செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - அம்மா காத்திருக்கிறாள் - கீதா ரெங்கன்


அம்மா காத்திருக்கிறாள்
கீதா ரெங்கன் 


என்றும் வரும் அம்மாவை ஏன் இன்று காணவில்லை? அம்மாவுடன் பேசவில்லை என்றால் அன்றைய தினம் ஏனோ, ஏதோ ஒரு மாதிரி இருப்பது போல் தோன்றும் எனக்கு. அம்மாவுடன் பேசினால் நேர்மறையான அறிவுரைகள், தீர்வுகள் கிடைக்கும். அம்மாஆஆஆ

'குழந்தே எப்படிம்மா இருக்க? உன்னப் பார்த்தா ரொம்பத் தவிப்பா இருக்கு. நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்மா. நீ வாழ்க்கைல படற கஷ்டம் போதாதுனு இப்ப இதுவுமா? வந்துருமா என் கூட'

ஓ! அம்மாவின் குரல். அம்மா வந்துவிட்டாள். எப்போதும் நல்ல அறிவுரை சொல்லும் அம்மா, சமீபகாலமாக என்னைத் தன்னோடு வந்துவிடும்படி அழைத்துக் கொண்டே இருக்கிறாள். ஏனோ? தெரியவில்லை. எனக்கு விருப்பமில்லையே. எனக்கு வாழ வேண்டும்.

'அம்மா! நான் உன் கூட வந்துடறேன்னு ஓரிரு தடவை, ஒரு சலிப்புல சொல்லிருக்கேன்தான். ஆனா, உன் பேரனையும், பேத்தியையும் விட்டு எப்படிமா உங்கூட வர முடியும்? வந்தேன். போய்ட்டு வரேன்னு வரக் கூடியதா? என்ன?'

'உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காம இருந்திருக்கலாமோனு தோணுது. மாப்பிள்ளை பேசற வார்த்தைகளைக் கேக்கும் போது மனம் ரொம்பக் கஷ்டப்படுதுமா..'

'ப்ச்! விடும்மா……இதுதான் வாழ்க்கை. நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. நாம வாழ்க்கைய அமைதியா ரசிச்சோம்னா சந்தோஷம் தானா வந்துரும். நான் சந்தோஷமாத்தானே இருக்கேன்! கவலைப்படாதம்மா'

'எல்லா அம்மாக்களுக்குமே தன் குழந்தைகள் கஷ்டப்பட்டா தாங்கிக்க முடியாது…….அது உனக்கும் பொருந்துமே.'

'அதேதான். எனக்கு இன்னும் வாழனும்மா….”

விசும்பும் சத்தம். அம்மாதான். 'அம்மாஆஆஆ…….'

“அறிவு கெட்ட முண்டம். கண்டத செய்ய வேண்டியது. என்னவோ இவதான் உலகத்துலயே பெரிய புடுங்கி போல……எல்லாம் செஞ்சா இப்படித்தான் வியாதி வந்து சாக வேண்டிவரும்….”

வாஹினியின் தலை அசைவதைப் பார்த்து அவள் கணவனின் வார்த்தைகள். வாஹினி ஒன்றும் கண்டதைச் செய்யவில்லை. கொஞ்சம் கஷ்டப்படும் தன் கணவனுக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்துடன் நல்ல பணிதான் செய்கிறாள்.

வலது கை கொடுக்கும். இடது கை அடிக்கும். அப்படியான ரகம் அவன். நடுவாந்திரமாகப் பேசும் டேக் இட் ஈசி ரகம் இல்லை. டென்ஷன் பார்ட்டி. சமீபகாலமாக வார்த்தைகள் தடித்துத்தான் போயிருக்கிறது. அன்பார்லமென்டரி வேர்ட்ஸ் என்று எல்லையைத் தாண்டி. அடிக்கடி எருமை மாடு என்று திட்டுவதற்கு ஏற்ப வாஹினியின் மனமும் சூடு சொரணை அற்றதுதான். இப்போது மூளையும் சொரணை அற்......இல்லை இல்லை நேராது.

வாஹினிக்கு வெகு அரிதாகத் தோன்றுவதுண்டு இப்படி வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு தேவையா எட்ஸ்ட்ரா எட்ஸட்ரா எல்லாம். ஆனால் நல்லதை மட்டுமே நினைத்துப் பார்க்கப் பழகிவிட்ட மனம். அத்தனை எளிதாகத் தவறாக எடுத்துக் கொள்ளாத மனம். விரைவில் எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணம்.

“குட்மார்னிங்க் வாஹினி ஆண்டி! சுகமானோ?”

வாஹினியின் கண்கள் மெதுவாக முழுவதும் திறக்க இயலாமல் திறந்தது. எல்லாம் பசபசப்பாகத் தெரிந்தது.

“குட்மார்னிங்க் சிஸ்டர்” மெலிதாக உதடுகள் அசைந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. அந்த மயக்க நிலையில் எண்ணங்கள் தாறுமாறாக ஓடியது.

என்ன இது நான் எங்கிருக்கிறேன்? ஓ! நேற்று….நேற்றா? தெரியவில்லையே. ஏதோ செய்தது. மூச்சுத் திணறல். மயக்கம்...ஓ ஆஸ்பத்திரி. ஏதேதோ மெஷின்கள், குழாய்கள், மூக்கிலும், உடம்பிலும் செருகப்பட்டு பீப் பீப் என்று சத்தங்கள். மருந்துகள், இத்யாதி. இவர் இருக்கிறார். பசபசப்பாகத் தெரிகிறது. குழந்தைகளுக்குத் தெரியுமோ?....

“ஆஹா ஆண்டி கண்ணு தொறக்குனுண்டல்லோ! வெரி குட்! மயக்கம் எல்லாம் ஷரியாகுனுண்டு இல்லே? ஸ்வாசம் முட்டலும் போயல்லோ?” கேட்டுக் கொண்டே அருகில் வந்த கேரளத்து வடிவழகி ஐவி வழியாக ஒரு ஊசியைச் செருகினாள். தேன் குரலில் இன்னும் தேன் அப்பி பேசிக் கொண்டே ஊசியை இறக்கும் மாய்மாலக்காரி. மருந்து இறங்கிக் கொண்டு இருந்தது. புறங்கை வெயினில் வலி எடுத்தது போலும் வாஹினியின் முக அறிவிப்பைப் பார்த்து புறங்கையை அழுத்தித் தடவிக் கொடுத்தாள்.

“நேத்து ஆண்டிய போதமில்லாது இவிட கொண்டு வந்நப்ப வலிய டாக்டர் கொஞ்சம் கவலையாகிப் போச்சு. உங்க மகநுட ப்ரொஃபசர்னு அறிஞ்ஞு மகன்ட்டயும் பேசினாங்க. டாக்டர் வந்நு சொல்லுவாங்க.” என்று மல்லுதமிழில் பேசிக் கொண்டே ட்ரிப்ஸ் பேக் மாற்றினாள். யூரின் பையை காலியாக்கினாள். அளந்து கொண்டாள். வாஹினிக்கு அவள் சொன்னது எவ்வளவு தூரம் மூளைக்கு எட்டியதோ. முந்தைய தினம் வாஹினியின் நிலை கோமாவை எட்டுவதற்கு முந்தைய நிலை.

“சாரே! வேற மெடிசின் வாங்கணும். பழைய மெடிசின் உண்டெங்கில் மெடிக்கல் கவுண்டரில மாற்றாம்.”

வாஹினியின் கணவன் மருந்து வாங்கப் போய்விட்டான். கேஸ் ஷீட்டை மறுபடியும் புரட்டினாள் நர்ஸ். வாஹினி கண் விழித்துவிட்டாள் என்று டாக்டரிடம் பேசினாள். ஜோக் சொல்லி பேசிக் கொண்டே – நோயாளிகளுக்கு சைக்கலாஜி சிகிச்சையாம் - பிபி செக் செய்து ப்ளட் எல்லாம் எடுத்துக் கொண்டாள். நர்ஸ் பேசியது வாஹினியின் மூளைக்கு எட்டியதா என்று தெரியவில்லை.

டாக்டர்கள் வைத்த கெடு நேரத்தை வாஹினி கடக்கவில்லை என்றாலும் அட்மிட் ஆன நிலையிலிருந்து கொஞ்சம் மீண்டிருந்தாள் என்று சொல்லலாம்.

'இந்த நேரத்துலயும் உன்னை இப்படித் திட்டுறாரே மாப்பிள்ளை.…….' மீண்டும் அம்மா… 

சரி அம்மாவும் பெண்ணும் பேசிக் கொள்ளட்டும். நான் இடையில் நுழையவில்லை.

'ம்மா ப்ளீஸ்.  எனக்கு விக்னேஷையும், சாருவையும் பார்க்கணும்மா. ஏன் இன்னும் வரலை? விக்னேஷ் இப்பத்தான் ஐசிஎம்ஆர் ல ஜாயின் செஞ்சுருக்கான். சாருவுக்கு எக்ஸாம் டைம். எப்படி வராங்கனு தெரியலை. எனக்கு இன்னும் வாழணும்மா. எனக்கு ஒன்னும் ஆகாது'

‘கரெக்டுதான் குழந்தே. உன் கஷ்டம் பார்த்து உன்னை எங்கூட கூட்டிட்டுப் போயிடலாம்னுதான் வந்தேன். ஆனா, மனசு கேக்கலை. நான்தான் உங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு சீக்கிரம் போய்ட்டேன். என் பேரன் பேத்தி தவிக்க வேண்டாம். இப்ப உங்கப்பா கஷ்டப்படறாரே அது போல மாப்பிள்ளை கஷ்டப்படக் கூடாது. நீ பேரன் பேத்தி எடுத்து இன்னும் பல வருஷம் அதுகளோட சந்தோஷமா, நோய் நொடி இல்லாம இருந்துட்டு வா’

'ஆமாம்மா. எனக்கு இன்னும் இருக்கணும்மா. இப்ப வந்துருக்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைமா. நிச்சயமா ஒன்னும் இருக்காது. அப்புறமா சந்தோஷமா வரேன். நீயே வந்து கூட்டிட்டுப் போம்மா.'

அம்மா காத்திருக்கிறாள்…..

------------------------------

தில்லி விமான நிலையம். தவிப்புடன் விக்னேஷ் போர்டிங்கிற்காகக் காத்திருந்தான். எமர்ஜென்சி புக்கிங்க். இப்படியான சமயத்தில் ஒரு விநாடி காத்திருத்தல் கூட யுகம் போலத் தெரியும். பொறுமை ஜகா வாங்கும்.

தகவல் வந்ததுமே டாக்டருடன் பேசிவிட்டான். பார்ஷியல் ஸ்ட்யுப்பர், ஐசியு , ஈஈஜி என்றார். விவரித்தார். அந்த விவரங்கள் எல்லாம் அவர்கள் இருவருக்குமான மருத்துவ வார்த்தைகள். நமக்கு அது வேண்டாம். க்ரிட்டிக்கல்தான், சில மணிநேரக் கெடு என்று அவர் முடித்த அந்த இரு வார்த்தைகள் நமக்குப் போதும்.

டாக்டர் அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.

ஃப்ளைட் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது ஆனால் போர்டிங்க் கேட் திறக்கவில்லை. அப்போதுதான் அந்த அறிவிப்பு. ஃப்ளைட்டில் எதிர்பாராவிதமாக சில டெக்னிக்கல் பிரச்சனைகள்.. தாமதமாகும் என்று. ஆனால் நேரம் சொல்லப்படவில்லை.

விக்னேஷின் தவிப்பு கூடியது. புக் செய்ய முடிந்ததே இரவு 2 மணி ஃப்ளைட்டில். இப்போது விடிந்த பிறகுதான் பறக்கும் போல. விமானம் போல் இல்லையே மனம். அது தாறுமாறாகப் பறந்து கொண்டிருந்தது. டாக்டரிடம் இருந்து இன்னும் பாசிட்டிவாக வரவில்லை. அவன் வேண்டாத தெய்வங்கள் இல்லை.

தங்கை சாருவைக் கூப்பிட்டான். அவள் திருச்சியிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னாள். அவள் அழுகிறாள் என்று தெரிந்தது. ஒன்றும் ஆகாது என்று அவளைத் தேற்றினான். தான் அருகில் இல்லாத போதுதான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று வருந்தினாலும், அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது என்று அவன் உள் மனது சொல்லிக் கொண்டே இருந்தது.

தில்லி குளிரும், வெயிலும் அம்மாவுக்குத் தாங்க வேண்டுமே. கொஞ்சம் அதற்கான வசதிகள் செய்து கொண்டதும் பெற்றொரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தான். அதற்குள் அம்மாவுக்கு இப்படி ஆகிவிட்டது. சரியானதும் அழைத்து வந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மருத்துவ படிப்பு படிக்கும் போது சொல்லித் தரப்படும் முதல் பாடமே நம் நெருங்கிய உறவினராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படக் கூடாது என்பதே. என்னதான் மருத்துவராகக் கற்றாலும் அம்மா என்று வரும் போது மனம் அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டுத் தவிக்கத்தான் செய்கிறது.

எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை. எதிலும் மனம் ஈடுபட மறுத்தது. அம்மாவின் அன்பான முகம் தான் வந்து வந்து சென்றது விக்னேஷிற்கு.

விடிந்து 6 ஆகியும் இன்னும் சரியாகவில்லை ஃப்ளைட்.  8 மணி என்று அறிவிப்பு வந்தது.

போர்டிங்க் செய்யும் முன் அப்பாவைத் தொடர்பு கொண்டான். அம்மாவுக்கு நினைவு சிறிது வந்திருப்பதைத் தெரிந்து கொஞ்சம் சமாதானம் ஆனான்.

அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த போது டாக்டர் குழு வந்ததை அறிந்ததும், ஃபோன் கட் செய்துவிட்டு சிறிது நேரத்தில் டாக்டரிடம் பேச மீண்டும் அழைத்தான் விக்னேஷ். “மிராக்கிள்” என்றார். கெடுவை கடந்து விட்டாலும் முழுவதும் நினைவு வரவில்லை மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார். இருந்தாலும் விக்னேஷுக்கு கொஞ்சம் சமாதானம்.

“அம்மாகிட்ட பேசு விக்னேஷ். அவங்களால பேச முடியலைனாலும் நீ வரத சொல்லி உன் குரல் அவங்க காதுல கேக்கட்டும். இன்னும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருக்கும்.

“ம்மா நீ நல்லாயிடுவம்மா. ஒன்னும் கவலையில்லை. டாக்டர் நீ நல்லாருக்கேனு சொன்னார் மா. இன்னும் கொஞ்ச மணி நேரம் தான். நானும் சாருவும் உன் கூட இருப்போம்.“

விக்னேஷ் பேசியது புரிந்ததோ இல்லையோ அவன் குரல் வாஹினிக்குக் கேட்டதன் விளைவு இன்னும் சில மணிநேரங்களில் குழந்தைகளைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியின் அடையாளமாக அவள் உதடு விரிந்து அசைந்தது.


அம்மா காத்திருக்கிறாள்.

61 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கோமதி அக்கா.

      நீக்கு
    2. இன்றும் கீதாவின் கதை வரும் என்பதையே மறந்து போனாள் கீதா...ஸ்ரீராம் தேதி கொடுத்திருந்தும்....பல பணிகளில் மறந்தே போனது....

      ஸ்ரீராம் அண்ட் எபி ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி நேற்றைய பதிவு மற்றும் இன்றைய கதை வெளியிட்டமைக்கு....மிக்க மிக்க நன்றி...இப்படி எல்லோருடைய படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கம் அளிப்பது என்பது மிகுந்த மகிழ்வும் நெகிழ்ச்சியும் தரும் தருணங்கள்...

      இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தேன்....கொஞ்சம் பணிகள் முடித்துவிட்டு வருகிறேன்....இரவிற்குள் பதில் கொடுத்துவிடுகிறேன்...இனிதான் கருத்துகளைப் பார்க்க வேண்டும்...

      மிக்க நன்றி...

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் இக்கதை உருவானது உங்கள் கதையிலிருந்துதான் "அம்மா காத்திருக்கிறாள்" உங்கள் கதை. அடுத்து துரை அண்ணாவின் இரு கதைகள் வந்தனவே....அப்பவே உருவானது எழுதி முடித்து அனுப்பத்தான் தாமதமானது...வழக்கம் போல் ஹா ஹா ஹா..

      ஸோ உங்களுக்குத்தான் நன்றி சொல்லனும்...உங்கள் கதையிலிருந்து பிறந்த கதை....

      உடனேயே அதிராவின் அழகான கருத்துகள் நிறைந்த பதிவு வெளியானதே!! பாருங்க உங்க கதைக்கு எத்தனை பதிவுகள்!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. கதை ஆரம்பம் முதல் முடிவு வரை மிக அருமை.
    அன்பு அதுதரும் தெம்பு.
    மலையாள செவிலியர் உரையாடல் அருமை.
    அவர்கள் அன்பாக , மலர்ந்த முகத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு.


      //அவர்கள் அன்பாக , மலர்ந்த முகத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவார்கள்.//

      ஆமாம் அக்கா அதுதான் காரணமாக இருக்குமோ? உலகம் முழுவதும் நிறைந்திருப்பதன் காரணம்....

      கீதா

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கும் பாராட்டிற்கும்

      கீதா

      நீக்கு
  4. // நீ பேரன் பேத்தி எடுத்து இன்னும் பல வருஷம் அதுகளோட சந்தோஷமா, நோய் நொடி இல்லாம இருந்துட்டு வா’//

    தாயின் வாழ்த்து கிடைத்த குழந்தை நீண்ட ஆயுளூடன் இருக்கும்.
    கண்ணீர் துளிர்த்து விட்டது.
    நல்ல கதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கும் பாராட்டிற்கும்..

      கீதா

      நீக்கு
  5. நல்ல கதை. மாப்பிள்ளை மனைவியைத் திட்டினாலும் நல்ல மருத்துவமனையில் சேர்த்து உரிய நேரத்தில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பதால் அவருக்கும் மனைவி மேல் அக்கறை இருக்கத் தான் செய்கிறது என நினைக்கிறேன். இன்னும் பிள்ளையையும், பெண்ணையும் பார்த்துவிட்டால் வாஹினி எழுந்து உட்கார்ந்து விடுவாள். நல்லபடி பிழைத்து நீண்ட நாட்கள் வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு.

      ஆமாம் வாஹினி நீண்ட நாட்கள் வாழ்வாள்!

      கீதா

      நீக்கு
  6. இப்போக் கொஞ்ச நாட்களாக எபி காலங்கார்த்தாலே போணி ஆகறதில்லை போல! :( விரைவில் நிலைமை சரியாகவும் அனைவருக்கும் நல்வரவும், வாழ்த்துகளும். பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... வாங்க கீதா அக்கா... நன்றி!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கீதாக்கா நானும் காலைல முதல்ல வரப்ப தோனும் என்னாச்சு கீதாக்கா, துரை அண்ணா, தேம்ஸ், சிலப்போ வெங்கட்ஜி, நெல்லை.. யாரும் போட்டிக்கு வரவே இல்லையே நு தோனும்.....நான் தான் ஃபர்ஸ்டுனு சொல்லி அதுவே கொஞ்சம் கருத்து போகும்..அப்படியான ஜாலி மொமென்ட்ஸ் மிஸ்ஸிங்க் இப்ப...சரியாகிடும்...நாளைக்கு நான் முதல்ல உள்ள நுழைந்துடுவேனாக்கும்....யாரெல்லாம் எங்கூட போட்டிக்கு வரீங்க...தேம்ஸ்க்கு கேட்டிருக்குமோ...ஆஆஆ

      கீதா

      நீக்கு
  7. அன்பு கீதா வெகு இனிய கதை. வாஹினி உயிர் பெற்றூ எழுவாள்.
    குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பாள்.

    அம்மா காத்திருக்கட்டும். வாஹினி துன்பங்களிலிருந்து மீண்டு
    வரவேண்டும்.
    இத்தனை நல்ல குழந்தைகளுக்காவது அவள் திடம் பெறுவாள்.
    இந்த அருமையான கதையின் உணர்ச்சியிலிருந்து உடனே விடு பட முடியவில்லை.
    மனம் நிறை வாழ்த்துகளம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா வாஹினி சந்தோஷமாக இருப்பாள்.

      அம்மாவைப் பற்றி என்றாலே எல்லோரது மனமும் அப்படித்தான் இல்லையா வல்லிம்மா நம் மனது அதிலிருந்து விடுபட டக்குனு முடிவதில்லை......

      மிக்க நன்றி வல்லிம்மா வாழ்த்திற்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  8. காலையில் சோகக் கதையா?

    உரையாடல்கள் நல்லா இருக்கு. இருந்தாலும் கதையின் ஃப்ளோ கொஞ்சம் குழப்பமா இருக்கு.

    பெண்கள்.... அவங்க பொதுவா கஷ்டப்படறவங்கதான். 'ஐயையோ நானும் ஓர் பெண்ணாய்ப் பிறந்ததை' என்ற பாடலை நினைவுபடுத்துகிறது. ஆனா அவங்க இல்லைனா வாழ்க்கையே இல்லையே... விளக்கு எரிய, திரி கருகித்தானே ஆகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///காலையில் சோகக் கதையா?///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதில எங்கிருக்கு சோகம், சோகமாக ஆரம்பிச்சு நல்லபடிதானே போய்க்கொண்டிருக்கு கதை... விடமாட்டமில்ல:).

      ஆனா நெல்லைத்தமிழன், இப்போதெல்லாம் நிறையவே பெண்களின் வாழ்க்கை மாறியிருக்கு.. கிராமப்புறங்களில்கூட ஆண்கள் நிறைய மாறி விட்டார்கள், மனைவியை மதிப்புக் கொடுத்தே வைத்திருக்கிறாஅர்கள் எனத்தான் எண்ணத் தோணுது.

      நீக்கு
    2. நெல்லை நான் சொல்ல வந்ததை அதிரா சொல்லிட்டாங்க...சோகம் இல்லையே முடிவு வெரி பாஸிட்டிவ் தானே...பாருங்க ஜி எம்பி சாரே சொல்லிருக்கார்...கீழ....

      நெல்லை அது முதலில் வரும் பார்ட் வாஹினி தினமும் அம்மாவை நினைத்து தன் மன எண்ணங்களை அம்மாவுடன் பேசுவது போல மனதிற்குள் சொல்வதாக எழுதியது..அதுவும் உடம்பு முடியாமல் இருக்கும் போதும் கூட மனதிற்குள் கனவு போல் சிலருக்கு இப்படித் தோன்றுவதுண்டு என்பது சைக்காலஜியில் வரும்...அதாவது மூளையின் மயக்கத்தில்.....அப்போது அம்மா என்ன சொல்வாள் என்பது போல...இதெல்லாம் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது தானே...அதைத்தான் முதலில்...வாஹினிக்கு வாழ வேண்டும் என்ற ஆசை அதிகம் என்பதால் காத்திருக்கச் சொல்லுவது போல உரையாடல்கள்....அடுத்து வாஹினி கொஞ்சம் மயக்கம் தெளியும் போது இப்போதைய நிகழ்வுகள்...மயக்கத்தில் அம்மாவுடன் என்பது போல....இப்போது வாஹினி தன் குழந்தைகளுக்காகக் காத்திருக்கிறாள் என்பது போல...

      மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  9. அருமையான கதை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  10. உணர்ச்சிகரமான பெற்றவள். புருஷன் ஸுபாவமெல்லாம் பழகிப்போய்விடும். குழந்தைகளுக்குதான் முதலிடம். அழகான கதை உருக்கமாக இருக்கிறது. அம்மா காத்திருப்பாள். காத்திருக்கட்டும். ஆஸ்ப்பத்திரியில் இருக்கும் மனநிலை தத்ரூபம்.
    நிறைய எழுதலாம். வாஹினி குடும்பத்தை இன்னும் வஹிக்கவேண்டும்.இரண்டு சொட்டு கண்ணீரையாவது படித்துக்கொண்டே விடும்படியான உணர்ச்சிப்பிரவாகம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் காமாட்சிம்மா....எல்லாமே பழகிவிடும்தான்...

      //ஆஸ்ப்பத்திரியில் இருக்கும் மனநிலை தத்ரூபம்.//

      மிக்க நன்றி காமாட்சிம்மா....ஆமாம் நிறைய எழுதலாம்....

      மிக்க நன்றி காமாட்சிம்மா உணர்வு பூர்வமான கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
  11. // எல்லா அம்மாக்களுக்குமே தன் குழந்தைகள் கஷ்டப்பட்டால் தாங்கிக்க முடியாது...///

    அருமை.... அருமை...

    மனதை நெகிழ்த்திய கதை...

    அன்பிப் பாராட்டுக்கள்... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா மிக்க நன்றி கருத்திற்கும் பாராட்டிற்கும்

      அம்மா என்றால் நெகிழாதவர் யார் இல்லையா?!!!

      கீதா

      நீக்கு
  12. காலையிலேயே கதையை வாசித்து விட்டேன்...

    இப்போது தான் சற்று ஓய்வு கிடைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தாமதம் தான் பதில் கொடுக்க. பயணத்தில் இருந்ததால். இன்றுதான் பங்களூர் வந்தேன்...வந்ததும் வீட்டுப் பணிகள்...அப்புறம் பவர் போய் போய் வந்து கொண்டே இருந்தது. இப்போதுதான் கொடுக்க முடிகிறது...

      கீதா

      நீக்கு
  13. நெகிழ்சியான கதை. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா கருத்திற்கும் பாராட்டிற்கும்

      கீதா

      நீக்கு
  14. வரவர உங்கள் கதைகள் நெகடிவ் ஃபீலிங் விட்டு பாசிடிவ் வாகஇருக்கச் சொல்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஜி எம் பி சார் பாசிட்டிவாக இருந்தால்தானே வாழ முடியும்! அதுதானே மனதை உற்சாகத்துடன் வைத்திருக்க உதவும்! மகிழ்ச்சியுடன் இருந்தால்தானே மனமும் நல்லதை நினைக்கும் ஒழுங்கா யோசிக்கும்...

      மிக்க நன்றி ஜி எம்பி ஸார் வாழ்த்திற்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    அருமையான கதை. முதலில் அம்மாவின் பாசம் கண்களை நிரப்ப செய்தது என்றால், பின்பு குழந்தைகளின் பாசம் கண்ணில் நீர் வடியும்படி செய்து விட்டது. இரண்டு இடங்களிலும் அம்மாக்கள் தன் குழந்தைகளுக்காக காத்திருப்பது பாசத்தின் உச்சகட்டம். வாழ்ந்து முடிந்த பிறகும், வாழும் போதும், அம்மா பாசத்திற்கு நிகர் வேறெதுவும் இல்லை எனத் தோன்றுகிறது. மனம் கரைந்து விழிகள் நனைந்து விட்டன. நன்றாக யோசித்து அழகாக தொய்வின்றி கதையை நகர்த்தி உள்ளீர்கள். பாராட்டுகள். அருமையான பாசம் மிக்க பாசிடிவ் கதையை தந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா உண்மைதானே...(நல்ல) அம்மா என்பவள் தன் குழந்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் ஆக்ரமித்திருப்பாள் என்பது ஸர்வ நிச்சயம்...

      மிக்க நன்றி கமலா அக்கா பாராட்டிற்கும் உணர்வுபூர்வமான கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  16. அம்மா என்கிற வார்த்தையிலேயே சோகம் அழுந்தியிருக்கிறதோ? அம்மா சரிந்துவிட்டால் ஆடித்தான் போகிறது குடும்பம். சூழலின் அழுத்தத்தை நன்றாகக் காண்பிக்க முயற்சித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் அண்ணா...ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேர்...அதில் அம்மா என்பவள் ஆணிவேர்..அந்த ஆணிவேர் சரியாக இல்லை என்றால் குடும்பமே ஆடிவிடும்...இருக்கும் போதும் சரி.. ....இல்லாவிட்டாலும் ...

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  17. ஆவ்வ்வ்வ் கதை படிச்சேன், மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க கீதா, முடிவைப் பற்றி ஏங்கிக்கொண்டே படிச்சேன், ஆனாலும் ஒரு நம்பிக்கை முடிவு மோசமாக இருக்காது என.. முடிவும் நல்ல முடிவே.

    “அம்மா நான் இன்னும் வாழனும்மா”.. என அவ அடிக்கடி சொல்கிறா எல்லோ.. அந்த பொஸிடிவ்வான எண்ணம்தான் அவவை எவ்ளோ துன்பங்கள் வந்தாலும் துவண்டிடாமல், வாழ வச்சிருக்குது. இனி என்ன மகன் மகளோடு சந்தோசமாக இருப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் அதிரா பாசிட்டிவ் எண்ணங்கள் தான் நம்மை வாழ வைக்கும்...நல்ல மனோதிடத்துடன்....அப்படியான பாசிட்டிவ் வாஹினி மனோபலத்துடன் வாழ்ந்திடுவாள்தான்...

      ஸ்ரீராமின் கதை மனதை உலுக்கிய அருமையான கதை!!! இப்பவும் அது என் மனதில் பளிச்! அது போல அதைத் தொடர்ந்த துரை அண்ணாவின் இரு கதைகள்....உங்களின் தத்துவப் பதிவு...அனைத்தும் மனதில் பளிச்...

      மிக்க நன்றி அதிரா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  18. துறவிகளுக்குக்கூட, தாய் என்பவ துறவறத்துள் வரமாட்டாவாம்.. அனைத்தையும் துறந்த பட்டினத்தார்கூட தாயின் மரணத்திலே கதறி அழுதாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அப்படித்தான் சொல்லுவதுண்டு அதிரா.

      ஆனால் விதிவிலக்குகள் உண்டு அதற்கான அந்த ஞான நிலையான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே!

      மிக்க நன்றி அதிரா..

      கீதா

      நீக்கு
  19. அம்மா என்றாலே அன்பு அந்த அன்பு பூவுலகைவிட்டு பிரிந்தாலும் தொடரும் .மிக அருமையா எழுதியிருக்கீங்க கீதா .# எல்லாருமே நல்லது நடக்கும்னு நினைத்தே பல திருமணங்கள் நடத்தப்படுகின்றன சிலர் வாழ்க்கை சோலைவனமாகின்றன சில காக்டஸ் முள் கற்றாழை நிறைந்த பாலைவனமாகின்றன .நிச்சயம் அன்பான பாட்டி அம்மா வளர்ப்பில் வளர்ந்த விக்னேஷ் இன்னொரு பெண்ணுக்கு கண்ணீரை தரவே மாட்டான் என்பது நன்கு விளங்குது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல்....அம்மா என்பவள் ஸ்பெஷல்தான்...பலருக்கும் அம்மா மறைந்தாலும் அது தொடரும் ஒன்று என்பதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்....அதான் அப்படி வந்துச்சு ஸ்ரீராமின் கதையை வாசித்ததும்...மனசுல தோனிச்சு..

      //.எல்லாருமே நல்லது நடக்கும்னு நினைத்தே பல திருமணங்கள் நடத்தப்படுகின்றன சிலர் வாழ்க்கை சோலைவனமாகின்றன சில காக்டஸ் முள் கற்றாழை நிறைந்த பாலைவனமாகின்றன// உண்மைதான் ஏஞ்சல்...

      மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு...பாராட்டிற்கு

      கீதா

      நீக்கு
  20. நல்ல கதை. ரசிக்கும்படியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முத்துசுவாமி சகோ உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  21. உணர்வுகள் மிக அழகாய்ப் பதிவாகி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரிஷபன் அண்ணா! அருமையான கதாசிரியர் உங்களிடம் இருந்து வந்த இந்தக் கருத்து என்னை ரொம்ப மகிழ்வித்து ஊக்கம் அளிக்கிறது! மிக்க நன்றி அண்ணா...

      கீதா

      நீக்கு
  22. நெகிழ்ச்சியான கதை கீதாக்கா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!