வியாழன், 7 பிப்ரவரி, 2019

சின்னத்தம்பி


திருப்பதி சாஸ்திரிகள் மந்திரங்கள் சொல்லிச்சொல்லி, தமிழிலும் சபையோர்க்கு விளக்கம் சொல்லி நிச்சயதார்த்தம் நடத்தினார்.  

இரவு உணவின்போது ஒரே சமயத்தில் அமர்ந்தும் சாப்பிடக் கூடிய வகையிலும், பஃபே முறையிலும் உண்ணும் வசதி!அதற்குள் சிலர் இரவு உணவை முடித்து விட்டு வந்திருந்தனர்.  எங்களையும் சாப்பிட்டு விட்டு வந்துவிடுங்கள் என்று சொன்னார்கள் என்று சாப்பிடப்போனோம்.  சிம்பிள் உணவு!ஒரு அறை போதவில்லை என்று சொல்லி இருந்தேன் அல்லவா?  இப்போது ஒரு மாற்று ஏற்பாட்டில் இன்னோர் அறை கிடைக்க, சௌகர்யமாக விசாலமாக படுக்க இடம் கிடைத்தது.  ஆனால் தூக்கம்?

ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் போனது ஒருபுறம்.  இருமலும், சளியும் படுத்தும் பாடு ஒருபுறம்...  மின்விசிறி கூட போட்டுக் கொள்ளாமல் "ஜில்'லென்று தூங்கினோம்!  

7 மணி என்று முதலிலேயே சொல்லி அனுப்பி விட்டார்கள்.  அதாவது மறுநாள் காலை ஒன்பது முதல் பத்தரை மணிவரை முகூர்த்தம்.  ஏழு மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று சென்றோம்.

முற்றிலும் மாறி விட்ட மேடை அமைப்பு!ஊஞ்சல், காசி யாத்திரை போன்றவை நடந்தேறிய பின், மாப்பிள்ளையும் பெண்ணும் உள்ளே வரும் சமயம் நாதஸ்வரக்காரர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். அவர்களுக்கு ஒரு நிமிடம் நேரம் கேட்டார்.

என்ன என்று பார்த்தால் அவர்களுக்காக ஸ்பெஷல் என்று சொல்லி கொஞ்சம் வாசித்தார்.  மேளக்காரர் உற்சாகமாக மேளத்தை பதம் பார்த்தார்.  பெரிசாக எதுவும் வாசித்து விடவில்லை.  ஆனால் வாசித்ததாய் நினைத்துக் கொண்டார்கள்.  

மாப்பிள்ளை அருகில் சென்று ஏதோ கிசுகிசுத்தார்.  மாப்பிள்ளை அருகே நின்றவரிடம் சொல்லி ஓரிரு நூறு ரூபாய்களை கையில் வாங்கிக்கொள்ள, நாதஸ்வரக்காரர் அதிருப்தியை முகத்தில் காட்டினார்.  இன்னும் சில நூறு ரூபாய்கள் கையில் ஏறின!  கைமாறின!  அருகிலேயே நின்று கொண்டிருந்த என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார் நாதஸ்வரம்!மண்டபத்துக்குள் செல்லும் வழியில் மேடைக்குப் பின்னால் வைத்திருந்த படுதாவில் இருந்த பிள்ளையார்.  இவ்வளவு வயதான பிள்ளையாரை இப்போதுதான் பார்க்கிறேன்!  இதை முகநூலில் 'பத்து வருட சேலஞ்' பதிவுக்கு உபயோகித்துக்கொண்டேன்!

சென்ற வாரம் பெரிய சஸ்பென்சாய் நிறுத்துவது போல நிறுத்தி இருந்தேன்.  எல்லோருமே யூகித்தது சரிதான்.  ஏற்கெனவே வேறு இரண்டு திருமணங்களிலும் கூட இப்படி இதே பாடலை வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.  யாருமே வாசிக்கவில்லை.  இவர்களும்!அதாவது காபி நாராயணி வாசியுங்கள் என்று கேட்டேன்.  இந்த ராகத்தில் மதுரை மணி பாடும் 'சரச சாம' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  மேளக்காரர் வாசிப்பை நிறுத்தி "என்னவாம்?" என்றார்.  "காபி நாராயணி வாசிக்க வேண்டுமாம்! என்றார் நாதஸ்வரக்காரர்.  "என்னது?" என்றார் மேளக்காரர் மறுபடியும்!! 

பேசாமல் வந்து விட்டேன்.  சும்மாதான் பெரும்பாலும் அமர்ந்திருந்தார்கள் என்றாலும் வாசிக்கவில்லை.  பழகவில்லையோ என்னவோ!

தாலி கட்டும் நேரம் வந்தபோது மேடையில் ரயிலைப் பிடிக்க விரைவது போல விரைந்தார்கள்.  நேரம் தாண்டி விடுமோ என்ற பயமே வந்து விட்டது!  ஒருவழியாய் நேரத்துக்கு தாலி கட்டி கண்கலங்கினார்கள்!

தாலி காட்டும் நேரம் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தெரிந்த மேடை!மண்டபத்துக்கு வெளியே திருப்பதி மலையின் எழில் தோற்றம்!திருமணம் முடிந்து சாப்பிட்டு முடிக்கையில் மணி ஒன்றைத்   தாண்டி விட்டிருந்தது.  அறையில் கொஞ்ச நேரம்  ஓய்வு எடுத்தால் மாலை நான்கு மணிக்கு தரிசன நேரம்.  இரண்டரை மணிக்காவது கிளம்ப வேண்டியிருக்கும்.    அறைக்குத் திரும்பினோம்...............


=====================================================================================================
இரண்டு நாள் திருப்பதி போயிட்டு வந்து இந்தப்பாடு படுத்தறானே...  
நெல்லைத்தமிழன் சொல்வது போல சாப்பாட்டுக் கதைதான் பெரும்பாலும்!!!============================================================================================================


இந்த உணர்ச்சியை வார்த்தைகளில் வடியுங்கள்....!

பழைய படம்.  எதிரே இருக்கும் தொண்டி(!... தொண்டரின் பெண்பால்) முகத்தில் தெரிவது என்ன Bhaaவம்?!
================================================================================================


இந்த யானை எப்படி?  சின்னத்தம்பி அல்ல..   சின்னத்தம்பி கதை தெரியும்தானே?  அவனைப்பற்றி தினசரி ஒரு செய்தி வருகிறது செய்தித்தாள்களில்.  சில நாட்களாய் தமிழக மக்களுக்கு ரொம்ப நெருக்கமாகிப்போனான் சின்னத்தம்பி.
=============================================================================================

விகடனில் வந்த விளம்பரம்...


120 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய முறையில் வந்திருக்கிறீர்கள்! மாதக்கடைசியில்தான் கஷ்டம் இல்லையா?

   நீக்கு
  2. வழக்கமான வரவேற்புக்கு நன்றியும் மீண்டும் காலை வந்ததுக்கும் நல்வரவு துரை. நாங்க இப்போல்லாம் ஐந்து மணிக்கு எழுந்திருப்பதால் வேலைகளை முடித்துக்கொண்டு காஃபி ஆற்றவே 6 மணி ஆகி விடுகிறது. சில நாட்கள் அவர் எழுந்திருக்க ஐந்தரை கூட ஆயிடும். :))))) அதான் இப்போல்லாம் போட்டிக்கு வர முடியறதில்லை. :)

   நீக்கு
  3. கம்பெனியின் வாடகைப் பேருந்துகளில் ஒன்றை காவல்துறை ஓட்டிக் கொண்டு போய்விட்டது... பேருந்து குறைந்து போனதால் நான்கு இடங்களுக்கான ஆட்களை ஒற்றைப் பேருந்து கொண்டு இரண்டு தடவையாக அள்ளுகுகின்றார்கள்.. எனவே 3.30 க்கு எழுந்து 4.30 பேருந்தைப் பிடிக்க வேண்டும்... நிம்மதியாகத் தூங்கவும் முடியாமல் ஆகிறது...

   ஊரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் - அரபு நாடுகளில் எல்லாம் நேர்மை என்று...

   பேருந்தைப் பறிகொடுத்தது நியாயம்... அதன்பின் பணியாளர்களை நிர்வாகம் வதைப்பது எவ்விதத்தில் நியாயம்?..

   நம்ம ஊர் மகாபாவிகள் நீதி நியாயத்தைப் பராமரிக்காததால் எண்ணற்றோர் இந்த அரபிகளிடத்தில் சிக்கிக் கொள்ளலாயிற்று...

   நீக்கு
  4. ​// தூங்கவும் முடியாது //

   கஷ்டம் துரை ஸார்....

   நீக்கு
  5. துரையின் பிரச்னைகளுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு காணப் பிரார்த்திக்கிறேன். நம்மால் வேறே என்ன செய்ய முடியும்! :(

   நீக்கு
 2. //எண்ணெய் பார்ப்பதைத் தவிர்த்தார் நாதஸ்வரம்!// என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார். மாத்துங்க ஸ்ரீராம். :)

  பதிலளிநீக்கு
 3. சசிகலாவைப் பார்த்துத் தான் அந்தப் பெண் அலறுகிறார் எனில் பிள்ளையார் ஏன் இத்தனை சோகமாக இருக்கார்? மனசே சரியில்லை அவரைப் பார்த்ததும். :( சின்னத்தம்பியைத் தொந்திரவு செய்யாமல் இருந்தாலே போதும். யார் கேட்கிறாங்க? :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மனசே சரியில்லை அவரைப் பார்த்ததும். ://

   முதுமையில் தள்ளாடுகிறார் "பிள்ளை"யார்! ஆனால் அதற்கேன் மனசு சரியில்லாமல் போகவேண்டும்? கல்யாணத்தில் ஒரு குழந்தை இந்தப் புடைப்புச் சிற்பத்தை பார்த்து பிள்ளையார் என்று ஒத்துக்கொள்ளவே இல்லை!

   நீக்கு
  2. நல்ல கதையா இருக்கே! என்னோட அருமைத் தோழர், இவ்வளவு சோகமாக இருக்கும்போது எனக்குக் கஷ்டமா இருக்காதா? :(

   நீக்கு
 4. "லக்ஷ்மி"யின் "காஞ்சனையின் கனவு" கதைக்கு அந்தக் காலத்தில் போஸ்டர் அடித்து ஒட்டியதாக என் அம்மா, அப்பா சொல்வார்கள். லக்ஷ்மியின் நாவல்கள் எல்லாம் பைன்டிங்கில் படிச்சிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஞ்சனையின் கனவு கதைக்கு போஸ்டரா? நான் கூட படித்திருக்கிறேனோ? வாசன் புதுமை.

   நீக்கு
  2. ஆமாம், லக்ஷ்மியே சொல்லி இருக்கார் ஒரு பேட்டியில். வேடிக்கை என்னன்னா திரிபுரசுந்தரி என்னும் பெயர் கொண்ட அவர் அப்பாவுக்குத் தெரியாமல் லக்ஷ்மி என்னும் புனைப்பெயரில் கதை எழுதி வந்திருக்கிறார். இந்தப் போஸ்டரில் அவரோட படத்தையும் போடப் போறாங்கனு சொன்னாங்களாம். அதிலே கொஞ்சம் கவலையா இருந்ததுனும் சொல்லி இருந்தார் லக்ஷ்மி. ஆனால் அவர் அப்பாவுக்கு உண்மை தெரிந்து ஒண்ணும் சொல்லவில்லை போல! :))) பேட்டி அரைகுறையா நினைவில் இருக்கு.

   நீக்கு
 5. கல்யாணம் நல்லபடியா முடிந்திருக்கிறது. தம்பதிகளுக்கு வாழ்த்துகள், ஆசிகள். அடுத்து வெங்கியோட தரிசனம் நல்லபடியாக் கிடைச்சிருக்கும்னு நம்பறேன்.

  பதிலளிநீக்கு
 6. //..எதிரில் நிற்கும் பெண் அலறுகிறாரா, அழுகிறாரா, சிரிக்கிறாரா..//

  அது எதுவோ, அதுவே தமிழ்நாட்டின் இன்றைய நிலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... இனம் தெரியாத பயம்! ரத்தன் டாட்டா சொல்லியிருப்பது போல... தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலுக்கு அது தொழில் தொடங்க ஏற்ற இடம் இல்லை என்று சொல்லி இருக்கிறாராம்!

   நீக்கு
 7. தெரியாத இடத்தில் கல்யாண ஏற்பாடுகள் செய்வது எவ்வளவு சிரம்ம். உணவும் அவ்வளவு சரியா இருக்காது. சரி... வேண்டுதல் போலிருக்கிறது. மணமக்கள் மகிழ்ச்சியோடிருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேடரிங்காரங்க நமக்குத் தெரிஞ்சவங்களா ஏற்பாடு பண்ணினால் பிரச்னை வராது! அவங்க முன் கூட்டியே போய்த் தேவையான ஏற்பாடுகளைச் செய்வாங்க! இங்கே அப்படிப் பண்ணலைனு நினைக்கிறேன். என் அண்ணாவுக்கும் தம்பிக்கும் திருப்பதியில் தான் உபநயனம். மைசூர் மஹாராஜா சத்திரத்தில். சமையல் ஆளில் இருந்து, சாமான்கள், காய்கறி வரை தூக்கிக் கொண்டு போனது நினைவில் இருக்கு! முக்கியமான பக்ஷணம் ஆன பருப்புத் தேங்காயில் இருந்து தூக்கிச் சென்றோம். ஒரு சமையலறை, அதை ஒட்டிக்குளியலறை, ஒரு பெரிய ஹால் கொடுத்திருந்தார்கள்! அப்போல்லாம் மலை ஏறப் பயணச்சீட்டு வாங்கவே கூட்டம் அள்ளும்! நான் சொல்வது அறுபதுகளின் ஆரம்பத்தில்! அது முடிச்சுக் கீழே இறங்கி வந்ததும் தான் நாங்க முதல் முதலாகச் சென்னையைப் பார்த்தோம். அப்போவே எனக்குப் பிடிக்கலை! ஐயய்யே! இதானா மெட்ராஸ்! துளிக்கூட நல்லா இல்லையே! என நான் சொன்னதைப் பின்னாட்களில் கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைக்கச் சென்னை வந்தப்போ எங்க உறவினர்கள் எல்லாம் சொல்லிச் சிரிப்பாங்க! :)))) அப்போவெல்லாம் எங்க மதுரை மாதிரி வருமா? என்பேன்.

   நீக்கு
  2. இங்கு பரிமாறுபவர்களிடம் தெலுங்கில்தான் மாட்லாட வேண்டி இருந்தது.

   நீக்கு
  3. உங்களுக்கு மொழிப்பிரச்னை இருந்திருக்காதே ஶ்ரீராம்!!!!!!!!!!! ஆச்சரியமா இருக்கே!

   நீக்கு
  4. கீசா மேடம்... நீங்க எழுதினதை வாசித்த பிறகு என் மனதில் 'பருப்புத் தேங்காய்' மட்டும்தான் இருக்கு. ஹா ஹா.

   நீக்கு
 8. நாதஸ்வரக்கார்ரை சுத்தல்ல வி நீங்கள் கேட்ட கேள்வியா? காபி நாராயணியை கேள்விப்பட்டதே இல்லையே? கீதா ரங்கன் விளக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் இப்போ சில வரிகள் சேர்த்திருக்கிறேன் நெல்லை. மதுரை மணியின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

   https://www.youtube.com/watch?v=qg5gCtfrHfM

   நீக்கு
  2. எங்க வீட்டில் இரண்டு நாட்களாக மாமா மதுரை மணி ஐயரின் கச்சேரியைத் தான் தேடித் தேடி போட்டுட்டு இருந்தார். அதிலேயும் சரசசாமகான சதுரா பாட்டும் வந்தது. இங்கிலீஷ் நோட்டும், கந்தா வாவாவும் வரலை! இதை ஜான் ஹிக்கின்ஸ் பாடும்போதும் நன்றாக இருக்கும்.

   நீக்கு
  3. ஜான் ஹிக்கின்ஸ் கொஞ்சம் இழுத்து இழுத்து பாடுவார்! வெற்றிலையை நீவி, நரம்பெடுத்து சுண்ணாம்பு தடவி மெல்ல மடித்து வாயில் போட்டு மென்று பாடுவது போல...!!!

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  5. ஜான் ஹிக்கின்ஸ் பாடும் 'கா வா வா கந்தா வா வா' என்ற பாட்டுக்கு நான் பெரிய ரசிகன்.

   ஸ்ரீராம் - டபிள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 9. திருமணங்களில் (அல்லது முக்கிய விசேஷத்தில்) எனக்குப் பிடிக்காத நிகழ்வு இதுதான். ஏதோ தாங்களே பெண்ணுக்குத் தாலி கட்டப்போவதுபோல் மற்றவர்களைப் பற்றி லக்ஷ்க்ஷஇயம் செய்யாமல் போய் மணமேடையை அடைத்துக்கொண்டு விடுவது. இத்தகைய இன்டிசிப்பிளின் கோவில்களிலும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்யாண மண்டபங்களுக்குள் அல்லது மேடைக்கருகில் செல்போன் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட வேண்டும்.

   அதே போல இன்னொரு விஷயம். மொய் கொடுக்க வரிசையில் நின்றிருப்போம். முன்னால் நிற்பவர்களின் மணமகன் அல்லது மணமகளின் தோழ தோழியர் செல்லக் கையில் வைத்துக்கொண்டு கும்பல் கும்பலாக செல்பி எடுப்பார்கள் பாருங்கள்....

   நீக்கு
  2. ஸ்ரீராம்... இந்த செல்ஃபி பற்றிச் சொல்லாதீங்க. அதைப்போல் டென்ஷன் தரும் வேலை வேறு கிடையாது. என் பெண் செல்ஃபி எடுக்கும்போதெல்லாம் ரொம்ப பயமா இருக்கும் (நிறைய நியூஸ் படிக்கிறோம். சிறிய தவறு நேர்ந்தால் செல்ஃபி பெரிய ஆபத்தை விளைவித்துவிடுமே)

   நீக்கு
  3. எங்கள் கிறிஸ்தவ முறை திருமணங்களில் போட்டோ வீடியோ நிகழ்வு தாலிகட்டி முடியும் வரை தடை செய்யப்பட்டிருந்தது ஒரு காலத்தில் .அப்புறம் இப்போ எல்லாம் தலைகீழ் .போட்டோ ஸெஸ்ஸன் அது இதுன்னு அதன் அழகையே கெடுத்துட்டாங்க .தெருவுக்கு ஒரு சிவகுமார் வந்தா சரி :) செல்பி பல்பி ஆகிடும்

   நீக்கு
  4. சிவகுமார் லேட்டஸ்ட்டாய் மறுபடியும் செல்போனை தட்டி விட்டிருக்கார் போலவே....!

   நீக்கு
 10. இந்தப் படம் போட்டு பயமுறுத்துவதற்குப் பதில் அ படம் போட்டாவது குளிர்வித்திருக்கலாம்.

  தமிழக அல்லக்கைகளைப் பார்க்கவே பிடிப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாருங்கள் இந்தப் படம் உங்களையே அனுவை தேட வைத்து விட்டது!

   நீக்கு
 11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  திருப்பதி பெருமாள் பற்றி சொல்ல வேண்டும்.
  சுவையான விருந்து தான்.
  காப்பி நாராயணின்னு சொன்னால் திருமலா நாதஸ்வரக் காரருக்கு
  என்ன தெரியும்.நீங்க காப்பி கொடுக்கப் போகிறிர்கள் என்று நினைத்து இருப்பார்.

  இந்த மிதிலாவிலாஸ் விளம்பரம் பார்த்திருக்கிறேன்.
  பாட்டிவீட்டு பைண்ட் செய்த புத்தகங்களில்.
  சசிகலாவைப் பார்த்து அலறுவது பயத்தினால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.. படித்த எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு வரிகளில் பதில் மதிப்புரை தந்து விட்டீர்கள்!

   காபி நாராயணி தெரியாத கலைஞர்கள் இருக்க முடியுமா?!!

   நீக்கு
 12. பதில்கள்
  1. நன்றி டிடி. நான் கூட பார்ததில்லை என்பதால்தான் பகிர்ந்திருக்கிறேன்!

   நீக்கு
 13. பின்னல் இருந்த 'படுதா' 'படுத்தா' ஆகி விட்டதே?. உங்களுக்குத்தான் உடம்பு சரியில்லை, தூங்க முடியவில்லை, பிள்ளையாருக்கு ஏன் கண்கள் சொருகுகின்றன?

  பதிலளிநீக்கு
 14. முன்பெல்லாம் ஒரே ஒரு புகைப்படக்காரர்தான் இருப்பார். பிறகு, புகைப்படக்காரர், வீடியோகிராஃபர், விளக்கு பிடிக்கும் அவர் அசிஸ்டெண்ட் என்று மூன்று பேர்கள் இருப்பார்கள். அவர்களையே சிலர் திட்டுவார்கள். இப்போது செல்ஃபோன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் புகைப்பட, வீடியோ கலைஞர்கள் ஆகி விட்டார்கள். பெரும்பான்மையான திருமணங்களில் டிஸ்பிளே பண்ண வைத்திருக்கும் டி.வி.யில்தான் முக்கிய நிகழ்வுகளை காண வேண்டி உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு டிஸ்பிளே டீவி கூட இல்லை. மேலும் திருமணத்தில் கூட்டமும் அளவோடுதான்!

   நீக்கு
 15. சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. நாதஸ்வரக்காரர் சரியாக வாசிக்கவில்லை என்று ஸ்ரீராம் சொல்கிறார், இசை பிரியரை இப்படி வதைக்கலாமோ! என்று கவலையில் இருக்கிறார் பிள்ளையார்.

  இரவு சிம்பிள் உணவு என்பதால்தான் நல்ல தூக்கம் உங்களுக்கு.

  //தாலி காட்டும் நேரம் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தெரிந்த மேடை!//

  வீடியோ வந்த காலத்திலிருந்து இப்படித்தான்.
  பெரிய திரை தொலைக்காட்சி பெட்டி வைக்கவில்லையா? வைத்து இருந்தால் அதில் பார்க்கலாம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், கொஞ்சம் படுத்தலாகத்தான் வாசித்தார்!

   மேடை மட்டுமல்ல, செல்லில் எங்களையும் வீடியோ எடுத்தார்கள் செல்போன் அன்பர்கள், கைகளை உயர்த்தி எங்களை ஆடாமல் இருக்கும்படியான வேண்டுகோளோடு!

   நீக்கு
  2. உங்களையும் ஆடாமல் இருக்கும்படி சொல்லி, வீடியோவில் ஆடினால் என்ன?

   நீக்கு
 17. மணமக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 18. புறா பின்புறம் பள்ளி வாசலா? அல்லது திருப்பதிதானா?

  அந்த பெண் அழுகிறார் .

  சின்னதம்பி நன்றாக இருகட்டும், வாழ்க வளமுடன்.

  மிதிலாவிலாஸ் கதை ஆரம்பிக்கும் வருடம் , மாதம் என்ன ?
  எந்த வருடம் விகடன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புறா படம் கும்பகோணம் சார்ங்கபாணி கோவிலில் எடுத்தது.

   மிதிலா விலாஸ் விளம்பரம் வந்தது 1949 ஆம் வருட விகடன். ஆகஸ்ட், ஜூன் மாதமாயிருக்கக் கூடும்!!

   நீக்கு
 19. //ஊஞ்சல், காசி யாத்திரை போன்றவை நடந்தேறிய பின், மாப்பிள்ளையும் பெண்ணும் உள்ளே வரும் சமயம் நாதஸ்வரக்காரர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். அவர்களுக்கு ஒரு நிமிடம் நேரம் கேட்டார்.// பொதுவாக நான் பார்த்தவரை கல்யாணங்களில் ஊஞ்சல் முடிந்து பெண்ணும், மாப்பிள்ளையும் மேளத்துடன் மணமேடைக்குச் செல்லும்முன்னர் இருவர் கைகளிலும் வெற்றிலை, பாக்கு, மட்டைத்தேங்காயுடன் பணம் வைத்துக் கொடுத்து அதை நாதஸ்வரக் காரரிடம் கொடுக்கச் சொல்லுவார்கள். அதன் பின்னரே பெண்ணும், பிள்ளையும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மணமேடைக்குச் செல்வார்கள். இதிலே வட ஆற்காடு மாவட்டக்காரர்கள் எனில் பிள்ளையைப் பெண்ணின் தாயும், பெண்ணைப் பிள்ளையின் தாயும் கையைப் பிடித்து அழைத்துப் போகிறார்கள். இதை என் அண்ணா பெண்ணின் கல்யாணத்திலும் இன்னும் சில கல்யாணங்களிலும் பார்த்திருக்கேன். அண்ணா பெண்ணின் மாமனார், மாமியார் திருவண்ணாமலை! நம்ம காமாட்சி அம்மாவின் மருமான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது அவர்களுக்கு பேசிய தொகையா, அல்லது கூடுதல் அன்பளிப்பா? இவர்கள் டிமாண்ட் செய்து கூடுதலாக வாங்கினார்கள்!

   நீக்கு
  2. இவங்க உள்ளூர் நாதஸ்வரக்காரங்களா இருக்கும்! அதனால் கூடுதல் கேட்டிருக்கலாம். பொதுவா இப்போல்லாம் காடரிங்காரங்களே நாதஸ்வரம், ஃபோட்டோ, வீடியோ, எல்லாமும் ஏற்பாடு செய்துடறாங்க. தனித்தனியாச் செய்தால் இப்போல்லாம் கொஞ்சம் பிரச்னையாத் தான் தெரியுது!

   நீக்கு
 20. கஸ்டப்பட்டுக் கொமெண்ட் போட்டேன்ன் எரர் ஆகி, திரும்படியிம் ரைப்பிங்யா:)..

  திருப்பதி சாப்பாட்டிடம் கலர் கொம்பினேசனே சரியில்லை... மஞ்சள் மேசை விரிப்பு, நீலக்கதிரை, பச்சத்தரை.. எனவோ போலிருக்கு பார்க்க.. ஆனாலும் நீட்டாக இருக்கு அதுதானே முக்கியம்.

  சாப்பாடு ஓகே.. இதை விட அதிகம் எனில்.. பார்க்க அழகுதான் ஆனா சாப்பிட முடியாதே. சுவை இருந்திருப்பின் ஓகே. நல்லவேளை பரோட்டா அங்கில்லை:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நல்லவேளை பரோட்டா அங்கில்லை:). //

   கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... !!!

   சாப்பாடே இல்லையே... அப்புறம் என்ன கலர் காம்பினேஷன்!

   நீக்கு
 21. //ஒரு அறை போதவில்லை என்று சொல்லி இருந்தேன் அல்லவா? //

  ஆமா... ஆமாஆஆஆ...

  //படுக்க இடம் கிடைத்தது. ஆனால் தூக்கம்?//
  புது இடத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே நித்திரை வரும்.. அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என நான் நினைப்பதுண்டு.. சிலர் சரிந்தவுடன் டீஈஈஈஈஈஈஈப் ஸ்லீப்புக்கு போய் விடுவார்கள்.. எங்கள் அப்பாவும் அப்படித்தான். ஆனா நானோ என் கணவரோ.. ம்ஹூம்ம்ம்ம் நித்திரையே வராது.. எப்போ நம் வீட்டுக்குப் போவோம்.. நிம்மதியாகப் படுப்போம் எனத்தான் பேசிக்கொண்டிருப்போம்...:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பெல்லாம் நான் கூட அப்படிதான்... இப்போ? எப்படி இருந்த நான்...!!! நான் இருக்கும் இடத்தில பழகாத புதிய ஆட்கள் சிரமப்படுவார்கள். ஒரு சிங்கம் உறுமும்!!

   நீக்கு
 22. //முற்றிலும் மாறி விட்ட மேடை அமைப்பு!//

  அழகு.

  //பெரிசாக எதுவும் வாசித்து விடவில்லை. ஆனால் வாசித்ததாய் நினைத்துக் கொண்டார்கள். ///

  ஹா ஹா ஹா நான் கவனிச்ச அளவில.. ஸ்ரீராமைத்திருப்திப் படுத்துவதென்பது மிக மிகக் கஸ்டம்.. :) ஸ்ரீராமுக்கு எதுவுமே பிடிக்காது.. ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்ர்.. ஹா ஹா ஹா:).

  //மாப்பிள்ளை அருகில் சென்று ஏதோ கிசுகிசுத்தார். மாப்பிள்ளை அருகே நின்றவரிடம் சொல்லி ஓரிரு நூறு ரூபாய்களை கையில் வாங்கிக்கொள்ள, //
  ஓ இப்படியுமோ...

  ///அருகிலேயே நின்று கொண்டிருந்த என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார் நாதஸ்வரம்!
  //
  ஹா ஹா ஹா வில்லன் போல தோன்றியிருக்கிறீங்க அவருக்கு:))

  //இவ்வளவு வயதான பிள்ளையாரை இப்போதுதான் பார்க்கிறேன்!//

  மீயும்தான்... எவ்ளோ சூப்பராக வயதான தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /ஸ்ரீராமைத்திருப்திப் படுத்துவதென்பது மிக மிகக் கஸ்டம்.. :) ஸ்ரீராமுக்கு எதுவுமே பிடிக்காது.. ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்ர்.. ஹா ஹா ஹா:).//

   இதை நான் மறுக்கிறேன்!!

   //ஹா ஹா ஹா வில்லன் போல தோன்றியிருக்கிறீங்க அவருக்கு:))//

   அப்படி இல்லை. அவருக்குத் தெரியாத ராகம் வாசிக்கச் சொல்லி விட்டேன் போல!!!

   நீக்கு
  2. //இதை நான் மறுக்கிறேன்!!//

   ஹா ஹா ஹா சரி சரி .... ஒருசிலதை மட்டும் வைத்தே, ஒருவரை எடை போடுவது தப்புத்தான்..

   நீக்கு
 23. ///அதாவது காபி நாராயணி வாசியுங்கள் என்று கேட்டேன். இந்த ராகத்தில் மதுரை மணி பாடும் 'சரச சாம' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். மேளக்காரர் வாசிப்பை நிறுத்தி "என்னவாம்?" என்றார். "காபி நாராயணி வாசிக்க வேண்டுமாம்! என்றார் நாதஸ்வரக்காரர். "என்னது?" என்றார் மேளக்காரர் மறுபடியும்!!

  பேசாமல் வந்து விட்டேன். சும்மாதான் பெரும்பாலும் அமர்ந்திருந்தார்கள் என்றாலும் வாசிக்கவில்லை. பழகவில்லையோ என்னவோ!////

  ஹா ஹா ஹா இந்த சிட்டுவேஷனை கண்முன்னே கொண்டு வந்தேன்ன்ன்ன் பெரிய சிரிப்பாக வருது.. “96” படக்கட்டம் நினைவுக்கு வந்தது, அதில் விஜய்சேதுபதி.. கங்கை ஆற்றிலே.... படிக்கச் சொல்லிக் கேட்பார் அடிக்கடி ஆனா எப்பவும் அப்பெண் பாட மாட்டா..:).

  ஹா ஹா ஹா... சில நாதஸ்வரக் கோஸ்டியினர் நல்ல ஃபிரெண்ட்லியாக இருப்பினம்.. திருவிழாக் காலங்களில்.. சுவாமி வடக்கு வீதியில் வெளிவீதி சுற்றி வந்ததும், நிறுத்தி விட்டு ஒரு மணித்தியாலமாவது மேளச்சமா நடக்கும் ஊரில்.. அப்போ பின்னால் நின்று நாம் கத்தினால்.. அப்பாட்டை வாசிப்பார்கள்... சந்தோசமாக இருக்கும்.

  இவர்கள் பணமே குறியாக இருந்திருப்பார்கள் போலும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ////அதில் விஜய்சேதுபதி.. கங்கை ஆற்றிலே.//

   என்னை யாருமே பேய்க்காட்ட முடியாது :) அது யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே பாட்டு

   நீக்கு
  2. ஏஞ்சல்... கம்பபாரதம் போல யமுனை கங்கை ஆகிவிட்டது!​

   அதிரா.. முன்னர் இன்னும் இரு திருமணங்களிலும் இதே பாடலை நேயர் விருப்பமாக்கி இருக்கிறேன். அவர்களும் வாசித்ததில்லை. ஒருவேளை இதை திருமணத்தில் வாசிக்கக் கூடாதோ? கே ஜி ஜி சொல்வார்!

   நீக்கு
  3. ///அது யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே பாட்டு/////
   அவ்வ்வ்வ்வ்வ்வ் கங்கை ஆற்றிலே யமுனைக் காற்றிலே.... எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்ன் ஹா ஹா ஹா:).

   ஶ்ரீராம் இனி எங்காவது கோயில் கோஸ்டியில் கேட்டுப் பாருங்கோ....

   நீக்கு
 24. //தாலி காட்டும் நேரம் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தெரிந்த மேடை!//

  எவ்ளோ தப்பு.. எப்பவுமே வீடியொக்காரரும் கமெராக்காரரும் இந்த இடத்தைப் பிடித்து விடுவார்கள்.. இது மேடையும் பதிவாக இருப்பதனால் எதுவும் தெரியவில்லை..

  ஒரு திருமணத்தில தாலியைக் கட்டப் போகும்போது வீடியோக்காரர் சொன்னாராம்ம்.. பொறுங்கோ பொறுங்கோ என.. வீடியோ ரெடியாகவில்லையாம்ம்.. அங்கிருந்த ஒரு அம்மம்மா நல்ல திட்டுக் குடுத்தாவாம்ம்.. இப்படி அபசகுனமாகச் சொல்லக்கூடாதெல்லோ..

  //மண்டபத்துக்கு வெளியே திருப்பதி மலையின் எழில் தோற்றம்!//
  மலை தூரமாகத் தெரியுதோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... கேமிரா ரெடியாகவில்லை என்பதற்காக தாலி கட்டுவதை நிறுத்தச் சொல்வது மிகவும் தவறு.

   சுற்றிலும் மலை தெரியும்.

   நீக்கு
 25. //இரண்டு நாள் திருப்பதி போயிட்டு வந்து இந்தப்பாடு படுத்தறானே...//

  ஹா ஹா ஹா ஒரு கலியாணம், இரண்டு நாள் பயணம் ஆனா மூன்று போஸ்ட்:)) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஆனா மூன்று போஸ்ட்:)) ஹா ஹா ஹா //

   இன்னும் முற்றும் போடவில்லை!!!

   நீக்கு
 26. ///இந்த உணர்ச்சியை வார்த்தைகளில் வடியுங்கள்....!//

  அநியாயமாக எங்கட ஜே அம்மாவை ரகசியமாகக் கொண்டிட்டியே பாவி:)).. நீ நல்லா இருப்பியோ..:))

  ஹா ஹா ஹா இப்படிச் சொல்வதுபோல இருக்கே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ் மெதுவா சொல்லுங்கோ நெ தமிழன்:)... என் கைக்கு காப்பு வந்திடப்போகுது:)

   நீக்கு
  2. அப்படியா? அதிரா... அவரா காரணம் என்கிறீர்கள்? எப்படி?

   நீக்கு
  3. அவர் மறைவுக்கு அவரே காரணம் :) அந்த அவர் அவரே :)
   எப்பிடி :)))

   நீக்கு
  4. ஹையோ என் வாயைக் கிளறி என்னை உள்ளே தள்ளாமல் விட மாட்டினம் போல:)...

   யார் காரணம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம், ஆனா என் கோபமெல்லாம் கடசிவரை யாரையுமே பார்க்க அனுமதிக்காமல் அவவை ஒரு ஜெயில் கைதிபோல வச்சிருந்தது இவதானே...
   ஜே ... கடசியில் யாரோடு பேச ... யாரைப் பார்க்க ஆசைப்பட்டாவோ...:(... யாருக்குத் தெரியும்...

   நீக்கு
 27. சின்னத்தம்பி எனப் பார்த்ததும் பிரபு அங்கிளை நினைச்சுட்டேன்ன்:)) யானை தெரியல்லியே.. படிக்கவில்லை நியூஸ்...

  //இந்த யானை எப்படி?//
  குட்டி மர யானையோ?

  //விகடனில் வந்த விளம்பரம்...//
  எந்த ஆண்டில் எனச் சொல்லவே இல்ல:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் நீங்கள் நினைக்கும் சின்னத்தம்பி இல்லை என்று ப்ளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் அறிமுகப்படுத்தினேன். நம்ம யானை சின்னத்தம்பி பற்றிய செய்தி என்று நம்பி வந்தால் கூட அதுவும் இல்லை என்ற பொருளிலும்!

   வழிதவறி வந்து விட்ட இரண்டு யானைகளை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் கொண்டு விட முயற்சித்தபோது ஒன்று காட்டுக்குள் ஐக்கியமாகி விட்டது. சின்னத்தம்பி என்று பெயரிடப்பட்ட இவன் மட்டும் உள்ளே செல்ல மறுத்து வெளியே சுற்றி வருகிறான். அவனை குக்கியாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வேண்டுகோள்கள் பொதுமக்களிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றன. முதலில் முரண்டு பிடித்து கோபம் காட்டிக்கொண்டிருந்த சின்னத்தம்பி இப்போது கும்கி யானைகளுடன் கண்கலங்கி விளையாடுகிறான். மக்களை அன்பாகப் பார்க்கிறன். அது நாட்டுச் சூழலுக்குபழகும் முன்பாக வனத்துக்குள் கொண்டு விடச்சொல்லி வன ஆர்வலர்கள் வற்புறுத்துகிறார்கள். அது தனது குடும்பத்தைத் தேடுவதாக வனத்துறையினர் சொல்கிறார்கள்.

   நீக்கு
 28. நான் போனதடவை சொன்னதுபோல நீங்க தம்பதிகளின் சைட் போஸ்ட் கூடப் போடவில்லை:)))..

  தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. நீடூழி வாழட்டும் இருவரும் மகிழ்வோடு.

  பதிலளிநீக்கு
 29. அது என்ன இலையில் வலது பக்கம் மஞ்சள் நிறத்தில், நீள சைஸில்? அதற்கு மேலே அது என்ன ப்ரோவுன் கலரில் உருண்டையாய்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி சார்.. அது மிளகாய் பஜ்ஜியாயிருக்கும். அடுத்தது டிரை ஜாமூனோ அல்லது பாதுஷாவோ என்று நினைத்துக்கொண்டேன். ஸ்ரீராம் இவ்வளவுதான் எடுத்துக்கொண்டாரா அல்லது 'அஷ்டே'ன்னு சொல்லிட்டாங்களான்னு கேட்க விட்டுப்போச்சு.

   நீக்கு
  2. ஜீவி சார்.. நெல்லை சரியாய்தான் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அவ்வளவுதான் எடுத்துக்கொண்டேன்.

   நீக்கு
 30. / இதை முகநூலில் 'பத்து வருட சேலஞ்' பதிவுக்கு உபயோகித்துக்கொண்டேன்!//

  ஹாங் ஹாங் செம ஐடியா .நானும் எத்தனையோ பிள்ளையாரை பார்த்திருக்கேன் இந்த தாத்தா பிள்ளையார் கனிவா இருக்கார்

  பதிலளிநீக்கு
 31. அஆவ் என்னோட ஆட்டுக்குட்டி பஜ்ஜி கமெண்டை காணோம் !!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cut பேஸ்ட் செய்றேன் அதான் பாதி போச்சு இருங்க மீதி சொல்றேன்

   அது அந்த பஜ்ஜியை பார்த்தா குட்டி ஆட்டுக்குட்டி உக்கார்ந்திருக்கற மாதிரி இருக்கு எனக்கு

   நீக்கு
  2. //அது அந்த பஜ்ஜியை பார்த்தா குட்டி ஆட்டுக்குட்டி உக்கார்ந்திருக்கற மாதிரி இருக்கு எனக்கு//

   போட்டோ எடுத்தபின் எனக்கும் அப்படித் தோன்றியது. அதே சந்தேகத்தில்தான் ஜீவி ஸார் கேள்வி கேட்டிருக்கார் போல!

   நீக்கு
  3. manger set பார்த்திருப்பீங்க ..கிறிஸ்துமஸ் குடில் அதில் ஆடு இப்படித்தான் அமர்ந்திருக்கும்

   நீக்கு
 32. சின்னத்தம்பி பாவம் எல்லாரும் அவனை தனியா விட சொல்லுங்க .நானா தினமும் கடவுள்கிட்ட ப்ரே பண்றேன்
  கடவுளே நீங்க படைச்ச ஜீவனை உங்க சொல் பேச்சு கேக்காத மனுஷங்க பாடப்படுத்தறாங்க தயவுசெஞ்சு சின்னத்தம்பியை காப்பாத்துங்கன்னு

  பதிலளிநீக்கு
 33. சின்னத்தம்பி தன் குடும்பத்தைத் தேடியலையும் முயற்சியில் நாட்டு வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டிருக்கிறது ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனுஷன் அதுங்க இடத்துக்கு போக வேணாம் அதுகளும் நம்ம இடத்துக்கு வரவேணாம் .யாவும் இருக்கும் இடத்தில இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே

   நீக்கு
 34. அந்த தொண்டி இப்படித்தான் நினைச்சி அழுசிரிக்கிறார் //எல்லாத்துக்கும் நீதான் ஒரே வாரிசா ?? எவ்ளோ பணம் எவ்ளோ பணம் !!!!//

  பதிலளிநீக்கு
 35. சிங்கமுறுமும் என்று அதற்கு தெரிந்திருக்கிறதே ல்க்ஷ்மியின் மிதிலா விலாஸ் நீ படித்திருக்கிறாய் என்று உள்மனம்சொல்கிறது ஆனால் எதுவும் நினைவில்லை

  பதிலளிநீக்கு
 36. படங்களும் பதிவுகளும் அருமை
  தொடருகிறேன்

  பதிலளிநீக்கு
 37. ஸ்ரீராம் உங்கள் பயண விவரங்கள் அதுவும் உங்கள் உடல் நலக் குறைவுக்கிடையே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். பிள்ளையார் படம் அழகாக இருக்கிறது.

  சசிகலாவைப் பார்த்து அந்தம்மா அழுவது வருந்தி அழுவது போல் உள்ளது.

  யானை படம் அழகாக இருக்கிறது. சின்னத்தம்பி பற்றி ஏதோ கொஞ்சம் செய்தி வந்தது. ஆனால் அதன் பின் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. பாலக்காட்டில் இருந்திருந்தால் இன்னும் தெரிந்திருக்கும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 38. யானை படம் சூப்பர் ஸ்ரீராம்.

  இப்படி ரேர் ராகம் எல்லாம் கேட்டால் அவர் பாவம்...அவருக்கு அது ப்ராக்டீஸ் இல்லை என்று தோனுது நீங்க ச்பொல்லிருக்காப்புல

  காபி நாராயணி அருமையான ராகம். இது எனக்குப் பல நினைவுகளை மீட்டது. நான் 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நான் என் அப்பா வழி பாட்டி வீட்டில் என்பதால் எனக்கு பாட்டி ஒரு பாட்டு வாத்தியார் அரேஞ்ச் செய்திருந்தார். இதைப் பற்றி கூட ஒரு இடுகை எழுதியிருந்த நினைவு....பாவம் அந்த வாத்தியார் வந்து திண்ணையில் அமர்ந்து ஸ்ருதிப்பெட்டியை வாசிக்கத் தொடங்குவார் ஆனால் நான் அங்கு இருக்க மாட்டேன் எங்கேயேனும் ஒளிந்து கொண்டு இருப்பேன். என்னைப் பிடித்துக் கொண்டு வந்து அவர் முன் உட்கார்த்துவார்கள். நான் பாடவே மாட்டேன்...அவர் மிகவும் சிரத்தையாக ஒரு நோட் புக்கில் ஸரிகமபதனிஸ விலிருந்து எல்லா வரிசைகளும் எழுதி கீதம் ஸ்வரகீதம்....கீர்த்தனை வரை வந்தார்...என்னைப் பாட வைக்க எத்தனையோ முயன்றார் பாவம் ஆனால் அவராலும் முடியவில்லை. நான் அவர் ஆரம்பிக்கும் போது ஓடிவிடுவேன்...அம்மா பாட்டி எல்லோரும் களைத்துவிடுவார்கள் என்னை ஓடிப் பிடித்தே..

  அந்த வாத்தியார் சொன்னார் ...நீ உட்கார்ந்திரு போதும். நான் பாடுவதை கேள் நீ பாட வேண்டாம் அப்படினு சொல்லி நான் உட்கார்ந்து ஏதேனும் விளையாடிக் கொண்டே கேட்டதுதான்....அப்படி அவர் எனக்கு சரசசாம தானா பெத தண்ட….என்பது வரை வந்தவர் …...சரியான தண்டம் இது என்று நினைத்திருப்பார் என்னைப் பற்றி ஏனென்றால்..அதுவரைதான் அப்புறம் அந்த வாத்தியார்...இவளுக்கு பாட்டு இப்ப வேண்டாம் கத்துக்க மாட்டேன்றா சமாளிக்க முடியலை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஹா ஹா ஹா அப்பவே இந்த காபிநாராயணி என் மனதில் பதிந்த ஒன்று...

  ஆனால் அதை நினைத்து நான் பின்னாளில் ரொம்ப வருந்தியிருக்கேன். ஏனென்றால் அப்புறம் சான்ஸ் கிடைக்கலை. கிடைத்த்தும் பாதியில் நின்றது....

  கீதா

  பதிலளிநீக்கு
 39. சின்னம்மாவைப் பார்த்து அந்தப் பெண் மணி அழுவது எனக்குத் தோன்றியது என்னவென்றால்....ஜெ சமாதிக்கு வணக்கம் செலுத்துகிறார் சின்னம்மா அப்ப அந்தப் பெண்மணி அவரைப் பார்த்து ...ஜெ மரணத்திற்காக மிகவும் வருந்தி அதை சின்னம்மாவிடம் சொல்லி கை கூப்பி ஒப்பாரி அழுகை அழுவது போலத்தான் இருக்கு....ஏனென்றால் கை கூப்பி இருப்பதால்...

  கீதா

  பதிலளிநீக்கு
 40. யானை அழகா இருக்கே..

  சின்னத்தம்பி பத்தி நீங்க இங்க சொன்னப்புறம் தான் பார்த்தேன் நெட்ல. பாவம் ஸ்ரீராம அது...நம்மகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குது...அதோட இடத்துல தானே மனுஷங்க ஆக்ரமிச்சு இருக்காங்க. யானை தடங்கள் வழி எல்லாம் வீடுகள் கட்டிருக்காங்க அப்புறம் எப்படி அது வராம இருக்கும்...ஊருக்குள்ள...

  அதை வைத்து உடனே எனக்கு கதை கூடத் தோனிச்சு. மனசுல இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!