வியாழன், 21 பிப்ரவரி, 2019

வயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்


காலை முதல் மாலை வரை...

வேலைக்குச் சென்றாலும் சரி, வெளியூர் சென்றாலும் சரி...  அங்கிருந்து நம் வீடு என்று நினைத்தால் உங்களுக்கெல்லாம் என்ன நினைவுக்கு வரும்?  வாசல் நினைவுக்கு வருமா?  எனக்கு அப்படிதான் நினைவுக்கு வரும்.  அதுவும் எப்போதோ நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது இருந்த வீட்டின் வாசல் அடிக்கடி நினைவுக்கு வரும்!  ஏனோ?  அதனால் எழுந்த சிந்தனைகளை வைத்து எழுந்தது கீழ்க்காணும் வரிகள்!  எப்போதோ எழுதி வைத்திருந்தது!


வாசல் வரை நினைவுகள் இரவு முழுவதும் 
எனக்காக 
காய்ந்து போய் 
காத்திருந்து 
காலை 
என் வரவில் 
ஈரமாகிறது 

என் வாசல்.

குளித்து 
முகம் அலங்கரிக்கப்பட்ட 
குழந்தைபோல் 
ஈரநிலத்தில் 
கோலமணிந்து 
புத்துணர்ச்சி தந்து 
வழியனுப்பி வைக்கிறது 
என் வாசல்.


வேலையாய் 
வெளியில் சென்று 
களைத்துத் திரும்பும் 
நாட்களில் 
எனக்கான வீட்டின் 
முகப்பாய், 
அடையாளமாய், 
கண்ணில்பட்ட உடனே 
உவகை கொள்ளவைக்கிறது 
பசுஞ்சாணி பூசிக்கொண்ட 
என் வாசல்.


இரவின் நிலவில் 
ஓய்வாய் அமர்ந்து 
பேசவும்,
உண்ணவும்,
மகிழவும் 
மடியில் இடம் தந்து 
உறங்க அனுப்புகிறது 
என் வாசல். 


==============================================================================================

ஒரு தடவை, எம்.எஸ் விஸ்வநாதன் சார்கிட்ட, '' 'சுஜாதா’ படத்துல 'நீ வருவாய் என நான் இருந்தேன்’னு ஒரு பாட்டு வருமே சார்... அந்தப் பாட்டு மாதிரியே எனக்கும் ஒரு பாட்டு கம்போஸ் பண்ணித் தர முடியுமா..?''னு கேட்டேன். அப்போ எம்.எஸ்.வி சார் சொன்ன கதைதான், 'நான் பாடும் பாடல்’.
அந்தப் பாட்டைப் பாடின பாடகியோட பேரு கல்யாணி மேனன். அதுதான் அவங்க பாடின முதலும் கடைசியுமான பாட்டு. அவங்களுக்கு நடந்தது காதல் கல்யாணம். அவங்க பாடகியாகணும்னு, அவங்க கணவர் நிறைய பேர்கிட்ட சான்ஸ் கேட்டு அலைஞ்சுருக்கார். ஆனா, அவருக்கு டெல்லிக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சுடுது. மனைவியை பாடகியாக்கியே தீரணும்னு அங்க இருந்தே முயற்சியைத் தொடர்றார். ஒரு வழியா வாய்ப்பும் கிடைச்சுடுது. எம்.எஸ்.வி-யும் அவங்களுக்கு ரெக்கார்டிங் தேதியை குறிச்சு கொடுத்துடறார். இதை கேள்விப்பட்ட கணவர், முதன் முதலா மனைவி ரெக்கார்டிங் தியேட்டர்ல பாடுறதை பார்க்க... டெல்லியில இருந்து கிளம்பி வர்றார். ரெக்கார்டிங் தியேட்டர்ல எல்லாம் ரெடி. ஆனா... கணவர் வர்றதுக்காக பாடாம காத்துட்டு இருக்கற கல்யாணிகிட்ட, 'நேரமாகுதும்மா... என்னை அப்பா மாதிரி நினைச்சுட்டு பாடு’னு எம்.எஸ்.வி. சார் தைரியம் சொல்றார். இவங்களும் கணவர் வரணும்ங்கிற ஏக்கத்துல உண்மையாவே உருகி உருகி 'நீ வருவாயென' பாட்டை... அழுது பாடறாங்க. அந்தப் பாட்டு அவ்ளோ தத்ரூபமா வந்ததா எல்லாருமே சந்தோஷப்பட்ட சமயம், அவங்க கணவர் இறந்துட்டதா தகவல் வருது. மனைவி பாடுறதைக் கேக்கணும்னு அவசரமா ஏர்போர்ட்ல இருந்து டாக்ஸியில வந்தவர், விபத்துல இறந்துடறார். கணவர் இறந்த பிறகு, பாடவே மாட்டேன்னு அவங்க முடிவு பண்ணினதா எம்.எஸ்.வி. சார் சொன்ன கதைதான், என் 'கௌரி’யோட கதை............................. .........................
இயக்குநர் சுந்தர்ராஜன்  சொல்லி இருக்கும் தகவல் இது.  கல்யாணி மேனன் அவர்களின் மகன்தான் இயக்குனர் ராஜீவ் மேனன்.


=================================================================================================

இப்படித்தாங்க...   அப்பல்லாம் ரொம்ப ஆழ்ந்து சிந்திப்பேன்!!!


எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பார்கள்.
எண்ணங்களின் சக்தி.

அதனால்தான் பலபேர் சேர்ந்து பிரார்த்தனையில் பலனிருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

எண்ணங்கள் மனதைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. அதனாலேயே OCD, STRESS போன்றவையும் வருகின்றன!

அடுத்தவர்களுடைய நம்மைப்பற்றிய எண்ணங்கள் நம்மைப் பாதிக்குமோ? எண்ணங்கள் வெளிச் செல்கின்றனவா, உள் வருகின்றனவா?

எண்ணங்களே இல்லாமல் இருக்க முடியுமோ... மனம் ஒன்றுமே யோசனை இல்லாமல் நிர்மலமாய், துடைத்த ஸ்லேட் போல இருக்குமோ... படம் முடிந்தபின் இருக்கும் வெண்திரை போல எதுவுமே இல்லாமல் மனம், சாத்தியம்?

அதற்கு வந்த எதிர்வினைகள்....!  உங்கள் கருத்து?

==========================================================================================

சென்ற வாரமே சேர்த்திருக்க வேண்டும்..   விட்டுப்போய்விட்டது!  ========================================================================================

161 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் , கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரவேற்ற துரைக்கும் இனி வரவேற்கப்போகும், வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு. கீதா பயணத்தில் இருப்பேன் எனச் சொல்லி இருந்தார்.

   நீக்கு
 2. நான் பாடும் பாடல் திரைப்படம் அனைவரும் விரும்பியதே...

  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 3. "நீ வருவாய்" பாடல் "சுஜாதா" படமா, "நான் பாடும் பாடல்" படமா? கொஞ்சம் அந்த இடத்திலே புரியலை. கல்யாணி மேனன் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ராஜீவ் மேனன் அவர் மகன் என்பது தெரியாது. ஆனால் அவர் இயக்கத்தில் எடுத்த படங்கள் பார்க்கும்படி இருக்கும். சுந்தரராஜன் சொல்லி இருக்கும் "கௌரி"என்னும் பெயரில் படம் வந்திருக்கா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா. ஆர் சுந்தர்ராஜன் இந்தக் காட்சியைத்தான் தனது "நான் பாடும் பாடல்" படத்தில் காட்சியாக வைத்தார். அதில் நாயகி அம்பிகாவின் பெயர் கௌரி.

   நீக்கு
 4. ஓ, அப்படியா, ஒருவழியா ம.ம.லே ஏறியது. சில சமயங்களில் இம்மாதிரிக்குழப்பங்கள் வருது! :( மனம் பதியாதது காரணமோ?

  பதிலளிநீக்கு
 5. அது சரி, உங்களோட சச்சிதானந்த அனுபவத்தில் என்னோட கருத்தை மட்டும் ஹைலைட் செய்ததன் மர்மம் என்னவோ? தாத்தா, பாட்டியாக இருந்தால் என்ன? அன்பு இருக்காதா? கட்டாயம் இருக்கும் என்பதைத் தான் இவங்க சொல்றாங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // மனம் பதியாதது காரணமோ? //

   இருக்கலாம் அக்கா.

   நீக்கு
  2. // என்னோட கருத்தை மட்டும் ஹைலைட் செய்ததன் மர்மம் என்னவோ? //

   ஹைலைட் செய்யவில்லை. ஸ்க்ரீன் ஷாட்டை நீளமாக பெரியதாக எடுக்க முடியாது என்பதால் தனியாக எடுத்தேன்.

   :))))

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  தேவகோட்டையார் வந்திருக்கிறாரே. திருமணம் நன்றாக நடந்ததா ஜி.
  ஸ்ரீராம் வாசல் பற்றிய கவிதை மிகவும் அழகு மா எனக்கும் எங்க வீட்டு வாசல்களும் இருந்த எல்லா வீட்டு வாசல்களும் நினைவுக்கு வருகின்றன.
  எத்தனை அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

  சுஜாதா படப் பாடலுக்குப் பின்னால் இந்தக் கதையா.
  பாவம் கல்யாணி மேனன். மிக மிக அருமையான பாடல்.
  ராஜீவ் மேனன் மிகத் திறமையான இயக்குனர்.

  எங்க காலனிக்கு அடுத்த காம்பவுண்டில் பெரிய அபார்ட்மெண்ட்ஸ் கட்டி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.

   வணக்கம்.

   உங்கள் வாசலை இப்பவும் அங்கிருந்து சிசி டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதுவே ஒரு அனுபவம்!

   அபார்ட்மெண்ட் காட்டியிருப்பது அமெரிக்காவிலா, மயிலையிலா?

   நீக்கு
 7. ஆஹா இந்த தாத்தா பாட்டியின் அன்பு எத்தனை அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் ப்ளாகிற்காக pose கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்!

   நீக்கு
  2. ஆமாம் அம்மா... எப்பவுமே மனதை நிறைக்கும், கண்ணைக் கவரும்!​

   நீக்கு
 8. எனக்கு வெளியே பயணம் செய்தால் எப்போ வீட்டுக்கு வந்து என்னோட படுக்கையில் படுப்பேன் என இருக்கும். அதைத் தான் எப்போதும் கனவாய்க் காணுவேன். வீட்டுக்கு வந்ததும் எல்லா அவசர வேலைகளையும் முடித்துவிட்டுப் படுக்கையில் படுத்தால் அப்பாடா எனத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளியே பயணத்தில் நமக்கு நினைவுக்கு வருவது வீட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பது பற்றிதான்... எனக்கும் கூட அப்படிதான். ஓய்வாக வெளியில் - இன்னொரு உறவினர் வீட்டில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...இருக்கும்போது வீட்டு நினைவு வந்தால்...?

   நீக்கு
  2. அதுவும் வரும். இன்னொருத்தர் வீடு என்றாலே நம் வீட்டுக்கு எப்போப் போவோம் என்றே நினைப்போம்.

   நீக்கு
 9. துரத்தும் எண்ணங்களிலிருந்து விடுபட முடியவில்லை. அதை நாம் துரத்துகிறோமா? அல்லது அவை நம்மைத் துரத்துகின்றனவா? என்ன தான் நினைக்க வேண்டாம்னாலும் எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்! என்ன செய்யலாம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் எண்ணங்கள் என்று நீங்கள் பிளாக் ஆரம்பித்து விட்டீர்கள்!!!!!

   நீக்கு
 10. வாசல் கவிதை மிக அருமை!! சில காலத்திற்கு முன் வரை, வெளியூர் சென்று ஊர் திரும்பும் எனக்கு இதே உணர்வைத் தரும், ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம்!!
  கல்யாணி மேனன் குறித்த தகவல்கள் நெகிழ்வு...
  காற்றை விட வேகமான மனத்தின் எண்ணங்களை கட்டுப்படுத்த சாதாரண மனிதனால் முடியுமா என்ன?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசல் கவிதையை ரசித்ததற்கு நன்றி மி கி மா..

   மனதின் எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால் ஞானி (அதிரா அல்ல!!!) ஆகிவிடலாமே!

   நீக்கு
 11. வாசல் பற்றிய உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
  கல்யாணி மேனன் பாடியிருக்கும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மேற்படி நிகழ்ச்சியை பக்கத்தில் இருப்பவருக்கு கூறுவேன். அவர் அலைபாயுதே படத்தில் ஒரு செகண்ட் வருவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசல் பற்றிய கவிதையை ரசித்ததற்கு நன்றி பானு அக்கா.

   நீங்கள் யாரிடம் சொல்லிக் கொண்டிருந்தீர்களோ, அவர் 'அலைபாயுதே' படத்தில் நடித்திருக்கிறாரா?

   நீக்கு
 12. எண்ணங்கள் இல்லாமல் இருப்பது சாத்தியம்தான்.

  பதிலளிநீக்கு
 13. "நீ வருவாய் என நான் இருந்தேன்
  ஏன் மறந்தாய் என நான் அறியேன்"

  இதுவுமே அறச்சொல்லுக்கு ஒரு உதாரணமோ? பொதுவா படத்தின் ஆரம்ப சீன் (முதல்ல சீன் ஸ்டார்ட் பண்ணும்போது) 'சக்சஸ்', 'வெற்றி' என்று பாசிடிவ் ஆன வரிகளையே எடுப்பாங்க.

  'கடவுள் இல்லை' என்று சொல்லி படம் எடுத்தாலும், படப்பிடிப்பு முடிந்தபிறகு பூசனிக்காய் உடைப்பாங்க. ஹாஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லைத்தமிழன்.. இதில் பெரிதாய் அறச்சொல் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

   இந்த 'சக்ஸஸ்' 'வெற்றி' வார்த்தை எல்லாம் பல படங்களில், குறிப்பாக தேவர் - எம் ஜி ஆர் கூட்டணிப் படங்களில் பார்க்கலாம்!

   நீக்கு
 14. எண்ணங்கள் இல்லா நிலைக்குப் போகும்போது 'ஆனந்த/பரவச' நிலைக்குச் சென்றுவிடுவோம்னு சொல்றாங்க. இதுக்கு நிறைய உதாரணங்கள்லாம் கொடுத்து எனக்கு தியானம் பழகித் தந்தபோது யோகா மாஸ்டர் சொன்னார். ஆயுள் முழுவதும் கைகூடாமல் இருந்தவர்களும் (முயற்சி செய்துகொண்டே இருந்து) இருக்கிறார்கள். உடனடியாகக் கைவரப் பெற்றவர்களும் இருக்காங்க.


  கீதா சாம்பசிவம் மேடத்தின் கருத்துக்கள் பெரிசா நீங்க வெளியிட்டிருந்ததும், அவங்க தியானத்தின் முதிர்ந்த அனுபவசாலியோன்னு நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனந்த பரவச நிலையா? அது எப்படி இருக்கும் என்று எனக்கெப்படித் தெரியும்?

   நீக்கு
  2. அதைப் பத்தி (ஆனந்தப் பரவச நிலை) எப்படின்னு விளக்கியிருக்காங்க. என்னை மாதிரி சாதாரணர்களுக்கு, பசி இருக்கும்போது சாப்பிடும் உணவே அந்தப் பரவச நிலையைத் தருவதுபோல் தெரிகிறது.

   நீக்கு
  3. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்! ஆகவே உங்களுக்கு விளக்கினவங்க சொன்னது தான் முடிவுனு, சரினு நினைக்க வேண்டாம் நெ.த.

   நீக்கு
  4. இல்லை கீசா மேடம்... பல புத்தகங்களில் பலர் அந்த அனுபவத்தைக் கோர்வையா எழுதறாங்க. எல்லாவற்றையும் படிக்கும்போது நாமும் ஒரு அனுமானத்துக்கு வர முடியும்.

   சந்தேஷ் எப்படி இருக்கும்னு சாப்பிட்டுப் பார்க்காம ஒரு முடிவுக்கு வர முடியாது அல்லவா?

   நீக்கு
 15. முக்கியமான 'தியானம், மனம் ஒருங்கிணைப்பு' என்று சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, அதனைப் பற்றிய கருத்துக்கள் எழும். சிலருக்கு 'ப்ரொஃபசர் மித்ரா' நினைவு வந்திருக்கிறது... இதுதான் மனது அலைபாய்வதற்கான உதாரணம். மனசை இழுத்துப் பிடிக்க முடிவது சாதாரணர்களுக்கு (அதாவது 99% மக்களுக்கு) சாத்தியமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதை இழுத்துப் பிடிப்பதே பெரிய விஷயம்.. ஆனாலும் மனதை இழுத்துப் பிடித்தால் அது அடங்காமல் திமிறிக் கொண்டே இருக்கும்...

   அப்படியே விட்டு விட்டால் ஒரு கட்டத்தில் அடங்கிப் போய் விடும்...

   நீக்கு
  2. மனசை இழுத்துப்பிடிக்க முடிவதா.. யாரு அது? எல்லா வேலயையும் அப்படியே போட்டுட்டு, இப்படியெல்லாம் இறங்கியது?
   மனசு நம்பள இழுத்துக்கிட்டு எங்கெங்கையோ போய்க்கிட்டிருக்குதுன்னு புரியறதுக்குள்ளேயேதான் இவன் கண்ணு மங்கிடுதே.. கதை முடிஞ்சிடுதே. இதிலே மனிதன், இழுத்ததாகவும், அப்படியே பிடித்ததாகவும்வேற சொல்லிக்கொள்கிறானா!

   நீக்கு
  3. ஆமாம்... மனிதன் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறான்....

   நீக்கு
  4. மனசிருந்தால் மனசிழுக்கும்! எண்ணங்களை நிறுத்துவது தூக்கதில்தான்! அப்பவும் அவை கனவுகளாகத் ததும்பி வெளிவந்து விடுகிறது!

   நீக்கு
 16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  நல்ல தொகுப்பு.

  கடைசி படம் அழகு........

  பதிலளிநீக்கு
 17. முத்தம் கொடுப்பது தன்னுடைய இளைய சகோதரனுக்காகவோ இல்லை மூத்த சகோதரனுக்காகவோ இருக்கும்னு உங்களுக்குத் தோணலையா? கணவனுக்குப் பொது இடத்தில் கொடுப்பார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரனாகவோ, மகனாகவோ இருந்தாலும் ஒரு வயதிற்கு பிறகு பொது இடத்தில் முத்தம் தரும் பண்பாடு நமதில்லையே நெ.த.

   நீக்கு
  2. //முத்தம் கொடுப்பது தன்னுடைய இளைய சகோதரனுக்காகவோ இல்லை மூத்த சகோதரனுக்காகவோ இருக்கும்னு உங்களுக்குத் தோணலையா?//

   பாஸிட்டிவாக நினைக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா?!!

   நீக்கு
 18. கடையிலே வியாபாரம் ஓடாவிட்டால், இப்படி கிழவியைக் கூப்பிட்டு முத்தம் கொடுக்கச் சொல்லலாம். யாராவது அதை கிளிக்கும் செய்யலாம்... லாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசல். மிக அருமையானது. வெளியில் எங்கு போய் வந்தாலும்,எப்போது வந்தாலும்,எப்படி இருந்தாலும், அப்பாடா நம்மிடத்திற்கு வந்தாச்சு என்ற மனதின் திருப்தி வாசலைப் பார்த்ததும் உண்டாகி விடுகிறது. வயதானவர்கள் இரண்டு கையையும் பிடித்துக்கொண்டு பொதுவில் அன்பைக் காட்டுவார்களே தவிர இது ஒருரகம் போலும். இந்த உலகம் பலவிதம். அன்புடன்

   நீக்கு
  2. லாம்... லாம்.... இப்படியும் விளம்பரம் ஆக... லாம்!

   நீக்கு
  3. வாங்க காமாட்சி அம்மா... நலம்தானே? வாசலை ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
  4. தப்பாய் நினைக்கிறோமோ. மறுபடி மறுபடி படத்தைப் பார்த்ததில் பெரியவர் காதில் ஏதோ சொல்கிறார் அந்த வயதான அம்மா! இதில் தப்பாய் நினைக்க ஏதும் இருப்பதாய் எனக்குத் தோன்றவே இல்லை.

   நீக்கு
  5. இதில் தப்பாய் இருக்கிறது என்று நான் சொன்னேனா என்ன?

   நீக்கு
 19. ஆஆஆஆஆவ்வ்வ் இன்று விசாளக்கிழமையோ:)...

  //வேலைக்குச் சென்றாலும் சரி, வெளியூர் சென்றாலும் சரி... அங்கிருந்து நம் வீடு என்று நினைத்தால் உங்களுக்கெல்லாம் என்ன நினைவுக்கு வரும்? வாசல் நினைவுக்கு வருமா?//
  இது புதுசா இருக்கெனக்கு, வாசல் நினைவுக்கு வருவது என்பது...

  எனக்கு என்றில்லை, எங்களுக்கு எப்பவுமே மேலே கீசாக்கா சொன்னதுபோலத்தான்.. பிளேனிலோ காரிலோ ரெயினிலோ அலையும் போது, எப்படா போய் எங்கட வீட்டு கட்டிலில் பொத்தென விழுந்து ஒரு நல்ல நித்திரை கொள்ளலாம் என பயங்கர மிஸ்ஸிங்காக இருகும்.

  அதேபோல, இன்னொன்று எங்கட வீட்டு சோஃபா .. அதிலிருந்து எப்போ ஒரு கப் ரீ குடிப்போம் என ஓடி வரச் சொல்லும்.. நான் வீட்டை விட்டு வெளியே போனாலே மிஸ் பண்ணுவது இந்த இரண்டையும்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவீட் - 16 ஆ? இது எப்போலேருந்து?

   நான் சொல்லவில்லை, நான் வித்தியாசமா ஜிந்திப்பேன்னு... (சொல்லலையா?) அதுதான் வாசல் பற்றி சிந்தித்திருக்கிறேன்!

   ஆனால் இப்பவும் எனக்கு அந்த இளமைக்கால வாசல் நினைவில் இருக்கிறது அதிரா!

   நீக்கு
  2. அது உண்மைதான், எனக்கும் எப்பவும் எங்கள் குட்டிக்கால வீடு, சன்செட்.. எல்லாமே அடிக்கடி அடிக்கடி கனவில் வரும்.. இப்போ ஆமி அடிச்சு உடைச்சு தரை மட்டமாக்கியிருந்தாலும்...

   நீக்கு
  3. //சுவீட் - 16 ஆ? இது எப்போலேருந்து?//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க?:)).. நாம் இப்படியே எண்ணிக் கொண்டிருந்தால் சுவீட்16 ஆகவே இருப்போம் ஸ்ரீராம் இருப்போமாம்ம்ம் ஹா ஹா ஹா:)..

   நீக்கு
 20. வாசல் கவிதை மிக அழகு... தத்த்ரூபமாக உண்மையைக் கவிதையாகச் சொல்லிட்டீங்க..

  இலங்கையிலும் பொதுவா வீடு எனில், எல்லா வீட்டிலும் சன்செட் என ஒன்று நிட்சயம் இருக்கும். அதாவது.. வாசல் படியை சற்று பெரிதாக கட்டி மேலே பிளேட் போட்டிருக்கும்.. அதில் சைட் படி, குந்து.. இபடி பல டிசைனில் இருக்க வசதியாக அமைக்கப்பட்டிருக்கும்.. சிலர் கார் பார்க்கிங்க்காக கொஞ்சம் பெரிதாக கட்டுவார்கள்.. அதுதான் நம் எலோரினதும், விளையாட்டு, பேச்சு, குடும்பமாக இருந்து அரட்டை, ஏன் சிலசமயம் பிளேட்டை எடுத்து வந்து அதிலே இருந்து சாப்பிடுவது இப்படி அனைத்துக்கும் உரிய இடமாக இருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாசல் கவிதை மிக அழகு... தத்த்ரூபமாக உண்மையைக் கவிதையாகச் சொல்லிட்டீங்க..//

   நன்றி அதிரா...

   நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமான தகவல்கள்.

   நீக்கு
  2. இப்படித்தான் இருக்கும் ஸ்ரீராம் நம் ஊர் வீடுகள், கூரையும் சன்செட் உம் இல்லாமல் வீடுகள் இல்லை. அதனால்தான் அம்மா சென்னை வந்துவிட்டுச் சொன்னா.. “அதிரா இங்கு ஒரு வீட்டுக்கும் கூரை இல்லை” என ஹா ஹா ஹா..

   http://www.lankaholidays.com/pics/30830/j-1.jpg

   http://www.lankaholidays.com/pics/39189/1490694250863-379520637.jpg

   நீக்கு
  3. மிகவும் அழகாய் இருக்கின்றன அதிரா... எப்போதும் உள்ளே வெப்பம் தெரியாது, இல்லையா?

   நீக்கு
  4. இதில இன்னொரு விசயமும் இருக்கு, இந்த சன்செட் இன் மேலேயே அழகாக வீட்டின் பெயர் பொறித்திருப்பார்கள், அப்போ கடிதங்கள்கூட வீட்டின் பெயர் போட்டு விட்டால் தப்பாமல் வந்துவிடும்.

   இலங்கையில் பெண்பிள்ளைகளுக்குத்தானே வீடு, காணி எல்லாம் குடுப்பினம், அப்போ எங்கள் அம்மாவுக்கு ஊரில் குடுத்த வீட்டுக்கு அம்மாவின் பெயர் இணைந்து தாங்கியிருந்தது.. “திருப்பதி”
   என.

   பின்பு நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, அப்பா தன் உழைப்பில் ஒரு வீடு கட்டினார்.. அதுக்கு அண்ணனின் பெயரை இணைஅச்சு சன்செட்டில் “சிவபதி”.. பதி என்றால் வீடு... என வச்சார்.

   பின்னர் ஆமிக் கலவரத்தில் வீட்டை விட்டு வெளிக்கிட்டபின்னர் சொன்னார்கள், வீட்டை ஆமி இடித்து விட்டார்கள், ஆனா சன்செட் மட்டும் “சிவபதி” என அப்படியே உடையாமல் இருக்குது என்று:).

   நீக்கு
  5. சிவன் அவ்வளவு ஸ்ட்ராங்!

   புதிய தகவல்கள். நெகிழ்வு.

   நீக்கு
  6. ஸ்ரீராம் இலங்கையிலும் கேரளத்திலும் சரி முகப்பு நாம போர்ட்டிகோ என்று சொல்லுவோமே இப்படி இல்லாமல் கட்டுவதில்லை..

   கீதா

   நீக்கு
  7. அதிரா உங்கள் வீடு பற்றிய தகவல் மனதை நெகிழச் செய்தது...

   கீதா

   நீக்கு
 21. கல்யாணி மேனன் கதை படிச்சு.. மனம் கனக்கிறது... சில சமயம் சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படியாகிவிடுகிறது, அது ஏதோ ஒரு காரணத்தால் காட்டிக் கொடுக்கிறது மரணம், அப்போ நமக்குப் புரியாது, நடந்தபின் சிந்திக்கும்போது புரியும். ஒருசிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், குளிக்கும்போது தாலி கழண்டு விழுந்துவிட்டது, பின்பு செய்தி வருகிறது கணவர் காலமாகிவிட்டார் என இப்படி.

  ஆனா அதுக்காக அப்படி நடந்தால் நிட்சயம் இப்படி ஆகும் என்றில்லை, இதைக்கேட்டுப் பலருக்குப் பதட்டம் வந்துவிடும், ஆனா சிலரது வாழ்வில் இப்படி சில சகுனங்கள் காட்டிக் கொடுப்பதுண்டு.. அது நமக்கு அப்போ புரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், சில நம்பிக்கைகள்....

   ஆனால் சில விஷயங்களை அவை நடந்த உடன் நாம் எதையாவது இப்படி நினைத்து ரிலேட் பண்ணுவோம்... அது வேறு இல்லையா?

   நீக்கு
 22. //இப்படித்தாங்க... அப்பல்லாம் ரொம்ப ஆழ்ந்து சிந்திப்பேன்!!!//

  அப்போ இப்போ....ஆஆஆஆஆஆஆஆஆஆழ்ந்து ஜிந்திப்பதில்லையோ?:)..ஹா ஹா ஹா.

  சிந்தித்தால் சிரிப்பு வரும்...
  மனம் நொந்தால் அழுகை வரும்....:).

  கூட்டுப் பிரார்த்தனையில் பவர் அதிகம் எனத்தான் சொல்கிறார்கள், இருக்கும்.

  நம் எண்ணங்களின் சக்திதான், நம்மை உருவாக்கி வைத்திருக்குது என்பதும் எல்லோரும் சொல்கின்றனர், ஆனா என்னைப்பொறுத்து அதையும் தாண்டி.. “விதி” என ஒன்றிருக்குது. சிலது எப்படித்தான் நல்ல எண்ணத்தோடு நாம் உருகி உருகி இருந்தாலும் விதி நம்மைக் கவிட்டுப் போடும்.

  ஆனாலும் சில இடங்களில் பார்க்கிறேன், இப்படித்தான் வேணும் எனக்கு, இதுதான் படிப்பேன் நான், இப்படி வீடுதான் வாழ்க்கையில் வேணும் என, இப்படி பயங்கர ஆர்வமாக[கொஞ்ச நஞ்சல் அல்ல, அது உள்ளுக்குள்ளிருந்து வரோணும்], பைத்தியமாக இருப்போருக்கு அது நிறைவேறியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பல்லாம் சிந்திப்பதே இல்லை! எது நேரம்?!!!

   நீங்கள் சொல்லி இருக்கும் பாடலை நானும் அறிவேனே...

   நீக்கு
 23. ///அடுத்தவருடைடைய, நம்மைப் பற்றிய எண்ணங்கள் நம்மைப் பாதிக்குமோ?///

  “நாம் எண்ணுபவை நடக்கும்- ஆனா அவை நல்ல எண்ணங்களாக இருந்தால் மட்டுமே”

  இப்படியும் ஒரு தத்துவம் இருக்கு, இது 100 வீதம் உண்மை, அடுத்தவரை சும்மா சும்மா திட்டினால் அது பலிக்குமோ? எப்படிப் பலிக்கும்?..

  ஆனா அடுத்தவர் நமக்கு ஒரு கெடுதல் அல்லது நம்பிக்கை துரோகம் செய்தால், அதுக்காக நாம் திட்டாவிட்டாலும், நம் மனதால் அழுவோமே.. இப்படித்துரோகம் பண்ணிட்டினமே.. நம்பி நடந்தோமே என.. அப்படியான விசயம் நிட்சயம் அடுத்தவரைப் பாதிக்கும்...

  அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பினம்... ஆனா இக்காலத்தில் தெய்வமும் கொஞ்சம் விரைவாகவே அறுத்து நமக்குத் தெரிய படுத்துகிறதோ எனவும் சில சமயம் எண்ண வைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரு நாக்கு என்பார்கள். அப்படிபப்ட்டவர்கள் சொன்னால் அப்படியே நடக்குமாம். சொன்னால் நடப்பது வேறு, அவர்கள் எண்ணினால்? எலிபதி... ச்சே... டெலிபதி என்று ஒன்று இருக்கிறதாம்... எண்ணங்கள் மூலமாகவே பேசிக்கொள்ளலாமாம்!

   நீக்கு
  2. இந்த விஜய்பதி.. சே..சே எனக்கும் டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர் டெலிபதியும் 100 வீதம் உண்மையே.. என் வாழ்வில பல சமயம் நடக்கும்.. ஃபோனை அடிக்க கை வைக்கும்போது அந்த நபரிடமிருந்து மெசேஜ் வரும்..

   சில நிமிட மெளனத்தின் பின் , நான் ஒரு விசயம் சொல்ல வாய் திறக்கும்போது, அதே விசயம்பற்றி கணவரும் வாய் திறப்பார்ர்... ஹா ஹா ஹா நமக்கே வியப்பாக இருக்கும்.. ஏன்.. அஞ்சுவைக் காணமே என நினைக்கும்போதே அவவின் மெயில் வரும்:).

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கொமெண்ட் போட தொடங்க முன் வந்துது:).

   நீக்கு
  4. ஹா.... ஹா... ஹா... அவிங்க நெம்ப பிஸி போல!

   நீக்கு
  5. பிஸி இல்லை அவ ஒரு அலர்ஜி பிஸ்ஸ்ஸ்ஸ்:)).. ஹா ஹா ஹா தேவையில்லாமல் எதையாவது உள்ளே தள்ளிப்போட்டு:) மயங்கி மயங்கி நித்திரை கொள்ளுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இன்று வருவா என வானிலை அறிக்கை சொல்லுது:))

   நீக்கு
  6. பிஸிதான் :) வீட்ல ஒரு பங்க்ஷன் :)
   ஆனா நேத்து ஹைபிரிட் கத்திரி கொஞ்சம் வேலை காட்டிடுச்சி :) அதான் நேத்து முகம் காட்டலை எங்கும்

   நீக்கு
 24. சிந்தனை-எண்ணம்.... இது இல்லை எனில் அது மரணத்துக்குச் சமனான ஒன்றாகிடுமே:). நம்மை வாழ வைத்துக் கொண்டிருப்பதே நம் எண்ணங்கள்தானே:).. நம் எண்ணப்படிதான் நம் வாழ்க்கை எனவும் பேசி விட்டு.. எண்ணுவதை நிறுத்து எனவும் எப்படிச் சொல்வது?..

  “எட்டாத கனியானாலும், மனதுக்கு எட்டாமல் போய் விடுமோ?” --கண்ணதாசன் அங்கிள் சொன்னது..

  நம்மை மகிழ்ச்சியாக, உயிரோட்டமாக வைத்திருப்பது நம் சிந்தனைகள்தானே?.. அது நம்மைப்பற்றிய, நல்ல சிந்தனையாக இருக்கும்போது, அடுத்தவருக்கும் தெரியாது, அதே நேரம் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவுது.

  கிழிஞ்ச பாயும் படுத்துக் கொண்டே கிளியோப்பத்த்ராவைக் கனவு காணும் தம்பி... என வைரமுத்து அங்கிளின் கவிதையில் வருது.. ஹா ஹா ஹா ஒருவேளை அப்படி எண்ணம்தான் அவரை மகிழ்வாக வைத்திருக்க உதவுதுபோலும்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மை வாழ வைப்பது அல்ல, வாழ்கிறோம் என்பதற்கு சான்றாக இருப்பது எண்ணங்கள்!!!

   கிழிச்ச பாயும் கிளியோபாட்ராவும் - மு மேத்தாவின் விழிகள் நட்சத்திரங்களை கவிதையை நினைவூட்டவில்லை?

   நீக்கு
 25. கவிதை மிக அருமை.

  இனிய பாடலுக்குப் பின்னால் இப்படி ஒரு சோகம்.

  எண்ணங்களே இல்லாத நிலையை தியானத்தால் மட்டுமே எட்ட முடியும் என்பார்கள். அது அத்தனை எளிதல்லவே.

  நல்ல தொகுப்பு.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையை ரசித்ததற்கு நன்றி ராமலக்ஷ்மி.

   தியானம் செய்த நாட்களில்தான் எனக்கு கோபம் அதிகமாக வந்தது!!!! அப்புறம் நிறுத்தி விட்டேன்! அனாவசிய ரிஸ்க்!

   நன்றி.

   நீக்கு
  2. ஸ்ரீராம், டயட் பண்ணும்போதும் முதலில் நம் உடல் ரியக்ட் பண்ணுமாம்.. அப்போ டயட் பண்ணியவுடன் வெயிட் ஓவராக காட்டுமாம்.. பயந்து நிறுத்திடக்கூடாதாம் டயட்டை:).. அப்படி இருக்குமோ இதுவும்:))

   நீக்கு
  3. டயட் பண்ணிய உடன் வெயிட் ஓவராக் காட்டுமா? அப்படியா? அதுசரி, டயட் இருந்திருந்தால் அல்லவா எனக்கு அது தெரியும்?!!

   நீக்கு
  4. //சுவீட் - 16 ஆ? இது எப்போலேருந்து?//

   சிலசமயம் அப்படித்தான் கூடிப் பின் குறையுமாம்.. ஒருநாள் டயட் பண்ணுங்கோ ஸ்ரீராம்:).. ஆனா டயட்டில் இருக்கும்போது கோபம் கோபமா வரும் ஹா ஹா ஹா:). தியானத்துக்கே உங்களுக்கு வந்ததெனில்????? வீட்டில் ஒரு போர்ட் போட்டு விட்டு டயட்டில் இருங்கோ.. இல்லை எனில் அண்ணிக்குப் புரியாதெல்லோ எதுக்கு கோபிக்கிறீங்க என:)..

   நீக்கு
  5. //டயட் பண்ணிய உடன் வெயிட் ஓவராக் காட்டுமா? அப்படியா?//

   சே.. மேலே இதை கொப்பி பண்ண, அது பழைய கொப்பி பண்ணியதை பேஸ்ட் பண்ணிட்டுது கர்ர்:))

   நீக்கு
 26. //எண்ணங்களே இல்லாமல் இருக்க முடியுமோ//
  முடியும். அது கீசாக்காவின் ப்ளோக் ஆனால்.​

  மோடி கட்டிப்பிடிச்சப்போ டிரம்ப் முழித்த மாதிரி தாத்தா முழிக்கிறார்.
  காதல் முத்தம் என்றால் தாத்தா சந்தோஷப்படுவாரே. ​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜேகே ஸார்... தாத்தா முழிப்பது மாதிரியா இருக்கிறது? மகிழ்வாய் சிரிப்பது மாதிரி இல்லை? எனக்கு அப்படிதான் தெரிகிறது!

   நீக்கு
 27. எண்ணம்-சிந்தனை-கற்பனை என்பதைக் கட்டுப்படுத்துவது தியானம் எனத்தான் சொல்கிறார்கள்..

  ஆனா நான் நினைக்கிறேன்... தியானம் என்பது, நம்முள் எழும் பயம், தேவையில்லாத பதட்டம் இப்படியானவற்றைக் கட்டுப்படுத்துவதே தியானமாக இருக்குமோ..

  ஏனெனில் தியானம் நமக்கு நல்லதே. நல்ல கற்பனை, மகிழ்ச்சியான சிந்தனை எப்பவும் மகிழ்ச்சியாக இருப்போருக்கு தியானம் தேவைப்படாதோ?. ஆனா அப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமோ? அது சாத்தியமிலைத்தானே? அதனால நமக்கு தியானம் நல்லதுதான் எனத்தான் உலகமே சொல்லுது.

  நானும் தியானம் பண்ண முயற்சிக்கிறேன் முயற்சிக்கிறேன்ன்.. முதல் ஒரு நிமிடம் மட்டும் ஓரளவு கட்டுப்படுத்தி விடுகிறேன். கண்ணை மூடி அதுக்குள் என்ன தெரியுது என அதை ரசிச்சுப் பார்ப்பேன்ன்.. பல புள்ளிகளாக லைட்போல, உருவம் எல்லாம் தெரியும் கண்ணுக்குள்.. ஆனா 2வது நிமிடம், அந்தக் கண்ணுக்குள் தெரியும் புள்ளியிலிருந்தே என்னை அறியாமல், நான் கற்பனை உலகில் விரிந்து பறப்பேன், உடம்பு மட்டும் தியானத்தில் இருக்கும்.. 4,5 நிமிடத்தால் திடுக்கிட்டு ஹையோ எங்கே போய் விட்டேன் என நிதானத்துக்கு வருவேன் ஹா ஹா ஹா..

  உண்மையில தியானம் பண்ணுவது, சிலசமயம் வேலையில் பிரச்சனை, இல்லை நம் உறவுக்குள் ஒருவருக்கு சுகயீனம் என்றாலோ.. மனம் அதையே நினைச்சு நெஞ்சு படபடப்பாகி தூக்கமின்மை, பிரெசர் ஏறும்.. இப்படி வரும்போது, தியானம் பண்ணுவதால் உடம்பு நோர்மலுக்கு வருமாம்... அதாவது அந்த தியானம் பண்ணும் 5 நிமிடங்களாவது இவற்றை மறந்திருப்போம் எல்லோ.. அப்போ உடம்பு தன்னை சீர் படுத்திக் கொள்ளும்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆஆஆ எங்கே என் செக்கைக் காணம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்தர ஆபத்துக்கு ஒரு ஹொட் மங்கோ யூஸ் கேட்கலாம் என்றால் எங்கே போயிட்டாவோ.. இந்த ரேஞ்சில போனால் வாற மாதமும் சம்பளம் கட்:).. ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியானம் என்பது எண்ணங்களைக் கட்டுப்படுத்துகிறதோ இல்லையோ.... மூச்சைக் கட்டுப்படுத்தும் என்பார்கள். நமக்கு இந்த ஆயுளில் இவ்வளவு மூச்சு என்று அளந்து கொடுக்கப்பட்டிருக்கிறதாம்... அதை அளவாகப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் வாழலாமாம். சித்தர்கள் ஜீவித்திருப்பது இப்படிதானாம். எங்கேயோ படித்தேன்.

   தியானம் செய்யச்செய்ய பல வருடங்களில் கொஞ்சம் முன்னேற்றம் தெரியலாம். முடிந்தால் குண்டலினியையும் எழுப்பலாம்! அதற்கெல்லாம் நமக்கு பொறுமை பத்தாது!!

   நீக்கு
  2. தியானம் மூச்சைக் கட்டுப்படுட்த்ஹுமோ? புதுசா இருக்கே இது? அதெப்படி? நன்கு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டுதானே தியானம் பண்ணச் சொல்கின்றனர்.... தெரியல்ல...

   நீக்கு
  3. அதிரா.....மூச்சை முழுமையா இழுத்து மெதுவா வெளியிடணும். நம் கவனம் மூச்சில் மட்டும் இருக்கணும். 15+ மூச்சுகளிலிருந்து 4க்குக் குறைக்கணும். போகப் போக இன்னும் குறையும். நம் கவனம் மூச்சில்தான். இது நடக்கும்போது கண் மூடுவது கண்ணால் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக.

   யாராவது, கண்ணை மூடிக்கொண்டு கனவு காணுங்கள்னு உங்களுக்குச் சொல்லித் தந்திருப்பார்களோ? இல்லை பார்க், பெஞ்ச், மலர்க்கொத்து இவைகளை நினைத்து, கண்ணை நீங்கள் தியானத்துக்பாக மூடியதும், அறையின் உஷ்ணம் குறைவதை உணர்ந்து (அவங்க அறைக்குள்ஏ வந்துட்டாங்க), பயப் அதிகமாகி, மூச்சு குறைவதற்குப் பதில் அதிகமாகிறதோ?

   நீக்கு
  4. ஹா... ஹா.. ஹா...

   'கதவைத் திற காற்று வரட்டும்' மாதிரி 'கண்ணைத்திற கனவு வரட்டும்!!'

   நீக்கு
  5. ஹா ஹா ஹா கர்ர்ர்:) நான் போனது ஸ்கொட்டிஸ் தியானமெல்லோ. மூச்சை நோர்மலாக விட்டுக் கொண்டு, றிலாக்ஸ் ஆக இருந்து.. கடலை சிந்தியுங்கோ.. அதில் அலை அடிப்பதை நினையுங்கோ.. அதில் நீங்கள் இறங்குவதுபோல நினையுங்கோ.. இப்படிச் சொன்னார்கள்:).. எனக்கு அப்படி நினைச்சால்ல்.. எங்கட கடற்கரை பழைய நினைவுகள்.. சின்ன வயசு எல்லாம் நினைவுக்கு வந்து அங்கு போய் விடுகிறேன்ன் ஹா ஹா ஹா கர்:)

   நீக்கு
  6. தியானத்திற்கும் மூச்சுப் பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை. தியானம் என்பது எண்ணங்களிலிருந்து விலகி நின்று நம்மை நாமே பார்ப்பது போலனு வைச்சுக்கோங்க! அப்போ நம்முடைய உண்மையான சொரூபம் தெரியும் என்பார்கள்.

   ஆனால் மூச்சுப் பயிற்சி, ஸ்ரீராம் சொல்லி இருப்பது, சித்தர்கள் மூச்சைக் கட்டுப்படுத்தச் சொன்னார்கள் என்பது முற்றிலும் வேறு. யோகாசனங்கள் செய்கையில் மூச்சுப் பயிற்சியை முடிச்சுட்டுக் கடைசியில் தான் தியானம் செய்யச் சொல்வார்கள். தியானம் முடிந்து எழுந்திருக்கும்போது மனம் ஒருமைப்பட்டிருக்கும்.

   நீக்கு
  7. ஆஆஆஆங்ங்ங் கீசாக்கா சொல்வதுதான் சரீஈஈஈஈஈஈஈஈஈஈஈ... மீ இதை படுபயங்கரமாக ஆமோதிக்கிறேன்ன்.. நெல்லைத்தமிழன் தேம்ஸ் கரைக்கு சே..சே...மேடைக்கு வரவும்..:)

   நீக்கு
  8. ஓ... அது வேற, அது வேறயா? கீதா அக்கா... நல்லா யோசிச்சு சொல்லுங்க... கொஞ்சம் சம்பந்தம் இருக்கு போலிருக்கே...

   நீக்கு
  9. மூச்சுப் பயிற்சியில் பலவிதங்கள் உள்ளன. ஒரு மூக்கால் மட்டும் மூச்சை விடுவது! இரண்டு பக்க மூக்காலும் வேகமாய் விடுவது! ஒரு பக்க மூக்கை அடைத்துக்கொண்டு இன்னொரு பக்கத்து மூக்கின் மூலம் மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு சிறிது நேரம் உள்ளேயே நிறுத்திவிட்டுப் பின்னர் இன்னொரு பக்கத்து மூக்கின் வழியே நிதானமாக மெதுவாக விட வேண்டும். இதெல்லாம் செய்தால் மூச்சுக்காற்று விடுவது சீர்பட்டு நம் வாழ்நாளில் நாம் விட வேண்டிய மூச்சுக்காற்றின் காலம் அதிகரிக்கும். இது முழு உண்மை! எவ்வளவுக்கு எவ்வளவு மூச்சை உள்ளே நிறுத்துகிறோமோ அவ்வளவு நல்லது. இம்மாதிரி ஒரு மூக்கால் மூச்சை விட்ட பின்னர் இப்போது மறுபக்கத்து மூக்கால் மூச்சை உள்ளே இழுத்து அதே போல் வெளியே விட வேண்டும். மாறி மாறிச் சிறிது நேரம் இதைச் செய்ய வேண்டும். ஆனால் தக்க குருநாதர் சொல்லிக் கொடுக்காமல் நாமாகச் செய்யக் கூடாது! மூச்சுப் பயிற்சி மட்டுமே தியானம் இல்லை.

   இந்த் அமூச்சுப் பயிற்சி முடிந்ததும் கீழே மல்லாந்து படுத்துக் கொண்டு அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மனதை ஒருமுகப் படுத்திக்கொண்டு ஏதேனும் ஒரு பொருளை மனதில் நினைத்து, அதன் மேலே பார்வையை நெற்றிக்குள் கொண்டு வர வேண்டும். அதாவது ஒரு ஜோதியைப் பார்ப்பதாக நினத்தோம் எனில் அந்த ஜோதியை மெல்ல மெல்ல நம் நெற்றிப்புருவங்களுக்கு இடையே கொண்டு வரணும். கண்கள் அதையே பார்க்கணும். அப்போது நாம் அனுபவிப்பதை வெளீயே சொல்ல முடியாது! பின்னர் சட்டுனு கீழே இறங்கக் கூடாது. மெல்ல மெல்ல ஜோதியைக் கீழே இறக்கி நெஞ்சில் நிறுத்திப் பிரார்த்தனை செய்து பின்னரே கண் திறக்கணும். இதெல்லாம் பெரிய விஷயம்.

   நீக்கு
  10. தியானம் முடிந்ததும் உடனே எழுந்திருக்கக் கூடாது. மனம், உடல் இரண்டும் உலக இயல்புக்கு வர நேரம் எடுக்கும். குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்களாவது படுத்திருந்து தியானம் செய்தால் படுத்த நிலையிலேயும் பத்மாசனத்தில் தியானம் செய்தால் ஆசனத்திலேயும் அமர்ந்து இருந்து விட்டு மெல்லப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னிலைக்குத் திரும்ப வேண்டும்.

   நீக்கு
  11. ///ஸ்ரீராம்.21 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 3:44
   கும்பிட்டுக்கறேனுங்க.....//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா பாருங்கோ ஸ்ரீராமை.. சிரிக்கிறார் மூச்சுப்பயிற்சிக்கு:)

   நீக்கு
  12. கீசாக்கா அதிலும் ஸ்ரெப்ஸ் இருக்குதெலோ.. எடுத்தோம் கவித்தோம் என செய்யக்கூடாதாம்.. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டோணுமாம்.. இதுபற்றி கோமதி அக்காவுக்கும் தெரியும் என நினைக்கிறேன்.

   நான் முதல் தடவை மூச்சுப் பயிற்சி செய்தபோது ரெண்டு நாளா நெஞ்சு நோ.. ஏனென்றால், மூச்சுப் பயிற்சி செய்தமையாலதான், சில இடங்களுக்கு காற்றுப் போயிருக்குதாம், எப்பவும் சும்மா மூச்சை விடும்போது, பல இடங்களுக்கு காற்றுப் போகாதாம்.. இப்போ அந்த நோ வருவதில்லை.. பழகிவிட்டது போலும்.. அதே நேரம் நான் எங்கே செய்கிறேன் மூச்சுப் பயிற்சி :)) ஹா ஹா ஹா.. நினைச்சுப்போட்டு விட்டு விடுவேன்ன்..

   நீக்கு
  13. //குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்களாவது படுத்திருந்து தியானம் செய்தால் //

   ஆரம்பத்தில் இது எனக்கு தெரியாது கீசாக்கா, நிமிர்ந்து இருந்துதானாக்கும் தியானம் செய்யோணும் என நினைச்சேன்.. சமீபத்தில் போன மாதம்தான் அறிஞ்சேன் படுத்திருந்தும் செய்யலாமே என...

   நீக்கு
  14. அடடா... உஸ்தாத் கி உஸ்தாத் எல்லாம் இருக்காங்க.. தேவை இல்லாம வாய் விட்டு மாட்டிகிட்டேடா ஸ்ரீராம்...

   நீக்கு
  15. ஹா ஹா ஹா பாருங்கோ அதனால்தான் நெல்லைத்தமிழனும்.. ஒளிச்சிருந்து வோச்சிங்:))

   நீக்கு
  16. கீசா மேடம்.... நீங்க தவறாப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். மூச்சுப் பயிற்சி அல்ல. கவனம் எதிலாவது இருக்கணும். நல்லா தியானம் பழகிவிட்டால், கண் திறந்துகொண்டும் தியானம் செய்யலாம். பொதுவா தியானம் உட்கார்ந்துகொண்டுதான் செய்யணும். புருவத்துக்கு மத்தியில் ஒளி என்பதெல்லாம், தியானம் கைவரப் பெற்றவர்களுக்கு. மத்தவங்களுக்கு அப்படி கான்சண்டிரேட் பண்ணினால் தலைவலிதான் மிச்சமாகும்.

   படுத்திருந்து செய்வது, 'சவாசனம்' அல்லது உடம்பை ரிலாக்ஸ்டாக வைக்கும் முயற்சி. அதில் தியானம் சாதாரணவர்களுக்குக் கைவராது.

   தியானத்தின் ஆரம்பக் கட்டம், நம்மில் இருக்கும் 6 சக்கரங்களைப் பழக்கப்படுத்துவது. அதில் உயிரோட்டம் ஃபீல் செய்வது.... இதற்குமேல் எனக்கு எழுத மனது வரலை.............

   நீக்கு
  17. தவறாகப்புரிஞ்சுக்கலை.என் யோக ஆசான் சொல்லிக்கொடுத்ததைத் தான்சொல்லி இருக்கேன்.சவாசனம் யோக ஆசனங்கள்செய்கையில் நடுவிலேயே வந்துடும். இதுகடைசியில்மூச்சுப்பயிற்சி முடிந்த உடன்செய்யச் சொல்லுவார்.அநேகமாய்பத்மாசனம் இல்லைனா அர்த்த பத்மாசனம்.இதுக்கு மேல்நானும்சொல்லலை! :))) இரண்டு வருடங்கள் ஆசனங்கள் கற்றுக்கொண்டு சுமார் பனிரண்டு வருடங்கள் தொடர்ந்து செய்தும் வந்தேன். 2015 ஆம் ஆண்டிற்குப்பின்னர் முடியாமல்போய் விட்டது! :(

   நீக்கு
  18. //பொதுவா தியானம் உட்கார்ந்துகொண்டுதான் செய்யணும். புருவத்துக்கு மத்தியில் ஒளி என்பதெல்லாம், தியானம் கைவரப் பெற்றவர்களுக்கு. மத்தவங்களுக்கு அப்படி கான்சண்டிரேட் பண்ணினால் தலைவலிதான் மிச்சமாகும்.//

   தியானத்தில் முதலில் படுத்துக் கொண்டும் செய்யலாம். அப்போது ஏதேனும் ஒரு பொருளை நினைக்கச்சொல்வாங்க.அதுரோஜாவாக இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த கடவுள் உருவாக இருக்கலாம். மெல்லமெல்லமேலேகொண்டு வரவேண்டும்.பின்னர் உட்கார்ந்து பத்மாசனத்தில் செய்கையில்தான் சக்கரங்கள்.ஆனால் சாதாரணமாக ஆசனம் மட்டும் செய்பவர்கள் சக்கரங்களில் ஆரம்பிக்கக் கூடாது என்பது என் யோக குருவின் கருத்து. அதுக்கு ராஜ யோகம் பயிலவேண்டும்.ராஜ யோகம் பற்றி எழுத ஆரம்பித்தால் இன்னிக்கு முடியாது. சக்கரப் பிரயோகம் எல்லாம் ஆசான் உதவி இல்லாமல் ஆரம்பிக்கவே கூடாது. முக்கியமாய் அவர் அனுமதி வேண்டும். அதுக்கு ராஜ யோகம் பழகி இருக்கணும். சாதாரணமாகத் தொலைக்காட்சிகளில் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர், பாபா ராம் தேவ் போன்றவர்கள் மூலம் கற்றுக்கொள்ளுவதெல்லாம் யோகத்தில் சேர்ந்தது இல்லை. வெறும் ஆசனப் பயிற்சி மட்டுமே! பலருக்கும் இந்த ஆசனப் பயிற்சிக்கும் யோகத்துக்கும் உள்ள வேறுபாடு புரிவதில்லை. சுதர்சனக்ரியா என ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் சொல்லிக் கொடுப்பது மூச்சுப் பயிற்சியில் சேர்ந்ததே!

   நீக்கு
  19. நாம் நினைக்கும் பொருளைக் கற்பனை செய்கையில் ஜோதியாகவோ அல்லது விளக்குச் சுடராகவோ கூடக் கற்பனை செய்துக்கலாம்.

   நீக்கு
  20. இந்த தியானம், மூச்சுப்பயிற்சிக்குக்கூட, சரியான வரைவிலக்கணம் இல்லைப்போலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கின்றனர்.. அதில எங்கட அண்ணன் வேறு என்னை வெருட்டி விட்டிட்டார், தியானம் பற்றி வெளியே பேசக்குடாது என.. அதைத்தான் நெல்லைத்தமிழனும் சொல்கிறார் போலும்...

   உடுப்பு வாங்குவதைப்போல, நமக்கு எது செட்டாகுதோ அந்த முறையைப் பிடித்துத் தொடர வேண்டியதுதான் போலும்.. ஹா ஹா ஹா.

   நீக்கு
 28. தாத்தாவும் பாட்டியும் தனிமையில் இருந்த படம் பார்த்து:-

  வயதாகிப் போனோருக்கும்
  வயதாகாத காதல்
  இளமைக்கும் காதலுக்கும்
  எந்த சம்பந்தமுமில்லை
  இளசுகள் கன்னங்கள் இழைந்தால்
  வழவழக்கும் இனிக்கும்
  பெரிசுகள் கன்னம் சேர்த்தால்
  சொரசொரப்பிலும் சொர்க்கம் தெரியும்
  வழவழப்பும் மொரமொரப்பும் காதலின்
  பல்வேறு நிலைகள் காணீர்!

  காதலுக்கு வயதில்லை காண் என்போர்
  அன்பின் மறுபெயர் தான் காதல் என்பர்.

  பதிலளிநீக்கு
 29. கல்யாணி மேனன் கதை போல் அம்பிகா, மோகன் நடித்த படத்தில் ஒரு பாட்டு வருமே!
  அம்பிகா பாடுவார் மோகன் வரவை எதிர் நோக்கி மோகன் கார் விபத்தில் இறந்து விடுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் நான் பாடும் பாடல். அவரே அதைச் சொல்லி இருக்கிறாரே...

   நீக்கு
 30. வயதான காதல் அருமை..

  கடைசி படம் மாதிரி எத்தனை படங்கள் பார்த்தாலும் அலுக்காது.

  பதிலளிநீக்கு
 31. தியானம் என்பது எண்ணங்களை கவனிப்பது அல்ல. ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் எண்ணம் இல்லாமல் செய்து கொள்வது. ஆனால் எண்ணங்களை கவனிப்பதன் மூலம்தான் இதை ஆரம்பிக்க முடியும். மந்திர ஜபம், குருவின் அருள் இவைகளும் எண்ணங்கள் அற்ற நிலையை கூட்டுவிக்கும்.
  எனக்கு வெகு அபூர்வமாக எண்ணங்கள் நின்று போகும். அட! எண்ணங்கள் அற்ற சைலன்ஸ்..! என்ற நினைப்பின் மூலம் மீண்டும் எண்ணங்களின் ஊர்வலம் தொடங்கி விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடைவெளியை அதிகரித்து எண்ணங்களே இல்லாமல் செய்வது - நல்ல முயற்சி.

   நீக்கு
 32. நான் தற்சமயம் சென்னையில் இருக்கிறேன். செல்போனில் முழுமையாக பின்னூட்டங்களை பார்க்க முடியவில்லை. பதில் அளிப்பதும் கஷ்டமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னையிலா? எத்தனை நாள் தங்கல்? கீதா ரெங்கன் கூட சென்னை வருவதாகச் சொல்லி இருந்தார்.

   நீக்கு
 33. உங்கள் ஆழ்ந்த சிந்தனை அருமை.
  எண்ணங்களுக்கு வலிமை உண்டு.

  நல்லதே எண்ண வேண்டும் என்று அதுதான் சொல்கிறார்கள்.
  கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் உண்டு.
  நாம் எண்ணும் எண்ணம் வான்வெளியில் கலந்து மீண்டும் நம்மிடம் திரும்பிவரும் என்கிறார்கள்.

  கடவுளை வாழ்த்துவதின் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன்ஏற்படுத்திக் கொண்டான். என்கிறார்


  ஒடுங்கி - உணர்ந்திடு

  நினைவை யடக்க நினைத்தால் , நிலையா
  நினைவை யறிய நினைத்தால் , நிலைக்கும்.

  எண்ணமே இன்பம்

  எண்ணத்தின் வேகமும் , இயல்பும் அறிந்தோர்க்கு
  எண்ணமே இன்பமயம் எண்ணம் அமைதி பெறும்.

  எண்ணத்தில் பிரபஞ்சம்

  எண்ணத்தை எண்ணத்தால் ஆராய ஆராய
  இயற்கை ரகசியங்கள் எண்ணத்துள் காட்சியாம்
  எண்ணத்தின் இவ்வுயர்வை இயற்கையே பேசுதென்றும்
  இதுவே உள்ளுணர்வென்று இயம்புவோர் அனுபவத்தோர்

  எண்ணமே இன்பம்

  எண்ணத்தின் வேகமும் இயல்பும் அறிந்தோர்க்கு
  எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதி பெறும்.

  வாழ்க்கையை ஆக்கும் சிற்பி

  எண்ணமே எக்காலத்திற்கும், வாழ்க்கையின் சிற்பி
  எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

  எண்ணிப்பார்

  நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
  நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக்கொள்வீர்
  மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
  மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்.

  எண்ணம் நற்பயனாய் மாற

  எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
  எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
  எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்க செய்தால்
  எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்
  எண்ணமது எழும்போதே இது ஏன் என்று
  எண்ணத்தால் ஆராய்ந்தால் சுலபமாக
  எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும்
  எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்.
  ---வேதாத்திரி மகரிஷி


  பதிலளிநீக்கு
 34. எண்ண இயக்கம் தான் வாழ்வு.
  அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும் , நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும்.
  எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும்பழக வேண்டும். அந்தப் பெரு நிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான் முயற்சி கொள்ளாதே ! அது தான் மரணம் என்ற இடத்தில் தானகவே நின்று விடப் போகிறதே ! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

  ---- வேதாத்திரி மகரிஷி.

  பதிலளிநீக்கு
 35. இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை , எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை , உலகத்தை ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை , இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால் உடலுக்கும் அறிவுக்கும் ஒருங்கே அமதி தரும் இடையறாத இன்ப ஊற்று பெருக ஆரம்பித்துவிடும்.

  --வேதாத்திரி மகரிஷி

  பதிலளிநீக்கு
 36. மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத ஒன்று.
  ஆகவே தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்ய சொல்வது எந்த பயனையுமளிக்காது.
  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மன இயக்கத்தை சற்று ஒழுங்கு படுத்துதல் தான்.
  அவ்வாறு ஒழுங்குபடுத்துதல் என்பது நம் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் நிச்சியம் சாத்தியமான ஒன்றுதான்.

  --- வேதாத்திரி மகரிஷி

  பதிலளிநீக்கு
 37. வயதானவர்களின் அன்பு படம் அருமை.
  முன்பே பார்த்தது போல் இருக்கிறது உங்கள் பக்கத்தில்.

  பதிலளிநீக்கு
 38. வாசல் கவிதை செம ..எனக்கும் பல நினைவுகளை இழுத்து வருது .நான் சொல்லும் வாசல் ஊரில் எங்க வீட்டு வாசல் .படிகளுடன் இருக்கும் .இன்பம் துக்கம்னு பல நினைவுகளை சுமந்த வாசலை நான் 2012 முதல் பார்க்கலை .இங்கே லண்டன் வாசலில் உக்கார முடியாது .நம்மூர் வாசல்தான் க்ரேட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஏஞ்சல். உங்களுக்கும் வாசல் நினைவுகள் வந்ததில் சந்தோஷம்.

   நீக்கு
 39. உண்மைக் காதலுக்கு மட்டும் நரையில்லை திரை இல்லை என்றும் நரைத்திடாக்காதல் எல்லொருக்கும் வாய்ப்பதில்லை

  பதிலளிநீக்கு
 40. அச்சோ இந்த எண்ணங்கள் பாடாய்படுத்திடுமே ..இதுக்கே நடையாய் நடந்து அப்படியே தூங்கிடறேன் :) இல்லேனா எண்ணங்கள் எந்த டைரக்ஷன்லருந்து வருதுன்னு சொல்லவே முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடக்கும்போதெல்லாம் நினைப்பீர்களா? நினைக்கும்போதெல்லாம் நடப்பீர்களா?

   நீக்கு
 41. அந்த பாடலுக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கா .ம்ம் கொஞ்சம் ஆர்வக்கோளாறில் அந்த படத்தை பார்த்தேன் இப்போ ..சரியான நெகட்டிவிட்டி . சொல்லும் வார்த்தை கொள்ளும் /கொல்லும் வார்த்தை மாதிரி எல்லாத்தையும் பார்த்துதான் செலக்ட் செய்யணும்போல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்துப் பேசவேண்டும். பார்த்துப் பார்த்துப் பேசவேண்டும்!

   நீக்கு
 42. ’சுஜாதா’ படப் பாடல்.
  பாடல் வரிகள் சிலசமயம் விதியின் வீர்யத்தை வெளிப்படுத்திவிடுகின்றன போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி நிகழ்வுகள் ரொம்பவே அபூர்வம் ஏகாந்தன் ஸார்.

   நீக்கு
 43. Aging Gracefully என்பது இந்த தாத்தா பாட்டியின் அன்பில் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 44. கவிதை வெகு அருமை!!! மிகவும்ர் ரசித்தேன்...ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!! எனக்கும் வீட்டின் முகப்புதான் நினைவுக்கு வரும். என் வீடு என்றில்லை...ஸ்ரீராம் என்றதும் உங்க வீட்டு முகப்பு வாசல்தான் நினைவுக்கு வரும்....எனக்கு என் ஊர் வீட்டை நினைத்தால் உடன் வீட்டு முகப்பு கோலம், தென்னை மரம் என்று இவைதான் நினைவுக்கு வரும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 45. ஸ்ரீராம் கல்யாணி மேனன் பற்றிய தகவல் தட்டுதே...அவங்க நிறைய பாடல்கள் பாடியிருக்காங்க...ராஜீவ் மேனனின் அம்மாதான்...ஸ்ரீராம் நீங்க இன்றைய அதாவது வெள்ளிப் பதிவில் அதிராவுக்கு ஒரு பாட்டு கோட் பண்ணி சொல்லிருக்கீங்கல்லியா அது கூட கல்யாணி மேனன் அப்படினுதான் சொல்லுது. முத்துல கூட குலுவாலிலே பாட்டு....இன்னும் சொல்லலாம்...எனக்குத்தான் டக்குனு எதுவும் நினைவுக்கு வராதே...பார்த்துட்டு சொல்லுறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 46. கண்டிப்பாக நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குது..என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு ஸ்ரீராம். ..விவேகானந்தர் சொல்லியது நினைவுக்கு வரும் அடிக்கடி...நீ என்னவாக நினைக்கிறாயோ அதையே நினைத்து கனவு காண் என்று....மற்றும் எண்ணங்கள் இனிமையானால் எல்லாமே நல்லதா இருக்கும்ன்றதுல எனக்கு ரொம்பவே நம்பிக்கை உண்டு.

  வயதான் கப்பிள் வாவ்! அதானே! காதல் எப்ப வேணாலும் வ்ருவேன் எப்படி வேணாலும்வ் வருவேன் அப்படினு ரஜனி டயலாக் விட்டுட்டுத்தான் வரும்...ஹா ஹா ஹா

  அனைத்தையும் ரசித்தேன் ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 47. கவிதை மிக மிக அருமை ஸ்ரீராம்ஜி! உங்களுக்கு நல்ல கற்பனை நன்றாக அழகாகவும் விரிகிறது.

  எண்ணங்கள் அழகானால் நம் வாழ்க்கையும் சிறப்பாகும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. நம் எண்ணங்களுக்கு வலிமை உண்டு.

  அந்த முதியோரின் அன்பு மனதைக் கவர்கிறது கூடவே மகிழ்வும்.

  அனைத்துமே அருமை ஸ்ரீராம்ஜி

  துளசிதரன்

  (ஸ்ரீராம் ஸாரி துளசியின் கமென்டை நேற்று அடித்து பப்ளிஷ் பண்ணாமல் போய்ட்டேன்...இதோ இப்போது..--கீதா.)
  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!