எனக்கு சமையலுக்கு காய் கட் பண்ணணும்னா மிகவும் பிடித்த, சுலபமான வேலை. காய்கறிகள் வாங்குவதும் எனக்குப் பிடித்த வேலை. ஆனா, கீரை ஆய்வது, வாழைப்பூ அரிவது இரண்டும் எனக்குப் பிடிக்காத வேலை. என் மனைவி, வாரத்துக்கு ஒரு முறையாவது கீரை சமையல்ல சேர்த்துக்கணும் என்று சொல்வா. அதனால நான் ப்ராம்ப்டா, வாரம் ஒரு முறை கீரை வாங்கி வந்துவிடுவேன்.
பஹ்ரைன்ல இருந்ததைவிட, இங்கு புத்தம் புதிய வித விதமான கீரைவகைகள் கிடைக்கின்றன. நான் பெரும்பாலும் அரைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளிக் கீரைதான் வாங்குவேன். அதனை நன்கு ஆய்ந்து தருவது மனைவியோட வேலை.
நான் ஒரு முறை பஹ்ரைனில் கறுப்பு திராட்சை வாங்கினேன். அதுல ஒரு நத்தை இருந்தது. அந்தக் கடையில் உள்ளவர் என்னிடம், திராட்சையை நேரடியாக கழுவி சாப்பிடக்கூடாது. அதை சூடான உப்பு நீரில் அரை மணி ஊறப்போடணும். பிறகு நல்ல தண்ணீரில் நன்கு கழுவி, பிறகுதான் சாப்பிடணும். திராட்சை வளரும்போது, அதற்கு நிறைய மருந்து போடுவாங்க என்றார். உங்களுக்குத்தான் தெரியுமே, காலிஃப்ளவர், கோஸ் எல்லாம் அப்படியே பெஸ்டிசைட் தண்ணீரில் முக்கி எடுப்பாங்க என்று.
சரி..இப்போ கீரைக்கூட்டுக்கு வருவோம். இதற்கு நான் உபயோகப்படுத்தியது மணத்தக்காளிக் கீரை.
தேவையானது
ஒரு கீரைக் கட்டு. நன்கு ஆய்ந்து இலைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. இது சுமார் 2 டம்ளருக்கு மேல் இருக்கும்.
குக்கரில் 1/3 டம்ளர் பாசிப்பருப்பை, நன்கு கழுவி, அதில் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
3 ஸ்பூன் தேங்காய்
1 ஸ்பூன் சீரகம்
1-2 சிவப்பு மிளகாய்
இதனை, பச்சையாகவே மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். தேவையான தண்ணீர் விட்டு நன்கு மைய அரைக்கவும்.
முதலில் கீரையை (ஆய்ந்த கீரை) நல்ல தண்ணீரில் அலம்பி, நீரை வடிகட்டிக்கொள்ளுங்க. பிறகு இதனை சிறிது சிறிதாக கட் பண்ணிக்கோங்க.
பாத்திரத்தில் கீரை + உப்பு + கொஞ்சம் பெருங்காயம், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்துக்கொள்ளுங்க.
கீரை ஓரளவு வெந்தபிறகு, அதனுடன் அரைத்துவைத்த பேஸ்ட் சேர்த்துக் கொதிக்கவைங்க.
அதில் வெந்த பாசிப்பருப்பைச் சேர்க்கவும்.
பிறகு கரண்டியால் கிளறி, ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போ, நெய்யில், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் திருவமாறி, கீரையில் சேர்த்துவிட வேண்டியதுதான்.
கீரையைச் சுத்தம் செய்வதுதான் இதில் வேலையே தவிர, கீரைக்கூட்டு செய்வது மிகச் சுலபம்தான்.
எனக்கு சாத்துமது சாதத்திற்கு, கீரை தேங்காய் சீரகக் கூட்டு ரொம்பப் பிடிக்கும். மோர்க்குழம்புக்கு, சாதாரண கீரை மசியலே நல்லா இருக்கும்.
வல்லாரைல இதனை முயற்சித்தீங்கன்னா எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது.
அன்புடன்
நெல்லைத்தமிழன்
இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஅனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் வைச்சுக்கறேன்.
நீக்குநல்வரவும் வணக்கமும் கீதா அக்கா.
நீக்குவணக்கம் எல்லோருக்கும்.
நீக்குகீதா ரங்கன்... குளு குளு பெங்களூரில் இருந்தாலும் சீக்கிரம் எழுந்துண்டு இணையத்துக்கு வந்துடறீங்களே.. அங்க இருக்கும்போது 6 மணிக்கு முன்னால எழுந்துக்கவே கஷ்டப்பட்டேன்.
"பெண்"களூருக்கே இப்படின்னா? ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, தில்லி, ஹிமாசல், காஷ்மீர் இங்கேல்லாம் இருந்தால்? ரஜாயை விட்டு முகத்தை வெளியே எடுக்கவே யோசிக்கணும். :)
நீக்குகீசா மேடம்... நான் எப்போதும் எழுத்துப்பிழையால்தான் 'பெண்களூர்' என்று குறிப்பிடறீங்கன்னு நினைத்தேன் (என் கண்களுக்கு அந்த ஊர் குளு குளுன்னு இருந்தாலும்). அதை ஏன் 'பெண்'களூர்னு சொல்றீங்க?
நீக்குநீங்க சொல்லியிருக்கிற ஒரு இடத்துக்கும் நான் போய் வாசம் செய்ததில்லை (தில்லியில் சில நாட்கள் ஹோட்டலில் தங்கியதைத் தவிர). ரொம்பவும் கொடுத்துவைத்தவர் நீங்கள்.
ஹாஹாஹா, "பெண்"களூர் எனச் சொல்ல ஆரம்பித்த்து வலைப்பக்கம் ஆரம்பிச்ச புதுசிலே. அம்பி என்னும் இளைய இனிய நண்பரைக் கேலி செய்வதற்காகச் சொல்ல ஆரம்பித்தேன். அப்போ அவருக்குக் கல்யாணம் ஆகலை. என் பிள்ளை வயசு! அலுவலகத்திலே பெண்களை சைட் அடிப்பது பற்றி அவர் ஹாஸ்யமாக எழுதுவார். அந்த மாதிரி எழுத இப்போ ஆளே
நீக்குஇல்லை. அடுத்தது அனன்யா அக்கா! இவரும் ஹாஸ்யமாக எழுதுவார். அனன்யா முகநூலில் ஐக்கியம்.அம்பி இப்போல்லாம் எழுதுவதே இல்லை. இப்போவும் நண்பர்கள் தான் என்றாலும் ஜி+இல் மட்டும் வரார். அவரைக் கேலி செய்யச் சொல்ல ஆரம்பித்தது இப்போ அப்படித் தான் எழுதவே வருது. அதே போல் "பையர்" என்பதும் தி.வா.வைக் கேலி செய்ய அவர் என்னைக் கேலி செய்யப் "பையர்"னு குறிப்பிடப் பின்னர் இருவருமே அப்படியே எழுதிக் கொண்டிருந்தோம்/ கொண்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் மாத்திக் கொள்கிறார் அவ்வப்போது!
அனன்யா அக்கான்னதும் வயசானவங்கனு நினைக்காதீங்க. அவங்களும் அம்பியோட வயசை ஒத்தவங்க தான். :) ஆனாலும் நான் அனன்யா அக்கானு தான் கூப்பிடுவேன். அவங்க என்னை மாத்தே என்பார்கள். :))) அது ஒரு கனாக்காலம்.
நீக்குஒரு நாளைக்கு உங்க 100-130 பதிவுகள்ல பலவற்றைப் பார்த்தேன், குறிப்பா பின்னூட்ட அக்கப்போர்களை. இலவசக் கொத்தனார், அம்பி, தி.சா.ரா, வேதா ஷ்யாம், கைப்புள்ள இன்னும் பலர் பதிவுலகிலிருந்தே காணாமப் போயிட்டாங்க போலிருக்கு.
நீக்குஇ.கொ. டெக்ஸாஸில் ஆஸ்டினில் தான் இருக்கார்னு நினைக்கிறேன். ஆனால் டெக்ஸாஸ் தான். முகநூலில் தொடர்பு இருக்கு. தி.ரா.சவும் அப்படியே/ அதோடு ஸ்ரீரங்கம் வந்தால் இப்போவும் இங்கே வந்துவிட்டுப் போவார். வேதாவோடும் முகநூல் தொடர்பு இருக்கு. எப்போவானும் பதிவுக்கும் வந்து கருத்துச் சொல்லுவாங்க. ஷ்யாம் முன்னாடியே காணாமல் போயிட்டார். கைப்புள்ள 2 வருடங்கள் முன்னர் வரை முகநூலில் தொடர்பில் இருந்தார். மத்தவங்க யாரும் இப்போது காணோம். கார்த்திக் அப்போவே கல்யாணம் ஆனதும் வலை உலகிலிருந்து காணாமல் போயிட்டார். அம்பி 2 வருஷம் முன்னால் கூட இந்த வீட்டுக்கு ஸ்ரீரங்கத்துக்கு மனைவி, மகனோடு வந்தார். அனன்யாவைப் பார்த்ததே இல்லை.அவர் என்னோட பதிவுகளுக்கு அதிகம் வந்ததும் இல்லை.
நீக்குஅட கீரைக் கூட்டு..சேம் தான் நெல்லை...
பதிலளிநீக்குகீரை மிளகுஷீயம் கூட செய்வதுண்டு. புளிக்கீரை என்றும் செய்வதுண்டு..அப்புறம் மசியல்...
சூப்பரா செஞ்சுருக்கீங்க நெல்லை...
கீதா
நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். எப்போவோ செய்தது... புளிக்கீரை எங்க அம்மா செய்து நான் சாப்பிட்டப்பறம் சாப்பிட்ட நினைவு இல்லை. அம்மா கிட்ட கேட்கணும் எப்படிச் செஞ்சாங்கன்னு...
நீக்குபுளிக்கீரை எங்க அம்மாப் பருப்புப் போட்டுச் செய்தால் சாதத்தோடு சாப்பிடுவோம். பருப்பில்லாமல் பண்ணினால் தொட்டுக்க வைச்சுப்போம். அப்போ ஏதேனும் மோர்க்குழம்பு மாதிரிப் பண்ணுவாங்க! அம்மா அருமையான காம்பினேஷனில் சமைப்பார். கீரையோ, கூட்டோ குழம்புக் கருவடாம் தாளிக்காமல் பண்ணினதில்லை. அதுக்கு நேர்மாறா இங்கே பிடிக்கவே பிடிக்காது! :( நேத்திக்குத் தான் அதிசயமா வாழைப்பூக்கூட்டிலே குழம்புக்கருவடாம் தாளித்தேன். நல்லவேளையா ஒண்ணும் சொல்லலை. இல்லைனா பொறுக்கி வைச்சுடுவார், அல்லது என்னிடம் கொடுப்பார்! :)
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்.... நீங்க இப்போ பண்ணறதை சாப்பிடும்போது, அம்மா செய்த மாதிரியே இருக்குன்னு ஒரு ஃபீலிங் உங்களுக்கு வருதா? எதுனால அம்மா மாதிரியே ருசில அவங்க பெண்கள் பண்ணுவதில்லை?
நீக்குநெல்லைத் தமிழரே, ஒருத்தர் சமையல் மாதிரியே இன்னொருத்தர் சமைத்தால் அவரவர் தனித்தன்மை போயிடாதோ?எனக்கு என்னமோ அது பிடிக்காது! பிடிக்கவும் இல்லை! எங்க அம்மா மாதிரி எல்லாம் நான் சமைப்பதில்லை என்பது எனக்குத் தெரியும் என்றாலும் அடிப்படை அம்மாவோடது தான்! அம்மா மாதிரி ருசியில் எல்லாம் பண்ணுவது இல்லை. அம்மா குறைந்த அளவு சாமான்களில் செய்யணும். செய்தாகணும். அவங்களுக்கு அது கட்டாயம். எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் தான் அளவா சாமான்களைச் சேர்ப்பேன். சரியாக இருக்கும். நான்கு பேர் சமையல்னா நான்கு பேருக்கு மட்டும் தான் பண்ணுவேன். சாதம் மட்டும் கொஞ்சம் கூட இருக்கும்படி பார்த்துப்பேன். என் புகுந்த வீட்டில் நாத்தனாரெல்லாம் அம்மா மாதிரிப் பண்ணணும் என்றே என்னை வற்புறுத்துவாங்க/இருக்காங்க/ இப்போவும் சில சமயங்களில். மாமியாரின் செய்முறையைப் பார்த்துச் செய்வேன். ஆனால் அவங்க செய்யும் அதே ருசியில் வராது நிச்சயமாய்! இப்போ நம்ம ஶ்ரீராம் கொடுத்த சரவணபவன் சாம்பார் கூட அடிப்படை அது தான். ஆனால் என் பாணியில், ருசியில் செய்யறேன். மைத்துனர் பிள்ளைக்கூட இட்லியோடு செய்து கொடுத்தேன். ரசித்துச் சாப்பிட்டார். சுவை நன்றாக இருந்தால் போதுமே!
நீக்குஉண்மை கீதா சாம்பசிவம் மேடம். ஒருத்தர் கைப்பாகம் இன்னொருவருக்கு வரவே வராது. அதுபோல, நானே ஒரே ஐட்டத்தைப் பலமுறை செய்தபோதும் ஒரே மாதிரி வருவதில்லை. சரவணபவன் சாம்பாரும் அப்படித்தால். சில சமயம் அட்டஹாசமா அமையும். சில சமயம் சுமாரா இருக்கும்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குகீரைக்கூட்டா இன்றைக்கு? தினமும் கீரை சாப்பிடுவது நல்லது....
பதிலளிநீக்குஅதேதான் வெங்கட்ஜி! தினமுமே கீரை நல்லது.
நீக்குகீதா
தினசரி கீரையா!..
நீக்குயார் சொன்னது?...
Fb யிலா?.. வாட்ஸ்..லயா?...
அப்புறமா வர்றேன்....
அதுக்குள்ள இதுக்கு பதில் எழுதி வைங்க...
வாங்க வெங்கட்..... தினசரி கீரை சாப்பிடலாமா? வாரம் இரண்டு முறைனா ஓகேன்னு நினைக்கிறேன். 30-40 வருடங்களுக்கு முன்பு, பணம் அவ்வளவு இல்லாதவங்கதான், தினசரி கீரையை சமையலில் உபயோகப்படுத்துவார்கள் (என்று எங்க அப்பா சொல்லியிருக்கிறார்... அவரது இளமைப் பருவத்தில் அப்படி ஒரு சில வருடங்கள் கஷ்டப்பட்டாராம்)
நீக்குகீரை தினம் எல்லாம் சாப்பிட்டால் நல்லதுனு மருத்துவர்கள் சொன்னாலும் தினமெல்லாம் சாப்பிட முடியறதில்லை. நாங்கல்லாம் அரிசி போட்டுத் தான் கீரை வாங்கி இருக்கோம். காசு கொடுத்துக் கீரை வாங்கினதே நான் கல்யாணம் ஆகிச் சென்னைக்குக் குடித்தனம் வந்தப்போத் தான். பத்துப்பைசா கொடுத்துக் கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி வாங்கறதுனா அம்மாடி, இவ்வளவானு தோணும். ஒரு கைப்பிடி அரிசியிலே மதுரையிலே வாங்கிடலாம்.
நீக்குகீரை மொளகூட்டல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னமோனு நினைச்சுட்டேன். நாங்க இதைச் சாதத்தோடு பிசைந்து/தொட்டுண்டு சாப்பிடப் பண்ணுவோம். பூஷணிக்காய், புடலங்காய் போன்றவற்றிலும் பண்ணலாம். எல்லாக் காய்களையும் போட்டும் பண்ணலாம். தொட்டுக்க வாழைக்காய்ப் புளி விட்ட கறி அல்லது கத்திரிக்காய்க் கறி நல்லா இருக்கும். கத்திரிக்காய் வதக்கும்போது நான் நீர்க்கப் புளி விடுவேன்.
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் மேடம்... வாங்க... ஆனா 'இவ்வளோவுதானா' என்று சொல்றீங்களே... நான் வெறும் சாதத்தோடு சாப்பிட்டதில்லை. நல்லாத்தான் இருக்கும். ஏன்னா, நான் கூட்டும் சாதமும் சாப்பிடுவேன். எனக்கு மிளகூட்டல்னா, கோஸ், புடலைதான் சரிப்பட்டுவரும். தேங்காய் அரைத்த கூட்டுக்கு பூசனி நல்லா வரும். கத்தரி பண்ணிப்பார்த்ததில்லை.
நீக்குஇந்த மாதிரி மொளகூட்டலுக்குத் துவரம்பருப்பும் போடலாம். பாசிப்பருப்பும் போடலாம். 2,3 காய்கள் சேர்த்தும் போடலாம். ரசம் எங்க வீட்டில் கட்டாயமாய் வேண்டும். ஆகவே மொளகூட்டல் பண்ணினால் அன்னிக்குத் தொட்டுக்க வெண்டைக்காய்ப் புளிப்பச்சடி அல்லது நாரத்தங்காய்ப் புளிப்பச்சடி(ப.மி. போட்டு, மோர் சாதத்துக்குக் கூடத் தொட்டுக்கலாம்) இப்படி ஏதேனும் பச்சடி அல்லது வாழைக்காய்ப் புளி விட்ட கறினு பண்ணுவாங்க. இது எதுவுமே வேண்டாம்னு நாங்க அப்பளம் பொரித்தாலே போதும்னு சொல்லிடுவோம். முட்டைக்கோஸிலே நாங்க மொளகூட்டல் பண்ணினதில்லை. நாட்டுக்காய்களில் தான்.
நீக்குகீசா மேடம்... எனக்குன்னு சில காம்பினேஷன் பிடிக்கும். மோர்ச்சாத்துமது + கோஸ் மிளகூட்டு, வெந்தயக் குழம்பு + என் மனைவி செய்யும் கொத்தமல்லி விரை அரைச்ச கூட்டு, மோர்க்குழம்பு + வாழை அல்லது கத்தரி புளிக்கூட்டு, பருப்பு சாத்துமது + பருப்புசிலி, அப்புறம் எதுவா இருந்தாலும் கூட சேம்பு ரோஸ்ட், உருளை ரோஸ்ட் எதுனா.
நீக்குவெண்டை புளிப்பச்சிடி இதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை..
வெண்டைக்காய்ப் பிஞ்சாக இருந்தால் நல்லா இருக்கும். கொஞ்சம் வெல்லம்/கொஞ்சம் போல் போடணும். ஆனால் நான் போடமாட்டேன். அதே போல் பிஞ்சுப் பறங்கிக்காயிலும்(இளங்கொட்டை) புளிப்பச்சடி செய்யலாம். நல்லாவே இருக்கும்.நாரத்தங்காய் கிடைக்கும்போதெல்லாம் பச்சை மிளகாய் போட்டுப் புளிப்பச்சடி செய்து வைச்சுப்பேன். நாளாக ஆக, அந்த நாரத்தங்காய்த்துண்டங்கள் உப்பு, உறைப்பு எல்லாம் ஏறிப் புளிப்பும் உறைப்புமாக நன்றாக இருக்கும். காலம்பரக் கஞ்சிக்கு அதான் தொட்டுப்பேன்.
நீக்குநன்றி கீதா சாம்பசிவம் மேடம்.... மனைவிகிட்ட இந்த வெண்டை புளிப்பச்சிடியைச் சொல்றேன். (ஆனாலும் எனக்குப் பிடிக்கும் என்று தோணலை)
நீக்குநான் இங்கு சந்தையில் வாங்கும் காய்கள் எல்லாத்துலயும் பூச்சி இருக்கு....இப்ப வாங்கின பட்டாணில கூட புழு இருந்துச்சு...பூச்சிகள் இருந்தால் கெமிக்கல் யூஸ் பண்ணலைன்னு ஒரு அக்ரி தோட்டக்கலை நிபுணர் அப்புறம் அனுபவ உழவர்களும் நான் அட்டென்ட் செய்த ஒரு செமினார் நிகழ்வில் சொன்னாங்க.
பதிலளிநீக்குநாங்க பொதுவாவே எல்லா காய்களையும் கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் பொடி கலந்த வெத வெத நீரில் போட்டு வைத்துவிட்டு அப்புறம் மீண்டும் கழுவித்தான் பயன்படுத்தறோம் வீட்டுல..கழுவிட்டுத்தான் கட் செய்வதே...திவசத்துக்குச் செய்யறாப்ல. அது போல நீங்க சொன்ன திராட்சையும்...
கீதா
இங்க சந்தைல பாலக் கீரை 4/5 பேர் சாப்பிடும் அளவு பெரிய கட்டு...ரூ 5 தான்...
நீக்குதில்லி/ஊட்டி காரெட் கிலோ ரூ 30, வெண்டை அரைக்கிலோவுக்கும் மேல.650 கிராம் இருந்துச்சு...ரூ 10..நல்ல தோட்டத்து வெண்டை பெரிய காம்புடனேயே.....ப பட்டாணி கிலோ ரூ 25, 30
நாட்டுத் தக்காளி கிலோ ரூ 10....பங்களூர் தக்காளி கி 15
கீதா
கீரை கொஞ்சம் அலுத்து விட்டதால் சமீபத்தில் பெரிய இடைவெளி விட்டிருக்கிறோம் நாங்கள்...
நீக்குஅதை ஏன் கேட்கறீங்க தி/கீதா, சும்மாவே நம்மவர் காய்களை வாங்கித் தள்ளுவார். இப்போ விலை குறைஞ்சிருப்பதாலே அரைக்கிலோவுக்குக் குறைஞ்சு தரதில்லை என்கிறார். பீன்ஸ் அரைக்கிலோ, அவரை அரைகிலோனு வாங்கி 2, 3 நாட்கள் கறி, கூட்டு, சப்பாத்திக்கு, வெஜிடபுள் ரைஸ் எனப் பண்ணியும் இன்னும் இருக்கு. அவரைக்காயை வற்றல் போட்டுடலாமானு யோசிக்கிறேன். வெயில் கொளுத்துதே! பீன்ஸைத் தான் எப்படிஅயவது தீர்க்கணும். தக்காளியும் ஒரு கிலோ தான் தராங்க. கிலோ 10 ரூபாய். பச்சைப்பட்டாணி இப்படித்தான் ஒரு கிலோவுக்கும் மேல் வாங்கி இப்போத் தான் முடிச்சேன். நல்லவேளையா ஃப்ரீசரில் வைக்க முடியும் அதை.
நீக்குகீதா என்ற பெயரில் எழுதும் இரண்டு பேரின் பின்னூட்டங்களைப் படித்ததில் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஒருவர் பெங்களூரின் புற நகரில் வயல் வெளிகளுக்கு அருகில் வசிக்கிறார். இன்னொருவர் ஶ்ரீரங்கத்தில் காய்கறித் தோட்டங்களுக்கு மத்தியில் வசிக்கிறார் (ஒருவேளை இருவரும் விஙசாயம் செய்யறாங்களோ?)
நீக்குஇரண்டு வாரம் முன்பு கிலோ 50ரூ கொடுத்து தக்காளியும், 60ரூபாய்க்கு கீழ் இறங்காத வெண்டைக்காயை இரண்டு மாதங்களாகப் பார்த்து வருபவனுக்கும் கேரட் கிலோ 60-90ரூபாய் விலையிலேயே கடந்த ஒரு வருடமாக வாங்க வருபவனுக்கும் வேறு என்ன சொல்லத் தோன்றும்?
பேசாம உங்க ஊர்களுக்கு வரும்போது காய்கறி பர்சேசுக்காக கூடையைத் தூக்கிட்டு வந்துவிட வேண்டியதுதான்.
ஹா ஹா ஹா ஹா ஹா..நெல்லை....வாங்க வாங்க வாங்கித் தரேன்...வயல் நடுவுல எல்லாம் இல்லை...நானும் பார்க்க ஆசைப்பட்டு சுத்தி சுத்தி நடந்து வரேன்...தோப்புகள், தோட்டங்கள் இருக்கு...
நீக்குகீதாக்கா சூப்பர் உங்க இடத்துலயும் விலை குறைவு...ஆமாம் மாமா தெரியுமே அழகா நிறைய தாரளமா வாங்கிவந்துருவார்...சூப்பர் மாமா!!
நெல்லை இங்க அன்னிக்கு ஜெபி நகர்லருந்தும், மல்லேஸ்வரத்துலருந்தும் உறவினர்கள் வந்துட்டுப் போனாங்க் அவங்களுக்கே இங்க விலை பார்த்து ஆஹா என்று வியந்து நான் வீட்டுல வாங்கி வைச்சுருந்த வெண்டை நல்லாருக்குனு எடுத்துட்டுப் போனாங்க...
இன்னொன்னு நெல்லை இங்க தினசரிச்சந்தைல மாலை ஆனா களை கட்டும் ஆனா காய்கள்ல பார்த்தீங்கனா, காலிஃப்ளவர் குமிஞ்சுருக்கும்....ஆனா நாட்டுக் காய்கள் விற்கும் அம்மாக்கள் பெண்மணிகள் கொஞ்சம் கொஞ்சம்தான் வைச்சுருப்பாங்க...எல்லார்க்கிட்டயும் எல்லா காய்களும் கிடைக்காது...என்னனு பார்த்தீங்கனா அவங்க பக்கத்துல இல்ல அவங்க வீட்டு தோட்டத்துல காய்க்கறத கொண்டு வரதா சொன்னாங்க...
அப்புறம் இன்னொனு 4 நாள் முன்னாடி தி ச வுக்குப் போனப்ப நல்ல பெரிய ப்ரோக்கோலி இரண்டு 50 ரூபாய்தான்....ஒன்றே நல்லா மூணு பேர் சாப்பிடலாம்....காலிஃப்ளவர் சாதாரணமா 30 ரூபாய்க்கு விப்பாங்கல்ல அந்த சைஸ்ல இருந்துச்சு...ரொம்ப நல்லாவும் இருந்துச்சு பச் பச்சுன்னு ப்ராக்கோலி இந்த விலைக்கு வந்ததைப் பார்த்து ஒரே ஆச்சரியம்....வாங்காம இருப்பமா...
இவ்வளவு நேரம் கரன்ட் இல்ல...இப்பத்தான் வந்துச்சு...
கீதா
நெல்லை நீங்க அடையார்ல இருக்கீங்க அதான்...இந்த விலை...
நீக்குசமீபத்துல தாம்பரம் போயிருந்தேன்ல அப்ப அங்க சந்தைல விலை கம்மியாத்தான் இருந்துச்சு அடையாரை விட...நாங்க முன்னால வாங்கின மாதிரி 10 ரூபாய்க்கு நிறைய கிடைக்குமே அதே போல...
கீதா
haahaahaahaa!
நீக்குகாலிஃப்ளவர் முழுசா வாங்கினால் எங்களுக்கு ஒரு வாரத்துக்கு வந்துடும் என்பதால் இப்போதெல்லாம் கால்கிலோனு எடை போட்டு வாங்கறார். பத்து ரூபாய். அதுவே 3 நாட்கள் வரும். :) ப்ராக்கோலி இங்கே பார்ப்பதில்லை.
நீக்குதிருநெல்வேலியில் காலிஃப்ளவர் அளவைப் பொறுத்துப் பத்து ரூபாய், 20 ரூ, 25 ரூ என விற்கின்றனர். அநேகமாய்க் கிலோ 25 ரூக்கு மேல் எந்தக்காயும் விற்கறதில்லை. :))) அதுவே பச்சுப் பச்சுனு! சென்ற மாதம் பரவக்கரை போனப்போத் திருவையாறில் கீரை பத்து ரூபாய்க்கு வாங்கினோம். 2 நாட்கள் வந்தது. தண்டு ஒரு நாள் மோர்க்கூட்டுக்கு ஆகும். வாழைத்தண்டு நீளமாக இருந்ததால் எங்களுக்குப் போக மிச்சத்தை இங்கே இருப்பவர் ஒருத்தங்களுக்குக் கொடுத்தோம்.
நீக்கு//கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் பொடி கலந்த // - கீதா ரங்கன் - நான் இப்படிச் செய்வதில்லை. சோம்பேறித்தனம்தான் காரணம். அரை மணியாவது ஊறி, இரண்டு மூன்று முறை அலம்பணும்னு நிறையபேர் எனக்குச் சொல்வாங்க. நான் ஒரு தடவை அலம்புவதோடு சரி.
நீக்கு@ கீசா மேடம் - /சும்மாவே நம்மவர் காய்களை// - அவரைக்காய் தேங்காய் போட்ட கறி, பீன்ஸ் பருப்புசிலி, பச்சைப் பட்டாணியை 'மடர் பனீர்' அல்லது பட்டாணி ரைஸ் (அல்லது ஜீரா ரைஸுக்கு தொட்டுக்க மட்டர் மசாலா) என்று பண்ணித் தீர்த்துவிடலாமே. போனாப்போகுது உங்களுக்காக ஒரு டிப்ஸ் தர்றேன். கணவர் வாங்கிட்டு வரும்போது, நமக்குப் பிடிக்காததை, 'இது என்ன இதைப்போய் வாங்கறீங்க, எதுக்கு இவ்வளவு' என்றெல்லாம் சொல்லக்கூடாது. 'உனக்கு என்ன என்ன பண்ணணும்னு தெரியலைனா நானே சொல்லித்தர்றேன்' என்று அவங்க டாமினேட் பண்ணப் பார்ப்பாங்க. அதுக்குப் பதிலா, 1 கிலோ அவரை வாங்கினா, இரண்டு மூன்று நாளுக்கு அவரையையே பண்ணினா, அப்புறம் கிலோ 3 ரூபாய் வந்தாலும் வாங்கிட்டு வர மாட்டாங்க. பாருங்க... நான் சொல்லித்தரவேண்டியிருக்கு, எப்படி மேனேஜ் பண்ணறதுன்னு.... ஹாஹா
நீக்கு@ கீதா ரங்கன் - //...சூப்பர் மாமா!! // - எனக்கு காய்கறிகள், தண்ணீர் இரண்டும் இருக்கும் இடத்தைப் பார்த்தால் அங்கேயே வீடு வாங்கித் தங்கிடலாம்னு தோணுது. நீங்க இப்போ இருக்கிற இடத்தில் காய்கறி புதுசாவும் விலை குறைவாகவும் இருப்பதைப் பார்த்தால் (முக்கியமா காய் புதுசா இருக்கறதுதான் சிறப்பு), பேசாம பெங்களூரின் அந்தப் பகுதியிலேயே வீடு வாங்கிடலாம்னு தோணுது (ஆனா எனக்கு தமிழ்நாட்டு சாம்பார், ஹோட்டல்கள் வேணும்).
நீக்குப்ராக்கோலி என்று சொல்லும்போது, 750 ரூபாய் ஜனவரி 1ம் தேதி சாப்பாடு நினைவுக்கு வருது. அதில் ப்ராக்கோலி சாம்பார் (எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது), முருங்கைச் சதை (அதாவது காயில் உள்ளே இருப்பதை மட்டும் வேகவைத்து எடுத்து) ரசம் இரண்டும் ரொம்ப நல்லா இருந்தது. (மத்தபடி பப்பாளி பஜ்ஜி/கபாப், கருப்பட்டி போட்ட இனிப்புகள் போன்றவை வேஸ்ட்)
@ கீதா சாம்பசிவம் - எனக்கு காலிஃப்ளவர் பிடிப்பதில்லை. ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைனு அதை வைத்து குருமா செய்தால் சாப்பிடுவேன். மற்றபடி எங்க வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்கும் செய்முறை எதுவும் (காலிஃப்ளவரை வைத்து) எனக்குப் பிடிக்காது.
நீக்குப்ராக்கோலியே என் பெண் மற்றும் மனைவி அந்த ஊரில் இருக்கும்போது சொல்வதால் அவங்களுக்காக வாங்குவேன். இந்த ஜனவரி 1ல்தான் 750 ரூ மீல்ஸ்க்குக் கொடுத்ததனால் அந்த சாம்பாரைச் சாப்பிட்டேன்.
@ கீதா ரங்கன் - //பூச்சிகள் இருந்தால் கெமிக்கல் யூஸ் பண்ணலைன்னு // - இப்படித்தான் வெண்டை நுனி உடைந்தால் நல்ல வெண்டைனு சொல்லி, இப்போ நுனி மட்டும் உடையும்படி மாற்றியிருக்காங்க. இனி, சில கெடுதல் செய்யாத பூச்சிகள் அதுவாவே வளரும்படிச் செய்த காய்கறிகளும் வந்துடப்போகுது, நம்மை 'ஆர்கானிக்' என்று நம்பவைக்க.
நீக்குஇதை எந்தக் கீரையிலும் பண்ணலாம்.
பதிலளிநீக்குஅதே கீதாக்கா...அதே...
நீக்குகீதா
முருங்கைக்கீரைல பண்ணினா கசக்காதோ? (நாங்க வாங்குவதில்லை என்றாலும்).
நீக்குஅப்புறம் கீசா மேடம்... நாங்க பருப்புசிலி பண்ணும்போது, காய் 70-75%, பருப்பு கொஞ்சம் கட்டி கட்டியா 25-30%ம்னு இருக்கும். எனக்கு பருப்பு பொடியாக இருந்தால் அவ்வளவாகப் பிடிக்காது. மனைவிட்ட சொல்லி கொஞ்சம் சாஃப்டா பருப்பு இருக்கும்படி பண்ணச்சொல்வேன். ஆனா இந்த கேடரிங் காரங்க, எப்போ பருப்பு உசிலி பண்ணினாலும் 80% பருப்பு உசிலிப் பொடி, 20% காய்னு ஏன் பண்ணறாங்க? இதுல நான் எந்த கேடரிங் காரங்ககிட்டயும் வித்தியாசம் பார்க்கலை.
முருங்கைக்கீரை வேக கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனாலும் நான் முருங்கைக்கீரையைப் பருப்பு உசிலி, கீரைச் சுண்டல், பொரிச்ச குழம்புனு பண்ணுவேன். அதிகம் அடைக்குச் சேர்ப்பேன். அடை நல்லா மொறுமொறுவென வாசனையா இருக்கும். முருங்கைக்கீரை போட்டுப் பருப்புக் குழம்பும் பண்ணுவேன். வாசனை ஊரைத் தூக்கும்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசுவையான குறிப்பு. இதே விதம் தான் எங்கள் வீட்டிலும். நெய்வேலியில் இருந்த வரை வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் கீரை இருக்கும். தில்லியில் நிறைய வகை கீரைகள் கிடைப்பது இல்லை.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்.... நெய்வேலில ஒவ்வொரு வீட்டிலும் பெரிய தோட்டம் இருக்குமே... கீரை, பலாப்பழம், மாங்காய், அரை நெல்லி... எதுக்குத்தான் அங்க குறைவு இருக்கும்?
நீக்குசப்பாத்திக்கும் இதைத் தொட்டுக்கலாம். என்னோட உணவே மருந்து பக்கங்களிலேயும் இந்தச் செய்முறையைக் காணலாம்.
பதிலளிநீக்குஎனக்கென்னவோ சப்பாத்திக்கு குருமா, தால்-வெங்காயம் போட்டது, தால்-வெங்காயம் இல்லாமல், சாம்பார், எலுமி ஊறுகாய் இவைகள்தான் இந்த ஆர்டரில் பிடிக்கும். மற்றவற்றை விரும்புவதில்லை. இப்போல்லாம் சப்பாத்தியை மடித்து உள்ளே ஜீனி வைத்து சப்பாத்தி பண்ணித் தருகிறாள். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீக்குமற்றபடி கூட்டை சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளப் பிடிக்காது.
//இப்போல்லாம் சப்பாத்தியை மடித்து உள்ளே ஜீனி வைத்து சப்பாத்தி பண்ணித் தருகிறாள். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.//
நீக்குஒருவேளை இது நளபாக சக்கரவர்திகளின் favourite உணவோ ?? :)
எங்கப்பாக்கு இப்படித்தான் பிடிக்கும் எனக்கு லன்ச் பேக்கிங் ரெண்டு மூணு டைம் செஞ்சி அனுப்பினார் :) பிரிச்சா நெய் வாசமுடன் சர்க்கரை கொஞ்சம் தேங்காய் கொஞ்சம் அவல் சேர்த்து அனுப்பியிருந்தார் :) நான் சாப்பிடவில்லை அதை என்பதை இப்போ நினைக்க கஷ்டமா இருக்கு
இதுக்கு தேங்காய் அவல்லாம் போட மாட்டாங்க. வெறும் சர்க்கரையே ரொம்ப நல்லா இருக்கும் (ஆனா பாகா வழியும். அதனால ஒருவேளை அவலோ இல்லை தேங்காயோ சேர்த்திருக்கலாம். அதுவும் நல்ல ஐடியாதான்)
நீக்குவெங்காய சமோசாவுக்கும் கொஞ்சம் அவல் சேர்ப்பாங்க அது ரன்னிங் கன்சிஸ்டன்சியை கட்டுப்படுத்தும் ..
நீக்குதில்பசந்த் கூட சில பேக்கரிசில் அவல் தேங்காய் டூட்டி ஃப்ரூட்டி பூரணம் வைத்து செய்ததை பார்த்திருக்கேன் .
சீக்கிரம் செஞ்சு இங்கே உங்க மெத்தட் தில்பசந்த் படத்தை ரெசிபியை போடுங்க :)
சப்பாத்திக்கு வெறும் ஜீனியை ஸ்டஃப் செய்வதற்குப் பதிலாகக் கஸ்டர்ட் பவுடரில் சர்க்கரை போட்டுக்கலந்து வெண்ணை அல்லது பாலில் குழைத்துக் கொண்டு ஸ்டஃப் செய்து பரோட்டா(பராந்தா) செய்தால் நன்றாக இருக்கும். ஆலு மடர், அல்லது வெறும் மடர் ஜெயின் டைப்பிலே செய்து சாப்பிடலாம். ஜெயின் டைப் வெங்காயம், பூண்டு, உ.கி . சேர்க்காமல் வெறும் பச்சைப்பட்டாணி, தக்காளி, ப.மி. போட்டுக் கொஞ்சம் மி.பொ.த.பொ. க.ம. போட்டால் போதும். குக்கரில் குழைய விடணும். இங்கே பச்சைப்பட்டாணி கிஅடிக்கும் காலம் அதான் அடிக்கடி. அதிலே தக்காளியையே மிக்சியில் அடித்துச் சாறைக் கலந்தால் இன்னும் ருசி!
நீக்குநட்பூக்களுக்கு...
பதிலளிநீக்குபிஸியாக இருக்கிறேன் விரைவில் வலையுலகம் வருகிறேன் - கில்லர்ஜி
அடடே... கில்லர்ஜி... வாங்க.. வாங்க... திருமணம் நல்லபடியாய் முடிந்ததா?
நீக்குவணக்கம் கில்லர்ஜி.... இனிப்பையெல்லாம் சுத்தமாக காலி பண்ணின பிறகுதான் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பேன் என்று சொல்றீங்க. மெதுவாவே வாங்க.
நீக்குதிருமணம் சிறப்பா நடைபெறுவதை சுடச்சுட தளத்தில் போடுவீங்கன்னு எதிர்பார்த்தோம்.
வாங்க.. வாங்க ஜி..
நீக்குதங்களுக்கு நல்வரவு....
மகனின் கல்யாணத்தன்று பட்டு வேஷ்டியும் சட்டையும் அங்கவஸ்த்திரமுமாக இருந்தீர்களாமே...
அந்தப் படத்தைப் போடுங்கள்....
கில்லர்ஜி வாங்க வாங்க வணக்கம்....
நீக்குகல்யாணம் சிறப்பாக நடந்திருக்கும்...உறவுகள் கூட்டம்னு பிசியோ!!??
துரை அண்ணா உங்க குறிப்புகளும் பார்த்தேன். நானும் சி வெ போட்டுச் செய்வேன் டேஸ்டும் நல்லாருக்கும்...
கீரையுடன் தக்காளி சேர்த்துச் செஞ்சா கீரையோட சத்து நல்லா உடம்புல ஏற்கும்னு ஏதோ ஒரு நியூட்ரிஷியன் சொன்னதா சொல்லக் கேட்டு அப்படியும் செய்யறதுண்டு...
கீதா
கல்யாணம் நல்லா நடந்ததா கில்லர்ஜி? இன்னும் பட்சணம் சாப்பிடும் வேலை முடியலையோ? இஃகி, இஃகி! மிச்சம், மீதி இருக்கிறதைப் படம் பிடிச்சுப் போடுங்க!
நீக்குஅதானே... மிச்சம் மீதி இருக்கிறதையாவது படம் புடிச்சிப் போடுங்கோ...
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇங்கே எல்லாக் காய்கறிகளையுமே உப்புத் தண்ணீரில் ஊற வைத்தபிறகுதான். நறுக்கவே ஆரம்பிக்கறது.
நெ த வின் கீரைக் கூட்டு நாங்க செய்யற மாதிரியே இருக்கு.
தேங்காய், சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்தால் எந்தக் கூட்டும் சூப்பர் தான்.
உங்கள் செய்முறைப் படங்களும் அருமை.
வாங்க வல்லிம்மா... உப்புத் தண்ணீரில் ஊறவைத்து - ஆஹா... இதை எப்போதிலிருந்து கடைபிடிக்கிறீங்க? அங்கல்லாம் பொதுவா காய்கறி நல்லா இருக்குமே... கண்ட கண்ட கெமிக்கல்ல முக்கமாட்டாங்களே..
நீக்குவருகைக்கு நன்றி....
வாழ்க நலம்..
பதிலளிநீக்குநெ.த. அவர்களது ச.கு. அருமை...
பதிலளிநீக்குஅடுத்த சில நாட்களில் செய்து பார்க்கிறேன்....
வாங்க துரை செல்வராஜு சார்...
நீக்குகீரை தேங்காய் சீரகக் கூட்டு அருமை
பதிலளிநீக்குவாங்க கரந்தை ஜெயக்குமார் சார்...
நீக்குதவிர பாசிப்பயறு சேர்க்காமல் துவரம் பருப்பை சேர்த்து செய்திருக்கிறேன்... தேக்காய்க்குப் பதிலாக தேங்காய்ப் பால் மாவு... சீரகத்தையும் மிளகையும் லேசாக வறுத்து அரைத்த பொடி சேர்த்துக் கொள்வேன்.. நாலைந்து சிறு வெங்காயங்களை நறுக்கி கடுகு உ. பருப்பு, கறிவேப்பிலையுடன் தாளிதம் செய்து விடுவேன்...
பதிலளிநீக்குதேங்காய்ப்பூவை அரைத்து இனியொரு முறை செய்ய வேண்டும்....
நீங்க சொன்ன, தேங்காய்ப் பால் மாவு நல்ல ஐடியா. அங்க எங்கிட்ட நிறைய இருந்தது, ஆனால் அதை தேங்காய்க்கு பதில் காய்ல உபயோகப்படுத்தியதில்லை. ஆனா வெங்காயம் எங்கள் சமையலில் டக்குப் பக்குன்னு சேர்ப்பதில்லை (கீரை, கூட்டுகளில்). உருளையோடு மட்டும்தான் வெங்காயம் சேர்ப்பேன் (பையனுக்கு வெங்காயம் பிடிக்காது. பெண், ஹோட்டல் செய்முறைல செய்யாதீங்க என்று சொல்லிடுவா. அவதான் நிறைய வெளில சாப்பிடும் வாய்ப்பு வருவதினால்)
நீக்குதேங்காய் பூ என்ற சொல் புதுமையா இருக்கு. நாங்க திருவின தேங்காய்னு சொல்வோம்.
நீக்குதி.நகரில், இளநியை வளரவிட்டு, செடி வந்தபிறகு இளனியைகட் பண்ணி அந்தத் தேங்காயை விற்பார்கள். அதை தேங்காய் பூ என்று சொல்வார்கள்னு நினைக்கிறேன். அதுவும் நல்லா இருக்கும், வெறும்ன சாப்பிட...
மணத்தக்காளி வாய்ப்புண்ணுக்கு நல்லது என்று சொல்வார்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது
பதிலளிநீக்குவாங்க ஜி.எம்.பி சார்... வயிற்றுப் புண்ணுக்கும் மணத்தக்காளி நல்லது. இரவில் தயிர் சாப்பிட்டால் சீரணம் ஆகாதுன்னு சொல்வாங்க (அது 8 மணி நேரம் சீரணத்துக்கு எடுத்துக்கும்னு). அதேமாதிரி ஞாயிறில் நெல்லி சாப்பிடக் கூடாதுன்னு சொல்வாங்க (ஒருவேளை அன்று தலைக்கு எண்ணெய் குளிப்போம் என்பதால்). கீரையை ஏன் சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க, இரவில்?
நீக்குஇங்கு எல்லா கீரைகளும் கிடைக்காது. கிடைக்கிற கீரைகளை வைத்து சமைப்பது உண்டு
பதிலளிநீக்குவாங்க சொக்கன் சுப்ரமணியம். நீங்க மிடில் ஈஸ்டா? அப்போ பாலக் மற்றும் சீரை என்று சொல்லப்படும் பச்சை/பீட்ரூட் நிறத்தில் உள்ள கீரை கிடைக்குமே...
நீக்குநல்லதொரு குறிப்பு... நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
நீக்குநான் இது போல் தான் கீரை கூட்டு செய்வேன்.
பதிலளிநீக்குசில நேரம் துவரம் பருப்பும் போட்டு செய்வேன்.
வல்லாரை கீரையும் இப்படி செய்து இருக்கிறேன்.
செய்முறை படங்களுடன் அருமை.
வாங்க கோமதி அரசு மேடம்... வல்லாரைக் கீரைல நல்லா இருக்குமா?
நீக்குஇங்கும் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தையில் தக்காளி 10 ரூபாய் (ஒரு கிலோ)
பதிலளிநீக்குமனத்தக்காளி கீரை ஒரு கட்டு 10 ரூபாய்.
இங்கயும் எல்லாக் கீரையும் கிடைக்கிறது. 15-20 ரூபாய் விலைல. இள பிரண்டைதான் கிடைக்கவில்லை. முத்திய பிரண்டையை உபயோகப்படுத்த கஷ்டமா இருக்கு.
நீக்குஎனக்கு கீரை மிகவும் பிடிக்கும். பெங்களூர் வந்த பிறகு கீரை சாப்பிடுவது குறைந்து விட்டது. இங்கு கீரை என்றால் பாலக், புதினாதான்.
பதிலளிநீக்குவெறும் கீரை மசியல், மோர்க்குழம்பு என்று சிறு வயதில் சாப்பிட்டது நினைவுக்கு வந்துவிட்டது.
நீக்குவருகைக்கு நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம். புதினாவை வைத்து துவையல் மற்றவை செய்யாமல், இதுபோல் கீரைக்கூட்டெல்லாம் செய்வார்களா? எனக்கு இப்போதுவரை புதினா பிடிக்காது. கொத்தமல்லிதான் இஷ்டம்.
புதினா புலவ் பண்ணலாம். காய்கறிகளில் புதினாவைக் கொத்துமல்லி போல் மேலே தூவலாம். அல்லது காய்களை வதக்கும்போது புதினாவையும் பொடியாக நறுக்கி வதக்கிச் சேர்க்கலாம். எல்லாத்தையும் விடப் புதினா+கொத்துமல்லி விதை+இஞ்சி+சோம்பு சேர்த்து அரைத்து 2,3 தரம் அரைத்து வடிகட்டிச் சாறு எடுத்து எலுமிச்சம்பழம் பிழிந்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் குடித்தால் சுகம்!
நீக்குநாங்கள் இதை கீரை மிளகூட்டல் என்போம்.
பதிலளிநீக்குகீரை மிளகூட்டலும் சரியான பெயர்தான் பா.வெ. மேடம்... சாதாரணமா எல்லாரும் செய்வதை வைத்து ஒரு இடுகை அனுப்பிட்டேன் இந்த வாரத்துக்கு ஹா ஹா.
நீக்குஇல்லை நெல்லைத்தமிழன் :) நாங்களும் செய்ரோம் ஆனா சரியா செய்ரோமான்னு எங்களை கரெக்ட் பண்ணிக்கவும் இது உதவும் :) அதேபோல் எல்லா ரெசிப்பியும் விதவிதமா வரணும் தெரிஞ்சது தெரியாததுன்னு அப்போதான் அது திங்கற கிழமை போஸ்ட் .எனக்கு நம்ம தென்னிந்திய சமையல்னா செம பிரியம்
நீக்குவாங்க ஏஞ்சலின். நன்றி. இதை முதலிலேயே படித்திருந்தால் உங்களைக் கலாய்த்திருக்கமாட்டேன். என்ன செய்யறது. சில சமயம் உங்களை மாதிரி 'கீழிலிருந்து மேலாக படிக்க ஆரம்பிப்பதால் வரும் வினை. ஹா ஹா.
நீக்குHAAHAA :))))) garrrrr
நீக்குகீரை பிடிக்காத என் மகனுக்கு கீரை மிளகூட்டல் பிடிக்கும்,அதனால் கீரை என்றால் மிளகூட்டல்தான். அரைக்கீரையை மட்டும் அப்படியே மசிப்பேன்.
பதிலளிநீக்குகூட்டு என்றால் ரஸமும் உண்டு என்ற வகையில் துவரம் பருப்பு வேகவைத்தால் ரஸத்திற்கும் ஆகும் என்று இப்பருப்பையும் சேர்த்ததுச் செய்வதுண்டு. அரைத்து விடுவதெல்லாம் உங்கள் மாதிரியே! பயத்தம் பருப்பும் சேர்த்துச் செய்வோம். முன்பெல்லாம் பயத்தம் பருப்பை சற்று சூடேர வருத்துச் சேர்த்தால் வாஸனையாக இருக்கும் என்று சொல்வார்கள். நான்கூட அப்படிச் செய்து கொண்டிருந்தேன். மணத்தக்காளி கீரைக்கு சற்று கசப்பும் உண்டு. அதன்காரணம் பயத்தம்பருப்பே உகந்தது. மற்றும் கீரைகளுக்கு கடுகுகூட திருவமாறவேண்டாம். உளுத்தம் பருப்பு போதுமானது என்று சொல்லவும் கேட்டிருக்கிறேன். வட இந்தியாவில் கடுகுக்கீரை விசேஷம். அதுவும் குளிர் காலங்களில். மணத்தகாகாளிக் கீரையை நயக்ரா நீர்வீழ்ச்சி பார்த்து விட்டு வரும் வழியிலும்,ஏன் ஜெனிவாவிலும் புதர்போல முளைத்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அருமையான உங்கள் கூட்டு மலரும் நினைவுகளை சற்றே உலுப்பி விட்டது. கீ.சா சொல்வதுபோல கத்தரிக்காய்களுக்கு லேசாகப் புளித்தண்ணீர் சேர்த்தால் நிறம் கருக்காது. கடுப்பும் இருக்காது. அழகான படங்கள். ருசியான கூட்டு. கடலைப்பருப்பு சேர்த்து பாலக் ஸப்ஜி செய்வார்கள். அதுவும் அரைத்துவிடாத கூட்டுதான். ரொட்டிக்காக. உங்களுக்கும் தெரிந்திருக்கும். நானும் பின்னூட்டம் உங்களுக்கு நேரத்தில் கொடுத்திருக்கேன். நன்றி நெல்லைத் தமிழன். அன்புடன்
நீக்குவாங்க காமாட்சி அம்மா.... நான் சும்மா எல்லாரும் செய்கின்ற கீரைக்கூட்டை எழுதி அனுப்பினேன்.. இப்போது செய்யாமல் (முன்னொரு காலத்தில் செய்துகொண்டிருந்தவர்களுக்கு) இருப்பவர்களுக்கு ஒரு மலரும் நினைவாக இருக்குமே என்று.
நீக்குஆமாம்... கடுகு திருவமாறாவிட்டால் (ஆஹா... உங்களை என் அகத்து பாஷைக்குக் கொண்டுவந்துவிட்டேனே) அது குறையாத் தெரியாது.
கடுகு கீரை... நான் பார்த்ததே இல்லை. வங்காளத்தில் கடுகு எண்ணெய்தான் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்துவார்கள் என்று படித்திருக்கிறேன். அது எப்படி இருக்கும்னும் தெரியாது.
பாலக் சப்ஜினா அதில் வெங்காயமும், பூண்டு வாசனையும் இருக்குமே.. நான் பொதுவா பனீர் பாலக்கும் 'நான்'/ரோட்டிக்கு வாங்குவேன்.
நீங்க இவ்வளவு பெரியதா எழுதினதே ஆச்சர்யமா இருக்கு. மிக்க நன்றி காமாட்சிம்மா.
ஸ்ஸ்ஸ்ஸ்:) இந்த கீரை மிளகூட்டல் சுட சுட சாதத்தில் போட்டு கொஞ்சமா நெய் ஊத்தி பிசைஞ்சி சாப்பிடணும் :) .நான் ஆல்மோஸ்ட் எல்லா கீரை பீர்க்கங்காய் புடலை காய்கறிகளுக்கு இதே சீராக தேங்காய் பாசிப்பருப்பு காம்பினேஷன்தான் செய்வேன் ,
பதிலளிநீக்குஎன் மகளுக்கு ரொம்ப பிடிக்கும்
வாங்க ஏஞ்சலின்... பீர்க்கை, புடலை - எல்லாமே எனக்கும் பிடிக்கும்.
நீக்கு
பதிலளிநீக்கு//கீரை ஆய்வது, வாழைப்பூ அரிவது இரண்டும் எனக்குப் பிடிக்காத வேலை. //
ஹாங் ஹா எங்காத்துக்காரர் இதில் ரொம்ப வித்யாசம் :) சாலட் ,கீரை வாழைப்பூ கேபேஜ் இதெல்லாம் மெஷின் கூட அவ்ளோ மெலிசா வெட்டாது :) செம நீட் கட்டிங் செஞ்சி தருவார் :)
அடடா! சந்திலே புகுந்து ஆத்துக்காரர் பெருமை !
நீக்குஏஞ்சலின்... சொல்லவந்ததை முழுசாச் சொல்லுங்க. இல்லைனா நான் எழுதறேன் (உங்க சார்பா).
நீக்குகட்டிங் செஞ்சி தருவார் :)... பல சமயம், அவர் அப்படிச் செஞ்சு தந்தாலும் நான் சமைக்க ஆரம்பிக்கும்போது கருக்கிவிடுவேன் இல்லைனா தீஞ்சு போயிடும். அப்போ அவர் வந்து ஹெல்ப் பண்ணி சமையலை நல்லா முடிச்சு வைப்பார். நான் சும்மா இருக்கமாட்டேன். அந்த ஸ்டெப்லாம் போட்டோ எடுத்து, என்னோட டேவடை கிட்சன்ல, நானே செஞ்சதா போட்டுக்குவேன். இதுமாதிரி நெல்லைத் தமிழன், அவர் மனைவி செஞ்சதை போட்டோ எடுத்துப் போட்டு தான் செஞ்சதாச் சொல்றாரோ?
ஏகாந்தன் சார்... ஏஞ்சலின் ஹஸ்பண்ட் இந்தத் தளத்தைப் படிக்க மாட்டார் என்பதால் இதோட நிறுத்திட்டாங்க. இல்லைனா ஏகப்பட்ட ஐஸ் வச்சு ரெண்டு மூணு பத்திகள் எழுதியிருப்பாங்க ஏஞ்சலின்.
நீக்குஅந்த அச்ச்சு ரோஸ் முறுக்கு அச்சப்பம் மட்டுமே அவர் செஞ்சார் :)) அதை யாருமே மறக்கலை பாருங்க
நீக்குஇங்கெல்லாம் பூச்சிகளை கழுவறதை விட பூச்சி மருந்துகளை இல்லாம க்ளீனிங்த்தான் பெரும் வேலை :)
பதிலளிநீக்குநான் ஸிங்கில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு பின்ச் மஞ்சள்தூள் கொஞ்சூண்டு உப்பு அப்புறம் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து 10 நிமிஷம் காய்கறிகளை ஊறவைத்து அலசி அப்புறமா யூஸ் பண்ணுவேன் .சிலர் புளித்தண்ணியும் சேர்ப்பங்கங்க ஆப்பிள் ஸ்பைடர் வினிகர் இல்லாத பட்சத்தில்
இது புதுத் தகவல். இதனை ஆராய்ந்து நானும் இம்ப்ளிமெண்ட் பண்ணப் பார்க்கிறேன்.
நீக்குits apple cider vinegar raw with mother
நீக்குபோன சம்மருக்கு வாங்கின மணத்தக்காளி கீரைக்குச்சிகளை நட்டு ஒரு போகம் விளைச்சல் பார்த்து அதில் இருந்து சாம்பர்லாம் செஞ்சேன் .இப்பவும் தொட்டில பழங்கள் விழுந்து இருக்கு அதுவே சம்மருக்கு வளரும் :) இதேபோல வல்லாரை குச்சியும் நட்டு வளர்த்தேன் .
பதிலளிநீக்குஆனா மிளகூட்டல் சீரக காம்பினேஷனுக்கு வல்லாரை சூட் ஆகாது ..வல்லாரையை மோர்குழமா செய்ய ஐடியா இருக்கு .ஆல்சோ வல்லாரையை அரைத்து மோருடன் கலந்தும் அருந்தலாம் :)
//வல்லாரையை மோர்குழமா செய்ய // - இறைவா இது என்ன சோதனை... வல்லாரை மோர்க்குழம்பு. இந்த சுனாமி "தேவதை கிச்சன்ல' இறங்குமா இல்லை 'எங்கள் பிளாக் திங்கள் பதிவா'?
நீக்குஅது அவுட்கம் பொறுத்து :) பார்ப்போம் 100% satisfied நா இங்கே இல்லைனா அங்கே என் பக்கம் :)
நீக்குமின்னல் இலைனு ஒண்ணு உண்டு. அதிலே மோர்க்குழம்பு நாங்க அடிக்கடி பண்ணுவோம். மாமனார் பறித்துக் கொண்டு வந்து தருவார். கண்டங்கத்திரிக்காய்க் கூட்டும் மின்னல் இலை மோர்க்குழம்பும் முன்னெல்லாம் அடிக்கடி இருக்கும்.
நீக்குகீசா மேடம்... பதின்ம வயதில் நெல்லையில், அப்பக்கொடி மோர்க்குழம்பு சாப்பிட்டிருக்கிறேன் (காய்ந்த கொடி மாதிரி இருக்கும்). இப்போ 'அப்படீன்னா என்ன' என்று நெல்லைக் கடைகள்லயே கேட்கறாங்க. நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?
நீக்குhttp://andhimazhai.com/news/view/bharathi-mani-30-04-2015.html இவரால் "அப்பக்கொடி" பிரபலம் ஆனது! :) முன்னரும் யாரோ என்னைக் கேட்டிருந்தார்கள். எனக்குத் தெரியும்.படிச்சிருக்கேன். சொல்லிக் கேட்டிருக்கேன். பயன்படுத்திப் பார்த்ததில்லை. சொல்லப்போனால் எப்படி இருக்கும்னு தெரியாது.
நீக்குhttps://www.youtube.com/watch?v=5rbfzl2wkGE
நீக்குஅக்கா மின்னல் கீரை
tanku, tanku, Angel, மத்தியானமாப் பார்க்கிறேன் ஏஞ்சல்.
நீக்குகீரையும் கீரை சார்ந்த மனிதர்களும்..சே, விஷயங்களும் ஆஹா! சாத்தமுது சாதத்திற்கு இந்தமாதிரிக் கீரையிருந்தால், பசிநேரத்தில் சூடாக வந்து தட்டில் விழுந்தால் சுகந்தான்..
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன். எனக்கு சீரகச் சாத்துமது, கீரை (வெறும்ன மசித்தது) ரொம்பப் பிடிக்கும். 'நம்மைப் போல் பலர்'னு நினைச்சுக்கறேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களின் செய்முறையான மணத்தக்காளி கூட்டு செய்முறை மிகவும் நன்றாக இருந்தது. நானும் இப்படியேத்தான் செய்வேன். பொதுவாக கீரைகளை ஆய்ந்த பின் கழுவி பொடிதாக அரிந்தால் நன்றாக இருக்கும். இந்த கீரைக்கு அதை விட பொடிதாக அரிந்தால் மசிக்கவே வேண்டாம். தாங்கள் சொன்ன மாதிரி அப்படியே குழைய வெந்த பா. பருப்பை சேர்த்து ஒரு கொதி வர விட்டால் போதும். மிகவும் நன்றாகவே ரசித்து கீரை கூட்டு செய்திருக்கிறீர்கள். (கொடுத்து வைத்தவர்கள் தங்கள் வீட்டிலுள்ளவர்கள்.) படங்களை பார்க்கும் போதே செய்து சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது. நான்தான் மிகத் தாமதமாக அனைத்தும் தீர்ந்து போன நிலையில் வந்திருக்கிறேன்.ஆனால் அழகான செய்முறை, படங்களைக்கண்டு ரசித்தேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... கீரையை பொடியாக அரிவது - இது நல்ல டெக்னிக்தான். ரொம்பவும் சூட்டில் வேகவைக்கவேண்டாம்.
நீக்கு//கொடுத்துவைத்தவர்கள்// - அப்படீல்லாம் இல்லை. என் மனைவி நல்லா தளிகை பண்ணுவா. அதுல குறை இருந்ததுன்னா உடனேயே கண்டுபிடிச்சுடுவேன். ஆனா நான் சுமாராச் செய்தாலும் ஊருக்கே கேட்கும்படி டமாரம் அடிச்சுடுவேன்.
நன்றி உங்கள் வருகைக்கு.
கீரை கூட்டு செமயா இருக்கும்போல. சூடான சாதத்துல நெய்விட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும். அதைவிட புது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டா யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி
பதிலளிநீக்குவாங்க ராஜி... நான் சூடான சாதத்துல கீரைக்கூட்டு விட்டு சாப்பிட்டதில்லை. நல்ல உருக்கின நெய் இன்னும் நல்லா இருக்காது?
நீக்கு