வெள்ளி, 5 நவம்பர், 2021

எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்

நேற்றைய தீபாவளியின் தாக்கம் இன்றைய வெள்ளி விடீயோவிலும்...!

                                          எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்- கண்ணதாசன்
மேற்படி காட்சியை இங்கு காணமுடியாதவர்கள், பாடலைக் கேட்க, ரசிக்க இங்கு க்ளிக் செய்து யூடியூப் சென்று பாடலைக் காணலாம்.



சித்திர பூப்போலே சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் ? கேப்பு முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு முகமோ மலரோ இது என்ன ரசிப்பு - பட்டுக்கோட்டையார்



ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் 
மேளம் தாளம் கும்மாளம் -கங்கை அமரன் 
             




தீவ்ளிக்கு தீவ்ளி
எண்ணை தேய்ச்சி நீ குளி
என் பாட்டி சொன்ன
வைத்தியம் கேட்டு
வந்தேன் பைங்கிளி
ஹோய் -வாலி 



கடலும் அலையும்
எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து
எப்பொழுது ஏறியது
யார் விரல் என்றா
வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும் - புலமைப்பித்தன் 
             

44 கருத்துகள்:

  1. காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்!..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
  4. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    தீபாவளி போலவே அனைத்து நாட்களும்
    ஒளி நிறைந்து தொடரட்டும்.

    ஆரோக்கியமும் அமைதியும் இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அனைத்துப் பாடல்களும் இனிமை.

    நம் ஊர் தொலைக் காட்சி பார்க்கவில்லையே என்ற சங்கடம் தோன்றாமல்
    அனைத்துத் தீபாவளிப் பாடல்களும் பகிர்ந்திருக்கிறீர்கள்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அனைவருக்கும்.

    இங்கு உறவுகள் வருகை. வேலை அதிகமாக உள்ளது. நேற்றைய பதிவுக்கு கருத்துரைத்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.அனைவரின் பதிவுகளுக்கும் அவசியம் வருகிறேன்.அனைவருக்கும் அன்பான தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.மனமார்ந்த நன்றிகள். கொஞ்சம் தாமதங்களுடன் வருவதற்கு அனைவரும் மன்னிக்கவும்.

    இன்றைய பதிவும் நன்றாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அருமை. பிறகு அனைத்தையும் கேட்டுப்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. பிறகு வருகிறேன். மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ஜனகராஜ் பாடலைப் பார்த்து வெகு நாட்கள்
    ஆகிறது. நல்ல படம்.

    நாயகன் படப்பாடல். ஜமுனா ராணி, எம் எஸ் ராஜேஸ்வரி என்று நினைவு.
    ஆட்டத்தைக் காணாமல் பாடலைக் கேட்கலாம்.

    உன்னை கண்டு நான் ஆட'' இல்லாத தீபாவளியே
    கிடையாது.
    தாயெனும் தெய்வம்' மூன்று தெய்வங்கள் படம் மிகப்
    பிடிக்கும்.

    மீண்டும் பார்க்கலாம் மா.
    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜனகராஜ் பாடல் நிறையபேர் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்!  நன்றி அம்மா.

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. எல்லாப்பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்கள். மற்றபடி இதன் ராகங்களை எல்லாம் தி/கீதா மேடைக்கு வந்து அடித்துத் துவைத்து அலசிக் காயப்போடுவார். சுபஶ்ரீ தணிகாசலம் கந்த சஷ்டி சிறப்புப் பாடல்கள் ஆரம்பிச்சிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நான் சுபஸ்ரீ நிகழ்ச்சி பார்ப்பதில்லை. இதில் ராகங்கள் என்று பெரிதாகச் சொல்ல எதுவும் இருக்காது. சும்மா தீபாவளிப் பாடல்கள். அவ்வளவுதான்!

      நீக்கு
  11. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு..
    நேரம் இருப்பின் மின்னஞ்சல் பெட்டியை சற்று கவனிக்கவும்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. ஜனகராஜ் பாடலை கேட்டிருக்கிறேன்... காணொளியாக பார்த்தது முதல் முறை...

    "உன்னைக் கண்டு நான் ஆட" - சோகப் பாடல் - ஏனோ மனம் சோகமாகும்... படம் அப்படி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடல் சந்தோஷமாகப் பாடும் பாடல் தானே!

      நீக்கு
    2. ஆம்...

      கொடைக்கானல் பண்பலையில் சோகப்பாடலில் ஆரம்பித்து இந்த சந்தோசப்பாடலை போட்டார்கள்...! இந்தப்படம் பார்த்துள்ளீர்களா...?

      நீக்கு
    3. திரு தனபாலன். நான் ரொம்பச் சின்னப் பெண்ணாக இருந்தப்போ வந்த படம். மதுரை கல்பனா தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. அப்பா பார்த்துவிட்டு வந்து படம் நன்றாக இருப்பதால் எங்களைப்பார்க்க வேண்டி அழைத்துச் சென்றார். இந்தப் படம் பார்க்கப் போயிட்டு ஹவுஸ்ஃபுல் என்ற அறிவிப்பைப் பார்த்ததும் அப்பா எங்களைப் படம் பார்க்க வந்துட்டு ஏமாந்துடுத்துங்க குழந்தைங்கனு அங்கேருந்து நியூ சினிமாவுக்கு (தெற்கு கோபுர வாசலுக்கு அருகே) அழைத்துச் சென்று வீரபாண்டியக் கட்ட பொம்மனைப் பார்க்க வைத்தார். அப்பா அதி தீவிர ஜிவாஜி ரசிகர். அதோடு இந்தப்படம் வேறே பார்க்கலையா ரசித்துப் பார்த்தார். அதுக்கப்புறமாப் பல நாட்கள் கழிச்சுக் கூட்டம் குறைந்ததும் அம்மாவோடு போய்ப் பார்த்தோம் "கல்யாணப்பரிசு" படத்தை! நான் நினைவு தெரிஞ்சு முதலில் பார்த்தது ஜிவாஜியின் வீரபாண்டியக் கட்டபொம்மன். அதன் பின்னர் கல்யாணப்பரிசு.

      நீக்கு
  13. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! தீபாவளிதான் நேற்றே முடிந்து விட்டதே..! தீபாவளி பாடல்கள் கேட்ட பாதிப்பு! ஹிஹி! வட இந்தியாவில் பத்து நாட்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வேறு ஏதாவது பாடல் பகிர்ந்தாலும் தீபாவளி பாடல்கள் போட்டிருக்கலாமோ என்று தோன்றும்.  எனவே அவற்றையே பகிர்ந்து விட்டேன்.

      நீக்கு
  14. காலை வணக்கம். தீபாவளி பாடல்களில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 'குரு' படத்தில் 'ஆடுங்கள்.. பாடுங்கள்..." என்று ஒரு தீபாவளி பாடல் வருமே...? அதையும் சேர்த்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பின்னர் நினைவுக்கு வந்ததுதான்.  ஆனாலும் விட்டு விட்டேன்!

      நீக்கு
  15. பாடல்கள் பகிர்வு மிக அருமை.முதல் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதமாக இருக்கும். படமும் மிக நன்றாக இருக்கும்.

    கல்யாணபரிசு பாடல் வானொலியில் ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்பு கேட்கும் பாட்டு.

    அப்புறம் நான் சிரித்தால் தீபாவளி பாடலும் ,

    தீவ்ளிக்கு தீவ்ளி
    எண்ணை தேய்ச்சி நீ குளி பாடலும்
    தொலைகாட்சி மூலம் தீபாவளிக்கு வைக்கும் பாடல்.
    ஜனகராஜ் பாடலும் கேட்டு இருக்கிறேன், படமும் பார்த்து இருக்கிறேன்.

    அனைத்து பாடல்களும் கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!