புதன், 6 பிப்ரவரி, 2019

புதன் 190206: "போட்டுத் தாக்கு!"


சென்ற வாரம் நான் சொன்ன பதில், 

முன் காலத்தில் ஆண்கள் சம்பாதி - அவர்களின் மனைவி வாழ்க்கையை அனுபவி என்று இருந்தனர். இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில், கணவன், மனைவி இருவருமே சம்பாதி, அவர்களின் குழந்தைகள் வாழ்க்கையை அனுபவி. ஆக, சிலர் சம்பாதித்தால், வேறு சிலர் வாழ்க்கையை அனுபவிக்கலாம்! " 

இது ரொம்பப் பேர் கோபத்தை கிளறிவிட்டது போலிருக்கு. 




எங்கள் தழும்பு: 

பா வெ மேடம் இப்படி எழுதியிருந்தார். " //முன் காலத்தில் ஆண்கள் சம்பாதி - அவர்களின் மனைவி வாழ்க்கையை அனுபவி என்று இருந்தனர். // 

ஆமாம், சம்பாதிக்கும் கணவனுக்குத்தான் முதல் டிகாஷன் காபி என்று பாலில் அதிகம் தண்ணீர் ஊற்றாமல், முதல் டிகாஷன் விட்டு கணவருக்கு காபி கொடுத்து விட்டு தான் கடைசி டிகாஷன் ஊற்றி காபி கொடுத்து அனுபவித்தார்கள்.

சம்பாதிக்கும் கணவருக்கு நல்ல உணவு தயாரிக்க அதிகாலை எழுந்து விறகடுப்பிலும், குமுட்டி அடுப்பிலும் சமைத்து நேரத்திற்கு சமைத்து, கையிலும் கொடுத்து அனுபவித்தார்கள்.

வார்க்கும் தோசையில் நல்லதை சம்பாதிக்கும் கணவருக்கு கொடுத்து விட்டு, தீய்ந்ததையும், பிய்ந்ததையும் தான் சாப்பிட்டு அனுபவித்தார்கள். 

கணவருக்கு சாதாரண தலைவலி என்றால் கூட வீட்டில் குழந்தைகள் சத்தம் போடாமல் பார்த்துக் கொண்டு, சூடாக காபி, மாத்திரை கொடுப்பதோடு தலையில் தைலம் தேய்த்து விட்டு பணிவிடை செய்யும் மனைவிமார்கள் பிளக்கும் தலைவலி வந்தால் கூட தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு, ஒன்றுக்கு இரண்டாக மாத்திரை போட்டுக் கொண்டு வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்ததோடு, தன் வியாதிகளை வெளியே சொன்னால் கணவருக்கு பணக்கஷ்டம்,மனக்கஷ்டம் என்பதால் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அனுபவித்தார்கள்.(இப்போதும் பெரும்பான்மையான பெண்கள் செய்யும் தவறு இதுதான் என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள்).

தனக்கு வீட்டு செலவிற்காக கணவர் கொடுக்கும் பணத்திலும், அவ்வப்பொழுது கிடைக்கும் வெற்றிலை பாக்கு பணத்திலும் மிச்சம் பிடித்து, கணவருக்கு தேவையான பொழுது உதவியும், பெண் குழந்தை இருந்தால் அவளுக்காக பாத்திரம், நகை என்று சிறிது சிறிதாக சேர்த்து அனுபவித்தார்கள். 

தன்னுடைய உள்ளாடைகள் வாங்கக்கூட கணவனிடம் கையேந்தி, தான் விரும்பும் வாரப்பத்திரிகையை இரவல் வாங்கி படித்து, கச்சேரி, சினிமா, போன்றவைகளுக்கு கெஞ்சி, கொஞ்சி அனுபவித்தார்கள். 
எவ்வளவு என்ஜாய்மென்ட்..! " 


அவ்வ்வ்வவ் ....... 
யாருக்கோ போகவேண்டிய அடிகள் எல்லாவற்றையும் வெஸ்ட் பெங்கால் சி பி ஐ ஆபீசர் போல நான் வாங்கிகிட்டேன்! 



எங்கள் பதில்கள் : 

துரை செல்வராஜூ :

முந்தாநாள் சென்னையில ஏதாவது புதுசா கோயில் கட்டியிருந்தாலும் 
அதுக்கும் உடனே தல புராணம் எழுதிடறாங்களே அது ஏன்!?..



&  "வரலாறு முக்கியம் அமைச்சரே! "

வாட்ஸ் அப் கேள்விகள்: 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

திருமணத்திற்கு வரன் பார்க்கும் பொழுது ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று வேறு கோத்திரத்திலிருந்து பெண்ணைஉதேடுகிறோம். ஆனால் அப்படி வேறு கோத்திரத்திலிருந்து வரும் பெண்ணை பையனின் கோத்திரத்திற்கு மாற்றிய பிறகே தாலி கட்டுகிறார்கள். கொஞ்சம் அபத்தமாக இல்லை?

# "எங்கள் குடும்பத்தில் ஒருவராக இந்தப் பெண்ணை சேர்த்துக்கொள்கிறோம்"  என்கிற பாவத்தில்தான் கோத்திர மாற்றம் நடக்கிறது. கோத்திரம் மாற்றுகிறார்களா அல்லது இந்த கோத்திர  பெண்ணை நம் குடும்பத்தோடு சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்களா  என்பது சமஸ்கிருதமும் தெரிந்து அந்த மந்திரங்களையும் தெரிந்து உள்ள யாராவது விளக்கினால் தான் சரியாக இருக்கும்.  இந்த கோத்திரத்தில் உள்ள பெண்ணை  நாங்கள் எங்களில் ஒருவராக சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும் பட்சத்தில் அது  மாற்றமில்லை அந்த  கோத்திரத்திற்கு வரவேற்பு என்று தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

& திருமணமாகும் பெண் தன்னுடைய பிறந்தவீட்டு கோத்திரத்தைத் துறந்து, கணவனின் கோத்திரத்தை ஏற்று, தன்னுடைய குழந்தைகளுக்கு, கணவனின் கோத்திரத்தை அளிக்க முன்வருகிறாள். திருமணத்திற்குப் பெண் தேர்ந்தெடுக்கும்போது அந்தப் பெண், முந்தைய தலைமுறை வழியில் பையனுக்கு சகோதரி உறவு இல்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள திருமணத்திற்கு முன்பு அவளுடைய கோத்திரம் பார்க்கப்படுகின்றது. சக கோத்திரம் என்றால், சகோதர உறவு முந்தைய தலைமுறையில் ஏதோ ஒன்றில் நிகழ்ந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வர். 


திருமணம் செய்து கொள்ளும் நம்பிக்கை, ஓட்டு போடும் நம்பிக்கை என்ன வித்தியாசம்?

திருமண நம்பிக்கை பொய்த்தால் ஆயுள் தண்டனை. ஓட்டு நம்பிக்கை பொய்த்தால் ஐந்தாண்டு தண்டனை.

& நான் ஒன்றும் சொல்லமாட்டேன்! இந்த வாரமும் உங்களிடம் ஏதாவது வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும் என்று எனக்கு ஏதாவது நேத்திக் கடனா! எஸ்கேப்! 
     
புதினங்களில் சாப்பாடு பற்றி எழுதுவதை ரசிப்பீர்களா?எனக்கு தெரிந்து லா.ச.ராவும், சிவசங்கரியும் இதற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டவர்கள்.

# எழுத்தை ரசிப்பதில் சாப்பாட்டு விவரணையும் ஒரு அம்சம் தான். சாண்டில்யன் சிருங்காரம் போல் அளவுக்கு அதிகமானால் சலிப்புதான். எதுவானாலும் மிகச் சரியான அளவில் சொன்னது தி.ஜானகி ராமன்.

& நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களின் சாப்பாடு எழுத்துகளை படித்த ஞாபகம் இல்லை. எனக்குத் தெரிந்து சிற்றுண்டிகளைப் பற்றி சுவையாக சமீபத்தில் எழுதியவர் ஜ ரா சு. அவர் எழுதிய அந்த வகைப் பதிவுகளை பலமுறை படித்து சுவைத்துள்ளேன்!


உத்தம புத்திரன், நாடோடி மன்னன், இம்சை அரசன் 23ம் புலிகேசி, எதை அதிகம் ரசித்தீர்கள்?

நாடோடி மன்னன்.

& உங்கள் கேள்வியில் உள்ள நயத்தைப் பாராட்டுகிறேன். இதுவரை தமிழ்த் திரையுலகில் வெளிவந்துள்ளது, மூன்று உத்தமபுத்திரன் படம், இரண்டு நாடோடி மன்னன்; ஒரே ஒரு 23! 

நான் அதிகம் ரசித்த நகைச்சுவைப் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. (முன்னவர் சொல்லியிருக்கும் நா ம, 1958 படம். 1995 ல் வந்த படம் அல்ல என்று நினைக்கிறேன்.)
             
====================================================     

எங்கள் பிட் : 

படைப்பாற்றல் என்பது, ஓர் இலக்கை அடைய, பல வழிகளை / யுக்திகளை யோசித்து, முயற்சி செய்து, இலக்கை அடைதல். இது, 'குருடர்கள் கண்டறியும் யானை' போன்ற விளக்கமா? 

====================================================

எங்கள் கேள்வி:

" இந்தக் கேள்வியை யாராவது என்னைக் கேட்கமாட்டார்களா ..... என்று நீங்கள் ஏங்குகின்ற கேள்வி, எந்தக் கேள்வி?" (கவனியுங்கள்: கேள்வியை மட்டும்தான் நீங்க இங்கே பதியலாம். பதிலை அல்ல!) 

நன்றி. மீண்டும் சந்திப்போம்!


77 கருத்துகள்:

  1. இனிய புதன் காலை வணக்கம் கௌதமன் சார் :) நான் தூங்கிட்டு நாளைக்கு வரேன் :))

    பதிலளிநீக்கு
  2. ஜி+ ஐ எடுக்கப் போறாங்களே! அதைப் பத்தி உங்கள் கருத்து என்ன? பாக் அப் செய்து வைத்திருக்கிறீர்களா? கூகிள் அக்கவுன்ட் மூலம் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் கூடக் காணாமல் போயிடுமாமே! எனக்கு வரும் எல்லாக் கருத்துக்களும் அப்படித் தான் வருது! எல்லாமே காணாமல் போயிடும் போல் கவலையா இருக்கு! அதுக்கப்புறமா இனிமேல் கருத்துச் சொல்லுவதென்றால் என்ன செய்யணும்? அதைப் பற்றி ஓர் விரிவான விளக்கம் கொடுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்பு கேஜிஎஸ்தான் சரியான பதில் கொடுப்பார்.

      நீக்கு
    2. கேஜிஜியும் சொல்லுவார். யார் சொன்னால் என்ன? பதில் தான் முக்கியம்! :)

      நீக்கு
    3. திண்டுக்கல் தனபாலனே சரணம்!

      நீக்கு
    4. g+ வந்தபோதே பலரிடம் "இது வேண்டாம்" என்று கூறினேன்... அதைப் பற்றி முன்பு எழுதிய தொழிற்நுட்ப பதிவு கீழே கொடுத்துள்ளேன்...

      http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

      (அந்த பதிவில் ஐந்தாவது தலைப்பை சொடுக்க வேண்டும்)

      கீதா அம்மா அவர்களுக்கு : உங்களின் நான்கு வலைத்தளங்களும், பிளாக்கர் கருத்துரைப் பெட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்... அதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை...

      தற்போது பதிவு எழுதுபவர்பளில், வல்லிசிம்ஹன் அம்மா, அருணா செல்வம் சகோதரி - ஜி ப்ளஸ் கருத்துரைப் பெட்டி வைத்துள்ளார்கள்... சொல்வதற்கு வருத்தமாக உள்ளது, அவர்களுக்கு இனிமேல் எழுதும் பதிவுகளுக்கு வரும் கருத்துரைகள் தான் இருக்கும்...

      மேற்படி g+ profile வைத்துள்ளவர்களுக்கு :- அதுவும் காணாமல் போய் விடும்... அதற்கு தீர்வும் மேலே உள்ள இணைப்பில் உள்ளது...

      யாருக்காவது முயன்று முடியவில்லை என்றால், அழைக்க :- 9944345233

      நன்றி

      நீக்கு
    5. நன்றி தனபாலன் அவர்களே! எங்கள் ப்ளாகுக்கு பிரச்னை எதுவும் இல்லைதானே?

      நீக்கு
    6. இல்லை...

      ஜி ப்ளஸில் பலரும் சில குழுமங்கள் (communities) வைத்திருப்பார்கள்... அதுவும் நீங்கி விடும்... அதனால் அங்கும் நம் பதிவுகளை பகிர்ந்து கொள்ள முடியாது...

      நீக்கு
    7. DD நன்றி. தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன்.

      நீக்கு
  3. இப்போ உங்க பதிவுக்கு வரலாம். பெண்கள் பானுமதி சொன்னாப்போல் நடந்து கொள்வது/நடந்து கொண்டிருப்பது பாரபட்சம் இல்லையோ? ஆனால் அந்தக் காலங்களில் சம்பாதிப்பவர் என்பவர் வீட்டுக்கு ஒரே ஒருத்தராக இருந்ததால் அவருக்கு அலுவலக வேலைகள்/நிர்ப்பந்தங்களோடு வீட்டுக்கவலைகளையும் கொடுக்க வேண்டாம் என்னும் நல்ல எண்ணத்திலும் இருக்கலாம் அல்லவா? காலம் மாறிப் போனதோடு அல்லாமல் இப்போல்லாம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து தேவை என்பதன் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர ஆரம்பித்திருப்பது நல்லதொரு மாற்றம் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அந்தக் காலத்தைப் பற்றி எழுதியிருந்ததால்தான் அந்தக் கால நிலையை நான் எழுதியிருந்தேன். இப்போது இருவரும் சம்பாதிக்கிறார்கள்,இருவரும் அனுபவிக்கிறார்கள். ஆண்கள் சம்பாதித்து, பெண்கள் வீட்டில் இருந்த அந்தக் காலத்தில் பெண்கள் அண்டர் பிரிவலெட்ஜட் என்று நம்ப வைக்கப் பட்டிருந்தார்கள். உண்மை இப்படி இருக்க, அந்தக் காலத்தில் பெண்கள் அனுபவித்தார்கள் என்று எழுதியிருந்ததை படித்ததும் பொய்ங்கி விட்டேன்.

      நீக்கு
    2. நானும் பொய்ங்கினேன் தான்! ஏனெனில் அந்தக்காலம் மட்டுமில்லாமல் என் காலத்திலும் பெண் குழந்தைகளுக்கு ஒரு மாதிரி, ஆண் குழந்தைகளுக்கு ஒரு மாதிரி என இருந்திருக்கு! என்றாலும் சும்மாச் சும்மாப் புலம்ப வேண்டாம்னு விட்டுட்டேன். :)))))

      நீக்கு
  4. என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் முக்கியக் கேள்வி என்ன? இஃகி, இஃகி, இதான் நான் உங்களைக்கேட்க ஏங்கும் என்னோட கேள்வி! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... இதுக்கு அர்த்தம்... என்னிடம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் இருக்குன்னு உங்க மனசு சொல்லுதுன்னு எடுத்துக்கலாமா?

      நீக்கு
    2. கேஜிஜிக்கு இந்தக் கேள்வியினால் ஏற்பட்ட வருத்தம் பற்றி ஒண்ணுமே சொல்லலையே!

      நீக்கு
  5. இந்த கோத்திரம் மாற்றும் விபரம் முன்னர் எழுதி இருக்கும் நினைவு. தேடிப் பார்க்கிறேன். சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சரியான விளக்கம் அளித்திருப்பார். அதையும் தேடிப் பார்க்கணும். பானுமதி கேட்டிருக்கும் 3 படங்களுமே பழசோ, புதுசோ பார்த்ததில்லை. :)

    பதிலளிநீக்கு
  6. படைப்பாற்றல் என்பது வேறு, இலக்கை அடைதல் என்பது முற்றிலும் வேறு இல்லையோ? இது குருடர்கள் கண்டறியும் யானை போன்ற விளக்கமெல்லாம் இல்லை. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல் சொல்வது என்பது என் கருத்து. நம் படைப்பாற்றல் தான் நம் இலக்காக இருக்குமா என்ன? வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. What I meant was, creativity is generation of many ideas to achieve a set goal.

      நீக்கு
    2. அவசரக்குடுக்கையாகப் பதில் சொல்லிட்டேன் போல! யோசிக்கணும். மத்தவங்க என்ன சொல்லப் போறாங்க என்பதையும் பார்க்கணும்.

      அது சரி, சில சமயங்களில் சில விஷயங்களைத் தாய் மொழியில் சொல்லும்போது ஒரு அர்த்தமும் ஆங்கிலத்தில் சொல்லும்போது ஒரு அர்த்தமும் வருதே! அப்போ நமக்கு/எனக்குத் தாய் மொழியில் புரிஞ்சுக்கத் தெரியலையா?

      நீக்கு
    3. முழுவதும் தமிழில் எழுத வேண்டும் என்று நான் நினைத்து கடின வார்த்தைகளில் முழிபெயர்த்துவிட்டேன்(!) என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    4. கீதா அக்கா சொல்வது 100% சரி. படைப்பாற்றல் வேறு, இலக்கை அடைவது வேறு. தவிர படைப்பாற்றலுக்கு ஏது இலக்கு? இலக்கை அடைந்து விட்டால் படைப்பாற்றல் முற்றுப் பெற்று விடாதா?

      நீக்கு
    5. //achieve a set goal// Any number of goals can be set by anyone. Example : I can set a goal of increasing the number of views for this blog, from the current quantity to a higher quantity say from 500 page views a day, to 600 page views. To achieve that goal, I can generate a lot of ideas. So, Creativity does not end when a set goal is achieved. Another goal is taken as next target. No end for creativity or for setting goals.I hope I have made my point clear.

      நீக்கு
    6. கொஞ்சம், கொஞ்சம் புரியுது! புரிஞ்சாப்போல்ல்ல்ல்ல்ல்!!!!! :)))))

      நீக்கு
  7. காலமாற்றத்தால் வாழ்க்கை முறையும் மாறுகிறது. காலப்போக்கில் வீட்டுச்சமையல் அழிந்து போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுச் சமையல் என்பது, ஒருவரின் ஆயுளை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் வேலை. 3 வேளை உணவு தயார் பண்ணறவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்னு பார்த்தாத் தெரியும்.

      Common Kitchen, சுத்தமான இடத்திலிருந்து உணவு தருவிப்பது... இப்படி ஒரு நிலை வந்தால் ஓரளவு நல்லதுதான்.

      நீக்கு
    2. நெ.த. உங்கள் எண்ணம் சரியல்ல, வீட்டுச் சமையல் ஒருவரின் ஆயுளை முழுதும் எடுத்துக்கொள்ளும் வேலை என்றால் அதற்காக வெளியே வாங்கிச் சாப்பிடும்போது அதையும் ஒருத்தரோ/பலரோ செய்து தானே கொடுக்கிறாங்க! மிஷினா தயாரிக்கப் போகிறது? சப்பாத்தி, இட்லி, தோசைக்கு வேணா மிஷின் வந்திருக்கலாம். சாதம், சாம்பார், குழம்பு, ரசம் எல்லாம் பண்ணித் தானே ஆகணும். நாளாக ஆக இம்மாதிரி வேலைகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். அப்போ அவங்க வாழ்நாள்/ஆயுள் முழுதுமாக எடுத்துக்கொள்ளப்படுவது சரியா? சரியில்லை!

      நீக்கு
    3. வீட்டுச் சமையல் தான் சுத்தம், சுகாதாரம், உடலுக்கும் மனதுக்கும் நல்லது. வீட்டில் பெண்களுக்கு இதன் மூலம் ஓர் வடிகால் கிடைக்கும். சமையல் என்ன செய்வது எனச் சிந்தித்து அதைக் கொஞ்சம் ஆவலுடன் ருசிகரமாகச் செய்துவிட்டு பிறர் கருத்துக்காகக் காத்திருப்பது ஓர் சுகம் தான்! நாம் சமைத்துப் பிறருக்குப் போடும்போது வரும் மன நிறைவு வேறே எதிலும் வராது/ எனக்கு வந்ததில்லை. முடிஞ்சவரை நாமே சமைப்போம்.

      நீக்கு
  8. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    @ பானு மா. கைதட்டல்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.

    எனக்கு பழைய நாடோடி மன்னன் பிடிக்கும்.

    கோத்திரம் மாறிய பெண்ணின் மகளை மாமன் மகனுக்குக் கொடுத்து
    அவள் கோத்திரம் மீண்டும் மாறும்.

    உங்களுக்குப் பிடித்த கேள்வி என்னவாக இருக்கும்.
    எங்கள் ப்ளாக் வளர்ந்த விதம் எப்படி . சொல்ல முடியுமா. உங்கள்
    எல்லோருடைய சிந்தனையும் ஒத்துழைத்து வித விதமாக
    பதிவுகள் வருகிறதே அதுவே பாராட்டப் படவேண்டியது.

    @திண்டுக்கல் தனபாலனுக்கு மிக நன்றி.
    தேவைப் பட்டால் தொலை பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. விடியற் காலையில் பதிவைப் பார்த்தும் கருத்துரை செய்யமுடியாத வகையில் குளிர் நடுக்கம்.

    எப்படியோ புதுக் கதைக்கு அடித்தளம் கிடைத்தாயிற்று..

    பதிலளிநீக்கு
  10. பானுமதி சொன்னதை நானும் பார்த்து இருக்கிறேன்.

    தன் பெரிய குடும்பத்தை நடத்திச்செல்ல
    அப்போது நிறைய சிரம பட வேண்டி இருந்தது ஆண்மகனுக்கு. குடும்பம் பெரிது கவனிக்கும் ஆட்கள் அதிகம் அவர்களுக்கு சம்பாதிக்க அவருக்கு உடல்பலம் வேண்டும் என்று கவனித்து இருக்கலாம்.
    அதுவும் அப்போது உள்ள பெண்கள் எல்லாம் தியாகம், சகிப்புதனமை, விட்டுக் கொடுத்தல் என்ற நல்ல குணங்களும் கருணையும் அன்பும் அளவுக்கு அதிகமாய் கொண்டவர்கள்.

    பதிலளிநீக்கு
  11. புதிதாக கட்டபட்ட கோவில் என்றாலும் அது கட்டபட வேண்டிய அவசியம் ஏன் வந்தது ? என்ன காரணம் என்பதே தலவரலாறு ஆகிவிடுகிறது.

    இன்றைய செய்தி நாளைய வரலாறாக மாறுகிறது.

    பதிலளிநீக்கு
  12. எங்களுக்கு எல்லோருமே சிவகோத்திரம் தான்.

    பதிலளிநீக்கு
  13. //திருமண நம்பிக்கை பொய்த்தால் ஆயுள் தண்டனை. ஓட்டு நம்பிக்கை பொய்த்தால் ஐந்தாண்டு தண்டனை.//

    சரியாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. அந்தக் கால எழுத்தாளர்கள் மு.வரதராசன் அவர்கள் மிளகு குழப்பு வைப்பதை பற்றி எழுதி இருப்பார், இன்று வீட்டில் காய்கறிகள் இல்லை என்று சொல்லும் மனைவியிடம் மிளகு குழம்பு வை என்பார்.
    சிவசங்கரி மூன்று தலைமுறை பற்றி எழுதிய கதையில் (பாலங்கள்)
    அதிரசம் சரியாக வராத காரணத்திற்கு ஒன்று சொல்வார் அதற்குதான் விமர்சனம் செய்யபட்டார்.

    மற்றபடி பில்டரில் காப்பி எப்படி போட வேண்டும் சமைத்த இடத்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கதையில் அடிக்கடி வரும்.

    லட்சுமியின் கதையிலும் உயர்தட்டு , கீழ்தட்டு மக்களின் உணவு பழக்க வஃஜக்கம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலங்கள் கதையில் சிவசங்கரி அதிரசம் செய்வது எப்படி என்று விலாவாரியாக விவரித்திரிருப்பார். அது மட்டுமல்ல ஆமணக்கு எண்ணெய் ஆட்டும் விதம் கூட சொல்லப்பட்டிருக்கும். அதில் மட்டுமில்லை, பல நாவல்களில் பல ரெசிபிக்கள் எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு கதையை படித்து விட்டுதான் நான் பாலக் பனீர் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன்.

      நீக்கு
  15. பானுமதி சொன்ன மூன்று படங்களும் நன்றாக இருக்கும் தொலைக்காட்சியில் எத்தனை முறை வைத்தாலும் பார்ப்பேன்.
    முதல் இரண்டு படத்தில் பாடல்கள், கதை, நடிப்பு நன்றாக இருக்கும். இரண்டாவது படத்தில் வடிவேல் நடிப்பு நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. விளக்கம் ஒவ்வொருவரும் அவர் அவர் பார்வையில் தான் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  17. போஸ்ட்டில எங்கின கையை வைப்பது எங்கின காலை வைப்பது என்றே புரியவில்லை:).. படிக்க நல்லாயிருக்கு...
    இன்று ஶ்ரீராமில் விரல்கூடத் தெரியல்லியே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! கவி அமுதம்! வாங்க, வாங்க! நீங்க புதன் பதிவுப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு!

      நீக்கு
  18. //அவ்வ்வ்வவ் .......
    யாருக்கோ போகவேண்டிய அடிகள் எல்லாவற்றையும் வெஸ்ட் பெங்கால் சி பி ஐ ஆபீசர் போல நான் வாங்கிகிட்டேன்!//

    ஹாஹாஹா! அப்படியெல்லாம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நீங்க அடித்தது யாரை?

      நீக்கு
    2. பானுமதி வெங்கடேஸ்வரன் பதில் சொல்ல வேண்டிய கௌதமன் ஐயாவையே மடக்கிக் கேள்வி கேட்க வச்சுட்டாங்களே! ::))

      நீக்கு
  19. யாரையும் போட்டுத் தாக்கினமாதிரி இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடம்பெல்லாம் பிளாஸ்திரியோடு ஒரு ஃபோட்டோ போட்டால்தான் நம்புவார் போலிருக்கு!

      நீக்கு
  20. //இதுவரை தமிழ்த் திரையுலகில் வெளிவந்துள்ளது, மூன்று உத்தமபுத்திரன் படம், இரண்டு நாடோடி மன்னன்; ஒரே ஒரு 23!//
    ஒருமுறை சிலுக்கு ஸ்மிதா," ஒரு சிவாஜி, ஒரு சாவித்திரி, அது போல ஒரு சிலுக்குத்தான்" என்றார். அதைப் போல, ஒரு நாடோடி மன்னன், ஒரு உத்தமபுத்திரன்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உத்தமபுத்திரன் 1: பி யூ சின்னப்பா. உ பு 2: சிவாஜி. உ பு 3: தனுஷ் நடித்த வேறு கதை படம். நாடோடி மன்னன் 1 எம் ஜி ஆர். நா ம 2: சரத்குமார், மீனா (வேறு கதை.)

      நீக்கு
  21. / என்னைக் கேட்கமாட்டார்களா//

    அவ்வ்வ்வ் :) இந்த திஸ் மீ தட் மீ மாதிரி இந்த என்னை யாரை ??

    பதிலளிநீக்கு
  22. //..சாண்டில்யன் சிருங்காரம் போல் அளவுக்கு அதிகமானால் சலிப்புதான்..//

    சாண்டில்யன் ஏதோ கொஞ்சம் கிளுகிளுக்கவைக்க முயற்சி செய்ததே உங்களுக்கு அளவுக்கு அதிகமானதாகத் தோன்றியதா? Alberto Moravia, Henry Miller, Erica Jong (கடைசியானவர் அமெரிக்க பெண் எழுத்தாளர்) ஆகியோரது புதினங்களைப் படித்தால் உங்களுக்கு எப்படியெல்லாம் தோன்றுமோ?

    பதிலளிநீக்கு
  23. //" இந்தக் கேள்வியை யாராவது என்னைக் கேட்கமாட்டார்களா ..... என்று நீங்கள் ஏங்குகின்ற கேள்வி, எந்தக் கேள்வி?"//
    எப்படி பானு ? எப்படி?

    பதிலளிநீக்கு
  24. 1,இது உனக்கு தேவையா ?


    இந்த கேள்வியை என்னை நோக்கி பாயும் ( கேள்வி ) தோட்டாவாக்குகின்றேன் :)

    பதிலளிநீக்கு
  25. G+ மற்றும் தனபாலன் பதில்
    உண்மை நிலை
    கேள்வி - பதில் அருமை
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!