திங்கள், 28 அக்டோபர், 2019

"​திங்க"க்கிழமை : கொத்தவரை வற்றல் - அதிரா ரெஸிப்பி


கொத்தவரைக்காய் வற்றல்🙈🙈
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அமைதி அமைதி, நான் விடுமுறையின் போது புளொக்கை எட்டிப் பார்க்கவில்லை .. இது நியாயமோ என ஸ்ரீராம் என்னைப் பார்த்துக் கேட்டிட்டார்ர்:)).. அஞ்சு ரிஷூ பிளீஸ்ஸ்:).. பிங் கலரிலதான் வேணும்:).


ஆனாலும் அதிராவோட கடமை உணர்வைப்பாருங்கோ.. புளொக் பார்க்காட்டிலும், இங்கு போடுவதற்காகவே இத்த வற்றல் கனடாவிலேயே வாங்கி அங்கேயே காயவிட்டும், சமைச்சும் படமெடுத்து வந்தேனாக்கும்:)).. அதிரா நீங்க ரொம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு:) என நீங்கள் எல்லோரும் ஜொள்றது கேட்டு, எனக்கு வெய்க்கம் வெய்க்கமா வருது:)).. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. மட்டருக்கு வருவோம்:).

அங்கு நிறைய தமிழ் சுப்பர்மார்கட் உள்ளது. ஊரிலே கூட வாங்க முடியாத பொருட்களெல்லாம் அங்கு கிடைக்கிறது. உதாரணத்துக்கு, ஊரில் “வசம்பு” என கஸ்டப்பட்டு மருந்துக் கடைகளில்தான் தேடி வாங்க வேண்டும், அது இங்கு கிடைக்கிறது.  இதேபோல, நன்னாரி வேர், சாறணை வேர்..  எல்லாம் சாதாரணமாக கிடைக்கிறது.

நான் இவ் வற்றல் செய்முறை பார்த்தேன், அதை அங்கு எப்படியும் செய்யோணும் என நினைச்சுக்கொண்டே போனேன், அங்கு சம்மர் எனில் சூப்பர் வெயில் எல்லோ...2,3 நாட்களில் காய்ந்துவிடும். இங்கெனில் எங்களுக்கு கிழமைக்கணக்காகும் காய்வதற்கு.

சரி சரி எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காதென்பது:) உங்களுக்குத் தெரியும் தானே:).. நான் இப்போ பானுமதி அக்காவை விட சோட் அட்ண்ட் சுவீட்டாக ரெசிப்பி குடுக்கோணும் எனும் முடிவிலேயே:)) களம் குதிக்கிறேன்.

சமையல் நிபுணர்கள் கரெக்ட்டாக் கண்டு பிடியுங்கோ:) இதில எது கொத்தவரை என:))

இப்படி வாங்கி வந்து, இந்த வற்றல் போடுவதற்கு கழுவினால் போதும் , நுனி எல்லாம் வெட்டத் தேவையில்லை.

பின்பு இப்படி பெரிய பாத்திரத்தில் போட்டு, உப்பு போடாவிட்டாலும் ஓகே, நான் செய்தது கிட்டத்தட்ட ஒரு கிலோவில் அதுக்கு ஒரு மேசைக்கரண்டி உப்பு சேர்த்தேன். மட்டமாக தண்ணி விட்டு, ஒரு கொதி மட்டும் கொதிக்க விடவும், அவிக்க வேண்டாம்.

பாருங்கோ இப்போ கொதித்து விட்டது, உடனே அடுப்பால் இறக்கி தண்ணியை வடிச்சு விடவேணும்..

உடனேயே அந்த சூட்டிலேயே, மிளகாய்த்தூள் அல்லது, கறிப்பவுடர் சேர்த்துப் பிரட்டி விடோணும். நான் மாமியிடம் இருந்த மசாலாத்தூள் போட்டேன்:)

பிரட்டியதும், இப்படி நல்ல வெயிலில் வச்சிடுங்கோ..

பிரட்டிப் பிரட்டிக் காயவிடுங்கோ.. 

ஆவ்வ்வ்வ் காய்ஞ்சிட்டுது.. கொத்தவரைக்காய் வத்தல் ரெடீஈஈஈ[எனக்குப் பேச்சு வழக்குத்தான் பிடிக்குது:) வற்றல் எனக் கஸ்டப்பட்டு எழுத விருப்பமில்லை:) அதனால அஜீஸ் பண்ணுங்கோ பீஸ்ஸ்:)) ஹா ஹா ஹா]

இது இடைவேளையில ஒரு மெட்னி ஷோ:).. அங்கு நான் செய்த சுண்டங்காய்ப் பிரட்டலும், குறிஞ்சாச் சுண்டலும்.. ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ:))

பொரித்தால் இப்படி பென்னாம் பெரிசாக வருகிறது வத்தல் ஹையோ எனக்கே ஆஆஆஆச்சரியமாப் போச்சு...

சரி சரி இப்பொழுது சாம்பிளுக்கு ச்ச்சும்மா கொஞ்சம் சாப்பிடுங்கோ:))

ஊசி இணைப்பு:)
இந்தக்காவை இப்போ எல்லோரும் மறந்திட்டினம்:)) இவவின் ரசிகர் மன்றத் தலைவர்:) உட்பட:)).. அதனாலதான் இப்படிச் சொல்றாவோ என்னமோ:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..
மீண்டும் இன்னொரு அழகிய சோட் அண்ட் சுவீட்டான:) குறிப்புடன் உங்களைச் சந்திக்கும் வரை விடை பெறுபவர் “சமையல் நிபுணி அதிரா”:))
💢💢💢💢💢💢💢💢💢💢🙏🙏🙏💢💢💢💢💢💢💢💢💢💢

120 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என்ன ஶ்ரீராம்... புதையல் மாதிரி தோண்டி எடுத்து பழைய பாடல்லாம் போடறீங்க. இதைக் கண்டுபிடிக்க முடியலையே.

      சப்பாத்தி செய்ய கோதுமை மாவு எடுக்கணும்.
      இதுதானா.. எனக்குத் தெரியுமே.
      அப்புறம் தண்ணீர், உப்பு, சிறிது எண்ணெய் விட்டு பிசையணும்.
      இதுதானா..எனக்குத் தெரியுமே.
      அப்புறம் என்ன செய்யணும்?
      அதான் தெரியாதே.....டைப் நகைச்சுவை காட்சியை பார்த்ததில்லையா?

      நீக்கு
    2. ஓ...    அப்படி ஒண்ணு இருக்கோ....!!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா இதானா கீசாக்கா?:).. இப்பூடி ஒரு ரெசிப்பியை பார்த்திருக்காத காரணத்தால் ஹெட் சுத்தி உடனேயே ஸ்லீப்புக்கு ஓடிட்டா கீசாக்கா:))

      நீக்கு
  2. காலை வணக்கம்.

    ரொம்பக் கஷ்டமான செய்முறை இன்றைக்கு. நிறைய ஸ்டெப்ஸ் இருக்கு. கடைல போய் எது கொத்தவரைனு பார்த்து வாங்கணும். அப்புறம் ஶ்ரீரங்கம் கீசா மேடம் ராசி வந்துடக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கணும் (அவங்கதானே வற்றல் போடலாம்னு ஆரம்பிச்சா மழை ஓஹோன்னு பெய்யும் என்பார்கள்)

    ஸ்டெப்ஸ்லாம் புரியலை. மெதுவா இன்னொரு முறை படிச்சுட்டு எழுதறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை...  

      ஹா..ஹா.. ஹா...

      நீக்கு
    2. //ரொம்பக் கஷ்டமான செய்முறை//

      ஆமா நெ.தமிழன் ஆமா:)).. கடைக்குப் போகோணும்:) அதுக்கு கார் வேணும்:)) அங்கு கார் ஓடுவோரைப் பிடிக்கோணும்:)).. பணம் டொலரில மாத்தோணும்:)).. முக்கியமாக பல அவரைக்குள் கொ அவரையைக் கண்டு பிடிக்கோணும்:)).. பின்பு காயப்போட்டு ஒருவரைக் காவலுக்கு வைக்கோணும்:)).. அதனால இது பக்கத்து வீட்டில கள்ள மாங்காய் பிடுங்கி தொக்கு செய்வதை விடக் கஸ்டமோ கஸ்டம் ஹா ஹா ஹா:)).. இன்னொருதபா படிச்சுட்டு வாங்கோ:))..

      ஹையோ கன காலத்துக்குப் பிறகு எ புளொக்கில் என் ரெசிப்பி வந்ததால என்ன பண்ணோனும் என்பதை மறந்தே போனேன்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. எல்லா அவரையிலும் கொத்தவரை உள்பட வற்றல் செய்யலாம். கொத்தவரை மட்டும்தான்னு யார் சொன்னது உங்களுக்கு?

      நீக்கு
  3. இந்த வற்றல் சாப்பிட்டு எவ்வளவோ வருஷங்கள் ஆச்சு. மோர் சாத்த்துக்குத் தொட்டுக்கொள்ளலாம். குழம்பில் தானுக்குப் பதிலாக போடுவதைக் கண்டிருக்கிறேன்.

    தீபாவளி சமயத்தில் இனிப்பு ரெசிப்பி வரும்னு பார்த்தால் வற்றல் ரெசிப்பி.

    அதுவும் வேண்டியதுதான் (நேற்று ஏகப்பட்ட ரவா லட்டு, வெள்ளையப்பம் சாப்பிட்டவர்களுக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    அங்க போயி என் கமெண்ட்ஸ் படிச்சுட்டீங்களா?!!!

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் உங்க45ள்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்7ஹ்த்5அன்.. ஹையோ இது டெய்சிப்பிள்ளையின் ரைப்பிங் கர்:))

      உங்களுக்குத்தான் இனிப்பு தடா போட்டாச்செல்லோ இன்னும் என்ன இனிப்பு பற்றியே நினைப்பு கர்ர்ர்:))... கொத்தவரை உடம்புக்கு நல்லது முக்கியமாக குண்டானோர் சாப்பிட்டால் மெலிஞ்சிடுவினமாம்.. தமிழ் டொக்டர் சிவராமன் சொல்லியிருக்கிறார் தெரியுமோ:))..

      ஆனா எனக்கு இந்த வத்தல் பிடிக்கவில்லையாக்கும்:)).. என் கையால செய்துதான் முன்னமுன்னம் சாப்பிடுகிறேன்.. இன்னும் இருக்குது மிச்சம் இங்கு. அது பேப்பர் போல இருக்குது பொரிச்சால்.

      நீக்கு
    3. கொத்தவரங்காய் சாப்பிட்டா மெலிவோமா? அப்ப முருங்கைக்கும் பீன்ஸுக்கும் அதே ரூல்தான் போலிருக்கு.

      இது தெரியாம பூசனி, பறங்கிகாய்ல ஆசை வச்சி சாப்டுட்டுட்டு, உடம்பு மெலியாம ஊதுக்கிட்டே போகுதேன்னு கவலையா (இது எங்க ஊர் கவலை) இருந்தேன்.

      ஒருவேளை, ஓர நரம்பை எடுக்கணும், பொடிப் பொடியா கட் பண்ணும்போது விரலை வெட்டிக்காக கவனமா பண்ணணும்னு கருத்தா டென்ஷன்ல வேலை செய்வதால உடம்பு மெலியுமோ?

      ஆண்டவா.. போற போக்குல டாக்டர் சிவராமன் பேரைச் சொல்லி தலை சுத்த வைக்கிறாங்களே

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அவர் நிறைய விசயம் சொல்றாரெல்லோ.. இந்த கொத்தவரை மட்டர் எங்கே சொன்னார் என லிங் தேடினேன்.. அது ரைம் எடுக்குது விட்டுவிட்டேன்.. கிடைச்சால் பின்பு சொல்றேன்ன்:)) உடம்பு மெலியும் என்பது இடையில அதிரா.. மானே தேனே போட்டு எழுதினேன் அது டப்பா?:) ஹா ஹா ஹா.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ஆகா.. இன்று அதிரா ரெசியியா? அருமையாக இருக்கும். படித்து விட்டு மதியத்தில் வருகிறேன். இப்போதைக்கு கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டிய நிலை. என் பதிவுக்கு வந்து கருத்திட்டிருக்கும் அதிராவுக்கு மிக்க நன்றி. பிறகு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கமலாக்கா
      //ஆகா.. இன்று அதிரா ரெசியியா? அருமையாக இருக்கும்.//

      http://www.duskyswondersite.com/wp-content/uploads/2013/08/animals-cat-in-snow.jpg

      நீக்கு
    2. அப்பாவி அதிரா — யாரேனும் உங்க வீட்டுக்கு வந்து, “ஆ..அரியதரம் செஞ்சிருக்கீங்களா.. எனக்கு அரியதரம்னா உயிர். பார்க்க அழகா இருக்கு.. சரி அடுத்தவாரம் வரேன். Bye bye” என்று சொன்னால் அதுக்கு என்ன அர்த்தம்?

      நீக்கு
    3. ///சரி அடுத்தவாரம் வரேன். Bye bye” என்று சொன்னால் அதுக்கு என்ன அர்த்தம்?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) அல்லோ நெல்லைத்தமிழன்.. நீங்க என்ன ஜொள்ளியிருக்கிறீங்க?:) எதையும் பொஸிடிவ்வா சிந்திக்கோணும் .. அப்படியானோரைத்தான் எனக்குப் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிப்போட்டு இப்போ நீங்களே நெக்கடிவான ஜிந்தனையை:)) உள்ளே நுழைக்கலாமோ கர்ர்ர்ர்ர்ர்:))

      அதாவது அதிராவின் ரெசிப்பி என்பதால ரொம்ப நல்லா இருக்கும்.. ரொம்ப நல்லா இருப்பதை.. அவசரப்பட்டுச் சாப்பிடாஅமல்.. ஆறுதலாக .. ரசிச்சு ருசிச்சு.. சாப்பிடோணும்.. என்பதால, ஆறுதலாக வந்து சாப்பிட்டுகிறேன் எனச் சொல்லிப்போட்டு கமலாக்கா வெளியில போயிருக்கிறாவாக்கும் கர்ர்:). ஹா ஹா ஹா..

      ஹையோ வெளியில ஹோட்டலுக்குப் போயிட்டாவோ சாப்பிட:)) ஆண்டவா நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல:))

      நீக்கு
    4. வணக்கம் அதிரா

      இந்த இப்பத்தான் வீட்டினுள் நுழைகிறேன். தங்கள் ரெசிபி நன்றாக இருக்குமென "உண்மையிலேயே" (எந்த கோவிலின் தெய்வத்தை அழைப்பது?. எனக்குப் பிடித்த நெல்லையப்பர்.... ஓ.கே வா? ஹா.. ஹா. ஹா.) சொல்லி விட்டுத்தான் அவசரமாக வெளியில் சென்றேன். இன்று வெளியேதான் சாப்பாடு.. ஆனால் என மனமெல்லாம் கொத்தவரங்காய் வறுவல் மேல்தான் இருந்தது என்றால். நெல்லையப்பர் அருளால் நெ. வாசிகள் அனைவரும் கண்டிப்பாக நம்பித்தான் வேண்டும். ஹா. ஹா. ஹா. நன்றி.

      முதலில் அவ்வளவு காய்களைப் படமெடுத்துப் போட்டு அதில் எது கொத்தவரங்காய் எனக் கேட்டதும் சற்று குழம்பி விட்டேன். ஆனால்,
      கொத்தவரங்காயை தாங்கள் "க்ளு"வுடன் அடுத்தப் படத்தில் காட்டியதும். குழப்பம் தீர்ந்தது. (ஏனென்றால் நான் சமையல் நிபுணி இல்லையே..! ஹா. ஹா. ஹா.கூடவே தங்களின் அடுத்த பட்டம் அதுதானோ என ஒரு சந்தேகமும் வந்தது:). )

      இந்த கொத்தவரங்காய் செய்முறை, படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. அம்மா வீட்டில் இருந்த போது பாட்டி இந்த வத்தல், வடாமெல்லாம் வருடந்தோறும் தவறாமல் பண்ணியிருக்கிறார்கள். செழிக்க, செழிக்க சாப்பிட்டாகி விட்டது. அப்புறம் அங்கு விடுமுறையில் போகும் போதும் கொண்டு வந்து திருப்தியாக பயன்படுத்தினேன். அதற்குப்பின் இருந்த இடமெல்லாம்,வீட்டிலேயே பண்ணலாமென்றால், வெயில் வசதிகள் அவ்வளவாக கிடையாது. இங்கே வந்த பின்னும் முயற்சிக்கவில்லை.. ஆனாலும் தங்கள் செய்முறையை பார்த்தபின் கோடையில் செய்யலாமென்று தோன்றுகிறது.. பார்க்கலாம்..!

      சுண்டைக்காய் பிரட்டலா? அப்படியென்றால், சுண்டைக்காய் வத்தக்குழம்பா? சுண்டைகாயையும் வத்தலாக்கி பொரிச்ச சாப்பிட்டுத்தான் பழக்கம். இன்னொன்று குறிஞ்சா சுண்டல் என்றாலும். என்னவென்று புரியவில்லை..!இது இரண்டையும் தனி ரெசிபியாக போட்டிருக்கலாமே ..! திங்கள் பதிவு நன்றாக இருந்தது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. //ஆனால் என மனமெல்லாம் கொத்தவரங்காய் வறுவல் மேல்தான் இருந்தது என்றால்.//

      ஹா ஹா ஹா அதானே பார்த்தேன்.. கனடாவில செய்ய்ய்ய்ய்தூஊஊஊ பிளேனில காவிக்கொண்டு ஸ்கொட்லாந்துக்கு வந்தூஊஊஊஊஉ.. அதை கடுகதி எயாரில இந்தியாவுக்கு அனுப்பீஈஈஈஈஈஈ:) அதை ஸ்ரீராம் போட்டிருக்கிறார் எனில் இந்த ரெசிப்பி என்ன லேசுப்பட்ட ரெசிப்பியோ?:)) இது கீசாக்காவுக்குப் புரியுதே இல்லை கமலாக்கா கர்ர்ர்ர்ர்ர்:))... அது அந்த அருள் வடபழனி முருகன் கோயில் மேற்கு வீதியில் இருக்கும் கந்தசாமியாரின் அருளாக்கும் கர்ர்:)).. நெலையப்பர் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..

      //அப்படியென்றால், சுண்டைக்காய் வத்தக்குழம்பா?//
      இப்படியும் சொல்லலாம் நான் சொல்றதுபோலவும் சொல்லலாம் ஹா ஹா ஹா.. இது ஃபிரெஸ் சுண்டங்காயை வதக்கிச் செய்தேன்.. வத்தலில் செய்யவில்லை. வத்தலில் செய்வதை விட, ஃபிரெச்சா வாங்கி துப்புரவாக்கி பின்பு வதக்கி செய்வதுதான் ருசி அதிகம் கமலாக்கா.

      குறிஞ்சா என்பது அது இலங்கையில் பேமஸ் ஆன ஒரு கொடியில் இருந்துவரும் இலை வகை, கொஞ்சம் கயர்ப்புத்தன்மை கொண்டது, சுண்டல்போல.. உங்கட முறையில் பொரியல்போல செய்ய சூப்பராக இருக்கும்.. எனக்கு ரொம்ம்ம்ம்ம்பப் பிடிச்ச இலை இது, ஆனா கொஞ்சம் சொறி வேலை.. அதாவது குட்டி வெற்றிலைபோல இருக்கும், அவற்றைக் கிளீன் பண்ணி அடுக்கி உருட்டி, மிக மெல்லிசாக அரிந்து எடுக்க வேண்டும்.

      இது சுகர் பேஷண்ட்டுக்கு மிக நல்லது என்பினம். ஆனா எனக்க்கு குழந்தையிலிருந்தே பிடிக்கும் என்பதால என்னைக் கண்டாலோ இல்லை இங்கு ஆரும் வந்தாலோ குறிஞ்சா வாங்கி வரத் தவறுவதில்லை ஹா ஹா ஹா நன்றி கமலாக்கா.

      நீக்கு
    6. நான் நெல்லையப்பரை விளையாட்டாக இழுத்தது நெல்லைத் தமிழரின் கமெண்டுக்காக...நெ. தமிழரும் தவறாக நினைக்க வேண்டாம்.. (அவர் பார்த்தால்தானே ..! மன சாட்சி பதில் குரல் தருகிறது. ஹா.ஹா.ஹா.) மற்றபடி அருள் கிடைக்க காரணம் கந்தசாமியாராகத்தான் இருக்கும். எனக்கு கந்தசாமியும், அவர் தந்தை பெரியசாமியும் ஒன்றுதான்:)

      ஓ.. பச்சை சுண்டைக்காய் வைத்து புளியிட்டு செய்வீர்களோ? புரிந்து கொண்டேன். ஆனால் உலகில், எல்லோராலும், எல்லா விதங்களையும், எல்லோரும் செய்யும்படி செய்யவோ, சாப்பிடவோ முடியாது. அதுதான் உண்மை. ஆமாம்.. குறிஞ்சா என்றால் ஒரு கீரை வகையோ? நல்ல தகவல்களுக்கு நன்றி. தங்கள் மூலமாகத்தான் இதை அறிந்து கொண்டேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. //நான் நெல்லையப்பரை விளையாட்டாக இழுத்தது நெல்லைத் தமிழரின் கமெண்டுக்காக...//

      அது தெரிஞ்சுதானே நானும் பதில் போட்டேன்ன்:))

      //நெ. தமிழரும் தவறாக நினைக்க வேண்டாம்.//
      சே..சே.. அவர் ஒண்ணும் தப்பாக நினைக்க மாட்டாஅர்ர் நீங்க என்ன வேணுமெண்டாலும் சொல்ல்லுங்கோ கமலாக்கா ஹா ஹா ஹா...

      அவர் கொமெண்ட் படிப்பாரா மாட்டாரா எனும் யோசனை எதுக்கு.. அவர் நிட்சயம் படிச்சிருப்பார்ர்.. பதில் குடுக்கப்பட வேண்டிய கொமெண்ட் எனில் நிட்சயம் 2,3 நாளானாலும் பதில் போடுவார்ர்.. இல்லை எனில் படிச்சு ரசிச்சிட்டுப் போயிடுவார்ர் ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கமலாக்கா.

      நீக்கு
    8. @Kamala Hariharan, http://mooligaikal.blogspot.com/2012/05/blog-post_15.html சிறு குறிஞ்சான் இலை பற்றிய சுட்டி பாருங்க கமலா! சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பலனளிக்கும் கீரை இது. பொடியாக நறுக்கிச் சின்ன வெங்காயத்தோடு சேர்த்து மிளகு, ஜீரகப்பொடி போட்டு அம்மா சாப்பிடுவார். பார்த்திருக்கேன்.

      நீக்கு
    9. பச்சைச்சுண்டைக்காய்க் கறி தேங்காய், பருப்புப் போட்டும் பண்ணுவோம். அரைத்து விட்ட சாம்பாரில் போட்டால் நன்றாக இருக்கும். அம்பத்தூர் வீட்டில் இருந்தவரைக்கும் அடிக்கடி சுண்டைக்காய் சாம்பார், பச்சைச்சுண்டைக்காய்க் குழம்புனு பண்ணுவேன். இந்தச் சுண்டைக்காயை நன்கு அலசிக் காம்புப் பக்கம் நறுக்கிக் கொண்டு மாவடு தீர்ந்ததும் மிச்சம் இருக்கும் ஜலத்தைக் கொட்டாமல் அதில் போட்டு ஊற வைத்து வெயிலில் காய வைத்துச் சுண்டைக்காய் வற்றலாக்கிக் குழம்பு வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அப்படியே வறுத்தும் நாங்கல்லாம் தொட்டுப்போம்.

      நீக்கு
    10. குறிஞ்சாவில் இருவகை உண்டு கீசாக்கா, சிறுகுறிஞ்சா, பெருங்குறிஞ்சா.

      இந்தப் பெருங்குறிஞ்சாதான் கடைகளில் பொதுவாக கிடைக்கும் இது அதிகம் சுவீட் சாப்பிடும் குழந்தைகளுக்கு நல்லது பூச்சியைக் கொல்லும், அத்தோடு இது அதிகம் சுகரைக் குறைக்காது.

      ஆனா அந்த சிறுகுறிஞ்சா என்பது அது ஸ்பெஷலா சுகர் பேஸண்ட்டுக்கே உரியது, சாதாரணமானவர்கள் எப்போதாவது சாப்பிடலாம் , ஆனா அடுத்து சாப்பிட்டால் சுகரை குறைச்சுவிடும்.

      என் சுண்டங்காய்ப் பிரட்டல் முறையைப் படமெடுத்திருக்கலாம் தவறிட்டேன், இனி இங்கு சிலசமயம் கடைக்கு வரும், வந்தால் வாங்கிச் செய்து போடுகிறேன்.

      நீக்கு
    11. கமலா ஹரிஹரன் மேடம்... நான் எழுதினதை விளையாட்டா எடுத்துக்கொண்டு, உங்கள் பின்னூட்டத்தில் நகைச்சுவையாய் பதில் சொல்லியிருந்ததை ரசிப்பேன் (பட்டிமன்றத்தில் சரியான பதில் சொல்லுவாங்களே அதைப்போல.

      அதிராவும் அதுமாதிரி apt பதில் எழுதுவாங்க. கில்லர்ஜியும் நகைச்சுவையா பதில்கொழி கொடுப்பார்.

      நீக்கு
    12. @கீதா சாம்பசிவம் மேடம் - சுண்டைக்காய்ல கறியா? நல்லா இருக்குமா? நான் பருப்புசிலி மட்டும்தான் சாப்பிடுவேன். நேற்றுகூட கடையில் சுண்டைக்காய் பார்த்தேன்.. திருப்பித் திருப்பி பருப்புசிலியான்னு வாங்கலை.

      நீக்கு
    13. விளக்கமான பதில்கள் தந்ததற்கு அதிரா, நெல்லைத் தமிழர் சகோ, கீதா சாம்பசிவம் சகோதரி அனைவருக்கும் நன்றி.

      பச்சை சுண்டைக்காய் குழம்பு கேள்விபட்டுள்ளேன். இது வரை சாப்பிட்டதில்லை. சுண்டைக்காய் வற்றல் வைத்து வத்தக்குழம்பு பண்ணியுள்ளேன். இரு தினங்களுக்கு முன்பு சுண்டைக்காய் வற்றலை வறுத்து சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன்.சுண்டைக்காயில் பருப்புசிலியா? துவர்க்காதா? எங்கள் வீட்டில் என் (பெரிய) குழந்தைகள் முன்பெல்லாம் சுண்டைக்காய் என்றாலே காத தூரம் ஓடுவார்கள். இப்போ பரவாயில்லை... வத்தக்குழம்பாவது விட்டுக் கொள்கிறார்கள்.

      குறிஞ்சா இலைப்பற்றி இதுவரை தெரியாது.அதைப்பற்றி விபரங்கள் அறிந்து கொண்டேன். இனி இங்கு கிடைத்தால் வாங்கி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  5. எனக்கு இந்த வற்றல் ரொம்பவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  6. கொத்தவரைக்காய் வற்றல் எனக்கு அதிகம் பிடிக்கும் என்பதால், வீட்டில் அடிக்கடி செய்வார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி டிடி. இதே செய்முறைதானோ எனவும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

      நீக்கு
    2. இதே செய்முறை (தான்) என்று நினைக்கிறேன்...

      // நான் மாமியிடம் இருந்த மசாலாத்தூள்... //

      ஆனால் உங்கள் அண்ணி கேட்பது :-

      "அது, அது என்ன, அவர்களின் மாமி செய்த மசாலாத்தூள்...? அதைப் பற்றிக் கேளுங்கள்..."

      காலையிலேயே என்னிடம் சொன்னார்கள்... நான் தான் கருத்துரையில் கேட்க மறந்துவிட்டேன்...

      ஆமாம் மாமியாரின் மசாலாத்தூள் பற்றிய விவரம் என்ன...?

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கேள்வி கேட்டால் திருப்பி அடிக்கலாமோ டிடி...

      அது,... அண்ணியிடம் சொல்லுங்கோ...
      மாமியின் கபேர்ட்டைத் திறந்தேனா.. சிக்கின் மசாலா, மட்டின் மசாலா, பிஸ் மசாலா, சாம்பார் தூள்.. இப்படி விதம் விதமாக பொட்டில்களில் அழகாக இருந்துதா.. எடுத்து கலக்கி அடிச்சுவிட்டேன் இதனுள் ஹா ஹா ஹா... ஹையோ ஹையோ

      நீக்கு
    4. வெறும் உப்பும், மஞ்சள் பொடியும் மட்டும் போட்டே நாங்க பண்ணுகிறோம். நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
  7. தமிழகத்தில் இந்த வருடம் அதிக பிரபலம் இல்லை. ஆனால் இது கேரளத்தில் மிகவும் பிரசித்தம். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளது. ரெசிப்பியை விட அதை கூறிய விதம் மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விசயம் சொல்லியிருக்கிறீங்க. உண்மைதான் பார்க்க இலகுவாக தெரியும் ஆனா அதை செய்யும்போதுதான் தெரியும் அதன் கஸ்டம், இது செய்வதற்குப் பொறுமையும் வேணும் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      நீக்கு
  8. அடுத்த ஒரு மாதத்திற்கு அதிரா "அவரை அதிரா" என்று அறியப்படுவார். ஸ்காட்லான்டில் இருந்து கனடா வரை சென்று கொத்தவரை வாங்கி வத்தல் போட அதிராவுக்கு மட்டுமே முடியும்.
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்த ஒரு மாதத்திற்கு அதிரா "அவரை அதிரா" //

      ஹா ஹா ஹா ஜே கே ஐயா இன்னும் ஒரு மாதத்துக்குள் என் அதிரச/சீனி அரியதர ரெசிப்பி வந்துவிடுமெல்லோ:)).

      //ஸ்காட்லான்டில் இருந்து கனடா வரை சென்று கொத்தவரை வாங்கி வத்தல் போட அதிராவுக்கு மட்டுமே முடியும்.//

      அப்பூடிச் சொல்லுங்கோ .. எங்க கீசாக்காவால ஒரு வத்தல் போட்டு எடுத்துவர முடியுதா பார்ப்போம் அம்பேரிக்கால இருந்து:)).. ச்ச்ச்ச்ச்சும்மா சவுண்டு மட்டும் விடத்தான் தெரியும்:)).. ஹா ஹா ஹா ஹையோ நித்திரையிலயும் அவவுக்கு அதிரா பேசினால் காது கேட்டிடுமாக்கும்:)).

      நன்றி ஜே கே ஐயா.

      நீக்கு
    2. krrrrrrrrrrrr நான் இந்தியாவில் இருந்து எல்லா வற்றலும் போட்டு எடுத்து வந்திருக்கேனே! நான் ஏன் இங்கேருந்து கொண்டு போகணும்! அதிரடிக் கொத்தவரை அதிரா! இதுக்காகக் கனடா போய்க் கொண்டு வர உங்களுக்குத் தான் தெரியும்.

      நீக்கு
  9. வத்தல் செஞ்சு செஞ்சு வத்திப்போய் விட்டீர்களா எதையும் பதிவிட எங்கள் ப்ளோக் இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி ஐயா பக்கம் ஏன் இவ்ளோ புகை வருதூஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பூ மீ ரொம்ப நல்ல பொண்ணு:)).. வத்தல் என்ன சிம்பிளான விசயமோ ஜி எம் பி ஐயா?? சாப்பிடப்போகும்போது பிளேட்டில் பார்க்க சிம்பிள் போலத்தான் இருக்கும் ஆனா ஒரு சாம்பாறை விட கஸ்டமான விசயம் தெரியுமோ இது.

      நீக்கு
    2. எனக்கு கொத்தவரை வத்தல் பிடிக்காது அதற்கும் ஒருபதிவா என்றதும் வந்தபின்னூட்டமது

      நீக்கு
    3. உண்மை...

      ஆனால், அவர் சொல்ல வந்த விஷயமே வேற... அது உங்களுக்கு அல்ல...

      நீக்கு
    4. ஆஆஆஆஆஆஆஅ ஹையோ ராமா என்ன நடக்குதிங்க.. மீ ஓடிடுறேன் தேம்ஸ்க்கு:))

      நீக்கு
  10. கொத்தவரை வற்றல் - எனக்கும் பிடிக்கும். இப்போது பலரும் வீட்டில் போடாமல் கடைகளிலேயே வாங்கி விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.. கடையில் வாங்கிச் சாப்பிடுவதனாலதான் சிலருக்கு இதைச் செய்வதன் கஸ்டம் புரியாமல் ச்சோ ஈசி எனச் சொல்கிறார்கள்.. அவிக்கும்போது பதம் தப்பிட்டாலும் கதை கந்தலாகிடும்.

      இங்கு எங்குமே இந்தக் கொத்தவரை வத்தல் கிடைக்கவில்லை, அதனால எனக்கு ரெசிப்பி பார்த்ததும் எப்படியும் செய்து, அது எப்படி இருக்கும் என சாப்பிட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது, அதனாலேயே செய்தேன். இங்கும் கொத்தவரைக்காய் எப்பவும் கிடைக்குது ஆனா வத்தலைக் கண்டதும் இல்லை சாப்பிட்டதுமில்லை இதற்கு முன்.

      நீக்கு
  11. ஆஹா அதிரா ரெசிப்பி. ரொம்ப நல்லா வந்திருக்கும். செய்து நாளாச்சு. செய்முறை அழகாக் கொடுத்து இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா. எனக்கு எதையும் செய்தவுடன் போட்டிட ஆசை, ஆனா இங்கு அது முடியாதென்பதாலதான் அனுப்பாமல் இருந்துவிட்டேன் பல காலம். வத்தல் நன்றாக வந்திருக்கு ஆனா எனக்கு அதன் சுவை என்னமோ பெரிதாக பிடிக்கவில்லை:(.

      நீக்கு
  12. சுண்டைக்காய் நல்லா. செய்திருக்கீங்க. கண்ணுக்குக் குளிர்ச்சியான.. படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா உந்தச் சுண்டைக்காயின் பின்னால பெரிய ஸ்ரோறியே இருக்கு:).. இது அண்ணி வாங்கினா ஒரு பாக் சுண்டங்காய்.. ஆனா அவவும் வேர்க் போவதால சமைக்க முடியாதென டக்கென பிரிஜ்சால தூக்கி லபக்கென காபேஜ் பின்னினுள் போட கையை நீட்டினா, நான் எட்டிப் பாய்ஞ்சு இப்போ எதுக்கு வீசுறீங்க என்றேன், இலை அதிரா இக்கிழமை இதைச் செய்ய முடியாது, இது பிரிஜ்ஜில் இருந்து பழுதாகி எறிவதை விட, இப்பவே எறிகிறேன் என்றா..

      சே..சே.. அவர்கள் தமிழ்கடை அதிகமுள்ள இடத்தில இருப்பதால இவ்ளோ மலிவாக இருக்கு. இங்கெனில் எங்களுக்கு குதிரைக்கொம்புபோலத்தான் கிடைக்கும், அதனால எனக்கது பெரிய அருமையான ஒன்று, உடனே எடுத்து வந்து, நானே குத்தி வதக்கி சமைச்சுப்போட்டேன்:)).. இது சமைக்கவும் பொறுமை வேணுமெல்லோ:)) எங்கள் வீட்டிலும் இதைச் சமைக்க பொறுமை உள்ளோர் குறைவு[அதிராவைவிட:)] ஹா ஹா ஹா

      நீக்கு
  13. ஆஆஆஆ நானும் வந்திட்டேன், அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இண்டைக்கு ஒரு விசயம் பண்ணிட்டேன்:)) ஆனா நான் சொல்லாமலேயே நீங்க போகப் போகக் கண்டு பிடிப்பீங்க:).

    நன்றி ஸ்ரீராம், ஆருக்குமே ஒழுங்காக குறிப்புத்தெரியாத:), அதிராவின் கொத்தவரை வத்தல் ரெசிப்பி போட்டமைக்காக:)... ஹா ஹா ஹா.. இது என் கன்னி ரெசிப்பியாக்கும்.

    இன்னொன்று சொல்லோணும் எங்களுக்கு ரைம் மாறிவிட்டதே.. இப்போ 7.35 அல்ல:).. 6.35 ஆக்கும்.

    ஆனா பழக்கதோசம் பழைய ரைமுக்கே முழிப்பு வருது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா - Rhyme என்பதை எப்படிச் சொல்வீர்கள்?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கெள அண்ணன் நாங்கதான் உங்களைக் கிளவி சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே கேள்வி கேட்போமாக்கும்:)).. நீங்க கேட்பதற்குத் தடா:))..

      அது ச்ச்ச்சோ ஈசி .. றைம்:)).. இது தெரியாதோ கெள அண்ணன்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. அதிரா Times now என்பதை எப்படிச் சொல்வீர்கள்?

      நீக்கு
    4. இதெல்லாம் எனக்கு யூயூபி கெள அண்ணன்:)...
      ரைம்ஸ் நவ்:)))))

      நீக்கு
    5. At times, reciting rhymes in a tea shop will be a risky and tricky matter for rich people. If they drink rich Bru tea, it may be easy. இதை எப்படி சொல்வீர்கள்?

      நீக்கு
    6. என்ர வைரவா.. பழனிமலை முருகா உன் கந்த சஷ்டியை ஆரம்பிச்சதுக்கு வந்திருக்கும் உந்தன் திருவிளையாடல்களோ இது.... ..ஙேஙேஙேஙேஙே:)).. இருப்பினும் பூஸோ கொக்கோ:)).. மின்னி முழக்கிட மாட்டேன்ன்:)).

      அற் ரைம்ஸ், ரிசைட்டிங் றைம்ஸ் இன் எ ரீ ஷொப் வில் பீ றிஸ்க்கி அண்ட் ட்றிக்கி மட்டர் 4 றிச் பீப்பிள். இஃப் தே ட்றிங் றிச் ப்புறூ ரீ, இட் மே பீ ஈஸி:).. ஹா ஹா ஹா இதுக்கு மேல மீ இங்கின நிற்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:))

      நீக்கு
    7. உங்க பதில் பாணியே தனி. இங்கிலீஸு, தமிளு எல்லாமே காலி!
      எங்க நாட்டில் எப்போதாவது ஒருவருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுப்பதுபோல், உங்களுக்கு ‘பாஷா ரத்னா’ எனக் கொடுத்தேவிடலாம்.

      நீக்கு
    8. ஏ அண்ணன் அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே:)) காக்கா போயிடுங்கோ ஹா ஹா ஹா:))

      நீக்கு
  14. கொத்தவரை வற்றல் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

    நான் சாப்பிட்டு பலப் பல வருடங்கள் இருக்கும். மோர் சாத்த்துக்கு மட்டும் சாப்பிடலாம்

    காய் இல்லாதபோது இந்த வற்றலைவுபயோகித்து குழம்பு செய்வாங்க.

    சம்மர்ல செஞ்சு ரெசிப்பி அனுப்பினால் எங்கள் பிளாக்ல வின்டருக்குத்தான் வெளியிடுவாங்களா? இல்லை நீங்க அனுப்பினதே லேட்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இந்த வத்தலிலும் குழம்பு செய்யலாமோ.. நான் இம்முறை வெண்டிக்காய் வத்தல் வாங்கி வந்து குழம்பு செய்தேன் சூப்பராக இருக்குது.

      ஆனா இந்தக் கொத்தவரை வத்தல் தொட்டால் உடைஞ்சுவிடும் போல மொறுமொறுப்பாக இருக்குதே நெ.தமிழன். புட்டோடு சாப்பிட நன்றாக இருக்குது.

      //சம்மர்ல செஞ்சு ரெசிப்பி அனுப்பினால் எங்கள் பிளாக்ல வின்டருக்குத்தான் வெளியிடுவாங்களா//
      ஹா ஹா ஹா இப்போதானே விரதகாலம்.. அதனாலதான் போலும்:)

      நீக்கு
  15. கொத்தவரங்காய் வற்றலுக்கு, தமன்னா படம்தான் சரியாக வந்திருக்கும். அனுஷ்கா படம் பூசணிக்காய் வற்றலுக்குத்தான் போடவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு லேட்டாக இந்த அரிய பெரிய கருத்தை வெளியிட்டு யாருக்கு, என்ன உபயோகம் !

      நீக்கு
    2. அடுத்த வத்தலுக்கு உபயோகமாக இருக்கட்டுமே!

      நீக்கு
    3. அடுத்த வத்தல்!...

      வற்றலுக்குத்
      தொற்றலாகும் மனமே..
      அது முற்றல் என்று
      அறியாயோ மனமே...

      கற்றலுக்கும் கேட்டலுக்கும்
      காணிப்பொன் சேர்ந்திருக்க
      உற்றலாகா ஒன்றின் மேல்
      பித்தெதற்கு மனமே..

      கொற்றவரை விட்டுவிடு
      பற்றதனை விட்டுவிடு..
      பித்ததனைத் தள்ளிவிடு
      சற்றிரங்கி நீ கேட்பாய் மனமே...

      நீக்கு
    4. //கொத்தவரங்காய் வற்றலுக்கு, தமன்னா படம்தான் சரியாக வந்திருக்கும். அனுஷ்கா படம் பூசணிக்காய் வற்றலுக்குத்தான் போடவேண்டும்.//

      ஹா ஹா ஹா கெள அண்ணன் ஏன் ஸ்ரீராம் ஊரில இல்லையோ:)).. இவ்ளோ தெகிறியமாக உண்மையைப் பேசுறீங்க:)).. நெல்லைத்தமிழனுக்கு இப்போ 40 பாகை சி யிலும் உச்சி குளிர்ந்திருக்குமே பலாப்பழம் சாப்பிட்டதைப்போல:)) ஹையோ ஹையோ:))

      நீக்கு
    5. ஏ அண்ணன் அது வந்து உங்களுக்கு உண்மை தெரியாது:).. காலையில ஸ்ரீராம் கம்பிமேல இருந்தவரெல்லோ:)) அந்நேரம் கெள அண்ணன் கட்டிலுக்குக் கீழ:)) இப்போ ஸ்ரீராம் நாட்டில் இல்லை என்பதைக் கன்ஃபோம் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறார்ர்:)) அடிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)) ஹா ஹா ஹா..

      துரை அண்ணனுக்குப்
      பிடிக்காத கொத்தவரைமேல
      இவ்ளோ பிரியமாகக் கவிதை
      வருதே ஹா ஹா ஹா.

      நீக்கு
    6. // கற்றலுக்கும் கேட்டலுக்கும்
      காணிப்பொன் சேர்ந்திருக்க
      உற்றலாகா ஒன்றின் மேல்
      பித்தெதற்கு மனமே//
      ஆஹா வத்தக்குழம்பாக சுவைக்கும் கவிதை வரிகள்!

      நீக்கு
    7. /@கேஜிஜி சார் - /கொத்தவரங்காய் வற்றலுக்கு, தமன்னா படம்தான் சரியாக வந்திருக்கும்// - மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி - இந்த பழமொழிக்கு அர்த்தம், நானும் ஸ்ரீராமும் இன்று இங்க வரும்போது கேஜிஜி சாருக்குப் புரியும்.

      நீக்கு
  16. சங்கொத்தவரை அதிராவின் ரெஸிப்பி! மதியத்தில் வரப்பார்க்கிறேன்..
    மாலையில்தான் எபி-யின் கடை சாத்திவிடுவார்களே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் விழித்திருப்போம், பசித்திருப்போம், தனித்திருப்போம்!

      நீக்கு
    2. ஏ அண்ணன் இந்தியாவிலதான் கடை சாத்திப்போடுவினம், இங்கின நானும் அங்கின கீசாக்காவும் முழிச்சிருப்போம் நீங்க வாங்கோ:)).. இதில கெள அண்ணன் வேறு தனித்திருப்பாராம்.. அதுதான் கொஞ்சம் பயம்ம்ம்ம்மாக்கிடக்கூ வர... ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. //
      ஏகாந்தன் !28 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:52
      சங்கொத்தவரை அதிராவின்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஏ அண்ணனுக்கும் இப்போ 90 வயசோ:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
  17. நிற்க. கொத்தவரங்காயில் பித்தம் அதிகம். அதை அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டால், தொண்ணூறு வயதில் பைத்தியம் பிடிக்குமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதாவது சொன்னீர்கள்...
      பைத்தியம் பிடிக்கும் என்று!...

      நான் கொத்தவரங்காயே சாப்பிடுதில்லை..

      நல்லவேளை.. நான் தப்பித்தேன்...

      நீக்கு
    2. //தொண்ணூறு வயதில் பைத்தியம் பிடிக்குமாம்.//
      கெள அண்ணன்.. கொஞ்சம் இருங்கோ நான் லிஸ்ட் ரெடி ஆக்கிறேன்ன்:)) இங்கு ஆரெல்லாம் 90 ஐ நெருங்குகின்றனர் என:)).. எனக்கு அஞ்சுமேலதான் முதல் டவுட்டே:))

      நீக்கு
    3. என்னிக்குமே வயசை பற்றி நானா பேசினதே இல்லையே அது  உலகத்துக்கே தெரியும் எப்பவும் வயதை பற்றி பேசுரங்களுக்கு தான் ஏஜோமேனியா போஃபியா  சயன்டிபிக்கா சொல்லனும்னா ஹாஹா உங்களுக்கு Gerascophobia

      நீக்கு
    4. //சயன்டிபிக்கா சொல்லனும்னா ஹாஹா உங்களுக்கு Gerascophobia//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு பப்புளிக்குப் பிளீசில வச்சுக் கெள அண்ணனை உப்பூடிக் கெட்ட வார்த்தையால எல்லாம் திட்டப்பிடாது அஞ்சு:)) என்னா பழக்கம் இது:)). அதிராவைத்திட்டினால்கூட ஓகே:)).. ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊ:))

      நீக்கு
    5. garrrrrrr @athiraaa sangamithraaa this is for yoooooooo

      //என்னிக்குமே வயசை பற்றி நானா பேசினதே இல்லையே அது உலகத்துக்கே தெரியும் எப்பவும் வயதை பற்றி பேசுரங்களுக்கு தான் ஏஜோமேனியா போஃபியா சயன்டிபிக்கா சொல்லனும்னா ஹாஹா உங்களுக்கு Gerascophobia//

      நீக்கு
  18. @ஸ்ரீராம்  அடுத்த வாரம் என்னோட ரெசிப்பி :)
    பச்சை தண்ணீரை  சுடு தண்ணியாக்குவது எப்படி ? காணொளிப்பதிவா வரப்போகுது எல்லாரையும் ரெடியா யிருக்க சொல்லிடுங்க ஹாஹா ஹூ 
     கௌதமன் சார் பதில்களை ரெடி பண்ணிட்டாரா ? புதன் பதிவு எட்டி பார்த்தது ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் லோயரை ரெடி பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.. அஞ்சுவை டிவோஸ் பண்ணப்போகிறேன்ன்ன்ன்ன்.. இதுக்கு கெள அண்ணன் ஜாட்சிக் கை எழுத்துப் போடோணும்ம்ம்ம்ம்ம்ம்:))).. யுடு டண்ணி வைக்கத்தெரியாதோரை எல்லாம் செக்:) ஆக்கியிருக்கிறேனே என நினைச்சே லோயரிடம் ஓடுறேன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
    2. // புதன் பதிவு எட்டி பார்த்தது// தடங்கலுக்கு வருந்துகிறோம்!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா தலைப்பை மாத்திடுங்கோ கெள அண்ணன்:))

      நீக்கு
  19. கொத்தவரங்காய் ஒரேஒருமுறை சமைத்தேன் :) சுவை பிடிக்கலை :)  அதனால வாங்கறதில்லை அது சரி வற்றலில் கறி பவுடர் மசாலா சேர்ப்பங்க என்றஅரிய குறிப்பை  அறிய தந்ததற்கு நன்றீஸ் மியாவ் :)நிறைய கும் மி அடிக்க இயலா காரணம் ..சரி எங்காவது யாராவது தேடினா ஏஞ்சல் பிசினு சொல்லிடுங்க :))எனக்கு பணம் பரிசு தீபாவளி அன்பளிப்பு கொடுத்தா பத்திரமா வாங்கிக்கோங்க எனக்கு அனுப்பவும்  அடி உதை திட்டை நீங்களே வச்சிக்கோங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்தவரையை வதக்கிப் போட்டுப் பழப்புளி விட்டு காரக்குழம்புபோல வச்சால் அதன் சுவையே தனி அஞ்சு, இல்லை எனில் பொரிச்சுப்போட்டும் வைப்போம் கொஞ்சம் றிச் சாக:))).. சூப்பராக இருக்கும்.

      சரி சரி, பாம்புக்குட்டி பல்லி முட்டாய் எல்லாம் கிடைச்சது தேம்ஸ்கரைக்கு வாங்கோ தருகிறேன் டீவாலி பரிசு:)).. நீங்க இப்போ முளுநேர டொலிலாலி:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    2. ஏஞ்சல், கொத்தவரை உசுலி செய்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும், கொத்தவரை சாம்பார் நன்றாக இருக்கும். ஆனால் வாய்வு தொந்தரவு. அதுதான் சிலர் நிறைய பயன் படுத்த மாட்டார்கள்.

      நீக்கு
  20. எனக்கு கொத்தவரை ரெசிப்பியைவிட அந்த சுண்டக்கா பிரட்டல் அதிகம் அட்ரக்க்டிங்கா இருக்கு ஸ்ஸ்ஸ்ஸ் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு வித்தியாசமான சுவைதான் அஞ்சு... வேற லெவல்:).

      நீக்கு
    2. @அதிரா..... ஏஞ்சலின்லாம் அரவிந்தசாமி மாதிரி. (பெண் பார்க்கப் போயிட்டு தங்கச்சி நல்லா இருக்கு என்று சொல்ற டைப்). எவ்வளவு அழகா கொத்தவரை வத்தல் எழுதியிருக்கீங்க. அதை விட்டுட்டு, சுண்டக்கா பிரட்டல் நல்லாருக்காம்.

      நீக்கு
    3. அதானே! அதிரா - விடாதீங்க புடிங்க!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அது எனக்கு இப்போ பழகிப்போச்சு:))... இனிமேல் தங்கச்சியைப் பொண்ணு காட்டுவதாயின்.. அக்காதான் பொண்ணு எனச் சொல்லி கூட்டி வர வேண்டியதுதான் ஹா ஹா ஹா:))..

      எங்கே புடிக்கிறது கெள அண்ணன்.. இன்று முதல் நாளே:) தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பது போல வருதே ஹா ஹா ஹா:))..

      நீக்கு
  21. கனடாவுலபோய் கொத்தவரங்கா வத்தல் தரிசனம் தந்திருக்கு உங்களுக்கு. நீங்களும் அதப் புடிச்சு மசாலவெல்லாம் போட்டு பெரட்டோ பெரட்டுன்னு பெரட்டி, பொறிச்சு எடுத்துவச்சிட்டீங்க. கூடவே அந்த சு.பிரட்டல் எதுக்கு? தீபாவளி இலவச இணைப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏ அண்ணன் உங்கட கொமெண்ட் பார்த்து சிரிச்சு உருள்கிறேன் ஹையோ ஹையோ:)).. உங்களுக்கு அதிராவின் தெக்கினிக்கி இன்னும் புரியல்ல:)).. பாருங்கோ கொ. வத்தலை மட்டும் போட்டால் சிலர் ஏசிப்போட்டுப் போயிடுவினம்:)).. இது இலவச இணைப்பாக மானே தேனே போட்டிருப்பதால்.. அதைப் பார்த்து ஆறுதலடைவோரும் இருக்கினம் ஹா ஹா ஹா...

      நீக்கு
  22. கொத்தவரங்காய் வத்தல் குழம்பு அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரரே. கொத்தவரங்காய் மாங்கொட்டை, மனத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல்கள், இதிலெல்லாம் வத்தல் குழம்பு செய்தால், மிக அருமையாக இருக்கும். இதற்கு எனக்குத் தெரிந்து பருப்பு துவையல் மிகப் பொருத்தம்.

      நீக்கு
    2. ஓ அப்படி எனில் முயற்சித்துப் பார்க்கிறேன் ஏ அண்ணன். மிக்க நன்றி.

      நீக்கு
    3. மாங்கொட்டை வத்தலோ? என்ன சொல்றீங்க கமலாக்கா? மாங்காய்வத்தல்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      என்னிடம் சுண்டங்காய், மணத்தக்காளி, வெண்டிக்காய் வத்தல் கைவசம் இருக்கிறதே இப்போ:).

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா இன்று கந்தசஷ்டி தரிசனம் பண்ண பழனிமுருகனிடம் போயிருக்கிறா போல இருக்கே.

      நீக்கு
    2. இன்று தங்கை மகன்களை பார்க்க அவள் வீட்டுக்கு போய் விட்டேன் . உறவினர்கள் மற்றும் நிறைய பேர் சேர்ந்து விட்டோம், அதனால் கோவில் போக முடியவில்லை, தங்கை மருமகள் சமைக்க நாங்கள் கூட மாட ஒத்தாசை செய்ய என்று பொழுது பேத்திகளுடன் (அண்ணன் பேத்தி, தங்கை பேத்தி) பொழுது இனிமையாக போச்சு.
      வீட்டில் கந்த சஷ்டி கவசம் மட்டும் படித்து விட்டேன். கந்த புராணம் படிக்க வேண்டும் இரவு தூங்க போகும் போது கொஞ்சம் படித்து விட்டு தூங்க வேண்டும்.

      நீக்கு
  24. குண்டுக் காக்கா கதை எழுதி இருக்கிறேன் அதன் சுட்டி கீழே. அந்த காகத்திற்கு மாமி போடும் கொத்தவரைக்காய் வற்றல் பிடிக்கும்.

    https://mathysblog.blogspot.com/2012/07/blog-post_16.html

    படித்துப் பாருங்கள்.

    என் மாமியார் மோர் போடாமல் இப்படி மிளகாய்த்தூள் போட்டு தான் காய வைப்பார்கள். வறுத்து சாப்பிட ருசியாக இருக்கும்.இலங்கை ஓட்டலில் கொத்தவரை வற்றல் வறுத்து தருவார்கள் மண் சட்டி தயிர் சாதத்திற்கு , நன்றாக இருக்கும்.

    செய்முறை படங்கள் நன்றாக இருக்கிறது.

    சாரணவேர் கிடைக்கிறது கடையில் என்றால் மகிழ்ச்சி. மேல் கால் வலிக்கு அதை கஞ்சியில் போட்டு வேக வைத்து தருவார்கள் மகப்பேறு காலத்தில், அப்பூறம் பிரசவ லேகியத்திற்கும் அது மிகவும் தேவைபடும்.
    அதற்கு இன்னொரு பேரும் உண்டு மூக்கரட்டை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ போய்ப் பார்க்கிறேன் கோமதி அக்கா. ஓ இதை மோரில் ஊற விட்டும் செய்வினமோ..இலங்கை ஹோட்டலில் கிடைச்சதோ மிக்க மகிழ்ச்சி.

      எனக்குத் தெரியாது, ஊரிலிருந்து மாமி அனுப்பியிருந்தவ, அப்போதான் இது எதுக்கு எனக் கேட்டபோது, குழந்தை பிறந்தோருக்கு சரக்குகறி அரைக்கும்போது இந்தா சா வேரையும் சேர்த்து அரைப்பார்களாம், நாங்களும் இங்கு இடைக்கிடை அப்படி மீன் சேர்த்து சரக்குகறி சமைப்பதுண்டு.. அதுக்கும் போடலாம், மற்றும்படி சாதாரணமாக வைக்கும் ரசத்தில் போடுங்கோ என்றா, நான் இப்போ அடிக்கடி ரசம் வைக்கும்போது போட்டு விடுகிறேன்... மூக்கரட்டை கேள்விப்பட்டதில்லை ஆனா ஊரில ஒரு புளிக்கீரை உண்டு அதன் பெயர் மூக்கறச்சி:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
  25. //பின்பு காயப்போட்டு ஒருவரைக் காவலுக்கு வைக்கோணும்:)).//

    காவலுக்கு ஆள் இல்லாமல் வற்றல் போன மாயம் என்ன என்று கவலை பட்டு கண்டுப்பிடிப்பது என் கதையில் .

    //சே..சே.. அவர்கள் தமிழ்கடை அதிகமுள்ள இடத்தில இருப்பதால இவ்ளோ மலிவாக இருக்கு. இங்கெனில் எங்களுக்கு குதிரைக்கொம்புபோலத்தான் கிடைக்கும், அதனால எனக்கது பெரிய அருமையான ஒன்று, உடனே எடுத்து வந்து, நானே குத்தி வதக்கி சமைச்சுப்போட்டேன்:))..//

    அதானே! அதிராவிற்கு சுண்டைக்காயின் மாகிமை தெரிந்து இருக்கிறது, பொறு சாலி வேறு,அதுதான் சுண்டைக்காய் பிரட்டலும்,

    குறிஞ்சாச் சுண்டலும் சூப்பராக செய்து இருக்கிறீர்கள்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கோமதி அக்கா, சமையல் வகையில் எனக்கு பொறுமை அதிகம்... எனக்கு ஊர் சுற்றுவது, வீடு கிளீனிங் இது இரண்டும் பெரிசா பிடிக்காது:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள்.

      நீக்கு
  26. இன்று வேறு சில வேலைகளும் இருந்தமையால் லீவு போட்டேன், அதனாலேயே இங்கும் பேச முடிஞ்சது.. இனி நாளைக்கு வேலை.. இனி ஒரு அழகிய காலை/மாலைப் பொழுதில் அனைவரையும் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்.. டமில் ஆங்கில வித்தகி ... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஏ அண்ணன் கம்பைக் கீழ போடுங்கோ கர்ர்ர்:)) அப்பூடி என்ன ஜொள்ளிட்டேன் இப்போ:)) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு பாய் பாய்.. நல்லிரவு.. எல்லோருக்கும் கொத்தவரை வத்தல் கனவுகள்[தமனாக்காவைச் சொல்லல்லே கர்:))].

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ! கொத்தவரை வத்தல் கனவுகள் என்றால், வத்தல் காணும் கனவா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இல்ல கெள அண்ணன் அது வத்தல் போடும் கனவு:))

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!