வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

வெள்ளி வீடியோ : அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கற வேலைக்கு ஆர்ப்பாட்டம் என்ன ராஜா...


1966 ஆம் வருடம் வெளியான படம் குமரிப் பெண்.  டி ஆர் ராஜகுமாரியின் சகோதரர் டி ஆர் ராமண்ணா இயக்கிய திரைப்படம்.  இசை எம் எஸ் விஸ்வநாதன்.


பாடல்களை கண்ணதாசன் எழுதி இருக்கிறார். 

ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்துள்ள திரைப்படம்.காட்சியைப் பார்த்தால் நாயகியைத் தேடி நாயகன் அதிரடியாய் வீட்டுக்குள் நுழைவது போல இருக்கிறது.  நான் படம் பார்க்கவில்லை!  பாடலை மட்டும் ரசித்திருக்கிறேன்.

பி பி ஸ்ரீனிவாஸ் பாடி இருக்கும் பாடல்.  

ரவிச்சந்திரன் அந்தக் காலத்தில் மிகவும் விரும்பப்பட்ட ஒரு அழகு ஹீரோ.  வித்தியாசமான நடன அமைப்பில் ஆடக்கூடியவர். இடையில் வரும் இசையும் ரசிக்கத்தக்கதாய் இருக்கும்.  கூடவே பி பி எஸ் கொடுக்கும் பம்பம்பம்பம் மையும் ரசிக்கலாம்!  பம்பம்பம்பம் போலவே இசைச்சத்தம் கொடுக்கும் எம் எஸ் வியையும் ரசிக்கலாம்!ஜாவ் ரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா 
ஜாவ் ரே ஜாவ் அந்த வீட்டுக்கு நான் ராஜா  

தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு 
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு 
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கற வேலைக்கு 
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா 

காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ?
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ?
நாக்குக்கு ஆயிரம் மொழி சொந்தமோ?
நாலுகாலுக்கு ஒரு வால் சொந்தமோ?


வருகிற உறவுக்கு மனை சொந்தமோ?
மயக்கிய முகத்துக்கு எழில் சொந்தமோ?
கொதிக்கிற பணத்துக்கு இடம் சொந்தமோ?
கூடும் கூட்டத்துக்கு மடம் சொந்தமோ?  


85 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 2. பட்டிக்காடு தோற்றத்துடன், குடுமியுடன் இருக்கும் ரவிச்சந்திரனை மாற்றுவார் ஜெயலலிதா தன் தாத்தா ரங்காராவை ஏமாற்ற . வருஷ்த்தை பாரு 66 என்ற பாடல் ரயிலில் பாடும் பாடல் அதில் குடுமியுடன் வருவார்
  ரவிச்சந்திரன். கதை சிரிப்பு, பாசம், கொலை திடுக்கிடும் திருப்பம் என்று பலவித கலவையான படம்.

  தன்னை ஏமாற்றியது தெரிந்து விரட்டி விட்டுவிடுவார் ரவிசந்திரனை, மீண்டும் அந்த வீட்டுக்கு வரும் போது கூர்க்கா விரட்டும் போது பாடும் பாடல்.

  அதிரா பழைய படம் பார்க்க விரும்புவார் அவருக்கு இந்த படம் பிடிக்கும்.

  அப்பாதுரை சார் பி பி ஸ்ரீனிவாஸ் பாடி இருக்கும் பாடல்களை பகிர்ந்த போது இந்த பாடலையும் பிடித்த் பாடலாக பகிர்ந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... சுவாரஸ்யமான கதை அமைப்புதான் போல... வருஷத்தைப் பாரு பாடலும் இந்தப் படத்தில் என்பது தெரியும். எனக்கு அவளவாகப் பிடிக்காது அந்தப்பாடல்! அப்பாதுரை பகிர்ந்த நினைவு எனக்குஇல்லை. நானும் கட்டாயம் கமெண்ட் செய்திருப்பேன் அங்கு!!!

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 3. ஒரு ஆச்சர்யம்.. இரண்டு நாள் முன்பு இந்தப் பாடலின் ஆரம்பவரிகள் திடீரென நினைவுக்கு வர முண்முணுத்துப் பார்த்தேன். இன்றைக்கு எங்கள் ப்ளாகில்!

  ஸ்ரீனிவாஸ் நன்றாகப் பாடியுள்ளார். படம் குமரிப்பெண் என இப்போதுதான் தெரியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்...

   ஆச்சர்யம்.

   சில நேரங்களில் இப்படி அமைந்து விடும்.

   நீக்கு
 4. "கொதிக்கிற பணமா" - "கொடுக்கிற பணமா" இருக்கப் போகுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுக்கிற என்றுதான் முதலில் டைப் செய்தேன். மறுபடி மறுபடி கேட்டதில் கொதிக்கிற என்றே கேட்டது.. படத்தின் கதையில் அப்படி ஏதாவது வருமோ என்னவோ என்று கொதிக்கிற என்றே டைப் செய்து விட்டேன்.

   நீக்கு
  2. அப்போ பிபிஸ்ரீனிவாஸ் தமிழ் சரியாக் கத்துக்கலைனு நினைக்கிறேன். பொதுவா பாடகர்கள் பாடும்போது அங்கு கவிஞர்கள் இருக்கணும். இல்லைனா, திருக்கோயிலே என்பது தெருக்கோயிலாகி விடும்.

   இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தில், 'மயக்கிய' என்பதற்கு 'மயக்கிற' என்றும் 'இடம்' என்பதற்கு 'எடம்' என்றும் பாடியிருப்பதைக் கவனித்தீர்களா?

   நீக்கு
  3. நானும் கவனித்து மாற்றி மாற்றி டைப்பினேன்!

   நீக்கு
 5. படம் பார்த்தேனா இல்லையா தெரியலை. ஆனால் பாட்டு பிரபலம். அதோடு ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடியும் ஜெய்சங்கர், எல்.விஜயலக்ஷ்மி ஜோடியும் அப்போது பிரபலம். இருவர் ரசிகர்களும் மோதிக்கொள்ளவும் செய்வார்கள், மதுரையில்! இஃகி, இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய தகவல்கள் கீதா அக்கா. ஆமாம், ரவிச்சந்திரன் ஜெயலலிதா ஜோடி நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள்!

   நீக்கு
  2. ஜெய்சங்கரோடும் ஜெயலலிதா நடித்திருக்கிறார் என்பதும் அவரை உருகி உருகிக் காதலித்தார் என்பதும் தெரியுமா? ஜெய்சங்கர் தரப்பில் எந்தவிதமான பதிலும் இல்லை. அதனால் மனம் உடைந்து போனார் ஜெயலலிதா. :(

   நீக்கு
  3. கீசா மேடம்... நீங்க கிசுகிசு தகவல்களை வங்கியில் சேமித்துவைத்திருக்கிறீர்கள் போலிருக்கு. உங்கள் தகவல் உண்மைதான். ஜெய்சங்கர் இறந்தபோது நிச்சயம் ஜெ. தனி அறையில் அழுதிருப்பார் என்று ஒருவர் எழுதியதைப் படித்திருக்கிறேன். ஜெய்சங்கர், சாஃப்ட், ஜெ. டாமினேடிங். எப்படிச் சரியாக வந்திருக்கும்? (அல்லது 'யாரே'னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்)

   நீக்கு
  4. ஜெய்சங்கரை ஜெயலலிதா காதலித்தது மட்டுமல்ல, அவர்கள் இருவரும் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ள சென்ற பொழுது, எம்.ஜி.ஆரால் அங்கு அனுப்பட்ட ஆர்.எம். வீரப்பன் அங்கு வந்து ஜெயலலிதாவை அறைந்து இழுத்துச் சென்றாராம்.
   ஜெமினி மேம்பாலம் கட்டும் முன் அங்கிருந்த ரவுண்டானா அருகே ஜெய்சங்கர் காரில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை சுட முயற்சி நடந்து அதில் அவர் தப்பித்தாராம்.
   அதனாலோ என்னவோ ஜெய்சங்கருக்கு எம்.ஜி.ஆர். என்றால் ஆகாது. அவர் அரசியலில் ஈடுபட நினைத்த பொழுது கலைஞரை சந்தித்தார். கலைஞர் அவருக்கு 'மக்கள் கலைஞர்'(மக்கள் திலகத்திற்கு போட்டி?)என்று பட்டம் அளித்தார்.

   நீக்கு
  5. இது மாதிரி தகவல்கள் எல்லாம் உறுதி செய்யப்படாதவை. கிசுகிசு என்றே நாம் கொள்ளவேண்டும்!

   நீக்கு
  6. ஆமாம் ஸ்ரீராம் :) உண்மைகளை டைம் காப்ஸ்யூலில் போட்டு வச்சிருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும்னு நேத்து பானுக்கா சொன்னப்ப கூட தோணலை இப்போ தோணுது .எல்லா விபரங்களையும் இப்படி எழுதி வச்சிருந்தா ஆஹா .

   கிசு கிசு என்பதற்கு அப்பால் சில விஷயங்கள் இன்னும் உறுத்துது ..சரி வேண்டாமிங்கே

   நீக்கு
  7. வெளிநாட்டுக்கறாங்க ஓப்பன் மைண்டெட் இந்த விஷயத்தில் ஆமா நான் இப்படித்தான் என்ன பண்ணுவேன்னு தைரியமா இருப்பாங்க .நம்ம நாட்டில்தான் :( ...இவர்களை அரியாசனத்தில் வைக்க உண்மைகள் தடையாகிடுமே
   சரி சரி எனக்கு அந்த பாவப்பட்ட ஏமாளி ஜீவனை நினைச்சா இப்படி கோபம் பொங்கிடும் சரி இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன்

   நீக்கு
  8. ஜெய்சங்கருக்கு இஷ்டம் இல்லை என்பதே நான் படித்தது. உறுதியான தகவல்கள் தான். ஆரம்பத்தில் ஜெயலலிதாவே கோடி காட்டி இருப்பார். பின்னால் தினமலர் வாரமலரில் இது குறித்துப் பெயரைக் குறிப்பிட்டே வந்தது. படித்திருக்கிறேன். அப்போ ஜெய்சங்கர் இல்லை. இந்தத் தகவலோடு சேர்த்து எம்ஜிஆர் பற்றியும் ஜெயலலிதா எழுத ஆரம்பித்ததுமே அவருடைய தொடர் குமுதத்தில் நிறுத்தப்பட்டு அடுத்த வாரமே அவர் அதிமுகவின் கொ.ப.செ. ஆனார்!

   நீக்கு
  9. கீசா மேடம்... உங்கள் இன்ஃபர்மேஷன் ஓரளவு சரி. பா.வெ. மேடம் சொன்ன செய்தியை நான் கேள்விப்பட்டதில்லை.

   நீக்கு
 6. துரைக்கு இன்னிக்கு நேரம் கிடைக்கலை போல. முதலில் வந்த கோமதிக்கும் மற்றும் பின்னால் வந்தவர்களுக்கும் இனி வரப்போகிறவர்களுக்கும் நல்வரவு.

  பதிலளிநீக்கு
 7. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ஜாலியான பாட்டு. ஜே ஜெய்யைக்் காதலித்தாரா. கீதாமா. இது நியூஸ் .அச்சோபாவம் . சங்கர் எல்விஜயலக்ஷ்மி. ஜோடியும் பேசப்பட்டதுசேலத்தில். பிபிஎஸ் குரல் இனிமை.

  பதிலளிநீக்கு
 8. படத்தின் பேர் நினைவிருக்கு. எம்.ஜி.ஆர்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
   திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
   அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கற வேலைக்கு
   ஆர்ப்பாட்டம் என்ன ராஜா //

   -- இந்த வரிகளை நீக்க வேண்டும் என்று அந்த காலகட்டத்திஉல் சென்னையில் (கூர்க்கா காவல் காப்போரின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

   நீக்கு
  2. நீங்க குமரிக்கோட்டம் படத்தோட குழம்பிட்டீங்க என்று நினைக்கிறேன் ராஜி!

   நீக்கு
  3. ஜீவி ஸார் சொல்லியிருப்பது புதிய தகவல். நன்றி.

   நீக்கு
 9. எனக்கு ரவிச்சந்திரனை பிடிக்காது, அதனாலோ என்னவோ இந்தப் பாடலும். சிவாஜி போல நடிப்பதாக நினைத்துக் கொண்டு படுத்துவார். எனக்கு இஃகி ,இஃகி என்றெல்லாம் சிரிப்பு வராது. எரிச்சல்தான் வரும். ஆனால் அந்த காலத்தில் கல்லூரியில் படித்த மாணவிகள் பலர் அவர் விசிறிகளாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். ரவிச்சந்திரன் ஹேர்ஸ்டைல் கூட சிவாஜி போல வைத்துக்கொண்டிருப்பார்! குறிப்பாக 'ஏன்' படத்தில்!

   நீக்கு
  2. நேரிலும் பார்த்திருக்கேன். இது குறித்து முன்னரே எழுதியும் இருக்கேன். கொஞ்சம் அலட்டல் ஜாஸ்தியா இருக்கும் முதல் படத்திலேயே! ஆனாலும் அவர் நடித்த சில படங்கள் அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா போன்றவை படம் எடுக்கப்பட்ட விதத்திலும் கதை அமைப்பிலும் வெற்றி பெற்றன. ரசிக்கும்படியும் இருக்கும். உத்தரவின்றி உள்ளே வாவில் ரமாபிரபா அடிக்கும் லூட்டி, நாகேஷ் மாட்டிக்கொண்டு விழிப்பது, இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும்.

   நீக்கு
  3. //கொஞ்சம் அலட்டல் ஜாஸ்தியா இருக்கும் முதல் படத்திலேயே!// கொஞ்சமா..?? கீதா அக்கா உங்களுக்கே இது நன்றாக இருக்கிறதா? நன்றாக நடித்து விட்டு, சில இடங்களில் மட்டும் ஓவர் ஆக்டிங் பண்ணும் சிவாஜியை கலாய்த்து தள்ளுகிறீர்கள். நடிக்கவே தெரியாமல், ஓவர் ஆக்டிங்தான் நடிப்பு என்று நினைத்து நம்மை படுத்திய ரவிச்சந்திரன் கொஞ்சம் அலட்டலா..?? யாரவது வாங்களேன் என் உதவிக்கு.

   ஆனால் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இவர் நடித்த பல படங்கள் குறிப்பாக ராமண்ணா இயக்கத்தில் 100 நாட்கள் ஓடியதாம். மேலும் கடைசி வரை இடை விடாமல் நடித்துக் கொண்டிருந்தார்.

   நீக்கு
  4. நான் அவரோட ரசிகைனு எல்லாம் சொல்லவில்லை. சொல்லப் போனால் அவர் அதிகம் ஶ்ரீதர் படங்களில் நடித்த காரணத்தால் அவர் படங்களைப் பார்க்க நேர்ந்தது. அவ்வளவே! மற்றபடி நடிகைகளில் ஜெயலலிதாவின் அழகுக்கு ஈடு இணை இல்லை. இதையும் பல முறை சொல்லி இருக்கேன். எங்க வீட்டில் நீங்க உட்கார்ந்திருந்த சோஃபாவில் இருந்தால் உங்களை எப்படிப் பார்த்திருப்பேனோ அத்தனை கிட்டத்தில் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். காஞ்சனா, முத்துராமன், ஜிவாஜி, நாகேஷ், மனோரமா, கே.ஆர். விஜயா,பாலாஜி என அநேகமாக எல்லா நடிகர்களும் அந்தச் சித்ராலயா படக்கம்பெனிக்கு வந்துட்டுப் போயிருக்காங்க! ரவிச்சந்திரன் எம்ஜிஆர் மாதிரி ஓர் அதிர்ஷ்டக்காரர். ஆனால் ஷீலாவைக் கல்யாணம் செய்து கொண்டதும் கொஞ்ச வருடங்கள் திரை உலகில் காணப்படவில்லை. பின்னர் விவாகரத்து ஆனபின்னால் தன் முதல் மனைவியின் மகனைக் கொண்டு வர முயற்சித்துவிட்டு, அது முடியாமல் போகவே இவர் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் என நினைக்கிறேன். ஜெய்சங்கரும் கடைசி வரை நடித்துக் கொண்டு தான் இருந்தார். அவரும் ரஜினியோடு ஒரு படத்தில் வில்லனாக நடித்திருப்பார். எங்க குழந்தைகளை நான் மட்டும் அழைத்துச் சென்ற ஒரே படம் அது! ஹிந்தி நடிகை ஹீரோயின். தாய் வீடோ என்னமோ! அதீதக் குடியின் காரணமாக ஜெய்சங்கர் இறந்ததாகச் சொல்வார்கள். மாடர்ன் தியேட்டர்ஸின் நிரந்தர ஹீரோ. பாடல்கள் எல்லாம் ஹிந்திப்பாடல்களின் காப்பி என்றாலும் மிகவும் பிரபலம் ஆன பாடல்கள்.

   நீக்கு
  5. ரவிச்சந்திரனை முதலில் பார்த்த போது வித்யாசமாக இருந்ததால்
   பிடித்தது. ஜெய்ஷங்கர் இன்னும் நடிப்பில் பாவம் காட்டுவார்.
   குணச்சித்திர.பாத்திரங்களில் நன்றாகவே நடிப்பார்.
   ரவிச்சந்திரனின் ஒவர் டோஸ் நடிப்பு திகட்டும்.

   he thought he was a gift to cinefield. yuck.
   @Angel yes I also feel the same about the whole hungama involving that young girl.
   ரொம்ப பாவம்.

   நீக்கு
  6. //he thought he was a gift to cinefield//

   ஹா... ஹா... ஹா... நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கும் என்பார்கள்!

   நீக்கு
  7. கீதா அக்கா... நீங்கள் சொல்லும் திரைப்படம் முரட்டுக்காளை. நடிகை ரத்தி அக்னிஹோத்ரி. ஜெய்சங்கர் குடிப்பார் என்பது கேள்விப்படாத செய்தி.

   நீக்கு
  8. இல்லை ஸ்ரீராம், முரட்டுக்காளை ஏவிஎம் படம்னு சொல்றாங்க! நான் பார்த்ததே இல்லை. கமலின் சகலகலாவல்லவனுக்குப் போட்டியா எடுத்ததாமே! அதுவும் தெரியாது. நான் சொல்வது தாய் வீடு படம் தான். ஹீரோயின் அனிதா ராஜ்! உறுதியாகத் தெரியும். ஏனெனில் விரல் விட்டு எண்ணும்படியான ரஜினி படங்களே பார்த்திருக்கேன். அதில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்காகப் போனது. அம்பத்தூர் முருகன் தியேட்டரில் பார்த்தோம். :))))

   நீக்கு
  9. ரத்தி ரஜினியோடு சேர்ந்து நடிச்சிருக்கார் என்பதும் எனக்குப் புதிய செய்தி!அவரோட முதல் படம் பாரதிராஜாவோட இயக்கத்தில் பார்த்திருக்கேன். புதிய வார்ப்புகளோ, அல்லது புதிய அர்த்தங்களோ! என்னவோ ஒண்ணு! நாதஸ்வரக் கலைஞர் பற்றிய படம்னு பேரு! :) ஆனால்!

   நீக்கு
  10. ஜெய்சங்கர் குடித்துக் குடித்து உடலை வீணாக்கிக் கொண்டது குறித்து ஏவிஎம்மின் இயக்குநர்களின் ஒருவரான எஸ்.பி.முத்துராமன்னு நினைக்கிறேன். ரொம்ப வருத்தப்பட்டிருக்கார். அப்போத் தான் ஜெய்சங்கர் மனைவியும், மகனும் (விஜயசங்கரோ என்னமோ பெயர்) பிரபலமான மருத்துவர்கள் என்பதையும் அதில் சொல்லி இருந்தார். எல்லாம் தினமலர் வாரமலர் தயவு.

   நீக்கு
 10. நல்வரவு கூறிய அக்காவுக்கு மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
 11. அப்போதிருந்தே இந்தப் பாடல் எனக்குப் பிடிக்காது..

  ஆயினும் ஒன்றும் சொல்வதற்கில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள் துரை செல்வராஜூ ஸார்...

   பாடலை ரசிக்காததற்கு நன்றி!

   ஹா... ஹா... ஹா...!

   நீக்கு
 12. தனது படத்தில் இழுத்துப் போட்டு அமுக்கி விட எம்ஜார் செய்த முயற்சியில் தப்பித்த ஜெய்சங்கர் கலைஞர் விரித்த வலையில் சிக்கி திரைப்படத்தில் அரசியல் பேசி அத்தோடு வாய்ப்புகளை இழந்து போனார் என்று அப்போது பேசிக் கொண்டார்கள்... அப்போதைய காதல் கதைகளும் பள்ளி நாட்களில் கிசுகிசுக்கப்பட்டவை தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ ஒரு படத்தில் ஜெய் எம் ஜி ஆருடன் இணைந்து நடித்திருக்கிறாரோ? சரியாய் நினைவில்லை.

   நீக்கு
 13. எங்க மூணாவது பெரியப்பா பார்க்க ரவி தாத்தா போலிருப்பார் அதனால் முந்தி டிவியில் ஒளியும் ஒலியும் போடும்போது எல்லா பெரியவர்களும் சேர்ந்து அதோ உங்கப்பா ஆடறார்னு அவர் மகள்கள் முன்னே கிண்டல் கேலி செய்வாங்க அந்த அக்காங்க கோச்சிட்டு போவாங்க அந்த நினைவு வந்தது :)

  பதிலளிநீக்கு
 14. ஆனாலும் ரவிசந்திரன் எம்ஜிஆர் சிவாஜி இருவரையும் மிக்ஸ் பண்ண மாதிரி ஆக்டிங் செய்றார் :)
  ஜெ மம்மி லுக்ஸ் sooo ஸ்வீட் :) பாடல் நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெ மம்மி லுக்ஸ் sooo ஸ்வீட் :) அவங்க அழகுக்கு என்ன? அவர் நடனத்தில் ரசிக்கக்கூடிய ஒரு துள்ளல் இருக்கும். அது அவருக்கு முன்னாலும் இருந்தது இல்லை, பின்னாலும் வரவில்லை.

   நீக்கு
  2. நிறைய பாடல்களில் ஜெ நடனம் துள்ளலுடன் நன்றாக இருக்கும்.

   நீக்கு
  3. ஒரு காந்த குரல் நளினம் இப்படி எவ்வளவோ சொல்லலாம் .குரலில் இப்போ அஞ்சலிக்கு ஒரு இனிமை இருக்கு .
   மற்றபடி வேறு யாரும் நினைவுக்கே வரல தோணல .#@ஸ்ரீராம் ஆக்சுவல்லி எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சதே காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் தொடர் படிச்சபின்னேதான் ...

   நீக்கு
  4. நரசிம்மா படித்தால் சந்தோஷப்படுவார். அவரின் அந்தத்தொடர் விரைவில் தனிப்புத்தகமாக வரப்போகிறதாம்.

   நீக்கு
 15. ஒரு காலத்தில் சினிமா பிரபலங்களை வைத்து நிறைய கிசு கிசுக்கள் வரும் அதைப் படிப்பதிலும் மனதில் சேமித்து வைத்துக் கொள்வதிலும் பலருக்கும் ஆர்வமுண்டு என்று தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிசு கிசு வில் எல்லோருக்குமே ஒரு ஆர்வம் இருக்கும் ஜி எம் பி ஸார். அதுசரி, பாடல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

   நீக்கு
  2. இப்போவும் வருது ஜிஎம்பி சார்... ஏதேனும் சொல்லவா? ஹா ஹா

   நீக்கு
  3. பாட்டு குறித்து எதுவும் எழுதத் தோன்றவில்லை ஸ்ரீ

   நீக்கு
 16. நடந்தது என்னவென்று நீயே சொல்லு பாட்டைக் கூட சேர்த்தே போட்டிருக்கலாம் ஸ்ரீராம்! https://youtu.be/WJu0LW8xcw0

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாவது இங்கு வந்திருக்கும் கமெண்ட்களுக்கு பொருத்தமாகவா கிருஷ் ஸார்?

   நீக்கு
  2. அப்படியும் கூட வைத்துக்கொள்ளலாம் ஸ்ரீராம்! ஜெ ஜெய் இருவருமே இப்போது உயிரோடு இல்லை. சொந்த வாழ்க்கையைப் பற்றி நடந்தது என்னவென்று அவர்களே சொல்கிற மாதிரியும் கூட வைத்துக் கொள்ளலாம்!

   நீக்கு
 17. எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியவில்லை... பெரிதாகப் பிடிக்கவில்லை:....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதில் சொல்லத் தெரியவில்லையா! நீங்களே இப்படிச் சொல்லலாமா..!

   நீக்கு
  2. //ஏகாந்தன் Aekaanthan !8 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 5:49
   பதில் சொல்லத் தெரியவில்லையா! நீங்களே இப்படிச் சொல்லலாமா..!//

   ஹா ஹா ஹா அது ஏ அண்ணன்.., பாடல் பற்றி எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றேன்ன்:))

   நீக்கு
 18. ஸ்ரீராம் இந்தப் பாட்டை கேட்டது போல் நினைவு இருக்கு ஆனால் இல்லை...ஏன்னா எனக்கு வரிகள் டக்குனு ஏறாததுனால இருக்கலாம்.. இதே மெட்டில் இன்னொரு பாட்டு இருக்காப்ல இருக்கு.....வழக்கம் போல வார்த்தைகள் நினைவில்லை.....

  கீதா

  பாட்டு நல்லாருக்கு ஸ்ரீராம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா... பெங்களூரு திரும்பியாச்சா? முதல் பாராவில் தெளிவாய் குழப்பி இருக்கிறீர்கள்!!!!!!!

   நீக்கு
  2. ஹிஹிஹிஹிஹி.....நல்லாவே குழப்பிட்டேனோ!!! அது சொல்ல வந்தது சில பாடல்கள் மெட்டு ஒரே போல இருக்கும்....நானே குழப்பிக் கொள்வேன் ஹா ஹா ஹா ஹா ஹா...

   ஆமாம் பங்களூர் வந்தாச்சு இன்று...வேலைகள்....மீண்டும் ஞாயிறு மதியம் மேல் சென்னைக்கு பயணம் செய்யனும். திங்கள் வேலையை முடித்துக் கொண்டு செவ்வாய் காலை அங்கு ரயில் ஏறி இங்கு மதியம் வரனும். அதுக்கானும் டிக்கெட் இருக்கான்னு பார்த்துக் கொண்டிருக்கேன்

   கீதா

   நீக்கு
 19. ரவிச்சந்திரன் இந்தப் பாட்டுல அப்படியே எம்ஜி ஆரைப் போலவே ஆடுறாரே....

  ஜெ வின் நடனம் பார்க்க நன்றாக இருக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 20. அந்தப் புத்தகம் வரும்போது சொல்லுங்கள் ஸ்ரீராம். ஆவலாக இருக்கிறது.
  எப்படியெல்லமோ இருந்திருக்க வேண்டிய ஆத்மா. ரொம்பப் பரிதாபம்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  இந்த பாடல் ரேடியோவில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததாய் நினைவில்லை. எம்.எஸ்.வி இசையும், பி.பி.ஸ்ரீநிவாஸின் குரலும் நன்றாக உள்ளது. ரவிச்சந்திரனின் ஸ்டைல் நன்றாக இருக்குமென்று அப்போது எல்லோரும் கூறுவதால், அவரின் சில படங்களுக்கு போவோம். (அம்மா வீட்டில் இருக்கும் போது) இந்த படம் பொதிகையில் பார்த்திருக்கிறேனோ என்னவோ,.!அதுவும் சரியாக நினைவிலில்லை.

  இரண்டு நாட்கள் சற்று உடல் நலக்குறைவு வலைப் பக்கம் வருவதையும் குறைத்து விட்டது. நேற்றைய பதிவும் நன்றாக இருந்தது. நாதஸ்வர கலைஞர்களை "இசை"வாய் கேட்டு கொஞ்சம் பயமுறுத்தி விட்டீர்கள் போலும். அத்தனை படங்களும் நன்றாக வந்திருந்தன. கல்யாணம் சுபமாக முடிந்தது குறித்து மகிழ்ச்சி. இனிவரும் வாரம் ஏழுமலையானை தரிசித்த காட்சிகளுக்கு ஆவலாய் உள்ளேன். தாமதமாக வந்து கருத்துரைத்தற்கு வருந்துகிறேன்.பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா.. நேற்றைய பதிவுக்கும் சேர்த்து இங்கேயே பதில் சொல்லி விட்டீர்கள்! நன்றி.

   உங்கள் உடல்நிலை தேவலாமா? மருத்துவரைப் பார்த்தீர்களா?

   நீக்கு
 22. தைவம்😒 எம்ஜிஆர் மோனோபலைஸ் செய்யாவிட்டால் ஜெ வாழ்க்கை நன்றாக அமைந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 23. இந்தப் படம் பின்னால் நான் மதுரையில் இருந்த சமயம் வந்த போது பார்த்திருக்கிறேன். ஆனால் ரொம்ப கதை எல்லாம் நினைவில்லை. பாட்டு கேட்டிருக்கிறேன். இலங்கை வானொலியிலும். வழக்கமான பதில்தான் தமிழ்ப்பாடல்கள் மீண்டும் உங்கள் வழி கேட்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. இப்பதான் மத்த கருத்துகள் பார்த்தேன் ஹப்பா கீதாக்கா, பானுக்கா, ஜீவி அண்ணா, நெல்லை அண்ணா (ஹிஹிஹிஹி) ஏஞ்சல் எல்லாம் என்னமா தகவல் சொல்லிருக்காங்க. மீக்கு எல்லாமே புதுசு....ஜெ ஜெ ச வை காதலித்தாரா?!!!!!!!!!!! (இரண்டும் ஜெ ஜெ - ஜெய ஜெய் ஹா ஹா ஹா...பாவம் ஜெய ஜெய் ஜெயிக்காமல் போயிடுச்சே!!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 25. 1966 ஆம் ஆண்டிற்கே சென்றுவிட்டேன். TR ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன். ஜெயலலிதா நடித்த படம். பாடல் இன்றும் நினைவில் உள்ளது. நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!