வியாழன், 28 அக்டோபர், 2021

சில நேரங்களில் சில மனிதர்கள்...

 எப்பவுமே இப்படித்தானா?  எல்லோரிடமுமே இப்படித்தானா? எல்லோருக்கும் இதுமாதிரி அனுபவங்கள் இருக்குமா?

அடுத்தவர் பேச்சில் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பவர்களை என்ன சொல்வது?  விட்டு விலகவும் முடியாது. 

நேரில் பார்த்துப் பேசும்போதும், ஃபோன் வந்தாலும் நாம் அதை ஆர்வமாக எடுத்துப் பேசும் வகையில் இருக்கவேண்டும்.  அடிக்கடி பார்க்க முடியாதே..   ஃபோன்தான் பெரும்பாலும் வரும்.  ஐயோ...  வந்துடுச்சே..  என்ன ஆகுமோ என்று எண்ண வைக்கும் அழைப்புகளில் ஒன்றைப் பற்றி சொல்கிறேன்.

சாதாரணமாகவோ, இயல்பாகவோ இரண்டு நிமிடம் கூட பேச முடியாத நண்பர் ஒருவர் இருக்கிறார்.  அவர் பேசுவதை கேள்வி கேட்காமல் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.  நடுவில் ஏதாவது பேசி விட்டால் போச்சு..  அல்லது அவர் சொல்வதை மறுத்துச் சொல்லி விட்டால் போச்சு.  அதற்கு 'நம் அறிவை' வசைபாடி, கூடக்கூட நீண்ட விளக்கங்கள் வரும்.  அந்த விளக்கங்களிலும் நமக்கு மறுப்பு இருக்கும்.  ஒன்றும் செய்ய முடியாது.  நண்பர் சற்றே வயதில் மூத்தவர் என்பதால் அதட்டவும் முடியாது.

அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்ட வசமாகவோ நான் கடக ராசி கடக லக்னம்.  அதற்கு எனக்கு கிடைத்திருக்கும் பட்டம், பக்கா கிரிமினல்!  முதலில் விளையாட்டாய்த்தான் ஆரம்பித்தது இந்த வசவு.  அப்புறம் வழக்கமாகிப் போனது. பல வருடங்களாய் நான் புன்னகை காட்டியே கடக்கும் வசனம் இது. 

சரி, பதில் சொன்னால்தானே ஆபத்து, சும்மா கேட்டுக்கொண்டிருப்போம் என்று 'உம்' கொட்டிக் கொண்டிருந்தால் அதுவும் குற்றம்.  அவரை இன்சல்ட் செய்கிறேன் என்று குற்றம் சுமத்தப்படுவேன்.

அவருக்குப் பிடித்த சப்ஜெக்டில்தான் பேசவேண்டும்.  நமக்கு சுவாரஸ்யமான விஷயங்களை காது கொடுத்துக் கேட்க மாட்டார்.  அது நீ வேறு யாரிடமாவது பேசிக்கொள் என்பார்.  அவருக்குப் பிடித்த சப்ஜெக்ட்டோ எனக்கு ஒத்துவராது.  ஆனால், மாற்று கருத்தை  அங்கு எடுத்துச் சொல்லவும் முடியாது.  நரகம்.

சில விஷயங்களில் விஷயஞானம் உள்ளவராய் இருக்கிறாரே என்று ஏதாவது சந்தேகம் கேட்டுவிட்டால் போச்சு..  அவர் சொல்வதை அப்படியே கேட்டு அப்படியே நடக்க வேண்டும்.  சாத்தியமிருக்கிறதோ, இல்லையோ, அது நம் சூழ்நிலைக்கு, பணவசதிக்கு ஒத்துவருகிறதோ இல்லையோ...  அப்படி நடக்காவிட்டால் அவரை அவமானப்படுத்தி விட்டேன், அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு..  நாங்களிருவரும் பேசுவது அவர் குடும்பத்தார் எல்லோருக்கும் எப்படிப் போகிறது என்பதும் புரியாத புதிர்.  கேட்கவும் முடியாது.  இன்னும் கொஞ்சம் வசவும், ஒரு லெக்சரையும் கேட்கவேண்டி வரும்.

நண்பர்களை அவர்கள் குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள்.  நானும் முடிந்த வரை அப்படிதான் இருக்கிறேன்.  சிலரால் அது முடிவதில்லை.

===============================================================================================================

படித்த புத்தகத்திலிருந்து சில பகிர்வுகள்..   சுவாரஸ்யமாய் நினைத்தீர்களானால் இதிலிருந்தே அவ்வப்போது படிக்கும் சில பகுதிகளைத் தொடர்வேன். ..  இது 1924 ல் எழுதப்பட்ட புத்தகம்.


.........................  பிற்காலத்தில் குமரியாற்றுக்குத் தெற்கிருந்த நாடனைத்தையும் கடல்கொண்டது.  அந்நாட்டை தமிழ்நாடென்று சிலரும், அன்றென்று சிலரும் கூறுவர்.  அந்நாடிருந்த இடம் இப்பொழுது கடலாயிருத்தலின் அவ்விருவகையார் கூற்றும் எவ்வாறாயினும் ஆகுக என்று விடலாயின.  மேலைக் கடற்கரையைச் சார்ந்த வேண், கூட்டம், குடம், பூழி என்னும் நாடுகளும் கற்கா, சீதம் என்னும் நாடுகளும் தமிழ் வழக்கு ஒழிந்தன.  இவற்றுள், தெற்கண் உள்ளவற்றை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மலையாளம் என்னும் புதுமொழி கவர்ந்து கொண்டது.  அம் மொழிக்கு எழுத்துக் கற்பித்தவர் எழுத்தச்சன் என்பார்.  அவர் வம்சத்தினர் இன்றும் அப்பெயராலழைக்கப்படுகின்றனர்.  மணிமேகலை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, ஆதியுலா முதலிய நூல்கள்  பிறந்த நாட்டில் தமிழ் வழக்கு இங்ஙனம் நின்றது;  வடக்கண் உள்ள மாநிலங்களைக் கன்னடமொழி கவர்ந்துகொண்டது.  தமிழ்நாட்டின் வட எல்லைக் சார்ந்த பிரதேசத்தில் வடுகு மொழி பரவியது.  அப்பிரதேசத்திலுள்ள வேங்கடம், காளத்தி முதலிய இடங்களில் அரசாங்க நடவடிக்கை உள்ளிட்டு வடுகில் நடைபெறுகின்றன.  குணகடற்கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டினம் முதலிய பல இடங்களைக் கடல் விழுங்கியது.  இவ்வாறு எல்லாத் திசைகளிலும் தமிழ்நாட்டைப் பிற மொழிகளும், கடலும் கவர்ந்தன.  இவற்றால் பிறமொழிகள் அகன்று பரவவும், தமிழ்நாடு அளவிற்குன்றவும் நேர்ந்தன.

தமிழர் இந்நாட்டிற் குடியேறினவரா?  :-  சரித்திர ஆராய்ச்சிக்காரரிற் சிலர் "தமிழர் இமயமலைக்கு வடபக்கத்துள்ள நாட்டிலிருந்து வங்கநாடு வந்து தங்கி, அங்கிருந்து இந்நாட்டிற்கு வந்தனர்" என்பர்.  சிலர், 'குமரிக்குத் தெற்கே பல்லூழிக்காலங்களுக்குமுன் லெமூரியா கண்டம் என்பதோர் அதிக விசாலமுள்ள நிலப்பரப்பிருந்தது; அதிலிருந்து வந்தனர்' என்பார்.  இவ்வாறு குடியேறிய தமிழர், தாம் வருவதற்கு முன்னமே இந்நாட்டில் இருந்த சிலரை காடு, மலைகளுக்குத் துரத்தினர்; சிலரை அடிமையாக்கினர்' என்பது அவர் கொள்கை.  அக்கூற்றை நம்பினோர் இந்நாட்டில் உளர் என்பதற்கு ஆதிதிராவிட சங்கங்கள் மூலைதோறும் கிளம்புவதே சான்றாம்.  தமிழர்  இந்நாட்டிற் குடியேறினர் என்பார் கதைகளுக்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள், அவர்களது மனோவியாபாரத்தாற் கற்பிக்கப்பட்டவை என்பது  நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்குத் தெள்ளிதின் விளங்கும்.  சில ஐரோப்பியர் தங்கள் நாட்டு அனுபவத்தை கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் இக்காலத்து இருக்கும் மக்கள் வேறு நாட்டிலிருந்து குடியேறியவர்கள் என்பது உண்டு.  அவர் கொள்கையை பின்பற்றியோர் கூற்றேயாம் இஃதென்பதற்கு ஐயமென்னை?".   அவர் கூற்றுண்மையாயின் 'தமிழர் இந்நாடு வருவதற்குமுன் இந்நாட்டிலிருந்த மக்கள் எந்நாட்டிலிருந்து இந்நாடு போந்தனர்?; அவர் வருவதற்கு முன் இந்நாட்டிலிருந்தோர் எந்நாட்டினின்று இந்நாடு வந்தனர்?" என்பன போன்ற சக்கைகள் உண்டாகி அநவஸ்தா தோஷம் வரும்.  மேலும், தமிழர் வருவதற்குமுன் இந்நாட்டிலிருந்தோர்க்கு மதம், பாஷை, ஒழுகலாறு முதலியன தனியே இருந்திருக்க வேண்டுமே...  அவற்றின் அடையாளங்கள் எங்காவது காணப்படுகின்றவா?  இக்காலத்து வழங்கும்மொழி அவர்களுடையவெனவென்றால் தமிழர் மதம், பாஷை முதலியன எவ்வாறாயின?  தமிழ்நாடெங்கணும் பல்லூழிக்காலங்களாய் தமிழ்மொழி ஒன்றுதானே வழங்கி வந்திருப்பதாக அறியப்படுகிறது?   மலை, நாடு, யாறு, ஊர்...  முதலியவற்றிற்கு தமிழ்ப்பெயர் மட்டுமே காணப்படுகின்றன.   பின்வந்த ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களைத்தவிர, பெயர், கொள்கை, பழக்கம், ஒழுக்கம் முதலியன ஒன்றாகவே உள்ளன.  மக்களுள் உயர்வு, தாழ்வு ஏற்பட்டு பல பிரிவுகள் காணப்படுகின்றனவே எனில், எந்நாட்டில் அவை இல்லை என்ற வினா விடையாக எழுகின்றது.  ஒரு நாட்டில் ஒரு ஜாதியார் இருப்பினும் பிரிவுகள் ஏற்பட்டு வேற்றுமைகள் காணப்படுவது இயல்பே...  இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த வேற்றுமைகள் இல்லையா?  அந்நாட்டிலுள்ள பிரபுக்கள், சுரங்கவேலை, தோட்டிவேலை முதலியவேலை செய்பவரோடு கொள்ளலும் கொடுத்தலும் செய்கிறார்களா?  அல்லது அவர்களோடு சமமாகவேனும் உணவருந்துகிறார்களா?  ஒரு நாட்டில் ஒருவகை வேறுபாடிருந்தால் மற்றொரு நாட்டில் மற்றொருவகை வேறுபாடிருக்கிறது.  எவ்வித வேறுபாடுகளும் இல்லாத நாடு உலகத்தில் இனி உண்டாகவேண்டும்.  ஒவ்வொரு நாட்டிலும் உயர்ந்தவும், தாழ்ந்தவுமான பல காரியங்களும் நடந்தேறினாலன்றி நாட்டின் பொதுக்காரியங்கள் நடைபெறாவே.  முதலில் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதும், நாளடைவில் அது செய்வோரது பரம்பரை வழக்கில் வருவதும் சரித்திர ஆராய்ச்சி செய்வோர் அறிந்தனவே.  

தமிழ்நாட்டில் உள்ளனவும் இவ்வாறு வந்தனவே.  இதனால் இவ்வாறே வேறுபாடுகள் இருத்தல் வேண்டும் என்று சொல்வதாக நினைத்தல் கூடாது.  இப்போதுள்ள வேறுபாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதை விளக்குவதற்காகவே இது கூறப்பட்டது.  குமரி முதல் இமயம் வரையிலுள்ள நாட்டில் ஓரிடத்திலுள்ளதற்கும் மற்றோரிடத்திலுள்ளதற்கும் பேதம் அதிகம்.  ஓரிடத்தில் ஒரு காலத்தில் பார்க்கப்பட்டிருக்கும் வேறுபாட்டிற்கும் மற்றொரு காலத்திற் பார்க்கப்படும் வேறுபாட்டிற்கும் பேதம் அதிகம்.  நிற்க, சிலர் 'மக்களை அடிமையாகக்கொண்டு பண்டங்களை விற்பது மேற்சொன்னதில் அடங்காது' என வாதித்து நான் சொன்னதை மறுப்பர்.  எனினும், அரிச்சந்திரன் பெண்டு பிள்ளைகளை விற்றதற்கு அவர் என்ன சொல்லுவார்?  அவர்கள் வேறு ஜாதியனராயிருந்து அவனுக்கு அடிமைப்பட்டவர்களா?  அஃது இந்நாட்டு வழக்கத்தைக் காட்டும்.  தமிழர் இந்நாட்டிற் குடியேறினவர் என்பார் தம் கூற்றுக்குத் தக்க ஆதாரங்களைக் காட்டும் வரையில் தமிழர் இந்நாட்டினரே என்றும், தமிழர்களுக்குள் இப்போது வேற்றுமை காணப்பட்டாலும் ஆதியில் அவர் ஒரு கூட்டத்தவரே என்றுங்கொள்வோம்......

- தமிழர் வரலாறு - ஸ்ரீனிவாசப்பிள்ளை -

====================================================================================================

பொக்கிஷம் :

விந்தனின் குட்டிக்கதை ஒன்று!


அடடே..  அப்போ இது நல்ல ஐடியாதான்..  ஆனா இப்போ செல்லுபடியாகாது...

ஜுரத்துக்கே ஆஸ்ப்ரோ சாப்பிட்ட அந்தக்காலம் அது.. அது.. அது...


படிக்க முடியவில்லை என்றால் தனியே க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்!


அடுத்த வாரம் முதல் புத்தகம் வாங்க மறக்காதீங்க.....


அட ராமா...   என்ன ஒரு தந்திரம்!

எப்படியோ கச்சேரி களைகட்டிடுச்சு!

121 கருத்துகள்:

  1. பெரும்பாலும் ஆலோசனை கேட்டால், அப்படியே அவர்கள் ஃபாலோ பண்ண வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்புதான்.
    அது பெரிய குற்றமல்ல.

    ஆனால், நான் சொன்னதைக் கேட்காத்தால் தோல்வி, என்னாலத்தான் வெற்றி என்பதைத்தான் கேட்டுக்கொள்வது கடினம். அதனால அந்தமாதிரி ஆட்கள்ட ஆலோசனை கேட்கப்படாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு பக்கம். இல்லாத சில வழக்கங்களை புதிதாய் பின்பற்றச் சொல்லி யோசனை எல்லாம் சொல்லி, செய்யாவிட்டால் திட்டி..

      நீக்கு
  2. தொடர்கதை எழுத்தாளர்களின் காலம் 78-80களின் பொற்காலம். இப்போது அவ்வளவு வரவேற்பு கிடையாதுன்னு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கும் முன்னரே தொடர்கள் அருமையாக வந்து கொண்டிருந்தன. ஆனந்த விகடன், கல்கி போன்ற இரண்டும் போட்டியாக மாறியதில் இருந்தே வாசகர்களுக்கு நல்லதொரு விருந்து கிட்டியது. போதாததுக்குக் குமுதமும் நாற்பதுகளில் சேர்ந்து கொண்டது.

      நீக்கு
    2. தியாகபூமி, சிவகாமியின் சபதம் காலங்கள் எல்லாம் தொடர்கதைக் காலம்தானே.. அப்போதெல்லாம் காய் விட்டால் பேசுபொருள், பொழுதுபோக்கு வேறு ஏது?

      நீக்கு
    3. உண்மைதான். ஆனால் 78கள்லதான் ஏகப்பட்ட பத்திரிகைகள் ஏகப்பட்ட எழுத்தாளர்களின் தொடர்கதைகள் (ப்ளஸ் ஜெ ஓவியம்) என்று சக்கைப்போடு போட்டது. ஹிஹி

      நீக்கு
    4. //தொடர்கதைகள் (ப்ளஸ் ஜெ ஓவியம்)//

      :>))

      நீக்கு
  3. தமிழர்கள் என்ற ஆராய்ச்சியில் பெரும்பாலும் அர்த்தம் கிடையாது. கூழடி போன்ற இடங்களை காசு செலவழித்துத் தோண்டி, இது சட்டி, இது வீட்டின் முற்றம் என்று பெருமை பேசுவதும் நகைச்சுவையாகத்தான் நான் பார்க்கிறேன். இருக்கும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பொக்கிஷத்தைக் காப்பாற்றத் துப்பு இல்லாமல் மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தோணும்.

    பாருங்க.. கடவுள் போட்டோ லேமினேட் செஞ்சு தொங்கவிட்டிருக்கலை. அதனால அப்போது மதமே கிடையாது என்ற புதுக் கண்டுபிடிப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொக்கிஷத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது சரியே! ஆனால் அதுக்காகத் தொல் பொருள் ஆய்வே வேண்டாம் என்றால் எப்படி? துவாரகையில் பார்த்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. கீழடியா கூழடியா? அது போகட்டும், பழங்கால வாழ்க்கை முறையைப் பார்க்கும்போதுதான் நாம் முன்னேறிய காலம் என்று சொல்லிக் கொண்டு இயற்கையையும் வளங்களையும் எவ்வளவு வீணடித்துக் கொண்டிருக்கிறோ என்பது தெரிகிறது. நீர் மேலாண்மை போன்ற விஷயங்கள் உதாரணம்.

      நீக்கு
    3. துவாரகையில் என்ன கீதா அக்கா?

      நீக்கு
    4. பழைய துவாரகையைக் கடல் மூலம் அகழாய்வு செய்து எடுத்துக் காட்சிக்கு வைத்திருப்பார்கள். கடலோரக் காவல்படையின் பாதுகாப்பில் இருக்குனு நினைக்கிறேன். அப்போ நம்ம ரங்க்ஸ் தணிக்கை அதிகாரியாக இருந்ததால் அந்த வகையில் அனுமதி பெற்றுப் போய்ப் பார்த்திருக்கோம். அதன் பின்னாட்களில் போனப்போ எல்லாம் போகலை. அனுமதி கிடைக்கணும். அதோடு நேரமும் இல்லாமல் இருந்தது.

      நீக்கு
    5. எழுத்துப் பிழை இருந்தால் ஐபேடிலிருந்து தட்டச்சியிருக்கேன்னு புரிஞ்சுக்கணும். ஒற்றை விரல் தட்டச்சு மனம் நினைக்கும் வேகத்துக்கு ஐபேட் ஒத்துழைக்காது.

      என் தனிப்பட்ட எண்ணம் கீழடி போன்ற இடங்களையெல்லாம் தோண்டி ரெண்டு சுவற்றைக் காண்பித்து பழைய உடைந்த மட்பாண்டங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடிப்பது எனக்குப் பிடிப்பதில்லை.

      நீக்கு
    6. நல்ல தகவல் கீதா அக்கா.   அப்போ, இப்போ யாரும் அவற்றைப் பார்க்க அனுமதி கிடையாதா?

      நீக்கு
    7. தெரியலை ஶ்ரீராம். இப்போ அங்கே அலுவலக ரீதியாகப் போக வாய்ப்பே இல்லையே! ஆகவே தற்போதைய நிலைமை தெரியலை. துவாரகையிலிருந்து கொஞ்ச தூரம் கடலில் போய் பேட்(Bhet) துவாரகா என்னும் தீவில் இந்தக் கடல் அகழாய்வு செய்த மாதிரிகளைப் பார்க்கலாம். அனுமதி பெற்றுப் போகலாம் என்றே நினைக்கிறேன். பழைய நகரத்தின் மாதிரியும் வைத்திருப்பார்கள். எங்கே! நான் இவற்றைப் பார்த்து 25 வருடங்களுக்கும் மேல் ஆகின்றன. அதுக்கப்புறமும் துவாரகை போய் வந்திருந்தாலும் ஒரு யாத்ரிகராகவே போனோம். அலுவல் ரீதியாகப் போகவில்லை. ஆகவே இதைப் பார்க்கணும்னு தேடிக் கொண்டு செல்லவில்லை. எங்களோடு ஸ்டீமரில் வந்தவங்க போயிருந்தால் நாங்களும் போயிருப்போமோ என்னமோ!

      நீக்கு
  4. நேற்று தில்லி வெங்கட் கடலூரைப் பற்றி எழுதும்போது, கண் முன்னாலேயே கோவில்கள் கடலால் மூழ்கடிக்கப்பட்டன (சென்ற அறுபது வருடங்களில்) என்பதுதான் என் மனதில் எழுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல் கொண்ட இடங்கள் கொஞ்சமா நஞ்சமா? தமிழ்வரலாற்றில்கூட லெமூரியா பற்றிய குறிப்பு இருக்கிறது பாருங்கள்.

      நீக்கு
  5. வல்லிம்மா ஏன் இன்னும் வரலை? கீசா மேடம் எப்போ வருவாங்கன்னு அவங்களுக்கே தெரியாது ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் அப்படித் தான். தினமும் காலை வேளையில் கணினியில் உட்காருவது என்பது என் அன்றைய உடல்/மனோ நிலையைப் பொறுத்து அமைகிறது. :(

      நீக்கு
    2. நான் வந்து பார்க்கும்போது ரெண்டுபேரும் வந்தாச்!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் இறைவன் அருளில்
    அமைதி, ஆரோக்கியத்தோடு
    இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. அன்பு முரளிமா, கமலாமா நல்ல நாளுக்கான வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. அன்பு ஸ்ரீராம்,
    இதென்ன இந்த மாதிரி கூட சினேகிதரா.
    ஆளைவிடப்பா.

    கணவன் மனைவி உறவில் கூட இவ்வளவு டிமாண்ட் இருக்காதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவன் மனைவி உறவில் ஒருவர் இன்னொருவரை எதிர்க்கேள்வி கேட்க இடமிருக்கும், திட்டவும் முடியும்!!!

      நீக்கு

  10. ஆஸ்ப்ரோ நல்ல மாத்திரைதான் அப்போது.
    இன்ஃப்ளூயன்ஸா வந்த போது கூட 1957 இல்
    இதையும் , வைட்டமின் சி யும் கொடுத்தார்கள்.
    பிறகு பெண்டிட் சல்ஃபா, அப்புறமா நோவால்ஜின்
    என்று தொடர்ந்தது. ஸாரிடான் கொஞ்ச நாட்கள்,
    டிஸ்பிரின் கொஞ்ச நாட்கள் சி ஏக்யூ

    கொஞ்ச நாட்கள் என்று ஓடியது வாழ்க்கை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. APC பௌடர் என்று ஒன்று தருவார்கள். ஆஸ்பிரின், பாராசிட்டமால் காஃபின் கலந்த பொடி.

      பென்டிட்ஸ் பெரிய கண்டுபிடிப்பு அப்போது. அதற்குமுன் சல்பா மாதிரிதான். சல்பாடிமிடின், சல்பாகுனடின் ..

      நீக்கு
    2. ஊசி மருந்து சின்ன கண்ணாடி பாட்டிலில் இருக்கும். அதன் ரப்பர் மூடி மூலமாக ஊசியை நுழைத்து மருந்தை எடுப்பார்கள். காலி பாட்டில்களை வைத்து அழகிய தேர்லாம் செய்திருந்ததை நான் என் 5ம் வகுப்பு படிக்கும்போது ஒருவர் வீட்டில் பார்த்தேன். மருத்துவத்தில் நல்லா முன்னேறியிருக்கிறோம். நெறி முறைகளில் (மருத்துவத்தில்) ரொம்ப பின்னேறி இருக்கிறோம்.

      நீக்கு
    3. என்னோட ஒரு சித்தப்பா சின்னமனூரில் பிரபல மருத்துவராக இருந்ததால் அங்கே மருத்துவமனையில் இருந்து ஊசி பாட்டில்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வருவேன். தேர் செய்ய வரிசையாகக் கண்ணாடித் தட்டுகள் வட்டமாகக் கட் பண்ணி வாங்கியும் வைச்சிருந்தேன். ஆனால் பண்ண முடியலை. நான் கல்யாணம் ஆகி வந்ததும் அப்பா அவற்றை எல்லாம் யாருக்கோ தூக்கிக் கொடுத்துவிட்டார். :(

      நீக்கு
    4. இந்த மாதிரி ஊசி பாட்டில்களை வைத்து நான் பிறந்த வீட்டிலிருக்கும் போது எங்கள் அண்ணா ஒரு தேர் செய்தார். உள்ளே பல்பு கனெக்ஷன் தந்து பளபளப்பாக ஜொலிக்கும். வீட்டுக்கு அருகில் ஒரு பார்மஸியில் வேலை பார்ப்பவர் (அவரும் எங்கள் உறவுதான்)மூலமாக ஊசி பாட்டில்களை சேகரித்தார். அந்த தேரை பல வருடங்களாக எங்கள் வீட்டு கொலுவில் வைத்து அழகு பார்த்து உபயோகித்தது நினைவுக்கு வருகிறது. பழைய நினைவலைகளை தந்தமைக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
    5. இந்த பென்சிலின் பாட்டில் தேர் அந்தக் காலத்துல எல்லா ஊரிலும் விசேஷம் போல...

      நீக்கு
    6. என் அம்மாவும், அக்காவும் சேர்ந்து ஊசி பாட்டில் தேர் செய்து இருக்கிறார்கள்.

      நீக்கு
    7. கீதாக்கா, கமலாக்கா நானும் அந்த பாட்டில்களை வைத்து தேர் செய்திருக்கிறேன். கோபுரம் கூட ஆனால் லைட் வைத்ததில்லை.

      ஸ்ரீராம் பள்ளியில் படிக்கறப்ப ஈ எஸ் ஐ ஆஸ்பத்திரியில்தான் மருந்து. கலர் கலராக மிக்சர்...பொடி செய்யப்பட்ட மாத்திரை பொட்டலம் கட்டி தொண்டைப் பிரச்சனை அடிக்கடி வரும். டான்சில்ஸ் அதுக்கு வயலட் கலர் ஒரு மருந்து குச்சியில் பஞ்சு சுத்தி தடவி விடுவாங்க...அது ஒரு காலம்...

      கீதா

      நீக்கு
    8. அப்போதைய மருந்து வகைகளே இதுமாதிரிதானே...

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் சொல்லி இருக்கும் நபரைப் போல் ஒருத்தர் இணையத்திலும் நண்பராக இருக்கார்/இருந்தார். விசித்திரமான குணம் படைத்தவர்கள். தாங்கள் சொல்வதே சரி/அதையே எல்லோரும் கேட்கணும் என்பார்கள். என்ன செய்யலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்!

      நீக்கு
    2. உறவினரிலும் ஒருத்தர் இருக்கார். அவர் தொலைபேசியில் அழைத்தால் நாம் பேசாமல்/வாயைத் திறக்காமல் கேட்டுக் கொண்டிருக்கணும். நடு நடுவில் கேட்டுக் கொண்டிருக்கோம் என்பதைப் புரிய வைக்கணும். அவர் பேசிட்டுப் பட்ட்னு சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசியை வைத்துவிடுவார். நமக்கு மறுமொழி எல்லாம் சொல்லச் சந்தர்ப்பமே கொடுக்க மாட்டார். அவர் வைத்துவிட்டார் என்பதை நாமாகப் புரிஞ்சுக்கணும். :))))))

      நீக்கு
    3. நீங்கள் சொல்லும் வகையில் பாஸின் வழியில் இரண்டுபேர்....!

      நீக்கு
    4. நாம் அறிந்த பதிவர்களிலே இவரைப் போல
      இனி பார்ப்பதற்கில்லை:)

      நீக்கு
  13. ரேவதி சொல்லி இருக்காப்போல் எனக்கு இத்தனை மருந்துகளின் பெயரெல்லாம் நினைவில் இல்லை. அப்போல்லாம் மேலமாசிவீதியில் மேல கோபுர வாசலில் இருந்து இடப்பக்கம் திரும்பினால் இருந்த சீனாக்காரரின் பல் மருத்துவமனைக்கு அடுத்து இருந்த வீட்டில் இருந்த மலையாளியின் மருத்துவமே எனக்கு. என்ன ஜுரம் வந்தாலும் அவர் தான் பார்த்துச் சூரணம்/தேனில் குழைத்துச் சாப்பிட/கஷாயம் என்று கொடுப்பார். உடம்பு சரியானதும் பாதி இட்லி சாப்பிடச் சொல்லுவார். அந்த நாளுக்காகக் காத்திருந்து அம்மாவிடம் பாதியெல்லாம் போதாதுனு அடம் பிடித்து ஒரு இட்லி வாங்கிக் கொண்டு மனம் அதிலேயே சந்தோஷம் அடைஞ்சிருக்கு. அதன் பின்னரே ஜன்னி வந்து மலையாளி வைத்தியர் கைவிரிக்க என் அண்ணா(பெரியப்பா பிள்ளை) ஆங்கில மருத்துவரைக் கூட்டி வந்து வைத்தியம் பார்த்தார். அவரும் ஊசி போடுவாரே தவிர்த்து மருந்தெல்லாம் மிக்சர் எனப்படும் திரவமே! மாத்திரைகள் அதிகம் பார்த்தது இல்லை. எப்போவானும் அபூர்வமாக் கொடுத்தால் அதையும் குழவியால் நன்கு பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்போதெல்லாம் தேன், விளக்கெண்ணை, வேப்பெண்ணை இல்லாத வீடே இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையில் நீங்கள் சொல்லும் பல்வைத்தியர் இன்னமும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதாவது அவர் வாரிசுகள்.

      நீக்கு
    2. அதானே பார்த்தேன்... கீசா மேடம் அவங்க இளமைக்காலத்தில், அதாவது நூறு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வைத்தானே எழுதியிருக்கிறார் என நினைத்தேன்

      நீக்கு
    3. நெல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. இந்த 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' எழுதி எவ்வளவு வாரங்களாகிவிட்டது. அந்தப் பதிலைப் பெறுவதற்காகத்தான் நான் எழுதிய பின்னூட்டம்... ஹா ஹா

      நீக்கு
    5. நம்ம வீட்டுல இப்பவும் இந்த விளக்கெண்ணை வேப்பெண்ணை இருக்கு!!!!!

      கீதா

      நீக்கு
    6. எங்க வீட்டிலும் உண்டு. குட்நைட் போன்ற கொசுவத்திக்கான ட்யூபில் அந்த மருந்து தீர்ந்ததும் தூக்கி எறியாமல் அதை எடுத்துவிட்டு அந்த இடத்தில் வேப்பெண்ணையை ஊற்றிவிட்டுப் பின்னர் அதை மறுபடியும் ஸ்விட்ச் போர்டில் செருகி ஆன் செய்துடுவோம். மெல்ல மெல்ல வேப்பெண்ணை வாசனையில் கொசுக்கள் குறையும். சமையலறையின் காபினெட்டுக்களையும் வேப்பெண்ணை/கடுகெண்ணை/ கொஞ்சம் போல் நீர் சேர்த்துத் துடைக்கலாம். விளக்கெண்ணை எப்போதும் உண்டு. சொல்லப் போனால் நான் ஆறுமாதத்துக்கு ஒரு தரம் விளக்கெண்ணை சாப்பிடுவேன். அதோடு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதெனில் நல்லெண்ணெய்+தே.எண்ணெய்+விளக்கெண்ணெய் கலந்தே ஒரு பாத்திரத்தில் சூடான நீரைக் கொதிக்க வைத்து எண்ணெய்ப் பாத்திரத்தை அதில் வைத்துச் சூடேற்றித் தேய்த்துக் கொள்வேன்.

      நீக்கு
    7. கீதாஆஆஆஆ, விளக்கெண்ணெய் இப்பவும் சாப்பிடுகிறீர்களா.
      கடவுளே!!!!
      அந்த வாசனையை நினைத்தாலே என்னவோ செய்கிறதே:(
      தைரிய சாலி மா.

      நீக்கு
    8. @வல்லி, ஹாஹாஹா! இல்லைனா என்னோட தொட்டால் சிணுங்கி வயிறு சொன்னபடி கேட்பதில்லையே! :))))))

      நீக்கு
  14. திரு ஸ்ரீனிவாசப்பிள்ளையின் தமிழர் வரலாறு
    எழுத்து மிக நன்றாக இருக்கிறது.

    நல்ல தமிழில் விளக்கமாகப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருக்கிறார்.
    இன்னும் நிலவும் இந்தப் பிரச்சினைகளுக்கு
    நல்ல பதில் இதுவே.
    நீங்கள் இதைத் தொடர்ந்து வெளியிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. நேரில் பார்த்துப் பேசும்போதும், ஃபோன் வந்தாலும் நாம் அதை ஆர்வமாக எடுத்துப் பேசும் வகையில் இருக்கவேண்டும். அடிக்கடி பார்க்க முடியாதே.. ஃபோன்தான் பெரும்பாலும் வரும். ஐயோ... வந்துடுச்சே.. என்ன ஆகுமோ என்று எண்ண வைக்கும் அழைப்புகளில் ஒன்றைப் பற்றி சொல்கிறேன்./////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////மஹா பொறுமை ஸ்ரீராம் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... வேறு வழி இல்லை. அவர் தவிர்க்க முடியாதவர். நான் மிகவும் மதிப்ப்பவர்களில் ஒருவர். அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  17. ""எப்போவானும் அபூர்வமாக் கொடுத்தால் அதையும் குழவியால் நன்கு பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்போதெல்லாம் தேன், விளக்கெண்ணை, வேப்பெண்ணை இல்லாத வீடே இருக்காது.""

    மதுரைப் பாட்டி வீட்டில் இதுவும் உண்டு கீதாமா.
    கஷாயம், நெற்றிப் பற்று என்று உண்டு.

    தாத்தா யுனானி மருத்துவம் அறிந்தவர்.
    அதில் வரும் மாத்திரைகள்
    தேனில் குழைத்துத் தான் கொடுப்பார்.விளக்கெண்ணெய் டிரீட்மெண்ட், வேப்பங்கொழுந்து மருத்துவம் எல்லாம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வல்லி. எங்க தாத்தாவும்/அப்பாவின் அப்பா ஒரு ஆயுர்வேத மருத்துவரே. வீட்டிலேயே மருந்துகள் தயாரிக்கும் சாதனங்கள் எல்லாம் அப்பாவிடம் இருந்தன. ஆனால் ஓலைச்சுவடிகளை எல்லாம் படிச்சுப் புரிந்து கொண்டு தொடரும் ஆர்வம் யாரிடமும் இல்லாமல் போய்விட்டது. :( தாத்தா இருந்தவரை மந்திரிச்சு விபூதி கொடுத்தாலே பாதி குணம் ஆயிடும் என்று என் அம்மா சொல்வார்.

      நீக்கு
    2. இப்படியான மருந்துகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  18. அம்மா ஸ்ரீஹரி டாக்டர் வைத்திய முறைகளைப்
    பின்பற்றி எங்களுக்கு மருந்து கொடுப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பைண்டிங் கலெக்ஷனில் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  19. ஸ்ரீதரின் அனைத்து ஜோக்குகளும் சிரிப்பு.
    ஸ்பெஷல் வாலி வதம்.:)

    பதிலளிநீக்கு
  20. தனியே க்ளிக் செய்தாலும் வாலி வதம் அத்தனை புரியவிலை. கொஞ்சம் சிரமப்பட்டுக் க்ளிக் செய்யாமலேயே படிச்சேன்.மற்றவையும் நன்றாக இருக்கின்றன. தமிழர் வரலாறு ஶ்ரீநிவாசப்பிள்ளையோடது அருமை. இந்தப் புத்தகம் படிச்ச நினைவு இல்லை. தொடர்ந்து மற்றப் பகுதிகளையும் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா.. சென்ற வரம் நீளமாய்க் கொடுத்ததனால் இந்தமுறை பார்த்து முடிந்தவரை சிக்கனமாகக் கொடுத்திருக்கிறேன்!

      நீக்கு
    2. நான் வியாழன் புதன் திங்கள் செவ்வாய் வெள்ளி-அதில் சமீபகாலமாக கிசுகிசுக்களுடன் வருவதால் என்ற ஆர்டரில்தான் ஆர்வத்துடன் வருவேன். வியாழன் நெடியதாக இருந்தால் தவறில்லை

      நீக்கு
    3. நன்றி.  முடிந்தவரை படிக்கும் அளவு தர முயல்கிறேன்!

      நீக்கு
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. திரு ஜேகே அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
    3. வாழ்த்துகள் ஜெயகுமார் சந்திரசேகரன் சார்...

      நீக்கு
    4. ஜெகே அண்ணா மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இப்படியும் சிலர், இல்லையில்லை பலர் இருக்கிறார்கள். நம்மை பேச விடாது அவர்கள் கருத்தை மட்டும் கூறி வாதிடுபவர்கள். அப்போதைக்கு ஆமோதித்து, தப்பிக்கலாம் எனவும் இருக்க முடியாது. மறுபடி அவர்களை சந்திக்க வேண்டுமே..! ஆக நம் விதிகள் நம்மை சாதாரணமாக வென்று விடும். உங்களுக்கும் மனதில் அதிக பொறுமை உள்ளது. பாராட்டுக்கள்.

    தமிழர் வரலாறு பற்றிய செய்திகள் படிக்க நன்றாக இருந்தது. ஜுரத்துக்கு அப்போதெல்லாம் இந்த மாத்திரைகள் மருத்துவர் தயவில்லாமல் இருந்து வந்தது. இப்போது ஃபராசிட்டமால், டோலோவில் வந்து நிற்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. நான் அவர் அலைபேசியை சமீப காலங்களில் அதிகம் ஈடுபதில்லை. ஆனால் நீண்டநாள் தவிர்க்கவும் முடியாது. ஏதாவது பேசிவிட்டால் தப்பாகிவிடுமே..

      நீக்கு
  23. நான் தொலை பேசி உபயோகிப்பதில்லை. நேரில் பேசும்போது உங்களைப் போலவே சில சமயங்களில் நான் காதை மூடிக் கொள்வேன் (ஹியரிங் எய்டை ஆப் பண்ணிவிடுவேன்). ஆனாலும் சில சமயங்களில் பொறுமை இழந்து நறுக்கென நாலு வார்த்தை பேசி விடுவேன் (எழுந்து போங்கடா முண்டங்களா சுப்பையா வசனம் ஞாபகம் இருக்கிறதா?) அதனால் சில நட்புக்களை இழந்தது உண்டு. 


     தமிழர் வரலாறு என்பது தமிழ் மொழி தோன்றிய பின்தான் துவங்குகிறது. அதற்கு முற்பட்ட காலங்களில் மொழியற்ற காலங்கள் ஆக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழுக்கு முன்பிருத்த மொழியின் பெயரால் சிலராவது தமிழ் பேசும் இடங்களில் வாழ்ந்ததற்கு அடையாளங்கள் காணப்பட வேண்டும். கீழடி ஆராய்ச்சி ஸ்ரீராமின் பைண்டிங் சேகரங்களில் இருந்து எடுத்து வெளியிடுவது போல் அன்றைய வாழ்வு முறைகளை வெளிப்படுத்துகிறது. அவ்வளவு தான். 

    சர்வரோக சஞ்ஜீவனி  acetylsalicylic acid, இப்போதும் ஈகோஸ்பிரின் டிஸ்பிரின் என்ற பெயர்களில் முக்கியமாக இருதய நோய்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஒன்றுமே பதில் பேச கூடாது, பேசினாலும் ஆபத்தில்லாத வார்திகளை தேர்ந்தெடுத்துப் பேசணும் என்றால் ரொம்பக் கஷ்டம்!  அந்த அனுபவம், சமீபத்தில் ஒரு உச்சத்தை எட்டவும் கொட்டி விட்டேன்!

      தமிழ் மொழி தோன்றுவதற்கு முன் எப்படி இருந்தது என்பது நல்ல கற்பனை.  எப்படி இருந்திருக்கும்?  கீழடி ஆராய்ச்சி உவமையை ரசித்தேன்.    ஆமாம் ஆஸ்பிரின் இப்போது இதய நோயாளிகளுக்கு பரிந்துரைக்கபப்டுவதால்தான் பழைய இந்த முறையை ஆச்சர்யத்துடன் வெளியிட்டேன்!

      நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      நீக்கு
  24. இப்படியும் ஒரு நட்பா...!?

    துணுக்குகள் அருமை...

    பதிலளிநீக்கு
  25. தமிழர் வரலாறு பற்றிய செய்திகள் படிப்பதற்கு நன்றாக இருக்கின்றது..

    இப்படியான உரைநடை மிகவும் பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிப்பதற்கு நன்றாய் இருக்கிறதா?  அட!  

      நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  26. அன்பின் ஸ்ரீராம்..
    நேரமிருந்தால் மின்னஞ்சல் பக்கம் சென்று வரவும்...

    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரே பார்த்திருந்தேன்.  நேரமில்லாததால், படித்தபின் பதில் அனுப்பினேன்!

      நீக்கு
  27. தான் சொல்வது மட்டுமே சரி என்று சொல்பவர்கள் சிலரை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை அப்படியே விட்டு விடுவது தான் நல்லது.

    துணுக்குகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர்களை அப்படியே விட்டு விடுவது தான் நல்லது.//

      வேறொன்றும் நம்மால் செய்ய முடியாது! ஹிஹிஹி..


      நன்றி வெங்கட்.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    ஜோக்ஸ் எல்லாம் அருமையாக உள்ளது. வாலி வதத்தை விவரித்தது அருமை. முருகா நாமத்தை அடிக்கடி சொல்லுவது சிறப்புதானே..:) கச்சேரியும்....ரசித்தேன். ஆனால், இந்த வாரம் கவிதையை ரசிக்க முடியவில்லையே..:( பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  30. //நண்பர்களை அவர்கள் குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள்//

    உண்மைதான். அவர்களை பகித்து கொள்வதும் கூடாது.

    நட்புக்கு இப்படி. உறவு என்றால் இன்னும் கவனம் அதிகமாக வேண்டி இருக்கிறது. "குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை "என்று வேறு சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  31. படித்த பகிர்வு , பொக்கிஷ பகிர்வு அனைத்தும் நன்றாக இருக்கிறது.
    அதுவும் வாலி வதம் கதை அருமை.
    ரோஷன் எங்கே கதையை வாரா வாரம் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீராம் முதல் பகுதி ஹையோ ஹைஃபைவ்!! ஹைஃபைவ்!! டிட்டோ டிட்டோ டிட்டோ எத்தனை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்!

    இப்படியான ஒரு கேரக்டர் பத்தி எழுத நினைத்து பின்னர் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அப்படியே ஒவ்வொரு வார்த்தையும் நீங்க சொல்லிட்டீங்க.

    இப்படியானவர்களிடம் நாம் அமைதி காப்பதே நல்லது ஆனால் நெருங்கிய உறவாகிவிட்டால் சில சமயம் நம் நாக்குத் துடிக்கும் மனது தத்தளிக்கும். ஆனால் அடக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். பொறுமை பொறுமை ...சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
    சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
    இறைவா இறைவா…

    தாயும் நீயே தந்தையும் நீயே
    உயிரும் நீயே உண்மையும் நீயே சக்தி கொடு என்று பாடிக் கொள்வதுண்டு. வேறு வழி!!!??

    உங்களுக்கும் பொறுமை நிறைய ஸ்ரீராம்!!! அதுக்குப் பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதி காத்தாலும் ஒருவகை கஷ்டம்தான்! அது எப்படி போகிறதோ அப்படிதான் கீதா!

      நீக்கு
  34. முதல் பகுதி கேரக்டர்களின் இப்படியான மன நிலை ஒரு வரம்பிற்கு மீறிச் செல்லும் போது மனநிலை பாதிக்கப்படும் அபாயம் உண்டு ஸ்ரீராம். அது அவர்களின் வாழ்க்கையை எல்லாவிதங்களிலும் தொழில் உட்பட பாதிக்கும். மற்றபடி எத்தனை நல்லவர்களாக இருந்தாலும். இவர்களுடன் இருப்பவர்களுக்கு ரொம்ப ரொம்ப பொறுமை அவசியம். உங்கள் நண்பர் பற்றிச் சொல்லவில்லை. வரம்பு மீறி மனநிலை பாதிக்கப்படுபவர்களைப் பற்றி. இதுவும் ஒரு ஹை லெவல் ஆஃப் ஈகோ. அல்லது தன் வீக்னெஸை பின் தள்ள செய்பவர்களாகவும் இருக்கலாம்.

    இப்படியானவர்களின் மனைவிக்கு சமாளிக்கும் திறன் வேண்டும் இல்லை என்றால் இரண்டாவது நாளே வெளிநடப்பாக இருக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. படித்தது பற்றி பகிர்ந்த விஷயத்தில் கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் பல வரிகள் யதார்த்தம் //ஒரு நாட்டில் ஒருவகை வேறுபாடிருந்தால் மற்றொரு நாட்டில் மற்றொருவகை வேறுபாடிருக்கிறது. எவ்வித வேறுபாடுகளும் இல்லாத நாடு உலகத்தில் இனி உண்டாகவேண்டும். //

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத் தான் நான் பல காலமாகச் சொல்லி வருகிறேன். ஏற்றத் தாழ்வு இல்லாத இடமே இல்லை. மனிதரில் மட்டுமல்ல, மிருகங்கள், செடி , கொடிகள் என அனைத்திலும் ஏற்றத் தாழ்வைப் பார்க்கலாம். ஒரு சிலர் மனிதருக்கு மனிதர் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என எதிர்க்கிறார்கள். இதற்கு அரசையும் கடவுளையும் காரணம் சொல்கின்றனர். ஆழ்ந்து சிந்தித்தால் இந்த ஏற்றத் தாழ்வை ஆண்டவன் ஏன் வைத்திருக்கிறான் என்பது புரிய வரும். பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு கூடாது என்பவர்களுக்கும் இதே தான்!

      நீக்கு
  36. நீதிக்கதை செம. வலியவன் எளியவன் மனுஷன் தோன்றிய காலத்திலிருந்து நடக்கும் ஒன்றுதானே. அதனால்தானே பிரிவுகள் பிளவுகள் எல்லாமே சமூகம் உட்பட. இப்போது உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதிக்கதை பற்றிய முதல் பிரஸ்தாபம்!  விந்தன் எழுதியது!

      நீக்கு
  37. ஆஸ்ப்ரோ இப்போதும் இருக்கிறதே. ஆஸ்ப்ரின் கூட கோவாக்சின் எடுத்த பிறகுகொரோனா வந்தவர்களுக்கு அட்வைஸ் செய்யப்பட்டது ப்ளட் க்ளாட் ஆகாமல் இருக்க வேண்டும் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஜோக்ஸ் ரசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  39. ரோஷன் எங்கே//

    எங்கே?!!!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  40. தமிழர் வரலாறு நன்றாக இருக்கிறது. ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!