திங்கள், 8 மார்ச், 2021

"திங்க"க்கிழமை :  பாஸ்தா மற்றும் குடைமிளகாய் கேரட் சட்னி  - Master கவின் 

இன்றைய 'திங்க'க்கிழமை ஒரு ஸ்பெஷல்!  

கோமதி அக்காவின் பேரன் கைவண்ணம்.  அவர் இதை அனுப்பிய முறையில் அப்படியே வெளியிடுகிறேன்.  


படமும் இருக்கிறது.  தேவையான பொருட்கள் லிஸ்ட்டும் இருக்கிறது.  செய்முறையும் இருக்கிறது!  ஏன், கவின் புகைப்படமும் இருக்கிறது!



75 கருத்துகள்:

  1. தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.  நலமே விளையட்டும்.

      நீக்கு
  3. ஆஆவ்  !!! வாழ்த்துக்கள் கவின்..அழகிய கையெழுத்து .படங்களுடன் செய்முறை செம கலக்கல் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன் ஏஞ்சல் , உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  4. கவிகின்ற இருள் கலைக்கும்
    கதிர் வண்ணம் கொண்டு வருக!..
    குவிகின்ற நலம் கொண்டு
    குன்றாத புகழ் கொண்டு வளர்க!..

    பதிலளிநீக்கு
  5. குழந்தைக்குத் திருஷ்டி சுற்றிப் போடுங்கள்...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மேலோங்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா..  வாங்க...  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. தாத்தாவின் கை வண்ணம்
    தழைக்கின்ற எழில் வண்ணம்..
    செழிக்கின்ற தளிர் வண்ணம்
    சிறக்கட்டும் தமிழ் வண்ணம்

    பதிலளிநீக்கு
  8. எதிர்பாராத இனிய அதிர்ச்சி. குழந்தைக்கு இதைப் பார்க்கையில் ஏற்படும் சந்தோஷம்! வாழ்க! வளர்க! மனமார்ந்த ஆசிகள். அழகான கையெழுத்திலே மிக அழகாய் அனைத்து விபரங்களையும் விடாமல் கொடுத்திருப்பதற்கும் வாழ்த்துகள். மிக மிக அழகு. கண்டிப்பாய்ச் சுற்றிப் போடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைக்கு ஏற்படும் சந்தோஷத்தை விட
      பாட்டிக்கு ஏற்படும் சந்தோஷமே சந்தோஷம்!..

      நீக்கு
    2. உண்மை..  உண்மை...  இதைப் பார்த்ததும் கவினின் ரீயாக்ஷன் என்ன என்று கோமதி அக்கா சொல்ல வேண்டும்.

      நீக்கு
    3. ஆமாம்... அன்பின் வேண்டுகோள்...

      நீக்கு
    4. ஆமாம் கீதா, நீங்கள் சொல்வது போல் இனிய அதிர்ச்சிதான்.
      பேரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்
      உங்கள் ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  9. நானெல்லாம் கவினுக்கு ரசிகனாக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவினிடம் சொன்னேன் உன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கவிதை எழுதியவர்கள் , இப்போது உன் சமையல் குறிப்புக்கும் கவிதையில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் என்று.
      உங்கள் கவிதைகளை வாசித்து மகிழ்ந்தான்.
      வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி சொல்ல சொன்னான்.

      நன்றி நன்றி

      நீக்கு
    2. கவின் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான் முகம் மலர்ச்சியாக கண்கள் விரிந்து இருந்தது. எப்போது அனுப்பினீர்கள் என்று வியந்தான்

      எல்லோரும் கவின் ரசிகர்கள் என்று சொன்னதை சொன்னேன்.
      எல்லோருக்கும் தன் வணக்கத்தையும்
      நன்றியையும் சொல்ல சொன்னான்.

      நீக்கு
  10. @ ஸ்ரீராம்..

    ஆஹா...கவி(தை)ன்..

    ***

    கவிதைக்குள்
    கவின் என
    கவினுக்குள்
    கவிதை என..

    தமிழுக்குள் நானும்
    தத்தளிக்கின்றேன்..
    அன்பெனும் கடலில்
    முக்குளிக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
  11. அந்தப் பக்கம் ரோஷ்ணி..
    இந்தப் பக்கம் கவின்!..
    வாருங்கள் செல்வங்களே
    வலையுலகைக் கலக்குவோம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணியின் ஓவியங்களும் இடம் பெற வேண்டும்.

      நீக்கு
    2. அன்புக்கு நன்றி.
      ரோஷ்ணி சிறு வயது முதல் வலைத் தளத்தில் கலக்கி கொண்டு இருக்கிறார்.
      எங்கள் ப்ளாக்கிலும் முன்பு வந்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  12. நானும் வந்துட்டேன்!..

    அது யாருப்பா?...

    ஓ!.. குட்டிக் குஞ்சுலு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! குஞ்சுலு கூட வந்துடுத்தா? அமர்க்களம் தான்! :)))))

      நீக்கு
    2. குட்டிக்குஞ்சுலு வந்து விட்டால் அமர்க்களம்தான்.

      பாட்டி போல் வித விதமாய் சமையல் குறிப்புகள் கொடுத்து அசத்தி விடுவார்.

      நீக்கு
  13. ஒரு குழந்தையின் வரவினால் திங்களே ஒளிர்கிறது.
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    எல்லோரும் என்றும் நலமாயிருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பூர்ணிமை நிலவு.

      நீக்கு
    2. அக்கா, உங்களின் அன்பு வார்த்தைகள் மகிழ்ச்சி தருகிறது.
      உங்களுக்கு காலை வணக்கம்.
      கணினியில் நெட் இணையவில்லை

      அலைபேசியில் பதில் தருகிறேன்.

      நீக்கு
  14. கவின் காசி,
    இது என்ன அற்புதம்!!
    கோமதி மா. குழந்தை பார்த்தானா.
    அந்தத் தமிழ் என்னை அசத்துகிறது.
    இவ்வளவு முறையாக எழுத எங்கே கற்றான்.?

    அழகான கையெழுத்து. செய்முறை.
    நம் எல்லோரின் எண்ணத்திலும் ஆடுகிறான் குழந்தை.
    மிக வளத்துடன் இருக்க வேண்டும்.

    இன்றே கண்திருஷ்டி கழிக்க வேண்டும்.

    செம்மையான எழுத்துக்கு ஆசிகள்.
    உள்ளங்களை நெகிழ வைக்கும் அன்புக் குழந்தை.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பள்ளியில் படித்து வருகிறான்.
      ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி உண்டு.

      இப்போது ஆன்லைனில் வகுப்பு நடக்கிறது.

      மகன் , மருமகள் அதில் பணியாற்றுகிறார்கள்.

      அரிசோனா தமிழ்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்வுடன் தொண்டு செய்கிறார்கள்.

      வேறு வேலைகளில் பணியாற்றுகிறார்கள்.

      வாரத்தில் ஒருநாள் தமிழ் பள்ளிக்கு நேரம் ஒதுக்கி பணியாற்றுகிறார்கள்.
      அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
      உங்கள் அன்பான வார்த்தைகள் மனதை நெகிழ செய்கிறது.

      வாழ்த்துக்களுக்கும் , ஆசிகளுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
    2. 👨‍👩‍👦👪👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

      நீக்கு
  15. இன்னோரு அழகு நம் துரை செல்வராஜுவின் கவிதைகள்.
    மிகவும் ரசிக்கிறேன். அன்பு வாழ்த்துகள் துரை.

    மிக நன்றி ஸ்ரீராம்,
    நன்றி கோமதி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடன் சேர்ந்து நானும் இருவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன் அக்கா
      நன்றி நன்றி.

      நீக்கு
  16. மிக அருமையான செய்முறை. படித்து மனதுக்கு மிகுந்த திருப்தி.

    ஒரு நாளை இனிமைப்படுத்துவது போல நல்ல ஆரம்பம்.

    கவின்... வாழ்க.. வளர்க. அவனை ஊக்குவித்து தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்து, அதில் ஆர்வம் வரவைத்து, செய்முறையை தபிழில் எழுதச் சொல்லி... என ஊக்குவிக்கும் உள்ளங்களுக்குப் பாராட்டுகள்... நல்ல தருணங்களை அரசு சார் மிஸ் செய்துவிட்டாரே என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன் நெல்லை
      நீங்கள் சொன்னது போல் இது தமிழ் பள்ளிக்கு செய்த சமையல் செய்முறை.

      அவர்கள் தான் தமிழில் எழுதி அனுப்பச்
      சொல்லி இருந்தார்கள்.

      ஒவ்வொரு குழந்தைகளும் ஆங்கிலம் கலக்காமல் அவர்களே செய்த சமையலின் செய்முறை குறிப்பு அனுப்ப கேட்டு இருந்தார்கள்.

      இந்த சமையல் செய்து பாராட்டுக்கள் பெற்ற போது சார் இருந்தார்கள்.

      மகன் படங்கள் அனுப்பினான்.

      அப்போது மகிழ்ச்சியாக அவனை பாராட்டி வாழ்த்தி பேசினார்கள்.

      அதைதான் இங்கு அனுப்பினேன்.

      இயற்கையை போற்றி பேசும் போட்டிக்கு தாத்தா விடமும் பாட்டியிடமும் கேட்டு பேசியதைதான் சார் கேட்கவில்லை.

      பரிசும் பெற்று விட்டான் அதில்.

      பேரன்கள், பேத்திக்கு உதவிகள் தேவைபடும் போது அவர்களை இறைவன் அழைத்து கொண்டது
      வேதனை தருகிறது.

      நீக்கு
    2. அதுதான் வேதனை.. ஆனாலும்
      காலத்தின் கையில் அல்லவா எல்லாமும் இருக்கின்றது...

      நீக்கு
  17. Italian Seasoning - இதற்கு இத்தாலியன் சுவையூட்டி என்பது நல்ல பெயராக இருக்குமே. அது மசாலாப் பொடி மாதிரியா இருந்தது?

    செய்முறைக்குப் பின் தன் அனுபவமாக எழுதியிருப்பது ரசிக்க வைத்தது.

    செய்முறையையும், சென்ற பயணத்தில் நீங்கள் எடுத்துச் சென்றிருந்த வெஜிடபிள் நூடுல்ஸையும் நினைத்துப் பார்க்கிறேன் கோமதி அரசு மேடம்.

    ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறையாவது கவினை ஊக்கப்படுத்தி இங்கு செய்முறை பகிர்ந்துகொள்ளணும்.

    இதைப்போலவே திருமுறைகளைக் கற்றுக்கொடுத்து ஓதுவதில் ஆசையை வளர்த்தால் உங்கள் மாமாவின் மனது மிக மிக சந்தோஷப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தாலியன் சுவையூட்டி நல்லா இருக்கிறது. பேரனிடம் சொல்கிறேன்.

      மருமகளிடம் கேட்டேன் வெந்தையகீரை பொடி போல் இருக்கும் என்றாள்.

      உங்கள் விருப்பத்தை கவினிடம் சொல்கிறேன்.

      வெஜிடபிள் நூடுல்ஸ் எனக்கு காரம் எண்ணெய் எல்லாம் கம்மியாக போட்டு எடுத்து வந்தாள் மருமகள்.

      பாட்டு கற்றுக் கொள்கிறான், தேவாரமும் சொல்லி தருகிறார்கள்.

      நேற்று மாமாவின் நினைவு தினம்
      கோவையில் சாரின் அண்ணா வீட்டில் மாமாவின் மாணவர் தேவாரம் , திருவாசகம் பாடினார்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. அழகான கையெழுத்தில் தமிழில் கவின் அனுப்பியிருக்கும் குறிப்பு சிறப்பு. வாழ்க வளமுடன். தமிழை கற்பித்திருக்கும் பெற்றோர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

      நீக்கு
  20. எங்கள் ப்ளாகின் சக்தி பீடத்திற்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கோமதி அரசு சகோதரி

    தங்கள் பேரன் கவினின் பாஸ்தா காய்கறி சமையல் மிகவும் நன்றாக உள்ளது. அழகான எழுத்துக்களில் செய்முறைகளை பாகம் பிரித்து விளக்கி, தானே படங்களும் (குக்கர்) வரைந்து காட்டி அசத்தி இருக்கிறார். எழுத்துக்கள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற அழகு. இந்த சின்ன வயதில் பல கலைகளை கற்று வரும் குழந்தை கவினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். குழந்தை மேலும் மேலும் பல கலைகள் பயின்று சிறப்புடன் பிரகாசிக்க என் அன்பு ஆசிகள்.

    அன்பு குழந்தை கவின் காசியின் திறமை மிகும் சமையலாலும், சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் பொருத்தமான கவிதைகளாலும் இன்றைய திங்கள் வழக்கத்தை விட சுடர் விட்டு ஒளிமயமாக பிரகாசிக்கறது. குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வரும், உங்களுக்கும், அவர் பெற்றோருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இதை எங்களுக்கு பகிர்ந்தளித்த எ.பிக்கும் சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்கள், ஆசிகள், பாரட்டுக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி கமலா.

      சகோவின் கவிதை உங்கள் எல்லோரின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் எல்லாம் மனதை நெகிழ செய்கிறது.

      இன்று அலைபேசி மூலம் பதில்கள் கொடுக்கும் போது உங்களை நினைத்து கொள்கிறேன்.

      உங்கள் திறமையை எண்ணி பார்க்கிறேன்.

      எனக்கு இதில் பதில் அளிக்க கஷடமாய் இருக்கிறது.

      நீங்கள் பதிவுகள், விரிவான பின்னூட்டங்கள் எல்லாம் கைபேசி மூலமாய் தருவது பெரிய விஷயம் தான்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
      ஶ்ரீராமுக்கும் நன்றி.

      நீக்கு
  22. கவினுக்கு எனது வாழ்த்துகளும் கூடி...

    பதிலளிநீக்கு
  23. செல்வன் கவின் எழுத்துகளும் பாஸ்தா செய்யும் விதமும் அருமை அருமை படங்கள் அதை விட பொக்கிஷங்கள் வாழ்த்துக்கள் கவின் அன்புடன் ஆசிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான கருத்தும் அன்பான ஆசிகளும் பேரனுக்கு கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.
      படங்கள் மகன் முன்பு அனுப்பி வைத்தது.

      நீக்கு
  24. மாஸ்டர் கவின் கைவண்ணத்தில் இன்றைய சமையல் - சிறப்பாக எழுதி இருக்கிறார். அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாரட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. எனக்கு இனிய அதிர்ச்சி .
    இன்று பேரின் சமையல் குறிப்பு இடம் பெற்றது . வீட்டுல் யாருக்கும் சொல்லவில்லை நான் அனுப்பியது தெரியாது.

    இன்று பார்த்தவுடன் சொன்னேன் கவின், மகன், மருமகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    ஶ்ரீராமுக்கு நன்றி.

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு நன்றி.

    கணினி திடீர் என்று வேலை செய்யவில்லை .
    நாளை வருகிறேன் அனைவருக்கும் பதில் சொல்ல.

    அலை பேசி வழியாக பதில் அனுப்பி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. பதில்கள்
    1. கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தனபாலன்.
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  28. கவினின் ஆர்வமான முகத்தைப்பார்க்கையில் கை தேர்ந்த சமையல் கலைஞரைப்பார்ப்பது போல இருக்கிறது! உண்மையிலேயே எல்லோரும் சொல்வது போல ஒரு குழந்தையின் வருகை புத்துணர்ச்சியைத்தருகிறது! கவினுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் மனோ சாமிநாதன் வாழ்க வளமுடன்
    சிறு வயதிலிருந்தே சமையல் விளையாட்டு பிடிக்கும்.

    செப்பு சாமான் மற்றும் நவீன சமையல் விளையாட்டு சாமான்கள் வைத்து இருக்கிறான்.

    பழைய பதிவுகளில் இதை சொல்லி இருக்கிறேன். எந்த ஊருக்கு போனாலும் அந்த விளையாட்டு சாமான்களை கொண்டு வந்து சமைத்து கொடுத்து நாம் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வான்.

    ஓட்டல் விளையாட்டு மிகவும் பிடிக்கும்
    அழகாய் மேஜையில் வைத்து நம்மை அழைப்பான்.

    கற்பனையாக சொல்லி நாம் ருசித்து சாப்பிடுவது போல் நடிப்பது பிடித்த விளையாடல்.


    தலமை சமையல் கலைஞரை போல் தொப்பி அணிந்து படம் எடுத்து வைத்து இருக்கிறான்
    ஒரு பிறந்தநாளுக்கு.

    உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாழ்க வளமுடன் சகோ கரந்தை ஜெயக்குமார்
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  31. ஆஆஆ பேரன் சமைச்சுக் குடுக்க, கோமதி அக்கா சாப்பிட்டீங்களோ.. சூப்பர், இனி என்ன நீங்கள் ஓய்வெடுங்கோ:))..

    மாஸ்டர் செஃப் க்கு வாழ்த்துக்கள்.

    இவ்ளோ அழகாகத் தமிழ் எழுதுகிறாரே, மிக நல்ல விசயம், அங்கு தமிழ் ஸ்கூல் இருக்குதுபோல, வீட்ட்ல் எனில் இப்படிச் சொல்லிக் குடுக்க முடியாது:))

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் அதிரா வாழ்க வளமுடன்
    இது நான் வரும் முன் செய்த சமையல் குறிப்பு.
    தமி்ழ் பள்ளி கொடுத்த திட்ட பணி . சிறப்பாக செய்து நல்ல பெயர் வாங்கினான்.

    நீங்கள் சொன்னதை சொன்னேன் அதிரா அடுத்த வாரம் எனக்கு செய்து தருகிறேன் என்றான்.

    பள்ளியில் படிப்பதால்தான் தமிழ் படிக்க , எழுத, பேச முடிகிறது. வீட்டிலும் தமிழ் பேசுகிறான்.

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  33. கவினுக்கு வாழ்த்துகள்...பகிர்ந்தவிதம் அருமை..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!