திங்கள், 5 ஜூலை, 2021

'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 மோர் உபயோகித்துச் செய்யும் மோர்க்குழம்பு, புளிமோர்க்குழம்பு, புளிசேரி இவைகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது மோர்ச்சாத்துமது.  இது 'ரசம்' என்று சொல்லப்பட்டாலும், குழம்புக்குப் பதிலாகத்தான் இதனைப் பண்ணுவோம். 


ரொம்ப சுலபமான ரசம் இது.  நல்ல கோஸ் வாங்கினேன்னா, உடனே இதனைப் பண்ணச் சொல்லுவேன். மோர்ச்சாத்துமது, கோஸ் மிளகூட்டு ரொம்பவே பிடித்த காம்பினேஷன்.தேவையானவை

 

வற்றல் மிளகாய் 2

வெந்தயம் 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் ஒரு துண்டு

மஞ்சப்பொடி 1/4 தேக்கரண்டி

உப்பு

மோர் (புளித்தது நல்லது) 1/4 லிட்டர்


தாளிக்க கருவேப்பிலை, கடுகு

 

செய்முறை

 

துளி எண்ணெயில், பெருங்காயம், வற்றல் மிளகாய் தனித்தனியாக வறுக்கவும். பிறகு வெந்தயம். 


கொஞ்சம் ஆறின பிறகு, இதனை மிக்சியில் கரகரவென பொடி பண்ணவும்.


இதனுடன் உப்பு சேர்த்து மோரில் நன்கு கலக்கவும்.


இதனை மிக லைட்டாக சூடுபடுத்தவும். 


இதில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, அதில் மஞ்சள் பொடியைத் தூவிக் கலக்கிச் சேர்க்கவும். எண்ணெய்ச் சூட்டில் மஞ்சள் பொடி வறுபட்டுவிடும்.


அவ்ளோதான்... மோர்சாத்துமது  (மோர் ரசம்) ரெடி.

என் அம்மா, மோர் நிறைய மிஞ்சிவிட்டால் இதனைப் பண்ணுவார்.  மோரில் செய்யப்படும் அப்பக்கொடி மோர்க்குழம்பு (அதைச் சாப்பிட்டு குறைந்தபட்சம் 40 வருடங்களாகிவிட்டது. நெல்லையில் இருந்தபோது சாப்பிட்டது) மற்றும் மாங்காய் அரைத்துவிட்ட மோர்க்குழம்பும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  நெல்லைக்குச் சென்றிருந்தபோது அப்பக்கொடி எங்க கிடைக்கும் என்று தேடினால், நாட்டு மருந்துக்கடைக்குப் போங்க என்றார்கள். அதைத் தேடிக்கிட்டுப் போகமுடியலை. இந்த இரண்டு செய்முறையும் எப்படி என்று யாரேனும் எழுதுங்கள்.

89 கருத்துகள்:

 1. easy peasy lemon squeezy recipe.
  I bet it will go well with potato roast.
  I used to add cumin coriander seeds.
  Shall try this method.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சலின். உருளை ரோஸ்ட் எதுக்குத்தான் நல்லா இருக்காது.

   I wonder how potato is everybody's favorite. நான் இப்போல்லாம் ஒரு வெங்காயம் கட் பண்ணி அதோட வதக்கு என்று கேட்பதால், மத்தவங்களுக்கு வெங் இல்லாமலும் எனக்கு மட்டும் வெங் போட்டும் செய்வார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை.

   நீக்கு
 2. //மாங்காய் அரைத்துவிட்ட மோர்க்குழம்பும்/
  Day before yesterday I made this
  I used 777 mavadu

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் மாவடு மோர்க்குழம்பு செய்யணும் என்று ரொம்ப நாளாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். (வருஷமாகவே). வீட்டில் நான் போட்ட மாவடு வேறு இருக்கு. தேங்காய், மாவடு அரைத்து மோரில் கலப்பதா இல்லை வேறு மெதட்டா?

   நீக்கு
  2. இரண்டு நாட்களுக்கு முன் அதிராவின் கத்தரி வாட்டிய சட்னியைப் பார்க்க நேர்ந்தது. நல்லா இருக்குமான்னு சந்தேகம் வந்தது. அவருக்கு பார்வையாளர்களும் அதிகரித்திருப்பதைப் பார்த்தேன் (கர்ர்ர்ர்ர்ர்... வெஜ் ரெசிப்பிக்கு மத்ததைவிட குறைந்த பார்வையாளர்கள்... ஹாஹா)

   நீக்கு
  3. ///இரண்டு நாட்களுக்கு முன் அதிராவின் கத்தரி வாட்டிய சட்னியைப் பார்க்க நேர்ந்தது. நல்லா இருக்குமான்னு சந்தேகம் வந்தது///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் இமேஜை டமேஜ் பண்ணுவதே இவருக்குத் தொழிலாப்போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)))..

   ஹா ஹா ஹா சூப்பரா வரும் நெ தமிழன், எங்கட வீட்டில சும்மாவே அள்ளிச் சாப்பிடுவோம்ம்.. ஊரில விருந்துகளில் பெரும்பாலும் இச்சமபல் இருக்கும், அதுவும் எங்கட வீட்டு விசேசங்கள் எனில்.. பெரிய அண்டாக்களில் செய்து, ஈவினிங் மிஞ்சி இருக்கும்.. ஊருக்குள் குடுப்பது போக, மிகுதியை டிஸ் ல போட்டுச் சாப்பிடுவோம்ம்.. பப்படத்துடன்:)))

   நீக்கு
  4. ///அவருக்கு பார்வையாளர்களும் அதிகரித்திருப்பதைப் பார்த்தேன் (கர்ர்ர்ர்ர்ர்... வெஜ் ரெசிப்பிக்கு மத்ததைவிட குறைந்த பார்வையாளர்கள்... ஹாஹா)///

   மக்களுக்கு athees palace இல் எது அதிகம் பிடிக்குதெனப் பாருங்கோ:).. ஆனா என் வெஜ் ரோல்ஸ்க்குத்தான் அனைத்திலும் அதிகம் அதிகம் வியூஸ்..

   நீக்கு
  5. அம்பது பதிவுகள் (காணொளி) இதுவரை போட்டுட்டீங்களே அதிரா.. பாராட்டுகள். ஆனால் இது ரொம்ப நேரம் எடுக்கும் வேலையில்லையா? பதிவு என்பது அங்கயும் இங்கயும் சில படங்களைச் சுட்டு, புலாலியூர் பூசானந்தா மொழிகளைக் காவி வந்து, திரைப்படப் பாடல்களைச் சுட்டு... அது ரொம்ப சுலபம் இல்லையா?

   நீக்கு
  6. ஒரு நாள் சுட்ட கத்திரி சட்னி செய்ய முயற்சிக்கிறேன். வரவேற்பு எப்படி இருக்குன்னு பார்க்கலாம். ஆனால் நான் டிரை பண்ணுவேனா என்பது தெரியலை. ஹாஹா

   நீக்கு
 3. பொதுவாக எனக்கு மோர்க்குழம்பு பிடித்தமானது.

  மலையாளிகள் சிறப்பாக செய்வார்கள் பல முறைகள் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலையாளிகள் செய்வது வேறு முறையில் இருக்கும். நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  2. ஆமாம் கில்லர்ஜி... மோர்க்குழம்பே பாலக்காட்டிலிருந்துதான் கேரளாவின் மற்ற இடங்களுக்கும் பரவியிருக்கும். பலர் இப்போல்லாம் (மலையாளிகள்) பூண்டும் சேர்க்கறாங்க.

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஏஞ்சலுக்கு மாலை வணக்கம். தேவகோட்டைஜிக்கும் காலை வணக்கம்.
  எல்லோரும் என்றும் நலமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. அன்பு முரளியின் மோர்ச்சாத்துமது
  பழைய நினைவுகளைக் கிளறி விட்டது.
  அம்மா அருமையாகச் செய்வார்.
  எல்லாம் சேர்ந்து ஒரு கொதியில்
  இறக்கும் போது நல்ல வாசனை வரும்.

  நீங்களும் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
  வெந்தய ,பெருங்காய வாசனையோடு
  வறுத்த மிளகாய்ப் பொடி நல்ல காம்போ.

  நல்ல காய்கறி தொட்டுக் கொள்ள இருக்க வேண்டும். அப்பளாம்
  பொரிக்க வேண்டும்.
  அருமையான ரெசிப்பிக்கு நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பாரம்பர்யமான குழம்பு வகை. மோர் புளித்துவிட்டாலோ இல்லை நிறைய மீந்துவிட்டாலோ, வேகமாகச் செய்யணைம்னா இதனைச் செய்வார்கள் வல்லிம்மா...

   ஆனால் இப்போ, அதே எஃபெ்ட் கொண்டுவர, ஃ்ப்ரிட்ஜிலிருந்தி மோரை வெளியே எடுத்து வைத்துச் செய்ய வேண்டியிருக்கு

   நீக்கு
 6. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்று இந்த ரெசிப்பியா? நான் இனிப்பு வருமோ என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. எங்க வீட்டில் மோர்ச்சாறு என்போம். அநேகமாக எங்க வீட்டில் வாரம் ஏழுநாட்களும் இருக்கும் ஒன்று. இப்போதெல்லாம் துவையல் சாதத்துக்கு/பொடி சாதத்துக்குத் தொட்டுக்கப் பண்ணுகிறேன். இங்கே அவ்வளவு செலவாகாது. எங்க வீட்டில் மோர்ச்சாறு வைத்துவிட்டு வெண்டைக்காய்/தட்டாம்பயறு போட்டுப் புளிக்கூட்டு/கொத்தவரை புளிக்கூட்டு/கத்திரிக்காய்ப் புளிக்கூட்டு என்று பண்ணுவார்கள். ஒரு காலத்தில் மிகவும் பிடித்த உணவு. மோர்க்குழம்பும் வைப்பதுண்டு என்றாலும் இது நினைத்த மாத்திரம் வைக்கலாம். வறுத்துப் பொடி போடாமல் எல்லாவற்றையும் தாளிதத்தில் போட்டுத் துவரம்பருப்பும் சேர்த்துத் தாளித்து அம்மா பண்ணுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த 'சாறு' என்ற வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை. என் ஆபீஸில் வேலை பார்த்தவனும், 'தண்ணிச்சாறு' என்று ஒரு ரசம் அவன் அம்மா செய்வார்கள் என்று சொன்னபோது, இது என்ன புதுவிதப் பெயர் என்று தோன்றியது.

   நீக்கு
 9. அடுத்த வாரம் எரிவாயு அடுப்பை எப்படிப் பற்ற வைப்பது? அதுக்கப்புறமா வெந்நீர் வைப்பது எப்படி? அதுக்கப்புறமா வெந்நீரைப் பாத்திரத்திலேயே வைக்கலாமா? அப்புறமா மெதுவாகக் குக்கரில் எப்படிச் சமைப்பது எப்படி? என எல்லாமும் வரும். காத்திருங்கள்! டண்டடண்டடண்ட டட்டய்ங்க்ய்ங்க் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னவோ ரொம்ப சுலபமா செய்ய முடியும் என்பது போலச் சொல்கிறீர்களே.. பசுங் கன்று வாங்கி, வளர்ந்து, அது பால் கொடுத்து, அதை காய்ச்சி, தயிர் குத்தி, மோராக்கி... இடையில் ஆந்திரா சென்று மிளகாய், மகாராஷ்டிரா சென்று மிளகாய்.. உள்ளூரில் செக்கு எண்ணெய் எங்க கிடைக்கும்னு பாரத்து எண்ணெய் வாங்கி, தூத்துக்குடி உப்பு...... எல்லாம் வாங்கிச் செய்து.. நல்லா வரணும்... வந்தால் மாமாவுக்குப் பிடிக்கணும்... எத்தனையோ இருக்கு.. ஏதோ வெந்தீர் வைப்பது போலச் சொல்லிட்டீங்களே

   அது சரி.. சுலபமான கும்மாயம் (இது 5ம் நூற்றாண்டிலேயே தமிழக கோவில்களில் பிரசாதமாக உண்டு) எப்படிச் செய்வதுன்னு எழுதுங்க பார்க்கலாம்..

   நீக்கு
  2. கும்மாயம் என்பது முளைக்கட்டிய பச்சைப்பயறோடு வெல்லம், நெய் சேர்த்துச் செய்யும் ஒரு தின்பண்டம். பெருமாள் கோயில்களிலே விசேஷமாகச் சொல்லப் படுவது. இதைக் குறித்துத் தாம் ஓர் ஆராய்ச்சியே செய்ததாகத் தமிழ்த்தாத்தா சொல்லி இருக்கார். பெரியாழ்வார் திருமொழியில் கும்மாயம் பற்றிய குறிப்பைக் காணலாம். அதற்கும் முன்னர் நீலகேசி, மணிமேகலை போன்றவற்றிலும் கும்மாயத்தைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். நினைவில் வந்தவைக்கு ஆதாரம் கொடுப்போர் உ.வே.சா.அவர்கள். எப்போவோ படிச்சது. இப்போ கூகிளில் தேடினால் கிடைக்கலாம். இந்தப் பயறு+வெல்லம்+நெய் சேர்த்து இனிப்புச் சுண்டலாக எங்க மாமியார் வீட்டில் அடிக்கடி பண்ணுவாங்க. நவராத்திரியிலும் உண்டு. போதுமா? இன்னும் வேண்டுமா?நாங்க யாரு? யாரு கிட்டே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. அது பாசிப்பருப்பை வைத்துச் செய்வது. பச்சைப் பயறு வைத்துச் செய்வது இனிப்புச் சுண்டல். நீங்க கும்மாயம் தயார் பண்ணுவீங்கன்னா, உங்க வீட்டு கொலுவுக்கு வர்றேன். வெறும் சுண்டல் சாப்பிட வரத் தயாரில்லை. ஹாஹா

   கும்மாயம், பெரியாழ்வார் திருமொழியில் வருகிறது.

   நீக்கு
  4. //அடுத்த வாரம் எரிவாயு அடுப்பை எப்படிப் பற்ற வைப்பது? அதுக்கப்புறமா வெந்நீர் வைப்பது எப்படி? // - ரொம்ப அவசரப்பட்டு இந்த மாதிரி எழுதிட்டீங்களே..இன்னும் சில செய்முறைகளை அனுப்பியிருக்கேன்... அதுக்கெல்லாம் என்ன எழுதுவீங்களோன்னு யோசிக்கிறேன். ஹாஹா

   நீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு

 12. நீங்கள் சொல்லி இருக்கும் மோர் ரசம் நன்றாக இருக்கிறது.
  செய்து பார்க்க வேண்டும்.

  செய்முறைகுறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது. செய்வதும் மிக எளிது.
  நான் மோர் ரசம் என்று செய்வது துவரம்பருப்பு, கொஞ்சம் மல்லி, பெருங்காயம், மிளகாய் வற்றல் வறுத்து பொடி செய்து போடுவேன் .(காய்ச்சல் வந்து வாய் கசப்பாக இருக்கும் போது இந்த ரசம் நன்றாக இருக்கும்) நாக்கிற்கு சுவை உண்டாக்கும்.
  மஞ்சள் பொடியும் போடுவேன். கருவேப்பிலையும் தாளித்து கொட்டுவேன்.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கொமதி அரசு மேடம். துவரம்பருப்பு சேர்த்தால் கொஞ்சம் மோர்க்குழம்பு சாயல் வந்துவிடும். மோரில் செய்யும் எதுவும் ருசிக்கும்.

   நீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 14. நெல்லைத்தமிழன் அழகாய் சொல்லியிருக்கும் விதத்தில் இந்த மோர்க்குழம்பை உடனேயே செய்து பார்க்கத் தோன்றுகிறது. போட்டுள்ள புகைப்படங்கள் அந்த அளவுக்கு மனதைக் கவர்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். கொஞ்சம் சாதம், விரைவிரையாக இருக்கக்கூடாது.

   நீக்கு
 15. திருமதி.பானுமதிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. இந்த முறை நான் கேள்விபட்டதில்லை புதுசாக செய்து பார்க்க ஒரு நல்ல எளிமையான குறிப்பு நன்றி நெல்லைதமிழன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு தொட்டுக்க சரியான கறி அல்லது கூட்டு இருக்கணும். மறந்துடாதீங்க

   நீக்கு

 17. புளிச்ச மோருக்கு நான் எங்க போவேன்? முடிந்தால் புளிச்ச மோரு எப்படி பண்ணுவது என்று சமையல் குறிப்பு எழுதுங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை மிக சுலபமாகச் செய்துவிடலாம் மதுரைத் தமிழன் முரை. வெள்ளிக்கிழமை சாயந்திரம், மனைவி வருவதற்கு முன்னால், கேரேஜுக்குள்ள மற்றவற்றைப் பதுக்கி வைக்கும்போது, ஒரு பாத்திரத்தில் மோரையும் வச்சிடுங்க (இல்லை தயிரை). திங்கள் காலைல, மனைவி ஆபீஸ் போனப்பறம் கேரேஜில் உள்ளவற்றை உங்க ரூமுக்குக் கொண்டுவரும்போது, அங்க வச்சிருந்த மோரும் ரெடியாயிருக்கும்.

   நீக்கு
  2. மதுரைத் தமிழரே, அம்பேரிக்காவில் பட்டர்மில்க் என்னும் பெயரில் உப்புப் போட்டுக் கரைத்த மோர் டப்பாக்கள் நிறையக் கிடைக்குமே. நாங்க எங்களுக்கு அதான் வாங்கிப்போம். அதை முதல்நாள் இரவு தேவையான அளவுக்குப் பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு மறுநாள் மோர்க்குழம்பு/மோர்ச்சாறு என்னும் மோர் ரசம் /நெல்லையோட மொழியில் மோர்ச்சாத்தமுது பண்ணலாம். மோர்க்குழம்பு இதில் பண்ணினால் நன்றாக வரும்.

   நீக்கு
 18. என் பிறந்த நாளான இன்று எ.பி.குடும்பத்தில் என்னை விட வயது மூத்தவர்களுக்கு என் வணக்கங்கள். சிறியவர்கள் எல்லோரும்(அப்படி யாராவது இருந்தால்) வரிசையில் வந்து ஆசி பெற்று செல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்னை விட வயது மூத்தவர்களுக்கு// - அப்படி யாரேனும் இருந்தால் இங்க ஆஜர் வையுங்கப்பா... எனக்குத் தெரிந்து யாருமில்லைன்னு நினைக்கிறேன்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. சுலபமானது.... ஆனா சரியான கரேமது, கூட்டு இருக்கணும். நன்றி வெங்கட்

   நீக்கு
 20. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பானு அக்ககா.

  பதிலளிநீக்கு
 21. செய்முறை அருமை... மோர்க்குழம்பு மிகவும் பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க திண்டுக்கல் தனபாலன். நானும் மோர்க்குழம்புப் பிரியன்

   நீக்கு
 22. அன்புள்ள பானும்மாவிற்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. மோர்க்குழம்பு இதைப்போலவே என் மாமியாரும் செய்வார்கள். எளிதான , அருமையான செய்முறை பதிவிட்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 24. திங்கள் ரெசிபிக்கள் பார்த்து சமைக்கும் ஆர்வம் வருகிறது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், இத்தனை வருடங்களாக நான் சமையல் தனியாக செய்ததே இல்லை. மேல்வேலைகள் மட்டும் செய்வேன்.என் மாமியார் தான் செய்வார். அவர் ஊருக்கு சென்றிருக்கும் சமயங்களில் பாட்டி உடனிருந்து ஆலோசனை சொல்வார். அவர் சொன்ன படி செய்வேன். அம்மா வீட்டிலும் இதே கதை தான். திருமணமாகி 14 வருடங்கள் ஆகிவிட்டது. எல்லாமே செய்முறை தெரிந்தாலும், முன்பெல்லாம் நானாக செய்யும் பொழுது சரியாக வருமோ என்று பயம் தோன்றும்... இப்பொழுது தான் பயமில்லாமல் தினமும் 8 பேருக்கு சமைக்க பழகியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வானம்பாடி. எனக்கும் உப்பு காரம் பார்க்காமல் சமைக்கத் தெரியாது. கடவுளுக்குப் படைப்பதற்கு முன்பு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பேன். (படைத்த பிறகு, எதையும் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது).

   நாம பத்து பேருக்கும் சமைப்பது சுலபம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட், விருப்பம் இல்லாதிருந்தால். எங்க வீட்டில் பையனுக்குப் பிடிப்பது பெண்ணுக்குப் பிடிக்காது, அவங்களுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது. வெறும் சேனைக் கறி(கரேமது)லயும் ஒருத்தருக்கு ரோஸ்டா இருக்கணும், இன்னொருத்தருக்கு கொஞ்சம் சவசவன்னு இருக்கணும். அப்படி இருந்தால்தான் கஷ்டம்.

   என் பையனுக்கு வெங்காயம் உபயோகிப்பது (அதற்கென்று இருக்கும் வட இந்திய உணவுகளைத் தவிர..அல்லது பூரி மசால்) பிடிக்காது. எனக்கு வெங்காய சாம்பார் பிடிக்கும்..

   நீக்கு
 25. இன்று பானுமதி, ஏகாந்தன் மற்றும் புதுக்கோட்டை வைத்தியநாதன் ஆகிய மூன்று எ பி கதாசிரியர்களுக்கும் பிறந்தநாள். எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு!

  பதிலளிநீக்கு
 26. திரு புதுக்கோட்டை வைத்தியநாதனுக்கும், ஏகாந்தனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. நன்றி கே.ஜி.ஜி.சார்!
  திரு.ஏகாந்தன் அவர்களுக்கும், திரு.வைத்தியனாதன் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 28. மோர் சாத்தமது என்னும் மோர் ரசம் செய்முறை கீதா ரெங்கனும் முன்பு ஒரு முறை அனுப்பியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பள்கி மெதட், ஒரிஜினல் நெல்லை மோர்ச்சாத்துமது. கீதா ரங்கன், பல ஊர்களில் வாழ்ந்தவர், ஆகவே ஒரிஜினாலிட்டி மிஸ்ஸிங்.

   நீக்கு
 29. நெல்லைத்தமிழன், நீங்கள் ஐயங்கார் குடும்பத்தை மையமாக வைத்து ஒரு கதை எழுதினால் அவர்களுக்கே உரிய பிரத்யேக மொழியை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சமையல் குறிப்புகள் எழுதும்பொழுது அது எல்லோரையும் ரீச் ஆக வேண்டியது அவசியம் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூருக்குச் சென்றுவிட்டதால், தமிழ் மொழிக்கு எதிராகத் திரும்பிவிட்டதுபோலத் தெரிகிறதே..ஹாஹா. சாதத்தின் அமுது, சாத்து அமுது, சாற்றுமது. தெளிந்து இருப்பதால் ரசம். கண்ட கண்ட மசாலாக்களையும் பருப்பையும் போட்டுக் குழப்புவதால் குழம்பு. சாம்பார் என்பது தமிழ் வார்த்தை அல்ல. எல்லோரையும் ரீச் பண்ணத்தான் நாம் பஸ், டிபன், டிரிங்க்ஸ், ஷர்ட், பேண்ட், பியூட்டி, யங்கா இருக்காங்க என்று தமிழை வளர்க்கிறோமே..போதாதா?

   அதனால், நான் உபயோகித்திருப்பது, TAMIL. ஹாஹாஹா

   நீக்கு
  2. இந்த challenge எந்தப் பிரிவுக்கும் பொருந்துமே?
   ஆ .. சாம்பார் தமிழ் வார்த்தை இல்லையா? ஜெமினி கணேசனுக்கு கோவம் வந்தா என்னாகும் தெரியும்ல ?

   நீக்கு
  3. ஜெமினி கணேசனுக்கு கோபமா? அவர் சாம்பார் ஆச்சே...ஹாஹா

   நீக்கு
 30. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

  இன்றைய தங்களின் தயாரிப்பான மோர் சாத்தமுது நன்றாக உள்ளது. படங்கள் செய்முறைகளை நன்றாக விவரித்துள்ளீர்கள் நானும் மோர் மீந்து விட்டால் அடிக்கடி இது போல் பண்ணுவேன். வெங்காயம் காரட், கோஸ், புடலை.,தக்காளி, தேங்காய் துவையல் சாதத்திற்கு இதை தொட்டுக் கொள்ள வைத்து விட்டால், அமிர்தமாக இருக்கும். உங்கள் பாணிப்படி ஏதேனும் (கோஸ்) கூட்டும் பண்ணலாம். இன்று கூட எங்கள் வீட்டில் இந்த மோர் ரசந்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி. சற்று உடல் நல குறைவில் நான் இன்று தாமதமான வருகை. மன்னிக்கவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. இதை அடிக்கடி செய்வீர்களா? எங்க அம்மா மோரில் சாத்துமதோ குழம்போ செய்தால் என் மனதுக்கு மகிழ்ச்சியாகிவிடும். நீங்களும் நெல்லைதான் என்பதை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

   இணையத்துக்கு வந்தது மனதை இலகுவாக்கி உடல் நலம் பற்றி மறக்கச் செய்திருக்கும் கமலா ஹரிஹரன் மேடம்.

   நீக்கு
 31. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் சகோதரி

  இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வரும் எல்லா நாட்களும் நன்மையாய் பிறந்து சிறக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். தாமதமாக வந்து வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். மன்னிக்கவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் சகோதரரே

  எ.பி குடும்பத்தின் எழுத்தாளர்கள் சகோதரர் திரு. ஏகாந்தன் அவர்களுக்கும். சகோதரர் திரு. புதுக்கோட்டை வைத்தியநாதன் அவர்களுக்கும் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 33. பானுமதி வெங்கடேஷ்வரன், திரு ஏகாந்தன், மற்றும் திரு . வைத்தியநாதன் அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 34. அப்பக்கொடினா என்னனு சொல்லக்கூடாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒரு வகை கொடி. காய்ந்து குச்சியாகிவிடும். இதனை ஒடித்து எண்ணெயில் லைட்டாக வறுத்து மோர்க்குழம்பில் போட்டுச் செய்வார்கள்.

   கூகுளிட்டால், பாரதி மணி ஐயாவின் ரசமான கட்டுரை கிடைக்கும். படித்துப் பாருங்கள் அப்பாதுரை சார்.

   நீக்கு
 35. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பெயர் மட்டும் புதுசு புதுசா வைக்கிறீங்க:)).. இதுதான் எங்கட யாழ்ப்பாணத்து மோர்க் குழம்பு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதீஸ்பலஸ் ல மோர்க்குழம்பு செய்து போடு என அம்மா சொல்லிக்கொண்டிருக்கிறா.. அதற்குள் நெ தமிழன் போட்டிட்டார்ர்.. ஹா ஹா ஹா.. ஆனா உண்மையில் இது சூப்பர் குழம்பு.. றைஸ் க்கு அல்லது உப்புமாவுக்குப் பொருந்தும்.. ந்ாங்க றைஸ் க்கு மட்டுமே இதை செய்வோம்..

  சூப்பரா செய்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமல் அங்கிள், தெலுங்கை ஐந்து மொழிகளில் பேசுவது போல, வெவ்வேறு குழம்புக்கு ஒரே பேரா? இதுலவேற உங்க அம்மா பெயரை இழுக்கறீங்க.

   நீங்க இருக்கும் இடம் குளிர் அதிகம் இல்லையா? அங்கெல்லாம் இந்தக் குழம்பு பண்ணினால் நல்லா இருக்குமா?

   நீக்கு
  2. எப்பவாவது ஆசைக்கு ஓகே:)).. தயிராக சாப்பிட்டால்தான் ஒத்துக்கொள்வது குறைவு, இப்படி சூடு படுத்திச் சாப்பிட்டால் ஒத்துப்போகுது..

   நீக்கு
 36. ///ரொம்ப சுலபமான ரசம் இது. நல்ல கோஸ் வாங்கினேன்னா, உடனே இதனைப் பண்ணச் சொல்லுவேன்///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடர் போடுறாராம் அண்ணிக்கு:))))..

  அதுசரி.. கோஸ் வாங்கினால் இதை செய்யச் சொல்லுவேன் எண்டீங்களே.. கோவாப்போட்டுத்தான் இதை செய்வீங்களோ என 2 தரம் படிச்சேன்ன்.. கோஸ் சேர்க்கல்லியே இங்கு கர்ர்ர்ர்ர்:))..

  அப்போ கோஸ் கறி எனில், இதைச் செய்வீங்களோ?.. ஆஆஆஆஆஆ நாங்க மரவள்ளிக்கிழங்குக் கறிக்கு இந்த மோர்க்குழம்பு 90 வீதமும் செய்வோம்ம் சைவ நாட்களில்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேப்பேஜ் மிளகு போட்ட கூட்டு....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சுசி சொல்லி மாளாது... இன்று கூட, மாலையில் சாதம், புடலங்காய் மிளகு கூட்டுதான் சாப்பிட்டேன் (காலையில் சாதம் சாப்பிடவில்லை என்பதால்)

   ஆரம்பத்திலேர்ந்து நானே மெனு சொல்லி, நான் சாப்பிடும் நாட்களில் மெனுவைச் சொல்லிடுவேன், முடிந்தால் காய் கட் பண்ணித் தந்துவிடுவேன்.

   அது சரி...உங்களுக்கு சைவ நாட்கள் வாரம் இரண்டாவது வருமா?

   நீக்கு
  2. ஆஆஆ அவ்ளோ சுசியா ஹா ஹா ஹா..

   நான் செவ்வாய், வியாளன், வெள்ளி சைவம்.... விரலெடுத்து எண்ணிப் பாருங்கோ 3 நாட்கள் வருது ஹா ஹா ஹா..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!