வியாழன், 14 அக்டோபர், 2021

பாதி சுண்டல் சாப்பிட்டு நான் படமெடுத்து வந்தேன்!


மாலை மயங்கும் வேளையில் கொலுவுக்கு கிளம்பினோம்.  'மாலை மயங்கினால்' என்று பேஸ்புக்கில் இந்தப் படத்தை வெளியிட்டேன்.  இதைவிட பொருத்தமான பாடலை ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் கமெண்ட்டில் போட்டார்  "பொன்னந்தி மாலைப்பொழுது..."



முத்தான முதல் கொலு!

இந்த விளக்கு செட் போல பாஸுக்கு வேண்டுமாம்.  வாங்கச்சொல்லி ஆர்டர்! யோசனையுடன் அடுத்த பொம்மைக்கு நகர்ந்தபோது...

"உஷ்...   எதிர்த்துப் பேசாதே...  வாங்கி கொடுத்துடு..."


"குகனொடு ஐவரானோம்"


பச்சை நிறத்தில் காட்சியளித்து வளங்களை வாரி வழங்குகிறார் வாஸ்து பகவான்...


"உஷார் குபேரா...   ராவணன் வருகிறான்..."

பத்திரம் பெண்ணே..  பாத்திரம் விழுந்து விடாமல்...  உன்னைவிட உயரமான பாத்திரத்தில் என்ன கொண்டுபோகிறாய்? எண்ணெயா? பொன்னையா?


திருவிளக்கில் கொலுவேறிய திருமகள்.. 


கண்ணனா?  கந்தனா? கருமாரியா? அம்பிகையா? ஸ்ரீதேவியா?  யார் வந்து கொண்டிருக்கிறார்கள்?


"ஏம்மா பார்வதி... முருகன் வந்து சொன்னதும் பதறிட்டேன்... என்னம்மா ஆச்சு? மச்சான் சுருண்டு உன் மடில படுத்துட்டார்?"
"என்னண்ணா தெரியாத மாதிரியே கேட்கறீங்க... அமுதம் கிடைக்குதுன்னதும் இவரைக் கூப்பிடாமலேயே ரேஷன் கடைல இலவச பொருள் வாங்கறா மாதிரி எல்லோரும் நைஸா பாற்கடலைக் கடைய போயிட்டிங்க... முறுக்கின முறுக்குல வாசுகியோட விஷமும், பாற்கடல்ல மேல இருந்த விஷமும் சேர்ந்து ஆலஹால விஷமாய் திரண்டு வந்து பயமுறுத்தினதும் மட்டும் உங்க எல்லோருக்கும் இவர் ஞாபகம் வந்துடுச்சு... எல்லோரும் "பரமேஸ்வரா..." ன்னதும் இவரும் ஓடிவந்து அதை எடுத்து லபக்குன்னு முழுங்கிட்டார்.. ஏதோ நான் ஓடிவந்து விஷம் உள்ளே போகாம அவர் கழுத்துலயே அதை நிறுத்தினேன்... ஆனாலும் பாருங்க சுருண்டு படுத்துட்டார்... விநாயகன் பாருங்க கவலையா பக்கத்துலயே உட்கார்ந்திருக்கான்... நீலகண்டம்... நீலகண்டம்..."



"என்ன ஓய்.. இப்போ மடில படுத்து செல்லம் கொஞ்சியாறது...?"

"இல்லை ஆண்டாள்..   இப்போதான் பரமேஸ்வரனைப் பார்த்துட்டு வந்தேன்..   ஆனந்தமா பார்வதி மடில படுத்து ரெஸ்ட் எடுத்துண்டு இருந்தானா...  அதான் எனக்கும்...!"


குக்கே முருகனாம்..   கன்னட தேசத்தில் தமிழ்க்கடவுள்.  பொக்கே கொடுத்து வரவேற்போம்!


இனிமையான இரண்டாம் கொலு 


செல்லப்பிள்ளை
பார்த்தாள், பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டாள்
பாய்ந்தெடுத்தாள், பதுக்கிக் கொண்டாள் பரந்தாமனை
டில்லிவரை கொண்டு சென்றாள் அந்த ராஜாமகள்
பள்ளியறையில் தானவரைப் பதுக்கி வைத்தாள்.
பதறி, பரந்தாமனைத் தேடி, பலகாதம் சென்றார் இவர்
'இங்கில்லை, யாம் எடுக்கவில்லை' பொய்யுரைத் ததரச சபை
எத்தர் சபையில் ஏக்கத்துடன் பித்தராய் நின்றார் ராமானுஜர்
தானாய் வந்து அவர் மடியில் அமர்ந்தார் "செல்லப்பிள்ளை".
தாங்கவில்லை மன்னன் மகள் தந்த அன்புத்தொல்லை
கண்களில் பொங்கியது வெள்ளம் ; மகிழ்ந்தது ஆனந்தத்தில் உள்ளம்
ஊர்வலமாய் ரங்கனைத்தான் மடியிலிருத்தி ஊருக்கே அழைத்து வந்தார்
கோபுரமாய் பக்தர் நெஞ்சில் என்றென்றும் உயர்ந்து நின்றார்.



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா....


ஆதிசேஷக் குடையின் கீழ் அன்னையவள் வீற்றிருக்க...

பாதி சுண்டல் சாப்பிட்டு நான் படமெடுத்து வந்தேன்!


"கணையாழியை அடகு வைத்து கடல் கடந்தேன்.  எம்பிரானிடம் சொல்லி விடாதீர்கள் மாதா..  நம்புங்கள்..  நான் ராம தூதன்தான்.  செல்லும் வழியில் சேட்டு கடையிலிருந்து அதை மீட்டு விடுகிறேன்"


பிரம்மோற்சவம் 


வைகை நீராட, வானோர் பூத்தூவ வளம் சேர்த்து நானிலம் காக்க வருகிறார் கள்ளழகர்... 


காசினியே தூங்கிவிடும் என்று கண்ணனவன் தூங்காமல் விழித்திருக்கிறான் போலும்.. துயிலெழுப்பத் தேவையில்லை, தூளியை ஆட்டி விடுங்கள் யாரேனும்...


"ணா...   இந்தப் பக்கமா போனா குருக்ஷேத்ரத்துக்கு போகலாமா?  வழி மாறி வந்து விட்டோம்!"


மெகா சைஸ் வெற்றிலை!  சுண்ணாம்பு, பாக்குக்கு பதில் இட்லியே சாப்பிடலாம் போல...!


சமரில் சண்டை போடாமல் கமரில் கைவைத்து என்ன போஸ் கும்பகர்ணா?! 


"அர்ஜுனா...   இந்த வியாழனில் கொலு படங்களே அதிகம் ஆனதால் வேறு எந்த போர்ஷனும் இடம்பெறவில்லை என்று அறிந்து கொள்வாயாக..."

64 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
    இனிய சரஸ்வதி பூஜை, துர்க்காஷ்டமி, விஜயதசமி வாழ்த்துகள்.
    காணும் தெய்வங்கள் கடுகி வந்து காக்க வேண்டும் அனைவரையும்.

    பதிலளிநீக்கு
  2. முதல் கொலுவிலிருந்து கடைசி கொலு வரை
    படங்கள் அனைத்தும் இனிமை.

    படங்கள் சுவை என்றால் கூடவே வரும் கவிதைகளும்
    அதி அற்புதம் மா. ஏற்கனவே கவி கொட்டும்.
    தெய்வ உருவங்களை அருகில் கண்டதும்
    மனமும் புத்தியும் நிறைந்து வார்த்தைகளாக
    வருகின்றன. அதுதான் அருமை மா.

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.  சில வாசகங்களுக்கு பேஸ்புக்கில் சத்யா முரளி என்பவர் வருத்தப் பட்டிருந்தார்.

      நீக்கு
    2. 😥😣😣😣😣 Why ma. நல்லா தானே மா இருக்கு. போய்ப் பார்க்கிறேன். சில அசட்டுத்தனங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. வருத்தம் வேண்டாம்.

      நீக்கு
  3. வியாழனை ஞாயிறாக்கத் தெரிந்துகொண்டீர்கள்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாழனை திங்கள் ஆக்கி இருக்கிறோம்...  செவ்வாய் ஆக்கி இருக்கிறோம்...  சில சமயம் ஞாயிறாகவும் ஆக்கி இருக்கிறோம்..   வாங்க நெல்லை...!

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இனிய காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும்
    அருள்நிறை சரஸ்வதி பூஜை
    நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துக்கள்! அன்னையின் அருளால் எ.பி. ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரோடி இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. படங்களும், வாசகங்களும் சிறப்பு! ஒரு படம் மட்டும் பக்கவாட்டில் இருப்பதால் சரியாக பார்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்கள் திருப்தியே எங்கள் திருப்தி - நீங்கள் குறிப்பிட்ட படத்தை, திருப்பிவிட்டேன்.

      நீக்கு
  9. தலைப்பில் இருக்கும் சுண்டலை படங்களில் காண முடியவில்லையே..?

    பதிலளிநீக்கு
  10. கொலு தரிசனம் மகிழ்ச்சி...
    நெஞ்சுக்கு நிறைவாக இருக்கின்றது..

    இப்படியான கொலு அலங்காரங்களைக் கண்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன...

    பதிலளிநீக்கு
  11. கொலு பதுமைகளை வடிவமைத்த கலைஞர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்து - இல்லங்களில் அலங்கரித்து மகிழும் அடியார்களுக்கும் நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் காலை பார்க்கலாம். அன்பு வாழ்த்துகள்
    அனைவருக்கும்.வெற்றி நம்முடன் இருக்க விஜய லக்ஷ்மி அருள் புரிவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடலுடன் பாடலைக் கேட்டு ஆடிய எல் விஜயலக்ஷ்மியா ? மீண்டும் வருக.

      நீக்கு
    2. எல் விஜயலக்ஷ்மியை மறக்கறது ரொம்பக் கஷ்டமா இருக்குல்ல!

      நீக்கு
    3. :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      நீக்கு
    4. எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். இங்கே தான் இருக்கிறார் என்று கேள்வி.

      நீக்கு
    5. ஆமாம், சித்ராலயா "கோபு"வின் பிறந்த நாளைக்கு நடந்த விழாவில் ஆன்லைன் மூலம் பங்கேற்று அவர் பேசியதைக் காலச்சக்கரம் நரசிம்மா பகிர்ந்திருந்தார். இப்போது அடையாளமே தெரியலை. :)

      நீக்கு
  13. படங்கள் அழகாக இருக்கிறது வார்த்தைகளும் பொருத்தம்.

    சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. நவராத்திரி கொலு படங்கள் அருமை.
    உங்கள் கவிதையும் மிக அருமை.
    ஒவ்வொரு கொலு படங்களுக்கும் நீங்கள் கொடுத்து இருக்கும் வாசகம் நன்றாக இருக்கிறது. குமபகோணம் வெற்றிலையும் மிக பெரிதாக இருக்கும்

    கள்ளழகர் செட் நன்றாக இருக்கிறது, மதுரையை, திருவிழாவை நினைக்க வைத்தார்.

    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா..  எனக்கும் மதுரை ஞாபகங்கள் வந்தன.

      நீக்கு
  16. விஜயதசமி நாளில் கொலுக் காட்சிகள் மனதையும் கண்ணையும் நிறைத்து நிற்கின்றன.

    அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள் அன்னை அருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் தாமதமான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் சுபிக்ஷம் பெருகி மன அமைதி நிலைத்து நின்றிடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  18. இவற்றில் சிலவற்றை முகநூலிலும் பார்த்தேன், ரசித்தேன். கொலுப் படங்களும், விதம் விதமான பொம்மைகளும் அதிசயிக்க வைத்தன. இப்போதைய நாட்களிலும் நேரம் எடுத்துக்கொண்டு இத்தனை விஸ்தாரமாகக் கொலு வைப்பவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை சென்னையில் கொலு கலக்கி விட்டார்கள் அனைவரும்!

      நீக்கு
  19. பொம்மைகளுக்குக் கொடுத்திருக்கும் விவரணைகள் ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! ஶ்ரீராமைப் பத்து நாட்களாய்க் காணோமேனு நினைச்சேன். சுண்டல் கலெக்‌ஷனில் பிசி!

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் படங்கள் அருமை என்றால் அதுக்கான உங்க விவரிப்பு இருக்கு பாருங்க!!! ஹையோ செமைய சிரிச்சுட்டேன் சிலதுக்கு...அசாத்திய கற்பனை...நானும் மகனும் பேசிக் கொள்ளும் போது இப்படித்தான் பலதும் பேசுவோம்...குறிப்பாகக் "ஏம்மா பார்வதி....பதறிவிட்டேன்....அதுலருந்து அடுத்தாப்ல வருவது போன்று..." செல்லமாகக் கலாய்த்து ரசித்துப் பேசியதுண்டு.

    உங்கள் விவரிப்பை மிக மிக ரசித்தேன் ஆனால் பாருங்க நேத்து இந்த் ப்ளாகர் ரொம்பப் படுத்திருச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. குக்கே முருகன் இங்கு ஃபேமஸ். அங்கு நடக்கும் நிகழ்வு ஒன்றைப் பற்றி துளசி ஒரு பதிவும் போட்டிருந்தார்.

    நம்மூரில் இப்பவும் அப்படி நடக்கிறதே என்று கொஞ்சம் வேதனையாக இருக்கும்..

    செல்லப்பிள்ளையை ரொம்ப ரசித்தேன்...அதான் உங்கள் விவரிப்பில் கதையை!!! பல விவரிப்புகள் நான் என் மகனுக்குக் கதை சொன்னது போல பழைய நினைவுகள்...அவனுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டுமே என்று அப்படி...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் உங்களுக்கு முதல் வேலை என்ன தெரியுமா? அந்தக் குட்டிப் பையன் சொல்றார் பாருங்க ஷ்...வாய்மூடி உங்க பாஸுக்கு அவங்க கேட்ட செட் வாங்கிக் கொடுத்துருங்க!! ஹாஹாஹா

    ஆட்டுவித்தால் ....நல்ல கேப்ஷன்...

    அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கொலு படங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக நன்றாக இருக்கின்றன.

    படங்களோடு அதற்கான உங்கள் கமென்ட்ஸ், சில பொம்மைகளைக் க்ளோசப்பில் காட்டிச் சொல்லியது ரசனைமிக்க விவரணம். உங்கள் விவரணத்தை அவர்களுக்குக் கொடுத்து ஒரு அட்டையில் எழுதி கொலுவில் வைத்தால் வருபவர்களுக்கும் இன்னும் சுவாரசியமாக இருக்கும் குறிப்பாக இளையவர்களுக்கும், இளைமையாக இருக்கும் முதியவர்களுக்கும், என்று தோன்றுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  நல்ல யோசனை..  ஆனால் நம்மை யார் கேட்பார்கள்?  கொனஷ்டையா எழுதி இருக்கான் என்பார்கள்!

      நன்றி துளசி ஜி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!