வியாழன், 24 அக்டோபர், 2019

மன்னர் கோட்டையில் தங்க புதையல்


"வறண்ட மனதில் பசுந்தளிர்  போல துளிர்த்தாள்" "பாலைவனத்தில் சோலை போல வந்தாள்" என்றெல்லாம் வர்ணனை வரிகள் கதைகளில் வருமல்லவா?  அது நினைவுக்கு வருகிறது இந்தப் படத்தைப் பார்த்தால்.  

'வாழ கொஞ்சம் வழி கிடைக்காதா,  துளிர்த்து விடுவோம்' என்று,  என்ன ஒரு நம்பிக்கையுடன் அந்தக் காய்ந்த சருகுகளுக்கு இடையில் துளிர்த்து வருகிறது பாருங்கள்..  தளர்ந்த மனங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்...  முதியோர்களுக்கிடையே எதிர்பாராமல்  தவழும் ஒரு அனாதைக் குழந்தை போல!

இடம் எங்கள் மொட்டை மாடி!

உங்கள் வித்துகளிலிருந்து கருவானேன் 
உங்கள் சத்துகளிலிருந்து உருவாகிறேன் 
அருகாமையில் கிடக்கும் சருகோரே -உம்மிலிருந்து 
உருவாகும் என்னை வாழ்த்துங்கள், வளரவிடுங்கள் 
உயிராவேன் பயிராவேன் மரமாவேன் உங்களுக்கு நிழலாவேன் 




==========================================================================================================

ஒரு சாதுவின் கனவில் புதையல் இருக்கிறது என்று தகவல் வந்ததாய்ச் சொன்னதும் அரசாங்கமே முனைந்து புதையலைத் தேடியிருப்பது ஆச்சர்யம்!  இதை 2013 இல் செய்தி வெளிவந்தபோது பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.  அதன் பின் நிகழ்வுகள் பற்றி தேடியபோது கிடைத்தவைகளையும் இங்கு பகிர்கிறேன்.






மன்னர் கோட்டையில் தங்க புதையலா ? தேடுதல் வேட்டையில் தொல்லியல் துறை :
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே உன்னா மாவட்டத்தில் உள்ளது தாண்டியாகேரா கிராமம். இத்தனை நாள், வெளி உலகத்திற்கு தெரியாமல், அமைதியுடன் இருந்த இந்த கிராமம், கடந்த இரு தினங்களாக அல்லோகலப்பட்டு வருகிறது. ஒரே இரவில், சுற்றுலா தலமாக மாறிவிட்ட இக்கிராமத்தில் தற்போது, உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் குவிந்துள்ளனர். சட்டம், ஒழுங்கு குலையாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா?. அங்குள்ள தங்க புதையல் தான். 19ம் நூற்றாண்டில், இப்பகுதியை ராஜாராம்பக்சிங் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அப்போது, இக்கிராமத்தில் ஒரு கோட்டையை கட்டினார்.
ஆங்கிலேயர்களுடன் 1857ல் ஏற்பட்ட போரில் மன்னர் ராஜாராம்பக்சிங் வீர மரணம் அடைந்தார். அப்போது இருந்தே கோட்டையில் தங்க புதையல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்பகுதிக்கு சென்ற சிலர் கோட்டையைச் சுற்றி பார்க்கும் போது, வெள்ளிக் காசுகளை கண்டெடுத்தனர். கோட்டையில் பெரும் புதையல் இருப்பதாக தாண்டியாகேரா கிராமத்தில் வழி, வழியாக கதைகள் பேசப்பட்டு வந்தன.

சாது கண்ட கனவு : 

இந்நிலையில், இக்கிராமத்தில் வசித்து வரும் சாதுவான, சோபன்சார்க்கார் என்பவர் ஒரு கனவு கண்டார். அதில், ராஜராராம்பக்சிங் கட்டிய கோட்டையில், ஏராளமான தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிந்தார். இது குறித்து அவர் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால், அவர்கள் சாதுவின் பேச்சை நம்பவில்லை. அலட்சியமாக இருந்தனர். இதையடுத்து, மத்திய அரசுக்கு சோபன்சர்க்கார் கடிதம் எழுதினார்.
தொல்லியல் துறை களம் இறங்கியது: மத்திய அரசு, இணை அமைச்சர் மகந்த்தை அனுப்பி, ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் திருப்தியடைந்த அமைச்சர், புதையல் குறித்து தொல்லியல் துறையை கொண்டு சோதனை நடத்தலாம் என, அறிக்கை அளித்தார். இந்நிலையில், உள்ளூர் நிர்வாகமும், தங்க புதையல் குறித்து கோட்டையில் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையும், புவியியல் துறையும் இணைந்து ராஜாராம்பக்சிங் கோட்டையில் தங்க புதையல் குறித்த சோதனையை துவக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
கோர்ட்டில் மனு :

இதன்படி, இன்று காலை தொல்லியல் துறை புதையல் தேடும் பணியை துவக்கியது. இதற்காக, கோட்டையில் 100 சதுர அடிக்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், புதையல் குறித்த சோதனையை, கோர்ட் கண்காணிப்பின் பேரிலேயே நடத்த வேண்டும் என, வக்கீல் சர்மா என்பவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்த மறுத்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், அடுத்த வாரத்திற்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

[ தினமலர் ]


இது இப்போது என்ன ஆயிற்று என்று தேடியபோது கிடைத்த விக்கி தகவல்.

அதைப்பற்றி அடுத்த வருடம் ஹிந்து பேப்பரில் வந்த செய்தி...    கிராமமே இன்னமும் தங்கக்கனவில் என்று!

இது பற்றிய காணொளிகள் 123    

எல்லாமே ஹிந்தியில்தான் போலுகிறார்கள்!  அப்போதைய பிரமுகர் மோடியின் கருத்து பற்றி விக்கியில் காணலாம்.


============================================================================================================


ஏகாந்தன் ஸார் பகிர்ந்த 'அஸம்பவா' பற்றிப்பேசியபோது நான் எழுதித்தொலைத்த (இரண்டு அர்த்தங்களிலும்!) கவிதையைப் பகிர்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.  இதோ அது!

பத்துப் பாத்திரம் தேய்க்கவில்லை 
பாதித்துணி தோய்க்கவில்லை 
விட்டுப்போன வேலைகள் -வீட்டில் 
இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு 
படிக்க புத்தகம் பாக்கியிருக்கு - கணக்கு 
பார்க்க வேண்டியவை காத்திருக்கு 
பணத்தைப் பங்கு 
பிரிக்கவில்லை - அவை 
பாத்தியதை யாருக்குன்னு 
சொல்லவில்லை 
பஜ்ஜி போண்டா சாப்பிட்டு 
நாளாச்சு 
பாஸந்தி ஆசையும் கொஞ்சம் இருக்கு 
இப்போ வந்து அழைக்கிறாயே 
காலா 
இன்றுபோய் இன்னொரு நாள்  வாயேன் 


==============================================================================================================================


கோபுலுவின் சித்திரங்கள்...   தாவணிப்பெண்ணும், வேஷ்டி வாலிபனும்...

காதலுக்கு ஒரு படம்...


ஊடலுக்கு ஒரு படம் 

சோகம் அல்லது பிரிவுத்துயருக்கு ஒரு படம்...


============================================================================================================================


எழுத்தாளர் ஏகாம்பரத்தின் நியாயமான கோபம்!


==================================================================================================

தீபாவளி நெருங்கும் நிலையில் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் எப்படி?!!  பழசை புதுசாக்கிவிடுவோம்.  தீபாவளியின் பழைய சுவாரஸ்யங்கள் இப்போதெல்லாம் இல்லை. எனக்கு என்று தனியாகச் சொல்லவில்லை.   இப்போது யாருமே தீபாவளியை பழைய பாணியில் கொண்டாடுவதில்லை.  இன்னும் இருபது முப்பது வருடங்களில் தீபாவளியே கொண்டாடப்படுமோ இல்லையோ....



165 கருத்துகள்:

  1. கீதா ரெங்கனுக்குஇருக்கும் பிரச்னையில் காலையில் அவரால் இணையத்துக்கு வரமுடியும் என்று தோன்றவில்லை!

    பதிலளிநீக்கு
  2. சலசலக்கும் இலையானாலும்
    சரசரக்கும் சருகானாலும்
    மக்கள் பணியில் என் மனம்
    மண்ணைக் காப்பது என் குணம்...

    செடியும் மரமும் சொல்லாமல்
    சொல்லும் வார்த்தைகள்....
    கொல்லாமல் கொல்லும்
    குத்தீட்டிகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் அறிவதில்லை மரத்தின் மாண்பை.  அதுதான் சோகம்.

      நீக்கு
    2. உண்மை. ஆனாலும் முளைக்க வேண்டிய இடத்தில் அல்லவோ முளைக்கணும்! அரச மரம், ஆல மரம் எல்லாம் வீட்டருகே முளைக்கக் கூடாது. வேர் ஓடிப் போய் வீட்டு அஸ்திவாரத்தையே பாதிக்கும் என்பார்கள். வேப்பமரம் வீட்டு வாசலில் இருந்தால் நல்லது.

      நீக்கு
    3. எங்கள் வீட்டு அருகிலும், வாசலிலும் வேப்பமரம் உண்டு.  பின்னால் அரசமரம் இருக்கிறது - 26 வருடங்களாய்!

      நீக்கு
  3. இன்றைய பதிவும் படங்களும் அருமை...

    குப்பைக் கூளங்களுக்கு இடையில்
    சுப்புக் குட்டியைக் கண்டு பிடியுங்கள் என்று சொல்லி விடுவீர்களோ...

    என்று இடையில் அச்சம் வந்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பு குட்டி எல்லாம் எங்கள் ஏரியாவில் சர்வசாதாரணம்..    வாலை ஆட்டிக்கொண்டு செல்லும் அளவு பழகிய சுப்புக்குட்டிகள் கூட சில வருடங்களுக்கு முன்னாலிருந்தன.  இங்கு மொட்டை மாடியில் ஏறி வாலாட்டும் அளவு இப்போது இல்லை!!!!

      நீக்கு
    2. சுப்புக்குட்டிங்களைப் பார்த்தே எவ்வளவோ நாளாச்சு! :( இங்கே பையர் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும்னு நினைக்கிறேன். போய்த் தேடிப் பார்க்கணும். மெம்பிஸில் பொண்ணு இருந்தப்போ அங்கே விதம் விதமாக் கலர், கலரா சுப்புக்குட்டிங்க சகஜமாப் போயிட்டு வந்து கொண்டு இருக்கும்.

      நீக்கு
    3. ஜாலியா இருக்கும் இல்லையோ? ரொம்பச் சோர்வாக இருக்கையில் இவங்க வரவு ஓர் புத்துணர்ச்சியைக் கொடுத்துட்டு இருந்தது! அதே போல் பேயார்! :) நல்லவேளையா எ.பி.க்கு வர பேயார் ரொம்ப நல்லவரா இருக்கார். பயமுறுத்தறதில்லை.

      நீக்கு
  4. கோபுலு அவர்களது ஓவியங்கள்
    கண்ணையும் கருத்தையும் கவர்பவை...

    அழகு.. அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...   ஆம்...    இவை சாவியின் 'வழிப்போக்கன்' கதைக்கு அவர் போட்டிருக்கும் ஓவியங்கள்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மொட்டை மாடியில் செடி முளைத்தால் அது கூரைக்கு ஆபத்து. கூரை ஒழுக ஆரம்பிக்கும். செடியைத் தோண்டி (வேரோடு) எடுத்துடுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  வணக்கம்.  நல்வரவும், நன்றியும்,  'எடுப்பதற்கு' முன் எடுத்த படம் இது!!!!

      நீக்கு
    2. கவிதை அருமை! இரண்டு பேரோடதும் தான்!

      நீக்கு
    3. நன்றி அக்கா...    இருவர் சார்பிலும்!

      நீக்கு
  6. உத்திரப்பிரதேசத்தில் புதையல் எடுத்த கதை (!!!!!!!) நானும் படிச்சேன். மற்றச் சுட்டிகளை நாளைக்காலை படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா....ஹா...    இன்னமும் தோண்டிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  7. கோபுலு படத்துக்குக் கேட்கணுமா? இவருடைய பிள்ளை வயிற்றுப் பேத்தி(அண்ணா பேத்தி) என் தம்பி பிள்ளைக்குப் பார்த்தாங்க! சரியா வரலை! தாத்தா வேண்டாம்னுட்டார். கிட்டத்தட்ட முடியறதுக்கு இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. ஆ! தாவணிப் பெண்களை இனி பார்க்கவே... முடியாதா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பக் கஷ்டம் ஏகாந்தன் ஸார்...  கார்ப்பரேட் பணியிடங்களில் இதற்காக ஒரு நாள் ஒதுக்கி பார்ட்டி நடத்துகிறார்கள்.  அன்று காணலாம்!

      நீக்கு
    2. தொலைக்காட்சி நாடகங்களில் தாவணிப் பெண்கள் வருகிறார்கள்.
      நான் நாடக விளம்பரங்களில் தான் பார்க்கிறேன் , நாடகம் பார்ப்பது இல்லை.

      நீக்கு
    3. தொலைகாட்சி நாடகங்கள் எலலாமே செயற்கை!  அதனால் அதுவும் !செயற்கையாக இருக்கும்.

      நீக்கு
  9. குர்த்தா, பைஜாமாவை அவ்வளவாகக் கண்டுகொள்ளாத தமிழ்நாடு, ஸல்வார்-கமீஸிடம் சரணடைந்துவிட்டதே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குர்த்தா பைஜாமா கூட ஏதாவது திருமணம், இலக்கிய விழா போன்றநிகழ்வுகளில்தான்!

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    இன்று கொஞ்சம் தாமதமாகி விட்டது. நேற்று விருந்தினர் வருகை, உபசாரம், அதன் விளைவு இன்று களைப்பு, தாமதம்.

    மொட்டை மாடியில் செடி வளர்ப்பு (தானாகவே) கவிதையும், செடியும் அருமை.
    அனைத்தையும் ரசித்துப் பார்த்து விட்டு பிறகு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  காலை வணக்கம். 

      இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. மொட்டை மாடி :- வர்ணனை வரிகளும் அருமை...

    சாதுவிற்கு வேறு ஏதோ ஆசை இருந்திருக்கிறது...!

    கோபுலுவின் சித்திரங்களை ரசித்தேன்...

    கவிதைக்கு முகநூலில் கொடுத்த கருத்துரையை இங்கும் :-

    என்ன தவறு செய்தேன்...? அதுதான் எனக்கும் புரியவில்லை...
    வந்து பிறந்துவிட்டேன்... ஆனால் வாழத் தெரியவில்லை...
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்,
    உலகம் தெரியாதா அம்மா...?
    விவரம் புரியாதா...?
    நான் உன்னை அழைக்கவில்லை...
    என் உயிரை அழைக்கிறேன்...
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில்,
    எண்ணம் மறைவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் தெரியாதா அம்மம்மா...விவரம் புரியாதா - இப்படித்தானே பாடல் வரி வரும், சந்தத்தில் உட்காருவதற்காக

      எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்

      நீக்கு
  12. மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. காய்ந்த சருகுகளிடையே ஒரு துளிர்! இது தான் நம்பிக்கை வெளிச்சம்! புகைப்படம் அருமை!

    பதிலளிநீக்கு
  14. பழைய ஓவியங்கள்‍! கோபுலுவின் கைத்திறனை நினைவுபடுத்தியதற்கு அன்பு நன்றி! இளம் வயதில் கோபுலு, வினு இவர்களின் ஓவியங்களை ரசித்து ரசித்துத்தான் ஏகலைவனாக வரைய ஆரம்பித்தேன். முதல் படம் எழுத்தாளர் சாவியின் ' வழிப்போக்கன்' என்ற தொடர்நாவல் என்று தோன்றுகிறது. சரி தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் படங்களுமே அந்த கதைக்கான ஓவியங்கள்தான்.  அந்தக்கதை பற்றி ஓரிரு வாரங்கள் முன்பு வியாழன் பகிர்வில் பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
  15. செடிக்கான கவிதை ஓகே.. (கற்பனை). ஆனால் மாடியில் வளர விடுவீர்களோ?

    புதையல் - அப்போதே செய்திபடித்துச் சிரித்துக்கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செடிக்கான கவிதை!   என்ன எழுதுவது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த போட்டோ கண்ணில் பட்டது.  அதை வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டேன்!  சமாளித்து விட்டேன்.

      நீக்கு
  16. கோபுலு ஓவியங்கள் உயல்பு, இயற்கை. வினு ஓவியங்கள் அழகியல். ஜெ.. கவர்ச்சி. மாருதி நாம்பார்க்கும் மாந்தர்கள்..கொஞ்சம் கிராமத்து முகங்கள். அவரை நகர கல்லூரி மாணவி படம் வரையச் சொன்னா சரியா வராதுனு தோணுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் சுஜாதா மாருதி, ஜெ உள்ளிட்ட ஓவியர்கள் அப்ற்றி சொல்லியிருந்ததைப் படித்தேன்.

      நீக்கு
  17. என் கதைக்கு ஏழு லெட்டர் நானே போட்டிருக்கேனே? //

    சில பதிவுகளுக்கு வரும் கருத்துரைகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது எனக்கு அந்த எண்ணம் ஏற்படுவதுணடு ;))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா...   இங்கு அந்த சந்தேகம் வந்திருக்காது என்றுநினைக்கிறேன் டி பி ஆர் ஜோஸப் ஸார்.

      நீக்கு
  18. //..காலா.. இன்றுபோய் இன்னொரு நாள் வாயேன்..//

    அவரு ஏற்கனவே நாள் நட்சத்திரம் பாத்துக்கிட்டு வாசப்படிக்கு அப்பாலே நிக்கிறாரு.. அவரிடம் போய் ’இன்னொரு நாள் வாயேன்’ என்றால், இதுதான் சாக்குன்னு 2026-லதான் வந்து நிப்பாரு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சீக்கிரமா இருக்கே ஏகாந்தன் ஸார்... ஆமாம்...  நீங்கள் எந்த காலாவைச் சொல்கிறீர்கள்?!!!

      நீக்கு
    2. எம்ஜிஆர், ஜெ- வழி, நாற்காலிக்கு வரப்போகிற திரைமுகம்பற்றியல்லவா சொன்னேன் !

      நீக்கு
    3. அந்த சந்தேகம் தட்டியதால்தான் கேட்டுக்கொண்டேன்!

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. //தளர்ந்த மனங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்... முதியோர்களுக்கிடையே எதிர்பாராமல் தவழும் ஒரு அனாதைக் குழந்தை போல!//

    நல்ல உதாரணம்.

    நாள் கிழமை வந்தால் சோர்ந்து தான் போகிறது மனம்.
    அத்தை மாமா இருந்தவரை தீபாவளிக்கு அங்கு போய் வந்ததால் மனது கஷ்டம் தெரியவில்லை.
    இப்போது மனது வேதனை படுகிறது. உடன் பிறந்தவர்கள் எல்லாம் தீபாவளி பலகாரங்களை கொண்டு வந்து கொடுத்து விட்டு அழைத்து போய் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளி பண்டிகை பழைய நினைவுகளை கிளறுகிறது.  பழைய காலம் திரும்பி இனி வராது என்கிற சோகமும் மனதில் இருக்கிறது.

      நீக்கு
  21. தலைப்பு பார்க்க அம்புலிமாமா நினைவுக்கு வந்தார் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா...    அம்புலிமாமா கதையா நினைவுக்கு வருகிறது?  ஆமாம் இல்லை?

      நீக்கு
  22. ஆஆஅ பட்ட மரட்திலே ஒரு பசுந்தளிர்போல இப்படி முளைக்கிறதே, ஏதோ பெரும்சாதி மரம்போல தெரிகிறதே..அப்படியே லபக்கென தூக்கி எங்காவது நிலத்திலே நட்டு விடுங்கோ.

    அதுசரி ஏன் மொட்டை மாடி இப்படி இருக்குது ஸ்ரீராம்? இது உங்கள் தனி மொட்டைமாடி இல்லையோ?.. துப்பரவு செய்துபோட்டு கொஞ்சம் சாடிகள் வாங்கி வச்சு கத்தரி வெண்டி மிளகாய் நட்டுவிடுங்கோ.. என்னா சூப்பராக வரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நினைத்தேன் ஸ்ரீராம், அதிரா நினைத்தது போல். அந்த செடியை கீழே நட்டு விடுங்கள். வேர் போக இடம் இல்லாமல் கருகி விடலாம். அல்லது வெடிப்பை உண்டாக்கிவிடும் அதன் வழியே கீழே மழை நீர் வரலாம்.
      மழை காலம் வந்தால் அத்தை மாடியில் குப்பை சேரக்கூடாது என்பார்கள். கரையான் பிடித்து விடும் கீழ் இருக்கும் மர உத்திரத்திற்கு ஆபத்து என்பார்கள்.

      நீக்கு
    2. அதிரா நானும் கேட்க இருந்தேன் மொட்டை மாடி பற்றி அங்குதானே உங்கள் புதையல் இருக்குது அதான் எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதை ஒளித்து வைத்த புதையல்!! ஹா ஹா அது பத்திரமா இருக்கு யாரும் காண முடியாம!!

      கோமதிக்கா நானும் சொல்ல நினைத்தேன் இங்கு உங்கள் கருத்து கண்ணில் பட்டுவிட்டது.

      ஸ்ரீராம் இரண்டு கருத்தையும் நானும் வழிமொழிகிறேன்.

      நீங்க முன்னாடி மொட்டை மாட்டில செடி வைச்சிருந்தீங்கதானே..மிளகாய்ச் செடி எல்லாம். படம் கூடப் போட்டீங்களே..

      கீதா

      நீக்கு
    3. பெரும் சாதி மரம்...     அ

      து அரச மரக்கன்று அதிரா, கோமதி அக்கா...   அதை அப்போதே எடுத்துத் தூக்கிப் போட்டாச்சு..    இப்போது டெங்குவுக்காக மாநகராட்சி ஊழியர்கள் வேறு சோதனைக்கு வருகிறார்களாம், அபராதம் போடுகிறார்களாம்!

      நீக்கு
  23. // அரசாங்கமே முனைந்து புதையலைத் தேடியிருப்பது ஆச்சர்யம்!//
    ஆவ்வ்வ் ஆசை ஆரை விட்டது? முடிவு என்னாச்சோ... நீங்களே சொல்லியிருக்கலாமெல்லோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! சங்கமித்திரை!! ஹையோ எனக்குமிகவும் பிடித்த பெயர்! (ஸ்ரீராம் காசிக்குச் சென்ற ரயிலின் பெயர் கூட சங்கமித்ரா தானே!!!)

      புது போஸ்டோ அதிரா?!! பார்க்கிறேன்...

      அதிரா அதெல்லாம் தங்கம் எல்லாம் இல்லை...சும்மா இந்தச் செய்தி எல்லாம் நம்பி...எனக்குச் சிப்பு சிப்பா வந்திச்சு...

      கொஞ்சம் கீழ போய் பாருங்க கீதா என்ன சொல்லிருக்கான்னு!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஆஆ கீதா வாங்கோ வாங்கோ.. இல்ல கீதா புதுசெலாம் போடவில்லை... ஆனா எனக்குக் கிடைச்ச பட்டங்களைப்போடோணும் எல்ல்லோ அதுதான் ,மாத்தினேனாக்கும்.

      அதில வேற இது ஏதோ சரித்திரப் பெயர் எனத் தெரியும், ஆனா என்ன ஏது எனத் தெரியாமல் தேடலாம் என விட்டபோது, என் செக் அவசரமாக ஓடிப்போய் எதையோ தேடி.. ஆஆ உங்கட மகிந்தாவின் டகோதரியாம் என்றிட்டா கர்ர்:) அப்பூடியே மீயும் நம்பி அதை தேடாமல் விட்டிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்:)).

      பின்பு பார்த்தால் கோமதி அக்கா சொல்லியிருக்கிறா அது அசோகர் மன்னரின் மகளின் பெயராம் அவ்வ்வ்வ்வ்வ்:)) இருங்கோ முதல்ல இப்பவே ஓடிப்போய் என் செக் ஐ தேம்ஸ்ல தள்ளப்போறேன்ன்ன்ன்:))

      நீக்கு
    3. ஆனால் அதிரா...   இந்தப்பெயரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று சொல்லவே இல்லையே....

      நீக்கு
    4. ஸ்‌ரீராம்....அதான்ன் படம் காட்டப் போறேன்னு போட்டுருக்காங்களே!!!!!!!அதுக்குத்தான் இந்தப் பெயர்....

      ஆமா அதிரா அசோகர் மன்னரின் மகள் பெயர்...இது...

      கீதா

      நீக்கு
  24. //வளரவிடுங்கள்
    உயிராவேன் பயிராவேன் மரமாவேன் உங்களுக்கு நிழலாவேன்//

    வெட்டபடும் மரங்கள் எல்லாம் வாய் இருந்தால் இப்படித்தான் சொல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   சொல்லுமாய் இருக்கும்!   என் மூலம் சொல்லி விட்டது போல...    ஆனால் இது ஒரு அட்ஜஸ்ட்மென்ட் பதிவு கோமதி அக்கா!

      நீக்கு
  25. படங்களை பார்த்து விட்டு வழி போக்கன் கதை காட்சிகள் போல் இருக்கிறதே! என்று நினைத்தேன். நீங்களே சொல்லி விட்டீர்கள்.
    ஏஞ்சல் கொடுத்த சுட்டியில் வழிபோக்கன் கதை படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் பைண்டிங் இருக்கிறது. 
       
      ஆனால்...

      இன்னும்.

      படிக்கவில்லை!!!!!

      நீக்கு
  26. //பஜ்ஜி போண்டா சாப்பிட்டு
    நாளாச்சு
    பாஸந்தி ஆசையும் கொஞ்சம் இருக்கு
    இப்போ வந்து அழைக்கிறாயே
    காலா //

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))....

    நாங்கள் கொஞ்சக்காலம் ஹொஸ்டலாக ஒரு ஆன்ரி வீட்டில் தங்கியிருந்தோம்.. அவர்கள் கிறிஸ்ரியன்ஸ்.. அவர்களோடு சேர் எல்லாம் போவோம்.

    அந்த அன்ரி சொன்னா, தங்கள் அப்பா கார்ட் அட்டாக்கில் இறந்திட்டாராம். இவர்கள் பல பெண் குழந்தைகள்.

    ஒருநாள் அப்பா நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது என சொன்னாராம் மிட்நைட்டில், றூம் கட்டிலில் இருந்தாராம், இந்த அன்ரியும் தங்கையும், கதவின் பிணைச்சல் வழியூடாக பார்த்தார்களாம்..

    அப்போ அவர் சொல்லிக்கொண்டிருந்தாராம்.. போய் விடு வேண்டாம், நான் வரமாட்டேன். நான் பிள்ளைகுட்டிக்காரன், ஆண்டவரே என்னைக் காப்பாத்தும்.. இப்படி மாறி மாறி... ஆனா விதி யாரை விட்டது..

    “விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக்கொள்ளுமாம்”.. கண்ணதாசன் அங்கிள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ்ஸ்ஸ் ஜ் விடுபட்டு விட்டது மேலே கர்ர்:))

      நீக்கு
    2. 'ஜ்’ விடுபட்டிருச்சா? இது எதுல இருந்து கழண்டு விழுந்த நட்டுன்னு தெரியலையே.. எதுல பொருத்தறது...என்னத்த செய்யிறது..

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா இப்படி சங்கமித்திரையை எல்லாம் சொல்லலாமா!!!?? அவங்க ஞானியாக்கும்!

      கீதா

      நீக்கு
    4. //..அவங்க ஞானியாக்கும்!//

      PLUS 'D' -ஆக்கும்..!

      நீக்கு
    5. //அவர்களோடு சேர்ச் எல்லாம் போவோம்.// - நானும் ஒரு காலத்துல 'ஞாயிறு சர்ச்ல அப்பம் கொடுக்கறாங்க'ன்னு, ஹாஸ்டல்ல இருந்தபோது நண்பர்களோடு போனால், லிட்மஸ் பேப்பர் மாதிரி வட்டமான பேப்பரை, ஒயினில் முக்கி ஞானஸ்னானம் பெற்றவர்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) மட்டும் கொடுத்தாங்க.

      நான் நிஜமா நாம வீட்டுல செய்யற அப்பம் கொடுப்பாங்கன்னு நினைத்தேன். அப்போ நான் +1 படித்துக்கொண்டிருந்தேன்.. 16 வயது... ஹா ஹா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. ஏ அண்ணன்:)..

      டங்கு கீதா:)) லேட்டா வந்தாலும் கரீட்டா அதிரா ஞானிபற்றித்தெரியுது உங்களுக்கு:)).

      நெ.தமிழன்.. நானும் கியூவில நிண்டு கிட்டப்போனதும்தான் தெரியும் ஞானஸ்தானம் பெறாதோர் அந்த அப்பம் வாங்கக்கூடாதென.. திரும்பி வந்தேன் ஏக்கத்தோடு ஹா ஹா ஹா.

      நீக்கு
    7. இறுதி நேரத்தில் இருப்பவர்களுக்கு காலன் கண்ணுக்குத் தெரிவானாம்...    யாரோ  சொன்னார்கள்!   அதுதான் அவரும் அப்படிப்பேசி இருப்பார் போல...

      நீக்கு
    8. ஹா ஹா ஹா நெல்லை அண்ட் அதிரா நானும் இந்த அப்பத்துக்குப் போய் ஏமந்திருக்கிறேன்...எங்க போனாலும் நாங்க திங்க என்ன இருக்குனுதானே பார்ப்போம் இல்ல நெல்லை?!!

      கீதா

      நீக்கு
  27. சித்திரங்கள் அழகு..

    //எழுத்தாளர் ஏகாம்பரத்தின் நியாயமான கோபம்!//

    ஹா ஹா ஹா தன் போஸ்ட்ட்டுக்கு தானே கொமெண்ட்ஸ் போடுவதைப்போல...:)

    ஆரம்பகாலத்தில் சிலர் தம் புளொக்கை பப்ளிக்காக்க, இப்படிப் பல பெயர்களில் வந்து தனக்குத்தானே கொமெண்ட்ஸ் போட்டார்களாம்... ஹா ஹா ஹா புளொக் உலகை பிரபல்யமாக்க எப்படி எல்லாம் யோசித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா...    ஆரம்பத்தில் எங்கள் பிளாக்கில் எங்கள் கமெண்ட்ஸ் மட்டும்தான்!    அது வழக்கம்தான்!

      நீக்கு
  28. ஆஆஆஆவ்வ்வ்வ் ஸ்ரீராமின் தீபாவளிப் படத்தை விட:), கீசாக்கா நடந்து நடந்தே சூட் பண்ணிய[இது வேற சூட்டாக்கும்] படம் எவ்ளோ பெட்டராக்கும்:).

    இம்முறை ஸ்ரீராம் வீட்டுத் தீபாவளிப் பலகாரம் எங்களுக்கு ரெசிப்பி வடிவில் வேண்டும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சில வருடங்களுக்கு முன் மதுரை டவுன் ஹால் ரோடில் எடுத்த படம்.   அலைபேசியில் எடுத்த படம்.  மதுரை எங்க ஊராக்கும்!

      நீக்கு
  29. //நான் எழுதித்தொலைத்த (இரண்டு அர்த்தங்களிலும்!) கவிதையைப் பகிர்கிறேன் என்று சொல்லியிருந்தேன். இதோ அது!//

    நீங்கள் எழுதி தொலைத்த கவிதை நன்றாகத்தான் இருக்கிறது.
    அதிரா சொன்னது போல் காலன் விட்டு வைத்தானா கேட்டவரை என்று தெரியவில்லை.

    ஒரு கதை சொல்வார்கள் புஷ்பகவிமானம் வந்து சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல வந்ததாம், கண்வன் ஏறி அமர்ந்து விட்டு மனைவியை அழைத்தானம், அவள் உள்ளே ஏதோ வேலையாக இருந்தாளாம் கொஞ்சம் இருங்க வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்றாளாம் , அவள் வருவதற்குள் விமானம் பறந்து விட்டதாம் சொர்க்கத்திற்கு.

    கவிதையை படித்ததும் அந்த கதை நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் எழுதிய கவிதை காணாமல்போய்,  ஏகாந்தன் ஸார் பதிவு பார்த்து, நினைவுக்கு வந்து, நினைவில் இருந்து மறுபடி எழுதியது இது.

      நன்றி அக்கா.

      நீக்கு
  30. தீபாவளி பண்டிகை நினைவுகள் மட்டும் இனிக்கிறது.
    இப்போது உள்ள தீபாவளி அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.
    ஆனால் உறவுகளின் வரவு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    தீபாவளி நல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும். உறவுகள், நட்புகளுடன் மகிழ்ந்து இருங்கள்.

    பதிலளிநீக்கு
  31. சங்கமித்திரை சொல்வதுபோல், அந்தச் செடியை ஏதாவது காலி இடத்தில் ஊன்றி நன்றாக வளரவிடுங்கள். மரம் பெருசாகி உங்கள் புகழ் பேசும்..

    பதிலளிநீக்கு
  32. கோபுலுவின் படங்களில்தான் எத்தனை பாவங்கள்.. எத்தனை உயிர்ப்பு. நல்ல எழுத்தைப்போலே,
    நல்ல ஓவியங்களும் வாடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  உண்மை.  மாருதி இப்போதும் பேஸ்புக்கில் சில ஓவியங்கள் எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

      நீக்கு
  33. மொட்டை மாடிக் கவிதையை வார்த்தைகளை வெட்டி ஒட்டி மாற்றிக் குறைத்து இன்னும் கொஞ்சம் ஷேப் பண்ணியிருக்கலாம் என்று தோன்றியது.

    மன்னர் கோட்டை தங்கப் புதையல் சமாச்சாரத்தில் என்னாயிற்று என்ற அடுத்த அடுத்த செய்தியைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எகிறிற்று.
    'சாது கண்ட கனவு' என்பதினால் எனக்கும் நெல்லைக்கும் அந்த ஆர்வ கோளாறு வெவ்வேறு கோணங்களில் வித்தியாசப்பட்டிருக்கலாம்.
    சமீபத்திய update எதுவும் காணக்கிடைக்காதது சுவாரஸ்யத்தை நமுத்துப் போகச் செய்து விட்டது.

    அவர்கள் நினைத்தால் எந்தச் செய்தியையும் பெரிசு படுத்துவார்கள்.
    அவர்கள் நினைத்தால் எந்தச் செய்தியையும் காணாமல் போகவும் செய்வார்கள்.
    எவர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...  போன வியாழன் உங்களைக் காணோம்... !

      இங்கேயே நான் கொடுத்திருந்த விக்கி, காணொளி சுட்டிகளைப் பார்த்தீர்களோ?!

      நீக்கு
    2. இப்பொழுதெல்லாம் நெருக்கமான எழுத்துக்களில் இருப்பதை வாசிப்பதை தவிர்க்கிறேன். அயர்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் மேலோட்டமாகப் பார்த்து பொதுவான கருத்தை அறிந்தேன். அந்த விக்கிபீடியா பதிவு கூட செப்.19-வரையான காலகட்டம் வரை சரிபார்த்திருப்பதாக நினைவு.

      நீக்கு
    3. ஓஹோ.. மைத்ரேயி பேரு வைச்ச படலமா?.. இப்போத் தான் பார்த்தேன். ஒரு பெண் குழந்தைக்குப் பேர் வைச்ச புண்ணியம், ஏற்கனவே இருக்கற புண்ணியங்களோடு சேரட்டும். கவனத்தில் கொண்டதற்கு நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  34. காலா வந்தது வாந்தாய்
    பஜ்ஜி போண்டா கொஞ்சமானும்
    சுவைத்துத் தான் பாரேன்
    பாஸந்தி-- என்ன, வேண்டாமா?..
    எங்கள் வீட்டு அல்வாக்கு
    இருட்டுக் கடை அல்வா தோற்கும்
    தெரியுமா சேதி?
    அதில் கொஞ்சம் -- இந்தா
    நாளை தான் காரம் வகை வகையாய்
    ஓமப்பொடியோ 'ஓம்' வடிவிலேயே
    மிக்ஸரில் பாதாம், முந்திரி, பிஸ்தா
    வறுத்துக் கலந்தது நிறைய
    காணக்கிடைக்கும்.
    ஒவ்வொன்றாய உன் இஷ்டத்துக்கு
    எடுத்துச் சுவைக்கலாம்.
    நாளை என்பது உன் கணக்கில்
    நானூறு ஆண்டுகள்; அறிவேன் நான்
    சட்டுபுட்டுன்னு சாப்பிட்டு
    ஜல்தியாய் கிளம்பு!..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா அட்டகாசம்!! செம! ரொம்ப ரசித்தேன் உங்கள் கவிதையை!! செம செம..இதைப் படித்ததும் "கல்யாண சமையல் சாதம்" பாட்டில் ரங்காராவ் நினைவுக்கு வந்துவிட்டார் காலன் அந்த வடிவில் இருந்தால்னு!!

      கீதா

      நீக்கு
    2. இதென்ன தீபாவளிக் கவிதையா இருக்கு !

      காலாவ இப்படி விழுந்து விழுந்து உபசரிச்சா
      கலர்க் கலரா பட்சணத்தைத் தின்னுட்டு
      காலை அங்கயே நீட்டிட்டா அவன் பாட்டுக்கு ?
      கதிகலங்கிருமே வீட்ல எல்லோருக்கும் ..

      நீக்கு
    3. ஏகாந்தன் ஸார் பிளாக்கில் இந்த நானூறு ஆண்டுகள் வைத்துதான் ஒரு கமெண்ட் போட முயற்சித்து அது போகவேயில்லை! நான் ஒரு கதை இதைவைத்து முயற்சித்திருந்தேன். அதில் உங்கள் கமெண்ட்டும் இருக்கிறது ஜீவி ஸார்.

      https://engalblog.blogspot.com/2012/08/blog-post_29.html

      நீக்கு
    4. அந்த ஆகஸ்ட் 2012 பதிவையும் படித்தேன். ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்.. இணையத்தில் பதிவுகள் எழுதுவதின் சிரஞ்சீவித்தன்மைக்கு இன்னொரு உதாரணம்!

      நீக்கு
  35. கீதா வந்துவிட்டேன் !!! வைரவா கரன்ட் போகாமல் இருக்க வேண்டும்..!

    "வறண்ட மனதில் பசுந்தளிர் போல துளிர்த்தாள்" "பாலைவனத்தில் சோலை போல வந்தாள்" என்றெல்லாம் வர்ணனை வரிகள் கதைகளில் வருமல்லவா? அது நினைவுக்கு வருகிறது இந்தப் படத்தைப் பார்த்தால்.

    ஆமாம் ஸ்ரீராம் நல்ல பொருத்தமான வரிகள்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  36. 'வாழ கொஞ்சம் வழி கிடைக்காதா, துளிர்த்து விடுவோம்' என்று, என்ன ஒரு நம்பிக்கையுடன் அந்தக் காய்ந்த சருகுகளுக்கு இடையில் துளிர்த்து வருகிறது பாருங்கள்.. //

    இதுவும் அழகான வர்ணனை! செடி ரொம்பவே அழகாக இருக்கிறாது ஸ்ரீராம். பேசாமல் அதை மிக மெதுவாக - இன்னும் வளர்வதற்குள் - உங்கள் வீட்டின் கீழ்ப் பகுதியில் இடம் பார்த்து நட்டு விடுங்கள். எடுக்கும் போது இப்போது இருக்கும் மண்ணுடன் எடுத்து அதையும் சேர்த்து நட்டுவிடுங்கள் ஸ்ரீராம். அங்கு மரமாக வளர்ந்துவிடும்...

    // தளர்ந்த மனங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்... முதியோர்களுக்கிடையே எதிர்பாராமல் தவழும் ஒரு அனாதைக் குழந்தை போல!//

    ஆமாம்...அதான் மத்த பெரிய மரங்களுக்கு இடையில் இது கன்றாய் இப்போது சேர்ந்து வளரட்டும் அவர்களுடன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  37. தாவணி போட்ட பெண்ணை
    கதையில் விவரமாய் வர்ணித்தால்
    எந்தக் காலத்து கதை இது
    என்கிறீர்கள், நக்கலாய்...
    தாவணி தாங்கிய பெண்ணை
    சித்திரத்தில் மட்டும் ரசிப்பது
    எந்தவவை நியாயம் என்பது
    தெரியலையே!..
    கோபுலுவுக்கே வெளிச்சம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    உங்கள் ஆதங்கத்தைச் சொல்கிறீர்கள்.   அப்போதும் கருத்து ஒன்றுதானே?   இப்போது தாவணிப்போட்ட பெண்கள் (நகரங்களில்) காணக்கிடைப்பதில்லை!

      நீக்கு
    2. நாளைய நாட்களில் தாவணி கலாச்சாரம் திரும்ப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

      தாவணி போல பெண்களுக்கு அழகு சேர்க்கும் உடையலங்காரம் -- இது வரை இன்னொன்று கண்டதில்லை!..

      நீக்கு
  38. உங்கள் வித்துகளிலிருந்து கருவானேன்
    உங்கள் சத்துகளிலிருந்து உருவாகிறேன்
    அருகாமையில் கிடக்கும் சருகோரே -உம்மிலிருந்து
    உருவாகும் என்னை வாழ்த்துங்கள், வளரவிடுங்கள்
    உயிராவேன் பயிராவேன் மரமாவேன் உங்களுக்கு நிழலாவேன் //

    வரிகள் அழகு! இருக்கும் இடம் தான் சரியில்லை ஹா ஹா ஹா...மொட்டைமாடியில் இருந்து பாடும் பாட்டை (இன்னும் கொஞ்சம் நாள் போனால் படும் பாடு...வேர் ஊன்றிவிட்டால் நல்லதில்லையே தளத்திற்கு...சுவற்றிற்கு) கீழே சென்று பாட, காற்றில் அசைந்தாட வையுங்கள் ஸ்ரீராம்..

    அழகாக இருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  39. அட! டவுன் ஹால் ரோடுக்கு சைடிலேயே
    தெப்பக்குளம் இருந்ததே, சாமி!
    என்ன ஆயிற்று?..
    தூர் வாரினாங்களா?
    இல்லை, தூர்த்துத் தான் போய் விட்டதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் ரொம்பப்பழசு ஜீவி ஸார்... நான் மதுரை போய் மூன்றரை வருடங்களாகிறது.  கடைசி மதுரை விஜயமும் இரண்டு நாட்கள் மட்டும்தான்!

      நீக்கு
    2. டவுன் ஹால் ரோடில், சாலையின் பக்கவாட்டில் கடைகள் போட்டிருக்கிறார்களே, அதற்குப் பின்புறம் நீராழி மண்டபத்துடன் ஒரு பெரிய தெப்பக்குளம் இருந்ததே, உங்களுக்கு நினைவு இருக்கிறதா?

      நீக்கு
    3. பெருமாள் தெப்பக்குளம். இப்போ இருக்கோ இல்லையோ! அந்தப்பக்கம் போயே பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. இஙே வடக்கு கோபுரம் அருகே சென்ட்ரல் மார்க்கெட்டில் வண்டியை நிறுத்தணும் என்பதால் அபப்டியே வடக்கு கோபுரம், இல்லாட்டிக் கிழக்கு கோபுரம் வழியாப் போய் தரிசனம் பண்ணிட்டுத் திரும்பறோம். அந்தப் பக்கம் போவதே இல்லை. இப்போ சித்திரை வீதிகளுக்குள் போக பாட்டரி கார் செயல்படுகிறது மூன்றாண்டுகளாக.

      நீக்கு
    4. தெப்பக்குளம் இருக்கிறது.  அதைப் பார்க்க முடியாமல் சுற்றிலும் கடைகள்!

      நீக்கு
  40. அந்தச் சுரங்கம் தங்கப் புதையல் இல்லையா அப்ப?!! இதுக்குத்தான் பூஸாநந்தா சாமி, ஹூம் ட்ரம்ப் மாமாவுக்கு செக் காக இருப்பதற்குப் பதில் மோடி மாமாவுக்கு செக்காக இருந்திருந்தா...பூஸானந்தா சாமி கரீக்டா சொல்லியிருப்பரல்லோ?!!!!

    என்ன பூஸானந்தா? சரிதானே நான் சொல்லுறது...(கூடவே அந்தத் தங்கத்தை போட்டோ எடுத்துப் போட்டு இது என் செக்கிற்கு, கோமதிக்காவுக்கு, இது கீதாக்காவுக்கு, கீதாக்காவுக்கு, அம்முவிற்கு பானுக்காவுக்கு, கமலாக்காவுக்குனு பிரிச்சும் கொடுத்திருப்பாங்க இல்லையா சங்கமித்திரை?!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கம் கிடைக்கவில்லையே...    யாரோ தங்கம் என்று பேப்பரில் எழுதி வைத்திருந்ததுதான் கிடைத்ததாம்!

      நீக்கு
  41. ஸ்ரீராம் கவிதை செம!! ஹையோ சான்ஸே இல்லை. மிக மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம்...பொக்கே உங்களுக்கு!!! (அதுக்குள்ள ஆயிரம் பொற்காசுகள் இருக்குன்ற ரகசியத்தை மட்டும் சங்கமித்திரைகிட்ட சொல்லிடாதீங்க!!)

    பத்துப் பாத்திரம் தேய்க்கவில்லை
    பாதித்துணி தோய்க்கவில்லை
    விட்டுப்போன வேலைகள் -வீட்டில்
    இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு //

    பரவால்ல இது கெடந்தா கிடக்குது...கெடக்கட்டும்

    கணக்கு
    பார்க்க வேண்டியவை காத்திருக்கு
    பணத்தைப் பங்கு
    பிரிக்கவில்லை - அவை
    பாத்தியதை யாருக்குன்னு
    சொல்லவில்லை //

    அட போனா போகுது...அதையும் அவங்க என்ன வேணா செஞ்சுக்கட்டும்...

    /பஜ்ஜி போண்டா சாப்பிட்டு
    நாளாச்சு
    பாஸந்தி ஆசையும் கொஞ்சம் இருக்கு /

    ஹா ஹா ஹா ஹா ஹா அதானே!!! இதெல்லாம் எஞ்சாய் பண்ணாம போக முடியுமா சொல்லுங்க.....அப்புறம் எல்லாரும் நம்ம பெயரைச் சொல்லிச் சாப்பிட்டுட்டுருப்பாங்க விடலாமா? நோ நோ.. ஹா ஹா ஹா ஹா!!

    படிக்க புத்தகம் பாக்கியிருக்கு -//

    ஹையோ அதே அதே!! நிறைய இருக்கே...

    ஸ்ரீராம் யதார்த்தம் யதார்த்தம் எனக்கு இதெல்லாம் தோன்றும் ஸ்ரீராம் அதை நீங்க அழகா சொல்லிட்டீங்க!!

    ரசித்து முடியலை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் உறவினர் ஒருவர் சொல்லுவார்... எப்போ வந்தாலும் நான் ரெடி என்று.

      எனக்கும் தோணும். இப்போ வந்தாச்சு என்று என்னிடம் சொன்னால், எனக்கு என்ன என்ன வேலைகள் இன்னும் பாக்கி இருக்கு என்று. இன்னும் 10 வருடங்கள் கழித்து வந்தால் நான் ரெடியாக இருப்பேன் (னு நினைக்கிறேன்)

      நீக்கு
    2. //இன்னும் 10 வருடங்கள் கழித்து வந்தால் நான் ரெடியாக இருப்பேன்//

      நானும் அதைத்தான் சொல்வேன்...   எப்போது வந்தாலும்!   வாக்கு மாறமாட்டேன்!

      நீக்கு
    3. ஶ்ரீராம்.... வேண்டாம்.

      நான ஒரு முறைதான் இதைச் சொல்லுவேன். அடுத்த முறை நிச்சயம் ரெடியா இருப்பேன்..இருக்கணும்.

      நீக்கு
  42. ஸ்ரீராம் உங்கள் கவிதையை அப்புறம் ஏகாந்தன் அண்ணாவின் பதிவு அஸம்பவா வாசித்ததும்

    பாரதியின் பாடல் "காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்" பாடல் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என் கதையும், கவிதையும் நினைவுக்கு வந்தது!

      நீக்கு
  43. கோபுலுவின் படங்கள் வாவ்!!! செம செம...

    அந்தக் கண்கள் ஸ்பெஷல்! ஒவ்வொன்றிலும் நீங்கள் சொல்லியிருக்கும் அந்த எக்ஸ்ப்ரஷன்ஸ்!! செம

    காதல், அந்த ஊடலில் பெண்ணின் எக்ஸ்ப்ரஷன் சொல்லி முடியாது அத்தனை அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்...ஆணின் எக்ஸ்ப்ரஷனும்...எல்லாவற்றிலும் அழகு.

    மிகவும் ரசித்தேன் எல்லாப் படங்களையும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  44. எழுத்தாளரின் நியாயமான கோபம்//

    ஹா ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  45. தீபாவளி ஸ்வாரசியம் எல்லாம் இப்போது இல்லவே இல்லை ஸ்ரீராம் நீங்க சொல்லியிருப்பது போல். சும்மா மகிழ்வான தீபாவளி நல்வாழ்த்துகள்னு சொல்லுவதோடு சரி. எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளினு வாழ்த்துவதோடு முடிந்துவிடும்!!!. மற்றபடி ஒன்றுமில்லை.

    ஸ்ரீராம் தீபாவளி முதல்நாள் இரவில் லேட்டாக லேட்டாக பட்டாசு மலிவு விலையில் கிடைக்கும்..அது ஒரே ஒரு முறை பல வருடங்களுக்கு முன் அனுபவம் உண்டு. ஆனால் அதன் பின் தீபாவளிக்குப் பட்டாசு எதுவும் போடுவதில்லை...பெரும்பாலும் சென்னைக்கு வந்து எல்லோருடனும் மாமியார் வீட்டில் கொண்டாடியதால் அந்தப் பட்டாசும். நாங்கள் தனியாக வேறு ஊரில் இருந்தப்ப பட்டாசு கொளுத்தியதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  46. //என்னை வாழ்த்துங்கள், வளரவிடுங்கள்
    உயிராவேன் பயிராவேன் மரமாவேன் உங்களுக்கு நிழலாவேன் /

    வேண்டாம் மரக்குட்டி  :) வேண்டாம் அங்கே வாழ வேண்டாம் அது வாழ உகந்த இடமல்ல உன்னை வேறே இடத்துக்கு மாற்றச்சொல்லி கோரிக்கை விடு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை மாற்றுகிறேன் ஏஞ்சல்...    இந்தமுறை போயி போச்!    வாங்க ஏஞ்சல்!

      நீக்கு
  47. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. மொட்டை மாடியில் துளிர்த்த செடியின் கவிதை நன்றாக உள்ளது.

    /உங்கள் வித்துகளிலிருந்து கருவானேன்
    உங்கள் சத்துகளிலிருந்து உருவாகிறேன்
    அருகாமையில் கிடக்கும் சருகோரே -உம்மிலிருந்து
    உருவாகும் என்னை வாழ்த்துங்கள், வளரவிடுங்கள்
    உயிராவேன் பயிராவேன் மரமாவேன் உங்களுக்கு நிழலாவேன் /

    அருமையான வரிகள். அவைகளுக்கு மட்டுமா நிழலாகும். நமக்குந்தான்..! ஆனால் எல்லோரும் சொல்வது போல் இடம் மாற்றியிருக்கலாம். ஆனால் அதை எடுத்து விட்டேன் என்று சொல்லி விட்டீர்களே..! அதன் மனதின் எழுந்த கவிதை மீண்டும் தங்களால் தொடருமோ ? (நான் தொடக்கி வைத்து விட்டேன் என நினைக்கிறேன்.)

    தங்கப் புதையல் கதை ஸ்வாரஸ்யமாக இருந்தது. கடைசியில் அங்கு தங்கம் இருந்ததா? திருவனந்தபுரம் நாலாவது அறை மாதிரி ஆகி விட்டதா?

    கோபுலு அவர்களின் ஒவியங்கள் ரசித்தேன். கிராமங்களில் (அதுவும், நாகரீக பூச்சுகளில் தன்னை சாயம் முக்க வைக்காத கிராமங்களில்) தாவணி ஸ்டைல் பழைய மாடலாகவே இன்னமும் தொடரும் என நினைக்கிறேன்.

    காலன் கவிதை அபாரம்.

    /பத்துப் பாத்திரம் தேய்க்கவில்லை
    பாதித்துணி தோய்க்கவில்லை
    விட்டுப்போன வேலைகள் -வீட்டில்
    இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு
    படிக்க புத்தகம் பாக்கியிருக்கு - /

    இதேதான் நான் தினமும் நினைத்துக் கொள்வேன். "ஒரு நாள் வேலையை ஒழுங்கா முடிக்காமல், போட்டது போட்டபடி போய் விட்டார்களே..!" என்று பின்னாடி சொல்வார்கள் என்ற சிந்தனைதான்..! ஆனாலும், ஒரு நேரத்தில் நமக்காக காலனை அனைவரும் வறுப்புறுத்தி அழைத்துக் கொண்டிருப்பதை விட, காலன் வந்து அழைக்கும் போய் விட வேண்டும் என்றுதான் விரும்புவேன்.

    எழுத்தாளரின் கோபம் நியமானதுதான்...! பாவம்..! அவருக்குத்தானே தெரியும் ஒவ்வொன்றாய் எழுதி தபாலாபீஸ் சென்று போஸ்ட் செய்வது எவ்வளவு கஸ்டமென்று...! கதை எழுதுவதை விட இது கடினமான வேலையென்று அவர் உணராததா? ஹா. ஹா.ஹா. மிகவும் ரசித்தேன்.

    தீபாவளியன்று அப்போது இருக்கும் ஸ்வாரஸ்யங்கள் இப்போது இல்லைதான்.!ஏனென்று தெரியவில்லை.! வெடிக்கும் தடைகள். இனிப்பு இப்போது குழந்தைகளிலிருந்தே சாப்பிட தடைகள், நினைத்தவுடன் புதுத் துணிகள் அணிவதால் அதிலும் பிடிமானம் இல்லை. எனவே தீபாவளி சாதாரணமான நிகழ்ச்சியாக மாறி வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    மீள்வருகைக்கும், ரசனைக்கும் நன்றி.   நேரமாகி விட்டதால் எல்லோருக்கும் சுருக்கமாகவே பதில் சொல்கிறேன்!

      நீக்கு
  48. இது மரக்குட்டி தானே தனக்கு Lasagna gardening ஆர்கானிக் லேயர்  உருவாக்கி சுயம்புவா முளைச்சிருக்கு :)

    இதுதான் ரெசிஸ்டன்ஸ் என்பார்கள் சுவர் இடுக்கிலும் கொஞ்சூண்டு நீரிலும் வளரும் செடிகள் .முதல் இடம் மாற்றுங்க பத்திரமா   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் கடந்து விட்டது ஏஞ்சல்!   அது போயே போச்!

      நீக்கு
    2. ஒரு ஜீவனின் தன்னம்பிக்கையை தாறுமாறாக்கிய ஸ்ரீராமுக்கு  பத்து பிளேட் குழாய் சதாம் பார்சல் :)இதைவிட சிறந்த தண்டனை இருக்கவே இருக்காது 

      நீக்கு
    3. வ்வெற்றி சாரி அது குழாய் சாதம் 

      நீக்கு
  49. தங்க வேட்டை இன்னும் தொடருதா ? ஹிந்து பேப்பர் படிக்க முடில .ad பிளாக்கர் வச்சிருக்கேன் காணொளியில் எனக்கு ஒண்ணுமே புரில ..விக்கி பார்த்ததில் இன்னமும் ஒன்னும் கண்டுபுடிக்கலைன்னு தெரியுது :)

    பதிலளிநீக்கு
  50. அஸம்பாவ கவிதை .ஹ்ம்ம் அவரவர்க்குஅவரவர் பிரச்சினை காலா  சொல்லிட்டா வருவாரா அப்படி வந்தா வாழ்வே நரகமாகிடுமே :) எங்கூர்ல எப்படி தன்னை வழியனுப்பணும்னு கூட தயாரா இருக்காங்க இதெல்லாம் பணம் செய்யும் மாயை தான் .கவிதை நல்லா இருக்கு .
    கோபுலுவின் ஓவியங்கள் அழகு 

    பதிலளிநீக்கு
  51. கோபுலு அவர்கள் படங்கள் ரசனை.
    'காலா இன்று போய் இன்னொருநாள் வாயேன்' ஹா...ஹா...

    பதிலளிநீக்கு
  52. //..எழுத்தாளர் ஏகாம்பரத்தின் நியாயமான கோபம்!//

    எழுத்தாளன் -ங்கிற மனுஷனையே கண்டுக்காத தமிழ்நாடு..
    இதுலவேற.. கோபமாம், நியாயமாம்..!

    சரி, இதச் சொல்லுங்க முதல்ல. தடை கிடை ஏதும் கிடயாதே? பிகிலு நாளைக்கு ரிலீஸ்தானே !

    பதிலளிநீக்கு
  53. ஸ்ரீராமை ஆராவது தேடிக் அக்ண்டுபிடிங்கோ.. 5 மணித்தியாலமாகக் காணவில்லை அவரை:)).. அதிராவுக்கு மட்டும்தேன் இப்பூடி அக்கறையாக்கும் கர்ர்ர்ர்ர்:)) மற்ற ஆருக்கும் எதிலும் அக்கறை இல்லை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சங்கமித்திரை அதிரா சகோதரி.

      இந்த தடவையும் பட்டமளிப்பு விழாவிற்கு எங்கள் யாரையும் அழைக்காமலே அடைமொழி பெயர் மாறி விட்டதே...! ஹா,ஹா.ஹா. இந்த அடை மொழி பெயரும் தங்களுக்கு நன்றாக உள்ளது. இதற்கு முந்தையதும் நன்றாக உள்ளது.
      ஐஸ், ஜஸ் என்று நெ. தமிழர் வந்து விடப் போகிறார். அவர் சென்ற வெள்ளியன்று அவ்வாறு சொன்னதற்கு அவருக்கும் ஒரு பதில் தந்திருந்தேன். ஆனால், யாரும் கண்டுக்கவேயில்லை. என் கும்மி சப்தம் ஏதும் வராத கும்மி போலும். :) போகட்டும்.!

      தீபாவளி நெருங்கி விட்டதல்லவா.. அதனால்தான் அந்த பிஸியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களை காணவில்லை என நான் நினைக்கிறேன். ஏழு மணிக்கு மேல் பதிலளிக்க வருவார் எனவும் நினைக்கிறேன். அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆ கமலாக்காவுக்கு எவ்ளோ கஸ்டம் என் அடைமொழிப்பட்டத்தோடு என் பெயர் எழுதி பின்பு சகோதரி எழுதி முடிக்கவே 80 கலோரி செலவாகிடும் ஹா ஹா ஹா.

      கமலாக்கா போன வெள்ளியோ.. நான் போனகிழமை பிஸியாக இருந்திட்டேன்ன்.. அதனால கொமெண்ட்ஸ் படிக்கவில்லை, வெள்ளிக்கிழமைகளில் நோட்டிபிகேசனும் பொதுவா வைப்பதில்லை, நேரம் கிடைக்கையில் வந்து பார்க்கலாம், பெரிதாக இங்கு கதை பேச்சு இருக்காது என்பதனால.. இன்றுகூட என் செக்:) க்கே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்:))

      நீக்கு
    3. ஸாரி எல்லோருக்கும் கேட்டேளா...    கொஞ்சம் வேற வேலையா இருந்துட்டேன்!   இப்பதான் வரமுடிஞ்சது.    சட்டுபுட்டுனு சுருக்கமா  பதில் சொல்லிக்கிட்டு வர்றேன்.

      நீக்கு
  54. வணக்கம் சகோதரரே

    சகோதரர் ஏகாந்தன் அவர்கள் பகிர்ந்த "அஸம்பவா" ஹிந்திப் பட கதையையும் படித்தேன். நன்றாக உள்ளது. மரண பயம் ஒருவரை எப்படி வாட்டி கடைசியில் வைத்தும் விடுகிறது என்பதை படம் விளக்கியுள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  55. சருகுகளுக்கிடையே வளரும் அந்தச் செடி, நிஜமாகவே நன்னம்பிக்கை!
    கோபுலுவின் படங்கள் தனி ரகம். கோடுகளை இழுப்பதிலும், வளைப்பதிலும் அவர் கொண்டு வரும் பாவம்..!
    காளான் எப்பொழுது வந்தாலும் நாம் ஒரு சாக்கு வைத்திருப்போம் என்றுதான் தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காளான் எப்பொழுது வந்தாலும் நாம் //

      ஆமாம் பானு அக்கா...    பாஸ் காளான் வாங்கி வந்தால் சமைக்கவே மாட்டார்!!!!    சும்மா ஜோக்கடிச்சேன்...    கோச்சுக்காதீங்க...    புரிந்துகொண்டேன் அது காலன் என்று!

      நீக்கு
  56. திருச்சியில் இருந்த வரை தீபாவளிக்கு முதல் நாள் மாலை பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி என்று சுற்றி விட்டு வருவதில் ஒரு அலாதி சந்தோஷம். 
    பெரிய கடை வீதியில் சில அசைவ ஹோட்டல்களில் தீபாவளி ஸ்பெஷல் வான் கோழி பிரியாணி என்று போர்ட் வைத்திருப்பார்கள். 



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை “தொங்குமான்” பிர்ர்ர்ராணி இல்லை:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    2. தீபாவளிக்கும் வான் கோழி பிரியாணிக்கும் என்ன சம்பந்தமோ? அதுவும் அமாவாசை என்றால் அதெல்லாம் சாப்பிட மாட்டார்களே!

      நீக்கு
    3. வான் கோழி, பூமிக் கோழியெல்லாம் உள்ளே தள்ளுகிறவர்களுக்கு, அமாவாசையெல்லாம் நினைவுக்கு வந்துதான் என்ன பயன்?

      நீக்கு

  57. ஸ்ரீராம் ஜி உங்கள் கவிதை டாப். மிகவும் யதார்த்தமான கவிதை. யாருக்குத்தான் பிடிக்கும்? மனம் பக்குவம் பெற்றவர்கள் மட்டும் வேண்டுமென்றால் காலனை எதிர்க்கொள்ளத் தயாராக இருப்பார்களாக இருக்கலாம் ஆனால் சாதாரணமானவர் நம் மனக்கண் முன் முதலில் வருவது நம் குடும்பம் கடமைகள் என்றுதான்.

    மொட்டைமாடியில் மரம் என்றால் கொஞ்சம் ஆபத்தாயிற்றே. எடுத்து மாற்றிவிட்டீர்களா? ஆனால் அதற்கான உங்கள் வரிகளை மிகவும் ரசித்தேன்.

    ஜோக்கும் கோபுலு படங்களும் அருமை.

    தங்கப்புதையல் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அப்போதே செய்தியில் வாசித்த நினைவு.

    அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!