சனி, 26 அக்டோபர், 2019

இதயம் உள்ளவர்கள்..


1)  இங்கேயும் மனிதர்கள்...  இதயம்தான் உள்ளவர்கள்....


2)  விளம்பரத்துக்காக செய்யவில்லை என்று நம்புகிறேன்.  இந்தத் துணிவும், இந்த மனப்பாங்கும் பாராட்டப்பபடவேண்டியவை...  

''பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு, வரும்
திங்கட்கிழமைக்குள் வீடு வழங்கவில்லை என்றால், 'சஸ்பெண்ட்' செய்ய தயாராக இருக்கிறேன்... நான், எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்,'' என, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியின்ஆவேச பேச்சு, சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில்வேகமாக பரவி வருகிறது.

43 கருத்துகள்:

 1. வணக்கம். சனிக் கிழமைனா ஒரே அமைதியா இருக்கே. நல்ல செய்திகளுக்கு வரவேற்பு குறைவா இல்லை பட்சணங்கள் செய்த, டேஸ்ட் பார்த்த களைப்பா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் கொஞ்ச நேரம் இங்கிருந்தேன். அப்புறம் வேறு வேலையாய் போயிட்டேன்...

   நீக்கு
 2. கீதா ரங்கன் பவர் கட், கீசா மேடம் காலையிலேயே (இங்கத்த) தூங்கப் போயிட்டாங்க, செல்வராஜ் சாருக்கு ஷிஃப்ட் ஆரம்பம்... அது சரி... மண்டபத்துல வரவேற்கிறவங்களையும் காணோமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெ. தமிழர் சகோதரரே

   வாங்க.. வாங்க.. நான் வந்து கொஞ்சம் மேடையலங்காரத்தை ரசித்துப் பார்த்து திரும்புவதற்குள் மண்டபத்தில் தாங்கள் வந்து விட்டீர்கள். முதல் வரவிற்கு மிக்க மகிழ்ச்சி.

   தங்களுக்கும் இனிதான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. கீதா ரெங்கன் பிரச்னை சீக்கிரம் தீரவேண்டும்.    கீதா அக்கா தூங்கிக்கொண்டிருப்பார்கள்.  அவர்கள் கனவில் பேரல் பேரலாக தீபாவளி பட்சணங்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கும்!   துரை செல்வராஜூ சாரைக்காணோம்!  கமலா அக்கா வந்தாச்சு... பானு அக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாங்க!

   நீக்கு
  3. //கீதா அக்கா தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கனவில் பேரல் பேரலாக தீபாவளி பட்சணங்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கும்! //grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இங்கு வரும் நட்புறவுறவுகள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  தீப ஒளிகளினால், நம் அனைவரது வாழ்வின் இருள்களும் அகன்று வரும் நன்னாள்கள் எப்போதும் பிரகாசமாக அமையட்டும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...    இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.  உங்களுக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 4. போற்றத்தக்கவர்களைப் பற்றிய பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் எப்போதும் போல் அருமை.

  பசு பொதுவாக தெய்வமாக கருதி வழிபட வேண்டிய பிராணி. தன்னிடமிருக்கும் பசுக்களை விற்ற பின்னும், கார்த்திக் அன்புடன் நேசித்து வளர்த்து பார்த்துக் கொள்ள தந்த பசுவை கண்காணிப்புடன் வளர்ப்பது மட்டுமின்றி, அது தானாகவே இறக்கும் வரை காப்பேன் என்ற அந்த இதயம் உள்ளவர்களை, அதிலும், இதயம் நிறைய அன்பும், அபிமானமும் உள்ளவர்களை கண்டிப்பாக போற்ற வேண்டும்.

  திருவண்ணாமலை கலெக்டரின் செயல் பாராட்டத்தக்கது. அவரின் பேச்சுக்கள் நேர்மையாக உள்ளது. இவரைப்போல அனைவரும் இருந்தால் நாடு சுபிட்சமாக இருக்க மழை ஒழுங்காக பெய்யும். வாழ்க அவரது உண்மையான நேர்மை என பாராட்டத் தோன்றுகிறது. செய்திகளின் பகிர்வினுக்கு தங்களுக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. பத்மாவதி, கார்த்தி போனறவர்களைக் காண்பதுவும் அரிது...

  பசுவின் மீது இரக்கம் கொண்ட அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு..

  இளகிய மனங்கொண்ட கார்த்திக்
  தற்கொலை செய்து கொண்டது மனதை வருத்துகிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அது ஒரு கதை போல அமைந்திருக்கிறது.

   நீக்கு
  2. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

   ஆமாம்... சகோதரரே அதுதான் எனக்கும் மனது கஸ்டமாக இருந்தது. இளகிய மனம கொண்டோருக்கு வாழ்வில் பிரச்சனை அதிகமோ ? இல்லை பிரச்சனைகளை தாங்கும் மன வலிமை அவர்களிடம் குறைவோ? என எண்ணத் தோன்றுகிறது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. இளகிய மனமுள்ளவர்களை
   இருக்கவிடமாட்டார்கள் இவ்வுலகில்..

   நீக்கு
 7. ஆட்சியர் கந்தசாமி அவர்களைப் போன்றவர்களே நாட்டிற்குத் தேவை..

  வாழ்க அவரது பணி...

  பதிலளிநீக்கு
 8. திருவண்ணாமலை கலெக்டர் விளம் பரத்திற்காக செய்திருந்தாலும் இருந்தாலும் அதன் விளைவு உடனே தெரிந்ததால் அவரை பாராட்டத்தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. முதல் செய்தி மனதை உருக வைத்தது... இரண்டாவது சிறப்பு...

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 11. முதல் செய்தி உங்கள் முகநூலில் பகிர்வில் படித்தேன்.

  அம்மாயி பசுவை இதயம் உள்ளவர்களிடம் வளர்க்க கொடுத்து விட்ட் நல்ல உள்ளம் உள்ள கார்த்தியின் முடிவு மனதை கனக்க வைத்து விட்டது.


  அடுத்த செய்தி கலெக்டர் துணிவை பாராட்ட வேண்டும். நல்லது நடக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. இரக்க குணம் உள்ளவர்கள் வாழ்துகள்.

  பதிலளிநீக்கு
 13. தீபத்திரு நாள் வாழ்த்துகள் நல்லோர்பணியைப்போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள். பொங்கும் மங்களாம் எங்கும் தங்கட்டும்!..

  பதிலளிநீக்கு
 15. மனசில் ஒன்று படிந்து விட்டால் அதை மாற்றுவது எளிதல்ல
  இதயத்தில் ஒன்று படிந்து விட்டால் அதை மாற்றுவது எளிதல்ல

  -- இந்த இரண்டு வரிகளில் எது சரி?

  பதிலளிநீக்கு
 16. ஆச்சு இந்தியாவில் இன்றிரவு தீபாவளி கொண்டாடப் போகும் இந்திய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் தீபாவளி நன்மையையும், அமைதியையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டு வரட்டும். அம்பேரிக்காவில் இப்போத் தான் காலை ஏழே முக்கால். இன்றிரவு கொண்டாடப் போகும் அம்பேரிக்க நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ஒளிமயமான எதிர்காலத்துக்கும் அமைதியும் மகிழ்வும் தரும் நல்வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 17. இரண்டுமே படித்த செய்திகள். இஃகி,இஃகி,இஃகி, கார்த்திக்கின் இளகிய மனம் நம்மையும் இளக வைத்தது. நேற்று மாலை வெளியே போயிட்டு வரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாக் கணினியில் உட்கார முடியாது என்பதால் உங்கள் காலை நேரம் வரவில்லை.

  பதிலளிநீக்கு
 18. ஸ்ரீரங்கத்தில் பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் மூலம் வீடு பெற்றவர்கள் பலரைத் தெரியும். ஓரளவு நன்றாகவே அங்கே செயல்படுகிறது.

  பதிலளிநீக்கு
 19. ஒரு வாயில்லா ஜீவனிடம் இருந்த கருணை தன் மீது இல்லையா அந்த நல்ல இளைஞனுக்கு? வருத்தமாக இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் பாராட்டப்பட வேண்டியவர்தான். 

  பதிலளிநீக்கு
 20. 1. நேயமுள்ள மனிதர்கள். போற்றுவோம்.
  2. மக்களுக்கு நல்லது நடக்கட்டுமாக. பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 21. இதயம் உள்ளவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பர்.

  இனிய தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!