வியாழன், 31 அக்டோபர், 2019

அருகில் வந்த தொல்லை....!



கடந்த ஞாயிறு தீபாவளி  இனிதே கழிந்தது.  யாருக்கும் பட்டாசு வெடிப்பதில் ஆர்வமில்லை.  அதற்கு முந்தைய அருகாமை வீட்டு சண்டைகளும் காரணம். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை.  பொதுவாகவே தீபாவளிக் கொண்டாட்டங்களில் பழைய முறை பின்பற்றப்படுவதில்லை,   அதாவது அதிகாலை எழுவது, எண்ணெய்க் குளியல், பலகாரம், உறவுகளோடு கலந்திருப்பது தொலைகாட்சி இல்லாததால் பட்டாசுகள் வெடித்து என்று முன்பு போல உற்சாகம் இருப்பதில்லை என்பதை எங்கும் பரவலாகப் பார்க்க முடிகிறது.  பட்டாசு விற்பனையாளர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமாக விற்பனை குறைந்திருப்பதாக செய்தி சேனல்களில் வருத்தப்பட்டார்கள்.  காற்று மாசுபடுவது பற்றியும் அதிகம் விழிப்புணர்வு பரவி வருகிறது.

இந்த முறை சாட்டை, மத்தாப்பூ, பூவாணம், தரைச்சக்கரம், கம்பி மத்தாப்பூ மட்டுமே சிறிய அளவில் சாஸ்திரத்துக்கு வாங்கி கொளுத்தினோம்.  வெடித் சத்தங்கள் அலர்ஜியாகி விட்டன!  தீபாவளி அன்று காலை நடைப்பயிற்சியின்போது பதுங்க இடம் தேடிஓடிக் கொண்டிருந்த செல்லங்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

இப்போது ஏதேதோ புதிது புதிதாக வாண வகைகள் வந்திருக்கின்றன என்று சொன்னார்கள்.  ஒவ்வொரு வருடமும் புதுசு புதுசாக அறிமுகப்படுத்துவார்கள்!  நாங்கள் அந்தக் காலத்தில் அதிசயமாய் வாங்கி கொளுத்திய இரண்டு விஷயங்கள் பற்றி...  ஒன்று ராக்கெட் என்று சொல்லப்பட்டாலும் அது சரிகை பேப்பரில் சுற்றப்பட்ட பால்பேடா போல சிறிதாக இருக்கும்.  எது மேல், எது கீழ் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும்.  அதைப் பற்ற வைப்போம்.  ஒழுங்காக வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டிருந்தால் 'உய்ங்... விஷ்' என்கிற சத்தத்துடன் அது சுழன்று புறப்பட்டு மேலே சென்று மறையும்.   ராக்கெட்டாய் இருந்தால் மேலே சென்று அது வெடிப்பது, பூப்பூவாய் சிதறுவது, பாராசூட் இறக்குவது போலெல்லாம் இருக்கும். இது அப்படி எல்லாம் இருக்காது.  காணாமல் போய்விடும்.  தலைகீழாய் வைத்துக் கொளுத்தி இருந்தால் இருக்கும் இடத்திலேயே சுழன்று சத்தப்படுத்தி நின்றுவிடும்!

ராக்கெட் விட்டபோது பாட்டில் கவிழ்ந்து வழக்கமான காமெடிகள் அரங்கேறி உள்ளன.  வீணாய்ப்போன வெடிகளின் மருந்தைச் சேகரித்து பேப்பரில் கொளுத்தியுமிருக்கிறோம்.  கையை வேகவைத்துக் கொண்டுமிருக்கிறோம்!

என் நண்பர்கள் வெடி பற்ற வைக்க உருண்டையான, தடிமனான ஊதுபத்தி வாங்கிவைத்திருப்பதைப் பார்த்து சில வருடங்களுக்குப் பின் அதை நாங்களும் வாங்கி உபயோகித்தோம்.  அதுவரை வீட்டில் இருக்கும் செய்தித் தாள்களை நான்காய், எட்டாய், மடித்து (ரொம்ப பயமாய் இருந்தால் நான்காய் மட்டும்!  பெரிதாய் இருக்கும் பாருங்கள்...) கிழித்து வைத்துக் கொண்டு, வீட்டு வாசலில் அகல் விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு,  அதில் அந்த செய்தித்தாள் துண்டின் ஒருமூலையைப் பற்ற வைத்துக் கொண்டு ஓடி,  அதன் கீழ் மூலையில் வெடியின் திரி எதிர்வரும் நெருப்பை எதிர்கொள்ளும் வகையில் வைத்துவிட்டு ஓடிவந்துவிடுவோம். 


அடுத்தது ரயில்!  சிறிய செவ்வக வடிவத்தில் இருக்கும் ரயிலை அதன்மேலே இருக்கும் வளையத்தை இரண்டு மரங்களுக்கு இடையே கயிறு கட்டி அதில் மாட்டி விடவேண்டும். பற்ற வைத்தால் வினோதமான சப்தத்துடன் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் சென்று வரும்.  இது கூட ஒரே ஒருமுறை வாங்கியதோடு சரி.  அந்த ஒருமுறை கூட கயிறு எரிந்து தரையில் விழுந்து விட்டது!

இந்த தீபாவளிக்கு முதல்முறையாக ரெடிமேட் ட்ரெஸ் எடுத்தேன்.  இத்தனை நாட்கள் துணி எடுத்து தையற்காரரிடம் கொடுத்து தைத்து வாங்கித்தான் போட்டுக்கொண்டிருந்தேன்.  ரெடிமேட் ஒத்துவரவில்லை.

தீபாவளி சமயத்தில் புதுத்துணி தைக்க கொடுத்துவிட்டு  வாசலில் தீபாவளி காலை வரை கூட காத்து நின்ற அனுபவம், நல்ல வேளையாய் எனக்கு வாய்த்ததில்லை.  மிகவும் முன்னாடியே  தைத்து வாங்கி விடுவோம்!  

தஞ்சாவூரில் என் அப்பாவுக்கென்று ஒரு டெய்லர் இருந்தார்.  ஏழுமலை என்று பெயர்.  வயதானவர்.  அய்யங்கடைத் தெருவிலோ எங்கோ கடை.  

அவரிடம்தான் என் டிராயர், சட்டைகளை தைக்கக் கொடுப்பார் அப்பா.  நீதி படத்தில் சந்திரபாபு போட்டுக்கொண்டு வருவாரே அப்படி ஒரு டிராயர் தைத்துக் கொடுப்பார் அவர்.  ஸ்கூலில் எல்லோரும் நாகரீகமாக டிராயர் சட்டையில் வர,  நானும் என் அண்ணனும் மட்டும் இரண்டுபேர் புகுந்து கொள்ளும் அளவு டிராயரில் வலம்   வருவோம்!  

அப்புறம் யாகப்பா தியேட்டர் அருகே பாரத் டெய்லர் என்கிற நவநாகரீக டெய்லரைப் பிடித்தோம் நானும் என் அண்ணனும்!

===================================================================================================


ஞாயிறு படங்களில் ஒரு பாடல் பகிர்ந்திருந்தேன்.  சிவாஜியின் மூன்று தெய்வங்கள் பாடல்.  அப்போது கீதா அக்கா ஒரு கமெண்ட் போட்டிருந்தார்.  "இதில் சிவாஜி கதாநாயகனாய் நடிக்கவில்லை என்றாலும்...." என்று சொல்லி இருந்தார்.   அதே வரிகள் கீழே நான் தந்திருக்கும் என் பழைய பேஸ்புக் காப்பிபேஸ்ட் பதிவில் வொய் ஜி மஹேந்திராவும் சொல்லியிருக்கிறார் வேறொரு படம் பற்றி!  இந்த ஒற்றுமையை சாக்காய் வைத்து இதைப் பகிர்ந்து விடுகிறேன்.   கீதா அக்கா அப்போதே அங்கேயே இதை எங்கள் பிளாக்கில் ஏன் பகிரவில்லை என்று கேட்டிருந்தார்.அப்போது இப்படி சந்தர்ப்பம் வரவில்லை!   இப்போது அவர் ஆசையை நிறைவேற்றி விடுகிறேன்!!


நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) :



நான், தியேட்டருக்கு சென்று பார்த்த, முதல் சிவாஜி படம், பாவ மன்னிப்பு. சென்னை நகரின், முதல், "ஏசி' தியேட்டரான, சாந்தி தியேட்டரில், அப்படம் ஓடிக் கொண்டிருந்தது. என் பாட்டி அலமேலு அம்மாள்,  "சிவாஜி, முஸ்லிமாக நடித்திருக்கிறாராம். எப்படி செய்திருக்கார்ன்னு பார்க்கணும்டா...' என்று கூறி, அழைத்துச் சென்றார்.


என் பாட்டி, ரொம்ப ஆச்சாரமானவர்.  சினிமா அதிகம் பார்ப்பதில்லை. அப்படிப்பட்டவரைக் கூட, தன் நடிப்பால் கவர்ந்திருந்தார் சிவாஜி.
படத்தில், சிவாஜி படும் கஷ்டங்களை பார்த்து, "என்னடா, இந்த எம்.ஆர்.ராதா இப்படி, அக்கிரமம் செய்யறான்...' என்று, அங்கலாய்த்துக் கொண்டார் என் பாட்டி.


படிக்காத மேதை படத்தில், ரங்கனாக, விசுவாசமுள்ள வேலைக்காரனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி, பாவ மன்னிப்பு படத்தில், முஸ்லிம் இளைஞராக மாறியிருந்தார்.

இப்படத்தில், சிவாஜி இரைந்து பேசாமல், ரொம்ப நளினமாக நடித்திருப்பார். இந்தப் படத்தை, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அவரது நடிப்பில், ஒரு புது பரிமாணம் தெரியும்.

நான் கெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக்., படித்துக் கொண்டிருந்த சமயம். என்னுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த, வட மாநில நண்பன் ஒருவனை, இப்படத்திற்கு அழைத்து சென்றேன். படத்தில், முகத்தில் அமிலத்தை ஊற்றும் காட்சியில், அப்படியே, துடிதுடித்து, தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி.



அதைப் பார்க்கும் போது, யாரோ, நம் முகத்தில் அமிலத்தை ஊற்றி விட்டது போன்ற உணர்வு, ஏற்படும். அத்தகைய, சிறப்பான நடிப்பை, வெளிப்படுத்தியிப்பார்.

ஆனால், அந்த வடமாநில நண்பனோ, "அமிலம் முகத்தில் படும் காட்சியில், அந்த நடிகர், சரியாக நடிக்கவில்லை. ரொம்ப ஓவர் ஆக்டிங்...' என்று விமர்சித்து பேச ஆரம்பித்தான். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "நாம இரண்டு பேரும், ரசாயன லேபுக்கு போகலாம். அங்கேயிருந்து, கொஞ்சம் ஆசிட் எடுத்து, உன் முகத்திலே வீசுகிறேன். ஆசிட் பட்ட எரிச்சலை, ஓவர் ஆக்டிங் செய்யாமல், நளினமாக செய்து காட்டு...' என்றேன்.

என் உணர்வை புரிந்து கொண்ட அந்த நண்பன், மன்னிப்பு கேட்டு சென்றான்.

மீண்டும் சாந்தி தியேட்டருக்கு வருவோம். "என் கையிலே மாத்திரம் ஒரு கத்தி இருந்தால், எம்.ஆர்.ராதாவை குத்தியிருப்பேன்...' என்றார் என் பாட்டி. அவ்வளவு வெறுப்பு அவர் மீது. தான் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப, வில்லத்தனம் செய்து, ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்ததிலிருந்து, எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய நடிகர், என்பதை புரிந்து கொள்ளலாம்.



இப்படத்தின் உண்மையான ஹீரோ எம்.ஆர்.ராதா தான் என்பதை, படத்தை பார்த்த பின், உணர முடிந்தது.  படம் முழுவதும் வருகிற கதாபாத்திரம் எம்.ஆர்.ராதா தான். தன் திறமை மீது உள்ள அசாத்தியமான நம்பிக்கையில், சிவாஜி, அவருக்கு, முக்கியமான பாத்திரத்தை கொடுத்து, முக்கியத்துவம் குறைந்த பாத்திரத்தை, ஏற்று நடித்திருக்கிறார். மொத்த குழுவும், படம் வெற்றி பெற, உழைக்க வேண்டும் என்பதே, அவருடைய எண்ணம், குறிக்கோளாக இருந்திருக்கிறது.

[ தினமலர் - வாரமலர் ]


கீதா அக்கா அப்போது அங்கே போட்ட கமெண்ட்!





========================================================================================================================

ஒரு கேள்வி......

சில வாரங்களுக்கு முன் கிருஷ் ஸார் பிளாக்கில் படித்த செய்தியைத்தொடர்ந்து பிலஹரி அவர்களின் கதையை இங்கு டைப்பிப் பகிர்வதாய்ச் சொல்லியிருந்தேன்.  இப்போது அது சம்பந்தமாய் ஒரு கேள்வி.  நான்கு கதைகளையும் அவ்வப்போது பகிர எண்ணம்.  முதல் கதையைப் பகிரும் நேரம் அதை ஒரே தரமாய் பகிரவா?  இரண்டு வாரங்களாய் பகிரவா?  சற்றே நீளமாய் இருப்பதாய்த் தோன்றுமே....


===========================================================================================================


வழியில் ஓரிடத்தில் இந்த மழைக்கு தரை முழுக்க கொடியாகப் படர்ந்திருக்கிறது.  அதில் காய்த்துத் தொங்கும் இந்தக்காய் - பழம் போல இருந்தாலும் காய்தானாம்.  இதை சமைப்பார்கள் என்று சொன்னார்கள். எனக்குப் புதுசு.  இதன் பெயர் குமட்டிக்காய் என்று சொன்னார்கள்.

படர்ந்திருக்கும் கொடிப்புதர்...



மறைந்திருக்கும் காய்...



பறித்து தனியாய் வைத்திருக்கும் காய்!


=======================================================================================================================


அங்கிருந்து அருகில் வந்த தொல்லை....!  




==================================================================================================================


தாகம் தீர்க்க வந்தவள்!


136 கருத்துகள்:

  1. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரர்த்தனைகள்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ஹிஹிஹிஹி... 

      அடுத்த தபா குறைச்சுடறேன்!

      நீக்கு
    2. இன்டெரெஸ்டிங் ஆக இருக்கும்போது நீளமாய் இருந்தால்தான் என்ன? குமட்டிக்காய் படங்களில் இரண்டைக் குறைத்திருக்கலாம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கங்களுடன்....

    பதிலளிநீக்கு
  4. "சுருக்" கவிதையும் அதன் கருத்தும் அருமை. பாவமன்னிப்புப் படம் எப்ப்ப்ப்ப்போவோ பார்த்தது. கதை, வசனம் நினைவில் கூட இல்லை. ஆனாலும் நீங்க சொல்லி இருப்பதைப் பார்த்தால் அதில் எம்.ஆர்.ராதா முக்கியப் பாத்திரத்தில் வந்திருப்பார் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவ மன்னிப்பு நானும் எப்பவோ தஞ்சாவூர் ராஜேந்திரா தியேட்டரில் பார்த்ததுதான்.   அப்புறம் தொலைக்காட்சியில் கூட பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.

      நீக்கு
    2. பாடல், வந்த நாள்முதல் இந்த நாள் வரை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்

      நீக்கு
  5. குமட்டிக்காய் கசப்பாக இருக்குமே!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை.   நான் சாப்பிட்டுப்பார்த்ததில்லை.  எங்கள் வீட்டில் வேலை செய்பவர் அதை கிர்ணிப்பழம் போல வெல்லம் சேர்த்து சாப்பிடலாம், என்று நேற்று சொன்னார்!

      நீக்கு
    2. அதற்கு கிர்ணிப் பழத்தையே தின்று விட்டு சும்மா இருக்கலாம்..

      நீக்கு
    3. ஹா..    ஹா...   ஹா...   கிர்ணிப்பழத்தையே நான் சாப்பிடுவதில்லை.  கோரிக்கையற்றுக் கிடக்குதே என்று படம்பிடித்துப் போட்டேன்!

      நீக்கு
  6. ஒய்.ஜி. சொன்னார் என்பதற்காகவெல்லாம் நான் என் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். மிகை நடிப்புன்னால் மிகை நடிப்புத் தான்! அருகில் வந்த தொல்லை நல்லாச் சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடன் உங்களுக்குப் பகை.   அதனால் வருகிறது நகை!  மிகையானாலும் எங்களுக்கெல்லாம் தருகிறது உவகை!  எப்பூடி?!!

      நீக்கு
    2. ரசிப்பினில் இது ஒரு வகை..
      அது அன்பினில் விளைந்த கொடை...

      இது எப்படி இருக்கு!...

      நீக்கு
    3. // அதனால் வருகிறது நகை..///

      இது வேறயா!...

      எங்கே அந்த நகை..
      எத்தனைப் பவுன்?.. - என்று
      யாராவது வந்தால் என்ன செய்வது!!..

      நீக்கு
  7. பாவமன்னிப்பு..

    விபூதிதாரிகளாக இருப்பவர்கள்
    அயோக்கியத்தனம் செய்பவர்களாக இருப்பார்கள் என்று சொல்லிய படம் என பேசிக் கொண்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது வந்தால் அந்தப் படம் எப்படிப்பட்ட தொல்லைகளைச் சந்தித்திருக்கும் என்று நானும் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. வந்திருக்க வாய்ப்பேயில்லை....

      நீக்கு
    3. வெளியே வந்திருக்காது என்கிறீர்களா?  பிரச்னை "விஸ்வரூபம்" எடுத்திருக்கும் என்கிறீர்களா?

      நீக்கு
    4. படம் எடுத்தவர்கள்
      பிகிலடித்துப் போய்...

      இல்லையில்லை -

      திகிலடித்துப் போய் இருப்பார்கள்...

      நீக்கு
  8. புத்தா பிலிம்ஸ் எடுத்துக் காட்டிய இ மு கி சங்கமம்...

    அமிலம் வீசி அகோரப் படுத்துவதை
    முதலில் காட்டிய படம் இதுதானோ!...

    என்றைக்கும் மறக்க முடியாத
    பாடல்களுடன் அருமையான திரைப்படம் பாவமன்னிப்பு..

    இதற்கு இணை இது தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பற்றிய விவரங்களைப் படித்தால் மூலக்கதை யார் என்று பார்க்கலாம்.  நான் இன்னும் பார்க்கவில்லை!

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம்.

    பட்டாசு என்றதும் அந்தப் பெட்டிகளில் போட்டிருக்கும் அதீத எம்.ஆர்.பி நினைவுக்கு வந்தது. 800 ரூபாய் போட்டுள்ளதை 400 ரூபாய்க்கு விற்பார்கள். ஒரிஜினல் விலை 15 ரூபாயாக இருக்கும். ஸ்டான்டர்ட் பட்டாசு கடையே ஆளில்லாமல் இருந்தது.

    பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லை.   பட்டாசு என்றால் தப்பாமல் எனக்கும் அதுதான் நினைவுக்கு வரும்!

      நீக்கு
  11. //நாம இரண்டு பேரும், ரசாயன லேபுக்கு போகலாம். அங்கேயிருந்து, கொஞ்சம் ஆசிட் எடுத்து, உன் முகத்திலே வீசுகிறேன். ஆசிட் பட்ட எரிச்சலை, ஓவர் ஆக்டிங் செய்யாமல், நளினமாக செய்து காட்டு//

    அடியாத்தி....? பயமாகீது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கில்லர்ஜி, ஒய்.ஜி.யின் பதில் கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர். என்னதான் ஜிவாஜி ரசிகரா இருந்தாலும் அவரைப் பிடிக்காதவர்கள், மன்னிக்கவும், அவர் நடிப்பைப் பிடிக்கலைனு யாராவது சொன்னால் உடனே ஆசிடை ஊத்துவேன் என்ற அளவுக்குப் போயிட்டார் எனில் என்ன சொல்லுவது?ஜிவாஜியின் நடிப்பை நிரூபிக்க அவருக்கு வேறே உதாரணம் கிடைக்கவில்லையோ?

      நீக்கு
    2. வெறித்தனமான ரசிகர் போலிருக்கு!

      நீக்கு
  12. தீபாவளி நினைவுகள் நன்றாக இருக்கிறது.

    நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) ://

    இந்த பகிர்வும் நன்றாக இருக்கிறது.
    அப்போது எல்லாம் நிறைய படங்களில் எம் ஆர். ராதா தான் நிறைய வருவார், கதாநாயகன் மட்டுமே படம் முழுவதும் வர வேண்டும் என்று நினைப்பது இல்லை போலும். கதாபாத்திரங்களுக்கு மட்டும் முன் உரிமை கொடுத்து படத்தை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா.    முத்துராமன், சிவகுமார் சிவாஜி என்று பெரிய நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்பதும் அடிக்கடி நிகழும்.

      நீக்கு
  13. கதை பகிர்வு மட்டும் என்றால் முழு கதையும் பகிரலாம். வியாழன் கதம்ப பகிர்வு இல்லையா! அதனால் பகுதி பகுதியாக கொடுத்தால் தான்
    படிக்க எளிது. மற்றவர்கள் கருத்தும் கேட்டு எது சாத்தியமோ அப்படி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படிதான் நினைத்தேன்.   ஆனால் ஒரு சிறுகதையை இரண்டு பாகமாய்க் கொடுப்பதா என்று ஐயம்...  பொறுமை இருக்காது!

      நீக்கு
  14. குமட்டிக்காய் மறைந்து இருந்து எட்டிப்பார்த்தும், தன்னை முழுவதுமாய் காட்டியதையும் ரசித்துப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வந்த வீட்டு வேலை செய்பவர் பல்டி அடித்து விட்டார்.  அதன் பெயர் முலாம்பழமாம்.  முலாம்பழம் இப்படியா இருக்கும்?

      நீக்கு
    2. //https://tinyurl.com/y2blcnhv// குமட்டிக்காய் பற்றிய தகவல்கள். மூலிகை வளத்தில் சொல்லி இருப்பது தான் இங்கேயும்!

      துமட்டிக்காய்//http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2009/09/// athee, athee

      //https://tinyurl.com/yyqovwkf// இது முலாம்பழம் என்ற கிர்ணிப்பழம் அல்லது திர்ணிப்பழம்

      நீக்கு
  15. ஆனாலும்....

    வேதம் எல்லாம் காதலையே
    மறுப்பதில்லையே.. - அது
    வேதம் செய்த குருவைக்கூட
    விடுவதில்லையே...

    என்ற வரிகளும்

    எதிரொலி கேட்டான்
    வானொலி படைத்தான்..
    எதனைக் கண்டான்
    மதந்தனைப் படைத்தான்?..

    என்ற வரிகளும் மாற்றியமைக்கப்பட்டன...

    ஆயினும்
    அப்படிக் கேள்வி கேட்ட கவியரசர் தான்
    பின்னாளில் அர்த்தமுள்ள இந்து மதம் என்பதனைப் படைத்தார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று சென்று ஒருமுறை பாடலைக் கேட்டு வந்தீர்களோ!!!

      நீக்கு
  16. அருகில் வந்த தொல்லை நல்ல சிரிப்பு.
    மழையை ரசிக்கும் போது மழை கவிதை வந்து விடுகிறது உங்களுக்கு . நன்றாக இருக்கிறது.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  17. ஏதோ குருவாரம்.. பதிவைப் போட்டோமா..
    குருப்ரீதி செய்து கொண்டைக் கடலைச் சுண்டலைத் தின்றோமா என்றில்லாமல்...

    காதல், கதை, கவிதை என்று
    சுக்ரவாரப் பதிவாக மாற்றிய பெருமை
    அன்புத் தம்பியருக்கும்
    அக்கையாருக்குமே உரியது....

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்தநாள் நன்மைகள் தரும் நாளாக அமையவும் பிரார்த்திக்கிறேன்.

    கதம்பம் நன்றாக உள்ளது. தீபாவளி சிறப்பு பார்வைகள் உண்மை. வெடிகளின் சத்தம் காதை துளைத்து சமயத்தில் இதயம் வரை போகும். தங்கள் கூறியபடி "தவசி" டிரஸ்கள் நீண்ட நாட்கள் வைத்துப் போடலாமென்று நாங்கள் என் மகன்களுக்கு தைத்து கொடுப்போம். கல்லூரி வரை சொன்னபடி கேட்டார்கள். அதன் பின் ஞானம் வந்து "தவ"சி வாழ்க்கையை வேண்டாமென்று தைரியமாக சொல்லி விட்டார்கள். ஹா. ஹா. ஹா.

    அனைத்தையும் படித்து விட்டு பிறகு வருகிறேன். இன்று கொஞ்சம் தாமதம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  ஏழுமலை டெய்லர் தைத்துக் கொடுத்த டிராயர்கள்தனி ரகம்!  ஆக, எல்லார் வீட்டிலுமே இந்தக் கூத்து நடந்திருக்கிறதா?!!

      நீக்கு
  19. உங்கள் தீபாவளி நினைவுகள் ஏறக்குறைய எனதைப் போல் இருக்கிறது பட்டாசு வாங்க முடியாமல் இருந்த காலத்தில் கந்தகப்பொடி வாங்கி துளையுள்ள சாவியில் இட்டு ஆணி கொண்டு அடித்து சப்தம் வர வழைத்ததும்நினைவுக்கு வருகிறது நீங்கள்ஃபேஸ் புக்கில் மட்டும்தான் கவிதைகள் எழுதுவீர்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்...    இங்கும் எழுதுவேன்.   பேஸ்புக்கில் ஏதாவதுஎழுத வேண்டுமே...    அதற்குஇதைப் பயன்படுத்திக் கொள்(ல்)கிறேன்...

      நீக்கு
  20. நீயொரு மேகம் 
    நான் ஒரு மலை 
    மோகமாய் தழுவும்போது 
    பெய்திடும் 
    காதல் மழை. 

    அந்த குமட்டிக்காய் அமெரிக்காவில் விற்கும் ஹாலோவீன் பரங்கிக்காய் போல உள்ளது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமட்டிக்காய் அவ்வளவு பெரிசெல்லாம் இல்லை. ஹாலோவீன் பறங்கிக்காய் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பெரிசும் இருக்கும்.

      நீக்கு
    2. இதுவும் நல்லாயிருக்கு ஜேகே ஸார்...

      நீக்கு
  21. தீபாவளி என்றாலே காதை துளைக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். இம்முறை பரவாயில்லை. அதிக ஓசை இன்றி முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...    விழிப்புணர்வு பரவி வருகிறது.  நன்றி ஜோஸப் ஸார்.

      நீக்கு
  22. கலவை நன்றாக இருக்கிறது.
    குமுட்டி அருமையாக வளர்ந்திருக்கிறதே. மறைவாக உட்கார்ந்திருந்த குமுட்டிக்காயை, பறித்து டேபிள் மேல்வைத்து பெரிதுபடுத்திக் காண்பித்திருப்பது, ஒருவித ’தாவர உரிமை மீறல்’ - intrusion into its privacy !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாவர உரிமை மீறல்’ // - நல்லவேளை PETA மாதிரி ஏகாந்தன் சார் ஏதேனும் அமைப்புக்குத் தலைவராகலை. ஆயிருந்தால், ஆரஞ்சு, வாழைப் பழத்தை உடை அவித்து உண்பது, அந்தப் பழத்துக்கான உரிமை மீறல், நம் மன வக்கிரத்தைக் காட்டுது, பப்பாளி தோலை உரிப்பது அதைக் கொடுமைப்படுத்துவதுக்குச் சமம் என்றெல்லாம் எல்லோரையும் பயமுறுத்தியிருப்பார்.

      நீக்கு
    2. ஓஹோ...    மனித உரிமைக் கமிஷன் போல இப்படி வேற ஒண்ணு இருக்கா ஏகாந்தன் ஸார்?

      நீக்கு
    3. // ஆரஞ்சு, வாழைப் பழத்தை உடை அவித்து உண்பது, அந்தப் பழத்துக்கான உரிமை மீறல், நம் மன வக்கிரத்தைக் காட்டுது, பப்பாளி தோலை உரிப்பது அதைக் கொடுமைப்படுத்துவதுக்குச் சமம் என்றெல்லாம் //


      ஹா...   ஹா...  ஹா...

      நீக்கு
  23. இனிய காலை வணக்கம்.

    தீபாவளி நினைவுகள் நன்று. இந்த வருடமும் எங்களுக்கு பண்டிகை இல்லை. தில்லியில் எல்லா நாள் போலவே தீபாவளியும் கழிந்தது.

    சிவாஜி - :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.   வணக்கம்.   தீபாவளி தனியாய்த் தலைநகரில்தானா?  ம்ம்ம்ம்.....

      நீக்கு
  24. சிவாஜி பற்றிய பகிர்தல்களைப் படித்து வரும் பொழுதே அதை எழுதியது நீங்கள் இல்லை என்று தெரிந்தது.

    இன்னொருவராக இருக்கலாமோ என்ற சம்சயம்.

    கடைசியில் அதுவும் இல்லை என்றாகி, தினமலர் என்று தெரிந்த பொழுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்திலேயே ஒய்.ஜி.னு ஸ்ரீராம் சொல்லி இருக்காரே!

      நீக்கு
    2. ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கிறேனே ஜீவி ஸார்...

      நீக்கு
  25. மேகம் காதலாய் சொரிந்தால் சாரல்..
    மேகம் மோகமாய் தீய்த்தால் புயல் அல்லவோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய நன்னாள் வணக்கம்.
      தீபாவளி நினைவுகள் அனேகமாக அனைத்து
      மத்திய தர குடும்பங்களிலும் உண்டான கதை.
      டெய்லர் வருகைக்குத் தவித்ததெல்லாம்
      சென்னையில் செட்டிலான பிறகுதான். நன்னுஜான் என்ற தையல்காரர். எங்கள் பெரிய குடும்பத்தின் அனைத்துப் பெண்களுக்கும் ரவிக்கை
      தைத்து இரவு பத்துமணிக்குக் கொண்டுவந்து கொடுப்பார்.

      இப்பவும் கச்சேரி ரோடில் மூடிய அவர் கடை இருக்கிறது.
      அவர் பேசும் தமிழே வினோதமாக இருக்கும்.

      மேகத்துக்கும் தாகம் உண்டு என்று கூட படம் வந்தது ஸ்ரீராம். கவிதை அருமை.

      சிறு தூரல் தெளித்து தாகம் தணிக்கும் கொடை மேகங்களுக்கு நன்றி.

      பாவமன்னிப்பு ராக்சி தியேட்டரில் பார்த்தது.
      அதற்குப் பிறகு நடந்த படத்துக்கான போட்டியில்
      திண்டுக்கல்லில்
      அனைத்து மாணவிகளும் பங்கெடுத்து, முதல் பரிசு
      பெற்ற பாடல் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்.
      நாங்கள் செலக்ட் செய்தது வந்த நாள் முதல் இந்த நாள் வரை.

      நீக்கு
    2. கும்மட்டிக்காய் குழம்பு ஜானகிராமனின் கதையில் வரும்.

      நீக்கு
    3. அது துமட்டிக்காய் இல்லையோ?

      நீக்கு
    4. http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2009/09/ இரண்டும் ஒன்று தான் என்கிறார் மூலிகை நண்பர்.

      நீக்கு
    5. //மேகம் காதலாய் சொரிந்தால் சாரல்..
      மேகம் மோகமாய் தீய்த்தால் புயல் அல்லவோ?..//

      புயலா வெள்ளமா ஜீவி ஸார்?

      நீக்கு
    6. வாங்க வல்லிம்மா...    டெய்லர் இதுமாதிரி நாட்களில் அசாதாரண முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார்!  அவர் முகம் காட்டுவது இருக்கிறதே....!!!  

      மேகத்துக்கும் தாகம் உண்டு என்ற அழையா தலைப்பில் படு சுமாரான படம் ஒன்றிருக்கிறதுதான் வல்லிம்மா...    சரத்பாபு ஹீரோ.  அதில் எஸ் பி பி -சுசீலா பாடிய "மரகதமேகம் சிந்தும் மழை வரும் நேரமிது" என்கிற அழகிய பாடலொன்று உண்டு!

      நீக்கு
    7. ஓ...   தி.ஜா கதையில் வருமோ...  நான் படித்ததில்லை வல்லிம்மா...


      கீதா அக்கா...   மூலிகை தளத்தில் கொடுத்திருக்கும் படம் வித்தியாசமாய் இருப்பது போல தோன்றுகிறது.
      குமட்டிக்காயும் இல்லை, தும்மட்டிக்காயும் இல்லை, இது முலாம்பழமென்று இன்று பிளேட்டையே மாற்றிவிட்டார் அந்த அம்மா.

      நீக்கு
    8. நிச்சயமாக முலாம்பழம் இல்லை. அது வெள்ளரிப்பழம் போல் ஆனால் உருண்டையாக இருக்கும். இது நிச்சயமாய்க் குமட்டிக்காய் தான்! சந்தேகமே இல்லை.

      நீக்கு
  26. தீபாவளி நினைவுகள் ரசனை.

    ஆர்மோனியம் ஹா....ஹா.

    பதிலளிநீக்கு
  27. ஆஆஆ தலைப்பைப் பார்த்து .. அருகில் வந்த நெல்லை எனப் படிச்சு.. எதுக்கு ஸ்ரீராம் அருகில் இவர் போனார் என ஓசிச்சேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அருகில் வந்த நெல்லை எனப் படிச்சு.. //

      ஹா...  ஹா...   ஹா....

      நீக்கு
  28. தீபாவளி அனுபவங்கள் : முந்தைய காலத்து ஏக்கங்கள் (எனக்கும்)

    நண்பருக்கு நல்லதொரு (ஆசிட் கலந்த) வார்த்தை அடி...

    பதிலளிநீக்கு
  29. //அதற்கு முந்தைய அருகாமை வீட்டு சண்டைகளும் காரணம். //
    இக்காலத்திலும் இப்படி பக்கத்து வீட்டுச் சண்டைகள் நடக்குதோ? பார்த்துக் கன காலமாச்சு.. நாமும் நம்பாடும் என இருக்கும் உலகில் வாழ்வதால் எல்லாம் மறக்கடிக்கப்படுது பழைய விசயங்கள். இப்படிச் சொல்லும்போதுதான், ஓம் ஊரில் எனில் பக்கத்துவீட்டுக் கோழிச் சண்டை, பப்பிச் சண்டை, வேலிச்சண்டை என பல தகராறு வருமே என்பது நினைவுக்கு வருது ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ அதிரா...   அதை ஏன் கேக்கறீங்க...  எங்கள் வீட்டு பூனைக்குட்டிக்கு எமனும் அதே பெண்மணிதான்.    அவரோடு யாருமே தொடர்ந்து நட்பாய் இருக்க முடியாது.

      நீக்கு
  30. // பொதுவாகவே தீபாவளிக் கொண்டாட்டங்களில் பழைய முறை பின்பற்றப்படுவதில்லை, அதாவது அதிகாலை எழுவது, எண்ணெய்க் குளியல், பலகாரம், உறவுகளோடு கலந்திருப்பது தொலைகாட்சி இல்லாததால் பட்டாசுகள் வெடித்து என்று முன்பு போல உற்சாகம் இருப்பதில்லை என்பதை எங்கும் பரவலாகப் பார்க்க முடிகிறது.//

    உண்மைதானே, இப்போதுள்ள பிள்ளைகளுக்கு இதெல்லாம் விருப்பமில்லை, நாம்தான் சிலதைக் கட்டாயப்படுத்துகிறோம் ... அதுக்கு காரணம் நிறைய நாகரீக வளர்ச்சி.. வசதி அதிகரித்திருப்பது இப்படி நினைக்க தோணுது.

    தீபாவளிக்கு மட்டுமே ஒரு உடை எனும் காலத்தில், தீபாவளி எப்போ வரும் என இருந்திருக்கும்.. இப்போ.. யாருக்கு வேணும் புது உடுப்பு? யாருக்கு வேணும் பலகாரம் என்பதுபோலல்லவோ இருக்குது ... ஹா ஹா ஹா எங்களுக்கே அலுப்பாகத்தான் இருக்குது அப்போ பிள்ளைகளுக்கு ?.. இனிமேல் காலத்தில் இதெல்லாம் இருக்காது என்றே நினைக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யாருக்கு வேணும் பலகாரம் என்பதுபோலல்லவோ இருக்குது// - இதை ஞாபகமாகக் குறித்து வைத்துக்கொண்டு, உங்கள் அடுத்த இடுகைக்கு உபயோகிக்கிறேன் (அரியதரம் ஹா ஹா)

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) என் சீனி அரியதரம் இன்னும் இருக்கு:), கந்தஷ்டி முடிஞ்சதும் சாப்பிடப்போறேன்ன்:).

      நீக்கு
    3. உண்மைதான் அதிரா...    அப்போதெல்லாம் வருஷத்துக்கு ஒருதரம்தான் ட்ரெஸ்.   தீபாவளிக்கு எடுத்தால் பிறந்த நாளுக்குக் கிடையாது!  சில சமயங்களில்தான் இரண்டுக்கும் ட்ரெஸ் கிடைக்கும்!  நெல்லை சொல்லி இருப்பதுபோல ஸ்கூல் யூனிபார்மே எனக்கு தீபாவளி ட்ரெஸ்ஸாயும் ஒருமுறை அமைந்தது!

      நீக்கு
    4. இந்த விஷயத்தின் என் அப்பா அப்போவே கையில் காசு முன் கூட்டியே சேமிப்பார். அப்படியும் காசு இல்லைனா காதியில் எங்களுக்கெல்லாம் துணி வாங்கிக் கொடுப்பார். காதியில் அப்போவே வருடாந்திரமாகப் பணம் கட்டும்படி துணிக்குக் கடன் வசதி உண்டு. அதில் வாங்குவார். அப்படி ஒரு முறை நான் கதர்ப்பட்டுப் பாவாடையே கட்டி இருக்கேன்.

      நீக்கு
    5. ஆனால் நாங்க வீடு கட்டிக் கிரஹப்ரவேசம் செய்த 83 ஆம் ஆண்டில் தீபாவளிக்குச் சிரமமாக இருந்தது. என் மாமியாருக்கும், பெண்ணுக்கும் எங்க வீட்டில் கொடுத்த பணத்தில் துணி எடுத்துட்டேன். எங்க பையருக்கு அவசியமாக யூனிஃபார்ம் வேண்டி இருந்ததால் அவரே அது போதும்னு சொல்லிட்டார். பாவம் இத்தனைக்கும் குழந்தை தான் அப்போ! மாமனாருக்கும், அவருக்கும் , எனக்கும் உள்ளூரில் ஒரு கடையில்150 ரூபாய்க்குள் கடனில் துணி எடுத்துக் கொண்டோம். அந்த வருஷம் என்னோட தீபாவளிப்புடைவை+ரவிக்கை சேர்ந்து 60 ரூபாய்க்கும் கீழே தான்.

      நீக்கு
  31. //தீபாவளி அன்று காலை நடைப்பயிற்சியின்போது பதுங்க இடம் தேடிஓடிக் கொண்டிருந்த செல்லங்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.//

    ஹா ஹா ஹா இங்கும் ஒவ்வொரு வருடமும் நொவெம்பர் 5 ம் திகதி தீபாவளிபோல பட்டாசுகள் வாண வேடிக்கைகள் நடக்கும்.
    //Guy Fawkes Night, also known as Guy Fawkes Day, Bonfire Night and Firework Night, is an annual commemoration observed on 5 November, primarily in the United Kingdom. Its history begins with the events of 5 November 1605 //

    பல பொது இடங்களில் பெரிய கொண்டாட்டம் போல கடைகள் எல்லாம் போட்டு, வாண வெடிகள் வெடிப்பார்கள்.. என்ன ஒன்று படு குளிராக இருக்கும், எங்களுக்கு இங்கு மலை என்பதால், வீட்டிலிருந்தே பார்க்கலாம் இவற்றை.. 1ம் திகதியே சிலர் சும்மா சும்மா ஆரம்பித்து விடுவார்கள்.

    இக்காலத்தில் இங்கும் செல்லங்கள் கட்டிலுக்குக் கீழேதான் பதுங்கி இருப்பார்கள்:)), ஆனா இங்கு இரவில் மட்டும்தான் வெடிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  32. //நானும் என் அண்ணனும் மட்டும் இரண்டுபேர் புகுந்து கொள்ளும் அளவு டிராயரில் வலம் வருவோம்! //

    ஹா ஹா ஹா அதில இன்னொன்றும் இருக்கு, முன்பு உடுப்பு தைக்கும்போது, இன்னொரு வருசத்துக்குப் போடுமளவுக்கு கொஞ்சம் பெரிசாகவே தைக்கச் சொல்லுவினம் ஹா ஹா ஹா. இப்போ எந்தப்பிள்ளையும், கொஞ்சம் காற்றுப்போகும் இடைவெளி இருந்தாலே இது பெரிசு என்கின்றனர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னொரு வருசத்துக்குப் போடுமளவுக்கு //

      இந்த ரூலை ஒவ்வொரு வருஷமும் கடைப்பிடித்தார்கள்!  

      நீக்கு
  33. // "என் கையிலே மாத்திரம் ஒரு கத்தி இருந்தால், எம்.ஆர்.ராதாவை குத்தியிருப்பேன்...' என்றார் என் பாட்டி.//

    ஹா ஹா ஹா படங்கள், ரிவி நிகழ்ச்சிகள் பலதும் இப்படி நம் பிபி யை ஏறப்பண்ணும்... ரிவியையே உடைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்ம்.. ஆனா அது தயாரிப்பாளருக்கு வெற்றி என்கிறார்கள்.. ஸ்ரீராம் எழுதும் சில கதைகளுக்கு, நாம் போடும் எதிர்ப்புக் கொமெண்ட்ஸ் போல:)).. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கரவாதப் பாட்டியாய் இருந்திருப்பார் போல வொய் ஜி எம்மின் பாட்டி!

      //ஸ்ரீராம் எழுதும் சில கதைகளுக்கு, நாம் போடும் எதிர்ப்புக் கொமெண்ட்ஸ் போல:)).. //

      ஹா...  ஹா...  ஹா...    இது எப்போ?

      நீக்கு
  34. குமட்டிக்காய் சூப்பராக இருக்கு, ஏதோ ஒருவகை பூசணிபோல இருக்கே, ஆனா அறியாமல் சாப்பிடமுடியுமோ என்னமோ.

    ஹார்மோனியம் .. ஹா ஹா ஹா.

    கவிதைப் படத்தில் அனுக்காவோ?:).. கூடவே இருப்பது...... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  35. நீங்க எழுதியிருந்த வெடி வகைகள், அதிலும் ரயில் வெடி, எங்க அப்பா உதவியோட 3ம் வகுப்பு படிக்கும்போது வெடிச்ச நினைவ் வருது. எத்தனையோ நல்ல நினைவுகள்லாம், இந்தக் காலத்துக்கு குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இப்போல்லாம் பண்டிகை என்றாலே ஒரு ஆர்வம் இல்லாத தன்மை எல்லாருக்குமே வந்துவிட்டது.

    ஜிவாஜி பற்றிய நினைவுகள் நல்லா இருந்தது. எம்.ஆர் ராதா ஒரு அசாதாரண மனிதன். சமீபத்தில் ராதா ரவி இண்டர்வியூ கேட்டேன். எம்.ஆர்.ராதா பற்றிய புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.

    இந்தக் கும்மட்டிக்காயை (னு நினைக்கிறேன்) இன்று கூட கடையில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை..  இந்தக்காலத்துக் குழந்தைகளுக்கு தூக்கம் பிரதானம்.அப்புறம் புதுப்படம்.  நான் ஒரே ஒரு படம்தான் ரிலீஸ் ஆன நாளே பார்த்தேன்...   அண்ணன் ஒருகோவில்.   அதுவும் என் மாமா வறுபுறுத்தி அழைத்துச் சென்றதால்...  இப்போதெல்லாம் முதல் நாள் படம் பார்க்கா விட்டால் ஏதோ பெரிய பாவம் போலநினைக்கிறார்கள்!

      நீக்கு
  36. //முன்பு உடுப்பு தைக்கும்போது, இன்னொரு வருசத்துக்குப் போடுமளவுக்கு கொஞ்சம் பெரிசாகவே// - நானும் இதைக் கடந்துதான் வந்திருக்கிறேன். அதனால்தான் பையனுக்கு சின்ன வயசுல உடை வாங்கும்போது கொஞ்சம் பெரிதாக வாங்கியிருக்கிறேன் என்பதை இப்போது அந்தப் படங்களைப்பார்த்துப் புரிந்துகொள்கிறேன். எங்க அப்பா ஒரு தீபாவளிக்கு ஸ்கூல் யூனிஃபார்மை வாங்கிக்கொடுத்தது நினைவுக்கு வருது (அதுவும் நீங்க சொன்ன மாதிரி பெரிய சைஸ்ல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூனிஃபார்ம் அனுபவம் எனக்கும் உண்டு நெல்லை.  ஒருமுறை கையில் காசு இல்லாததால் தீபாவளி கொண்டாடவில்லை.  அப்போது நான் என் அண்ணனிடம் பேசுவது போல பேசிய வார்த்தைகள் எனக்கே இப்போது வெட்கத்தைத் தருகின்றன!

      என் பையன்களுக்கு நான் தொளதொள உடை வாங்கிக்கொடுத்ததில்லை!

      நீக்கு
  37. இந்த வருடம் பட்டாசு உற்பத்தி, விற்பனை இரண்டுமே 50% குறைவு என்று செய்தி படித்தேன். பட்டாசு தொழிலை நசித்துப் போக செய்ய வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்படும் அந்நிய சதி என்று திரு.குருமூர்த்தி அவர்கள் தன்னுடைய 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்' என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.  
    இந்த வருடம் ஸ்ரீராம் மட்டுமல்ல, வேறு பலரும் ரெடிமெடுக்கு மாறி விட்டார்கள் போலிருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பான்மையோர் ஆன்லைனிலும்,ரெடிமேடிலும் துணி வாங்கி விடுகிறார்கள் அதனால் தங்களுக்கு ஆர்டர்கள் மிகவும் குறைவு என்று தொலைகாட்சியில் டெய்லர்கள் குறைபட்டுக் கொண்டார்கள்.    

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...    சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பட்டாசு வாங்குவோரும் குறைந்து விட்டார்கள்.   எங்கள் டெய்லர் தைப்பதை நிறுத்தி விட்டார்.  அவர் மகன் ஐடி துறையில் வேலை பார்ப்பதால், அப்பாவை ஒய்வு எடுக்கச் சொல்லி விட்டதால் நிறுத்தி விட்டார்.

      நீக்கு
    2. ரெடிமேட், ரெடிமேட் என்று சொல்கிறோமே! அதையும் தையற்காரர்கள் தானே தயாரிக்கின்றனர். நானே அப்படி ஒரு கடைக்குத் தைத்துக் கொடுத்திருக்கிறேன், பதின்ம வயதுகளில். ஆகவே தையற்காரர்கள் முயன்றால் நல்ல கம்பெனியாகப் பார்த்து வேலைக்குச் செல்லலாம். முன்னர் அம்பத்தூரில் ஒரு கம்பெனி இருந்தது. பல பெண்கள் போவார்கள். மதுரையிலும் எனக்குத் தெரிந்து சில கம்பெனிகள் இருந்திருக்கின்றன.

      நீக்கு
    3. உங்கள் வாதம் சரிதான்.  ஆனால் தனித்தனியாக ஆளுக்கேற்றபடி அளவெடுத்துத் தைப்பது எங்கே...   இப்படிப் பொதுவாகத் தைப்பது எங்கே?   32, 34, 36 என்று இருக்கிறது அளவுகள்.   31, 33, 35என்றெல்லாமும் கிடைக்காது...     கஷ்டம்!  இடுப்பு சரியாய் இருந்தால் கால் சரியாய் இல்லை.  கால் சரியாய் இருந்தால் இடுப்பு சரியாய் இல்லை!

      நீக்கு
    4. நீங்க தேர்ந்தெடுக்கும் கம்பெனியைப் பொறுத்து இருக்கு. பெரும்பாலும் பீட்டர் இங்க்லான்ட், லூயி ஃபிலிப்ஸ், ரேமன்ட் ஆகிய கடைகளில் சரியாக அமையும். அங்கெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு நமக்கு ஏற்ப அளவைச் சரி பண்ணியும் தருவாங்க. எங்க பையரைப் பார்த்தீங்க இல்லை? அவருக்குத் தைச்சாலே சரியா வரலைங்கறார்.

      நீக்கு
    5. பீட்டர் இங்லாண்ட்தான்.   சரி செய்து தருவார்கள்தான்.  கடைக்காரர் 'அப்புறமா நவம்பர்ல வாங்க...   ஏகப்பட்டது ஏற்கெனவே சேர்ந்து இருக்கு'ன்னார்.   இதுக்காக ஒருவாட்டி அலையனும்...    அதுல் சரியாவரணும்!   என்னவோ போங்க...   அவங்கவங்களுக்குப் பழகியது அவங்கவங்களுக்கு!!!

      நீக்கு
  38. எம்.ஆர்.ராதா நடித்திருந்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் பாவ மன்னிப்பு என்று ராதிகா ஒரு முறை கூறியிருந்தார். ஆளவந்தாரை யாருக்குத்தான் பிடிக்காது? அதே பெயரில் ராதா ரவி அதே மாதிரி சின்ன மாப்பிள்ளையில் நடிக்க முயற்சி செய்திருப்பார். இருந்தாலும் ஒரிஜனல் ஒரிஜினல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    சின்ன மாப்பிள்ளை கேரக்டருக்கு இப்படியொரு காரணம், பின்னணி இருக்கிறதோ....

      நீக்கு
  39. பி.சுசீலா பாடிய பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்தது பாவமன்னிப்பு படத்தில் வரும் 'அத்தான் என்னத்தான் ..' பாடல்தான் என்று லதா மங்கேஷ்கர் குறிப்பிட்டிருந்ததை படித்த பொழுது, அந்த பாடலா? என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் படத்தை பார்த்த பிறகுதான் பாடல் வரிகள், இசை, பாடியிருக்கும் விதம், படமாக்கப்பட்டிருக்கும் விதம், நடிப்பு எல்லாவற்றிலும் சிறப்பான பாடல் என்று புரிந்தது. இந்த பாடலை வெள்ளி வீடியோவில் நேயர் விருப்பமாக ஸ்ரீராம் ஒளி பரப்புவாரா ? இல்லை பிரபலமான பாடல் என்று மறுதலித்து விடுவாரா?   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   பிரபலமான பாடலா அது?   போட்டுவிடுவோம் ஒருதரம்...

      நீக்கு
    2. //பிரபலமான பாடலா அது? // - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எப்போப் பார்த்தாலும் எஸ்.பி.பி ன்னே இருந்தால், பி.சுசீலா மறந்துவிடுமா?

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... இன்றைய வெள்ளி வீடீயோவை பாருங்கள்!!!!

      நீக்கு
  40. ஸ்ரீராம் நீங்கள் என்ன ஸ்விட்சர்லாண்ட்வாசியா? கதையை தொடராக போடுவதா? ஒரே நாளில் போடுவதா? என்று எங்களிடம் யோசனை கேட்கிறீர்களே? இப்போதெல்லாம் சாப்பாட்டை கூட ஐந்தாக பிரித்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள், 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படின்னா, ஐந்து ப்ரேக்ஃபாஸ்ட், ஐந்து லஞ்ச், ஐந்து டின்னரா? இத்தனையும் மனைவி பண்ண கஷ்டப்படுவாளே. சொல்லிப் பார்க்கிறேன்.

      பா.வெ மேடம்... தொடர்கதைனா நினைவு வச்சுக்கணும், ஒவ்வொரு பகிதிலயும் சஸ்பென்ஸ் வைக்கணும், என்னைப் போன்றவர்கள், முடிந்த பிறகு மொத்தமா படிக்கணும்.

      நீக்கு
    2. //ஸ்விட்சர்லாண்ட்வாசியா? //

      அப்படி என்றால்? 

      நான் பாட்டுக்கு முழுக்கதையையும் நீளமாக போட்டு விட்டால் எல்லோரும் அப்பிடிக்க வேண்டுமே!

      நீக்கு
    3. /அப்பிடிக்க வேண்டுமே!//

      பிழை திருத்தம்  :  படிக்க வேண்டுமே...!!

      நீக்கு
    4. பிழை திருத்தம் தேவையில்லை. ஏனெனில், பிழையேதுமில்லை!

      நீக்கு
    5. அப்படியா?   அப்படியும் சொல்லலாம்.  முன்னால் 'அ' வராமலிருந்தால் அப்படியும் கொள்ளலாம்!

      நீக்கு
    6. நெல்லை ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு. ஒரு நாளின் மொத்த சாப்பாட்டையும் ஐந்தாக பிரித்துக் கொள்ளுங்கள் என்றால் பெருக்கி விட்டீர்களே.

      நீக்கு
    7. @ஶ்ரீராம்: ஸ்விஸ் கவர்மெண்ட் ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் மக்களின் அபிப்ராயத்தை கேட்டுதான் முடிவெடுக்குமாம் அதைப்போல கதையை எப்படி வெளியிடுவது என்று எங்களிடம் அபிப்ராயம் கேட்கிறீர்களே.

      நீக்கு
    8. ஓஹோ...    புரிந்தது பானு அக்கா...   ஆனால் பாருங்கள் பதில்கள் சரியாக வரவில்லை.   நான் இந்திய அரசாங்கம் போல நானே முடிவெடுத்து விடுகிறேன்!

      நீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    பாவ மன்னிப்பு படம பற்றி நல்ல விளக்கம். நான் சின்ன வயதில் பார்த்துள்ளேன். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும் பாவ மன்னிப்பு சிவாஜியின் சிறந்த நடிப்பில் சிறந்ததோர் படம்.

    அருகில் வந்த தொல்லை நகைச்சுவை நன்றாக உள்ளது. இப்படித்தான் அருகில் நமக்கு தெரியாமலே ஆயிரம் தொல்லைகள்..

    கவிதை மிக நன்றாக உள்ளது. சின்னதான வரிகளில் ஆழமான பொருளுடன். அருமையாக உள்ளது.

    கதைகளை பகிருங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      மீள் வருகைக்கு நன்றி.  அனைத்தையும் ரசித்துக் கருத்திட்டதற்கும் நன்றி.  கதையைக்கண்டிப்பாகப் பகிர்கிறேன்.  ஆனால் அது ஒரு தவணையிலா?  இரு தவணையிலா?  இதுவே என் கேள்வி!

      நீக்கு
    2. கதையின் நீளம் தங்களுக்குத்தான் தெரியும். சுவாரஸ்யமாக படிக்கும் எங்களுக்கு எப்படி இருந்தாலும் சரிதான். ஆனால் இரண்டு மூன்று பதிவுகளாக போட்டால், ஒரு பகுதியை ஆர்வமாக படிப்பவர்களுக்கு, அடுத்ததை படிக்கும் நேரத்தில், அதே ஆர்வம் வரவேண்டும். அந்த நேரத்தில் வேறு ஏதாவது முக்கியமான வேலைகள் வந்து குறுக்கிடாமல் மனது கதையில் லயிக்க வேண்டும். அப்படி பார்க்கும் போது சிறுகதை ஒரளவு பெரிதாக இருந்தால் கூட முழுவதுமாக பகிர்ந்து விட்டால் மனதுடன் கதை ஒன்றி விடும். ரொம்ப பெரிதாக இருந்தால், நினைவில் தங்கும் இடத்தில் நிறுத்தி "தொடரும்" போட்டால், சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும். இது எனக்குள் தோன்றுவது.

      தங்களுக்கு தெரியாததா? எனினும் எ. பியின் வாசகர்களின் கருத்தை கேட்கும் தங்கள் பெருந்தன்மை கண்டு வியக்கிறேன். தங்களுக்கு பாராட்டுக்கள். இதைப்பற்றிய அனைவரின் கருத்துரைகளை நான் இன்னமும் படிக்கவில்லை. இனிதான் படிக்க வேண்டும்.இன்று கொஞ்சம் அதிக வேலைகள்.. நன்றி.

      நீக்கு
    3. ம்ம்ம்...     பார்க்கிறேன்.   ஒரு வியாழனில் இதை தனியாகப் போட்டுவிட வேண்டியதுதான்!!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!