வெள்ளி, 9 ஜூலை, 2021

வெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்

 கவிதையிலேயே பேசுவது நோயாகுமா?  தொடுதல் பாவமா? 

அந்த மனநல விடுதியில் இருக்கும் பெண் தன்னை இரண்டு விதமாய் உணர்கிறாள்.  ஒன்று கவிதையிலேயே பேசுவாள்.  இன்னொன்று ஊமை.  அங்கு வந்திருக்கும் இளைஞன் டேவிட், யாராவது தொட்டாலே சுருங்கிப் போவான்.  இந்த இருவரும் சந்தித்து பழகி, பொறாமை, சந்தேகம், நேசம் உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிக்குவியலுக்குப்பின் அந்தப் பெண் ஊரைவிட்டு ஓடிவிட, டேவிட் அவள் என்று சென்றிருப்பாள் என்பதை யூகித்து சரியாய்ச் சென்று அவளை அடைகிறான்.  அங்கு அவள் முதன்முறையாக 'உரை'யாடத் தொடங்குகிறாள்.  இவனும் முதன்முறையாக அவளைத் தொடுகிறான்.

1962 ல் வெளியான டேவிட் லிசா திரைப்படம்தான் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படக்கதைக்கு இன்ஸ்பிரேஷன்.  ஆனால் இதில் 'இந்தியத்தன்மையை' நிறையவே புகுத்தி இருப்பார் ஸ்ரீதர்.   பாவம், சிறு பெண் ஜெயலலிதாவை கடைசியில் வெண்ணிற ஆடைதான் விதி என்று சொல்லி முடித்து விடுவார்!

ஸ்ரீதர் தனது கடைசிக் காலங்களில் ஜெயலலிதா தன்னை சரியாக மரியாதை செய்யவில்லை என்கிற எண்ணம் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

ஸ்ரீதர் பணக்கஷ்டத்தில் மூழ்கி தத்தளித்தபோது ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார்தான் எம் ஜி ஆரை வைத்து படமெடுக்க ஆலோசனை சொன்னாராம்.  அப்படி எடுக்கப்பட்ட படம்தான் உரிமைக்குரல்.  அப்புறம் மீனவ நண்பன்.

அவர் 1965 ல் வெண்ணிற ஆடை படத்தை வெளியிட்டார்.  ஸ்ரீகாந்த்,  ஜெயலலிதா,நிர்மலா, மூர்த்தி ஆகியோருக்கு இதுதான் முதல் படம்.  ஜெயலலிதா கையில்லாத ரவிக்கை அணிந்து அருவியில் குளிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பதால் இந்தப் படத்துக்கு 'A" சர்டிபிகேட் கொடுத்தது சென்சார்!  

கண்ணதாசன்- விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில் இனிய பாடல்கள் கொண்ட படம்.

பாடல்களில் பி சுசீலாவின் ராஜாங்கம்.  அம்மாம்மா காற்று வந்து ஆடைதொட்டுப் போகும், என்ன என்ன வார்த்தைகளோ, நீராடும் கண்கள் இங்கே, கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச்சொல்ல.. என்று தனி ராஜ்ஜியம்.  

இத்தனை பாட்டும், ப்ளஸ் பி பி ஸ்ரீனிவாஸ் ஜானகி பாடும் சித்திரமே நில்லடி பாடலும் கூட பிடிக்கும் என்றாலும் எனக்குப் பிடித்த சிறந்த இரண்டு நான்கு  பாடல்களை இங்கு பகிர்கிறேன். 

இந்தப் பாடலின் ஆரம்ப இசை.  அப்புறம் சரணத்தின் கடைசி வரிகள்...  மொத்தமாக பாடல் வரிகள்..

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணித் துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா

நிலவே உன்னை அறிவேன் அங்கே
நேரே ஓர் நாள் வருவேன்
நிலவே உன்னை அறிவேன் அங்கே
நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லை பனி போல் நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா உன்னன் நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொல்வதா


இந்த பாடல் சாதாரண இசையுடன் தொடங்கினாலும் சுசீலாம்மாவின் குரல்தான் இந்தஹப் பாடலை தூக்கி நிறுத்துகிறது என்று தோன்றும்.  சரணங்கள்தான் பாடலின் சுவை.

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் 
பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் 
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும் 
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்

யாரோ வந்து நேரே என்னை மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ 
நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ 
தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை 
தேடி சொல்லாமல் கொள்ளாமல் 
துள்ளும் இன்பம் கோடி

ஏதோ இன்பம் ஏதோ தந்து    என்னைத் தொட்டுச் செல்லும் வெள்ளமே  

தானே வந்து தானே தந்து  தள்ளித் தள்ளிச் செல்லும் உள்ளமே 

அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம் 

அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்


இந்தப் பாடலில் சுசீலாம்மா கொஞ்சமே கொஞ்சம் எல் ஆர் ஈஸ்வரி சாயலில் பாடலை ஆரம்பித்திருக்கிறாரோ என்று தோன்றும்.  இந்தப் பாடலிலும் சரணங்கள்தான் பாடலின் பலம்.

நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ

காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது
நிம்மதி ஏது

இனம் அறியாமல் நான் இருந்தேனே
மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே


எனக்கு இந்தப் படத்திலேயே மிகவும் பிடித்த பாடல் இதுதான்.  கண்ணன் பேரைச் சொல்லி எழுத்தச் சொல்லும் பாட்டென்றால் கண்ணதாசனுக்கு கரும்பு சாப்பிடுவது போல.  

வரிகள், ஆடல், பாடல் எல்லாமே அமர்க்களமாக அமைந்த பாடல்.  ராணுவ வீரர்கள் நலநிதிக்கு நிதி திரட்ட சிவாஜி கணேசன் ஏற்பாடு செய்து குழுவில் இந்தப் பாடலைத்தான் ஜெயலலிதா அந்நாள் ஜனாதிபதியின் முன் பாடி ஆடினார்.   

பொதுவாகவே சுசீலாம்மாவின் குரல் இனிமைக்கு ஈடேது?

கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல 
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல  
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல 
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள 
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல 
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல

தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன 
தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன 
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன 
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன 
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன 
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் 
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் 
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் 
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்  
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம் 
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்  

175 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம்.

  நீராடும் கண்கள் - பாடல் மாத்திரம் நினைவுக்கு வரலை. பிறகு காணொளி பார்க்கணும்.

  மற்ற மூன்று பாடல்களும் நினைவை விட்டு அகலாதவை. பாடல்களோடு சேர்த்துக் கொடுக்கின்ற விஷயங்கள் வெள்ளிப் பகுதியை ரசனைமிக்கதாக ஆக்குகின்றன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லை வாங்க... எனக்கும் சில பாடல்களின் சரணம் எப்படி இருக்கும் என்பது மறந்து போகும். அப்புறம் போட்டுப் பார்த்து நினைவுக்கு கொண்டு வருவேன்.

   நீக்கு
 2. PET வளர்ப்பவர்கள் அதனுடன் எவ்வளவு ஒன்றியிருப்பார்கள் என்பதை அறிவேன். கீதா ரங்கனின் கண்ணழகி மறைவுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். சில நாட்கள் முன்புதான் அதற்குக் கடைசி காலம் என எழுதியிருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
   அனைவரும் என்றும் நோய் இல்லா வாழ்வு பெற இறைவன் அருள வேண்டும்.

   நீக்கு
  2. ஆம் நெல்லை.


   வணக்கம் வல்லிம்மா... வாங்க...

   நீக்கு
  3. அன்பின் சின்ன கீதாவின் செல்லம் மறைந்தது
   கேட்டு மிக வருத்தம். அந்த உடல் நிலையிலும் மாடிப்படிகளில் தாவி வருவதாகச் சொல்லி இருந்தார்.

   நீக்கு
 3. ஒருவர் சாதாரண நிலையில் இருக்கும்போது, அவருக்கு பேருபகாரம் செய்ய வேண்டும் என நினைத்தோ, இல்லை அவரை மிக மரியாதையாக நடத்துவதோ மிக மிக அரிது. இயல்பிலேயே நல்ல குணம் கொண்டவர்களை யாரும் மறக்க மாட்டார்கள்.

  ஜெ. எம் எஸ் வி அவர்களை கௌரவித்தது அப்படித்தான்.

  அந்த கேடகரியில் ஶ்ரீதர் வந்திருக்க மாட்டார். பலரை அலட்சியமாக நடத்தியிருப்பார். ஜெ. பல திரைப்படக் கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அலட்சியப்படுத்தியவர்களையோ இல்லை குற்றம் சாட்டியவர்களையோ கண்டுகொண்டதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெண்ணிற ஆடை மறக்க முடியாத படம்.
   அந்தப் படத்தில் துறந்த மங்கலங்களை
   தனி வாழ்விலும் அவர் பெறவில்லை என்றே நினைக்கிறேன்.
   முற்போக்கு ஸ்ரீதர் அந்தக் கருத்தை முன் வைக்கவில்லை.
   எங்கள் தோழிகள் பலருக்கு அந்தப் படம்
   நிறைய பாதிப்பைக் கொடுத்தது.

   நாம் யாரையாவது நோக வைத்தால் நம்மையும் யாராவது வருத்துவார்கள் இது உலக நியதி.

   நீக்கு
  2. அருமையான பாடல்கள். கவியின் சொற்களுக்கு நல்ல இசை கொடுத்து என்றும் மறக்க முடியாமல் செய்தவர்கள் மெல்லிசை மன்னர்கள்.

   இந்தப் பாடல்களை எத்தனை முறை கேட்டிருப்போமோ
   தெரியாது.
   அந்தச் சின்ன வயதிலியே எத்தனை முகபாவங்களைக் காட்டி இருப்பார்
   ஜெயலலிதா.!!
   ஸ்ரீகாந்தும் நல்ல நடிப்பு.
   சுசீலா அம்மாவின் குரல் வேறெங்கோ அழைத்துச் செல்லும்.

   நீக்கு
  3. ஹா..  ஹா...  ஹா...   தீயினார் சுட்டபுண் கேட்டகரியா?

   நீக்கு
  4. ஆமாம் வல்லிம்மா...   சில தவறான வார்த்தைகள் வரும்போது தங்கவேலு, டி எம் எஸ் போன்றோர் உபயோகப்படுத்த மாட்டேன் என்பார்களாம்.  அப்படிப்பட்ட டி எம் எஸ் கூட நானொரு ராசியில்லா ராஜா என்று பாடி காணாமல் போனார்.  இந்தப் பாடல்கள் மறுபடி மறுபடி எக்ட்கத் தூண்டுவாபை.  இதோ..  மறுபடி கேட்டுக்கொண்டே பதில் எழுதுகிறேன்!

   நீக்கு
  5. உண்மைதான் மா. இந்தப் படம் வந்த போது
   பார்க்க அனுமதி இல்லை. பிறகு தொலைக் காட்சியில் பார்த்தேன்.
   நாங்கள் அப்போது பசுமலையில் இருந்தோம்.

   நீக்கு
  6. இப்போ வர படங்கள் எல்லாம் இதை விட மோசம். அதிலும் இப்போதெல்லாம் கதாநாயகி நடிகைகளே வில்லியாகவும்/ கவர்ச்சி நடிகைகளாகவும் நடிச்சுடறாங்க. சகிக்கவே இல்லை.

   நீக்கு
  7. //இப்போதெல்லாம் கதாநாயகி நடிகைகளே வில்லியாகவும்/ கவர்ச்சி நடிகைகளாகவும்// கொடுக்கிற காசுக்கு ரசிகர்கள் பைசா வசூல் பார்த்தா உங்களுக்குப் பிடிக்காதே

   நீக்கு
 4. கொடுத்திருக்கும் நான்கு பாடல்களுமே
  மிக இனிமை. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

  கவி கண்ணதாசனின் மொழி இனிமை வேறெங்கும்
  கிடைக்குமோ தெரியவில்லை.
  எப்படித்தான் அந்த அந்த உள்ளங்களில் சென்று பார்த்து எழுதுவாரோ.

  ''நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால்
  நெஞ்சம் மாறாதிருப்பேன் இல்லையோ........

  மலர்ந்தால் அங்கு மலர்வேன்
  இல்லை பனிபோல் நானும் மறைவேன்.......

  எண்ணம் என்னும் ஆசைப் படகுச் செல்லச் செல்ல
  வெள்ளம் பெருகும் உள்ளம் துள்ளத் துள்ள...
  இந்தப் பாடல்களுக்கு இசை எப்படி அதே போல துள்ளி வந்தது!!!
  அவரும் எப்படி இத்தனை அழகாக நடித்தார்.
  எல்லாமே இனிமை.
  மிக மிக நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா..  வரிகளை ரசிப்பதா, இசையை ரசிப்பதா,  காட்சியை ரசிப்பதா..    நீங்களும் அவ்வளவையும் ரசித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

   நீக்கு
 5. டேவிட் அண்ட் லிசா என்று ஒரு படமா!!!
  நல்ல ஆராய்ச்சி.

  ஆமாம் இந்தியப் பண்பாட்டுக்கு மாற்றி விட்டார் போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா..   பாடல் சம்பந்தமாய்  தேடும்போது கிடைத்தது!

   நீக்கு
 6. வெண்ணிற ஆடை படப்பிடிப்பில் மூர்த்தி செல்வி ஜெயலலிதாவுக்கு கைரேகை பார்த்து நீ நாட்டை ஆள்வாய் என்றாராம்.

  ஜெ....வுக்கு ஆணினத்தையே பிடிக்காது காரணம் எம்.ஜி.ஆர் என்ற கிழவனிடம் சிறை பட்டு வாழ்ந்தது.

  அதன் எதிரொலிதான் அனைத்து ஆண்களையும் காலில் விழவைத்து அழகு பார்த்தது. இதில் ஸ்ரீதருக்கோ, நல்வாக்கு சொன்ன மூர்த்திக்கோ மரியாதை கிடைக்குமா ?

  பாடல்கள் எல்லாமே சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் அதே எம் ஜி அவரால்தான் அவர் வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் கிடைத்ததும்!  மூர்த்தி அப்போதே ஜோசிய மன்னரா?
   நன்றி ஜி.

   நீக்கு
  2. வெண்ணிற ஆடை மூர்த்தி பலருக்கு ஜோசியம் சொல்லிப் பலித்ததாகச் சொல்லுவார்கள். ஆனாலும் எனக்கு அவர் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவாய்ப் பிடிக்காது. அவருடன் இந்தப் படத்தில் நடித்த காமெடி நடிகை சோபிக்கவே இல்லை.

   நீக்கு
  3. வெ ஆ மூர்த்தியின் காமெடியை ரசிப்பேன்.. ஆனால் அவர், தன் பாணியாக இரட்டை அர்த்தத்தை எடுத்துக்கொண்டதால் இன்னும் பெரிய அளவில் வரவில்லை. மிகத் திறமையானவர். எனக்கு இன்னும் சில, ஆனால் முன்னணியில் வராத காமெடியன்களையும் பிடிக்கும். சிங்கமுத்து, தியாகு போன்று

   நீக்கு
  4. எனக்கு சிங்கமுத்து, தியாகு பிடிக்கவே பிடிக்காது!  மூர்த்தி வக்கீலுக்குப் படித்தவர் என்று ஞாபகம்.  ஆனால் ஆரம்பப் படத்திலிருந்தே அவர் ஜோசியம் பார்த்தாரா என்று தெரியாது.  நடிகன் படத்தில் அவர் காமெடி எனக்கு கொஞ்சம் ரசிக்கும்.

   நீக்கு
  5. ஆமாம், மூர்த்தி வழக்கறிஞராய்ப் பணியாற்றியவர் தான். ஆரம்பத்தில் இருந்தே ஜோசியமும் தெரியும் என்பார்கள்.

   நீக்கு
  6. வெ.ஆ.மூர்த்தியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது அவரது இரட்டை அர்த்த வசனங்களே... எல்லாமே சொந்த வசனங்கள்.

   இன்றுவரை அவர் உணரவில்லை.

   நீக்கு
  7. ஆமாம். அவரது இரட்டை அர்த்த வசனங்களும் வாயிலிருந்து எழுப்பும் வினோதமான சத்தங்களும் நாராசம்.

   நீக்கு
  8. வெண்ணிற ஆடை மூர்த்தி வழக்கறிஞராகப் பணியாற்றினாராற?என்று தெரியாது ஆனால் விவேகானந்தா கல்லூரியில் கொஞ்ச நாட்களில் டியூட்டர் ஆக பணியாற்றினாராம். அப்போது சோ அங்கு மாணவராம். அதை அவரே சொல்லியிருக்கிறார்

   நீக்கு
  9. சோ - 1934 ஆம் வருடம் பிறந்தவர். வெண்ணிற ஆடை மூர்த்தி 1936 ஆம் ஆண்டு பிறந்தவர். இரண்டு வயது சிறியவரான மூர்த்தி, எப்படி சோ வுக்கு டியூட்டர் ஆக இருந்திருக்க முடியும்? மேலும் இருவருமே சட்டம் பயின்றவர்கள்.

   நீக்கு
  10. கௌதமன் சார் சொல்றாப்போல் நானும் நினைச்சேன். சோ பெரியவராக இருப்பாரே என. எனக்குத் தெரிந்து மூர்த்தி வக்கீலாகப் பணி ஆற்றியவர் தான். ஶ்ரீகாந்த் அமெரிக்கன் கான்சலேட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். காஞ்சனா தான் அனைவருக்கும் தெரியும், ஏர் ஹோஸ்டஸ்! இன்னொரு ஏர் ஹோஸ்டஸ் தான் வெண்ணிற ஆடை படத்தில் மூர்த்திக்கு ஜோடியாக வந்து சோபிக்கவே இல்லை.

   நீக்கு
  11. மூர்த்திக்கு ஜோடி இன்னொரு ஏர் ஹோஸ்டஸ்ஸா?  அடடே...

   நீக்கு
  12. ஆமாம், ஆனால் அவர் பெயர் தான் மறந்துட்டேன். காஞ்சனா மாதிரி ஜொலிப்பார் என நினைத்தால் ஓரிரு படங்களிலேயே முடிந்து விட்டார். ஜெயஶ்ரீயோ என்னமோ தெரியலை. ஆனால் திரை உலகுக்காக வைத்த பெயர்னு நினைக்கிறேன். அவர் முகம் நினைவில் வருது.

   நீக்கு
  13. எனக்கு ரொம்ப சின்ன வயசுன்னால பெயர் மறக்கலை. ராஜ்யஸ்ரீயா? சமீபத்தில் அவங்க எல்லோரும், சித்ராலயா கோபுவின் 90வது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லும் காணொளியில் பார்த்தேன். காஞ்சனா, முதிர்ந்து தேஜஸோடு இருக்கிறார்கள்

   நீக்கு
  14. //சோ - 1934 ஆம் வருடம் பிறந்தவர். வெண்ணிற ஆடை மூர்த்தி 1936 ஆம் ஆண்டு பிறந்தவர். இரண்டு வயது சிறியவரான மூர்த்தி, எப்படி சோ வுக்கு டியூட்டர் ஆக இருந்திருக்க முடியும்?// இந்த தகவல் நான் எப்போதோ பேசும் படத்தில் படித்தது. அப்போதெல்லாம் வயதில் சிரியவர்களை அதிக வயது கொடுத்து பள்ளியில் சேர்ப்பது உண்டு. என்னை விட இரண்டு வயது மூத்த என் அத்தைப் பெண், ஒரு வயது மூத்த என் அக்கா, நான் எல்லோரும் ஒரே வகுப்பில் படித்தோம். என் அத்தைப் பெண்ணை ஒரு வருடம் லேட்டாகவும், என் அக்காவை சரியான வயதிலும், என்னை ஒரு வயது அதிகம் கொடுத்தும் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். மேலும் அப்போதெல்லாம் டபுள் பிரமொஷன் என்று ஒன்றும் உண்டு. அண்டெர் கிராஜுவேட் முடித்தாலே டியூட்டர் ஆகி விட முடியும், பின்னாட்களில்தான் அந்த டியூட்டர் என்பதை ஒழித்தார்கள். எனவே வெ.ஆ.மூர்த்தி, சோவுக்கு டியூட்டராக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அந்த வேலையில் அவர் ஒரு வருடம்தான் இருந்தார் போலிருக்கிறது.

   நீக்கு
  15. ஹிஹிஹிஹி, எனக்கும் வயசு கூடத் தான் கொடுத்திருக்காங்க. எஸ் எஸ் எல்சி படிக்கையில் பிரச்னை வரவே வருஷம், மாதம், தேதி எல்லாம் கூடக் கொடுத்துட்டாங்க! :)))))

   நீக்கு
  16. வெண்ணிற ஆடை படத்தில் மூர்த்திக்கு ஜோடியாக வந்து சோபிக்கவே இல்லை.//

   வெண்ணிற் ஆடை மூர்த்திக்கு ஜோடியாக வந்தவர் சைலஸ்ரீ கன்னட நடிகை. அவர் திருமலைதெங்குமரியில் கன்னட குடும்ப மருமகளாக ந்டித்து இருப்பார்.
   நிறைய படங்களில் துணை கதாநாயகியாக வந்து இருப்பார்.

   "இது மாலை நேரத்து மயக்கம்" என்று சூலமங்கலம் இசைக்கு ஆடி இருப்பார் தரிசனம் படத்தில்.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அதிகரிக்கும் தொற்றுக்குறையவும் புதிதாய்த் தோன்றாமல் இருக்கவும், மக்கள் வாழ்வில் ஆரோக்கியம் மேலோங்கவும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கணவர் எம்.ஏ முடித்தவுடன் பூம்புகார் கலைக் கல்லூரியில் டியூட்டராக சேர்ந்தார்கள். அப்போது அவர்களைவிட வயது அதிகம் உள்ள மாணவர்கள் படித்தார்கள். படித்துக் கொண்டே வேலைப் பார்த்தார்கள். முனைவர் பட்டம் வாங்கினார்கள். நிறைய வருடம் தமிழ்துறை தலைவராக இருந்து பணிநிறைவு பெற்றார்கள்.

   நீக்கு
 8. "வெண்ணிற ஆடை" படத்தில் நடிச்சவங்க அனைவருமே மதுரையில் மேலாவணி மூலவீதி "சித்ராலயா" அலுவலகம் வந்துட்டுக் கொடைக்கானல் போவாங்க. திரும்பும்போதும் அப்படித் தான். ஆகவே எல்லோரையுமே பார்த்திருக்கேன். அதிலும் ஜெயை ரொம்பக் கிட்டே இருந்து பார்த்து வியந்திருக்கேன். வெண்ணிற ஆடை நிர்மலாவும் அழகுதான் என்றாலும் அவரிடம் ஜெயிடம் இருந்த ஏதோ ஒன்று இல்லைனு தோணும். கம்பீரம்? எழில்? இருவருமே பரத நாட்டியத்தில் நிபுணர்கள். ஆனால் ஜெ நடப்பதே அப்போதெல்லாம் நடனம் போலவே இருந்தது. இந்தப் படத்தைக் கடைசி வரை பார்க்க அப்பா அனுமதிக்கவே இல்லை. பின்னர் படத்தில் ஒண்ணுமே இல்லைனு பலர் சொல்லி அதற்குப் பின்னர் சித்ராலயாவின் பாஸ் வாங்கி மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்தோம். படம் அன்னிக்குத் தான் கடைசி என நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நீங்க ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க..   ஆமாம், வெ ஆ நிர்மலாவிடம் ஏதோ மிஸ்ஸிங் என்று தோன்றும்.  அந்த புத்திசாலித்தனம்?  சுறுசுறுப்பு?  

   நீக்கு
  2. சினிமா என்பதும் மற்றும் எம்ஜி ஆர் என்பதுவும்தான் ஜெ வுக்கு மக்கள் ஆதரவிற்குக் காரணம் என நினைத்து அவரது அரசியல் எதிரிகள் லதா, வெண்ணியானை என்றெல்லாம் அவருக்கு எதிராக இறக்கிவிட்டுப் பார்த்தனர்.

   ஜெ விடமிருந்த ஆளுமையும் புத்திசாலித்தனமும் அதோடு கூடிய தன்நம்பிக்கையும்தான் அவர் அரசியலில் கோலோச்சியதற்குக் காரணம்.

   நீக்கு
  3. அதேசமயம் நிர்மலாவும், லதாவும் கூட எம் ஜி ஆரால் சீராட்டப் பட்டவர்கள்தான்!

   நீக்கு
  4. எம்ஜிஆர் கதாநாயகிகள் எல்லோருமே அவரால் சீராட்டப்பட்டவர்கள்தாம். அவருக்குத் தெரிந்திருந்தது பல கதாநாயகிகள் ஒவ்வொரு படத்திலும் இருக்கணும், ஒரே ஜோடியாக இருந்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று.

   நீக்கு
  5. வெண்ணிற ஆடை நிர்மலா முகத்தில் ஒரு சோகம் இருக்கும் அதை அவர் கூட சொன்னார் 'நான் நன்றாக தான் பேசுவேன் ஜாலியாக தான் இருப்பேன் சிரிப்பேன் ஆனால் எல்லோரும் என்னிடம் நீங்கள் ஏன் எப்பொழுதும் சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை" என்றார்

   நீக்கு
  6. பொம்மை போல இருப்பார். நடிப்பு கம்மி.

   நீக்கு
  7. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களில் வெண்ணிற ஆடை நிர்மலா நன்றாகவே நடிக்கிறார். முக்கியமாய் ஜெயகாந்தன் கதை ஒன்றில் எஸ் எஸ் ஆருடன் நடித்தது.

   நீக்கு
  8. நிர்மலா முகத்தில் களை இல்லை. அஷ்டே. மானிடருள் வெகு சிலருக்குத்தான் முகக்களை இருக்கும் (பூர்வ ஜென்ம புண்ணியம் அளவுக்கு இதைக் கொண்டு செல்வோர் உண்டு..)
   பிறவாமல் உருவானவரிடையே களை கொண்டவர் மகாலக்ஷ்மி (லக்ஷணம் வேர்) மட்டுமே என்று உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். (அவளுக்கு முகக்களை, உனக்கு தவக்களை என்று பாட்டி கிண்டல் செய்வார்)

   நீக்கு
  9. //பூர்வ ஜென்ம புண்ணியம் அளவுக்கு இதைக் கொண்டு செல்வோர்// - இது உண்மையும்கூட அப்பாதுரை சார். இன்னொன்று, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதனால்தான் சிலரைப் பார்த்தவுடன் நமக்கு நட்பு உணர்ச்சியோ இல்லை பேச ஆவலோ வரும். சிலரைப் பார்த்த உடனேயே பிடிக்காது. இந்த வாழ்வில், நாம் சென்ற வாழ்க்கையில் தொடர்பில்லாத யாரையும் அனேகமாக சந்திப்பதில்லை. அதுபோல காரணமில்லாமல் இன்னொருவருடன் நம் சந்திப்பு நடப்பதில்லை.

   அது சரி..நீங்க மோனத் தவத்தில் இருப்பதால் dhaதவக்களை என்று உங்கள் பாட்டி சொல்லியிருப்பாரோ?

   நீக்கு
  10. இருக்கலாம்.. அதற்காக பாட்டி கட்டிலின் கீழே ஒரு தேரையைப் பிடித்து அவிழ்த்து விட்டது அன்று சிரிப்பாக வெடித்தாலும் இன்றைக்கு சங்கடமாக இருக்கிறது..

   நீக்கு
 9. அநேகமாய் ஶ்ரீதர் படங்கள் எல்லாமும் பார்த்திருப்பேன். எனக்குப் பிடித்த இயக்குநர் அவர். அவரையும் அவர் மனைவி தேவசேனாவையும் கூட இரண்டு, மூன்று முறை பார்த்திருக்கேன். கோபுவும் ஒரு தரம் வந்திருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிடித்த இயக்குனர்களில் ஒருவர் என்று சொல்லலாம்!

   நீக்கு
  2. எனக்குத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிலேயே ஶ்ரீதரைத் தான்பிடிக்கும். மற்றபடி கிருஷ்ணன்/பஞ்சு, நீலகண்டன், சங்கர்(அப்போதிருந்தவர்/அதிகம் தேவர் படங்களின் இயக்குநர்) ஆரம்ப கால பாலசந்தர், எஸ்பி முத்துராமன் ஆகியோர் படங்கள் பிடிக்கும். இப்போதைய இயக்குநர்களில் யாரையுமே பிடிக்கலை. நடுவில் வந்தவர்களில் விக்ரமன் பரவாயில்லை ரகம்.

   நீக்கு
  3. எனக்கு சமீப கால இயக்குனர்களில் தரணி, சரண் போன்றோரைப் பிடிக்கும்.

   நீக்கு
  4. தரணி சரணா? கடவுளே! உங்களுக்கு விறுவிறு படங்கள்தான் பிடிக்குமோ அதற்கு கே.எஸ் ரவிக்குமார், சங்கர் போன்றவர்கள் எவ்வளவு சிறப்பாக செய்வார்களே? அந்த கேட்டகிரியில் சுந்தர் சி. கூட ஓகே தான் சுந்தர் சி யின் படங்கள் போரடிக்காது.

   நீக்கு
  5. கீதா அக்கா உங்களுக்கு விக்கிரமனை பிடிக்கும் என்றால் சேரனை கூட பிடிக்கலாம். எனக்கு சேரனைப் பிடிக்கும்.

   நீக்கு
  6. சங்கரா?  சங்கரிடம் ப்ரம்மாண்டம்தான்.  மாயக்காட்சிகள்!  சரண் படங்கள் காதல் மன்னன், அமர்க்களம், ஜேஜே போன்றவை ரசிக்கலாம்.   கே எஸ் ரவிக்குமார் கூட சொல்லலாம்.

   நீக்கு
  7. சங்கர் படங்களிலும் திரைக்கதை சிறப்பாக இருக்கும் சமீப இயக்குனர் என்று நீங்கள் சரணையும் தரணியையும் சொல்கிறீர்கள். சமீபகால இயக்குனர்கள் என்றால் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, சுதா, காயத்ரி புஷ்கர், லோகு கனகு தாஸ் போன்றவர்களை அல்லவோ குறிப்பிட வேண்டும்.

   நீக்கு
  8. இவர்கள் எல்லாம் ஓரிரு படங்களோடு சரக்கு தீர்ந்து போகிறவர்கள்!

   நீக்கு
  9. சேரனின் "பொற்காலம்" பார்த்திருக்கேன். இன்னொரு படம் "ஆட்டோகிராஃப்?" அதுவும் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். கேபிள் வாங்கிய புதுசில் கேபிள்காரங்க புதுப்படம்போடும்போது சொல்லுவாங்க. அப்படிப் பார்த்தவை இதெல்லாம். இன்னும் சில படங்களும். மற்றபடி வேறு யாரையும் பிடிக்கலை. முக்கியமாப் பா.ரஞ்சித்! சுத்தமாய்ப் பிடிக்காது! :(

   நீக்கு
  10. //பா.ரஞ்சித்! சுத்தமாய்ப் பிடிக்காது! :(//

   எனக்கும்.   சேரன் படங்களில் ஒன்றிரண்டு நன்றாய் இருக்கும்.  

   நீக்கு
  11. //இவர்கள் எல்லாம் ஓரிரு படங்களோடு சரக்கு தீர்ந்து போகிறவர்கள்!// அப்படி சொல்லிவிட முடியாது. திறமைசாலிகள்தான், அவர்களின் திறமையை பார்த்து பெரிய ஹீரோக்கள் அழைக்கும் பொழுது அவர்களால் செயல்பட முடியவில்லை.

   நீக்கு
 10. வெண்ணிற ஆடை கதைக்கரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்பதும் இப்போது தான் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல்கள் எங்கே படம் பிடிக்கப்பட்டாலும் கதா நாயகிகள்
   செருப்பின்றி ஆடுவதும்,
   நாயகர்கள் ஷூ போட்டுக் கொண்டு போவதும்
   உறுத்தும்.:)

   நீக்கு
  2. ஹா...  ஹா...  ஹா...   அதே போல பனி, குளிர்ப் பிரதேசங்களில் கூட  நாயகி குறைந்த ஆடையிலும், நாயகன் குளிருக்கு இதமாய் (அவனை யார் பார்ப்பார்?!)  முழு ட்ரெஸ்ஸுடனும்!

   நீக்கு
  3. வரும் பதிவுகளில் நீங்களாவது
   நாயகிகளின் படங்களைத் தவிர்த்து நாயகரின் படங்களைப் போடுங்கள்

   நீக்கு
  4. நாயகி இல்லாத நாயகர் படங்கள் குறைவு.  பாடல்கள் என்றால் அதனைத்தான் இத்தனை நாட்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  பி பி ஸ்ரீனிவாஸ், ஜெயச்சந்திரன், டி எம் எஸ், எஸ் பி பி என்று...  இப்போதுதான் கொஞ்சம் பெண்குரல் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
  5. இரு நாள் முன்பு குட்டி பத்மினி பேசியதைக் காணொளியில் கேட்டேன். ஒரு பாடலுக்கு பனிப்பிரதேசத்தில் அமலாவை வெறும் காலுடன் பரதநாட்டியம் ஆடவைத்து, ரஜினி ஷூவுடன் அந்தக் காட்சியில் இருப்பாராம். அமலா ரொம்ப கஷ்டப்பட்டாராம். டேக் முடிந்தவுடன், ரஜினி ஷூவின் மேல் கால்களை வைத்துக்கொள்வாராம்.

   இதெல்லாம் இயக்குநர்களின் வக்கிர புத்தியைக் காண்பிக்கிறதா என, கேஜிஜிதான் புதன் கிழமை சொல்லணும். ஹாஹா

   நீக்கு
  6. சீரியசா எடுத்துக்காதீங்க ஜீவி சார்.... அனுகூல சத்ரு ஹாஹா

   கதாநாயகர்கள் படமா? யாரு பார்ப்பார்கள்?

   நம்ம பாலசந்தரும் (இன்னும் சில இயக்குநர்களும்) வித்தியாசமா சிந்திக்கறேன் என நினைத்து கிளைமாக்சை எடுத்து படத்தை பொட்டிக்குள் அனுப்பி தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக்கொள்ள வைப்பது மாதிரியான யோசனை. (சீரியசா எடுத்துக்காதீங்க)

   நீக்கு
  7. நெல்லை நீங்கள் சொல்லியிருக்கும் படம் வேலைக்காரன். 'வா வா வா அன்பே வா' பாடல்!

   நீக்கு
  8. நான் படம் என்று சொன்னது புகைப் படங்களை, நெல்லை!

   நீக்கு
  9. ஆனால் நான் சமீப காலங்களில் பதிவில் புகைப்படங்களே போடுவதில்லை.

   நீக்கு
  10. நானும் புகைப்படங்களைத்தான் சொன்னேன் ஜீவி சார். தமன்னா....போனப்போவுது அனுஷ்கா (இருவருக்கும் பழைய படங்கள்) போன்றவற்றைப் பார்ப்பது நல்லாருக்குமா இல்லை ரஜினி, மேஜர் சுந்தர்ராஜன் இவங்கள் புகைப்படத்தைப் பார்ப்பது புத்துணர்ச்சி தருமா? ஹாஹா

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல்கள் நான்கும் அருமையானவை. எத்தனையோ முறை வானொலியில் கேட்டு மகிழ்ந்தவை. பாடலும், உங்கள் பகிர்வுமாக பதிவில் இணைத்த விதம் பாடல்களின் சுவையை கூட்டுகிறது.

  பி. சுசீலா அவர்களின் தேனான குரல் ஜாலங்கள் பாடல்களுக்கு பலம் சேர்த்திருக்கிறது. கவிஞர் கண்ணதாசனும், இசை சக்கரவர்த்திகளும் இணைந்த பாடல்கள் எதுதான் வெற்றியடையாதது..?

  பாடலுக்காக ஓடிய படங்கள், படத்துக்காக ஓடிய படங்கள் என்ன வரிசையில் இல்லாமல், நல்ல படமும், பாடல்களும் ஒருங்கே சேர்த்து சிறந்த படங்கள் என்ற வரிசையில் இந்தப்படமும் ஒன்று.

  மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆள்வார்கள் என்பது ஜோதிட பழமொழி. எல்லா மகமும் இந்தப் பலன்களை பெறுவதில்லையே ...! அதற்கென ஒரு கொடுப்பினை வேண்டும். அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர் நடித்த படங்களிலும் பிரதிபலித்தது. அவர் நினைவு என்றும் நம்முள் வாழும்.

  எல்லா பகிர்வினுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகத்தில் பிறந்த எல்லோரும் ஜெகத்தை ஆள்வதில்லையே..  என் அக்கா கூட மாசி மகம்தான்!  அதிருஷ்டம்!  ஆனால் அது அதிருஷ்டம்தானா என்று அவர்களைத்தான் கேட்கவேண்டும்.

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  2. மக நட்சத்திரம் முதல் பாதம் ஆக இருந்தால் ஓஹோ வாக இருப்பார்கள் இரண்டாம் பாதம் ஓகே 3 4 ஆம் பாதங்கள் சுமார்தான்

   நீக்கு
  3. வெண்ணிய ஆடை மூர்த்தியின் வேலையிலுமா கைவைப்பீர்கள்?

   நீக்கு
  4. வெஆ. ஆரோக்கியமாக இருக்கிறாரா இல்லை ரொம்பவும் தள்ளாமையோடு இருக்கிறாரா? சித்ராலயா கோபுவின் 90ம் பிறந்தநாளுக்கு குரலை மட்டும் அனுப்பியிருந்தார், மற்றவர்கள் காணொளியில் வந்திருந்தனர்

   நீக்கு
  5. நான் அதெல்லாம் பார்க்கவில்லை. நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா நெல்லை?

   நீக்கு
  6. எல்.விஜயலக்ஷ்மி கூட வந்திருந்தாரே! காலச்சக்கரம் நரசிம்மா போட்டிருந்தார்.

   நீக்கு
  7. // என் அக்கா கூட மாசி மகம்தான்! அதிருஷ்டம்!// இப்போதைய பெற்றோர்களில் சிலர் மக நக்ஷத்திரத்துப் பெண் எனில் வேண்டாம் என்கின்றனர். சிம்மராசி என்பதால் அவங்க ஆளுமை தான் அதிகம் இருக்கும் என்று அந்தப் பெண்ணே வேண்டாம்னு மறுக்கின்றனர். :(

   நீக்கு
  8. அப்படியா... என் அக்கா பூச்சி! ஆளுமை எல்லாம் கிடையாது!!!! இதை அக்காவும் படிப்பார்!

   நீக்கு
  9. Sorry to be rude. பைத்தியங்கள்தான், பெண்கள் (சிம்ம ராசியோ என்னவோ) ஆளுமையுடன் இருந்தால் பிடிக்காது என்று சொல்வார்கள். வீட்டில், மனைவி ஆளுமையுடன் இருந்தால், கணவனுக்கு 60 சதவிகித பிரச்சனை குறைந்துவிடும். ரொம்பவே கவலைப்படவேண்டாம். குடும்பத்தை நன்றாக நிர்வகிப்பார்கள்.

   நீக்கு
  10. மகம் ஜகத்தை ஆளும், அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானையில் தங்கம், ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் - இதெல்லாம் வேலையற்ற வீணர்களின் வார்த்தைகள். எதுவும் நடப்பதில்லை

   நீக்கு
  11. என் மகள் கூட மகம்தான். டாமினேட்டிங் கிடையாது.
   //Sorry to be rude. பைத்தியங்கள்தான், பெண்கள் (சிம்ம ராசியோ என்னவோ) ஆளுமையுடன் இருந்தால் பிடிக்காது என்று சொல்வார்கள். வீட்டில், மனைவி ஆளுமையுடன் இருந்தால், கணவனுக்கு 60 சதவிகித பிரச்சனை குறைந்துவிடும். ரொம்பவே கவலைப்படவேண்டாம். குடும்பத்தை நன்றாக நிர்வகிப்பார்கள்.// நெல்லையின் இந்த கூற்று ரொம்பவே உண்மை. ஆண்கள் வெளியே மதுரை, சிதம்பரம், என்றெல்லாம் பேசினாலும்,உள்ளுக்குள் ஆளுமை கொண்ட பெண்களை விரும்புவார்கள்.

   நீக்கு
  12. உண்மையில் அது "ஆனி மூலம்" இப்போத் தான் சமீபத்தில் இதைப்பற்றிப் படிச்சேன். அதே போல் கேட்டை நக்ஷத்திரப்பெண்கள் என்றால் வேண்டாம் என்பவர்களும் உண்டு. பொதுவாக வீட்டின் பெரியவர்கள் யாருக்கேனும் என்ன நக்ஷத்திரமோ அது ஒரு தலைமுறை தாண்டிக் கூட வருவதுண்டு. அதைப் புரிந்து கொள்ளாமல் பலரும் "ஐயோ! கேட்டையா?" என்பார்கள். வடமாநிலங்கள், கேரளத்தில், "ஆஹா! கேட்டையா?" என்பார்கள்.

   நீக்கு
 14. எனக்குப் பிடித்த பாடல்களை நான் கேட்காமலேயே அள்ளி வழங்கியதற்கு நன்றி! இவை நான்கும் ஒரே படத்திலிருந்துதான் என்று எனக்குத் தெரியாது! ரேடியோ-பாட்டு எனத் தவித்திருந்த, தேவகானமே சினிமாப்பாட்டாக இறங்கி மிதந்துகொண்டிருந்த ஒரு அபூர்வ காலமது. அத்தகைய காலகட்டத்தில் இளமையோடு, உயிர்ப்போடு இருந்தோம் என்கிற சிந்தனையே சிலிர்க்கவைக்கிறது. கண்ணதாசன்-விஸ்வநாதன்/ராமமூர்த்தி-சுசீலா - என்ன ஒரு தெய்வீகக் கலவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...  இந்த மாதிரி ரசனைப் பகிர்வுகள்தான் சந்தோஷம் கொடுக்கின்றன.  நாம் ரசித்ததை இவர்களும் ரசித்தார்கள் என்கிற எண்ணமே இன்னும் அவற்றை ரசிக்கத்தூண்டுகிறது.

   நீக்கு
 15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 16. அனைத்துமே மிக இனிமையான பாடல்களைக்கொண்ட படம் இது!
  \என்ன என்ன வார்த்தைகளோ' தான் மிக மிக புகழ் பெற்றது. ஒரு பாடலை விட்டு விட்டீர்கள். ' ஒருவன் காதலன், ஒருத்தி காதலி' என்ற பாடல்.
  இதற்கு முன் வந்த ' காதலிக்க நேரமில்லை' படத்தை, அதன் பெயர் காரணமாக பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதிக்கவில்லை. அது நன்றாக இருக்கவே அதற்கப்புறம் வந்த இந்தபப்டத்தைப் பார்க்க பெற்றோர் அனுமதித்தார்கள். படத்தில் ஸ்ரீகாந்த் வரும்போதெல்லாம் அவருக்கு நடிக்கத்தெரியவில்லை என்று ரசிகர்கள் 'ஓ' என்று கூவி சத்தம் போட்டதெல்லாம் நினைவில் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ அக்கா...   அந்தப் பாடலும் தெரியும்.  ஆனால் இந்த நான்கு பாடல்கள்தான் படத்தின் ஸ்பெஷல்.  எனவே இவற்றை மட்டும் பகிர்ந்தேன்.  முதலில் இரண்டு பாடல்கள் மட்டுமே பகிர நினைத்து, விட மனமில்லாமல் மற்ற இரண்டையும் சேர்த்து விட்டேன்!

   நீக்கு
  2. காதலிக்க நேரமில்லை படமும் அது திரையரங்கை விட்டு வெளியேறும் கடைசி நாளன்று தான் பார்த்தேன். மனோ சொன்னாப்போல் பெயரைப் பார்த்துட்டு அப்பா அனுப்பவே சம்மதிக்கவில்லை. பின்னாடி அண்ணா, தம்பி, அப்பா பார்த்ததும் பார்க்கலாம்னு சான்றிதழ் கொடுத்து நான் போகும்போது அம்மாவும், அண்ணா/தம்பியும் (இரண்டாம் முறை) வந்தார்கள்.

   நீக்கு
  3. :>))

   காதலிக்க நேரமில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

   நீக்கு
 17. இன்னிசை விருந்தாக இன்றைய பதிவு...

  எதைப் பாராட்டுவது..
  எப்படிப் பாராட்டுவது!..

  அவர்களது புகழ் என்றும் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் துரை செல்வராஜூ ஸார்..   இவர்கள் மூலம் நம் செவிக்கும் மனதுக்கும் விருந்தளித்த கடவுளுக்கும் நன்றி சொல்லவேண்டும்!

   நீக்கு
 18. கண்ணன் என்னும் மன்னன்
  பேரைச் சொல்லச் சொல்ல...

  நேற்று முன் தினம் கூட இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

  இப்படியெல்லாம் நம்மை மகிழ்வித்த கலைஞர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்வது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் அவர்களைக் கொடுக்கப் படைத்திருக்கிறார்.  நம்மை அனுபவிக்கப் பணித்திருக்கிறார்.

   நீக்கு
 19. எல்லா பாடல்களும் பிடித்த பாடல்கள்
  கேட்டேன் நன்றி.
  நீராடும் கண்கள் இங்கே சோகப்பாடல் மட்டும் கேட்ட நினைவு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...   எல்லாமே வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல்கள்தானே கோமதி அக்கா...  

   நீக்கு
 20. உச்சி வெயில் பொழுதில் வெறுங்காலுடன் அவர்கள் ஆடியிருப்பதைக் கண்டு மனம் வருந்தியது...

  கதைகளில் கூட் பெண்கள் வருந்துவதை மனம் ஏற்பதில்லை..

  பதிலளிநீக்கு
 21. தமிழில் வெளிவந்த முதலாவது வயது வந்தோருக்கான (அப்படீன்னா என்ன?) படம். புதுவையில் பார்த்த அந்தக் காலத்துக்கு புதுமையான படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய முயற்சிகளுக்கு பெயர் போன இயக்குநர் அல்லவா..

   நீக்கு
 22. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று என்ன வெண்ணிற ஆடை ஸ்பெஷலா? அந்த படத்தோடு சம்பந்தப்பட்ட யாருக்காவது நினைவு நாளா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா.. வணக்கம். அதெல்லாம் ஒன்றுமில்லை. வெண்ணிற ஆடையிலிருந்து ஒரு சீலாம்மா பாடல் பகிர நினைத்து, இரு பாடல்கள் என்று முடிவு செய்து, மூன்றாவதை லிங்க்கில் தரலாமா என்று யோசித்து மனமில்லாமல் நான்கையும் பகிர்ந்து விட்டேன்.

   நீக்கு
 23. 'A' சர்ட்டிபிகேட் வழங்கினால் அதை தவிர்க்க அன்னாட்களில் தயாரிப்பாளர்கள் பெரிதும் போராடுவார்கள். இலவச விளம்பரம் தானே? ஏன் இப்படி சிரமப்படுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏ சர்டிபிகேட் கிடைத்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களோடு படம் பார்க்க முடியாது மேலும் பெண்கள் வரமாட்டார்கள் அது தான் காரணமாக இருக்கும்

   நீக்கு
  2. ஆம். தியேட்டர்களில் கூட கொஞ்சமாவது கண்டிப்பாக இருந்த காலம் அது. கவுண்ட்டர் வழியே குனிந்து பார்த்து சிறுவர்களுக்கு டிக்கெட் தரமாட்டார்கள்!

   நீக்கு
  3. புரிகிறது. இருந்தாலும் அது ஒரு பிரமை தான். உண்மையில் அந்தத் தடுப்பு தான் இயற்கை சுபாவமாக அதை மீற வேண்டும் என்ற ஆவலை மனசில் விதைக்கிறது.

   நீக்கு
  4. மேலை நாடுகளில் ரொம்ப சுலபமாக இந்தத் தளைகளை வென்றிருக்கிறார்கள். பல விஷயங்களில் பொத்தி பொத்தி வைத்து அதன் இயற்கையான அனுபவிப்புகளை நாம் இழந்திருக்கிறோம்.

   நீக்கு
  5. ஓஷோ நினைவுக்கு வருகிறார்.

   நீக்கு
  6. இதில் ஒன்றுமில்லை, இதிலும் ஒன்றுமில்லை என்று தேர்ந்து எதிலும்
   ஒன்றுமில்லை என்று தெளிவது தான் பிரம்ம ஞானம் சித்திப்பதற்கான ஒரே வழி.

   நீக்கு
  7. இரண்டு மூன்று ஓஷோ புத்தகங்கள் வாங்கி வைத்தேன். படிக்க ஓடவில்லை!!!

   நீக்கு
  8. வெளிநாடுகளில் குழந்தைகளின் வயசுக்கு ஏற்ப அவர்கள் பார்க்கும் படங்களைத் தேர்ந்தெடுக்கும்படி இருக்கும். பதினைந்து வயதுக்குள்ளான குழந்தைகள் பார்க்கும் படங்களை பத்து வயதுக்குள்ளான குழந்தைகள் பார்க்க முடியாது. வீட்டில் பெற்றோரே தடை போட்டிருப்பார்கள். சின்னக் குழந்தைகளுக்கென அந்த அந்த வயசுக்கேற்ற கார்ட்டூன் தொடர்கள்/நகைச்சுவைத் தொடர்கள்/ மறைமுகமாகக் கற்பிக்கும் தொடர்கள்னு இருக்கு. அதான் போட்டுப் பார்க்கணும். பதினைந்து/பதினாறு வயதானால் தான் கொஞ்சம் கொஞ்சம் சுதந்திரம் கிடைக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த வயதில் தான் ஒரு சில குழந்தைகளுக்குக் காஃபி, தேநீர் அருந்தவே அனுமதிப்பார்கள். அதே போல் விளையாட்டுச் சாமான்களும்! வயதுக்கேற்ற மாதிரி மட்டும் இல்லாமல் ஆண் குழந்தைகளுக்கெனத் தனி விளையாட்டுச் சாமான்கள், பெண் குழந்தைகளுக்குத் தனி/ வயதைச் சொல்லி வாங்கணும். வயது சரியாத் தெரியலைனால் இத்தனை வயசுக்குள் என்று இருக்கும் விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கலாம். சுதந்திரம் என்பது நம் நாட்டைப் போல் மற்ற நாடுகளில் குறிப்பாக அம்பேரிக்காவில் இல்லை. இங்கே 2 வயது, 5 வயதுக் குழந்தைகள் கூட ரஜினி படம், விஜய் படம்னு பார்ப்பாங்க. அங்கெல்லாம் பார்க்க முடியாது. அப்படியும் தனிக் காட்சி போடும்போது ஒரு சில பெற்றோர் கூட்டி வருவாங்க! ஆனால் கொஞ்சம் சங்கடமாகவே உணர்கின்றனர்.

   நீக்கு
  9. வன்முறை, பால் உணர்வைத் தூண்டும் காட்சிகள் உள்ள படங்கள்/தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்க முடியாது. பெற்றோர் பார்க்கவேண்டுமெனில் குழந்தைகளை அப்புறப்படுத்தி விட்டே தாங்கள் மட்டும் தனியாகப் பார்ப்பார்கள்.

   நீக்கு
  10. இப்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரிஸ்களே கன்னாபின்னா என்று இருக்கின்றன.  நான் என் மகன்கள் சொல்லி மணி ஹெயிஸ்ட் என்கிற சீரிஸ் பார்த்தேன்.  பிரமாதமான கதை.  நன்றாய் இருந்தது.  ஆனால் ஆ ஊ என்றால் ஆடையை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள்.

   நீக்கு
  11. அன்னாளய குடும்ப நாவல்களை ரசிப்பவராக நீங்கள் இருந்தால்
   என்னுடைய பரிந்துரை:

   பாண்டியன் ஸ்டோர்ஸ்

   பாக்ய லெஷ்மி

   இரண்டும் விஜய் டிவியில்

   நீக்கு
  12. நடிகர் திலகம் சிவாஜிக்கும் முதல் முறையாக (ரொம்ப ரொம்ப படங்கள் கழித்து) ஒரு படம் ஏ சர்டிஃபிகேட் வந்ததும் ரொம்பவே அதிர்ச்சியானாராம்.

   நீக்கு
  13. //இரண்டு மூன்று ஓஷோ புத்தகங்கள் வாங்கி வைத்தேன். படிக்க ஓடவில்லை!!!// ஏன் அப்படி? நன்றாக இருக்குமே? நீங்கள் படிக்கவில்லையென்றால் சுகி சிவம் அவர்களின் பேச்சுகளை கேளுங்கள். அவர் ஓஷோவின் ரசிகர். நிறைய கோட் பண்ணுவார்.

   நீக்கு
  14. ஶ்ரீராம், நீங்க நெட் ஃப்ளிக்ஸ் போன்றவற்றில் வரும் சீரியல்களைப் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால் ஆங்கிலத்தில் வந்த "த க்ரவுன்" சீரியலைக் கட்டாயம் பாருங்கள். நான் அங்கே இருந்தவரை பார்த்தேன். இங்கே அதுக்கெல்லாம் பணம் கட்டாததால் தொடரவில்லை. இப்போதைய ராணியின் வாழ்க்கையைப் பற்றிய தொடர். என்ன அருமையான படப்பிடிப்பு, இயக்கம், இம்மாதிரி எல்லாம் இந்தியாவில் முடியவே முடியாது.

   நீக்கு
 24. நேற்றைய பதிவில் கவிதை ஒன்றும் வரவில்லை என்பதற்காக எழுதிய கருத்துரையில் கவிதா என்று எழுதி விட்டு மதியப் பொழுதில் அந்தத் திரைப் படத்தைப் பார்ப்போமே என்று திறந்தால் -

  அந்தக் கதாநாயகியின் பெயர் - கவிதா!..
  அந்தப் படத்தில் ஒரு பாத்திரப் படைப்பு என் நண்பர்களுக்குப் பிடிக்காததால் நான் அதைப் பார்க்கவில்லை..

  அதுவும் இல்லாமல் அந்த இயக்குநர் படங்களை விரும்புவதும் இல்லை..

  இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அதிர்ந்து போனேன்...

  நல்ல் இதயங்களுக்கு ஏன் தான் இப்படித் தண்டனையோ.. தெரியவில்லை..

  அன்றைய கவிதாவுக்கும் சரி..
  இன்றைய சேர்மக்கனிக்கும் சரி..
  ஏனிந்தக் கொடுமை?..

  பெண்களைக் கதையில் கூட வாழ விடுவதில்லை...

  பதிலளிநீக்கு
 25. ஸ்ரீதர் நான் மிகவும் மோகித்த டைரக்டர். அவர் எடுத்த நெஞ்சில் ஓர் ஆலயம், படவுலக வழக்கு மொழியான ஒன் லைன் படங்களுக்கு எடுத்துக் காட்டான ஒரே படம்.

  ஸ்ரீதருக்கு அடுத்து நான் மோகித்த டைரக்டர் பாரதிராஜா.

  அடுத்து? பாலசந்தர் இந்த லிஸ்டில்
  வரவே இல்லை. அதற்கு காரணமும் என்னளவில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளமை இயக்குநர், புதுமை இயக்குநர், இயக்குநர் சிகரம், இயக்குநர் இமயம்...   என்னென்ன பட்டப்பெயர்கள்!

   நீக்கு
  2. இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அல்லவா? ஸ்ரீதருக்கு இயக்குனர் திலகம் என்று பட்டம் கொடுத்தார்களாம் அந்தப் பட்டம் கொடுக்கப்பட்ட பிறகு அவர் இயக்கிய பட போஸ்டரில் இயக்குனர் திலகம் இன்று போட்டுவிட ஸ்ரீதருக்கு மிகவும் கோபம் வந்து விட்டதாம். அதை நீக்க சொல்லிவிட்டாராம் "பட்டங்கள் அவர்கள் விருப்பம் கொடுக்கிறார்கள் அதை நாம் போட்டுக் கொள்ளக்கூடாது" என்று கூறிவிட்டாராம்.

   நீக்கு
  3. நான் பொதுவாக இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களைச் சொன்னேன்!  இயக்குநர் இமயம் பாரதிராஜா!

   நீக்கு
 26. நேற்று குளியல் வர்ணனை. இன்று நேரடி காட்சி. கவர்ச்சி (கவுச்சி) தொடர்?

  வெண்ணிற ஆடை வெளியானபோது எனக்கு 18 வயதாகவில்லை. எனவே படம் பார்த்ததில்லை.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நேற்று குளியல் வர்ணனை. இன்று நேரடி காட்சி. கவர்ச்சி (கவுச்சி) தொடர்?//

   :>))

   இப்போது(ம்) பார்க்காத தோன்றவில்லை இல்லையா?  அது அது அந்தந்த நேரத்தில் அமைந்தால்தான் உண்டு!

   நீக்கு
  2. எங்க வீட்டில் என்னை அனுப்ப மறுத்ததற்கும் அதான் காரணம். பின்னர் அம்மா, அண்ணா, தம்பியோடு அனுப்பி வைத்துத் திரையரங்கின் உரிமையாளர்/மேனேஜரிடம் அப்பாவின் பெயரைச் சொல்லி உள்ளே போனோம். இதனை எழுத வேண்டாம்னு இருந்தேன். சொல்லும்படி ஆகி விட்டது! :)))))

   நீக்கு
 27. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாமே அருமை இந்த படம் மட்டுமல்ல ஸ்ரீதரின் எல்லா படங்களிலும் பாடல்கள் சிறப்பாக இருக்கும். இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், "நான் என்பது என்ன நீ என்பது என்ன ஒரு நிலவு என்பது என்ன.." நல்ல தத்துவமான பாடல். எதற்கு ஜெயலலிதா மிக அழகாக நடனமாடி இருப்பார் முதல் படம் என்று தெரியாத அவருடைய நடிப்பு அவ்வளவு சிறந்த நடிப்பை வழங்கி இருப்பார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..  அப்படி ஒரு பாடலும் இருக்கிறது அந்தப் படத்தில்!

   நீக்கு
 28. முதல் படம் என்று தெரியாத அளவிற்கு மிக சிறப்பான நடிப்பை வழங்கி இருப்பார் என்று வந்திருக்க வேண்டும் வாய்ஸ் டைப்பிங் செய்வதால் வார்த்தைகள் முன்னே பின்னே போய்விட்டது

  பதிலளிநீக்கு
 29. பாடல்கள் கேட்ட பாடல்கள். தகவல்களும் நன்று.

  கண்ணழகி - வேதனை.

  பதிலளிநீக்கு
 30. இனிமையான பாடல்கள்... ரசித்த பாடல்கள்... தகவல்கள் அறியாதவை...

  பதிலளிநீக்கு
 31. ரசித்து கேட்கும் பாடல்கள். ஜெயலலிதாவின் நடிப்பு, அவருடைய ஆளுமை மிகப்பிடிக்கும். நல்ல பாடல்கள் பகிர்ந்ததற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 32. ஸ்ரீதர் தமிழ்த் திரையின் தனித்துவமான ஒரு இயக்குனர். ஜனரஞ்சகப் படங்களையும் கலைநுட்பமாகக் கொணர்ந்த ஆளுமை.

  அவரது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ பார்த்திருக்கிறேன். ரஜினி,கமல், ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா எனச் செல்லும் இளையராஜா இசையமைத்த படம். அதுவே ’தில் ஏ நாதான்’ (Dil -e- naadaan) ஸ்ரீதராலேயே ஹிந்தியில் இயக்கப்பட்டது. ராஜேஷ் கன்னா, ஷத்ருகன் சின்ஹா, ஸ்மிதா பாட்டீல், ஜெயப்ரதா நடித்த படம். தெலுங்கு வர்ஷனும் வந்தது!

  ஸ்ரீதர் ஒரு stylist. தனக்கென ஒரு பாணி, ஒரு நளினம் உண்டு அவரிடம். அது அவர் படங்களிலும் வெளிப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தென்றலே என்னை தொடு, அழகே உன்னை ஆராதிக்கிறேன் எல்லாம் அவர் படங்களில் இசை மழை!  பின்னாட்களில் ஸ்ரீதர் எடுத்த சில திரைப்படங்கள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போயின!  அதிலும் சில பாடல்கள் தேறும்.

   நீக்கு
 33. @ அன்பின் அண்ணா ஜீவி

  //மேலை நாடுகளில் ரொம்ப சுலபமாக இந்தத் தளைகளை வென்றிருக்கிறார்கள். பல விஷயங்களில் பொத்தி பொத்தி வைத்து அதன் இயற்கையான அனுபவிப்புகளை நாம் இழந்திருக்கிறோம்.//

  சமீபத்தில் மேலை நாடொன்றில் பதினொரு வயதுடைய சிறுமி ஒருத்திக்கு நேர்ந்த கதி!?..

  இது தான் அவர்களது வெற்றி எனில்
  அது நமக்கு வேண்டவே வேண்டாம்...

  டகர டப்பா மாதிரி -
  மோகமுன்னு வந்து விட்டால்
  முகவரியே தேவையில்லை.. - ந்னு அலைந்து அவமானப்பட வேண்டியது தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன் காலில் தானே நிற்பதற்கு தகுதி படைத்தவர்களாய் சிறார் வளர்ப்பு முறையைச் சொன்னேன்.

   ஒரிரண்டு செய்திகளைப் பார்த்து விட்டு ஒட்டு மொத்த நாடே அப்படித்தான் என்று கணிக்கக் கூடாது.

   அமெரிக்காவில் இருக்கும் அரசு நூலகங்களுக்கும், சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்குமான தொடர்பு, ஈடுபாடு எல்லாம் பிரமிக்க வைப்பவை.

   என் பேரன்கள், பேத்தி எல்லாம் அமெரிக்காவில் தான்!
   அங்கிருக்கும் வாய்ப்புகளை உபயோகப் படுத்திக் கொண்டு வளரும்
   நம் இந்தியக் குடும்ப குழந்தைகளின் வளர்ச்சி அடேயப்பா...

   கர்னாடக சங்கீதம்
   நாட்டிய வகுப்புகள்
   விளையாட்டுகள்
   நாடு பூராவும் கலந்து கொள்ளும் ஸ்பெல் பீ தேர்வுகள்
   அதற்கான பரிசுகள், மரியாதைகள்
   முக்கியமாக அதற்கான அங்கீகாரங்கள்
   எதில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கான
   கல்வியில் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள்
   இனம், மொழி, தேசம் கடந்த ஒன்றுபட்ட வளர்ச்சிப் போக்கு.
   18 வயது நிறைவதற்குள் கார் ஓட்டுவதிலிருந்து அத்தனை திறமைகளையும் தங்களிடம் வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கை முறை
   அதுவும் நம் இந்தியக் குழந்தைகளின் வளர்ச்சி இந்திய கலாச்சார வளர்ச்சியோடையே கலந்த பாங்கில்
   அங்கு வளர்ந்து கொண்டிருக்கிறது, தம்பி.

   நீக்கு
  2. இரண்டு வேறுபட்ட கலாச்சாரச் சூழலை நாம் குழப்பிக்கொள்கிறோம். இரு கலாச்சாரங்களிலும் பெஸ்ட் நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைதான். பசங்களுக்கு அது பெரும் குழப்பமாகவும், பொய் சொல்லவேண்டிய கட்டாயத்திலும் கொண்டுபோய்த்தான் விடும்.

   மேற்கத்தைய கலாச்சாரம்-18 வயதுக்கு அப்புறம் உன் வாழ்க்கை உன் கையில் (இந்தியப் பெற்றோர்கள் என்றால்..போனாப் போகுது 22 வயசு வரை). அதற்கு ஏற்றபடி குழந்தைகள் தாங்களே தயார் ஆவாங்க. பெற்றோருக்கும் பசங்களின் 20 வயசுக்கு மேலே, தங்கள் வாழ்க்கையை நன்றாகவும் நிம்மதியாகவும் கழிக்க முடியும், இதைத்தான் அவங்க விரும்பினாங்கன்னா. அவங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பசங்க வீட்டுல போய் நிரந்தரமா தங்குவது அல்லது தங்களோடே பசங்க ஃபேமிலியும் இருப்பது என்பதையெல்லாம் கனவு காணக்கூட முடியாது.

   நம்ம கலாச்சாரம்... நாம சாகிற வரையில், நம் பையன் 60 வயசு இருந்தாலும் குழந்தைதான். ஈஷிக்கொண்டு இருக்கும் வாழ்க்கை. நாம்தான் வீட்டின் தலைவன் என்ற போலி முகமூடி. இது ஒரு வகை வாழ்க்கை.

   நம் குழந்தைகள் இயல்பிலேயே புத்திசாலிகள், கவனச்சிதறல் குறைந்தவர்கள். அதனால் அவங்க மிளிர்வதில் ரொம்பவும் ஆச்சர்யம் இல்லை. அவங்களால நிச்சயம் மேற்கத்தைய சூழலில் இன்னும் பிரகாசிக்க முடியும். ஆனா அதுக்கு அடுத்த ஜெனெரேஷன் என்னாகும் என்பதுதான், நம் priorityயைப் பொறுத்து, நல்லது அல்லது கெட்டது என்று நினைப்பதெல்லாம்.

   நீக்கு
  3. இந்தக் குழப்பம்தான் என்னை அமெரிக்கா செல்லவிடாமலும், கனடா குடியுரிமைக்கு முயற்சிக்காமலும் செய்துவிட்டது. என்னைப் பொறுத்த வரையில் என் முடிவு சரியானதுதான் என்று இதுவரை தோன்றுகிறது

   நீக்கு
  4. நீங்கள் சொல்வது சரி தான் நெல்லை. தலைமுறை தாண்டிய சிந்தனை உங்களது.
   நான் இந்தத் தலைமுறையிலேயே தேங்கி விட்டேன். அவ்வளவு தான் வித்தியாசம்.

   நீக்கு
  5. அங்கேயும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று சேர்ந்திருப்பவர்களும் உண்டு. தனித்திருந்தாலும் வாரக் கடைசிகளில் சேர்ந்து நாட்களைக் கழிப்பவர்களும் உண்டு. குடும்பமாக இருப்பதை அங்கேயும் நிறையவே பார்க்கலாம். வெளிப்பார்வைக்கு அங்கே குடும்ப உறவுகளைப் பேணுவதில்லை எனத் தோன்றினாலும் எனக்குத் தெரிந்து எங்க பெண்ணின்/பையரின் சிநேகித, சிநேகிதிகள் அம்பேரிக்கர்கள் குடும்பத்துடனேயே வசித்து வருகிறார்கள். ஒரே ஒரு மாறுதல் என்னன்னா பதினெட்டு வயது ஆச்சு என்றால் அந்தக் குழந்தை தனக்கென ஒரு வேலையைத் தேடிக் கொண்டு தனியாக வசிக்க ஆரம்பிக்கும். அது ஒரே ஊரிலே கூட இருக்கலாம்.வேறு ஊராகவும் இருக்கலாம். ஆனால் அப்பா, அம்மாவிடம் வந்து போய்க் கொண்டு இருப்பார்கள். இப்போ எங்க பெரிய பேத்தியும், ரேவதியின் பெரிய பேரனும் அப்படித்தான். இருவரும் ஒரே வயது! படிப்பு வேறேயானாலும் அவரவருக்கு எனத் தனி வழியைப் பார்த்துக் கொண்டு வேலை செய்கின்றனர். அவ்வப்போது பெற்றோரிடம் வந்து போய்க் கொண்டு இருக்கின்றனர்.

   நீக்கு
  6. இன்னமும் நம்ம மக்கள் நம்ம நாட்டுக் கலாசாரங்களை பழக்கங்களை விடாமல் தான் இருக்காங்க நெல்லை.

   நீக்கு
  7. கீசா மேடம்... இது நல்லது, அது கெட்டது என்ற நிலையில் நான் பேசலை. என்னுடைய உறவினர்களிலும் இரு விதத்திலும் இருக்காங்க. (அமெரிக்காவுல). கோவில், சேவாகாலம் என்று முதல் தலைமுறை-இங்கிருந்து போய் குடியுரிமை பெற்றவங்க. அவங்களோட பசங்க.. அந்த லைன்லயும் அமெரிக்க வாழ்க்கையிலும் கலந்து இருக்காங்க. இப்போ துணை அதிபரின் தாயார், அதற்கு முந்தைய தலைமுறை - இவங்களுக்குள்ளேயே கலாச்சார வேறுபாடு பூதாகரமாக இருக்கு இல்லையா?

   நமக்கு அமாவாசை, கிரஹணம், திதி - இதெல்லாம் முக்கியம்னு நினைத்தோம்னா, அடுத்த ஜெனெரேஷனுக்கு அது 50 சதவிகிதம்கூட இருக்காது (இந்த ஊரிலேயே இருந்தால், 70-80 சதவிகிதமாக இருக்கலாம்). அதற்கு அடுத்த ஜெனெரேஷன்லாம் அறிவியல் யுகத்துல இருப்பாங்க. Societyயைப் பொறுத்து எல்லாமே மாறும்.

   இதை நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியலாம், மனதளவில் ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம். நாற்று வேறு நிலத்தில் வளர ஆரம்பித்த பிறகு, நாம் பழைய சிந்தனைபோல, ஆட்டுப்புழுக்கை, மாட்டுச்சாணம் இவையெல்லாம் உரம் என்று நினைக்க முடியாது. அந்த நிலத்துக்கு ஏற்றபடி, மற்ற பயிர்களைப்போல அதுவும் வளரும். அவ்ளோதான்.

   நீக்கு
  8. இந்த வெள்ளிக்கிழமை நல்ல விருந்தாக அமைந்தது. எல்லோருடைய கருத்துகளும்
   மிக அருமை.
   அன்பின் கீதாமா சொல்லி இருப்பது போல
   குழந்தைகள் நேர்மையாக வளர்க்கப் படுகிறார்கள்.
   கல்லூரிப் படிப்பு ஆனதும் நல்ல வேலை கிடைக்கும் போது
   தனியே சென்றோ இன்னோரு தோழன் ,தோழியுடனோ
   இருக்கிறார்கள்.
   நம் கட்டுப்பாடுகளை மீறுவதில்லை.
   அப்படி ஓரிரண்டு குழந்தைகள் தாங்களே திருந்துவது போல
   சம்பவங்கள் அமைகின்றன.

   இங்கே பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் என்
   பேரப்பிள்ளைகள் வயதுதான்,.
   அங்கே பாட்டி உண்டு. வேலைக்குப் போகும் அம்மா,அப்பா.
   முதல் பெண் பெரிய ரெஸ்டாரண்ட்டில் செஃப் ஆக இருக்கிறது.

   எல்லாம் நலமே. தன்னம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள்.

   நீக்கு
  9. நம் சந்ததி நாம் வாழந்தபடி வாழவேண்டும் என்று நினைப்பது அபத்தம். நமக்கு எந்த உரிமையும் இல்லை. என்னவோ இந்தக் குழந்தையைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு புணர்ந்தால் போல பேசுகிறோம் - நம்முடைய பிள்ளை, பிள்ளையின் பிள்ளை என்று வரிசைப்படுத்தி கலாசார மற்றும் கட்டுப்பாட்டு விநியோகம் பண்ண நமக்கு ஒரு உரிமையும் கிடையாது. கணவன் இறந்ததும் மனைவியைக் கொளுத்தும் கலாசாரம் நம்மிடம் தான் இருந்தது.

   பிறப்பும் இறப்பும் (அதனால் வாழ்வும்) ஒரு லாட்டரி என்றே நினைக்கிறேன்.

   நீக்கு
 34. // கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல..
  கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
  மெல்ல மெல்ல..//

  இந்தப் பாடலில் எல்லா வரிகளின் முடிவிலும் இரட்டை இரட்டையாய் வார்த்தைகள்...

  பாடல் முழுவதும் ஜெ - நான்கு பதம்
  (ஸ்டெப்) வைத்து நடனமாடியிருப்பார்..

  பல வாத்தியங்கள் இசைக்கப்பட்டிருந்தாலும் புல்லாங்குழல் நேர்த்தியாக நிறைவு வரை தொடர்ந்திருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து பேசாமலேயே ஒரே எட்டலாகத் தாண்டி வந்து விட்டீர்களே !

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. முற்றிலும் அபுரி. நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை.

   நீக்கு
  5. நீங்கள் எல்லாம் - இங்கிருந்து அன்கு சென்று குடியேறிய நம் மக்களின் வாழ்க்கை முறையைப் பேசுகின்றீர்கள்..
   நான் அமெரிக்க ஆங்கிலேய மக்களின் தனிப்பட்ட விருப்பங்களைப் பற்றி எழுதி விட்டேன்...

   இரண்டும் ஒன்றாகாது.. அதனாலேயே எனது கருத்தை நீக்கி விட்டேன்...

   நீக்கு
  6. அபுரி தெரியாது? ஸ்ரீராம் வேண்டுதல் மாதிரி வாரத்துக்கு ஒரு முறை உபயோகப்படுத்துவாரே?.

   சத்தியம் -- அசத்தியம் மாதிரி அது.

   புரிந்தது -- புரியலை என்பது.

   புரி -- புரியலையின் சுருக்கம்.

   அடுத்த வாரத்தில் ஸ்ரீராம் அபுரியை யூஸ் பண்னும் பொழுது மிஸ் பண்ணிடாதீங்க..

   நீக்கு
  7. துரை செல்வராஜு சார்... இதை வெவ்வேறு கலாச்சாரமாகத்தான் பார்க்கணும்.

   1. பருவம் வருவதற்குள் சட்னு நாம் திருமணம் செய்துவைத்து, அதனால் அந்தப் பெண் கெட்டுப்போகும் வாய்ப்பே வராது செய்துவிட்டோம். புகுந்த வீட்டில் அவள் விதிப்படி வாழ்க்கை அமையும், பெரும்பாலும் சமையலறையில், வீட்டு வேலையில். அவங்களுடைய மனசு என்ன, அது என்னவாக இந்த வாழ்க்கையில் வாழ விரும்புகிறது என்பதெற்கெல்லாம் இடம் இல்லை. ஒருவனுக்கு ஒருத்திதான். அவன் ஆசைப்பட்டால், அந்த ஒருத்தியின் தங்கையையும் திருமணம் செய்துகொள்ளலாம். திருமணத்தின் purpose குழந்தைகள். அவங்களை வளர்த்து, திருமணம் செய்துகொடுத்து... அவங்க, தங்களின் கடைசிக்காலத்தில் நம்மைப் பார்த்துக்கொள்ளணும். பெண் குழந்தை என்பவள், பிறர் வீட்டிற்குரியவள். அவளுக்கு இந்த வீட்டின் சொத்தும் கிடையாது.. கணவன் இறந்துவிட்டால் அந்தக் கூட்டுக்குடும்பத்திலேயே அவள் இன்னொரு வேலைக்காரியாக இருந்து வாழ்ந்து மடிவாள். இப்படி நிறைய எழுதலாம். இது ஒரு வகை வாழ்க்கை.

   2. 18 வயதுக்கு மேல், ஆணோ பெண்ணோ, அவர்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். மேலே மேலே படிப்பது, என்ன படிப்பது, எந்த மாதிரி வாழ்க்கையை வாழ்வது..எல்லாமே அவர்களின் பொறுப்பு. வாழ்வும், பெரும்பாலும் பொறுப்பை சரி சமமாகப் பிரித்துக்கொள்வது. எந்தச் சமயத்தில் வாழ்க்கை பிடிக்கலையோ அப்போ பிரிந்துவிடலாம், வேறு கிளையைப் பற்றிக்கொண்டு வாழ்க்கை தொடரும். அங்கு பசங்க என்ற குறுக்கீடு கிடையாது. அவங்க 20 வயசுக்கு மேல அவங்களோட தனி வாழ்க்கை. திருமணம், அதற்கான செலவு, வாழ்க்கை - இது எதற்குமே பெரும்பாலும் பெற்றோரை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தங்கள் வாழ்வு என்பதால், அதற்கேற்ற பொறுப்பு வந்துவிடும். தன் குழந்தை என்றாலும், அது தேசத்தின் குடிமகன். அதனால் அதனை மனதில் வைத்து அந்தக் குழந்தையை வளர்க்கவேண்டும். Abuse செய்ய முடியாது.

   இரண்டையும் ஒப்பிட முடியாது. இந்த வாழ்க்கை நல்லது, அந்த வாழ்க்கை நல்லது என்றெல்லாம், அதுவும் இந்தக் காலத்தில் ஒப்பிடுவது மிக மிகக் கடினம்.

   நம் வாழ்வு (இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால்) சுயநலமில்லாமல் இருந்த வாழ்க்கை என்று சொல்லலாம். இப்போது அப்படி இல்லை. அப்போ நம் கலாச்சாரத்திற்கும் மேற்கத்தைய கலாச்சாரத்திற்கும் இந்தக் காலத்தின் என்ன பெரிய வேறுபாடு என்று யோசித்துப் பாருங்கள்.....

   நீக்கு
  8. என்னைப் பொறுத்தவரை இந்திய வாழ்க்கை, இந்திய சுதந்திரத்துக்கு ஈடு, இணை எங்கேயும் இல்லை. என்னதான் வசதிகள் நிறைய இருந்தாலும்.

   நீக்கு
 35. ரிலீஸ் ஆனபோது 18 வயது ஆகவில்லை சினிமா தியேட்டரில் பார்க்கவில்லை .சின்னத்திரையில் நான் பார்த்த போது 1980 ம் வருடம் இருக்கலாம் அதற்கு ஏன் அடல்ட்ஸ் ஒன்லி கொடுத்தார்கள் என்று புரியவில்லை பாட்டுக்கள் நன்றாகவே இருக்கும்

  பதிலளிநீக்கு
 36. ..ஆனா அதுக்கு அடுத்த ஜெனெரேஷன் என்னாகும் என்பதுதான், நம் priorityயைப் பொறுத்து, நல்லது அல்லது கெட்டது என்று நினைப்பதெல்லாம்.//

  சரி.

  பதிலளிநீக்கு
 37. எனக்கு ஸ்ரீதர் என்றாலே கூடவே ஒளிப்பதிவாளர் வின்செண்ட்டும் ஞாபகத்திற்கு வருவார்.

  கோபுலாம் அப்புறம் தான். :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெண்ணிற ஆடையில் அருவிக் குளியலை வைத்த ஸ்ரீதர் தான் தென்றலே என்னைத் தொடு - என்று நீச்சல் குளத்தில் கும்மாளத்தை வைத்தார்..

   எல்லாம் காலத்தின் கோலம் அன்றி வேறு என்ன!..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!