முதலில் ஒரு நேயர் விருப்பப் பாடல். பானு அக்கா சிட்சோர் படத்திலிருந்து ஏதாவது ஒரு பாடல் பகிர விருப்பம் சொல்லி இருந்தார்கள்.
முதலில் எல்லாம் அவ்வப்போது ஹிந்திப் பாடல்களும், தெலுங்கு மற்றும் கன்னடப்பாடல்களும் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறேன். அது விவேக்கிடம் நகைச்சுவை நடிகர் சுப்பிரமணி (செல் முருகனோ) சொல்வது போல "போதிய வரவேற்பைப் பெறவில்லை!"
எனவே தவிர்த்தே வந்திருந்தேன். இப்போது பானு அக்கா விருப்பத்துக்காக இந்தப் பாடல்.
1976 இல் வெளியான சிட்சோர் பெரிய வெற்றி பெற்ற படம். ரவீந்திர ஜெயின் இசையில் கே ஜே யேசுதாஸ் குரலில் பாடல்கள் இப்போதும் வெகு பிரபலம். யேசுதாஸ் இந்தப் படத்துக்காக தேசிய விருது வாங்கினார். பாடல்களை இசை அமைப்பாளர் ரவீந்திர ஜெயின் அவர்களே எழுதி இருக்கிறார். இவர் கண்பார்வை இல்லாதவர் என்று நினைவு. இவர் இசை அமைத்த படங்களின் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.
இன்றைய நேயர் விருப்பப் பாடல் எல்லோருமே கேட்டிருக்கக் கூடிய பாடல்தான். யேசுதாஸ் குரலில்...
================================================================================
இப்போது என் தெரிவு....
ஆர் சுந்தரராஜன் எழுதி இயக்கிய குங்குமச்சிமிழ் திரைப்படம் 1985 இல் வெளிவந்தது. வாலியின் பாடல்களுக்கு இசை இளையராஜா. ஒரே ஒரு பாடல் மட்டும் கங்கை அமரன்.
மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர் நடித்தது.
இன்று பகிரப்போகும் பாடல் சந்தேகமில்லாமல் வாலி எழுதிய பாடல். நிலவு தூங்குமா என்றெல்லாம் அப்போது கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய மிக இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. சரணங்களில் அவர் குரல் அனாயசமாக எட்டும் துயரங்களும், குழைவும் (வாலிபம்... தென்றலாய்...) ரசிக்க வைக்கும்.
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணே வா இங்கே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நல்ல குறள்.
நீக்குநலம் வாழ்க.
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குமிகவும் இனிமையான பாடல்...அடிக்கடி கேட்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று...
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜூ ஸார். (இன்று இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன)
நீக்குஹிந்திப் பாடலை இன்னும் கேட்க வில்லை.. பொழுது விடிந்ததும் தான்..
நீக்குஆனால் குங்குமச் சிமிழின் பாடல்
தானாகவே மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது....
அதிலும் அந்த மௌத் ஆர்கன் தான்
உயிர் வரையிலும் ஊடுருவுவது!...
ஆமாம்.... அந்த ஒலி நின்ற உடன் தொடங்கும் எஸ் பி பியின் குரல்...
நீக்குஉள்ளத்தால் உள்ளலும் தீது தான்...
பதிலளிநீக்குஆனால் இப்படி உள்ளத்தை
உள்ளத்தால் களவாடுதல்!?...
அதற்கு அந்த நான்கு கண்களுமே சாட்சி!..
ஹா... ஹா.. ஹா... ஸூப்பர்... 'இணைத்து' விட்டீர்கள்!
நீக்குவாழ்விலும் தாழ்விலும்
பதிலளிநீக்குவிலகிடாத நேச்ம்
வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்!...
அட..டா!..
வயது 24/25 ஆகவே
இருந்திருக்கக் கூடாதா!?...
ஏன், இதற்கு வயதென்ன தடை? ஐம்பதிலும் ஆசை வரும்... ஆசையுடன் பாசம் வரும்....
நீக்குசரியாக நினைவில் வராத விக்ரமாதித்யன் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது 'மனக்கதவம் திறந்து என்று தந்தோங்கும்... என்று நினைவு. மனதால் என்றும் இளையவன் நான் என்று வரும் என்றும் நினைவு!
விக்ரமாதித்தனின் கவிதையா!...
நீக்குபடித்ததில்லை...
மனக் கதவம் திறந்து - என்றதுமே
மனம் வேதாரண்யத்திற்குப் போய்விட்டது..
மனக்கதவம் திறந்த பரம் பொருளே..
திருக்கதவம் திறக்க வரம் அருளே!..
me always kutti kuzanthai!
நீக்குகவிஞர் விக்ரமாதித்யன்
நீக்கு//ஐம்பதிலும் ஆசை வரும்... ஆசையுடன் பாசம் வரும்....// - இப்படி ஆசை வந்துதானே பாதி ஸ்க்ரீன் சைசுக்கு வந்தும் அம்பிகா, ஶ்ரீதேவி இவங்களோட ஆடிப்பாடி ஒருத்தர் கடுப்பேத்தினார்
நீக்குஜீவி ஸார்... அந்தக் அந்தக் அக்கவிதை இருக்குரியதா உங்களிடம்? நான் எதைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா?
நீக்குநெல்லை... பாட்டைச் சொன்னா பாட்டி ரசிக்கணும்... காட்சியை ஏன் நினைவு'படுத்தி'க் கொள்கிறீர்கள்? ஆனாலும் இந்தக் காட்சியில் அவ்வளவு மோசமாக இருக்க மாட்டார் எங்க சிவாஜி!
நீக்குஅன்பு ஸ்ரீராம், அன்பு துரை மற்றும் வரப்போகும் அனைவருக்கும் இனிய ஆடி வெள்ளி, ஆடிப்பூர வாழ்த்துகள். அகிலம் எங்கும் பிரகாசிக்கும் தெய்வ அருள்
பதிலளிநீக்குநம் எதிர்காலத்தைக் காக்கும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம், பிரார்த்தனைகள்.
நீக்குவாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
பதிலளிநீக்குவாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும் //இதுதான் உண்மை.
அவ்விதமான அன்பு என்றும் நிலைக்கும்.
யார் வந்து சொன்னாலும் விலகாது.
இளமையில் ஒரு காதல்
அது மிகப் பெரிய புரிதலாக முதுமையிலும்
தொடரும்.
அதுதான் பாடி இருக்கிறார்.
//இது ஒரு தொடர்கதை// என்று.
மிக ரசிக்கும் பாடலைக் கொடுத்ததற்கு மிக நன்றி ஸ்ரீராம்.
ரசித்ததற்கு நன்றி ம்மா.
நீக்குநிலவுப் பாடலாக இருக்கும் காதல் ,நிலவைப் போலத் தேயாது.
பதிலளிநீக்குஅதற்கு வயது இல்லை. இரு ஆத்மாக்களின்
இணைப்பு என்றும் நீடிக்கும்.
நிலவு தேய்ந்தாலும் வளரும்! ஊடலும் கூடலும் போல!
நீக்குசிட்சோர் படப் பாடல்கள் எல்லாமே
பதிலளிநீக்குஉயர் ரகம்.
தொடாத காதலின் அழகு.
அமோல் பலேகர் , சரினா வஹாப் ஜோடி
மிக சிறப்பு.
து ஜோ மேரி சுர் மீ.// அட்டகாசம்.
இந்தப் படம் வந்த புதிதில் பேப்பர் போடும் பையன் கூட
கோரி தேரி காவ்'' பாடலை முணுமுணுப்பான்.:)
நல்ல சாய்ஸுக்கு பானுவுக்கு நன்றி.
ஆமாம் அம்மா... இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமையாக இருக்கும். ஹேம்லதாவுடன் பாடுவார். இதே ரவீந்திர ஜெயின் இசையில் ஹேம்லதா பாடியிருக்கும் அகியோங்கி ஜரோகோன் சே பாடல் கேட்டிருக்கிறீர்களோ... மகா இனிமை...
நீக்குhttps://www.youtube.com/watch?v=_NIFoqfSO6E அம்மா... நான் சொன்ன பாடலுக்கு இங்கு லிங்க் தருகிறேன். அவசியம் கேட்டுக் கருத்துக் சொல்லுங்கள். இது முன்னரே கேட்டிருக்கிறீர்களா என்றும் சொல்லுங்கள். ஆறே முக்கால் நிமிஷம் ஓடினாலும் மகா இனிமையான பாடல்.
நீக்குஏகாந்தன் ஸாருக்குக் கொடுத்திருக்கும் பதிலில் இணைத்திருக்கும் பாடலையும் கேட்டுப் பாருங்கள்.
ஓ.யெஸ் ஸ்ரீராம்.
நீக்குஎத்தனை இனிமையான பாடல்.
அதை இழுத்துப் பாடும் சுகமே தனி.
ரஞ்சிதா, சச்சின் படம் இல்லையா. அந்தப் பொண்ணுக்கு கூட
ஏதோ உடம்பு சரியில்லாமல் போகும்.
ஹேம்லதா குரல் அமிர்தம். நன்றி ஸ்ரீராம்.
ஆஹா... கேட்டு ரசித்திருக்கிறீர்களா? நான் படம் பார்க்கவில்லை அம்மா.. இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். இன்னொரு பாடலையும் (பஹேலி) கேட்டு சொல்லுங்கள்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பூமிதேவியான பொறுமையின் சிகரம் ஆண்டாளின் திரு நக்ஷத்திரத்தன்று அவள் நம் அனைவரையும் காத்து அருள வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இந்த பூமியில் ஏற்பட்டிருக்கும் கொடிய அசுரனை அழித்து ஒழிக்கப் பிரார்த்திப்போம். பூமி தேவி தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்வதோடு நம்மையும் காத்து அருள வேண்டும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம்!
நீக்குசித்சோர் அருமையான படம். அருமையான பாடல்கள். அருமையான நடிப்பு. அமோல் பாலேகர் போன்ற நாடக நடிகர்களின் நடிப்புத் திறனைச் சில வருடங்கள் தொடர்ந்து ஹிந்தி திரைப்பட வரலாற்றில் பார்க்க நேர்ந்தது. அநேகமாக அமோல் பாலேகரின் படங்கள் எல்லாமும் பார்த்திருப்பேன். அவர் தடுமாற ஆரம்பிக்கும் வரை!பாடல்களும் இனிமை.
பதிலளிநீக்குகுங்குமச்சிமிழ்னு படம் வந்ததே தெரியாது. மோகன் நடிச்சிருக்கார் போல. பாடல்கள் எதுவும் கேட்டதில்லை. இப்போது தான் கேட்கிறேன்.
பதிலளிநீக்குஇந்தப்பாடல் தெரியாதா ? ஒருவேளை அப்போது அம்பேரிக்காவில் இருந்தீங்களோ...
நீக்குகில்லர்ஜி... நீங்க சொல்லும் படம் பொதிகைல போட்டிருக்கணும். அப்போ கீசா மேடம் ஃப்ரீயா இருக்கணும். முழுப் படமும் பார்க்கும் நேரத்தில் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது (கணிணி ரிப்பேர்காரன் வந்தான், கரன்ட் போயிந்தி, காயவச்ச வடாமை பார்த்துக்கணும், உலக்கை நடிக்கக்கூடாது, ஜிவாஜி ஓவர் ஆக்டிங் செய்து படுத்தக்கூடாது-இல்லைனா கடுப்புல டிவியை ஆஃப் பண்ணிடுவாங்க, என்பது போன்று). இவ்வளவு கண்டிஷனும் ஒர்க் ஆச்சுன்னா அப்போதான் அவங்களுக்கு படமும் பாடலும் தெரியும். ஆனா ஒரு தடவை பார்த்தாலோ கேட்டாலோ பத்து வருடங்கள் கரித்துக்கூட விமர்சனம் எழுதும் அளவு ஞாபக சக்தி உண்டு
நீக்குஹிஹிஹி, பாடலை இப்போவும் போட்டுக் கேட்டேன். கேட்டதாய் நினைவில் இல்லை. படமும் கேள்விப்படலை! :))))))
நீக்குஹா.. ஹா... ஹா... கீதா அக்கா... தெரியாது என்று சொன்னாலும் சொன்னீர்கள்...
நீக்குசொல்ல வேண்டாம் என இருந்தேன். அப்போது நான்/நாங்கள் பிரச்னைகளின் உச்சகட்டத்தில் இருந்தோம். 1980 இல் இருந்து ஆரம்பித்து 88 வரை நான் அனுபவிக்காத கஷ்டங்கள் இல்லை என்னும்படியான நிலைமை. அப்போதைய கால கட்டத்தில் மகிழ்ச்சி என்பது தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதாய் இருந்த நாட்கள். அத்தகைய நாட்கள் மட்டுமே நினைவில் தங்கி இருக்கின்றன. மற்றபடித் திரைப்படங்களை எல்லாம் தேடிப்பிடித்துப் பார்த்தது என்பது எப்போதுமே இல்லை. மோகன் நடித்த ஓரிரு படங்களும் தொலைக்காட்சி தயவில் பார்த்தது தான். உண்மையிலேயே பல படங்கள் குறித்துத் தகவல்கள் தெரியாது தான்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் வாங்க பானு அக்கா.
நீக்குசிட்சோர் படம் தமிழிலும் எடுத்தார்கள். அந்தப் படத்தின் பெயர் என்ன - யாருக்காவது தெரியுமா?
பதிலளிநீக்குகொலை பண்ணி இருப்பாங்களே! அதான் பெயர் கூடத்தெரியாமல் மறைந்துவிட்டது! என்னோட இளைய நண்பி திரைப்பட மன்னியைக் கேட்டால் தெரியும். சொல்லிடுவாங்க உடனே! ஆனால் அவங்க இப்போல்லாம் இணையத்துக்கே அதிகம் வரதில்லை. :(
நீக்குஉள்ளம் கவர் கள்வன்! பாண்டியராஜன்-ரேகா... ! யேசுதாஸ் குரலில் பாடல்கள் சுமார். இசை இளையராஜா என்று நினைவு! சிட்சோர் அளவு இருக்காது!
நீக்குஉள்ளம் கவர் கள்வன்? ஓஹோ!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வந்தனம், வணக்கம், சுஸ்வாகதம்!
நீக்குஇன்று என்னுடைய விருப்பமாக சித்சோர் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. மற்றொரு பாடலும் இனிமை. குங்குமச்சிமிழ் படம் சமீபத்தில்கூட தொலைகாட்சியில் போட்டார்கள்.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா...
நீக்குசிட்சோர் பாடலை கே.ஜே.யேசுதாஸ் ஆர்க்கெஸ்ட்டாவில் அவசியம் பாடுவார்.
பதிலளிநீக்குகுங்குமச்சிமிழ் பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் நான் அப்போது அம்பேரிக்கா போகவில்லை என்று நினைவு...
ஆமாம்... யேசுதாஸின் பல பிரபல ஹிந்திப் பாடல்களில் இது முதன்மையானது.
நீக்குஇரண்டுமே இனிமையான பாடல்கள். சிட் சோர் படத்தின் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கும். இப்போது தான் வல்லிம்மா தளத்தில் ஆங்கிலப் பாடல்கள் கேட்டேன். இங்கே ஹிந்தியும் தமிழும்! :)
பதிலளிநீக்குதொடரட்டும் பதிவுகள்.
நன்றி வெங்கட். படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும். இது கொஞ்சம் ஜனரஞ்சகமாக இருக்குமே என்று இதைப் பகிர்ந்தேன்.
நீக்குநிலவு தூங்குமா - இதுல என்ன சந்தேகம்? அந்தி சாயுமா, சூரியன் எழுவானா, சூரியன் மறையுமா என்பதிலெல்லாம் வராத சந்தேகம் இதில் எப்படி வந்தது?
பதிலளிநீக்குகுங்குமச்சிமிழ் படப் பாடல் மிக அருமையா இருக்கும். இளையராஜாவின் இன்னொரு வெற்றிப் பாடல்.
காதல் என்று ஒன்று இல்லாவிட்டால் கவிஞர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். பாடலை எல்லாம் கவிஞர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டால் அனர்த்தம்தான் மிஞ்சும். அந்த சீனுக்குப் பாட்டெழுதினாங்க. அவ்ளோதான்.
நெல்லை...இங்க சாஞ்சா, தூங்கினா எல்லாம் உலகின் மறுபக்கம் போய் ட்யூட்டி பார்ப்பாங்க இல்லையா!!! ஹிஹிஹிஹி...
நீக்குகீதா
காதல் என்று ஒன்று இல்லாவிட்டால் கவிஞர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். பாடலை எல்லாம் கவிஞர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டால் அனர்த்தம்தான் மிஞ்சும். அந்த சீனுக்குப் பாட்டெழுதினாங்க. அவ்ளோதான்.//
நீக்குகரீக்டோ கரீக்டு!
கீதா
காதல்ன்னா என்ன நெல்லை?
நீக்குகாதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே - என்பது திருமாலை ப்ரபந்தம்
நீக்குகவிஞர்கள் எழுதுவதில் பெரும்பாலும் கொச்சையான அர்த்தம்தான் இருக்கும். எது நிலைத்து நிற்குமோ அதுதான் “காதல்” என்ற வார்த்தையின் உண்மைப் பொருள்.
எது நிலைத்து நிற்குமோ அது தான் காதல் -- நல்ல பதில்.
நீக்குஸ்ரீராம் என்ன சொல்லப்போறாரோ? காத்திருக்கலாமா?
காதல்ன்னா என்ன?..
நீக்குஒவ்வொருத்தரும் வெவ்வேறு பதில் சொல்லக்கூடிய ஒரே கேள்வி இதுவாகத் தான் இருக்கும் போலவும் இருக்கு.
அதையும் தான் பாக்கலாமே?
ஜீவி சார்.. அதுக்கு நீங்க எந்த “காதல்” பற்றிக் கேட்கறீங்க என தெளிவாச் சொல்லுங்க. மோ மு நா ஆ அ நா என்பது திரைப்படத்தில் பெரும்பாலும் வரும் “காதல்” என்பதற்கு அர்த்தம்
நீக்கு"காதல்" என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே தோன்றுவதே என்னும் நினைப்பே பலரிடமும் இருக்கிறது. உண்மையில் சம்பந்தப் பெருமான், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" இறைவனைத் துதித்தார். ஆண்டாளும் தன் காதலை ரங்கமன்னாரிடம் பற்பல பாடல்கள் மூலம் காட்டினாள். "கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய் தான் தித்திருக்குமோ?" என்றெல்லாம் கேட்டாள். அவள் காலத்தின் காதலும், நாற்றம் என்னும் சொல்லும் இன்று சீழ் பிடித்து அழுகிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் காதல் என்பதற்குப் பொருளே இல்லை.
நீக்குநெல்லை சொன்ன "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்" காதல் தான் இப்போதெல்லாம் காதல் எனப்படுகிறது. அதன் உன்னதமே இப்போது இல்லாமல் போய்விட்டது. :(
நீக்குஇப்படி சொன்னா எப்படி கீதாம்மா? நறுக்குத் தெறித்தாற் போல ஒரே வார்த்தைலே சொல்லிடலாமிலே?
நீக்குகாதல்ன்னா என்ன? நீங்க அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னன்னு நினைக்கிறீங்க?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகாதல்ன்னா என்ன?
நீக்குஎஸ். அவ்வளவு சுலபமா பதில் சொல்லி விட முடியாத
கேள்வி தான்.
ஒரு கதையின் மூலமாக இதே பகுதியில் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.
நெல்லைக்கும், கீதாம்மாவுக்கும் மிக்க நன்றி.
காதலில் காமம் கலந்திருக்கலாம். ஆனால் காமத்தில் காதல் இருக்காது. காதல் எனும் உயர்ந்த நிலையை மிகச்சில பக்திமான்கள் அடைந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலில் பெரும்பாலும் பொஸசிவ்னெஸ் வந்து விடுகிறது. கிடைக்கும் வரை இருக்கும் ஆர்வம் கிடைத்த உடன் மங்கிவிடுகிறது. இதெல்லாம் இல்லாமல் நிலைத்தால் காதல்!
நீக்குகாமம், காதல் என்று தனித் தனியா பேர் கொடுத்து பிரிச்சுப் பார்க்கறது-- எல்லாம் பிற்காலத்துப் பழக்கம்.
நீக்குஸ்ரீராம் இரு பாடல்களுமே ரொம்பப் பிடித்த பாடல்கள். எங்கள் வீட்டில் அடிக்கடி பேசப்பட்ட/பேசப்படும் பாடல்கள்.
பதிலளிநீக்குவழக்கம் போல தமிழ்ப்படப் பாடல் வரிகள் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை பாடல் கேட்டதும் ஓ இந்தப் பாடலா என்று!!!
இந்தப் படம் பற்றிக் கேட்டது கூட இல்லை.
கீதா
நன்றி கீதா...
நீக்குநில்வு தூங்கும் நேரம் பாட்டு ஆஹா மோஹன ராகம்! வித்தியாசமாய்!!
பதிலளிநீக்குகீதா
மோகனமா... அதுதான் இழுக்கிறது! மோகனுக்கு மோகனம்! கண்ணன் ஒரு கைக்குழந்தை... நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே...
நீக்குதாலாட்டும் இனிமையான பாடல்...
பதிலளிநீக்குஇந்தப் பாடலுக்கு இருபது வருடங்களுக்கு முன் வாலி அவர்கள் எழுதிய பாடல் :-
"நல்ல நிலவு தூங்கும் நேரம் - அவள் நினைவு தூங்கவில்லை"
வாங்க DD... ஆக, வாலி நிலவு தூங்கும் நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்!
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நன்றி நண்பரே...
நீக்குஇனிமையான பாடல். பலமுறை கேட்டிருந்தாலும் இதைப் படித்ததும் கேட்க தோனுது. கேட்டுட்டு வரேன். வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குநன்றி அபிநயா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க அக்கா... வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள். கேட்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஹிந்திப்பாடல்கள் அதிகம் கேட்டதில்லை என்றாலும் இப்பாடல் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்.
பதிலளிநீக்குகுங்குமச்சிமிழ் திரைப்படம் பார்த்த நினைவு இருக்கிறது. இப்பாடல் மிகவும் இனிமையான பாடல். நிறைய கேட்டிருக்கிறேன். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு ரசித்தேன்.
துளசிதரன்
என்னடா இந்த எங்கள் பிளாக்குக்கு வந்த சோதனை. மேலதானே இரு பாடல்களையும் நிறையக் கேட்பேன், ஒன்று “ஆஹா மோகன ராகம்” என்று கேள்விப்படாத ராகம்லாம் எழுதிட்டு, கீழே ஹிந்திப் பாடல் கேட்டதுல்லைனு சொல்றாங்களே என கன்ஃ்ப்யூஸ் ஆகிட்டேன்
நீக்குஹா... ஹா... ஹா... நெல்லை... கீதா இப்போது துளஸிஜிக்கு குரல் கொடுத்திருக்கிறார்!
நீக்குநன்றி துளஸிஜி.
திருச்சியில் கலையரங்கம் திரையரங்கம் திறந்ததும் அதில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் சித்சோர் என்று நினைக்கிறேன். அங்குதான் ஒரு ஞாயிறு காலை 11:30 காட்சிக்குச் சென்றோம்.அதுவரை நாங்கள் பார்த்த திரையரங்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ப்ரும்மாண்டமாய் வியப்பூட்டியது கலையரங்கம் கும்பல் நிரம்பி வழிந்தது. டிக்கெட் எங்கே வாங்குவது? என்று எல்லோரும் எதுவும் புரியாமல் அலைந்தோம். இந்தப் படத்தின் கதாநாயகி ஜரீனா வஹாப் விஸ்வரூபம் படத்தில் மன நல மருத்துவராக ஒரு காட்சியில் வருவார்.
பதிலளிநீக்குபாருங்கள் ஒரு பாடல் என்னென்ன இனிமையான நினைவுகளைக் கொண்டு வருகிறது என்று!
நீக்குசித்சோர் (மனத்திருடன்) படம் பார்க்கவில்லை. ரவீந்திர ஜெயின் இசைத்த இந்த ஜேசுதாஸ் பாடல் ஸ்லோ பிட்ச்சில் நகரும். இந்தப் பாடல் ஹிந்தியில் ஹிட் ஆனதில் டெல்லியில் வசித்திருந்த மலையாளி நண்பர்கள் ஏகக்குஷியானது நினைவிலிருக்கிறது!
பதிலளிநீக்குஅமோல் பாலேகர் மென்மையான நடிகர். மராட்டிய நாடகவெளியிலிருந்து பாலிவுட்டில் பிரவேசித்து சில அருமையான படங்களைத் தந்தவர். இந்தப் படத்தில் Zarina Wahab சரியான ஜோடி! பிரபல பாலிவுட் இயக்குனர் Basu Chatterjee நன்றாக இயக்கியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=BCS1-tKr3BQ
நீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... நான் படமும் பார்த்தேன். அமுல்பல்கர் பற்றி நீங்கள் சொல்லி இருந்தாலும் உங்களுக்காக ரவீந்திர ஜெயின் பாடல் ஒன்று இங்கே கமெண்ட்டில் தருகிறேன். கேட்டுப்பாருங்கள். முன்னரே கேட்டிருப்பீர்கள். காட்சியையும் ரசிக்கலாம்! பஹேலி படப்பாடல்.
//அமுல்பல்கர்//
நீக்கு* அமோல் பாலேகர்
அன்பு ஸ்ரீராம். கேட்டேன் மா.
நீக்குஇனிமை இனிமை.
இன்று அந்தப் படம் பார்க்கப் போகிறேன்.
கூடவே ஸ்வாமி படம் 'ஷபானா ஆஸ்மி பாடல் நினைவுக்கு வந்தது.
பஹேலி பாடல் மழையில் ஓடச் சொல்கிறது:)
நன்றிம்மா... விருப்பத்தை சமர்த்தாக பூர்த்தி செய்து கேட்டு விட்டீர்கள். ஆனால் நீங்கள் கட்டாயம் பாடலை ரசிப்பீர்கள் என்றுதான் கேட்கச் சொன்னேன்.
நீக்குஇரண்டுமே அருமையான பாடல்கள் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் ஆடிப்பூரம் வாழ்த்துகள்.
நன்றி மாதேவி.
நீக்குபாடல்கள் இரண்டும் இனியவை
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் இரண்டும் அருமை. பாடல்களின் இனிமையை இப்போதுதான் கேட்டு ரசித்தேன். இரண்டு பாடல்களையும் முன்பே கேட்டிருக்கிறேன். ஆனாலும் இப்போதும் புதிதாகவே மனதுக்கு ரம்யமாக இருந்தது. அமைதியான பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
இன்று காலையிலிருந்து நாக சதுர்த்தி (குழந்தைகளுக்காக இருக்கும் விரதம்) வேலைகளில் கொஞ்சம் பிஸி. நாளையும் கருட பஞ்சமி.. உடன் பிறந்தவர்கள் நலமாக இருக்கவேண்டுமென பிரார்த்திக்கும் விரதம். என் உடன் பிறந்த ஒரே அண்ணாவுடன், எ.பி குடும்பத்தின் உடன் பிறவா சகோதரர்கள் அனைவரும் நலமே வாழவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நாளையும் வரத் தாமதமாகும்.நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... மெதுவா வந்தாலும் பரவாயில்லை. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும். நாளை எங்களுக்கு கொழுக்கட்டை உண்டா?
நீக்குஎப்போதும் வருடாவருடம் வீட்டில் கருடபஞ்சமிக்கு மூன்று வகையான கொழுக்கட்டைகள் பின்னையாருக்கும் நாகருக்கும் நிவேதனம் உண்டு. இந்த தடவை ஆன்லைனில் சாமான்கள் வாங்கும் நிர்ப்பந்தத்தில் ஒன்றையாவது செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டுள்ளேன். இறைவன் சித்தம். ஆனால், நாளை இல்லாவிடினும்,எங்கள் வீட்டிற்கு நீங்கள் வரும் சமயம் கண்டிப்பாக விருந்துடன் மூன்று வகை கொழுக்கட்டையும் உண்டு. நன்றி.
நீக்குநன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பழைய படங்கள் சிலவற்றை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு வருகிறது, இதையெல்லாம் எப்படி ரசித்தார்களோ என்று.
பதிலளிநீக்குஏற்கனவே முன்பொரு பதிவில் சொன்னதுபோல், எத்தனையோ பிழைக்கள் சில பாடல்களில், ஏனென்றால் அவை மெட்டுக்கும் துட்டுக்கும் அல்லவா எழுதப்படுகின்றன.