திங்கள், 14 அக்டோபர், 2019

"திங்க"க்கிழமை :பச்சைக்கொத்துமல்லி மிளகாய்ப் பொடி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி

பச்சைக்கொத்துமல்லி மிளகாய்ப் பொடி அல்லது சம்பாரப் புளி அல்லது கொத்துமல்லித் தொக்கு!
பச்சைக்கொத்துமல்லி உடலுக்கு நல்லது. அதைச் சட்னியாக அரைத்தும் சாப்பிடலாம், துவையலாக அரைத்தும் சாப்பிடலாம். கொத்துமல்லி சாதமாகவும் சாப்பிடலாம். இங்கே கொடுக்கப் போவது பாரம்பரிய முறைப்படியில் செய்யும் கொத்துமல்லி மிளகாய்ப் பொடி (எங்க வீட்டில் சொல்லுவது) என்னும் சம்பாரப் புளி! கொத்துமல்லித் தொக்கு என்றும் சொல்லிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பச்சைக் கொத்துமல்லி ஒரு பெரிய கட்டு. நன்கு ஆய்ந்து கழுவி நடுத்தண்டைத் தூக்கி எறியாமல் வேரை மட்டும் நீக்கிவிட்டு அலம்பி வடிகட்டி வைக்கவும்.  மாலை வரை தண்ணீர் வடிந்தால் கொத்துமல்லித் தழைகள் உலர்ந்து இருக்கும். தொக்குச் செய்ய ஏதுவாக இருக்கும். ஆனால் உடனே செய்ய வேண்டும் எனில் இப்படி வடிகட்டின கொத்துமல்லித் தழையை நல்லெண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ளலாம்.

மிளகாய் வற்றல் பத்து முதல் பதினைந்து, புளி ஓர் நெல்லிக்காய் அளவுக்கு. பெருங்காயம் ஒரு துண்டு. வதக்க நல்லெண்ணெய் இரண்டு சின்னக் கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு



இந்தப் படத்தில் எல்லாம் தயாராக வறுத்து வைத்திருக்கிறேன். மிளகாய் வற்றல், பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கொத்துமல்லி வாணலியில் புளி ஒரு சின்னக் கிண்ணத்தில் ஊற வைத்திருக்கேன்.


மிளகாய் வற்றல், புளி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை முதலில் ஓர் சுற்றுச் சுற்றிக் கொண்டு பொடியாக ஆக்கிக் கொள்ளவேண்டும். பின்னரே கொத்துமல்லித் தழையைச் சேர்க்கலாம்.


கொத்துமல்லித் தழையைச் சேர்த்து அரைத்த பின்னரே கடுகு, உளுத்தம்பருப்பைச் சேர்க்க வேண்டும். 


கொத்துமல்லித் தழையை அரைத்த பின்னர்.


கடுகு, உபருப்பு சேர்க்கையில் எடுத்த படம்! இதை ஒன்றிரண்டாக அரைத்துக் கொண்டால் போதும். கெட்டியாக இருக்கும். சுமார் பத்து நாட்கள் இதைப் பயன்படுத்திக்கலாம். 

ஒரு சில படங்கள் கணினியில் ஏறவே இல்லை.  ஆகவே படங்கள் சரியாக இல்லை என நினைக்க வேண்டாம். 

69 கருத்துகள்:

  1. இனிய் காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா இன்னும் தொடர்பவர்கள் அனைவருக்கும்.

    அம்பேரிக்காகாரர்களுக்கு இனிய மாலை வணக்கம்

    அட எங்கூர்ல சொல்லற பெயர் எல்லாம் வருதே சம்பாரப்பொடி!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்...வாங்க... வாங்க...  கோபுரதரிசனம் செய்துவந்தேன்!

      நீக்கு
    2. சம்பாரப் புளினு சொல்லித் தான் கேட்டிருக்கேன். குறிப்பா ஸ்ரீவைஷ்ணவர்கள்! சம்பாரப் பொடி?

      நீக்கு
  2. ரயிலில் ஏற டிக்கெட் எடுக்கவில்லையா?...

    ஓ!.... படங்கள் கணினியில் ஏற!...

    இஃகி..இஃகி...

    பதிலளிநீக்கு
  3. இதெல்லாம் செய்தால் இரண்டு மூன்று பேராக இருந்து சாப்பிட வேண்டும்...

    தனி ஆளாகச் சாப்பிடும் போது
    இந்த வகைக்கெல்லாம் மனம் செல்வதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாவும் சாப்பிடலாம். தோசை, குழி ஆப்பம், வெந்தய தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு இது இருந்தால் போதும்.

      நீக்கு
    2. அடடா....

      நான் தனி ஆளாக இருந்து சமைத்துச் சாப்பிடுவதைச் சொன்னேன்....

      நீக்கு
    3. @Durai! இஃகி,இஃகி, நானும் அதைத் தான் சொன்னேன். தனி ஆளாக இருந்தாலும் செய்து வைச்சுக்கலாம். என்னிக்கோ சாம்பார் செய்ய சோம்பல்னா சட்டுனு இதைப் போட்டு சாதத்தில் கலந்து சாப்பிட்டுக்கலாம். தொட்டுக்க ஒரு தயிர்ப்பச்சடி இருந்தால் போதும்.

      நீக்கு
  4. இதே தான் கீதாக்கா என் அம்மா உரலில் இடிப்பார். வெளியூர்களுக்குக் கொடுத்துவிட. கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்று. செம டேஸ்டியா இருக்கும். நான் மிக்ஸியில்தான் செய்கிறேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் டேஸ்ட்...தொட்டுக் கொள்ளவும்..

    மிக மிகப் பிடித்த ஒன்று. மகனுக்கும் செய்து கொடுத்துவிட்டேன். புளியை ஊற வைக்காமல் எண்ணெயில் கொஞ்சம் வதக்கி பொடித்துவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்சி வாங்கியும் நான் பல வருடங்கள் இடித்துத் தான் பண்ணிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் மிக்சி தான்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்நாள் இனிய நன்னாளாக இருக்கவும் ஆண்டவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கொத்தமல்லி மிளகாய் பொடி மிக நன்றாக இருக்கிறது. ஆமாம்..! இப்படி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொண்டால் பல நாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும். கொத்தமல்லி தழைகள் நிறைய வாங்கி வரும் போது இது போல் செய்திருக்கிறேன். சூடான சாதத்தில்,ந. எண்ணெய் விட்டு கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    அருமையாக செய்முறைகளை விவரித்து படங்களுடன் கொத்தமல்லி சாம்பார் புளி (இந்தப் பெயர் நான் புதிதாக அறிவது.) என்ற பெயருடனும் வந்திருக்கும் கொ. தொக்கு நன்றாக உள்ளது. சுவையான ரெசிபியை அறிகமுகபடுத்தியமைக்கு அவர்களுக்கு பாராட்டுடன் நன்றிகளும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா...    வாங்க... வாங்க...  பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. சாம்பார் புளி = சம்பாரப் புளி=https://engalblog.blogspot.com/2014/11/blog-post_10.html// இதைப் பற்றி 2014 ஆம் ஆண்டில் எ.பி.யில் அனைவரும் பேசிக் கொண்டது.

      நீக்கு
  6. ஹலோ அரைச்சதோ இத்துணுண்டு அதையும் பத்து நாளுக்கு வைச்சு சாப்பிடலாமா? சரியாக சொல்லுங்க சாப்பிடலாமா அல்லது தினமும் மோந்து பார்த்து விட்டு 10வது நாள்தான் சாப்பிடனுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் எடுத்திருந்தீங்கன்னா (வயிற்றுவலிக்கு), தினமும் நிறையவே சாப்பிடலாம்.

      நீக்கு
    2. நல்லவேளை இதை நான் செஞ்சு சாப்பிடலாம் என்று நினைத்து இருந்தேன் நல்லவேளை இதை சொன்னீங்க.....இனிமேல் சமையல் குறிப்பு போடுபவர்கள் disclaimer கண்டிப்பா போடனும்

      நீக்கு
    3. ஹா ஹ ஹா ட்றுத்தின் கேள்விதான் எனக்கும் வந்துது, நானும் இப்படி புளிப்பானதெனில் ஒன்றிரண்டு நாட்களில் சும்மா பிரட்டுடனும் தொட்டுச் சாப்பிட்டு முடிச்சுப் போடுவேன்ன்.. இது ஒரு கைப்பிடி அளவைச் செய்து போட்டு பத்து நாள் வச்சிருங்கோ என என்னா.. கூக்குரல் கர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    4. பார்க்கத் தான் இத்தனூண்டா இருக்கு மதுரைத் தமிழரே. உண்மையில் அது இரண்டு கட்டுக் கொத்துமல்லி! பதினைந்து நாட்கள் வைத்திருந்தேன்.

      நீக்கு
    5. அதிரடி சொன்னாப்போல் ப்ரெட் சான்ட்விச்சிலும் உள்ளே வைத்து சான்ட்விச் டோஸ்டரில் டோஸ்ட் செய்து சாப்பிடுவோம். வெண்ணெயும் அதுவும் நன்கு கலந்து ப்ரெட் சான்ட்விச் அருமையாக இருக்கும். இதே போல் புதினாத் துவையல், தக்காளித் துவையல்/தொக்கு ஆகியவற்றையும் ப்ரெட் சான்ட்விச்சில் தடவிச் சாப்பிடலாம். சீஸை ப்ரெட்டில் ஒரு பக்கம் வைத்துவிட்டு (ஷீட்டாக இருக்கும் சீஸ்) இன்னொரு பக்கம் இந்தச் சட்னி அல்லது துவையலைத் தடவிட்டு சான்ட்விச் டோஸ்டரில் வைத்து டோஸ்ட் பண்ணிச் சாப்பிடலாம்.

      நீக்கு
  7. காலை வணக்கம்.

    எனக்கு மிகவும் பிடித்த கொத்தமல்லித் தொக்கு. அடை, தோசை, மோர் சாத்த்துக்கு நல்ல துணைவன்.

    இன்று படங்கள் அருமையா இருக்கு (மோபைலில் பார்க்கிறேன்). செய்முறை எளிது.

    கீசா மேடம்.. படங்களோட செய்முறை புரியும்படி இருக்கு. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலைல பார்த்தபோது புரிஞ்சது. இப்போ செய்யப்போகிறேன். கடுகு, உ.பருப்பு அளவில் டவுட் வந்துட்டது. அப்புறம் இத்தனை மிளகாயா என்று மலைப்பா இருக்கு.

      நீக்கு
    2. நீங்க வாங்கும் கொத்துமல்லிக் கட்டு எவ்வளவு பெரியது எனத் தெரியாது. இங்கே ரொம்பப் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா கொண்டு வருவாங்க. மாமாவும் பெரிய கட்டாக 2,3 வாங்கிடுவார். என்ன செய்யறதுனே புரியாது! இதைத் தான் பண்ணி வைச்சுப்பேன். ஆகவே சில சமயங்களில் 15,20 மி.வத்தல் கூடப் போட்ட்டுப் பண்ணி இருக்கேன். கடுகு, உளுத்தம்பருப்பு எல்லாம் அவரவர் விருப்பப்படி. இதுக்கு நான் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்புப் போட்டேன்னு வைச்சுக்குங்க. ஏனெனில் எனக்கெல்லாம் கண்ணளவு தான்.இம்மாதிரி செய்கையில் எதையும் அளந்து போட்டுச் செய்தது இல்லை.

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    கீதா மாவின் சம்பாரப் பொடியா. நல்ல காரமாச் சப்புக் கொட்டிச் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.
    பாட்டி இப்படித்தான் செய்வார். கெடவே கெடாது.
    உப்பும் புளியும் ,கொத்தமல்லி வாசனையும்
    சாப்பிடச் சாப்பிட எங்கே போகிறதுன்னு தெரியாது.

    படங்களும் விவரங்களும் மிக மிக அருமை.
    இடித்து செய்தே வழக்கம். அந்த இரும்பு உலக்கையே ரொம்ப நாளுக்கு வாசனையாக இருக்கும்.

    மிக மிக நன்றி கீதாமா.

    பதிலளிநீக்கு
  9. எங்கள் வீட்டில் எல்லா வியாழக்கிழமை காலை இட்லிக்கு கொ.மல்லி சட்னிதான். ஏனெனில் புதன் கிழமை அன்று தான் மார்க்கெட் போயி அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகளுடன் மல்லி கட்டும் வாங்கிவருவேன்.

    பதிலளிநீக்கு
  10. பார்ப்பதற்கே அழகாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  11. நன்கு ஆய்ந்து கழுவி நடுத்தண்டைத் தூக்கி எறியாமல் வேரை மட்டும் நீக்கிவிட்டு அலம்பி வடிகட்டி வைக்கவும்.//

    ஆமாம் கீதாக்கா அம்மாவும் தண்டைத் தூக்கிப் போடமாட்டார். வேர் மட்டுமே கட் செய்வார். நானும் அப்படியே. நார்மலாகவே நான் தண்டைத் தூக்கிப் போடுவதில்லை. வேர் மட்டும் தான் கட் செய்வது. நன்றாகக் கழுவி தண்ணீர் வடியவிட்டு பெரிய வெள்ளைத் துணியில் (இதுக்குன்னெ தனியா அதாவது அரிசி கழுவி காய வைக்க இப்படியானவற்றிற்குன்னே) வெள்ளைத் துணி வைச்சுருப்பாங்க. அதுல நல்லா பரத்தி வைச்சு சொட்டுக் கொடத் தண்ணீ இல்லாம மத்த சாமான் எல்லாம் உரல்ல போட்டு இடித்துவிட்டு இதையும் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக இடிப்பது...நானும் அம்மாவும் சேர்ந்து செய்வோம். இப்போதும் இதே மெத்தட் ஆனால் மிக்ஸி. மகருக்கும் கொடுத்துவிட்டேன்..

    நீங்க சொல்லிருப்பது போல சட்டுனு வேணும்னா ப கொ ம வை நல்லெண்ணெயில் வதக்கிச் செய்வேன்..புளியும் கறுகாமல் வறுத்துக் கொண்டுவிடுகிறேன்....ஈரப்பசை போகும் வரை...

    சூப்பரா இருக்கு அக்கா நீங்க செஞ்சுருக்கறது....நாவில் நீர் ஊறுது...இதே போல புதினா தொக்கும்...செய்வதுண்டு...

    எங்க வீட்டுல இதை நீங்க சொல்லிருக்காப்ல சம்பாரப் பொடி அல்லது கொ ம தொக்கு நுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீரையிலிருந்து எல்லாவற்றிலும் வெறும் இலையை மட்டும் போடுபவர்கள் உண்டு தி/கீதா. அதனால் தான் குறிப்பாகத் தண்டையும் சேர்க்கச் சொல்லி எழுதினேன். தண்டையும் நான் நறுக்கிச்சேர்ப்பதைப் பார்த்துச் சிரிப்பவர்கள் உண்டு. கருகப்பிலையைக் கூடக் காம்போடு இரண்டாகக் கிள்ளித் தான் போடுவேன்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. கொத்தமல்லி தொக்கு நன்றாக இருக்கிறது . நாங்களும் செய்வோம்.

    செய்முறை படங்கள் அழகு.

    மிளகாய் வறுத்தவுடன் , புளி, உப்பு இரண்டையையும் போட்டு வறுத்து விடுவோம். கொத்தமல்லியை வதக்கி விட்டால் கெட்டு போகாமல் இருக்கும்.

    அம்மா, பாட்டி காலத்தில் இரும்பு உரல், கல் உரலில் இடித்து எடுத்து வைத்து கொள்வார்கள். மூடி போட்ட ஜாடியில் வைத்து மரக்கரண்டியால் எடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  14. ஆஆஆ இன்று அம்பேரிக்காக் கீசாக்கா ரெசிப்பியோ?.. எங்களுக்கு இப்பூடி நாவுறும் ரெசிப்பி செய்து அனுப்பிப்போட்டு, தான் மட்டும் அங்கு சாதமும் ஊறுகாயும் சாப்பிடும் கீசாக்காவின் அடக்க ஒடுக்கமான குணம் பார்த்து மீ வியக்கேன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலுமிச்சை ஊறுகாயோடு சாப்பிடுகிறோம் அதிரடி, பையர் மாவடு ஊறுகாய் பாட்டில் வாங்கி வந்தார். மாவடு வெடுக்கென்று கடிபடாமல் ஒரே மெத், மெத், வெம்பினாற்போல் வாசனை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பேசாமல் நான் மாவடு போட்டு விற்பனைக்குக் கொடுக்கலாமோ எனத் தோன்றியது.

      நீக்கு
    2. நான் இந்திய கீதாக்கா தான். அம்பேரிக்கக் கீதாக்கா இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட நாட்டுப் பற்று என்னாவது? :))))))

      நீக்கு
  15. சூபராக இருக்குது தொக்கு... நானும் செய்வதுண்டு கடுகு உ.பருப்பு போடாமல் பழப்புளி மட்டும் சேர்த்து செய்தேன், ஆனா அது வதக்கோ வதக்கென வதக்க்கி.. அப்போ காரம் குறைஞ்சு நாவுக்கு இதமாக இருந்தது.

    நீங்கள் இங்கு வதக்கினனீங்களோ இல்லையோ என சரியாக குறிப்பிடவில்லை, ஆனா படம் பார்க்க வதக்கியதுபோல இருக்கு.. இப்போ நித்திரையோ முக்கியம் கீசாக்கா.. எழும்பிவந்து அதிராவின் டவுட்டைக் கிளியர் பண்ணுங்கோ கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  16. கொத்தமல்லி தொக்கு வாசம் ஜமாலிக்கிறது.கொத்தமல்லியுடன் புளியையும் சேர்த்து வதக்குவோம்.செய்து நாட்கள் ஆகிவிட்டது. செய்ய ஆசை வந்து விட்டது. நன்றி கீதா,ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. என்பாட்டி செய்த நினைவு வேப்பிலை இல்லாவிட்டாலும் இதை வேப்பிலைக் கட்டி என்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      வேப்பிலைக கட்டி என்பது நார்த்தை இலை கொண்டு செய்வது.. என் மாமியாருக்கு மிகவும் பிடித்தமானது. வீட்டிலேயே அடிக்கடி செய்வார்கள். அதனால் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிலும் வேப்பிலை இல்லையே என்று எனக்கும் ரொம்ப நாளாகவே சந்தேகம்.!

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வேப்பிலைக்கட்டி என்பது வேறு! அது கொத்தமல்லித் தொக்கு அல்ல!

      நீக்கு
    3. * நான் மேலே சொல்லியிருப்பது ஜிஎம்பி-சாருக்காக!

      சகோதரி கமலா ஹரிஹரன் சொன்னதே சரி..

      நீக்கு
    4. நன்றி சகோதரரே. என் மாமியாருக்காக அப்போதெல்லாம் (சென்னையிலிருக்கும் போது) அடிக்கடி உரலில் இடித்து செய்வேன். அந்த நினைவு வந்ததும் பகிர்ந்தேன்.

      நீக்கு
    5. வேப்பிலைக்கட்டி முற்றிலும் வேறு ஜிஎம்பி சார். அது எலுமிச்சை இலை/நாரத்தை இலையில் கருகப்பிலைப் பொடி மாதிரிப் பொடியாகச் செய்வது. இதைச் சிலர் சம்பாரப்புளி என்பார்கள். இங்கே எல்லோரும் பொடி என்றே சொல்லி இருக்காங்க. என் பிறந்த வீட்டில் கொத்துமல்லி மிளகாய்ப் பொடி என்றே சொல்லுவோம்.

      நீக்கு
  18. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

    நானும் முன்பெல்லாம் கொத்தமல்லி தொக்குவை தங்கள் முறைப்படி வறுத்து, வதக்கி உரலில் போட்டு இடித்து ரொம்ப நாளைக்கு வைத்துக் கொள்வேன். அப்போது என்னிடம் கு. சா. பெட்டி இல்லை. எனினும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதற்குள் தொக்கு சம்படத்தை இறக்கி வைத்துக் கொண்டு பல நாட்களுக்கும் மேலாக உபயோகப் படுத்துவேன். இப்போது கு.சா.பெட்டி இருக்கிறது. கல்லுரல் இல்லை. திருமங்கலத்து வீட்டிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம். இப்போது எல்லாவற்றுக்கும் மிக்ஸிதான்..! ஆனால் அந்த கல்லுரலில் இடித்துச் செய்யும் கொ. ம.தொக்கின் வாசனை இல்லை. தங்கள் செய்முறை மீண்டும் அற்புதமான கொத்தமல்லி தொக்கை நினைவுபடுத்தி விட்டது. மல்லி கிடைக்கும் சமயம் செய்து விடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்துமல்லி ஈரம் போகச் சுண்டினதும் கொஞ்சம் வதக்கிட்டுச் செய்து பாருங்க கமலா. உரலில் இடித்தது போலவே வரும். நான் வெளியேயே 2,3 நாட்கள் வைத்திருப்பேன். அப்புறமாத் தான் உள்ளே வைப்பது.

      நீக்கு
  19. மல்லித் தொக்கு வாசனையுடன் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  20. வந்து குறிப்புக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. புளியை வதக்கிக் கொண்டும் சேர்க்கலாம் தான். ஆனால் சில சமயங்களில் அரைக்கும்போது புளி சரியாக அரைபடுவதில்லை. ஆகவே ஒரு டீஸ்பூன், அல்லது 2 டீஸ்பூன் நீரில் ஊற வைத்துக் கொள்வேன். இதனால் கொத்துமல்லிச் சட்னி கெட்டுப் போவதில்லை. மோர் சாதத்துக்குத் தொட்டுக்க ரொம்ப நன்றாக இருக்கும். நான் கஞ்சிக்குத் தொட்டுக்கவும் வைச்சுப்பேன்.

    பதிலளிநீக்கு
  21. இந்த வாரமும் போணி ஆகலை போல! பாவம் ஸ்ரீராம்! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  22. //படங்கள் சரியாக இல்லை என நினைக்க வேண்டாம்// - ரெசிப்பிலயே சந்தேகம். எவ்வளவு கடுகு உ.பருப்பு போடணும்னு. 10-15 மிளகாயா? நான் 6 சேர்க்கலாம்னு நினைக்கறேன். (உடனே ஸ்ரீரங்கத்தில் ஒரு கட்டு கொத்தமல்லின்னா ஒரு கூடை நிறைய தருவான்னு சொல்லிடாதீங்க). காலையிலேயே கொத்தமல்லிக் கட்டை வடிகட்ட வைத்திருக்கேன். புளியை தண்ணீரில் ஊறவைக்கணுமா? இதோ பண்ணறேன். நல்லா வருமா? இறைவா... கீசா மேடத்தை நம்பி வேலையை ஆரம்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 10 மிளகாய் உபயோகித்தேன். பச்சை கொத்தமல்லித் தழை என்பதால் சரியா அரைபட கஷ்டமா இருந்தது. கொஞ்சம் (ரொம்பக் கொஞ்சம்) தண்ணீர் சேர்த்துக்கொண்டேன். ஒரு கட்டு கொத்தமல்லி என்றாலும் கொஞ்சம்தான் வந்தது. நல்லா வந்திருக்குன்னு தோன்றுது. இரவு அடைக்கு பையனுக்குப் போடப்போகிறேன். மோர் சாதத்துக்கும் சூப்பரா இருக்கும்.

      கொத்தமல்லி அரைந்த பிறகு உ.பருப்பு சேர்த்து நிறையதடவை அரைக்கவேண்டியதாப் போயிற்று (கர கர பதம் வருவதற்கே)

      நீக்கு
    2. பச்சைக்கொத்துமல்லி தான் நன்றாக அரைபடும். உங்களுக்கு வரலைனால் இனிமேல் வேரை ஆய்ந்து விட்டுக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிக்கொண்டு பின்னர் அலம்பி வடிகட்டியோ, அலம்பி வடிகட்டி வதக்கியோ செய்து பாருங்கள். சிலது தான் அளவெல்லாம் சொல்லலாம். என்னோட காரம் அளவு உங்களுக்குச் சரியாக வருமா? உங்களோட காரம் அளவு எனக்குச் சரியாக வருமா? ஆகவே மி.வத்தல் எல்லாம் அவரவர் காரம் சாப்பிடும் விருப்பத்துக்கு ஏற்பப் போடணும். இதெல்லாம் தினசரி சமைப்பவர்கள் புரிந்து கொண்டு விடுவர்கள். அதே போல் உளுத்தம்பருப்பு, கடுகு எல்லாமும். அப்பா வீட்டில் இருந்தவரை கடுகு எண்ணிப் போடணும். இல்லைனா அப்பா வந்து எடுத்துத் தருவார். இங்கே மாமியார் வீட்டில் நேர்மாறாகக் கடுகு விழித்துப்பார்க்கும். அத்தனை போடணும். நான் சமைத்தால் கடுகே தெரியாது. பலசமயங்களில் மாமனார், மாமியாருக்குக்கோபம் வரும். தாளிக்கத் தெரியலைனு சொல்வாங்க! அது பழகவே எனக்குப் பத்து வருஷங்கள் ஆகிற்று. ஆகவே இதெல்லாம் அவரவர் வீட்டுப் பழக்கம் எப்படியோ அப்படிப் போடணும்.

      நீக்கு
    3. கொத்துமல்லி அரைத்ததும் வறுபட்ட கடுகு, உ.பருப்பைப் போட்டு ஒரே சுற்று. போதும். ஒன்றிரண்டாக அரைபட்டிருக்கும். சாப்பிடுகையில் சுவையாகவும் இருக்கும்.

      நீக்கு
    4. அவங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நானும் அடை, தயிர் சாதத்துடன் சாப்பிட்டேன். யம்மி. யதேச்சையாக ஒரு கட்டு கொத்தமல்லி இன்று வரவும், என்னிடம் ஏற்கனவே கொத்தமல்லி இருந்ததால் உடனே பண்ணிவிட்டேன். நன்றி.

      நீக்கு
  23. கீதாக்கா இந்த கொத்தமல்லி சம்பாரம்புளித்தொக்கு நல்லா இருக்கே ,எனக்கு வெண்ணையையா ஆராய்ச்சி சாப்பிடுவது இஷ்டமில்லை ..இப்படி ஒன்றிரண்டா அரைச்ச தொக்கு இப்போதான் கேள்விப்படறேன் .இனிமே செய்வேன் இது மாதிரி ..எனக்கு சாதம்லாம் வேணாம் அப்டியே சாப்பிடுவேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 187 மைல்ஸ் ட்ராவல் :)  செம டயர்ட் ..மன்னிச்சூ ப்ளீச் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு 
      //வெண்ணையா அரைத்து //

      நீக்கு
  24. கொத்தமல்லி பொடி..... சுவையாக இருக்கும். எனக்கும் பிடித்த பொடி.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. கொத்தமல்லி பொடி....ஆஹா அருமையா இருக்கு இதே போல செய்வோம், மிளகாய் மட்டும் சிறுது குறைவாக சேர்த்து

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!