புதன், 14 ஜூலை, 2021

சமையல் விஷயம் அதிகமாய் இடம் பெறுவதன் காரணம் என்ன?

 

கீதா சாம்பசிவம் : 

இப்போதெல்லாம் தினசரிப் பதிவுகளிலேயே சமையல் விஷயம் அதிகமாய் இடம் பெறுவதன் காரணம் என்ன?

$ ஆஃபீஸ்,காலேஜ் ஸ்கூல் இவை தவிர சமையல் பற்றி மட்டுமே பேச முடிகிறது. பரிமேல் அழகர் சொன்னது போல், சிந்தையும் மொழியும் செல்லும் இடம்...

# வாசகர்கள் எதை விரும்புகிறார்கள் என்று ஆசிரியர் குழு நினைக்கிறதோ  அந்த அம்சம் தினசரிகளில் பிரதான்யமாக வரும்.  நாம் சமையல் குறிப்புகளில் கவனம் காட்டும்போது அகில உலகமும் அப்படியே இருப்பதாக நமக்குத் தோன்றும். ராசி பலன், சினிமா கிசு கிசுக்கள் , நடிகை நடிகர் என்ன சாப்பிடுகிறார் என்ன உடுத்துகிறார் என்பது போன்ற அரிய விஷயங்கள், கேள்வி பதில், கோயில் உலா, இந்த மாதிரி எல்லாம் பத்திரிகைகளில் பிரபலமாக இருப்பது இதே அடிப்படையில் தான்.  அண்மையில் யூ டியூபி  ல் தலைப்புச் செய்திகளில் அடிபடுபவர்களை சகட்டுமேனிக்குத் தகாத வார்த்தைகளால் திட்டுவது பிரபலமாகி வருகிறது.  தற்போதைய இலக்குகள் மதுவந்தி, மற்றும்  சிவசங்கர்  பாபா .

& எங்களுக்குத் தெரிந்து, blog அரங்கிலும், முகநூல் வட்டத்திலும், சமையல் பதிவுகளே அதிலும் படத்துடன் கூடிய சமையல் பதிவுகளே பலரின் கவனத்தை ஈர்க்கும் சமாச்சாரம். சினிமா பார்க்காதவர்கள் இருப்பார்கள், அரசியல் பற்றி எதுவும் ஆர்வம் இல்லாதவர்கள் இருப்பார்கள் - ஆனால் நல்ல சாப்பாட்டை / சிறு தீனியை விரும்பாதவர்கள் மிக சொற்பம்.  

சமையலைத் துச்சமாக நினைத்துப் பேசும் புதுயுகப் பெண்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

$ வஞ்ச இகழ்ச்சி ?

# புதுயுகப் பெண்கள் சமையலை துச்சமாகக் கருதுகிறார்களா என்று எனக்குத்  தெரியாது. உணவு எளிதில் ஆர்டர் செய்து கிடைக்கும் போது, எதற்கு கஷ்டப்பட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும் என சிலர் நினைக்கலாம்.  அது கண்டனத்துக்கு உரியதல்ல.

சமைப்பவர்களின் எண்ண ஓட்டங்கள் மூலம் அதைச் சாப்பிடுபவர்களின் மனோநிலை அமையும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

$ எண்ண ஓட்டங்கள் சீராக இல்லாவிடில் சமையல் ருசிக்காமல் போனால் சாப்பிடுபவர்கள் மனா நிலை ??

# நம்மிடம் அன்பு பாராட்டுவோர்  சமைத்தால் அது எப்படி இருந்தாலும் நமக்குப்  பிடிக்கும் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.  மற்றபடி சமைப்பவர் மன நிலை சரியில்லாத போது  சமையலில் உப்பு உறைப்பு தப்பாகப் போகலாம்.  சமைப்பவர் மனநிலை சாப்பிடுபவர் மனதையும் பாதிக்கும் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

& ஹோட்டலில் சமைக்கப்படும் பண்டங்கள் வியாபாரம், அதிக லாபம் ஆகியவற்றை மட்டுமே பெரும்பாலும் தயார் செய்யப்படுகின்றன. ஆனால் வீட்டில் தயாராகும் உணவு, யாருக்குத் தயார் செய்யப்படுகின்றதோ அவர்களின் சுவை + பதம்  அறிந்து தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்கும். சமைப்பவர்களின் எண்ண  ஓட்டங்கள் அவர் செய்யும் பதார்த்தங்களின் தரத்தை / சுவையை பாதிக்கும் என்பதுதான் என்னுடைய கருத்தும். 

எழுத்தாளர்களை மானசிக குருவாக ஏற்றுக்கொள்ளும் வழக்கம் உண்டா?

# எனக்குப் பிடித்த எழுத்தாளர் யாரையும் நேரில் சந்தித்ததில்லை.  சிலகருத்துக்கள் ஏற்பாக இருந்து மனதில் பதிவது உண்மை.  குருவாக ஏற்றுக்கொள்வது பெரிய விஷயம் - அசாத்தியம். 

& இல்லை. 

உங்களுடைய முக்கியமான முடிவுகள் பற்றி நீங்கள் குருவாக மதிக்கும் எழுத்தாளரிடம் கலந்து ஆலோசிப்பீர்களா?

& ஊஹூம். நஹி -- கபீ நஹி. 

உங்கள் அபிமான எழுத்தாளர் எழுதிய/எழுதும் எல்லாவற்றையும் ரசிப்பீர்களா? அதில் குற்றம்/குறை கண்டால் விமரிசிப்பீர்களா?

# நம் ஆதர்ச எழுத்தாளர்களும் நமக்கு ஏற்பில்லாததை எழுதுவது சகஜம். ஆனால் விமர்சிக்க மாட்டேன்.  காரணம் நெகடிவ் ஆக எது சொன்னாலும் அது எல்லா பாசிடிவ்களையும் மறைத்து விடும்.

& பொதுவாக கதை கட்டுரைகளையோ அல்லது திரைப்படங்களையோ விமரிசன நோக்கத்தோடு படிப்பது / பார்ப்பது இல்லை. ஏதேனும் தெரிந்துகொள்ள புது விஷயம் உள்ளதா என்று மட்டும் பார்ப்பேன். இருந்தால் தெரிந்துகொள்வேன். இல்லையேல் மறந்துவிடுவேன். 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1. Sister concern என்பதை தமிழில் சகோதர நிறுவனம் என்பது சரியா?

# சரிதான்.

$ Sister concern என்பதைப் பார்த்ததும், எனக்கு என் நண்பர் பிருந்தாவனம் கூறிய ஒரு சுவையான சம்பவம் ஞாபகம் வருகிறது. அசோக் லேலண்ட் ஆராய்ச்சி & அபிவிருத்திப் பிரிவில் என்னுடன் பணிபுரிந்தவர் பிருந்தாவனம். அவர் வேறு ஒரு நண்பருடன் பொது இடம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். அந்த நண்பர், பிருந்தாவனத்திடம் தனக்கு எண்ணூர் பவுண்டரீஸ் தொழிற்சாலையில் இன்டர்வியூ வந்துள்ளதாகக் கூறி, எண்ணூர் பவுண்டரீஸ் நல்ல கம்பெனியா என்று கேட்டுள்ளார். பிருந்தாவனம் அவரிடம், எண்ணூர் பவுண்டரீஸ் எங்கள் sister concernதான் என்று சொல்லி, பிறகு அவருக்கு எண்ணூர் பவுண்டரீஸ் பற்றி விவரமாக எடுத்துச் சொல்லி, அசோக் லேலண்ட் கம்பெனிக்காக அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைப் பற்றி சொல்லி உள்ளார். 

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் கடைசியில், பிருந்தாவனத்திடம், " அப்போ நிச்சயமாக நான் அங்கே வேலையில் சேர முயற்சி செய்கிறேன் சார். எனக்கு உங்க sister ரெகமண்ட் செய்வார்களா? அங்கே அவங்க என்னவா இருக்காங்க? " என்று கேட்டாராம்! 

2. சிறு வயதில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வல காரில் அடித்து பிடித்து இடம் பிடித்து ஃபோட்டோவுக்கு தலைகாட்டிய அனுபவம் உண்டா?

# என் சிறு வயதில் மாப்பிள்ளை அழைப்புக்கு கார் அவ்வளவு சகஜமான விஷயம் அல்ல.

& சிறு வயதில் எங்கே எல்லாம் ஓ சி சவாரி கிடைக்குமோ அதை எல்லாம் அனுபவித்தது உண்டு. சில சமயங்களில் அண்டை அயலார் வீட்டு மாப்பிள்ளை அழைப்பு கார்களில் யாராவது அழைத்தால் தொற்றிக்கொள்ள ஆசைப்பட்டதும் உண்டு. (ஆனால் அப்படி யாரும் அழைக்கவில்லை) என்னுடைய சிறு வயதில் என்னுடைய அண்ணன் (#) எடுத்த படங்களில் மட்டும் தலை காட்டியது உண்டு. 

3. இப்போதெல்லாம், புராண கதைகளை அடிப்படையாக கொண்ட சாமி படங்கள் ஏன் வருவதில்லை?

# எல்லா சாமி சப்ஜெக்ட்டும் படம் எடுத்தாகி விட்டது என்று சொல்லலாமோ ?

& எல்லாம் ஏ பி நாகராஜனோடு போயிடுச்சுங்க. 

4. டென்னிஸில் ஏன் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை அடையவில்லை?

# டென்னிஸில் உலகத் தரத்துக்கான பயிற்சி எடுக்க தற்போது லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.  உபகரணங்களும் அதிக விலை.  எனவே கிருஷ்ணன், அமிர்தராஜ் ,  பயஸ் , சானியா போன்ற வீரர்கள் உருவாவது அசாத்தியமாகி விட்டது.

 = = = = =

கருத்து உரைக்க இரண்டு படங்கள் : 

1) 


2) 



68 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    கேள்விகளில் மிக அருமையான யோசிக்க வைக்கும் கேள்வி Sister Concern

    பதிலளிநீக்கு
  2. எழுத்தாளர்களை மானசீக குருவாக - பாலகுமாரனுக்கு அப்படிப்பட்ட வாசகர்கள் உண்டு. அவர்கள், பாலகுமாரனை அப்படி விளித்துக் கேள்விகள் கேட்டதையும் அதற்கு பாலகுமாரனின் பதில்களையும் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்திருக்கலாம். எனக்கு பா கு பிடிக்காது.

      நீக்கு
    2. எனக்கும் பா.கு. பிடிக்காது. ரொம்பவே ஓவரா அலட்டுவார். ஹிஹிஹி, பானுமதி கம்பைத்தூக்கிண்டு வரதுக்குள்ளே ஓட முடியுமா இப்போதைய நிலையில்? :)))))

      நீக்கு
  3. தேவையில்லாமல் அதீத முக்கியத்துவம் தந்து இந்தக் காலப் பெண்களை அவர்கள் விருப்பப்படி படித்து, வேலை செய்ய வேணும் என்ற நினைப்புக்குத் தடை போடும் விதமாக சமையல்காரியாக ஆக்க முயல்கிறார்கள் என்ற எண்ணமும், யூ டியூப் பெருக்கமும்தான் இளம் பெண்களின் சமையல் மீதான ஆர்வக் குறைவிற்குக் காரணம்.

    அதையொட்டிய சுத்தம் செய்யும் வேலைகளையும் பெரும்பாலும் அவர்கள் செய்வதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம், எங்க உறவுப் பெண் ஒருத்தி எம்.ஃபில் வரை படித்துவிட்டுக் கடைசியில் திருமணம் செய்து கொண்டு சமைக்கவா அந்தப் படிப்பு எனக் கேட்டார். எம்.ஃபில் படிச்சாச் சாப்பாடு சாப்பிட மாட்டியானு திரும்பக் கேட்டேன். அதுக்கு அவங்களுக்குக் கோபம் வந்து விட்டது. இத்தனை செலவு செய்து படிச்சுட்டுக் கடைசியில்சமைக்கணுமா என்கிறார் திரும்பவும். எனக்குத் தெரிந்து பல மருத்துவர்கள் (சிநேகிதிகள்) உண்டு. உதாரணமாக தி.வா.வின் மனைவி பெண்கள் நல மருத்துவர். அவர் பெயர் சொன்னால் தான் கடலூரில் தெரியும். ஆனால் அதே சமயம் இத்தனை வருஷங்களாக மாமியார்/மாமனாருக்குச் செய்தும் போட்டிருக்கார். தி.வா. ஊரில் இல்லாத சமயங்களில் அவர் சார்பில் அக்னிஹோத்திரத்துக்கும் மடிசார் கட்டிக் கொண்டு செய்வார்.
      இன்னும் நியூசிலாந்தில் கிரைஸ்ட் சர்ச்சில் இருக்கும் சிநேகிதியான ஜெயஶ்ரீ நீலகண்டன், என் உறவுக்காரர்களில் சில மருத்துவர்கள்/எல்லோரும் நர்சிங் ஹோமெல்லாம் வைத்திருந்தார்கள். அதே சமயம் வீட்டில் சமையலும் தேவைப்படும்போது களத்தில் இறங்கி தூள் கிளப்புவார்கள்.

      நீக்கு
    3. //சமையலும் தேவைப்படும்போது களத்தில் இறங்கி// - இப்படிப் பண்ணத்தான் இந்தக் காலப் பெண்கள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். பணம் சம்பாதிக்கும்போது அது மன நிறைவையும் பாதுகாப்பு உணர்வையும் அவங்களுக்குத் தருதுன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் வாழ்க, அவன் அருள் பெறுக!

      நீக்கு
    2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்! வாழ்க வளமுடன்!

      நீக்கு
    3. தம்பி துரைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்/ஆசிகள். அவரின் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சியாகவும் நல்லபடி சமைத்துச் சாப்பிடும்படியாகவும் சூழ்நிலை உருவாகப் பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
    4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்

      நீக்கு
    5. எனக்கு ஒரு வயது கூடுவதற்குள், உங்களுக்கு, பா.வெ., ஸ்ரீராமுக்கு எல்லாம் சீக்கிரமாக ஒரு வயது கூடிவிடுகிறதே

      நீக்கு
    6. அன்பின் கீதாக்கா மற்றும் நெல்லை அவர்களது வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி...

      நீக்கு
    7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்

      நீக்கு
  6. அனைவருக்கும் நற்காலை வணக்கம்.
    இன்றும் இன்னும் வரும் நாட்களிலும்
    ஆரோக்கியமும், அமைதியும் நிறைந்திருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் கீதாவின், பானுவின் கேள்விகள்
    சுவாரஸ்யமானவை.
    பதில்களும் நல்ல நிதானமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.

    சமையல் பதிவுகள் எப்போதுமே பசி உணர்வைத் தூண்டும்படி இருந்தது
    மீனாட்சி அம்மாவின் புஸ்தகங்கள்.

    இப்போதும் எப்போதும் சுசி ருசியான உணவுப் பதிவுகளுக்கு வரவேற்பு இருக்கும்
    என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ..எல்லாம் ஏ பி நாகராஜனோடு போயிடுச்சுங்க.//

    சின்னப்பத் தேவர் ஞாபகத்தில் வரமாட்டாரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னப்பா தேவருக்கு யானையும் பாம்பும் ஆடும் மற்ற மிருகங்களும் தான் தெய்வம். அவர் எடுத்தவை தெய்வீக சமூகப் படங்கள். புராணப் படங்கள் அல்ல.

      நீக்கு
    2. தேவர் எடுத்த சாமி படங்கள் புராண கதைகளை அடிப்படையாக கொண்டதில்லை.

      நீக்கு
  9. சமையல் செய்பவர்களின் நல்லெண்ணங்கள்
    ஆரோக்கியத்தை வளர்க்கும் என்பதில்
    எனக்கு நம்பிக்கை உண்டு.

    அலுத்துக் கொண்டு,கோபத்தோடு சமைப்பவர்களின்
    உணவு நெகடிவ் பலன் கொடுப்பதும் உண்டு.
    சமைப்பது ஒரு தவம் என்று அப்பா,அம்மா இருவரும் சொல்லுவதைக் கவனித்திருக்கிறேன்.
    ரேஷன் காலங்களில் கிடைத்த அரிசி கூட
    அம்மா சமைத்தால் மிக ருசியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
    2. வல்லி, கௌதமன் இருவரும் சொல்லுவது சரியே! இதற்கான பழைய கதை கூட ஒன்று உண்டு. பின்னர் சொல்கிறேன். இங்கே எழுதினால் பெரிசாகி விடும். சமைக்கும்போது நல்லெண்ணங்கள் இல்லை எனில் அது சாப்பிடுபவர்களின் மனங்களையும் பாதிக்கும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

      நீக்கு
    3. சுவாரசியமான கருத்து.. மேலும் அறிய ஆவல்.

      நீக்கு
  10. ..ஆனால் நல்ல சாப்பாட்டை / சிறு தீனியை விரும்பாதவர்கள் மிக சொற்பம். //

    மஹா வாக்யம் !

    பதிலளிநீக்கு
  11. //நெகடிவ் ஆக எது சொன்னாலும் அது எல்லா பாசிடிவ்களையும் மறைத்து விடும்.// ரொம்ப சரி.

    பதிலளிநீக்கு
  12. படம் ஒன்றுஒன்று சரியான கடி ஜோக்காக இருக்கும் போலிருக்கிறதே..?

    பதிலளிநீக்கு
  13. @ வல்லியம்மா...

    // சமைப்பது ஒரு தவம் என்று அப்பா, அம்மா இருவரும் சொல்லுவதைக் கவனித்திருக்கிறேன்..//

    உண்மை.. உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துரை,
      நீடூழி வாழ்க. அமைதி, ஆரோக்கியம் ,அன்பு சூழ
      மகிழ்ச்சியாக இருக்க ஆசிகள் மா.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றியம்மா..

      நீக்கு
  14. கேள்வி பதில் பகுதியில் -
    Sister concern - ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்! வாழ்க வளமுடன்!

      நீக்கு
    2. அன்பின் கௌதமன்...
      தங்களது வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  15. அட! நேற்றைய செவ்வாய் அவரது கதைக்கான அவரது பின்னூட்ட பதில்களைப் பார்த்து விட்டு, "இவ்வளவு குழந்தை மனசோடு இருக்கிறாரே.." என்று நினைத்துக் கொண்டேன்.
    அந்தக் குழந்தைக்கு ஒரு வயது கூடி விட்டதா? மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.
    அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்களது வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  16. சிஸ்டர் கன்செர்ன் என்பதை வைத்து ஜோக்குகளும் உலா வந்துள்ளன. அதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன் எனக்குள்.
    படங்கள் இரண்டுமே விளம்பரப் படங்கள். இல்லையோ? முதல் படத்தில் அந்தப் பெண் எதை நினைத்துக் கொண்டு கடிக்கிறாள்?
    இரண்டாவது படம் நகைக்கடை விளம்பரமோ? தனிஷ்க்? ஜிஆர்டி? சரவணா ஸ்டோர்ஸ்? சமீபத்தில் தான் சரவணா ஸ்டோர்ஸ் அதிபருக்கு மாநகராட்சி அபராதம் விதித்ததாகச் சொன்னார்கள். தொலைக்காட்சியிலும் வந்திருந்தது.

    பதிலளிநீக்கு
  17. துரை சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆனந்தம் பொங்குக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துரை செல்வராஜு ஸார்... நாமெல்லாம் ஜூலை க்ளப்!

      நீக்கு
    2. அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கும் ஸ்ரீராம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
  18. ஏதாவது கடி ஜோக் என்றிருந்திருக்கும்.
    அதான் கடிக்கிறாள். முதல் படம்.

    இரண்டாவது. நகைக் கடை நடமாடுகிறது.
    யார் செலவிலோ:)

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளும் பதில்களும் அருமை.
    அம்மா சொல்லும் அடிக்கடி சொல்லும் வார்த்தை "அரிசியை நனைத்தா சாப்பிட முடியும்." பொங்கித்தான் சாப்பிடனும். தனக்கு தனக்கு என்றாலும் செய்துதான் ஆக வேண்டும்."

    "தனக்கு தனக்கு என்றாலும் தாட்சணியம் சோறு போடாது" என்பார்கள்.
    பாவம் பார்த்து எத்தனை நாள் எல்லோரும் செய்வார்கள் என்றாவது சமைத்து தான் ஆக வேண்டும் என்பார்கள்.
    எவ்வளவு கற்று இருந்தாலும் மனதில் இடம்பிடிக்க சமையல்தான் உதவும்.
    என் அம்மாபோல், என் மனைவி போல் என்று ஆடவர் சொல்ல வேண்டும் என்றால் பெண் சமையலில் சிறந்து விளங்க வேண்டும்,அதுவும் அன்பாய் ஆதரவாய் பரிமாறவேண்டும். அது ஒரு கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி. நல்ல தகவல்கள்.

      நீக்கு
  20. புராணகதை சினிமாக்களை விட இப்போது வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் வரும் புராணகதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாம் வேறு பணத்தை அதிகம் செலவு செய்து படம் எடுத்து ஓட வில்லை என்றால் என்ன செய்வது என்று பயந்து இருப்பார்கள். நடிகர், நடிகைகளும் கீரீடம், நகைகள் அணிந்து நடிக்க கஷ்டபடுகிறார்களோ என்னவோ!

    பதிலளிநீக்கு
  21. செல்லகடி போல!
    புன்னகை மட்டும் போதுமே! இந்த பொன்நகை எதற்கு என்று மனது பிடித்தவர் சொல்லி இருப்போரோ அதுதான் வெட்க புன்னகை.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அருமையாக கேள்வி கேட்டவர்களுக்கும்.அதற்கு தகுந்த பதில் தந்தவர்களுக்கும், அன்பான பாராட்டுக்கள்.கருத்துரைகளும் நன்றாக இருந்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.அவர் பதிவிலும் வாழ்த்துகளை இப்போதுதான் தெரிவித்துள்ளேன். காரணம் என் தாமதமான வருகை.எப்போதும் போல் காலையில் வர இயலவில்லை. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!