ஞாயிறு, 4 ஜூலை, 2021

என்ன சமையலோ!

 

இந்த வாரம்  

மிளகாயுடன் காரசாரமாக ஆரம்பம் 


வெண்டையை மண்ணுக்கு வீங்கி என்பார்கள்  எங்கேயும் எப்போதும் தழைக்கும் 
நேற்று வெண்டை முருங்கை சாம்பார் 
முந்தாநாள் வெண்டையும் கத்திரியும் போட்ட வத்தல் குழம்பு 
இப்படி எங்கள் வீட்டில் தினமும் வெண்டை .. பின்னே, 5 செடியில் தினம் 4, 5 என்று பறித்தால் ...?


சுரை முளைத்திருக்கு   நாட்டுச்சுரைக்காய்  வீட்டு சுரைக்காய் .. ஏட்டுச் சுரைக்காய் ! 


spring ஆனியன் போட்டு என்று வரும் ரெசிபி என்றால் உடனே மாடிக்கு ஒரு விசிட் 


கத்தரிக்குக் காலமில்லை என்றவர்கள்  பூச்சி பற்றி சொல்லாமல் விட்டுவிட்டார்கள் ! 





எங்கள் தக்காளியின் கதை 


ஒரு வாரமாயிற்று
 

எடுத்து முடிக்க . ரசம் நன்றாக இருந்தது. 
 
  
இது என்ன ? 
 

சொல்லவும் வேண்டுமா ..ஆஹா  என்ன ஒரு வாசனை ! 


ஒரே நாள் இரவில் காணாமல் போன கதை சோகக்கதை - - 
 

மறுபடியும்?


இதை ஒரு மூலையில் நிறையப்  போட்டு  விசாரணை தொடர்ந்து வந்தது .  drone வைத்துப் படம் அடுத்தவர்களுக்கு புளிச்சக் கீரைக்கும் வேறு சமாச்சாரத்துக்கும் வித்யாசம் தெரியவில்லை !


ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்று வளர்த்த பின் ஒருவரிடம் கொடுத்து வாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றோம் .. 


எல்லோருக்கும் தெரிந்த.. 


= = = =

வால் துண்டு (அதாவது Tailpiece) 

இனிய (245 ஆவது) சுதந்திரதின வாழ்த்துகள் - அமெரிக்கா ! 

அமெரிக்கா சுதந்திரப் பிரகடனம் செய்த 1776 July 4 - அன்று 

தமிழ்நாட்டில் சங்கீத மும்மூர்த்திகள் என்று அறியப்பட்ட தியாகராஜர் (9 வயது) ஷ்யாமா சாஸ்திரிகள் (14 வயது) மற்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதர் - (ஒரு வயதுக் குழந்தை) ஆகியோர் இருந்தனர்! அதாவது அமெரிக்க சுதந்திரம் பிறக்கு முன்பாகவே இங்கே சங்கீத மும்மூர்த்திகள் பிறந்துவிட்டார்கள்!  

= = = =


42 கருத்துகள்:

  1. இனிய ஞாயிறுக்கான காலை வணக்கம்,.

    அனைவரும் என்றும் நலமுடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான பச்சை மிளகாய், வெண்டை, கத்திரி,தக்காளி

    என்று காய்த்துக் கொட்டினால் நல்ல காய்கறி கிச்சடி
    செய்யலாமே.

    செடிகள் பசுமையாக வளப்பமாக இருக்கின்றன.
    வெற்றிலை வந்து போய்விட்டதோ.சென்னையில்
    நன்றாக வளரும்.
    மணிப்ளாண்ட் மாதிரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். வெற்றிலை இருந்தால் மஹாலக்ஷ்மி குடியிருப்பாள்.

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகு.
    கௌதமன் ஜிக்கு நன்றி.
    ஒண்ணேஒண்ணு கருவேப்பிலை மாதிரி இல்லையே.
    கொய்யாவோ.

    பதிலளிநீக்கு
  4. சுரைக்காய் செடி இருக்கு.காயைக் காணோம்.
    ஸ்ப்ரிங் ஆனியன் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. அமெரிக்க சுதந்திர நாளை அளவோடு கொண்டாடி வருகிறார்கள்.
    வெய்யில் உக்கிரத்தைப் பொறுத்துத் தனி மனித
    பட்டாசு வெடிப்பது அனுமதிக்கப் படும்.

    தினந்தோறும் இரவு வெடிச்சத்தம் தொடர்கிறது.இன்றும்
    நாளையும் பொது இடங்களில்
    அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மேல்நாடுகளில் பெருகி வரும் தொற்று அடியோடு ஒழிந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. கடைசித் துணுக்குச் செய்தி, அமெரிக்க சுதந்திரம் பற்றியும் அதோடு மும்மூர்த்திகளை முடிச்சுப் போட்ட விதமும் அலாதியானது. தகவல் பரிமாற்றத்துக்கு நன்றி. இன்று சுதந்திர தினம் கொண்டாடும் அனைத்து அம்பேரிக்கர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பந்தம் இல்லாம முடிச்சு செய்தி போட்டா அது பேர் தான் அலாதியா ?

      நீக்கு
    2. ஆமாம், இல்லையோ! அலாதியான ரசனை என்றும் சொல்லலாமோ? :)))))

      நீக்கு
  8. சுரைக்காய் தவிர்த்து (சாப்பிட மாட்டோம்) மற்றவை எல்லாம் போட்டுப் பார்த்திருக்கோம். ஸ்ப்ரிங் ஆனியனைச் செடியில் இருந்து பறித்துக் குடமிளகாய், தக்காளி போட்டு ஃப்ரைட் ரைஸ் பண்ணி இருக்கேன். என்னிடம் இருக்கும் சாஸ்களை அதில் சேர்ப்பேன். அதுக்காக சோயா சாஸ், சில்லி சாஸ் என்று வாங்கினதில்லை. வெற்றிலைக் கொடி அம்பத்தூரில் எங்க வீட்டில் சரியாவே வரலை. ஏனோ?

    பதிலளிநீக்கு
  9. பறங்கி, பூஷணி, மஞ்சள், கரும்பு எனப் போட்டுப் பொங்கல் சமயம் தெருவெல்லாம் விநியோகம் செய்வோம். அது ஒரு காலம். ஆனால் கரும்பு போட்டால் வேலி தாண்டிக் குதிக்கும் மாடுகள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாதது. உள்ளே நுழைந்து கரும்பை முற்றிலும் அழித்துத் தள்ளிவிடும். இத்தனைக்கும் பசுமாடுகள் தாம்! நாம் விரட்டப் போனால் முட்ட வரும். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலி தாவிக் குதிக்கும் மாடுகள்.. குரோம்பேட்டை நினைவு வருகிறது.. மாடுகள் வேலி தாவி வரும்.. வீட்டு நாய் மாடுகளை (எந்த கொம்பனா இருந்தாலும் சரி) துரத்தி துரத்தி அடிக்கும்.. வேலி தாவி குதிச்சு உள்ள வந்த மாட்டுக்கு மறுபடி வேலி தாவி வெளியே போகத் தெரியாதோ?

      நீக்கு
    2. வேலி தாண்டிப் போகும். ஆனால் அவை நாம் துரத்துவதால் எப்படிப் போவதெனக் கஷ்டப்பட்டுக்கொண்டு பல சமயங்கள் வேலியை முற்றிலும் கொம்பால் முட்டிக் கீழே தள்ளிவிட்டுப் போகும். பின்னர் சுற்றுச் சுவர் எழுப்பினதும் குறைந்தது என்றாலும் நாய்கள் தாண்டிக் குதித்து வந்துவிடும். :( குடித்தனமெல்லாம் இங்கே தான்.

      நீக்கு
  10. தக்காளி வீட்டில் காய்த்துப் பழுப்பதில் தக்காளிச் சட்னி பண்ணி அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசைக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சொர்க்கம் கைகளில்.

    பதிலளிநீக்கு
  11. வந்தாச்சு, வந்தாச்சு, ரோபோ வந்தாச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  12. எல்லாக் காய்களையும் கொடுத்துட்டு இன்னிக்கே சமையலை ஆரம்பிச்சு வைச்சாச்சு. :)))))))

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  15. எங்கும் நலமாக வாழ்க..
    எல்லாம் இனிதாக வாழ்க..

    வையகம் வாழ்க..
    வளமுடன் வாழ்க..

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவாக காய்கறி தோட்டம் நன்றாக உள்ளது. கத்திரி, வெண்டை, தக்காளி இவைகளை பார்த்ததும், எழுந்தவுடன் காஃப்பிக்கு முன்பாகவே பசியே வந்து விட்டது.

    கொய்யாவா இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் காணாது போய் விட்டது?ஒண்ணே ஒண்ணு கண்ணே என இருந்தது அது எலுமிச்சை மரமா.. ?

    வெள்ளை நிறத்துடன் இரண்டு படங்கள் உள்ளனவே.. அது என்ன காயின் பூ? பறங்கிப்பூ மஞ்சள் கலரில் அழகாக உள்ளது. வெற்றிலை இரண்டு பறித்து போட்டுக் கொண்டால் சாப்பிட்டவை எளிதில் ஜீரணமாகும். எல்லாமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    அமேரிக்கா சுதந்திரத்திற்கு முன் பிறந்தவர்கள் இசை மேதைகள் என்ற கடைசி செய்தியை இணைத்த விதம் அருமையாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளை அவரை பார்த்தது இல்லையா? ஊதா நிறம்/வெள்ளை நிறம் இரண்டு நிறங்களிலும் அவரை பூக்கும். அது கொய்யா மரம் போல் தான் இருக்கு.

      நீக்கு
  17. சங்கீத மும்மூர்த்திகளுடன்
    அமெரிக்கச் செய்தியும் அருமை...

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. காயகறி தோட்டம் அருமை. படங்களும் நன்றாக இருக்கிறது.

    ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணே கருவேப்பிலை கொத்துப் போல என்று சொல்வார்கள் ஒன்னே ஒன்னை வேறு இடத்தில் வளர்க்க கொடுத்து விட்டீர்களா?



    பட்டாசு வாங்கி வந்தார்கள் , ஆனால் அரிசோனாவில் காட்டுத்தீ எரிந்து கொண்டு இருப்பதால் சுதந்திர தினத்திற்கு வெடி வெடிக்க விடுவார்களா தெரியவில்லை.
    இன்று காற்று, இடி, மின்னல், மற்றும் கரு மேகம் இருக்கிறது மழை பெய்யவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கறிவேப்பிலை விதையிலிருந்து வளர்ந்த செடி. எங்கள் உபயோகத்துக்கு மரம் இருக்கிறது

      நீக்கு
    2. //கறிவேப்பிலை விதையிலிருந்து வளர்ந்த செடி. எங்கள் உபயோகத்துக்கு மரம் இருக்கிறது//

      ஒ சரி சரி.

      இன்று காற்று, இடி, மின்னல், மற்றும் கரு மேகம் இருக்கிறது மழை பெய்யவில்லை என்றேன் இப்போது நல்ல மழை பெய்கிறது . அடிக்கும் வெயிலுக்கு இதம் இன்று.

      நீக்கு
  20. தக்காளி, புளிச்சக்கீரை பூ படங்கள் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. அத்தனையும் மிகவும் அழகு!
    //எங்கள் வீட்டில் தினமும் வெண்டை .. பின்னே, 5 செடியில் தினம் 4, 5 என்று பறித்தால் ...?//
    ஒரு நாளைக்கு சமையலுக்கு நாலைந்து போதுமா?
    கத்தரிக்காயைப் பார்த்தால் மிகவும் ஆசையாக இருக்கிறது! இப்படி பிரெஷாகப் பார்த்து எத்தனையோ நாட்கள் ஆயிற்று!
    அதென்ன வாசனையுடன்? கண்டு பிடிக்க முடியவில்லை.
    வெள்ளை நிறப்பூவுடன் உள்ள செடி என்ன செடி?
    பசுமையான காய்கறிகள் ஊர் ஞாபகத்தை நிறையவே தூண்டி விட்டு விட்டன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகற்காய்..மிதிபாகல். வெள்ளை அவரை பூக்கள்

      நீக்கு
    2. ஓஓ, இங்கே சொல்லி இருக்கார். வெள்ளை அவரை என்பதை!

      நீக்கு
  22. பசுமையான காட்சிகள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  23. காய் கறி தோட்டம் அருமை
    படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  24. வீட்டு தோட்டம் அழகு. காய்கள் உடன் பறித்து சமைத்தால் சுவைதான்.

    பதிலளிநீக்கு
  25. "இது என்ன?" யாருக்காவது தெரிந்ததா?

    பதிலளிநீக்கு
  26. ஞாயிறு படங்கள் நன்று. தோட்டம் இருந்தால் மனதில் ஒரு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!