சனி, 9 அக்டோபர், 2021

தேவையா பார்வை? - & நான் படிச்ச கதை

 

ஒவ்வொரு கிராமத்திலும் 'புஸ்தக கூடு'; யோசனை சொல்கிறார் சு.வே.,



''த மிழகத்தில், கிராமப்புற மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டுமெனில், கேரளாவைபோல் இங்கும் கிராம புத்தக அலமாரி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்,'' என்கிறார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பெரும்குளம் கிராமம். இங்குள்ள மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, புத்தக அலமாரி திட்டத்தை, அம்மாநில அரசு செயல்படுத்தி உள்ளது. அங்கு, 'புஸ்தக கூடு' என்றழைக்கின்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய புத்தக அலமாரி வைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள புத்தகங்களை எடுத்து படித்து விட்டு, மீண்டும் அலமாரியில் வைத்து விடுகின்றனர்.தேசிய வாசிப்பு தினத்தை முன்னிட்டு, கேரள முதல்வர் பினராயி விஜயனால் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம், அம்மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற திட்டம், மகாராஷ்டிரா மாநிலத்தில், 2017ல் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தினால், கிராமப்புற இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும், என்கிறார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.

அவரிடம் பேசியபோது...நமது நாட்டில் அதிக கல்வி அறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலங்களாக, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை கல்வி கற்றலில், 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என்றால், நவீன கல்வி முறையை உருவாக்க வேண்டும். இதில் கேரளா முன்னோடி மாநிலமாக உள்ளது. பாடப்புத்தகங்களை மட்டும் மாணவர்கள் படித்தால் போதாது. கலை இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த பொது நுால்களையும் படிக்க வேண்டும்.கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை.

பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மட்டுமே கிளை நுாலகங்கள் பகுதி நேரம் செயல்படுகின்றன. அங்கு சென்று புத்தகங்கள் வாசிக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.தமிழகத்தில் கிராமப்புற மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்றால், கேரளா மாநிலத்தைபோல் கிராமப்புறங்களில் புத்தக அலமாரி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். கிராமம்தோறும், புத்தக அலமாரிகளை உருவாக்க வேண்டும். கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள், பொதுமக்கள் ஓய்வாக இருக்கும்போது புத்தகம் படிக்க வாய்ப்பாக அமையும், என்றார்.

= = = =

அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்.



சீர்காழி அருகே ஆசிரியர் ஒருவர் தன் சொந்த செலவில் மூன்று சக்கர சைக்கிள் எல் இ டி திரை அமைத்த்து, பள்ளி மாணவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று கல்வி புகட்டுகிறார்.  ஆன்லைன் கல்வியில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு இவரின் செயல் மிகவும் உதவிகரமாயிருக்கிறது.

===============================================================================================









- நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

=========================================================================================================



சென்ற வார நான் படிச்ச கதை விடை....

சென்ற வார சுஜாதாவின் கதைக்கு விடை ரிசப்ஷன் 2010

நெருங்கினேன்.

"ஐம் அருணாச்சலம்"

அவன் கை குலுக்கல் மென்மையாக இருந்தது.   

========================================================================================================================



நான் படிச்ச கதை 
- ஜீவி -

'கிருஷ்ண மந்திரம்'  ஆஸ்ரமம் அல்ல;  ஆஸ்ரமம் போன்ற செயல்பாடுகள் கொண்டதாயினும்,  அதை ஒரு ஹோம் என்றே சொல்ல வேண்டும். மகன், மருமகள், சொந்த வீடு என்று எல்லாம் இருந்தும்  வரலெஷ்மிக்கு வயதான காலத்தில் இந்த ஹோமில் வாழ நேரிடுகிறது.  மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் ஒத்து வராத பொழுது இந்த இருவரின் நிம்மதி, அதை ஒட்டிய தன் நிம்மதிக்காகவும்  மகனே தாயைக் கொண்டு வந்து பணம் கட்டி இந்த ஹோமில் சேர்க்கிறான்.


நாற்பத்தாறு ஆண்கள்  மத்தியில் இவனின் தாயும்,  அந்த ஹோமில் பொது வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் சுசீலாவையையும் சேர்த்து இரண்டே பெண்கள். ஆரம்பத்தில் அந்த ஹோமில் தனித்து எப்படி காலம் தள்ளப்போகிறோம் என்று மிரளும் அந்தத் தாய், எல்லோருக்குமான தாயாய் மிளிர்ந்து  அந்த மொத்த ஹோமின் நிர்வாகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அளவுக்கு பரிணமிப்பது தான் கதை.
 
நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  நாம் ஒவ்வொருவரும் குட்டியூண்டு குடும்பம் ஒன்றை கட்டி அழுது கொண்டு மகன்,மகள், மனைவி, மருமகள், மருமகன் என்று மயங்கி சொந்த பந்தங்களுக்கிடையே வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கையில்,  அந்த வாழ்க்கையின் பிணக்குகளையும்  சுணக்கங்களையுமே பெரிசாய் நினைத்து அலமந்து அல்லாடுகையில்,  அப்படிப்பட்ட ஒரு அல்லாட்டச் சுழலில் சிக்கியும் விதிவசத்தால் அதனின்று விடுபட்ட வரலெஷ்மி,  சொந்த பந்தக் குடும்ப உறவுகளைத் தாண்டி வெளியே தன் அன்பையும் .ஆதுரத்தையும் எதிர்பார்த்து இருக்கும் விதவிதமான மனிதர்களைப் புரிந்து கொண்ட ஒரு தரிசனத்தை எவ்வளவு நேர்த்தியாக பாலகுமாரன் சொல்லி விட்டார் என்று இந்த புதினத்தைப் படிக்கையில் மிக ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

இந்த 'கிருஷ்ண மந்திரம்' இதற்கு முன்னால் இவரே எழுதிய இன்னொரு நாவலின் வேறுபட்ட வளர்ச்சியடைந்த பார்வை.   பெற்ற தாய் ஒரு புறம்,  மனைவி மறுபுறம் என்று மகன் மாட்டிக்கொண்ட இவரது இன்னொரு நாவல்  'நிழல் யுத்தம்'.

லலிதாவை முரளி முதன் முதல் சந்தித்தது ஒரு விபத்து.  பின்னால் வரப்போவது எதுவும் முன்னால் தெரிவதில்லை.  இப்படித் தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையாகத் தெரிகிறது.  முரளி மட்டும் விதிவிலக்கல்லவே;  அவன் வாழ்க்கையிலும் அப்படித்தான் அமைந்தது.

முரளி அம்மா வளர்த்த பிள்ளை.  விதவை வளர்த்த குழந்தை அவன்.  வளர்த்தது கூட பெரிசில்லை, வளர்த்த குழந்தையை வகை தெரியாமல் திருமணம் செய்து கொடுத்து தான் பெரிசாகப் போய்விட்டது.  மிலிட்ரியில் மேஜராக இருந்த சங்கரன் முதலில் அந்தக் குடும்பத்திற்குப் பழக்கமாக, அவர் தன் பெண்  லலிதாவின்  ஜாதகம் கொண்டு  வந்து  கொடுத்து லலிதாவுடனான முரளியின் திருமணம் முடிந்தது.   மாமனார் சங்கரன் தனக்குத் தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து முரளிக்கு  வேலையும் கிடைக்கிறது.  அதாவது மாமனார் தயவில் கிடைத்த நல்ல வேலை.

பின்னால் தான் தெரிகிறது, 'பெண்டாட்டி உலகம் தான் புருஷன்  உலகம்; புருஷன் உலகத்தில் பெண்டாட்டி இருக்கணும்ங்கறது,  வேதனை தருகிற விஷயம்' என்று நினைப்பவள்  லலிதா என்று...   எல்லா உறவுகளையும், உணர்வுகளையும் சிக்கலாக நினைப்பவள் அவள்.  ஒரு நாள்,  'நான் ஆம்பிளை வளர்த்த பெண் குழந்தை. அதனால் தான் எதிர் எதிர் துருவமாக இருக்கிறோம்'  என்கிறாள்.

இன்னொரு நாள் சொல்கிறாள்:  'மனுஷா செல்ஃபிஷா இருக்கணும்.  சுயநலம் தான் ஆரோக்கியம்.  நான் முக்கியம். நான் முதல்.  நானே என் உலகத்தின் மையம்.   நான் இல்லாவிட்டால் எனக்கு இந்த உலகமும் இல்லை.  நான் இல்லாத பொழுது  இருக்கும் உலகம் பற்றி எனக்குத் தெரியப்போவதில்லை.  நான் நன்றாக இருந்தால் தான் இந்த உலகம் எனக்கு நன்றாக இருக்கும்.." என்கிறாள்..

கிருஷ்ண மந்திரத்தில் மருமகள் ஆடிய  ஆட்டத்தில் மாமியார் ஹோமிற்கு போக வேண்டியதாயிற்று.   நிழல் யுத்தத்து மருமகள், மாமியாரை மனம் வெதும்பி நோகச் செய்து அவள் உயிருக்கே உலை வைக்கிறாள்.

ஊருக்குத்  தெரிந்த டைவோர்ஸோடு ஆரம்பமாகிறது,  பாலகுமாரனின்  இன்னொரு கதை ' இரண்டாவது சூரியன்'.  ஆணவம், அகம்பாவம், தன் 'தானை'த் தானே தூக்கிச் சுமந்து எல்லா நேரங்களிலும் தன்னையே முன்னிலைப்படுத்தத் துடிக்கும் தன்னகங்காரம் என்று  எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் குழைத்ததின் வடிவம் கவிஞன் கதிரேசன். கதிரேசன் பட்டிமன்ற கவிஞன்.  தமிழிலக்கியத்தில் முதுகலை படித்த பேராசிரியன்.  சமூகத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக்  கொள்வதற்காக சகல உபாயங்களையும் கற்றுத் தேர்ந்த வித்தகன்.

ரசாயனத்தில் எம்.எஸ்ஸி., படித்த பள்ளி  ஆசிரியை பானுமதி அவனுக்கு வாழ்க்கைப் படுகிறாள். ஆரம்பத்தில்  கதிரேசனின் சாதுர்யங்கள் அவளைக் கவர்ந்தாலும்,  சுயநலமும், சுயபுராணமும் தன்னைச் சுற்றியே பின்னிப்பின்னி சகலத்தையும் அவன் சமைத்துக் கொள்வது அவளுக்கு சலிப்பேற்படுத்துகிறது. அவனது மமதையும் மனைவி உட்பட சகல உறவுகளையும் கிள்ளுக்  கீரையாக நினைக்கும் அவனது உதாசீனமும் அவளுக்கு வெறுப்பேற்படுத்துகிறது.  தினமும் சண்டை, அடிதடி என்று தொடர்கதையாகிப் போகும் அத்தனை அவமானங்களும் கடைசியில் விவாகரத்தில் முடிகிறது.  பெற்றோர்களுடனும் இருக்க முடியாமல் போய் இரண்டு குழந்தைகளுடன் தனிக் குடித்தனம் தொடங்குகிறாள் பானுமதி.

துணையாய் இவளைப் போலவேயான வாழ்க்கை அமைந்து போன, குடும்ப நீதி மன்றத்தில் இவளதும் அவளுதுமான வழக்குகள் நடக்கையில் மனதுக்குப் பிடித்துப் போன பூக்காரி நாகம்மா துணையாகி வீட்டு  வேலைகளையும் இவளது குழந்தைகளையும் கவனித்துப்  பராமரிக்கும் தோழியாகிறாள். வாழ்க்கையின் போக்கில் நிகழும் அறிமுகங்கள்,  பிறர் நலனுக்காக தான் அல்லாடுகையில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதில் தனக்குத் தானே பிர்மாண்டமாய் உணரும் மனிதாபிமானம் எல்லாமே உலகையும்,  மானுட உறவுகளின் உன்னதத்தையும் பானுமதிக்குப் பாடமாக எடுத்தோதுகின்றன.

 கிருஷ்ண மந்திரத்து வரலெஷ்மிக்குக் கிடைத்த மாதிரி இரண்டாவது சூரியன் பானுமதிக்கும் கிடைத்த வேறுபட்ட வேறொரு ஞானோதயம் இது.   பெண் என்பவள் தண்ணென்று குளிர் பொழியும் நிலவல்ல;  கனவுகளோ கற்பனை ஊற்றுகளோ அல்ல;  சுட்டெரிக்கும் சூரியன் என்று சொல்ல வந்த கதை இது.

'என்னுயிரும் நீயல்லவோ'  இன்னொரு மாஸ்டர் பீஸ்.  ஏலக்காய் எஸ்டேட் நாச்சியப்ப செட்டியார் தனது இரண்டாவது  மனைவி பகவதியிடம் எஸ்டேட் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு கண் மூடுகிறார்.  செட்டியாருக்குப் பிறகு எஸ்டேட் உரிமை குறித்து பங்காளிகளுக்கிடையே கசமுச எழுந்த பொழுது அவர்களை அடக்கி எஸ்டேட்டைப் பார்த்துக் கொள்ளும் பகவதிக்குப் பக்கபலமாக தன்  மூத்த மகன் கதிரேசனை மலைக்கு அனுப்புகிறார் செட்டியாரின் மூத்த மனைவி ஆச்சி.  மலைக்கு வந்து ஏலப்பயிர் பற்றியும் அதற்குள்ள கிராக்கி பற்றியும் அறிந்து எஸ்டேட்டை விரிவு படுத்த விரும்பி அதில் கதிரேசன் வெற்றியடைந்த கதை அவன் காதலுக்கிடையே சொல்லப்பட்டிருக்கிறது. ஆச்சிக்கும் பகவதிக்குமிடையான நேசத்தை ஏலக்காய் பயிர் பற்றி  ஞானம் கொண்டு ஒரு ஆணுக்கு நிகராய் எழுந்து நின்று கட்டிய கணவனின் சொத்தை தன் மூத்தாளின் பிள்ளை கதிரேசனைக் காத்து நின்ற பகவதியின் கடமை உணர்வின் மாண்பை,  சித்தியின் சொல் பேச்சுக்குப் பணிந்து பெற்ற அன்னையாய் அவளைப் பேணும் கதிரேசனின் குணநலனை -- என்று பாலகுமாரன் உணர்வுகளைக் கொட்டி வடிக்க நிறைய வாய்ப்புகள். 

போடி நாயக்கனூர் பகுதி ஏலக்காய் தோட்டங்களை நிலைக்களனாய் கொண்டு, அந்த மலைப் பகுதி வாழ்க்கை, ஏலக்காய் பயிர், அதன் வளர்ச்சி,  தண்ணீரைச் சாரலாகத் தூவும் ஸ்பிளிங்கர்கள் என்று தூள் கிளப்பியிருக்கிறார் பாலகுமாரன்.

பயிரோடு பயிராக நாமும் அந்த ஸ்பிளிங்கர்களில் நனைகிற உணர்வு.

கிருஷ்ண மந்திரத்தில்  தன் மருமகள் தூஷணைகளிலிருந்து அதிர்ஷ்ட வசமாய்   விடுபட்டு வந்த அந்த மாமியார்  தான் வாழ்ந்த வாழ்க்கையில் தனக்கான புதிய அடையாளங்களைக் கண்டதும்,  நிழல் யுத்தத்தில் அந்த மருமகள் லலிதாவின் குணக்கோளாறுகளால் அந்தக் குடும்பமே சீர்கெட்டுப் போனதையும் சொன்ன பாலகுமாரன்,  இரண்டாவது சூரியனில் கவிஞன் கதிரேசனின் அகம்பாவ ஆட்டத்திற்கு இணங்கிப் போய் விடாமல் எழுந்து நின்று வாழ்க்கையின் சோகங்களை எதிர் கொண்ட அவன் மனைவி பானுமதியை படைத்துக் காட்டியதோடு என்னுயிர் நீயல்லவோவில்
ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட இரு மனைவியரும் சகோதரிகளாய் வாழ்க்கையில் ஜெயித்த கதையை விவரித்து எந்த சூழ்நிலையிலும் அலமந்து போய் விடாமல் வாழ்க்கையை   நேர்மையாய் சந்திக்கும் துணிவை பெண்கள் மனசில் விதைக்கிறார்.

பாலகுமாரனைப் படித்தவர்களுக்குத் தெரியும்.  பெண்ணின் இருப்பை அவளின் ஆளுமையை நுணுகி நுணுக்கமாகச் சொன்னவர் அவர்.  பெண்களின் இயல்பான நேர்த்திகள் நேர்பட இருக்கும் பொழுது அவளைச் சுற்றியிருப்போர் அடையும் சந்தோஷத்தையும்  அதுவே கோணலாகிப் போகையில் நேர்கின்ற வேதனைகளையும் படம் பிடித்துக் காட்டியவர் அவர்.  ஆணின் அமைதிக்கோ, பரிவிற்கோ, பரிதவிப்பிற்கோ, பாசத்திற்கோ, மேன்மைக்கோ பெண்களே காரணமாகிப் போகிறார்கள்.  இயக்குபவள்  அவள்;  இயங்குபவன் அவன்.  பெண்டாட்டிக்கேற்ற புருஷனாய்,  அம்மாவிற்கு ஏற்ற மகனாய், அக்கா - தங்கைக்கேற்பவான சகோதரனாய் பெண்களின் கைகளில் அவர்கள் இஷ்டம் போல  விளையாடக்கிடைத்த பொம்மையாகிப் போகிறான் அவனும்.  ஆட்டத்தில் ஈடுபடுவோர் அவனும் அவளுமாக இருப்பினும் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பவள் அவளே.  தன் இஷ்டத்திற்கேற்ப  எப்படி வேண்டுமானாலும் ஆட்டத்தை திசை திருப்பவும், தீட்சண்யப்படுத்தவும் அவளால் முடியும்  என்பதினால் உறவுகளின் ஒட்டலுக்கும் விரிசலுக்கும் இதுவே விளைவாகிப் போவதினால் அவள் ஆடும் முறையில் நேர்மையும் பொறுப்பும் முக்கியமாகிறது.   

பாலகுமாரனின் இந்த நான்கு கதைகளையும் சங்கிலியில் கோர்த்த  மாலையாக்கினால் பெறப்படும் நேர்த்தியான உண்மையும் இதுவேயாகும்.

பாலகுமாரன்:
 
தஞ்சை மாவட்டத்து திருக்காட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழமானேரியில் பிறந்தவர் பாலகுமாரன்.  ஆசிரியையாய் இருந்த தாய் சுலோச்சனா அம்மையார் சிறுவன் பாலகுமாரனின் பொது அறிவு வளர்ச்சியில் பெரிதும் கவனம் கொண்டார்.   எழுதலின் ஆரம்பத் தொடக்கம் கணையாழி,  கசடதபற சிற்றிதழ்களில் இவருக்கு ஆரம்பித்தது.  சாவி, கல்கி போன்ற இதழ்களில் மனதைக் கவர்ந்த கதைகளை எழுதியிருக்கிறார்.

இரும்புக் குதிரைகள்,  மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பச்சை வயல் மனது, தாயுமானவன் போன்ற புதினங்கள் வாசகர்களின் மனதை மயக்கின.  அவரின் எழுத்து நடையும்,  கட்டிப் போட்ட சொல்வளமும், பழமையின் மெருகு கலையாத புதுமைக் கருத்துகளும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மனதைக் கவர்ந்தன.  பிற்காலத்து திருவண்ணாமலை விசிறி சாமியார் யோகி ராம்சுரத் குமாரின் அருகாமை கிடைத்த  யோகத்தில் ஆன்மிக சிந்தனைகளை கொஞ்சம் தூக்கலாக சொல்ல ஆரம்பித்தார்.  எழுத்தாளரின் மன வளர்ச்சியோடு சேர்ந்து அந்த எழுத்தாளருக்கென்று அமைந்து போகிற வாசகர்களுகான வளர்ச்சியும் இதுவேயாம்.

தன்  மனம் சொல்வதை வாசகர்களிடம் மறைக்காது எழுதும் எழுத்தாளர்களில் பாலகுமாரன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார் என்பதே அவரை நினைவு கொள்ளும் போதெல்லாம் நமக்கான அனுபவமாகிறது.

= = = =

44 கருத்துகள்:

துரை செல்வராஜூ சொன்னது…

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..

குறள் நெறி வாழ்க..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்கெங்கும் ..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்க குறள் நெறி.

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்.  வாழ்க வையகம்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம் மா.

அனைவரும் என்றும் நலமுடன் இருக்க இறைவன் பாதுகாப்பு
அருள வேண்டும்.

Geetha Sambasivam சொன்னது…

அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இங்கே இடம் பெற்றிருக்கும் அனைத்து நண்பர்களின் உயரிய செயல்களும் பாராட்டப்படத் தக்கவை. திருமதி சுபாஷிணியின் தன்னம்பிக்கை, வாழ்க்கையை அவர் எதிர்கொண்ட விதம் அனைவருக்கும் ஓர் படிப்பினை.

Geetha Sambasivam சொன்னது…

எல்லாம் நன்றாக இயங்கியும் சோம்பல், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் என்னைப் போன்றோருக்கு சுபாஷிணி நல்லதொரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். கவிதைகள் இரண்டுமே அருமை.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கீதா அக்கா வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான செய்தித்தொகுப்பு. ஒவ்வொரு இல்லத்திலும் சிறிய நூலகம் இருக்கவேண்டியது அவசியம்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

அனைவருக்கும் காலை வணக்கம்.
புத்தக கூடு நல்ல முயற்சி, ஆனால் எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் புத்தகத்தை எடுத்து சென்றவர்கள் திரும்ப வைக்க வேண்டுமே?
வைகை எக்ஸ்பிரஸ் ஒடத்தவங்கிய புதிதில் அதில் நூலகம் இருந்தது. பயணத்தின் பொழுது படித்து விட்டு திருப்பி கொடுத்துவிட வேண்டும். நான் கூட ஒரு முறை சென்னையிலிருந்து திருச்சி வருவதற்குள் வாசந்தியின் நாவல் ஒன்றை படித்து முடித்தேன். அடுத்த முறை கேட்ட பொழுது புத்தகங்களை எடுத்தவர்கள் திருப்பி தராததால் மூடி விட்டோம் என்றார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் மதுரையிலிருந்து திருச்சி வரை புத்தகங்கள் எடுக்கப்படாதாம், மதுரைக்காரர்கள் புத்தகங்கள் படிக்க மாட்டார்களா? என்று குமுதத்தில் அப்போது எழுதியிருந்தார்கள். ஹிஹி

Bhanumathy Venkateswaran சொன்னது…

சைக்கிளில் எல்.இ.டி. டி.வி.யை இணைத்து பாடம் நடத்தும் ஆசிரியர் வாழ்க பல்லாண்டு.

Bhanumathy Venkateswaran சொன்னது…

உதாரண பெண்மணி சுபாஷிணி, பெண்களைப் பற்றி எழுதிய பாலகுமாரன் நாவல்கள்..சபாஷ்!

Bhanumathy Venkateswaran சொன்னது…

சென்ற வாரம் நான் படிச்ச கதையின் இறுதியில் நான் கேட்டிருந்த கேள்விக்கு விடையளித்த துளசிதரன் அவன் மணந்து கொண்டது ரோபோட் என்று கூறி விட்டார்.
கீதா ரங்கன் ட்ரான்ஸ் சென்டர் என்றார்.
நெல்லைத் தமிழன் லெஸ்பியன் மேரேஜ் என்றெல்லாம் சுற்றி சுற்றி வந்தார் ஆனால் பெயர் அருணாசலமாக இருக்கலாம் என்று அதையும் சரியாக கணித்தது கீதா அக்காதான்.
வருடத்தை யாருமே சரியாக கடிக்கவில்லை.
எனிவே பாராட்டுகள் கீதா அக்கா! உங்கள் விலாசம் அனுப்புங்கள், சுஜாதாவின் புத்தகம் அனுப்பி வைக்கிறேன்.

கௌதமன் சொன்னது…

// வருடத்தை யாருமே சரியாக கடிக்கவில்லை.// !! ?? :)))))

Bhanumathy Venkateswaran சொன்னது…

கடிக்கவில்லை என்பது கடிக்கவில்லை என்றாகி விட்டது. மன்னிக்கவும்.

ஏகாந்தன் ! சொன்னது…

...தமிழகத்திலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தினால், கிராமப்புற இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும், என்கிறார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.//

புத்தகக்கூடு, புத்தகக்கூண்டு எல்லாம் தமிழ்நாட்டில் வைப்பது பெரிய விஷயமில்லை. அதனுள்ளே எத்தகைய புத்தகங்கள் வைக்கப்படும் என்பதே கவனிக்கப்படவேண்டியது. அதைவைத்துத்தானே கிராமத்து இளைஞர்களின் ‘அறிவு’ வளர்க்கப்படும் இங்கு ..

ஸ்ரீராம். சொன்னது…

கணிக்கவில்லை!

ஹா...  ஹா...  ஹா...   எத்தனை தரம்தான் கடிப்பீர்கள்!

ஏகாந்தன் ! சொன்னது…

//..’என்னுயிர் நீயல்லவோ’வில்
ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட இரு மனைவியரும் சகோதரிகளாய் வாழ்க்கையில் ஜெயித்த கதையை விவரித்து எந்த சூழ்நிலையிலும் அலமந்து போய் விடாமல் வாழ்க்கையை நேர்மையாய் சந்திக்கும் துணிவை பெண்கள் மனசில் விதைக்கிறார்.//

‘தன்கதை’யைத் தாராளமாகத் தூவிவிட்டு, போகிறபோக்கில் (வாசகியரின்) பாராட்டுக்களைப் பெற்றார் என்றும் சொல்லலாமோ?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர்கள்

Jayakumar Chandrasekaran சொன்னது…

கேரளத்தில் library போன்ற அமைப்புகள் மிகவும் பரவலாக உள்ளன. நல்ல விஷயமும் கூட. ஒரு சில lending லைப்ரரிகளும் கூட உள்ளன. ஆனால் இந்த வாசிப்பு ஊக்குவிப்பில் ஒரு உள்குத்தும் உள்ளது. இடது சாரி கொள்கை சார்பு புத்தகங்கள் எளிதில் மக்களைச் சென்றடைகிறது. அதனால் மெத்தப் படித்தவர்கள் இடது அனுதாபிகள் ஆகிறார்கள் என்பது எனது கருத்து. 

எ பி வாசகர்கள் மங்கையர் மலர் படிப்பதில்லை என்று தோன்றுகிறது. மங்கையர் மலரில் இருந்து மறு  பிரசரிப்பாக ராம் மலரில் பதிவாக வந்து என்னால் சுட்டிக்காட்டப்பட்ட செய்தியே சுபாஷினி செய்தி. கீதா மாமி "அதுதான் எனக்கு தெரியுமே" என்று சொல்லாதது ஆச்சரியம்.
பாலகுமாரன் கதைகள் அருவி போல கொட்டும். அந்த நடையும் நம்மை ஈர்க்கும். ஜீவி ஐயா பாலகுமாரனுடைய நான்கு கதைகளை விமரிசித்திருக்கிறார். இவற்றில் உள்ள பெண்களின் குணாதிசயங்களின் வேற்றுமை ஒற்றுமை ஆகியவற்றை விவரமாக விவரிக்கிறார். கடைசியில் சக்தி இல்லையேல் சிவம் என்பது போல் "இயக்குபவள்  அவள்;  இயங்குபவன் அவன்.  பெண்டாட்டிக்கேற்ற புருஷனாய்,  அம்மாவிற்கு ஏற்ற மகனாய், அக்கா - தங்கைக்கேற்பவான சகோதரனாய் பெண்களின் கைகளில் அவர்கள் இஷ்டம் போல  விளையாடக்கிடைத்த பொம்மையாகிப் போகிறான் அவனும். " என்று முடிக்கிறார். 

அய்யாவின் விமரிசனங்களை ஒரு தடவைக்கு இரு தடவை வாசிக்க வேண்டி இருக்கிறது. அவ்வளவு நுணுக்கமான அலசல். ஒவ்வொரு வரியும் முக்கியம். முக்கியம் அல்லாதது எதுவும் இல்லை. நன்று


Jayakumar

Bhanumathy Venkateswaran சொன்னது…

OMG! இந்த ஆட்டோ ஸ்பெல் செக் படுத்தும் பாடு. கிருத்திகா என்று அடித்தால் உடனே உதயநிதி என்று வருகிறது என்னத்த சொல்ல?கவனிக்காதது என் தவறு. மீண்டும் மன்னிக்கவும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான செய்திகள்...

Jayakumar Chandrasekaran சொன்னது…

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று திருத்திக் கொள்ளவும்.

Jayakumar​​

Geetha Sambasivam சொன்னது…

ஆமாம், நானும் திருச்சி வரை கிடைக்கும் புத்தகங்களை விரைவில் படிப்பதாகத் தேர்ந்தெடுத்துப் படிப்பேன். :) மதுரை வரைக்கும் இரண்டே மணி நேரம் என்பதால் புத்தகங்கள் கிடையாது. அது தான் உண்மையான காரணம்.

Geetha Sambasivam சொன்னது…

வருடம் எனக்குக் கொஞ்சம் தடுமாற்றம். ஆனால் எப்படியும் 2010 அல்லது 2020க்குள் இருக்கணுமோனு நினைச்சேன். சுஜாதாவின் எந்தப் புத்தகம் அனுப்புவீங்க? நேயர் விருப்பம் உண்டா?

Geetha Sambasivam சொன்னது…

அதே! அதே! கிராமப்புற நூலகங்களில் தினசரி எனில் தினத்தந்தி, தினகரன், நாத்திகம் போன்றவையே வைக்கப்பட்டு வந்தன. இப்போ நிலைமை தெரியலை. அவங்களுக்குப் பரந்து பட்ட அறிவு தேவை எனில் நவோதயா பள்ளிகளில் படித்தாலே போதும். கிடைக்கும்.

Geetha Sambasivam சொன்னது…

ஹாஹாஹா ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜிங்சக்க! காலம்பரயே சொல்ல நினைச்சுப் பின்னர் வேண்டாம்னு ஒதுங்கிப் போனேன். :)))))

Geetha Sambasivam சொன்னது…

நான் வாராந்தரி, மாதாந்தரி,மற்றப் புத்தகங்கள் எதுவுமே படிப்பதில்லை. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாகப் படிப்பது இல்லை. விகடன், குமுதம், கல்கி, மங்கையர் மலர் ஆகியவற்றைப் பார்த்தே பல வருடங்கள் ஆகின்றன. இதில் கல்கி ஆன்லைனில் தான் படிக்கலாம்னு என் அண்ணா பெண் சொன்னாள். மங்கையர் மலர் புத்தகம் வருகிறதா என்னன்னே தெரியாது.

நெல்லைத் தமிழன் சொன்னது…

கீசா மேடத்திற்கு, சுஜாதாவின் 'பிரம்ம சூத்திரம்-ஒரு அறிமுகம்' புத்தகத்தை அனுப்புங்க. உள்ளங்கால்ல தேங்காய் எண்ணெய் தடவிக்க வேண்டாம்.

நெல்லைத் தமிழன் சொன்னது…

//இரு மனைவியரும் சகோதரிகளாய் வாழ்க்கையில் ஜெயித்த கதையை // - ஹாஹாஹா இதைவிடப் பெரிய நகைச்சுவையை நான் படித்ததில்லை

Bhanumathy Venkateswaran சொன்னது…

எங்கள் ஊரில் ஒரு கணக்கு பிள்ளை ஐயங்கார் ஒருவர் இருந்தார் அவருக்கு மூன்று மனைவிகள். மூன்று பேரோடும் ஒரே வீட்டில்தான் வசித்தார். முதலிரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் கிடையாது. மூன்றாவது மனைவிக்கு ஒரே ஒரு மகன். அவன் க.பி.ஐயங்காரின் முதல் மனைவியைத் தான் அம்மா என்று கூப்பிடுவான். அடுத்த இரண்டு பேர்களையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவான். அவனுக்கு வேலை கிடைத்து டில்லிக்குச் சென்ற பொழுது முதல் மனைவிதான் அவனோடு சென்றார்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

மஸ்கட்டில் கூட நம் ஊர்க்கார் ஒருவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு பேரோடும் ஒரே வீட்டில் நிம்மதியாக வசித்தார். இங்கும் இரண்டாவது மனைவியின் மகன் முதல் மனைவிக்கு ரொம்ப செல்லம். அவரையும் அம்மா என்றுதான் அழைப்பான்

Geetha Sambasivam சொன்னது…

நெல்லை! குமுதம் "பக்தி"யில் வந்தது தானே! பைன்டிங்கே இருந்தது. தேடிப்பார்க்கணும். அவர் சகோதரரோடு சேர்ந்து எழுதினார்.

கோமதி அரசு சொன்னது…

இந்த வார நல்ல செய்திகள் அனைத்தும் அருமை.



ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய புத்தக அலமாரி வைக்கப்பட்டுள்ளது//

இது போல அட்லாண்டாவில் பூங்காவில் வைத்து இருக்கிறார்கள். நாமும் புத்தகம் கொண்டு வந்து வைக்கலாம்.




ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் சேவை மிக அற்புதமானது, அவருக்கு மனநிறைவு என்கிறார், நமக்கும் இந்த செய்தியை படித்தவுடன் மகிழ்ச்சியால் மனநிறைவு கிடைக்கிறது. ஏழைபிள்ளைகளின் பெற்றோர்கள் வாழ்த்து அவரை இன்னும் ஊக்கமுடன் செயல்புரிய உதவும் வாழ்க வளமுடன்.

கோமதி அரசு சொன்னது…

சுபாஷிணி அவர்கள் கவிதைகள் மிக அருமை. அவரின் வாழ்க்கை சிறந்த வழிகாட்டியாக அமையும். போற்றி வணங்கி வாழ்த்தவேண்டும், வாழ்க வளமுடன்

கோமதி அரசு சொன்னது…

ஜீவி சார் பகிர்ந்த கிருஷ்ண மந்திரம் கதை படித்து இருக்கிறேன்.
நன்றாக சொல்லி இருக்கிறார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கர்ர்ர்ர்ர்ர்ர்ர் பானுக்கா நான் இங்கு உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். எபி அவையில்!!!!! தருமி ஸ்டைலில் சொல்லப் போகிறேன். நான் பாதி விடை சொல்லியிருந்தேன் என்ன? பெயர் மட்டும் சொல்லவில்லை. அருண்? என்று இருக்குமோ என்று எழுத நினைத்து அப்புறம் கீதாக்கா அருணாச்சலம் என்று சொல்லியிருந்ததால் நான் சொல்லாமல் சென்றுவிட்டேன்.ஹிஹிஹி

அதனால் அவையோர்க்கும் பானுக்காவிற்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்....பாதி பறைஞ்சதுக்கு கொஞ்சம் குறைத்துக் கொண்டு பரிசு தருமாரு ஹிஹிஹி...அந்த புக் ல முக்கால் அக்காவுக்கு கால் எனக்கு!!!!!!!!! ஹாஹாஹா...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதல் செய்தி மிக மிக நல்ல செய்தி. தமிழகத்திலும் வந்தால் மிகவும் நல்லது.

சீர்காழி ஆசிரியர் சு சீனிவாசன் அவர்களின் சேவை மகத்தான சேவை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

சுபா பிரமிப்பு!! நல்ல உதாரணம் எல்லோருக்குமே.

அவரது கவிதைகள் அருமை! ஜேகே அண்ணாவுக்கும் நன்றி.

கீதா

Bhanumathy Venkateswaran சொன்னது…

நான் சென்னையில் இருந்தவரை ம.மலர் தவறாமல் வாசித்தேன். பெங்களூர் வந்த பிறகு அது தடை பட்டது. இப்போது நெட்டில்தான் வாசிக்க முடியும். எனக்கென்னவோ புத்தகங்களை ஆன்லைனில் படிக்க அவ்வளவாக பிடிக்கவில்லை.

Bhanumathy Venkateswaran சொன்னது…

சுஜாதாவின் கதை முடிவு உங்கள் யூகத்தோடு ஒத்துப் போனதா கோமதி அக்கா?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கேரளத்தில் கொட்டாரக்கரை அருகில் ஒரு 4, 5 கிலோமீட்டர் தூரத்தில் பெரும்குளம் எனும் கிராமம் புஸ்தககிராமம் அங்கு மக்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் புத்தகம் எடுத்துச் சென்று படித்துவிட்டுக் கொடுக்கலாம். கிராமம் முழுவதும் புஸ்தகப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. முதல் புஸ்தக கிராமம்.
புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகைஹ்யில் நூலகங்கள் பரவலாக கேரளத்தில் இருக்கிறதுதான்.

சுபாஷிணி அவர்களைப் பற்றி அறியும் போது அதுவும் பார்வை இருந்து இடையில் போனதால் அதன் வலி அதை வென்ற அவரது தன்னம்பிக்கை, பிரச்சனைகளை யோசித்து முடிவு என்று நல்ல உதாரணம்.

தன் சொந்த செலவில் மூன்று சக்கர சைக்கிள் எல் இ டி திரை அமைத்த்து, பள்ளி மாணவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று கல்வி புகட்டுகிறார். //

ஆசிரியர் ஸ்‌ரீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு நல்ல உதாரணம். ஒரு ஆசிரியனாக அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஜீவி சாரின் விமர்சனம் நுணுக்கமாக உள்ளது.

துளசிதரன்

Geetha Sambasivam சொன்னது…

பானுமதி அனுப்பி வைத்த சுஜாதாவின் "ப்ரியா" புத்தகம் இப்போத்தான் கொஞ்ச நேரம் முன்னால் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி பானுமதிக்கும், எங்கள் ப்ளாகிற்கும். மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.