சனி, 23 பிப்ரவரி, 2019

பெண் நக்சலுக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரத்த தானம்


1) சித்து போன்ற விளையாட்டு வீரர்கள் இருக்கும் இடத்தில்தான் காம்பீர், சேவாக்குகளும் இருக்கிறார்கள்..


வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு என்னால் முடிந்தவரைக் குறைந்தபட்சமாக அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது சேவாக் சர்வதேச பள்ளியில் அக்குழந்தைகளை படிக்க வைக்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சேவாக்கின் அறிவிப்பை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்....





2)  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண் நக்சலுக்கு, மூன்று, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரத்த தானம் செய்தனர். இதற்கிடையில், வனப்பகுதியில் இருந்து, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வீரர்கள் கைப்பற்றினர். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த, நக்சல் முகாம்களையும் அழித்தனர்... 






37 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்புக் கொடுத்த துரைக்கும், வருகை தந்திருக்கும் தி/கீதாவுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு.

      நீக்கு
    2. நன்றி, நல்வரவு துரை செல்வராஜூ ஸார், கீதா அக்கா.

      நீக்கு
  3. சிறப்புறு செய்கைகளால் சீர் பெறுகிறது தாய்நாடு..

    வாழ்க பாரதம்..

    பதிலளிநீக்கு
  4. இரண்டுமே செம செய்திகள்.

    சேவாக் வாழ்க வளர்க! மிக மிக நல்ல மனது.

    இரண்டாவது செய்தி ஒரு நல்ல கருத்தைச் சொல்லுகிறது இல்லையா?

    இரண்டாவது செய்தி எனக்கு மிகவும் பிடித்தது. இது கிட்டத்தட்ட பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் செய்வது போல...நீ செய்யும் தவறுகளைத்தான் கண்டிக்கிறோம்....ஆனால் உன்னை அல்ல என்பது போல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அதே உணர்வில்தான் இந்தச் செய்தியை நானும் பகிர்ந்தேன் கீதா.

      நீக்கு
  5. அறிந்த சிறப்பான செய்திகள் இரண்டு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அன்பு கீதா,கீதாமா, துரை செல்வராஜு,ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    சேவாக் நற்செய்கையால்
    அந்தக் குடும்பங்களின் மனம் குளிர வேண்டும்.
    நக்சலைட்டுக்கு இரத்த தானம் செய்த வீரர்களுக்கு மனம் நிறை
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. இரண்டு செய்திகளும் மனித நேயத்தை சொல்கிறது.
    பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே! என்று சொல்லும் இரண்டாவது செய்தி உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது.
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ கோமதிக்கா ஹைஃபைவ்!!!

      நான் அடுத்து சொல்ல நினைத்த கருத்து பாரதியின் பாடல்...பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே!! எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல் அது...அதில் ஒவ்வொரு வரியும் அத்தனை அழகு!! பாரதி த க்ரேட்!!!!!

      அது ராகமாகவும் கற்றுக் கொண்டுவிட்டேன். பிடித்த பாடல் என்று அடிக்கடி பாடுவதுண்டு...

      கீதா

      நீக்கு
    2. நம் மனதைச் செப்பனிடவும் இந்தப் பாடல் மிக உதவும் இல்லையா கோமதிக்கா...

      கீதா

      நீக்கு
  9. நல்லதொரு செயல்கள் பாராட்டுவோம்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. இரண்டுமே நல்ல செய்திகள்தான். சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நிஜமாகவே கர்ம வீர்கள். வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  11. அமிதாப் 5 லட்சம் தருவதா சொல்லி இருந்தாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று கல்விக்குதவி,மற்றொன்று உயிர் காக்க உதவி. இரண்டும் மனமிருந்ததனால்தான் செய்ய முடிகிறது. போற்றுவோம். தர்மம் தலைகாக்கும். அன்புடன்

      நீக்கு
  12. ஸ்ரீராம்! fake news நாம் தேடாமலேயே வரும்! பாசிட்டிவ் செய்திகள் என்றால் நாம் தான் தேடிப் பார்த்தாக வேண்டும்! உதாரணமாக இங்கே https://timesofindia.indiatimes.com/goodnews/48953550.cms

    பதிலளிநீக்கு
  13. நல்லவையும் கெட்டவையும் நிறைந்ததே உலகு

    பதிலளிநீக்கு
  14. கிரிக்கெட் வீரர் ஷேவாக், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் போற்றப்பட வேண்டிய, மனிதம் நிறைந்த மாமனிதர்கள்!

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

    சேவாக் மற்றும் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  16. இரண்டுமே நல்ல செய்திகள்தாம். (ஆனா.... வீரமுடைய சேவாக், குண்டாகிட்டாரேன்னு கவலையா இருக்கு. அவரை மாதிரி வேகமா விளையாடும் ஓப்பனர், கேம் சேஞ்சர் இன்னும் வரலை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரமான, காரமான சேஹ்வாக்! உண்மைதான். பேருக்கேற்ற ஆள். பேசும்போது தெரியும் உள்ளே ஆள் ஒரு அப்பாவி என்று. பந்து என்றால் அடிப்பதற்குத்தான் என்று சொன்னவர். அப்படியே சர்வதேச அரங்கில் செய்து காட்டிய சிங்கம். அந்த ஒரு ஆக்ரோஷம் அதுவும், ஒரு துவக்க இந்திய துவக்க ஆட்டக்காரருக்கு - கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

      நீக்கு
  17. இரு செய்திகளுமே மிக அருமையான செய்திகள். இரண்டாவது செய்தி ஒரு உயிர்ப்புள்ள செய்தியாக மனித நேயச் செய்தி! எதிரியாக இருந்தாலும் கருணை காட்டும் செய்தி. அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!