புதன், 21 ஜூலை, 2021

ஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ஞாயிற்றுக் கிழமை என்றால் லேட்டாக எழுந்து கொள்வது, வித்தியாசமாக ஏதாவது சமைப்பது என்று தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா?

$ எல்லா நாட்களிலும் காலையில் 6 மணிக்கு எழுந்து பாத்ரூமில் ஒளிந்து கொள்பவருக்கு ஞாயிறு மட்டும் வேறு விதமாக விடியுமா என்ன?

நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு.

# என்றென்றும் காலை ஐந்து மணிக்கு விழிப்பு கேஸ் நான்.

எனக்கு வெந்நீர் & டீ போட்டுக் கொள்வது தவிர கிச்சன் பக்கம் போவதில்லை. Age exemption.

ஓய்வு பெற்றோருக்கு என்றென்றும் ஞாயிறு.

& தற்சமயம் எனக்கு எல்லா நாட்களும் வேலை நாட்களே! கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு, பாடல், இசை, பார்ப்பது என்று எல்லா வேலைகளும் கடந்த நான்கு மாதங்களாக நானே பார்த்து வருவதால்தான் மின்நிலா மலர் தயாரிக்கும் வேலை கூட முடிக்க இயலாமல் ஒத்திப்போட வேண்டியதாயிற்று. 

= = = = = =

சென்ற வாரம் எல்லோரும் எங்களைக் கேள்வி கேட்க மறந்துவிட்டதால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்க எல்லோரும் பதில் சொல்லுங்கள் !

1) சரித்திரப் பாடம் என்று சொன்னவுடன் உங்கள் நினைவுக்கு வரும் விஷயம் எது?

2) Science என்றவுடன் நினைவுக்கு வருவது?

3) அல்ஜீப்ரா என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது?

4) சமீபத்தில் முற்றிலுமாக பொறுமையாக நீங்கள் பார்த்த தமிழ்த் திரைப்படம் எது? 

5 ) உங்கள் ஊரில் (உங்களைத் தவிர) சிறந்த மனிதர் என்று (உங்களுக்கு சொந்த பந்தம் அல்லாத ) ஒருவரை சொல்லவேண்டும் என்றால் யாரை சொல்வீர்கள்? 

= = = = =

இந்த வாரம் எல்லோரும் கேள்வி கேளுங்க - இல்லை என்றால் அடுத்த வாரம் trigonometry - calculus எல்லாம் வந்துவிடும் -- ஜாக்கிரதை !! 

= = = = =

பார்த்து கருத்துரைக்க : 

1) 

2) 


(மேலே உள்ள எங்கள் கேள்விகளைப் படித்தவுடன் இப்படி ஆகிவிட்டாரோ!) 

3) 

கேள்விகள் கேட்ட என்னை  இப்படித் தூக்கிப் போட்டு மிதிக்கவேண்டும் என்று தோன்றுகிறதா? 
= = = = =


125 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு எல்லா நாட்களும் ஞாயிறு தான். மற்றவர்களுக்கு ஞாயிறு என்பதால் காலை 9 மணி வரை வீடு அமைதியாக இருக்கும்:)

    பதிலளிநீக்கு
  3. சரித்திலப் பாடம் பானிபட் .சிப்பாய்க்கலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ! பரவாயில்லையே !! எனக்கு பாபர் / அக்பர் ஞாபகம்தான் வருகிறது.

      நீக்கு
    2. இப்ப யாரும் தேதி கேட்கமாட்டார்கள் என்ற தைரியம் தான்!

      நீக்கு
  4. அல்ஜீப்ரா தியரம்ஸ். பார்முலாக்கள்., த்தயவு செய்து ட்ரிக்னாமெட்ரி வேண்டாம்:)))))).

    பதிலளிநீக்கு
  5. பாடனி என்றால். வரைபடங்கள், zoology என்றால். தவளை அறுத்தது,பிஸிக்ஸ் என்றால் வேப்பங்காய்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! உங்களுக்கு physics கிளாஸ்ல வேப்பங்காய் பற்றி கூட பாடம் இருந்ததா!!

      நீக்கு
  6. ஊரில் எல்லோருமே என்னைவிட நல்லவர்கள் தான். கணவர் பெஸ்ட்!

    பதிலளிநீக்கு
  7. முற்றிலும் பொறுமையாகப் பார்த்த படம் அறிவாளி:)

    பதிலளிநீக்கு
  8. அப்பாவுக்கு உதவி செய்யும் பெண் குழந்தை சமத்து.

    பதிலளிநீக்கு
  9. கார்ட்வீல் பண்ண ஜிம் ட்ரெஸ் அண்ட் ஜிம் தேவை:)

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் அனைவருக்கும்... மிக சுறுசுறுப்பாக எட்டிப் பார்த்த வல்லிம்மாவுக்கும், அதிசயமாக சமீப காலங்களில் தாமதமாக வரும் கீசா மேடத்திற்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் முரளி மா. கீதாவுக்கு இன்னும் முழுசாகச் சரியாகவில்லை.
      நிதானமாக வரட்டும்.

      நீக்கு
    2. என்னைத் தேடியதற்கு நன்றி வல்லி, நெல்லை. கால் வலி குணமடைந்தாலும் இன்னமும் காலில் வீக்கம் அவ்வப்போது வருகிறது. காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தால் வீக்கம் வரும் என்கிறார் மருத்துவர். உட்கார்ந்தால் காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு உட்காரச் சொல்லுகிறார். என்னால் காலைத் தூக்குவது கஷ்டம்! ஆகவே அதிகம் படுத்தவாறே பொழுது கழிகிறது. இன்னிக்குத் தான் வலி இல்லை என்பதாலும் வீக்கம் குறைவாக இருந்ததாலும் கணினிக்கு வந்தேன்.

      நீக்கு
    3. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

      நீக்கு
  11. எனக்கு எல்லா நாட்களும் பலப் பல வருடங்களாக ஒரே மாதிரிதான். பஹ்ரைனில் விடுமுறை நாட்களில் எல்லோரையும் (வற்புறுத்தி) பத்திக்கொண்டு காய்கறி வாங்க அதிகாலை மார்க்கெட் சென்று, பிறகு அனேகமாக ஹோட்டலில் காலை உணவு உண்டுவிட்டுத் திரும்புவோம். அல்லது நான் காய்கறி வாங்கி வருவதற்குள் அவர்கள் ரெடியாகி, ஊர் சுற்றக் கிளம்புவோம்.

    சமீபத்தில், பையனுக்கு அன்று விடுமுறை என்பதால் அதிகாலையில் உணவு தயாரிப்பதிலிருந்து கொஞ்சம் விடுதலை (7 1/2 மணிக்குள் காலை உணவு, கையில் டிபன் ரெடி செய்ய). இப்போ நினைத்துக்கொள்கிறேன். அம்மா, சாதம் குழம்பு கரேமது அல்லது கூட்டு தயார் பண்ணி, காலை 7மணிக்குள் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போன காலங்களை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மா, சாதம் குழம்பு கரேமது அல்லது கூட்டு தயார் பண்ணி,// கரேமது தெரியும், அதென்ன கூட்டு? இளகின கரேமது என்று சொன்னால் ஆகாதா?

      நீக்கு
    2. கூட்டுன்னுதான் எங்க அகத்துல சொல்லுவோம். Actually அதற்குப் பெயர் நெகிழ் கறியமுது. ஆனால் நாங்க இதனை உபயோகிப்பதில்லை.

      நீக்கு
    3. தளர் கரேமது இல்லையோ?

      நீக்கு
  12. என் பையன் சின்னவனாக இருந்தகோது குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு எல்லோரும் போயிருந்தபோது, மதியம் அசதியில் மாமனார், என் மகனை முதுகில் நின்று இதமாக அழுத்தச் சொன்னது நினைவுக்கு வருகிறது. அப்போது வைத்திருந்த புது டெக்னாலஜி டிஜிட்டல் கேமராவில் (மிக்க் குறைந்த பிக்சல், 2004) சின்ன வீடியோவும் எடுத்திருந்தேன்.

    திரும்பி வரும்போது, ஜன்னல் வழியாக என் லாப்டாப் திருடு போன விஷயத்தையும், என் பாஸ்போர்ட்டை சன்னலிலேயே திருடன் வைத்துவிட்டுப் போயிருந்ததையும் சின்னம் பசங்களுக்கே உரிய குதூகுலத்துடன் என் பையன் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  13. சமீப காலத்தில் ஒரு சீனப் படத்தை இரண்டாம் முறையாக முழுமையாகப் பார்த்தேன். அரசன் உடம்பு முடியலை என்று லுக் அலைக்கை அரசனாக இரு வாரங்கள் வைத்து, அவன் நன்மைகள் செய்து பிறகு ஒரிஜனல் அரசர் வந்து அவனைக் கொல்ல ஆணையிடும்போது அமைச்சர் அவனைக் கொல்லாமல் தப்பிக்க விட்டுவிடுவதாக்க் கதை. அருமையான படம்

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  15. எனக்கு/எங்களுக்கு எல்லா நாட்களும் ஒரே மாதிரித் தான் விடிந்தது/விடியும், முன்னெல்லாம். இரண்டு பேருமே நாலரைக்குள் எழுந்து கொண்டு ஐந்து மணிக்குள் காஃபி குடித்து மற்ற வேலைகளைப் பார்ப்போம். ஞாயிறன்று தாமதமாகவெல்லாம் எழுந்தது இல்லை. இப்போக் கொஞ்ச நாட்களாக எப்போ முடிகிறதோ அப்போ எழுந்திருக்கிறோம். :(

    பதிலளிநீக்கு
  16. குழந்தைகள் இருக்கையில் சனி, ஞாயிறு அவங்களுக்கு விடுமுறை என்பதால் ஏழரை வரை தூங்குவார்கள். தினம் தினம் ஏழரைக்குள்ளாக ரயிலைப்பிடிக்கப் போகணுமே! அதனால் தான். அன்று சீக்கிரமாய்ச் சமைத்துக் குழந்தைகள் எழுந்ததும் குளிக்க வைத்துச் சாப்பாடு போட்டுவிட்டு மத்தியானமாக பஜ்ஜி, போண்டா, பகோடா என்று போட்டுக் கொடுப்பேன். சில சமயங்களில் சுண்டல் இடம் பெறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! பிறந்தாலும் உங்கள் வீட்டில் குழந்தையாக பிறக்க வேண்டும்!

      நீக்கு
  17. சரித்திரப்பாடம் எனில் எனக்கு நினைவில் வருவது பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் பற்றித் தான். விபரமாகப் படிக்கலை என்றாலும் நாவுக்கரசர், ஞானசம்பந்தர் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்த பல்லவர்கள் பற்றிய ஓர் ஆச்சரியம் எப்போவும் உண்டு. அதே போல் சோழர்கள்! எங்கோ வடக்கே இருந்து வந்தவர்கள். சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள். மனுமாந்தாதாவின் பரம்பரைகள். ஆனால் எப்படி ஒரு ராஜ்யத்தைக் கட்டி ஆண்டார்கள். அவர்களின் தண்ணீர் பற்றிய மேலாண்மைத் திட்டங்களைப் பற்றிப் பார்க்கையிலும் படிக்கையிலும் இன்றும் ஆச்சரியம் ஏற்படும். அதே போல் அந்தக் காலத்திலேயே இருந்த குடவோலை முறையும்! நாட்டை ஆள்வதற்கு வசதியாகப் பிரித்து வைத்திருந்ததும், ஆங்காங்கே ஆதுரசாலைகள் என்னும் பெயரில் மருத்துவ வசதிகள் செய்தது! சொல்லிக் கொண்டே போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தகவல்கள் நீங்கள் தனியாக படித்திருப்பீர்கள். பாடத்திட்டத்தில் இருந்ததெல்லாம் பாதி பொய்கள் தானே?

      நீக்கு
    2. பாதி உண்மை என்று இருந்தாலும் அது முழுப் பொய்தானே.

      நான் நம் கல்வித் திட்டத்தில் படித்த அனைத்து மாணவர்களையும் யோசிக்கச் சொல்கிறேன். கஜினி முகம்மது 18 முறை நம் மீது படையெடுத்து எல்லாத் தடவைகளிலும் தோற்று, கடைசி முறை வென்றான் என்று படித்திருக்கிறோமே தவிர, அவனை 17 முறை தோற்கடித்த இந்து மன்னன் பெயரைப் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறீர்களா? மாலிக்காபூர் தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுத்தான் என்று படித்தவர்கள், இஸ்லாமியப் படையெடுப்பில் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தியதும், திருவரங்கம் கோவிலில் பன்னீராயிரம் வைணவர்கள் கொலை செய்யப்பட்டதும் (முஸ்லீம்களால்), திருநாராயண புரத்தில் தீபாவளி அன்று இந்துக்கள் முழுவதுமாக கொலை செய்யப்பட்டதும், மதுரையில் அரசு உரிமைப்போட்டியால் சகோதரன், வட இந்தியாவிலிருந்து முஸ்லீம் மன்னனின் உதவியை நாடி, கடைசியில் பாண்டிய வம்சமே அழிந்ததுதான் மிச்சம் வரலாறு...ஆனால் இவையெல்லாம் வரலாற்றுப் புத்தகத்தில் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

      வரலாற்றில், இந்தியாவை, அதன் சிறப்பைப் பற்றி எதுவுமே இல்லை. அப்புறம் என்ன பாடத்திட்டம் அது?

      நீக்கு
    3. @பானுமதி, படிக்கும் காலத்திலேயே ஒன்பதாம் வகுப்பில் இருந்து இவை எல்லாம் எங்கள் செக்ரடேரியட் ஆசிரியரால் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது வரையிலும் காந்தி, நேரு எனில் தெய்வம் என எண்ணிக் கொண்டிருந்த நான் இவற்றைப் பற்றிப் படிக்க ஆரம்பித்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இவை எதுவும் பாடப் புத்தகங்களில் இல்லை தான். ஆசிரியர் சில புத்தகங்களைக் குறிப்பிட்டுப் பொது நூலகத்தில் இருந்து எடுத்துப் படிக்கச் சொல்லுவார். பொருளாதாரம் பற்றிய அறிவு வளரவும் நம் பொருளாதாரம் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டது என்று அறியவும் இவை துணை செய்தன. அதன் பின்னரும் கல்யாணம் ஆன பிறகு இப்படிப் பட்ட பல புத்தகங்களை என் கணவர் ராணுவ நூலகத்தில் இருந்து எடுத்து வருவார். படித்திருக்கேன். முக்கியமாய் ஜான் மாஸ்டர்ஸ் அவர்களின் எல்லாப் புத்தகங்களும் படிச்சிருக்கேன்.

      நீக்கு
    4. இணையத்துக்கு வருவதற்கு முன்னர் தரம்பால் பற்றி அறிந்தேன். ஆனால் மேலே படிக்கக் கிடைக்கவில்லை. இணையம் வந்ததும் தான் அவர் பற்றியும் அவருடைய புத்தகங்கள் பற்றியும் அறிந்து படித்தேன். அப்படிப் படித்தது தான் "தி ப்யூட்டிஃபுல் ட்ரீ" என்னும் "அழகிய மரம்" என்னும் புத்தகம். அழகிய மரம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதோடு அல்லாமல் அவர் சோழர்காலத்துப் பொதுப்பணி குறித்தும் ஆராய்ந்து புத்தகங்கள் எழுதி இருக்கார். அவையும் படித்தேன்.

      நீக்கு
    5. @பானுமதி, இப்போவும் நீங்கள் தொல்லியல் வல்லுநர், பேராசிரியர் திரு நாகசாமியின் "RAMANUJA! MYTH and REALITY" புத்தகம் கிடைச்சால் படித்துப் பார்க்கவும். நெல்லை அடிக்க வரதுக்குள்ளே ஓடிடறேன். இப்போ வேகமா வேறே ஓட முடியாது! :)))))))

      நீக்கு
    6. //கஜினி முகம்மது 18 முறை நம் மீது படையெடுத்து எல்லாத் தடவைகளிலும் தோற்று, கடைசி முறை வென்றான் என்று படித்திருக்கிறோமே தவிர, அவனை 17 முறை தோற்கடித்த இந்து மன்னன் பெயரைப் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறீர்களா?// கஜினி முகமது 17 முறை நம் நாட்டின் மீது படையெடுத்து தோல்வி அடையவில்லை. ஒவ்வொரு முறை படையெடுத்த பொழுதும் எக்கச்சக்கமாக பொருள்களை கொள்ளையடித்து சென்றிருக்கிறான். சோமனாதபுரம் கோவிலிலிருந்து அவன் கொள்ளையடித்த பொருள்களை சுமக்க முடியாமல் போதும் போ என்று வீதியில் எறிந்து விட்டு சென்றவையே கோடிக்கணக்கில் தேறியதாம்.

      நீக்கு
    7. சரித்திரப் பாடம் பற்றிய தகவல் பரிமாற்றங்களுக்கு நன்றி.

      நீக்கு
  18. பாண்டியர்கள்! எனக்கு நான் பாண்டிநாட்டுப் பெண் என்பதில் பெருமை எல்லாம் உண்டு. அதுவும் மீனாக்ஷி பட்டணத்தின் குடிமகள் என்பதிலும் பெருமை உண்டு. ஆனால் பாண்டியர்களின் சரித்திரத்தை விபரமாய்ப் படிக்கும்வரை தான் இதெல்லாம். எப்போப் பாண்டியர்களால் கீழைக்கடற்கரையில் தூத்துக்குடியில் இருந்து கன்யாகுமரி வரையிலான மீனவர்கள் போர்ச்சுக்கீசியர்கள் வசம் அடைக்கலம் புகுந்து முற்றிலும் அவர்கள் மதத்துக்கு மாறினார்கள் என்பது தெரியவந்ததோ அப்போதே "சே" என்றாகி விட்டது. பாண்டியர்களின் நாடாளும் ஆசை கடைசியில் இப்படி வந்து முடிந்தது. இது பற்றி எழுதப் போனால் எழுதிக் கொண்டே இருக்கலாம். அதோடு இல்லாமல் இவர்களைத் தோற்கடிக்கவும், தங்கள் எதிரிகள் எனக் கருதப்பட்டப் பாண்டியநாட்டுச் சொந்த மறவர்களைத் தோற்கடிக்கவும் பாண்டிய குல வாரிசுகள் மாலிகாஃபூரை அழைத்தனர். அதன் பிறகும் உல்லூகான் வந்த சமயம் அவனையும் உதவிக்கு அழைத்தனர். சொந்த நாட்டை அடகு வைத்ததில் பாண்டியர்களை மிஞ்ச யாருமில்லை என்று தோன்றியது. இதெல்லாம் சரித்திரம் என்றாலும் இன்றளவும் பேசப்படும் ஒரு விஷயமும் ஆகும். இதை நினைக்கும்போது நான் பாண்டிய நாட்டவள் என்று சொல்லுவதில் கொஞ்சம் வெட்கமே உண்டு. :(

    பதிலளிநீக்கு
  19. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. அறிவியலில் எனக்குப் பிடித்தது பாடனி தான். அதில் மதிப்பெண்களும் கிடைக்கும். கமர்ஷியல் ஜியோக்ரஃபி என்னும் பாடத்தில் விளைபொருட்கள்/விளைவிக்க வேண்டிய இடங்கள்/விதங்கள் பற்றி விரும்பிப் படித்திருக்கிறேன். மண்ணின் விதம், மாறுபட்ட பயிர்களை வாழ வைக்கும் விதம் எனப் படிச்சது ஒரு காலம்.

    கணக்கே தகராறு. இதில் அல்ஜீப்ராவுக்கெல்லாம் எங்கே போறது? நான் படிச்சது பொதுக்கணக்கு முறை தான். செக்ரடேரியல் கோர்ஸ் என்பதால் கணக்கில் அல்ஜீப்ரா, ஜியோமிதி, கிராஃப் போன்றவை இல்லை. தமிழில் இலக்கணம் என்னும் இரண்டாம் தாள் கிடையாது. இந்த விஷயத்தில் இப்போவும் வருத்தம் உண்டு. தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ள முடியாமல் போனதில். பின்னாட்களில் மீனாக்ஷி கோயிலில் நடத்திய தமிழ் வகுப்புக்களில் சேர்ந்து கொண்டு படிக்க முயன்றும் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  21. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  22. இப்போ எந்தத் தமிழ்ப்படமும் பார்க்கலை. "கர்மா" தொடர் தான் பார்த்துக் கொண்டு இருக்கேன். 40 வரை பார்த்தாச்சு. மிச்சம் பார்க்கணும்.
    எனக்குப் பிடித்த மனிதர் எனில் சொந்தம், சுற்று வட்டாரங்களில் நம்ம ரங்க்ஸ் தான். இருவருமே பல சமயங்களில் ஒரே மாதிரி நினைப்போம். செய்வோம். சில சமயங்கள் எங்களுக்கே ஆச்சரியமாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்ன பொருத்தம், உங்களுக்குள் இந்தப் பொருத்தம்!

      நீக்கு
  23. வரலாறு எனில் ராஜராஜ சோழன், சத்ரபதி சிவாஜி, ஹர்ஷ வர்த்தனர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது துரை செல்வராஜு சார்.... வரலாற்றில் 60 சதத்திற்கு மேல் தாண்டவில்லையா? சந்திரகுப்த மௌரியர், அசோகர், சாணக்கியன், விஜயநகரப் பேரரசு... இதெல்லாம் மறந்துபோச்சா?

      நீக்கு
    2. அசோகன் எப்படிப் பட்ட அயோக்கியன் என்பதை நான் ஹிந்தி கற்கையில் அறிய நேர்ந்தது. தூக்கி வாரிப் போட்டது என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை. அதே போல் தான் மற்றச் சில அரசர்களும். அலெக்சான்டரைத் தடுத்து நிறுத்திய "போரஸ்" பற்றி யார் பேசுகின்றனர்? அவனை இந்தியாவை விட்டு அனுப்பினார் போரஸ். ஆனால் அலெக்சான்டர் இந்தியாவுக்குப் படை எடுத்தது பற்றித் தான் பேச்சு/பாடங்கள் எல்லாம்.

      நீக்கு
    3. அலெக்சாண்டர் த கிரேட் என்றே படித்து வந்திருக்கிறோம். இந்தியாவின் வரலாற்றுப் பாடங்கள் மாட்டிமை தங்கிய பிரிட்டிஷ் மக்களால் வடிவமைக்கப்பட்டதுதான் காரணம்.

      நீக்கு
  24. அந்தக் குட்டிச் செல்லம் அழகோ அழகு.
    அந்தப் பெண் ஆபத்தான கோணத்தில் உடற்பயிற்சி செய்கிறார். உடையில் கவனம் தேவை.
    நானெல்லாம் சின்ன வயசில் என் அண்ணா(பெரியப்பா பிள்ளை,) மாமா ஆகியோருக்கு முதுகு மிதித்துக் கால் மிதித்து எல்லாம் செய்திருக்கேன். இப்போல்லாம் வலிக்கிறது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  25. ஐந்து கேள்விகளுக்கும்
    சற்று நேரம் கழித்து !..

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    எல்லா நாட்களும் ஒன்றுதான். ஆனால், ஞாயறன்று எல்லாரும் வீட்டிலிருப்பதால் ஒரு மகிழ்ச்சி மனதில் வரும். மாலை எங்காவது குடும்பத்தினருடன் வெளியில் செல்வோம் என்ற நம்பிக்கையும் அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாங்கள் அதை இழக்கிறோம்.

    சரித்திரம் விருப்பமாக சேர, சோழ, பாண்டியர், பல்லவர்கள் எனப் படித்தது நினைவிருக்கிறது. அதன் பின் கற்ற வாழ்க்கைப் பாடத்தில், அதன் சுவடுகள் மங்க ஆரம்பித்து விட்டன. குழந்தைகளுக்கு கற்பித்த போது மறுபடி எல்லாம் நினைவுக்கு வந்து அவர்கள் வளர்ந்த பின் அதுவும் குறைந்து மறந்து விட்டது. இன்றும் சரித்திரம் என்று தகவல்கள், கதைகள் படிக்க ஆரம்பித்தால், சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. அமர்ந்து படிக்க நேரந்தான் இல்லை.

    சயின்ஸில் வரைபடங்கள் அழகாக வரைய பிடிக்கும். குழந்தைகளுக்கும் அவர்கள் படிக்கும் காலத்தில் நிறைய வரைந்து தந்திருக்கிறேன்.

    கணக்கில் அல்ஜீப்ராவை விட ஜாமென்டிரி கொஞ்சம் அதிகமாகவே கை கொடுக்கும். ஆனால் வாழ்க்கை கணக்கில் "அவன்" விருப்பபடிதான் பிசகின்றி எதுவும் நடக்கிறது.

    எ.பியின் வெள்ளி பாடல் தாக்கத்தில் பழைய படம் "யார் நீ" சென்ற சனியன்று பார்த்தேன். எனக்கு பழைய படங்கள் பிடிக்கும். இதையும் பல வருடங்களுக்கு முன்பே தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.

    கொஞ்சம் சிக்கலான கேள்வி. பொதுவாக ஒரே ஊரில் வாழ்க்கை அமைவதில்லை. சொந்த பந்தத்திலும் சரி.. மற்றவர்களிடமும் சரி.. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு சிறப்புக்கள் உள்ளது. யாரை குறிப்பிடுவது? அனைவரையுமே அவரவர் சிறப்புகளுக்காக வாழ்த்தி வணங்குவேன்.அனைவரும் பிடித்தமானவர்களாக அமைந்து விடுவார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. 1. என்ன ஆச்சரியம்! இன்று காலை பல் துலக்கும் பொழுது சரித்திர ஆசிரியராக இருந்த என் அப்பாவின் நினைவும்,அவர் பட்டப்படிப்பு தேர்வில்,"ஷாஜஹான் காலம் பொற்காலம் என்பதை விளக்கவும்" என்னும் கேள்விக்கு என் அப்பா,"ஷாஜஹான் ஆண்ட சமயத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது. அவன் தாஜ்மஹால் கட்ட வேண்டும் என்பதற்காக மக்களிடம் அதிக வரி வசூல் செய்து அவர்களை மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்கினான்,எனவே அவனுடைய காலம் பொற்காலம் கிடையாது" என்று விடை எழுதி விட்டாராம். இதை அவருடைய பேராசிரியரிடம் சொன்ன பொழுது,"நீ எழுதியிருப்பது சரிதான், ஆனால் மார்க் கிடைக்குமா? தெரியாது" என்றாராம். இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. இங்கே வந்தால் இப்படி ஒரு கேள்வி. நாம் படித்த சரித்திரம் பாதிக்கு மேல் பொய்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாம் படித்த சரித்திரம் பாதிக்கு மேல் பொய்.// அதே அதே!

      நீக்கு
  29. ஞாயிற்று கிழமை என்றால் கொஞ்சம் லேட்டாக எந்திரிக்க வேண்டுமென்றுதான் நினைப்பேன் ஆனால் அன்றுதான் வழக்கத்தை விட சிக்கிரமாக முழிப்பு வந்துவிடும் . ஞாயிற்று கிழமை என்றால் வழக்கமாக பண்ணும் இட்டிலி தோசை ப்ரெட் என்பதற்கு பதிலாக காலையில் கேப்பை ரொட்டி அல்லது கேப்பை புட்டு பண்ணுவேன்

    பதிலளிநீக்கு
  30. தாஜ்மஹாலை காதல் சின்னம் என்று குறிப்பிடுவதும் மிகப்பெரிய பொய் என்றுதான் எனக்குத் தோன்றும். தன்னுடைய மந்திரியின் மனைவியின் அழகால் கவரப்பட்ட ஷாஜஹான் அந்த மந்திரியை கொன்று விட்டு அவளை மணந்து கொள்கிறான். அதற்கு முன்னரே அவனுக்கு பல மனைவிகள். அவளோடு வாழ்ந்த 13 வருடங்களில் அவளுக்கு பன்னிரெண்டு குழந்தைகள். ரத்த சோகையால் அவள் இறந்து போகிறாள். மும்தாஜ் மீது ஷாஜஹானுக்கு இருந்தது காம வெறி, காதல் கிடையாது. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு பதிமூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வேறு ஊரில் புதைக்கப்பட்டிருந்த அவள் உடல் தாஜ் மஹாலுக்குள் அடக்கம் செய்யப்படட்டது என்பதுதான், இப்படியிருக்க, தாஜ்மஹால் காதல் சின்னமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாஜ்மஹால் அதன் கட்டிடச் சிறப்புக்குத்தான் பெயர் பெற்றது. காதல் சின்னம் என்பதெல்லாம் பொழுது போகாதவர்கள் கொடுத்த பெயர். (இளைய தளபதி, தளபதி என்று திரைப்பட நடிகர்களுக்குப் பெயர் கொடுப்பது போல)

      நீக்கு
    2. தாஜ்மஹல் உண்மையில் ஷாஜஹான் காலத்தில் கட்டப்படவே இல்லை. அதன் உண்மை மறைக்கப்பட்டது/தில்லி செங்கோட்டை பற்றிய உண்மை போல். அதே போல் குதுப் மினாரில் இருக்கும் இரும்பால் ஆன கல்வெட்டுப் பழைய காலச் சரித்திரத்தைக் கூறுகிறது. (சாலிவாஹனன்?) ஒரு சஹாப்தம் முடிவு பெற்றதைச் சொல்லும். ஆனால் அதை யாருமே கவனிப்பதில்லை. எல்லோருமே குதுப் மினாரைப் பற்றி ஆச்சரியப்படுவார்கள். :(

      நீக்கு



  31. படித்த காலங்களிலே எந்த பாடமும் நினைவிற்கு வந்ததில்லை.. அப்படி இருக்க இப்ப போய் என்ன நினைவீற்கு வந்தது என்று கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்லுவது.. இருந்தாலும் கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லித்தானே ஆகனும்.. சரித்திரம் சைன்ஸ் ,அல்ஜீப்ரா என்றால் நினைவிற்கு வருவது எல்லாப் பாடங்களிலும் 35 மார்க்கிற்கு மேல் தாண்டி வாங்கியதில்லை என்பது மட்டும்தான் நினைவீர்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  32. உங்க ஊரில் என்று கேள்வி கேட்டு இருக்கீங்க ஆனால் பிறந்த ஊரா வளர்ந்த ஊரா அல்லது வேலை பார்த்த ஊரா அல்லது இப்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் ஊரா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது என்பதால் நல்லவர்கள் யார் என்று சொல்ல முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவரைக் குறிப்பிடலாமே !

      நீக்கு
  33. 2. சயின்ஸில் பிடித்த பிரிவு. பெளதீகம் என்னும் physics. அதில் 'To every action there is an equivalent and opposite reaction' என்னும் மறக்க முடியாத நியூட்டனின் மூன்றாம் விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. For every action there is an equal and opposite reaction. நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

      நீக்கு
  34. பதில்கள்
    1. எனக்கும் அல்ஜீப்ரா என்றால் முதலில் நினைவுக்கு வருவது இதுதான்.

      நீக்கு
  35. 4. வேதாளம் என்னும் மஹா திராபையான படம். நடுவில் கொஞ்சம் தூங்கினேன்‌. நேற்று ரத்தத்திலகம். சிவாஜி, சாவித்திரி என்பதால் பார்க்க முயற்சித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரத்தத் திலகம் நான் மதுரையில் சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்தேன். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்துத் தொலைக்காட்சியில் பார்த்தோம். என் மாமனார் மிகவும் ரசித்தார். :))))

      நீக்கு
    2. அது சரி! இன்னிக்கு என்ன "ஜிவாஜி"யின் நினைவு நாளை யாருமே கொண்டாடக் காணோமே! நான் மட்டும் தான் தன்னந்தனியாய் முகநூலில் கொண்டாடிட்டு இருக்கேன். :)))))

      நீக்கு
    3. நினைவு நாளை கொண்டாடுவதா! :((

      நீக்கு
  36. முழுமையாக நல்லவர்களும் கிடையாது, முழுமையாக கெட்டவர்களும் கிடையாது. சமய சந்தர்பத்திற்கு ஏற்றார் போல் மாறும். பெரும்பான்மை நல்லதனம் அதிகம் கொண்ட என் நண்பர்கள் பலர் உண்டு.

    பதிலளிநீக்கு
  37. படம் 1. என்ன மிருகம் என்று தெரியவில்லை. என்னால் எந்த மிருகத்தையும் இப்படி கையில் தூக்கி வைத்துக் கொள்ள முடியாது.

    2. விபரீத ராஜயோகம் என்று ஜோசியத்தில் ஒன்று உண்டு. இது என்ன விபரீத யோகம்?

    3. மிதி வைத்தியம் என்று ஒன்று உண்டு. அதன்படி இதயத்தில் ஏற்படும் அடைப்பைக் கூட நீக்கி விடலாம் என்பார்கள். பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரைக்கப்பட்டவரைக் கூட குப்புற படுக்க வைத்து, தினமும் காலிலிருந்து இடுப்பு வரை மிதிப்பதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விட முடியுமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோரி முகம்மதுவிடம் அடிமையாக இருந்த குத்புதீன், அரசனானது, அலாவுதீன் கில்ஜியின் அரண்மனையில், அலியாக இருந்த மாலிக் காஃபூர் பின்பு சர்வாதிகாரியாக மாறி அரசனானது... இவையெல்லாம் விபரீத ராஜ யோகம் இல்லையா?

      நீக்கு
    2. குத்புதீனுக்கும், மாலிக் காபூருக்கும் கண்டிப்பாக விபரீத ராஜயோகம் இருந்திருக்கும். பல அரசியல்வாதிகளுக்கு விபரீத ராஜயோகம் உண்டு. வீ.ரா.யோ.இருக்கும் மற்றொரு பிரபலம் சச்சின் டெண்டுல்கர்.

      நீக்கு
    3. ஆ விஷயம் விபரீதமாகப் போய்க்கொண்டு இருக்கிறதே!

      நீக்கு
    4. கலாமுக்கும் அந்த மாதிரிதான் வி.ராஜயோகம். சோனியா, பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்ததற்கு, வாஜ்பாய்க்குக் கொடுக்கப் பிரியப்படாமல், கலாமுக்குக் கொடுக்கச்சொன்னாராம். ஆனால் கலாம் எல்லாவற்றிர்க்கும் தான் தகுதியானவர் என்று நிரூபித்தவர் என்பதையும் சொல்லணும்.

      நீக்கு
    5. பொக்ரான் அணுகுண்டு - இந்திரா காந்தி காலம் அல்லவா!

      நீக்கு
  38. ஊரடங்கிற்கு பின் ஞாயிறு சிறப்பில்லை...

    trigonometry - calculus வரும் நல்ல நாளை எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  39. பள்ளிப்பாடம் என்றால் எனது நினைவுக்கு வருவது ஆசிரியர்கள் தாம்.

    சரித்திரப்பாடம் சமூகப்பாடத்தின் ஒரு பகுதியாக இருந்தது அப்பியம் என்ற பட்டப்பெயர் கொண்ட ராமச்சந்திர ராவ் சரித்திர ஆசிரியர். சரித்திரத்தை மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போன்று கதையாக சொல்லுவார் மற்றபடி சமூக நூல் நண்பன் என்ற நோட்ஸ் தான் பரீட்சைக்கு படிப்போம். 

    சயின்ஸும் மூன்று பிரிவுகளை உட்படுத்திய ஜெனரல் சயின்ஸ் தான். ஆசிரியர் சீதாராம ஐயர். SSLC  பரீட்சையில் 75 மார்க் வாங்கினால் புத்தகம் வாங்கித் தருகிறேன் என்று ஊக்கம் அளித்தவர். 74 மார்க் வாங்கி 1 மார்க்கில் கோட்டை விட்டேன். 

    Algebra என்றால் நினைவுக்கு வருவது மோடிஜி யால் புகழ் பெற்ற (a + b)^2 = a^2 + B^2 +  2ab தான். 

    cinema பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக இந்தியன் பார்த்ததாக நினைவு.
     
    சொந்தமில்லை பந்தமில்லை நண்பரில்லை ஆனால் சசி தரூர் அவர்களை சிறந்த மனிதராக கூறுவேன். தொகுதிக்கும் தொகுதி மக்களுக்கும் கையூட்டு இல்லாது பல நல்ல காரியங்களை செய்திருக்கிறார். 

    செல்லத்தை பார்த்தவுடன் நாங்கள் 1994 ல் வளர்த்த, தற்போது இல்லாத  கிட்டு என்ற பாமரேனியன் செல்லம் தான் கண்ணில் தெரியுது. 

    முதுகு மிதித்தல் பார்த்தபோது நினைவுக்கு வந்தது தேவர் மகன் படத்தில் சிவாஜி பேர பிள்ளைகளை " போற்றிப் பாடடி பெண்ணே" என்று பாடி மிதிக்க சொல்வாரே, அந்த சீன் தான் ஞாபகம் வந்தது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  40. @ கீதாக்கா...

    // இதெல்லாம் சரித்திரம் என்றாலும் இன்றளவும் பேசப்படும் ஒரு விஷயமும் ஆகும். இதை நினைக்கும்போது நான் பாண்டிய நாட்டவள் என்று சொல்லுவதில் கொஞ்சம் வெட்கமே உண்டு. :(.. //

    இதன் கூட இவைகளும்..

    நீதி வழங்குவதில் பாண்டியர்கள் மிகவும் சுறுசுறுப்பு..

    ஆராயாமல் நள்ளிரவில் கதவைத் தட்டி விட்டு - தன் கையை வெட்டிக் கொண்டவன் பொற்கைப் பாண்டியன்..

    ஆராயாமல் தண்டனை வழங்கி கோவலனின் உயிரை எடுத்ததோடு தன்னுயிரையும் விட்டவன் நெடுஞ்செழியன்..

    சற்றே மாறுதலுடன் சோழ நாட்டு வீரனுக்கு மாறு கை மாறு கால் வாங்கி உயிரை எடுத்து அவனை தெய்வப் பிறவியாக்கியதும் அங்கே தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தம்பி. ஆனால் இவை எல்லாம் நடந்தது எப்போது? அதன் பின்னர் வந்த பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தில் சுயநலவாதிகளே அதிகம். அதிலும் பதினான்கு/பதினைந்தாம் நூற்றாண்டுகளில்! :( சொந்த நாட்டை அடகு வைத்தவர்கள் அவர்களே!

      நீக்கு
    2. // ( சொந்த நாட்டை அடகு வைத்தவர்கள் அவர்களே!..//

      உண்மை தான்.. உண்மை தான்..
      நான் தங்களை மறுத்துப் பேச வில்லை...

      பங்காளிச் சண்டைக்காக மகா கொடூரர்களை தமிழகத்திற்குள் அழைத்து பல திருக்கோயில்களின் அழிவிற்குக் காரணமானவர்கள் அவர்களே!..

      நீக்கு
    3. சொக்கநாதனையே மதுரைக்கு வரவழைத்து நக்கீரனுடன் சொற்போரில் மோத வைத்த முத்துராமப் பாண்டியனையும் மறக்க முடியாது!

      நீக்கு
    4. ஆனாலும் பாருங்கள்...

      ஆராய்ந்து பார்க்காமல் வாதாடி கடைசியில் அக்கினிக்கு இரையாகிப் போனார் நக்கீரர்..

      அதற்கப்புறம் அவர் உயிர்த்து வந்ததெல்லாம் அம்பிகையின் கருணை...

      நீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    கையில் அடக்கமாக அடங்கி இருக்கும் செல்லப் பிராணியின் சுகம் அதன் கண்களில் தெரிகிறது.

    பல்டி அடிப்பதில் தவறில்லை. ஆனால் ஆண்களாக இருந்தால் அதில் வீரத்தின் அடையாளம் தெரியும். இப்போதுதான் எல்லோருமே வார்த்தைகளைக் கொண்டு பல்டி அடித்து பேசுவதில் சிறந்தவர்கள் ஆகி விட்டார்களே..!

    வலிக்கு முதுகில் ஏறி மிதிப்பது அந்தக் கால பெரியவர்கள் காலத்திலிருந்து வந்திருப்பவைதான். நான் சிறு பெண்ணாக இருக்கும் போது, என் அத்தை (அப்பாவின் அக்கா) வந்தால், இப்படித்தான் காலால் ஒத்தடம் தருவது போல் மிதிக்கச் சொல்வார்கள். அவர்கள் கொஞ்சம் ஸ்தூல சரீரம் என்பதால் எனக்கு அவர் முதுகின் மேல் ஏறவே சங்கடமாக இருக்கும். (வழுக்கி விழுந்தால் அடிபடுவது நானல்லவா? :) )

    நீங்கள் படங்களுக்கு தந்திருக்கும் கமெண்ட்கள் சிரிப்பைத் தந்தன.

    இன்றைய கணக்கில், எ.பி 100 க்கும் மேலாக மதிப்பெண்கள் (கமெண்ட்) வாங்கப் போவதற்கு வாழ்த்துகள். அனைத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் கொஞ்சம் ஸ்தூல சரீரம் என்பதால் எனக்கு அவர் முதுகின் மேல் ஏறவே சங்கடமாக இருக்கும். (வழுக்கி விழுந்தால் அடிபடுவது நானல்லவா? :) ) வாய்விட்டு சிரித்தேன். நன்றி.

      நீக்கு
  42. மேலே உள்ள படங்களில் இரண்டாவது படத்தை தவிர்த்திருக்கலாம். யாரும் சொல்ல வில்லையோ ??

    நமக்கு எல்லாநாளும் வேலை நாளே... ஆறிலிருந்து ஆறறைக்குள் முழித்தால் உக்கார 1 மணி ஆகிவிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படத்தில் ஆட்சேபிக்க எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வந்த கமெண்ட் மூலம் கார்ட்வீல் பயிற்சி பற்றி முதலாகத் தெரிந்துகொண்டேன். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  43. இரண்டாவது படம் பெண்மணிதானா ? முகம் ஆண் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  44. கேள்வி-பதில்கள் வருவது குறைந்து விட்டதே!

    பகிர்ந்து இருக்கும் படங்கள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  45. எல்லா கிழமைகளும் எனக்கு ஒன்று தான் அதிகாலை விழிப்பு வந்து விடும்.

    சரித்திரப் பாடம் என்று சொன்னவுடன் உங்கள் நினைவுக்கு வரும் விஷயம் எது?

    இவருக்கு பின் இவர் ஆட்சி செய்த காலம், அவர்கள் செய்த போர்கள், சிறப்பு பெற்ற போர்கள் எல்லாம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு அரசர்களும் அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் செய்த நன்மை, தீமைகள் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத படி படித்துக் கொண்டு இருக்கிறொம். அவர்கள் காலத்து கட்டிட கலையை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.
    நான் சரித்திரத்தை விருப்ப பாடமாக ஏற்று படித்தவள்.

    பதிலளிநீக்கு
  46. அன்பு பிடிக்குள் அடங்கி கிடக்கும் குட்டிச் செல்லம்.
    எங்களால் முடியும் இப்படி செய்ய என்று யோகா செய்யும் பெண் சொல்கிறாள்.
    இப்படி மிதிக்க சொல்வார்கள் பெரியவர்கள் என்று கேள்வீ பட்டு இருக்கிறேன், தேவர் மகன் படத்தில் சிவாஜி பேத்திய இப்படி ஏறி மிதிக்க சொல்லும் காட்சியைப் பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!