வியாழன், 10 அக்டோபர், 2019

மனித வாடை பட்டதும் மண்ணில் மறையும் மூலிகை 

சரவணன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.  அவன் கையில் அன்றைய தினசரிகள் இருந்தன.  அதை சங்கரனுக்கு எதிரே டீபாயின்மேல் போட்டவன்,  ராகவியிடம், "நீ குளிக்கப் போறயா?  நான் குளிக்கவா?  எனக்கு சீக்கிரம் போகணும்"  என்றபடியே டவலை ஆட்டினான். 

ராகவி தன்முன்னே ஆடிய டவலை பிடித்துக்கொண்டாள்.   "இது என் டவல்...   நாந்தான் குளிப்பேன்" என்று உள்ளே சென்றாள்.  

ராகவி...!  என்ன பெயரோ... புவனேஸ்வரி என்று பெயர் வைக்கவேண்டும் என்பது இவர் ஆசை.  ராகவி பிறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு சரவணனின் உயிர் நண்பன் ராகவன் ஒரு சாலை விபத்தில் உயிர் துறந்தான்.  அப்போதே சரவணன் பிள்ளை என்றால் ராகவன் என்றுதான் பெயர் வைப்பது என்று முடிவெடுத்து விட்டான்.  பெண் பிறந்தது.  இவர் புவனேஸ்வரி என்று வைக்கலாம் என்று சொல்லிப் பார்த்தார்.  அவன் இரண்டாவது பெயராகக் கூட அப்படி வைக்கவில்லை.  சாஸ்திரிகள் 'இரண்டாவது, மூன்றாவது பெயர்கள் உண்டா'  என்று கேட்டபோது "ஒரே பெயர்தான்...   ராகவி" என்று சொல்லி விட்டான்.

அந்த ராகவன் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து சரவணனுக்கு சிநேகிதன்.  பலமுறை சரவணனிடம் ராகவனைப் பற்றி சங்கரன் சுள்ளென்று விழுந்திருக்கிறார்.  நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் வந்து இவனுடன் பேசிக் கொண்டிருக்கும் ராகனைக் கண்டால் அப்போதெல்லாம் அவருக்கு ஆகாது.   ஆனால் அவன் மரணம் அவரையும் அசைத்திருந்தது.  

சங்கரன் தன்முன்னே கிடந்த தினசரிகளை எடுத்துப் பிரித்து மேலோட்டமாக மேய்ந்தார்.  எந்தெந்த செய்திகளை விவரமாக மதியம் படிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொள்வார். 

சமையலறையிலிருந்து வெளியே வந்த விசாலி "சரவணா...   சீக்கிரமா போகணுமா?"  என்றவள்,  "குளிச்சுட்டு வந்தா  டிஃபன் கொடுத்துடுவேன்.   அப்புறமா காஃபி சாப்பிடலாம்.  புதுசா ஒரு கவர் எடுத்துக் காய்ச்சணும் " என்று பொதுவாக சொல்லி விட்டு ராகவியின் புத்தகப்பையை எடுத்து ஒழுங்குபடுத்தி வைத்தாள்.  சங்கரன் செய்தித்தாளின் ஓரம் வழியாக விசாலியைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார்.  இரண்டாம் பாகமாக வெளிவந்த அந்த வரிகள் தனக்கானவை என்று அவருக்குத் தெரியும்.


குளித்துவிட்டு தலையில் துண்டுடன் சமலையலறைக்குள் நுழைந்த மீனா ஒரு தட்டில் எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் சென்றாள்.  அவளும் கிட்டத்தட்ட கிளம்பி விட்டாளென்று தெரிந்தது.  வெங்காய வாசனை அடித்தது.  அடையோ?


சரவணன் துண்டுடன் அறைக்குள் அவள் பின்னாலேயே சென்றான்.  அவனும் உள்ளேயே குளித்து விடுவான் என்று தெரிந்தது.  இவ்வளவு அவசரமாகக் குளித்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தோன்றியது சங்கரனுக்கு.  எனினும் ராகவி வெளியே வந்ததும் அவரும் சென்று குளித்துவிட்டு வந்து விட்டார்.


குளிக்கும்போதே அவருக்கு அந்த இரண்டாவது பாடல் நினைவுக்கு வந்து விட்டது...  "சேதக...   ஸ்ரீராமம்..."  பதினோரு மணிக்குமேல் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.  தனியாகத்தானே இருப்பார்...

பனியனை அணிந்துகொண்டு வந்தபோது ஹால் டீபாயில் ஒரு தட்டில் ரவா உப்புமா சூடாகக் காத்திருந்தது.  ஓரத்தில் கொஞ்சமாய் எண்ணெயில் குழைந்த மிளகாய்ப்பொடி.

உள்ளே திடும்பிரவேசம் செய்தாள் மீனாவின் அம்மா.   இந்த மாதம் ஒய்வு பெறுகிறாள் அவள்.  அவள் மீனாவை அழைத்துக் கொண்டு அதே ஆட்டோவில் சென்று விடுவாள்.   அடுத்த மாதம் எல்லாம் மீனா அலுவலகம் செல்ல வேறு வழி பார்க்கவேண்டும்.

"விசாலி மாமி ...    காஃபி ரெடியா?"

"இதோ.." என்று இரண்டு காஃபிக்களுடன் வந்த விசாலி ஒன்றை மீனா அம்மாவிடமும், இன்னொன்றை இவர் அருகிலும் வைத்துவிட்டுச் சென்றாள்.

ரவா உப்புமாவை ரசித்துச் சாப்பிட்டார் சங்கரன்.  சூடாக, நெய்வாசனையுடன் வெங்காயம் போட்டு அருமையாக இருந்தது.   சரவணன்,  மீனா,  ராகவி எல்லோரும் புறப்பட்டுச் சென்று விட, விசாலி கையில் ஒரு புத்தகத்துடனும், பாதி பின்னிய வொயர் கூடையுடனும் வெளியே சென்றாள்.  இனி மதியம் இரண்டு மணிக்குமேல்தான் அவளும் வருவாள். இரண்டுமூன்று பெண்களுடன் விஷ்ணு சகஸ்ரநாமம் க்ளாஸ், வொயர் கூடை என்று அரட்டையுடன் பொழுது போகும் அவளுக்கு.  

தன்னைத் தவிர்க்கவே விசாலி இதெல்லாம் செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டார் சங்கரன்.  

விசாலி தன்னுடன் பேசுவதில்லை என்று சொல்ல முடியுமா?  முடியாது.  பேசுகிறாள் என்று சொல்ல முடியுமா?  அதுவும் முடியாது... 

பேப்பர் படித்துவிட்டு சற்றே கண்ணயர்ந்திருப்பார்...   காலிங்  பெல் அடித்த சத்தம் கேட்டு கதவைத் திறந்தார்.  

அலமேலு.  

"என்னப்பா...   தூங்கிட்டீங்களா...  தொந்தரவு செய்திட்டேனா?" என்றபடியே கிச்சனுக்குள் நுழைந்து பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு தேய்க்குமிடத்துக்குக் கொண்டு சென்றாள்.  

"அம்மா க்ளாசுக்குப் போயிருக்காங்களா அப்பா?"  

சங்கரன் பதில் சொல்லவில்லை என்றதும் அங்கிருந்தே எட்டிப் பார்த்தாள் அலமேலு.   இவர் ஆமாம் என்பது போல மண்டையை ஆட்டியவர், "தினம் இதே கேள்விதானேம்மா...   இதற்கு பதில் சொல்லணுமா?" என்றார்.  

"சொல்லுங்கப்பா...   பேசாமலே தனியா இருந்தா போரடிக்குமில்ல?"  என்ற அலமேலு தொணதொண என்று ஏதேதோ பேசிக்கொண்டே வேலை செய்து விட்டு புறப்படவும் விசாலி உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

"இந்தா அலமேலு...  கிளம்பிட்டியா...    நேற்றைய குழம்பும், கொஞ்சம் பொரியலும் வச்சுருக்கேன்...    எடுத்துட்டுப்போ...  மீனா எப்படிஇருக்கா?"  மீனா என்பது அலமேலுவின் அம்மா பெயர்.  அவள்தான் முன்னர் இங்கு வேலை செய்ய வந்து கொண்டிருந்தாள்.

அலமேலு ஏதோ ஒரு கம்பெனியில் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்துக்குச் சென்று வந்தவள், அவ்வப்போது அம்மா வரமுடியாமல் போகும்போது வர ஆரம்பித்தவள், இப்போது இவளே சில வீடுகளை எடுத்துக்கொண்டு விட்டாள்.  அந்த வேலையை விட்டு விட்டாள்.  வீட்டு வேலையில் அதைவிட நல்ல சம்பளம் கிடைப்பதாகச் சொன்னாள்.  

கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்துக்கொண்ட அலமேலு "அம்மா நல்லாருக்காம்மா....  நான் மேல ரெண்டு வீட்டையும் முடிச்சுட்டு போறப்போ எடுத்துக்கறேன்மா..." என்று சொல்லி விட்டு மாடியேறினாள்.

விசாலி சரி என்று தலையை ஆட்டியவள், டைனிங் டேபிளில் இவர் தட்டை எடுத்து வைத்து சாதம் போட்டாள்.  மௌனமான நேரங்கள்.  இவர் சாப்பிட்டானதும் அவளும் ஒரு தட்டை வைத்துக்கொண்டு சாப்பிட்டாள்.  ரொடீன்!

சேர்ந்தே சாப்பிடலாம் என்று ஏற்கெனவே பலமுறை சொல்லிப் பார்த்திருந்த சங்கரன் இப்போதெல்லாம் அலுத்துப்போய் விட்டு விட்டார்.  எபப்டியும் செவிசாய்க்க மாட்டாள்.  சாப்பிட்டு விட்டு ஹாலில் ஓரமாய் ஒரு மணைப்பலகையை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து விடுவாள்.  இனி  ராகவி ஸ்கூலில் இருந்து வரும்வரை அவளுக்கு ஒய்வு.


[தொடரும்]


===================================================================================================


மற்றவர்கள் செய்யவில்லை 
பெற்ற மகன்களும் 
மகள்களும்தான் 
செய்கின்றனர் 

அவர்களைச் சுமக்க 
இவள் வயிறு 
என்ன பாவம் 
செய்ததோ...

==============================================================================================

நிலம் புரண்டி 
மனிதனின் வாடை பட்டதும் நிலத்துக்குள் மறைந்து கொள்ளுமாம் ஒரு மூலிகை.  அதன் பெயர் நிலம் புரண்டியாம்.  அதைக் கண்டுபிடிக்க இளம் தேத்தாங்கொட்டைகளைக் கொண்டு சென்றால் இந்த மூலிகையிருக்கும் இடத்தில கைகளுக்குள் தேத்தாங்கொட்டைகள் பொரியுமாம்.   அந்த இடத்தில் உள்ளுக்குள் சென்று மறைந்து கொண்டிருக்கும் நிலம்புரண்டி மூலிகையைத் தோண்டி எடுக்கலாமாம்.  இந்த வீடியோவில்  அந்த மூலிகை, மனிதர்கள் அருகில் வந்ததும், கடன் கொடுத்தவனைக் கண்டதும் சரேலென பக்கத்து சந்தில் மறையும் கடன் வாங்கியவர்களைப் போல,  சரசரவென மண்ணுக்குள் மறைவது நிஜமா, கிராபிக்ஸா தெரியவில்லை!  ஆனால் சுவாரஸ்யம்!  தோண்டி எடுக்கும்போது ஏன் ஓட மாட்டேன் என்கிறது?!!   இதை வைத்து பொன்,பொருள், செய்வினை எல்லாம் எளிதாக எடுக்கலாமாம்!  மூலிகையை வைத்த தாயத்தும் மண்ணுக்குள் சென்று மறைந்து கொள்கிறது!


பின்குறிப்பு.  உங்களுக்குத் பிடித்திருந்தால் அந்த கொண்டி சித்தரின் பக்கத்தை லைக் பண்ணலாமாம், ஷேர் பண்ணலாமாம்!


=============================================================================================

மனம் என்பது என்ன?  மூளையா?  இதயமா?  ஜீவி ஸார் இந்தக் கேள்விக்குதான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார், அவர் பதிவில்.  எண்ணங்கள் மனதுக்குள் இருக்கின்றனவா, மனதுக்கு வெளியிலா? எண்ணங்களே மனமா?  எண்ணங்கள் மனதுக்கு வெளியில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?  அப்படியும் ஒரு இடத்தில் படித்தேன்.   சரி,  வெளியில் என்றால் எங்கு?  இந்த அண்டத்தில்?  இதை எல்லாம் யோசித்தபோது வந்த குழப்பாப்பம்தான் கீழே....


மனம்

​​எப்படியோ 
வெளியே வந்து பார்த்தபோதுதான் 
அது உள்ளேயே இருக்கிறது 
என்று தெரிந்தது.  
உள்ளேயிருந்து பார்த்தபோது 
அது வெளியே இருந்தது 
போலதான் தோன்றியது=======================================================================================================


சுண்டல் கலெக்ஷனுக்குச் சென்றபோது ஒரு இடத்தில அவர்கள் குடியிருப்பில் இருந்த சிறுகோவிலில் துர்க்கைக்கு கட்டளை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.  சித்தியின் பாஸ்...    சே...  பாஸின் சித்தி வீடு!  அந்த சித்தி "துர்கைக்கு அலங்காரம் பார்த்தீர்களா? இதில் என்ன விசேஷம் சொல்லுங்கோ..." என்று மறுபடியும் மறுபடியும் கேட்க, மைக்ரேனில் இருந்த நான் ஒரு தவறான பதிலுக்குப் பின் குத்துமதிப்பாக "பூ அலங்காரம் ஓம் என்ற வடிவில் இருக்கு" என்றதும் சித்தி மகிழ்ந்து போனார்.   துர்க்கையின் அருள் எனக்கு பூரணமாகக் கிடைக்கும் என்றார்!
இன்னொரு வைணவ வீட்டில் கொலுவில் தும்பிக்கை ஆழ்வார்....


அதே வீட்டில் கொலுவில் கௌரவக்குடும்பமும், பாண்டவக்குடும்பமும்....
==================================================================================================

நேற்று அதிரா சொன்ன பேய்க்கதைகள் படித்தபின் இன்று இதைப் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது...  

அப்போது - ஐந்து வருடங்களுக்கு முன் - திகில்வரிகள் (என்று நினைத்துக்கொண்டு) சில எழுதி இருந்தேன்.  அவற்றிலிருந்து இரண்டு...  அதில் ஒன்றுக்கான பதில்களுடன்...     பதில்கள் சற்றே சுவாரஸ்யமாய் இருந்ததால்...178 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை மீதான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊ!!!!!!!

   கதை வந்திருக்கிறதே ஆஹா!! வெற்றி வெற்றி !!! ஸ்ரீராம்!!

   தலைப்பு ஈர்க்கிறது..அட என்னவாக இருக்கும் என்று!!!!

   கீதா

   நீக்கு
  2. தலைப்பு ஈர்க்கிறது என்றதும், எனக்கே தெரியாமல் தலைப்பு கொடுத்து விட்டேனோ என்று பார்த்தேன்!

   இனிய காலை வணக்கம் கீதா.

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ...ஹிஹிஹி இது எதுக்குனா பதிவின்// இந்த வார்த்தை காப்பி பண்ணும் போது விட்டுப் போச்சு!!!!!!! ஆமால்ல கதையின் தலைப்பு இல்லாததால் அதுவும் ...

   இதுக்குத்தான் அவசர அவசரமா கருத்தை காப்பி பண்ணும் போது முதல் வார்த்தையும் (ஸ்ரீராமாவாது ஓர் எழுத்து அல்லது குறிகளை மிஸ் செய்யறார்...நீ என்னனா அர்த்தமே போறாப்ல வார்த்தையை மிஸ் செய்யற இதுவே உனக்கு வழக்கமாகிப் போச்! என்னத்த சொல்ல என்று உள் கீதா குட்டு வைத்தாள்!!!!!!!)

   கீதா

   நீக்கு
 2. பலமுறை சரவணனிடம் ராகவனைப் பற்றி சங்கரன் சுள்ளென்று விழுந்திருக்கிறார். நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் வந்து இவனுடன் பேசிக் கொண்டிருக்கும் ராகனைக் கண்டால் அப்போதெல்லாம் அவருக்கு ஆகாது.//

  ஒருவேளை இதுதான் காரணமோ சரவணன், சங்கரன் ஆசைப்பட்ட பெயரை வைக்காததற்கு..?!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராகவனிடம் அவனுக்கு இருக்கும் அன்புதான் காரணம்.

   நீக்கு
 3. கதையை வாசித்துக் கொண்டே ஒரு லைனுக்குக் கருத்து போட்டு வரும் போது பதிவு இரு கவிதைகளிலும் நின்றுவிட்டது ஸ்க்ரோல் ஆகாமல்!!

  கண்ணில் பட்டால் விட்டுருவமா? கதையை முடித்திடுவமா இல்லை கவிதைக்குக் கருத்து போட்டுருவமா என்று மனதுள் ஒரு சின்ன போராட்டம்...கவிதையைப் பார்த்தபின் ஒரு சின்னதா சொல்லிட்டு மேலே போவோம்னு........ஹிஹிஹி

  இரண்டையும் ரசித்தேன் ஸ்ரீராம் செம !!! உங்கள் சிந்தனைகள் விரிச்சு பறக்குது ஸ்ரீராம்!! வியப்பும் ரசிப்பும் !!!
  இரண்டுமே பேய்க் கவிதைகள் போல!!! ஹா ஹா ஹா

  மீண்டும் இது குறித்து பின்னர் வரேன் இப்ப சங்கரன் என்ன செய்கிறார்னு பார்த்துவிட்டு வரேன். பாவம் அவரை கண்டுக்கலைனா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு ஸ்ரீராம், கீதா, இன்னும் வரப்போகிறவர்களுக்கு இனிய காலை வணக்கம்.

   போக வேண்டிய இடத்துக்கு விசா வந்துவிட்டதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
   அப்பா கதைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா.

   சரவணன் ஏன் ராகவனைப் பற்றிக் கடிந்து கொள்ள வேண்டும். ராகவி என்ற பெயர் கூட ராகவனின் பெண் பெயர்தானே.

   இன்னும் மணையை வைத்துப் படுத்துக் கொள்கிறார்களா.
   ஏன் இருவருக்குள்ளும் இந்தத் திரை.

   இரண்டு பேருக்கும் துன்பம் தானே. பார்க்கலாம் என்ன ஆகிறது என்று.

   இப்படி சர்க்கரைப் பொங்கல் , அக்காரவடிசில்,வெண்ணெய் போட்ட தயிர் சாதம் எல்லாம் சேர்த்துக் கொடுத்தால் எப்படி ஜீரணிப்பது ஸ்ரீராம்.
   ஞாயிற்றுக்கிழமையும் பாதி கொடுத்தால் இன்னும் நிதானமாக அனுபவிப்போமே.

   நீக்கு
  2. வாங்க கீதா...    நீங்கள் சொல்லியிருக்கும் கவிதைகள் திகில் கவிதைகள் இல்லையா?

   நன்றி.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா..    கதைக்குப்பெயர் கிடைக்கவில்லை!  ராகவனை சரவணன் கடிந்துகொள்ளவில்லை.  சங்கரன்தான் கடிந்துகொள்கிறார்!  ராகவி சரவணனின் பெண் பெயர்!  சங்கரனின் பேத்தி.

   //இப்படி சர்க்கரைப் பொங்கல் , அக்காரவடிசில்,வெண்ணெய் போட்ட தயிர் சாதம் எல்லாம் சேர்த்துக் கொடுத்தால் எப்படி ஜீரணிப்பது ஸ்ரீராம்.////

   ஓவர் டோஸாயிடுச்சோ?!!!

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நல்வரவு வந்தோருக்கும் இனி வரப்போகிறவர்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 5. போனவாரம் புதுத் தொடர் ஆரம்பிச்சதே நினைவில் இல்லை. மறுபடி போனவாரம் போயிட்டு வந்தேன். சங்கரன் பணி ஓய்வு பெற்றதும் மனைவி மதிக்கவில்லை என நினைக்கிறாரோ? இல்லைனு தோணுது. பார்ப்போம் என்னவென்று. பிள்ளை, மாட்டுப்பெண்ணிடமும் அனுசரித்துப் போக வேண்டுமெனக் கூட இப்படி நடந்துக்கலாம். அது என்ன மாட்டுப் பெண்ணுக்கு மட்டும் தனியாக அடை? மத்தவங்களுக்கு அதுவும் சங்கரனுக்கு ரவா உப்புமா? ஆனால் நல்லா இருந்ததாகச் சொல்லி இருக்கார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாட்டுப்பெண்ணுக்கும் ரவா உப்புமாதான்.   வாசனையைப் பார்த்து சங்கரன் அடை என்று நினைத்துக்கொள்கிறார்.

   நீக்கு
 6. இரண்டு நாட்களாக மறுபடி பேய்ங்க எல்லாம் வரது சந்தோஷமாக இருக்கு. ஸ்ரீராமின் இந்தப் பேய்க்கவிதைகள் ஏற்கெனவே படிச்சேன். முகநூலிலும், இங்கே பதிவிலும் என நினைக்கிறேன். இரண்டுமே திடீர்னு படிச்சாத் தூக்கிவாரிப் போடும். ஆனால் எனக்குத் தூக்கி எல்லாம் வாரிப் போடலை. :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேய்களின் வருகைக்கு சந்தோஷப்படும் ஒரே ஆள் நீங்கதானோ!

   நீக்கு
  2. துரை செல்வராஜூ ஸார்...    அது அன்பான பேய்.  அது நட்பான பேய். அது 'அடக்கமான' பேய்!

   நீக்கு
  3. ஸ்ரீராம் ஹையோ ஸ்ரீராம் பேய் வருகையில் சந்தோஷப்படும் +1....மீ டூ...

   அதான் உங்க கவிதை பற்றி சொல்லுகையிலே சொல்லிருக்கேனே!!!!ஏஏஏஏஏஏஏஏஏ

   அப்பேய் "அடக்கமான பேய்" ஹா ஹா ஹா ஹையோ இதை நான் கீழே சொல்ல வரும் போது...கரன்ட் ஹோகயா....கொஞ்சம் முன்னர்தான் வந்தது.
   எபியில் நகைச்சுவை நப்புப் பேயார் என்றால் இது அடக்கமான பேய் என்று சொல்ல வந்தேன் நீங்களும் இங்க அதை சொல்லிட்டீங்க ஸோ ஹைஃபைவ்...

   கீதா

   நீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு நன்றியுடன், வருகைக்கு நல்வரவு கமலா அக்கா...

   நீக்கு
 8. கவிதை அருமை. மூலிகை விஷயம் - பார்க்க வேண்டும்.

  இந்த வாரக் கதை - சென்ற வாரக் கதை நினைவிலில்லை. அதைப் படித்த பின் இதற்கு வரணும்.

  காலை வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லை. வாங்க...    கவிதையை ரசித்ததற்கு பாராட்டுகள்.  எந்தக் கவிதையை ரசித்தீர்கள் என்று சரியாய்த் தெரியவில்லை!

   நீக்கு
  2. முதல் கவிதை, 'உலகின் கடைசி மனிதன்' என்ற ஒரு வரிக் கதைபோல, திகில் கதை. இரண்டாவதும் ரசித்த கவிதை.

   இரண்டுமே நல்லா இருந்தது.

   நீக்கு
 9. மூலிகை விஷயம் புதிதாக இருக்கிறது. லிங்க் இருக்காம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் இந்தப் பாட்டியின் படம். கலங்குகிறது மனம்.

   நீக்கு
  2. வல்லிம்மா...     அதிலேயே லிங்க் தந்திருக்கிறேனே....

   நீக்கு
  3. இது வேறு பாட்டி வல்லிம்மா!

   நீக்கு
 10. // "சேதக... ஸ்ரீராமம்..." பதினோரு மணிக்குமேல் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். தனியாகத்தானே இருப்பார்...//

  ஹப்பா ஒரு வழியாக பாட்டின் வரி கிடைத்துவிட்டது!

  ஸ்ரீராம் இந்தக் கிருதி சதாசிவப்ரம்மேந்த்ரர் எழுதியதுதானே? பாலமுரளி பாடியது நிறைய கேட்டிருக்கிறேன்...வழக்கம் போல போன முறை நீங்க கதையில் சொன்னப்ப டக்கென்று பிடிகிட்டவில்லை.

  ராகம் சிந்துபைரவி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது அவருக்கு மறந்து போன இரண்டாவது பாடல் கீதா...     முதல் பாடல் சிந்தா நா ஸ்திகிலா 

   நீக்கு
  2. இப்ப கிட்டி ஸ்‌ரீராம்....ஆமாம் நினைவுக்கும் வந்தது மீண்டும் போய் ஒரு முறை செக் செய்து கொண்டு வந்தேன்...அந்த்க் கதையில்...!!!

   கீதா

   நீக்கு
 11. கதை மிக மிக அருமையாகப் போகிறது ஸ்ரீராம்...மீண்டும் வருகிறேன் பின்னர் கடமைகள் முடித்துவிட்டு..

  கீதா

  பதிலளிநீக்கு
 12. கதையில் சங்கரனுக்கும் விசாலிக்குமான இடைவெளி மௌனம் எனக்கென்னவோ அவரது பணி ஓய்வினால் என்று தெரியலை....வேறு ஏதோ ஒன்று!! அது சஸ்பென்ஸ்??!!! ஸ்ரீராம் எப்படிக் கொண்டு போகிறார்னு பார்க்கணும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...  இதையும் கவனிக்கணுமா?   ஞாபகம் வச்சுக்கறேன்!

   நீக்கு
 13. ///துர்க்கைக்குக் கட்டளை!..////

  ஓ..
  இது சுண்டல் பாயசத்துக்கான கட்டளை!....

  பதிலளிநீக்கு
 14. //..பாவிகள் துணிகளை உருவிக்கொண்டுதான் புதைத்திருக்கிறார்கள்../

  அந்தப் பாவிகளிடமிருந்து தப்பிக்கையில், துண்டக் காணோம், துணியக் காணோம்னுதானே ஓடின..ஞாபகமில்லையாப்பா !

  பதிலளிநீக்கு
 15. ’மனம்’ கவிதைக்குத் தலைப்பில்லாமல் விட்டிருந்தால்...!

  பதிலளிநீக்கு
 16. சங்கரனை இப்படி தனிமையே கொன்று விடும் பாவமாக இருக்கிறது.

  கொலு படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 17. நிலம் புரண்டி - இண்டெரெஸ்டிங். இந்த மாதிரிச் செய்திகள், காணொளிகள் வசீகரமுடையவை.

  பதிலளிநீக்கு
 18. தொடர்கதைக்கு அத்தியாய எண் மாதிரி போடலாம்.

  நிறைய பெயர்கள் ஸ்ரீராம்.

  யார் யார் யாருக்கு யார் என்ன உறவு என்பது இந்த அத்தியாய ஆரம்ப வாசிப்பில் எனக்குப் பிடிபடவில்லை. முன் பகுதிகளைப் புரட்டிப் பார்க்க வேண்டுமோ என்று தோன்றியது. பெயர்கள் பிடிபடுகிற வரை லேசாக பேச்சுவாக்கில் உறவு முறைகளை அவர்கள் இன்னார் என்று கோடி காட்டினால் கதையுடன் ஒன்ற செளகரியமாக இருக்கும்.

  மீனா அம்மாவிற்கு இன்னும் ஒரு பெயர் கொடுக்காததினால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பெயர் கொடுத்திருந்து அந்தப் பெயரும் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து கொண்டிருந்தால் ஒரே குழப்பமாகப் போயிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சங்கரன்- விசாலி யின் மகன் சரவணனின் மனைவி மீனா.  யதேச்சையானஒற்றுமை வேலைக்காரிக்கு அதே பெயர்.  சங்கரனின் பேதி ராகவி.  சரவணனின் மகள் ராகவி.

   நீக்கு
 19. நிலம் புரண்டியாவது பரவாயில்லை. மனித வாடை பட்டதும் ஒளிந்து கொள்கிறது.

  ஆப்பிரிக காடுகளில் இரத்த வாடை பட்டதுமே அந்த உருவத்தின் மீது தன் கிளைகளைப் பரப்பி விழுத்து இரத்தத்தை உறிஞ்சுகிற காட்டேரி மரங்கள் இருக்கின்றனவாம். எப்பவோ படித்தது. :))

  பதிலளிநீக்கு
 20. சங்கரன், விசாலி தம்பதியரைப் போல் பல தம்பதியர் தங்கள் முதிய வயதில் இப்படித்தான் ஒரு மவுன யுத்தம் நடத்துகிறார்கள். அதை தத்ரூபமாய் எழுத்தில் வகித்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜோஸப் ஸார்...    நிறைய ஒற்றுமையான தம்பதிகளைதான் நான் பார்க்கிறேன்.  இது ரேர்!

   நீக்கு
 21. மனம் என்பது என்ன?  மூளையா?  இதயமா?  ஜீவி ஸார் இந்தக் கேள்விக்குதான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார், அவர் பதிவில்.//

  நானும் படித்தேன். அருமையான தொடர்.

  பதிலளிநீக்கு
 22. //மனம் என்பது என்ன? //

  நாமே உள்ளேயே வசிக்கிறோமா
  இல்லை வெளியேவா என்று
  பல நேரங்களில் சரியாகப்
  புரிபடுவதில்லை..
  இதில் மனம் வேறேயா?.. :))

  பதிலளிநீக்கு
 23. //மைக்ரேனில் இருந்த நான்.. //

  ஹஹ்ஹஹ்ஹா...

  அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் மைக்ரேனின் அருமை தெரியும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...    ஆமாம்...    ஆமாம்...    இந்த சமயத்தில் கட்டாயத்துக்குட்பட்டு துணிக்குச் செல்லும் கஷ்டம் இருக்கு பாருங்க....

   நீக்கு
 24. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 25. கெளரவ குடும்பமா?..

  பொம்மை வாங்கி கட்டுப்படி ஆகுமா?
  உத்தேசமாக எத்தனை படிகள் ஒதுக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் யோசனை போனால்...
  சுஜாதா பாஷையில் இந்தத் தொடர் வரிகளை முடித்து வையுங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கெரவமா கொஞ்சம்தான் காட்டியிருக்காங்க...  இதுதான் கௌரவக் குடும்பம்னு அவங்க காட்டினா சரின்னு சொல்ல வேண்டியதுதான்!

   நீக்கு
 26. //புதுசா ஒரு கவர் எடுத்துக் காய்ச்சணும் " என்று பொதுவாக சொல்லி விட்டு ராகவியின் புத்தகப்பையை எடுத்து ஒழுங்குபடுத்தி வைத்தாள். சங்கரன் செய்தித்தாளின் ஓரம் வழியாக விசாலியைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார். இரண்டாம் பாகமாக வெளிவந்த அந்த வரிகள் தனக்கானவை என்று அவருக்குத் தெரியும்.//

  விசாலி சங்கரனிடம் நேரடியாக பேசாமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ?

  //தன்னைத் தவிர்க்கவே விசாலி இதெல்லாம் செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டார் சங்கரன். //

  தன்னைத் தவிர்க்கவே என்றால் விசாலி, சங்கரன் உறவில் ஏதோ உறுத்தல் இருக்கிறது போல் தெரிகிறது.  வீட்டு வேலை செய்யும் பெண் அப்பா, அம்மா என்று அழைக்கிறளோ!
  வீட்டு வேலை செய்யும் பெண்ணின் அம்மா பேர் மீனா, மருமகள் பேர் மீனா கொஞ்சம் குழப்பம் வருமோ ?

  ஆபீஸ் வேலையை விட வீட்டு வேலையில் பணம் அதிகம் கிடைப்பது உண்மைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வீட்டு வேலை செய்யும் பெண்ணின் அம்மா பேர் மீனா, மருமகள் பேர் மீனா கொஞ்சம் குழப்பம் வருமோ ?///


   சரவணனுக்கு குழப்பம் வராமலிருந்தால் சரி கோமதி அக்கா...!!!

   ரெண்டு பேருக்கும் ஒரே பேர் பாருங்க!!!

   நீக்கு
  2. சரவணனுக்கு ஏன் குழப்பம் வருது அலமேலுவின் அம்மா தானே மீனா?
   ஏதாவது காரணம் இருக்குமோ!

   நீக்கு
  3. //வீட்டு வேலை செய்யும் பெண் அப்பா, அம்மா என்று அழைக்கிறளோ!// சென்னை முழுக்கத் தெரிந்தவர், தெரியாதவர் என இள வயதுக்காரங்க அனைவருமே முதியவர்களை அப்பா, அம்மா என அழைக்கும் வழக்கம் உண்டு. எங்க வீட்டுக்கு (அம்பத்தூரில் இருந்தப்போ) வேலைகள் செய்ய வரும் கொத்தனார் முதல் எலக்ட்ரீஷியன் வரை அனைவரும் அவரை அப்பா என்றும் என்னை அம்மா என்றும் அழைப்பார்கள். ஸ்ரீரங்கத்திலும் வேலை செய்யும் பெண்ணில் இருந்து வீட்டில் வேலைக்காக வரும் இளையோர் எல்லோருமே அப்பா, அம்மா என்றே அழைக்கின்றனர்.

   நீக்கு
  4. சரவணன் மனைவி பெயரும் மீனா! வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் பெயரும் மீனாவா? சரவணன் மாற்றி அழைக்காமல் இருந்தால் சரி.

   நீக்கு
  5. //எங்க வீட்டுக்கு (அம்பத்தூரில் இருந்தப்போ)//

   ஆஅ எண்டாலும் ஊ எண்டாலும் உடனேயே அம்பத்தூரை களம் இறக்கிடுவா கீசாக்கா கர்ர்ர்ர்ர்:)) அது எங்க இருக்குது என்ன நிறம் எண்டே எனக்குத் தெரியாதே:))

   நீக்கு
 27. //கடன் கொடுத்தவனைக் கண்டதும் சரேலென பக்கத்து சந்தில் மறையும் கடன் வாங்கியவர்களைப் போல, சரசரவென மண்ணுக்குள் மறைவது //

  நல்ல எடுத்து காட்டு.

  காணொளி பார்த்தேன். கையில் வைத்து இருக்கும் போது மறையாத மூலிகை, தாயத்தில் போட்டவுடன் மறைவது ஆச்சரியம் தான்.
  கையில் பிடித்து கொள்ளாமல் இருந்தால் மூலீகை மறைந்து இருக்குமோ மண்ணுக்குள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  சுவாரஸ்யமா இருந்தது இல்லை?

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
  2. //தாயத்தில் போட்டவுடன் மறைவது ஆச்சரியம் தான்.
   கையில் பிடித்து கொள்ளாமல் இருந்தால் மூலீகை மறைந்து இருக்குமோ மண்ணுக்குள்.//
   இந்த வீடியோவில் உள்ள ட்றிக் கே அதுதான் கோமதி அக்கா.. நாமெல்லாம் போனால் மறையாது தாவரம்:).. அப்போ அவர் சொல்வார்ர் உங்களிடம் தேத்தாம் கொட்டை விதைகள் இல்லை அல்லது இருந்தால்ல்.. அது உண்மையானது இல்லை.. இப்படி எதையாவது சொல்லி தப்பித்து விடுவார்ர்.. எனக்கு என்னமோ மனம் படக்குப் படக்கெண்டுது.. அந்த வீடியோ பார்த்ததிலிருந்து கர்ர்ர்ர்:))

   நீக்கு
 28. மூதாட்டி படமும், கவிதையும் மனதை கனக்க வைக்கிறது.

  //துர்க்கையின் அருள் எனக்கு பூரணமாகக் கிடைக்கும் என்றார்!//
  சித்தியின் வாக்குப்படி நடக்கட்டும் வாழ்க வளமுடன்.

  கொலு படங்கள் நன்றாக இருக்கிறது.

  பயமுறுத்தும் கவிதைகள்.

  இன்றைய பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 29. நான் முதலில் ராகவி என்ற பெயரை சரவணனுக்கும் சங்கரனைப் போல இசை பிடிக்கும் போல அதனால் ராகவின்னு வைச்சிருக்கானோ என்று நினைத்தேன் அப்புறம் காரணம் வந்துவிட்டதே...

  கீதா

  பதிலளிநீக்கு
 30. இரவில்
  தனியாக இருக்கிறோமே
  விளக்கை அணைக்க வேண்டுமா என்ன
  என்று யோசித்த பொழுது
  வேண்டாம் என்று தான் எனக்கும் தோன்றுகிறது
  என்றது
  அருகில் ஒரு குரல்..
  தனிமை என்று நினைத்தது
  தவறு என்று தெரிந்தது..
  கூட துணை இருக்கும் பொழுது
  இருட்டாவது?.. வெளிச்சமாவது?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துணைதான் இல்லையே....      தனியாய்த்தானே இருக்கிறாள்!  அப்போதானே திகில்!

   நீக்கு
  2. துணை இருக்கிறதே! குரலாய்க் கூட இருப்பதைத் தெரிவிக்கிறதே..

   நீக்கு
 31. மற்றவர்கள் செய்யவில்லை
  பெற்ற மகன்களும்
  மகள்களும்தான்
  செய்கின்றனர்
  இந்தப் பாவத்தை..

  அவர்களைச் சுமக்க
  இவள் வயிறு
  என்ன பாவம்
  செய்ததோ...//

  வரிகள் அருமை ஆனால், மனம் என்னவோ செய்தது ஸ்ரீராம்!!! இப்படிப் பலரையும் பார்க்கவும் நேரிடுகிறது.அந்தச் சுட்டி கலங்கடித்துவிட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுமை.   அந்த மகன்களை பசித்த புலி தின்னட்டும்.

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம் !

   அந்த மூதாட்டிக்கு 4 குழந்தைகளாம்....ஹூம் எங்க மாமியார் அடிக்கடி சொல்லுவாங்க 5 பிள்ளை பெத்தவங்க நடுத்தெருவிலனு...முன்னாடி அடிக்கடி சொல்லுவாங்க. அவங்களுக்கு 5 பிள்ளைகள் (2 மகள்கள்) எனக்கு அப்போதுகோபம் வரும். நான் வாதாடுவேன். உங்களை நாங்க (நாங்கள் 5 மருமகள்கள்) பார்த்துக்கா மாட்டோம்னு சொல்றீங்களானு. நம்ம கீதாக்காவின் சிரிப்பே அதுக்கு பதிலா தருவாங்க...அதான் இஃகி இஃகி!!

   ஆனால் பாருங்க...மாமியாரை எல்லாப் பிள்ளைகளுமே தாங்குகிறார்கள். இன்று. எல்லா மருமகள்களும் உட்பட. அதுவும் அன்றைய சமாச்சாரங்களை மறந்து எல்லாரும் பார்த்துக் கொள்கிறார்கள்!!! இப்ப போனமுறை போயிருந்தப்ப சொன்னேன். இதுக்கும் அதே சிரிப்பு!!!! (தருமி நாகேஷ் பாணியில்!!!!!))

   கீதா

   நீக்கு
 32. //குளிர்கிறதே
  ............
  ............
  அருகில் ஒரு குரல்..//

  " நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
  கல்லறையிலும் ஹீட்டர் கருவி வைப்போம்.."

  -- ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்டுத்தான் ஜீவி அண்ணா...கட்சிக்காரங்களுக்கு எல்லாம் பேய்னா பயம் இருக்குமோ?!!

   கீதா

   நீக்கு
  2. ஆனா ஓட்டு கிடைக்காதே!!!

   கீதா

   நீக்கு
 33. ஸ்ரீராம்: சரி.. மீனா அம்மாவுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

  நான்: மைத்ரேயி

  ஸ்ரீராம்: வைச்சுட்டாப் போச்சு!

  பதிலளிநீக்கு
 34. //நானும் படித்தேன். அருமையான தொடர்.//

  நன்றி சொல்ல வேண்டும், ஜோசப் சாருக்கு..

  பதிலளிநீக்கு
 35. ஆஆஆஆஆ கதையை எங்கின விட்டோம் என நினைவில்லாமல்.. தொடர்ந்து சற்றுப் படித்ததும் கண்டு பிடித்து விட்டேன்.. இன்று கதையில் விறுவிறுப்பு இல்லை.. சுமாரான வீட்டுக் கதைகளோடு நகர்ந்திருக்கிறது.. தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பத்திய மான் அதிரா...     விறுவிறுப்பு இல்லையா?  சரவணன் ஊறுகாய் வியாபாரம் செய்வதாய் வைத்துக்கொண்டால் விறுவிறுப்புவந்து விடுமோ!!!

   நீக்கு
  2. //வாங்க பத்திய மான் அதிரா... //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஜிம் இல் இருக்கும்போது இப்பதிலைப் பார்த்தேனா.. தனியாகச் சிரிச்சு சிரிச்சு.. ஜிம் போன களைப்பே தெரியாமல் போச்சு ஹா ஹா ஹா..

   ஏதோ குட்டி போட்ட மானுக்குப் பத்தியம் கொடுத்தால்.. அதுதான் பத்தியமான் ஆம்ம்ம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   இது எவ்ளோ தங்கமான:) பக்தி மான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

   நீக்கு
 36. ”இந்தப்பாவத்தைக்” கிளிக் பண்ணிப் போய்ப் படித்தேன், எப்படித்தான் இந்தப் பிள்ளைகளுக்கு மனம் வருகிறதோ.. என்னதான் சண்டையிடும் தாயாக இருப்பினும், ஒரு ஓரத்திலாவது இருக்க விட்டு உணவு கொடுக்கலாமே.. நாளை நமக்கும் வயசாகும் எனும் எண்ணம் இப்படியானோருக்கு எழுவதே இல்லைப்போலும்..

  நான் அடிக்கடி வருங்காலத்தை நினைப்பேன், வயதாகிட்டால் எப்படி இருக்கும், மரணம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கற்பனை பறக்கும்.. பயம்ம்ம்ம்ம்மா இருக்கும் எனக்கு:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களுக்கும் ஒரு பிற்பகல் வரும் பத்திய மான் அதிரா...    பத்து மாதம் கருவறையில் அவர்களைச் சுமந்த இவளுக்கு அவர்கள் வீட்டில் ஒரு இருட்டறை கூட இல்லை பாருங்கள்...  மனம் இருண்ட மாக்கள்.

   நீக்கு
 37. இல்லை இந்த நிலம்புரண்டி கொஞ்சம்கூட நம்பும்படியாக இல்லை, இது ஏதோ சாமி ஆடுவதைப்போல இருக்கு இந்த விளையாட்டு... மண்ணுக்குள் அவ்வளவு சீக்கிரம் மறைய முடியுமோ? அதுவும் காய்ந்த களிமண்ணாக இருக்கு, ஒரு தாவரத்தின் தண்டுப்பகுதிவரை மண் ஒட்டியிருக்கும்.. அதையும் தாண்டி அப்படியே உள்ளே போய் விடுகிறது,

  பின்பு இவர்கள் அம்மண்ணை வெட்டி எடுக்க எவ்ளோ நேரம் எடுக்கிறது,

  அதிலும் இன்னொன்று, குட்டித்தாவரமாக எடுத்துக் காட்டுகிறார், ஆனா தோண்டிய மண்ணோ ஒரு அடிக்கு கிட்ட தொண்டியிருக்கிறார்.. அப்போ தரையின் மேலே எழும்பி நிற்குமளவுக்கு செடி எனில் எப்படியும் 1.5 அடி நீளமாவது இருக்கோணுமே.. இது பச்சைப் பொய்.. ஏமாத்து வேலை.. நான் நம்ப மாட்டேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் சந்தேகம் நியாயமானதே...   ஏனென்றால் "ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை..." ன்னு டி எம் எஸ் குரல்ல தலைவர் பாடிட்டுப் போயிருக்கார்.

   நீக்கு
  2. ///"ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை..." ன்னு டி எம் எஸ் குரல்ல தலைவர் பாடிட்டுப் போயிருக்கார்.//

   ஒருவேளை... அவர் அப்பூடிப் பாடியிருக்காட்டில் உங்கள் பதில் என்ன த்றீராம்?:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 38. //​​எப்படியோ
  வெளியே வந்து பார்த்தபோதுதான்
  அது உள்ளேயே இருக்கிறது
  என்று தெரிந்தது.
  உள்ளேயிருந்து பார்த்தபோது
  அது வெளியே இருந்தது
  போலதான் தோன்றியது//

  ஹா ஹா ஹா எப்படி மனதை விட்டு வெளியே வந்து பார்த்தீங்கள் ஸ்ரீராம்? அப்போ நீங்கள் பார்த்த மனம் உங்களுடையது அல்ல:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //..நீங்கள் பார்த்த மனம் உங்களுடையது அல்ல:)) -பக்திமான்

   சித்தர் ஸ்ரீராம் இதற்கு பதில் சொல்வாரா!


   நீக்கு
  2. நம் மனசையே நம்மால் பார்க்க முடியவில்லை.  இதில் அடுத்தவர்கள் மனம் வேறு தெரிகிறதா என்ன!  

   நீக்கு
  3. //சித்தர் ஸ்ரீராம்//

   சித்தர் கூட பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம்.  பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம் புத்திகெட்ட மானுடர்க்கு தத்துவங்கள் தேவை என்னடா என்று எஸ் பி பி உச்சகட்டமாகப்பாடியிருக்கிறார் ஏகாந்தன் ஸார்....!!

   நீக்கு
  4. உங்களுக்கேற்றபடி அவர் ஏற்கனவே பாடியிருக்கிறாரா! அப்ப சரி, வருது வெள்ளி .. போடுங்கள். பக்திமான் எப்படி ஜிந்திக்கிறார் எனப் பார்ப்போம்!

   நீக்கு
  5. //சித்தர் ஸ்ரீராம் இதற்கு பதில் சொல்வாரா!//
   ஹா ஹா ஹா ஏ அண்ணன்.. இந்தப் பெயர் எனக்குத் தோன்றாமல் போச்சே:)).. சித்தர் அதிரா:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  6. //ஸ்ரீராம்.10 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:52
   //சித்தர் ஸ்ரீராம்//

   சித்தர் கூட பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம். பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்//

   பாருங்கோ ஏ அண்ணன், ஒருவரின் குணாதிசயங்கள் அவரின் பெயருக்கேற்ப இருக்குமாம்ம்.. உருவமும்:) என நான் 3ம் வகுப்பிலேயே படிச்சிட்டேன்ன்:)).. அதனால நீங்கள் சித்தர் ஸ்ரீராம் என்றதும்.. சித்தராகவே பதில் ஜொள்ளிட்டார் பாருங்கோ:))

   ஊரில எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேருக்குப் பெயர் சிங்கன்:)).. அதாவது சிங்கம் என்பதை செல்லமாக சிங்கன் என்பினம்.. இருவரையும் பார்த்தால் கொஞ்சம் சிங்கம் போலவே இருப்பினம்..:)) பல்லு கொஞ்சம் சிங்கப்பல்லுப் போலவும், தலைமயிர் முன்னால எழும்பி சிங்கம் போலவும் இருக்கும்:)) ஹா ஹா ஹா.

   அப்பூடித்தான் ஸ்ரீதேவி எனும் பல பேர்களை நான் பார்த்திட்டேன்ன்.. அனைவரும் அழகோ அழகு.. கறுப்பாக இருக்கும் ஸ்ரீதேஎவியும் அழகோ அழகு.. ஹா ஹா ஹா

   நீக்கு
 39. //சித்தியின் பாஸ்... சே... பாஸின் சித்தி வீடு! //

  என்ன டங்கு ஸ்லிப்பாகுது:)).. ஒருவேளை உங்கட பாஸ் தான் சித்திக்கும் பாஸ் ஆக இருக்கிறாஅவோ என்னமோ:)) ஜந்தேக பட்டினை தட்டி விட்டிட்டீங்க:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ..    அந்தக் கதையை ஏன் கேட்கறீங்க...     அது நவரசங்களையும் கலந்த கதை!

   நீக்கு
 40. //பூ அலங்காரம் ஓம் என்ற வடிவில் இருக்கு"//

  நீங்க சொன்னதும், நானும் கண்டு பிடிச்சிட்டனே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னதும்தானே கண்டுபிடிச்சீங்க!

   நீக்கு
  2. சித்தி கேட்ட பின்புதானே நீங்களும் கண்டுபிடிச்சீங்க:) அதனால அதன் பலனில பாதி நேக்குத் தரோணும் ஜொள்ளிட்டேன்ன்:))

   நீக்கு
 41. //தும்பிக்கை ஆழ்வார்....//
  குண்டுப்பிள்ளையாரைப் பார்த்து தும்பிக்கை ஆழ்வார் எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைணவர்கள் பிள்ளையாரை அப்படிதான் சொல்வார்கள் பத்தியமான் மதுரா... சே...   அதிரா...    அவர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரே சைவக்கடவுள் இவர்தான்.   அதுவும் சிலர்தான்!

   நீக்கு
  2. ஸ்ரீராம்... நீங்க எழுதியிருப்பதில் தவறு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் கான்சப்ட் என்னன்னா, ஒரே கடவுளைத் தொழுவது, நினைப்பது, வேண்டிக்கொள்வது..... அவ்ளோதான். 'தும்பிக்கை ஆழ்வார்'னு சொன்னாலும் தொழ மாட்டாங்க, பிள்ளையார் சதுர்த்தி கிடையாது.

   இந்த கான்சப்டை எல்லோரும் (வைணவர்களும்) எப்படித் தவறாப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்னு எழுதலாம். ஆனா இங்க வேண்டாம்.

   நீக்கு
  3. ///இந்த கான்சப்டை எல்லோரும் (வைணவர்களும்) எப்படித் தவறாப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்னு எழுதலாம். ஆனா இங்க வேண்டாம்//

   ஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் எழுத வந்தார்ர்.. ஆனா டக்கென அண்ணியின் முகம் முன்னால வந்ததும் விட்றோ பண்ணிட்டார்ர் ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு அனைத்தும் தெரியுமாக்கும்:))..

   நீக்கு
 42. //நேற்று அதிரா சொன்ன பேய்க்கதைகள் படித்தபின் இன்று இதைப் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது... //

  ஹா ஹா ஹா அதிராவுக்கு ஊக்கம் கொடுத்து இன்னும் பல பேய்களை வரவையுங்கோ எனத்தான் ஏ அண்ணன் சொன்னார்:)).. இது என் ஊக்கத்தால் உங்கள் பேய் ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே உங்கட கவி வெளிவருது:)) ஹா ஹா ஹா..

  முதலாவது.. அருகில் கேட்ட குரல் கவிதை சூப்பரோ சூப்பர்ர்.. நகைச்சுவை கலந்திருக்கு.. படமும் சூப்பராக தேடிப் போட்டிருக்கிறீங்க.. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் சகோதரரே

  தாங்கள் எழுதும் தொடர்கதை மிக அருமையாக நகர்கிறது. ஒவ்வொன்றும் எவ்வளவு ஆழமான வரிகள்..! பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனினும், ரசித்துப் படித்த ரசனை மிக்க ஒவ்வொரு வரிக்கும், நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

  விசாலி தன் கணவரை ஏன் இப்படி தள்ளி வைத்து பேசாமலேயே கொல்லுகிறாள். அதற்கு ஏதேனும் பிளாஷ்பேக் இருக்கும். அது அவர்கள் இருவருக்கும், உங்களுக்கும் மட்டுந்தான் தெரிந்த ரகசியம். அது இடையில் தீடிரென முளைத்து எங்களையும் எட்டும் வரை காத்திருக்கிறேன். (ஒரு அனுமானத்துடன்தான்.) ஹா.ஹா.ஹா.

  பாவம் செய்த தாயின் கவிதை நெஞ்சை வருத்தத்தில் வாட்டுகிறது. எனக்கு மட்டும் சாபம் கொடுக்கும் வல்லமை வந்தால், அந்த பாவத்திற்குதான் கண்டிப்பாக என முதல் சாபம்.

  பேய் கவிதைகள், அதற்கு வந்த கமெண்ட்ஸ் எல்லாமே அருமை. இப்போது கவிதைகளை பயமேதுமின்றி பகலில் படிக்கிறேன். இரவில் படித்திருந்தால் என் அருகிலும் அந்த குரல் கேட்டிருக்கும். ஏனெனில் நானும் முக்கால்வாசி நாட்கள் பேய்கள் உறங்குவதற்கு சிறிது நேரம் முன்னர் வரை, தனியாக உறங்காதிருக்கிறேன். ஹா. ஹா. ஹா.

  கல்லறைப் பேய்யும், அதற்கு குளிர்ந்தாலும், அட்டகாசமாக பயமுறுத்தி நம்மை வியர்க்க வைத்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   உங்கள் இரண்டாவதுபாரா புன்னகைக்க வைக்கிறது!

   அப்போது ஒரு சீரிஸ் திகில் வரிக்கவிதைகள் எழுதி பிளாக்கிலேயே வெளியிட்டிருந்தேன்.

   நன்றி அக்கா.

   நீக்கு
  2. நன்றி.. அப்படியா? அப்போது நான் வலைத்தளம் வரவில்லை போலும். இப்போதுதான் தங்கள் கவிதைகளை ரசித்துப் படிக்கிறேன். என்னப் போல் அதையெல்லாம் படிக்காதவர்களுக்காக அதை மீண்டும் மறுபதிவுகளாய் வெளியிடலாமே.. !

   நீக்கு
 44. தனிமையில் வாடும் சங்கரன் பாவம். பாட்டி அய்யோபாவம். மூலிகை வியப்பு.
  பேய் ஹா...ஹா.நவராத்திரி கொலு மகிழ்சி.
  மொத்தத்தில் களை கட்டுகிறது இன்றைய பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி மாதேவி.   பதில்கொடுத்தபின் நீங்கள் பதில்களை படிப்பதில்லை என்று தெரிகிறது!

   நீக்கு
  2. சில தருணங்களில் வேலை அதிகம் இருப்பின் படிப்பதில்லை மற்றைய பொழுதுகளில் மறு நாள் படிப்பேன்.

   நீக்கு
 45. நிலம்புரண்டிக்கு வருகிறேன்...வீடியோ வரமாட்டேங்குது.

  மனம் மூளை பற்றி ஜீவி அண்ணா அருமையாக எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னும் நான் அதை வாசிக்க வேண்டும்.

  உங்களின் மனம் வரிகள் செம ஸ்ரீராம்...

  மனம் என்பது நம் உள்ளேதான் அதான் மூளையின் ஒரு பகுதிதான் அதுவும்!!! நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி அவர்கள் தான் எத்தனை எக்ஸ்பெர்ட்டாக இருந்தாலும் கூட அவர் சொல்லிச் சென்றது...மூளை என்பதை மனிதனால் அத்தனை எளிதில் ஆராய்ந்து விட முடியாது அது முடிவே இல்லாத ஆழ்கடல். இப்படியான அர்த்தத்தில் அவர் சொல்லியது. அப்படியேயான வார்த்தைகள் மறந்துவிட்டது. அதனால் தான் கவிஞர்கள் எல்லோருமே மனம் என்பது ஆழ்கடல் அதனை அறிய முடியாது என்று..

  (உடனே பெண்களின் மனதுனு நெல்லை ஜொல்லப்படாதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ!!!!!!!!!!ஹிஹிஹிஹி)

  நீங்கள் இந்தப் பாடலை கேட்டிருப்பீங்க ஸ்ரீராம்...இல்லாததை நினைந்து வருந்துகிறார் அது எட்டாததை நினைத்துக் கொட்டாவி விடுகிறார் எல்லாம் உனது மனதுள் இருக்க இன்பம் அதை எங்கே என்று வெளியில் தேடுகிறார் நு எப்போதோ ஏசுதாஸ் ஒரு கச்சேரியில் பாடியது என் மாமா வைத்திருந்த காஸெட்டில் இருந்தது. ஆனால் இப்போது கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை...

  எனவே எல்லாமே நம் உள்ளேதான் என்று தத்துவார்த்தமாகச் சொல்லிட ..........லாம்...........மோ??!!!!

  (நாம் வெளியில் தான் தேடிக் கொண்டிருக்கிறோம் நடைமுறையில் என்பதுதான் உண்மையோ....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும்... அது பொம்பளைக்கும் தெரியும்.. அந்த ஆழத்துல என்ன உண்டு.. யாருக்குத்தான் தெரியும்.......

   இது நெல்லைத்தமிழன் சொன்னதில்லை. இளையராஜா சொன்னது. ஹா ஹா

   நீக்கு
  2. இல்லை கீதா., மனம் வேறூ மூளை வேறு:) இதுபற்றி நான் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேனே:))...

   நீக்கு
  3. பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும்... அது பொம்பளைக்கும் தெரியும்.. அந்த ஆழத்துல என்ன உண்டு.. யாருக்குத்தான் தெரியும்....

   ///இது நெல்லைத்தமிழன் சொன்னதில்லை. இளையராஜா சொன்னது. ஹா ஹா//

   கர்ர்ர்ர்ர்:)) ஒரு விசாளக்கிழமைக்கு இதுபற்றி ஒரு போஸ்ட் போடுங்கோ ஸ்ரீராம்.. ஜண்டைக்கு மீ ரெடி:)).. ஏனெனில் அடிகடி இந்தப் பேச்சு வருது:))

   நீக்கு
  4. மனம் - குழப்பமான விஷயம்.   இதையும் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் லிஸ்ட்டில் சேர்த்து விடலாம்!   நான் படித்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையில் இந்த மனம் என்பது வெளியிலும் இருக்கும் என்று படித்தேன்.  வெளி என்பது பற்றியும் குழப்பமான கருத்துகள் உண்டு.  படித்ததை வித்து அல்பமாக ஒரு கவிதை எழுதி வைத்திருந்தேன்.  வெளியிட மனம் வரவில்லை!

   நீக்கு
  5. வியாழனில் பெண் மனம் பற்றி எழுத வேண்டுமா?  ஆண்மனம் பற்றி எழுத வேண்டுமா?    எப்படி விவாதத்தை மைக்கவேண்டும்?!!   பார்ப்போம்.

   நீக்கு
  6. நீங்க எப்பூடி வேணுமெண்டாலும் எழுதுங்கோ ஆனா இந்தப் பெண் மனம் ஆழம்.. புரிஞ்சுக்கவே முடியுதில்லை எனபதுக்கு ஒரு முடிவு கட்டோணும் நான்:)) ஹா ஹா ஹா..

   மனம் ஒரு குரங்கு என அப்பவே ஒளவைப்பாட்டி ஜொள்ளிட்டவெல்லோ:)).. அப்போ அது உள்ளேயும் வெளியேயும் தாவிக்கொண்டிருக்கும்:)) ஆனா மூளை/புத்தி அப்படி இல்லையாக்கும்:)) அது பக்திமான் அதிராவைப்போல நல்ல ஸ்ரெடி:)) ஹா ஹா ஹா

   நீக்கு
  7. அதிரா மனம் வேறு மூளை வேறு என்பது சரிதான் ஆனால் அந்த மனம் எனும் விஷயமும் மூளையின் ஒரு பகுதிதான் என்பதுதான் நான் சொல்ல வருவது..இதைப் பற்றி நியூரோ சைக்கியாற்றி, சைக்கியாட்ரி + ரிலிஜன், மனித உணர்வுகள், தியானம் பற்றி ஆங்காங்கே வாசிக்க நேர்ந்ததால் மனம் என்பதும் மூளைக்குள் தான். இது எனக்கு வாசிக்க வேண்டிய ஒரு சூழல் பல வருட்னகளுக்கு முன். சைக்கியாட்டிரி, சைக்காலஜி மருத்துவருடனும் பேசியிருப்பதால்... நாம் அது உணர்வுகள் சார்ந்தது என்பதால் மனம் என்று சொல்கிறோம் மூளைக்கு இரக்கம் கிடையாது. அன்பு கிடையாது...அது ப்ராக்டிக்கலாகச் சொல்லும் ஆனால் அதன் மற்றொரு பகுதி அதன் பெயர் இப்ப டக்குனு வர மாட்டேங்குது மூளையின் மடிப்புகளுள் ஒன்று. இதைப் பற்ரி பதிவர் க்ரேஸும் மூளை பற்றி விரிவாக எழுதியிருக்காங்க...

   கீதா

   நீக்கு
  8. அதிரா உங்க போஸ்ட் நினைவிருக்கே!!!!

   கீதா

   நீக்கு
 46. சித்தியின் பாஸ்... சே... பாஸின் சித்தி வீடு!//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  அடுத்து சித்தியின் கேள்வியும்.... மைக்ரேனுக்கும்....

  வர வர ஸ்ரீராமுக்கு எழுத்து மிஸ் ஆகுது.....குறிகள் மிஸ் ஆகுது.....மாறிப் போகுது!! "மை" "க்ரேன்" அந்த க்ரேன் உங்க க்ரேனாவா இருந்துட்டுப் போட்டும்...அதுக்காக இம்புட்டு அனுமதி எல்லாம் கொடுக்கப்படாது ஸ்ரீராம்!!!!!!!!.ஹா ஹா ஹா.அந்த க்ரேனை தூக்கி அப்பால வைச்சுருங்க அதுதான் உங்க மூளையை ரொம்பத் தோண்டுது!!!!!!!

  அம்மன் அலங்காரம் செம!!! ரொம்ப அழகு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைக்ரேனுக்கு காரணம் வேறு என்று நேற்று சொன்னார்கள்.   அதையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
 47. கதை சிறப்பாகவே செல்கிறது. அனால் ஜீ.வீ. சார் கூறியிருப்பதை போல பாத்திரங்களின் பெயர்கள்தான் சற்று குழப்புகின்றன. 
  கவிதைகள் அபாரம்!. இருந்தாலும் மனதை வெளியே தேட ஆரம்பித்தோமானால் நாம் (பைத்தியக்கார ஆஸ்பத்திரியின்)உள்ளே சென்று விட மாட்டோமா?
  நிலம் புரண்டி என்னும் அதிசய மூலிகை பற்றி தகவல் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டு விட்டீர்களே? லிங்க்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அதன் பெயர் நிலம் புரண்டியாம். அதைக் கண்டுபிடிக்க// - நிலம் புரண்டி ல க்ளிக் பண்ணுங்க

   நீக்கு
  2. ஆமாம்...   நெல்லை சொல்லியிருப்பதுபோல க்ளிக் செய்து பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் பானு அக்கா.

   நீக்கு
 48. நேற்று அதிரா சொன்ன பேய்க்கதைகள் படித்தபின் இன்று இதைப் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது... // நீங்க கவிதைகள்...

  நான்...ஹிஹிஹி ஜொல்லமாட்டேன்... அதனாலதான் நேத்து ஜொல்லலையாக்கும்...

  செம வரிகள் ஸ்ரீராம்....எப்படித்தான் உங்க மூளைக்குள்ள (இது மனசில்லையாக்கும்!!!!) பல்பு எரியுதோ!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் இவை ரொம்ப பழசு கீதா...     ஒரு எஸ் எம் எஸ் கதைகூட பகிர்ந்திருந்தேன்.  திகில் கதை!  ஆனால் திகில் வரிகள் சொந்த வரிகள்.

   நீக்கு
  2. எஸ் எம் எஸ் கதை இங்கு? நான் வாசித்திருக்கிறேனோ? ஆனால் நினைவு இருப்பது போலவும் இருக்கு ஆனா சரியா நினைவில்லை..பெரும்பாலும் பதிவுகள் டக்கென்று மறப்பதில்லை...நீங்க பழசுன்னு சொல்றது எல்லாமே எனக்குப் புதுசு!!!!!!!!!!!!!!! நான் முக நூலிலும் இல்லையே..

   கீதா

   நீக்கு
 49. அட அட இங்கு யாருக்குமே குளிரலையா!!!! பேய் கண்டேன்னு சொல்ற அதிராவுக்குமா?!!!!!

  ஓ அவங்க பக்தி மான் ந்றதுனால பேய் பயந்திருக்கும் போல!!

  பேய் வந்தாத்தான் குளிரும்...எபி குளிரலையே!!!

  பாவம் பேய்.....நம்மள பத்தி இந்த ஸ்ரீராம் இப்படி எடுத்துவிட்டுருக்காரு எல்லார்க்கிட்டயும் நான் மாட்டிக்கிட்டேனே நு பயத்துல குளிர்ஜன்னி கண்டுருக்கும்!!!!!! ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேயைக் கேட்டுதான் பகிர்ந்தேன்.  சரி என்றுதான் சொன்னது.  நாள் இன்னொருபெய சொன்னது, அதன் பாஷையில் சரி என்றால் கூடாது என்று அர்த்தமாம்.

   நீக்கு
 50. கொலுக் காட்சிகள் அருமை. மைக்ரேன் இருக்கும் போது போனீர்களா. அடப்பாவமே.
  எங்களுக்கெல்லாம் பிள்ளையார்,முருகன்,கபாலி,முண்டகக்கண்ணி, துர்கா மா எல்லோரும் வேண்டும்.
  பெற்றோர், மாமனார் மாமியார் எல்லோரும்
  எல்லாக் கோவில்களுக்கும் போவார்கள்.
  கொஞ்சம் வயதான காலத்தில் ஒர்ற் ஒரு கோவிலாகச் செல்வதை வழக்கமாகக்
  கொண்டார்கள்.

  பாட்டி வேறென்று தெரிகிறது.
  அதை முகனூலில் பார்த்திருந்ததால் அப்படிச் சொன்னேன் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகே ஓகே ஓகே அம்மா...    நிறைய வீடுகளில் நீங்கள் சொல்வது போலதான்...    சில வீடுகளில்தான் நான் சொல்வதுபோல!

   பாட்டி பற்றி சொன்னது புரிந்து கொண்டேன் - இப்போது நீங்கள் சொன்னதும். 

   நீக்கு
 51. நிலம்புரண்டி யோசிக்க வைக்குது ஸ்ரீராம். நிறைய கேள்விகள் வருது. மறையுதுனா தொட்டால் சுணங்கி நாம கை அல்லது கால் பட்டாலும் பக்கத்துல லைட்ட தொட்டாலும் மூடிக் கொண்டுவிடும்...ஒரு வேளை அப்படியான விஷயமா..அதிசயமாக இருக்கு...இன்னும் கொஞ்சம் இதைப் பற்றி ஆராய்ஞ்சுட்டு வரேன்

  இன்று பேய்ப்பதிவு நேற்றும் பேய் அதான் கூடவே அமானுஷ்ய மூலிகைனு நிலம்புரண்டியுமா... சரி சீக்கிரத்துல இன்னொரு பேய் வரும்...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரஸ்யமான மூலிகையாய் இருக்கும் போல...   இல்லை?

   நீக்கு
 52. ஹை ஹை ஹை கீதாக்கும் கொஞ்சூண்டு கிட்னி இருக்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை!!!!

  இதுக்கு முன்னர் போட்ட கருத்துல தொட்டா சுருங்கி சொல்லிருந்தேனே இந்த நிலம்புரண்டியும் அதன் குடும்பத்தைச் சேர்ந்ததாம்....ஸோ இது உண்மைதான் அபூர்வ மூலிகைதான்...

  இன்னும் வரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 53. ஆனா தகவல்கள் தான் யோசிக்க வைக்குது. நேர்ல பார்த்தாத்தான் தெரியும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 54. நகம் படக் கூடாதுன்னு சொல்றார். ஏற்கக் கூடிய ஒன்று. நம்ம வீட்டுல எல்லாம் துளசி பறிச்சாலும் பூ பரிச்சாலும் நகம் படாம ஸாஃப்ட்ட பறிக்கச் சொல்லுவாங்க. (நான் பூ கூட செடியிலேயே இருக்கட்டும்னு சொல்ற ஆளு. பறிக்கமாட்டேன்..!!) இவரும்மூலிகைகள் நடம் படாம பறிக்கணும்னு சொல்றார் ஓகே.

  ஆனா அவர் மடில, தொடை மேல வைச்சிருக்கும் போது அது ஏன் மறையலை? கீழக் கூட விழலையே. அந்தக் கையில் கொண்டு போகும் காய் வெடிப்பதைக் காட்டலை. வெடிச்சிருக்குனு கையை விரித்துக் காட்டுகிறார்.

  இந்த மூலிகை உண்மையாக இருக்கலாம் ஆனால் இப்படிச் சொல்லும் தகவல்கள் தான்...நாம் நேரில் பார்த்தாதான் தெரியும் போல... வேரை மட்டும் கிள்ளி முகம் அருகில் கொண்டு போகிறார் ஆனால் அது வீடியோவில் இல்லை. மறைஞ்சிருக்கு. அது அப்படியே நிலத்துக்குள்ள போகுது....ம்ம்ம்ம்ம் சில கேள்விகள் வருது...அந்த மூலிகையை அப்படியே தரையில் போட்டால் மறையாதா....இப்படி நிறைய...ம்ம்ம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது வேரோடு மண்ணில் இருந்தால்தான் மறையுமோ என்று யோசித்தேன்.  ஆனால் தாயத்தில் வைத்தாலும் மறையுது என்று பயமுறுத்துகிறாரே.....

   நீக்கு
  2. அதேதான் ஸ்ரீராம்....பல விஷயங்கள் அதில் மனம் ஏற்க மறுக்கிறது....மூலிகை உண்மைதான்...தொட்டால் சுருங்கியே அதிசயம்தானே..அது போலத்தான் இதுவும் இருக்கும்னுதான் எனக்கு வாசித்ததும் தோன்றியது.

   இப்ப இந்த நிலம் புரண்டி என் மூளையைப் பிரண்டிக்/பிராண்டிக் கொண்டிருக்கு ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 55. எப்படியோ வெளியே வந்து பார்த்தபோதுதான் அது உள்ளேயே இருக்கிறது என்று தெரிந்தது.  உள்ளேயிருந்து பார்த்தபோது அது வெளியே இருந்தது போலதான் தோன்றியது
  இது மனம் அல்ல. ப்ரஹ்மம் 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...

   நன்றி ஜெயக்குமார் ஸார்.

   நீக்கு
  2. ப்ரஹ்மம் என்றால் என்ன? தமிழில் அர்த்தம் தெரிஞ்சிக்க முடியுமா?

   நீக்கு
 56. //மனித வாடை பட்டதும் மண்ணில் மறையும் மூலிகை //

  இதைப்பற்றி சொல்ல வந்து விடுபட்டு விட்டது... மனித வாடை என்றால் அது தப்பான அர்த்தம் கொள்ளாதோ?:).. ஏனெனில் உடலில் உயிர் இருந்து, வரும் உடல் மணத்தை.. வாடை எனச் சொல்வதில்லை எல்லோ.. அதனால எனக்கு தலைப்புப் பார்த்ததிலிருந்து ஒரு கஸ்டமாகவே இருக்குது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி எல்லாம் அர்த்தம் வராது அதிரா...      இப்படிதான் ஒருவரைப்பற்றிக் குறிப்பிடும்போது அன்னார் என்று எல்லா இடங்களிலும் குறிப்பிடும்போது எனக்கும் தோன்றும்.  

   நீக்கு
 57. ஸ்ரீராம் இன்னும் பயங்கர பிஸிபோலும்.. மத்தியானத்துக்குப் பின்னர் புளொக் வருவது குறையுதே கர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 58. வணக்கம் சகோதரரே

  தலைப்பிலுள்ள மூலிகை வியக்க வைக்கிறது இப்படி இயற்கையில் எத்தனையோ விசித்திரங்கள்.

  மற்றொரு கவிதையையும் படித்தேன். நன்றாக உள்ளது.

  /எப்படியோ வெளியே வந்து பார்த்தபோதுதான்
  அது உள்ளேயே இருக்கிறது
  என்று தெரிந்தது.
  உள்ளேயிருந்து பார்த்தபோது
  அது வெளியே இருந்தது
  போலதான் தோன்றியது. /

  ரசித்தேன். உள்ளேயும், வெளியேயும் தெரிவது போல் தோற்றமளிப்பதால், நிலையில்லாத மனமென்பது மாயைகளினால் வேயப்பட்டதுதான்.

  ஓம் போன்ற பூமாலைக்குள் ஓம்கார நாயகி மிக அழகான படம். ஓம் சக்தியை நமஸ்கரித்து கொண்டேன்.

  தும்பிக்கை ஆழ்வார்,
  பரந்தாமனின் அருளோடு சேர்ந்து
  நம்பிக்கை அருள்வார்.

  உறவினர் வீட்டு கொலு நன்றாக உள்ளது. கௌரவர், பாண்டவர் பொம்மைகள். ராமர், கிருஷ்ணர், ஆதி சங்கரர் என அனைத்து பொம்மைகளும் அழகாக உள்ளன.

  இந்த வார கதம்பம் ஒவ்வொன்றும் ரொம்ப அருமையாய் வந்திருக்கிறது. மிகவும் ரசித்தேன். நான் இதை எழுதி அனுப்புவதற்குள் "மேலும் ஏற்றுக" என்னை ஏற்றி விடுமென நினைக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை பற்றி உணர்ந்து எழுதி இருப்பதற்கு நன்றிகள் கமலா அக்கா..   அனைத்தையும் ரசித்துப்பாராட்டியிருப்பதற்கும் நன்றிகள்.

   இந்த வார வியாழன் 'மேலும் ஏற்றுக" அளவுக்கு வரவில்லை!  பயம் வேண்டாம்!

   நீக்கு
 59. ஸ்ரீராம்ஜி கதை அருமையாகச் செல்கிறது. கதையை ஒரே அடியாகப் போட முடியாதோ? எழுதி முடித்திருந்தால் முழுவதும் போட்டுவிடலாமே என்றுதான் கேட்கிறேன்.

  கொலு படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. அம்மன் அலங்காரமும் தரிசனமும் கிடைத்தது.

  நிலம்புரண்டி பற்றி உங்கள் பதிவு கொஞ்சம் நினைவுக்கு வந்தது ஆனால் இப்படியான தகவல்கள் அறியவில்லை. என் அப்பாவும் ஆயுர்வேத மருத்துவராகத்தான் இருந்தார். மலையாளத்தில் என்ன என்று பார்க்க வேண்டும்.

  கவிதைகள் பிரமாதம். மிகவும் ரசித்தேன் வழக்கமாக நான் சொல்லுவதுதான் உங்களுக்கு மிக அழகாக எளிய விஷயத்தையும் கவிதை வடிவில் சொல்ல வருகிறது.

  அந்த அம்மாவின் நிலைமை மனம் தவித்தது. இப்படியும் மனிதர்களா என்று ஆனால் நாம் நடைமுறையில் கண்டும் கேட்டும் வருகிறோம் தான். அவரின் வாரிசுகளுக்குக் கண்டிப்பாக இறைவன் அறிவுறுத்துவார். அதை அறியாத பேதைகள் இப்போது அப்படிச் செய்கின்றனர். பயம் இரக்கம் இல்லாத உள்ளங்கள்.

  அனைத்தும் அருமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரேயடியாக எழுதி விடலாம் துளஸிஜி...    இரண்டுபிரச்னைகள்...  மூன்று பிரச்னைகள் என்று கூட சொல்லலாம்.  ஒன்று நீங்கள் எல்லாம் பொறுமையாக நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும்.  இரண்டாவது நான் மற்ற வியாழன்களை சமாளிக்க வேண்டும்.  மூன்றாவது முக்கியமான பிரச்னை...   நான் எழுத வேண்டும்!!!!!!

   நிலம்புரண்டி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று தெரிகிறது.  நான் அதுவே உடான்ஸ் என்று நினைத்தேன்.

   கவிதைகளை பாராட்டியதற்கு நன்றி.

   நீக்கு
 60. தலைப்பில்லா கதை நன்று.

  கதம்பத்தின் மற்ற பகுதிகளும் நன்றாக இருந்தது.

  குழப்பாப்பம் - குழப்பம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட்.  

   முன்னர் குமுதத்தில் "பிளான் பட்டாபி" என்றொரு சித்திரத்தொடர் வந்தது.  செல்லம் படங்கள்.  அதில் ஹோட்டலில் "கொழுக்கட்டை வேண்டுமா?  இடியாப்பம் வேண்டுமா?" என்று சர்வர் கேட்டதும் ஒரு கனவான் (அவர் பெயர் சட்டென மறந்து விட்டது...   ஷிரோத்கர் என்று நினைவு..)  "வாட் கொழு?  வாட் இடி?  ஒரே குழப்பாப்பம்..." என்பார்.   அது மறக்கவில்லை.

   மறந்தது என்ன?  அந்தக்கதையை எழுதியது யார் என்று!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!