திங்கள், 11 பிப்ரவரி, 2019

திங்கக்கிழமை : உள்ளி தீயல் - கீதா ரெங்கன் ரெஸிப்பி


தீ…………யல்…………..உள்ளி தீ………..யல்


ஹாய் ஹாய் வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம்! ரொம்ப நாளாச்சு எபி கிச்சனுக்கு வந்து. இம்முறை எபி கிச்சன் ரொம்பவே அமைதிதான்!! யாரையும் உள்ள இழுக்காம, கும்மி அடிக்காம ரெசிப்பிக்குப் போறேன். ஆனால் எனக்கு இது போர். ஜாலியாக நம் நட்புகள் என்று சேர்ந்து கும்மி அடித்து சமைப்பதுதான் பிடிக்கும்.

எங்க ஊர்ப்பக்கத்துல தீயல் ரொம்ப ஃபேமஸாக்கும். பொதுவா தீயல்னு சொல்றதுல, காய்கள் குறிப்பா முருங்கைக்காய், சேனை, கத்தரி, பாகற்காய், தனியாகவோ இல்லை காய்கறி வத்தல் போட்டோ, அல்லது காய்களுடன் கொண்டைக் கடலை போட்டோ, உள்ளியும், முருங்கையும் போட்டோ அல்லது காய்கள் கலந்து போட்டுன்னும் செய்யலாம். பாகற்காய் தீயல் என்றால் அதனுடன் வேறு காய்கள் சேர்ப்பதில்லை. (அமைதிச்சாரல் தளத்துல கூட சாந்தி மாரியப்பன் தீயல் பத்தி சொல்லிருக்காங்க. அவங்க எங்க ஊர் அதான் நாஞ்சில் நாட்டு தீயல் பத்தி சொல்லிருக்காங்க. அங்கு நானும் கமெண்ட் போட்டுருக்கேன் நினைவு இருக்கு.)

உள்ளி மட்டும் போட்டா உள்ளி தீயல். கேரளத்துல உள்ளித் தீயல் ஃபேமஸ். உள்ளினா சின்ன வெங்காயம். பூண்டை வெளுத்த உள்ளின்னு சொல்லுவாங்க. எங்க ஊர் பக்கத்து தீயல்ல பூண்டு சேர்ப்பாங்க. கேரளத்து உள்ளி தீயல்ல பூண்டு சேர்க்கறதில்லை. சின்ன வெங்காயம் மட்டுமே. 

செய்முறைக்குள் போவதற்கு முன் துருவிய தேங்காய் – 1 கப் நல்ல ஃபுல் கப்பாக இருக்கட்டும் அதில் ¾ கப் தேங்காயை வறுப்பதற்கு வைத்துவிட்டு, கால் கப் தேங்காயை அரைத்து, முதல் இரண்டு பால் திக்னெஸ்கு ¼ கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.


 உள்ளி தீயல் - செய்முறை : – தேவையானவை

சின்ன வெங்காயம் – ஒரு கப்


புளி – சின்ன எலுமிச்சை அளவு,

வெந்தயம் – தாளிக்க - ¼ டீ ஸ்பூன்,

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

தேங்காய்ப்பால் – ¼ கப்

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்கத் தேவையானவை

கொத்தமல்லி விரை – 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - ¾ டீ ஸ்பூன்

மிளகாய் வத்தல் – 6 - 8 உங்கள் காரத்திற்கு ஏற்ப.

கொஞ்சம் கறிவேப்பிலை + வதக்கிய சின்ன வெங்காயம் 3,4

இதோ வறுப்பதற்கு, தாளிப்பதற்குத் தேவையானவை தட்டில் + புளி


துருவிய தேங்காய் – ¾ கப்


தாளிக்க

கடுகு – 1 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை

வதக்க, வறுக்க, தாளிக்க எல்லாவற்றிற்கும் தேங்காய் எண்ணை.
புளியை தண்ணீரில் ஊறப்போட்டு அதில் தேவையான உப்பும் போட்டுக் கொள்ளுங்கள்.


சின்ன வெங்காயத்தை நான் முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு வைத்துவிடுவது வழக்கம். அப்படிப் போட்டு விட்டு மறுநாள் காலையில் அதை உரித்துக் கொள்வது வழக்கம். அப்படி இங்கு உரித்த ஒரு கப் வெங்காயத்தை கட் செய்து கொள்ளவும். எப்போதுமே நான் சின்ன வெங்காயத்தை அப்படியே பயன்படுத்துவது இல்லை. கட் செய்து பயன்படுத்துவது வழக்கம்/ நல்ல மணம் கிடைக்கும் என்பதால்.


மண்சட்டியில் அல்லது வாணலியில் – நான் மண் சட்டியில் செய்வது வழக்கம். இந்த முறை வாணலியில் வறுப்பது எல்லாம் செய்து, குழம்பை மண் சட்டியில் செய்தேன். ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை விட்டு அதில் வறுப்பதற்கான மிளகாய் வற்றலை கொஞ்சம் சிவப்பாக வறுத்துக் கொண்டு, கொத்தமல்லிவிரையை மணம் வரும் வரை வறுத்து, இரண்டையும் எடுத்த பிறகு ¾ ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு வறுக்கவும். வெந்தயம் வறுக்கும் போது அடுப்பு சிம்மில்தான் இருக்கணும். நாமும் கவனமாக இருக்கனும். அதிகம் சிவந்திடக் கூடாது. சரியாக சிவந்து நல்ல மணம் வரும் போது எடுத்து விடவும்.


அதன் இன் ½ ஸ்பூன் எண்ணை விட்டு அதில் ¾ கப் தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை படம் எடுக்கவில்லை.


அதன் பின் சட்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு அதில் தாளிக்க இருக்கும் ¼ ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு அது சிவந்து மணம் வறும் போது உரித்து கட் செய்து வைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டு சிம்மில் வைத்து நன்றாக வதக்கனும். அதில் சில கறிவேப்பிலையும் போட்டுக்கலாம். நான் போடுவதுண்டு.


வெங்காயம் வதங்கியதும் அதில் 3, 4 வெங்காயத்தை எடுத்து அரைப்பதோடு சேர்த்துக் கொள்ளலாம். 

ஊற வைத்த புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.


அது கொதிக்கும் சமயத்தில் அரைப்பதற்காக உள்ள வறுத்த தேங்காய், மி வற்றல், வெந்தயம், கொத்தமல்லிவிரை + கொஞ்சம் கறிவேப்பிலை + 4 வதங்கிய வெங்காயம் எல்லாம் சேர்த்து முதலில் சுற்றி அரைத்துவிட்டு அதன் பின் கொஞ்சமே தண்ணீர் வீட்டு அரைக்கவும். படத்தில் உள்ளது போல.


அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் போட்டு நன்றாகக் கலக்கி மிக்ஸி கழுவிய நீரையும் அதில் விட்டுவிடலாம். சிம்மில் கொதிக்க வைக்கனும். கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை விட்டால் வாசனை நன்றாக இருக்கும். 


அவை எல்லாம் கொதித்து எண்ணையும் கொஞ்சம் தெரிந்து நல்ல வாசம் வரும்போது, ¼ கப் தேங்காய்ப்பாலை அதில் சேர்க்கவும். கலக்கி ஒரு கொதி வந்ததும் ஆஃப் செய்துவிடலாம்.

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் போடவும். வறுத்த தேங்காயில் எடுத்து வைத்திருக்கும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காயையும் குழம்பில் போடனும். அவ்வளவுதான். குழம்பு தண்ணியாக இல்லாமல் க்ரேவி போன்று இருக்கனும். உள்ளி தீயல் ரெடி. வாசனை ஊரைக் கூட்டும்.


தீயலுக்குத் தொட்டுக் கொள்ள செய்த பேபி உ கி ரோஸ்ட். கொஞ்சம் பெரியவர்களும் இருக்கிறார்கள். முழுவதும் ரோஸ்ட் ஆகும் முன் எடுத்த படம். பின் குறிப்பு : தீயல் ரெசிப்பில பலரும் ஜீரகம், மிளகு சேர்க்கறாங்க. ஆனால் எங்கள் வீட்டில் என் அம்மா சேர்த்து செஞ்சதில்லை. இந்த டேஸ்ட் நல்லாருந்ததுனால நான் இதையே செய்யறது வழக்கம்.

அரைத்து விடுவதற்குப் பதில் கொத்தமல்லி பொடி, மிளகாய்ப் பொடி, வெந்தயப்பொடி ன்னு போட்டு செய்யறாங்க. நான் அப்படிச் செய்வதில்லை. இப்படிச் செய்வதில் ஃப்ளேவர் நன்றாக இருக்கும்.

இந்தக் குழம்பு செஞ்சதும் சாப்பிடுவதை விட கொஞ்சம் ஊறியதும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். வெந்தயத்தின் ஃப்ளேவர் இறங்கி டேஸ்ட் நன்றாக இருக்கும்.

முக்கியமான விஷயம் குழம்பு நன்றாகக் கொதித்து க்ரேவி பக்குவத்தில் இருக்கனும். தண்ணியாக இருக்கக் கூடாது. நன்றாகக் கொதித்து க்ரேவியாக இருந்தால் மறுநாள் வரை கெட்டுப் போகாது. எங்கள் வீட்டில் ஒரு நாள் பயணத்திற்குக் கூட எடுத்துச் செல்வதுண்டு.

என் மகனுக்கு உரித்த சி வெ வை கொஞ்சம் வெயிலில் காய வைத்து கொஞ்சம் எண்ணையில் நன்றாக ஃப்ரை செய்து தனியாக வைத்துவிட்டு….. புளியையும் பொரித்து அரைப்பவற்றுடன் சேர்த்து ட்ரையாக உப்புடன் பொடித்து பொடித்ததையும் ஃப்ரைட் சி வெ யையும் கலந்து……. தாளித்தும் கறிவேப்பிலையும் (ட்ரை) நிறைய போட்டு கொடுத்துவிட்டிருந்தேன். அவன் அங்கு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு பல நாட்கள் ஏதேனும் காய் அல்லது சி வெ வதக்கிப் போட்டு கொதிக்கவிட்டு இந்தப் பொடியையும் போட்டுக் கொதிக்க விட்டுச் சாப்பிட்டு நன்றாக இருக்கு என்றான்.

66 கருத்துகள்:

 1. என்ன இன்னிக்கு எல்லோருமே பிசியா? யாரையும் காணலை. வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா... கீதா ரெங்கன் பயணத்தில் இருப்பதால் காணோம்! மெல்ல வருவார்.

   நீக்கு
  2. ஸ்ரீராம் முக்கியமான பணிகளில் இது மறந்தே போயிடுச்சு....இப்ப வெளியில் வெயிட்டிங் நேரத்தில் திங்க என்னனு பார்த்தால் தீயல்.....மதியம் மேல் மைத்துனன் கணினி பிரீ உச்ச இருந்தா அது வழி வரேன்...இல்லைனா மொபைல் வழி...வரேன்.... பதிவில் ஒரு கருத்து சொல்ல விட்டுப் போச்சு....இங்கு பதில் கருத்தில் சொல்லலாம்னு விட்டுட்டேன்...

   தேங்காய்ப்பால் வேண்டும் என்று இல்லை...அதற்கான பூவையும் வருக்கும் தேங்காய் பூவுடன் சேர்த்து வறுத்து அரைத்து விட்டு விடலாம்...தே பால் வேண்டும் என்பதில்லை...ஆனால் நான் சும்மா இப்படி செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்ததால்...பதிவில் சொன்னேன்....

   கீதா

   நீக்கு
 2. இது சாப்பிட்டிருக்கேன் நண்பர்கள் வீட்டில்! செய்து பார்த்தது இல்லை. கொஞ்சம் அளவைக்குறைத்துச் செய்து பார்க்கணும். இந்த அளவு எங்களுக்கு அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா இது 4 பேர் தாராளமாக ஒரு நாள் டிபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்...மறுநாளும் நன்றாக இருக்கும்...இருவருக்கு கூடுதல் தான்

   அப்புறம் வரேன்...வீட்டில் வேலைகள் ....மொபைல் வழி என்பதால் சற்று சிரமமாக இருக்கு..ரொம்ப.மெதுவாதான் டைப் பண்ண முடியுது... கொடுக்க முடியுது....

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 3. அவங்க நாளைக்கு மாலை தான் பெண்களூர் வரதாச் சொன்னாங்க! அதனால் நாளை இரவு அல்லது புதன் காலை வருவாங்கனு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா...இது மறந்து போச்சு... பதில் லேட்டா கொடுத்தா சரியாகாதே...அதான் மொபைல் வழி..கொடுக்கலாம்னு...வெளிப்பணிகள் ஓவர்...இப்ப வீட்டு. வேலை...மொபைல் சார்ஜ்ஜிங்....சோ மாலை வரேன்....

   கீதா

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தீயல் பிரமாதமாக இருக்கிறது.
  வேலை நிறைய வாங்கும் போல.
  அளவு கால் பங்கு போதும் ,நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிடலாம்.

  அருமையான விளக்கங்களும். சூப்பர் ப்ரசண்டேஷன்.
  வாழ்த்துகள் கீதா மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வல்லிம்மா.....இது திக் கிரேவி போல என்பதால் ஒரு வேளைக்கு என்றால் இதில் கால் பங்கு போதும்...

   வேலை இல்லை எளிதுதான்...நான் எல்லா ஸ்டெப்ஸ் உம் எடுத்து போட்டிருப்பதால் அப்படி தெரிகிறது...ஈஸி தான்..வெங்காயம் உரித்து, தேங்காய் ரெடி செய்து வைத்துக்கொண்டு விட்டால் எளிது...

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
 5. இதுவரை சாப்பிட்டதில்லை. இனிமே செஞ்சு பார்க்கணும். கொஞ்சம் ஸ்டெப்ஸ் ஜாஸ்தியா இருக்கோ? வெங்காயம் போட்ட வத்தக்குழம்பு, வறுத்தரைச்ச குழம்பு கலவையா இருக்கு.

  மனைவிட்ட அனுமதி வாங்கி செய்து பார்க்கிறேன். வித்தியாச ரெசிப்பிக்கு பாராட்டுகள் கீதா ரங்கன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதுவரை சாப்பிட்டதில்லை. இனிமே செஞ்சு பார்க்கணும். //

   மீஈஈஇ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:) இதுக்கு மேலயும் என்ன்னால பொறுக்க முடியாது ஜாமீஈஈஈஈஈஈஈ:) எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ:).

   நீக்கு
  2. நெல்லை செய்வது எளிதுதான்...தே பால் இல்லாமலும் செய்யலாம்...மேலே சொல்லிருக்கேன் பாருங்க....சுவை ரொம்ப நல்லாருக்கும் நெல்லை...அதுவும் கொஞ்சம் ஊறியதும் சாப்பிட்டால் செம டேஸ்ட்டா இருக்கும்..முடிஞ்சா செஞ்சு பாருங்க...இல்ல நம்ம வீட்டுக்கு வாங்க

   மிக்க நன்றி நெல்லை..

   கீதா

   நீக்கு
  3. கவி அமுதம் எதுக்கு ஃபெயிண்ட் ஆகோனும்...சரி சரி சுட்டாரின தண்ணி தெளிச்சாச்.. எழுந்து..வாங்கோ...

   கீதா

   நீக்கு
 6. படங்களும் செய்முறை விளக்கமும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரை...நீங்களும் செஞ்சுருப்பீங்களே இது....

   கீதா

   நீக்கு
 7. பதில்கள்
  1. ஹா ஹா ஹா துரை அண்ணன் என் மொபைல் மூலம் வரும்போது திரை அண்ணனாகி இப்போ துறை அண்ணனாகிட்டார்ர்ர்ர் அவ்வ்வ்வ்:).

   நீக்கு
  2. ஹையோ அதிரா அதே அதே...ரொம்ப கஷ்டமா இருக்குது...மொபைலில் அடிக்க

   கீதா

   நீக்கு
 8. இந்த தீயல் என்பதை எ.பி.யில் வேறு யாரோ போட்டிருந்தார்களா? அல்லது வேறு எதிலாவது படித்து விட்டு செய்தேனா என்று தெரியவில்லை, முன்பு ஒரு முறை செய்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எபி ல வந்துருக்கான்னு ஸ்ரீராம் தான் சொல்லணும்...எனக்குத் தெரிந்து வரலை...சாந்தி மாரியப்பன் போட்டுருந்தங்க....

   ஆமா பானுஅக்கா நல்லாருக்கும்..

   கீதா

   நீக்கு
 9. வெங்காயக் குழம்பு அருமையாக செய்வேன்.. வற்ரல் குழம்புக்கான மசாலாவுடன் சிறிது புளி.. தேங்காய்ப்பூ வதக்கி அரைத்து வதக்கிய வெங்காயம் பூண்டுடன் சேர்த்து தளதள என்று கொதிக்க வைத்து இறக்கி விடுவேன்... நல்லெண்ணெய் தான் முக்கியம்....

  சமையல் குறிப்பு அருமை...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லாது..செல்லாது...(நாட்டாமை). சாப்பிட்டுப் பார்த்தாத்தான் நம்புவேன், ஏத்துக்குவேன்.

   நீக்கு
  2. ஆஹா..அண்ணா கொண்டு வாங்க எபி கிச்சன்கு......அண்ணா நீங்க சொல்லிருக்கும் முறையில் செஞ்சுருக்கேன்...ஆனா உங்க வற்றல் குழம்பு மசாலா தான் என்னனு தெரியணும்...சோ ரெசிப்பி வேணும்..சொல்லிப்புட்டேன்

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா

   நீக்கு
 10. கடைசியில் சொல்லியிருக்கும் தீயல் ட்ரை பொடி நல்ல விஷயம்.

  பதிலளிநீக்கு
 11. //சின்ன வெங்காயத்தை நான் முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு வைத்துவிடுவது வழக்கம்.// இப்படி செய்தால் அதன் காரத்தன்மை குறைந்து விடாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை நானும் நினைத்தேன் பானுமதி அக்கா. வெங்காயத்தை உரித்தோ வெட்டியோ வைத்துப் பாவித்தால் அதிலுள்ள மருத்துவக் குணங்கள் போய் விடுமாம். கஸ்டம்தான் இருப்பினும் உடனுக்குடன் செய்து போட வேண்டும்.

   ஆனா இப்போஒ உரித்து ஃபிரீசரில் வைத்து விற்கிறார்களே.. நாம் அதை வாங்குவதே இல்லை.

   நீக்கு
  2. தண்ணீரில் போடுவது உரிக்கும் போது கண்ணில் தண்ணீர் வராமல் இருக்க....ம்ஏற்றபடி...கேட் செய்து அல்ல பானுக்கா அண்ட் அதிரா....காரம் போவதில்லை... கொஞ்சம் உரிப்பது என்றால் அப்போதுதான்...கொஞ்சம் நிறைய என்றால் தண்ணீரில் போட்டு... அதுவும் நான் காலை 6.30...க்குள் சமையல் முடிக்கணும் என்பதால்....4 மணிக்கு தொடங்கிடுவேன்...அதான்...நிதானமாக சமையல் என்றால் ஒரு மணி நேரம் தண்ணீரில் போடலாம்...நான் ராத்திரி போட்டதே கூட கண்ணில் தண்ணீர் கொட்டியது உரிக்கும் போது....சோ காரம் குறையல..குறையாது...

   கீதா

   நீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. எங்கள் வீட்டிலும் செய்வோம் தீயல், மிளகு, சீரகம் கொஞ்சம் போடுவோம்.
  என் அம்மாவீட்டில் தேங்காய் வறுத்து அரைத்து போடுவோம்.
  மாமியார் வீட்டில் தேங்காயை கீறி சுட்டு அரைத்து போடுவார்கள்.
  முருங்கை பிஞ்சும் போட்டு செய்யலாம்.

  செய்முறை படங்களுடன் அருமை.
  ஒரு படம் இரண்டு முறை வந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா என் பிறந்த வீட்டிலும் தேங்காயை கீறி தணலில் சுடுவாங்க... சுட்டும் அரைப்பங்க..நல்லாருக்கும்ம்....முருங்கை பிஞ்சில் செய்யலாம்.ஆமாக்கா....

   மிக்க நன்றி...

   கீதா

   நீக்கு
 14. ஆஆஆஆஆ இன்று கீதா சமையலோ ஆவ்வ்வ் உள்ளித்தீயல் என்றதும், எங்கட உள்ளியாக்கும் என நினைச்சுட்டேன்:) இது கேரளா உள்ளி...:).

  //இம்முறை எபி கிச்சன் ரொம்பவே அமைதிதான்!///
  ஹா ஹா ஹா அமைதியாக இருக்கும்போதுதான் ரொம்ம்ம்ம்ம்பப் பயமா இருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலங்கை ரெசிப்பிபொதுவாக மீன் தீயல் அல்லோ . ....இலங்கை ஊர் ரெசிப்பியும் செய்வதுண்டு....படம் எடுத்தால் போடறேன்...

   அடுத்த எபி கிச்சன் கலக்கிடுவோமா அதிரா...டன்...

   கீதா

   நீக்கு
 15. மிக அழகான ஒரு டிஷ் செய்து காட்டியிருக்கிறீங்க கீதா, கொஞ்சம் மினக்கெட்டுச் செய்ய வேண்டும் போல, ஆனா என்னமோ தெரியவில்லை, இந்த தேங்காய் அரைச்சுப் போட்டுச் செய்யும் பல கறிகள் எனகுச் சரி வருவதில்லை, பத்தியக்கறி/சரக்குக்கறி மட்டுமே தேங்காய் அரைத்து எப்பவாவது செய்வேன்,

  மற்றும்படி தேங்காய் அரைத்துச் செய்தால் களியாகி விடுகிறது எனக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா...களி எப்படி ஆகும்?...தேங்காய் வறுத்து அரைப்பது தானே...இது கிரேவி போலத்தான் இருக்கும்...

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 16. இது கஸ்டமான கறியக இருக்காது என்றே நம்புகிறேன், ஆனா உங்கட ஸ்ரெப்ஸ் பார்க்கப் பயம்ம்ம்மா இருக்கு ஹா ஹா ஹா..

  //தீயலுக்குத் தொட்டுக் கொள்ள செய்த பேபி உ கி ரோஸ்ட்//

  பச்சையாகவே ஸ்ரே ஃபிறை பண்ணுவீங்களோ? இல்லை பாதிவேக வைத்தபின் இப்படிச் செய்வீங்களோ கீதா?.. நீங்க நாளைக்குத்தான் வருவீங்க என நினைக்கிறேன், பறவாயில்லை மெதுவா வாங்கோ.

  எபியில் பெரும்பாலும் கீதாவின் கைவண்ணம் வெளிவரும்போது, கீதா படுபிசியாக அல்லது நெட் இல்லாமல் இருப்பா என்பது எழுதப்படாத விதி போலும் ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஷ்டம் இல்லை அதிரா ஈஸி ரெசிப்பித்தான்...செஞ்சு பாருங்கோ...இலங்கை டிஷஸ் பெரிய வெங்காயம் விட சிறியது தானே அதிகம் யூசெஜ்...

   பேபி உ கி ரோஸ்ட் என்பதால் தோல் உரிக்க வேண்டி கொஞ்சம் பாயில் செய்தென்....கொஞ்சம் பெரிது (ரொம்ப பெரிதல்ல..பேபி விட வளர்ந்த உ கி..ஹிஹிஹி) என்றால் கத்தியால் தோலை ஸ்க்ரப் செய்துட்டு அப்படியே ரோஸ்ட்...கொஞ்சம் மூடி வைத்து..அப்புறம் ஒப்பனாக .....அவித்து ரோஸ்ட் ஆகும் ..அதிரா..டைரெக்ட்டாவும் செய்யலாம்..தீயாமல் கண் அதிலே இருக்கணும்...

   கீதா

   நீக்கு
  2. எபி ல வரப்ப// ஹாஹாஹா..ஆமாம் அதிரா சிலப்ப ஏதாவது எனக்கு தடங்கல் வரும்...இந்தமுறை எதிர்பாராமல்... வந்திருச்சு....

   கீதா

   நீக்கு
 17. ///அவன் அங்கு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு பல நாட்கள் ஏதேனும் காய் அல்லது சி வெ வதக்கிப் போட்டு கொதிக்கவிட்டு இந்தப் பொடியையும் போட்டுக் கொதிக்க விட்டுச் சாப்பிட்டு நன்றாக இருக்கு என்றான்.//

  ஹா ஹா ஹா நீங்க படு கில்லாடிதான் கீதா, உண்மைதான் இப்படி சிலதை செய்து கொடுத்தால் டக்குப் பக்கெனச் செய்ய ஈசியாக இருக்கும். இதேபோல, கருணைக்கிழங்கு, வாழைக்காய் இவற்றையும் ரோஸ்ட் பண்ணி கொடுத்து விட்டால், அங்கு ஃபிரீசரில் வைத்துப்போட்டு, தேவைக்கு டக்கெனக் குழம்பைக் கூட்டிப்போட்டு இதை எடுத்துக் கொட்டினால் சூப்பர் பிரட்டல் கறி கிடைக்கும். பழப்புளி தேவையில்லை முடிவில் தேசிக்காய் சேர்த்தால் சூப்பராக இருக்கும். முன்பு எங்களுக்கு இப்படிக் கனடாவில் இருந்து வரும், இப்போதான் இங்கு கிடைக்குது காய்கள் எல்லாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா....ஈஸியா இருக்கும்...அப்படியும் செய்து கொடுத்ததுண்டு...உ கி, சேப் கி, சே கி...வெண்டை, எல்லாம்..ஆனால் நம் காய்கள் கிடைக்கும் கடை கொஞ்சம் தூரத்தில்...இப்போது அவனே சைக்கிளில். சென்று வர முடிகிறது...வாங்கி கொள்வதால் கொடுத்து விடலை...எவளவு வெயிட் கொன்டு போக முடியும்....இம்முறை ஸ்டூடன்ட் விசா என்பதால் கொஞ்சம் கூடுதல் கொண்டு போக முடிந்தது...நிறைய ரெடிமேட் பொடிகள் தான் செஞ்சு கொடுத்தேன்....இட்லி, தோசை செய்ய அடை...பேசரேட். என்று...பல...ரசம் கூட...அவனே சமைக்கவும் செய்வான்...வித விதமாக சலாட், செய்வான்...மேனேஜ் செய்து கொள்வான்..பிரச்சினை இல்லைதான்..

   கீதா

   நீக்கு
 18. அஆவ் மவுத் வாட்டரிங் தீயல் ..எங்கம்மா செய்வாங்க இப்படித்தான்..நானும் செஞ்சிருக்கேன் ஆனா வீட்டில் மகளுக்கு முழு இல்லைன்னா வெட்டின்ன வெங்காயத்தை பார்த்தாலே பிடிக்காது .மோஸ்ட்லீ பாத் சித்திரான்னம் ரசம் சாம்பாரும் வெங்காயமில்லாம தான் செய்றது .அரைச்சு செஞ்சா சாப்பிடுவா இதில் முடியாதே .
  எனக்கும் யாரவது செஞ்சி கொடுத்தா நல்லா இருக்கும் :)
  உங்க ரெசிப்பி மணம் லண்டன் வரைக்கும் மணக்குது .என்னக்காவது செஞ்சி பார்க்கணும் இந்த தீயலை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///உங்க ரெசிப்பி மணம் லண்டன் வரைக்கும் மணக்குது//
   அல்லோ மிஸ்டர், இந்தக் குளிருக்கு ஃபிரீசாகமல் மணம் வருதோ?:) அதைக் கொஞ்சம் ஸ்கொட்லாண்டுக்கு அனுப்பி வைக்க முடியுமோ?:)

   நீக்கு
  2. ரெண்டு பேரும் ஜஸ்ட் ஒரு விசிட் அடிங்கோ எங்க வீட்டுக்கு...பானுக்கா, அனு, கமலாக்கா, கௌ அண்ணா...எல்லாரும்.பங்களூர்ல..சோ...இன்னொருதருக்கும் அல்வா கொடுத்துடலாம்....அதான் அவரையும்..வரவைச்சு... பார்த்திடலாம் நீங்க...ரகசியமா....பார்துட்டு சாப்டுட்டு விடு ஜுட்...எப்பூடி ஐடியா....

   ஜோக்ஸ் அபார்ட்....

   ஏஞ்சல் ஒரு ஐடியா...சி வெ வை நன்றாக வதக்கிட்டு...அரைப்தோடு சேர்த்து அரைச்சுடுங்க..அப்புறம் அதே செய் முறை தானே. வேணா காய் முருங்கை புளிலே வேகா வைச்சுக்கோங்க...மத்த செய்முறை அதேதான்..செஞ்சு பாருங்க...கொஞ்சமா..ஒரு பத்து சி வெ போட்டு...வதக்கி அரைத்து...try பண்ணி பாருங்க...
   நானும் அரைத்து செஞ்சு பார்த்து சொல்லறேன்...

   கீதா

   நீக்கு
  3. மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு..

   நீக்கு
  4. ..பானுக்கா, அனு, கமலாக்கா, கௌ அண்ணா...எல்லாரும்.பங்களூர்ல..சோ...இன்னொருதருக்கும் அல்வா கொடுத்துடலாம்....அதான் அவரையும்..வரவைச்சு...   அட நான் ரெடி க்கா ..எப்போ ன்னு சொல்லுங்க

   நீக்கு
  5. பானுக்கா சொல்லிட்டே இருக்காங்க...பார்ப்போம்..முயற்சி எடுப்போம்...

   நான் தேம்ஸ் காரங்களை வம்புக்கு இழுத்தேன்...அவங்க எங்க வரப்ப போறாங்க...

   மிக்க நன்றி அனு..

   கீதா

   நீக்கு
 19. நாஞ்சில் நாட்டு சமையலா?!

  செஞ்சு பார்த்துடுவோம். இப்படி வறுத்து அரைச்சு செஞ்சா வாசமும் ருசியுமா செமயா இருக்கும். ஆனா, அவசர யுகத்தில் இது முடியாதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. ராஜி...செஞ்சு பாருங்க...கண்டிப்பா பிடிக்கும்....ஈசிதான்...ராஜி...மிக்க நன்றி...

   கீதா

   நீக்கு
 20. இது எனக்கு புதுசு தான் கீதாக்கா..

  நாங்க பொரிச்ச குழம்பு ன்னு சொல்லுவோம் ...ஆனா அதில் தேங்காய் அப்படியே அரைத்து தான் சேர்ப்போம் ..இப்படி வதக்கி எல்லாம் அரைத்தது இல்ல

  ரொம்ப அருமையா இருக்கு கா இந்த ரெசிப்பி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அனு. இப்படி செஞ்சு பசுருங்க செமையா இருக்கும்....

   கீதா

   நீக்கு
 21. உள்ளித்தீயல் குறிப்பு பிரமாதம்! செய்து பார்க்கணும். பூண்டும் சேர்ப்பதாய் சொன்னீர்களே? வெங்காயம் வதக்கும்போது அதையும் சேர்த்து வதக்கணுமா கீதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மனோ அக்கா...அக்கா உங்க ரெசிப்பிஸ்... நீங்க இண்டஸ் லேடீஸ் ல நிறைய சொல்லிருக்கீங்களே...

   பூண்டு சேர்ப்பதில்லை அக்கா இதுக்கு....அது ஒரு சிலர் சேர்த்து செய்யறங்க...நார்மலா கிடையாது....டேஸ்ட் மாறிடும்...

   கீதா

   நீக்கு
  2. மனோ அக்கா இதில் சின்ன வெங்காயம் தான் டேஸ்ட்....

   கீதா

   நீக்கு
 22. ஆஹா.....இன்னிக்கி உள்ளி தீயலா? ஒரே ஒரு முறை சுவைத்தது உண்டு. எனக்கும் பிடிக்கும். இங்கே செய்யலாம் என்றால் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை என் ஏரியாவில்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி..தமிழகம் வரும்போது செஞ்சு பார்த்திடுங்க....

   கீதா

   நீக்கு
 23. தேங்கய் இல்லாவிட்டால் வெங்காய புளிக்குழம்பு என்றுசொல்லலாமா

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சகோதரி

  தங்களது"திங்க"பதிவான உள்ளித்தீயலுக்கு தாய் பாசம் மிகும் தாங்கள் எழுதிய "அம்மா காத்திருக்கிறாள்" என்ற கதையை படித்த பின் இரண்டுக்கும் சேர்த்து வந்து கருத்து தருகிறேன். (நேற்று வர இயலவில்லை. மன்னிக்கவும்.) இரண்டுமே மிகவும் அற்புதம். "வெங்காய பச்சடி" என்று நான் இதேபோல்தான் ஒரு குழம்பு செய்வேன். (வறுத்தரைத்து) ஆனால் தேங்காயும், தேங்காய் பாலும் சேர்த்ததில்லை. தங்கள் செய்முறை வித்தியாசமாக மிகவும் நன்றாக இருந்தது. செய்முறை, படங்கள் எல்லாமும் மிக அழகாக கண்ணை கவரும்படி இருந்தது. "உள்ளித்தீயல்" இந்தப் பேரும் மிகவும் நன்றாக உள்ளது. இந்த முறைப்படி நானும் ஒருதடவை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 25. தீயல் என்றால் என்று தெரிந்துகொண்டேன்.கேரளா சமையல். பார்வைக்கு நம்மூர் புளிக்குழம்பு போல காணப்படுகிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!