஶ்ரீராம் மனதில் அனுஷ்கா இருப்பதால் கோஹ்லாயைப் பற்றிய செய்தி என்று எண்ணி, அனுஷ்கா சர்மா என்று நினைத்து ரோகித் சர்மா மனைவி படங்களைப் போட்டுவிட்டாரோ?
நீக்குவாங்க கீதாக்கா... குட்மார்னிங். பாராட்டுக்கு நன்றி. ஆமாம் அதென்ன, எஸ் வி ரெங்காராவ் மாதிரி சிரிப்புடன் வருகிறீர்கள்? ஆரம்பிக்கிறீர்கள்?!!!
பதிலளிநீக்குஅநேகமா நான் இனிமேல் காலம்பர ஓடோடி வர முடியாதுனு நம்பறேன். நடந்துட்டு வந்து லாப்டாப்பில் உட்கார நேரம் இருக்காது. ஆகவே வீட்டு வேலைகள் முடிஞ்சு வருவேன். பார்க்கலாம் ஆண்டவன் திருவுள சித்தம் எப்படினு!
பதிலளிநீக்குபரிதி ஒளிந்து கொண்டு
பதிலளிநீக்குமுகம் காட்டுவது பப்பாளி மரம் போல் இருக்கிறதே...
எல்லோருக்கும் காலை வணக்கம். பிரார்த்தனைகள். எல்லோரும் சொல்றாங்க, நாம சொல்ல வேண்டாமானு தினம் நினைப்பேன். மறந்துடும். :)
பதிலளிநீக்குகாலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்" பாடல் இல்லையா ஸ்ரீராம்!!!
பதிலளிநீக்குபுத்தக அடுக்கலே ஒரு கலைதான் ஸ்ரீராம். எனக்கு ஒவ்வொரு முறையும் அதை அடுக்கும் போது வித விதமா வடிவங்களில் அடுக்கலாமேனு தோணும்....இந்த அடுக்கைப் பார்க்கும் போது அங்கேயே அப்படியே இருந்துடலாமானு தோணும். சில சமயம் ஸ்ரீராம் புத்தகக் கடையில் வேலை பார்த்தால் நல்லாருக்குமோனு கூடத் தோன்றும்...புத்தகம் அங்கேயே வாசிக்கலாமோனு..
கீதா
கீதாக்கா காபி ஆத்தியாச்சு!!கஞ்சியும்!!
பதிலளிநீக்குஅதெல்லாம் இல்லை கீதா.. புது விஷயமாக நல்லா இருக்கேன்னு பார்த்தேன்.//
ஓகே ஸ்ரீராம் மிக்க நன்றி தொடர்ந்துட்டா போச்சு!!
கீதா
?/மேகம் காட்டும் காட்சிகள் நம் கற்பனையைப் பொறுத்தது. என் கண்களில் ராட்சத மனிதன் ஒருவன் (சிவாஜி சாயலில்) பெரிய சைஸில் புகை விடுவது போலத் தோன்றுகிறது... சிவாஜிக்கு எம் ஜி ஆர் பாட்டு! "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ..// இதுக்குத் தான் சிப்பு! ஹிஹிஹி, காப்பி, பேஸ்ட் செய்தேன். படமும் சேர்ந்து பிடிவாதமா வந்தது. அதை எடுத்தால் இதுவும் போச்சு! இப்போ ஒரு மாதிரியா காப்பி செய்துட்டேன். :))))))
பதிலளிநீக்கு"சங்கம் வளர்த்த தமிழ்... தாய்ப்புலவர் காத்த தமிழ்..."//
பதிலளிநீக்குஆஹா !! இதுவும் பாடலா இல்ல உங்கள் வரிகளா!! அழகு வரிகள் ஸ்ரீராம் பொருத்தமாக.....ரசித்தேன்
கீதா
// இதில் அனுக்காவிற்கு இடம் இல்லாமல் போனது வருத்தம்....//
பதிலளிநீக்குதுரை ஸார்... ஏற்கெனவே திட்டிக் கொண்டிருக்கிறார்கள்... நீங்கள் வேறு கிளப்பி விடுகிறீர்கள்... நானே மறந்து இருக்கலாம் என்று இருக்கிறேன்!
// ஆனாலும் மேகக்கூட்டத்தின் இடையே தத்தித் தாவும் தேவதையாய் -
தமன்னா!....//
எங்கே ஸார்?
//.. நானே மறந்து இருக்கலாம் என்று... (ஸ்ரீராம்)//
நீக்குசொந்த செலவில் சூனியமா!..
இதெல்லாம் ஞாயமே இல்லை...
இப்படிக்கு,
அரச...(!?)
கீதாக்கா...
பதிலளிநீக்கு// காலம்பர ஓடோடி வர முடியாதுனு நம்பறேன். நடந்துட்டு வந்து லாப்டாப்பில் உட்கார நேரம் இருக்காது. ஆகவே வீட்டு வேலைகள் முடிஞ்சு வருவேன். //
வங்கக்கா... நீங்கள் வந்தால் போதும். உடம்பைப் பார்த்துக்கோங்க.. சீக்கிரமே பழைய கீதாக்காவா உற்சாகமா வாங்க...
// பரிதி ஒளிந்து கொண்டு
பதிலளிநீக்குமுகம் காட்டுவது பப்பாளி மரம் போல் இருக்கிறதே... //
ஆமாம் ஸார்.. கன்பியூஸ் ஆயிட்டேன். இரண்டு படங்களில் எதை இங்கு வெளியிட எடுத்தோம்னு...
// பிரார்த்தனைகள். எல்லோரும் சொல்றாங்க, நாம சொல்ல வேண்டாமானு தினம் நினைப்பேன். மறந்துடும். :) //
பதிலளிநீக்குஅபுரி கீதாக்கா... சொல்ல வருவது புரியவில்லை.
கீதா...
பதிலளிநீக்கு// காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்" பாடல் இல்லையா ஸ்ரீராம்!!! //
ஆமாம். வெள்ளி லிஸ்ட்டில் பின்.....னால் வரிசையில் காத்திருக்கும் பாடல்!
சின்ன வயசில் சினிமா ஆபரேட்டரா, அப்புறம் புத்தகக்கடை, லைப்ரரியில் வேலை என்றெல்லாம் எனக்கும் ஆசை இருந்தது கீதா...!
பதிலளிநீக்கு// இதுக்குத் தான் சிப்பு! ஹிஹிஹி, காப்பி, பேஸ்ட் செய்தேன். படமும் சேர்ந்து பிடிவாதமா வந்தது. அதை எடுத்தால் இதுவும் போச்சு! இப்போ ஒரு மாதிரியா காப்பி செய்துட்டேன். :)))))//
பதிலளிநீக்குஓ.. இதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும் கீதாக்கா... உங்களுக்கு சிவாஜி சாயல் தோன்றவில்லையா?!!!
// "சங்கம் வளர்த்த தமிழ்... தாய்ப்புலவர் காத்த தமிழ்..."//
பதிலளிநீக்குஆஹா !! இதுவும் பாடலா இல்ல உங்கள் வரிகளா!!//
துலாபாரம் பாடல் கீதா... டி எம் எஸ்.. அந்த நிறத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வரிகள் எல்லாமே சினிமா பாடல்கள்தான். படத்துக்காக ஒரு வார்ததை மாற்றப்பட்டிருந்தால் அது மட்டும் நடுவில் கருப்பு நிறத்தில்!!!
//எல்லோரும் சொல்றாங்க, நாம சொல்ல வேண்டாமானு தினம் நினைப்பேன். மறந்துடும். :)// காலை வணக்கம் தான்! தினம் துரை, நீங்க, கீதா, வெங்கட்னு எல்லோரும் சொல்லிட்டு இருக்கீங்க! நான் பாட்டுக்கு வந்துட்டுப் போயிடுவேன். அதான்! :)
பதிலளிநீக்கு//உங்களுக்கு சிவாஜி சாயல் தோன்றவில்லையா?!!!// ஹெஹெஹெஹெ!
பதிலளிநீக்குபடங்களுக்கேற்ற பாடல்கள் ஸூப்பர் ஜி.
பதிலளிநீக்குடில்லி ஏர்போர்ட் கெக்..கெக்..கெக்..கே.
// காலை வணக்கம் தான்! தினம் துரை, நீங்க, கீதா, வெங்கட்னு எல்லோரும் சொல்லிட்டு இருக்கீங்க! நான் பாட்டுக்கு வந்துட்டுப் போயிடுவேன். அதான்! :) //
பதிலளிநீக்குஓ... அதுவா? அதில் என்ன இருக்கிறது அக்கா?
// ஹெஹெஹெஹெ! //
தோன்றாமல் இப்படிச் சிரிப்பு வருமா?!!!
வாங்க கில்லர்ஜி... நன்றி பாராட்டியுரைத்ததற்கு.
பதிலளிநீக்குதுரை ஸார்... பப்பாளி என்று மாற்றிவிட்டேன்! நுண்ணிய திருத்தத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குஏஞ்சலும், அதிராவும் எங்கே? எங்கே? எங்கே?
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைத்தையும் ரசித்தேன். நூல்கள் அடுக்கிவைக்கப்பட்ட விதம் அப்படியே எடுத்துப் படிக்கவேண்டும் என்ற ஆசையை உண்டாக்கிவிட்டது.
பதிலளிநீக்குகீதாக்கா..
பதிலளிநீக்குஅதிரா சாதாரணமாக சனிக்கிழமைப் பதிவுகளுக்கு வருகை தருவதில்லை. ஞாயிறு பதிவுகளுக்கும் எப்போதாவதுதான் வருவார். நைஸாய் எட்டிப் பார்ப்பார். ஏஞ்சல் ஏதோ பிஸி போலும்.
இனிய காலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குவாங்க முனைவர் ஐயா.. ஆமாம்.. அப்படித்தான் நூல் வாசகர்களுக்கு ஆசை உண்டாகும்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.....
பதிலளிநீக்குபடங்களும் அதன் உடன் தந்திருக்கும் பாடல் வரிகளும், தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.
சங்கம் வளர்த்த தமிழ் - தாய்ப்
பதிலளிநீக்குபுலவர் காத்த தமிழ்..
கங்கை கொண்ட எங்கள்
தமிழ் வெல்லும் வெல்லும் - ஒரு
காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்...
துலாபாரம் படத்தில் கவியரசரின் பாடல்.. நல்ல சந்தத்துடன் கூடியது...
அகத்துறை வரிகள் கூட உண்டு...
இந்தப் பாடலை லியோனி பாட்டுமன்றத்தில் ஒருவர் பாடிக் கேட்டிருக்கிறேன் (கண்ணதாசனா பட்டுக்கோட்டையா பாடல்மன்றம்)
நீக்குபடங்களையும் கமென்டைகளையும் அதற்குப் பொருத்தமான பாடல் வரிகளையும் ரசித்தேன்
பதிலளிநீக்குஇந்த ஞாயிறு படக் கலெக்ஷனிற்காக உழைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது!
பதிலளிநீக்கு"இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ...."/
பதிலளிநீக்குஆஹா! அருமை. ஸ்ரீராம் முளைச்சிருக்கும்.....பாருங்க என்னை மாதிரியே குள்ளக்கத்தரிக்காயா இருக்குல்ல!!!
அதுக்கும் தொண்டைக்கட்டிப் போரடிச்சுருச்சோ என்னவோ...இன்னாபா இது இங்கின நின்னுக்கிட்டு இம்மாம் கூட்டத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டு ஹூம் இவ்வளவு பொஸ்த்தகம் இருக்கு...இயந்திரன் ரஜனி மாதிரி நம்மளையும் படைச்சிருந்தா அத்தனையும் ஒரே மினிட்ல வாசிச்சுருக்கலாம் நு தோணி பிராண்டிருச்சு போல....!!
கீதா
சின்ன வயசில் சினிமா ஆபரேட்டரா, அப்புறம் புத்தகக்கடை, லைப்ரரியில் வேலை என்றெல்லாம் எனக்கும் ஆசை இருந்தது கீதா...!//
பதிலளிநீக்குஸ்ரீராம் ஹைஃபைவ்!எனக்கும் இந்த மூன்று ஆசைகளும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தது!!
கீதா
அபுரி கீதாக்கா... சொல்ல வருவது புரியவில்லை.//
பதிலளிநீக்குஸ்ரீராம் கீதாக்கா காலை வணக்கம் தான் சொல்வதில்லைனு சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன்...
கீதா
துரை அண்ணா ஆஹா ஆஹா!!! நீங்களும் அனுஷ் இல்லைனு,....ஹா ஹா அதுவும் அரம!!! சூப்பர் சூப்பர்..அண்ணா இனி அனுக்கா இல்லை அது அவங்க அம்மா ஹிஹிஹிஹிஹிஹி....அதனால அனுஷ்!!! .
பதிலளிநீக்குஅது சரி இங்கிட்டு இருக்கறது தமனாவா இது.!!! அவங்களா இது.....வைகைப்புயலின் குரலில் சொல்லிப் பார்க்கவும்....நெ த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிருப்பாரே...ஹா ஹா ஹா
கீதா
அதானே பார்த்தேன் அது தமனா இல்லை....!!
பதிலளிநீக்குஅட உங்க மடில தினமும் பூனை வந்து செட்டில் ஆகுதா ஆஹா!!
ஸ்ரீராம் பூனைக்கான வீடுகள் நல்லாத்தான் இருக்கு ஆனா பொதுவா யாரும் பூனைக்கு வீடுகள் வைப்பதில்லையே...கிளினிக் வரும் போது ஒரு பேஸ்கட்டில் போட்டுக் கொண்டு வருவார்கள் அவ்வளவுதான்...அவங்க ஃப்ரீயா சுத்திக்கிட்டு இருப்பாங்க பொதுவா வீடுகளில்...
கீதா
வண்ணத்துப் பூச்சி ரொம்ப அழகா இருக்கு....அந்தப் பாட்டெல்லாம் தெரியலை ஸ்ரீராம். நீங்க கொடுத்துருக்கற பாடல்களை எல்லாம் எடுத்து கூகுளில் போட்டு யுட்யூபில் கேட்கிறேன்...
பதிலளிநீக்குநத்தைக்கு உப்பு நீரா ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோ ஸ்ரீராம் பாவம் அவை. போனால் போகுது....என்ன அழகா ஷெல் பாருங்க அந்த மரத்துல....அழகோ அழகு..
. இப்படி நான் வித விதமாக ஷெல்களை கலெக்ட் செய்து வைத்திருந்தேன். சின்ன சின்ன சங்கிலிருந்து பெரிய பெரிய வித்தியாசமான ஷேப்களில் சங்குகள் மற்றும் சிப்பிகள், சோழிகள், பத்ரிகள் கலெக்ஷன் இருந்தது வீட்டில். கன்னியாகுமரிக்குச் செல்லும் போதெல்லாம் பொறுக்கி வந்ததை (கல்யாணத்திற்கு முன்...அதன் பின் நானும் மகனும் சேர்ந்து கலெக்ஷன்) சோப் நீர் எல்லாம் போட்டு சென்ட் போட்டுக் கழுவி வெயிலில் வைத்து இல்லை என்றால் கொஞ்சம் வலவீச்சம் அடிக்கும். அப்புறம் பல ஊர்கள் வீடுகள் மாறிக் கொண்டே இருந்ததில் எல்லாம் கொலு வைப்பவர்களிடம் கொடுத்துவிட்டோம்...
கீதா
பப்பாளியினிடையே சூரியன் எட்டிப் பார்ப்பது ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீராம்...குட்மார்னிங்க் மெசேஜுக்கு படம் செம..
பதிலளிநீக்குசிறுகதைக்கு இரு ஓவியங்கள் என்ன வித்தியாசம் பாருங்கள்....தெரிந்துவிட்டது யார் ஓவியர் என்று இடப்புறம் மாருதி வலப்புறம் ஜெ...படம் பார்த்ததுமே தெரிந்தது, இருந்தாலும் கீழே செக் செய்து கொண்டேன்...
உதயம் நு படமா?!!! செய்தியும் புதுசு எனக்கு....
மேகங்கள் படங்கள் சாதாரணப் படங்களா ? ரொம்பவே அழகா இருக்கு இந்த இருபாடல்களும் தெரிந்த பாடல்கள்....அந்த இரண்டாவது படத்தில் மேகங்களின் அவுட் லைன் பாருங்க சில்வர் அவுட் லைன் செமையா இருக்குல்ல ரொம்ப அழகா இருக்கு படங்கள்
ஒரு சொல் என்ன சொன்னீங்க.. மழை பொழி (ரெண்டு சொல் ஆகிடுச்சு!!!) சொன்னீங்களா ஸ்ரீராம்..
கீதா
விமானம்னு தெரிஞ்சுருச்சு...ஹிஹிஹிஹி....அதற்கான பாடல்களும் ஹப்பா தெரிஞ்ச பாடல்கள்..../ "அதோ அந்த இயந்திரப்பறவை போலப் பறக்கவேண்டும்" // ஹா ஹா ஹா ஆனா நாம இயந்திரமாகிடாம...பறக்கணும் இல்லையா ஸ்ரீராம்...எவ்வளவு நல்லாருக்கும். ட்ராஃபிக் ஜாம் தவிர்க்கலாம் ஆனா எல்லாரும் பறக்க ஆரம்பிச்சா அம்புட்டுத்தான் அங்கயும் முட்டி மோதும் ட்ராஃபிக் தான்!
பதிலளிநீக்குமேகப்படங்களில் அந்தக் கடைசிப் படம் அட்டகாசம் ஸ்ரீராம்...வாவ்! செம செம....ஹையோ!! ரொம்பவெ ரசித்தேன்
கீதா
டிவில எடுத்த படம் கூட நன்றாக இருக்கே...விராட்கோலி இது அந்த அனுஷ்கா ஷர்மா வா..ஓகே
பதிலளிநீக்குபடங்களும் அதற்கான உங்க வரிகள் பாடல்கள் தேர்வு சூப்பர் ஸ்ரீராம்....உங்களுக்குப் பாடல்கள் எல்லாம் தெரியும் ந்றதுனால ரூம் போட்டு யோசிக்கவே வேண்டாம் ஹா ஹா ஹா ஹா டக் டக்குனு மனசுல வந்துரும்....
கீதா
படங்கள் அனைத்தும் பிடித்தது... அதை விட பிடித்தவை என்னவென்று உங்களுக்கு தெரியும்...!
பதிலளிநீக்குஉங்கள் மனம் பாடும் பாடல்வரிகள்...!
@கீதா ரங்கன் - //டிவில எடுத்த படம் கூட நன்றாக இருக்கே...விராட்கோலி இது அந்த அனுஷ்கா ஷர்மா வா..ஓகே
பதிலளிநீக்கு// - ஐயோ.... ரோஹித் சர்மா மனைவி ரித்திகாவை, அனுஷ்கா ஷர்மான்னு சொல்லிட்டீங்களே... அவரும் ரோஹித். விராட் கோஹ்லி இல்லை....
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு. ஒவ்வொன்றையும் ரசித்து கருத்திட நாளொன்று போதாது. ஒவ்வொன்றுக்கும் தாங்கள் தந்த கருத்துரை+பாடல்கள் அழகினும் அழகு. பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
பூனைக்கு ஒரு வீடு. சூப்பர்.
ஒன்றேயாயினும் நட்டநடு நாயகமாய் ஒய்யாரமாய் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் தரும் வண்ணத்துப்பூச்சி மிக அழகு.
மேகங்கள் புகைப்படங்கள் அருமையாக உள்ளது. நானும் இந்த மாதிரி மேகங்கள் படங்களாக பதிவிடலாமென எடுத்து வைத்துள்ளேன். எப்போ சமயம் வாய்க்குமோ தெரியவில்லை.மீணடும் சொல்கிறேன். அனைத்தும் மிக அழகுடனாகிய அருமையான படங்கள்.
கொஞ்சம் குழந்தைகளுடன் வெளியில் புறப்பாடு... வந்து நிதானமாக கருத்திடுகிறேன்.
ஆனால், "யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துதல்" மாதிரி ஆகி விடும். வேறு வழி? மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// ஐயோ.... ரோஹித் சர்மா மனைவி ரித்திகாவை, அனுஷ்கா ஷர்மான்னு சொல்லிட்டீங்களே... அவரும் ரோஹித். விராட் கோஹ்லி இல்லை....// காலம்பரயே தோணித்து! ஆனால் உனக்குப் பகல்லேயே பசுமாடு தெரியாதுனு எல்லோரும் சொல்வாங்களா? அதோட இன்னமும் இந்த அனுக்கா, தமன்னாக்கா, ஹன்சிகாக்கா இவங்கல்லாம் அடையாளம் தெரியலையே! னு நினைச்சேன். ஆனால் கி(ஹி)ந்தி அனுஷ்கா சர்மாவை நல்லாவே அடையாளம் தெரியும். ஒருக்கால் ரோஹித் எப்போவானும் காப்டனா இருந்திருப்பாரோனு ஜந்தேகம் வேறே! யாரையானும் கேட்க இருந்தேன். நெ.த. சொல்லிட்டார்! :)))))
பதிலளிநீக்குஹலோ.. மங்குனி!....
பதிலளிநீக்குஅதென்ன அரம..ந்னு போட்டு இருக்கீர்!.. அனுக்கா ரசிகர் மன்றமா!...
இல்லேங்காணும்....
அழகை ரசிப்போர் மன்றம்!.. புரியுதா!..
ஆஆவ்வ்வ் இன்று ஒரே குஷிபோலத் தெரிகிறதே சண்டே:)..
பதிலளிநீக்குவருகிறேன் சத்து வெயிட் பண்ணுங்கோ:).
சொல்ல மறந்திட்டேன்ன் ஶ்ரீராமுக்காக தேடோ தேடெனத் தேடிய இடத்தில் கிடைச்ச தகவல் இதுதான்... ஹா ஹா ஹா 2010...2014...2017 வரை தேடி இப்போ 2018 இலும் நீங்க விடுவதாய் இல்லை ஹா ஹா ஹா ஒருவேளை வசனம் தப்போ?
பதிலளிநீக்குhttp://maduraispb.blogspot.com/2010/08/078.html
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாலை பசுமைநடையுடன் பயணம் போய் வந்தோம்.
அதனால் இப்போது தான் இங்கு ஆஜர்.
அனைத்து படங்களும் அதற்கேற்ற பாடலும் அருமை.
நத்தைக்கு சினிமாபாடல் இல்லையென்றாலும் சிறு வயதில் பாடிய பாடல் உண்டு,
நத்தையாரே நந்தையாரே எங்கே போறீங்க?
அத்தைவீடு பயணமோ என்று பாடல் வரிகள் வரும்.
அதற்கு மேல் மறந்து விட்டது என்று கூகுளில் தேடினால் இந்த பாடல் கிடைத்தது.
நத்தைக் கூட்டைப் பாருங்கள்
நகரும் அழகை ரசியுங்கள்
கெட்டியான வீட்டினுள்
அமைதியாக வாழுது
மெல்ல எட்டிப் பார்க்கையில்
பட்டு மேனி மின்னுது
மழையின் காலம் முழுவதும்
மலிவு இன்றி உலவுது
ஆசை கொண்டு தொடுகையில்
அதுவும் வாசல் அடைக்குது
- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்
அருமை....
நீக்குஅழகான பாடல்.. பதிவில் அறிமுகம் செய்த கோமதி அரசு அவர்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி..
@கீதா சாம்பசிவம் மேடம் - நான் அனுஷ்கா படம் பார்பபதில்லை (சிவாஜி ரசிகர் எம்ஜ்ஆர் படம் பார்ப்பதில்லை போன்று). தமனாக்கா- தமனாவோட அக்காஙையும் பார்த்ததில்லை. தமன்னா மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அண்டங்காக்கா தெரியும். ஹன்சிகா காக்கா என்று ஒன்று இருக்கா?
பதிலளிநீக்குமுதலில் மறந்து போகும் முனொரு கருத்து/ "காலை இளம் பரிதியிலே... அவளைக் கண்டேன்..."நானும்தேடினேன் காணவில்லையே வரவர எங்கள் ப்லாகில் வந்தாலும் வராவிட்டாலும் அதிராவும் ஏஞ்செலும் ஒரே ஆக்கிரமிப்புதான்கோமதி அரசு அந்தக்கால குழந்தைகளுக்கான தமிழ் ரைமை போட்டிருக்கிறாரொ
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநத்தைகள் படங்கள் அழகு.
/உப்புநீரை கரைத்து ஊற்றினால் கரைந்து விடுமாம்/
நத்தைகள் மேல் உப்பு நீரை விட்டால் கரைந்து விடுமா? "கரைந்தா?கலைந்தா?" இந்நாளாக இவ்விஷயம் அறிந்ததில்லை.
நத்தையின் மேல் பாடல் நானும் தேடினேன். நத்தையைக் குறித்து நிறைய குழந்தை பாடல்கள் இருந்தது. சகோதரி கோமதி அரசு அவர்கள் கூட ஒரு பாடல் பகிர்ந்துள்ளார்கள். (நன்றி சகோதரி) நிறைய சிறு வயது பாடல்களுடன், மற்றொரு பாடலும் கண்ணில் பட்டது. ஆனால் "நத்தை" என்பது இடையில் வருகிறது.
பாண்டவர் பூமி சினிமா படத்தில் அவரவர் வாழ்க்கையில் என்ற பாடலின் நடுவே "நத்தை கூட்டின் நீர் போதும்.
எங்களின் தாகம் தீர்த்து கொள்வோம்." என்ற வரிகள் வருகிறது.
"நத்தையில் முத்து" என்றொரு படம் வந்திருக்கிறது.
ஆயுர்வேதத்தில் நத்தையை கொண்டு மருந்து தயாரிப்பார்கள். "நத்தை பற்பம்" மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
வெளியே கிளம்ப நேரமாகிற சமயத்தில் மறுபடி வருகை தந்து விட்டேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கா...
பதிலளிநீக்கும...
மாலை வணக்கம் வெங்கட்! நன்றி. தொடர்கிறேன்.
துரை ஸார்..
பதிலளிநீக்கு// சொந்த செலவில் சூனியமா!..
இதெல்லாம் ஞாயமே இல்லை...
இப்படிக்கு,
அரச...(!?) //
அது அரம இல்லையோ?
நெல்லைத்தமிழன்..
பதிலளிநீக்குநான் நேரடியாக அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவன். இந்தப் படங்கள் என் செல்லில் எங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது. அது ரோஹித் மனைவி என்று தெரியும்! கோஹ்லி தெரியும். அது யார் கோஹ்லா?
படம் + வரிகளை ரசித்ததற்கு நன்றி.
// இந்தப் பாடலை லியோனி பாட்டுமன்றத்தில் ஒருவர் பாடிக் கேட்டிருக்கிறேன்//
எந்தப்பாடலைச் சொல்கிறீர்கள் என்று யூகிக்கிறேன். துலாபாரம் பாடல்!
ஏகாந்தன் ஸார்..
பதிலளிநீக்குவிழுந்து விழுந்து சமைப்போம். உப்பு தூக்கலாயிருக்கும். அல்லது புளிப்பு கூடிவிடும். சுவை மிஸ் ஆகும். அவசரக்கோலத்தில் ஏதோ ஒன்றை இன்று சமைக்கவேண்டுமே என்று சமைப்போம். நன்றாயிருக்கு இன்று சமையல் என்று சர்டிபிகேட் கிடைக்கும்!
கீதா..
பதிலளிநீக்கு// அதுக்கும் தொண்டைக்கட்டிப் போரடிச்சுருச்சோ என்னவோ...இன்னாபா இது இங்கின நின்னுக்கிட்டு இம்மாம் கூட்டத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டு //
ஹா.. ஹா.. ஹா.. என்ன பிரச்சனை செய்தது என்று நினைவில்லை. ஆனால் பாதியிலேயே ஓரம் கட்டிவிட்டார்கள்!
// எனக்கும் இந்த மூன்று ஆசைகளும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தது!! //
இந்த ஆசைகள் காலத்துக்கேற்றவாறு, விருப்பத்துக்கேற்றவாறு மாறிக்கொண்டே இருந்தது! அப்போது 300 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் பெரிய வேலை!
கீதா...
பதிலளிநீக்கு// ஸ்ரீராம் கீதாக்கா காலை வணக்கம் தான் சொல்வதில்லைனு சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன்..//
ஆமாம்.. அப்புறம் வந்து சொல்லி இருக்காங்களே...
// அது சரி இங்கிட்டு இருக்கறது தமனாவா இது.!!! அவங்களா இது....//
பதிலளிநீக்குகஷ்டப்படுத்தாதீங்க கீதா.. அது ரோஹித் மனைவி. தமன்னா ஒல்லியா எலும்பு மாதிரி இல்ல இருப்பாங்க...!!!
// அட உங்க மடில தினமும் பூனை வந்து செட்டில் ஆகுதா ஆஹா!! //
காலை பதில்கள் டைப் அடிக்கும்போது கூட...!
// ஆனா பொதுவா யாரும் பூனைக்கு வீடுகள் வைப்பதில்லையே...//
பதிலளிநீக்குநானும் பாத்ததில்லை கீதா. பேப்பரில் பார்த்தேன். பகிர்ந்தேன்!
// நத்தைக்கு உப்பு நீரா ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோ ஸ்ரீராம் பாவம் அவை. போனால் போகுது..//
சொன்னார்கள். நான் செய்யவில்லை. இதன் ஷெல்களைக் கூட டுத்து வைத்துக் கொள்வார்களா?
// இந்த இருபாடல்களும் தெரிந்த பாடல்கள்....//
பதிலளிநீக்குஆனால் கீதா... அந்த "மேகங்களே.. பாருங்களே... அந்தியிலே சூரியனால்.." பாடல் கிடைக்கவே இல்லை எங்கும்.
// ஒரு சொல் என்ன சொன்னீங்க.. மழை பொழி (//
அபுரி. மறுபடி போய்ப்பார்க்கிறேன்.
படம், பாடல் வரிகளை ரசித்ததற்கு நன்றி. அது விராட் இல்லை. ரோஹித்தும் அவர் மனைவியும்.
பதிலளிநீக்கு// உங்களுக்குப் பாடல்கள் எல்லாம் தெரியும் ந்றதுனால ரூம் போட்டு யோசிக்கவே வேண்டாம் ஹா ஹா ஹா ஹா டக் டக்குனு மனசுல வந்துரும்....//
ஹா... ஹா.. ஹா.. கீதா... பப்பாளி சூரியனுக்கு முதலில் யோசித்த பாடல்வரி "ஆயிரம் கைகள் (இலைகள்) மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை..."
வாங்க திண்டுக்கல் தனபாலன்...
பதிலளிநீக்கு// அதை விட பிடித்தவை என்னவென்று உங்களுக்கு தெரியும்...!
உங்கள் மனம் பாடும் பாடல்வரிகள்...! //
ஆமாம்.. தெரியும்.
வாங்க கமலாக்கா.. கோவில் / ஆன்மீகச் சுற்று முடிந்து திரும்பியாச்சா? படங்கள் எடுத்து வைத்திருப்பீர்கள். சீக்கிரம் அது சம்பந்தமாய் ஒரு பதிவு வரும் என்று எதிர்பார்க்கலாமா? பாராட்டுகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குகீதாக்கா...
பதிலளிநீக்கு// ஒருக்கால் ரோஹித் எப்போவானும் காப்டனா இருந்திருப்பாரோனு ஜந்தேகம் வேறே! யாரையானும் கேட்க இருந்தேன்//
விராட் திருமணத்துக்கு லீவு போட்ட சமயம் ரோஹித் தான் கேப்டன்.
வாங்க .அதிரா.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... இதை எப்படி எடுத்தீங்க? அந்த வரிகளைப் போட்டு தேடினால் கிடைத்ததோ? அந்தப்பாடலை எப்படித் தேடியிருக்கேன் பாருங்க... ஏஞ்சல் கூட எனக்காகத் தேடினாங்க உங்க பதிவிலே.. நினைவிருக்கா?
// ஒருவேளை வசனம் தப்போ?//
பதிலளிநீக்குசான்ஸே இல்லை அதிரா. பாடல் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே... ஒரு வாய்ப்பு இருக்கிறது. என் உறவினர் ஒருவர் வைரமுத்து 1000 என்று ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் இந்தப் பாடலைச் சொல்லி இருக்கிறாரா என்று தேடவேண்டும்!
வாங்க கோமதி அக்கா...
பதிலளிநீக்குநத்தைக்கு ஆகக்கூடி சினிமாப்பாட்டு இல்லைதானே?!! பாட்டு இல்லை. ஆனால் நத்தையில் முத்து என்று ஒரு சினிமா இருக்கிறது! நீங்கள் சொல்லி இருக்கும் கவிதை நன்றாய் இருக்கிறது.
//மெல்ல எட்டிப் பார்க்கையில் பட்டு மேனி மின்னுது மழையின் காலம் முழுவதும் மலிவு இன்றி உலவுது//
ஸூப்பர்.
வாங்க ஜி எம் பி ஸார்..
பதிலளிநீக்கு// "காலை இளம் பரிதியிலே... அவளைக் கண்டேன்..."நானும்தேடினேன் காணவில்லையே//
இந்தப்பாடலைத் தேடினேன் காணவில்லை என்று சொல்கிறீர்களா? அல்லது அதிரா, ஏஞ்சல் ட்வின்ஸை காணவில்லை என்று சொல்கிறீர்களா? அபுரி.
வாங்க கமலாக்கா... மீள்வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு// "நத்தையில் முத்து" என்றொரு படம் வந்திருக்கிறது.//
நத்தை பற்பம்? உவ்வே....!!!!!!
நானும் சொல்லியிருக்கேன்! நத்தை பற்றிய "கூடு"தல் தகவல்களுக்கு நன்றி.
@ஸ்ரீராம்: ..இன்று சமையல் என்று சர்டிபிகேட் கிடைக்கும்!//
பதிலளிநீக்குஇப்படி ஓரிரு தடவை என் மனைவி சொல்லக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் வாயைமூடிக்கொண்டு சாப்பிடும் கணவர்களில் நானொருவன்! அவ்வப்போதாவது புகழவேண்டும் என்றே தோன்றுவதில்லை. புகழக்கூடாது எனக் கங்கணம் கட்டியதில்லை எனினும்!
கடந்த வாரம் இங்கிலாந்துக்கெதிரான ஒரு-நாள் போட்டியில் ரோஹித் இங்கிலாந்து பௌலர்களை துவம்சம் செய்து 100 எடுத்தபின், ரசிக்க மனைவி அருகிலில்லையே என்று கவலைப்பட்டிருக்கிறார் ப்ரெஸ்ஸின் முன்பு. அடுத்த சில நாட்களில் லண்டன் வந்து சேர்ந்தார் ரித்திக்கா சஜ்டே. விளைவு? நேற்றைய மேட்ச்சில் 15 ரன்னில் ரோஹித் அவுட்!
பதிலளிநீக்குநீங்கள் போட்டிருக்கும் படத்தில் ரோஹித்தின் இடது உள்ளங்கையைக் கொஞ்சம் கவனிக்கையில், போன ஜென்மத்தில் ரொம்பவும் வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்திருப்பார் போலிருக்கிறதே. ரித்திக்காவோ ஜாக்ரதையாகத் தன் உள்ளங்கையை ஸ்வெட்டருக்குள் மறைத்துப் பெருங்கவலையோடு பார்க்கிறார்! உங்களது ஃபோன் கேமரா நன்றாகத்தான் காரியம் செய்திருக்கிறது.
பூனைக்கும் வீடா? வெரி குட்! மேகங்களின் படம் நன்றக இருக்கிறது.
பதிலளிநீக்குகோமதி அரசு அவர்களின் நத்தை பற்றிய பாடலை படித்ததும், சிறு வயதில் படித்த
"நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமோ?
அத்தை வீடு போக இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?.."
என்னும் வரிகளுக்கு மேல் நினைவுக்கு வரவில்லை. கூகுளில் தேடினேன் கிடைத்தது.
நத்தையாரே…நத்தையாரே
அத்தை வீடு பயணமோ
அத்தை வீடு போக முதுகில்
தண்ணீர் குடம் வேணுமோ
அத்தை வீடு போகும் வழியில்
தாகம் எடுக்குமே அதனால்
தண்ணீர் குடம் முதுகில்
சுமந்து நானும் செல்கிறேன்
என்று முடியுமோ?
நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குஒளிப்படங்கள் அருமை. விமானம் என்பது முதல் படத்திலேயே தெரிகிறதே:).
ஒரு கதை, இருவர் ஓவியம் அருமை. எந்த வருட இதழ்?
பானு, "நானும் நத்தையாரே நந்தையாரே எங்கே போறீங்க?
பதிலளிநீக்குஅத்தைவீடு பயணமோ ""
என்ற பாடல் வரிகளை பகிர்ந்து இருக்கிறேன்.
அதற்கு மேலே தெரியவில்லை என்று கூகுளில் தேடினால் எல்லாம் காணொளியாக கிடைத்தது.
அத்தைக்கு குடிக்க, அல்லது குளிக்க தண்ணீர் கொண்டு போகிறேன் போய் சேர எத்தனை நாள் ஆகும் போன்ற பாடலே கிடைத்தது. மேலும் தேடியதில் இந்த கவிதை பிடித்து இருந்தது அதனால் அதை பகிர்ந்தேன்.
உங்கள் கவிதையும் நன்றாக இருக்கிறது.
//அருமை....
பதிலளிநீக்குஅழகான பாடல்.. பதிவில் அறிமுகம் செய்த கோமதி அரசு அவர்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி..//
நன்றி சகோ துரைசெல்வராஜூ.
நத்தைக்கு ஆகக்கூடி சினிமாப்பாட்டு இல்லைதானே?!! பாட்டு இல்லை. ஆனால் நத்தையில் முத்து என்று ஒரு சினிமா இருக்கிறது! நீங்கள் சொல்லி இருக்கும் கவிதை நன்றாய் இருக்கிறது.
பதிலளிநீக்கு//மெல்ல எட்டிப் பார்க்கையில் பட்டு மேனி மின்னுது மழையின் காலம் முழுவதும் மலிவு இன்றி உலவுது//
ஸூப்பர்.//
ஸ்ரீராம் சினிமா பாட்டு இருந்தால் நீங்கள் போட்டு இருப்பீர்களே!
நான் தேடியது நான் சிறு வயதில் பாடிய பாடலை.
வேறு கிடைத்த பாடலை இங்கு பகிர்ந்தேன்
பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
அருமையான பகிர்வு. அத்தனை படங்களும் சூப்பர். அத்தனை பாடல்களும்
பதிலளிநீக்குபொருத்தம் நத்தை வீடும், பூனை வீடும் மிக அழகு. வாழ்க வளமுடன் ஸ்ரீராம்.
அனைவருக்கும் இரவு வணக்கம்.,
ஆவ்வ்வ்வ்வ் வேல்ட் கப் முடிவுக்கு வரப்போகுதூஊஊஊஊ... ஃபிரான்ஸ்தான் வின் பண்ணும் என பெரும்பான்மை வாக்குகள் சொன்னதாலும், மகனின் விருப்பத்தில் பேரிலும் ஃபிரான்ஸ்தான் வின் பண்ணும் என 15 பவுண்ட்ஸ்க்கு ஃபிட் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. ஃபிரான்ஸ் வின் பண்ணினால் எனக்கு 35 பவுண்ட்ஸ் கிடைக்கும் இல்லையேல் அவ்ளோதேன்ன் ஹா ஹா ஹா:)).. சரி முடிவு வரட்டும் பார்க்கலாம்..
பதிலளிநீக்குஇதில ட்றம்ப் அங்கிள் வேற இங்கு வந்து நிண்டு கொண்டு 6 மணிக்கு தேம்ஸ் கரைக்கு வாங்கோ வோக் போகலாம் என சொல்லிக்கொண்டிருக்கிறார் .. எதுக்கும் மச் முடியட்டும் வருகிறேன் எனச் சொல்லிட்டேன்,...
ஸ்ரீராமின் போஸ்ட் பற்றி எதுவும் சொல்லலியே எனக் கோபிக்கப் போகிறார்ர்.. வாறேன் கொஞ்சம் லேட்டா.. எதுக்குமேஎ நேரம் கிடைக்குதில்லையே கர்:))
பதிலளிநீக்குஆஆஆஆஆ பிரேக் பிரேக்க் ஃபிரான்ஸ்க்கு 2... குரேஷியாக்கு ஒண்டு:)..
பதிலளிநீக்குஆங்ங்ங்ங் பூஸ் குட்டிகள் சமாச்சாரத்துக்கு வருவோம்...
பூஸ்கள் எனில் ஏதோ மலிவாக நினைச்சிட்டீங்க எல்லோரும்.. அவர்களுக்கு விதம் விதமான வீடுகள் இங்கு கிடைக்குது தெரியுமோ... பெட் ஷொப் போனால் அழகிய அப்ஸ்ரெயார்ஸ் வீடுகள்.. ஏணி வச்ச வீடுகள்.. என விதம் விதமாகக் கிடைக்கும்.
ஏன் ஸ்ரீராம் நீங்க, சும்மா ஒரு கார்ட் போர் பெட்டியை மூடி ஒட்டிப்போட்டு அதில் பெரிய ஒரு சதுர வாசல் வைத்து விடுங்கோ.. உள்ளே போய்ப் படுப்பார் உங்கள் வீட்டு விசிட்டராகிய பூஸ்:))..
உங்களுக்கு ஒரு வ பூச்சியாவது காணக் கிடைத்துதே.. இங்கு ஒன்றுகூட இல்லை.. மொத் எனப்படும் ஒரு பூச்சிதான் பறக்குது.
பதிலளிநீக்குஅய்யய்யோ நத்தை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இங்கெல்லாம் மிக மிகக் குட்டி நத்தைகளே அதாவது ஒரு செண்டிமீட்டர் விட்டம் கொண்டவைதான் ஊருது.. இப்படி நத்ஸ்:) பார்த்து பல வருடமாச்சு... உப்பை நத்தையின் மேல் போடாதீங்கோ.. அந்த ஏரியாவில் போட்டு விட்டால். அவை வேறு பக்கம் ஊர்ந்து போய்விடுவார்கள். உப்பிருக்கும் பக்கம் ஊர மாட்டினம்.
நத்தை மடி மெத்தையடி
ஊர்ந்து விளையாடம்மா..
ஊரும் வரை ஊர்ந்து விட்டு
கோதுக்குள்ளே தூங்கம்மா:).. ஹா ஹா ஹா.
கோமதி அக்கா அழகான பாடல் சொல்லிட்டா..
குரேஷியா தனக்குத்தானே இரண்டு கோல் போட்டுக்கொண்டு எதிரிலும் ஒரு கோல் போட்டிருக்கிறது!!!
பதிலளிநீக்கு////ஸ்ரீராம்.July 15, 2018 at 9:30 PM
நீக்குகுரேஷியா தனக்குத்தானே இரண்டு கோல் போட்டுக்கொண்டு எதிரிலும் ஒரு கோல் போட்டிருக்கிறது!!!///
ஹா ஹா ஹா இல்ல இல்ல எனக்கு 35 பவுண்ட்ஸ் கிடைச்சிடும்:) அதில எல்லோரும் சொக்லேட் வாங்கித் தருவேன்.... இப்போ
4:2 Fra:Cro
// "காலை இளம் பரிதியிலே... அவளைக் கண்டேன்..."//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சூரியன் அண்ணாவாக்கும் நொட் அக்கா:) ஹா ஹா ஹா..பாட்டை மாத்துங்கோ:)..
//"நான் வரைந்த ஓவியமே... நல்ல தமிழ்க் காவியமே..."//
ஆஹாஆஆ எனக்கு மிக மிகப் பிடித்த வரிகள்... நான் சிரிக்க நீ அழுதால்.. நீ சிரிக்க நான் அழுவேன்...
// "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ..."//
இப்படத்திலே இரு பூஸ் குட்டிகள் அல்லது பப்பீஸ்.. ஒன்றை ஒன்று கலைப்பதுபோல தெரியுது.. முகில் படங்கள் பார்த்தபடியே இருக்க விதம் விதமான உருவங்கள் விரியும்.
ஆஆஆ புத்தகக் கண்காட்சிக்கு நேரில் போகும் வாஅய்ப்புக் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை:(.. வாசிக்காது விட்டாலும் வாங்கி வருவதிலும் ஒரு மகிழ்ச்சி... பின்பொருநாள் எப்படியும் வாசித்து முடித்திடலாம் எனும் நம்பிக்கையில்.
பதிலளிநீக்குஆனா குட்டிப் புத்தகம் எனில் உடனேயே படிச்சு முடிச்ச்சிடுவேன்...
கடசிப்படம் மலரப்போகும் பேரனை[மொட்டு] என்ன அழகாக பாதுகாக்கும் தாத்தா[பழுத்த இலை].. மிக அருமையாகப் படம் பிடிச்சிருக்கிறிங்க ஸ்ரீராம்.. வாழ்த்துக்கள்.
இன்று மீதான் 100... 105 எல்லாமே:)) பொற்கிழி எனக்கே:)..
அதிரா... 35 பவுண்ட் ஜெயிச்சுட்டீங்க...
பதிலளிநீக்கு
நீக்குஸ்ரீராம்.July 15, 2018 at 9:57 PM
அதிரா... 35 பவுண்ட் ஜெயிச்சுட்டீங்க.////
ஹா ஹா ஹா அவசரப்படக்குடா ஶ்ரீராம் இன்னும் ரைல் இருக்கெல்லோ ஹையோ நேக்கு கையும் ஆடல்லே காண்ட்ஸ்சும் ஓடல்லே:)...
ஏ அண்ணன் என்னைத் திட்டப் போறார்ர்ர் ஹா கா ஹாஅ
////ஸ்ரீராம்.July 15, 2018 at 9:57 PM
நீக்குஅதிரா... 35 பவுண்ட் ஜெயிச்சுட்டீங்க...////
ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஜெயிச்சாச்சூஊஊ இன்று காலையில ரெண்டு கரிக்குருவி ஒன்றாகப் பார்தேன்ன்ன்ன் ஜெயிச்சிட்டேன்ன்ன்ன்:)
@கீதாக்கா :) நான் நலமே .கொஞ்சம் பிஸியானதில் எங்குமே வரமுடியலை கூடவே pollen அலர்ஜியும் சேர்ந்து பாடு படுத்திடுச்சி .இப்போ பரவாயில்லை .
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்
பதிலளிநீக்கு//ஏஞ்சல் திட்டுவாரே என்று நான் அப்படிச் செய்யவில்லை. ///
கர்ர்ர்ர்ர் 100000000000 டைம்ஸ்
ஏற்கனவே அந்த கண் திறவா பிள்ளையார் வாகன குழந்தைங்களை வெளில விட்டதுக்கு உங்க மேலே கேஸ் நிலுவையில் இருக்கு
நானா மூணு வருஷமா தோட்டம் போடறதை நிறுத்திட்டேன் நத்தைகளால் எனக்கு அதுங்களை மெடிசின் /உப்பு போட்டு --- மனசு வரல்லை .
அந்த பூனை வீடு என் மகள் செஞ்சதை பகிர்கிறேன் :) அட்டைப்பெட்டியில் செய்தது .
நத்தை யின் trail முக அழகு க்ரீம் anti age /softener Dr Organic Snail Ge, க்ரீமாக செய்றாங்க அந்த ஒளிரும் trail மட்டும் கலெக்ட் செஞ்சி கடையில் பார்த்தது .
இப்பவும் வயலினை ஒரு கையில் பிடிச்சிட்டே வெளில புறப்பட்டுக்கொண்டே ஒரு கமெண்ட்டாவது போட்டு நான் இங்கே வந்திட்டு போனேன்னு இருக்கேன்னு சொல்லிக்கிறேன் :)
பதிலளிநீக்குஸ்ரீராம் மறுமொழி சொல்கிற கட்டத்தைத் தாண்டியாச்சு போலிருக்கு.
பதிலளிநீக்கு@ஞானி:) athira :... காலையில ரெண்டு கரிக்குருவி ஒன்றாகப் பார்தேன்ன்//
பதிலளிநீக்குராத்திரியிலே நாலு கரிக்குருவி பார்த்திருக்கீங்க போலருக்கு! எனிவே, 35 பவுண்டுக்கு முட்டாயி வாங்கி முழுங்குங்க! அடுத்த வர்ல்ட் கப்ல பார்ப்போம்!
//ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்கு@ஞானி:) athira :... காலையில ரெண்டு கரிக்குருவி ஒன்றாகப் பார்தேன்ன்//
ராத்திரியிலே நாலு கரிக்குருவி பார்த்திருக்கீங்க போலருக்கு! எனிவே, 35 பவுண்டுக்கு முட்டாயி வாங்கி முழுங்குங்க! அடுத்த வர்ல்ட் கப்ல பார்ப்போம்!///
ஹா ஹா ஹா ஏ அண்ணன்.. ஹா ஹா ஹா.. நல்லாத்தானே போய்க் கொண்டிருந்துது முடிவில எப்பூடி எதிர்க்கட்சியில போய் இருந்திட்டீங்க?:) ஹா ஹா ஹா இல்ல எனக்கு குரேஷியா வந்தாலும் ஓகே பாவம் குட்டி நாடு.. ஆனா போட்டி.. பிட் என வரும்போது ஃபிரான்ஸ்தான் என நினைத்தோம்.. மகன்களும் மகனின் நண்பர்கள் எல்லோருமே ஃபிரான்ஸ்க்கே சப்போர்ட்.. அப்போ போனாப்போகுது வந்தால் 35.. போனால் 15 தானே என பிட் பண்ணினேன்ன்.. ஹா ஹா ஹா காத்து இன்று என் பக்கம்:))..
அடுத்த வேல்ட் கப்:)) பார்ப்போம்ம்.. இப்படியே நாம் இருந்தால்:))
இயற்கை காட்சிகள் அருமை பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கு நன்றி அதிரா..
பதிலளிநீக்குநத்தை மடி மெத்தையடி பாடலை ரசித்தேன்!
//காலை இளம் பரிதியிலே... அவளைக் கண்டேன்..."// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சூரியன் அண்ணாவாக்கும் நொட் அக்கா:) ஹா ஹா ஹா..பாட்டை மாத்துங்கோ:)./
பதிலளிநீக்குநான் சொல்லும் பாடல் கேட்டதில்லையா அதிரா... சிறுபாடல். எஸ் பி பி. கண்ணன் ஒரு கைக்குழந்தை படப்பாடல்.
//பின்பொருநாள் எப்படியும் வாசித்து முடித்திடலாம் எனும் நம்பிக்கையில்.//
அப்படி நானும் சில புத்தகங்களை வைத்திருக்கிறேன். நிறைய புத்தகங்களை முடித்துக்கொண்டு வந்தாலும் சில புத்தகங்கள் நிற்கிறது.
ஏஞ்சல்...
பதிலளிநீக்கு//ஏற்கனவே அந்த கண் திறவா பிள்ளையார் வாகன குழந்தைங்களை வெளில விட்டதுக்கு உங்க மேலே கேஸ் நிலுவையில் இருக்கு //
அதை இன்....னுமா நினைவில் வைத்திருக்கிறீர்கள்? ஓ எம் ஜி!
//இப்பவும் வயலினை ஒரு கையில் பிடிச்சிட்டே வெளில புறப்பட்டுக்கொண்டே ஒரு கமெண்ட்டாவது போட்டு நான் இங்கே வந்திட்டு போனேன்னு இருக்கேன்னு சொல்லிக்கிறேன் :) //
பதிலளிநீக்குநன்றி. உடல்நலத்தில் கவனம் வைத்துக்கொள்ளுங்கள்.
//ஸ்ரீராம் மறுமொழி சொல்கிற கட்டத்தைத் தாண்டியாச்சு போலிருக்கு.//
பதிலளிநீக்குஆமாம் ஜீவி ஸார்... ஹிஹீஹீஹீஹீ...
நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்கு