நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
sunday pix லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sunday pix லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
27.9.20
21.6.20
3.5.20
19.4.20
12.4.20
ஞாயிறு :: மழையும் மௌன கோபுரமும் ....
'மழைக்கு முன், மழைக்குப் பின்' என்று திரும்பத் திரும்ப வந்தாலும், நுணுக்கமான வேலைப்பாடுகள் பளிச்!
5.4.20
8.3.20
ஞாயிறு 200308: ஊரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து...
இங்கிருந்து கெங்கேரி ரயில் நிலையம் வரை ரிமோட் driving instructions babu என்பவரிடமிருந்து ....
3.3.19
11.6.17
4.6.17
28.5.17
23.4.17
ஞாயிறு 170423 : தேவலோகத்தில் பல் சக்கரம்!
மேகக்கூட்டத்துக்கும் மேலே ஓங்கி வளர்ந்த கம்பனிகளின் மேல் உருக்கு கயிறு.
16.4.17
9.4.17
2.4.17
26.3.17
5.3.17
26.2.17
19.2.17
ஞாயிறு 170219 :: Ghum இந்தியாவின் உயரமான ரயில்வே ஸ்டேஷன்
Ghum ரயில்வே ஸ்டேஷன். இந்தியாவிலேயே உயரமான இடத்தில் இருக்கும் ஒரே ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமை இதற்கு. உலக அளவில் 20 வது இடம்.
அதோ அந்த நாலுகால் செல்லங்களுக்குப் பின்னால் நிற்பது டென்சிங் நார்கேயின் உறவினராகக் கூட இருக்கலாம்!!
இங்கிருந்து 52 கிலோமீட்டர் சிலிகுரி வரை இந்த ரயில்வே டிராக் செல்கிறது / வருகிறது.
எனக்கும் இந்த உயரமான இடம் ஒரு துயரமான இடமாக - மறக்க முடியாத இடமாக - அமைந்தது. (நான் என்றால் ஸ்ரீராம் இல்லை. இங்கு ஸ்ரீராம் பார்ப்பது பிள்ளையார் வேலை)
அதாவது இங்குதாங்க என் செல் தொலைந்தது. அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கலை. கும் ஹை மைனே செல் கா... என்று கிஷோர் குரலில் பாடி விட்டு (சோகமாகத்தான்) நகர்ந்தோம்! புதிய செல் வாங்கும் அதிருஷ்டம் தேடித் தந்த இடம்!
இணையத்திலிருந்து எடுத்த இதே இடத்தின் படங்களை கீழே இணைக்கிறேன்.
12.2.17
ஞாயிறு 170212 :: படம் இங்கே.. கதை எங்கே?
1. கஞ்சன் ஜங்கா பார்க்கும் ஆசையில், காலையில் 5 மணிக்குத்
தொடங்கிய மழையை எதிர்த்து நிற்க அங்கேயே விற்றுக் கொண்டிருந்த குடை (விலை ரூ. 250/) வாங்கி....
குடை வாங்கிய கதை என்று ஒன்று இருக்கிறது. அதை ஒரு தனிப்பதிவாகப் போட்டு விடுகிறோம். சுவாரஸ்யமான கதை. 250 ரூபாய் மிச்சப்படுத்திய கதை. அடையாளப்படுத்த இந்தப் படத்துடனே அந்தப் பதிவு (முடிந்தவரை) விரைவில் வெளியாகும்!
2. சற்று வெளிச்சம்... ஆபாவாணன் நினைவுக்கு வருகிறார்! அங்கே வெளிச்சமாகத் தெரிவது காரின் முன் விளக்குகள்.
3. இன்னும் வெளிச்சம்... ஆனாலும் மேகம் மறைக்கிறது கஞ்சன் ஜங்காவை...! வெயில் அதன்மேல் படும்போது அதன் உச்சி தெரிய வேண்டும்.
4. கஞ்சன் ஜங்காதான் தெரியவில்லை. கஞ்சத்தனமில்லாமல் நம் நினைவுக்கு இங்கே ஒரு selfie
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)