வாங்காமலும் செய்து வருகிறார். 'கஜா' புயல், கொரோனா பொது முடக்க காலத்தில், கஷ்டப்பட்டவர்களுக்கு, சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார். ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு அரிசி வழங்கி வருகிறார். இதனால், செந்தில்குமார் மீது கிராம மக்கள் அதிக மரியாதை கொண்டுள்ளனர்.
=================================================================================================================
எதுவும் வீணாவதில்லை என்பதும், ஒதுக்கப்பட்டவற்றை ஒழுங்காய் உபயோகிக்கத் தெரிந்ததும் நல்ல விஷயம்.
அனைத்து பழங்களையும், வெளிமாநிலங்களுக்கு, அனுப்ப முடியாது. ஏனென்றால் மாங்காய்கள், சிறிதளவு பழுத்திருந்தாலும், இடைதரகர்கள் வாங்குவதில்லை.எனவே தினமும் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில், ஆயிரக்கணக்கான கிலோ மாங்காய், மாம்பழங்கள் சாலையில் கொட்டப் படுகிறது. இது விவசாயிகளுக்கு, நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், மார்க்கெட் பின்பகுதியில் உள்ள, இந்திரா நகர் லே -- அவுட் மக்களின் வருவாய்க்கு வழி வகுக்கிறது.
சாலையில் வீசப்படும் மாங்காய்களில், சாப்பிடுவதற்கு தகுதியானதை இருப்பதை சேகரித்து கொண்டு செல்கின்றனர்.இவற்றை கழுவி சுத்தம் செய்து, நீள நீளமாக வெட்டி, ஐந்து நாட்கள் வெயிலில் உலர்த்தி, ஊறுகாய் உட்பட, பல்வேறு பொருட்களை தயாரிக்கும் வியாபாரிகளுக்கு, கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.சாலையில் கொட்டும் மாங்காய்களை நம்பியே, இப்பகுதியின் ஏழை மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.பெங்களூரின் சில வியாபாரிகள், 1 கிலோவுக்கு 25 - 30 ரூபாய் கொடுத்து, மாங்காய்களை வாங்குகின்றனர்.கேரளாவில் சிப்ஸ், ஊறுகாய் தயாரிக்கும் சிலர் வாங்கிச்செல்கின்றனர். இந்திரா நகர் லே - -அவுட்டில், பல வீடுகளின் முன், மாங்காய்கள் உலர்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.
======================================================================================================
ஆன்லைன் கவி என்ற பெயரில் போன்வசதி இல்லாத நிறைய பேர்களை ஸ்மார்ட்போன் வாங்க வைத்தது இந்த நேரம். என் வீட்டில் வேலை செய்பவர் கூட பணமில்லாத நிலையிலும் தன் பிள்ளை கல்வி அறிவு பெறவேண்டும் என்று கடன்பட்டு, கஷ்டப்பட்டு ஒரு போன் வாங்கி இருக்கிறார். அந்த நிலையில்....
கோவிட் காலத்தில், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய, நாசிக் சமுதாய வானொலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் 90.8. இது நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 2020 ஜூன் மாதம் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 'அனைவருக்கும் கல்வி' என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில், மூன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் 90.8. இது நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 2020 ஜூன் மாதம் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 'அனைவருக்கும் கல்வி' என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில், மூன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது.
=====================================================================================================================
கோவை:சரவணம்பட்டி, கந்தசாமி நகர் குடிசைப்பகுதி மாணவர்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச டியூசன் எடுக்கிறார், பி.எட்., பட்டதாரியான மணிகண்டன். கொரோனா தொற்று காலத்திலும் இடைநிற்றல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட இவரது நடவடிக்கை, பலரையும் பாராட்ட வைத்துள்ளது.
சரவணம்பட்டி -- கீரணத்தம் ரோட்டில் உள்ள, கரட்டுமேடு அடுத்த, கந்தசாமி நகர் குடிசைப்பகுதியில், 120 குடும்பங்கள் வசிக்கின்றன. வறுமை காரணமாக, கூலி வேலைக்கு இப்பகுதி பெற்றோர் செல்வது வழக்கம். இதனால், படிப்பின் மீது நாட்டமில்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல சிறார்கள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தனர். இப்பகுதியில், பள்ளிப் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு தான் இருந்தது.அரசு கல்லுாரியில், இளங்கலை தாவரவியல் படித்த இப்பகுதியை சேர்ந்த மணிகண்டன், தன்னை போல, மற்ற மாணவர்களும் கல்லுாரி வாசலை மிதிக்க வேண்டுமென எண்ணினார்.
இவரின் எண்ணத்திற்கு விதை போட்டது, விவேகானந்தா சேவா கேந்திரம். இந்த அமைப்பின் ஊக்கத்தால், கடந்த நான்கு ஆண்டுகளாக, சுற்றியுள்ள குழந்தைகளை திரட்டி, இலவசமாக டியூசன் எடுத்து வருகிறார் மணிகண்டன். தற்போது தனியார் கல்லுாரியில், பி.எட்., படிக்கும் இவர், கொரோனா தொற்று காலத்திலும், மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க, வீதியில் அமர வைத்தே, வகுப்பு எடுப்பது குறிப்பிடத்தக்கது.......
= = = = = = = = = = = = = = = = = = = ===== = = = = = = = = = = = = = = = = =
Tail piece - Post by KGG :
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம் !
=====
வாழ்த்துக்கள் ஶ்ரீராம்.. நிறைவோடு வாழ்க!
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஶ்ரீராம். என்றென்றும் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறோம். பேரன், பேத்திகள், மனைவி ஆகியோருடன் இனிமையான மகிழ்வான வாழ்க்கை வாழவும் வாழ்த்துகள். ஆசிகள்.
பதிலளிநீக்குநன்றி கீதாஅக்கா.
நீக்குநினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடல் பாடாத குறை. இப்போதான், கீசா மேடம் காணலையே எழுதுவோமா, கால் வலி சரியாயிடுச்சா, குகு பற்றி சமீபத்துல எழுதலையே... வாட்சப்பில் விசாரிப்போமா என நினைத்தேன். கமென்ட் வந்துடுச்சு
நீக்குஅம்பேரிக்காவில் இருக்கிறச்சே எல்லாம் நம்ப காலை அவங்களுக்கு மாலை/இரவு என்பதால் தினம் தினம் கு.கு. வரும். விளையாடும். படுத்துக்கப் போகும் முன்னர் பாட்டி, தாத்தாவைப் பார்க்கணும்னு சொல்லும். இப்போ நைஜீரிய நேரத்தோடு ஒத்து வராததால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் தான் பையரால் குழந்தையைக் காட்ட முடிகிறது. அவ்வப்போது கூகிள் மூலம் தாத்தா/பாட்டி வீட்டைக் காட்டச் சொல்லிப் பார்த்துக்கும் எனப் பையர் சொல்லுவார். அவருக்கு நேரம் இருந்தால் என்றாவது வார நாட்களில் இரவு ஒன்பது மணிக்கு அவங்களுக்கு மாலை நாலரை மணி/ அழைப்பார்.
நீக்குகால் வலி, நடந்தால்/நின்றால் ஜாஸ்தி ஆகிறது, நேற்றுச் சமைக்கப் போயிட்டு எனக்கே ஏன் எனத் தோன்றி விட்டது. என்னனே புரியலை. இடது கால்க் கணுவைச் சுற்றிலும் வலி! பாதத்தை ஊன்றினால் வலி அதிகம் ஆகிறது. தொடர்ந்து மருந்துகள் சாப்பிடறேன். எத்தனை மருந்துகள்? :(
நீக்குஅன்பின் கீதாமா, சீக்கிரமே உடல் நலம்
நீக்குசரியாக வேண்டும்.ஸ்ரீரங்கன் அருளட்டும்.
மனதுக்குக் கவலை கூடுகிறது.
கீதா அக்கா.. கவலையாய் இருக்கிறது. உடல்நலனில் கவனம் வையுங்கள்.
நீக்குவணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி
நீக்குஇப்போது வந்த மருந்துகள் எடுத்துக் கொண்ட பின் கால்வலி எவ்வாறு உள்ளது என நானும் கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருந்தேன். இன்னமும் வலி தொடர்கிறது என நீங்கள் சொல்லும் போது மனதுக்கு வேதனையாக உள்ளது. வலி பூரணமாக குணமாகும் வரை அதிகப்படியான வேலைகளை செய்யாதீர்கள். முதலில் உடல்நலனை கவனித்துக் கொள்ளவும். விரைவில் உங்கள் கால்வலி பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் நன்றி. போகப் போக வலி குறையும் என எதிர்பார்க்கிறேன். நம்பிக்கை தானே வாழ்வு! அதிகப்படி வேலை என்ன? பல் தேய்க்க, குளிக்க, காஃபி, தேநீர் போடனு நிற்கும்போதே வலி வருகிறது. :( இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
நீக்குMCR chappal வீட்டுக்குள்ள போட்டுக்கோங்க கீசா மேடம்... நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரொம்ப கஷ்டப்பட்டேன். ரொம்ப மாதம் கழித்து ஜிம் போய், டிரெட்மில் பண்ணுனதுல எனக்கு திரும்பவும் கால்வலி. வெறும் தரைல நடக்காதீங்க், ரொம்ப நேரம் நிற்காதீங்க.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஶ்ரீராமிற்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் (எந்த வருஷம் பிறந்தாங்கன்னு சொல்லாமல் பிறந்த நாள் கொண்டாடறவங்க ஜாஸ்தியாயிடுச்சுப்பா)
நன்றி நெல்லை. இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
நீக்கு//(எந்த வருஷம் பிறந்தாங்கன்னு சொல்லாமல் பிறந்த நாள் கொண்டாடறவங்க ஜாஸ்தியாயிடுச்சுப்பா)// ரிடைர் ஆக எத்தனை வருஷம் என்று கேட்டால் போதும்.
நீக்குJayakumar
:>))
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க...
நீக்குஎல்லாச் செய்திகளும் அருமை. முக்கியமாய் வி.ஏ.ஓ மற்றும் இளைஞர் மணிகண்டன் இருவரின் தன்னம்பிக்கை கலந்த உதவிகள் என்றென்றும் போற்றத் தக்கவை.
பதிலளிநீக்குஆம். அதே!
நீக்குவிஏஓ - அதிசயம் ஆனந்தம்தான். லஞ்சம் வாங்காத தாசில்தார் பற்றிய செய்தி இருந்தாலும் போடுங்க. வெள்ளை யானை பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு
பதிலளிநீக்குஅந்த விஏஓ முன்னாள் ராணுவ (கடற்படையில் பணி புரிந்தவர்) ஊழியர். ஆகவே அவர் மனதில் லஞ்சம் வாங்கணும்னு நினைப்பெல்லாம் தோன்றாது. தேசம்/மக்களுக்குப் பின்னரே சொந்த விஷயம் என்றிருப்பார் போல! என்றென்றும் இதே போல் நீடூழி வாழ்க! வளர்க!
நீக்கு:>))
நீக்குகுழந்தைகள் கல்வியைப் பற்றிச் சிந்தித்த கடைசி இரண்டு செய்திகளும் மனதைக் கவர்ந்தன.
பதிலளிநீக்குநேற்று மும்பையில் உள்ள சமூக சேவகரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர், வெளிநாடுகளில் யாரேனும் நம்ம ஊர் ஆட்கள் மறைந்துவிட்டால் அவர்களைக் கொண்டுவரவும் (உறவினர்கள்லாம் ஏதிலிகளாக இருப்பார்கள்) பிற உதவிகளையும் அரசுக்குத் தெரியப்படுத்தி உதவி செய்பவர். அவரால் பயன்பெற்ற, அவரை அறியாத ஏழைகள் அனேகம். அவர் என்னிடம் கேட்டார், சார் நீங்க வேலை பார்த்த காலங்கில் பிறருக்கு உதவியிருக்கீங்களா, (ஆபீசில் நம்மவர்கள் அவர் நண்பர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்ததைத் தவிர), ஆபீஸ் தாண்டி சம்பந்தமில்லாதவர்களுக்கு உதவியிருக்கீங்களா என்றார். இல்லை என்பது என் பதில். முகம் தெரியாதவங்களுக்கு உடலுழைப்பு நம்ம நேரம் ஆகியவற்றை ஒவ்வொருவரும் கொடுக்கணும் சார் என்றார். மனதை நெகிழ்த்திய பேச்சு.
நல்ல செய்தி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றும் வரும் காலம் என்றும் எல்லோரும் ஆரோக்கியத்தோடு இருக்க
இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குஅன்பின் ஸ்ரீராமுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீண்ட ஆயுளும் ,நல்ல ஆரோக்கியமும்,
சீர் மிகு குடும்ப வாழ்வும் என்றும் கூட வரவேண்டும்.
மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்.
நன்றி அம்மா.
நீக்குசனிக்கிழமை நல்ல செய்திகளுடன் வந்திருக்கிறது. முன்னாள் ராணுவ அதிகாரி,
பதிலளிநீக்குகிராம தலைவராக இருந்து செய்யும் உதவிகள் நாடின் வருங்காலத்தை நலமாக்கும்.
திரு செந்தில் குமாருக்கு வாழ்த்துகள்.
ஆம். அதே.
நீக்குமாங்காய் வீணாகப் போகாமல் அதிலேயே
பதிலளிநீக்குநல்ல வருமானம் காணும்
இந்திரா நகர் லே அவுட் மக்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ஆம். அதே.
நீக்குஇந்த சிரமமான காலத்தில் கல்வி உதவி செய்து வரும்
பதிலளிநீக்குவிஸ்வாஸ் குழுமத்துக்கும்,
திரு மணிகண்டன் அவர்களுக்கும் எத்தனை
நன்றி சொன்னாலும் போதாது.
ஒரு தலைமுறையே இவர்களால் கல்வி பெறுகிறது
என்றால் எவ்வளவு பெரிய நன்மை.
இது போன்ற நல்ல உள்ளங்கள் எங்கள் ப்ளாக் மூலம் தெரிய வருகிறது.
மிக மிக நன்றியும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.
என்றும் எங்கள் ப்ளாக் இந்த சேவையைத் தொடர வேண்டும்.
நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும்.
நன்றி அம்மா. இறைவன் அருளால் தொடர்வோம்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்! ஆரோக்யமான, சந்தோஷமான வருடமாக அமையவும், மனோரதங்கள் பூர்த்தியாகவும் வாழ்த்துகள்.
வாங்க பானு அக்கா.. வணக்கமும், நன்றியும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையன் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஇரண்டு மூன்று நாட்களாக ஸ்ரீராமுக்கு இப்போது பிறந்த நாள் வருமே? எ.பி.உறுப்பினர்கள் எல்லோரும் இரண்டு வருடங்கள் முன்பு வீடியோ வாழ்த்து அனுப்பினோமே? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தேதி மறந்து விட்டது.
பதிலளிநீக்குஎ.பி.யில் நிறைய கான்சரியன்கள் இருக்கிறோம்.:))
ஆஹா.. தன்யனானேன். நன்றி அக்கா.
நீக்குஅன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் அவர்களுக்கு...
பதிலளிநீக்குஆரோக்யம் ஐஸ்வர்யம் ஆனந்தம் அனைத்தும் நிறைந்து திகழட்டும்...
நன்றி அண்ணா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று பிறந்த நாள் காணும் ஸ்ரீராம் சகோதரருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் ஆரோக்கியத்தோடு வளமுடன் சிறப்பாக வாழ வேண்டுமென இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அக்கா.
நீக்குகல்விக்கடன் திறக்க உதவும் கோவை மணிகண்டனைமயும், நாசிக் சமுதாய வானொலியை மும் மனதார பாராட்டுகிறோம்.
பதிலளிநீக்குஆம். அதே..
நீக்குசகோதரர் ஸ்ரீராமிற்கு,
பதிலளிநீக்குஅனைத்து வளங்களும் நிறையப்பெற்று, குடும்பத்தினருடன் என்றும் நலமாக, மகிழ்ச்சியுடன் நல்வாழ்க்கை வாழ மனங்கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள்!
நன்றி மனோ அக்கா.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி
பதிலளிநீக்குநல்ல செயல்களை குறித்த தகவல்கள் நன்று.
நன்றி ஜி.
நீக்குகுடிசைப்பகுதி சிறுவர்களுக்கு இலவச டியூஷன் தொடர்ந்து எடுத்து வரும் மணிகண்டன், மக்கள் பணியை அருமையாக செய்து வரும் செந்தில்நாதன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் செந்தில்நாதன் பற்றி நேற்று நாளிதழில் கூட செய்தி வெளியிட்டிருந்தார்கள். இவரது சிறந்த பணி காரணமாக நேற்று இவரின் பிறந்த நாளை மகக்ள் கேக் வெட்டி கொண்டாடினார்களாம்!
பதிலளிநீக்குவாழ்த்துகளை இணைத்திருக்கும் கேஜிஜி க்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
தஞ்சாவூரை அடுத்த வல்லம் புதூர் வி.ஏ.ஓ வாக சிறப்பாக பணியாற்றும் திரு. செந்தில்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்கு பதில் மரியாதையாக கிராம மக்கள் அவரின் பிறந்த நாளை கொண்டாடிய செயலுக்கு பாராட்டுகள். நல்லதை செய்தால், நமக்கும் நல்லதே நடக்கும் என்பதை உணர்த்துகிறது.
மாங்காய்களை வீணாக்காமல்,வருமானம் பார்க்கும் ஏழை மக்களின் உழைப்பை பாராட்டுவோம்.
கல்விக்காக, அதுவும் ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்களுக்காக சமுதாய வானொலி சேவை ஒலிபரப்பும் ரேடியோ விஷ்வாஸ் நிகழ்ச்சி பாராட்டப்பட வேண்டியது.
கோவை கல்லூரி மாணவர் மணிகண்டன் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் எடுத்து தொண்டாற்றி வருவதையும் மனமாற பாராட்டுவோம்.
நல்ல செய்திகளை தந்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஅன்பு நண்பர் ஸ்ரீராமிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசிகள்.
பதிலளிநீக்குஅவரது எழுத்துச் சிறப்பு மென்மேலும் சிறந்தோங்க இந்த தருணத்தில் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
அவர் குடும்ப மகிழ்ச்சியில் நாங்களும்
கலந்து கொள்கிறோம்.
ஜீவி தம்பதிகள்
நன்றி ஜீவி ஸார்.
நீக்குWhen life expectancy was less and medical facilities were poor, each year we lived was a boon and we were happy to have lived that year. Hence we celebrated our birth anniversary. But now when we grow old, we have a feeling that the end is nearing fast and hence we avoid celebrations of birth day. I think you would have felt this when you were affected by covid.
பதிலளிநீக்குCorrect me if I am wrong.
Greetings to you @Sriram with expectations of avoiding negative thoughts on this "positive" day.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கும் போராட்டம் தனி - அதுவும் இந்த கொரோனா காலத்தில்...
நீக்குநன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.
//மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் 90.8. //
பதிலளிநீக்குவானொலி மூலம் கற்பிப்பது என்பது எல்லாப் பாடங்களுக்கும் முடியாது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தினமும் மதியம் 2 மணிக்கு ஒரு கல்வி சேவை வானொலியில் ஒளிபரப்பாகும். எந்த வகுப்புக்கான எந்த பாடம் என்பது முன்பே வெளியிடப்படும். அதற்கேற்ப அந்தந்த வகுப்புகளுக்கு டிரான்சிஸ்டர் ரேடியோ கொண்டு செல்லப்பட்டு ரேடியோ க்ளாஸ் நடக்கும்.
இங்கு கேரளத்தில் victers என்ற ஒரு டீவி சானல் Government department of educationஆல் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே ஒளிபரப்பட்டு வருகிறது. எல்லா வகுப்புகள் பாடங்கள் அதில் தேர்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படும். இது 24 மணி நேர சேவை. கிடைத்தால் "victers" பாருங்கள். youtubeஇல் உண்டு.
கல்வி குறித்த பல விஷயங்களுக்குக் கேரளம் முன் மாதிரியான மாநிலம். ஆனால் இங்கே இதெல்லாம் எடுபடாது. பீத்தலுக்கு மட்டும் குறைவிருக்காது! :(
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் ஸ்ரீராம் மென்மேலும் நல்ல சந்தோஷ நிகழ்வுகள் ஆகவே அமையட்டும் ஆசை ஆசிகள் அநேகம் அன்புடன்
பதிலளிநீக்குமிக்க நன்றி அம்மா.
நீக்குஒரு அரசு ஊழியர் சிறப்பாக தன் பணியை ஆற்றுவதும், லஞ்சம் வாங்காமல் இருப்பதும் பாராட்டுக்கு உரிய விஷயங்களாகி விட்டதே? அது கடமைதானே? அரசு யந்திரம் அந்த அளவு பழதடைந்து விட்டதா?
பதிலளிநீக்குஅதுக்குத் தானே பாராட்டே! இப்போல்லாம் இப்படித்தான்! அதிலும் கடந்த ஐம்பது வருஷங்களுக்கு மேலாக லஞ்ச லாவணியம் தானே பிரபலமான ஒன்று.
நீக்குஆம். அதேதான்!!
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குசெய்திகள் அருமை...
நன்றி DD.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம். அன்பும் ஆரோக்யமும் அங்கும், எங்கும் நிலவட்டும்!
பதிலளிநீக்குநன்றி ஏகாந்தன் ஸார்.
நீக்குமதிப்பிற்குரிய ஸ்ரீராம் அவர்களுக்கு , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி வானம்பாடி.
நீக்குPositive vibes today to refresh us! Thanks to all the humanitarians who help the needy.
பதிலளிநீக்குநன்றி வானம்பாடி.
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஶ்ரீராம்
பதிலளிநீக்குசெய்திக்கு கோர்வை நன்றாக உள்ளது .
கீதா மேடம் கால் வலி சரியாக பிரார்த்தனைகள்
நன்றி அபயா அருணா மேடம்.
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஇன்றைய செய்திகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்கு//ரேடியோ விஷ்வாஸ் 90.8. இது நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது//
நல்ல சேவை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
//குழந்தைகளை திரட்டி, இலவசமாக டியூசன் எடுத்து வருகிறார் மணிகண்டன்.//
நல்ல தொண்டு, வாழ்க வளமுடன் மணிகண்டன். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
கெளதமன் சார் ஸ்ரீராம் பிறந்தநாள் காணொளியை நன்றாக எடுத்து இருக்கிறார்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குகாணொளி நான் எடுத்தது அல்ல. இணையத்தில் கிடைத்தது. இணைத்தது மட்டுமே நான் செய்தது.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம். வாழ்க வளமுடன் நலமுடன்.
பதிலளிநீக்குநல்ல செய்திகள்.
நன்றி மாதேவி.
நீக்குசிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குநண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.