செவ்வாய், 22 அக்டோபர், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : விளக்கு வைச்ச நேரத்திலே ... - துரை செல்வராஜூ


விளக்கு வைச்ச நேரத்திலே..
=========================

துரை செல்வராஜூ 

======================

வேலியோரமாகக் கட்டிக் கிடந்த ஆட்டுக் குட்டிகள்
சும்மா இருக்க மாட்டாமல் ஒன்றோடொன்று
முட்டி மோதிக் கொண்டதில் கட்டுக் கயிறுகள்
கழுத்தில் இறுகி முறுக்கிக் கொள்ள -

" ம்ம்மே... ம்மேஏஏ!.. " - என்று பரிதாபமாக சத்தம் போட்டன..

சத்தம் கேட்டு ஓடிவந்த சகுந்தலா -

" ஏண்டா கிறுக்கனுங்களா.. சும்மா இருக்க மாட்டீங்களா?... "

என்றவாறு ஆளுக்கொரு அறை பளார்... பளார்.. எனக் கொடுத்தாள்...
ஒவ்வொன்றையும் பிடித்துத் தனித்தனியாகக் கட்டிப் போட்டாள்...

அறை வாங்கிக் கொண்ட ஆட்டுக் குட்டிகள்
அவளைப் பார்த்தவாறே மேலும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன...

அதற்கு -
" இன்னும் கொஞ்ச நேரம் அவிழ்த்து விடேன்!... " - என்று அர்த்தம்...

அதுகளின் மொழி அவளுக்கும் தெரியும்...

" சும்மாக் கெடங்க... பொழுது போற நேரம்.. இனிமே என்ன மேய்ச்சல் வேண்டிக்
கிடக்கு!.. " -  என்றவாறு அங்கிருந்து நகர்ந்த போது -

ஒழுங்கையில் சைக்கிள் மணி சத்தம் கேட்டது...

ஒழுங்கை என்பது புழுதி படிந்த மாட்டு வண்டித் தடம்...

" இந்த நேரத்தில் யாரது?... "

நிமிர்ந்து பார்த்தவள் திடுக்கிட்டாள்...

கூடப் படிப்பவன் - தங்கராசு..

நாலு மைலுக்கு அந்தப் பக்கமிருந்து வருகிறான்... எதற்காக இருக்கும்?...

" வா... வா... தங்கராசு... என்ன இவ்வளவு தூரம்?...
அதுவும் வெளக்கு வைக்கிற நேரத்தில!..
நாளைக்கு பள்ளிக் கூடம் இல்லை..ன்னு சொல்லிட்டாங்களா!... "

"இல்லையில்லை... இன்னைக்கு எங்க வயக்காட்டுல பயறு தட்டுனது...
அப்பா தான் சொல்லி விட்டாங்க... வாத்யாருக்கு மூனு மரக்கா பயறும்
மூனு மரக்கா உளுந்தும் கொடுத்து விட்டு வாப்பா!... ந்னு..
அதான் எடுத்துக்கிட்டு வந்தேன்... "

" வாத்தியார் ஐயா வீட்டுல இருந்தாங்களா?... "

" ம்ம்.. ரொம்ப சந்தோசம் அவங்களுக்கு!... "

உள்ளூர் வாத்தியார் என்றால்
வயல்...வாய்க்கால்... தோப்பு துரவு.... ன்னு
வசதி எதுக்கும் பஞ்சம் இருக்காது..

வெளியூர்..ல இருந்து கிராமத்துக்கு
வர்றவங்களுக்கு கொஞ்சம் பிரச்னை தான்!...

நல்ல வீடு கிடைக்கிறதுல இருந்து...
அந்த வீட்டுல கரண்டு கம்பி இருக்குதா...
அந்த வீடு சாலை ஓரமா இருக்குதா..
பக்கத்திலயே மளிகைக் கடை இருக்குதா...ன்னு பார்க்கிறது வரைக்கும்...

கிராமத்து மளிகைக் கடை .. ந்னா
உப்பு , புளி, மொளகா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ...
இதுங்களோட கொஞ்சம் பல சரக்கு சாமான்...
பருத்திக்கொட்டை, மாட்டுத் தீவனம், சீம எண்ணெய்...
பசுமாட்டுக் கயிறு, கன்னுக்குட்டிக் கயிறு,
மூக்கணைக் கயிறு, கிணத்துக் கயிறு..
அவசரத்துக்கு தலைவலி மருந்து... ன்னு - அவ்வளவு தான்...

கிராமத்து ஜனங்களுக்கு புளி கூட ரெண்டாம் பட்சம் தான்...

வீட்டுக்கு வீடு கொல்லைப் பக்கம் ரெண்டு புளிய மரமாவது நிக்கும்...
வருசத்துக்கு அதுல இருந்து விழுற புளியம்பழமே போதும்....

அரிசி வியாபாரம்...ங்கறது கிராமத்துக் கடைகள்....ல
பெரும்பாலும் இருக்காது....

விடியக் காலம் வெள்ளி முளைச்சு வர்றப்ப
வீட்டிலயே நெல்லை அவிச்சு பதம் பார்த்து எறக்கி
ஓலைப் பாயை விரிச்சு அதில கொட்டிக் காய வைச்சி
நாடார் ரைஸ் மில்லுல கொடுத்து அரைச்சு எடுத்துட்டா
வேற கவலை ஒன்னும் இல்லை...

இப்போ அரிசியில தவிடு புடைக்கிறதுக்கும்
கல்லு மண்ணு இல்லாம சலிக்கிறதுக்கும்
புதுசா மெஷின் வந்து இருக்குதாம்!...

குறுணையும் உமியும் தனித்தனியா வந்துடுதாம்...
ஜனங்களுக்கு ஒரே ஆச்சர்யம்!...

நல்லெண்ணெய்யா!.. தேங்கா எண்ணெய்யா!..
அண்ணாமலைச் செட்டியார் கிட்ட சொல்லிட்டாப் போதும்...
சாயங்காலம் வீட்டுக்கு எண்ணெய்க் குடம் வந்து நிக்கும்...

விருந்தாளி வேத்தாளி..ன்னு யாரும் வந்துட்டா
கொல்லை...ல மேயுற கோழி - குண்டு சட்டிக்கு வந்துடும்!...

காலை..ல செல்லாயி கிட்டயோ
அவ புருசன்கிட்டயோ சொன்னாப் போதும்..
மத்தியானக் கொழம்புக்கு கெண்டை கெளுத்தி..ன்னு
துள்ளிக்கிட்டு வந்துடும்...

அந்த ஏழைச் சனங்க அதுக்கெல்லாம் காசு கேக்க மாட்டாங்க...
டூரிங்..ல எம்ஜார் படம் வர்றப்ப நாலணா கொடுத்தா போதும்...

எம்ஜார் நம்பியார் சண்டைக்கு ஒன்றையணா..
ஐயரு கடை ஊத்தாப்பத்துக்கு ரெண்டணா...
மிச்சத்துக்கு வெத்தலை பாக்கு!...

அது தான் சொர்க்கம்!...

வெட்டிச் செலவுகளே இல்லாதிருந்த காலம் அது!...

வெளியூர்ல இருந்து இந்த கிராமத்துக்கு வந்து இருக்கிறவங்க -
அடுத்த வீட்டுப் பசங்களைப் பார்த்து -

" தம்பி.. ரெண்டு தேங்கா வேணுமே...
எங்கே கிடைக்கும்!... " - ன்னு கேட்டால் போதும்..

பத்து நிமிசத்தில் நாலு தேங்காயோட வந்து நிப்பானுங்க...
பக்குவமா உரிச்சு மட்டை தனியா தேங்கா தனியா கொடுத்துடுவானுங்க..

" இந்தத் தேங்கா நாலும் எவ்வளவுடா தம்பி?... " - ன்னு
கையில காசை வெச்சிக்கிட்டு கணக்கு கேட்டால்,

" சார்.. தேங்காய்க்கெல்லாமா கணக்கு பார்க்கிறது?...
அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க சார்!... "  - என்பார்கள்...

அப்படித்தான் வாத்தியார் வீட்டுக்கு பயறும் உளுந்தும் வந்திருக்கின்றன...

அவர் மாயவரத்துக்காரர்.. அங்கே எல்லா வசதியும் இருக்கின்றன...
இந்த கிராமத்தின் உயர்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறார்...

இருந்தாலும் அவருக்கு ஏதாவது கொடுக்காவிட்டால்
ஜனங்களுக்குத் தூக்கம் வராது...

" வா.. தங்கராசு... உக்காரு... " - என்றபடி
கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டாள் - சகுந்தலா...

 " இருக்கட்டும்!... " - என்றபடி அந்தக் கட்டிலில் அமர்ந்தான் தங்கராசு...

" இவ்வளவு தூரம் வந்து என்னயப் பார்க்கணும் ..ன்னு
உனக்கு நெனப்பு வந்ததே.. அந்த மட்டுக்கும் சந்தோசம் தான்...
இரு.. தங்கராசு... கொஞ்சம் வரகாப்பி போட்டு வர்றேன்.... "

" இந்தா... இந்தா... சகுந்தலா.. அதெல்லாம் வேணாம்!... "

" நான் நல்லா காப்பி போடுவேன் தங்கராசு!... " - சகுந்தலா சிரித்தாள்...

" வாத்யார் வீட்டுல... காப்பி பணியாரம் எல்லாம் கொடுத்தாங்களா..
வயிறு நெறைஞ்சு இருக்கு... "

" அது இருக்கட்டும்.. எங்க வீட்டுக்கு வந்துட்டு
கை நனைக்காம போறதா?... அப்பா வந்து கேட்டா என்ன சொல்றது?... "

" அப்பா!.. எங்க அவங்க?...
வீட்ல இல்லையா?... அப்போ நான் கிளம்பறேன்!... "

" அதனால என்ன தங்கராசு.. நீ இரு...
மேல வீட்டுத் தேங்காயெல்லாம் பார வண்டியில ஏத்திக்கிட்டு
கும்மோணம் பாலக்கரை சந்தைக்குப் போயிருக்காங்க....
வர்றதுக்கு நாளைக்கு மத்தியானம் ஆகும்!... "

" நீ தனியாவா இருக்கே!.. ராத்திரிக்குப் பயமா இருக்காது?...

" பயமா?.. எனக்கா?... நல்ல கதையக் கேட்டே போ!...
கருக்கு அருவா கையோட இருக்கு!.. "

சகுந்தலா சிரித்தாள்...
மாலை வெயிலில் முத்துப் பற்கள் மினுமினுத்தன...

" இரு தங்கராசு.. வந்துடறேன்... " - என்றபடி வீட்டினுள் சென்றாள்....

ஐந்து நிமிடங்களில்
தலை வாசல் மாடங்களில் நல்ல விளக்குகளை ஏற்றி வைத்து விட்டு
திண்ணையின் முன்பாக லாந்தர் விளக்கை கொண்டு வந்து வைத்தாள்...

வீட்டுக்குள்ளிருந்து ஊதுபத்தியின் வாசம் வெளி வந்தது...

கையில் எவர் சில்வர் குவளையுடன்
வெளிப்பட்ட சகுந்தலாவின் நெற்றியில் பளீரெனத் திருநீறு... குங்குமம்...

" ஒருவாய் வரகாப்பி குடி தங்கராசு!.. " - அவன் முன் நீட்டினாள்...

மறுப்பேதும் சொல்லாமல்
தங்கராசு கையை நீட்டி வாங்கியபோது
விரல் நுனிகள் உரசிக் கொண்டு உயிர்த்தன...

" அது ஆரு.. சகுந்தலா!?... "

அடுத்திருந்த கொல்லையிலிருந்து நீண்ட விசாரணையுடன் ஆத்தா...

" வாங்க ஆத்தா... எங்கூட படிக்கிற தங்கராசு...
வாத்தியார் வீட்டுக்கு உளுந்து பயறு கொண்டாந்தாங்களாம்... "

" எந்த ஊருப்பா நீயி?... "

" நான் தென்னங்குடி வடகரை... "

" என்னா வர்ணம்?... "

கேட்டதற்குப் பதிலைச் சொன்னான்...

" அப்படியா?... மேல்கரையா.. கீழ்கரையா?.. " - என்ற ஆத்தா
" சகுந்தலா!... அந்த ஓலைப் பாயை எடுத்து விரி!... " - என்றாள்..

" நாங்க புங்கங்குடி வகையறா!... "  - என்றான் தங்கராசு...

திண்ணையின் ஓரமாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த
ஈச்சம் பாயை எடுத்து விரித்துப் போட்டாள் சகுந்தலா...

அதில் காலை நீட்டியபடி உட்கார்ந்த ஆத்தா
கையோடு கொண்டு வந்திருந்த பாக்கு உரலில்
வெற்றிலை பாக்கைப் போட்டு இடிக்க ஆரம்பித்தாள்...

சட்டெனக் கட்டிலில் இருந்து இறங்கிய தங்கராசு
தானும் ஓலைப் பாயில் அமர்ந்து கொண்டான்...

" ஏம்பா?.. நீ கட்டில்லய ஒக்காரேன்!... "

" இல்லை..ங்க ஆத்தா.. நீங்க பெரியவங்க!... "

இந்தப் பதில் மிகவும் பிடித்துப் போயிற்று கிழவிக்கு...

" நீ சொன்னியே... ராசா.. புங்கங்குடி வகையறான்னு..
அவங்க ஒரு காலத்துல இந்த ஏழு ஊருக்கும்
நாட்டாமையா இருந்தவங்க... "

" ஊர்ப் பஞ்சாயத்துல
குடிகாரப் பய ஒருத்தன் மரியாதை இல்லாம பேசிட்டான்....னு
அந்த மீசைக்கார சாமி மடு மாறி பாஞ்சுட்டாரு... ஊரே திகைச்சுப்போச்சு... "

" போலீசு எல்லாம் வந்து கோர்ட்டு .. கச்சேரி....ன்னு ஆயிடுச்சு...
அதுக்கப்புறம் அவங்க யாரும் நாட்டாமை பார்க்கலை...
அந்த மாதிரி நீதிமான் ஒருத்தர் கூட இந்தக் காலத்துல இல்லை!... "

" ஆமா.. அந்தச் சம்பவம் எல்லாம் அப்பா சொல்லியிருக்காங்க!... "

" அது இருக்கட்டும்... வெள்ளாமை மாடு கன்னு எல்லாம் எப்படி?.. "

" அதெல்லாம் தாரளமா இருக்கு ஆத்தா... ஒரு குறையும் இல்லை... "

" கூடப் பொறந்ததுங்க எத்தனை?... "

" நானும் என் தங்கச்சியும் தான்... "

" அவளுக்கு எத்தனை வயசு?.. "

" என்ன விட ஒரு வயசு கம்மி... "

" அது சரி!... உனக்கு எத்தனை வயசுடா?... "

" எனக்கு பதினெட்டு ஆகுது?...

" அப்புறம் ஏன் இன்னும் அரை டவுசரப் போட்டுக்கிட்டு இருக்கே!... "

" நீங்க வேற... வேட்டியக் கட்டிக்கிட்டு நின்னா...
பெரிய ஆளாத் தெரியுது... பொண்ணு தர்றேன்.. ந்னு வந்துடுறாங்க!... "

சிரித்தான் தங்கராசு...

" ஏன்? கண்ணாலம் காட்சி ஒன்னும் வேணாமா?... "

" வேணுந்தான்!.. " - ஓர விழியால் சகுந்தலாவைப் பார்த்தான்..

அதைக் கண்டு கொண்ட சகுந்தலாவின் முகம்
மேல் வானச் சிவப்பை வெளிக்காட்டியது...

" தங்கச்சிய ஒருத்தர் கையில பிடிச்சுக் கொடுத்துடணும்!... "

" மாப்பிள்ளை வந்தா கட்டிக் கொடுத்துடுவீங்களா?... "

" நல்ல இடமா வரட்டும்!... "

" செய்முறை என்ன செய்வீங்க?... "

" அஞ்சு ஏக்கர் நஞ்சை.. ரெண்டு ஜோடி உழவு மாடும் பசுவுங் கன்னும்...
பத்து பவுன் நகை...மாப்பிள்ளைக்கு எதிர்மாலை.. பண்ட பாத்திரம்!.. போதாதா!.. "

" இதுவே தாராளம்... பொண்ணுக்கு இவ்வளவு செய்யப் போறே!..
உங் கலியாணத்துக்கு எவ்வளவு எதிர்பார்க்கிறே!?... "

" கூறைப் புடவையோட வந்து...
குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்துனா அதுவே போதும்.. ஆத்தா!.. "

இந்த வார்த்தைகளைக் கேட்டதும்
காதுகளில் தேன் பாய்ந்த மாதிரி இருந்தது - சகுந்தலாவிற்கு...

" கோணக்கரை மாரீ!... தாயில்லாப் புள்ளைக்கு தயவு காட்டடி தாயே!.. "
மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்...

" சரி.. படிச்சுட்டு என்னா பண்ணப் போறே?... " - உரலில் இடிபட்ட
வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் ஆத்தா...

" காலத்துக்கும் அப்பா அம்மா கஷ்டப்பட்டுட்டாங்க..
இனிமே அவங்களை நல்லபடியா பார்த்துக்கணும்...
வெள்ளாமை தான் உயிர் நாடி.. அதை முன்னெடுத்துப் போகணும்... "

" எங்க சகுந்தலா சொல்றா.. மேல டீச்சருக்குப் படிக்கப் போறேன்னு!... "

" ஆத்தா!... நான் அப்படிச் சொன்னாலும்
அப்பா என்ன சொல்றாங்களோ அதுதான்!..."

" கல்யாணம் காட்சி..ன்னு ஆனதும்
வர்ற மாப்பிள்ளையோட சேர்ந்து
காடு கரையத் தான் பார்ப்பேன்!... "

" பேரன் பேத்தி..ன்னு அப்பாரு கையில கொடுத்து
அவரை சந்தோஷமா வெச்சுக்குவேன்!... "

சகுந்தலா பளீரெனச் சொன்னாள்...

சட்டென தங்கராசுவின் கண்கள் கசிந்தன..
விரல் நுனியால் துடைத்துக் கொண்டான்...

" சரி... ஆத்தா.. நான் கெளம்பறேன்... நேரமாகிப் போச்சு!... "
- தங்கராசு புறப்பட்டான்...

" இருட்டுக்குள்ளே எப்படி ராசா போவே...
ஆத்துக் கரையில நரியெல்லாம் கெடக்குதே!...
கை லைட்டு ஏதும் கொண்டாந்திருக்கியா?... "

" தங்கராசு பேரக் கேட்டாலே போதும்..
நரிக்கெல்லாம் நரம்பு தெறிச்சிடாதா!...
அதான் சைக்கிள்..ல டைனமோ இருக்குதே.. அதுவே போதும்!... "

" இரு... தங்கராசு... ஒரு வாய் சாப்பிட்டுப் போகலாம்!... "
- சகுந்தலா உபசரித்தாள்..

" இருக்கட்டும் சகுந்தலா.... நீ சொன்னதே சந்தோசம்!.. " - என்ற தங்கராசு -

இந்த வீட்டுக் கூடத்துல உட்கார்ந்து உங்கையால சாப்பிடும் நேரம் வராமலா
போகும்?... - என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..

" சரி.. சகுந்தலா.. நான் கிளம்பறேன்!.. "

" இரு.. தங்கராசு!... " - என்றபடி வீட்டுக்குள் ஓடியவள்
கையில் ஒரு பையுடன் திரும்பி வந்தாள்...

" என்னது?... "

" கொல்லைப் பக்கத்து கத்தரிக்காயும் அவரைப் பிஞ்சும்!... "
- என்றபடி சைக்கிளில் மாட்டிவிட்டாள்..

ஒன்றும் சொல்லாமல் மென்மையாகப் புன்னகைத்தான் தங்கராசு

" சரி.. சகுந்தலா.. நான் போய்ட்டு வர்றேன்... "

" ம்ம்!... " - சகுந்தலா புன்னகைத்தாள்..

இப்படிச் சொல்லும்போதே மனம் கிடந்து துள்ளியது...
எங்க வீட்டுக்கு சீக்கிரமா வந்து சேர்!... - என்று...

" ஆத்தா.. நான் போய்ட்டு வர்றே...ங்க!.. "

" சரிப்பா.. ஜாக்ரதையா போய்ட்டு வா!... "

தங்கராசு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நகர்ந்தபோது -

" இது யாரு புதுசா?.. " - என்றபடி, வேலிப்படலைத்
திறந்து கொண்டு வந்தாள் அன்னக்கொடி - ஆத்தாவின் மருமகள்...

ஆத்தாவிற்கு தூக்கு வாளியில் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறாள்...

" சகுந்தலாவோட படிக்கிற பையனாம்..
வாத்தியார் வீட்டுக்கு வந்திருக்கிறான்..
அப்படியே இங்கேயும் ஒரு எட்டு வந்து பார்த்திருக்கிறான்... "

" வாத்தியார் வீட்டுக்கு வந்தவன் அப்படியே போக வேண்டியது தானே!..
பொண்ணு புள்ளைங்க இருக்குற இடத்தில அவனுக்கு என்ன வேலை?.. " கடுப்படித்தாள்...

" இந்தக் காலத்துப் பசங்க... நாம எதும் குதர்க்கமா நெனைக்கக் கூடாது...
கள்ளங்கவடு இல்லாம இருக்கான்... "

" இருந்தாலும்!... " - அன்னக்கொடி சற்றே இறங்கி வந்தாள்...

" நான் எல்லாம் விசாரிச்சுட்டேன்... அன்னக்கொடி..
நல்ல பையன்.. மரியாதயா நடந்துக்குறான்...
நல்ல குடும்பமா தெரியுது... இதெல்லாம் அபூர்வம்...
இந்தா இருக்குற தென்னங்குடி தான் ஊரு..
ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வரலாம்...
புடிச்சிருந்தா வர்ற வைகாசியில பாக்கு மாத்திக்கலாம்!... "

திடுக்கென்றது சகுந்தலாவிற்கு... விழியோரத்தில் நீர் திரண்டது...
கிழவிக்கும் பேத்தி ஒருத்தி கல்யாண வயதில் இருக்கிறாள்...

" கோணக்கரை மாரீ!.. கிழவி குறுக்கு சால் ஓட்டுறாளே!.. "
எங்கனவு என்னோடத் தானா?...

அழுகை வருகிற மாதிரி இருந்தது..
சட்டென எழுந்து வீட்டுக்குள் ஓடினாள்...

வீட்டினுள் விளக்கு மாடத்தின் அருகில் நின்றாள்...
அதன் கீழ் சற்றே பெரிதாக ஒரு உள் மாடம்..
அதில் ஒரு பெட்டி - மஞ்சள் குங்குமத்துடன்..

அதனுள் தான் சகுந்தலாவின் அம்மாவுடைய
சேலை, ரவிக்கை, வளையல், தோடு, ஜிமிக்கி - எல்லாம் இருக்கின்றன...

ஏதாவது சோகம் என்றால் -
அம்மாவின் சேலையை எடுத்து தோளில் போட்டுக் கொள்வாள்...

அம்மா அன்புடன் அரவணைத்துக் கொண்ட மாதிரி இருக்கும்
அத்தோடு கவலை எல்லாம் காற்றோடு காற்றாகப் போய் இருக்கும்...

அந்தப் பெட்டியைத் திறக்க முயன்றபோது - பின்னால் ஒரு குரல்..

'' சகுந்தலா!... "

ஆத்தா நின்றிருந்தாள்...

" நான் பேசுனது எம் பேரனுக்கு
தங்கராசுவோட தங்கச்சிய முடிக்கலாம்..ன்னு!.. "

" ஆத்தா!.." - என்று விசும்பியபடி அந்த மூதாட்டியை
கட்டிப் பிடித்துக் கொண்ட - சகுந்தலாவின் கண்கள் கலங்கிக் கசிந்தன...

" உங்க அப்பன் வரட்டும்.. நாளைக்கு நான் பேசறேன்!... "
ஆத்தாவின் குரலில் அன்பு வழிந்தது...

அப்படியே சுடர் விட்டுக் கொண்டிருந்த
விளக்கைப் பார்த்தாள் சகுந்தலா..

ஒன்று நூறு ஆயிரம் கலைகளாய்
பிரகாசித்துக் கொண்டிருந்தது திருவிளக்கு...
ஃஃஃ

77 கருத்துகள்:

 1. இனியகாலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

  துரை அண்ணாவின் கதையா ஆஹா

  விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா..    வாங்க.... (மதுரை நினைவுக்கு வருகிறார்!!!)

   நீக்கு
  2. அன்பின் கீதாவின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. அனைவருக்கும் நல்வரவு..
  அன்பின் வணக்கங்களுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வரவும், வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்....  வாங்க....

   நீக்கு
 3. இன்று எனது கதையைப் பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையை அனுப்பி வைத்த உங்களுக்கு எங்கள் நன்றி!  ஆதரவு தொடர விருப்பம்.

   நீக்கு
  2. ஆதரவு!..

   ஆகா... அருமை...
   இன்னும் சற்று நேரம் கழித்து மின்னஞ்சலைக் கவனிக்கவும்...

   நீக்கு
  3. அட! அடுத்த கதையா!!!!! துரை அண்ணா?!!!!!!!!

   அப்படிப் போடுங்க!!

   கீதா

   நீக்கு
  4. /// அடுத்த கதையா!..///

   எல்லாம் தங்களது ஆதரவினால் தான்...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
  5. இன்னும் சற்று நேரம் கழித்து மின்னஞ்சலைக் கவனிக்கவும்...//

   இப்படி ரகசியம் சொன்னா ஹா ஹா ஹா ஹா ஹா ஓரளவு கணக்கு போட்டு உங்க கதை வரும் என்று யூகம் செஞ்சுரலாமே!!!!!!! இன்னிலருந்து கணக்கு போட்டா!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை வணக்கம், மாலை வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. கிராமத்துப் பின்னணியைக் கண்ணெதிரே கொண்டு வந்த கதை! துரை அருமையாக எழுதி இருக்கார். சகுந்தலாவின் கனவு நனவாகட்டும். அதிலும் கிராமத்திலேயே இருந்து வெள்ளாமையைப் பார்த்துக்கப் போறதாச் சொன்னது மனதுக்கு நிறைவாக இருந்தது. பல வருடங்கள்/நாட்கள் கழித்து "வெள்ளாமை" என்னும் சொல்லைப் படிக்க நேர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி அக்கா...

   இதற்கு முன்னும் வெள்ளாமை.. எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன்...

   ஆங்கிலத்தைப் பிடித்துக் கொண்டு
   நல்ல தமிழ்ச் சொற்களை இழந்து விட்டோம்...

   நீக்கு
  2. ஒழுங்கை, வெள்ளாமை எல்லாமே அடிக்கடி கேட்பது தான் இப்போவும் என்றாலும் கிராமத்திற்குப் போகும்போது தான். முன்னெல்லாம் கதைகளில் வரும் பேச்சு வார்த்தைகளில் அடிக்கடி காணக்கிடைக்கும். இப்போல்லாம் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் யாரும் எழுதுவதே இல்லை. அதனால் தான் சொன்னேன் துரை. படிக்கையிலேயே வெள்ளாமை என்று சொல்லும் தொனி காதில் விழும் உணர்வு!

   நீக்கு
  3. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியக்கா..

   நீக்கு
 6. துரையின் மென்மையான மனம் எப்போதும் சுபமான முடிவுகளையே தருகின்றது. என்றாலும் நல்லதொரு கதை! நடப்பு உலகில் நடக்க்கூடிய சாத்தியம் உள்ள கதை!

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 8. கதை மிக அருமை.
  எப்போதும் இறுதி பகுதியில் கண்ணில் நீர் துளிர்க்க வைப்பார்.
  இந்த கதையிலும் அப்படித்தான்.
  சகுந்தலா, தங்கராசு மனம் போல் எல்லாம் நடக்க அந்த கோணக்கரை மாரீ அருள் புரிய வேண்டும்.

  அந்தக்கால கிராமத்தை கண்களில் மலர வைத்தார்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

   கோணக்கரை மாரி எல்லாரையும் வாழ வைப்பாளாக...

   வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. மிக நல்ல கதை. பழைய கிராமத்து நினைவுகளை கண்முன் கொண்டுவந்த கதை. பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை...
   தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. ஆத்தா, தங்கராசு உரையாடல் அருமை.
  இப்படித்தான் அந்தக்கால பெரியவர்கள் பேசுவார்கள்.

  சகுந்தலா வீட்டுக் கொல்லையில் விளைந்த காய்களை கொடுத்து விடுவது எல்லாம் கிராமிய மணம் கமழும் செயல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது இப்போவும் நடக்கிறது கோமதி. எங்க ஊரான பரவாக்கரை போகையில் நாரத்தங்காய், பறங்கிக்காய், பறங்கிக்கொட்டை போன்றவை கொடுப்பாங்க. வரதை முன்னாடியே சொன்னால் கீரை கூடப் பறிச்சு வைப்போம் என்பார்கள். குழந்தைகளை அழைத்துச் சென்றால் காசு வாங்காமல் பசும்பால் கொடுத்துடுவார்கள். குழந்தைகளுடன் போனால் நாங்க இன்டக்ஷன் ஸ்டவ் கையில் எடுத்துப் போவோம். பாலைக் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுத்துட்டு நாங்களும் காஃபியோ, ஹார்லிக்ஸோ சாப்பிட்டுக்கலாம்.

   நீக்கு
  2. >>> சகுந்தலா வீட்டுக் கொல்லையில் விளைந்த காய்களை கொடுத்து விடுவது எல்லாம் கிராமிய மணம் கமழும் செயல்கள்... <<<

   பழைமையை நினைவு கூர்ந்த கருத்துரை அருமை...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  இன்று சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதையா? அருமை.. இதோ கொஞ்ச நேரத்தில் படித்து விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
   முந்திய பின்னூட்டத்தில் எழுத்துப் பிழை
   அதிகம் இருந்ததால் நீக்கிவிட்டேன்.

   அன்பு துரையின் கதையைப் படிக்கப் படிக்க இன்னும் நீளாதா என்ற ஏக்கம்வந்தது. அத்தனை அன்பு மணம்..
   எளிமையும் நேர்மையும் காதலும்
   போட்டி போட்டுக் கொண்டு மிளிரும் எழுத்து.
   18 வயதுத் தங்கராசு, சகுந்தலா மனம் கோணாமல் அவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும்.
   தெளிந்த ஓடையில் கடைசியில் கலக்கம் வந்தாலும் ஆத்தாவின் அன்பு அணைப்பில் மீண்டும் தெளிந்தது.
   என் பாட்டிகள் பேசிக்கொண்ட விதம் நினைவுக்கு
   வந்தது.
   கொடுக்கும் இடம் கொள்ளும் இடம் சரியாக இருக்க வேண்டும்
   என்பதில் கருத்தாக இருப்பார்கள்.
   தனியே இருக்கும் பெண்ணைப் பாதுகாக்கும்
   அண்டை வீட்டார் அருமை இப்போதும் இருக்கிறதோ ,
   தெரியவில்லை.
   கரும்பும் சாப்பிட்டு அதன் சாற்றையும் பக்கத்தில் வைத்தது போல் அன்பின் துரையின்
   ஆற்றல் மனம் தொடுகிறது. மனம் நிறை வாழ்த்துகள்.

   நீக்கு
  2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

   >>> தனியே இருக்கும் பெண்ணைப் பாதுகாக்கும் அண்டை வீட்டார் அருமை இப்போதும் இருக்கிறதோ , தெரியவில்லை... <<<

   அந்த நற்பண்புகள் எல்லாம் இக்காலகட்டத்தில் இருக்கின்றன என்றே நம்புவோம்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 14. சூப்பர் கதை துரை அண்ணா...வழக்கம் போல கிராமத்து நடையில் ஒயிலான கதை. சகுந்தாலவைப் போல!! ரசித்தேன் அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு கீதாவின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 15. கிராமத்தில் நடப்பவைகளை அழகாக எடுத்து கூறி அழகாக முடித்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 16. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 17. ஆஹா... சகுந்தலாவின் மனம் தெரிந்த ஆத்தா... அது தான் பாசம்! சிறப்பான கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 18. கிராமத்து மணம் கமழுகிறது.'பிரகாசித்துக் கொண்டிருந்தது திருலிளக்கு ' கதையும் பிரகாசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 19. ஒரே வரி தான்: கதை எக்ஸலண்ட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தங்கள் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 20. நாங்க எங்கே இந்த மாதிரி கிராமத்திலே வாழ்ந்திருக்கோம்?.. அவங்க மொழி பேசிக் கேட்டிருக்கோம்?.. வாராவாரம் நீங்க சொன்னாத் தான் ஆச்சுன்னு ஆகிப்போச்சு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜீவி ஐயா...

   நீங்கள் நம்ம ஆளு என்றல்லவா நினைத்திருந்தேன்!?...

   நீக்கு
 21. // இன்னும் கொஞ்ச நேரம் அவிழ்த்து விடேன்!... " - என்று அர்த்தம்...

  அதுகளின் மொழி அவளுக்கும் தெரியும்... //

  இனிமையான ஆரம்பம்! ஆடுகளோடனான செளஜன்யம்..

  இந்த இடத்திலேயே கதை களை கட்டிடுச்சி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரம் மட்டை. செடி கொடி, ஆடுமாடுகளுடனான சௌஜன்யம் இல்லையெனில் கிராமத்து வாழ்க்கையில் அர்த்தம் என்பது ஏது?..

   தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 22. கதையிலே ஓடுற அந்த மன ஈரத்தைப் பற்றிச் சொல்லியே ஆகணூம்!

  நமக்கென்ன, என்று ஒதுங்கியிருக்காம.. இன்னொரு வீட்டுக்கு யாரு வந்தாலும் யாரு, என்னன்னு கேட்டு விசாரிக்கிற கிராமத்து பழக்க வழக்கம்...

  தங்கராசுவுடன் ஆத்தா பேச்சுக் கொடுத்த போதே மனசுக்கு இதமா இருந்தது.. இருந்தாலும் ஆத்தாவின் மருமகள் அன்னக்குடி வந்ததும், ஒரு மாதிரி பேச்சு இருந்ததுமே, பொக்குன்னு போச்சு!.. இது என்னடா வம்பாப் போச்சுன்னு!..

  கடைசியில் ஆத்தா கூடவா?.. என்று கோணலாய் யோசனை போக,
  பாலை வார்த்திங்க!..

  சகுந்தலா கூடன்னா நிலைகுலைஞ்சு போயிட்டாப்பலே!

  அழகான நடை! அருமையான முடிவு!

  நகர பாஷையில்.. கங்கிராட்ஸ், துரை சார்!

  வாழ்த்துக்கள், நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் கருத்துரையில் மனம் நெகிழ்ந்தேன்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 23. இம்மாதிரியான வெள்ளந்தி மனிதர்களுடன் எங்காவது கிராமத்ல் இருக்க மாட்டோமா என ஏங்கு கிறது மனசு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 24. கிராமத்தில் நடக்கும் விஷயங்களை சம்பவங்களை அழகாய் கண்முன் கொண்டு வந்துவிட்டார் துரை அண்ணா .பொதுவா ஆட்டுக்குட்டிகள் இப்படி செய்வதை பார்த்திருக்கேன் .கிராமத்து மனுஷங்க வெள்ளந்தி மனிதர்கள் எதிர்பார்ப்பில்லாமா உதவி செய்வானாக எங்கப்பா டாக்ட்டரா இருந் ஊரில் இப்படி நாங்க சென்னை வருமுன் மல்லாக்கொட்டையும் தட்டிய வட்டப்புளியும் கரும்பு இன்னபிற வகைகளும் குமிஞ்சிருக்கும் ..அதெல்லாம் நினைவுக்கு வந்தது .சகுந்தலாவும் தங்கராசுவும் சந்தோஷமா இருக்கட்டும் . 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> சகுந்தலாவும் தங்கராசுவும் சந்தோஷமா இருக்கட்டும்.. <<<

   சந்தோஷமாக இருக்கட்டும்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 25. காலையிலேயே இன்னும் கருத்து சொல்ல நினைத்து எங்க ஏரியாவுல கரன்ட் போய் போய் வர வரும் சமயத்தில் விட்ட தளங்கள் போனால் மீண்டும் ஒவ்வொரு தளம் போய் வரும் போதும் கரன்ட் போகும்...கணினி ஆஃப் ஆகிடும்.

  //" ஏண்டா கிறுக்கனுங்களா.. சும்மா இருக்க மாட்டீங்களா?... "

  என்றவாறு ஆளுக்கொரு அறை பளார்... பளார்.. எனக் கொடுத்தாள்...
  ஒவ்வொன்றையும் பிடித்துத் தனித்தனியாகக் கட்டிப் போட்டாள்...

  அறை வாங்கிக் கொண்ட ஆட்டுக் குட்டிகள்
  அவளைப் பார்த்தவாறே மேலும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன...

  அதற்கு -
  " இன்னும் கொஞ்ச நேரம் அவிழ்த்து விடேன்!... " - என்று அர்த்தம்...

  அதுகளின் மொழி அவளுக்கும் தெரியும்...

  " சும்மாக் கெடங்க... பொழுது போற நேரம்.. இனிமே என்ன மேய்ச்சல் வேண்டிக்
  கிடக்கு!.. " - என்றவாறு அங்கிருந்து நகர்ந்த போது -//

  இதுதான் இதுதான் செல்லங்களுக்கும் அதனுடன் ஒட்டி உறவாடுபவர்களுக்குமான பந்தம் மொழி புரிதல் எல்லாம்...இதில் இருக்கும் ஆனந்தம் தனி...

  ரசித்த வரிகள் துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   >> இதுதான் இதுதான் செல்லங்களுக்கும் அதனுடன் ஒட்டி உறவாடுபவர்களுக்குமான பந்தம் மொழி புரிதல் எல்லாம்...இதில் இருக்கும் ஆனந்தம் தனி...<<<

   ஆடுகளுடனும் ஆட்டுக் குட்டிகளுடனும் பசுக்களுடனும் கன்றுகளுடனும் எத்தனை எத்தனை நாட்கள்!...

   ஆ.. அந்த நாட்கள் எல்லாம் இனியும் வருமோ?... தெரியவில்லை...

   நன்றி..

   நீக்கு
 26. கிராமத்து பாஷை மனசை பின்னுக்கு வேகமாக இழுத்துப்போய்விடுகிறது. ’குறுக்குசால்’, ’வெள்ளாமை’ - இவையெல்லாம் கேட்டு வருஷங்களாகிவிட்டது. ஆனால் இந்த ’ஒழுங்கை’.. கேட்டிருக்கவில்லை.

  //ஆத்துக்கரையில நரியெல்லாம் கெடக்குதே..//
  கிராமத்துப் பயல்களுடன் எத்தனையோ கொல்லைக்காடெல்லாம் சுற்றியும், எங்கெங்கோ அலைந்து திரிந்தும், இந்தப் பாழாய்ப்போன நரி மட்டும் சிக்கியதில்லை; கேள்விப்பட்டதோட சரி. நரிக்குறவன், நரிக்குறத்திகள் அவ்வப்போது ஊசி, பாசி விற்கிறேன் என்று தரிசனம் கொடுத்ததுண்டு- தோளில் டால்டா டின்னுடன். இங்கே, ”நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க..” என்று ஸ்ரீராம் ஆரம்பிக்கமாட்டார் என்று தெரியும். அதை எஸ்.பி.பி. பாடவில்லையே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, ஏகாந்தன் சார், ஸ்ரீராமுக்குப் புரிஞ்சால் சரி! இஃகி,இஃகி,இஃகி,இஃகி!!

   நீக்கு
  2. >>> ஆனால் இந்த ’ஒழுங்கை’.. கேட்டிருக்கவில்லை... <<<

   பட்டுக்கோட்டை வட்டாரத்தில் ஒழுங்கை என்ற வார்த்தையே வழக்கத்தில்...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

   நீக்கு
 27. தலைப்பு மிகவும் பொருத்தம்.

  பாட்டி இடித்துக் கொண்டே தங்கராசுவுடன் பேச்சு வாக்குல பரிசம் போட்டுப் பார்க்கும் உரையாடல் அழகு! எங்க ஊர்ல கூட இப்படிப் பேசியதுண்டு.

  ஆனா கடை நா டீக்கடை மட்டும் தான் பருப்பு அரிசி வெஞ்சன சாமான் எல்லாம் வாங்க டவுனுக்குத்தான் போகணும். அதான் நாரோயில்...வடசேரிக்கு..இப்ப எல்லாம் வந்திருக்குனு கேள்விப்பட்டேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 28. மிகச் சிறந்த, அருமையான கதை...
  மண் வாசம் மணக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

   நீக்கு
 29. கிராமத்து சூழலையும், மனிதர்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதில் துரைசாருக்கு நிகர் அவர்தான். அவருடைய பாணியில் இன்னுமொரு அழகான கதை. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

   நீக்கு
 30. இதற்கு முன் இரண்டு முறை பின்னூட்டம் போட்டேன், ஏனோ வெளியாகவில்லை. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயத்தில் இப்படித்தான் எனது தளத்திலும் நேர்கின்றது...

   நீக்கு
 31. ஆத்தா தன் பேரனுக்குத்தான் தங்கராசுவின் தங்கையை பரிசம் போட தன் மரும்களிடம் சொல்கிறார் கூடவே தங்கராசுவை விசாரித்ததும் சகுந்தலாவுக்குத்தான் என்பது நமக்கு யூகிக்க முடியும் ஆனால் சகுந்தலாவுக்கு முடியாதே மனம் உடனே அப்படித்தானே எண்ணும்!

  நல்ல முடிவு...அழகான உரையாடல்கள் அனைத்தும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   மீள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி.

   நீக்கு
 32. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  மிக அருமையான கிராமத்து கதையை மணம் மாறாமல் தந்திருக்கிறீர்கள். ஆத்தாளும், தங்கராசுவும் பேசிக் கொள்ளும் பரஸ்பர பேச்சு வார்த்தைகள் அவ்வளவு சுவாரஷ்யம். அதிலேயே சகுந்தலாவின் மனமும், தங்கராசுவின் மனமும் படிக்கும் நமக்கே புரியும் போது, அருகிலிருக்கும் ஆத்தாவிற்கு புரியாது இருக்குமா? ஆனாலும், படித்து முடிக்கும் வரை சகுந்தலாவுக்கு இருக்கும் மனப்போராட்டம் எங்களுக்கும் இருந்தது. நல்லபடியான நிறைவு வந்ததும் மனதில் சந்தோஷமாக ஆயிரம் விளக்குகள் ஒளியூட்டிய திருப்தியில் கண்கள் கசிந்தன. நல்லதொரு கதையை மிக அருமையாக தந்தமைக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> மனதில் சந்தோஷமாக ஆயிரம் விளக்குகள் ஒளியூட்டிய திருப்தியில் கண்கள் கசிந்தன. நல்லதொரு கதையை மிக அருமையாக தந்தமைக்கு நன்றிகள்... <<<

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி.

   நீக்கு
 33. வழக்கம்போல அருமையான நடையில் தந்துள்ளார் கதாசிரியர் வாழ்த்துகள். நிகழிடத்திற்கே நம்மை அழைத்துச்சென்ற உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!