வியாழன், 7 அக்டோபர், 2021

எதுவாய் இருந்தாலும் கொரோனா கணக்கு!

 சென்னையில் கொரோனா நோயாளிகள் கணக்கு ஏற்ற இறக்கமாய் இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் அரசாங்கம் கோவிலைத்தவிர மற்ற எல்லாவற்றையும் திறந்து வருகிறது.

கொரோனா சரியாகி விட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "இல்லை, நான் நம்ப நாட்டேன்.  எப்போது செல்போனில் "நமஷ்கார்.." இடைச்செருகல் இன்னும் நிறுத்தவில்லையே" என்று வாட்ஸாப்பில் ஒரு ஜோக் கூட வந்திருந்தது!

மக்களும் கொரோனா பயங்கள் நீங்கி அலட்சியமாகத் திரிகின்றனர்.  ஆனால் நாங்கள் மட்டும் (இன்னும் பலபேர்)  முகக்கவசத்துடனும், வெளியில் சென்று வந்தால் உடைகளை அலசி, குளித்து என்று முடிந்தவரை ஜாக்கிரதையாக இருக்கிறோம்.

ஒருநாள் கொரோனா விளைவுகளைப் பற்றி பேச்சு வந்தது.  இப்போதெல்லாம் உடம்பில் எந்தக் கோளாறு வந்தாலும் நாங்கள் அதை கொரோனா பின்விளைவுக் கணக்கில் எழுதி விடுகிறோமோ என்றும் தோன்றுகிறது.  

நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர்.

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச்செயல்.

கொரோனாவுக்குப் பிறகு நான் வெயிட் ஏறியிருக்கிறேன்.  பாஸ் வெயிட் குறைந்திருக்கிறார்.  இரண்டையுமே நாங்கள் கொரோனா கணக்கில்தான் எழுதி இருக்கிறோம்.

இன்னமும் கூட வாசனை முன்னளவு - முழு அளவு திரும்பி வரவில்லை என்றே தோன்றுகிறது.  கீதாவும் இதைச் சொன்னார்.  அவர் மூன்றாம் பேட்ச் கொரோனா என்று நினைக்கிறேன். ஆனாலும் மூன்றாம் பேட்ச்சிலும் கொஞ்சம் சாதுவான குடும்பத்தைச் சேர்ந்த கொரோனா!  

சாப்பிடும்போது நல்லவேளை ருசி தெரிகிறது!  எங்களுக்கு இந்த செப்டம்பருடன் கொரோனா வந்து ஒரு வருடமாகிறது.  நானெல்லாம் ஃபர்ஸ்ட் பேட்ச் கொரோனா!  அவ்வளவு மோசமான வகையில்லை அது என்று இப்போது தோன்றுகிறது.  அப்போது பயம்தான் இருந்தது. அதே போல தடுப்பூசி போட்டும் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.  என் மாமா இரண்டாவது பேட்ச் ரௌடி கொரோனாவிடம் மாட்டித் தோற்றுப் போனார்.  

இரண்டு பேருக்குமே பொதுவான விஷயமாக முன்னர் எப்போதும் இல்லாத அளவு களைப்பு தெரிகிறது.  இது பெரும்பாலும் எல்லோரும் சொல்கிறார்கள்.  (கொரோனா வந்தவர்கள், வராதவர்கள் எல்லோரும்தான்!)

கொரோனா வராமல் தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டவர்களின் பின்விளைவுகளை பற்றிக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்டு இருக்கும் உள்ளிருப்புக் காலங்களில் மனதளவில் எல்லோரும் பாதிக்கப்பட்டிருப்போம்.  அது மனதை விட்டு அகலாமல் அப்படியே நின்று விடுகிறது என்று தோன்றுகிறது.  ஒருவித சோர்வு, எதின் மீதும் ஒரு பிடிப்பின்மை என்று வந்திருக்கிறது.  படிப்பு, உணவு, வேலைகள் என்று எதிலும் முன்னர் இருந்த ஒரு ஆர்வம், ஒரு சுவாரஸ்யம் இல்லை.

அதேபோல கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதும் மறுநாள் அது காட்டும் பின்விளைவுகளைத் தவிர வேறு விளைவுகளும் இருக்கின்றனவோ என்று சந்தேகம் வந்திருக்கிறது.  லாங் டெர்ம் விளைவுகள்!  அதே நினைப்பாய் இருக்கிறோமா என்று பார்த்தால் அப்படியும் சொல்ல முடியாது.

ஏனெனில் முன் எப்போதும் இல்லாத அளவு கால் வலி, முதுகு வலி.  சமயங்களில் காலை ஊன்றவே முடிவதில்லை.  

மூக்கு ஒருபக்கம் அணைகட்டியது போல அடைத்துக் கொண்டிருக்கிற பிரமை.  அதுவும் இரவு படுக்கும்போது அதிகம் உணர முடிகிறது.  வாசனை முழு அளவு தெரிகிறது என்றும் சொல்ல முடியவில்லை, தெரியவில்லை என்றும் சொல்ல முடியவில்லை!  கீழ் வீட்டில் கருவாடு சமைத்தால் மட்டும் உடனே தெரிந்து விடுகிறது!

இமைகள் கனத்து தூக்கம் வருவது போல ஆகிவிடுகிறது.  வருவது போல என்ன, படுத்தால் தூங்கியே விடுகிறேன்!  Dry Eyes என்றெண்ணி Refesh Eye Drops  விட்டுப் பார்த்ததுதான் மிச்சம்.  அப்படியும் அந்தக் குறை தொடர்கிறது. அதுவும் அஞ்சு எம் எல் யானைவிலை, குதிரைவிலை!  ஆனாலும் சீக்கிரமே ஒரு கண் பரிசோதனை டியூ.

முழங்காலுக்குக் கீழ் இரண்டு கால்களிலும் அலர்ஜி மாதிரி அடிக்கடி அரிப்பு வரும்.  இது சென்ற செப்டம்பருக்குப் பிறகுதான் வரத்தொடங்கியது.  அலர்ஜி என்று அதற்கு எதுவும் மாத்திரை எடுத்துக் கொள்வதில்லை.  ஏனெனில் விட்டு விட்டு அது ஒரு தொடர்கதை!  சர்க்க்கரை ஏதாவது வந்திருக்குமா என்று சந்தேகம் வந்து மருத்துவரிடம் கேட்டபோது, சோதனை செய்து பார்க்கச் சொன்னதோடு அவருக்கும், அவர் மனைவிவிக்கும், ஏன், மகளுக்கும் கொரோனாவுக்குப் பிறகு இதே மாதிரி இருப்பதாய்ச் சொன்னார். சிறிது நிம்மதியாய் இருந்தது.  அவருக்கும்! 

அவரவர் உடம்பில் என்னென்ன நோய்நாடி இருக்கிறதோ அதையெல்லாம் தூண்டி விட்டுவிடும் போலும் கொரோனா கிருமி.  கீதா ரெங்கனிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது இதைத்தான் சொன்னேன்.  அவரும் இதேபோன்று சில உடல்நலக் குறைவுகளைப் பட்டியலிட்டு வயிற்றில் பாலை வார்த்தார்!  

பின்னே?  நமக்கு மட்டும் இருந்தால்தான் கவலைப் படவேண்டும்!

பாஸ் வாரம் ஒரு இடத்தில் வலிப்பதாய்ச் சொல்வார்.  ஒரு வாரம் கழுத்தில்.  ஒரு வாரம் முழங்கால்களில்.  ஒரு வாரம் முதுகில்.  சிலசமயம் கால்களில்.    இதைக் கேட்டுக் கேட்டு எனக்குப் பழகி விட்டது.  அவர் சொல்லும்போது நிமிந்து பார்த்து மண்டையை ஆட்டி அனுதாபம் காட்டுவேன். மனதுக்குள் வைரமுத்துவின் வரி ஓடும்..

"உந்தன் சோகம் சொன்னால் உன் ஏக்கம் போய்விடும் 
எந்தன் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்"

என் வலிகளை நான் யாரிடம் சொல்ல...!  ஒருவர் சொல்லும்போது மற்றவர் சொன்னால் அது பதிலுக்கு பதில் சொல்வதாய் ஆகிவிடும்.  எனவே அப்போது சொல்வதில்லை!

முகக்கவசம் இனி வேண்டாம் என்ற நிலை எப்போது வரும் என்று தெரியவில்லை.  அரசாங்கமே இனி முகக்கவசம் போடவேண்டாம் என்று சொன்னாலும், முகக்கவசம் இல்லாமல் இருக்க நமக்கு மனதைரியம் வர கொஞ்ச நாட்கள் பிடிக்கலாம்.

நோய் பற்றி புலம்பும் பதிவாகப் பார்க்காமல் இதை ஒரு ஜாலியான பதிவாகவே பார்க்கவும்.  எப்படியும் வாழப் போராடுகிறோம்.  எதிர்நீச்சல் எப்போதும் உண்டு.

=============================================================================================================

பேஸ் புக்கில்  'உணவே மருந்து' என்கிற பக்கத்திலிருந்து நண்பர் நாணா பகிர்ந்திருந்தது.

எருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்:-
ஆஸ்துமா குணமடையும்
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.
10 கிராம் இஞ்சி, 3வெள்ளெருக்கன் பூ, 6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.
வாதவலி வீக்கம்
எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.
பாம்பு கடி விஷமருந்து
நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
மருத்துவப் பயன்கள்.-
இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.
பாம்பு - தேள் கடி -:
இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.
குதிங்கால் வலி - :
பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.
மலக்கட்டு -
20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.
வயிற்றுப் பூச்சி -:
சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.
காது நோய் - :
எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.
குட்டநோய் -:
இதன் இலையும். வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம் எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.
காக்கை வலிப்பு -:
எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.
பல்வலி -:
எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.
ஆஸ்த்துமா -:
வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96 நாளில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.
சிற்றின்பம் -:
இதே மாத்திரை இரண்டையும், 5 கிராம் ஜாதிக்காய்த் தூளையும் பாலில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர சிற்றின்பம் பெருகும்.
வாதவலி, வீக்கம் - :
எருக்கம் பால் வாதக்கடிகளைக் கரைப்பதன்றி வாத நோய், சந்நிபாதம் ஐவகைவலி இவற்றைப் போக்கும்.
ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் 7 துளி எருக்கம் பாலை விட்டு நன்றாய்க் குலுக்கி நாசிக்குள் 2-3 துளி விட அளவு கடந்த தும்மல் உண்டாகும். சிரசிலுண்டான நீரையெல்லாம் வெளிப்படுத்தும். காக்கை வலிக்குச் சிகிச்சை செய்யும் போது முதலில் இச்சிகிச்சை செய்வதினால் மூளையை அனுசரித்த சீதளத்தை அகற்றும் அந்தத் தும்மலை நிறுத்த வேண்டுமாயின் முகத்தில் சலத்தால் அடித்துக் குளிர்ந்த சலத்தைக் கொண்டு நாசியைச் சுத்தப் படுத்த வேண்டியது.
எருக்கன் பூவால் முறை சுரம் ,போகா நீர் பிநசம் சுவாசகாசம், கழுத்து நரம்பின் இசிவு ஆகியவை நீங்கும்.
எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து மெழுகு வண்ணம் அரைத்து இரண்டு குன்றிப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முரைசுரம் நீங்கும்.
5 பலம் ஆவின் நெய்யில் 10-12 எருக்கம் பூவைப்போட்டுக் காய்ச்சி வடித்தெடுத்து வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா வீதம் கொடுக்க சுவாச காசம், நீர்ப்பீநசம் போம்.
10 மில்லி விள‌க்கெண்ணெயில் 3 துளி எருக்கு இலைச்சாறு விட்டு சாப்பிட்டு வ‌ந்தால் மலச்சிக்கல் குறைந்து ம‌ல‌ம் இள‌கும்.
குறிப்பு : எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் முறிப்பாகும்

==========================================================================================================

பழைய கவிதை ஒன்று... 2013 ல் எழுதியது!


பழைய குப்பைகளை
அடித்துச் சென்றுவிட்டு
புதிய குப்பைகளையும்
புது மணலையும்
விட்டுச் செல்கிறது
மழைநீர்...
தெளிந்த வானின்
பிம்பம் தேடி
வளைந்து ஓடுகிறது
கலங்கிய மழை நீர்

==============================================================================================

மாளயபட்சம் முடிந்து விட்டது... சாப்பிடப் போகலாமா!




மதுரை, பசுமலைப் பக்கம் எடுக்கப்பட்ட படம், வருடம் 2014!

====================================================================================================

115 கருத்துகள்:

  1. கொரோனா ஜோக் ரெண்டு சேர்த்திருக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி நாமளே ரெண்டு சேர்த்திடுவோம்னு நெட்ல ஜோக் தேடினா முதல்ல வருது "கொரோனா ஜோக் அடித்த பெண்மணிக்கு ஒரு நாள் சிறை தண்டனை". ஜோக் வேணாம் சாமி.

      நீக்கு
    2. they said to wear a mask when going out in public... i went to the grocery store wearing a mask... when I got there, saw everyone else had clothes on.

      நீக்கு
  2. எருக்கன் பூ... பயனுள்ள பதிவு..படித்திராவிடில் கீரிப்பூச்சி கொக்கிப்புழு என்று உயிரினம் (கிருமி?) இருப்பதை அறிந்திருக்கவே மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருக்கன் செடி... செம காமெடி பதிவு.

      நீக்கு
    2. என்ன இது..   இரண்டு மாதிரியும் எழுதி இருக்கிறீர்கள்!  ஹிஹிஹி..   நான் அதை முழுதாக படித்தேனா என்பது...

      நீக்கு
    3. முதல்லே சொன்னது பூவுக்கு,இரண்டாவது சொன்னது செடிக்கு. சரியா பாருங்க.

       Jayakumar

      நீக்கு
  3. காலை வணக்கம் அனைவருக்கும்.

    எனக்கு வாசனை 2018 ஃபெப்ரவரியில் போனது. அப்போதே கொரோனா வந்திருக்குமா (பஹ்ரைன்ல) என்று சந்தேகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  கொரோனா அவ்வளவு பழசா!  வூஹான்ல அப்புறமாத்தான் திறந்து விட்டதா சொன்னாங்களே....

      நீக்கு
    2. நெல்லை அப்படிப் பார்த்தா எனக்கு நித்யகண்டகொரோனா!!!!! நான் இப்படித்தான் வீட்டில் சொல்லிக் கொள்வது கொரோனா வந்ததிலிருந்து

      கீதா

      நீக்கு
    3. I had same symptoms that time and I lost my வாசனை அறியும் திறன். அப்புறம் வருடத்துக்கு மேல் ஆச்சு திரும்ப வாசனை அறியும் திறமை வர. எனக்குத் தோணுது 2020 மே மாதம் கொரோனாவால பாதிக்கப்பட்டேன்னு. பிறகு அந்த மாத இறுதியில் சரியாகிடுச்சு (சரியா 31ம் தேதி). எனக்கு 2018க்கு முன்பு, ரொம்பவே வாசனை அறியும் திறன் உண்டு (கொஞ்சம் எக்ஸ்ட்ரார்டினரி)

      நீக்கு
    4. ஓஹோ...   ஆரம்பக்கட்டத்திலா?  அப்போது முதலில் சீரியஸ்னெஸ் தெரியவில்லை.  அப்புறம் பெரும் பீதி பரவ ஆரம்பித்தது!

      நீக்கு
  4. கொரோனா என்றால் என்னால் தில்லி வெங்கட்டை மறக்க முடியாது. அவர்தான் அதன் சீரியஸ்னெசை எனக்குப் புரிய வைத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா..   அதுவரை விளையாட்டாய்த்தான் நினைத்திருந்தீர்களா?!

      நீக்கு
    2. அப்போ யாத்திரைல இருந்தோம். குருக்ஷேத்திரத்தில்தான் மாஸ்க் வாங்கிப் போட்டுக்கோங்க, வைரஸ் பரவுதாம்னு சொன்னாங்க. அப்போ 40 ரூபாய்னு 3 மாஸ்க் வாங்கினேன். அப்போதும் சீரியஸா நினைக்கலை. இரு நாட்களில் வெங்கட்டை தில்லியில் சந்தித்தபோது கை கொடுக்க கை நீட்டினபோது அவர் கையை பின்னே இழுத்துக்கொண்டார். அவர்தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகம், யாரையும் தொட்டுப் பேசக்கூடாது என்றார் (to be cautious) அப்போதான் ஓஹோ இது சீரியஸ் மேட்டர் போலிருக்கு என்று தோன்றியது.

      மே 2020ல் விஷயம் சீரியஸா எல்லா இடத்திலும் பேசப்பட்டது. சொந்தக் காரங்களைப் பார்க்கவே ஒவ்வொருவரும் பயந்தோம் (எதுக்கு வம்பு, யார் கேரியர் என்று யாருக்கும் தெரியாதே என்று). எவனேனும் இருமினாலோ தும்மினாலோ இல்லை மாஸ்க் போடவில்லை என்றால் முறைக்கவோ இல்லை சொல்லவோ செய்தோம் (வளாகத்தில்)

      நீக்கு
    3. ஆமாம்.  யாரைப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் பயம்.  பக்கத்துத் தெருவில் ஒருவருக்கு கொரோனா என்றதும் என் இளைய மகன் சட்டென எழுந்து ஜன்னல் கதவை எல்லாம் சாத்தியது ஞாபகத்துக்கு வருகிறது!  மின் வண்டி நிலையம் ஒன்றில் ஒரு பயணி தும்மினாரோ, இருமினாரோ..  அவரை மற்ற பயணிகள் எல்லாம் சேர்த்து அடித்துத் துவைத்தார்கள் என்கிற செய்தியும் படித்த நினைவு!

      நீக்கு
  5. எனக்கு என்னவோ, முக்க் கவசத்தினால் மிக அதிகமான நோய்கள் உடலுக்கு வரும் எனத் தோன்றுகிறது. நடைப் பயிற்சி சென்றால் ஆள் அரவமற்ற இடத்தில் முக்க் கவசத்தை நீக்கியபிறகு நடைப் பயிற்சி மேற்கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் பற்றிக் கூட தனிப்பதிவே போடமுடியும்!  காலில் செருப்பு அணிந்திருந்த இடம், கையில் வாட்ச் அணிந்திருக்கும் இடம் எல்லாம் தடமாய்த் தெரிவது போல இப்போதெல்லாம் முகக்கவசத்தைக் கழற்றி விட்டால்கூட அங்கு கவசம் அணிந்திருப்பது போலவே தடம் மட்டுமா தெரிகிறது?  உணர்வும் இருக்கிறது!    அதேபோல அரிப்பு, அலர்ஜி போன்ற கஷ்டங்களும் உண்டு.

      நீக்கு
    2. நெல்லை நடைப்பயிற்சி போகும் போது ஆள் நடமாட்டம் இல்லை என்றால் மாஸ்கை தழைத்து விடலாம். முழுவதும் மாஸ்குடன் நடப்பதும் நல்லதில்லை. ஆள் வரும் போது மீண்டும் மேலே ஏற்றிக் கொள்வது..

      அப்படித்தான் மருத்துவர்களும் சொல்வது

      கீதா

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் என்றும் நிறைந்திருக்க இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. மாஸ்க், முகக் கவசம் இங்கே அணிந்தே ஆக வேண்டும்.

    அணியாமல் அலைபவர்களும் இருக்கிறார்கள்.
    குழந்தைகள் ஒன்றரை வருடம் கழித்துப் பள்ளி வருகையில் ஸ்டிரெஸ்டாக
    இருப்பதாக பக்கத்து வீட்டு ஆசிரியர் சொன்னார்.
    கேள்வி கேட்பதையே மாணவர்கள் மறந்து விட்டதாகவும் சொன்னார்.
    இதெல்லாம் கொரோனாவின் உள்ள பாதிப்புகள்.

    வீட்டினுள்ளேயே அடைந்து கிடப்பது
    மனதை சஞ்சலம் அடைய வைக்கிறது.
    யாராவது ஃபோன் செய்து விட்டால் நிறையப்
    பேசுகிறேன். உறவினர்களை நினைத்தும் நண்பர்களை நினைத்தும்
    கவலை எப்பொழுதும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவு வீட்டை விட்டு வெளியே வந்தால் இந்த பயங்கள் சற்று குறைகின்றனம்மா.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. அன்பு ஸ்ரீராம்,
    சென்ற வருடத்தை நினைத்தால் இன்னும் பயம் தான் மிஞ்சுகிறது.

    தொற்றின் பக்க விளைவுகளைச் சொல்லாமல்
    விட்டு விட்டார்களோ.

    ஏற்கனவே பாதிப்பு இருந்தவர்களைத் தொற்றின் வேகம் விடவில்லை.

    ஜீரண சக்தி குறைந்து விட்டதாகவும்
    இன்னும் நுகரும் திறன் வரவில்லை
    என்றும் சொல்கிறார்கள். தடுப்பூசி
    போட்டுக் கொண்டபின் வந்த கொரோனா இது.

    எல்லாவகை துன்பங்களிலிருந்தும் இறைவன்
    தான் மீட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொற்றின் பக்க விளைவுகள் ஆளாளுக்குத் தகுந்தாற்போல மாறுகின்றன.  அவரவர் உடல்நிலையை பொறுத்து அவரவர் நோய் வித்தியாசப்படுகிறது.  நீங்கள் சொன்ன மாதிரி ஜெரான சக்தி குறைவு, பசி இன்மை அல்லது அதிக பசி என்று எல்லாம் இருக்கிறது!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம்,
      தி.நகரில் இருக்கும் அவர் ஏற்கனவே பேர் சொல்லாத நோயின் சர்வைவர்.
      ரொம்பக் கஷ்டமாக இருந்தது மா.
      இங்கேயும் அதே போல பெண் ஒருவர் இருக்கிறார்.
      என்னவோ இதை அவர் சொல்லிக் கேட்கும்போதே அசதி வருகிறது
      இந்தப் பெண் ஆஸ்பத்திரியில் வேலை செய்தவர்.

      கடவுளிடம் மன்றாடிப் பிரார்த்தனை செய்வது ஒன்று தான் வழி.

      நீக்கு
    3. உலகம் அழிய போகிறது என்றால் நாம் வெள்ளத்தினால் உலகம் மூழ்கும், தீயினால் அழியும் என்றெல்லாம் நினைக்கிறோம்.  இதெல்லாமும் ஒரு வழியோ...  மனிதனின் பொறாமையும், பேராசையுமே அவனை அழிக்கும் ஆயுதங்கள்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   மாற்றிவிட்டேன்!  அவசரம்.  காலைதான் பதிவு தயார் செய்தேன்.  அந்த அவசரம்!

      நீக்கு
    2. ஆஹா ஸ்ரீராம் காலைலதான் பதிவு தயார் செஞ்சீங்களா!!!! குடோஸ்!!! பாராட்டு மழை பொழிய ரெடி! பிரமிப்பாக இருக்கிறது! சூப்பர் ஸ்ரீராம்..

      கீதா

      நீக்கு
    3. நீங்களும் நானும் பேசியதை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறேனே, கவனிக்கவில்லையா?  மிச்ச பிற்சேர்க்கை எல்லாம் கலெக்ஷனில் இருக்கும்!

      நீக்கு
  11. தெளிந்த வானின்
    பிம்பம் தேடி
    வளைந்து ஓடுகிறது
    கலங்கிய மழை நீர் //

    அட்டகாசம் . அப்படியே மழை நீர் ஓடுவது போலத் தோற்றம் தருகிறது.
    பாராட்டுகள் மா.

    பதிலளிநீக்கு
  12. பின்னே? நமக்கு மட்டும் இருந்தால்தான் கவலைப் படவேண்டும்!


    hihihi.Superb.

    பதிலளிநீக்கு
  13. எருக்கன் செடிப் பதிவு பிரமாதம்.
    ஸ்ரீஹரி வீட்டு வைத்தியப் பதிவா இது.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அம்மா.  இது பேஸ்புக்கில் வீட்டு மருத்துவமோ எதுவோ பெயரில் வரும் பக்கம்.

      நீக்கு
  14. மழைப் படங்கள் அழகு. அருமை.

    பசுமலையைப் படம் பிடித்திருக்கும் விதம் அருமை.
    அதற்குப் பிறகு மதுரை செல்லும் வாய்ப்பு கிடைத்ததா?
    அந்த மேம்பாலம்
    பல ஊர்களை விழுங்கி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் இரண்டு மூன்று முறி மதுரை சென்று வந்திருக்கிறேன் - அப்பா இருந்த வரை.   அப்பா 2016 ஏப்ரலில் மறைந்தபின் மதுரை செல்லவில்லை.

      இந்தப் படத்துக்கு பேஸ்புக்கில் நீங்கள் அப்போது எங்கள் ஊர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

      நீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். முற்றிலும் கொரோனா தொற்று குறித்த பயம் நீங்கி அனைவரும் அமைதியுடனும் சகஜமாகவும் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  17. இன்னிக்கு என்னவோ கொடுக்கும் கருத்துரைகள் போகாமல் சண்டித்தனம் செய்கின்றன. 2,3 தரம் முயற்சி செய்த பின்னரே போகிறது. :)))) நமக்குத் தான் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி... விடுங்க... இதையும் கொரோனா கணக்கில் எழுதிடுவோம்!

      நீக்கு
    2. இன்னைக்கு இந்தப் பதிவைப் படித்துவிட்டு, எனக்கு இப்போல்லாம் மதியம் கொஞ்சம் டயர்டா இருப்பதை (காலைல கொஞ்சம் அதிகமா நடக்கிறேன்) எண்ணி பயம் வருது... ரொம்பவே பயமுறுத்தறீங்க (கொரோனா ஆஃப்டர் எஃபக்ட்)

      நீக்கு
    3. என்னுடைய பல்வலியையும் இதில் சேர்த்து விடலாமா என்று யோசிக்கிறேன்!!

      நீக்கு
  18. கொரோனாவின் பின் விளைவுகள் குறித்து ஶ்ரீராம் எழுதி இருப்பதைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது. மனிதர்களுக்குத் தான் எத்தனை எத்தனை வேதனைகள்! அனுபவங்கள்! தி/கீதாவுக்குக் கொரோனா வந்திருந்தது என்பது எனக்குச் செய்தி. நல்லபடியாகக் குணம் ஆனதில் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லி இருப்பது கொஞ்சம்தான் அக்கா.   அவரவர்கள் தனியாய் ஒரு அனுபவம், கதை வைத்திருப்பார்கள்.

      நீக்கு
  19. எங்களுக்கும் வெளியில் வாங்கி சாப்பிட ஆசைதான்.

    இன்னும் பயம் விடவில்லை.
    கோயிலில் வாங்கிய புளியோதரை,தயிர்சாதம்
    எல்லாவற்றையும் சுட வைத்துச் சாப்பிட்டோம்:)

    இரண்டு நாட்கள் கழித்தே நிம்மதி ஆச்சு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் எப்பவோ ஆரம்பிச்சுட்டோம் அம்மா.   மாளயபட்சத்துக்காக நடுவில் இடைவெளி!  இப்போ மறுபடி ஆரம்பிச்சுடுவோம்ல....!!

      நீக்கு
  20. எருக்கின் பலன்கள் ஓரளவுக்கு அறிந்தது. ஶ்ரீஹரியின் வீட்டு வைத்தையம் புத்தகத்தில் படிச்சிருக்கேன். மழை நீர் பற்றிய கவிதை இப்போது எதிர்கொள்ளப் போகும் மழைக்காலத்திற்கு ஏற்றது. மஹாலயம் முடிந்து விலக்குதல் இல்லாத சாப்பாட்டை இன்னமும் சாப்பிட ஆரம்பிக்கலை. :) நேற்றுத் தானே முடிஞ்சிருக்கு! :)))) பசுமலைப்பக்கம் எல்லாம் பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீஹரி வைத்தியம் தனியாய் புத்தகமே இருக்கா?  கல்கியிலோ, எதிலோ தொடராய் வந்து பார்த்திருக்கிறேன்.  ஆம், நேற்றுதான் மாளயம் முடிந்திருக்கிறது.  இன்றுமுதல் வெ, பூ சேர்க்கலாம்!  பசுமலை பக்கம் நானும் பார்த்து பற்பல ஆண்டுகள் ஆகின்றன.  மதுரைப் பக்கம் போனால் கூட திருப்பரங்குன்றம் தாண்டியதில்லை!

      நீக்கு
    2. ஶ்ரீஹரியின் வீட்டு வைத்தியம் அந்தக்கால விகடனில் வந்ததுனு நினைக்கிறேன். எதுக்கும் பார்த்துட்டுச் சொல்றேன். :)

      நீக்கு
    3. பாரம்பர்ய வீட்டு வைத்தியம்
      ஶ்ரீஹரி (ஆசிரியர்)
      Based on 0 reviews. - Write a review
      ₹323
      ₹340
      Edition: 1
      Format: Paper Back
      Language: Tamil

      விகடன் பிரசுரம் வெளியீடு. இது புதிய பதிப்பாய் இருக்கும். நான் படிச்சது பைன்டிங்!

      நீக்கு
    4. ஓ.... தகவலுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  21. கொரோனா பற்றி எழுதி இருப்பதை படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது. கொடுமையான காலங்கள். எப்போது கொரோனா பயம் இல்லாமல் இருப்போம் என்று தெரியவில்லை.

    மருத்துவர் நடை பயிற்சி செய்யும் போது மாஸ்க் போட வேண்டாம் என்று சொன்னார்கள். யாராவது பக்கத்தில் வந்தால் மட்டும் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்கள்.
    உறவினர்களும் கொரோனா வந்து போன பின்பு பின் விளைவுகள் நிறைய சொல்கிறார்கள்.


    //இரண்டையுமே நாங்கள் கொரோனா கணக்கில்தான் எழுதி இருக்கிறோம்.//
    படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ..   இப்படி படுத்தும் உடம்புப் படுத்தல்களை இது கொரோனாவால் வந்தததாக்கும் என்று சொல்லி ஆறுதலடையும் அல்லது பீற்றிக்கொள்ளும் வாய்ப்பாவது இருக்கிறதே...!

      நீக்கு
  22. 'CHINESE' என்று எழுதி அதற்குக் கீழே ‘KASMIR PULAV' என்று எழுதிவைத்திருக்கும் கடைக்காரனை தேசவிரோத சட்டத்தின்கீழ் ‘உள்ளே’ தள்ளி மூடிவிடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இவர்கள் சமையலறையில் தவறு செய்துவிட்டு, சீனா கொரியா ஜப்பான் என்று பழி சுமத்துகிறார்கள்!

      நீக்கு
  23. மூன்று எருக்கன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கால் வலிக்கு ஒத்தடம் கொடுத்து இருக்கிறேன்.

    மழைநீர் கவிதை நன்றாக இருக்கிறது.
    பசுமலை படமும், உங்கள் வாசகமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  எருக்கம் இலையை ஒத்தடத்துக்கு பயன் படுத்தி இருக்கிறோம்.

      கவிதை மற்றும் படவசனம் பாராட்டுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  24. மக்களும் கொரோனா பயங்கள் நீங்கி அலட்சியமாகத் திரிகின்றனர். ஆனால் நாங்கள் மட்டும் (இன்னும் பலபேர்) முகக்கவசத்துடனும், வெளியில் சென்று வந்தால் உடைகளை அலசி, குளித்து என்று முடிந்தவரை ஜாக்கிரதையாக இருக்கிறோம்.//

    அதே அதே ஸ்ரீராம். இன்னும் வெளியில் செல்லக் கூட யோசித்து ரொம்ப அவசியமா என்றுதான் செல்கிறோம். ஆனால் உங்களுக்குச் செல்லாமல் இருக்க முடியாதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. கொரோனா எனக்கு இதுவரை வரவில்லை, இனியும் வராது என்று நினைக்கிறேன் - "கில்"லர்ஜி

    பதிலளிநீக்கு
  26. கும்பகோணம் நவகிரஹ கோவில்களில் முதல் கோவிலில் எருக்கம் இலையில் தயிர் அன்னம் நைவேத்தியம்+பிரசாதம் பிரபலம். வயிறு கோளாறுகளுக்கு நல்லது.
     
    பசுமலையில் எத்தனையோ மலைகள். ஆனால் எல்லா மலைகளும் பாறை மலைகளாய் தெரிகின்றன. பசுமலையாய் தெரிவதில்லை. 

    பாட்டுக்குப் பாட்டு :

    தெரிந்த உலகில் 
    உறைவிடம் தேடி 
    விரைந்து செல்கிறது 
    செம்புலப் பெயநீர் 
    +
    அன்புடை நெஞ்சங்கள். 
    (யாதும் ஊரே ஞாபகம் )

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  யாயும் யாயும் = 'நீயும் நானும் ஒரே ஊர் வாசுதேவ நல்லூர்'   பாடல் பாணி!  நன்றாயிருக்கிறது JC ஸார்.

      நீக்கு
  27. ..வருவது போல என்ன, படுத்தால் தூங்கியே விடுகிறேன்! //

    இதுவுமா ஒரு குற்றம்! கொரொனா உட்கார்ந்தால் குற்றம், நின்றால் குற்றம், நடந்தாலும் குற்றமா?

    பதிலளிநீக்கு
  28. அவர் மூன்றாம் பேட்ச் கொரோனா என்று நினைக்கிறேன். ஆனாலும் மூன்றாம் பேட்ச்சிலும் கொஞ்சம் சாதுவான குடும்பத்தைச் சேர்ந்த கொரோனா! //

    ஹாஹாஹா ஓ இது 3 வது பேச்சா....இந்த வருஷம் மே மாசம் முதல் வேக்சின் போட்ட 4 வது நாள் கணவருக்கு வந்து முதலில் வேக்சின் ரியாக்ஷன் என்று இருந்து அவருக்கு ரொம்பப் படுத்தியது அதனால் இருவரும் டெஸ்ட் போனப்ப பாசிட்டிவ்...எனக்கும் சில தொல்லைகள் இருந்தாலும் சமாளிக்கும்படிதான் ப்ளாக் கூட வந்திட்டுருந்தேன் வீட்டு வேலைகள் எல்லாம் செய்து..சமைத்து....வீட்டருகில் உணவகங்கள் இருக்கு ஆனால் நம்மூர் போல் வீட்டில் செய்து கொண்டு தருபவர் அறிமுகம் இல்லாததால் வாங்கிச் சாப்பிடத் தயக்கம். யாரையும் உதவிக்கும் அழைக்க முடியாது. இவரது மாணவியின் அம்மா, முன்பு இவருக்குக் கல்லூரியில் உதவியாளர் அவங்கதான். இவர் கூகுளில் பே பண்ணிடுவார் சாமான் வாங்கி வீட்டு மதிலில் வைத்து விடுவாங்க...அப்புறம் நாங்க எடுத்துக் கொள்வோம்.

    நான் ப்ளாகிற்கும் வந்துகொண்டிருந்ததால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் வீட்டு க்வாரண்டைனில்தான் இருந்தோம்...அரசு மருத்துவர்கள் நல்ல செர்வீஸ் இங்கு. இரண்டாவது வேக்சின் எப்ப போட்டுக்கலாம் என்றும் கூட மெசேஜ் கொடுத்தாங்க...

      துளசி குடும்பம் சமீபத்தில் கொரோனா வந்து எல்லாருக்கும் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க. அவரே கருத்தில் சொல்வார் என்று நினைக்கிறேன் இல்லைனா பெரிசாகிடும்னு (என்னை மாதிரியா ஹிஹிஹிஹி) பதிவு போடுவாரோ என்னவோ.!!!

      கீதா

      நீக்கு
  29. கொரோனா வராமல் தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டவர்களின் பின்விளைவுகளை பற்றிக் கேட்டுப் பார்க்க வேண்டும்.//

    எனக்குத் தெரிந்த வட்டத்தில் யாரும் எதுவும் சொல்லவில்லையே ஸ்ரீராம் எங்கள் வீட்டிலும் இருக்கிறார்களே. எதுவும் இல்லை இதுவரை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் உணர்ந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  30. கொரோனா பாதிக்கப்பட்டு இருக்கும் உள்ளிருப்புக் காலங்களில் மனதளவில் எல்லோரும் பாதிக்கப்பட்டிருப்போம். அது மனதை விட்டு அகலாமல் அப்படியே நின்று விடுகிறது என்று தோன்றுகிறது. ஒருவித சோர்வு, எதின் மீதும் ஒரு பிடிப்பின்மை என்று வந்திருக்கிறது. படிப்பு, உணவு, வேலைகள் என்று எதிலும் முன்னர் இருந்த ஒரு ஆர்வம், ஒரு சுவாரஸ்யம் இல்லை.//

    டிட்டோ. இதோடு நமக்குத்தான் வேறு பிரச்சனைகளும் இருந்து கொண்டே இருக்குமே. உடல் நலம் பற்றி இல்லை....சுற்றி உள்ள பிரச்சனைகள், மனம் என்று...அதுவும் சேர்ந்து கொள்கிறதுதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கீழ் வீட்டில் கருவாடு சமைத்தால் மட்டும் உடனே தெரிந்து விடுகிறது!//

    ஹாஹாஹா எனக்கு முகரும் சக்தி சில வருடங்களுக்கு முன் போச்சு இல்லையா...அதுக்கு அப்புறம் கொஞ்சம் ஏதொ அவ்வப்போது தெரியும் போகும் வரும் இப்படி....நல்லது கூடத் தெரியாது ரயிலில் டாய்லெட் கப்பு, தெருக்குப்பை அழுகி கப் மட்டும் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தெரிஞ்சுடும்!!!! ரொம்ப மோசம் இந்த மண நரம்புகள்/மூளை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வாசனைகள், மென்மையான வாசனைகள் நாசி உனர்வதில்லை போலும்!

      நீக்கு
  32. அவரவர் உடம்பில் என்னென்ன நோய்நாடி இருக்கிறதோ அதையெல்லாம் தூண்டி விட்டுவிடும் போலும் கொரோனா கிருமி. கீதா ரெங்கனிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது இதைத்தான் சொன்னேன். அவரும் இதேபோன்று சில உடல்நலக் குறைவுகளைப் பட்டியலிட்டு வயிற்றில் பாலை வார்த்தார்! //

    ஹாஹாஹாஹாஹா...சிரித்துவிட்டேன்.

    மகன் சொன்னது...நீங்கள் சொன்னதுதான்....கொரோனாவினால் எல்லாம் விளைந்தது என்று இல்லை. ஏற்கனவே உடம்புல இருந்திருக்கும். நாம என்ன அப்பப்ப செக்கப் போகிறோமா என்ன? இல்லை கொஞ்சம் உடம்புப் பிரச்சனை வந்ததும் டாக்டரை பார்த்து செக் செய்து கொள்கிறோமா? அது இப்ப மேல வருதா இருக்கலாம்.

    பொதுவா கொரோனாவுக்குப் பின்னான பின் விளைவுகள் மணம் அறியும் தன்மை இல்லாமல், உடம்பு வலி/ஜாயின்ட் வலிகள், உடல் சோர்வு - இது நம் உடம்பின் இம்யூனிட்டி குறைவதால், டயபிட்டிக் என்றால் கூடுதலாக என்று.

    ஆனால் நல்ல காலம் நான் இது வரை ஓகே...அந்த மணம் தெரியாமை, மெலிந்தாலும் எப்போதும் போல் ஆக்டிவாகத்தான்..

    ஸ்ரீராம் நாம் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மனச் சோர்வினால்தான் எல்லாம் பெரிதாகத் தெரிகிறது என்பது போலத்தான் தெரிகிறது. முன்பு போல் நாம் யோசிக்காமல் வெளியில் செல்ல முடிவதில்லை ஸோ இதெல்லாம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா..  இதையெல்லாம்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

      நீக்கு
  33. அரசாங்கமே இனி முகக்கவசம் போடவேண்டாம் என்று சொன்னாலும், முகக்கவசம் இல்லாமல் இருக்க நமக்கு மனதைரியம் வர கொஞ்ச நாட்கள் பிடிக்கலாம்.//

    ஆமாம் அதே ஸ்ரீராம்

    வாழ்க்கையே எதிர்நீச்சல்தானே ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்நீச்சல் போட்டுருவோம்...நீச்சல்!!!!!!!!!!!!? தெரியும்தானே இத்தனை நாள் நீந்தாததா! என்ன?!

      கீதா

      நீக்கு
    2. அதுதானே...  பழகிப்போன சமாச்சாரம்!

      நீக்கு
  34. பழைய குப்பைகளை
    அடித்துச் சென்றுவிட்டு
    புதிய குப்பைகளையும்
    புது மணலையும்
    விட்டுச் செல்கிறது
    மழைநீர்...
    தெளிந்த வானின்
    பிம்பம் தேடி
    வளைந்து ஓடுகிறது
    கலங்கிய மழை நீர் //

    அட்டகாசம் ஸ்ரீராம்.....இதில் எனக்குச் சில சொல்லத் தோன்றுகிறது. இங்கு. ஆனால் அது வேறு ஒன்றில் இதே அர்த்தத்தை வேறு வடிவில் எழுதியிருப்பதால். வழக்கம் போல பொறுக்கிக் கொண்டேன் புதிய குப்பையையும் புது மணலையும்...இது குப்பையானாலும். எனக்கு அவசியம்.!!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. மெனு போர்ட்// ஆஹா இழுக்குதே!!!

    வருஷம் ஆகிறது வெளியில் சாப்பிட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் கீதா... இன்று கூட மினி சாம்பார் இட்லி!

      நீக்கு
  36. எருக்கு பத்தி எப்பவோ வாசித்திருக்கிறேன் எங்கள் வீட்டில் உள்ள ஒரு மூலிகைப் புத்தகத்தில். இதில் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.

    ஆனால் பயன்படுத்தியதில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  37. பசுமலைப்பக்கம்// ஃபோட்டோ வண்டியிலிருந்து எடுத்த படம் இல்லையா? நல்லா வந்திருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா..   ஆட்டோவிலிருந்து எடுத்திருப்பேனோ என்னவோ...

      நீக்கு
  38. எருக்கன் பூவிற்கு இத்துணை மருத்துவ குணங்களா! அதனை குறைத்து மதிப்பிட்டிருந்தேன் இது வரை.

    பதிலளிநீக்கு
  39. எருக்கம் செடி பற்றிய தகவல்கள் அருமை. கவிதையும்தான்.
    வியாதியைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார் வயதாகிறது என்று அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  40. கொரோனாவுக்கு பிறகு உடம்பு அசதி அதிகமாக இருப்பதாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள்.
    டயபடீஸ், ஸ்கின் அலர்ஜி போன்றவையும் போஸ்ட் கோவிட் இஃபக்ட் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  41. ஏதோ ஒன்று குறைகிறதே...? பொக்கிஷமா?

    பதிலளிநீக்கு
  42. மழைக்காலம் தொடங்கிவிட்டது மழைக் கவிதையும் அருமை.

    கோவிட் வந்தாலும் வந்தது என்ன வருத்தம் வந்தாலும் ஊசிபோட்டதால் வந்தது என்றுதான் சொல்கிறார்கள்.மனப்பிராந்தியும்தான் காரணம்

    பதிலளிநீக்கு
  43. அதென்ன கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு? இறைச்சிக் கடைகள், மால்கள், சினிமா தியேட்டர், சந்தை, சட்டசபை கூட்டம், தேர்தல் கூட்டம், பள்ளி, கல்லூரி, மீன்கடை, மசூதி, சர்ச், மதுக்கடை, பீச் போன்றவை திறக்கலாம், அங்கெல்லாம் கொரோனா பரவாதா?..

    - தினமலரில் வாசகர் ஒருவரின் குமுறல்..

    இதுதான் கண்ட பலன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் வாரம் குலதெய்வம் கோவில் செல்ல நினைத்திருக்கிறோம்.  வார இறுதி நாட்களில்தான்  மகன்களுக்கு லீவு கிடைக்கும்.  குலதெய்வம் கோவில் செல்லும்போது அப்படியே எங்கள் இரண்டாவது குலதெய்வமான சுவாமிமலை, அப்புறம் திருமணம் நடந்த ஒப்பிலியப்பன் கோவில் அப்புறம் முடிந்த சில கோவில்கள் சென்று வருவோம்.  இப்போது அந்தக் கோவில்கள் திறக்காது என்பதால் குலதெய்வம் கோவில் மட்டும்.  அங்கிருக்கும் பூசாரியிடம் போன்செய்து கேட்டுக்கொண்டோம், நீங்களாவது திறப்பீர்களா என்று.  வரச் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
    2. இது சம்பந்தமாக  வாட்சாப் ஃபார்வேர்ட் ஒன்று கூட சுற்றுகிறது.  விஞ்ஞானிகள் ஆஸாஹர்யம்.  அதெப்படி டாஸ்மாக், சந்தை தியேட்டர்கள் போன்ற இடங்களில் பரவாத கொரோனா தமிழ்நாட்டுக்கு கோவில்களில் மட்டும் பரவுகிறது என்று! என்ன மர்மமோ...   அந்த நாட்களில் என்ன செய்கிறார்களோ அங்கு...

      நீக்கு
  44. நீங்கள் பகிர்ந்திருக்கும் பசுமலை ஃபோட்டோ பார்த்ததும் மீண்டும் பழைய நினைவுகள் வந்துவிட்டன. மறக்கவே முடியாத நாட்கள்.

    நான் படித்தது மெஜுரா கல்லூரியில். என் நண்பர் சங்கர்லால் பசுமலையில் தான் இருந்தார். நாங்கள் அவர் வீட்டில்தான் கம்பைன் ஸ்டடிக்குச் செல்வோம்.

    சுப்பியமணியபுரத்தில் ரமேஷ் எனும் நண்பர் இருதான் இப்போதும் அங்குதான் இருக்கிறார்.

    மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. கொரோனா எங்கள் வீட்டிலும் எங்கள் எல்லோருக்கும் வந்தது. ஆகஸ்ட் மாதத்தில். எனக்கு மூன்று நாட்கள் ஜூரம். சளி இருந்தது. டயர்டாக இருந்தது. மற்றபடி பிரச்சனைகள் இல்லை. பெரிய மகனும் நானும் முதல் டோஸ் மட்டும் எடுத்திருந்தோம். மனைவியும் மகளும் இரண்டு டோஸ் வேக்சினும் எடுத்து இரு மாதங்களுக்கும் மேல் ஆகியிருந்தது. மகனுக்கும் மனைவிக்கும் மணம் தெரியவில்லை. பின்னர் சரியானதும் வந்துவிட்டது. இரண்டாவது மகனுக்கு எங்களுக்கும் முன்பு ஒரு மாதத்திற்கு முன்னரே வந்தது அப்போது எங்கள் யாருக்கும் வரவில்லை. இப்போது எல்லோரும் நலம்.

    நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால், நாங்களும் மூன்றாவது பேச்சா

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  46. கொரோனாவினால் என் சகோதரியின் கணவர் மறைந்துவிட்டார் அதை இடுகையாகவும் எழுதியிருந்தேன். அவரும் இந்த மூன்றாவது பேச் தான்

    கொரோனா வந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது.

    உங்கள் கவிதை மிக மிக அருமை ஸ்ரீராம்ஜி. ரசித்தேன்.

    எருக்கஞ்செடி, பூவின் மருத்துவ குணங்கள் நல்ல தகவல். அறியாதது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!