படம் வெளியான ஆண்டு 1966. இதன் ஒரிஜினலான ஹிந்தி Woh Kaun Thi? படம் 1964 ல் வெளியானது. தமிழில் இசையமைத்த வேதாவுக்கு பெரிய வேலை இல்லை. தயாரிப்பாளரான பி எஸ் வீரப்பா ஹிந்தியில் இருக்கும் அதே டியூனையே போடச் சொல்லி விட்டதால்!
எனவே கண்ணதாசன் பாடல்களுக்கு இசை மதன்மோகன் என்று சொல்லி விடலாம். இரண்டு மொழிகளிலுமே படம் வெற்றியடைய இசை ஒரு மிக முக்கிய காரணம். மூலக்கதை துருவா சட்டர்ஜி.
இதில் இரண்டு பாடல்கள், நானே வருவேன் (நைனா பர்ஸா), மற்றும் பொன்மேனி தழுவாமல் (லக் ஜா கலே) இரண்டும் லதா மங்கேஷ்கர், பி சுசீலா குரலில் வரும் பாடல்கள் வெகு ஸ்பெஷல். நானே வருவேன் சொல்லவே வேண்டாம். அவ்வளவு இனிமை - வரிகள் அருமையாய் இருக்கும். இந்தப் பாடல் அந்தப் பாடலின் புகழில் சற்று பின் தங்கியது போல தோன்றும் எனக்கு. ஆனால் எனக்கென்னவோ இந்தப் பாடல்தான் மிகவும் பிடிக்கும். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடைப்பட்ட அந்த இசை.. சுசீலாம்மாவின் குரல், டியூன்..
அம்மாடி.. கேட்டுக்கேட்டு அனுபவிக்க வேண்டும் பாடலை. ஒருநாள் கல்லூரிக்கு நேரமாகி விட்டடதைக் கூட பொருட்படுத்தாமல் இந்தப் பாடல் முடிந்த உடன்தான் புறப்பட்டேன். என்னுடைய பி சுசீலா கேஸெட்டில் முதல் பாடலாகவும், கடைசிப் பாடலாகவும் இதையே பதிந்து வைத்தேன். அப்படி சில பாடல்களை நான் பதிந்து வைப்பது வழக்கம்!
பாடலை ரசித்தால் பெரும்பாலும் காட்சியை ரசிக்க முடியாது. ஆனால் இந்தப் பாடலின் காட்சி..
வல்லிம்மா, கீதாக்கா எல்லோரும் ஜெயலலிதா அழகு, அழகு என்பார்கள். என் பாஸும் ரொம்ப சிலாகித்துப் பேசுவார். ஆனால் எனக்கென்னவோ சில படங்களில்தான் அப்படித் தோன்றும். அதில் இது ஒன்று. இந்தப் பாடல் காட்சியில் அவர்தான் என்ன அழகு... ஜெய்யைப் பார்க்கும் அந்தப் பார்வையில் பாடலின் Bhaaவங்களை அப்படியே பிழிந்து கொடுத்து விடுகிறார்.
பொன்மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர
தூது வேண்டுமா
இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமோ..
உறவென்பதே உன்னெஞ்சிலே இன்றேனு ம் தோன்றுமோ
நீ சொல்வதை நான் சொல்வதா இது நீதியாகுமா
தாளாத பெண்மை நீங்கும்போது காணலாகுமா
மழைமேகமே என் தீபமே என் காதல் தெய்வமே
மறுவாழ்விலும் உன்னோடுநான் ஒன் றாகவேண்டுமே
நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகம் அல்லவா
நாமொன்று சேர்ந்து வாழும்போது வார்த்தை வேண்டுமா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கியம் நிறை வாழ்வு தொடர இறைவன்
பதிலளிநீக்குஆசிகள் வழங்க வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குஅனேக நன்றிகள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநாங்கள் மிக மிக ரசித்துக் கேட்கும் பாடல்கள்.
கேட்ட பாடல்கள்.
ஜெயலலிதா முதல் நான்கு வருடங்கள் எல்லாப் படங்களிலும் அழகு முறையவே இல்லை.
அதுவும் ஜெய்சங்கர் படம் என்றால்
கேட்கவே வேண்டாம்.
நடனம், அழகு, நடிப்பு எல்லாமே நன்றாக
வெளிப்பட்ட நேரம்.
//அதுவும் ஜெய்சங்கர் படம் என்றால்
நீக்குகேட்கவே வேண்டாம்.//
:-)))
அதில் ஒரு இனிய ஆரம்ப கால காதல் "கதை" இருக்கிறது இல்லை?
நீக்குஆமாம் ஸ்ரீராம்.,
நீக்குகண்களில் அந்த bhaவம் எவ்வளவு தெரிகிறது
என்று அளவிட முடியாது.
ஜெய் என்றால் எல்லோரும் கவர்ந்திழுக்கப் படுவார்கள்.
ஜெயலலிதா ஜெய் சங்கர் ஜோடி
நல்ல வெற்றி பெற்றது.
அப்புறம் கதையாகவும் போய்விட்டது.
ரவிச்சந்திரனுடனும் நிறையப் படங்கள் செய்தார்.
அப்போது பார்க்காத படங்களைப் பின்னாட்களில்
தொலைக்காட்சியில் தான் பார்த்தேன்.
ரவிச்சந்திரனுடனான படப் பாடல்களில் ஒரு துள்ளல் இருக்கும்!
நீக்கு'ராஜாக் கண்ணு' பாட்டு மாதிரி:)
நீக்குஜெய்சங்கரை உருக உருகக் காதலித்தார் ஜெயலலிதா. அந்த உண்மையான காதல் அவருடனான காதல் காட்சிகளில் தென்படும். ஜெயலலிதா எல்லாப் படங்களிலுமே அழகு தான். அவர் அழகு குறைய ஆரம்பித்த நேரம்/உடல் எடை அதிகரித்த நேரம் அவர் திரைப்படங்களில் தோன்றுவதைத் தவிர்த்து விட்டார். ஆகவே என்றும் இளமையான அபிமன்யு/அரவான் மாதிரி அவர் படங்களில் இளமைத்துள்ளலுடனேயே காணப்படுவார். ஜிவாஜியோடு நடித்த ஒரு சில படங்களில் அவர் உடை அலங்காரம் சகிக்காது. என்றாலும் வேறு வழியில்லை. சவாலே/சமாளி படத்தில் சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு பாடலில் நன்றாக இருப்பார்.
நீக்குஇங்கே குறிப்பிட்டிருக்கும் பாடலில் வரிகள் கிட்டத்தட்ட அவருடைய உண்மையான உள்ளுணர்வை வெளிப்படுத்தி இருக்கும். ஆகவே உணர்ந்து நடித்திருப்பார்/வாழ்ந்திருப்பார். இந்தப் படம் பார்த்திருக்கேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குபாடல் இனிமை. அடிக்கடி கேட்ட பாடல்.
பதிலளிநீக்குஇந்த படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும். ஏன் இன்று ஒரு பாட்டுடன் நிறுத்தி விட்டீர்கள்?
பாடலை கேட்டு ரசித்தேன்.
சமயங்களில் நிறைய பாட்டு போட்டு படுத்துகிறோமோ என்று தோன்றும்போது ஒரு பாட்டுடன் நிறுத்தி விடுவேன்!
நீக்கு;0000000000000000000))))))))))))))))))))))
நீக்குநேற்று வந்தேன் இன்று வந்தேன் என்று
பதிலளிநீக்குஇன்னோரு பாடல் கூட வருமே.
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்'
பாடலும் நன்றாக இருக்குமே மா.!!!
நைனா பர்ஸே பாடல் ஹாண்டிங்க் மெலடி.
எத்தனை வருடங்கள் விவித பாரதியில் ஒலித்திருக்குமோ
நினைவில்லை.
சுசீலாம்மா குரலின் அருமையே தனி.
தமிழில் கேட்கும் போது இன்னும் நன்றாகத் தான்
இருக்கும்.
எனக்கென்னவோ இந்த இரண்டு பாடல்தான்! இது போதும்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க...
நீக்குநல்ல மெலடி! நல்ல அழகான ஜோடி. என் பெரிய அக்காவோடு படித்த ஒரு பெண் ஜெய்யும், ஜெயும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாமியிடம் வேண்டிக் கொள்வாராம்.ஏனோ சாமி அவர் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை.
பதிலளிநீக்குமெலடி என்கிற சொல்லுக்கு பொருளாய் விளங்கும் பாடல்களில் ஒன்று.
நீக்குஜெய்சங்கர் சம்மதிக்கவில்லை. அவர் குடும்பத்தினரால்/பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தையே விரும்பினார் என்பதாகச் சொல்வார்கள்.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குவரிகளை வைத்துப் பாடலை நினைவுக்குக் கொண்டுவர முடியலை. காணொளி கேட்ட நொடியில் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது. மிக அருமையான பாடல். இசையையும் தூக்கிக்கொண்டுவந்துவிட்டாரா... நல்ல இசை.
பின்னே? அப்படி சட்டென நினைவுக்கு வருவது போல வச்சுட்டா அப்புறம் என்ன இருக்கு!
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குவரிகளை வைத்துப் பாடலை நினைவுக்குக் கொண்டுவர முடியலை. காணொளி கேட்ட நொடியில் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது. மிக அருமையான பாடல். இசையையும் தூக்கிக்கொண்டுவந்துவிட்டாரா... நல்ல இசை.
:)))
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குவரிகளை வைத்துப் பாடலை நினைவுக்குக் கொண்டுவர முடியலை. காணொளி கேட்ட நொடியில் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது. மிக அருமையான பாடல். இசையையும் தூக்கிக்கொண்டுவந்துவிட்டாரா... நல்ல இசை.
அவ்ளோதானா?
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எத்தனை தரம் சொன்னதையே சொல்வீங்க நெல்லை? :))))))
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குஎனக்கு மிகவும் பிடித்த பாடல்...
பதிலளிநீக்குயார் நீ - படத்தின் பாடல்களை எத்தனை முறை கேட்டிருப்பேன்!.. நினைவில்லை...
ஆம். ஆனால் எனக்கு இந்தப் அப்படத்தில் இந்த் இரண்டு பாடல்கள் போதும்!
நீக்குஇப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத சோகம் நெஞ்சை அழுத்தும்...
பதிலளிநீக்கு//ஜெய்யும், ஜெயும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ...//
ஜெய் + ஜெ - கனவாகிப் போன கனவு..
சோகம் என்பதைவிட ஏக்கம்... தவிப்பு...
நீக்கு// என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
பதிலளிநீக்குஎன்னோடு... //
மிகவும் பிடித்த பாடல்...
சுசீலாம்மா ஸ்பெஷல்.
நீக்குநானே வருவேன் அடிக்கடி கேட்ட ஸூப்பர் பாடல்...
பதிலளிநீக்குஆமாம் ஜி.. இதுவும்...
நீக்குநாயகி பார்வையின் கணிப்பு சரிதான்... நாயகன் பார்வையோ துப்புக் துலங்கும் ஜேம்ஸ்பாண்ட் பார்வை...!
பதிலளிநீக்கு// நீ சொல்வதை நான் சொல்வதா...? இது நீதியாகுமா...? //
அதானே...!? நீதி ஆகாது... நாணுத்துறவுரைத்தல் செய்வது காதலன் அல்லவா...? அந்த அதிகாரம் எழுதின போது கேட்ட பாடல்... இன்று காணொளியில் பார்த்தேன்...!
உண்மைதான். நன்றி DD.
நீக்குபாடல்கள் இனிமை. ஹிந்தி பாடல்களை அதிகம் ரசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்களை தேர்வு செய்திருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குஇரண்டுமே ஒன்றையொன்று போட்டி போடுமளவுக்கு இனிமையானவை!
வெள்ளியில் மீண்டும் ஒரு அழகான பாடல்! Consecutive sixers fromm Sriram!
பதிலளிநீக்குபழசில்தான் எத்தனை சுகந்தம், என்ன சுகம்.. தேன்குரலும், திரைக்காட்சியும் சேர்ந்து கலக்கும் அபூர்வம். நளினமே உருவாக, மயக்கும் bhaaவங்களில் ஜெ. She was top class. No doubt.
மனதால் மயங்கிய உண்மையான ஜோடி ஜெ.யும் ஜெய்யும்தான் என்றே தோன்றுகிறது. யார் கண்பட்டதோ, முன்னேற்றம் நிகழவில்லை.
ஹிந்திப் பாடல்களும் நன்றே.
பாடல்கள் இனிமை.
பதிலளிநீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்கு