சனி, 11 ஜனவரி, 2020

சிறப்புக் குழந்தைகள் 


1)  'ஆட்டிசம் ஒரு குறைபாடே தவிர, நோய் அல்ல. அதாவது இயல்பில் இருந்து விலகிய நிலை. 'ஆட்டிசம்' குறைபாடு உள்ள குழந்தைகளின் உலகே தனி. சாதாரண மனிதர்களை விட அவர்களின் செயல்கள், நடத்தைகள், விருப்பங்கள் வினோதமாக இருக்கும். இவர்களுக்கு சிறப்பு கவனிப்பு அவசியம்' என்று கூறுகிறார், திருப்பூர் காந்தி நகர் அருகேயுள்ள சாய் கிருபா சிறப்பு பள்ளி இயக்குனர் கவின்.




2)  விக்டோரியாவில், உணவகத்தை நடத்தி வரும் இந்திய தம்பதி, கன்வல்ஜீத் சிங் - கமல்ஜீத் கவுர் ஆகியோர், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தங்கள் உணவகத்தில் தயாரித்த உணவுகளை, இலவசமாக வழங்கி வருகின்றனர். 




3)  பாராட்டப்பட வேண்டிய மதுரை மாநகராட்சி...




4)  டி ஐ ஜி பாலகிருஷ்ணனின் மனித நேயம்...



5)  பி.டெக்கில் பயோ இன்ஃபோர்மேஷன், எம்.எஸ். பயோ ரிசர்ச் மூன்று வருடங்கள் முடித்து விட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் கிரிஸ்டல் குரோத் டிபார்ட்மெண்டில் ஆராய்ச்சி மாணவியான பிரீத்தி ராமதாஸ் என்னும் ஆராய்ச்சி மாணவி, பெண்களுக்காக பயோ சானிடரி நாப்கின் தயாரித்திருக்கிறார். 

இதற்கு முன்னாலும் பயோ சானிட்டரி நாப்கின்கள் சந்தையில் இருந்தாலும் அவை 100% இயற்கையானவையா? என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் மஞ்சள், வெட்டிவேர், வேம்பு, எலுமிச்சை கொண்டு ப்ரீத்தி உருவாக்கியுள்ள நாப்கின் முழுக்க முழுக்க இயற்கையானதாக இருப்பதால் பெண்களின் ஆரோக்கியத்தை காப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்ததாம். இதை பயன்படுத்திய பிறகு மண்ணில் புதைத்து வைத்தால் மேல்,கீழ் லேயர்கள் 48 மணி நேரத்தில் மக்கி விடுமாம். சூப்பர் அபசார்ப்ஷன் லேயர் எனப்படும் நடு பகுதி மக்குவதற்கு 27 னாட்கள் ஆகுமாம்.  

தனக்கு இம்மாதிரி இயற்கை பொருள்களில் ஆர்வம் வந்ததற்கு தன்னுடைய அம்மாதான் காரணம் என்கிறார். இன்றுவரை அவர் ஷாம்பூ பயன்படுத்தியதில்லையாம். தலைக்கு சிகைக்காய் பொடிதான் என்பவர் அது மட்டுமல்லாமல் பாடி லோஷன், கண் மை எல்லாமே வீட்டில் தயாரித்தவைதான் என்கிறார். 



சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய ரத்தத்தை கொடுத்துதான் சர்க்கரை அளவை கண்டறிய முடியும் என்னும் தேவையில்லாமல் அவர்களின் வியர்வையிலிருந்தே சர்க்கரை அளவை கண்டறிய முடியும் என்னும் இவருடைய ஆராய்ச்சியும் முடியும் தருவாயில் உள்ளதாம். 



தன்னுடைய பயோ சானிட்டரி நாப்கினை ஆன் லைனில் இவரே  சந்தைப்படுத்தும் திட்டமும் உள்ளதாம்.  (நன்றி பானு அக்கா)

==============================================================================================



பிரிவும் பிரிவின் வலியும்
ரமா ஸ்ரீனிவாசன்  

பள்ளி வாழ்க்கை என்பது மிகவும் சுகமும் ஸ்வாரஸ்யமும் மிகுந்தது.  அது ஒரு இன்ப சுமையாகும். அதன் பொருளும் முக்கியத்துவமும் அன்று நமக்கு தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. 

இன்று வருடங்கள் உருண்டோடிய பின்னர் திரும்பி பார்க்கும்போது, நாம் எத்தனை சுமைகளை கடந்து வந்தோம், எத்தனை வீர செயல்கள் புரிந்து வந்தோம், எத்தனை பாடங்கள் படித்து வந்தோம் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.   நமது வாழ்க்கை கல்வியின் அடித்தளமே அங்குதான் ஆரம்பம் என்பதை இன்று உணர்கிண்றோம்.  ஒட்டி உறவாடுவது, விட்டு கொடுப்பது, ஒற்றுமையாய் அனைவரையும் அனைத்து வழி நடத்துவது, தவற்றை கண்டித்து சுட்டிக்காட்டுவது என்று பிற்காலத்து வாழ்க்கையிலும், குடும்பத்திலும், அலுவலகத்திலும் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு சூத்திரத்திற்கும் ஒவ்வொரு வழிமுறைக்கும் நம் பள்ளி வாழ்க்கைதான் அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றது எண்றால் அது மிகையாகாது (இன்று இதற்கு ஆங்கிலத்தில்  “ப்ரொஃபெஷனல் லாஃஜிஸ்டிக்ஸ்” என்று பெயர் சூட்டியிருக்கின்றார்கள்).  இதை
கற்றுக் கொடுப்பதற்கு வேறு கல்லூரிகளில் ஒரு தனிப் பிரிவு இன்று. போகின்ற போக்கில் பள்ளிகளில் பழகி படித்ததெல்லாம் இப்பொழுது ஒரு பாடப்பிரிவாக ஆக்கப்பட்டு விட்டது.  என்னடா இந்த காலத்து படிப்பு !!!!!!!!!!!!!!!!!

பள்ளிக்குள் நுழைந்த முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை எந்த
கவலையும், எந்த பயமும் இன்றி ஊர் சுற்றி உலா வந்த நாங்கள், திடீர் என்று 1975ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பின் வாசற்படிக்கு உந்தித் தள்ளப்பட்டோம்.   ஒட்டு மொத்த வகுப்பு ஆசிரியர்களும், “மாணவர்களே, இந்த வருடமும் அடுத்த வருடமும்தான் பாக்கி. நீங்கள் வாழ்க்கையில் என்ன, எப்படி வளரப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்து அதற்கேற்றாற்போல் படிப்பதற்கு” என்று சொல்லி சொல்லி பயம் காட்டினார்கள்.

நாட்கள் உருண்டோடின. பத்தாம் வகுப்பும் முடிந்து பதினோராம் வகுப்பும்
முடிந்து, 1976இல் பப்ளிக் பரீட்சைக்கு படிக்க பள்ளி விடுமுறையும் விட்டாகி விட்டது. ஒட்டு மொத்த பள்ளி மாணவர்களும், அனைத்து ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து எங்களுக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்தார்கள்.

எங்கள் வகுப்பின் நெருக்கமும் நட்பும் அன்றுதான் எங்கள் தலை வழியாக மனதிற்குள் இறங்கி சுமையாய் மாறியது.  40 பேர்கள் கொண்ட எங்கள் வகுப்பு எல்லா பரிமாணங்களிளும் சிறப்பான வகுப்பாய் திகழ்ந்தது.  

எங்களுக்குள் உள்குத்து, உள்சண்டை எத்தனை இருந்தாலும், வெளி மாணவர்கள் எங்கள் வகுப்பு மாணவரை இழிவு படுத்தினாலோ, அவதூறு சொன்னாலோ, நாங்கள் 40 பேரும் ஒன்று சேர்ந்து எதிராளியை எதற்கும் வல்லமையும் மனவலிமையும் உடையவர்களாக இருந்தோம். அதே சமயம், கொஞ்சம் உதவி வேண்டிய எங்கள் சக மாணவர்களுக்கு, பரீக்ஷைக் கட்டணம் மற்றும் படிப்பு ஒத்தாசை போன்றவற்றை நாங்கள் யாவரும் இணைந்து செய்வோம்.  

நாங்கள் 40 பேரும் ஒரு மனதுடன் ஒன்றென கலந்தும் இணைந்தும் இருந்தோம்.

பிரிவு உபசார விழாவில், அத்தனை வருடங்களின் நினைவுகளும்,
அதாவது ஒண்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை செய்த
அத்தனை குறும்புகளும், சேட்டைகளும், வம்புகளும், வால்தனங்களும் ஒரு குறும்படமென மனக்கண் முன் ஒடியது.

அந்த க்ஷண நேரத்தில், நான் முடிவு செய்து நம் “விரும்பி கேட்கும் பாடல்கள்” வரிசையில் இருந்து “பசுமை நிறைந்த நினைவுகளே” பாட்டை எடுத்து சிறிது மாற்றி எழுதினேன். எங்கள் பிரிவு உபசார அரங்கத்தில், என் தோழி உஷாவை அதைப் பாட வைத்தேன். 

அவள் மிகவும் இனிமையாகவும் ஆனால் மிகவும் உணர்ச்சிப் பெருக்குடனும் மனவலியுடனும் பாடினாள். கூடியிருந்த அத்தனை பேர் கண்களிளும் நீர், அத்தனை நெஞ்சங்களிலும் வலிச்சுமை, அத்தனை மனங்களிலும் பாரம்.

இப்பொழுது புரிகிறது, அந்த பள்ளி நட்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை
என்பதும் அது ஒரு அழியாக் காவியம் என்பதும்.  

எங்கள் 40 பேரில் யார் எங்கு இருக்கிறர்களோ, எப்படி இருக்கிறார்களோ !!!!! ஆனால், நான் அடித்து ஆணித்தரமாக சொல்வேன். எங்கள் ஒருவராலும் அந்த பிரிவு உபசார விழா நாளை மறக்க முடியாது. அந்த மறக்க முடியாத உணர்ச்சி பொங்கும் பாடல் இதுதான் :

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழிகளே
பறந்து செல்கின்றோம்
(பசுமை நிறைந்த நினைவுகளே....)

குரங்குகள் போலே வால்தனம் செய்து வம்பிழுத்தோமே (2)
குயில்களை போலே இரவும் பகலும் பாடி ஆடி திரிந்தோமே (2)
காசில்லாமல் கனவிலேயே வாழ்ந்து மகிழ்ந்தோமே (2)
உலகின் பொய்மை ஏதும் தெரிந்திடாமல் களித்திருந்தோமே
நாமே களித்திருந்தோமே
(பசுமை நிறைந்த நினைவுகளே....)

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ (2)
எந்த நினைவை எந்த மனதில் கொண்டு செல்வோமோ (2)
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ (2)
இல்லை எந்த நாளும் இந்த நாளை அசை போட்டு ரசிப்போமோ
அசை போட்டு ரசிப்போமோ
(பசுமை நிறைந்த நினைவுகளே ...)

48 கருத்துகள்:

  1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சமீபத்தில்தானே போட்டிருந்தீர்கள். அதுக்குள்ளே ரிபீட்டா? ஓரிரு வரி அர்த்தமும் எழுதுங்க.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இதெல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறேன்..

      எதெல்லாம் மீள் குறள் ஆகின்றன என்று தெரியவில்லை..

      >>> இதற்கெல்லாம் அர்த்தம் எழுதுங்க...<<<

      விடியற்காலை 3:20 க்கு எழுந்து அடுத்த சிறு பொழுதில் எபியைப் பார்த்துவிட்டு குளித்து முடித்து வேலைக்குக் கிளம்புகிறேன்...

      திருக்குறளை முன்பே பதிவில் வைத்துக் கொண்டு C/P செய்வதில்லை...

      இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்...
      தனியே குறளமுதம் எழுதலாம்...

      நீக்கு
  2. அனைவருக்குமே அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவின் செய்திகள் அருமை..

    மதுரை தெப்பக்குளம் மீட்டெடுக்கப்பட்டது மகிழ்ச்சி...

    விஷயத்தைத் திசை திருப்பி விடும் விபரீத விளம்பரங்களால் தான் சுற்றுப் புறச் சூழல் கெட்டது..

    மீட்டெடுக்கப்படும் பழைமைகள் சிறப்பெய்தட்டும்...

    தலைக்குத் தேய்த்துக் குளிக்கும் சீயக்காய்த் தூளைக் கூட தயாரித்துக் கொள்ள இயலாமல் போனது யாருடைய குற்றம்....

    இன்றைய இந்தியப் பெண்களின் தலையாய பிரச்னை தலைமுடி உதிர்தல் பொடுகு..

    அவிங்க பாஷையில ஹேர் பால், டேன்றஃப்...

    தன் தலையைக் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள இயலாமல் போனதோ...

    அமேசான் காடு அல்லது ஆவாரங்காடு மாதிரி தலை முடி வளர்வதற்குச் சொல்லப்படும் ஒன்றில் பனை எண்ணெய் ( Palm Oil) கலந்துள்ளது தெரியுமா?..

    சாதாரண பற்பொடியில் கூட விளம்பர மோசடிகள்...

    மஞ்சளை மறந்தது இன்றைய பெண்ணினம்..

    எப்படியோ நமது நன்மைக்காகவாவது
    தற்சார்புடைய மக்களாக மாறுவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மீட்டெடுக்கப்படும் பழைமைகள் சிறப்பெய்தட்டும்...//

      எனக்கும் இதே உணர்வு தோன்றியது...

      நீக்கு
    2. அன்பு துரை ,தை பிறந்ததும் கடைக்கு வரும் மஞ்சள் கிழங்குகளிலேயே
      ரசாயனம் கலப்பதாகச் சொல்கிறார்கள்.
      மஞ்சள் பொடியோ கேட்கவே வேண்டாம்.
      இய்ற்கையாக அவரவர் வீட்டிலேயே மஞ்சள் செடி வைத்துப் பயனடையலாம்.
      நம் பாரம்பரியம் வாழ வேண்டும்.

      நீக்கு
    3. துரை சார்.. சென்னைல நாட்டு மருந்துக் கடைகள்ல சீயக்காய் மூலப்பொருள்கள் பாக்கெட் அரைகிலோ ஒருகிலோன்னு கிடைக்குது. நாம அதைக் கொண்டுபோய் அரவை மில்லில் (மி பொடி அரைக்காத) அரைத்துக்கொண்டால் போதும்.

      ஆனாலும் நம்மவர்கள் மீரா (ஜாஸ்மின் அல்ல) வை வீட்டுக்குக் கொண்டுவருகிறார்கள் இல்லைனா வீணாப்போன ஷாம்பூ

      சரி.. வாங்கறதுதான் வாங்கறாங்க.. இந்தியப் பொருள் மட்டும் வாங்கினால் என்ன? அதையாவது சிந்திப்பார்களா தாய்க்குலங்கள்?

      நீக்கு
    4. >>> அரவை மில்லில் (மி பொடி அரைக்காத) அரைத்துக்கொண்டால் போதும்...<

      ஆனால் அது தானே மிகச் சிரமமாக இருக்கிறது...

      நீக்கு
    5. >>> நம்மவர்கள் மீரா (ஜாஸ்மின் அல்ல) வை வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள்.. <<<

      இது வேறயா!..

      நீக்கு
    6. >>> கடைக்கு வரும் மஞ்சள் கிழங்குகளிலேயே
      ரசாயனம் கலப்பதாகச் சொல்கிறார்கள்..<<<

      இப்படித்தான் 12 வருடங்களுக்கு முன்னால் அவள் விகடனில் செய்தி வந்திருந்தது...

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்து வாசகனால் படிக்கப்படவில்லை

      நீக்கு
    2. மிக அருமையான செய்திகளைத் தொகுத்து வந்திருக்கும் இனிய சனிக்கிழமைக்கு
      எல்லோருக்கும் அன்பு வணக்கங்கள். ஆட்டிசக் க்ழந்தைகள் மிரக்கிள் பேபீஸ்.

      சரியாக வழி நடத்தப்பட்டால் இத்தனை நன்மை விளைந்திருக்கிறது.
      இந்த செய்தியே மனதை ஊக்குவிக்கிறது.
      இந்தக் குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டும்.

      மதுரை செய்தி மனதுக்குக் குளுமை. தெப்பக்குளங்கள் சீரமைக்கப் பட்டால் மதுரை மீண்டும் வைகை நகரமாகும்.
      ஆஸ்திரேல்யாவில் உதவிக்கரங்களை நீட்டிய இந்திய மக்களுக்கு
      மனம் நிறை பாராட்டுகள்.
      சிறப்பு செய்தி இந்த பையோ டிக்ரேடபிள் நாப்கின்ஸ் தான்.
      குமாரி ப்ரீத்தி அவர்கள் மேன்மேலும்
      வெற்றியைச் சந்திக்க வேண்டும்.
      அவர்களின் அன்னைக்கும் வாழ்த்துகள்.
      நல்ல செய்திகளுக்கு நல் வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. இந்தக் கருத்தை நான் எழுதவில்லை.

      நீக்கு
  5. Rama Srinivasan எழுத்து அருமை. நிறைய எழுதலாம்.. நேரமில்லை.

    பாருங்க.. பிரிவுபசாரப் பாடலும் சினிமாவில் ஆண்களுக்குத்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை தமிழன் அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்.  மிக்க நன்றி.
      //பாருங்க.. பிரிவுபசாரப் பாடலும் சினிமாவில் ஆண்களுக்குத்தான்// எனவேதான் நான் பெண்களுக்காக மாற்றி எழுத வேண்டி இருந்தது.

      நீக்கு
  6. இப்பவும் நான் நினைத்துக்குவேன்... கல்லூரி முடியும்வரை சாதி மத எண்ணங்களே நண்பர்களோட பழகும்போதோ வீட்டுக்குக் கூப்பிடும்போதோ கடுகளவு இருந்ததில்லை.

    ரஞ்சனி நாராயணன் அவர்கள் தன் ஆரம்பகாலத் தோழியை சமீபத்தில் சந்தித்து, பிறகு ஏன் சந்தித்தோம் என்ற எண்ணம் வந்த அனுபவப் பதிவை இப்போ நினைவுகூருகிறேன்

    பதிலளிநீக்கு
  7. அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.

    பாடல் வரிகளை அருமையாக மாற்றி இருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு Killergee Devakottai அவர்களே,
      மிக்க நன்றி.  நம்முள் இருக்கும் திறமை போற்ற படும்போது வரும் இன்பமே தனி.  என்னுள் இருக்கும் இத்திறமையை வெளிக் கொணர்ந்த இந்த ப்ளாக் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்.  இனியும் பன்மடங்கு பெருக வேண்டும் என்பதுதான் என் ஆசை. ரமா ஸ்‌ரீனிவாசன்.

      நீக்கு
  8. என்ன இன்றைக்கு ஒருவரையும் காணவில்லை? எல்லோரும் தர்பார் காலை காட்சிக்குச் சென்று விட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. SORRY Free ticket கொடுத்தாலும் தயாரில்லை. அதுக்கு சிவாஜியின் கர்ணனை இன்னொருமுறை பார்க்கலாம்.

      நீக்கு
  9. ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் சென்னையிலும் உள்ளன. இங்கு இருக்கும் மாணவர்கள் மிதியடி, மொய் கவர்கள், கீ செயின்கள் போன்றவை செய்து விற்பனை செய்வார்கள். 
    மதுரை மாநகராட்சி கலெக்டரை எல்லா ஊர் கலெக்டர்களும் முன் மாதிரியாகக் கொண்டால் நன்றாக இருக்கும். சென்ற வருடம் மதுரைக்குச் சென்ற பொழுது வறண்டு கிடந்த வண்டியூர் மாரியம்மன் குளம் வருந்தச் செய்தது. 
    வறண்டு கிடக்கும் வண்டியூர் மாரியம்மன் குளத்தை வைத்து சிவசங்கரி 'தெப்பக்குளம்' என்று ஒரு சிறுகதை நீண்ட வருடங்களுக்கு முன்பு குங்குமத்தில் எழுதியிருந்தார் படித்திருக்கிறீர்களா?  

    பதிலளிநீக்கு
  10. சேவை செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    என்றும் நினைவில் நிற்கும் பசுமை நிறைந்த நினைவுகள்...

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. குயில்கள்போலே இரவும் பகலும் - இரவுல பாடுதா? அதே வரில பாடி ஆடி- ஏதேனும்ஒண்ணு வந்தால்தான் பாடமுடியும். சந்தம்

    உலகின் பொய்மை ஏதும்.. - சந்தம் வரை. பொய்மை உலகைப் புரிந்திடாமல் அல்லது தெரிந்திடாமல் என வருவதுதான் சரியா இருக்கும்

    சரி சரி.. போஸ்ட்மார்ட்டம் பண்ணாமல் பாடலை ரசித்து பழைய நினைவில் ஆழ்கிறேன். பாராட்டுகள் ர ஶ்ரீ மேடம்

    பதிலளிநீக்கு
  13. நேற்று சிறப்பு குழந்தையை கோவிலில் பார்த்தேன். அழகான வாட்டசாட்டமான குழந்தை அம்மாவிடம் சேட்டை செய்து கொண்டு இருந்தான், முடியை பிடித்து இழுப்பது, சடையில் குத்தி இருக்கும் கிளிப்பை எடுத்து தூக்கி போடுவது என்று . அவன் அம்மா பொறுமையாக அவனை பார்த்துக் கொண்டார்கள். இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அவனுக்கு சீக்கீரம் சரியாக வேண்டும் என்று.
    குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த கவின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பெற்றோர்களுக்கு பொறுமையும் அக்கறையும் தேவை. தெய்வ குழந்தைகளை பாதுகாக்க அன்பான பெற்றோர்கள் அவசியம்.

    பதிலளிநீக்கு
  14. பள்ளி நட்புன்னு எப்படிப் பிரிப்பீங்க?

    என்னைமாதிரி நாடாறு மாதம் காடாறு மாதம் என்பதுபோல மூன்று நாலு வருடங்களுக்கு மாற்றலாகிப் படிப்பவர்கள் பல்வேறு நண்பர்களைக் கொண்டிருப்பார்களே..

    இந்தச் சமயத்தில் நாலு எந்தாம் வகுப்பு நண்பன் லட்சுமணனையும் ந ண் பி ஜெயஶ்ரீயையும், ஏழாம் எட்டாம் வகுப்பு ந ண் பி லக்ஷ்மியையும் நினைத்துக்கொள்கிறேன்.

    வாழ்க்கையில் அவர்களை மீண்டும் சந்திப்பேனா? சந்தித்தால் வாழ்க்கைப் பாதை மாறிவிட்டதை எண்ணி சந்தோஷப்படுவோமா இல்லை வருத்தப்பட்டுக் கொள்வோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் கல்லூரியின் பிரிவு விழாவிலும் இந்தப் பாட்டு போடப்பட்டது. அப்போதும், கேட்கையிலே வயிற்றை என்னவோ செய்தது. நெருங்கிப் பழகமுடியாத நிலையிலும் சிலர் மனதின் ஆழத்திற்குள் வந்து உட்கார்ந்திருந்தார்கள். இருக்கிறார்கள். இவர்களை இனி பார்க்கமாட்டோமா என்கிற சிந்தனை என்னை வெகுவாகத் தாக்க, அந்த விழாவில் என் மனம் தனியே இருந்து ரகசியமாக கலங்கிக்கொண்டிருந்தது. நான் அப்போதெல்லாம் ஒரு introvert என அறியப்பட்டவன். மாலையில் விழா முடிந்து கல்லூரியைவிட்டு வெளியேறுகையில் என் கால்கள் வலுவை இழந்துவிட்டிருந்தன. எல்லாம் நினைவில் இருக்கிறது. நினைவு மட்டுமே இருக்கிறது...

      நீக்கு
    2. ஏகாந்தன் சார்,பள்ளி நட்பு மட்டுமே அல்ல.  அந்த நண்பிகளை மட்டும் தொடர்பில் வைத்துக் கொள்ள முடியவில்லை.  வீட்டின் மற்றும் என் சூழ்நிலையும் அப்படி அமைந்து விட்டது.  ஆயின், கல்லூரி நட்பில் மிகவும் கவனத்துடன் இருந்தேன்.  இந்த வருட ஆரம்பத்தில் அமேரிக்கா சென்றபோது கூட, என் நண்பி ஒருத்தியை தேடி ஜார்ஜியா அட்லாண்டா சென்று அவளுடனும் அவள் குடும்பத்துடனும் ஒரு வாரம் கழித்தேன்.  ஆயினும், குடும்பம், குழந்தைகள், பெரியவர் பேணுதல் என்று கோமதி அரசு அவர்கள் கூறியது போல் நட்பு கற்பூரமாய் கரைவது என்பதுதான் நிதர்சனமான உண்மை.  ரமா ஸ்‌ரீனிவாசன்.

      நீக்கு
    3. கல்லூரித் தோழியைக் கடல்கடந்தும் தேடிக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். விடாது போய்ப் பேசியதோடு அவருடன் தங்கி, பொழுதையும் போக்கியாயிற்று! மென்மையானவர் நீங்கள். அந்தப் பெண்மணியும் உங்களைத் தோழியாகப் பெறக் கொடுத்துவைத்தவர்தான் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
  15. அனைத்து பாஸிடிவ் செய்திகளும் அருமை.
    அனைத்து மனிநேய உள்ளங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    சிறப்பு குழந்தைகலை அவர்களே தனித்து இயங்க வைத்த கவின் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
    உணவு கொடுக்கும் இந்தியர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் தண்ணீரை மீண்டும் கொண்டு வந்த விசாகன்அவர்களுக்கும் அவர் குழுவுக்கும் பாராட்டுகள்.
    டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பிரீத்தி ராமதாஸ்க்கு வாழ்த்துக்கள். அவரின் அடுத்த கண்டுபிடிப்புக்கு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  16. ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் பதிவு அருமை.

    என் அப்பாவுக்கு ஊர் உறாக மாற்றல் ஆகும். அப்போது எல்லாம் பிரிவின் வலியை சந்தித்து இருக்கிறேன்.
    புது நடபு, புது ஊர் என்று இருந்தாலும் அன்பான ஆசிரியர்கள் அன்பான நட்புகளை பிரிவது வலிதான்.

    நிறைய பேருடன் திருமணம் ஆனபின்னும் நட்புடன் கடித போக்குவரத்து இருந்தது. . காலப்போக்கில் அது கற்பூரமாக கரைந்து போய் விட்டது.

    பல காலம் இருந்த ஊரின் நட்பை இப்போது போற்றி பாதுகாப்பதே கஷ்டமாய் இருக்கிறது இப்போது. போன் மூலம் உரையாட மட்டுமே முடிகிறது.

    பதிலளிநீக்கு
  17. >>> Pregnant Or Lactating womens are advised to consume Herbal Products under advise of the Healthcare Practitioner.. <<<

    என்று திரு KGG அவர்கள் FB ல் சீயக்காய்த் தூள் புராணத்தில் பகிர்ந்த செய்தி சொல்லுகின்றது...

    பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பவர்களும் குழந்தைக்குப் பாலூட்டுபவர்களும்
    Healthcare Practitioner ஆலோசனையின் பேரில் சீயக்காய்த்தூளை Consume செய்ய வேண்டும் என்று அர்த்தம் ஆகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒரு விழிப்புணர்வு வந்திருப்பது ஒரு ஆசியே துரை.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  18. இந்தப் பசுமை நிறைந்த நினைவுகளின்
    பாட்டு இரத்தத் திலகம் வந்த நாளிலிருந்து பாடப் பட்டு வந்திருக்கிறது.
    58 வருடங்கள்.
    ஓடித்தான் விட்டன. அன்பு ரமா ஸ்ரீனிவாசனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளி சிம்ஹன் அக்கா (மறு பெயர் : என் சூத்திரதாரி அவர்களே), உங்கள் வாயால் "ப்ரம்ம ரிஷி" பட்டம் பெற்று விட்டேன்.  அதுவே என் தலை மேல் வைத்த மகுடம்.  நன்றி அக்கா.  என் எழுத்தின் உந்துதல் மேலும் அதிகரிக்கின்றது.  உங்களுக்கு 58 வருடங்கள். எனக்கு 43 வருடங்கள். ஒடித்தான் விட்டன திரும்பி பார்பதற்குள். ரமா ஸ்‌ரீனிவாசன்

      நீக்கு
    2. அன்பு ரமா. நான் வள்ளி இல்லை வல்லி:)
      நீங்கள் பத்திரிக்கையில் எழுதியவர் தானே. சீக்கிரம் வலைப்பக்கம் துவங்குங்கள்.
      உங்கள் எழுத்து உற்சாக ஊற்றாகத் தொடங்கும்.
      நல்வரவு மா.நன்றி.

      நீக்கு
  19. aஆடிஸம்பற்றி நிறையவே செய்திகளனால் நம்வீட்டில் யராவதுஇருந்தால் நம்முள் என்னமாதிரி எண்ணங்கள்தோன்றும் ஐயோ பாவம் தவிர ஆடிசம் உள்ளவர்களில் சிறந்தவர்களையே நாம் கவனிக்கிறோம்மற்றவர்களை ஒருபரிதாபத்துடனேயே கவனிக்கிறோம்

    பதிலளிநீக்கு
  20. ஆட்டிசம் குழந்தைகளைப்பார்க்கும்போதே மனம் வலிக்கும். இறைவன் படைப்பில் ஏன் எல்லோரும் சமமாக இல்லை என்பதற்கான காரண, காரியங்களைத் தேடிப் போனால் கிடைக்கும் பதில் "கர்ம வினை" என்பதே! :( இத்தகைய குழந்தைகளைக் கவன்மாகப் பார்த்துக்கொள்ளும் பெற்றோர்கள் நடமாடும் தெய்வங்கள்.

    மதுரைத் தெப்பக்குளம் நிரம்பிய காட்சி முகநூல், வாட்சப் என எல்லாவற்றிலும் வந்தது. ப்ரீத்தி ராமதாஸ் பற்றி நானும் எதிலோ படித்தேன். திருச்சி விஷயம் தெரியாது. ஆஸ்திரேலியப் பஞ்சாபி தம்பதியர் பற்றி முகநூலில் நிறையப் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  21. எங்கள் பள்ளியில் எங்களுக்கு நடந்த பிரிவுபசார விழாவிலும் ரத்தத் திலகம் பாடல் தான் பாடப்பட்டது. கிட்டத்தட்ட இதைப் போலவே எங்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றப்பட்டுப் பாடப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. இன்றைய செய்திகள் அனைத்துமே சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பள்ளி நினைவுகளை வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார் ரமா ஸ்ரீனிவாசன் அவர்கள். மாற்றி எழுதிய பாடலும் நன்றாக இருந்தது. அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல செய்திகளின் பகிர்வுக்கு நன்றி. மனநிலை குன்றியவர்கள் 14 பேரை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த காவல்துறையினரின் சேவை பாராட்டுக்குரியது.

    வரிகள் மாற்றப்படவில்லை என்றாலும் பசுமை நிறைந்த நினைவுகளே பாடல், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களின் கடைசி தினத்தை நினைவு படுத்தியது. இப்பாடலில் மனம் நெகிழ்ந்து பிரிவதே வழக்கமாக இருந்தது அந்நாளில். இப்போதும் பயன்பாட்டில் உள்ளதா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!