சனி, 18 ஜூலை, 2020

மலைச்சாரலில் ஒரு ஐ டி கம்பெனி...


1)  ".......  அருகில் உள்ள தென்காசியில் நல்ல மருத்துவமனை, பொழுதுபோக்க திரையரங்குகள், சுற்றிலும் நிறைய அருவிகள், காலாற நடந்து செல்ல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.அதுபோக, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேவையான, 24 மணி நேர மின்சாரம், அதிவேக இணையதள தொடர்பு, அருமையான ஊழியர்களும் இருப்பதால், என் வெற்றிப் பயணம் தொடர்கிறது......"
,

சென்னை போன்ற பெருநகரங்களில் தான், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்ற நியதியை உடைத்து, தென்காசி மாவட்டம், மத்தளம்பாறையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிகரமாக, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும், 'ஸோஹோ' ஸ்ரீதர் வேம்பு.




2)  தப்லீக் ஜமாத் அமைப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர் என கொரோனாவிலிருந்து மீண்ட 5 ஆயிரம் பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். இது தொடர்பாக, மற்றவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும் என மத தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.




3) மதுரை, அய்யர் பங்களாவைச் சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன், 35; மெக்கானிக்கல் பொறியாளர். மருத்துவ உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். ஏப்ரலில், சானிடைசர், அலைபேசி, முக கவசத்தை நீரில்லாமல் சுத்தப்படுத்தும், 'ரெட் பாக்ஸ்' கருவியை கண்டுபிடித்தார். தற்போது, காற்றில் கிருமிகளை அழிக்கும் கருவியையும், அலைபேசி மூலம் இயக்கி, கொரோனா வார்டில் கிருமி நாசினி தெளிக்கும் கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.




4)  ரஷ்யா தேதி சொல்லி விட்டது...    அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறதாம் தடுப்பூசி....




5) கடந்த நான்கு வருடங்களாக பாடம் நடத்திவருகிறார் சத்யேந்திரபால்.   காலையில் மூன்று மணி நேரமும் மாலையில் மூன்று மணி நேரமும் வகுப்பு நடக்கும் இது ஒரு ட்யூசன் வகுப்பு போலத்தான் வகுப்பு வாரியாக பிரித்து பாடம் நடத்துவார் படிப்பில் ஆர்வம் ஏற்பட்ட குழந்தைகள் பலர் இப்போது பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர் பள்ளியில் புரியாத பாடங்களை இவர் மூலமாக தெரிந்து கொள்வர்.



===============================================================================================


காற்றையும் பதம் பார்க்கும் கோவிட்-19
ரமா ஸ்ரீநிவாசன் 


எங்கள்பிளாக் உறுப்பினர்களே மற்றும் வாசகர்களே, என்னை அடிக்க
வந்து விடாதீர்கள். என்னடா இவள்? எப்பொழுது பார்த்தாலும் கோவிட்-19
தாக்கத்தைப் பற்றியே எழுதுகிறாளே என்று எண்ணாதீர்கள்.

எனக்கு படித்தும் பார்த்தும் தெரியும் அனைத்து தகவல்களையும்
இத்தளத்திலிட்டால் நீங்களும் உங்கள் சுற்றாரும் பயனுறுவீர்கள் என்பது
மட்டுமே என் நோக்கமாகும்.

ஜுலை 6, 2020 அன்று 32 நாடுகளிலிருந்து 239 விஞ்ஞானிகள் வேர்ல்ட்
ஹெல்த் ஆர்கனைஷேஷனுக்கு ஓர் திறந்த கடிதத்தை (open letter)
கையொப்பமிட்டு அனுப்பினர். அக்கடிதத்தின் சாராம்சம் என்னவென்றால்
கொடிய நோய் கோவிட் 19 காற்று வழியும் பயணித்து மக்களை பாதிக்கும்
என்ற திகிலான செய்திதான்

ஆராய்ச்சியின் வலிமையால் அவர்கள் கண்டு பிடித்தது என்னவென்றால் இந்த கோவிட் 19 மூச்சை வெளி விடும்போதும்பேசும்போதும், இருமும்போதும் கண்ணுக்கு தெரியாத சிறு துளிகளாக காற்றில் பரவி, மிதந்து, பாதிக்கப் பட்டவரிடமிருந்து 1 அல்லது 2 மீட்டர்கள் (இது மருத்துவர்களால் முன் வைக்கப் பட்ட 3 அல்லது 6 அடி விலகி இருப்பதைத் தாண்டி) தொலைவில் உள்ள மற்றவரை பாதிக்கும் வீர்யம் உடையது என்பதுதான்.  குலை நடுங்குகிறது அல்லவா?



வாருங்கள் மேலும் பார்ப்போம். என்னதான் கூறுகிறார்கள் என்று.

1. சரி. இப்போது ஏரோசோல்கள் அல்லது தூசு படலங்கள் என்றால் என்ன
என்றும் இவை சுவாசத் துளிகளிலிருந்து எப்படி வேறு படுகின்றன என்பதையும் முதலில் தெரிந்துக் கொள்வோம்.

சராசரி புரிதலின்படி வேகத்தில் ஓர் சிவிரி கெண்டியிலிருந்து (aerosol can)
வெளியேற்ற படும் நீர் துளிகள்தான் தூசுப் படலங்களாக மாறும் என்று நாம்
அறிவோம். ஆயின் வைரஸ் ஏரோசோல் என்பது விஞ்ஞானிகளின்
வலியுறுத்தல் படி சுவாசத் துளிகளை வி 5 மைக்ரான்களோ அல்லது
குறைவாகவோ இருக்கும் என்றும் சுவாசத் துளிகளை வி நீண்ட நேரம்
காற்றில் மிதக்கும் என்பதும்தான்.  சுவாசத் துளிகள் வெளி வருவது
தும்மலாலோ இருமலாலோதான். ஆனால் ஏரோசோல்கள் மக்கள் மூச்சு விடும்போதும், உரக்க சிரிக்கும்போதும் சத்தமாகப் பாடும்போதும் கூட
வெளியேற்றப் படலாம் என்று ஆராய்ச்சியின் மூலம் விஞ்ஞானிகள் கண்டு
பிடித்திருக்கின்றார்கள்.

இவை காற்றிலேயே நீண்ட நேரம் மிதக்கும் தன்மையுள்ளதால்கோவிட் நோயாளியின் மூச்சுக் காற்றானது அதிகக் காற்றோட்டமில்லாத சிறிய அறையில் 1 அல்லது 2 மீட்டர் தொலைவில்லுள்ள மற்றவரை வெகு
விரைவில் தாக்கும் வாய்ப்புள்ளது.

இந்த ஆபத்துதான் விலகியிருப்பதற்கும், மாஸ்க் அணிவதற்கும்,
கையுறைகள் அணிவதற்கும், அடிக்கடி கைகளை கழுவுவதற்கும் அடிப்படை
காரணமாக இக்கோவிட்டின் துவக்கத்திலிருந்து இருந்து வருகின்றது.

2. ஏரோசோல்கள் வழியாகவும் கோவிட் 19 கிருமிகள் பரவுகின்றன
என்னும் அறிவிப்பிற்கு பின்னால் விஞ்ஞான ரீதியான ஆதாரம் உள்ளதா ?

இக்கேள்விக்கு வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஷெஷனின் அறிக்கைப் படி அதிகார பூர்வமான போதுமான ஆதாரங்கள் இல்லையென்றாலும்மருத்துவமனைகளிலும் ஆய்வகங்களிலும் இந்த ஏரோசோல்கள் வழி கிருமி பரவுதல் அவசியமான உண்மை என்று கூறியுள்ளது. அதிகார பூர்வமான ஆதாரங்களின் அளவுகோல் மிக உயர்த்தி வைக்கப் பட்டிருப்பதின் காரணம் இது உண்மை என்பது அறிவிக்கப் படுவதற்கு முன் மக்களை சென்றடைந்தால் கட்டுக்கடங்கா பீதி ஏற்படலாம் என்பதேயாகும். அரை குறையாகக் கேள்வி பட்டு மருத்துவத் தொழிலாளிகள் பயத்தில் வேலைக்கு வருவதே நின்று விடலாம். அல்லது பயத்தின் விளைவாக அனைத்து N-95 மாஸ்க்குகளையும் அவர்களே வாங்கி பதுக்கும் சூழல் கூட உருவாகலாம்.

3. மேல் கூற பட்ட திறந்த நிலைக் கடிதம் போதுமான ஆதாரங்கள்
இருப்பதாக கூறுகிறதா?

இன்னும் இவ்விஷயத்திற்கு உலக அளவிலான ஏற்றுக் கொள்ளுதல் இல்லாவிட்டாலும், மேற்கூறிய 239 விஞ்ஞானிகளின் ஒட்டு மொத்த கருத்தில் பக்க பலமான சாத்தியக்கூறுகள் பல இருப்பதால் கோவிட்-19 தாக்கத்திற்கு ஓர் எதிர் மருந்து அல்லது வேக்ஸின் கண்டு பிடிக்கப் படும் வரை அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட வேண்டும் என்பதற்கு ஓர் மாற்று கருத்து கூடாது என்பதேயாகும்.

மேலும், முன்னதாக ஸார்ஸ் கோவிட்1 தாக்கத்தின் போது மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி மற்றும் இப்போது கோவிட்-19 பேண்டமிக் ஆராய்ச்சி இரண்டின் மூலமும் இக்கிருமிகள் காற்று வழி பரவவும் வாய்ப்புள்ளது என்பது தெரிய வருகிறது. முக்கியமாக அவ்விஞ்ஞானிகள் ஒரு சீன உணவருந்தகத்தின் நேர்காணலை பல முறைகள் ஆராய்ந்து பார்த்த போதும் அங்கு யாரும் யாரையும் நேராகவோ அல்லது புத்தகம், நீர் பாட்டில்கள் வழியோ தொடவுமில்லை என்பதும் உறுதியானது. ஆனால் நோய் பரவியிருக்கின்றது என்பது மட்டும் ஊர்ஜிதமானது.

அதே போல் முன்னதான RSV கிருமிகள், ஃப்ளூ  போன்ற தாக்கங்கள் பற்றி ஆராய்ந்த போதும் அவ்வித நோயாளிகள் உள்ள சிறு அறைகளில் காற்று வழி தொற்று இருந்ததாகவும் இதே விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். அதே அளவுகோலைக் கொண்டு பார்க்கும்போது கோவிட்-10 கிருமிகளும் அவ்வாறே பரவும் என்ற சாத்தியக் கூறு மேலோங்கி நிற்பதால், எல்லா முன்னெச்செரிக்கைகளும் எடுக்கப் பட வேண்டும் என்பது அவசியம் என்றும் அழுத்தமாக அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

இந்த காற்று வழி பரவுதல் பற்றிய சர்ச்சை சிறிது ஊதிப் பெரிதாக்கப் பட்டாலும், அளவு குறைந்த அறைகளில் நோயாளிகளுடன் வாழும் மற்றவரும் காற்று வழியாக தாக்கப் படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும் என்று ஓய்வு பெற்ற வேலூர் கிரிஸ்டியன் மெடிகல் காலேஜ் பேராசிரியர் திரு.டீ.ஜேகப் ஜான் கூறுகிறார். அப்படியான சூழலில், எப்போதும் மாஸ்க் அணிந்து வாழப் பழகிக் கொள்வது உயிரைக் காப்பாற்றும் என்றும் கூறினார்.

4. சரி, வருங்காலத்தின் பாதைதான் என்ன?

மேலும் அழுத்தமான அதிகாரப் பூர்வமான ஆதாரங்களுக்கு காத்திருக்கும் நிலையில் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஷேஷன் தன்னால் முடிந்த வரையில் எல்லா பாதைகள் வழியாகவும் இவ்வுயிர்க் கொல்லி நோயைத் தடுத்து மக்களை காக்க அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றது. நல்ல காற்றோட்டமான சூழலை மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் 
ஏற்படுத்துவது, பொது இடங்களில் அதிக கும்பல் சேராமல் கண்காணிப்பது,
கட்டடங்களில் வீரியமிக்க வெளியேற்ற குழாய்கள், மிகச் சிறந்த காற்று
சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் கிருமி நாசினி அல்ட்ரா வயலெட் விளக்குகள் பொருத்துதல் போன்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஷேஷனின் பரிந்துரையை சிரமேற்கொண்டு ஒருங்கிணைந்து செயல் படுகின்றன.

அரசாங்கம் எவ்வளவு நல்லது செய்ய முற்பட்டாலும், நண்பர்களே தனி மனிதரான நமக்கும் ஓர் பெரும் பொறுப்புண்டு. அது அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல் படுவது. அதை நாம் யாவரும் பிசிறில்லாமல் செய்கிறோமா என்பதுதான் கேள்வி.

மாலை 4 மணியானால் போதும். எங்கள் வீதியிலிருக்கும் அத்தனை
ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் மாஸ்க், தற்காப்பு இடைவெளி (social
distancing) எதுவுமே பாராட்டாமல் கூட்டம் கூட்டமாக நின்று பேசுவதும்,
போவதும் வருவதும் காண்பதற்கே மிகவும் வருத்தமாக ஒரு புறம்
இருக்கின்றது.  இன்னொரு புறம், அவர்கள் அருகே சென்று கோபம் தீர வசவு
பாட வேண்டும் போலும் தோன்றுகின்றது.  இவர்கள் மூளையில்லாமல் எப்படி வேண்டுமானாலும் வாழட்டும். ஆயின், அதே வீதியில் வாழும் மற்ற குடும்பங்களை பற்றி ஒரு சிறு கவலையும் இன்றி சிரித்து பேசிக் கொண்டும் வம்பளந்து கொண்டும் இருப்பதுதான் எரிச்சலூட்டுகின்றது. இவர்கள் தங்கள் செயலால் மற்றவர் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகும் நிலையை வரவழைத்து விடுவார்கள் போலிருக்கின்றது. வயது முதிர்ந்தவர் ஒருவர் கூட வெளியே வர முடியாத சூழல். போதாதற்கு வீதியிலேயே காரி உமிழ்வது வேறு.

இந்த கோவிட்டின் கோரத் தாண்டவத்தின் நடுவிலும் மக்கள் திருந்தவில்லை என்றால் நம் பிள்ளைகளின் எதிர் காலத்தை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது.

இதுவும் கடந்து போகும்; இதுவும் கடந்து போகும்என்று எத்தனை
நாட்கள் பொறுமையாக நாம் மட்டும் வாழ்வது?

அரசாணையை மதித்து மனிதர்கள் வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ளும் வரை ஒன்றின் பின் ஒன்றாக தடைக் கற்கள் வந்தபடிதான்
இருக்கும். அதற்கு மக்களின் மூடச் செயல்களேயன்றி வேறு எதுவும் பொறுப்பல்ல.

43 கருத்துகள்:

  1. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. கொடூரர்களின் எண்ணம் முழுதும் கொரானாவை வாழ வைப்பதாக இருக்கிற்து..

    இங்கு பெருமளவுக்கு ஊரடங்கைத் தளர்த்தி மக்களுக்கு மீண்டும் வசதி வாய்ப்பைத் தந்தாலும் சற்றும் புரிந்துணர்வு இல்லாமல் நடந்து கொள்ளும் மூடர்களை தினம் தினம் காண்கின்றோம்...

    இவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரம்.. இந்தமுறை ஒன்றும் ஆகாது என்கிற நம்பிக்கை... நிறைய மக்கள் இப்படிதான் இருக்கிறார்கள்..

      நீக்கு
  4. அன்பின் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம்.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பிரார்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்கா...  வாங்க..  வணக்கம்...  நன்றி.

      நீக்கு
  6. போற்றத்தக்க வேண்டியவர்களைப் பற்றிய அரிய செய்திகளின் தொகுப்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் அனைவருக்கும்.

    சனிக்கிழமை பாசிடிவ் செய்திகள், ரமா ஶ்ரீநிவாசனின் நெகடிவ் கட்டுரையோடு முடிந்துள்ளது வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  காலை வணக்கம்.   நெகட்டிவா?  அவர் முன் எச்சரிக்கைதானே கொடுத்திருக்கார்?

      நீக்கு
    2. நெல்லை சார், நெகடிவ்வாக முடிக்கவில்லை. ஸ்ரீராம் கூறியது போல் முன் எச்சரிக்கை செய்தேன். மேலும் இப்படியும் மக்கள் இருக்கின்றார்களை என்று நொந்து கொண்டேன்.

      நீக்கு
    3. ரஸ்ரீ - நீங்க சொல்ற பாயிண்ட் புரியுது. ஆனா இந்த கொரோனா சம்பந்தப்பட்ட செய்திகள்லாம் படிச்சு, பார்த்து, மண்டை காயுது. லிஃப்ட்ல போனா அங்க பட்டனைப் ப்ரெஸ் பண்ணினா பத்திக்கும், திரும்ப வீட்டுக்கு வந்து கதவு ஹேண்டிலைத் தொடக்கூடாது, கையை சோப் போட்டு அலம்பணும் என்றெல்லாம் ஏகப்பட்ட பத்தியங்கள் நம்மைப் பைத்தியமாக்குது. ஆனா இதையெல்லாம் செய்தாலும் ஒரு கேரண்டியும் கிடையாது என்றும் சொல்றாங்க.

      நீக்கு
  8. காற்றில் பரவும் என்பது சாதாரண விஷயம்தான். ஜலதோஷத்தை மனதில் கொண்டுவந்தால் இது புரியும். முன்பு எனக்கு நுகரும் சக்கி சாதாரணர்களைவிட மிக அதிகமாக இருந்தது. என்னுடைய பெரிய அறையில் யாராவது ஜலதோஷம் உடையவர்கள் வந்தாலே எனக்குத் தெரிந்துவிடும். எனக்கும் உடனே பிடித்துக்கொள்ளும்.

    அதே கதைதான் இந்த வைரசுக்கும்.

    இதன் விபரீதம் பலருக்கும் புரிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்றாலம் அருகில் கணினி சாஃப்ட்வேர்
      அலுவலகம் நடத்தி வரும், திரு வேம்புவுக்கு மன
      நிறைவாழ்த்துகள்.

      இன்னும் நிறைய மக்கள் பயன் பெறட்டும்.

      ரஷ்யா வாக்சின் கொண்டு வருவது நிஜமாகவே
      சரியாகட்டும்.

      சத்யேந்திர பால் போன்ற அருமையான
      மனிதர் இத்தனை இளம் வயதில்
      இவ்வளவு சேவை செய்யமுடியுமானால்

      எல்லோரும் சேர்ந்து குழந்தைகளுக்கு உதவினால்
      எவ்வளவு நன்றாக இருக்கும்.
      தப்ளிக் அமைப்பைச் சார்ந்தவர்கள் எடுத்திருக்கும் நல்ல நடவடிக்கைக்கு
      வாழ்த்தும் நன்றியும் சொல்வோம்.

      நீக்கு
    2. தொற்று இருக்கும் வார்டுகளைச் சுத்தம் செய்யும் யந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள்
      வாழ்க. அவ்வளவுக்கு அவ்வளவு நோய் பரவுவது குறையும்.

      ரமா ஸ்ரீ கட்டுரை பிறகு படிக்கிறேன்.
      இதையே கேட்டு கேட்டு அலுப்பே மிஞ்சுகிறது.
      பொழுது விடிந்து பொழுது போனால் தொலைக்காட்சிகள் இதையே

      அலறிக் கொண்டிருக்கின்றன.
      பயம் மனதில் பிரவேசித்துவிட்டால்
      உடல் இம்யூனிட்டி குறைய வாய்ப்பு உண்டு.
      நாங்கள் பிபிசிக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். உலக செய்திகளையும் பார்க்கலாம்
      அல்லாவா.
      இங்கே இருந்து அனுப்பின ஸ்பேஸ் ராக்கெட்
      பற்றிய விவரங்கள் கூட இவர்கள் சொல்வதில்லை.
      அனைவரும் நலமாக இருப்போம்.

      நீக்கு
    3. நன்றி வல்லிம்மா...    பாஸிட்டிவ் மனிதர்கள் வாழ்க...    

      நீக்கு
  9. காற்றில் பரவும் என்ற செய்தி ஐந்து மாதங்கள் முன்பே வாட்சாப்பில் வந்தது வதந்தி என்றும் சொன்னார்கள். இப்போது அதுவும் உண்மையாகி விட்டது.

    எப்படியாயினும் இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதும் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது.

    சிறப்பான கட்டுரை வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. நல்ல மனதுடைய இவர்களால் நம் நாட்டுக்குப் பெருமையும், நம் மனதுக்கு உற்சாகமும், சேர்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றிகள்.

    ரஷ்யா கண்டு பிடித்திருக்கும் மருந்து விரைவில் பயனுள்ளதாக வந்து, இந்த நோயின் பிடியிலிருந்து அனைவரும் விடுதலை பெற நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை மிக நன்றாக உள்ளது. பல பயனுள்ள விஷயங்களைப் பற்றி அலசியுள்ளார். இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் வரை, அனைவரும் முன் எச்சரிக்கையுடன் இருந்து கொண்டு இந்த நோயை பரப்பாமல், தங்களையும் காத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த சக்தியை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் அனைவரும் பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மிக முக்கிய கருத்தானது புரிய வேண்டிய வர்கத்தை சென்றடைய வேண்டும்.

      நீக்கு
  11. ஆடி மாத காற்று - கட்டுரை - ம்ஹீம் என்ன சொல்வது...?

    பதிலளிநீக்கு
  12. Zoho நிறுவனர் திரு.வேம்பு ஸ்ரீதர் பற்றி முகநூலில் படித்தேன். வேகமாக முன்னேறி வரும் ஒரு நிறுவனமாக zoho வளர்ந்து வருகிறது.  தற்சமயம் நம் நாட்டிற்கு ஐ.டி. துறையில் இப்படிப்பட்டப்ராடக்ட் இண்டஸ்ட்ரிகள்தான் தேவை. 
    தப்லீக் ஜமாத் அமைப்பினரின் சேவை உணர்வை  பாராட்டலாம்.யாருப்பா அது அங்க என்னவோ சொல்றீங்க?.. என்னது../ குழந்தை... தொட்டில்...? சரியா புரியல.. பழமொழியெல்லாம் மின் நிலாவுக்கு அனுப்புங்க.
    சுந்தரேசனையும், சத்தியேந்திரபாலையும் வணங்குகிறேன். 
    வேக்சினுக்காக காத்திருக்கிறோம். வருக!வருக! 

    பதிலளிநீக்கு
  13. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நம்மால் கோவிட் பற்றி பேசாமல் இருக்க முடியாது ரமா. 
    வெளி நாட்டில் பாதிப்பு, வெளி மாநிலத்தில் பாதிப்பு என்றெல்லாம் படித்த பொழுது அத்தனை பாதிப்பு இல்லை. பக்கத்து  ஊருக்கு  வந்தது, நம் ஊருக்கே வந்தது என்னும் பொழுது கொஞ்சம் பயந்தோம். நம் தெருவுக்கே வந்து விட்டது, நமக்கு  தெரிந்தவர் பாதிக்கப்பட்டார் என்றதும் பகீரென்கிறது. நேற்று எங்கள் நண்பர் ஒருவர் கோவிட் பாதிப்பால் இறந்து விட்டார். கனடாவில் இருக்கும் மகன் வந்து கொண்டிருக்கிறான், பாடி மார்ச்சுவரியில் இருக்கிறது, மகன் வந்ததும் அங்கிருந்து நேரே க்ரிமேஷன் என்று கேள்வி பட்டதும் மனம் அதிர்ந்து  போய் விட்டது.  இந்த தொற்று உலகை விட்டுச்செல்ல பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனவேதான் நாம் இன்னும் உஷாராக இருக்க வேண்டுமென்று இதை எழுதினேன்.

      நீக்கு
  14. ஸ்ரீதர் வேம்பு உங்கள் முகநூல் பதிவில் படித்தேன் என்று நினைக்கிறேன்.
    பொதிகை மலை அழகு, எப்போதும் சாரல் காற்று என்று தென்காசி அருமையான இடம்.

    பாஸிடிவ் செய்திகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

    ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் கட்டுரை பயனுள்ள கட்டுரை.

    பதிலளிநீக்கு
  15. ராம ஸ்ரீநிவாசன் அவர்கள் கட்டுரை அவமானமாக இருக்க அறிவுறுத்துகிறது.

    மீண்டும் இங்கு பிளஸ் டூ வகுப்புகளுக்கு தொடங்கப்பட்டிருந்த பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன . சிலர் மீண்டும் பீதியில். பலரும் தாக்கத்தை உணராமல் என்ன சொல்வது ?/

    பதிலளிநீக்கு
  16. மன்னிக்கவும் அவதானமாக இருக்க.

    பதிலளிநீக்கு
  17. காலம்பர வரமுடியலை. (நல்லவேளையாக) யாரும் எங்கேனு தேடலை. :)))) எல்லோருக்கும் அலுத்துப் போயிருக்கும், இதே வேலையாப் போச்சுனு! எல்லாம் கொரோனா காலம் செய்யும் வேலைதான்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... நேற்றுத்தான் கடவுள் என்கிட்ட சொல்லிட்டிருந்தார். ஒரு மண்டலம், பக்தை கீசா மேடம் கொரோனாவுக்காக ப்ரார்த்தனைகள் எழுதினாங்கன்னா, அதுக்கு மறுநாள்லேர்ந்து கொரோனாவை போக்கடித்துவிடுவேன் என்றார். 47ம் நாளான இன்று ப்ரார்த்திக்க மறந்துபோயிட்டீங்களே... அப்போ நாளைலேர்ந்து தொடர்ந்து இன்னொரு மண்டலம்தான் முயற்சி செய்யணும் நீங்க.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கே சொல்லலைனா பிரார்த்தனை பண்ணிக்கலைனு அர்த்தமா என்ன? தினம் தினம் இது தான் பிரார்த்தனையே!

      நீக்கு
  18. செய்தி 2ம் 3ம் தவிர்த்து மற்றவை ஏற்கெனவே படித்தது. உலக சுகாதார நிறுவனமே காற்றில் கொரோனா பரவும் என அறிவிப்புச் செய்துவிட்டது. முன்னரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்றாலும் ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரை தேவையானது தான்.

    பதிலளிநீக்கு
  19. தென்காசி ஊரே சீதோஷ்ணம் அருமையாக இருக்கும். இரண்டு வருஷம் முன்னர் போனப்போ நெரிசல் அதிகரித்து விட்டது. நகரமயமாக்குதலில் பழைய அழகு அழிந்து போக ஆரம்பித்து விட்டது.

    பதிலளிநீக்கு
  20. மலைச்சாரலில் ஒரு ஐடி கம்பெனி. :) நல்ல விஷயம்.

    மற்ற செய்திகளும் சிறப்பு.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  21. இஃகி,இஃகி,இஃகி, நேற்று நான் வராததால் போணியே ஆகலை போலிருக்கே! இரட்டையர்களும் எப்போவோ வராங்க..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!