வியாழன், 1 ஜூலை, 2021

பொறுப்பில்லாத இலக்கியவாதிகள்

 வீட்டில் அரிசியே இருக்காது.  செல்லம்மா கஷ்டப்பட்டு பக்கத்து வீட்டு மாமியிடமோ, தெருக்கோடி பாட்டியிடமோ கொஞ்சமா அரிசி  கடன் வாங்கி வந்து வைத்திருப்பார்.   

மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு சாதமோ, கஞ்சியோ வைக்க சாதத்தை எடுக்கலாம் என்று வந்தால்...  

அங்கு பாரதி அந்த அரிசி மணிகளை குருவிக்கும் காக்கைக்கும் போட்டுக் கொண்டிருப்பார்.  போதாதற்கு பாட்டு வேற..  

"காக்கைக்குருவி எங்கள் ஜாதி.."

கடுப்பு வருமா, வராதா செல்லம்மாவுக்கு?  

யோவ்..   சாதி இருக்கட்டும்..  மீதி இருப்பதையாவது கொடு..  அதை வைத்துதான் இன்றைய பாடு..​

அதே செல்லம்மா,  பாரதி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது நெல்குத்தும் பெண்மணியை வேறுபக்கம் சென்று குத்தச் சொன்னாராம்.  பாரதியின் எண்ணவோட்டத்துக்கு அது இடைஞ்சலாகக் கூடாது என்று.  

பாரதி, 'வேண்டாம் இங்கேயே அவர் வேலை செய்யட்டும் அந்தச் சத்தம் பராசக்தியிடம் வரம் வேண்டும்படி என்னைத் தூண்டுகிறது' என்றாராம். 

'முதலில் வயிறு நிறைய வழி கேளுங்கள் பராசக்தியிடம்' என்றாராம் செல்லம்மா.  

'என்னை கட்டாயப்படுத்தாதே, என் கையில் இருபப்தை உன்னிடம் கொடுத்து விட்டேன்' என்றாராம் பாரதி.  

'கையில் பணம் இருக்கும்போது புத்தகம் போடுங்கள் இப்போது என்ன தேவை' என்றாராம் செல்லம்மா..  

'இப்படி பேசினால் நான் தலைமேல் துண்டு போட்டுக்கொண்டு போய்விடுவேன்' என்றாராம் பாரதி.  

'நான் இந்தப் பக்கமாய் போய்விடுவேன்.  நம் குழந்தைகள் என்னவோ ஆகட்டும்' என்றாராம் செல்லம்மா...

இப்படி எல்லாம் சண்டை போட்டிருக்கிறார்கள் செல்லம்மாவும் பாரதியும்.  சொல்லி இருப்பவர் யதுகிரி அம்மாள்.  அந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல்தான் மனதில் உறுதி வேண்டும்!  ஆனாலும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார் யதுகிரியிடம் பாரதி.

இலக்கியவாதிகள் என்றாலே இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல்தான் இருப்பார்கள் போல.  அல்லது பொறுப்பில்லாமல் இருந்தால் இலக்கியவாதிகள் ஆகிவிடலாமோ!

இன்னும் கு ப ரா, சிட்டி முதலானோர் கைக்காசைச் செலவழித்துதான் புத்தகம் போட்டிருக்கிறார்கள்.  'அறம்' தொகுப்பில் ஜெயமோகன் ஒரு கதை எழுதி இருப்பார்.  அது எம் வி வி பற்றி எழுதப்பட்டது என்பதற்கான அடையாளங்கள் இருக்கும்.  அதிலும் எழுத்தாளன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்பதற்கு சான்றுகள் இருக்கும்.

இப்போதைய எழுத்தாளர்கள் அவ்வளவு கஷ்டப்படுவதில்லை என்று நினைக்கிறேன்.  முன்னோடிகளாம் மூத்த எழுத்தாளர்கள் பட்ட பாட்டைப் பார்த்து உஷாராகி வயிற்றுப்பாடு வேறு, எழுத்துத்தொழில் வேறு என்று விவரமாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

தி ஜானகிராமன், க நா சு போன்றோரெல்லாம் டெல்லியிலும் வேறு இடங்களிலும் நல்ல வேலையில் இருந்தார்கள்.  ஆனால் திஜர ஏழ்மையில்தான் இருந்தார்.  இதோ, இப்போதும் அவர் பேத்தி நம்மிடம் உதவி நாடி நிற்கிறார்.  

எழுத்தாளர்களுக்கு அப்போது இல்லாத பல வாய்ப்புகள் இன்றைய நிலையில் அவர்களுக்கு கிடைக்கும்.  ஊடகங்களிலும், சீரியல்கள் வாயிலாகவும் பல வழிகள் இன்றைய நிலையில் சுலபம்.  இன்றும் பழைய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், திஜர போல கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்களா, தெரியவில்லை.

புதுமைப்பித்தன் சென்னை வந்து கஷ்டப்பட்டபோது அவருக்கு மணிக்கொடியில் புத்தக ஆசிரியர் பொறுப்பு கொடுத்து இரண்டு ரூபாய் முன்பணம் கொடுத்தால், அதை வாங்கி கொண்டுபோய் மனைவியிடம் தந்து வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்ய மாட்டாரோ..   மணிக்கொடி இருந்த நிலைக்கு இரண்டு ரூபாய் முன்பணம் மிகப்பெரிது!

நேராக கடைக்குச் சென்று ஒன்றேகால் ரூபாய்க்கு மாப்பஸான் கதைப் புத்தகமும், மீதிச் சில்லறைக்கு ஸ்பென்சர் சுருட்டையும் வாங்கிக்கொண்டு வந்து  நின்றாராம்.

என்ன பொறுப்பு!

இன்னொருமுறை கிடைத்த மொத்த காசுக்கும் பிளேடு வாங்கி வந்தாராம்.  ஒரு குரோஸ் என்றால் எவ்வளவு என்று தெரியவில்லை.

மணிக்கொடியின் நிதி நிலையே பரிதாபம்.   யாராவது விநியோகஸ்தர் பணம் கொடுத்தால் உண்டு.  அப்படித் தப்பித் தவறி பணம் கிடைத்து விட்டால் எல்லோரும் அந்தக் காசை எடுத்துக்கொண்டு கும்பலாக எதிரிலிருக்கும் காபி கிளப்புக்கு ஓடி சாப்பிட்டு விட்டு வருவார்களாம்!

மொத்த பேரும் இலக்கியவாதிகள்தான் போல!

நேற்று ஜூன் முப்பது புதுமைப்பித்தன் நினைவு நாள்.  சினிமா பக்கம் திரும்பிய அவர் கவனத்தில் 'ராஜமுக்தி' என்கிற படத்துக்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது.  ராஜமுக்தி என்பது எம் கே டி கடைசியாய் நடித்த திரைப் படம் என்று ஞாபகம்.  சிறைக்குச் சென்று திரும்பிய அவர் பழைய புகழ் எல்லாம் போயிருக்க, அதை மீட்டெடுக்க அவர் எடுத்த சொந்தப்படம்.   புதுமைப்பித்தனுக்கு காசு வந்ததோ இலையோ, காசநோய் வந்தது.  கதை வசனம் எழுத ராஜா மாதிரி கிளம்பி பூனா சென்றவர், வரும்போது தன்னுடலில் முக்தி அடையும் முதல்படி முன்னுரையுடன் வந்தார்.  அங்குதான் அவரை காசநோய் பற்றியது.

"ஐயா நான் 
செத்ததற்குப் பின்னால் 
நிதிகள் திரட்டாதீர் 
நினைவை விளிம்பு கட்டி 
கல்லில் வடித்து வையாதீர் 
வானத்து அமரன் 
வந்தான் காண்; வந்தது போல் 
போனான் காண் 
ன்று பொறித்து வைக்காதீர் " 

 என்பாராம்.

அவர் மறைந்த நாள் நேற்று!

==================================================================================================

என் அக்கா சசிகலா விசுவேஸ்வரன் தினசரி எங்கள் பிளாக் படித்து விடும் இயல்புடையவர்.  அவ்வப்போது தொலைபேசியில் என்னிடம் அன்றன்றைய பதிவுகள் குறித்து சில கேள்விகள், சந்தேகங்கள் கேட்டுக்கொள்வார்.  

எஸ் ஏ பி,  பி வி ஆர் என்றெல்லாம் எழுத்தாளர்கள் பற்றி பதிவிலும், பின்னூட்டங்களிலும் உரையாடல் வரும்போது ஊன்றிப் படித்து, யாராவது 'சின்னக் கண்ணம்மா' என்கிற நாவல் பற்றி பேசுகிறார்களா என்று பார்ப்பாராம்.  அது யார் எழுதியது என்று நினைவில்லை என்றும், ஆனால் சிறுவயதில் தான் படித்து ரசித்த கதை என்றும் சொன்னார்.  மறுவாசிப்புக்கு கிடைத்தால் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம் என்று விரும்புவதாகச் சொன்னார்.  அப்படி ஒரு கதை நான் கேள்விப்பட்டதில்லை.  நீங்கள்?

=======================================================================================================

குடும்ப க்ரூப்பில் உறவின் ஒரு புகைப்படம் வெளியானது.  அது எடுக்கப்பட்டிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.  எடுக்கப்பட்ட இடமும்.  எதையாவது எழுத வேண்டும் போல தோன்றியது...


மனங்களின் புரிதலில்
வார்த்தைகளுக்கு 
வேலையில்லை.
மௌனப் பரிமாற்றத்தில்
ஆயிரம் புரிதல்கள்.
மரங்களின் அடர்வில்
வனங்களின் அடர்த்தி
மனங்களின் இணைவில் 
புரிதலில் நேர்த்தி
ஆண்டவனின் படைப்பில்
ஆகாயம், ஆறு, வனம்,
நீ, நான்...
எல்லாமே அழகுதான்.

=========================================================================================================

சென்ற வாரம் பத்திரிகையில் படித்த செய்தித்துணுக்கு இது.  இது உண்மைதான் என்றாலும் சற்றே ஒரு மாறுபட்ட ஒரு கருத்தைச் சொல்லி இருப்பார் மபொசி தனது தமிழக சுதந்திரப்போராட்டம் நூலில்.  அதாவது மருது சகோதரர்களின் இந்தச் செயலுக்கு சற்றே சுயநலம் கலந்த ரணம் உண்டு என்கிற பொருளில் சொல்லி இருப்பார்.  எப்படி இருந்தாலும் வெள்ளையனை எதிர்த்ததால் அதுவும் போராட்டக் குறிப்புகளில் சேர்ந்து விடுகிறது என்பார்.


ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரான ஜம்பு தீவு பிரகடனமே முதல் விடுதலை குரலாக பார்க்கப்படுகிறது. அந்த பிரகடனம் இதே நாளில் தான் 220 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க ஆலோசகர் சுப்பு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 220 ஆண்டுகளுக்கு முன் கி.பி. 1801ம் ஆண்டு தென்னிந்திய நாடுகளின் கூட்டணியை உருவாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனம் எனும் ஜம்பு தீவு பிரகடனத்தை மருது

சகோதரர்கள் வெளியிட்ட நாள் ஜூன் 16.கி.பி. 1800களின் துவக்கத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய அளவில் மாபெரும் ஒரு தீபகற்ப கூட்டணியை மருது சகோதரர்கள் உருவாக்கினர். அப்போதுதான் திருச்சி மலைக் கோட்டையிலும் ஸ்ரீரங்கம் கோவிலிலும் நாவலந்தீவு பிரகடனம் என்ற ஜம்பு தீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்டனர்.

அந்த ஜம்பு தீவு பிரகடனம்

'இதை காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்'மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக ஐரோப்பியர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறி அவரது அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கி நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாக கருதி ஆட்சி அதிகாரம் செய்து வருகின்றனர்.
மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கின்றனர். சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. 1000 ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆக வேண்டும். ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் ராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அந்நியன் கீழ் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளை பயன்படுத்தும் எல்லாரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதை கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்
படுத்த வேண்டும்.ஐரோப்பியர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்துவிட வேண்டும். அவர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். ஒட்டப்பட்ட இந்த அறிவிப்பை சுவற்றிலிருந்து எவனொருவன் எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களை செய்தவனாக கருதப்படுவான்.

இப்படிக்கு மருது பாண்டியன் பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.- இந்த அறிக்கைக்கு பின்னரே மருது சகோதரர்களுக்கு எதிரான யுத்தத்தை ஆங்கிலேயர்கள் தீவிரமாக்கினர். இந்த பிரகடனம் கி.பி. 1801ல் ஜூன் 10ம் தேதி வெளியிடப்பட்டது என்றும் ஜூன் 16ம் தேதி ஆங்கிலேயர் கைப்பற்றினர் என்றும் சில ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினாலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்த ஜம்பு தீவு பிரகடனமே முதல் விடுதலை குரலாக பார்க்கப்படுகிறது.


=================================================================================================


பெயர்ப்பலகை...   தெரிந்து செய்கிறார்களா, வேண்டுமென்றே செய்கிறார்களா?!!!



===================================================================================================


இந்தக் கேள்விக்கு விடை தெரிந்திருந்தும் பதில் சொல்லா விட்டால்....!!!




=======================================================================================


எப்படி இருக்கீங்க எல்லோரும்?  ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் பார்த்து...


159 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    நானும்தான் இந்த பழைய அனுஷ்கா படம் பார்த்து ரொம்ப வருஷமாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லை.. வாங்க... புதிய அல்லது தற்போதைய அனுஷ்கா கஷ்க்கு முஷ்க்குக்காவாக இருக்கிறார் என்று கேள்வி!

      நீக்கு
    2. இப்போதைய அனுஷ்காவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. எல்லா சக நடிகர்களும் குடும்பத்தை நோக்கிச் செல்ல, கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா தனிமரமாக தொழிலதிபரைத் தேடுகிறார். இது அனேகமான முன்னணி நடிகைகளுக்குப் பொருந்தும்.

      நீக்கு
    3. புகழின் விலை. மார்க்கெட் இருக்கும்வரை காசு பார்த்துவிடுவோம் என்கிற மனப்பான்மை. இதிலிருந்து தப்பி காலாகாலத்தில் நல்ல வாழவைத்த தேடிக்கொண்டவர்கள் சிலரே... எல் விஜயலட்சுமி, கே ஆர் விஜயா...

      நீக்கு
    4. எல்.விஜயலக்ஷ்மி பொழுதுபோக்காக நடிக்க வந்தவர். அவர் அப்பா நம்ம ரங்க்ஸ் வேலை செய்த ராணுவக் கணக்குத்துறையின் அதிகாரி. பல்வேறு மாநிலங்களிலும் வேலை பார்த்தவர். குடும்பம் வசதியான குடும்பமே. ஆனால் கே.ஆர்.விஜயா பஞ்சத்துக்கு நடிக்க வந்தார். எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு இடையில் திருமணம் புரிந்து கொண்டார்.

      நீக்கு
    5. இன்னும் சொல்லணும்னால் நடுவயதுத் தலைமுறைகளில் சுஹாசினி, ரோஜா ஆகியோரும் இளையோரில் ஷாலினியும் குறிப்பிடத் தக்கவர்களே.

      நீக்கு
    6. கீசா மேடம்.. என்னதான் மாச்சு மாஞ்சு சரியான விடைகளை எழுதினாலும் சினிமாச் செய்தி டிபார்ட்மென்ட் ஹெச் ஓ டி பொறுப்பை நாங்க பானுமதி வெங்கடேச்வரனுக்குத்தான் வழங்கியிருக்கோம். Future promotion க்கும் உங்க பேர் லிஸ்ட்ல இல்லை. இன்னும் நிறைய படித்துக்கொண்டிருங்கள். வாய்ப்பு வரலாம்

      நீக்கு
    7. ஜோதிகாவைக் கூட சேர்த்துக்கலாம் கீதாக்கா.!!

      நீக்கு
    8. ஜோதிகா மண வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர் என்பது சரியே ஶ்ரீராம். மற்றபடி அவரோட பின்னணி எல்லாம் எனக்குத் தெரியாது. நக்மாவிற்கு ஸ்டெப் சகோதரி என்பது வரை தெரியும்.

      நீக்கு
    9. நெல்லை, எனக்குத் தெரிந்த விஷயங்களைத் தான் தெரிஞ்சதுனு சொல்ல முடியும். அதுக்காக பானுமதியோடு போட்டியா போட முடியும்? அவார்டா கிடைக்கப் போகுது? ஆகவே நான் வாய்ப்புக்கெல்லாம் காத்திருக்கலை. தெரிஞ்சதைச் சொல்லிட்டுப் போயிண்டே இருப்பேன். :))))) பதில் கூட எதிர்பார்ப்பதில்லை.

      நீக்கு
    10. எல்லோரும் பூர்ணிமா பாக்யராஜை மறந்து விட்டீர்களே? நடிக்கும் பொழுதும் கண்ணியமாக நடித்தார், திருமணம் செய்து கொண்டு ஒதுங்கிய பிறகு, நடுவில் பாக்யராஜ் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த பொழுது கூட மீடும் நடிக்க வரவில்லை. இப்போது சீரியல்களில் நடிக்கிறார்.

      நீக்கு
  2. முந்தைய வாரத்துக்கும் இன்றைய வாரத்திற்கும் தொடர்பில்லாத, ஆனால் வித்தியாசமான சிந்தனை, அனுபவம், என கலந்துகட்டி வருவதால் வியாழன் இடுகை பெரும்பாலும் வாரத்திலேயே மிகச் சிறந்ததாக அமைந்துவிடுகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. மகிழ்கிறது உள்ளம். பாய்கிறது சந்தோஷ வெள்ளம்! நன்றி.. நன்றி.

      நீக்கு
  3. ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியை உண்டாக்கினாலும், நடிகைகள் வாழ்வு பெரும்பாலும் சோகமயமாகவே ஆகிவிடுவதன் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் கேள்வியா? இல்லை வியாழனுக்கான ப்ரத்யேகக் கேள்வியா?!! அனுஷைப் பார்த்து ரொம்பக் கவலைப் படுகிறீர்களோ?

      நீக்கு
    2. மத்தவங்க மனசில் சந்தோஷத்தை உண்டாக்கினாலும் அவர்கள் சொந்த வாழ்வின் நிலையை என்னவோ யோசிக்க நேர்ந்தது

      நீக்கு
  4. பொறுப்பில்லாத இலக்கியவாதிகள் என்று நாம் சொல்லிட முடியாது.

    எத்தனையோ நடிக நடிகைகள் (இரண்டாம் மூன்றாம் நிலை) நிறைய படங்களில் நடித்தாலும் குடி, ஆடம்பர வாழ்க்கை என, அவர்களது சம்பாத்தியம் குடும்பத்தை வறுமையில் தள்ளத்தான் உபயோகப்படுகிறது.

    இலக்கியவாதிகள் என்ன ஆகாசத்திலிருந்து வந்தவர்களா?

    பாரதி போன்ற ஒரு சில யுக புருஷர்களை இலக்கியவாதிகள் லிஸ்டில் சேர்க்க முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. கவிதை இலக்கியத்தில் சேராதா? நான் சும்மா வம்பிழுக்கத்தான் பொறுப்பில்லாத என்கிற வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்!

      நீக்கு
    2. உன்மத்தம் நிரம்பப்பெற்றவர்களை, லட்சியவாதிகளைத் திருமணம் செய்துகொள்வது, தெரிந்தே அந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பலி கொடுத்துக்கொள்வது போன்றது. பிறகு கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

      கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சுதந்திரத்துக்காக எல்லாவற்றையும் இழந்தவர்கள் இப்போது தமிழகத்தில் த்த்தம் மனைவிமாரோடு (குழந்தைகளோடு) வந்தால், அவர்களிடமிருந்து எத்தனை வாரியல் அடி வாங்குவார்கள் என்று.

      நீக்கு
    3. இன்னும் கொஞ்சம் புரியும்படி உதாரணத்தோடு விளக்குங்கள்.

      நீக்கு
    4. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் விடுதலைப் போராட்டத்துக்காக, அவருக்கு 5 ஏக்கர் நிலம் பெருங்களத்தூரில் ஒதுக்கினார்கள். அவரோ வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கல்கியைப் பொருத்தவரையில் அவர் வாரிசுகள் வாடவில்லை. அதனால் 25 கோடி சொத்து போனதைப் பற்றி அவங்க கவலைப்பட மாட்டார்கள்.

      ஆனால் வவுசி, பாரதி, நாமக்கல் கவிஞர் இன்னும் பல முக்கியத் தலைவர்களின் வாரிசுகள் வறுமையில் வாடினார்கள், வாடிக்கிட்டும் இருக்காங்க. இப்போ அவங்க, அவங்க மனைவி, குழந்தைகளோடு உயிரோடு வந்து, நம் மக்கள் இப்போ நடந்துகொள்வதையும் அவங்க வாழ்க்கை முறை, அடிமைத்தனம், அரசியல்வாதிகள் சொத்து சேர்ப்பது இவற்றையெல்லாம் பார்த்தாங்கன்னா, அந்தத் தலைவர்கள், அவர்களுடைய மனைவி மற்றும் வாரிசுகள் கையால் வாரியல் அடி வாங்கவேண்டியிருக்கும். திட்டும்போது, 'புத்திகெட்ட மனுஷா.. நீ உன் வாழ்க்கை உன் குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டு, வாரிசுகளையும் பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டயே' என்று சொல்வார்களா மாட்டார்களா?

      நான் இலக்கியவாதிகளைச் சொல்லவில்லை. திஜர போன்ற யாராகிலும். அவங்களே விரும்பி படுகுழில விழுந்தாங்க. அதனால நாம், அவங்க வாரிசுகள் வறுமையில் இருக்காங்களே என்று கவலைப்படத் தேவையில்லை. அந்த இலக்கியவாதிகள் புத்தகங்களை விரும்பிப் படித்து சிலாகிப்பவர்களும், இலக்கியத்தை வளர்க்க தொகை ஒதுக்காத அரசாங்கமும் மட்டும் கவலைப்படவேண்டிய விஷயம் அது.

      ஜீவா, கடைசி வரையில் வறுமையில் வாடினார். நல்லக்கண்ணுவோ, அவர் மனைவிக்கு அரசாங்க வேலை, தனக்கு அரசாங்க இல்லம் என்று இருக்கிறார். யார் புத்திசாலி?

      நீக்கு
    5. இந்த லிஸ்ட்டில் கக்கன் அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.  திஜாராவுக்கு நேர்ந்தது உச்சபட்சக் கொடுமை.  இதோ அவர் பேத்தி மற்றவர்கள் கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.  வசதியாக இருக்கும் எழுத்தாளர்கள் வறுமையில் வாடும் சக, மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது உதவுவார்களா?  நமக்கு எங்கே உதவி கேட்பது என்று தெரியாது.  அவர்களுக்குத் தெரியும். அந்த வகையில் அவர்கள் உதவலாம்.

      நீக்கு
  5. அன்பின் முரளிமா, அன்பின் ஸ்ரீராம் இன்னும் வரப் போகிறவர்களுக்கு
    இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாளும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அனுஷ்கா படகைத் தவற விட்டு விட்டாரோ.
    பாவம். நல்ல பெண்ணாக இருந்தால் மட்டும் போதாதோ.

    பதிலளிநீக்கு
  7. பழைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் இடைப்பட்டவர்களே எழுத்தால் சம்பாரித்தவர்கள்.

    ஆனாலும் பழையவர்களின் வாரிசுகள் இராயல்டி வழியில் வருமானம் ஈட்டுகிறார்கள். உதாரணமாக கவியரசர் கண்ணதாசனின் இன்றைய வருமானம் அவர் வாழ்ந்த காலத்தில் கிடைத்ததைவிட அதிகம்.

    கடைசியில் உள்ள புகைப்படத்தில் இருப்பது 'சில்க்' ஸ்மிதாவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் அவர்கள் வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக இருக்கும்! அது போல! கண்ணதாசனுக்கு அப்படி வருகிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?


      //கடைசியில் உள்ள புகைப்படத்தில் இருப்பது 'சில்க்' ஸ்மிதாவா ?//


      அவரின் பேத்தி!

      நீக்கு
    2. //சில சமயம்// - இல்லை..பெரும்பாலான சமயங்களில் இப்படித்தான். கண்ணதாசன் நிறைய சம்பாதித்து, சூதாட்டத்தில் (அதாவது சினிமா எடுப்பதில்) இழந்தார். நல்ல ராஜபோக வாழ்க்கையும் வாழ்ந்தார். அது அவருடைய ராசி.

      நீக்கு
    3. கருணாநிதி மட்டும் புத்திசாலியாக இருந்தார். ஏழையாக சென்னை வந்து, பொதுமக்களுக்காக 10 ரூபாய்க்கு உழைத்து 10000 ரூபாய் ஈட்டினார், வாரிசுகளும் ஜே ஜே என்று இருக்கின்றனர்.

      நீக்கு
    4. உண்மை.  இப்போதெல்லாம் 90 வயது தாண்டியும் பென்ஷன் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் பனி செய்த காலத்தைவிட அது அதிகம்.

      கண்ணதாசன் பற்றி நானும் அதுதான் சொல்ல நினைத்தேன்.

      நீக்கு
    5. //வாரிசுகளும் ஜே ஜே என்று இருக்கின்றனர்.//

      வாரிசுகள் மட்டுமல்ல, வாரிசுகளின் வாரிசுகளும், அவர்களின் வாரிசுகளும் கூட!

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து தொற்றுக்குறைந்து அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. உண்மையில் எழுதியும் காசு பார்க்கலாம் என்று எடுத்துக்காட்டியவர் முதல் முதலாக "சுஜாதா" தான் என நினைக்கிறேன். பலரும் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்காங்க. பாரதி பற்றிய இந்த விஷயங்களை ஏற்கெனவே நிறையப் படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுவதும் சுஜாதாவைச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.  அவரும் வேலையில் இருந்தார்.  அதுவும் நல்லதொரு வேலையில்..

      நீக்கு
    2. திரு சுஜாதா அவர்கள் மத்திய அரசு முக்கியத்துறையின் முக்கிய வேலையில் இருந்து கொண்டு எந்தவிதமானப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளாமல் எழுத்தின் மூலமும் சம்பாதித்தார் என்றே சொல்லலாம்.

      நீக்கு
  10. குடும்பப் புகைப்படத்து ஜோடிகள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகளும், ஆசிகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...  நன்றி...   சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
    2. புகைப்படத்தை எடுத்தது யார்? அல்லது இப்படி செல்ஃபி எடுத்துக் கொள்ளும்படி செல்ஃஃபோனில் வசதி வந்திருக்கிறதா?

      நீக்கு
    3. படத்தை எடுத்தது அநேகமாக படத்திலிருக்கும் என் மாமன் மகனின் பெண்ணாக இருக்கும்.

      நீக்கு
  11. அனுஷ்காவுக்கு 40 வயசு ஆகிவிட்டதாய் எதிலோ படிச்சேன். தினமலர்? அப்படித் தான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறுமாதம் அதிகமாகி சொல்கிறீர்களா...

      நீக்கு
    2. ஸ்ரீராம் - நான், நீங்க கீசா மேடத்திடம், 6 நாட்களைக் கூட்டிச் சொன்னதற்காக கடுமையாக கோபித்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.. என்னை ஏமாற்றிவிட்டீர்கள். ஹாஹா

      நீக்கு
    3. கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது இல்லை?!

      நீக்கு
  12. ஸ்ரீராம், உங்க அக்கா சொன்ன "சின்னக் கண்ணம்மா" குமுதத்தில் வந்ததுனு நினைவு. ரா.கி.ர? அல்லது புனிதன்? யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னக் கண்ணம்மா நினைவில் இருக்கிறது . ரா கி.ர வாகத்தான்
      இருக்கும்.

      நீக்கு
    2. எனக்குத் தெரியவில்லை.  உங்களுக்குத் தெரிந்திருந்தால் கதைச்சுருக்கம் ஞாபகப்படுத்தவும்!

      நீக்கு
    3. திரைப்படம் ஒண்ணு வந்ததாக நினைவு. விக்கி விக்கிப் பார்த்தால் தெரியும்.

      நீக்கு
    4. அந்தக் கதைக்கும் திரைப் படத்துக்கும் சம்பந்தம் இல்லை. கார்த்திக் சுஹாசினி நடித்த சின்னக்கண்ணம்மாவில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று உண்டு. "எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே " மனோ குரலில் இளையராஜா இசையில்!

      நீக்கு
    5. கார்த்திக், கௌதமியா?(ஆவர்கல் குழந்தையாக பேபி ஷாமிலி) கார்த்திக் சுஹாசினியா?

      நீக்கு
  13. வியாழன் சுவாரசியமான நாளாக மாறி வருகிறது. புதுமைப் பித்தன் பற்றி நானும் படிச்சிருக்கேன். மணிக்கொடி கால எழுத்துக்களை ஒன்று சேர்த்து மணிக்கொடி காலம் என்னும்பெயரிலோ என்னமோ புத்தகம் ஒன்றும் வெளி வந்திருக்கிறது. நான் அம்பேரிக்காவில் இருந்தப்போ ஹூஸ்டனில் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் இதுவும் சி.சு.செல்லப்பா அவர்களின் "சுதந்திர தாகம்" புத்தகமும் வாங்கிப் படிச்சேன். சுதந்திர தாகம் புத்தகத்தைச் சொந்தமாக வெளியிட்டார் சி.சு.செல்லப்பா. அவரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு புது தில்லி பெண்ணேஸ்வரன் எழுதி இருந்ததைப் படிக்கையில் கண்ணீர் வந்தது. செல்லப்பா இறந்த சமயம் எழுதி இருந்தார்(மின் தமிழ்க் குழுமத்தில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.  சி உ செல்லப்பா பெயர் மறந்து விட்டேனா, பதிவில் குறிப்பிட்டுள்ளேனா என்று பார்க்க வேண்டும்.  சுதந்திரத்தாகம் புத்தகம் அப்பா படிக்கவேண்டும் என்று மிக ஆர்வமாயிருந்தார்.  உங்களை எல்லாம் கூட அப்போது கேட்டிருந்தேன்.

      நீக்கு
    2. நான் எழுதி இருப்பேனே "சுதந்திர தாகம்" பற்றி!ஒருக்கால் நீங்க அப்போவெல்லாம் என்னோட வலைப்பக்கம் வரலையோ?

      நீக்கு
    3. உங்களிடமே விசாரித்திருக்கிறேன்!

      நீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  15. மகாகவியைப் பற்றிய செய்தியைக் கண்டதும் நெஞ்சம் கலங்கி விட்டது...

    கப்பலோட்டிய தமிழன் படத்தில் அந்த சம்பவம் நன்றாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்...

    ஆணாலும்
    அப்படியாகப்பட்ட மகாகவியையும் செல்லம்மாவையும் செக்கிழுத்த செம்மலையும் கை கழுவி விட்ட அரசுகள் தான் இந்நாட்டில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியின் நூற்றாண்டில், அவர் உயிரோடு இருந்தபோது ஐந்து பைசா கொடுக்காத உறவினருக்கு, பாரதியின் உறவு என்ற அடிப்படையில் எம்ஜிஆர் அரசு ஐந்து லட்சம் கொடுத்த நினைவு.

      வ்வுசி வாரிசுகளை நன்றாக வைத்துக்கொள்ளவோ இல்லை நல்ல அரசாங்க வேலை கொடுக்கவோ அரசுகளுக்கு மனமில்லை.. பிள்ளைமார் சமூக வாக்குகளைக் கொத்தாக அள்ளிவிடலாம் என்ற நிலைமை இருந்திருந்தால் கொடுத்திருக்கும்.

      நீக்கு
    2. உண்மைதான் துரை செல்வராஜூ சர்..  இவர்கள் கொள்ளை அடிப்பதில் கவனம் காட்டும் அளவு இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை.

      நீக்கு
    3. நெல்லை சொல்வதுபோல வாக்கு வங்கிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்தயங்காத அரசுகள், கட்சிகள்...  அப்படியாவது நல்லது நடக்கலாம்.  ஆனால் அவர்கள் சார்ந்த ஊர்க்காரர்களோ, சமூகத்தினரோ கூட இவற்றை முன்னெடுப்பதில்லை.

      நீக்கு
    4. மலைக்கோட்டை போகும் படிகளின் (யானை கட்டியிருக்கும் இடம்) எதிரே இருந்த கடையில் இருந்தவர் வ.உ.சி. அனுதாபி (அவரது சமூகம்) அவர் படங்களைக் காண்பித்து என்னிடம் சொல்லியிருந்ததை நான் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

      திருநெவேலி பிள்ளைமார், வ.உ.சி. நம்ம ஊர் இல்லை, தூத்துக்குடி இல்லா என்று நினைத்திருக்கலாம். தூத்துக்குடில வ.உ.சிக்குச் செய்தால் பிள்ளைமார் சாதியை மட்டும் கண்டுகொண்டு நாடார் சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதிப்போமோ, வ.உ.சி. இந்து அல்லவா...கிறித்துவ வாக்குகளை இழப்போமோ என்றெல்லாம் அரசியல் கணக்குகள்தான் இந்த அவலத்துக்குக் காரணம். வை.கோவாலசாமிக்கு மீசை இருந்திருந்த காலத்தில் வ.உ.சி. மகனைச் சந்தித்து, அவருக்கு அரசு உதவி செய்யணும் என்றெல்லாம் கர்ஜித்திருக்கிறார் (இல்லை...மியாவ் செய்திருக்கிறார்)

      நீக்கு
  16. அனு பாப்பா... நகம் கடிக்கக் கூடாதுடா செல்லம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு பாப்பாவா? அப்போ உங்க வயசு 90க்கு மேலயா?

      நீக்கு
    2. //அனு பாப்பா... நகம் கடிக்கக் கூடாதுடா செல்லம்!...//


      ஹாஹ்ஹ்ஹாஹாஹ்ஹாஹாஹ்ஹ்ஹா...

      நீக்கு
    3. இதற்கு எதற்கு வயதை எல்லாம் இழுக்கிறீர்கள் நெல்லை!

      நீக்கு
    4. @ ஸ்ரீராம்...

      // இதற்கு எதற்கு வயதை எல்லாம் இழுக்கிறீர்கள் நெல்லை!..//

      எனக்கு வயது இருபத்தைந்து தான்!..

      நீக்கு
    5. பார்த்தீங்களா... இதற்குதான் நெல்லையை நான் எச்சரித்தேன்!!!!

      நீக்கு
  17. பாரதியின் செல்லம்மா பாவம். அவர் தொடங்கி புதுமைப் பித்தன் மற்றவர்கள் வரை எத்தனை கஷ்டங்கள் மா. ரொம்பப் பரிதாபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியின் மனைவி பற்றி அறிவோம்.  புதுமைப்பித்தன் போன்றோரின் மனைவி பற்றி எந்த அளவு விவரம் தெரியும்?  இவர்களின் புகழ் அலைகளுக்கு நடுவில்  குடும்பத்தைக் கட்டி இழுத்த செம்மல்கள் அவர்கள்தான்.

      நீக்கு
    2. புதுமைப்பித்தன் மனைவி பெயர் கமலா என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. இருக்கலாம். தேடினால் கிடைக்கலாம்.

      நீக்கு
  18. இலக்கியவாதிகள், படைப்புகள், தமிழ்ப் பத்திரிக்கைகள் எனப் பேசிவரும் வியாழனின் Labels-லிருந்து ‘வெட்டி அரட்டை’ என்கிற வார்த்தையை முதலில் தூக்குங்கள். அதற்குப் பதிலாக, எழுத்து, எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள் என வேண்டுமானால் சேர்க்கலாம். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்.

    தமிழ் எழுத்து, இலக்கியம்பற்றி எப்போவாவது சீரியஸாகக் கருத்திட்டபின், சே.. ’வெட்டி அரட்டை’ லேபிளுக்குள் வந்தா இப்படியெல்லாம் எழுதினோம் என சில சமயங்களில் தோன்றியிருக்கிறது என நான்தானே தெரிவிக்கவேண்டும்! அதனால்தான் இந்தக் கருத்து.. தவறாகக் கொள்ளவேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   தவறாக நினைக்க என்ன இருக்கிறது ஏகாந்தன் சார்?  வெட்டி ஆட்டை என்றால் கொஞ்சம் கூட்டம் வரும்.  இலக்கியம் என்றால் ஈயாடாது!  கொஞ்ச பேராவது படித்துக் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுமே என்றுதான் அப்படி வைத்தேன்!

      நீக்கு
  19. பெயர்ப்பலகை... தெரிந்து செய்கிறார்களா, வேண்டுமென்றே செய்கிறார்களா?!!!/////////////////////////////////////////////////////////////////////////மட்ட ரசனை எப்படி இருந்தாலும். ஒரு வேளை அனிதா யானையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா... போர்டு எழுதுபவன், படத்தைப் பார்த்து எழுதுவான்..படிப்பறிவோ பட்டறிவோ இருக்காது. அதுதான் நிலைமை. அதனால் இது புதுவித அர்த்தம் தருதுன்னு அவன் நினைத்திருக்கமாட்டான். எழுதச் சொன்னவரும் கைநாட்டாக இருந்திருப்பார். அதனால் நகைப்புக்கிடமாகிவிட்டது.

      நம்ம ஊரில், அரசாங்கம், கடைகளுக்கு தமிழில் பெயர்ப்பலகை வைக்கணும் என்று சட்டம் போட்டதும், படித்தவர்கள் ஒழுங்காக தமிழில் பெயர்ப்பலகை வைத்தார்கள் (பாப்பா ஜோன்ஸ் பிட்சா ஸ்டோர்ஸ் என்பது போல). தற்குறிகள், 'நெகிழி, பனிக்குழைவு..' என்றெல்லாம் எழுதி, நகைப்புக்கிடமானார்கள்.

      நீக்கு
    2. இதாவது பரவா இல்லை. காபி பார் என்பதை கொட்டை வடி நீர் குழம்பியகம் என்றெல்லாம் எழுதி வைத்தனர்.

       Jayakumar

      நீக்கு
    3. ஹா..  ஹா...  ஹா...  வல்லிம்மா...   அவர்கள் தங்கள் கடைக்கு பெயர் வைத்திருக்கும் லட்சணம்!

      நீக்கு
    4. நெல்லை, JC ஸார்..  இந்தத் தமிழ்ப்பற்றை சிவப்பாக கிண்டல் செய்து சத்யராஜும் வடிவேலும் ஒரு படத்தில் நக்கல் நடித்திருப்பார்கள்!

      நீக்கு
    5. ஆஹா.. தமிழ் சினிமாவிலும் இதுகள வாரியிருக்கிறான்களா!

      நீக்கு
    6. கீழ்க்கண்ட காட்சியில் 2.20 லிருந்து பாருங்கள்!

      நீக்கு
  20. தம்பதிகள் படமும் உங்கள் கவிதையும் மிக அழகு மா.
    என்னாளும் வளமுடன் வாழட்டும்.
    மனோகரமான சூழ்னிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா...  வாழ்த்துகளை அவர்களிடம் சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  21. ..ஹூஸ்டனில் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் இதுவும் சி.சு.செல்லப்பா அவர்களின் "சுதந்திர தாகம்" புத்தகமும் வாங்கிப் படிச்சேன். சுதந்திர தாகம் புத்தகத்தைச் சொந்தமாக வெளியிட்டார் சி.சு.செல்லப்பா. அவரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு புது தில்லி பெண்ணேஸ்வரன் எழுதி இருந்ததைப் படிக்கையில் கண்ணீர் வந்தது. செல்லப்பா இறந்த சமயம் எழுதி இருந்தார்(மின் தமிழ்க் குழுமத்தில்)//

    ஹூஸ்டன் மீனாக்ஷி கோவிலில் நூலகமா? அதில் புதுமைப்பித்தனா,சி.சு.செல்லப்பாவா? இத்தகைய எழுத்தாளர்களை ஹூஸ்டன் லைப்ரரியில் வாங்கிவைத்தவர்கள், அல்லது இத்தகைய காரியங்களை ப்ரக்ஞைபூர்வமாகச் செய்துகொண்டிருப்பவர்களே தமிழுக்கு உண்மையில் தொண்டு செய்பவர்கள்.

    டெல்லியிலிருந்து ‘வடக்குவாசல்’ என்றொரு இலக்கியப்பத்திரிக்கையை சில வருடம் நடத்திவந்தார் பென்னேஸ்வரன். (யதார்த்தா எனும் நாடகக்குழுவையும் நடத்தி வந்தவர்). வடக்குவாசலில், சி.சு.செல்லப்பாவின் கடைசி காலத்தில் அவரை அவரது வாடகை வீட்டில் போய் சந்தித்துப் பேசியதுபற்றி மனம் தொடும்வகையில் எழுதியிருந்ததைப் படித்தேன் நானும். எழுத்து, எளிமை, நேர்மை (கூடவே தீரா வறுமை) என வாழ்ந்து அகன்றவர் செல்லப்பா.

    அதுசரி, பென்னேஸ்வரனின் பெயரை ‘பெண்’ணேஸ்வரன்’ என்று குறிப்பிட்ட மர்மம் என்ன? பெண் தான் ஈஸ்வரன் எனக் கோடிட்டுக் காட்ட காலை முயற்சியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சி சு செல்லப்பா  அவர்களின் கடைசிக்கு காலத்தில் சென்று கண்டா பெட்டியை நானும் படித்த நினைவு இருக்கிறது.  ஆனால் பேட்டி எடுத்தவர் பற்றிய விவரம் எல்லாம் இப்போதுதான் அறிகிறேன்.

      நீக்கு
    2. @ஏகாந்தன், ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலில் நூலகம் எப்போதும் உண்டு எனக் கேள்விப் பட்டிருக்கேன். நாங்க முதல் முதல் ஹூஸ்டன் போனதில் இருந்து நூலகம் தவறாமல் போவோம். 2016 ஆம் ஆண்டில் போக முடியாத சூழ்நிலை. இப்போ 2019 ஆம் ஆண்டு போனப்போ நூலகத்தின் வேலை நேரத்தை மாலைக்கு மாற்றி வைத்து விட்டார்கள். எங்களால் அந்த நேரம் போக முடியாது. பையர் வீட்டில் இருந்து வெகு தூரம் இருப்பதால் பகலில் செல்வதே நல்லது. ஆகவே 2019 ஆம் ஆண்டில் நூலகத்தை வெளியே இருந்து பார்த்ததோடு சரி!

      நீக்கு
    3. மணிக்கொடி கால எழுத்தாளர்களின் கதைகள்/கட்டுரைகள்/பயணக்கட்டுரைகள் என எல்லாமும் சேர்ந்து இரண்டு பாகங்களாக ஒரு புத்தகம்! அங்கே தான் பார்த்தேன். உடனே எடுத்து வந்து படிக்கவும் செய்தோம். அதோடு மட்டும் இல்லை. பாரதி பற்றிய ஆய்வுக்கட்டுரைகள், சீனி. விஸ்வநாதனின் பாரதி பற்றிய தொகுப்புகள், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி என்னும் பெயரில் வந்தவை! அதில் ஒரு சிலவற்றையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. உண்மையிலேயே நல்லதொரு நூலகம் அது. அதைத் தவிர்த்து கல்கி, தேவன், லக்ஷ்மி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், ரா.கி.ர. எஸ்.ஏ.பி. போன்ற பல பிரபலமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் மொழிபெயர்ப்பு நாவல்களில் என்டமூரியின் துளசிதளம் வரிசைகளும் கிடைத்தன. இந்திரா சௌந்தரராஜனின் மர்மக் கதைகள்/ஆன்மிகக் கதைகள், தெய்வத்தின் குரல், தொல்காப்பியம், பரிமேலழகரின் குறள் விளக்கம், தமிழ் இலக்கணம், ரா.கணபதி, பரணீதரன் போன்றோரின் ஆன்மிகக் கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என அலமாரி கொள்ளாமல் புத்தகங்கள் இருந்தன. இப்போத் தெரியாது.

      நீக்கு
    4. ப்ரமாதம். இந்த மாதிரி நூலகங்களை நமது வெளிநாடுவாழ் தமிழர்கள் (வசதியான) வெளிநாடுகளில் துவக்கிவைத்து நடத்தினால் நன்றாக இருக்கும். எல்லா நாடுகளிலும் இது சாத்தியமில்லைதான்.

      நீக்கு
    5. மணிக்கொடி காலம் பற்றி பி எஸ் ராமையா எழுதிய புத்தகம் ஒன்று இருக்கிறது. என்னிடமும் இருக்கிறது. நானும் படித்து, முன்னர் அதை இங்கு பகிர்ந்தும் இருந்தேன்.

      நீக்கு
    6. "பென்னேஸ்வரன்" தான் ஏகாந்தன். அது என்னமோ என் கை தானாக ஷிஃப்டை அழுத்தி விடுகிறது.

      @ஸ்ரீராம், நீங்க வைச்சிருப்பது வேறே, நான் சொல்வது வேறே. நான் சொல்லும் புத்தகத்தில் மணிக்கொடியின் முக்கிய எழுத்தாளர்களின் எழுத்துக்களின் சேகரிப்பு முழுவதும்! மணிக்கொடி காலம் என்னும் பெயரில் வந்ததோ? ஏழெட்டு வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது படிச்சு. நினைவில் வரவில்லை.

      நீக்கு
    7. இரண்டு வருட முன்பு நான் வாங்கிய ‘சரஸ்வதி காலம்’ என்கிற புத்தகத்தை, இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து அவ்வப்போது கொஞ்சம் எழுதுவேன்.

      1953-62 காலகட்டத்தில் நன்றாக நடத்தப்பட்டு, நடத்தியவரின் கையை ஒரேயடியாகக் கடித்ததால் இறுதியில் கைவிடப்பட்ட சிற்றிதழ்
      ‘சரஸ்வதி’. ஜெயகாந்தன், சுரா போன்றவர்கள் தங்களின் ஆரம்பப் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள் இதில். ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றிற்கு ஏகப்பட்ட வசவுகள் வந்துவிழுந்த காலம்!

      நீக்கு
    8. சரஸ்வதி காலம் புத்தகம் என்னிடமும் இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்க்கவேண்டும்.

      நீக்கு
  22. எபியில் வியாழன் எனக்குமிகவும் பிடிக்கும்சொந்தமாக்ச எழுதினல் சிறப்புதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்...  நன்றி.  நீண்ட நாட்களுக்குப்பின் வரவு.

      நீக்கு
  23. எழுத்தாளர்கள் எல்லோரும் பாதி பைத்தியங்களா? அல்லது பாதி பைத்தியங்கள் தான் எழுத்தாளர்கள் ஆகிறார்களா?

    சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையையும்.

    அடுக்கு மாடி குடியிருப்பில் கிடைக்காது.
    வேலைநாட்களோ விடுமுறை நாட்களோ என்றும் இயந்திர வாழ்க்கை. 
    தனிமையில் இனிமை காண தனியே நாள் ஒதுக்க வேண்டி இருக்கிறது. 
    இதில்தான் எத்தனை புத்துணர்ச்சி. புதிதாய் பிறந்த உணர்வு. 
    நினைப்பு நீரில் பிரதிபலிக்கிறது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சேர்ந்தே இருப்பது// அப்போ காணு நிறைய சம்பாதித்தவர்கள் நல்ல புலமை பெற்றவர்கள் இல்லை என்று ஆகிறதே

      நீக்கு
    2. திருவிளையாடல் வசனம். தன்மானத்தை விட்டு கொடுக்காது புலமை ஒன்றே தொழில் என்று இருந்தவர்கள், இருப்பவர்கள் வறுமையில் வாடினர் என்பது தெளிவு.

       Jayakumar

      நீக்கு
    3. வாங்க JC சார்...
      பாரதியும்,  வறுமையும் புலமையும் சேர்ந்தேதான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார் என்கிறார் யதுகிரி அம்மாள்.

      புலமை என்பதை திறமை என்றும் கொள்ளலாம்!

      உங்கள் மூன்றாவது பாரா கவிதை, படத்தைப் பற்றி பேசுகிறதோ...

      நீக்கு
  24. சுவாரசியம். சின்ன கண்ணம்மா யாருக்காவது தெரிந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  வாங்க...   இன்னும் ஒன்றும் புலனாகவில்லை!

      நீக்கு
  25. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியில் வழங்கிய விபரத்தில் பாரதி பற்றிய செய்திகள் நானும் படித்திருக்கிறேன். வறுமையிலும் புதிது புதிதாக பாட்டுக்கள் கவலையின்றி அச்சமின்றி, பிறந்திருக்கின்றன. நாளை, ஏன் அடுத்த நிமிடம் பற்றிய கவலை இல்லாத ஒரு நிலைக்கும் மனதுக்குள் பக்குவம் வர வேண்டும். அந்த பக்குவம் அன்னை பராசக்தி பாரதியாருக்கு தந்திருக்கும் வரம். அது மறுக்க முடியாத உண்மை.

    இலக்கியவாதிகள் என்றாலும்,வாழ்வியல் தேவைகளுக்கு பணம் என்ற ஒன்று அத்தியாவசியமாகிறதே....
    புதுமைபித்தன் நினைவு நாளில் அவரைப்பற்றிய விபரங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி.

    கவிதையும், அதை எழுத தூண்டிய படமும் அழகு. அழகாக பிறந்த கவிதையை ரசித்தேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    குளிக்கும் இடத்தில் அனிதா வேறு ஏதாவது செல்லப்பிள்ளையாக இருக்கும்.ஆனால், பெயர் பலகைகளுக்கென்றே இருக்கும் மதிப்பை இது கண்டிப்பாக குறைத்திருக்கும்.

    நீண்ட நாட்களுக்குப் பின அனுஷ்கா படம் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா...   பார்தி தன் வறுமையை எண்ணி என்றுமே கவலைப்பட்டதில்லை.  குளிக்கச் செல்லும்போதுகூட வழியில் இருந்த ஏழைக்கு தன் கோட்டை கழற்றிக் கொடுத்தார் என்பார்கள்.  கையிலிருந்த பணத்தை எல்லாம் போட்டு வழியில் விற்பனைக்கு வந்த ஏழைக்கிழவியிடம் அப்படியே பழங்கள் வாங்கினார் என்பார்கள்.  கிடைத்த தனிமையில் அமர்ந்து கவலைப்படாமல் கவிபுனைந்தவர் பாரதி.

      இலக்கியவாதிகளின் வாழ்க்கைத்துணைகள் அந்த வாழ்வியல் கவலைகளை தாங்கள் ஏற்றுக்கொண்டு இவர்களை இலக்கியவாதிகளாகவே உலவ விட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

      கவிதையை ரசித்ததற்கும், விஅம்பரத்தை ரசித்ததற்கும் நன்றி.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  27. செல்லம்மாவிற்கு மனதில் உறுதி இருந்திருக்கிறது...

    கவிதை வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறுதி பற்றி பாடிய கவிஞரின் வாழ்க்கைப் பாதியாயிற்றே...  இல்லாமல் இருக்குமா?

      நன்றி DD.

      நீக்கு
  28. புதுமை பித்தன் is commonly portrayed as someone who suffered in poverty. I know their family and this is not true. He owned a bungalow in Raja Annamalaipuram, 6th main road, Chennai. He had only one daughter, Dinakari, who studied in Queen Mary’s College and continued to live in the same bungalow after her marriage. In 1989, her chauffeur driven car hit my father on the main road. My father suffered multiple injuries which grew into complications and finally led to him passing away a year later.

    I don’t think someone having a chauffeur driven car with a bungalow in an area such as Raja Annamalaipuram can be considered to have ‘suffered in poverty’.

    This post reminded me of several posts by Mrs. Geetha Sambasivam on her uncle, Ashoka Mitran.

    Sorry for not writing in Tamil.

    Vaishnavi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு நன்றி வைஷ்ணவி. இது முற்றிலும் புதிய தகவல். கீதா அக்கா எழுதியவை பற்றிச் சொல்கிறீர்களென்ளால் ரொம்ப நாட்களாய் வலைத்தளங்கள் வாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

      நீக்கு
    2. 'this post reminded me of several posts by...'

      -- really an interesting quoting..!

      நீக்கு
    3. வைஷ்ணவி புதுமைப் பித்தனையும், புலமைப் பித்தனையும் குழப்பிக் கொண்டு விட்டாரோ?

      நீக்கு
    4. மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல பலபட பொதுத்தளங்களில் பகிர்ந்து கொள்வோரால் விளையும் வினை இது.

      'பாரதி தைத்துப் போட்டுக் கொண்ட கிழிசல் கோட்டுடன் அலைவார்' போன்ற கற்பனை ஜோடனைகளை ஏற்கனவே அவரது குடும்பத்தினர் திருத்தியிருக்கின்றனர்.

      நீக்கு
    5. எழுத்தாளனை, கவிஞனை அவன் படைப்புகளில் காண வேண்டும். அவை பற்றி அலச வேண்டும். தெரியாதவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிரமிக்க வேண்டும்.
      அதை தவிர்த்த பார்வைகள்...
      செல்லப்பா அவர்களும், அவரது துணைவியாரும் தாமிருந்த நிலையின் நினைவு இல்லாமல் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்?
      அவர்களே சீந்தாத ஒன்றை, அந்த சான்றாண்மையை அவர்களை நினைவு கொள்ளும் நேரத்து நாம் நினைவுகொள்வது அவர்களை சரியாகப் புரிந்து கொண்டது ஆகாது.

      நீக்கு
    6. புலமைப்பித்தன் - புதுமைப்பித்தன் நல்ல குழப்பும் பெயர்ப்பொருத்தம் பானு அக்கா.

      நீக்கு
    7. வாங்க ஜீவி ஸார்.. அதையெல்லாம் அலசிய நேரம் போக அழுத்த நேரம் இதையும் அலசலாம்! எல்லாம் பொது வாழ்க்கையின் ஒரு அங்கம்தானே? இதோ.. தொடர்ந்து திஜரவின் பேத்தி எங்கள் பாக் பதிவில் வந்து உதவி கேட்டுக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    8. @பானுமதி: நான் ராஜா அண்ணாமலை புறத்தில் புதுமை பித்தன் வீட்டருகே வசித்தவள். குழப்பத்திற்க்கு இடமேயில்லை.

      வைஷ்ணவி

      நீக்கு
    9. வாங்க வைஷ்ணவி, என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. ஆனால் இதே விஷயம் இன்னும் வேறு யாராலோ சொல்லப்பட்டதாக நினைவு. மின் தமிழ்க் குழுமமா? முத்தமிழ்க் குழுமமா? நினைவில் வரலை. ஆனால் லேசாக உள்ளே ஆழ் மனதில் மிதக்கிறது. வெளியே வருதானு பார்க்கிறேன். மின் தமிழ்க் குழுமம் எனில் தேடிப் பார்க்கணும். புதுமைப்பித்தன் பற்றிப் பல வாத, விவாதங்கள் நடந்திருக்கு. அந்தச் சமயம் யாராலோ சொல்லப்பட்டதாக நினைவு லேசாக! நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை.

      நீக்கு
    10. புலமைப்பித்தனாக இருக்க வாய்ப்பில்லை. எம்ஜிஆரால் ஆதரிக்கப்பட்டவர் புலமைப் பித்தன். பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி" பாடல் இவர் எழுதினதிலே எனக்குப் பிடிச்ச பாடல். அதோடு இன்னமும் இருக்கார்னு நினைக்கிறேன். கொங்கு நாட்டவர். ஆனால் புதுமைப்பித்தன் திருநெல்வேலிக்காரர் என்று எண்ணுகிறேன்.

      நீக்கு
    11. ஆனால் அவர் திருநெல்வேலிக்காரர் இல்லை எனவும் தென்னாற்காடு மாவட்டத்துக் கடலூரைச் சேர்ந்தவர் எனவும் ஒரு பிரபல எழுத்தாளர் கூறி இருந்தார். எந்த அளவு உண்மை எனத் தெரியாது. இருந்த கொஞ்ச நாட்களிலே நிறையப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள், அரசியல் கட்டுரைகள்னு வெளுத்துக்கட்டி இருக்கார். கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இவருக்கும் ஏழாம்பொருத்தம் என்றும் கேள்விப் பட்டிருக்கேன். :))))))

      நீக்கு
    12. சி.சு.செல்லப்பாவுக்குப் புத்தகங்கள் விற்கவே இல்லை என்றே வருத்தம் அதிகம் இருந்தது. தான் பெற்ற குழந்தைகளைப் போல் அவற்றைப் பாதுகாத்து வந்தார் எனப் பென்னேஸ்வரன் சொல்லி இருந்தார். சி.சு. செல்லப்பாவும் என் சித்தி/(அம்மாவின் இன்னொரு தங்கை) புக்ககத்தினருக்கு தூரத்து உறவு. சின்னமனூரைச் சேர்ந்தவர் சி.சு.செல்லப்பா. ஆனால் அதிகம் தொடர்பு இல்லை.

      நீக்கு
    13. வைஷ்ணவி, சித்தப்பா (அசோகமித்திரனின் அப்பா) நிஜாம் ரயில்வேயில் வேலை பார்த்தவர். சித்தப்பா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படிக்கையில் தான் படேல் நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் சேர்த்தார். அந்தப் போராட்டங்களில் எல்லாம் சித்தப்பா கலந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரால் பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை. அதற்குள்ளாகத் திடீரெனத் தந்தை இறந்து போக உற்றார், உறவினர் எல்லோரும் சென்னையில் இருப்பதால் அனைவரும் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்கள். சித்தப்பாவின் 20 ஆம் வயதிலே 1951 ஆம் ஆண்டிலே சொந்தமாய் தி.நகரில் வீடு வாங்கிக் கொண்டு சென்னை வந்ததாகச் சித்தப்பா சொல்லி இருக்கார். வறுமைக்கு இடமே இல்லாத வாழ்க்கை.

      நீக்கு
    14. ஸ்ரீராம், நான் சொல்வது செல்லப்பாவை பற்றி.

      பல விருதுகளைப் புறக்கணித்தவர் அவர். திருவல்லிக்கேணியிலிருந்து எழுத்து என்ற பத்திரிகையை நடத்தியவர். தன் தோளில் சுமந்து கல்லூரிகள் படிகள் ஏறி விற்றவர்.
      யாரிடம் எதுவும் பெற உறுதியாக மறுப்பது அவரது கொள்கையாகவே இருந்தது.
      கடைசியாக கனடா தேசத்திலிருந்து விளக்கு என்ற அமைப்பினர், புதுமைப் பித்தன் விருது வழங்கிய போது காசாக வாங்க மறுக்கிறார். அவர்கள் வற்புறுத்திய பொழுது போனால் போகிறது என்று என் புத்தகம் ஒன்றை பதிப்பித்துத் தாருங்கள் என்கிறார்.
      காசாக எவரிடமிருந்தும் பெருவது தனது சுய கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைத்தவர் அவர்.

      நீக்கு
    15. ஓ...     சுயமரியாதை உள்ள மனிதர்.  நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
    16. Born C. Viruthachalam
      25 April 1906
      Thiruppadirippuliyur, Madras Presidency, British India
      Died 30 June 1948 (aged 42)
      Thiruvananthapuram, Madras Province, India
      Occupation Author, scriptwriter
      Language Tamil
      Nationality Indian
      Education B.A
      Alma mater Hindu College, Tirunelveli
      Period 1934–46
      Genre Short story, horror, social satire
      Subject Social Satire, Politics
      Literary movement Manikodi
      Notable works Kadavulum Kandasami Pillayum, Ponnagaram, Thunbakeni
      Spouse Kamala
      Children Dinakari

      நீக்கு
    17. நன்றி கீதாமா!

      - வைஷ்ணவி

      நீக்கு
    18. @ KGG: சுருக்கமாக, தெளிவாக வந்துசேர்ந்த விருத்தாசலத்தின் - புதுமைப்பித்தனின் - கதை!

      நீக்கு
  29. @ ஸ்ரீராம்...

    // இதற்கு எதற்கு வயதை எல்லாம் இழுக்கிறீர்கள் நெல்லை!..//

    எனக்கு வயது இருபத்தைந்து தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு ஆகி விட்டதா? இருபத்தி நான்குதான் இருக்கும் என்றல்லவா எண்ணியிருந்தேன்!

      நீக்கு
  30. அன்பில் வாழும் நெஞ்சுக்கு
    அனைத்தும் குழந்தை தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு குழந்தை உள்ளம்!

      நீக்கு
  31. 1 குரோஸ் - 144!

    இலக்கியவாதிகளின் பணக் கஷ்டம் - கொடுமை தான்.

    மற்ற பகுதிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  32. செல்லம்மா பாரதி அக்கம் பக்கதிலிருந்து இரவல் வாங்கி வைத்திருக்கிறார், அப்போது முற்றத்தில் எதையோ தேடி வருகிறது ஒரு குருவி. "எனக்கும் பசிக்கிறது, இந்த குருவிக்கும் பசிக்கிறது, குருவியின் பசி என் பசியை விட எந்த விதத்திலும் குறைந்தது இல்லை" என்று நினைக்கும் பாரதி செல்லம்மா வாங்கி வைத்திருக்கும் அரிசியை குருவிகளுக்கு போட்டு விடுகிறார். கூடவே 'காக்கை குருவி எங்கள் ஜாதி, கடல் வானும் நிலவும் எங்கள் கூட்டம்,பார்க்கும் இடமெல்லாம் நாமன்றி வேறில்லை காண்' என்று அத்வைத பரமாக ஒரு பாடல்" நம்மால் அவரது மன நிலையை உணர்ந்து கொள்ள முடியுமா? என்று கூட தெரியாது. ஆனால் யதார்த்தத்தை நினைத்தால் நல்ல வேளை அவர் அதிக நாட்கள் வாழவில்லை என்று தோன்றுகிறது. அவருடைய கொள்ளுப் பேரனான ராஜ்குமார் பாரதி கூட உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுகளுக்குக் கூட கஷ்டப்பட்டதாக செய்திகள் வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுவை சென்றபின் பாரதியின் பார்வையில் ஒரு மாறுதல் தெரிந்தது என்கிறார் யதுகிரி அம்மாள். முன்னர் தீயாய் சுட்ட கண்களில் ஒளி இல்லை என்கிறார். அவர் மறைந்த நாளில் யதுகிரியைத் தேடியதாய் யதுகிரியிடம் செல்லம்மா பாரதி சொன்னாராம்.

      நீக்கு
  33. அரசியல்வாதிகள் மேலும் கெட அதிகாரிகள் வழி வகுத்து கொடுக்கிறார்கள் படித்த அதிகாரிகளுக்குதான் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் ஒட்டைகள் அதிகம் தெரிந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடி... இப்போதுதான் அடுத்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்திருக்கிறோம்! நான் கொடுத்திருக்கும் படத்திலேயே கடைசி கமெண்ட் பாருங்க மதுரை...

      நீக்கு
    2. அரசியல்வாதி, 500 கோடி கொடுத்து தேர்தலில் உத்திகள் வகுத்து ஆட்சிக்கு வருகிறான் (நான் மத்த முக்கியத் தலைகள் செலவழிப்பதைச் சொல்லலை). போட்ட முதலுக்கு பன்மடங்கு வட்டி சேர்த்து சம்பாதிப்பதற்குத்தான் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

      இப்போ தப்பித் தவறி கக்கன் மாதிரி ஒரு அமைச்சர், பொதுப்பணித்துறையிலோ இல்லை ரெவின்யூ டிபார்ட்மெண்டுக்கு வந்து, ஒரு பைசாவும் லஞ்சம் வாங்குவதில்லை என்று ஸ்டிரிக்டாக (இது சாத்தியமே இல்லை) இருந்தால், கை அரித்த அனேகமாக எல்லா அரசு அலுவலர்களுக்கும் தாங்க முடியாது. (அவனும் இன்வெஸ்ட் பண்ணியிருப்பான்). என்ன பண்ணுவாங்க? ஜாதி சர்டிபிகேட்டுக்குப் போனால், இழுத்தடிப்பாங்க. உங்க ஜாதிலதான் நீ இருக்க என்பதற்கு ஒரு சர்டிபிகேட் வேணும், உங்க அப்பாவுக்கு ரெண்டாவது மனைவி இல்லை, அவங்க கிறிஸ்துவர் இல்லை என்பதற்கெல்லாம் சர்டிபிகேட் வேணும் என்றெல்லாம் இழுத்தடித்து, சட்டத்தின் வழி வகைகளை வைத்து பொதுமக்களைத் துன்புறுத்தி, அமைச்சருக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வரச்செய்து, அமைச்சரை மாற்ற வைப்பாங்க. அப்படி இல்லைனா, சாதிப் பிரச்சனையைக் கிளப்புவாங்க. ஒரு பட்டா அல்லது நில அளவை என்று ஓவ்வொரு இடத்திலும் லட்சக்கணக்கான லஞ்சம், ப்ரோக்கர்கள் என்று கொழிக்கும் துறை இது.

      நீக்கு
  34. நேற்று புதுமைப் பித்தனுக்கு மட்டுமல்ல, விந்தனுக்கும் நினைவு நாள்.

    பதிலளிநீக்கு
  35. ஆஹா! எத்தனை மாதங்களுக்குப் பிறகு அனுஷ் நம் தளத்திற்கு வருகை தந்திருகிறார்? ஆரத்தி எடுத்தீர்களா இல்லையா?
    நேற்று நான் கொடுதிருந்த அழகிகளின் பட்டியலில் அனுஷ் விட்டுப் போய் விட்டதால் இன்று பிராயசித்தம் தேடிக்கொண்டு விட்டீர்களா?ஹா ஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அதுதான் இன்று இங்கு வந்து விட்டார்.

      நீக்கு
  36. நேர்மையற்ற அரசியல்வாதியின் கீழே நேர்மையான அதிகாரி செயலாற்றுவது கடினம். எத்தனை ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்காததால் அடிக்கடி மாற்றப்பட்டிருகிறார்கள் என்பது நாம் அறியாததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வழக்கம்தான்.  ஆனால் அரசியல்வாதிகளுக்கு 'சொல்லிக் கொடுக்கும்' அதிகாரிகளும் உண்டு!

      நீக்கு
  37. யுக புருஷன் பாரதி

    -- என்ற பெயரில் என் தளத்தில் ஒரு தொடர் எழுதினேன் அது மின் நூலாக கிண்டிலில் கிடைக்கிறது.
    புதுமை நடையில் மஹாகவியின் சுயசரிதம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாகவியின் சரிதம் அது என்று இருக்க வேண்டுமோ....


      நன்றி ஜீவி ஸார்...

      நீக்கு
    2. சரிதம் - சரியே.

      உண்மைக்கதை மாதிரி பொருள்படக்
      கூடாது தான். :))

      நீக்கு
    3. சுய சரிதம் என்பது அவரவர் தானே எழுதுவது. உண்மைக்கதை என்பது வேறு. நம்மைப் பாதித்த/அல்லது நாம் கண்டு அதிர்ந்த நம் நெருங்கிய சொந்தம்/நட்புனு எவர் வாழ்விலோ நிகழ்ந்த நிகழ்வுகளைக் கேள்விப்பட்டவரையிலும்/அல்லது பார்த்த வரையிலும்/கூட இருந்து கவனித்திருக்கும் வகையிலும் எழுதப்படுவது உண்மைக்கதை. நம் கதையைத் தான் எழுத வேண்டும் என்பதே இல்லை. நம் வாழ்க்கையை நாமே எழுதுவது தான் சுயசரிதம். நம் வாழ்க்கையைப் பிறர் அவர்கள் அறிந்தவரையில் எழுதுவது சரிதம். ஶ்ரீசங்கரர் பற்றிப் பலர் சங்கர சரிதம் என எழுதி இருக்காங்க. அவை உண்மையில் நடந்தவையே என்றாலும் உண்மைக்கதை என்றெல்லாம் பொருள்பட வராது.

      நீக்கு
    4. ஆமாம்.   சுயசரிதம் என்பது தன் வரலாற்றை தானே எழுதுவது.  இன்னொருவர் எழுதினால் அது சரிதம், சுயசரிதம் அல்ல.  அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்.  

      நீக்கு
    5. மஹாகவியின் சுயசரிதம் என்பதை
      மஹாகவியின் வாழ்க்கை வரலாறு என்றும் பொருள் கொள்ளலாம்.

      நீக்கு
  38. பதிவு அருமை.
    நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

    உங்கள் கவிதை அருமை. பொருத்தமான படம்.(படத்திற்கு பொருத்தமான கவிதை)

    அனுஷ் நினைவுகளில் வந்து விட்டார்! (மறந்தால்தானே நினைக்க)

    பதிலளிநீக்கு
  39. இலக்கியவாதிகளைப் பொறுப்பு அற்றவர்கள் என்று கூறிவிட இயலாது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!