திங்கள், 7 அக்டோபர், 2019

"திங்க"க்கிழமை : தக்காளி தொக்கு - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி


தக்காளித் தொக்கு
தேவையான பொருட்கள்: அரைக்கிலோ தக்காளி, கொஞ்சம் போல் புளி ஊற வைத்தது ஓர் நெல்லிக்காய் அளவுக்கு, உப்பு தேவையான அளவு, மிளகாய் வற்றல் காரமாக இருந்தால் 10 போதும். காரமில்லை எனில் 15 அல்லது 20. வறுக்க நல்லெண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு, தொக்குக் கிளற ஒரு சின்னக் கரண்டி நல்லெண்ணெய், தாளிக்கக் கடுகு!  பெருங்காயம் ஒரு துண்டு. மி.வத்தலை வறுக்கும்போதும் சேர்க்கலாம். அல்லது கிளறும்போதும் சேர்க்கலாம். மஞ்சள் பொடி, விரும்பினால் அரை டீஸ்பூன்! (நான் சேர்ப்பேன்.)



நல்ல பழுத்த தக்காளியாக எடுத்துக் கொண்டு அலம்பி காம்பின் மேல் பகுதியை நீக்கிவிட்டுத் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். 




மி.வத்தல் காம்பு ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். கடாய் அல்லது வாணலி அல்லது நான் ஸ்டிக் அடிகனமான பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு முதலில் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு மிளகாய் வற்றலைக் கருகாமல் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அந்த எண்ணெயிலேயே போட்டு வதக்கவும். நன்கு சுருண்டு வரவேண்டும். அந்தப் படமெல்லாம் அப்லோடே ஆகலை! ஆனால் செல்லில் இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  தக்காளி நன்கு வதங்கியதும் ஆற வைக்கவும்.



இப்போது மிக்சி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் வற்றல், புளி, உப்பு, பெருங்காயம் போட்டுக் கொண்டு மிளகாய் வற்றலை நன்கு பொடிக்கவும். 



 பின்னர் அதே ஜாரில் வதக்கிய தக்காளியைப் போட்டு அரைக்கவும். 



நன்கு விழுதாக ஆனதும் எடுத்துத் தனியாக வைக்கவும். இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். 


அதில் கடுகைப் போட்டுத் தேவையானால் பெருங்காயமும் போட்டு வெடிக்கவிடவும்.  



கடுகு வெடித்ததும் அரைத்த விழுதைக் கடாயில் கொட்டிக் கிளறவும். நன்கு சுருண்டு வரும் வரையில் கிளறிய பின்னர் ஆற வைத்து ஓர் பாட்டில் அல்லது ஏதேனும் டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இம்முறையில் பண்ணுவது விரைவில் வீணாகாது என்றாலும் பாதுகாப்புக்காகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.

இது சப்பாத்தி, தோசை, இட்லி, உப்புமா, பொங்கல், பூரி, தேப்லா, பராத்தா போன்ற எதனோடும் சாப்பிடலாம். சாதத்தைப் பொலபொலவென வடித்துக் கொண்டு நல்லெண்ணெய் உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கிளறி ஆற வைத்துக் கொண்டு இந்தத் தொக்கைத் தேவையான அளவுக்குப் போட்டுக் கலந்து விடவும். பின்னர் அடுப்பில் கடாய் அல்லது இரும்புச் சட்டி/கரண்டி வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு, கபருப்பு, மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை தாளித்துக் கொண்டு அதை அந்தச் சாதத்தில் கொட்டிக் கலக்கவும். கடுகு, வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொண்டு அதையும் சாதத்தில் தேவையான அளவுக்குப் போட்டுக் கிளறலாம். புளியஞ்சாதம் மாதிரி இல்லாட்டியும் இதுவும் சுவையாகவே இருக்கும். 

வட இந்திய உணவுகள் செய்யும்போது தக்காளி ப்யூரிக்கும் இதைப் பயன்படுத்தலாம். இதில் காரம் இருப்பதால் மிளகாய்ப் பொடி சேர்க்கும்போது கவனமாகச் சேர்க்க வேண்டும்.

51 கருத்துகள்:

  1. அனைவருக்கும். ஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்..

    அட கீதாக்காவின் த தொக்கா அப்ப பாரதிவிலாஸ் தோசைக்குத் தொட்டுக்கலாம்னு சொல்லுங்க ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.  ...வாங்க.... வாங்க...

      நீக்கு
    2. ஹையோ பார்த்தசாரதி விலாஸ் பாரதி விலாஸ் ஆகிடுச்சே....!!! அது ஆதி குறிப்பிட்டிருந்த பார்த்தசாரதி விலாஸ்...அங்கும் தப்பா அடிச்சுட்டேன் ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. ஓ....       முதலில் அபுரி.    இப்போ புரி!

      நீக்கு
  3. இட்லிக்கு இது நல்ல துணை...

    சுவையின் சிகரமாகட்டும்
    தக்காளித் தொக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. !

      இதை முந்தைய கமெண்ட்டில் கேள்விக்குறிக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ளவும்!  விட்டுப்போய்விட்டது.   (மன்னிக்கவும் அதிரா!!)

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இந்தக் கேள்விக் குறி, ஆச்சரியக் குறி முதல் எழுத்து எல்லாம் தனியாத்தான் நிற்கும் போல!!!

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்.    அதோடேயே 'தொக்கி' நின்றால் நல்லாயிருந்திருக்கும்!!!

      நீக்கு
  4. கீதாக்கா இதே இதே தெக்கினிக்கிதான். நானும் மஞ்சள் பொடி சேர்ப்பதுண்டு. இதில் நீங்கள் சொல்லிருப்பது போல சாதம் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்....

    இது ரெடியாக இருந்தால் நிறைய பயன்பாடுகள். மகனுக்குச் செய்து கொடுத்தேன். ரொம்பவே கெட்டியாக வதக்கி எண்ணெய் அதிகம் மிதக்காமல் (இல்லேனா சில சமயம் கொஞ்சம் எண்ணெய் இருந்தாலும் லீக் ஆகிவிடுகிறது) செய்து அங்கு போனப்பிறகு எண்ணெய் கொஞ்சம் தண்ணீர் கலந்து மீண்டும் ஒரு வதக்கு வதக்கிக்கொள்ளச் சொல்லிக் கொடுத்துவிட்டேன்...

    இதிலெயே சில சமயம் நான் கொஞ்சம் வறுத்துப் பொடித்த வெந்தயப்பொடியும் சேர்ப்பேன் கடைசியில்...வாசனையாக இருக்கும்..

    அப்புறம் வருகிறேன்

    யும்மி யா இருக்கு கீதாக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடுகு, வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொண்டு அதையும் சாதத்தில் தேவையான அளவுக்குப் போட்டுக் கிளறலாம். புளியஞ்சாதம் மாதிரி இல்லாட்டியும் இதுவும் சுவையாகவே இருக்கும்.//

      அதே அதே ...(ஸ்ரீராம் சபாபதேன்னு சொல்றார்!!!!!!!!!!!!)

      கீதா

      நீக்கு

  5. அருமையான தொக்காக இருக்கே இதை சரக்கு அடிக்கும் போது வெள்ளரிக்காயை துண்டு துண்டாக கட் பண்ணி இந்த தக்காளி தொக்கில் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும் போலிருக்குதே

    பதிலளிநீக்கு
  6. நன்றாக வந்து இருக்கிறது.
    இனிய ஆயுதபூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ..கில்லர்ஜி.   உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அன்பு துரை, ஸ்ரீராம், கீதாரங்கன் அனைவருக்கும் ,இனி வரப் போகிறவர்களுக்கும் தேவி சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

    கீதாமாவின் தக்காளித் தொக்கா இன்று. ஆதெண்டிக் சமையல்.
    நல்ல சிவப்பாகத் தொக்கு வந்திருக்கிறது. எங்கள் குழந்தைகளுக்கு
    மிகவும் பிடிக்கும்.

    மிக நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
    ஸ்ரீரங்கத்தில் செய்து அனுப்பியதா.

    பார்த்தவுடன் சாப்பிடணும் போல இருக்கு.
    நன்றி கீதா மா

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம்

    வணக்கங்களுடன், இனிய இந்நாளில் அன்னை சரஸ்வதியின் அருளும், நம் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் தயாரிப்பான தக்காளித் தொக்கு மிக அருமையாக உள்ளது. படங்களும் செய்முறைகளும் படிக்கும் போதே நாவில் அதன் சுவை தெரிகிறது. நான் அவ்வப்போது ஒரு இரண்டொரு நாளுக்கு செய்து வைத்துக் கொண்டு, செய்த அன்றைய தினம் தக்காளி சாதமாக செய்து விடுவேன். இட்லி, தோசைக்கும் மிகவும் சுவையாக இருக்கும். ஏன்.. இது எல்லாவற்றுக்குமே சிறந்த பக்க வாத்தியம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நேற்று வலைப்பக்கம் வர இயலாமல், கொஞ்சம் வெளி வேலைகள் அதிகமாக வந்து விட்டன. அதனால் அனைவரின் பதிவுகளுக்கு கருத்துரைகள் இட இயலவில்லை என்பதையும் வருத்தத்துடன் இங்கேயே தெரிவித்துக்கொள்கிறேன். இன்று மதியத்திற்கு மேல் வருகிறேன்.

    அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. தக்காளித் தொக்கு... செய்முறை படங்களோட நல்லா வந்திருக்கு. நான் இதுவரை செய்ததில்லை. இரு நாட்களுக்குள் செய்யறேன்.

    மனைவி செய்வாள். நான் ஆர்வமாக சாப்பிட்டதில்லை. எனக்கு கொத்தமல்லி தொக்குதான் ரொம்ப இஷ்டம்.

    பதிலளிநீக்கு
  10. மஞ்சள் பொடி தொக்கு செய்யும்போதே போட வேண்டாமா?

    இதே முறையில் கொத்தமல்லித் தொக்கு செய்யலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நான் தொக்கு வதக்கும் போதே போடுவேன்.

      கொத்தமல்லித் தொக்கும் இப்படிச் செய்தால் கெடாமல் இருக்கும். கொத்தமல்லி தழையில் ஈரமே இல்லாமல் கொஞ்சம் வதக்கிவிட்டு...மி வறுத்து இதே போல...

      கொ தொவுக்கும் நான் மஞ்சள் பொடி கொஞ்சம் சேர்ப்பேன். நெல்லை...

      அப்புறம் கொத்தமல்லியை வதக்காமல், ஈரம் இல்லாமல் புளி மிளகாய் எல்லாம் பச்சையாக அரைத்து நன் எண்ணெயில் வதக்குவதும் உண்டு. அல்லது மிளகாயை மட்டும் வறுத்து வைத்து அரைத்து இதே போல் ந எண்ணெயில் வதக்கலாம்...இதற்கும் நான் சில சமயம் வறுத்த வெந்தயப்பொடி சேர்ப்பேன். நன்றாக இருக்கும்.

      புதினாவும் அதே போல. ஆனா உங்களுக்குப் புதினா பிடிக்காதல்லோ அவ்வளவா?!!

      கொ தொ, பு தொ இரண்டுமே சி மி போடாமல் ப மி கொஞ்சம் வதக்கி அரைத்தும் இதே போலச் செய்வதுண்டு. அதுவும் நன்றாக இருக்கும். அது ஒரு சுவை.

      கீதாக்காவும் அவங்க எப்படி செய்வாங்கனு உங்களுக்குப் பதில் சொல்லும் போது தெரிந்து கொள்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன்.. எனக்கு புதினா சுத்தமா பிடிக்காது.

      நீக்கு
  11. தக்காளி தொக்கு என் இளைய மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சோறும் இந்த தொக்கு மட்டுமே போதும்.

    பதிலளிநீக்கு
  12. இம்முறையில் பண்ணுவது விரைவில் வீணாகாது என்றாலும் பாதுகாப்புக்காகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.//

    ஆமாம் அதனால்தான் இப்படி மகனுக்குச் செய்து கொடுத்துவிடுவது. அதுவும் கொஞ்சம் நிறைய செய்ய வேண்டுமே அதனால். .அவன் அங்கு போன பிறகு குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொண்டுவிடுவான். இத்தனைக்கும் அவன் இருக்கும் ஊர் குளிர்காலம் தவிர மற்ற மாதங்களில் வெயில் அதிகம் எல்லாம் இருக்காதாம் கூலாக மழை அவ்வப்போது தூறிக்கொண்டே இருக்குமாம்.

    இந்தத் தொக்கில் வெங்காயமும் நன்றாக வதக்கி (நன்றாக வதக்க வேண்டும் நல்லெண்ணையில் இல்லேனா கெட்டுவிடும்) தக்காளியும் வதக்கி சேர்த்து அரைத்து இதே போல செய்வதுண்டு. வெந்தயப்பொடி சேர்த்து அல்லது சேர்க்காமல்...அது ஒரு சுவை...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஆஆஆ இன்Tஉ கீசாக்கா ரெசிப்பியோ... இவ்ளோ சோட் அண்ட் சுவீட்டா இருக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டிருக்கிறது தொக்கு. இது ஸ்வீட்டாமே.... ஆண்டவா... இந்த மாதிரி பின்னூட்டத்தை ஏன் படிக்க வைக்கற? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஏன்? என்ன தப்பு? எங்க மாமியார் வீட்டில் இதுக்கெல்லாம் வெல்லம் போடுவாங்க. மாங்காய்த் தொக்கு, தக்காளித் தொக்கு, மிளகாய்த் தொக்கு, புளி இஞ்சி போன்றவற்றில் வெல்லம் சேர்ப்பாங்க! அதனால் அதிரடி சரியாய்த் தான் சொல்றாங்க. ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க ஜிங் சக்க! :))))))

      நீக்கு
    3. ///இந்த மாதிரி பின்னூட்டத்தை ஏன் படிக்க வைக்கற? ஹா ஹா ஹா///
      Karrrrrrrrrrr grrrrrrrrrrrrr grrrrrrr *45387

      நீக்கு
  14. எனக்கு இது விருப்பம்தான் ஆனா கொஞ்சம் ரேஸ்ட் பண்ணலாம் நிறைய சாப்பிட்டால் அலர்ஜி வரும்... கண் மூக்கு கடிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவரிமா, அதிரடி அதிரா, நீங்க "ரேஸ்ட்" பண்ணறேன்னுட்டு அத்தனையும் வேஸ்ட் பண்ணிடாதீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நல்ல சுவையான குழி ஆப்பத்தோடு சாப்பிட்டுப் பாருங்க! அல்லது நீர் தோசையோடு சாப்பிட்டுப் பாருங்க! அப்புறம் சொல்லுங்க அலர்ஜியாவது ஒண்ணாவது!

      நீக்கு
    2. அக்கா அது குழி ஆப்பமில்ல :) பூஸ் பாஷையில் குன்டூவ் தோசை :))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அது குண்டூத் தோசையாக்கும்:)

      நீக்கு
  15. படங்களும் குறிப்பும் அருமை! தக்காளித்தொக்கின் நிறம் அழகான சிவப்பு! நான் வெந்தயமும் வறுத்துப்பொடித்து சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் இந்திய நேரப்படி சரஸ்வதி பூஜை வாழ்த்துகள், நல்வரவு, வணக்கம், பிரார்த்தனைகள். அமெரிக்க நேரப்படி காலை வணக்கம், சரஸ்வதி பூஜை வாழ்த்துகளும் நல்வரவும் வணக்கம், பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  17. இது எப்போவோ அனுப்பியது. இதுக்கு முன்னாடியும் சிலது அனுப்பி ஸ்ரீராம் போடத் தாமதம் ஆனதால் நானே வெளியிட்டு விட்டேன். இஃகி,இஃகி, இதுக்கும் தேதி சொல்லி இருந்தார். மறந்து போச்சு! அதோடு நேத்திக்குச் சுண்டல் கலெக்ஷன் வேறே இருந்தது. இங்கெல்லாம் தினம் தினம் வீட்டில் பண்ணின சுண்டல் தான். கலெக்ஷனே இல்லை. டல்! :( சனி,ஞாயிறு தான் கொஞ்சம் சுறுசுறு. மறுபடி இன்னிக்கு சரஸ்வதி பூஜை, நாங்களே கொண்டாடிக்கணும். :)

    பதிலளிநீக்கு
  18. தக்காளித் தொக்கு போணி ஆகலை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாரும் சுண்டல் பிரிபரேஷனில் பிஸி போலிருக்கு. அதிரா மாவிளக்கு போட்டுக்கிட்டிருப்பாங்க.

      நீக்கு
    2. நவராத்திரியும் ஒரு வழியா முடிஞ்சுடுத்து! இனி தீபாவளி! அடுத்துக் கார்த்திகை, வருஷம் முடிவு! :))) ஓட்டமாய் ஓடும் நாட்கள்! இங்கே வந்து ஒரு மாசம் ஆகிவிட்டது.

      நீக்கு
  19. எங்க வீட்ல தக்காளி தொக்கு செமயா போணியாகும் :) இதுக்கு நாட்டுத்தக்காளிதான் நல்லா இருக்குமா ? vine தக்காளியில் செய்யலாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டுத்தக்காளி கிடைப்பது கஷ்டம். கிடைச்சால் நல்லது. இல்லைனா கொஞ்சம் சாறு உள்ள சிவப்புத் தக்காளியாக உருண்டையாகப் பார்த்து எடுங்கள்.

      நீக்கு
  20. ப்ரெட் சப்பாத்தி பொங்கலுக்கும் அரிசி உப்புமாக்கும் கூட இந்த தொக்கு நல்லா இருக்கும் 

    பதிலளிநீக்கு
  21. சுவையான தக்காளி தொக்கு.
    விஜயதசமி வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
  22. சுவையான தக்காளி தொக்கு.
    நேற்று வர முடியவில்லை இணையத்திற்கு. இன்று தான் படித்தேன்.செய்முறை படங்களுடன் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  23. சுவையான தக்காளித் தொக்கு. முன்பெல்லாம் செய்து வைத்துக் கொண்டது உண்டு. இப்போது செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  24. இந்த மாதரி எங்க அத்தை செய்வார்கள் ...எங்க சின்னவர் க்கு ரொம்ப பிடிக்கும் ...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!