செவ்வாய், 1 அக்டோபர், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : காணி நிலம் வேண்டும் பராசக்தி - கீதா ரெங்கன்

காணி நிலம் வேண்டும் பராசக்தி
கீதா ரெங்கன் 


ஹேபாட்டீஅப்பாபெரிப்பாசித்தப்பாஅத்தைஸ் எல்லாம் ஏதோ ஆர்க்யூ பண்றாங்க…. ஐ டோன்ட் அண்டர்ஸ்டான்ட் வாட் தே ஆர் ஸ்பீக்கிங்க்….…..ப்ளீஸ் கம் ஹோம்
இருபது வயது பேத்தி ஆஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பில் சொல்லிக் கொண்டே வரஅவள் பின்னால் அவள் தம்பிகிவ்வி குழந்தைகள்என்று பாட்டியின் எல்லா பேரன் பேத்திகளும் அதே வரிகளை ஹிந்திஇந்திய ஆங்கிலம்தமிழ் என்று பல மொழிகளில் சொல்லிக் கொண்டு வேகமாக வந்தனர்.
ஆஸ்திரேலியாநியூசிலாந்துஇந்தியா என்று விரிந்திருந்த உமாவின் மகன்கள் குடும்பம்மகள்கள் குடும்பம்  எல்லோரும் வந்திருக்க வீடே கலகலவென்று இருந்தது.
தென்னந்தோப்பில் அமர்ந்திருந்த அறுபத்து மூன்று வயதான பாட்டி உமா எதுவும் பதில் சொல்லாமல் தோப்பை ஒட்டியிருந்த வயலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வயலில் களையெடுப்பு நடந்துகொண்டிருந்ததுஏக்கர் ஏக்கராக நிலங்களும்தோட்டங்களும்உமாவுக்கானவை அதிகம் இருந்தாலும் அனைத்துமே கிராமத்திற்கானது என்றுதான்கிராமத்து மக்களின் உதவியுடன் உமா பாதுகாத்து வந்தாள்அருகே அழகான வாய்க்கால் சல சல என்று சென்று கொண்டிருந்தது..
அதற்குள் ஆங்கிலப் பேரன் பேத்திகளுக்கு வீட்டில் நடந்த விவாதத்திற்கான அர்த்தம் சொல்லப்பட்டுவிட்டது.
பாட்டி நீ இந்த நிலங்கள்தோட்டங்கள் எல்லாம் வித்துடுவியா?”
சட்டென்று உமாவிற்கு அதிர்ச்சிகுழந்தைகளைப் பார்த்தாள். ‘ஓ அதான் விவாதம் போலும் வீட்டில்’. ஏற்கனவே சில நாட்களாக உமாவின் மனதில் வேதனைகள்அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்ததுதான்.
வீட்டில் பல எதிர்ப்புகளுக்கிடையே விவசாயப் பாடம் எடுத்துப் படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி முதல் பருவத்தில்தன் பாட்டியிடம் இருந்த நிலம் போய்விடும் ஆபத்து வந்த போது அதைக் காப்பாற்ற எத்தனைப் போராட்டம் செய்ய வேண்டியிருந்ததுஅப்படிக் காப்பாற்றிய நிலத்தை வைத்துதானே அதனுடன் இதோ பெரிய வயல்கள்மாவாழைபலாதென்னைகாய்கறிபழத் தோட்டம் என்று விரிவாக்கிகூடவே மாட்டுப் பண்ணை என்றுஇன்று ஊருக்கே ஜீவாதாரமாகவும்குடும்பங்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கவும் வழி வகுத்திருக்கிறதுஅதில் சிந்திய வியர்வையும் உழைப்பும் அனைத்தும் ஒரு நொடியில் புதைந்து மரணத்தைத் தழுவப் போகிறதா?
மனம் நொறுங்கிப் போனதுகண்ணில் நீர் முட்டியது.
பாட்டி ஏன் ஒண்ணுமே சொல்லமாட்டேன்ற?”
என்ன சொல்ல?” எல்லாக் குழந்தைகளும் அவளை அணைத்துக் கொண்டும் மடியில் கிடந்தும் சுற்றி வளைத்திருந்தன.
திஸ் இஸ் மை ப்ராப்பர்ட்டி இதை விக்கறதுக்கு உங்க யாருக்கும் ரைட்ஸ் கிடையாதுனு சொல்லணும்
இது என் சொத்து இல்லைஇந்த கிராமத்துக்கானதுநான் அப்படித்தான் நினைக்கிறேன்ஏன்னா உங்க அம்மா அப்பா எல்லாரும் நல்லா செட்டில் ஆயாச்சுஉங்களுக்கு உரிமை இல்லைனு சொல்லலாம்தான்…. ஆனா இதை எல்லாம் எனக்கப்புறம் யாரு பார்த்துப்பாங்க?”
நோ பாட்டிநாங்க எல்லாரும் இங்கதான் கெட்டுகெதர்ரிவர்ல குளிக்கறோம்வாய்க்கால்ல விளையாடறோம்சிட்டி இஸ் ஒன்லி ஃபார் புக்ஸ்.இதுதான் ஃபுல்லி ரிஜுவனேட்டிங்க்இயற்கையோடு ஒன்றி டான்ஸிங்க் இன் ட்யூன் வித் நேச்சர்பாட்டி
“………………………..”
பாட்டி என்ன யோசிக்கற?”
இதே மாதிரிதான் நான் காலேஜ் படிச்சப்ப எங்க பாட்டிக்கும் இக்கட்டான ஒரு சூழல் வந்துச்சுஆனா அது குடும்பத்துப் பிரச்சனை. இது கிராமத்துப் பிரச்சனை.
கொஞ்சம் சொல்லிருக்கல?” என்று பெரிய பேத்தி சொல்லிடசிறிசுகள், “இல்லை எங்களுக்கெல்லாம் தெரியாது பாட்டிகமான் சொல்லு” என்றதும் உமாவின் நினைவுகள் அன்றைய காலகட்டத்திற்குச் சென்றுவிட்டது.
ஏய் உமாஇந்த வயலை விக்கணுமாம்எங்கப்பா பாட்டிகிட்ட சண்டை போட்டுட்டுக்கிட்டிருக்கார்.” மூச்சிரைக்க ஓடி வந்து நின்ற உமாவின் மாமா பையன் உஃப் உஃப் என்று மூச்சு வாங்கினான்.
அருகில் இருந்த ஆறுமற்றும் பெரிய வாய்க்காலில் இருந்து வெட்டி விடப்பட்ட சின்ன வாய்க்கால் வழியாக ஒவ்வொரு நிலத்தின் வரப்பின் அருகிலும் ஓடையில் தண்ணீர் ஓடிட ஆங்காங்கே வயலுக்குள் நீர் வருவதற்கு ஏற்ப வரப்பில் சிறியதாக வெட்டி விடப்பட்டிருந்ததுவயல் நாற்று நடவு முடிந்து கொஞ்சம் வளர்ந்து வயலுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருந்ததுஉமாவின் கண்களிலும் கண்ணீர் கட்டி நின்றது.
என்னடி ஒண்ணும் பேசாம நிக்கறவா போலாம்பாட்டி என்ன சொல்லப் போறாங்கனு பார்ப்போம்.”
அதற்குள் வீட்டு வாண்டுகள் எல்லாம் ஒடி வந்தனஇன்னும் நான்கு நாட்கள் வாண்டுகளுக்கான டாப்பிக்.
இப்ப என்ன பண்ணனும்ன்ற
என்னடி உமா இப்படிப் பேசறநீ தான் தைரியசாலிவிக்க வேண்டாம்னு சொல்லலாமே
யார்கிட்டஎனக்கு இந்த வயல் மேல எந்த உரிமையும் கிடையாது” என்று சொல்லிக் கொண்டே வயலில் தண்ணீர் தேவையான அளவு இருப்பதைப் பார்த்ததும் சில அடைப்புகளை மண் நிரப்பி மூடிவிட்டு தம்பியுடன் நடந்தாள்.
ஏய்சக்கைக் கொட்டைஎன்னவோ பெரிசா இங்கேயே இருந்து நிலத்தைப் பார்த்துக்கப் போறது போல உமாகிட்ட பேசச் சொல்லறநீ தான் அமெரிக்கா போறதுக்கு இப்பவே ப்ரிப்பேர் பண்ணத் தொடங்கிட்டியே
வரப்பின் ஓட்டைகளில் ஒளிந்து கொண்ட நண்டுகள் எட்டிப் பார்த்தனநீர்க்கோலி எனப்படும் நீர்ப்பாம்பும் இவர்களின் நடை அதிர்வில்தண்ணீரில் நீந்தி மறுபக்க வரப்பை அடைந்ததுநாம் குடியிருக்கும் இந்த நிலம் போய்விடுமோகட்டிடம் ஏதாவது வந்துவிட்டால் நாம் எங்கே போவது என்று நினைத்திருக்குமோ அந்த தண்ணீர்ப்பாம்பு?!.
சரி விக்க வேண்டாம்னா பாட்டிக்கு அப்புறம் யாரு வயலை பார்த்துக்கறதாம்நம்மள்ல பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆகி வெளியூர் போயிடுவோம்நாம பசங்களும் வேலை தேடி போயிடுவோம்யாரு இந்த கிராமத்துல இருக்கப் போறாங்க?” இது உமாவின் தம்பியின் கேள்வி.
அப்ப விக்கறதுதான் நல்லதுன்ற..?”
அப்படிச் சொல்ல வரலைஆனா நடைமுறைல அதுதான் சாத்தியம்அதான்…”
இவர்களது பேச்சைக் கேட்டு அசைபோட்டவாறே உமா நடந்து கொண்டிருந்தாள்.
அரைஞாண் வெளியில் தெரியும் அளவு கீழே தொங்கும் அரை ட்ராயரை ஒரு கையால் பிடித்துக் கொண்டே டயரை கம்புக்குச்சியால் தட்டி உருட்டிக் கொண்டே வீட்டு வாண்டுகளும்தெருக் குழந்தைகளும் வந்தனசில ஒதுங்கி ரோட்டோரம் மரங்களுக்கு உப்பு நீர்ப்பாய்ச்சின!
இவன் ஒண்ணுக்கு அடிக்கான்அங்கன பாரு ரெண்டெண்ணம் மரத்தடியில வெளிக்கிருக்குதுஏய் உமா அதுங்கள மிரட்டி வீட்டுல போய் போகச் சொல்லு. நீ சொல்லுவேல்ல இப்படி வெளிக்கிருந்து வாய்க்கால்ல கழுவக் கூடாதுன்னு..…”
என்னவோ இப்பத்தான் முதல் முதல்ல பார்க்கறா மாதிரி பேசறதப் பாரு” எல்லாரும் சிரித்தனர்.
அன்று உமா அக்குழந்தைகளுக்கு வழக்கம் போல் சொல்லவோ இல்லை இவர்களுக்குப் பதில் சொல்லும் நிலையிலோ இல்லைபல வீடுகளுக்குக் கழிவறையே இல்லையேஅவர்களை என்ன சொல்ல முடியும்தான் வளர்ந்து கிராமத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் ஆழமாக ஓடிக் கொண்டிருந்தது.
வழி முழுவதும் வயலில் நாற்றுகள் வளர்ந்து கண் எட்டும் தூரம் வரை பச்சை பசேலென்று காற்றில் அசைய பச்சையாய்  அலை போன்று…..
நினைவு தெரிந்ததிலிருந்து பாட்டியுடன் சேர்ந்து அந்த வயலில் எவ்வளவு வேலை செய்திருப்பாள்வயலில் நெல் விளைந்ததும் அடுத்த போகம் போடும் முன் உளுந்து போட்டு பறித்திருக்கிறார்கள்.
நெல் விளைந்ததும் வீட்டிற்குக் கொண்டுவரப்படும்நெற்கதிர் முற்றத்தில் குவித்து அடுக்கி வைக்கப்படும்ஒரு கொத்து கதிர் வீட்டின் நடுக்கூடத்தில் உள்ள உத்தரத்தில் தொங்கவிடப்படும்அறுவடை ஆனதும் கொசுக்கள் கிராமத்திற்குள் எல்லார் வீட்டிற்குள்ளும் தஞ்சம் புகுந்துவிடும்உத்திரத்தில் தொங்கும் நெற்கதிரிலும் குடி கொள்ளும்.
கொல்லைப்புறத் தரை அல்லது தெருவில் ஒரு மூலையை நன்றாகச் சுத்தம் செய்து சாணியால் நன்கு மெழுக வேண்டியது உமாவின் பொறுப்புகதிர்கள் பரப்பப்பட்டுமாடுகள் சூடடிக்கும்நெற்மணிகள் உதிரும்வைக்கோல் பிரிக்கப்பட்டு மாடுகளுக்கு அனுப்பப்படும்.
மணிகளை முறத்தில் போட்டு உயர்த்திப் பிடித்து சரித்து லாவகமாக புடைப்பது போல் செய்வார்கள்மணிகள் கீழே குவியும்துகள்கள் பறக்கும்மீண்டும் மணிகளைத் திரட்டி முறம் கொண்டு விசிறுவார்கள்துகள்களை அகற்ற..
ஊரே நெற்கதிரின் தவிடு அப்பிக் காணப்படும்சில சமயம் ஆட்களைக் கூட அடையாளம் காண முடியாத அளவு துகள்கள் அப்பி இருக்கும்.சுத்தப்படுத்தப்பட்ட நெல்மணிகளைக் குவித்துஅளந்து வயலில் வேலைக்கு உதவிய ஓரிருவருக்குக் கூலியாகக் கொடுப்பார்கள்பாட்டி உமாவைத்தான் கொடுக்கச் சொல்வார்.
வீட்டில் பெரிய பானையில் கொதிக்கும் நீரில் நெல்மணிகளை இட்டு விறகு அடுப்பு எரிய இரவு முழுவதும் நெற்மணிகள் புழுக்கப்படுவதைப் படித்துக் கொண்டே பார்த்து பதத்தில் எடுப்பது எல்லாம் உமாவின் பொறுப்புமெஷினில் கொடுத்து உமி எடுத்து புழுங்கல் அரிசியாக வெளிவருவதை வீட்டிற்கு எடுத்து வருவது ஆண் குழந்தைகளின் பொறுப்பு என்று எத்தனையோ நினைவுகள்இந்த வயல்தான் அவர்களது முக்கிய ஜீவாதாரமாக இருந்தது.
வீட்டை அடைந்த உமாவிற்கு விஷயம் புரிந்ததுமாமா தன் பெண்ணின் கல்யாணத்திற்காகப் பங்கு கேட்டிருக்கிறார்வயல் விற்கப்படணுமாம்பாட்டிக்கு விற்க இஷ்டமில்லைசண்டைபாட்டி விற்றுவிடுவாரோ?
உமாவின் மனம் வேதனையில் தவித்ததுபாட்டியின் பெண் வயிற்றுப் பெயர்த்தி தனக்கு உரிமை இல்லாத விஷயத்தில் எப்படித் தலையிடுவதுஆனால் வயலைக் காப்பாற்ற வேண்டும் என்று மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.
ஏவ்ட்டிஅங்க என்ன பண்றமுற்றத்துல புழுக்கின நெல் காயுது பாருகையால அளைஞ்சு கொடு.”
பாட்டி வயல வித்துதான் ஆகணுமா?” நெல்லை கையால் அளைந்து பரப்பிக் கொண்டே கேட்டாள் உமாதொண்டையில் குரல் அடைத்து கண்ணில் நீர் முட்டியது.
பாட்டியிடம் இருந்து பதில் இல்லைகோபம்வருத்தம் போலும்.
மறுநாள் தன் நெருங்கிய தோழியிடம் இதுபற்றி பேசினாள் உமா.
என் அப்பாகிட்ட பேசிப் பாரேன் உமாகண்டிப்பா ஏதாச்சும் ஐடியா கொடுப்பாரு…”
பேசினாள்சண்டைகாரண விவரங்கள் என்னவென்று சொல்லாமல்வயலை விற்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று கேட்டாள்.
நான் பணம் தரேன்நீ வயலை வாங்கிடு
மாமாநானாநான் படிச்சுட்டுத்தானே இருக்கேன்வேலைக்குப் போகலையே எப்படி நான் கடனை அடைப்பேன்
ஏம்மா படிச்சுட்டே வேலை செய்யலாம்நிலத்துல வரும்படியும் பார்க்கலாம்.. அதுலயும் அடைக்கலாமேஉன் பாட்டிகிட்ட பேசிப்பாரு…”
நல்ல ஐடியாவாகத்தான் இருக்கிறதுபாட்டியை ஒத்துக்கொள்ளச் செய்ய வேண்டுமேஎப்படிச் செய்வதுஅன்று இரவு முழுவதும் யோசித்தாள்மறுநாள் பாட்டியிடம் சொன்னாள்.
கடனா?” என்று கோபப்பட்டார்உமாவின் பெற்றோர்மாமாக்கள் எல்லோருமே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பாட்டி நீ கடன் அடைக்க வேண்டாம்நான் பார்த்துக்குறேன்நிலம் உன் பேர்லதான் இருக்கும்விளைச்சல் இல்லாதப்ப இடைல காய்கறி கூடப் போடலாம் பாட்டி.. ப்ளீஸ்….நமக்கு நிலமும் வேணும்மாமா பாவம் அவருக்குப் பணமும் வேணும்மத்த மாமாக்களுக்கும் அவங்க பங்கைக் கொடுத்துடலாம்அதான் இப்படிச் செய்யலாமேணு தோணித்து.  நான் படிச்சு முடிச்சதும் வயல்ல முழுசும் பார்த்துக்குறேன்” கெஞ்சினாள் உமா.
உன் படிப்பு கடனை யாரு அடைப்பாபடிக்கறதுக்கே கஷ்டப்படுறவ வயல வேற பாத்துக்கப் போறாளாம்படிச்சு பாசாயி வேலைக்குப் போற வழியப்பாரு.உன்ன ஒத்த மத்தவங்க எல்லாம் எப்படி படிக்கறாங்க பாரு.” என்று வீட்டிலுள்ள மற்றவர்களுடன் ஒப்பீடு நடந்தது.
உமா அசரவில்லை. “இந்த நிலம்தானே பாட்டி இத்தனை வருஷம் நமக்கு சோறு போட்டுதுநாங்கல்லாம் படிக்கறோம்பெத்து வளர்த்து ஆளாக்கற அம்மா அப்பாவைஏன்உன்னையும் வயசாகும் போது பார்த்துக்கணும்னு சொல்றதில்லையா அது போலத்தானே இதுவும்பூமித்தாய் நமக்கு எவ்வளவு செய்யறாஅந்தத் தாயை நாம கண்ணும் கருத்துமா பார்த்துக்க வேண்டாமாசொல்லுங்க இதுக்கு பதில்.”
ஏன் நிலத்த வயலாத்தான் வைச்சுக்கணுமோவீடு கூடக் கட்டலாமே
நான் நிலத்தை நிலமகளாத்தான் பார்க்கறேன்அதுதான் எனக்குத் தெய்வம்அதைக் கட்டிடமாக்க மாட்டேன்எனக்கு நிறையக் கனவுகள்லட்சியங்கள் இருக்குஇது தொடக்கம் அவ்வளவுதான்….”
என்ன பெரிய லட்சியம்படிச்சு வேலைக்குப் போய் கல்யாணம் குடும்பம்னு வாழறத விட்டு…”
பாட்டி நீ வீட்டுல காந்தி மாதிரி ராட்டை வைச்சு பஞ்சுலருந்து நூல் எடுத்து கொடுத்து எங்களுக்கெல்லாம் யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்தியே.எங்களுக்கும் சொல்லிக் கொடுத்து நாங்களும் தானே எங்களுக்கான யூனிஃபார்ம்க்கு நூத்துக் கொடுத்துருக்கோம்இப்பவும்தான் நாம நூக்கறோம் இல்லையாஎன்ன ராட்டைக்குப் பதில் மெஷின் போட்டு நூக்கறோம்பெட்ஷீட்டவல் எல்லாம் வாங்கிக்கலையாகாந்தியப் பொருளாதாரத்துல ஒரு சின்ன பகுதிஇந்தக் கிராம மக்கள் தன்னிறைவு அடையறா மாதிரி செய்யணும் பாட்டிதயவு செய்து பாட்டி ப்ளீஸ் நான் கேக்கற இந்த ஒண்ணு மட்டும் எனக்கு சம்மதம் சொல்லு……ப்ளீஸ்…”
பாட்டி என்ன நினைத்தாரோயோசித்திருப்பார் போலும்இறுதியில் உமாவுக்கு ஆதரவான தன் முடிவைச் சொல்லிவிட்டார்..
உமா மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள்நினைத்தபடி செயல்கள் ஒவ்வொன்றாய் மெதுவாக நடந்தனஉமா பொறுமையுடன்தன் படிப்புடன் வேலைக்கும் சென்றாள்லீவுக்கு வரும் போது பாட்டிக்கு உதவினாள்அவர்களது உழைப்பினால் வயலும் நல்ல விளைச்சல் கண்டதுகடனும் பகுதிக்கு மேல் அடைந்தது.
மாமாக்களின் குழந்தைகள்உமாவின் தம்பி என்று ஒவ்வொருவராகக் கல்யாணம்வேலை என்று வெளியூர் சென்றனர்உமாவின் படிப்பும் முடிந்தது.கடனும் முடிந்துநிலம் உமாவின் பெயரில் மாறிடபாட்டி கண்ணை மூடும் முன் உமாவிற்குக் கல்யாணம் முடித்தார்அவள் கிராமத்தின் அருகிலே உள்ள டவுனில்தான் புகுந்த வீடுஉமாவின் பெற்றோர் தம்பியுடன் சென்றனர்.
கணவன் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருந்தான்புகுந்த வீட்டில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லைவருத்தங்களும்கோபங்களும் வரத்தான் செய்தனஆனால்கணவன் உமாவையும் அவளது கனவுகளையும் நன்றாகப் புரிந்து கொண்டு உறுதுணையாக இருந்ததால்புகுந்த வீட்டினரையும் கவனித்துக் கொண்டுஅங்குள்ள பிரச்சனைகளையும் சமாளித்துக்கொண்டுதன் நிலத்தையும் பார்த்துக் கொள்ள முடிந்தது.
குழந்தைகள் பிறந்தனர்நன்றாகப் படித்தனர்கணவனின் ஒத்துழைப்பினாலும்இருவரது உழைப்பினாலும் நிலங்கள் விரிவடைந்துதோப்புகளும் சேர்ந்துகொண்டனகணவன் மற்றும் கிராமத்தில் வசதியுடன் வாழ்பவர்களின் உதவியுடனும் அவள் கிராமத்தில் முதன் முதலாகச் செய்ததுகழிவறைகள் இல்லாத வீடுகளில் கழிவறைகள் கட்டியதும் பொதுக்கழிவறைகள் கட்ட உதவியதும்தான்.
அப்படி உறுதுணையாக இருந்த கணவர் மறைந்ததும் உமா அதிர்ந்துதான் போனாள் என்றாலும் தன் தைரியத்தை இழக்கவில்லைஅவள் பெற்றோரும் இல்லைஅவள் கணவர் இருந்த போதேமாமாக்கள் வெளியூரில் இருக்கும் தங்கள் குழந்தைகளுடன் இருக்க வேண்டிச் சென்றுவிட்டதால் பாட்டியின் வீட்டை உமாவிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்கணவரின் மறைவுக்குப் பின்உமா தன் கிராமத்தில் பாட்டி வாழ்ந்த வீட்டிற்கே தன் குழந்தைகளுடன் வந்துவிட்டாள்என்றாலும் தன் புகுந்த வீட்டினரையும் விட்டுவிடவில்லைஅந்த வீடு அனைவரும் வந்து தங்கிச் செல்லும் இல்லமாக மாறியது.
கிராமத்தில் ஒவ்வொரு பணியாக மேற்கொள்ளத் தொடங்கினாள்நீர்நிலைகள் அதிகம் இருந்தாலும் எதிர்காலத்தின் நீரின் தேவையையும்நீர் மேலாண்மையையும் மக்களுக்குச் சொல்லிட ஊர் மக்கள் அனைவரும் நீர் நிலைகள் அனைத்தையும் பராமரித்தனர்சொட்டுநீர்ப்பாசன முறையையும் அறிமுகப்படுத்தினாள்மக்கள்தான் எத்தனை நல்லவர்கள்கல்வியறிவுதான் இல்லையே தவிரநல்ல மனமும்தங்கள் கிராமத்தின் மீதும்நிலத்தின் மீதும் நேசத்துடன் இருந்ததால் எடுத்துச் சொன்னதைப் புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் எண்ணமும் கலந்திட சாதிக்க முடியாது போகுமோ!
மக்களின் நிலங்களும்தோட்டங்களும் பெருகினகிராமத்து மக்களுக்கும் உழைத்திடவிளைந்தவை இவர்கள் கிராமத்திற்கும்அருகிலிருந்த டவுன்களுக்கும்சந்தைக்கும் சென்றனமாட்டுப் பண்ணைகோழிப் பண்ணைதேனீ வளர்ப்புகாய்கறித் தோட்டம்என்று விவசாயம் சார்ந்த தொழில்களும்குடிசைத் தொழிகளும் தொடங்க ஊர் விவசாயிகளுக்கும்குடும்பங்களுக்கும் கூடுதல் வருமானமும் கிட்டியது.
ஊரில் இருக்கும் கோயில் தவிர புதியதொரு கோயில் எழுப்ப வேண்டும் என்று சொல்லப்பட்ட போதுஅதற்குப் பதிலாகஅப்பணத்தில் நலிந்த பள்ளிக் கூடத்தை மேம்படுத்திஎல்லா வசதிகளும் கொண்ட மருத்துவமனை ஒன்றையும் தொடங்கலாமே என்று உமா எடுத்துரைத்த போது சில குரல்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும்பெரும்பான்மையான கிராமத்தினர் அதை ஏற்றுக் கொள்ளநல்ல உள்ளங்கள் உதவிடஊர் மக்களுடன் சேர்ந்து செயலில் இறங்கினாள்கிராமத்துக் குழந்தைகள் அனைவரும் கல்வி அறிவும் பெறத் தொடங்கினர். நல்ல மருத்துவ வசதியும் வரத் தொடங்கியது..
உமாவின் குழந்தைகள் வெளியூரில் வேலைக்குச் சென்றனர்திருமணமும் முடிந்து எல்லோரும் நல்ல நிலையில் வெளிநாட்டிலும்இந்தியாவிலுமாகஇருந்தனர்.
தன் குழந்தைகளின் ஆலோசனைகளையும்உதவியையும் பெற்று அதன்படி விவசாயத்திற்கும் அதைச் சார்ந்த தொழில்களுக்கும் தேவையான தொழில் நுட்பங்கள்நூலகம்கணினி வசதிஇணையம் போன்ற தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்காகஊர்மக்களுக்காக என்று செயல்படுத்திட தன்னிறைவு பெற்றஉதாரண கிராமமாக வளர்ந்து ஊடகங்களிலும் பேசப்பட்டதேஅப்போது கூட ஊடகங்களின் வழக்கமான கேள்வி உமாவிடம் கேட்கப்பட்டதுதான்.
நீங்கள் அரசியலில் இறங்குவீர்களா?”
அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையேதயவு செய்து எங்கள் மக்களின் உழைப்பை அரசியலாக்காதீர்கள்.” என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டாள்.
அவளது முயற்சிகள் ஒவ்வொன்றிற்கும் கிராமத்தில் சிலர் பிரச்சனைகள் எழுப்பினர்தான்இருந்தாலும் எல்லாவற்றையும் எதிர்கொண்டு முடிந்தவரை செய்திருந்தாலும் இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறதுதான்……..ஆனால்என்று சிந்தித்துக் கொண்டே பேரக் குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டு வர,
பாட்டி யு ஆர் சிம்ப்ளி க்ரேட்எங்களுக்கெல்லாம் நீ ரோல் மாடல் பாட்டி” என்று குழந்தைகள் சிலாகித்தனகுழந்தைகளுக்கெல்லாம் எவ்வளவு நீதிக் கதைகள் சொல்லியிருப்பாள்! கொஞ்சமேனும் பதிந்திராமல் போகுமா என்ன?
இல்லைமாஎல்லாமே ஊர் மக்களின் உழைப்பு.. சாதனைஎன் பங்கு ஒண்ணுமே இல்லைமாஜஸ்ட் கைடன்ஸ் அம்புட்டுத்தான்.”
அது உன் தன்னடக்கம்ஆனால்னு ஏதோ சொல்ல வந்தியே பாட்டி….”
இவ்வளவு அழகாக விரிந்துள்ள கிராமத்திற்குத்தான் இப்ப பிரச்சனை வந்திருக்கு”
“ஓ! அந்த 4 லேன் சாலையா? பாட்டி?”
“ஆமாம்”
நான்கு மாதங்களுக்கு முன் உமாதன் குழந்தைகளின் ஊர்களுக்குச் சென்று திரும்பிய போதுதான்நான்கு வழிச் சாலை கிராமத்தின் குறுக்காக வரப் போகிறது என்ற அதிர்ச்சியான செய்தி வந்ததுபல நிலங்கள்வாய்க்கால் எல்லாம் போய்விடும் என்றும் வயல்களுக்கான இழப்பீடு அதன் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டதுஉமாவின் மனம் நொடிந்துவிட்டது.
இந்த பூமி நங்கைதான் எவ்வளவு அழகுஅவளை அலங்கரிக்கும் ஜீவராசிகள்விளை நிலங்கள்காடுகள்செடிகொடிகள்மலைகள்அருவிகள்,நீர்நிலைகள்இவை இல்லாமல் போனால் அவள் உடல் வறண்டு நோயுற்றது போல் ஆகிவிடுவாளேகிராமங்கள் அழிந்து வரும் நிலையில் தன் கிராமமும் அப்படி ஆகிவிடுமே என்ற வேதனை ஆட்கொண்டது.
உமாவும் ஊர் மக்களுமாகப் பல பெரிய தலைவர்களுக்கு மனு கொடுத்து போராட்டமும் செய்திருந்ததால் சாலைக்கான வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுதான்ஆனால்நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லையே.
பேரன் பேத்திகள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு வந்தனர்வீட்டிற்கு வந்ததும் உமா ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அம்மாநாங்க எல்லாரும் இப்ப இருக்கறப்ப முடிவு செய்வோம்ஹைவே எல்லாம் வரப் போகுதுனா பேசாம எல்லாத்தையும் வித்துறலாம்” –மகன்களும்மகள்களும் சொல்லிட
நோ” என்ற பெரிய அலறல்எல்லோரும் ஸ்தம்பித்தனர்ஆஸ்திரேலிய பேத்தி பெரியவள்.
நோஎதையும் விக்க வேண்டாம்கூடாது..…ப்ளீஸ்
ப்ரியா என்ன உளர்றநீ என்ன பண்ணப் போறபாட்டிய நாம கூட்டிட்டுப் போயிடலாம்வயசாகுதுலஇங்க எதுக்கு தனியா இருக்கணும்?  அதான் இந்த முடிவை நாங்க எல்லாரும் டிசைட் பண்ணினோம்நீ சின்னவ இதுல தலையிடாத….”
இப்படி விவாதித்துக் கொண்டிருந்த போதே உமாவிற்கு நெஞ்சு அடைக்க பிடித்துக் கொண்டள்பெரியவர்களும்குழந்தைகளும் பதறினர்இதுவரை எந்த நோய் நொடியும் இல்லாமல் இருந்தவளுக்காபெரிய மகன் தன்னிடமிருந்த ஆஸ்பிரினை கொடுத்து நாவின் அடியில் வைத்துச் சப்பச் சொன்னான்.  அவளைக் காரில் ஏற்றிகிராமத்தினரின் உழைப்பில் எழுப்பப்பட்டு எல்லா வசதிகளுடனும் வளர்ந்திருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
டாட்நான் என் படிப்பு முடிஞ்சதும், அங்கயும், இங்கயுமா இங்க பாட்டியோடுதான் இருப்பேன்நான் முடிவு பண்ணியாச்சு……ஐ வில் டேக் கேர் ஆஃப் ஆல் த லேன்ட்ஸ் அண்ட் வில் செர்வ் திஸ் வில்லேஜ்மை கசின்ஸ் வில் ஜாய்ன் மி...”
ஐசியுவிற்கு கொண்டு செல்லப்பட்ட உமாவின் காதில் பேத்தியின் வார்த்தைகள் ஒலித்திட நம்பிக்கையுடனும்மகிழ்சியுடனும் பேத்தியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்!

91 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்...

  ஆஹா இன்று யார் கதையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே வந்தால் இதுவா..!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா...  வாங்க..  வாங்க...

   நீக்கு
  2. இங்கு ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு அப்புறமாக வருகிறேன்.

   இக்கதையின் கருத்து, வல்லிம்மாவுக்கு அளித்த பதிலில் சொல்லியிருப்பது போல என் கல்லூரிக் காலத்திலேயே மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்று. அது மனதிலேயே கதையாக உருவெடுத்தாலும், அப்போது இந்தச் சாலைகள் எதுவும் போடவில்லையே ஆனால் விவசாயம் காந்தியப் பொருளாதாரம் படித்த விளைவில் எழுந்த ஒரு கதைக் கரு. அது மனதில் வளர்ந்து கொண்டே வந்தாலும், எங்க ஊரிலும் ஒரு அருமையான வாய்க்கால் வழியாக நாலு வழிச் சாலை திருவனந்தபுரம் ரோட்டை இணைக்கப் போடப்படுகிறது என்பதைக் கேட்டதும் அந்த வாய்க்காலில் தான் என் மகன் விளையாடுவான், நானும் என் பள்ளி கல்லூரிக் காலத்தில் விளையாடி இருந்தாலும் மகனும் நானும் விளையாடியதும் நினைவுக்கு வர அந்த வாய்க்கால் அதைச் சுற்றி உள்ள நிலங்கள் எல்லாம் போய்விடுமே என்று வருத்தம் வர..கதை நகர்ந்தது. எழுதியும் முடித்துவிட்டேன்....அதே போன்று கில்லர்ஜி ஊர் அருகே, அப்புறம் சேலம் என்று வர (இதற்கு பரிவை சே குமார் அவர்கள் எதிர்க்கருத்தாக ஏதோ ஒரு இதழில் கருத்துப் பகுதியில் வெளி வந்ததாக எபி வாட்சப் க்ரூப்பில் வந்த நினைவு) எல்லாமும் என் கதைக்கு வலு சேர்த்தது. இது நிலங்களும் விவசாயமும் போவது பற்றி...அடுத்து...

   அதோடு எபியில் சனிக்கிழமை தோறும் வெளியாகும் பாசிட்டிவ் செய்திகளில் கிராமங்கள் பலவற்றில் மக்கள் அனைவரும் அரசைச் சார்ந்திராது தங்கள் கிராமத்தை தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவதில் முனையும், செய்திகள் பல வெளியாகியது - பள்ளி, மருத்த்வமனை, நிலங்கள், ஆறுகள், குளங்கள் அணைகள் இவற்றைத் தூர்வாரி பாதுகாத்தல், நீர் மேலாண்மை - அனைத்தும் என் கதையை நகர்த்திச் செல்ல உறுதுணையாக, வலு சேர்ப்பதாக இருந்தது என்பதை இங்கு நான் சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

   அது போன்று வெளிநாட்டில் வசிக்கும் இளையவர்களும் கிராமங்களைக் காக்க முனையும் செய்திகளும் வாசிக்க நேர்ந்த போது என் மனதில் உருவான கற்பனை வெறும் கற்பனை அல்ல அது நிஜமாவதற்கான சாத்தியங்களும் உள்ளனதான் என்ற உறுதியில் கதையை முடித்தேன்.

   எபி க்கு மிக்க மிக்க நன்றி!

   கல்கிக்கு அனுப்பியது கடைசி நிமிடத்தில். அதற்கு முன் ஸ்ரீராம் மற்றும் பானுக்காவுக்கு அனுப்பி கருத்து கேட்டு அனுப்பலாமா அதற்குத் தகுதியானதா என்று கேட்டுவிட்டு, அவர்கள் ஓகே என்று சொன்ன பிறகு இன்னும் கொஞ்சம் திருத்தங்கள் செய்து, அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் இருக்கிறதா என்று செக் செய்து.....பத்திரிகை மற்றும் போட்டிக்கு அனுப்பும் முதல் முயற்சியாக அனுப்பினேன்.

   முடிவுகள் எல்லாம் வெளி வந்த பின் நம் குமாருக்கு - அவர் பல பத்திரிகை, போட்டிகள், தளங்கள் என்று எழுதி பல அனுபவங்கள், வெற்றிகள் உடையவர் என்பதால் அவருக்கும் அனுப்பி அவரது கருத்தையும் அவர் சொல்லிய சஜஷன்ஸையும் கேட்டுக் கொண்டேன். மிக்க நன்றி குமார்.

   கீதா

   நீக்கு
 2. வாங்க கீதாஜி! நேற்று கமெண்ட், இன்று கதையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்..    அவங்க கதை நேற்று அனுப்பியிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?!!!

   நீக்கு
  2. ஏகாந்தன் அண்ணா அண்ட் ஸ்ரீராம் உங்கள் இருவரின் கமென்ட் பார்த்து சிரித்துவிட்டேன்...

   ஏகாந்தன் அண்ணா நேற்று கமென்ட் போட்டு இறங்கியாச்சு ஆனால் மற்றவர்களின் கமென்ட் பார்த்து தேம்ஸ் காரர்களின் கமென்ட் எல்லாம் பார்த்து கும்மி அடிக்க இயலவில்லை. அதையும் தொடங்கணும் ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
  3. வெள்ளை மாளிகை உங்கள் கதையைப் பிரித்து மேய, சில மணிநேரங்களே பாக்கி! ஏஞ்சலும் பக்கவாட்டிலிருந்து குதிக்கலாம்..எச்சரிக்கை!

   நீக்கு
  4. ஆஹா ஏகாந்தன் அண்ணா இப்பூடி பயமுறுத்தறீங்களேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

   வெள்ளை மாளிகை பூஸாரை சமாளித்துடலாம்... சரித்திரக் கதை புகழ், கம்பபாரதி, கவிதாயினி தமிழ்ல டி வாங்கினவங்க!!!!!! பயமாக்கீஈஈஈஈஈஈஈஈது!!!!!!! நல்ல காலம் பொது சரித்திரம் எதுவும் இல்லை கதைல..ஹா ஹா ஹா ஹா இல்லைனா அதுலயும் மாட்டிக்கொள்ள வேண்டுமே!!!!!

   பிரித்து மேய// அப்ப அம்புட்டுத்தான் இருக்கோ கதை!!!!!!??? ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. ஏகாந்தன் அண்ணா ஏஞ்சல் நம்ம கட்சி!!! ஸோ சமாளிச்சுக்கலாம்....பூஸார் தான்..ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 3. அன்பு கீதா, ஸ்ரீராம் இன்னும் வரப் போகிறவர்களுக்கு
  இனிய காலை வணக்கம்.

  பூமியப் பற்றிய கதை. வாழ்த்துகள் கீதாமா.
  நீண்ட கதையாக இருந்தாலும் மூன்று தலைமுறைக்கதையாகிவிட்டது.
  இதில் கீதாவும் ஒளிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
  இவ்வளவு விவசாய விவரம் அனுபவம் இல்லாமல் வர
  ஏது இல்லை. அருமையாகப் பின்னப்பட்டு
  உமாவின் தியாகங்களையும் ஆசைகளையும் வர்ணித்த விதம்
  மிக அழகு.

  ஏதோ கேரளவில் நடப்பது போலத் தோன்றுகிறது.
  சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது மீண்டும் பார்க்கலாம் கீதாமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   இனிய காலை வணக்கம்.

   நீக்கு
  2. வல்லிம்மா இனிய மாலை வணக்கம்.

   நமக்குத்தான் சின்னதா எழுத வரவே மாட்டேங்குதே!! ஹிஹிஹிஹி

   கொஞ்சம் வயல் அனுபவங்கள் உண்டு அம்மா. அப்போது மனதில் ஆழமாக வேரூன்றிய ஒரு கருத்து கதையாக வந்தது.

   இது கல்கியின் சமீபத்திய போட்டிக்கு அனுப்பி தேர்வாகவில்லை. ஹிஹிஹிஹி..சும்மாதான் முதன் முறையாக அனுப்பியிருந்தேன்...எந்த எதிர்பார்ப்பும் இல்லை....அவர்கள் சொல்லியிருந்த வார்த்தைகளுக்குள்தான் இருந்தது. ஆனால் பக்கம் என்று பார்த்தால் பெரிதுதான். என்றாலும் எழுத்து அவர்களின் தரத்திற்கு இல்லைதான். எழுத்துலக ஜாம்பவான்களுடன் இந்தக் கத்துக்குட்டி போட்டி போட முடியுமா?!!!!!!!!!!!! இன்னும் நான் நிறைய கற்க வேண்டும்.

   மிக்க நன்றி அம்மா கருத்திற்கு

   நானும் வேலை முடித்து பின்னர் வருகிறேன்

   கீதா

   நீக்கு
 4. எபி-யின் டெர்மினாலஜியில் ’நேற்று’ என்பது வேறொரு காலகட்டம் என்பது தெரிந்ததுதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் ஸார்....

   ஹா....ஹா.. ஹா... என்று சிரிக்கவா?   ஹிஹிஹி என்று இளிக்கவா?!!!

   நீக்கு
 5. ஆகா...

  அன்பின் கீதா அவர்களுக்கு நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்துவிட்டேன் துரை அண்ணா...உங்களைக் காணவில்லையே என்று நினைத்தேன் ஓ மொபைல் பிரச்சனையோ....

   இனிதான் உங்கள் வீடு வர வேண்டும்...வருகிறேன்...

   கீதா

   நீக்கு
 6. காணி நிலம்..
  கருத்துள்ள நிலம்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா..
   அருமை..
   தமிழுக்கு தாங்கள் ஊட்டிய செறிவான வார்த்தைகளே பலம்.. நன்றி.

   நீக்கு
  2. அவசரமாகக் கிளம்பும் முன் ஒரு கமெண்ட் மட்டும்.

   கமலா அக்கா கமெண்ட்டா இது?  அல்லது வேறு யாராவது அட்மின் கமெண்ட்டா?   அவர்கள் பாணியையே காணோம்?  ரொம்பச் சுருக்கமாயிருக்கு...

   ஊ...ஹூம் நம்ப முடியவில்லை!

   நீக்கு
  3. ஹா.ஹா.ஹா நன்றி. சுருக்கம் நம்ப முடியவில்லையா? சுருங்கி விரியும் இதயத்தில் துரை சகோதரரின் வார்த்தைகளின் அழுத்தம் பதிந்ததில் சட்டென சுருக்கமாய் ஒரு பாராட்டும்... பூவோடு சேரச்சேர நாரும் மணக்குமில்லையா? நன்றி.

   நீக்கு
  4. ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களது பாராட்டுரைக்கு மகிழ்ச்சி... நன்றி..

   நீக்கு
  5. கருத்துள்ள காணி நிலம்//

   மிக்க நன்றி துரை அண்ணா....

   ஸ்ரீராமின் கமென்ட் பார்த்து சிரித்துவிட்டேன்....கமலா அக்கா மீ அதிரா, நெல்லை, கீதாக்கா போல இல்லையா...

   கமலாக்கா ஒண்ணே ஒண்ணு...ரொம்ப ஃபார்மலா இருக்காதீங்க...சும்மா எங்களை எல்லாம் பேர் சொல்லியே கூப்பிட்டு கமென்டும் போடுங்க...வணக்கம் சகோதரின்னு எல்லாம் அதுவும் ஒவ்வொரு முறையும் சொல்றப்ப ஏனோ ரொம்ப ஃபார்மலா இருக்காப்ல இருக்குக்கா..ஸோ சும்மா கீதா, அதிரா, ஏஞ்சல்னு சொல்லுங்க நாங்கள்லாம் சின்ன பாப்பாக்கள்...பூஸார் மட்டும் வயசானாலும் நாம குழந்தை போலனு சொல்றதில்லையா அப்படி வைச்சுக்கோங்க.!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  6. அதானே கமலா அக்கா துரை அண்ணாவின் தமிழ்ச் சொற்கள் பற்றி சொல்லவும் வேண்டுமோ?!!!! அசாத்தியமாக இருக்குமே.

   கீதா

   நீக்கு
 7. வேலைக்கு நேரமாச்சு...
  அப்புறமா வர்றேனுங்கோ!...

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்த பொன்னாளாக பிரகாசிக்கவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  சகோதரி கீதா ரங்கனின் கதை அருமை. கிராமத்தின் பேச்சுகள், கிராமிய செயல்பாடுகள் என ஒரு கிராமத்தையே கண்களுக்குள் கொண்டு வந்து விட்டது.

  உமாவின் தைரியமான மனப்பான்மை இயல்பாகவே அவளுடைய பேத்திக்கும் வர கதை சுபமாக முடிக்கப்பட்டு விட்டது.
  வயல்வெளிகள், விவசாயம்,என அதன் பாணியில் கதைச் சொல்லிக் சென்ற விதம் சகோதரி கீதாவுக்கு அதன் பேரில் எவ்வளவு அனுபவங்கள், ஈடுபாடுகள் உள்ளதென்பதை துல்லியமாக காண்பித்தது. தங்கள் அனுபவங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

  கதையை ஆழ்ந்து படித்ததில், காலை நேரத்தில், மேனியில் தவழ்ந்து படரும் கிராமத்துக்கே உரிய இளம் தென்றலோடு, ஒரு அழகான செழிப்பான கிராமத்தை சுற்றி விட்டு தரிசித்த திருப்தி கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா அக்கா மிக்க நன்றி அக்கா. விரிவான கருத்திற்கு.

   //உமாவின் தைரியமான மனப்பான்மை இயல்பாகவே அவளுடைய பேத்திக்கும் வர கதை சுபமாக முடிக்கப்பட்டு விட்டது//

   இப்போது சில இளையவர்கள் இப்படியாக வந்து கொண்டிருக்கிறார்கள் அக்கா. என் கற்பனையில் விளைந்த ஒன்றிற்கு அதுவும் உதவியது.

   //கதையை ஆழ்ந்து படித்ததில், காலை நேரத்தில், மேனியில் தவழ்ந்து படரும் கிராமத்துக்கே உரிய இளம் தென்றலோடு, ஒரு அழகான செழிப்பான கிராமத்தை சுற்றி விட்டு தரிசித்த திருப்தி கிடைத்தது.//

   மிக்க மிக்க நன்றி கமலாக்கா.....

   கீதா

   நீக்கு
 9. இதில் கீதாவும் ஒளிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
  இவ்வளவு விவசாய விவரம் அனுபவம் இல்லாமல் வர 
  ஏது இல்லை. அருமையாகப் பின்னப்பட்டு
  உமாவின் தியாகங்களையும் ஆசைகளையும் வர்ணித்த விதம்
  மிக அழகு.//

  நானும் இதை ஆமோதிக்கிறேன். நீளமான கதை என்பதால் இரண்டு பதிவுகளாக இட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிபிஆர் ஜோசஃப் ஐயா.

   உங்களின் ஒரு தொடர் இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு கேஸ், கோர்ட் சம்பந்தப்பட்ட கதை ஹப்பா எல்லா விஷயங்களையும் மைன்யூட் டிடெய்ல்ஸ் எல்லாம் செமையா இருக்கும். ஒவ்வொரு லா பாயின்ட், கேஸ் எங்கு நடக்கும் என்ற விவரங்கள் உட்பட கதையில் விளக்கங்களுடன் ...அடுத்து ஒன்று எழுதப் போவதாகச் சொல்லியிருந்தீங்க டில்லி கொலைக்கேஸ் ஒன்று...எழுதவில்லை என்று தெரிகிறது.
   அது போல மொபைல் விஷ்யக் கதையும்...வாழ்த்துகள் ஐயா.

   கீதா

   நீக்கு
 10. ஹையா!..
  புது செல்போன் வாங்கியாச்சே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை துரை அண்ணா புது செல்ஃபோனா..மகிழ்ச்சி.அப்ப எங்களுக்கு எல்லாருக்கும் ட்ரீட் உண்டுதானே!!!

   கீதா

   நீக்கு
  2. அப்பா!..
   நீங்களாவது ட்ரீட் கேட்டீர்களே!..
   மிக்க மகிழ்ச்சி 😃 ...

   நல்வாழ்த்துகள் தான் ட்ரீட்!...
   வளம் பல பெற்று வாழ்க பல்லாண்டு...

   நீக்கு
  3. ஆமாம் உங்கள் வாழ்த்தே எங்களுக்கு ட்ரீட் தான்!!

   சரி சரி எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க....பூஸார் வந்து தனக்கு வைர வைடூரியத்தில் கால் தண்டை அதுவும் கனமாக வேண்டும்னு ஜல் ஜல் செய்யப் போறாங்க...இன்னும் உங்கள் செல்ஃபோன் கண்ணுல படல அவங்களுக்கு

   கீதா

   நீக்கு
 11. ஐசியூவிற்குபோன உமா மரணித்தாலும் பேத்தியின் வார்த்தைகளால் சந்தோஷமாகவே போகிறார்.

  இந்தக்கதையின் இணைப்பை எடப்பாடிக்கு அனுப்பி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி... அவர் தேவகோட்டை விளை நிலங்கள் வழியா பத்து வழிச் சாலை திட்டத்தில் மும்மரமாக இருக்கார். அது முடிஞ்சதும் இந்தக் கதையைப் படிக்கிறேன் என்றார்.

   நீக்கு
  2. ஓஹோ விசயம் அதற்குள் ரிப்ளே ஆகி விட்டதா ?

   தேவகோட்டையில் பத்து வழிச்சாலையா ?
   வேண்டுமானால் வான்வழியை உபயோகிக்கட்டும்.

   நீக்கு
  3. கில்லர்ஜி உங்கூர்ப்பக்கம் வரப் பொகுதுனு கேள்விப்பட்டேனே அது உண்மையா சும்மாவான்னு தெரியலை...ஆனால் நெல்லை வம்பிக்கிழுத்திருப்பது போல பத்துவழிச் சாலைன்னு எல்லாம் கேள்விபடலை...ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. ஐசியூவிற்குபோன உமா மரணித்தாலும் பேத்தியின் வார்த்தைகளால் சந்தோஷமாகவே போகிறார்.//

   ஆமாம் கில்லர்ஜி மிக்க நன்றி கருத்திற்கு..

   இந்தக்கதையின் இணைப்பை எடப்பாடிக்கு அனுப்பி இருக்கிறேன்.//

   ஹா ஹா ஹா ஹா அப்படி யாரேனும் பார்த்து இனியேனும் நல்லது நடந்தால் நல்லது ஜி. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கட்டும்...

   கீதா

   நீக்கு
 12. கதையை காலையில் படித்தேன். கதையின் கருத்தும் உரையாடல்களும் நன்றாக இருந்தன. கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள்.

  நம்முடைய அதீத சென்டிமென்ட மற்றும் ஆர்வத்தினால், கிராமங்கள் அழியுதே என்ற கவலையினால் கிராம்ம், வயல் வெளி, மக்களோடு இயைந்த வாழ்வு என்று நினைக்கிறோம், ஆசைப்படுகிறோம். அதுவும் இப்போதுள்ள வாழ்க்கையில் நாம் சென்னையில் இருந்தாலே பசங்க எங்க இருப்பாங்க, வெளியூரா வெளிநாடான்னு சொல்ல முடியாது. அதுனால இது அதீத கற்பனை என்றுதான் தோணும். அதிலும் ஒரு தடவை வெளிநாட்டு சௌகரியங்களைப் பார்க்க ஆரம்பித்தாலே, திரும்ப இந்தியா வந்து வாழ்வதே கடினம் என்று இருக்கும்போது, திரும்ப கிராம்மா? நாம் மனதில் ஆசைப்படுவதை கதை எழுதியாவது தீர்த்துக் கொள்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

   அதீத செண்டிமென்ட், கற்பனை என்றும், நாம் ரொம்ப ஐடியலிஸ்ட்டிக்காக யோசிக்கிறோம் அல்லது மனதில் இருப்பது கதையில் வருகிறது என்று எனக்கும் தோன்றியதுண்டு. ஆனால் நெல்லை ஒன்றே ஒன்று எனக்கு நெகட்டிவாகத் திங்க் செய்ய முடிவதில்லை. அதுவும் அரவிந்தர் ஒரு வாசகம் சொல்லுவார் டெலிபதி பற்றி. நாம் நினைப்பது போல உலகின் மூலையில் யாரேனும் ஒருவரும் யோசிப்பார்கள். அப்படி யோசிக்கும் போது அது செயல்வடிவம் பெறும் சாத்தியம் உண்டு என்பது. எண்ணங்கள் நல்லதனால் அது கண்டிப்பாக என்றேனும் ஒரு நாள் நல்லபடியாக நடக்கும். ஒரு வேளை அதைக் காண நாம் இருக்க மாட்டோமா இருக்கலாம் ஆனால் அட்லீஸ்ட் எதிர்கால சந்ததியினர் எஞ்சாய் செய்யட்டும்.

   மற்றொன்று மாற்றம் ஒன்றே மாறாதது இது எல்லாமே ஒரு சுழற்சி முறைதான். பல விஷயங்கள் அன்றைய காலக்கட்டத்தில் உள்ளவை இன்று மீண்டும் சுழற்சி முறையில் வருவது போல இதுவும் நடக்கலாம். அதான் சிறு தானியங்கள், இயற்கை உரம், ப்லாஸ்டிக் ஒழிப்பு, மண் சட்டிகளுக்கு டிமான்ட், சீட் பால்ஸ் என்று வேறு வடிவத்தில் இருந்தாலும்....மினிமலிஸம்....என் தங்கையின் பெண் இப்போதைய தலைமுறை இப்போதே வீட்டில் தேவையற்றப் பொருள் என்று எதையும் வைத்துக் கொள்வதில்லை....உடைகள் உட்பட எண்ணி அதைக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அதீதமாக வாங்கிக் கொடுப்பதில்லை...

   நானும் ஐடியலிஸ்டிக் என்று கதை எழுதும் போதே தோன்றினாலும் ஏனோ எனக்கு அதை நெகட்டிவாகக் கொண்டு செல்ல மனமில்லை அதற்கு வலிமை சேர்த்தவை எபி பாஸிட்டிவ் செய்திகளும், மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ லே சொன்ன நீண்ட கருத்தும்....எனவே நம் கற்பனை ஏதேனும் ஒரு விதத்தில் சாத்தியமகிறதே நடைமுறையில் நடக்கிறதே என்று ஒரு சந்தோஷம். இது இன்னும் விரிவடைந்து நடக்கலாம் என்றே தோன்றியது. ஏனென்றால் மாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதுவும் சுழற்சிதான்...

   நல்லதையே நினைப்போம்

   கீதா

   நீக்கு
  2. நாம் மனதில் ஆசைப்படுவதை கதை எழுதியாவது தீர்த்துக் கொள்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.//

   அபடியும் வைத்துக் கொள்ளலாம். இவை பதியப்படும் போது யாரேனும் இதைப் பார்த்து கொஞ்சமேனும் யோசித்து மோட்டிவேட் ஆனால் நல்லதுதானே நெல்லை...நாம் நினைப்பதை எழுதுவோம் நெல்லை

   கீதா

   நீக்கு
 13. கதை சற்று நீளம் போல் இருந்தாலும், ரசிக்கும்படி இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு...

   கீதா

   நீக்கு
 14. ஆஆ இன்று கீதா ஸ்ரோறியா?:) அதுதான் நேற்றே அட்டகாசம் ஆரம்பமாகிட்டுதோ ஹா ஹா ஹா கவனம் ரெஸ்ட் குடுத்து குடுத்து அடிங்கோ:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா! ஆமாம் கவனம் கொடுத்துத்தான் அடிக்கிறேன். முழுவதும் கணினியில் இருப்பதில்லை. அவ்வப்போது வந்துதான்.

   அக்டோபரில் வரும் என்று மட்டும் நினைவிருந்தது. தேதி மறந்துவிட்டது. அப்பவே ஸ்ரீராமிடம் சொன்னேன் அக்டோபரில் கதை வரும் முன் என் கையை சரி செய்து கொள்ள வேண்டும் என்று. வலைப்பக்கம் இல்லாமலும், இப்போது வேலைக்கும் போக முடியவில்லையே.. கவனமாக இருக்கிறேன். மிக்க நன்றி அதிரா

   மெதுவா வாங்க...

   கீதா

   நீக்கு
 15. பாட்டிகதை அழகிய ஆரம்பம் கீதா, படிச்சிடலாம் என பார்த்தால் மொபிலில் படிச்சு முடியாது போலிருக்கு... முடியும்போது படிச்சிட்டு சொல்றேன்...

  பதிலளிநீக்கு
 16. "காணி நிலம் வேண்டும்" என்று சொன்ன உமாப்புள்ளே ஏக்கர் கணக்கில் சொத்து வைத்து இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி காணி நிலம் கேட்பது அவளுக்காக இல்லை கிராமத்து மக்களுக்காக. அவள் வாங்கியிருப்பது மக்களுக்காக அவர்களுக்கு உதவியாக, அவர்களால் வாங்க இயலாதே...அவர்கள் உழைப்பே ஊதியமும் அவர்களது நிலமாகவும்...அவள் சொல்லுவதும் அப்படித்தானே கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால் புரியும். அவள் குழந்தைகள் அவர்களுக்கான நிலத்தை மட்டும் விற்றுவிட்டு அவளை அங்கிருந்து தங்களுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாலம், கட்டிடங்கள் என்று வந்த பிறகு நிலமாவது தண்ணியாவது...அவள் போராட நினைப்பது கிராமத்து மக்களுக்காகவே....அவளுக்கல்ல. அதுவும் கதையில் வருகிறதே...

   மிக்க நன்றி கில்லர்ஜி

   கீதா

   நீக்கு
  2. கில்லர்ஜி உமாவைப் போல ஒரு வயதானவரைப் பற்றி அதுவும் 80 வயதிற்கு மேலானவர் எங்கள் தூரத்து உறவுகளில் ஒருவர் பாண்டிச்சேரி அருகே ஒரு கிராமத்தில் 40 ஏக்கரா கரும்பும், இன்னும் நிலங்களும், வீடு அதைச் சுற்றி 8ஏக்கரில் தோட்டம் நிலம் என்று இருப்பவர் ட்ரஸ்ட் உருவாக்கி சொந்தத்தில்.....அவரது குடும்பம் எல்லாம் நகரத்தில் இருந்தாலும் அவர்கள் உதவியுடன் ஒரு தொடக்கப் பள்ளி மிக மிக அருமையாக (அப்பள்ளியைப் பார்த்தால் நாமே அங்கு சென்று பயிலலாமா என்று தோன்றும் அளவிற்கு வைத்து புத்தகம், யூனிஃபார்ம் எல்லாம் இலவசமாக....பஸ் கட்டணம் மட்டும் பெற்றுக் கொண்டு அந்தக் கிராமம் மற்றும் சுத்துப்பட்டுக் கிராமக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கி வருகிறார். இப்பொது அவருக்கு வயதாகி வருவதால், குழந்தைகளும் அருகில் இல்லாததால் யாரேனும் பள்ளியைப் பொறுப்பாக நடத்த மற்றும் அதை நடுநிலைப் பள்ளி, ஹையர்செகண்டரி என்று விரிவு படுதும் நல்லார்வத்த்டுடன் நல்ல கல்வி அறிவுள்ளவர் கிடைப்பார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது பேரப் பிள்ளைகளும் உதவுவதாக இருக்கிறார்கள். அவருக்கு அந்தக் கிராமத்தை விட்டு செல்ல மனமில்லை. அக்குழந்தைகளுக்காக ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். சொல்லப் போனால் அவர் அக்குழந்தைகளுடன் பொழுது போவதே தெரியவில்லை அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்கிறார்.

   இதுவும் ஒரு மாதம் முன் தான் தெரியவந்தது. பரவாயில்லை கதைக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருந்ததாக எண்ணினேன். அந்த மனிதருக்கு அக்கிராமத்தில் சுத்துப்பட்டு இடங்களில் இருக்கும் மதிப்பைப் பார்க்க வேண்டும்...அசாத்தியம். மிகவும் நல்ல மனிதர். பல விஷன்ஸ் உள்ளவர்.

   பாண்டிச்சேரியிலிருந்து திண்டி வனம் செல்லும் ரோட்டில் ஜிப்மர் தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் ஒரு பெரிய ஆஞ்சனேயர் கோயில் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அக்கோயிலை நிர்வகிக்கும் ட்ரஸ்டும் இவர்தான்...

   யாரேனும் உண்மையான விருப்பத்துடன் இருப்பவரை அறிந்தால் சொல்லலாம் எனக்கும்...

   நன்றி கில்லர்ஜி

   கீதா

   நீக்கு
  3. ராமகிருஷ்ணன் அல்லது கிருஷ்ணன் என்றொவர் பற்றி கூட கேள்விப்பட்டிருக்கிறேன் .நாகர்கோவிலில் இப்படி ட்ரஸ்ட் வைத்திருக்கிறார்னு 

   நீக்கு
  4. வாங்க ஏஞ்சல் வாங்க! உங்களைப் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது...

   ஓ நாகர்கோவிலிலா?!! அட புதிய தகவல். யாரென்று அறியப் பார்க்கிறேன்...

   மிக்க நன்றி ஏஞ்சல் தகவலுக்கு

   கீதா

   நீக்கு
  5. ஏஞ்சல் சொல்வது பழனிக்கருகே ஆய்க்குடியில் உள்ள திரு ராமகிருஷ்ணன் அவர்களைப் பற்றியோ என நினைக்கிறேன். "அமர் சேவா சங்கம்" எனப் பல்லாண்டுகளாக நடத்தி வருகிறார். ஜனாதிபதி பரிசெல்லாம் கிடைத்துள்ளது. இப்போது இருக்காரா என்பது தெரியவில்லை.

   நீக்கு
 17. வாய்க்கால் சலசலன்னு தெளிவா ஓடற மாதிரியே கதையும் சில்லுனு குளுமையா தெளிவா சென்றது .ரொம்ப நாள் கழிச்சி கீதாவின் கதை .உமாவின் நினைவுகள் எங்களையும் கிராமத்துக்கு கூட்டிட்டு போன உணர்வு .தண்ணீர்ப்பாம்பும் வளை நந்தியுகளும் யோசிப்பதையும் எழுத கீதாவுக்கே சாத்தியம் :)//ஏவ்ட்டி //நாரோல் :) 
  ///நான் நிலத்தை நிலமகளாத்தான் பார்க்கறேன். அதுதான் எனக்குத் தெய்வம். அதைக் கட்டிடமாக்க மாட்டேன். எனக்கு நிறையக் கனவுகள், லட்சியங்கள் இருக்கு.//
  ஹ்ம்ம்ம் இப்படி எல்லாரும் நினைச்சா நாடும் வீடும் நல்லாயிருக்கும் 
  அதென்னெமோ தெரில கீதா எழுதற கதையில் ஒரு காரெக்டர் எப்படியும் கீதாவா தோணிடும் எனக்கு இதில் உமா கீதாவா தோணினார் .பாட்டி உடனான அன்பு பரிமாறல் உரையாடல் எல்லாம் கீதா போலிருந்தது .
  வாழ்த்துக்கள் கீதா ,கையை பத்திரமா பார்த்துக்கோங்க .டேக் கேர் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீர்ப்பாம்பும் வளை நந்தியுகளும் யோசிப்பதையும் எழுத கீதாவுக்கே சாத்தியம் :)//

   ஹா ஹா ஹா ஏஞ்சல் நன்றி நன்றி!! (நீங்களும் தான் இதுங்க எல்லாம் என்ன பேசும் நு எழுதுவீங்களே...ஒரு உதாரணம் ஆடு மேய்க்கப் போன போது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்க இரட்சகி யாச்சே!! ஏஞ்சல் உங்கள் பேருக்கு ஏற்றாற் போல!! அதைவிடவா??!!

   /ஏவ்ட்டி //நாரோல் :) // ஹா ஹா ஹா ஹா அதே அதே.....மனசுக்குள்ள இன்னமும் நிறைய இருக்கு....நிறைய ஊர் பாஷை எழுதணும்னு இருக்கு...முடியுதானு பார்ப்போம்..

   ம்ம் ஏஞ்சல் அதானே நிலத்தை மதித்தால் எத்தனையோ நன்மைகள் நடக்கும்...நாம் நினைப்பது ப்ராக்ட்டிக்கலா இல்லைனாலும்...அட்லீஸ்ட் நினைச்சு சந்தோஷப்படுவோம்..!!!!!

   //அதென்னெமோ தெரில கீதா எழுதற கதையில் ஒரு காரெக்டர் எப்படியும் கீதாவா தோணிடும் எனக்கு இதில் உமா கீதாவா தோணினார் .பாட்டி உடனான அன்பு பரிமாறல் உரையாடல் எல்லாம் கீதா போலிருந்தது .//

   ஹா ஹா ஹா ஹா....அதென்னமோ எப்படியோ ஏதோ ஒரு வரியிலேனும் அல்லது ஒரு வாசகத்திலும் அது தெரிஞ்சுடும் போல....

   வேறு யாரோவும் சொன்னாங்க ஏஞ்சல், கதைகளில் பெரும்பாலும் அந்த ஆசிரியரின் எண்ணங்கள் ஏதேனும் வடிவத்தில் திரைமறைவிலுமேனும் இருந்துவிடும் என்று....நானும் அதைத் தவிர்த்து அதிலிருந்து வெளி வந்து எழுத நினைக்கிறேன்...பார்ப்போம்....மனதில் கல்லூரிக் காலத்தில் தோன்றி ஒரு சிறு எண்ணம்...தான் கதையும் கரு...

   கையைப் பத்திரமாகப் பார்த்துக்கறேன் ஏஞ்சல். அதனாலதான் இங்கும் கேப் விட்டு விட்டுத்தான் வருகிறேன்...வேறு தளமும் போக முடியவில்லை...

   மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கும், அக்கறைக்கும்...

   கீதா

   நீக்கு
 18. வயல் நிலங்களை தங்க வைத்துக்கொள்வது இக்காலத்தில் எவ்வளவு சிரமமானது. இவற்றை எல்லாம்தாண்டி மனதுக்கு இதமான ஒரு கதை.வாழ்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மாதேவி கஷ்டம்தான் இருந்தாலும் கனவு காண்போமே...அது சுகம் தானே!!

   நெல்லை சொல்லியிருப்பது போல் கதையிலேனும்.....

   மிக்க நன்றி மாதேவி கருத்திற்கும் வாழ்த்திற்கும்

   கீதா

   நீக்கு
 19. இளவயதில் தோன்றும் எண்ணங்களுக்கு எழுத்தே வடிகால் என்சிறுவயது அபிலாக்ஷைகளை நினைவில் நீ என்னும் நாவலாக எழுதிஇருந்தேன் நல்ல சப்ஜெக்ட் ஆனால் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் கதைக்களத்துக்கு மட்டுமே பொருந்தும் போலிருக்கிறது

  பதிலளிநீக்கு
 20. மிகவும் அருமையான கதை அக்கா...
  கதை ரொம்ப நீளம்...
  குறுநாவல் ஆக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னறி குமார் உங்கள் கருத்தை நீங்க ஒன் டு ஒன்னிலும் சொல்லிட்டீங்களே...குறித்துக் கொண்டேன்...

   கீதா

   நீக்கு
 21. ஆஆஆஆவ்வ்வ்வ் இது மூன்று தலைமுறைக் கதையாய்க்கிடக்கே:)...
  ரெண்டு பாட்டிகள் வந்து விட்டனர்:).... நல்லவேளை மூன்றாவது பாட்டி வரமுன் திரை போடப்பட்டு விட்டது ஹா ஹா ஹா... அழகாக உணர்வுகளோடு எழுதப்பட்டிருக்குது கதை கீதா வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா மூன்றாவது பாட்டி ஆர்ச்சியின் ஆச்சியை நுழைக்கலாம் என்று இருந்தேன்....கதை இதுவே நீளம் ஹா ஹா ஹா அதனால் இந்த ஆச்சி தப்பித்தான்..

   மிக்க நன்றி அதிரா...

   கீதா

   நீக்கு
 22. //ஆங்கிலப் பேரன் பேத்திகளுக்கு ///
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).. இவர்கள் வெள்ளைக்காரப் பாட்டிக்குப் பிறந்தார்களோ:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா இல்லை ஆங்கிலம் பேசும் பேரக் குட்டிகள்!!!!!!!!!!!!!!!! அதிரா

   கீதா

   நீக்கு
 23. இப்போதான் படிக்க முடிஞ்ச்து கீதா:)..
  திங்கள் செவ்வாயை இனிமேல் வெள்ளி சனிக்கு மாத்தினால் கொஞ்சமாவது கும்மி அடிக்கலாம்... இது முடியல்ல:)...
  மொபைலில் அதிகம் ஸ்பீட் எடுத்தால் ஸ்பெல்லிங்கூஊஊ மிசுரேக்காகிடுதே கர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மொபைலில் அதிகம் ஸ்பீட் எடுத்தால் ஸ்பெல்லிங்கூஊஊ மிசுரேக்காகிடுதே// - மொபைல்ல ஸ்பீட் எடுத்தால் மட்டுமா? எதை எழுதினாலும் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரவைக்கறதுதானே உங்க ஸ்டைல். நல்லவேளை உங்க கருத்தைப் படிச்சுட்டு மயக்கமான என்னை ஆறிய தண்ணியை நல்லா சுடவைச்சு மூஞ்சீல விட்டதுனால தெளிஞ்சு எழுந்து இதை எழுதறேன்.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:).. நெல்லைத்தமிழனுக்காகவே கம்பு குழைசாதம் செய்யப் போறேன் ந்ன்ன்ன்ன்

   நீக்கு
  3. அதிரா மிக்க ந்னறி ஆமாம் எனக்கும் அதிகம் அடிக்க முடியலே..இதோ இம்புட்டு அடிச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ...இன்று வேறு புதன்..காந்திஜெயந்தி லீவு வேறு....இன்று இனி எவ்வளவு வர முடியும் நு தெரியலை...அதான் இப்போ சட்டுபுட்டுனு...

   கீதா

   நீக்கு
  4. கவரிமான் பரம்பரை///ஆஹா அப்ப புது பதிவா...பார்க்கணுமே போட்டுருக்கீங்களோ அதிரா

   கீதா

   நீக்கு
  5. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நெல்லையைப் பழிவாங்கும் படலத்தில் நாங்களுமாஆஆஆஆஆஅ...ஓ அதுக்காகத்தான் கவரிமான் அவதாரமா?!!!!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 24. தி/கீதாவின் கனவுகள் அருமை. எல்லோருக்குமே இப்படியான கனவுகள் உண்டு. கிராமங்கள் முன்னேறுவதை யாரும் தடுக்க மாட்டார்கள். எல்லா வசதிகளும் கிராமங்களில் நிரம்பி இருந்தால், பள்ளி, மருத்துவமனை உள்பட! நகரத்துக்குக் குடி பெயர்வோர் எண்ணிக்கை குறையும். நகரங்களின் நெரிசல் குறையும். ஆனால் தக்க சாலை வசதி இல்லாமல் இவை எல்லாம் கொண்டு வருவது எப்படி? இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் அக்கம்பக்கம் உள்ள பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட்டால் ஒழிய இது சாத்தியமே இல்லை. அதற்கான தீர்வையும் தி/கீதாவே கொடுப்பார் என எண்ணுகிறேன். ஜெர்மனி பல்வேறு துறைகளிலும் முன்னுக்கு வந்ததுக்கு முக்கியக் காரணமே ஜெர்மனியின் ஒவ்வொரு சின்னக் கிராமமும் அங்குள்ள பெரிய நகரங்களோடு இணைக்கப்பட்டது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா எல்லோரது கனவுகளும் உமாவின் வடிவத்தில் நு வைச்சுக்குவோம் ஹா ஹா ஹா
   இணைப்பு பற்றியே அல்ல கீதாக்கா...கீழே சொல்லிருக்கேன்...

   ஹா ஹா கீதாக்கா தீர்வு எல்லாம் சொல்லும் அளவு புத்திசாலியோ தீர்க்கதரிசியோ இல்லையே நான்...இப்படி சும்மானாலும் கற்பனைக் கதைகள் எழுதுவதுதான் அதுவும் எழுதும் ஒரு திறனும் இல்லாதவள் நும் சொல்லிக்கலாம் கீதாக்கா...மீ எல்லாம் பாவம்கா...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 25. நான் பார்த்தவரையிலும் இப்போதைய கிராமங்களின் இளைஞர்கள், இளம்பெண்களுக்குப் படித்து முடித்துவிட்டு நகரத்துக்கு, அதுவும் சென்னைக்குக் குடி பெயர வேண்டும் என்பதே! நான் கொஞ்சம் நெருக்கமான சிலரிடம் கிராமங்களை விட்டுச் செல்லாதீர்கள் எனச் சொல்லி விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். நீ போய் இருப்பியா கிராமத்தில் என என்னைக் கடுமையாகக் கேட்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா அதே..

   எங்கள் குடும்பத்தில் ஒரு குடும்பத்தினர் கிராமத்தில் தங்கள் வீட்டை நிர்வகித்து சில நல்லது செய்துவருகிறார்கள் அடுத்த தலைமுறையினரும் இறங்கியாச்சு அதில்..

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 26. நாளை காந்தி ஜெயந்தி.

  இருந்தாலும் காந்தீய பொருளாதாரம், சர்வோதைய சிந்தனைகள் எல்லாம் சின்னாப்பின்னமாகி எவ்வளவு காலமாயிற்று?.. பொதுத்துறை சிதைந்து தனியார் செல்வங்களாக மாறிப் போகும் காலம். தேசத்தின் இதயமான ரயில்வே துறை சார்ந்த சில பகுதிகள் தனியார் வசம் போகப் போவதாக சமீபத்திய செய்தி.

  இந்த நேரத்தில் இந்தக் கதை. நல்ல மனசின் நல்ல சிந்தனை. கிராமப் பொருளாதாரத்தின் மீது கட்டப்படும் தேசப் பொருளாதாரம் என்பது
  காலம் தப்பிய கனவுகளாய் போய் விட்டனவே, கீதா ரெங்கன்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கடைசிவரிகளை டிட்டோ செய்கிறேன் ஜிவி அண்ணா...

   மிக்க நன்றி கருத்திற்கு.

   கீதா

   நீக்கு
 27. அதோடு கிராமத்தில் இப்போதெல்லாம் வயல் வேலைகள் செய்யவோ, தோட்டங்களைப் பராமரிக்கவோ, கிராமத்துப் பள்ளி, மருத்துவ மனைகளில் வேலை செய்யவோ யாரும் சந்தோஷமாக முன்வருவதில்லை என்பதே உண்மை! இது தான் யதார்த்தம்! முதலில் இந்த அடிப்படை மனப்பான்மையை மக்களிடம் மாற்ற வேண்டும். நகரங்களில் சௌகரியங்களும், வசதிகளும் கொட்டிக் கிடப்பதைப் போலவும் தாங்கள் கிராமங்களில் கஷ்டப்படுவதாயும் பெரும்பாலான கிராமத்து மக்கள் உணர்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கீதாக்கா....மக்களின் மனதின் அடிப்படை எண்ணம் மாற வேண்டும் அதற்கு அவர்களுக்கும் ஒரு உந்து சக்தி வேண்டுமே.

   சில கிராமத்துச் செய்திகள் மக்களே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதும் யாரேனும் ஒருவர் அதை நிர்வகிப்பதும் இங்கு சனி அன்று வெளியாகிறதே...நான் கூட என் உறவினர் ஒருவரைச் சொல்லியிருக்கிறேனே...அழகான கிராமம் அக்கா அது. செம்மேடு.

   மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 28. இந்த மாதிரி இலட்சியக் கனவுகளை ஆதார சுருதியாய் கொண்ட கதைகள் இந்தப் பக்கம் - அந்தப் பக்கம் கவனம் கொள்ளாது அந்த இலட்சிய பூர்த்தியை நோக்கி வேகமெடுத்து விரைவதையே இயல்பாகக் கொண்டிருக்கும் தான்.
  மனத்தில் தேக்கி வைத்திருக்கும் கதைக்கரு அணையின் நீர்போக்கு கதவுகள் திறக்கப்பட்ட ஜோரில் பீறிட்டு வார்த்தைகளாய், வரிகளாய்
  வேகமெடுப்பது இப்படியான முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாட்டு
  இயல்பு தான்.

  அதனால் தான் இப்படியான கதைகள், நினைப்பதைச் சொல்வதற்காக கதை ரூபத்தை கொள்கின்றனவே தவிர வழக்கமான ஒரு கதைக்கான
  போக்குகளைத் தன்னுள் கொண்டிருப்பதில்லை. உயரிய சிந்தனைகளின் வெளிப்பாடு என்பதே முக்கியமாகிப் போவதால் ஒரு சிறுகதைக்கான வேறெந்த அளவுகோல்களையும் தூக்கிக் கொண்டு இந்த மாதிரி கதைகளாய் அணுகக் கூடாது.

  இதெல்லாம் பற்றி போட்டிக்கதை தேர்வாளர்களுக்கு 'அ-ஆ'கூடத் தெரியாதாகையால் கிஞ்சித்தும் அது பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.

  அதுவும் நல்ல பத்திரிகையைத் தேர்ந்தெடுத்தீர்கள், பாருங்கள்! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜிவி அண்ணா விரிவான அழகான கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 29. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை 'tiller of soil' என்று சொல்கிறோமே அவர்களுக்கு எதுவும் போய்ச் சேரவில்லை. தஞ்சைப் பகுதியில் கூலி விவசாயிகள் என்று இவர்களை அழைப்பார்கள்.

  ரஷ்ய வழி கூட்டுப்பண்ணை விவசாயமும் நம் நாட்டு மனப்போக்குக்கு ஒத்து வராததும் நல்லதாகப் போயிற்று. அப்படி ஏதாவது விபத்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்திலே ஏற்பட்டிருந்தாலும், அத்தனை நிலங்களையும் மொத்தமாக வளைத்துப் போட அரசியல்வாதிகளுக்கும் வெகு சுளுவாகப் போயிருக்கும். நல்ல வேளை, தப்பியது.

  கிராமப்புற விவசாயம் போன போக்கைப் பற்றி நிறையச் சொல்லலாம். இருந்தாலும் இந்த இடத்தில் அதையெல்லாம் சொல்வது பொருத்தமாக இருக்காது.

  கதைக்காகத் தான் என்றாலும் 'அத்தனையும் கிராம மக்களுக்கு' என்ற கான்சப்ட்' கற்பனையாக இருக்கிறதே தவிர நடமுறை சூழலுக்கு ஒத்து வருகிற மாதிரி வலுவாக உங்கள் சிந்தனையில் உருக்கொண்டு வடிவு கொள்ளவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

  இந்த விஷயத்தைத் தொட்டு எழுத வேண்டும் என்ற ஒரு urge உங்கள் மனசில் ஏற்பட்டதே அதுவே பெரிய விஷயம். பாராட்டுக்கள், கீதா ரெங்கன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜீவி அண்ணா. கொஞ்சம் பாசிட்டிவ் செய்திகள் கொடுத்த உந்துதல் மனதில் இருந்த எண்ணத்திற்கு கூடவே பாட்டி பேத்தி உறவு அதைச் சுற்றி என்று வந்த கதை...

   நானே நெல்லைக்குச் சொன்ன கருத்தில் சொல்லியிருக்கிறேன்...நான் எழுதும் போதே இது ஒரு ஐடியலிஸ்டிக் கருத்தாகத்தான் தோன்றியது என்று...இருந்தாலும் கற்பனை சுகம் தானே கதையிலேனும்

   மிக்க நன்றி ஜீ வி அண்ணா

   கீதா

   நீக்கு
 30. பெருகி வரும் மக்கள் தொகைக்கும், தேவைக்கும் ஏற்ப நகரங்கள் தான் மக்களுக்கு வசதியாகத் தோன்றுகிறது. கிராமங்களிலும் இத்தகைய வசதிகள் இருந்தால் மக்கள் இடம்பெயர மாட்டார்கள் என்பதும் உண்மை. ஆனால் அதை எப்படிக் கொண்டு வருவது? கிராமங்களை முக்கியச் சாலைகளோடு இணைத்துக் கொண்டு பின்னரே இத்தகைய பெரிய மருத்துவமனைகள், பள்ளிகள், மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைகள் எல்லாம் வரமுடியும். கிராமங்களில் விளையும் பயிர்களை மட்டுமில்லாமல் பாலில் இருந்து மற்ற எல்லாமும் நகரங்களுக்குப் போய்ச் சேர நல்ல சாலைகள் தேவை இல்லையா? சாலை வசதிகளை மேம்படுத்தாமல் அடிப்படை வசதிகளைக் கொடுக்காமல் என்ன செய்ய முடியும்? இங்கிருந்து எடுத்துச் செல்லும் வழி நன்றாக இருந்தால் தான் வண்டிகள் வேகமாகப் பயணிக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் உள்ளவர்களில் அநேகமாக அனைவருமே இரு சக்கர வாகங்களை வைத்திருக்கின்றனர். நல்ல சாலை இருந்தால் தானே அவை நன்றாக ஓடும். அதை வாங்கியதன் பலனைப் பெற முடியும்! கிராமங்களை முன்னேற்றுகிறேன் என இந்தக் கதையில் சொல்லி இருக்கிறாப்போல் அனைத்தும் வந்தால் நல்ல சாலை வசதிகள் இல்லாமல் இவற்றால் அந்தக் கிராமத்து மக்கள் என்ன பயன்பெறுவார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கீதாக்கா சாலைகள் வேண்டும். வேண்டாம்னு அதைப் பற்றிச் சொல்லவே இல்லையே. கிராமத்தை முக்கியச் சாலைகளோடு இணைக்க ஒரு சாலை போதுமே அக்கா. பல கிராமங்களில் நான் படிக்கும் போதே மெயின் ரோடை இணைக்க வெவேறு பக்கங்களில் சாலைகள் இருந்தன.

   ஆனால் ஊருக்கு உள்ளே வரும் பெரிய 4 வழிச் சாலை பற்றிச் சொல்லி அந்த ஆதங்கம் தான் அன்றி சாலைகளே கூடாது என்ற கருத்தே அல்ல கீதாக்கா. கதையிலேயே உமா மருத்தவமனைக்கு சாலை இருந்ததால்தானே செல்ல முடிந்தது.

   மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

   நீக்கு
 31. எனக்குத் தெரிந்து திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் அரிய வகை வெள்ளைக்கத்திரிக்காய், இன்னும் சில காய், கனி வகைகள் அங்கேயே விற்று விடுகின்றன. வெளியே வருவதில்லை. ஆனால் அங்கே எல்லாக் கிராமங்களிலும் சாலை வசதிகள் ஓரளவுக்கு மேம்பட்டே இருக்கின்றன. ஆகவே கிராமங்களை விட்டு நகருக்குள்ளேயும் நகருக்குச் செல்லும் பிரதான சாலைகளிலும் சந்தை போட்டுக் காய்களை விற்க முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா திருநெல்வேலியில் மற்றும் எங்கள் ஊர் சைடுகளிலும் நான் படித்த காலத்தில்யேயே மெயின் சாலைக்கு ரோடுகள் நன்றாக இருந்தன. தற்போது எங்கள் கிராமத்தின் உள்ளேயே குறுக்கேயே அதாவது ஊரைச் சுற்றி அழகான மெயின் ரோடு உள்ளது ஆனால் இப்போது ஊருக்குக் குறுக்கே வருகிறது. எங்கள் கிராமத்தில் தமிழ்நாட்டு விவசாய பல்கலையின் மண் பரிசோதனை நிலையமும் இருக்கிறது. அப்படி டிபிஎம் 123 என்ற நெல்வகையும் நான் கல்லூரியில் படிக்கும் போதே (பொருளாதாரத்தில் விவசாயப் பொருளாதாரமும் உண்டு..எனவே அந்த நிலையத்தில் அப்போது பணி புரிந்த என் விவசாயப் பொருளாதாரம் பாடம் நடத்திய மிஸ்ஸின் கணவர்..) கண்டுபிடித்து பயன்படுத்தினர்...

   அப்படி அறிந்து கொண்ட விஷயங்கள் தான்..

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
  2. கீதா அக்கா நானே ஐடியலிஸ்டிக் என்று தோன்றினத்ய் என்று நெல்லைக்குச் சொன்ன கருத்தில் சொல்லியிருக்கிறேன்... எல்லாக் கருத்துக்களையும் பார்க்கும் போது நான் இன்னும் இக்கதையை மேம்படுத்தி சொல்ல வந்ததை இன்னும் சற்றுத் தெளிவாக எழுதியிருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது....

   கீதா

   நீக்கு
 32. வித்தியாசமான சிந்தனையும் அருமையான கதை...
  சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்... மனமார்ந்த பாராட்டுகள்..

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 33. கீதாரெங்கன், ஒறே கதையில் அனைத்து நல்ல விஷ்யங்களையும் சொல்லி விட்டீர்கள்.
  இன்று காந்தி ஜெயந்தி அவர் விரும்பிய திட்டங்கள்.
  அடுத்த தலைமுறையும் கிராமத்தில் வாழ விரும்புவது மனதுக்கு இதம். சாத்திய படுதோ இல்லையோ கதையில் கொண்டு வந்தது மகிழ்ச்சி.
  விஜய் தொலைக்காட்சியில் தெலுங்கு சினிமாவை தமிழ்படுத்திய படம் பார்த்தேன். அதில்
  ஒரு பெண் வெளி நாட்டில் வாழ பிடிக்காமலும், தன் காதலை இழக்க வேண்டி இருக்குமே என்று கலங்குவதுமாக வரும் கடைசியில் வெளிநாட்டில் வாழும் காதலன் , தன் காதலி விருப்பபடி இந்தியா வந்து விடுவார், அவர் மருத்துவர்.
  அவள் வயலை பார்த்துக் கொள்ளலாம், அவர் கிராமத்து சிறந்த மருத்துவராக இருக்கலாம் என்று முடிவுடன் கதை நிறைவு பெறும்.


  உறவினர் வருகை ( கொலு பார்க்க வந்தனர்) பின் அவர்களுடன் தங்கை வீட்டுக் கொலு பார்க்க போனோம் வர இரவு ஆகி விட்டது. இணையம் பக்கம் வர முடியவில்லை.
  கதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
 34. எட்டு வழிச்சாலையிலிருந்து கீழடி அகழ்வாராய்ச்சி வரை எல்லாம் அரசியலாகியிருக்கும் கால கட்டம் இது. எதையும் தங்கள் நலனுக்காக திரிந்து உபயோகிக்க தேர்ந்து இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம்.

  ஆனால் அதெல்லாம் பற்றி வெள்ளந்தியாக இருக்கக்கூடாது என்பதற்காக சொல்ல வந்தேன்.

  பதிலளிநீக்கு
 35. நல்லதொரு கதை. பாராட்டுகள் கீதாஜி! பச்சைப் பசேலென வயல்வெளி - பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான். அதில் எவ்வளவு உழைப்பு தேவை என்பதை நினைக்கும்போதே பிரமிப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!