திங்கள், 26 ஆகஸ்ட், 2019

"திங்க"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி


சேமியா வேர்க்கடலை கிச்சடி 


அட ! இது ஆஃப்டர் ஆல் சேமியாதானே..!என கேட்கக்கூடாது.




சேமியாவேதான்.! தோல் நீக்கிய நல்ல ரகமான கோதுமையிலிருந்து, தயாராவது கோதுமை மாவு, ரவை, மைதா, சேமியா, கோதுமை ரவா, ஜவ்வரிசி, முதலியவை. இந்த மைதாவை மட்டும் வெண்மை நிறமாக்கும் ரசாயன முயற்சியால், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு உணவாக நம் உணவு முறையிலிருந்து ஒதுக்கி விட்டோம். ஒதுக்கி வருகிறோம். கோதுமையை பலரகங்களாக பிரித்தெடுத்து, பல உணவு வகைகளை தயாரிக்கிறார்கள். (எது கெடுதல், எது நல்லது என்ற ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. அரிசியை விட கோதுமை சிறந்ததா? இல்லை கோதுமையை விட அரிசி சிறந்ததா? என்ற கருத்துப்போர் தற்சமயம் நிறையவே வந்து விட்டது . ஒரு பக்கம் இவைகளை வைத்து விதவிதமான உணவு வகைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ) ஆனால் இந்த கோதுமையின் தவிட்டோடு பிரித்தெடுக்கும் மைதாவுடன் மரவள்ளி கிழங்கு கலந்து சேமியா, மக்ரோனி தயாரிக்கிறார்களாம்.( படித்தது.)

அதனால் இந்த சேமியா ஒரு வகை மைதாவெனினும், எளிதில் ஜீரணமாவதோடு, உடல் நலத்திற்கும் தீங்கில்லா வண்ணம் உருவாக்கப் பட்டவையாக கொஞ்சம் தோன்றுகிறது.  நாமும் இதை பெரும்பான்மையாக உபயோகித்துதான் வருகிறோம். சிலர்  இல்லை பலர் இதை உணவிலிருந்து தவிர்த்திருக்கலாம். (அவர்கள் இருந்திருந்து நான் இந்த உணவை தேர்ந்தெடுத்தற்கு,  பகிர்ந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். . .!)

இந்த சேமியாவில், வெங்காயம் மட்டும் உபயோகித்து உப்புமா, காய்கறிகளை கலந்து செய்யும் கிச்சடி, மற்றும் பாயசம், கேசரி போன்ற பல இனிப்பு வகைகளையும் செய்து (சாப்பிடுகிறவர்களின் நாக்கின் சுவையை பொறுத்து) அசத்தலாம். .




"இதெல்லாம் பற்றி ஏற்கனவே நாங்கள் அறிந்து, ஏற்கனவே நிறைய வகைகளை  செய்து அசத்தி, அசந்தவங்கதான் நாங்கள்" என நீங்கள் முகம் கடுத்து விழி திருப்பி வேறு பதிவை படிக்கப் போவதற்குள் இந்த செய்முறையை விவரித்து விடுகிறேன்.


ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் இரண்டு டம்ளர் (நான் என் வீட்டவர்களின் அளவுபடி கூட இரண்டு டம்ளர் எடுத்துள்ளேன்.) சேமியாவை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்தெடுத்து கொள்ளவும்.  அதற்கு தகுந்த மாதிரி  எண்ணெய் விட்டு, (ந. எண்ணெய், ச. எண்ணெய். எது வேண்டுமோ அவரவர் விருப்பம்.) அதில் கடுகு, உ. பருப்பு வறுத்து அந்த சேமியாவுடன் போட்டுக் கொள்ளவும்  அதே சூட்டில் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு  நைசாக இல்லாமல், ஒரளவு கரகரப்பாக திருகி வாணலியில் போடவும.

நான்கைந்து தக்காளியை சுத்தப்படுத்தி காம்பு பகுதியை அகற்றி வேண்டிய பச்சை மிளகாய் சேர்த்து, (நான் சிறு குழந்தைகளுக்கு காரமில்லாமல் இருக்க இரண்டுதான் போட்டேன்.) அதே மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த விழுதை வாணலியில் காத்திருக்கும் வேர்க்கடலை பொடியுடன் சேர்க்கவும்.




இப்போது அடுப்பை சிம்மில் வைத்து தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி,  சிறிது கறிவேப்பிலை சேர்த்து, (இந்த கறிவேப்பிலை நன்கு  புதிதாக இருந்தால், அதில் மூன்று ஆர்க்குகள் தக்காளி கலவையுடனேயே சேர்த்து அரைத்து விடலாம். கறிவேப்பிலை நம் உடல் நலத்திற்கு நல்லதென்பதால், நான் முக்கால்வாசி இந்த அரைக்கும் சாமன்களுடன் கறுவேப்பிலையையும் சேர்த்து அரைத்து விடுவேன். ) அதனுடன் இரண்டுக்கு, மூன்றரை டம்ளர் அல்லது நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் கொதித்ததும், வறுத்த சேமியா சேர்த்து சிம்மில் வைத்தே வேக வைக்க வேர்க்கடலை சேமியா கிச்சடி தயார். இதற்கு வெங்காயம் போட அவசியமில்லை. இருப்பினும் போட நினைப்பவர்கள் அதையும் கிரேவியாக்கி, தக்காளிக்கு முன்னதாகவே வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

அரைத்தெடுத்த விழுது, அதை வாணலியில் சேர்த்த படங்கள் எடுக்க வில்லையாகையால். மிக்ஸி படம் ஆவலோடு இரு முறை வந்து இடம் பிடித்து விட்டது. (இதையே அரைத்த விழுதாக நினைத்துக் கொள்க.. இந்த பதிவை படித்ததும், "போயும், போயும், சேமியா உப்புமாவா .! இதற்காக இத்தனை பவுசு என சற்று வலிக்காமல் பல்லைக் கடித்தாலே போதும்..உடனடியாக  அரைத்த விழுது யாவரின் கண்ணுக்கும் தெரியும். ஹா ஹா ஹா.)


முழுதாகி வேர்க்கடலை கிச்சடி என்ற பெயருடன் தயாராகி விட்ட சேமியா..



இந்த கிச்சடி காரமில்லாமல். வேர்க்கடலை, தக்காளியின் மணத்துடன் இருந்ததினால்  எங்கள் வீட்டு சின்ன குழந்தைகள் ஜீனி தொட்டுக்கொண்டு விரும்பி சாப்பிட்டார்கள். பெரிய குழந்தைகளான நாங்கள் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டோம்..(நல்லவேளை....தேங்காய் சட்னி படமெடுத்து போட்டு உங்களை கடுப்பேற்றும் நோக்கம் எனக்கு அன்றைய தினம் வரவில்லை.  ஹா. ஹா. ஹா. )

இதுவும்  ஒரு சுவையான உணவுதானே என்று நீங்களனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.. 👌..

நம்பிக்கையுடன்.. 👍
நன்றிகளும்.. 🙏.
அன்புடன் உங்கள் சகோதரி. 

56 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    அன்பு கமலாவின் உப்புமாவா இன்று.
    எனக்கு சேமியா மிகவும் பிடிக்கும் மா.
    வாரத்துக்கு ஒரு முறை உண்டு. நிலக்கடலை சேர்ப்பதும் பிடிக்கும். நீங்கள் கிச்சடி
    செய்திருப்பதைவிட அதை அழகுபட விளக்கி இருப்பது
    மிகவும் அருமை. நல்ல மணத்துடன் வந்திருக்கும்.
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா....

      உப்புமாவா... அப்படிச் சொல்லப்படாது!

      கிச்சடி!

      நீக்கு
    2. காலை வணக்கம் சகோதரி

      பதிவைக் கண்டதும் உடனடியாக வந்து கிச்சடியை சுவைத்து என் செய்முறை எழுத்தையும் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஶ்ரீராம்... நான் கிச்சிடின்னு சொல்வது ரெய்த்தாவை. அதுனால இது எனக்கு உப்புமாதான்.

      படம் பார்க்கும்போது புதுப் பூணல் மாற்றிக்கொண்டபின் கழற்றிப் போடும் பழைய பூணல் நினைவு எனக்கு மட்டும்தான் வருதா?

      நீக்கு
    4. உங்களுக்குனு தனியாத் தோணும். பொதுவாகக் கிச்சடி என்றால் எல்லாக் காய்களையும் போட்டு அரிசி, பருப்பு வகைகள் போட்டுச் சமைப்பது. வட மாநிலத்தில் இருந்து தெற்கே வந்தப்போ நாம் நம் இஷ்டத்துக்கு ரவை போட்டு, கோதுமை ரவை போட்டு, சேமியா போட்டு என மாற்றிக் கொண்டோம். நீங்க சொல்லும் ராய்தா பச்சடி. கிச்சடி என மலையாளத்தில் சொல்லுவது முழுக்க முழுக்க வேறு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒரு வகைக் கிச்சடி தான்.

      நீக்கு
    5. கீசா மேடம்.. எங்கம்மா என்னிடம் 'வெண்டைக்காய் கிச்சடி' என்று சொல்லித்தான் வளர்த்தார்கள் (நீங்க பச்சிடின்னு சொல்றதை). அப்புறம் என் மனைவி அதனை 'பச்சிடி'ன்னு சொல்லி எனக்கு தலையணை மந்திரம் போட்டுட்டா. ஆரம்பத்துல எனக்கு ஒத்துக்க ரொம்ப கஷ்டமா இருந்தது....அப்புறம் அப்படியே மாறிடுச்சு.

      நெல்லைக்காரங்களே... கோமதி அரசு மேடம், கமலா ஹரிஹரன் மேடம் - என் உதவிக்கு வாங்க. இல்லைனா என்னால கீசா மேடத்தைச் சமாளிக்க முடியாது.

      இந்த 'கிச்சிடி' (உணவுல..அதாவது ரவா, சேமியா கிச்சடி போன்று) பிஸினெஸ்லாம் வடநாட்டுலேர்ந்து வந்தது இல்லைனா அடுத்த ஜெனெரேஷன் வீட்டுக்குள்ள வரும்போது இந்த உணவு வகைகளும் வந்தது. நான் என் அம்மா வீட்டில் ரவா கிச்சடி போன்று சாப்பிட்டதே இல்லை. போனா போகுதுன்னு கோஸ் அல்லது வெங்காயம் எப்போவாவது போடுவாங்க.

      நீக்கு
    6. என்னோட அம்மா புதுசு புதுசாப்பண்ணுவதில் ஆர்வம் உள்ளவர். ஆகையால் அப்போவே ரவை, சேமியா எல்லாவற்றிலும் காய்கள் நிறையப் போட்டு உப்புமாக் கிளறுவாங்க. என் மாமியார் வீட்டில் எல்லோருக்கும் அதைப் பார்க்க அதிசயமா இருக்கும்.காலி ஃப்ளவர், டபுள் பீன்ஸ்,ராஜ்மா காயவைக்காததுனு (கொடைக்கானலில் இருந்து வரும் மார்க்கெட்டுக்கு) வாங்கி வந்து கூட்டிலே போடுவாங்க. சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணுவாங்க. சும்மா சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து சாம்பார்ப் பொடி போட்டுத் தான் வதக்கி இருப்பாங்க! வாசனை ஊரைத் தூக்கும். அப்போல்லாம் ரேஷனில் (அரிசி கிடைக்காத காலம்) மொட்டை கோதுமை என்ற ஒரு கோதுமை, கேழ்வரகு இதான் கிடைக்கும். அதிலேயே ரொட்டி, பூரி எல்லாம் அம்மா பண்ணுவார். தொட்டுக்க இம்மாதிரிக் காய்கள்.

      நீக்கு
    7. ஆஆஆஆ நெ டமிலன் ஸ்பெல்லிங் நிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்ர்ர்:)... அது பூணூல் ஆக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர் அதிரா கண்ணுக்கு எல்லாம் த்ர்ரியுமெல்லோ

      நீக்கு
    8. கருப்பு கண்ணாடியைப் போட்டுக்கிட்டே இப்படி கூர்ந்து தவறைக் கண்டுபிடிச்சிடறீங்களே. கண்ணாடியைக் கழட்டிட்டால்... அவ்ளோதான்.. எல்லார் எழுத்திலும் தவறுகளைக் கண்டுபிடிச்சுடுவீங்க அதிரா. (தட்டச்சுப்பிழை)

      நீக்கு
    9. இல்லாட்டில் மீ டமிலில் டி எடுத்து என்ன பியோசனம் ஜொள்ளுங்கோ..ஹா ஹா ஹா. எனக்கு இன்னொரு டவுட்டூ:)... அது பூனூல் அல்லது பூணூல் எது சரி?
      பூணும் நூல் எனத்தானே பொருள்...

      நீக்கு
    10. பெறுநர்
      அதிரா வெள்ளை வீடு

      மேடம்,

      "டமிள் ப்ரொஃபசர்" வேலைக்கான உங்கள் அப்ளிகேஷன் வந்தது. தற்போது அந்த வேலை பார்க்கும் நெல்லைத் தமிழன் ஓய்வு பெற இன்னும் 45 வருடங்கள் இருப்பதாலும், அவர் ஓய்வு பெறும்போது நீங்கள் ஓய்வு பெறும் வயதைக் கடந்துவிடுவீர்கள் என்பதாலும், உங்களுக்கு அந்த வேலையைத் தர முடியாது.

      உங்கள் டமிள் திறமையை பின்னூட்டங்களில் வெளிப்படுத்தினாலும், எங்கள் நிலை மாறாது.

      அன்புடன்

      டமிள் பல்கலைக்"கலகம்"

      நீக்கு
    11. ஹா ஹா ஹா இதுவும் எதிர்த்து நிற்க முடியாமல் சரண்டர் ஆகுவதற்காக இன்னொரு முறையாக்கும்:)). கேய்ட்ட கிளவிக்கு..சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே கேள்விக்குப் பதில் சொல்லாமல்..சப்டரை மாத்துறார் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது அதிராவுக்கு முன்னாலதான் வரோணும்.. வைட்ட்ட்ட்ட்ட்ட்ட் ஹவுஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
  2. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று நிறைய நண்பர்கள் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.துரை ஊரில் இருக்காரா? குவெய்த் திரும்பியாச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் சகோதரி

      இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் நானும் என் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நேற்று என் மகனுக்கு பிறந்த நாள் இனிதே கொண்டாடினோம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. @கமலா, உங்கள் மகனுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் வெளிநாடு/அல்லது வெளியூர் போகப் போவதாக வருத்தத்துடன் எழுதி இருந்த நினைவு. போய்விட்டாரா?

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      என் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியமைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். அவரிடமும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

      என் மகன்கள் இரண்டு பேரில் வெளிநாடு சென்றிருப்பார் இளையவர். இங்கு என்னுடன் இருப்பவர் மூத்தவர்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  4. பானுமதியின் கணவரின் பூரண உடல் நலனுக்காகச் சிறப்புப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதியின் கணவர் பூரண உடல் நலம் பெற பிரார்த்தனைகள்
      விரைவில் உடல் நலம் பெற்று வர வேண்டும்.

      நீக்கு
    2. என் மனதிலும் இந்தப் ப்ரார்த்தனை இருந்துக்கிட்டே இருக்கு. இன்னும் பதிவுலக இருவருக்கும் சேர்த்து. (ஒருவர் பதிவர், இன்னொருவர் பதிவரின் ரங்க்ஸ்)

      நீக்கு
    3. யார் அவங்க இரண்டு பேரும்? சொன்னால் நாங்களும் பிரார்த்திப்போம். இல்லைனாலும் பிரார்த்தனைகள் உண்டு.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      சகோதரி பானுமதியின் கணவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரியாது. அவருக்கு உடல் நலம் நன்றாக தேறி, பூரணமாக குணமடைந்து வர நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் வேண்டி ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    ஆகா... இன்றைய தினம் என் கிச்சடியா? (அதுதான் காத்தாடுகிறது. அடித்த காற்றில் இரண்டொரு படங்களும் மிஸ்ஸிங். ஹா. ஹா. ஹா.) என் பதிவை "திங்க"ளில் இடம் பெறச் செய்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. ஜவ்வரிசி கோதுமையிலிருந்து தயாராகி வருவது எனக்குப் புதிய செய்தி. மற்றபடி சுவையான உப்புமா. சேமியாவை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தேன். விரைவில் செய்து படம் எடுத்துப் போடுகிறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமியாவை என்ன செய்வதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தீங்களா? என்னிடம் இருந்தால் உடனே கொஞ்சம் ஜவ்வரிசி போட்டு பாயசமாக்கியிருப்பேன். அட்டஹாசமா கஞ்சிக்குப் பதிலாச் சாப்பிடலாம். ஹா ஹா. (சேவை பண்ண சோம்பேறித்தனம் படறவங்கதான் சேமியால உப்புமா பண்ணுவாங்கன்னு சொல்லி எங்க ஊர்க் காரங்க கமலா ஹரிஹரனிடம் காலைல சண்டை போட விரும்பலை ஹா ஹா)

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சேமியா பாயசம் என்றால் அது சேமியா மட்டும் தான் போட்டுப் பண்ணணும். ஜவ்வரிசிப் பாயசம் என்றால் அதில் ஜவ்வரிசி மட்டும்! இரண்டையும் சேர்த்துப் போட்டுக் கொலை பண்ணக் கூடாது. சேவை எல்லாம் நான் அடிக்கடி பண்ணுவேன். https://geetha-sambasivam.blogspot.com/2012/09/blog-post_6315.html

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      கோதுமைமாவிலிருந்து பிற உணவு வகைகள் தயாரிப்பது என்ற சில முறையில்தான், இந்த ஜவ்வரியையும் ஒரு இடத்தில் படித்தேன். மற்றபடி மரவள்ளி கிழங்கு மாவும் உடன் சேர்த்துதான் ஜவ்வரிசி தயாராகிறது போலும். ஜவ்வரிசியும், இனிப்பு, காரமென அனைத்து உணவுக்கும் ஒத்து வரும். சேமியா கிச்சடி சுவையான உணவு எனக் கூறியமைக்கு நன்றி.
      விரைவில் தங்கள் வீட்டு சேமியாவும், அழகான வடிவில் எ.பியில் இடம் பெறுவதை கண்டு களிக்க ஆவலாயிருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. வணக்கம் நெல்லை தமிழன் சகோதரரே

      சேமியா பாயசம் தவிர்த்து கஞ்சியும் போட்டு குடிக்கலாம்.கொஞ்சம் கம்மி யாக ஜீனியோ, ஜீனிக்கு பதிலாக வெல்லமோ சேர்த்து கஞ்சியாக அருந்தலாம். பகல் சாப்பாடு என்றேனும் ஒரு நாள் ஹெவியாகவோ, இல்லை தாமதமாகவோ சாப்பிட்ட பட்சத்தில் இரவு இந்த மாதிரி கஞ்சி செய்து குடித்திருக்கிறோம்.

      /சேவை பண்ண சோம்பேறித்தனம் படறவங்கதான் சேமியால உப்புமா பண்ணுவாங்கன்னு சொல்லி எங்க ஊர்க் காரங்க கமலா ஹரிஹரனிடம் காலைல சண்டை போட விரும்பலை ஹா ஹா)/

      ஹா. ஹா. ஹா. சேவைக்கு பதிலாக சேமியா உப்புமா.. இது கூட நல்ல ஐடியாவாக இருக்கிறதே! நானும் காலை டிபனுடன், மதிய சாப்பாடுடன் (செய்முறைகள்) சண்டையிட்டு விட்டு இப்போதுதான் ப்ரீயாக ஒதுங்கி வந்துள்ளேன். காலையில் சண்டையிட்டு போன நெட் தொடர்பு இப்போதுதான் வந்துள்ளது. இனி எப்போது போகுமோ தெரியவில்லை. அதற்குள் சில கருத்துக்கள் போட்டு விட வேண்டுமென்று நினைக்கிறேன்.

      நானும் சேமியா உப்புமாவில்,நிறைய தடவை வித்தியாசத்திற்காக வெங்காயத்திற்கு பதிலாக தேங்காய் துருவி சேர்த்திருக்கிறேன். அதை தங்கள் சொல்படி தேங்காய் சேவையாக வைத்துக் கொண்டால், உப்புமா செய்து கீழே இறக்கும் பொழுது எழுமிச்சைப் பழம் ஒன்றை பிழிந்து கலந்து விட்டால் எழுமிச்சை சேவை. எதுவும் தாளித்துக் கொட்டாமல், தேங்காய் வெல்லப்பூரணம் செய்து கலந்து விட்டால், வெல்லச் சேவை. இயல்பான அரிசி சேவையின் சுவை மாறுபட்டாலும், இதுவும் நன்றாகத்தான் இருக்கும்.

      இப்போதுதான் அரிசி, மற்றும் சிறுதானியங்களில் வித விதமாக ரெடிமேட் சேவைகள் வருகின்றதே ! ஆனாலும் வீட்டில் நாம் ரெடி செய்து பிழியும் சேவைக்கு நிகர் வராது. நிறைய தடவைகள் இதையெல்லாம் செய்தாகி விட்டது. இப்படியும் ஒரு நல்லதொரு ஐடியா தந்தமைக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலாஹரிஹரன்

      நீக்கு
    5. @கமலா, "தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து[3] மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் "ஜவ்வரிசி" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்."

      நன்றி விக்கிபீடியா!

      நீக்கு
    6. வணக்கம் சகோதரி

      தாங்கள் திரட்டித் தந்த தகவல்களுக்கு மிகுந்த நன்றி சகோதரி. மிகவும் பயனுடையவை. குறித்துக் கொண்டேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. சேமியா வேர்க்கடலை கிச்சடி செய்முறை விளக்கம், படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    கோதுமை சேமியா இருக்கிறது , கடலை வாங்கி ஒரு நாள் செய்து விடுகிறேன்.
    குழந்தைகள் சாப்பிட்டு விட்டார்கள் எண்றால் போதுமே! பெரிய குழந்தைகள் தேங்காய் சட்னியுடன் அருமை.
    எங்கள் வீட்டில் உப்புமா செய்தால் தேங்காய் சட்னி வேண்டும். கிச்சடி என்றாலும் சட்னி வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேழ்வரகிலும் சேமியா உண்டு. அதை வெறும் நீரில் ஊற வைத்துத் தேங்காய் சேர்த்தோ, அல்லது எலுமிச்சை பிழிந்தோ சேவை மாதிரிப் பண்ணலாம்.

      நீக்கு
    2. ஆஆஅ என்னுடைய ஒடியல் கூழை, சிலர் கேழ்வரகு/ குரக்கன் மா பாவிச்சும் செய்வினம்.

      நீக்கு
    3. வணக்கம் கோமதி அரசு சகோதரி

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. சேமியா கிச்சடியை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கும் மிகவும் சந்தோஷம். தாங்களும் ஒருநாள் சேமியாவை இவ்விதம் செய்து பார்க்கிறேன் என்றமைக்கு நன்றிகள்.

      ஆமாம்.. எங்கள் வீட்டிலும் எதற்கும் சட்னி வேண்டும். ஆனால், தக்காளி, வெங்காயமென்று இப்படி ஏதாவது சட்னி ரெடி பண்ணி விடுவேன். அன்று குழந்தைகள் முதலில் (ஜீனி) இனிப்புத் தொட்டுக் கொண்டே சாப்பிட்டு விட்டனர். தங்கள் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. சேமியா வேர்க்கடலை உப்புமா... அருமைதான். வேர்க்கடலை போடாமல் வெங்காயம் சேர்த்து சில நாட்கள் முன்பு சாப்பிட்டேன். தக்காளி விழுது, வேர்க்கடலை பொடி நிச்சயம் சுவை கூட்டும்.

    இதில் காப்சிகம் சேர்த்தால் வாசனை அதிகமாகும்.

    விரைவில் செய்யச்சொல்ல வேண்டியதுதான். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

      சேமியாவில் வெங்காயம் சேர்க்காமல் தவிர்த்து விரத நாட்களில் சாப்பிடலாம். அதனால்தான் தாங்கள் கூறியபடி கூடுதல் சுவைக்காக வேர்க்கடலையும், தக்காளியும். அந்த கால நம் வீட்டுப் பெரியவர்கள் விரத நாட்களில் உடைத்த பச்சரிசி உப்புமா, இல்லை பச்சரிசி தோசையை தவிர இந்த மாதிரி உப்புமாக்களை அதிகம் சேர்க்க மாட்டார்கள். இப்போதுள்ள கால கட்டத்தில் நாம் வெங்காயம்,பூண்டுவை தவிர்க்கிறோம். வருங்காலம் நம் கையில் இல்லை..

      இதில் தக்காளியுடன்,காரட்,பீன்ஸ் உ.கி பச்சைப் பட்டாணி, கேப்சிகம் என்று சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும். தாங்கள் அறியாததா?

      கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. செய்முறை சுருக்கமாகவே இருக்கிறது பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்வும் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் எளிதான சுவையான உணவுதான் இந்த வேர்க்கடலை சேமியா கிச்சடி. செய்து பாருங்கள். கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    கொஞ்சம் இனிப்பு, சூப்பர் இட்லி, சாம்பார்,தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி + காஃபி...

    இதற்கு மேல் சேமியா கிச்சடியா!?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கள் கண்டும் மனம் மகிழ்ந்தேன்.

      /கொஞ்சம் இனிப்பு, சூப்பர் இட்லி, சாம்பார்,தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி + காஃபி...

      இதற்கு மேல் சேமியா கிச்சடியா!?..../

      ஹா. ஹா. ஹா. இருப்பினும், இங்கு வந்து இந்த உணவையும் ரசித்துப் பார்த்தமைக்கு மிகவும் சந்தோஷம். நாளை டிபனுக்கு இதையே வீட்டில் செய்யச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள். கருத்துக்கு நன்றி சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. மரவள்ளிக் கிழங்கை அரைத்துப் பாலாக்கி அதிலிருந்து செய்யப்படுவது தான் ஜவ்வரிசி என்று படித்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /மரவள்ளிக் கிழங்கை அரைத்துப் பாலாக்கி அதிலிருந்து செய்யப்படுவது தான் ஜவ்வரிசி என்று படித்திருக்கிறேன்/

      நானும் அப்படித்தான் பல இடங்களில் படித்துள்ளேன். சமீபத்தில், கோதுமையிலிருந்து தயாராவது என்ற லிஸ்டில் இந்த ஜவ்வரிசியும், இடம் பெற்றிருந்தது. அதனால்தான் அவ்வாறு எழுதினேன்.தகவலுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. //(அவர்கள் இருந்திருந்து நான் இந்த உணவை தேர்ந்தெடுத்தற்கு, //

    பொருட்பிழை உள்ளதே:)) அதிரா கண்ணுக்கு அனைத்தும் தெரியுமெல்லோ:)) சரி அது போகட்டும்.. நானும் சில தடவை முயற்சி செய்தேன்.. ஒன்று குமைகிறது இல்லை எனில் அவியாமல் வருகிறது, ஆனாலும் இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் சாப்பிட்டிருக்கிறேன்..

    இவ்ளோ டக்காளி:)) ஆவ்வ்வ்வ் கரெக்ட் ளி.. சேர்த்திருக்கிறீங்களே இது நியாயமோ.. நான் டக்காளி வாங்குவதில்லை.. யாவருக்கும் ஒத்துக்கொள்ளாது எங்கள் இல்லத்தில்:))..

    அருமையான குறிப்பு.. இனிப்பைப் போட்டால்ல் முயற்சித்திருக்க மாட்டேன்ன்.. இது பிடித்த குறிப்பு.. விரத நாட்களில் ட்றை பண்ணலாம்.

    அது சரி நெல்லைத்தமிழன் சொன்னதைப்போல எனக்கும் ஒரு டவுட்டூ.. கிச்சடி பச்சடி எனில்.. பச்சையாக தயிர் விட்டோ விடாமலோ செய்யும் வகையைத்தான் சொல்லுவோம்ம். நீங்க சமைக்கும் உணவுக்கு கிச்சடி என்றிட்டீங்க... இது சேமியா உப்புமா எண்டெல்லோ ஜொள்ளுவோம்..

    சரி சரி நேக்கு நேரமாச்சு.... மீண்டும் ஜந்திப்போம்ம்.. அப்போ மீ போட்டு வரட்டே கமலாக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகை, கருத்துக்கள் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

      ஆகா.. பொருட்பிழை வந்து விட்டதா? போயும் போயும் எனச் சொல்வதில் லையா? அது மாதிரி இருந்திருந்து என இயம்பி விட்டேன் போலிருக்கிறது. சரி.சரி!பரிசாக, எவ்வளவு பிழைகள் உள்ளதோ அதற்கு தகுந்த மாதிரி கூடுதலாக கமெண்ட்ஸ் இட்டு மகிழ்ச்சியை தந்து விடுங்கள். ஹா. ஹா. ஹா.

      சரியான அளவுபடி தண்ணீர் (ஒன்றுக்கு ஒன்றரை என்ற அளவுபடி) சேர்த்தால் சேமியா உப்புமா உடனடியாகவே குழையாமல் உதிரியாக வரும். அன்று தக்காளியும் சேர்த்ததால் கொஞ்ச நேரம் கழித்து உதிரி நிலை அடைந்தது.

      சேமியா உப்புமா அருமையென பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள். ஆமாம்... இதை வெங்காயமின்றி விரத நாட்களில் சமைத்து சாப்பிடலாம். இதை நாங்கள் கிச்சடி என்றுதான் சொல்வோம். ரவா கிச்சடி, சேமியா கிச்சடி என்றே சொல்லிப் பழக்கமாகி விட்டது. பச்சடி என்பது வேக வைக்காமல்,(அடுப்பில் வைக்காது) பச்சை தயிரில், பச்சை மிளகாய், தேங்காய் அரைத்து விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்ப்பதை அப்படிக் கூறுவோம். வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      இந்த கமெண்டை அடித்து முடிப்பதற்குள் நெட் படுத்தோ படுத்தல். இன்றைக்கு என்னவோ என் அ(துர)திர்ஷ்டம் நெட் அவ்வளவு படுத்துகிறது. பொருட்பிழை குற்றமோ என்னவோ? ஹா.ஹா.ஹா. இன்னமும் எவர் பதிவுக்கும் செல்லவில்லை. வருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. செய்முறை விளக்கம் அருமை... நன்றி...

    https://tamilauthors.com/Medicine/006.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டர் சிவகடாட்சத்தின் இந்தக் கட்டுரையை ஏற்கெனவே படித்தாலும் மீண்டும் போய்ப் படித்தேன். நன்றி டிடி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகையும்,பதிவை குறித்த கருத்தும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

      செய்முறை விளக்கம் கண்டு அருமையென பாராட்டியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் கொடுத்திருக்கும் சுட்டிக்குச் சென்று கண்டிப்பாக படித்துப் பார்க்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. வாரத்தில் ஒரு நாள் இந்த சேமியா உப்புமா இருக்கும் ஒரு சில மாற்றங்களுடன்வேர்க்கடலை கலந்தால் நன்றாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், அன்புடன் கூறிய கருத்துப்பகிர்வினுக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியடைகிறேன்.

      எங்கள் இல்லத்திலும் அப்படித்தான்.! மாதத்தில் மூன்று தடவையாவது சேமியா, ரவை என இடம் பிடித்து விடும். தாங்கள் கூறியபடி ஒரு மாற்றத்திற்காகத்தான் இந்த விதவிதமான முயற்சிகள். தங்களைப் போன்ற அனுபவ பதிவர் வந்து என்னுடைய பதிவுக்கு நல்லதொரு கருத்தை தந்து பாராட்டுவது எனக்கு பெருமையுடன் மன மகிழ்வையும் தருகிறது. தங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. ஶ்ரீராம்... நான் கிச்சிடின்னு சொல்வது ரெய்த்தாவை. அதுனால இது எனக்கு உப்புமாதான்.

    படம் பார்க்கும்போது புதுப் பூணல் மாற்றிக்கொண்டபின் கழற்றிப் போடும் பழைய பூணல் நினைவு எனக்கு மட்டும்தான் வருதா?// hahhaa. You missed me out Murali ma. I happen to belong to Thinelveli too.hmmmm.😉😊😊😊😊😊

    பதிலளிநீக்கு
  16. சேமியா வேர்க்கடலை கிச்சடி ரொம்ப நல்லா இருக்கு ...

    பொதுவா எனக்கு நான் பண்ற கிச்சடி பிடிக்காது ...அம்மா , அத்தை , அண்ணி செய்றது தான் பிடிக்கும் ...சோ எங்க வீட்டில் கிச்சடி பண்றது இல்ல ...

    ஆனாலும் இது புதுசாவும் இருக்கு , நல்லா வும் இருக்கு ....முடியும் போது செஞ்சு பார்க்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகையும், பதிவை குறித்த கருத்தும் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.
      /ஆனாலும் இது புதுசாவும் இருக்கு , நல்லா வும் இருக்கு ....முடியும் போது செஞ்சு பார்க்கிறேன் .../

      தங்கள் கைப்பக்குவப்படி இதைச் செய்து பாருங்கள்.இங்குள்ள எல்லோருமே சமையல்களில் சளைத்தவர்கள் அல்ல! நீங்களும் சமையலில் விதவிதமாக செய்து அசத்துபவர். உங்களது பதிவாக வந்த பரங்கி பூசணி அல்வாவை நானும் சமயம் வரும் போது செய்து பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருக்கிறேன். நல்லதொரு சமயம் அமையட்டும்.

      இந்த வேர்க்கடலை சேமியா கிச்சடி நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

    பார்க்க உப்புமா மாதிரி தான் இருக்கிறது! :) இருந்தாலும் கிச்சடி என நீங்கள் சொல்லி விட்டதால், இப்படி செய்து பார்க்க முயல்கிறேன் - சனி அல்லது ஞாயிறில்.

    சுவையான குறிப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பார்க்க உப்புமா மாதிரி தான் இருக்கிறது! :) இருந்தாலும் கிச்சடி என நீங்கள் சொல்லி விட்டதால், இப்படி செய்து பார்க்க முயல்கிறேன் - சனி அல்லது ஞாயிறில்/

      கண்டிப்பாக முயன்று பாருங்கள்.
      தாங்கள் வட மாநில சமையல் முறைகளையும் விதவிதமாக செய்து அசத்தி வருகிறீர்கள்.சுருக்கமாக சொன்னால் சமையல் கலையில் வல்லுனர். தங்களுக்கு இந்த முறையெல்லாம் தெரிந்திருக்காதா? உங்கள் முறைகளை நானும் சிலது உங்கள் பதிவில் பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.ஆனாலும் பெருந்தன்மையாக என்னை பாராட்டியது மகிழ்ச்சியை தருகிறது. தங்கள் வந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  18. சேமியா வேர்க்கடலை கிச்சடி குறிப்பு மிகவும் வித்தியாசமாக, அருமையாக இருக்கிறது. செய்து பார்க்கும்போது நிச்சயம் அதிக சுவையுடனிருக்கும் என்று நினைக்கிறேன்.

    தாளிதம், வெங்காயம் சேர்த்து செய்தால் அது உப்புமா.
    தக்காளி, பூண்டு, காய்கறிகள் சேர்த்து செய்தால் அது கிச்சடி.
    தாளிதத்திலேயே கிராம்பு, பட்டை, சோம்பு சேர்த்து பூண்டுடன் இஞ்சி சேர்த்து செய்தால் அது பாத்.

    ஒரே ஒரு சந்தேகம். படத்தை பார்த்தால் இத்தனை தக்காளி சேர்த்து செய்திருக்கிற மாதிரி தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சி சகோதரி.

      சேமியா கிச்சடி சுவையாகத்தான் இருக்குமென நம்பிக்கையுடன் கூறியமைக்கும், வித்தியாசமாக இருக்கிறதென்று சொன்ன பாராட்டிற்கும் மிகுந்த நன்றிகள்.

      விதவிதமான முறைகளில் சேமியாவை ரசித்து, ருசிக்கும்படி செய்முறை விளக்கமாக சொன்னது கண்டு மகிழ்வடைந்தேன்.

      அது நான்கைந்து தக்காளியுடன் செய்ததால் அதிக நிறம் காண்பிக்கவில்லையோ?..இல்லை,படம் எடுக்கும் போது கிடைத்த வெளிச்சத்தைப் பொறுத்து சற்று மங்கலாக தோற்றமளிக்கிறதோ? தெரியவில்லை.. ஆனால், கிச்சடி ருசியாக இருந்தது. வருகைக்கும், கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!