திங்கள், 5 ஆகஸ்ட், 2019

"திங்க"க்கிழமை : பஞ்சாபி வகை ஸப்சி - ரேவதி நரசிம்ஹன் ரெஸிப்பி

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.


தேங்காய் இல்லாத, புளி சேர்க்காத ,மிளகாய் இல்லாத, கொழுப்பைக் குறைக்கும் கொலஸ்ட்ரால் கட்டுப்படும், எடை குறையும். என்றேல்லாம் சொல்லி சுமிதா என்ற பெண் எனக்கு சொல்லிக் கொடுத்த பஞ்சாபிக் கூட்டு. 2005  ஸ்விஸ்ஸில் இருக்கும் போது கற்றுக்கொண்டேன்.

பஞ்சாபி  வகை சப்ஸி 

தேவையான பொருட்கள்। நான்கு  நபர்களுக்கு.

1, பயத்தம்பருப்பு....200கிராம்

2 சேர்க்கக்கூடிய காய்கறிகள்

ஸூக்கினி,

முட்டைக்கோஸ்,

சௌ சௌ

தக்காளி

பட்டாணி,

காரட்,

குடமிளகாய்



3,அரைக்க வேண்டிய மசாலா

தனியா 3 தே.கரண்டி
மிளகு 2 தே.க
பூண்டு 2
சீரகம் 3 தே.க
பெருஞ்சீரகம்..2 தே.க
ஓமம்  1 தே .க.
கசகசா 
லவங்கம் 
கிராம்பு 
ஏலம் ,
வறுத்த  கொள்ளு  ,நிலக்கடலை வறுத்தது 
தேவையான  உப்பு.

இவைகளை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் பயத்தம்பருப்பையும்,காய்கறிகளையும் தனித்தனியே  வேக வைத்து எடுத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சீரகம் கொத்தமல்லி, இவற்றைத் தாளித்துக் கொண்டு அதில் பயத்தம்பருப்பு,காய்கறிகளை ஒன்றாகப் போட்டு உப்பும் சேர்க்கவும் .

ஒரு கொதிக்குப்பிறகு அரைத்த மசாலாவையும் சேர்த்து வாசனை வந்ததும் இறக்க வேண்டியதுதான்.

மேலே பெருங்காயப் பொடி விருப்பமிருந்தால் தூவலாம்.




67 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் வல்லிம்மா தொடரும் அனைவருக்கும்

    வாவ் எங்கள் வீட்டில் வட இந்திய உணவுகள் நன்றாக செல்லுபடியாகும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. வல்லிமம ரெசிப்பி சூப்பர்.

      செஞ்சுட வேண்டியதுதான் செஞ்சுட்டு சொல்கிறேன்.

      இதுவரை கொள்ளு சேர்த்து அரைத்ததில்லை. நிலக்கடலை கூட சேர்த்திருக்கிறேன்..

      உங்கள் குறிப்பை காபி செய்து கொண்டுவிட்டேன்.

      கண்டிப்பா செய்துவிட வேண்டியதுதான்.

      வெங்காயம் சேர்க்கலாம் இல்லையா?

      கீதா

      நீக்கு
    3. @கீதா ரங்கன் - நான் வரும் அன்று மட்டும் இந்த சப்ஜில வெங்காயம் சேர்க்கக்கூடாது, மற்றபடி வெங்காயம் சேர்க்கலாம் ஹா ஹா

      நீக்கு
    4. அன்பு கீதா ரங்கன்,
      நன்றாக செய்து பாருங்கள். வெங்காயம் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப.
      அவள் வெங்காயத்தாளும் சேர்த்துக் கொண்டாள்.
      முதலில் எனக்கு வாசனை கொஞ்சம் புதிதாக இருந்தது. பிறகு பழகிவிட்டது.
      நன்றி மா.

      நீக்கு
  2. அனைவருக்கும் ராமேஸ்வரத்திலிருந்து காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... பாவங்கள் களையும் தலத்தில் பானு அக்கா...

      காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. பானுக்கா ராமெஸ்வரமா...ஆ! எனக்கு ரொம்பப் பிடித்த இடம்...

      முடிந்தால் தனுஷ்கோடி முனை பார்த்துவிட்டு வாருங்கள். அழகான க்டற்கரை இருபுறம் மற்றும் அந்த டிப். ரோடு நல்லா போட்டுருக்காங்க இரு புறமும் கடல் சூப்பரா இருக்கும்.

      கீதா

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க.. வாங்க... எனக்கும் இணையம் நேற்றெல்லாம் படுத்தல்தான்.

      நீக்கு
  4. காலை வணக்கம் அனைவருக்கும், கீதா சாம்பசிவம் மேடம் உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலை வணக்கம் அனைவருக்கும், கீதா சாம்பசிவம் மேடம் உட்பட// ஹெஹெஹெஹெ!

      நீக்கு
  5. வல்லிம்மா ரெணிப்பி.. அட என்ன ஆச்சர்யம்..

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. நிதானமாக வந்து படியுங்கள் துரை செல்வராஜு.
      எனக்கே தூங்கும் நேரமாகிவிட்டது. மீண்டும் பார்க்கலாம்.

      நீக்கு
  7. ஆஹா... சப்பாத்தி, ஃபுல்கா, நான் இவைகளுக்கு ஏற்ற சப்ஜி...

    படங்கள் ஆவலைத் தூண்டுகிறது.

    ஸுக்கினி- நான் இதை சவுதி மற்றும் கல்ஃப்லதான் உபயோகிக்கறாங்க என்று நினைத்தேன். பீர்க்கையை எப்படி உபயோகிக்கறோமோ அதே மாதிரி சுக்கினியையும் உபயோகிக்கலாம். எனக்கு இந்த ஸுக்கினி மனசுக்கு பிடிக்காது, வீட்டுக்கு வாங்கியதில்லை.

    இந்தியாவிலும் கிடைக்குதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு முரளிமா,
      ஒரே ஒருதரம் பார்த்திருக்கிறேன் மா.

      நீக்கு
    2. இந்தியாவுக்கு இன்னமும் அதிகமாய் வரலை!

      நீக்கு
    3. பங்களூரிலும் பார்த்து இருக்கிறேன் முரளி மா.
      மற்ற காய்களை உபயோகித்து செய்து பாருங்கள்.
      பிடிக்கலைன்னால் விட்டுடலாம்.

      நீக்கு
  8. புதிய ரெசிபி.கேள்விப்படாத புதிய காய் ஸுக்கினி. செய்து சாப்பிட்டு விட்டு சொல்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று நம்ம சமையலா.
      பகவானே சாப்பிடுகிறவர்களைக் காப்பாற்று.

      அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.அன்பு துரை, அன்பு ஸ்ரீராம்,
      அன்பு கீதா,அன்பு முரளிமா, அன்பு பானு மா இன்னும் வரப் போகிறவர்களுக்கு
      இனிய வாழ்த்துகள். நட்புகள் தினம் நேற்றே முடிந்தாலும் நமக்கு என்றும் நண்பர்கள் தினம் தான்.
      எங்கள் ப்ளாகில் என்ன நடக்கிறது என்று எதிர்பார்த்தே என் பொழுது விடிகிறது. அவ்வளவு மனதுக்கு நெருக்க மாகிட்டார்கள் அனைவரும்.

      இந்த செய்முறை பஞ்சாபிப் பெண் ஒருவளது வீட்டில்
      கற்றுக் கொண்டேன்.

      இங்கேயும் செய்திருக்கிறேன்.
      படம் தான் எடுக்கவில்லை. சுக்கினி நம் சௌ சௌ மாதிரி
      அதே சுவை. உடம்புக்கு நல்லது. வயிற்றுக்கும் தான்.

      அன்பு ஸ்ரீராம், இந்த செய்முறை அடுத்த வாரம் வரும் என்று நினைத்தேன்.

      எல்லோரும் செய்யும்போது வேண்டும் என்பதைச் சேர்த்து ,
      உப்பு காரம் எல்லாம் உங்கள் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
      நல்ல படியாகச் செய்துவிட்டால் கொஞ்ச நேரத்துக்குப் பசிக்காது.
      வாரம் ஒரு முறை செய்யலாம்.
      அனைவருக்கும் நன்றி. இணையம் மெதுவாகச் செயல் படுகிறது,. கணினி
      பழையதாகி விட்டது. பாவம். 7 வருடங்கள் உழைத்திருக்கிறது.
      மீண்டும் பார்க்கலாம்.

      நீக்கு
    2. நன்றி பானு மா. தங்கள் பயணம் சிறப்புற நடக்கணும். ஸ்வாமியையும் தேவியையும் எனக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளவும்.And for everyone.

      நீக்கு
    3. நிச்சயமாக. என் பிரார்த்தனைகள் எப்போதும் எல்லோருக்குமாகத்தான். நன்றி

      நீக்கு
  9. ஜுக்கினியை நான் வெள்ளரிக்காய் மாதிரிப் பண்ணுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதாமா. எனக்கு இது ஒத்துக் கொள்கிறது.

      நீக்கு
    2. சாலட், பச்சடி எல்லாம் பண்ணலாம். நான் எங்களுக்கு என்றால் கொள்ளு சேர்ப்பதில்லை. அது என்னமோ கொள்ளு, பூண்டு, பிரண்டை இதெல்லாம் ஒத்துக்காமல் போய் விட்டது! மற்றபடி ஜுக்கினி இல்லாமல் மற்ற காய்களைப் போட்டு இம்மாதிரித் தொட்டுக்கப் பண்ணியது உண்டு.

      நீக்கு
    3. கீதாமா,
      முதலில் செய்யும் போது கொள்ளைப் பற்றிப் பயம் இருந்தது.
      பிறகு இதையே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளும்போது பலன் தெரிந்தது.
      அப்படியும் சுக்கினியை சாலட் வகையினில் உபயோகிக்க நாக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் வேண்டி ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    அழகான காய்களுடன் நன்றாக இருக்கிறது சகோதரி ரேவதி நரசிம்மன் அவர்களின் கை பாகத்தில் தயாரான கூட்டு. படங்களும் செய்முறைகளையும் அழகாக விவரித்துள்ளார். ஸுக்கினி என்ற காய்தான் கேள்விப்பட்டதில்லை. (ஒருவேளை படத்திலிருப்பதோ?) எள்ளு தவிர கொள்ளும் கூட்டுகளுக்கு அனேகமாக எதற்கும் சேர்த்ததில்லை. உடல்நலத்திற்கு கொள்ளு நல்லது என இப்போதெல்லாம் படிக்கிறேன். கொள்ளு துவையல் அம்மா வீட்டில் இருக்கும் போது எப்போதாவது எங்கள் பாட்டி செய்துள்ளார்கள். இனி நானும் சேர்த்துப் பார்க்கிறேன்.அருமையான கூட்டு செய்முறையை தந்த சகோதரி ரேவதி நரசிம்மன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பகிர்வினுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கமலா ஹரிஹரன்,
      அக்கறை எடுத்துப் படித்ததற்கு மிக நன்றி.
      ஆமாம் ,படத்தில் இருப்பது ZUCCINI தான்.
      சீக்கிரம் வெந்து விடும். மருமகளுடைய தோழி
      சொல்லிக் கொடுத்தார். 14 வருடங்கள் ஆச்சு.
      கொள்ளு சேர்ப்பதே உடல் இளைக்கதான்.
      அவர்கள் செய்முறைகளில் ஒமமும் இருப்பதைப் பார்த்து
      ஆச்சர்யமாக இருந்தது.
      நீங்களும் உங்களுக்குப் பிடித்த முறையில் செய்து
      பாருங்கள். காரம் அதிகம் இல்லாமல் செய்யவும்.
      மிக மிக நன்றி மா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. இஃகி,இஃகி, இன்னிக்கு நம்மவர் உம்மாச்சிங்களுக்கு எல்லாம் அபிஷேஹம் செய்து குளிப்பாட்டி எல்லாம் செய்தார். இப்போல்லாம் அடிக்கடி பண்ண முடியலை! ஆகவே இன்னிக்குச் சீக்கிரமாப் போய் அவர் செய்வதற்கு வேண்டிய உதவிகளைப் பண்ணலாம்னு! ஆனால் அவரே பண்ணிக் கொண்டுவிட்டார். நான் சும்மாக் கையை ஆட்டினேன்! :)))))

      நீக்கு
    2. ஒஹோ ஆடித் திருமஞ்சனமா கீதா.
      நானும் போன வாரம் செய்தேன். சூரியன் வேற உள்ளே வருகிறதா. எல்லா விக்கிரகங்களும் ,ஜோதிகளும் பளிச் பளிச். மனசுக்கு மிகவும் மகிழ்ச்சி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. நன்றி அன்பு தேவகோட்டைஜி. காய்கறிகள் உடலுக்கு நல்லது.
      முடிந்த போது செய்து பாருங்கள்.

      நீக்கு
  13. இதுவரை ஸூக்கினியை உபயோகித்தது இல்லை அதை கண்டலே அலர்ஜி... பஞ்சாபி ரிசிப்பியில் பட்டர் இல்லாமல் இருந்ததது அதிசியமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுக்கினி இங்கே நிறைய உபயோகிக்கிறார்கள்.
      என்னைப் பொறுத்தவரையில் பத்திய சாப்பாடு இந்த கூட்டு.
      அந்தப் பெண் சப்பாத்தி மேல் வெண்ணெயைப் பழிந்து சாப்பிடுவாள்.
      அதனால் இந்தக் கூட்டில் சேர்க்கவில்லையோ என்னவோ.

      நீக்கு
  14. வித்தியாசமான ரெஸிப்பி (ஸூக்கினி) அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அன்பு தனபாலன்.
      அவர்கள் முட்டையையும் வேக வைத்து சேர்த்துக் கொள்வார்கள்.
      நன்றி மா

      நீக்கு
  15. இந்த ஸூக்னி ஆங்கிலத்தில் Marrow எனப்படுகின்றது... அரபியில் கூஸா ..

    எனக்கு மிகவும் பிடிக்கும்.. தங்களது செய்முறை புதிதே தவிர இது சாம்பாருக்கு அருமையாக இருக்கும்...

    கூஸா தக்காளிக்கூட்டு, தயிர்க்கூட்டு செய்யலாம்...

    சற்றே தடித்த் கூஸாவை உள்ளே குடைந்து விட்டு ஊறவைத்த பாசுமதியுடன் Stuffing செய்யலாம்...

    நல்லதொரு செய்முறை கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே. அன்பு துரை ,இப்படிக்கூட செய்யலாமா.
      நன்றாக வேகுமா. ஆமாம் தோல் கொஞ்சம் தடிமன் தான்.
      ஏமாந்தால் பாதி காய் போய்விடும். நீங்கள் சொல்லும் செய்முறை மகளிடம் சொல்கிறேன். புதுசு புதுசாகச் செய்யப் பிடிக்கும் அவளுக்கு. மிக மிக நன்றி மா.

      நீக்கு
  16. பதில்கள்
    1. sabji / सब्जी சப்ஜி. பொதுவாக எல்லாக் காய்களையும் சமைத்ததும் சப்ஜி என்பார்கள். காயாக இருக்கையில் அதனதன் பெயர் தான் என்றாலும் இப்போல்லாம் எல்லாத்துக்கும் சப்ஜி எனச் சொல்கின்றனர்.

      நீக்கு
    2. கீதா சொன்னதுதான் ஜீவி சார்.
      சப்சி, சப்ஜி என்று பலர் வாக்கிலும் விதவிதமாகப் புறப்பட்டு வரும். டெல்லிக்காரர்கள்
      //மொத்தக் காய்கறிகளையும்,// சப்ஜியே இல்லை வாங்கணும் என்பார்கள்.

      நீக்கு
    3. தேவகோட்டையார் விஷயத்தை, விடயம் ஆக்குகிற மாதிரி
      சப்ஜியை, சப்சி பண்ணினது ஸ்ரீராம் வேலையான்னு தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன். :))

      நீக்கு
    4. அச்சோ பாவம் அந்தப் பிள்ளை.
      நான் எழுதினதை எழுத்து மாற்றாமல் போட்டுவிட்டார். ஜீவி சார்.

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

  18. //தேங்காய் இல்லாத, புளி சேர்க்காத ,மிளகாய் இல்லாத, கொழுப்பைக் குறைக்கும் கொலஸ்ட்ரால் கட்டுப்படும், எடை குறையும். என்றேல்லாம் சொல்லி சுமிதா என்ற பெண் எனக்கு சொல்லிக் கொடுத்த பஞ்சாபிக் கூட்டு. 2005 ஸ்விஸ்ஸில் இருக்கும் போது கற்றுக்கொண்டேன்.//

    அருமையான பஞ்சாபி கூட்டு. இதை சாப்பிட்டால் நிறைய நன்மைகள் இருக்கே!

    ஸூக்கினி கிடைத்தால் செய்து பார்க்கிறேன் அக்கா.
    செய்முறை விள்ககம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கோமதி,
      மாதாஜின்னு அந்தப் பெண் அழைப்பதே நன்றாக இருக்கும்.
      நான் அப்போது ஒரு 79 கிலோ இருந்தேன்.
      பரிதாபப் பட்டு சொல்லிக் கொடுத்தாளோ என்னவோ.
      நம் வீட்டுக்கே வந்து ஒரு நாள் நம் அடுப்பிலியே செய்து கொடுத்தாள்.

      பிடித்த காய்களைச் சேர்த்துக் கொண்டு செய்யலாம்.நம்மூர்,
      பூசணி,சௌசௌ எல்லாமே நீர்க்காய்கள் தானே.
      நன்றி மா.

      நீக்கு
  19. பஞ்சாயி சமையல் வித்தியாசமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு மாதேவி, கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
      முடிந்தால் செய்து பாருங்கள்.நல்ல மணம் வரும்.

      நீக்கு
  20. ஸுக்கினி கேள்விபடாதகாய் சௌ சௌ மாதிரி என்று சொல்லி சௌ சௌ வும் இருப்பதைப் பார்த்துக் கன்ஃப்யூஸ் ஆகிறதுபல காய்களைப் போட்டு சமைப்பதுமென் மனைவியின்வழக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜி எம் பி சார். சௌ சௌவை விட மென்மையாக இருக்கும் நிமிஷத்தில் வெந்து விடும்.
      நெல்லைத் தமிழன் சொல்வது போல சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள இன்னும் நன்றாக இருக்கும். நன்றி சார்.

      நீக்கு
    2. செள் செள்வா? ஸூக்கினி என்பது சின்ன சைஸ் வெள்ளிரிக்காய் போல இருக்குமில்லையா?..

      நீக்கு
    3. ஆமாம். சாப்பிடும் ருசிக்கு சொன்னேன் ஜீவி சார்.

      நீக்கு
  21. எளிமையான செய்முறையாக உள்ளது. நன்றி வல்லிம்மா. கொள்ளு மட்டும் கைவசம் இல்லை. கிடைத்தால் வாங்கி செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கீத மஞ்சரி, வருகைக்கு நன்றி மா.
      கொள்ளு இல்லாவிட்டால் என்ன,மற்ற காய்களைச் சேர்த்து செய்து
      கூட்டாக சாப்பிடலாம்.செய்து பாருங்கள்.

      நீக்கு
  22. இந்த ஜூக்கினி ரொம்பவே அடிபடுகிறது. இங்கே இந்தக் காயை தோரி என்று ஹிந்தியில் அழைக்கிறார்கள். தெரியாதவர்கள் வசதிக்காக - இந்தத் தோரி என்பது, புடலங்காய், பீர்க்கங்காய் வகையைச் சேர்ந்தது தான். நம் ஊரில் கிடைப்பதில்லை. இங்கே நிறையவே கிடைக்கும். நான் கூட அவ்வப்போது இந்த தோரி வைத்து சமைப்பது உண்டு - நம் ஊர் பாணியில்! :)

    சுவையான ரெசிப்பி வல்லிம்மா... உங்கள் ரெசிப்பி இங்கே கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வெங்கட்,
      அப்பாடி அங்கே கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
      நீங்க நம்ம பாக செய்முறையையோ, இல்லை வேறு
      உணவு செய்முறையோ செய்து எங்கள் ப்ளாகுக்கு அனுப்புங்கள். நாங்களும் தெரிந்து கொள்ளலாமே.
      நன்றி மா.

      நீக்கு
  23. பஞ்சாபி சப்ஜி ...

    ரொம்ப ஈசி யா இருக்கு மா...செஞ்சு பார்த்து விரைவில் படங்களுடன் வருகிறேன் ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!