வியாழன், 29 ஜூலை, 2021

கனவுகளே கனவுகளே காலமெலாம் வாரீரோ...

 கனவில்  ஒரு புதிர்

 இந்தக் கனவுகள் நம்மைப் படுத்தும் பாடு இருக்கு பாருங்க...   பித்தம்னாலும் கனவு வரும் என்பார் என் நண்பர்.  சரியான தூக்கம் இல்லாவிட்டால் கனவு  வரும் என்பார் இன்னொருவர். 

கேள்விகளை உண்டாக்கும் கனவுகளுக்கு நடுவே ஆச்சரியப்படுத்தும் கனவுகளும் உண்டு.  எல்லோருக்கும் இது நேர்ந்திருக்கும்.  சில கனவுகள் நடந்து விடும்.  சில நடக்காது.  கொடுத்த கடன் திரும்ப வந்த மாதிரியோ, லாட்டரியில் லட்சம் விழுந்த மாதிரியோ கனவுகள் வந்தால் அதெல்லாம் நடந்து விடுவதில்லை. தப்பான கனவு கண்டால் மட்டும் அது பலித்துத் தொலைத்துவிடும்!

சென்ற நவம்பரில் என் பிரியமான மாமா மறைந்தார்.  

சமீபத்தில் கூட ஒருநாள்   இரவு கனவில் அவர் வந்தார்.  அதற்கு முன்னும் ஒரு முறை.  அப்போது தோளில் ஒரு குழந்தை.   

தூக்கி வைத்துக் கொள்ளத் தேவை இல்லாத, வளர்ந்த குழந்தை.  ஆனாலும் தோளில் போட்டிருக்கிறார்.  அது அவர் பேரன்.   மருத்துவரைப் பார்த்து விட்டு வைத்திருக்கிறார் என்று எண்ண வைக்கும் காட்சி.

"ஒண்ணும் இல்லை...   பயமா இருக்குன்னு  சொல்வாங்க...   சரியாயிடும்.  சரியா சாப்பிடணும்..  ரெஸ்ட் எடுக்கணும் அவ்வளவுதான்"  என்றார்.

அவ்வளவுதான் கனவு.

நான் இரவு ஒன்பது மணிவாக்கில் படுத்து விடுவேன்!  காலை எழுந்து வாட்ஸாப்ப்பைத் திறந்தால், அவர் மகள் இரவு தாமதமாக ஒரு மெஸேஜ் அனுப்பி இருந்திருக்கிறாள்.  அதை  அப்போதுதான் பார்த்தேன்.  அதாவது அவள் மகனுக்கு மறுபடியும் வயிற்றுவலி வருகிறது என்றும், இம்முறை சற்று அதிகமாகவே வருவதாகவும்...  ரொம்பவே கவலைப் பட்டிருந்தாள்.  ஏற்கெனவே  மாமா இருந்தபோதே இரண்டு முறைக்கும் மேல் இது மாதிரி அவனுக்கு வந்திருக்கிறது.  

ஒரு கேஸ்ட்ரோ எண்டாலஜிஸ்ட்டைப் பார்க்கப் பரிந்துரைத்து மெஸேஜ் அனுப்பிய மறுவினாடியே எனக்கு மாமாவின் கனவு நினைவுக்கு வந்ததது.  உடனே வாய்ஸ் மெசேஜில் அதையும் குறிப்பிட்டேன்.  அவள் 'அதை ஏன் அப்பா என் கனவில் வந்து சொல்லவில்லை?' என்று கேட்டிருந்தாள்.  நல்ல கேள்வி.  பதில் தெரியாத கேள்வி.  ஆமாம், ஏன்?

பின்னர் அவர்கள் மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்து பேரன் இப்போது சுகம்.  மருத்துவர் மாமா கனவில் சொன்ன வார்த்தைகளையே சொன்னது ஆச்சர்யம்.

அந்தப் பேரனிடம் அப்புறம் பேசிக்கொண்டிருந்தேன்.  அவனிடம் 'உன் கனவில் தாத்தா வருவாரா' என்று கேட்டேன்.  'வருவார்' என்றான்.  எப்போது வந்தார் என்று கேட்டதற்கு அவர் இறந்து போனதற்கு முதல் நாள் வந்து 'போயிட்டு வர்றேன்.' என்று சொல்லிக்கொண்டு போனதாகச் சொன்னான்.  

மிகவும் ஆச்சர்யப் பட்டுப்போய் 'இதை ஏண்டா யாரிடமும் சொல்லவில்லை என்று கேட்டேன்.  'யாரும் கேட்கவில்லை.  எனக்கும் சொல்லத் தோன்றவில்லை'  என்றான் வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும் தாத்தாவை ரொம்பவே மிஸ் செய்யும் அந்தப் பேரன்.

"இதற்கு முன்னாலும் ஒருதரம் கனவில் வந்திருக்கிறார் மாமா...   முந்தைய தரம் ராமச்சந்திராவில் அட்மிட் ஆகி பிழைக்க மாட்டார் என்று சொன்னார்கள் இல்லையா...   அப்போது அவர் என் கனவில் வந்து நான் கட்டாயம் வந்து விடுவேன் என்று சொன்னார்"  என்றான் அவன் மேலும்.

மறுபடியும் மிகவும் ஆச்சர்யம்.  ஆம், அப்போது அவர் பிழைத்தது மிக மிக அதிசயம்.

இப்போது அதே மாமா சென்ற வாரம் மறுபடி கனவில்  வந்து ஒரு புதிர் போட்டு விட்டுப் போயிருக்கிறார்.

இந்த முறை அவர் வந்ததது என் கனவிலோ, பேரன் கனவிலோ அல்ல.  

கொரோனாவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு என் அலுவலகம் வந்திருந்தார்.  அவர் வீட்டிலிருந்து என் அலுவலகம் பக்கம்.  அப்படி வந்தபோது என் அலுவலக சகா 'ஆரோக்கிய சமையல் ஹேமா' விடமும் பேசிக் சென்றார்.  தினசரி மொபைல் போனில் காலடி கணக்கு வைத்து நடைப்பயிற்சி செய்வதைச் சொல்லிவிட்டு, மொபைலை ஹேமாவிடம் காட்டி "இந்த வருடம் முடிய இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கு..   அதற்குள் இவ்வளவு மைல், இவளவு ஸ்டெப்ஸ் நடந்திருக்கிறேன்" என்று மொபைலை அவரிடம் காட்டினார்.

இப்போது சென்ற வாரம் ஹேமா என்னிடம் வந்து தான் ஒரு விஷயம் சொல்ல மறந்து மறந்து போவதாகச் சொல்லி, இன்று கட்டாயம் அதைச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைவில் வைத்துக் கொண்டே வந்திருப்பதாய்ச் சொன்னார்.

நான்கு நாட்களாக என் மாமா அவர்  கனவில் தொடர்ந்து வருகிறாராம்.  முதல் இரண்டு முறை அவர் கடைசியாக ஹேமாவிடம் பேசியதுபோலவே மொபைலைக் காட்டி பேசி இருக்கிறார். மூன்றாவது நாள் கனவில் வந்து 'சொல்லியாச்சா' என்று மட்டும் கேட்டுச் சென்றிருக்கிறார்.  நான்காவது நாளும் வந்து மறுபடியும் 'சொல்லியாச்சா'என்று கேட்டிருக்கிறார்.  

இதில் இவருக்கு புரிந்தது என்ன என்றால் 'ஸ்ரீராமிடம் சொல்லியாச்சா' என்று கேட்கிறார்  என்பதுதானாம்..

"அப்பாடி..  சொல்லிட்டேன்பா...   இனிமேலாவது அவர் கனவில் வராமல் இருக்கிறாரான்னு பார்க்கணும்...  ஆமாம், என் கனவில் ஏன் வந்தார்?"

"ஆமாம், உங்கள் கனவில் ஏன் வந்தார்?"

"அதுவும் தொடர்ந்து.."

"அதுதானே, அதுவும் தொடர்ந்து.."

"போப்பா..  நான் உன்னைக் கேட்டால் நீ என்னை திருப்பிக் கேட்கறே...?

"நான் மட்டும் எப்படிச் சொல்ல முடியும்?  மாமாவிடம்தான் கேட்கணும்..  இதில் ஏதாவது குறியீடு இருக்கா என்றும் தெரியவில்லையே..."

அலுவலக சம்பந்தமாக ஏதாவது சொல்ல என்னை நாடுகிறாரா?  அந்த ஹேமா சம்பள பில் மற்றும் அரியர்ஸ் பில் போடுவதில் எல்லாம் கில்லாடி.  அதற்கும் மாமா அவர் மூலமாக எனக்கு ஏதாவது சொல்ல முயல்வதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?   இல்லை, இந்த வருடம் முடிய இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது என்பது எனக்குத் தரப்படும் வேறு ஏதாவது தகவலா?

ஆனால் அப்புறம் ஹேமா கனவில் மாமா வரவில்லை.  தகவல் பாஸாகிவிட்டது என்று விட்டு விட்டார் போலும்!

கனவில் மாமாவின் வருகை சில சமயம் முன்னர் தகவலாகவும், பின்னர் அர்த்தமுள்ளதாக ஆகியிருக்கும் பழைய சம்பவங்களால் இப்போது இதற்கு என்ன அர்த்தம் என்று மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.  அதில் நான் மூன்று வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்துக்குப் பார்த்த ஜோசியம் ஒன்றும் உண்டு.  நாங்கள் கேட்காமலேயே, ஆறு மாதங்களுக்கு முன் எங்களுக்காக  பார்க்கப்பட்டு, எங்களை வந்தடைந்த  இனொரு பலனும் உண்டு. இரன்டையும் பின்னர் இப்போது பொருத்திப் பார்க்க முடியும்.  கவலைப்பட காரணமா இல்லை!  பயமாக மாறும் பலவீனங்கள்!

இந்தக் கனவு பற்றி ஹேமா என்னிடம் சொன்ன அதே நாள் என் இளையவன் என்னைக் குறித்து தான் கண்ட ஒரு கனவு பற்றி என்னிடம் சொன்னான்.  இதுதான் மேற்சொன்ன அலலது சொல்லாத அந்த இரண்டையும் இணைப்பது!

"நீ ஒரு முதலை வாயில மாட்டிக்கிட்டிருக்கேப்பா...   நான் தப்பிச்சு இந்தப் பக்கம் வந்துட்டேன்... உன் பாதி உடம்புக்கும் மேலே அதன் வாய்க்குள்ள... நீ எங்கிட்ட சொல்றே 'இந்தக் கை மாட்டிகிட்டு இருக்கு, எடுக்க முடியலன்னு..   எழுந்து பார்த்தா காலைல நாலரை மணி..   அதிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்வாங்களே...  ஆனால் இபப்டி கனவு கண்டால் ஆயுசு அதிகம்னுதானே சொல்வாங்க.."

"இவ்வளவுதானேடா..  ஏதோ பிரச்னை வரப்போகுதுன்னு அர்த்தமோ என்னவோ...  பாரு..  நான் ஆபீஸ் போகும் வழியில் முதலை எதுவும் கிடையாது.."

"ஜோக் அடிக்கறே...   முதலைன்னா பிரச்சனைன்னு வச்சுக்கலாம்னு நீயேதான் சொல்றே..  ஆனா..."

" ஆனா..."

"அந்தக் கனவுல..."

"..........................?"

"முதலை உன்னை 'கச்சக்'குனு கடிச்சு சாப்பிட்டுடுதுப்பா..."

====================================================================================================


பழைய பத்திரிகைகளை பற்றிக் குறிப்பிடும்போது பயண இலக்கியவாதி என்று அறியப்படும்  சோமலெ இவ்வாறு குறிப்பிடுகிறார். 

"1986ம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் சோமசுந்தரத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு அஞ்சலகத்தில் நின்றவர், மயங்கிக் கீழே விழுந்து உயிரிழந்தார். தன் இறுதி மூச்சு வரையில் அவர் எழுத்துப் பணியை விடவில்லை என்பதன் அடையாளமாக அது அமைந்ததோ தெரியவில்லை!"

"குறிப்பிட்ட பத்திரிகைக்கு என்று வாசகர் இருப்பது மிகக் குறைவு.  முன்பு எல்லாம் சந்தாக் கட்டணம் குறைவு.  அதுவும் வராது.  ஆகையால் ஆயுள் சந்தாவாக வசூலித்தார்கள்.  சந்தாதாரர்களுடைய ஆயுள்வரை பத்திரிகை அனுப்பப்படும் என்பது கருத்து.  ஆனால் உண்மையில் பத்திரிகைகளின் ஆயுட்காலத்துக்கே அனுப்பப்பட்டன.  காரணம், மூன்று ஆண்டுகளுக்கு கூட தொடர்ந்து ஒரு பத்திரிகையைத்  நடத்துவது அரிதாக இருந்தது."

1578 ல் புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சகம் ஏற்பட்டாலும், 'தமிழ்ப் பத்திரிகை' என்கிற பெயரில் முதல் தமிழ் மாதப் பத்திரிகை 1831 ல்தான் தோன்றி இருக்கிறது.  அடுத்த 28 மாதங்களில் 'தினவர்த்தமானி' என்கிற வார இதழ் தோன்றி இருந்திருக்கிறது.   இவை இரண்டுமே கிறிஸ்துவப் பிரச்சாரத்திற்காக தோன்றியவை.  1892ல் தொடங்கப்பட்ட 'விவேக சிந்தாமணி' தான் பல அறிவுக் கட்டுரைகளைத் தரும் பத்திரிகையாகத் தோன்றியது.

ஒரு ரூபாயில் 192ல் ஒரு பங்கு தம்பிடி என்று அழைக்கப்படுகிறது.  அந்த விலையில் ஒரு பத்திரிகையை ச து சு யோகியார் தந்திருக்கிறார்.  காலணா பத்திரிகை என்று ஒன்று இருந்தது.  காலணா என்பது ஒரு ரூபாயில் 64 ல் ஒரு பங்கு.

பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் கூட பத்திரிகையில் வந்தால்தான் நம்புவது என்கிற மனநிலையில்தான் பலர் இருந்ததால் பத்திரிகைத்துறை வளர்ந்தது என்கிறார் சோமலெ.  சிறந்த கட்டுரைகளை விடவும் பொழுது போக்குத் துணுக்குகளை, சிறுகதை, நாவல்களையும் மக்கள் ஆர்வமாகப் படிக்கிறார்கள் என்கிறார்.

படிப்பவர்களைக் கவர்வதற்காக பெண்களின் பெயர்களை போட்டுக்கொண்டு சிலர் எழுதுகிறார்கள்.  தினமணிக் கதிரில் எழுதும் எழுத்தாளர் ஒருவர் ஆணா பெண்ணா என்ற சர்ச்சை இருந்து வருவது உங்களுக்கே தெரியும் என்றும் சொல்கிறார்.  

மேலும், 

தங்களுடைய புலமையையும், அறிவாற்றலையும், சொல்லாட்சியையும் தங்களைப் போன்ற பெரும்புலவர்  சிலருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சென்ற நூற்றாண்டில் அறிஞர்கள் எழுதினார்கள்.  தங்கள் கருத்து பலருக்கும் பரவவேண்டும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தெரியும்படி எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது பத்திரிகை.

என்னுடைய நண்பர் அ லெ நடராசன் சொல்வது போல அந்தக் காலத்தில் சைவ சமயத்தைப் பற்றி எழுதியவர்கள் பெரும்பாலோருக்கு பிற மதங்களை பற்றி ஒன்றுமே தெரியாது.  தமிழ் இலக்கியங்களை பற்றி எழுதியவர்களுக்கு பிற மொழி இலக்கியங்களை பற்றி சிறு அளவு கூடத் தெரியாது.  வேறு யாராவது எழுதும் கட்டுரைகளில் பொதிந்துள்ள பொருள் அல்லது விஷயங்களை மறந்து விட்டு, அதிலுள்ள இலக்கணப் பிழையை மட்டும் கோடுபோட்டு எண்ணி வந்தார்கள்.

தொண்டை மண்டலமா?  தொண்ட மண்டலமா? போன்ற சர்ச்சைகளில் பண்டிதர்கள் ஈடுபட்டு வந்தார்கள்  என்றும் சொல்கிறார்.

[தொடரக்கூடும் - அவ்வப்போது!]

=====================================================================================================

தினமலர் - சொல்கிறார்கள் பகுதியில் வந்தது...


காய்கறி கடைகளில் வாங்கி வரும் கொத்தமல்லி தழை, பல நேரங்களில் மணப்பதில்லை. அதற்குப் பதில், 'கமகம'க்கும் கொத்த மல்லியை, வீட்டில் சிறிய இடத்தில் வளர்ப்பது பற்றி கூறுகிறார் தோட்டக்கலை ஆர்வலர் ஆரண்யா அல்லி: 

"கொத்தமல்லியை சிறிதளவாவது பயன்படுத்தாமல் நம் சமையல் நிறைவடையாது. ஆனால், மணத்தை எதிர்பார்த்து, சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லி பெரும்பாலும் நிறத்தை மட்டுமே கொடுக்கிறதே தவிர, மணத்தை தருவதில்லை. காரணம், பல வித ரசாயனங்கள் சேர்த்து, அது விளைவிக்கப்படுவது தான்.

அதற்கு மாற்றாக, நம் வீட்டில், நமக்கு தேவையான அளவு கொத்தமல்லியை வளர்க்க முடியும். எந்த அளவுக்கு நமக்கு தேவை என்பதை முடிவு செய்து, அதற்கு ஏற்ற பாத்திரங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். 

கொத்தமல்லி செடியின் வேர்கள் மிகவும் மெல்லியவை, சிறியவை என்பதுடன், அவை, 6 அங்குல வேர்களை மட்டுமே அதிகபட்சம் கொண்டிருக்கும் என்பதால், வேர் பாயும் வகையில் பாத்திரம் இருக்க வேண்டும்.

பாத்திரம் தான் என்றில்லாமல், பிளாஸ்டிக் வாளி, டப்பா, கைப்பிடி உடைந்த பைகள், கெட்டியான பாலிதீன் பைகள், பழைய ஜீன்ஸ் பேன்ட் என எதிலும் கொத்தமல்லி வளர்க்கலாம். 

இதற்கு தேவையான மண், 'பொலபொல'வென உதிர்ந்து போயிருக்க வேண்டும். காற்று எளிதில் ஊடுருவும் வகையில், மண் தளர்வாக இருக்க வேண்டும். அதற்கு செம்மண் ஒரு பங்கு, மாட்டு எரு ஒரு பங்கு, மணல் அரை பங்கு கலந்து, மண்ணை தயாரிக்க வேண்டும்.மண் கிடைப்பதில் சிக்கல் இருந்தால் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம், 'கம்போஸ்ட்' எனப்படும் மக்கிய காய்கறி கழிவு உரத்தை பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவால் தயாரிக்கப்படும் பிளாக்கை பயன்படுத்துவதாக இருந்தால், அதை நன்கு நீரில் அலசி, அதன் துவர்ப்பு தன்மை நீங்கச் செய்ய வேண்டும்.

கடைகளில் கிடைக்கும் கொத்தமல்லி விதையை தரமாக வாங்கி, அதை கை அல்லது காலால் நசுக்கி உடைத்துக் கொள்ள வேண்டும். கனமான பொருளால் உடைத்தால், முனைகள் உடைந்து முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.

விதைக்க எடுத்துள்ள பாத்திரத்தின் மீது உடைக்கப்பட்ட விதைகளை துாவி, அரை அங்குல உயரத்திற்கு தளர்வாக மண் கலவையை போட்டு மூட வேண்டும். அதன் மீது, செய்தித்தாளை பரப்பி, அதன் மேல் தண்ணீரை தெளித்து, அந்த தண்ணீர் மண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக விழச் செய்ய வேண்டும். 

ஐந்தாவது நாள் செய்தித் தாளை நீக்கி பார்த்தால், முளை விட்டிருக்கும். அதன் பின், ஸ்பிரே மூலம் தண்ணீரை துாவி வந்தால், 30 நாட்களில் நன்கு வளர்ந்த, மணமுள்ள கொத்தமல்லி விளைந்திருக்கும். தேவைக்கு ஏற்ப அவற்றை பறித்து, சமையலுக்கு பயன்படுத்தலாம்!

==================================================================================================

சென்ற வருடம் செய்த முயற்சி.  பேஸ்புக்கில் போட்டிருந்தேன்.  இங்கு பகிர்ந்தேனா நினைவில்லை.================================================================================================


ஒரு ஜோக்...   ஒரு அக்கறை...115 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய வியாழன் கதம்பம் அருமை. பயத்தை உண்டாக்கும் கனவுகள் சற்று குழப்பவாதிதான். அதுவும் தூங்கி எழுந்தவுடன் அப்படியே நினைவில் நிற்கும் கனவுகள் பயங்கர குழப்பவாதி. நெருங்கியவர்களிடம் அக்கனவை சொல்லி ஆறுதல் பெற்ற பின் குறைந்தது போலிருக்கும். ஆனால், உள்ளுக்குள் ஒரு சில நாட்கள் அக்கனவையே நினைக்க வைக்கும். ஏன்தான் இப்படிபட்ட கனவுகள் வருகிறதோ?

  பிரச்சனைகள் ஏதுமின்றி, எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென பிள்ளையாருக்கு ஒரு சிதறுகாய் வாங்கி உடைத்து விடுங்கள். அவனை நம்பி கவலையை அவனிடம் ஒப்படைத்து விட்டால், நம் பிரச்சனைகளை சிதறடித்து விட்டு பத்திரமாக நம்மை மீட்டு விடுவான். கவலைப்படாதீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரச்னைகள் இல்லாவிட்டால் வாழ்க்கையும் போர் அடித்துவிடும் என்று சொல்வார்கள்.  என்ன நடக்குமோ அதுதானே நடக்கும்!  நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  2. பிரச்னையே வாழ்க்கையானால் என்ன செய்வது? :(

   நீக்கு
  3. அப்படி ஆகாது என்று நம்புவோம்.  அது நம் பிரமைதான்.  இரவென்றால் பகலிருக்கும்; பள்ளமென்றால் மேடிருக்கும்!

   நீக்கு
  4. அப்படி இல்லை ஶ்ரீராம், சிலர் வாழ்க்கையைப் பார்த்தால் இவங்களுக்கெல்லாம் என்னிக்கு விடிவு என்னும் ஆதங்கம்/கவலை மேலோங்கும். :( சிலவற்றைப் பொது வெளியில் சொல்ல முடியாது!

   நீக்கு
  5. உண்மைதான்.  ஆனால் இப்படிதான் நினைத்துக் கொள்ள வேண்டும்.

   நீக்கு
 3. இனிய நற்காலை வணக்கம்.
  அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வை இறைவன் என்றும் அளிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீராமின் இன்றைய பதிவை ஒரு தடவை படித்து முடித்தேன்.
  கனவுகள் பயமா ஆதரவா.
  முதலை எல்லாம் ஒன்றும் செய்யாது. நீங்கள் பிரச்சினைகளில்
  மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம்.
  மாமாவுக்கு உங்கள் மீது அன்பும், உங்களுக்கு மாமாவின்
  மேல் அக்கறையும் இருப்பது
  அருமையாக இருக்கிறது.
  நல்லதே நடக்க வேண்டும்.
  எனக்கும் சிங்கம் இரண்டு நாட்களாகக்
  கனவில் வருகிறார். அதுவும் எம் ஜி ஆர் மாதிரி
  டபிள் ரோல்!!!
  என்னப்பா இரண்டு பேராத் தெரிகிறது என்று கேட்டேன்.
  சிரிக்கிறார்.
  என்ன அர்த்தம்னு தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வல்லிம்மா...   சொல்லப்படும் செய்தியை மற்ற(வர்கள்) கனவுகளோடும் இணைத்து லாஜிக் தேடினேன்!

   //எனக்கும் சிங்கம் இரண்டு நாட்களாகக் கனவில் வருகிறார். அதுவும் எம் ஜி ஆர் மாதிரி டபிள் ரோல்!!!//

   இன்னொரு பிறவி எடுத்து விட்டார் என்று அர்த்தமோ...   மன்னிக்கவும் அம்மா..  சும்மா தோன்றுவதைச் சொல்கிறேன்.

   நீக்கு
  2. இருக்கலாம் பா. நல்லதுதானே.
   கனவில் வந்த சிங்கம் அவரது 26 வயதில்
   பார்த்த வண்ணம் இருந்தார்.!!

   நீக்கு
 5. கீழ்வேளூர் சிற்பம் மிக அருமை.
  எத்தனை தத்ரூபமாக இருக்கிறது!!
  செய்தி அனுப்பியவருக்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேஸ்புக்கில் அப்படி ஒரு பக்கம் இருக்கிறது அம்மா.  உறவினர் ஒருவர் மூலம் தெரிய வந்தது.  

   நீக்கு
 6. நீண்ட காலங்களுக்குப் பிறகு எனது மனைவி இன்று காலை அதாவது ஒருமணி நேரம் முன்பு கனவில் வந்தாள்.

  ஆச்சர்யப்பட்டுக் கொண்டேன் தங்களது தளத்துக்கு வந்தால் இங்கும் கனவு.

  1578 ல் புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சகம்//

  ஜி இது சரியான தகவலா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்ததை பகிர்ந்தேன்.  சரிபார்க்கவில்லை.  சொல்லியிருப்பவர் சோமலெ

   நீக்கு
  2. 1554 ஆம் ஆண்டில் லிஸ்பனில் முதல் தமிழ்ப் புத்தகம் வெளியீடு என்று சொல்வார்கள். 1577 ஆம் ஆண்டில் கோவாவில் "தம்பிரான் வணக்கம்" என்னும் நூல் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது. இது குறித்த மேல் அதிகத் தகவல்களை மின் தமிழில் காணக்கிடைக்கும். ஆனால் இப்போப் போய்ப் பார்த்து எடுக்க முடியலை. :(

   நீக்கு
  3. இதெல்லாம் நானும் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

   நீக்கு
  4. எங்கே? மின் தமிழிலா? நான் இவற்றை எல்லாம் தட்டச்சி மின் தமிழின் "மரபு விக்கி" பக்கங்களில் ஆவணப்படுத்தி இருக்கேன். இது போல் நிறைய! அந்த நினைவில் இப்போது சொன்னேன். மற்றவை நினைவில் இல்லை. இப்போதெல்லாம் "மரபு விக்கி" பக்கங்களுக்குப் போகவே முடியலை! சம்பந்தமில்லாமல் ஏதேதோ வருகின்றன.

   நீக்கு
  5. ​இல்லை. மின் தமிழ் எனக்குப் பழக்கமில்லா தளம். வேறெங்கோ படித்தேன்.

   நீக்கு
  6. அது என்ன புன்னைக்காயல்? எங்கே - சிலோனிலா இருக்கு?
   இது ’தமிழ்’நாடு என்று நாம் சொல்லிக்கொண்டாலும், தமிழ் எங்கெங்கோ முளைத்து வளர்ந்தும் இருக்கு.. சந்தேகமில்லை

   நீக்கு
  7. கடவுளே! ஏகாந்தன்! நிஜம்மாவா கேட்கறீங்க? தூத்துக்குடி(இப்போதைய பெயர்) கடற்கரைப் பக்கம் எல்லாம் புன்னைக்காயல் என அந்நாட்களில் அழைக்கப்பட்டு வந்தன. இது ஒரு துறைமுகம். இப்போதைய நாட்களில் ஆழ்வார் திருநகரிக்கு அருகிலே உள்ள ஓர் ஊராகக் குறிக்கின்றனர். இந்தப் புன்னைக்காயல் மீனவ மக்களே தமிழ்நாட்டின் சரித்திரத்தை மாற்றி அமைத்தார்கள். பாண்டியனுடன் ஆன போரில் அவர்கள் பாண்டியனுக்கு அடங்க மறுக்கப் பாண்டியர்கள் துருக்கர்களைத் துணைக்கு அழைக்க இந்தப் புன்னைக்காயல் மக்கள் போர்ச்சுக்கீசியர்களின் உதவியை நாட! அவ்வளவு தான். ஒட்டுமொத்த மீனவ சமுதாயமே மதம் மாறியது. இப்போதுள்ள பனிமய மாதாவெல்லாம் அந்தக் கால கட்டத்தில் வந்தவங்க தான். ஆனால் இதற்குப் பிறகு சில ஆண்டுகளில் வந்தன. அந்த மீனவத் தலைவனைப் பற்றி எழுதுவதெனில் ஒரு பக்கம் போதாது! என்னிடம் அந்தச் சரித்திரத்தின் ஸ்கான் பண்ணிய பக்கங்கள் இருந்தன. தேடிப் பார்க்கணும். வயிற்றெரிச்சலாக இருக்கும். :(((((( இந்தப் புன்னைக்காயலில் தான் கிறித்துவப் பிரசாரப் புத்தகம் முதல் முதல் தமிழில் வந்தது.

   நீக்கு
  8. நினைவில் இருந்து சொல்வதால் கொஞ்சம் முன்னே/பின்னே இருக்கும். ஆனால் வரலாறு உண்மை.

   நீக்கு
 7. விசைக்குதிரை புரியவில்லையே என்று பார்த்தேன்.
  நீங்களே கவிதையாக அர்த்தம் கொடுத்து விட்டீர்கள்.
  அருமை.!!
  ஆமாம் காதலைச் சொல்வதில் தயக்கம் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய வரிகளில் எழுதினாலெப்படியிருக்குமென்றொரு முயற்ணி செய தேன்!

   நீக்கு
  2. எத்தனை இடங்களில் எழுத்துப் பிழை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. மன்னிக்கவும்.  ஆட்டோவில் பயணித்துக் கொண்டே தட்டச்சியது!

   நீக்கு
 8. ஆரண்யா அல்லியை முக நூலில் பார்த்திருக்கிறேன்.
  அவர் சொல்லும் முறையில் கொத்தமல்லி
  விதைத்தால் நன்றாக வருகிறது என்று இன்னோரு தோழி சொன்னார்.
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மெதட்டில்தான் நான் துளசிச் செடியையும் வளர்க்கணும். என் மண் தொட்டியில் உள்ள செம்மண் களிமண் போல ஆகிவிட்டது. மணலுக்கு எங்கு போவது?

   கிட்டத்தட்ட ஒரு மாதமானபிறகு மிகச் சிறிய துளசிச் செடிகள் வளர்ந்துள்ளன

   நீக்கு
  2. மண்ணுக்கு அவ்வப்போது போஷாக்கு தரவேண்டும், உரம் போட வேண்டும்...

   நீக்கு
 9. பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் கூட பத்திரிகையில் வந்தால்தான் நம்புவது என்கிற மனநிலையில்தான் பலர் இருந்ததால் பத்திரிகைத்துறை வளர்ந்தது என்கிறார் சோமலெ. சிறந்த கட்டுரைகளை விடவும் பொழுது போக்குத் துணுக்குகளை, சிறுகதை, நாவல்களையும் மக்கள் ஆர்வமாகப் படிக்கிறார்கள் என்கிறார்.//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  நல்ல கணிப்பு. இப்போது வரும் செய்திப் பத்ரிக்கைகள் அதை நிரூபிக்கின்றன.

  சோமலே யின் எழுத்தை கலைமகளில் படித்திருக்கிறேன் என்று
  நம்புகிறேன். நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிப்பவர்களைக் கவர்வதற்காக பெண்களின் பெயர்களை போட்டுக்கொண்டு சிலர் எழுதுகிறார்கள். தினமணிக் கதிரில் எழுதும் எழுத்தாளர் ஒருவர் ஆணா பெண்ணா என்ற சர்ச்சை இருந்து வருவது உங்களுக்கே தெரியும் என்றும் சொல்கிறார்.//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

   ஹாஹஹ்ஹா. யாரோ அவர் யாரோ.

   நீக்கு
  2. சுஜாதாவா, புஷ்பா தங்கதுரையா?!

   நீக்கு
  3. புஷ்பா தங்க துரை தான்! அவரைத் தான் "சோமலெ" சொல்லி இருக்கார்.

   நீக்கு
  4. அப்படிதான் நானும் நினைத்தேன்.  ஆனால் இவர் சொல்லி இருக்கும் கால கட்டத்தில் சுஜாதாவும் எழுதிக் கொண்டிருந்தாரே என்று சந்தேகம் வந்தது.

   நீக்கு
  5. சுஜாதா அப்போது அவ்வளவு ஆழமாகப் பெண்களை வர்ணிக்க ஆரம்பிக்கலைனு நினைக்கிறேன். :)))) புஷ்பா தங்கதுரையின் "சிவப்பு விளக்கு"க் கதைகள் பிரபலமாக ஆகவும் அனைவரும் கண்டித்தனர். அதனால் தான் அவர் ஶ்ரீவேணுகோபாலன் என்னும் பெயரில் பக்தித் தொடர்கள் முக்கியமாய்த் திருவரங்கன் உலா எழுத ஆரம்பித்தார் எனச் சொல்லிக் கேள்வி.

   நீக்கு
  6. சுஜாதா ஒரு ஆண்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் வந்ததில்லை.  இந்த புஷ்பா தங்கதுரை மேட்டர் சாவி செய்த கிம்மிக்ஸ்! சும்மாவானும் அவராக இது பெண்ணா? ஆணா? என்று கிளப்பி விட்டார். அதைப் பார்த்து விகடனிலும் குமாரி பிரேமலதா என்று ஒருவரை உருவாக்கினார்கள். அவர் யார்? என்று நான் கேட்டதற்கு எ.பி. ஆசிரியர்கள் குமாரி பிரேமலதா யார் என்று கேட்கிறீர்களே? W.R.ஸ்வர்ணலதா என்று ஒருவர் இருந்தாரே? அவர் யார் என்று தெரியுமா? என்று எதிர் கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் டபாய்த்து விட்டார்கள். உங்களுக்காவது குமாரி பிரேமலதா யார் என்று தெரியுமா? 

   நீக்கு
  7. ஏன் யாருக்கும் இந்திரா சௌந்தரராஜன் நினைவுக்கு வரவில்லை? நான் லட்சுமி சுப்பிரமணியம் பெண் என்று நினைத்தேன். 

   நீக்கு
  8. //நான் லட்சுமி சுப்பிரமணியம் பெண் என்று நினைத்தேன். //

   அப்போ இல்லையா?!

   நீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 11. காலை வணக்கம் அனைவருக்கும்.

  நீங்கள் நடைப்பயிற்சியைத் தொடர்கிறீர்களா? அந்தண் செய்தியையா மாமா உங்களிடம் சொல்ல நினைத்தது? அதை ஏன் மாமா உங்களிடமே சொல்லவில்லை?

  கனவில் வந்துநம்மிடம் கம்யூனிகேட் செய்வது உண்மை என நான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை... நான் முன்னரே கூட நடைப்பயிற்சி செய்ததில்லை. எனவே செய்தி அதைப்பற்றியதாக இருக்க வாய்ப்பில்லை!

   நீக்கு
 12. பயண இலக்கியவாதியைப் பற்றி எழுதி நீங்கள் புண்ணியம் தேடிக்கொண்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 13. சின்ன வயதில் ஆவலோடு படித்த மணியனின் வெளிநாட்டுப் பயணக் கட்டுரைகளை மீண்டும் படிக்க ஆசை. எங்கு கிடைக்கும் எனத் தெரியவில்லை.

  ஒருவேளை, தமிழ்வாணன் நாவல்களை இப்போது படித்தபோது தோன்றிய மாதிரி, போரடித்துவிடுமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. இப்போது சுவாரஸ்யப்படும் என்று தோன்றவில்லை. என்னிடம் இதயப் பேசுகிறது பைண்டிங் பார்த்த ஞாபகம்

   நீக்கு
  2. பதின்ம வயதில் நான் ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினேன். "இதயம் பேசுகிறது"முதல் பாகம் புத்தகமாக! யாரிடம் கொடுத்தேனோ அல்லது எடுத்துச் சென்றார்களோ! போன இடம் தெரியலை. :(

   நீக்கு
  3. ஆறு மாதங்களுக்கு முன் கண்ணில்பட்டபோது கொஞ்சம் படித்தேன்.  அவர் எழுதி இருப்பதைவிட இப்போது விஷயம் நம் அனைவருக்கும் நிறைய தெரியும்.  இடங்களும் மாறி இருக்கும்.  

   நீக்கு
 14. ஆலயச் சிற்பங்கள்.... நாம் கீழடியைத் தோண்டணும் என்று ஆவல் கொண்டு அரசியல் சர்ச்சைகள் எழுப்புவதுபோல, நம் தமிழினத்தின் தொன்மையான ஆலயங்களைப் பாதுகாப்பதில் கடுகளவும் ஈடுபாடு காட்டுவதில்லை.

  மான்செஸ்டர் அருகில், சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவிஞன் வீட்டை பாதுகாத்து சுற்றுலாத் தலமாக ஆக்கி வைத்திருக்கும் பிரிட்டனை நினைத்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். யாருக்கும் அக்கறையில்லை.

   நீக்கு
  2. முக்கியமாய்த் தமிழ்நாட்டில். இந்த விஷயத்தில் கர்நாடகம் எவ்வளவோ பரவாயில்லை.

   நீக்கு
  3. ஆம்.  ஹளபேடு (சரிதானே?) போன்ற இடங்கள் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. 

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹளபேடு மட்டுமா? ஹம்பி, பாதாமி, சிருங்கேரியில் சில இடங்கள், இன்னும் பல விஜயநகர சாம்ராஜ்யத்துக் கோயில்கள்!

   நீக்கு
  5. எனக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை.  தெரியாது.  அதுதான்!

   நீக்கு
 15. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்,நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 16. கனவுகளைப் பற்றி என்ன சொல்வது? எனக்கெல்லாம் காலை எழுந்ததும் செய்ய வேண்டிய வேலைகள் பற்றித் தான் கனவு மாதிரி வரும். அதிலும் தாமதமாய் எழுந்திருக்கும் அன்று. இன்று காலை ஐந்தே முக்காலுக்கு ரங்க்ஸ் என்னை எழுப்பும்போது பல் தேய்த்துக் குளிப்பது போல் கனவு. அல்லது செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டி எழுப்பும் உள் மனம். ஏதோ ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியான சாதாரண கனவுகள் நிறைய வருவதுண்டு... இது ஸ்பெஷலாக்கும்!

   நீக்கு
 17. சில சமயம் என் அம்மா வருவார். ஆனால் கனவா/நனவானு தெரியாது. அப்படி இருக்கும். ஶ்ரீராமின் இரண்டாவது பையரின் முதலைக்கனவு அச்சுறுத்துகிறது. அதோடு மாமா என்ன சொல்ல வந்தார் என்பதை ஶ்ரீராமிடமே ஏன் சொல்லவில்லை? எப்படி இருந்தாலும் நடப்பது தான் நடக்கும். என்றாலும் எனக்கே மனம் அலை பாய்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான்.. நான் இதில் இன்னும் இரண்டு விஷயங்கள் சொல்லவில்லை..

   நீக்கு
  2. எல்லாவற்றையும் உடைச்சுச் சொல்லிடுங்க! கெடுதலாக இருந்தால் வெளியே சொல்லிட்டால் நடக்காது என்பார்கள்.

   நீக்கு
  3. சொல்வதில் சங்கடம் இருக்கிறதே...!

   நீக்கு
  4. என்னவோ போங்க! :( காலையிலிருந்து முதலையே மனதில் சுற்றுகிறது. :(

   நீக்கு
  5. விடுங்க.. நான் ஆபீஸ் போகும் வழியில் முதலை வர சான்ஸ் இல்லை!

   :))

   நீக்கு
 18. குறிஞ்சிப்பாட்டு எதைச் சொல்கிறது என்பதை என்னால் புரிஞ்சுக்க முடியலை. மூளை வேலை செய்யலையோ! நாய் ஜோக் முன்னரே படிச்சிருக்கேன். சோமலெ கட்டுரைகள் கலைமகளில் தான் நானும் படித்த நினைவு. கீழ்வேளூர்ச் சிற்பங்கள் பற்றியும் முன்னரே படிச்சிருக்கேன். ஆனால் அங்கே போனப்போ அதை எல்லாம் நினைவு வைத்துக் கொண்டு பார்க்கத் தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //குறிஞ்சிப்பாட்டு எதைச் சொல்கிறது என்பதை என்னால் புரிஞ்சுக்க முடியலை./

   "ரொம்ப அலட்டிக்காதே...   ஓடிடப்போறான்...  உடனே நீயும் அவனை விரும்புவதைச் சொல்" என்று தலைவியிடம் அவள் தோழி சொல்வதாய்ப் பாடல்!

   நீக்கு
  2. பின்னர் புரிந்து கொண்டேன்.

   நீக்கு
 19. ஆவியாக வந்து பேசமுடியாமல் மாமா கனவில் வந்து பேசுகிறாரோ? படிக்கும் போது கலாம் ஐயா சொன்ன "கனவு காணுங்கள்" என்பது நினைவுக்கு வந்தது. 

  நான் ஒரு விசித்திரமான கனவு கண்டேன். நான் இறந்துவிடுவது போலவும் என்னுடைய உடல் ஹாலில் கிடத்தப்பட்டு இருப்பது போலவும் சுற்றிலும் உறவினர்கள் நிற்பது போலவும் கனவு கண்டேன். இறப்பது உறுதி என்றாலும் இதற்கு அர்த்தம் வேறு ஏதேனும் உண்டோ? 

  சோமலே பயணக்கட்டுரைகள் படித்திருக்கிறேன். அதை தொடர்ந்து இதயம் பேசுகிறது மணியன் கட்டுரைகளும். 

  நீங்கள் சங்க இலக்கியத்தை ரசிப்பவர் என்பது இப்போது தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி.

   சங்க காலத்திற்கு பொருந்தும் உவமைகள் தற்காலத்திற்கு பொருந்தவில்லை. இட்ட குதிரைக்கு பதில் ராக்கெட், வளைந்த மூங்கிலுக்கு பதில் ஸ்பிரிங். பசுங்கழைக் குன்ற நாடனுக்கு பதில் வானுயர அடுக்கு மாடிக் கட்டிடங்கள் உள்ள நாடன் எனக்கொள்ளலாம்.

  கோவிலுக்கு போகின்றவர்கள் எத்தனை பேர் நின்று நிதானமாக சிற்பங்களை பார்க்கிறார்கள்? வழிபடுவதே முக்கிய நோக்கம். சுலபமாக சீக்கிரம் தடையின்றி வழிபட பணம் செலவழிப்பவர்கள் நாம். அதாவது பொறுமையின்மை நமது எல்லோருடைய குணம். சரிதானே? 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமா ஏதோ சொல்ல முயல்வதாய்த்தான் எனக்கும் தோன்றியது.  இதையெல்லாம் நம்பலாமா என்கிற குழப்பமும் கூடவே!

   பொதுவாக இறந்து விடுவது போல கனவு கண்டால் ஆயுசு கெட்டி என்று சொல்வார்கள்.

   சங்க இலக்கியத்தை ரசிப்பவன் என்று சொல்லி விட முடியாது.  வீட்டில் ஒரு புறநானூறு பாடல் புத்தகம் தொகுப்பு இருந்தது.  அதிலிருந்த பாடல்களுக்கு கொடுக்காவே பொருளும் இருந்தது.  அதை மடக்கிப்போடும் அகவிதையாகச் சொல்ல முனைந்தேன்!

   கோவில் நான் பக்திக்காக செல்வதைவிட தொன்மைக்காகதான் செல்வேன்.

   நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

   நீக்கு
  2. நான் தனியாகப் போனால் தான் எல்லாவற்றையும் ரசிக்க முடியும். தாராபுரம் கோயிலில் நம்மவர் அவசரப் படுத்தி விட்டார். அதே போல் திருநெல்வேலியிலும்! கூட வருகின்றவர்களுக்கும் இதில் ரசனை இருக்கணும். பெரும்பாலும் நான் மெதுவாகத் தங்கித் தங்கித் தான் போவேன். அவர் எங்கேயோ போய்க் கொண்டிருப்பார். :)))))

   நீக்கு
  3. அதேதான்...   எவ்வளவு புகைப்படம் எடுத்தாலும் ஆர்வம் தீராது.

   நீக்கு
 20. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 21. கனவுகள் ஏன் இப்படி வருகிறது என்று தெரியவில்லையே!

  மகன் கண்ட கனவு பயமாக இருக்கிறது.
  கெட்ட கனவு வந்தால் எழுந்து விபூதி பூசிஙிட்டு தண்ணீர் குடித்து விட்டு படுக்க சொல்வார் அம்மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதின் குழப்பங்கள் கனவுகளாக உருவெடுக்கின்றனவோ என்னவோ..  ஆனால் இப்படிப்பட்ட குழப்பம் எதுவும் என்னிடம் இல்லை.  பொதுவான அயர்ச்சி மட்டும்தான் இருக்கிறது!!

   நீக்கு
 22. கனவு ஒரு புதிர் தான்... இளையவன் Animal Planet அதிகம் பார்ப்பாரோ...?

  பயண இலக்கியவாதி மற்றும் சோமலெ இவற்றின் இணைப்புகளை வேறு வண்ணத்தில் மாற்றினால், அவை இணைப்புகள் என்று தெரியும்... அல்லது
  இணைப்பின் சொற்களுக்கு முன் →
  இணைப்பின் சொற்களுக்கு பின் ←

  ஆமாம், இவ்வளவு அலட்டிக் கொண்டது யார்...? "ஒரு ஜோக்"-கில் இடைமறித்த காதலி தானே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளையவர் அனிமல் பிளானெட் எல்லாம் பார்ப்பதில்லை.  அவர்களுக்கெல்லாம் PS4 தான்!

   //இவற்றின் இணைப்புகளை வேறு வண்ணத்தில் மாற்றினால்//

   மாற்றிவிட்டேன்.

   //"ஒரு ஜோக்"-கில் இடைமறித்த காதலி தானே...?//

   காதலியேதான்!

   நீக்கு
 23. தொன்மையான கோயில்களுக்குச் சென்றால் சந்நிதியில் வழிபட்ட பின்னர் சிற்ப வேலைப் படைகளைக் கவனிப்பது வழக்கம்...

  முடிந்தால் படம் பிடிப்பேன்.. நெல்லையப்பர் கோயிலில் படம் எடுக்க அனுமதி கேட்டபோரு ஏளனமாகச் சிரித்தார்கள்.. குடந்தை ராமஸ்வாமி கோயிலில் செல்போனை பிடுங்க வந்தார்கள்..

  இதெல்லாம் சில ஆண்டுகளுக்கு
  முன் நடந்தவை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடந்தை இராமஸ்வாமி கோவில் முன் மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் உண்டு. நான் படம் எடுக்க அனுமதி கேட்டபோது, கோவிலுக்காக 100 ரூபாய் கொடுக்கச் சொல்லி அதற்கு ரெசிப்டும் தந்தார்கள். அவர்களுடைய ஆதங்கம், கோவில் சிற்பங்களைப் படமெடுக்கிறார்கள், கோவிலுக்கு ஏதாவது நிதி கொடுப்போம்னு நினைப்பதில்லை என்று அப்போது சொன்னார்கள். என் அனுபவம், அங்கு உள்ள (எந்தக் கோவிலிலும்) ஆபீஸில் கேட்டால், பெரும்பாலும் 50 ரூ போன்று வாங்கிக்கொண்டு படங்கள் எடுக்க அனுமதித்துவிடுகிறார்கள். நெல்லையப்பர் கோவிலிலும் படமெடுக்கத் தடை சொல்வதில்லை. பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும். ஆராவமுதன் கோவிலில், கோவில் உள் பகுதியில் (அதாவது தாயார், பெருமாள் சன்னிதிகள் அமைந்திருக்கும் பகுதி) படமெடுக்க அனுமதிப்பதில்லை.

   எல்லாக் கோவில்களிலும் மூலவர் சன்னிதியைத் தவிர மற்றவற்றைப் படங்கள் எடுக்க அனுமதிக்கிறார்கள்.

   இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் இருந்துமே... மூலவர் படங்கள் எடுத்து வெளியில் வந்துவிடுகின்றன.

   கேரளக் கோவில்களில் உட் பிரகாரங்களில் அனுமதி கிடையாது. திருநாவாய் (என்று நினைவு) கோவிலில் உட் பிரகாரத்தில் படங்கள் எடுத்த போது, ஒருவர் வந்து அந்தப் படங்கள என் ஐபோனிலிருந்து நீக்கி எனக்குச் சங்கடத்தைத் தந்தார். (பிறகு அந்தப் படங்களை மீட்டுவிட்டேன் என்பது வேறு விஷயம்)

   நீக்கு
  2. அன்பின் நெல்லை..
   நடந்ததைத் தான் இங்கே சொல்லியிருக்கின்றேன்...

   குடந்தையில் கோயில் முன் மண்டபத்தில் படம் எடுத்த போது அங்கிருந்த அலுவலகத்தின் உள்ளே இருந்து ஒருவர் ஓடி வந்தார்..

   நெல்லையப்பர் கோயிலில் படம் எடுக்க அனுமதியே இல்லை என்று சொல்லி விட்டார்கள்..

   தஞ்சை பெரிய கோயிலிலும் வைத்தீஸ்வரன் கோயிலிலும் கூட அந்த மாதிரி தாண்டவராயன்களைக் கண்டிருக்கிறேன்...

   சிவலிங்கத்தைப் பற்றிப் பிதற்றுவர்கள் கோயிலுக்குள் வந்தால் மட்டும் ஏகத்துக்கு மரியாதை கிடைக்கும்..

   மூலஸ்தானத்தைப் படம் எடுக்கக் கூடாது என்பது எளிய பக்தனுக்கு மட்டுமே..

   ஆனால் - மூலஸ்தானத்தைப் படம் பிடித்து Fb ல் போடுபவர்கள் அங்குள்ளவர்களே!..

   நீக்கு
  3. நெல்லை சொல்வதைப் பார்த்தால் வைணவக் கோயில்களில் ஆள் பார்த்து விடுகிறார்கள் என நினைக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலில் நான் எடுத்த சிற்பங்கள் பற்றிய படங்களை எல்லாம் அழித்து விட்டார்கள். பின்னர் அவங்களுக்குத் தெரியாமல் அங்கே வரையப்பட்டிருந்த ஓவியங்களைக் கொஞ்சம் ரகசியமாய் எடுத்துக் கொண்டேன். திருவட்டாறு கோயில்/திருவனந்தபுரம் கோயிலில் எல்லாம் காமிரா உள்ளேயே வரக்கூடாது. :( சென்னையில் உள்ள ஓர் கோயிலில் படம் எடுத்தப்போப் பார்த்துட்டு வந்து காமிராவைப் பிடுங்கிக் கொண்டு அவங்க வைத்துக் கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தார்கள். இப்படி எத்தனையோ! எங்க பையர் தஞ்சைக்கோயிலில் படம் எடுக்கையில் அங்கிருந்த ஊழியர் காமிராவை வாங்கிப் படங்களை அழித்துவிட்டுத் திரும்பக் கொடுத்தார்! :( அதே சமயம் வேறு சிலர் படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

   நீக்கு
  4. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலேயே எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.

   நீக்கு
  5. மீனாக்ஷி கோயிலுக்குள் காமிராவைக் கொண்டே போக முடியாதே! 2,3 முறை காவல்துறையினர் பிடுங்கி வைத்துக் கொண்டு திரும்பிச் செல்லும்போது கொடுத்தார்கள்.

   நீக்கு
 24. கனவுகள்.எவ்வளவோ சொல்லலாம். அவை ஏன், எப்படி நிகழ்கின்றன.. குறிப்பிட்ட நாளில், சமயத்தில் ஏதேனும் சொல்ல முயற்சிப்பதாகத்தான் சில சமயங்களில் தோன்றுகிறது.

  உங்கள் மாமா அடிக்கடி வந்து ஏதோ சொல்லத்தான் முயற்சிக்கிறார். அவர் ஏன் என்னிடம் நேரிடையாகச் சொல்லவில்லை..அங்கேபோய் ஏன் சொன்னார் என்பது இந்த உலக விசாரணை. மாமா இதற்கெல்லாம் பதில் சொல்லமாட்டார்!

  முதலைக் கனவு - ஆயுசு கெட்டி (உங்களுக்கு!) என வைத்துக்கொண்டு நகருங்கள்.. இப்படியெல்லாம் காணக்கூடாது கனவு எனப் பையனை எதற்கும் எச்சரித்துவையுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்படியெல்லாம் காணக்கூடாது கனவு எனப் பையனை எதற்கும் எச்சரித்துவையுங்கள்!//

   ஹா..  ஹா...  ஹா....   அபப்டியே ஆகட்டும்.  எச்சரித்து விடுகிறேன்!!

   ஏதோ ஒன்று நிகழ்ந்தபின் மாமா என்ன சொல்ல வந்தார் என்று புரியலாம்.  இப்போது புரியக்கூடாது என்பதும் விதியோ என்னவோ!

   நீக்கு
 25. kகனவுகள் நிறைய கான்பதுண்டுசில பதிவுகளாகி இருக்கின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி எம் பி ஸார்...   இங்கே நானும் நிறைய பகிர்ந்திருக்கிறேன்.

   நீக்கு
 26. கனவுகள் தினந்தோறும் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
  பெரும்பாலும் காலை எழுந்ததும், நினைவிற்கு வருவதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி மறந்து போகும் கனவுகள் பற்றி கவலையே இல்லையே...   நினைவில் நின்று பயமுறுத்துபவைதானே எனக்கு!

   நீக்கு
 27. எனக்கும் குடந்தை ராமசாமி கோவிலில் மோசமான அனுபவம்தான். நான் புகைப்படம் எடுப்பதை பார்த்த ஒருவர் அங்கிருந்த செக்யூரிட்டி போன்றவரிடம்,"அவங்க பாட்டுக்கு போட்டோ எடுக்கிறாங்க, நீங்க பேசாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்" என்று என்னவோ நான் அவர்கள் வீட்டு சொத்தை பிடுங்குவது போல   சத்தம் போட்டார்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது நிறைய கோவில்களில் அப்படிதான் செய்கிறார்கள்.

   நீக்கு
 28. வழக்கமான வியாழன் பதிவு போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான பதிவு. குறிஞ்சி... ஹூஹூம்! புரியவேயில்லை. உங்கள் கவிதை நன்று!நாய் ஜோக் சிரிப்பு வந்தாலும், பொக்கிஷ ஜோக்கிற்காக மனம் ஏங்குகிறது. யானை பிரசவ சிற்பம் தராசுரத்திலும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறிஞ்சி விளக்கம் கீதா அக்காவுக்கு கொடுத்திருக்கிறேன். பொக்கிஷ ஜோக் அடுத்த வாரம்!

   நீக்கு
 29. இதென்ன இப்படி ஒரு கனவு உங்கள் மகனுக்கு? அவனை கஜேந்திர மோட்சம் கதையை படிக்கச் சொல்லுங்கள், அல்லது கேட்கச் சொல்லுங்கள். கெட்ட கனவின் பாதிப்பு விலகும். ஏதாவது டிராகுலா படம் பார்த்து விட்டு படுத்துக்கொண்டாரா? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா...ஹா...   பல்வேறு திசைகளிலிருந்தும் தகவல்கள் ஒரே திசைக்கு வருகின்றனவோ...!

   நீக்கு

 30. 1578 ல் புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சகம் ஏற்பட்டாலும், 'தமிழ்ப் பத்திரிகை' என்கிற பெயரில் முதல் தமிழ் மாதப் பத்திரிகை 1831 ல்தான் தோன்றி இருக்கிறது. அடுத்த 28 மாதங்களில் 'தினவர்த்தமானி' என்கிற வார இதழ் தோன்றி இருந்திருக்கிறது. இவை இரண்டுமே கிறிஸ்துவப் பிரச்சாரத்திற்காக தோன்றியவை. 1892ல் தொடங்கப்பட்ட 'விவேக சிந்தாமணி' தான் பல அறிவுக் கட்டுரைகளைத் தரும் பத்திரிகையாகத் தோன்றியது.//
  கிறிஸ்துவ பிரச்சாரத்திற்கு தோன்றியது என்று படித்தவுடன் தரங்கம் பாடியில் "சீகன் பால்கு" நினைவு வந்து விட்டது.


  ஜெர்மனி நாட்டில் பிறந்து, டென்மார்க் நாட்டின் திருச்சபை சார்பாக கிறித்துவ சமயப்பிரச்சாரம் செய்ய கி.பி 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தார். முதன்முதலில் இந்தியாவில் தமிழில் அச்சு இயந்திரம் செய்து அச்சிட்டார். அந்த அச்சு இயந்திரம் மியூசியத்தில் உள்ளது. சீகன்பால்கு பைபிளை தமிழில் முதலில் மொழிபெயர்த்தார். தரங்கம்பாடியில் ’ஜெருசலம் சர்ச்’சைக் கட்டினார்.

  தரங்கம் பாடி சென்று இருந்த போது இவரைப்பற்றி படித்து பகிர்ந்தேன் .

  பதிலளிநீக்கு
 31. தினமலர் செய்தி உங்கள் கவிதைகள், மற்றும் நாகபட்டினம் கோவில் யானை பிரசவ படம் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 32. வியாழன் பதிவில் யாரும் தங்கள் பின்னூட்டங்களில் குறிப்பிடாத விஷயம் ஏதேனும் இருந்த்தால் தாமதமாக வந்து அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சமீப காலமாக ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

  இந்த வியாழனுக்கு அப்படியான ஒன்று இது:

  இன்று பிரபல எழுத்தாளர் ஜெகச்சிற்பியனின் புகைப்படம் காணக்கிடைக்கிறதே, அது எதற்காக?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா....   சோமலெ என்று தேடியதும் கிடைத்த படத்தைப் போட்டிருக்கேன்.  ஜெகசிற்பியனா அது!  அதுவும் தினமணி பக்கத்தில் வெளியான படம்.  கொடுத்துள்ள இணைப்பைச் சுட்டி படித்திருந்தீர்களானால் கண்டு பிடித்திருப்பீர்கள்!

   நீக்கு
 33. நோக்கம்:

  எபி வாசகர்கள் அறிய வேண்டும் என்பது தான்.

  பதிலளிநீக்கு
 34. இதனால் மேலோட்டமாகவே பதிவுகளை வாசிப்பதும் கருத்து சொல்வதும் குறைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

  பதிலளிநீக்கு
 35. கடைசி சிற்பம் - என்ன ஒரு கலைநயம்.

  கனவு குறித்த தகவல்களும் எண்ணங்களும் சிறப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!