புதன், 13 பிப்ரவரி, 2019

பதன் 190213: பேசுவது கிளியா ?


சென்ற வாரம், நான் கேட்டிருந்த கேள்வி, 

" இந்தக் கேள்வியை யாராவது என்னைக் கேட்கமாட்டார்களா ..... என்று நீங்கள் ஏங்குகின்ற கேள்வி, எந்தக் கேள்வி?" 




இந்தக் கேள்வியை நான் கேட்டதற்கு முக்கிய காரணம், உங்களில் எவ்வளவு பேர், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உங்களின் அறியப்படாத திறமைகளை, வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள் என்று பார்க்கத்தான். பானுமதி வெங்கடேஸ்வரன் கொஞ்சம் முயற்சி செய்துள்ளார். மற்றவர்கள்? ஹூம்! ஒன்றும் தேறவில்லை. 

பதிவில் வந்த கேள்வி :

கீதா சாம்பசிவம்: 
     

என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் முக்கியக் கேள்வி என்ன?

& புத்தகங்கள் பல எழுதுகிறீர்கள்; சமையல், ஆன்மிகம், பதிவுகள் என்று எல்லா வகையிலும் கலக்குகிறீர்கள். வீட்டு நிர்வாகத்தையும் திறம்பட செய்கிறீர்கள். எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் கிடைக்கிறது?
              
படைப்பாற்றல் என்பது வேறு, இலக்கை அடைதல் என்பது முற்றிலும் வேறு இல்லையோ?
             
& இல்லை என்பதை சென்ற பதிவின் பின்னூட்டத்திலேயே தெளிவுபடுத்தி உள்ளேன். படைப்பு (creation) என்பது வேறு, படைப்பாற்றல் (Creativity) என்பது வேறு. 
        
நான் படம் வரைகிறேன் - என்றால் அந்தப் படம் ஒரு படைப்பு. ஒரு நோக்கத்திற்காக (உதாரணம் : 'சிக்கனம் வாழ்வில் முக்கியம்' என்பதை வலியுறுத்த) ஒரு படம் வரையவேண்டும் என்று நான் முனைந்தால், படைப்பாற்றலுக்கு அது ஆரம்பம். என்ன படம், எப்படி வரைவேன், எதைப் பயன்படுத்தி வரைவேன், அது வெற்றிகரமாக அடைய வேண்டிய ஆட்களிடம் எப்படி எடுத்துச் செல்வேன் ----- இன்ன பிற கேள்விகளைக் கேட்டு, அவைகள் எல்லாவற்றையும் சிறந்த வகையில் நிறைவேற்றினால், நான் ஒரு படைப்பாற்றல் மிக்கவன். (மீண்டும் சொல்கிறேன், இதுவும் குருடன் கண்ட யானை விளக்கம்தான்!) 
   
மனிதர்கள் மட்டும் அல்ல, எல்லா உயிரினங்களும் படைப்பாற்றல் கொண்டவைகள்தாம். எப்படி? யோசியுங்கள். 
     
ஏஞ்சல் : 

இது உனக்குத் தேவையா? 

& எது? 

வாட்ஸ் அப் கேள்விகள் :

பானுமதி வெங்கடேஸ்வரன் :
             
ஏதாவது ஒரு 20/20 மேட்சில் ஒரு டீமுக்கான விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் யார் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்? அதில் யாரை கேப்டன் ஆக்குவீர்கள்?


#எனக்கு கிரிக்கெட் அவ்வளவு தெரியாது. தோனியை இதர ஆட்டக்காரர்களை செலக்ட் செய்யச் சொல்லி விடுவேன். தோனிதான் காப்டன்.

1 பிராட்மன் (காப்டன்) 
2 சோபர்ஸ் 
3 ரிச்சார்ட்ஸ்
4 டென்னிஸ் லிலீ 
5 ஷேன் வார்ன் 
6  அக்ரம் 
7  லாரா 
8  ஜெயசூர்யா 
9  மெக்ராத் 
10  ஸ்டீவ் வா 
11  க்ரிஸ் கெயில் 
12th Man : கௌதமன் 
அம்பயர் 1: ஸ்ரீராம்.
அம்பயர் 2: கே ஜி (சுப்ரமணியன்) 
தே(ர்)டு அம்பயர் : அனுஷ்கா. (கூட்டத்துல ஒருவராவது இளமையாக இருக்கவேண்டுமே!) 

என்னுடைய பதிவில் ஒரு கணக்கு புதிர் போட்டிருந்தேன். அதற்கு சரியான விடை யாரும் தரவில்லை, எனவே உங்களுக்கு திருப்புகிறேன்.
ஒற்றை இலக்க எண் ஒன்றை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தி அதிகபட்ச மதிப்புள்ள எண்ணை பெற வேண்டும். அந்த எண்களுக்கு இடையே +,-,×,÷ போன்ற குறிகளை பயன்படுத்த கூடாது.

# 9 power 9 அதாவது - முதல் 9 பெரிசு அதன் பின் சின்ன 9 சற்றே உயரத்தில்.

  
நிஜமாகவே கிளிகள் பேசுமா? அப்படிப்பட்ட கிளியை பார்த்திருக்கிறீர்களா?


# பேசாதுதான்.  ஆனால் அந்த "கீ கிக்கீ " ஒலியிலேயே சில வார்த்தைகளை பேசுவது போன்ற பிரமை உண்டாகும்.  மதுரை மீனாட்சி கோயில் கூண்டுகளில் இருந்த கிளிகள் "மீ. . . னா..ட்சி" எனக் கூவுவது மாதிரி எஃபெக்ட் தருவதைக் கேட்டிருக்கிறேன்.

& அது என்னவோ நான் பார்த்த கிளிகள் எதுவும் இதுவரை என் முன்னால் பேசியது இல்லை. கன்னடத்துப் பைங்கிளி (பேசுவது கிளியா, இல்லை .... பெண்ணரசி மொழியா!) உட்பட! 

ஆனால் கிளி பேசுவது குறித்து நிறைய ஜோக்குகள் கேள்விப்பட்டிருக்கின்றேன். பச்சை(க்கிளி) ஜோக்குகள் தவிர்த்துப் பார்த்தால், தேறிய ஒரு ஜோக்:

கடைக்காரர் : " சார் - இந்த கிளியை வாங்கிக்குங்க சார் . இது பேசும் கிளி சார்!"

பெட் வாங்க வந்தவர்: " அப்படி என்னதான் பேசும் இந்தக் கிளி?"

கடைக்காரர் : " இதனுடைய இடது காலைப் பிடித்து இழுத்தீர்கள் என்றால், ஏதேனும் ஒரு திருக்குறள் சொல்லும். வலது காலைப்  பிடித்து இழுத்தீர்கள் என்றால் ஏதேனும் ஒரு பழமொழி சொல்லும்."

பெ வா வ : " இரண்டு காலையும் சேர்த்துப் பிடித்து இழுத்தால் .......?"

கிளி : " நான் தலைகுப்புற விழுந்துடுவேண்டா மூதேவி!"

=================================================

எங்கள் கேள்வி:  




உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு உயரமான மாமரம். முப்பது+ அடி உயரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் உச்சாணிக் கிளையில் ஒரு மாம்பழம். வீட்டில் அலகு கிடையாது. யாருக்கும் மரம் ஏறத் தெரியாது. அந்த மாம்பழத்தை சேதப்படாமல் பறித்து உங்கள் கைக்கு முழு மாம்பழமாக கொண்டுவரவேண்டும். இது இலக்கு. இந்த இலக்கை அடைய நீங்கள் எந்தெந்த வழிகளில் முயற்சி மேற்கொள்வீர்கள்? 

குறிப்பு : வழக்கம்போல் - இந்தக் கேள்விக்கு(ம்) ஒன்றுதான் சரியான பதில் என்று கிடையாது. நிறைய பதில்கள் இருக்கு. நீங்கள் இலக்கை அடைய என்னென்ன யோசனைகள் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு படைப்பாற்றல் உங்களுக்கு இருக்கு. தயங்காமல் Brain storming தொடங்குங்க. 

=================================================

மீண்டும் சந்திப்போம்! 

85 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், தொடரும் அனைவருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மனிதர்கள் மட்டும் அல்ல, எல்லா உயிரினங்களும் படைப்பாற்றல் கொண்டவைகள்தாம்.//

    நிச்சயமாக இதை நான் கன்னாபின்னாவென்று ஆதரித்து வழி மொழிகிறேன்!!

    தூக்கணாங்குருவியின் கூடு சொல்லலாம் இலையா.., அப்புறம் ஆப்பிரிக்கக் காடுகளில் ஒரு பறவை அதன் பெயர் சட்டென்று நினைவுக்கு வரலை மிக மிக அழகாக ரூம் போட்டு வீடு கட்டும் ...பீவர் விலங்கு...இன்னும் சொல்லலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிரிக்கக் காட்டுப் பறவையின் பெயர் ஜம்பலக்கடி மம்பாவா!

      நீக்கு
    2. ஹையோ கௌ அண்ணே!! செமையா சிரிச்சுட்டேன்... இதுதான் கௌ அண்ணா!!!! ஹையோ....முடிலப்பா...

      ஆனா நிஜம்மாவே அந்தப் பறவை கட்டுற வீடு சம்மருக்கு கூலா இருக்குமாம்...குளிர்காலத்துல கத கதப்பா இருக்குமாம்...அதைப் பார்த்து நம்ம எஞ்சினீயர்ஸும் அப்படியான் வீட்டு சீலிங்க் அமைக்க ஏதோ மெட்டீரியல் யூஸ் பண்ண முயற்சினு எப்பவோ ஹிந்துல படிச்ச நினைவு...சனிக்கிழமை வரும் பராப்பர்டி ப்ளஸ் ல வீடு கட்டுவது பத்தியும் கட்டுரைகள் வருமே அதுல...

      கீதா

      நீக்கு
  3. முதலில் கீதாக்காவிடம் கேட்ட கேள்வி என்பது டக்கென்று புரியவில்லை அப்புறம் தான் முதல் வரியை வாசித்ததும் ஓ போனவாரத்தில் உங்கள் கேள்வி என்பது புரிந்தது..

    செம கேள்வி...நானும் வியப்பதுண்டு...எப்படி கீதாக்கா அழகா மேனெஜ் செய்யறாங்கனு....சூப்பர் கேள்வி...அவங்க டைம் மேனேஜ்மென்ட்...எல்லாத்துக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செய்வதாகச் சொன்னதுண்டு....அதுதான்..பெரிய கலை டைம் மேனேஜ்மென்ட்....

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கேஜிஜி சார்... ஒரு அணியின் வீர்ர்களை எழுதும்போது, அவர்கள் விளையாடும் பொசிஷன் ஆர்டரில்தான் எழுதணும். இல்லைனா பேட்ஸ்மென், விக்கட் கீப்பர், பௌலர்ஸ். அதிலும் ஓப்பனர்ஸ் முதலிலும், பௌலர்ஸில் ஃபாஸ்ட்/ஸீமர்ஸ் முதலிலும் வரும்.

    அனுஷ்காவை, ஶ்ரீராம் திருப்திக்காகச் சேர்க்க நினைத்தால் மற்ற முக்கியமானது மறந்து போகாதா? (த போட்டிருந்தால் இதைச் சுட்டிக் காண்பித்திருக்க மாட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தலைப் பட்சமான கருத்து. என்னுடைய டீமில் சில பேருங்க ஏற்கெனவே டிக்கெட் வாங்கிட்டாங்க - இதுல வரிசைக்கு நான் எங்கே போவது?

      நீக்கு
  5. தொடக்க நிலை மாணவனின் முன்பாக இலக்கணப் புத்தகங்களைக் குவித்தாற்போல உள்ளது - இன்றைய பதிவு....

    பதிலளிநீக்கு
  6. அலக்கு இல்லாத வீட்டில், மரம் எறத் தெரியாதவர் உள்ள வீட்டில் உச்சாணிக் கொம்பின் மாம்பழம் தின்னும் ஆசை எதற்கு?... பழம் சேதமடையக்கூடாது... அப்போ கனிந்து விழுந்தால்!..

    நாராயண... நாராயண....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாம்பழம் உங்களுக்கு இல்லை. வேறு யாரோ பறித்து உண்ணப்போகிறார்கள்!

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன் மாம்பலம் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே மாம்பழம் நேக்குத்தேன்ன்ன்ன்ன்ன் அதுவும் முழுசா வேணும்ம்ம்ம்ம்ம்ம்:)... எங்கட வீட்டுக் கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை நினைவு படுத்துறீங்களே......:(

      நீக்கு
  7. பல் இல்லாத ஆளுக்கு முள் இல்லாத முறுக்கும் கஷ்டம் தான்!...

    பதிலளிநீக்கு
  8. இந்தக் கேள்வியை நான் கேட்டதற்கு முக்கிய காரணம், உங்களில் எவ்வளவு பேர், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உங்களின் அறியப்படாத திறமைகளை, வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள் என்று பார்க்கத்தான். //

    ஹா ஹா ஹா அண்ணே மீ எல்லாம் எம்ட்டி வெஸல்....இங்க வந்து கருத்துன்னு காச்சு மூச்சுனு சொல்லிட்டுப் போறதோட சரி.....ஹிஹிஹிஹி....

    //பானுமதி வெங்கடேஸ்வரன் கொஞ்சம் முயற்சி செய்துள்ளார். மற்றவர்கள்? ஹூம்! ஒன்றும் தேறவில்லை.//

    பானுக்கா செம டேலன்டட்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கிரிக்கெட் டீம் 12லருந்து மீண்டும் சிரிச்சு அதுவும் தேர்ட் அம்பயர் அனுஷ் வாவ்!!! அதானே சீர் கேர்ல்ஸ் எதுக்கு அனுஷ் இருந்தாலே போதுமே...

    நெல்லைக்கு தமன்னா போடலைனு வருத்தம் போல...ஹா ஹா ஹா ஹா

    ஹையோ நெல்லை இந்த தமனா ஏன் ஒரே ஒரு டான்ஸ்காக அது ஏதோ ஒரு கன்னட படம். மலையாளத்துலயும் டப்பிங்க் வேற..... இப்ப சென்னைக்குப் போயிருந்தப்ப என் மச்சினர் இந்தப் படத்தைப் போட்டார்...கேஜிஎஃப் (ஆஆஆஆஆஆஆஆஅ கௌ அண்ணா இது உங்க ஃபேமிலி நேம் இல்ல....ஹா ஹா ஹா) இது கோலார் கோல்ட் ஃபீல்ட் சாப்டர் 1 அப்படின்ற படம் ஹையோ சகிக்கல அதுல தமன்னா ஒரு டான்ஸ் வேற டான்ஸ் மட்டும். அது தமனாவான்னு எனக்கு சந்தேகமே வந்துருச்சு...படம் நான் பாதி கூட பார்க்கலை...அதுக்கு மேல முடிலப்பா...படம்ன்றத விட டாக்குமென்ட்ரி மாதிரிதான் இருந்துச்சு....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கணக்குப் புதிர் ...நான் அன்று பார்த்தேன் ஆனால் அங்கு பதில் சொல்லலை...அன்று பயணத்தில் இருந்ததால்.....நான் 99 சொல்ல நினைத்தேன் ஆனா இப்ப உங்க விடை பார்த்தாச்சு....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. மரம் ஏறத் தெரியாதுனு ஒரு கண்டிஷன் இருக்கோ....எனக்கு ஏறத் தெரியுமே!!!! ஸோ எனக்கு மட்டும் அந்தக் கண்டிஷனை எடுத்துடுங்க...பறிச்சு உங்களுக்கே கொடுத்துடறேன்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோஓஓஓஓஒ மாம்பழம் நேக்குத்தேன்ன்ன்ன்.. அரம் ஏறத்தெரிஞ்சாலும், பழம் நுனிக் கொப்பில் தொங்கினால் என்ன பண்ணுவீங்க?:) கெள அண்ணன் நோட் மை பிளாட்டினம் பொயிண்ட்:).. ஹா ஹா ஹா ஹையோ ஒரு மாம்பழத்தைப் பெற எப்பூடி எல்லாம், போட்டுக் குடுத்துப் பாடுபட வேண்டிக்கிடக்கூ:).

      நீக்கு
    2. ஹையோ மரம் என்பது அரம் ஆச்சு கர்ர்ர்:))

      நீக்கு
  12. பக்கத்து வீடு அல்லது யார் வீட்டில் அலக்கு/துரட்டி இருக்கோ அங்கிருந்து வாங்கிட்டு வந்து மொட்டை மாடிக்குப் போய் நம்ம ரங்க்ஸே பறிச்சுடுவார். பல முறை அம்பத்தூர் வீட்டில் இப்படிச் செய்திருக்கோம். மாங்காய் மட்டுமில்லை. தேங்காய்கள், இளநீர் போன்றவையும். மத்ததுக்குப் பின்னர் வரேன். என்னென்னமோ கேட்டிருக்கீங்க! எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்னா ஒரு பதிவே எழுதணும் போலிருக்கே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு பதில். மற்றவர்கள் மேலும் பல ஐடியா எழுதலாமே?

      நீக்கு
    2. ரொம்ப ஜிம்பிள். நீங்க பதிவின் கடைசியில் சொல்லி இருக்கும் கிளியை மரத்தில் ஏற்றிவிட்டால் பழத்தைக் கொத்தும். கொத்தும்போது விழுந்துடும் பழம். கீழேயே நின்னு பழத்தைப் பிடிச்சுக்கலாம்.

      நீக்கு
    3. அர்ஜுனன் மாதிரிப் பழத்தை மட்டும் குறிபார்த்துக் கல்லை விட்டு எறியலாம். கல் யார் தலைமீது விழுந்தால் பொறுப்பேத்துக்காமல் ஓடுகிற மாதிரி இடத்தில் நிற்கணும்.

      நீக்கு
    4. வீட்டில் தானே யாருக்கும் மரம் ஏறத் தெரியாது. ஏறத் தெரிஞ்ச, மாமரத்து எறும்புக்கடியைப் பொறுத்துக்கத் தெரிஞ்ச யாரையானும் கூட்டி வந்து பழத்தைப் பறிச்சுத் தரச் சொல்லணும். அவ்வளவு கஷ்டப்பட்டு ஏறிப் பழத்தைப் பறிப்பவர் தருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. பேசாமல் ஒரு பேப்பரில் மாம்பழம்னு தப்பில்லாமல் எழுதிட்டு அதைக் கையில் வைச்சுட்டு எல்லோரிடமும் காட்டிடலாம். இதான் மிகச் சிறந்த முடிவு. :))))

      நீக்கு
    5. கற்பனையில் பழம்; மந்திரத்தில் மாங்காய் / மாம்பழம்!

      நீக்கு
  13. பானுமதி கேட்டிருந்த கணக்குப் புதிருக்கு 99 என்ற பதிலை நானும் கொடுத்திருந்த நினைவு. பானுமதியும் எல்லாமும் சிறப்பாகச் செய்யறாங்க. எல்லாத்தையும் விடப் பெரிய வேலை தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் பொறுமையும் இருக்கே! நான்/நாங்க இந்த விஷயத்திலே ரொம்பவே வீக்! பொறுமை இல்லை! :)))))

    பதிலளிநீக்கு
  14. ஹா ஹா சுவையான கதம்பம்.
    முந்திக் கொண்டு வந்தது கிளிப்பேச்சு

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இந்த வார புதன் பதிவு அருமை. நிறைய யோசிக்க வைக்கிறது. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பன்முகத்திறமை உண்மையிலேயே மனமாற பாராட்டப்பட வேண்டியது. படைப்பாற்றல் பற்றிய தங்களது விளக்கத்தை மிகவும் ரசித்தேன்.

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் கேள்விகளும், அதற்கு தங்களின் பதில்களும் கண்டு பல முறை வியந்துள்ளேன். அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களின் புதிருக்கு நானும் 99 ஆக இருக்குமென யோசித்தேன். ஆனால் கருத்திடவில்லை. இன்று விடை கண்டேன். சூப்பர்.

    கிரிகெட் பார்த்து ரசிக்கும் அளவுக்கு தெரியுமே தவிர அவ்வளவாக தெரியாது. அனுஷ்கா மாதிரி அம்பயர்கள் இருந்தால், ஆட்டத்தை ரசிக்க ஆடியன்ஸ் நிறைய வர வாய்ப்புள்ளது.

    கிளி ஜோக் அருமை. இந்த மாதிரி கிளி கிடைத்தால், நாம் புத்திசாலி ஆகி விடலாம்.

    முப்பதடி உயரத்தில் வளர்ந்திருக்கும் மரத்தில் ஒரே ஒரு பழந்தானா? விசித்திரந்தான். அர்ஜுனன், கர்ணன் மாதிரி வில் வித்தை தெரிந்திருந்தால், பழத்தை பறித்து கொண்டு வந்து விடலாம். இல்லை திறமையுடன்"கவண்" உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும். எதற்கும் மரத்தின் கீழ் நன்றாக கேட்ச் பிடிக்கத்தெரிந்த ஒரு ஆளை தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் (எனக்கு) "ஆற்றல்" இல்லையாகையால், இந்தப்பழம் புளிக்கும் என்ற ரீதியில், மனதை தேற்றிக் கொள்ளலாம். அது ஒரு பழமாயிருப்பதால், அது ஞானப்பழம். நம்மிடந்தான் இன்னமும் ஞானம் வரவில்லையே எனவும் மனச் சமாதானமாகி விடலாம். பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. தே(ர்)டு அம்பயர் : இளமை அனுஷ் பாடிய பாடல் இப்போது வைரலாகி உள்ளது...

    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் – அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான் – அதை
    கொடுத்தாலும் வாங்கவில்லை – இந்தக்
    கன்னம் வேண்டுமென்றான்...


    (குறிப்பு : கவிஞர் கா.மு.ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பாடல்...!)

    கிளி : சீச்சீ... இந்தப்பழம் புளிக்கும்...!

    ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //(குறிப்பு : கவிஞர் கா.மு.ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பாடல்...!)//

      ஓ ஏன்ன்? இந்தப் பாடல் எப்பவும் பிடிக்கும் எனக்கு, எவ்ளோ அருமையான பாடல்.. இதை எழுதியதால் ஏன் விரட்டினார்கள்..

      நீக்கு
    2. //வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.//

      நீக்கு
    3. மியாவ் லிங்க் அனுப்பிட்டேன் மயில் கொண்டு வருது பாருங்க

      நீக்கு
    4. பெரியவங்க பெரியவங்கதான் அந்த காலத்தில் எவ்ளோ பொறுப்புணர்வு இருந்திருக்கு பாருங்க .

      நீக்கு
    5. நன்றி சகோ டிடி .நீங்க கோடிட்டு காட்டலைனா எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிருக்காது ஐயா கா.மு ,ஷெரிஃப் பற்றி

      நீக்கு
    6. @ திண்டுக்கல் தனபாலன்: அட, நல்ல பாட்டாச்சே.. அதுவா கா.மு. ஷெரிஃபை இப்படி விரட்டிவிட்டது? நல்ல காலம், ஷெரீஃபிற்கு இப்போது திரையில் வரும் தேவகானத்தைக் கேட்கும் வாய்ப்பு வரவில்லை. அவர் செய்த புண்ணியம்..

      நீக்கு
  17. அனுஷ் பற்றிச் சொல்லி விட்டு அனுஷ் படம் போடாமல் ஏமாற்றியது கூட பரவாயில்லை. அனுஷ்ஷை சக அம்பயராக போடாததற்கு வன்மையான வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே ஸ்ரீராமையும், ஏஞ்சலையும் என்னோட செப்பறைப் பதிவில் பார்க்க முடியலை. ஏஞ்சல் ரொம்ப நாட்களாகவே வரதில்லை. திடீர்னு ஒரு நாள் வரார்! அப்புறமாக் காணாமல் போகிறார்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் யார் கிட்டயும் சொல்லிடாதீங்க, ரகசியம். நான் குறிப்பிட்டிருக்கும் அம்பயர் மிஸஸ் விராட் கோ(ஹ்)லி!

      நீக்கு
    3. ஹையோ, விராட் மனைவி கூப்பிட்டால் உடனே பாட்டைத் தூக்கிக் கடாசிட்டு ஓடிடுவாரே! சரி சரி, நீங்க சொல்லும் அனுஷ்கா விராட் மனைவி அனுஷ்கா ஷர்மா என்கிறீர்கள் . புரியுது. அவங்க படமானும் போட்டிருந்தா ஸ்ரீராம் மனசுக்குச் சமாதானமா இருந்திருக்குமோ என்னமோ! :))))))

      நீக்கு
    4. மேலும், ஸ்ரீராம் நினைக்கின்ற அனுஷ்காவை சக அம்பயராக நிறுத்தினால், மைதானத்தில் விளையாடுபவர் யார் 'அப்பீல்' செய்தாலும், "கொஞ்சம் இருங்க இன்னொரு அம்பயரை கலந்தாலோசித்து முடிவு சொல்கிறேன்" என்று சொல்லி, கடலை போட சென்றுவிடுவார்!

      நீக்கு
    5. ///எங்கே ஸ்ரீராமையும், ஏஞ்சலையும் என்னோட செப்பறைப் பதிவில் பார்க்க முடியலை. ஏஞ்சல் ரொம்ப நாட்களாகவே வரதில்லை. திடீர்னு ஒரு நாள் வரார்! அப்புறமாக் காணாமல் போகிறார்.///
      ஹா ஹா ஹா கீசாக்கா, நீங்க பக்தி மயமாகப் போஸ்ட் போட்டு விட்டு வரேல்லையே எனத் தேடினால் எப்பூடி? அஞ்சு பாவமில்லையா? அடியும் புரியாம நுனியும் புரியாம என்ன சொல்லுவா வந்து, அதிராவே சைவப் போஸ்ட்டுகள் பார்த்து அலறுறேன்ன்:)).. நீங்க பொது விசயம் போடுங்கோ கும்மி நடக்கும்:))

      நீக்கு
    6. என்னாது அனுக்காவை அப்பயராகப் போடவில்லையாமா? கர்ர்ர்ர்:)).. ஒரு அடி எடுத்து வச்சு நடக்கவே அவவுக்கு ஒருநாள் தேவைப்படுது குண்டு:)) அவவுக்கு அம்பயர் போஸ்ட் குடுக்கோணுமாமோ கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா... ஒரு பாட்டை எடுத்துப் பார்த்தால், அதில் அனுக்கா டான்ஸ் ஆடுவதேயில்லை, நின்ற இடத்திலேயே உடம்பை ஆட்டுறா ஹையோ ஹையோ:))...

      ஹா ஹா ஹா மீ ஓடிப்போய் அந்த மாமர உச்சியில் ஏறிடுறேன்ன்ன்ன்:)).

      நீக்கு
    7. //எங்கே ஸ்ரீராமையும், ஏஞ்சலையும் என்னோட செப்பறைப் பதிவில் பார்க்க முடியலை.//

      எப்படியோ மிஸ் ஆகி இருக்கிறது! படித்துக் கருத்திட்டு விட்டேன்.

      நீக்கு
    8. ஷ்ஹ்ஹ் அதிரா மெதுவா பேசுங்க ஒரு ரகசியம் இப்போ அனுக்கா ஸ்லிம் ஆகியாம்

      நீக்கு
    9. ஆஆஆஆஆஅ அப்போ ஸ்ரீராமைப் பார்த்து அண்ணாஆஆஆஆஆ எனக் கூப்பிடப்போவது கொன்ஃபொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. ஹா ஹா ஹா நினைச்சேன் சிரிச்சேன்ன்:))

      நீக்கு
    10. அது கீதாக்கா நான் முழுசா புரிஞ்சி படிச்சாதான் கமெண்ட் போடுவேன் இன்னும் படிக்கலை :) சாமி பதிவில் விளையாட்டும் கூடாதே அதான்

      நீக்கு
  18. //தே(ர்)டு அம்பயர் : அனுஷ்கா. (கூட்டத்துல ஒருவராவது இளமையாக இருக்கவேண்டுமே!) //

    அனு அக்கா இளமைனு சொல்றீங்க? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்றது ஸ்ரீராமோட கனவுக்கன்னி அனுஷ்கா அக்கா!

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீசாக்கா மெதுவாப் பேசுங்கோ:) அனுக்காவைக் குறையாகச் சொல்லிட்டோமாமாம்ம்ம்ம்:) அதனால த்றீராம் ரொம்ம்ம்ம்ம்ம்பக் கோபத்தில இருக்கிறார்:).

      நீக்கு
  19. நீங்கள் கணக்கில் புலி என்று நிரூபித்து விட்டீர்கள். பிடியுங்கள் ஒரு பூங்கொத்து

    பதிலளிநீக்கு
  20. எங்கள் வீட்டில் யாருக்கும் மரம் ஏறத்தெரியாவிட்டால் என்ன? அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அப்படியா? அதில் யாரவது ஒருவரை வேண்டிக் கொள்ளலாம்.
    யாரையாவது பழத்தை பறித்து தர சொல்லி விட்டு, கூலி கொடுத்து விடலாம்.
    தெரிந்த வால் பையன், அல்லது பெண்ணை தாஜா செய்து மரத்தில் ஏற்றி விட வேண்டியதுதான்.
    முடிந்தால் மரத்தை உலுக்கிப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. ஹா ஹா ஹா எழுதியிருக்கும் கிளி யோக் அருமை, கிளி மட்டுமல்ல மைனாவும் பேசுமாம்:).... ஏன் நான் கூடத்தான் நல்லாப் பேசுவேனே:)..

    பதிலளிநீக்கு
  22. மாம்பழக் கதைக்கு வாறேன், ரெண்டு நீட்டுத்தடிகள் எடுத்துக் கட்டி, அதில ஒரு பாக் கட்டி.. அதனை உயர்த்திப் பிடிச்சு பறிக்கலாம்.

    இல்லை எனில், ஒரு தடியால கொப்பை ஆட்ட வேண்டும், கீழே இருவர் ஒரு பெரிய கம்பளத்தை விரித்த வண்ணம் பிடித்து நின்று, பழம் விழும்போது ஏந்திடோணும்:).

    நீட்டுத் தடி கிடைக்கவில்லை எனில், பெரிய கல்லு அல்லது மொத்தக் கட்டை.. பூரிக்கட்டைகூட ஓகே:).. அக்கொப்புக்கு எறிஞ்சால், பழம்தானே கொஞ்சம் கொப்பு ஆடினாலே விழும், கீழே எதையாவது சீட் பிடித்து ஏந்திட வேண்டும்...

    பரிசு எனக்குத்தேன்ன்ன்.. டக்கெனத் தாங்கோ மீக்கு ரைமாச்சு போகோணும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசா? அப்படி தடியடி கொண்டு பறித்த கூழ், கூழாகிவிட்ட மாம்பழத்தை, நீங்களே சாப்பிடுங்க அதுதான் பரிசு. முழுசாகப் பறிக்கச் சொன்னால், மாம்பழ உப்புமாவுக்கு ஐடியா கொடுக்கறீங்களே!

      நீக்கு
    2. ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பவும் உப்புமா நினைவிலேயே இருந்தால் பரிசை எப்பூடித் தருவீங்க...:)

      கல்லடி தடியடி எல்லாம் கொப்புக்குத்தானே, அப்படிக் கொப்பைக் குலுக்கினால் பழம் விழும், கீழே ஏதவாது கார்பெட், பெட்சீட் பிடித்து பழத்தை நலுங்காமல் குலுங்காமல் எடுத்திடலாம்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆ விளக்கம் குடுக்கிறதிலேயே உப்புமாவா இழைச்சிடுவன் போல இருக்கே:)..

      நீக்கு
    3. அதுவும் வாணாண்ணா.. இன்னொரு சூப்பர் ஐடியாச் சொல்லட்டோ?:)..

      எங்கட நித்தியானந்தா ஜுவாமியை சே..சே டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்ச்... புலாலியூர்ப் பூசானந்தாவைக் கூட்டி வந்தால், நாம் மேலே பார்த்துக் கீழே பார்ப்பதற்குள்... பழம் கையில:)).. மந்திரத்தாலே மாம்பலம்:) பிடுங்கிடலாமே:))

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ! ஒன்றாவது பிராக்டிகல் ஐடியாவாத் தெரியலையே!

      நீக்கு
  23. ஹீஹீ :) நான் ஏற்கனவே மீள்சுழற்ச்சி செஞ்சி எக்கச்சக்கமா வச்சிருக்கேன் ,இதுக்குன்னே நிறைய சேர்த்தும் வச்சிருக்கேன் இன்னும் சேர்க்கிறேன் தென்னைமர பன்னாடையைக்கூட விட்டு வச்சதில்லை .அதனால் எப்போ என்ன ஐடியா வரும்னு எனக்கே தெரியாதது அதான் கேள்வி கேட்டுக்கலை

    பதிலளிநீக்கு
  24. கிளிகள் அழகா பேசும் .எங்க வீட்டில் வளர்த்த செல்லம் விதவிதமான டோனில் என்னை கூப்பிடும் :)அப்பா அம்மா அன்ப செல்லமா கண்டிப்பா என்ன தொனியும் அதுக்கு அத்துப்படி

    பதிலளிநீக்கு
  25. மாம்பழம் மேட்டருக்கு வரேன்ன்ன் :)
    1,இவ்ளோ உயரத்தில் எட்டாத இடத்தில இருந்தா அது எதோ ஒரு பறவைக்கு சொந்தமானது .பொதுவாவே எங்க வீட்டில் ஊரிலும் சரி இங்கும் சரி பாதி பழங்களை மரத்தில் பறவைகளுக்கு விட்டுடுவோம் :)
    சோ அப்படி பறவைக்கு சொந்தமானதை நான் டச் பண்ண மாட்டேனே :)

    2, ஆனா கடவுள் கனவில் வந்து இல்லை ஏஞ்சல் இது உனக்கான பழம் நீ தான் சாப்பிடணும்னு சொன்னா என்னோட வளர்ப்பு குரங்குக்குட்டியை மரமேலேற வச்சி பறித்து கொண்டாரா சொல்வேன் :)


    3, உயரமான கிளைன்னா இங்கே டெலஸ்கோபிக் நீள poles கிடைக்கும் அதன் நுனியில் குச்சி துரட்டு கட்டி அருகில் ஒரு குட்டி லாண்டரி பாஸ்கட்டை கட்டி அதுக்குள்ள வைக்கோல் போட்டு பிடிச்சிடலாம் .இப்போல்லாம் இப்படிப்பட்ட பழங்களை பறிக்க ஸ்பெஷல் டூல்சும் இருக்கே

    4,நெல்லைத்தமிழன் மகள் செஞ்ச diy fruit picker ஐடியாவும் செய்யலாம் .கொஞ்சம் அகல பாட்டில் யூஸ் பண்ணனும் மாம்பழத்துக்கு





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியாக்கள்! வெரி குட். இன்னும் யாராவது ஐடியாக்கள் கொண்டுவருவார்கள் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் எங்கள் ப்ளாக் பதிவுகளில் ஆறு நாட்கள் வரை மட்டறுத்தல் இல்லாமல் கருத்துகளை வெளியிடலாம்.

      நீக்கு
  26. 1,அந்த நிமிஷத்துக்கு நமக்கு மனசுக்கு நல்லதுன்னு ,தோணுறதை செய்வது சரியா தப்பா ?

    2, பொறுப்புணர்வு ,சமூக அக்கறை என்பது இப்போதைய காலகட்டத்தில் யார் யாருக்கு அவசியம் ?

    3, அடிக்கடி ஹம் செய்யும் தத்துவப்பாடல் என்ன ??

    பதிலளிநீக்கு
  27. கிளிகள் பேசினால், மனிதன் ஊமை ஆவான்
    அருமையான படைப்பு

    பதிலளிநீக்கு
  28. கிளி பேச்சு சிரிக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  29. எங்கள் வீட்டுக்கு வரும் பறவைகளிடம் சொல்வேன் அவை அந்த மாம்பழத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து விடும்.
    முதலில் சொல்லிவிடுவேன், சேதபடுத்தாமல், கொத்தாமல் என்னிடம் கொண்டு வர வேண்டும் என்று.
    அல்லது அனுமனை வணங்கினால் அவர் அப்படியே பறித்து தந்து விடுவார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!