ஞாயிறு, 4 டிசம்பர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் பகுதி 2 :: நெல்லைத்தமிழன்

 

வைகுண்டப் பெருமாள் கோவில் (பரமேச்வர விண்ணகரம், காஞ்சி) – பகுதி 2

இந்திய அரசர்கள் அனைவரும், கோயில்களை ஆதரித்தவர்கள். அதன் நடைமுறைக்காகவும் கோவில் பணிகளுக்காகவும் கோவில்களை நிர்மாணிக்கவும் நிறைய செலவழித்தவர்கள். அதாவது இந்திய கலாச்சாரத்தை முன்னே எடுத்துச்சென்றனர், பிராந்திய மக்களின் தலைவனான இந்த அரசர்கள்.

ஆரம்பத்தில் வட இந்திய நாகரிகம் தமிழகத்தில் பரவினாலும், நாளாக நாளாக தமிழ் உயர்வு பெற்றது. வடக்கிலிருந்து தமிழகத்தில் பரவிய சமணமும் பௌத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுற்று தமிழ் சிறப்பு எய்த ஆரம்பித்தது.  அதற்காக  நாயன்மார்களும் ஆழ்வார்களும் 5-8ம் நூற்றாண்டுவரை தமிழில் தெய்வ இலக்கியங்கள் எழுதி சைவ, வைணவ சமயங்களை வளர்த்தனர்.

பொதுவாக அகண்ட இந்தியா (பாகிஸ்தான் நேபாளம் உள்ளடக்கிய,  தென் கிழக்குப் பகுதியில் இந்தோநேஷியா வரை, தெற்கில் இலங்கை) சைவ வைணவ சமயத்தைப் பிரதானமாகக் கொண்டு, அதற்கான கோயில்களால் நிரம்பி வழிந்தது. இதன் இடத்தில் பௌத்தமும் பின்பு சமணமும் வளர ஆரம்பித்தன. (காஷ்மீர், சைவ சமயத்தின் பிறப்பிடமாகக் கொள்ளப்படுகிறது.) பிறகு பவுத்த, சமண சமயங்களுக்கு, அரசர்களின் ஆதரவு குறைந்ததால், வளர்ச்சியும் குறைந்து, இவ்விரு மதங்களிலும் சைவ, வைணவத் தாக்கம் மிக அதிகமாக ஆனது. இன்றும் சமண சமயத்தினர், அதிகமாக இந்துக் கலாச்சாரத்தையும், சைவ, வைணவத் தெய்வங்களையும் கைக்கொள்கிறார்கள் என்பதைக் காணமுடியும்.

இதனால்தான், மொழி வேறாக இருந்தாலும், பல்லவ மன்னர்கள் சைவ வைணவக் கோயில்களைக் கட்டினர். அவர்கள் ஆதரித்த சிற்பக்கலையும், இந்த மதங்களின் புராண இதிஹாசக் கதைகளை உள்ளடக்கியதாக இருந்ததுபல்லவர்கள் சைவ, வைணவ சமயங்களுக்குச் செய்த தொண்டுகளுள் தலைசிறந்தவை கோயில்களே. அதுவரை மண் தளிகளாக இருந்தவை கல் தளிகளாக மாற்றப்பட்டன. ஆரம்பத்தில் அவர்கள் பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கண்டனர். குடைவரைக் கோயில்கள் சமணர்களின் பழக்கத்தினால் விளைந்தது என்று கொள்ளவேண்டும். சமணர்கள் மலையைக் குடைந்தது அவர்கள் தவத்திற்காகவும், தங்குவதற்காகவும் ஆகும்.  பல்லவ மன்னன் மஹேந்திரவர்மன், முதலில் சமண சமயத்தனாக இருந்து பிறகு சைவனாகிக் குடைவரைக் கோயில்களை உருவாக்கினவன். தனிப்பாறைகளையும் கோவில்களாகச் செய்தனர் (உதாரணம் மாமல்லபுரம் சிற்பங்கள்). பிறகு கற்களை உபயோகித்து கோவில் கட்டடமாக் கட்டினர் (மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில்).  பல்லவர்களைப் பின்பற்றியே பிற்பாடு சோழர்கள் பெரிய கோவில்களை எழுப்பினர். பல்லவர்கள் காலத்தில்தான் யானை முதுகு போன்று விமானம் அமைக்க ஆரம்பித்தார்கள் (தூங்கானை மாடம் என்று சொல்கிறார்கள். திருத்தணிகை வீரட்டானேச்வரர் கோவில், பல்லவர் சமைத்தது)

சுருக்கமாக பல்லவ மன்னர்கள் வரிசை

2ம் நூற்றாண்டில் ஆரம்பித்த பல்லவர் ஆட்சியில், கிபி 250ம் ஆண்டிலிருந்து 575ம் ஆண்டுவரை, முதற்காலப் பல்லவர், இடைக்காலப் பல்லவர்கள் ஆண்டனர். 575ம் ஆண்டிலிருந்து அரசாண்ட பல்லவர்களை பிற்காலப் பல்லவர்கள் என்று அழைக்கிறோம். சிம்மவிஷ்ணு பல்லவன் முதல் மூன்றாம் நந்திவர்மன் வரை பெரும்பாலும் நமக்குப் பரிச்சயமானவர்களே (கல்கியின் சிவகாமியின் சபதம் மற்றும் பல சரித்திர நாவல்கள் மூலம்)

பிற்காலப் பல்லவர்களின் ஆட்சியின்போதுதான் ஆழ்வார்களும் நாயன்மாரும் தமிழகத்தில் வாழ்ந்தனர். வைணவ சைவ சமயங்களைப் பரப்பினர். அரசர்களையும் சமயம் மாறும்படிச் செய்தனர்.  அரசர்களும் பக்தியில் ஈடுபட்டு, மக்களுக்காக கோவில்கள் கட்டினர். கற்றளிகள், குடைவரைக்கோவில்கள், பாறைச் சிற்பங்கள் என பல்லவர் காலத்தைப் பல நூற்றாண்டுகளுக்கும் நினைவுகூரும்படியாக கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள், தேவாரப் பாடல்கள் இந்தக் காலத்தில் விளைந்தன.   பல்லவர் ஆண்ட நிலம் வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே காவிரி ஆறு வரையிலும் பரவியிருந்தது. ப்ரபந்தங்கள், நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, தேவாரம் போன்றவைகள் தோன்றியபோதும், அரசர்கள் வடமொழியை ஆதரித்தனர். வடமொழி அறிந்த மறையவர், பல ஊர்களைத் தானமாகப் பெற்றனர். தண்டி, பாரவி போன்ற வடமொழிப் புலவர்களும் போற்றப்பட்டனர்.

சிம்மவிஷ்ணு, பிறகு அவன் மகன் மகேந்திரவர்மன். இவன் சமணனாக இருந்து சைவனாக மாறியவன். அப்பர் இவன் காலத்தவர்.  பல்லவர்-சாளுக்கியர் போர் உச்சத்தில் இருந்து.  திருச்சி மலைக்கோட்டை சிவன் கோவில், நாமக்கல் அரங்கநாதன் மலைக்கோவில் போன்றவைகள் இவன் காலத்தவை. சைவனாக மாறியபிறகு, தமிழகத்தில் சைவம் பெரு வளர்ச்சி பெற்றது. மகேந்திரவர்மன் மகனான நரசிம்மவர்மனும் பெருவீரனாகவே விளங்கினான். இலங்கைப் படையெடுப்பு, வாதாபியைக் கைப்பற்றி வெற்றித்தூண் நிலைநாட்டியது, கோவில்களும் கோட்டைகளும் அமைத்தமை என்று 35 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்தான். பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், அதன் பிறகு பரமேச்வர வர்மன் (15 வருடங்கள்), அதன் பிறகு ராஜசிம்ஹன். இவன் 20 ஆண்டுகள் ஆண்டான். இவன் காலத்தில்தான் காஞ்சீபுர கைலாசநாதர் ஆலயம் கட்டுவிக்கப்பட்ட து.  இவனுக்குப் பிறகு இரண்டாம் பரமேச்வரவர்மன் ஆண்டிருக்கவேண்டும், போரில் இறந்திருக்கவேண்டும். அவனது மகன் சிறுவனாக இருந்தாலும், எல்லைப்புற நாடுகள் படையெடுத்தால் ஒடுக்குமாறு அரசன் இருந்திருக்கவேண்டும் என்பதால், சிம்மவிஷ்ணுவின் தம்பியின் மரபில் வந்த 15 வயதுப் பையனான இரண்டாம் நந்திவர்மன் பல்லவ அரசனாக முடிசூட்டப்பட்டான்.  இவன் காலத்திலிருந்து பிற்காலப்பல்லவர்கள் முடிவுக்கு வந்து புதிய பல்லவர் மரபு ஆரம்பித்தது.  இவனே காஞ்சீபுரத்தில், பரமேச்வர விண்ணகரம் என்று அழைக்கப்பட்ட வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியவன். 7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது.

வைகுண்டநாதர் கோவிலின் வெளிச்சுற்றில் பல்லவ அரச மரபினரின் வரலாற்றைக் கூறும் வகையில் சிற்பத் தொகுதிகள் முழுவதுமாக உள்ளன. இதில் உள்ள சிற்பங்கள், இந்த இந்தச் சம்பவத்தைக் குறிக்கிறது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். நான் இந்தக் கோவிலுக்குச் சென்றபோது, பல்லவ அரச வரலாறு தெரியாது. அதனால் ஒவ்வொரு சிற்பத்தின் விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கவில்லை.

 
பல்லவ மரபினர் இப்போதும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்களா? கண்டிப்பாக. ஆனால் பதிவின் ஆரம்பத்தில் அவர்கள் தமிழர்கள் அல்லர் என்று கூறப்பட்டதே. அதுவும் உண்மைதான். ஆனால் ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்கு வரும்பொழுது, அவர்களுடன் வரும் பெரும் கூட்டமும் புதிய நிலத்தில் செட்டிலாயிருப்பார்கள். காலப்போக்கில் திருமண பந்தங்கள், மொழிமாற்றம், புதிய மொழி கலாச்சாரத்தைத் தழுவிக்கொள்ளுதல் என்று எல்லாமே ஏற்பட்டிருக்கும்.

அடுத்த வாரம், கடைசிப் பகுதியில் சந்திப்போம்.

95 கருத்துகள்:

 1. காலப்போக்கில் புதிய நிலத்தில் செட்டிலாகியிருக்கக்கூடும் என்றால், இந்த மண்ணின் மைந்தர்கள் யாராக இருக்கும்? பாண்டியர்கள் மாத்திரம்தானா?

  நம் காலத்திலேயே, தமிழகத் தலைநகர் என அறியப்படும் சென்னையில் ஆறில் ஒருவர்கூட சென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை.

  ஒரு நிலத்தைத் தன் வாழ்விடமாக்க் கொண்டு அந்த நிலத்தை முன்னேற்றுபவர்கள், அந்த வாழ்விடத்தின் வளர்ச்சிக்கு உழைப்பவர்கள் அனைவருமே அந்த நிலத்தின் மைந்தர்கள்தாம். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் வாழ்பவர்கள் அனைவருமே தபிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், பாண்டியர்கள் மட்டும் தான். ராமாயண காலத்திலும் மஹாபாரத காலத்திலும் பாண்டியர்கள் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. வடக்கே சூரிய வம்சமும், தெற்கே சந்திர வம்சமும் ஆண்டனர். இதில் பாண்டியர்கள் சந்திர வம்சம். பாண்டிய நாட்டின் எல்லைகள் அப்போது பெரிதாக இருந்ததாகவும் சொல்லுவார்கள். இதை எல்லாம் எழுதியும் குறிச்சும்வைச்சிருக்கேன் முதலில் வாங்கிய டெஸ்க்டாப்பில். பென் ட்ரைவில் இருக்கணும். தேடித்தான் பார்க்கணும். :(

   நீக்கு
  2. சோழர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களோட பதிவில் இது குறித்து விரிவாகப் பார்க்க முடியும்.

   நீக்கு
  3. இதில் 'வடக்கு' என்பது என்ன? மதுரைக்கு வடக்கா இல்லை காஞ்சீபுரத்திற்கு வடக்கா? ப்ரபந்தங்களில் 'வடதிருவேங்கடமலை' என்று குறிப்பிடப்படுகிறது.

   நீக்கு
  4. திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயில் சுற்று புத்தன் தெரு அக்ராஹாரத்திற்கு நோட்டீஸ். ஒரு மேம்பாலம் கட்ட முயற்சி. சுமார் 80 வீடுகள் இடிக்கப்படும்.

   Jayakumar

   நீக்கு
  5. நெல்லை, வடவேங்கடம் தென்குமரி, ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகத்து
   என்று தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில் பனம்பாரனார் பாடியிருக்கிறாரே, அது போல சிலப்பதிகாரத்திலும் அப்பொதைய தமிழகத்தின் எல்லை வடவேங்கட மலை, தென் குமரி என்றுதானே வரும், ஸோ வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றால் இந்த எல்லைக்கு வடக்கிலிருந்து என்று சப்ஜெக்டிவாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும் இல்லையா. அப்ப வடக்கு என்று கட்டுரையில் வருவது சரிதானே...

   கீதா

   நீக்கு
  6. அதுவேதான் பிரபந்தத்திலும் வருது

   கீதா

   நீக்கு
  7. திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயில் சுற்று புத்தன் தெரு அக்ராஹாரத்திற்கு நோட்டீஸ். ஒரு மேம்பாலம் கட்ட முயற்சி. சுமார் 80 வீடுகள் இடிக்கப்படும்//

   ஆ ஆ என்ன கொடுமை சரவணா?!?! ...புத்தன் தெரு தானே கோட்டையின் அடையாளமாக இருப்பது. அருமையான இடம். அத்தனை வசதிகளும். வீட்டில் சமைக்க முடியலைனா எட்டினாப்ல சாப்பாடு கிடைத்துவிடும். டிஃபன் கிடைத்துவிடும். கோட்டைக்குள் பிராபல்யமான இடம்,

   நல்ல காலம் என் தங்கை இருக்கும் இடம் இதை ஒட்டித்தான் என்றாலும் அது இடிபடாது இப்போதைக்கு அலல்து அந்த இடங்களும் கோவளம் ரோட்டோடு இணைக்கணும் என்று பாலம் கட்டிடுவாங்களோ தம்மாத்துட்னு நகரமே பாலங்களில் மட்டும் போக்குவரத்துன்னு ஆகிடுமோ....

   கீதா

   நீக்கு
  8. //புத்தன் தெரு// - 2ம் 3ம் புத்தன் தெருவில் இருந்த எங்கள் வீடு நினைவுக்கு வருகிறது.

   நீக்கு
 2. பாரத த்,துக்கே உரிய மதங்களில் (17 மதங்கள் இருந்தன என, ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நூலில் குறிப்பிடப்படுகிறது. அதில் அறுவகைச் சமயங்களே பிரதானம்) தன் மதம் பெரிது என்ற மதச் சண்டைகளும், போட்டி பொறாமையும் இருந்தன. எப்போதுமே குழுக்கள் என்று வந்துவிட்டாலே, போட்டி பொறாமை, சண்டைகள் இருக்கும். சைவ, வைணவர்களுக்கிடையிலும் (அறுவகைச் சமயங்களில் வேத்த்தை ஒத்துக்கொண்ட இரு பிரதான பிரிவுகள்) நிறைய பேதங்களும் மற்ற சமயத்தை ஒத்துக்கொள்ளாத போக்கும் இருந்தன. காலப்போக்கில் அந்த காழ்ப்புணர்ச்சி குறைந்து அறு மதங்களிலும் கலப்புகள் ஏற்பட்டுவிட்டன.

  பதிலளிநீக்கு
 3. அடுத்த வாரம் படங்கள் மாத்திரமே என நினைக்கிறேன். அதற்கு அடுத்தது என்ன என இன்று யோசிப்பேன்.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்.

  வாழ்க வாழ்க..

  பதிலளிநீக்கு
 5. மதுரை நீதி மன்றம் உத்தரவு இட்டிருக்கின்றதே...

  இனிமேல் இப்படியான படங்கள் கிடைக்கக் கூடுமோ!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயிலில் அலைபேசியை அனுமதிக்கக்கூடாது என்பது சரிதான். பெருமாளை தரிசனம் செய்வதைவிட, உடனே அலைபேசியில் காணொளி எடுக்கவே கூட்டம் மோதுகிறது. இறைவன் சன்னிதானத்தில் அமைதியாக அவனது திருவடியை நினைத்துத் தியானம் செய்ய அலைபேசி இடைஞ்சல்தான்.

   ஆனால் சிற்பக்கலை போன்றவற்றை, அனுமதி பெற்று (அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி) படமெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 6. ஞாயிறு பதிவு "பார்க்க" என்றிருந்தது. தற்போது அதுவும் "படிக்க, பார்க்க" என்று மற்ற தினங்களில் உள்ளது போல் மாறி விட்டது.மாற்றம் தேவை தான். 

  சரித்திர பாடமும் நல்லது தான். ஆனால் எது சரியான சரித்திரம்  எது தவறு என்பதில் மாறுபடலாம். மாறு படுகிறேன். 

  //ஆரம்பத்தில் வட இந்திய நாகரிகம் தமிழகத்தில் பரவினாலும், நாளாக நாளாக தமிழ் உயர்வு பெற்றது. வடக்கிலிருந்து தமிழகத்தில் பரவிய சமணமும் பௌத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுற்று தமிழ் சிறப்பு எய்த ஆரம்பித்தது. //

  இந்த இணைப்பு சரியானதாக எனக்குப் படவில்லை. மொழியும் மதமும் இணைக்கப் பட்டது  ஆங்கிலேயர் வரவுக்குப் பின்தான். சமணத்திலும் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளன. பெளத்தமும் தமிழும் பற்றி ஜம்புலிங்கம் ஐயா கருத்து கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன். 

  தமிழகத்தில் இரு வகை கோயில்கள் இருந்தன என்பது என் அனுமானம். மன்னர்கள் கட்டிய கோயில், மன்னர்கள் ஏற்கனவே இருந்த கோயில்களை புதுப்பித்த கோயில்கள். காலம் கடந்து நிற்பவை கற்றளிக் கோயில்கள், மற்றும் குடைவரைக் கோயில்கள். ஆகவே மன்னர் அல்லாதார் கட்டிய கோயில்கள் சிறப்பு குறைந்து விட்டது. 

  சைவம் காஸ்மீரத்தில் தோன்றியது என்பதை  ஜீரணிக்க முடியவில்லை. கைலாசம் தற்போதைய திபெத்தில் இருக்கிறது. ஆகையால் சைவத்தின்  பிறப்பிடம் இந்தியாவுக்கு அப்பால் எனலாமா? 

  கட்டுரை. விவரங்களுடன் ஓர் தேர்வுக்கு எழுதிய ஆய்வுக் கட்டுரையாக நன்றாக உள்ளது. 
  படங்கள் அழகாக தெளிவாக உள்ளன.  

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சைவத்தின் பிறப்பிடம் காஷ்மீர் தான் என நெல்லை குறிப்பிட்டிருப்பது சரியே! கயிலை திபெத்தில் இருந்தாலும் பாரத வர்ஷம் என்னும் அகண்ட பாரதத்தைச் சேர்ந்தது தான். வடக்கே ஆப்கானிஸ்தானில் தானே இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டு இன்று வரை பலரும் நாடோடிகளாகத் திரிகின்றனர். இது குறித்து எழுதப் போனால் வளர்ந்து கொண்டே போகும்.

   நீக்கு
  2. //தமிழகத்தில் பரவிய சமணமும் பௌத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுற்று தமிழ் சிறப்பு எய்த ஆரம்பித்தது// - உண்மை ஜெயக்குமார் சார். இந்த வரியில் ஒரு தவறு இருக்கிறது. சமணமும் பௌத்தமும் பரவிய காலங்களில் அந்த மதத்திற்குரிய காவியங்கள் தமிழில் இயற்றப்பட்டன. இருந்தபோதிலும், அந்த மதங்கள், சைவ சமயத்தைச் சார்ந்த அரசர்களால் ஒடுக்கப்பட்டதால் (அதாவது ஆதரிப்பது நின்றுபோய் விட்டதால்) இலக்கிய வளர்ச்சி மங்கிவிட்டது. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழில் பெரும் வளர்ச்சி பெற்றது

   நீக்கு
  3. //மன்னர்கள் கட்டிய கோயில், மன்னர்கள் ஏற்கனவே இருந்த கோயில்களை புதுப்பித்த கோயில்கள்.// - இரண்டு வகையான கோவில்களும் இருந்தன. இருந்தாலும், பாடல் பெற்ற கோவில்கள் என்பவை தொன்மையானவை.

   நீக்கு
 7. உங்களுடைய ஞாயிறு பதிவை நீதிபதிகளும் பார்க்கிறார்கள் போல் உள்ளது. கோயில்களில் செல்போனுக்கு தடா! உத்தரவு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கெனவே மதுரை மீனாக்ஷி கோயிலில் செல்ஃபோனை வண்டியில் சென்றால் அதிலே தான் வைக்கணும். அப்படி வண்டியில் செல்லாதவர்கள் அங்கிருக்கும் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். ஸ்ரீரங்கத்திலும் கட்டுப்பாடு இருந்தது. இப்போ 3 வருஷங்களாகப் போகாததால் தெரியலை. வடக்கே உள்ள அனைத்துக் கோயில்களிலும் செல்ஃபோனுக்குத் தடை உண்டு. சோம்நாத்தில் கோயிலுக்கு வெளியே பல லாக்கர்கள் இருக்கும். அங்கே இருக்கும் அலுவலரிடம் சாவி பெற்றுக்கொண்டு அந்த லாக்கர்களில் நாம் கொண்டு போகும் பொருட்களை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை நாம் எடுத்துக்கொண்டு போய்த் தரிசனம் செய்த பின்னர் பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொண்டு சாவியை ஒப்படைக்க வேண்டும். சென்ற மாதம் சென்ற என் மைத்துனரும் இதை உறுதி செய்தார்.

   நீக்கு
  2. இது, இறைவனை வணங்கவிடாமல், அலைபேசியை முகத்தின் முன்பு நீட்டி காணொளி எடுப்பவர்களினால் கடுப்பான நீதிபதிகள் போட்ட உத்தரவாக இருக்குமோ? அலைபேசிக்குத் தடா என்பது சரிதான். ஆனால் அவற்றை பத்திரமாக வாங்கி, பிறகு வெளியில் வரும்போது கொடுக்க என்று பெரும் உழைப்பு தேவைப்படும்.

   நீக்கு
 8. //காஷ்மீர், சைவ சமயத்தின் பிறப்பிடமாகக் கொள்ளப்படுகிறது.//

  இப்படியான விவரத்தை இப்போது தான் படிக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஷ்மீர் பெயர்க்காரணமே அது கஷ்யப முனிவரின் இடம் என்பதாலேயே! அவர் மூலமே அனைத்துப் பிறப்புகளும் ஏற்பட்டது என்பார்களே! அவர் சிவபக்தி மிகுந்த முனிவர். ஆகவே அங்கே தான் சைவம் தோன்றி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காக்ஷ்மீரி சைவம் மிகவும் பிரபலமானதும் கூட.

   நீக்கு
  2. இது உண்மையான விவரம்தான். ஆதிசங்கரர் வரலாற்றிலிருந்தும் நாம் அறிந்துகொள்ளலாம்

   நீக்கு
 9. படங்கள் எல்லாம் அழகு..

  கோயில்களில் படம் பிடிக்கக் கூடாது என்ற உத்தரவை சம்பந்தப்பட்ட துறை உடனடியாக செயல் படுத்தும் என நினைக்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எது சுலபமோ, அதனை உடனடியாகச் செயல்படுத்திவிடுவார்கள். அதற்குப் பதில், அலைபேசியைக் கொண்டு சென்றால், 100 ரூபாய் கட்டணம் என்று வைத்தால், கோயிலுக்கு வருமானம் சேரலாம்.

   நீக்கு
 10. நீண்ட வருடங்களுக்குப் பின்னர் இப்படியான ஓர் அறிவு சார்ந்த அதே சமயம் பக்தியும் சார்ந்ததொரு கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவது நெல்லையினால். இப்போது தான் மறுபடி இணையத்துக்கு வரவும் ஆர்வம் அதிகரித்துள்ளது. குழுமங்களிலிருந்து விலகிய உடன் கொஞ்சம் மனதில் வெற்றிடம் ஏற்பட்டது உண்மையே. ஆனால் அங்கே கருத்துப் பரிமாற்றம் என்னும் பெயரில் நடந்த சண்டைகள், ஒரு குறிப்பிட்ட இனத்தையே குற்றம் சொல்லுதல் ஆகிய போக்கினால் நீடித்து இருக்க முடியலை. இப்போக் கடந்த ஒரு மாதமாக ஞாயிறு என்று வரும் என்னும் ஆவலைத்தூண்டும் விதமாக நெல்லையின் பதிவுகள். அதிலும் அவர் நன்கு ஆய்வு செய்து எல்லாவற்றையும் சொல்லுவதால் நம்முடைய ஆர்வமும் அதிகரிக்கிறது. ஆனால் இது சரித்திரத்தில் ருசி உள்ளவர்களுக்கு மட்டுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /இப்போக் கடந்த ஒரு மாதமாக ஞாயிறு என்று வரும் என்னும் ஆவலைத்தூண்டும் விதமாக நெல்லையின் பதிவுகள். அதிலும் அவர் நன்கு ஆய்வு செய்து எல்லாவற்றையும் சொல்லுவதால் நம்முடைய ஆர்வமும் அதிகரிக்கிறது. ஆனால் இது சரித்திரத்தில் ருசி உள்ளவர்களுக்கு மட்டுமே!/

   உண்மை சகோதரி. உங்கள் அளவுக்கு வார்த்தைகளை கொண்டு அவரின் இந்த செயலை சிறப்பிக்க எனக்குத் தெரியவில்லை. ஆனால் பல சரித்திர வரலாற்றுகளை நினைவுக்குள் கொண்டு வந்து தரும் அவரின் இந்த ஞாயிறு பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றியும்.

   நீக்கு
  2. நன்றி கீசா மேடம். இந்த மாதிரி டாபிக்கெல்லாம் விவாதித்து முடிவுக்கு வரமுடியாது. அவரவர் தாங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தால்தான் உண்டு.

   நீக்கு
  3. நெல்லை அதே அதே....வரலாறுமே மாறி மாறித்தானே சொல்லப்பட்டிருக்கிறது...

   கீதா

   நீக்கு
 11. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது. படித்து மறந்து போன நிறைய சரித்திர விபரங்களை அறிந்து கொண்டேன். படங்களும், அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது. சென்னையிலிருந்த போது, ஒரு முறை மாமல்லபுரம் சென்று குடைவரைச் சிற்பங்களை ரசித்துப் பார்த்து வந்தோம். அப்போது பல்லவர்கள் ஆட்சி, மற்றைய சரித்திர விபரங்கள் அனைத்தும் நன்றாக நினைவுக்குள் இருந்தன. காலச்சுழற்சியில், நினைவிலிருந்து நழுவி விட்டவை இப்போது உங்கள் எழுத்து மூலமாக மீண்டும் படிக்கும் போது அச்சிறப்பான வரலாற்றுக்கள் நன்றாக மனதுக்குள் பதிகிறது. அருமையாக சரித்திர வரலாற்றுகளை அந்தந்த கோவில் படங்களுடன் பதிவையும் தொகுத்து தருவதற்கும்/தந்ததற்கும் மிக்க நன்றி.

  எனக்கு இரு தினங்களாக சற்று உடல்நல குறைபாடு. அதனால் பதிவுகளுக்கு தொடர்ந்து வர இயலவில்லை. உங்களுக்கு அனைவரும் தந்த திருமணநாள் வாழ்த்துகளை கடந்த வெள்ளியின் பதிவில் பார்த்தேன்.

  உங்களுக்கு தாமதமான என்னுடைய வாழ்த்துக்களும். நீங்களும், உங்கள் மனைவியும் சீரும் சிறப்புமாக இன்று போல் என்றும் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். இன்றைய அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னிக்குத் தான் நெல்லையின் திருமணநாள். நாங்கல்லாம் முன் கூட்டியே அவசரப்பட்டு வாழ்த்தி விட்டோம். எல்லாம் இந்த கூகிள் மெயிலால் வந்தது. அது இரண்டாம் தேதியே நெல்லையின் திருமண நாள்னு சொல்லி என்னை உசுப்பி விட்டது.

   நீக்கு
  2. Geetha Sambasivam "நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் பகுதி 2 :: நெல்லைத்தமிழன்” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

   இன்னிக்குத் தான் நெல்லையின் திருமணநாள். நாங்கல்லாம் முன் கூட்டியே அவசரப்பட்டு வாழ்த்தி விட்டோம். எல்லாம் இந்த கூகிள் மெயிலால் வந்தது. அது இரண்டாம் தேதியே நெல்லையின் திருமண நாள்னு சொல்லி என்னை உசுப்பி விட்டது.

   நீக்கு
  3. இப்போது உடல் நலம் சரியாகிவிட்டதா கமலா ஹரிஹரன் மேடம்?

   நீங்கள் தாமதமாக வாழ்த்தவில்லை. இன்றுதான் எங்கள் திருமண நாள். உங்கள் ப்ரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி

   நீக்கு
  4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

   அட...! நான் சரியான நாள்தான் வாழ்த்துகள் தெரிவித்திருக்கேனா? கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடமும் இதே போன்ற ஒரு குழப்பம் வந்தது என்ற நினைவு.
   வாழ்வில் நல்ல நினைவுகளுடனான சம்பவங்கள் இப்படி நிறைய நாட்கள் வாழ்த்துகளைப் பெறுவதும் ஒரு சிறப்பான விஷயந்தானே...! மீண்டும் தங்களுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.

   என் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தமைக்கு மிக்க நன்றி. இன்னமும் சரியாகவில்லை. "சதி லீலாவதி" படத்தில் வரும். ரமேஷ் அரவிந்த் மாதிரி நான்கு நாட்களாக சிரமபடுகிறேன். "ஊர்வன" வகைகள் என் வலியுடன் கூடிய நடையைப் பார்த்தால் இதுவும் நம் ஜாதி போலும் என நினைக்கும்.:)))) ஆனாலும் நேற்றிலிருந்து வீட்டிலேயே சுத்தமாக நடக்கவே இயலவில்லை. என்ன ஆகிறதோ? பார்க்கலாம்.. . எல்லாம் "அவன் விட்ட வழி" . அந்த "வழியில்" நாம் அனைவரும் நடந்துதானே ஆக வேண்டும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. இது தரையின் பிரச்சனையாலா? (நான் பெங்களூர் வந்தபிறகு வீட்டிற்குள் ஒரு செருப்பை உபயோகிக்கிறேன்). நான் ஒரு 'walking club whatsapp'ல் சேர்ந்தபிறகு அக்டோபர் கடைசி வாரத்திலிருந்து ஒரு நாளைக்கு 11,000 ஸ்டெப்ஸ் நடக்கிறேன். கீதா ரங்கன்(க்கா)கூட 1 மணி நேரம் ஒரு நாள் நடந்தால் போதும், இல்லைனா, மூட்டுவலி பிற்காலத்தில் வரும் என்று பயமுறுத்தியிருக்கிறார்.

   எனக்கென்னவோ அப்போதைய கிரக நிலைக்கு ஏற்றவாறுதான் நமக்குப் பிரச்சனைகள் வரும், பிறகு சரியாகிவிடும் என்று தோன்றுகிறது.

   நன்றி

   நீக்கு
  6. கமலாக்கா எப்படி இருக்கீங்க? நலமா...

   கீதா

   நீக்கு
  7. Take Care Kamala.ஒரு அகலமான பாத்திரத்தில் பொறுக்குமளவு சூட்டில் வெந்நீர் எடுத்துக் கொண்டு ஒரு கைக் கல் உப்புச் சேர்த்து அதில் பாதங்களை சுமார் 20 நிமிடம் அமிழ்த்தி வையுங்கள். கால் பாதங்களில் வீக்கம் இருந்தால் மாத்திரைகள் கட்டாயமாய் எடுத்துக்கணும். அசட்டுத்தனமாய்க் கை வைத்தியம்னு செய்யாமல் கண்டிப்பாம மருத்துவரிடம் போங்கள் அல்லது வரவழைத்துப் பாருங்கள்.

   நீக்கு
  8. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   நலமாகத்தான் உள்ளேன். தீடிரென இடுப்பில் ஒரு வலியுடன் கூடிய பிடிப்பு நான்கு நாட்களுக்கு முன் வந்து விட்ட காரணமாக குனிய, நிமிர, நடக்க சுத்தமாக இயலவில்லை. படுத்தே இருந்தால் வலி தெரியாமல் உள்ளது. நாள் முழுக்க படுத்துக்கவும் பிடிக்கவில்லை.

   என்னவோ போங்க..!! ரேவதி நட்சத்திரகாரர்களை மாறி, மாறி இப்போ ஒன்று மாற்றி ஒன்றாக பாடாக படுத்துகிறதாம். ஆனால், முன் ஜென்ம வினைகளை எப்படியும் அனுபவித்துதானே ஆக வேண்டும். விரைவில் சரியாகி விடுமென இறை நம்பிக்கை உள்ளது.

   இப்படி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, உங்களனைவரது ஆறுதல்கள் விரைவில் குணமாக்கி விடுமென்ற ஒரு தகர்க்க முடியாத நம்பிக்கையும் வருகிறது. தங்களது அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   நீக்கு
  9. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   தங்களது அன்பான விசாரிப்புக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி.

   கால்களில் வீக்கம் இல்லை. நான் மேலே கூறியபடி பிடிப்பு காரணமாக வலி. வீட்டிலேயே நடக்க, நகர சிரமபடுகிறேன். அதற்கென்னவோ என்னைப் பிடித்துப் போய் நான்கு நாட்களாக எத்தனையோ தைலங்கள், மருந்துகள் பயன்படுத்தியும் போவேனா என்கிறது. தினமும் இங்கு குளிக்க வெந்நீர்தான். தங்கள் ஆலோசனைபடியும் செய்து பார்க்கிறேன். தங்களது ஆறுதலான விசாரிப்புக்கள் என்னை விரைவில் குணப்படுத்தி விடுமென்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு. நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  10. கமலாக்கா உங்கள் விரிவான தகவலுக்கு மிக்க நன்றி. விரைவில் ஒரு பதிவு சில பகுதிகளாக வெளிவரும் வாய்ப்பு உண்டு. நாம் கொஞ்சம் சின்ன வயதிலிருந்தே ஒரு சில பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். எனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறேன். பெண்கள் நாம் குறிப்பாக நம் உடல் நலனைக் கவனத்தில் கொள்வதில்லை.

   கமலாக்கா எதுவானாலும் ஒரு மருத்துவரைக் கண்டுவிடுங்கள்....லேட் பண்ணாதீங்க. உங்கள் பிடிப்பு எப்படி என்று தெரியவில்லை. பார்த்தால், தெரிந்து கொண்டால் உங்களுக்குச் சில பயிற்சிகளைச் சொல்லலாமே என்று.

   கீதா

   நீக்கு
  11. அரிசி களைந்த முதல் கழுநீரைச் சுட வைத்து அதில் உப்புச் சேர்த்துப் பொறுக்கும் சூட்டில் இடுப்பில் வலி இருக்குமிடத்தில் எண்ணெயைத் தடவிக்கொண்டு விட்டுக் கொள்ளுங்கள்.

   நீக்கு
 12. http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/13.html
  http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/11.html
  ஜெயஸ்ரீ சாரநாதனின் ஆய்வுக் குறிப்புக்களை இங்கே காணலாம்.எனக்குச் சந்தேகம் வந்தால் இவர் பதிவுகளின் மூலமே தெளிவு பெறுவேன். இவரும் சுமார் 20 வருடங்களாக எழுதி வருகிறார். இவரின் திருவாதிரை குறித்த பதிவுகள் அதி அற்புதம்!

  பதிலளிநீக்கு
 13. Geetha Sambasivam "நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் பகுதி 2 :: நெல்லைத்தமிழன்” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

  http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/13.html
  http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/11.html
  ஜெயஸ்ரீ சாரநாதனின் ஆய்வுக் குறிப்புக்களை இங்கே காணலாம்.எனக்குச் சந்தேகம் வந்தால் இவர் பதிவுகளின் மூலமே தெளிவு பெறுவேன். இவரும் சுமார் 20 வருடங்களாக எழுதி வருகிறார். இவரின் திருவாதிரை குறித்த பதிவுகள் அதி அற்புதம்!

  பதிலளிநீக்கு
 14. Geetha Sambasivam "நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் பகுதி 2 :: நெல்லைத்தமிழன்” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

  Geetha Sambasivam "நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் பகுதி 2 :: நெல்லைத்தமிழன்” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

  http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/13.html
  http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/11.html
  ஜெயஸ்ரீ சாரநாதனின் ஆய்வுக் குறிப்புக்களை இங்கே காணலாம்.எனக்குச் சந்தேகம் வந்தால் இவர் பதிவுகளின் மூலமே தெளிவு பெறுவேன். இவரும் சுமார் 20 வருடங்களாக எழுதி வருகிறார். இவரின் திருவாதிரை குறித்த பதிவுகள் அதி அற்புதம்! 3rd time posting. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீசா மேடம். வர வர, நீங்களும் தமிழ்க்கவிஞர்கள் போல ஆரம்பித்துவிட்டீர்கள். அவங்கதான் கவிதையில் ஒரு வரியை வாசித்து, அதனை இரு முறை வாசிப்பார்கள், ஏதோ கேட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் செவிடர்கள் என்பதுபோல. ஆனால் உங்களுக்கு கூகுள் தொந்தரவால், ஒரு முறை வந்த கருத்து இரண்டு முறை வருகிறது போலும்.

   நீக்கு
 15. @ கீதாக்கா..

  //வடக்கே ஆப்கானிஸ்தானில் தானே இந்துக்கள் விரட்டி யடிக்கப்பட்டு இன்று வரை பலரும் நாடோடிகளாகத் திரிகின்றனர். இது குறித்து எழுதப் போனால் வளர்ந்து கொண்டே போகும்.//

  இது குறித்து எழுத வேண்டாம்... யாரும் இவர்களை விரட்டியடிக்கவில்லை.. துன்பப்படுத்தவில்லை.. இனப்படுகொலை எதுவும் செய்யவில்லை. இவர்களே மாற்றானை உறவென்று நம்பி இவர்களாகவே நாசமாகிப் போனார்கள்.. அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.. அப்படியே சொல்லிக் கொண்டிருப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது விவாதத்துக்கு உரிய கருத்து. தாங்களாகவே, மாறுவதால் ஏற்படும் நன்மைகளை எண்ணி மாறியவர்கள், வாளின் முனையில் மாறியவர்கள் என்று பல்வேறு காரணிகள் உண்டு. அந்தத் தலைமுறைக்கு அடுத்த இரண்டாவது தலைமுறை முளைத்து எழும்போது அவர்களுக்கு தாங்கள் பிறந்த மதம் மட்டும்தான் தெரியும்.

   நீக்கு
  2. அதைப் படிச்சால் வயிறே எரியும் நெல்லை. மனசு வேதனைப்படும்.

   நீக்கு
  3. //அதைப் படிச்சால் வயிறே எரியும் நெல்லை.// - உண்மைதான். இருந்தாலும் சமணர்களைக் கழுவேற்றியது, வைணவப் பெரியோர்களுக்குத் துன்பம் விளைவித்த சோழமன்னன் என்று வரலாற்றில் பலப் பல பக்கங்கள் இருக்கின்றன. பொது ஆண்டு 1300களில், அதற்குப் பிறகு, இந்திய நிலத்துக்குச் சம்பந்தமில்லாத கொடுங்கோலர்கள் செய்த துன்பங்கள் என்னவோ நமக்கு வேதனையளிக்கிறது. அதன் காரணம், அவர்கள் நாகரீகமற்ற வெளியாட்கள் என்ற எண்ணமே

   நீக்கு
  4. //சமணர்களைக் கழுவேற்றியது, வைணவப் பெரியோர்களுக்குத் துன்பம் விளைவித்த சோழமன்னன் என்று வரலாற்றில் பலப் பல பக்கங்கள்//இந்தச் சமணர்களைக் கழுவேற்றிய விவகாரம் குறித்து மின் தமிழ்க்குழுமத்தில் விவாதங்கள் நடைபெற்றன. இனிய நண்பர் திரு தேவ் அவர்கள், (பணி ஓய்வு! ஸ்டேட் வங்கி மைசூர்) அவரும் திருநெல்வேலிக்காரர், வைணவப் பெரியவர் நன்கு அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். அதே போல் கிருமி கண்ட சோழன் பற்றியும் எழுதி இருக்கார். பாரபட்சமின்றி எழுதுபவர். உண்மையைத் தவிர வேறே எழுத மாட்டார். இதைத் தவிர்த்தும் நீங்க காலம் சென்ற திரு நாகசாமி/தொல்லியல் துறை அவர்கள் எழுதிய Ramanuja? The Myth! புத்தகத்தைக் கிடைத்தால் ஒரு முறை படித்துப் பார்க்கவும்.

   நீக்கு
  5. ஆனால் கீழே நீங்க சொல்லி இருக்காப்போல் நாம் நமக்குச் சாதகமானவற்றை மட்டுமே எடுத்துப்போம். அது உண்மை தான்.

   Ramanuja! The Myth! question mark typo!

   நீக்கு
 16. இன்று எனக்குத் திருமண நாள் (எத்தனையாவது என்று சொல்லிவிட்டால் கீதா ரங்கன்(க்கா) என்னைவிட எவ்வளவு பெரியவர் என்று எல்லோருக்கும் தெரிந்துபோய்விடும்). சென்ற பதிவிலும் எபி வாட்சப் குழுமத்திலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நெல்லைத்தமிழன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹாஹா நெல்லை.....இத்தானே வேண்டான்றது. இப்படி என்னை வம்புக்கு இழுக்கலைனா.....எங்க அண்ணனுக்குத் தூக்கமே வரதாக்கும்!!!!!

   எத்தனை முறை வாழ்த்தினால் என்ன....மனமார்ந்த இனிய வாழ்த்துகள் நெல்லை!

   சரி என்ன ஸ்பெஷல் பண்ணீன்ங்கன்னு சொல்லுங்க. பொண்ணு கேக் பண்ணினாங்களா? இல்லை வேற ஏதாச்சும் ஸ்பெஷல் பண்ணினாங்களஆ?

   கீதா

   நீக்கு
  2. என் கருத்துகள் சில காணவில்லை. ஒளிந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்

   இங்கு போட்டிருந்த கருத்து...காணலையே

   கீதா

   நீக்கு
  3. நேரம் கிடைக்கும்போது கேஜிஜி சார் வலை வீசித் தேடி, மறைந்த கருத்துக்களை எடுத்துப் போடுவார். காத்திருப்போம்.

   நீக்கு
 17. // இன்னிக்குத் தான் நெல்லையின் திருமணநாள்.//

  அப்படியா?..
  அதனால் என்ன!..
  இன்னொருமுறையும் வாழ்த்தி விடுவோம்..

  வாழ்த்த வாழ்த்த வைரக்கல் ஆயிற்றே!..

  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நலமுடன் வாழ்கவே தம்பதியினர்!..

  பதிலளிநீக்கு
 18. //அலைபேசியைக் கொண்டு சென்றால், 100 ரூபாய் கட்டணம் என்று வைத்தால், கோயிலுக்கு வருமானம் சேரலாம்.//

  சேரும் வருமானத்தை அவுங்களுக்கும் இவுங்களுக்கும் பங்கு வச்சிக் கொடுக்கலாம்...

  நீ அவல் கொண்டு வா.. நான் உமி கொண்டு வர்றேன். ரெண்டையும் கலந்து ஊதி ஊதி திங்கலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயில்களின் உண்மையான பிரச்சனை என்று நான் கருதுவது, கோயிலின் வளர்ச்சிக்காக உண்டியலில் வரும் பணம், அரசின் அலுவலர்களுக்கான புதிய கார்கள், வசதிகள் என்று மடை மாற்றப்படுகிறது. அந்த அலுவலர்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால் கோவிலில் வேலைபார்ப்பவர்களுக்குப் பிரச்சனை. கோயில்களின் பாரம்பர்யத்தைக் கெடுக்க இந்த அரசு உழைக்கிறது.

   நீக்கு
 19. நெல்லை செம விளக்கமான தகவல்களை ஆய்ந்து கொடுத்திருக்கீங்க. நல்ல உழைப்பு. வாழ்த்துகள் பாராட்டுகள். வித்தியாசமான ஞாயிறாக வருகிறது.

  படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. சிற்பங்கள் ஈர்க்கின்றன.

  கீதா

  பதிலளிநீக்கு
 20. வரலாறு பிடிக்கும். மண்டையில் ஏற்றிக் கொள்ளத்தான் இப்போது முடிவதில்லை. அடுத்தடுத்து வேலைகள், சாப்பாடு, பிரச்சனைகள் இப்படியே உழல்கிறது.

  இதை வாசித்த போது சென்னையில் இருந்தப்ப கோட்டூர்ப்புரம் பெரிய நூலகத்திற்குச் செல்வதுண்டு அடிக்கடி. அப்போது பண்டைய தமிழக, தமிழர் வரலாறு புத்தகம் ஒன்று வாசித்த போது பௌத்த சமணம் சைவம் வைணவம் பரவியதும் மன்னர்கள் குறித்தும் வாசித்தேன் அது இப்போது நிழலாக நினைவுக்கு வந்தாலும் இப்போது எடுத்துச் சொல்லும் அளவுக்கு நினைவுக்கு வரலை நெல்லை. அந்த அளவிற்கு மூளை மோசமாகி வருகிறது!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வப்போது தேவையானபோது சரித்திரம் படிக்கும்போது ரொம்பவே ஆர்வமாக இருக்கும். அதுக்காக மனனம் பண்ண முடியுமா? தற்காலத்தில் எல்லா இந்திய மதங்களுமே கலந்துபோய்க் கிடக்கின்றன

   நீக்கு
  2. ஆமாம் நெல்லை என் வரையில் உங்க கருத்து டிட்டோ....ஆர்வம் உண்டு ஆனால் மண்டையில் பதிய மறுக்கிறது..மனனம் என்று இல்லை...

   கீதா

   நீக்கு
 21. தமிழகத்தில் பாண்டியர்கள் மட்டுமே தமிழர்கள் என்றும், சோழர், பல்லவர் எல்லாருமே அல்லர் பண்டைய தமிழகத்தின் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றே வாசித்த நினைவு,

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் இப்படி துரை செல்வராஜு சாரை வம்புக்கு இழுக்கறீங்க? (ஹா ஹா ஹா). நீங்க சொல்ற பிரகாரம், நெல்லையும் மதுரையும்தான் தமிழர்கள் இருந்த பகுதி என்று ஆகிவிடுகிறதே. (அதாவது நெல்லைத் தமிழன், கீதா சாம்பசிவம் மேடம், ஸ்ரீராம், கில்லர்ஜி போனாப்போகுதுன்னுகூட உங்களைச் சேர்த்துக்க முடியாது)

   நீக்கு
  2. நான் கொடுத்திருக்கும் சுட்டிகளில் போய்ப் படிங்க. சோழர்கள் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது தெரியும். முக்கியமாகச் சோழ நாட்டை ஸ்தாபித்தவர் சிந்துவிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். வடக்குனா திருமலை/திருப்பதி எல்லாம் இல்லை.

   நீக்கு
  3. வாசிக்கிறேன் கீதாக்கா. குறித்துக் கொண்டுவிட்டேன்

   கீதா

   நீக்கு
  4. இப்படீல்லாம் எழுதப்படாது கீசா மேடம். எப்போதும் பாப்புலர் கருத்துக்களையே எழுதணும். ஆரியர்கள் மாத்திரம் சிந்துவிற்கு அந்தப் பகுதியிலிருந்து வந்தவங்க. அவங்க, திராவிடர்களை அடிமைப்படுத்தி, மூளைச் சலவை செய்து, அவர்களுக்கு உரியன எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டாங்க. திராவிட அரசர்களுக்கு வீரம் மாத்திரம்தான் இருந்தது. மூளை கிடையாது. அதனால் ஆரியர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். அந்த ஆரியர்களைத் தவிர, பிற திராவிடர்களுக்கு படிப்போ, சிந்தனையோ, மூளையோ எப்போதுமே இருந்ததில்லை. 1960லேர்ந்துதான் திடும் என்று... இப்படித்தான் எழுதணும். நீங்க என்னடான்னா......

   நீக்கு
 22. // கோயிலின் வளர்ச்சிக்காக உண்டியலில் வரும் பணம் //

  எவ்வித முதலீடும் இல்லாமல் வருகின்ற வருவாய்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைப்பற்றி விவரமாக எழுதினால் அரசியல் கருத்துக்களாகிவிடும் அபாயம் இருக்கிறது. கோவிலுக்காக பக்தர்கள் கொடுக்கும் பணம், கோவில் சம்பந்தமில்லாமல் செலவழிக்கப்படுகிறது

   நீக்கு
  2. ஆமாம்..
   ஆமாம்..

   நமக்கும் குடும்பம் இருக்கின்றதே..

   பெரிய பெரிய சந்நியாசிகளே சும்மா இருக்கும் போது நமக்கு எதுக்கு ஊர் வம்பு?..

   நீக்கு
 23. @ கமலா ஹரிஹரன்..

  // ஊர்வன" வகைகள் என் வலியுடன் கூடிய நடையைப் பார்த்தால் இதுவும் நம் ஜாதி போலும் என நினைக்கும் .:))) //

  சோதனையிலும் வேதனையிலும் நகைச்சுவை..

  அடடா!..

  தங்களது வேதனைகள் சீக்கிரம் தீரட்டும்..

  வேண்டிக் கொள்வோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

   தங்கள் அனைவரது வேண்டுதல்களும் , விருப்பங்களும் விரைவில் என்னை எந்த வலியிலிருந்தும் குணமாக்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. . தங்களது அன்பான வேண்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரரே. 🙏.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 24. ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களும் சில நாட்களாக வரவில்லை..

  கோவைக்குச் சென்றிருக்கின்றார்கள் போல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. நானும் சகோதரி கோமதி அரசு அவர்களை சில நாட்களாக எங்கும் காணவில்லையே என நினைத்திருந்தேன். இன்று அவர்களைப் பற்றி விபரங்கள் தெரிந்த உங்களனைவரிடமும் கேட்க வேண்டுமெனவும் நினைத்தேன்.

   கோவைக்குத்தான் சென்றுள்ளார்கள் என்று தாங்கள் தந்த விபரத்திற்கு நன்றி சகோதரரே.

   நீக்கு
 25. இறையைப் பற்றி சொல்லும் போது கண்டவர் விண்டிலர், விண்டிலர் கண்டிலர் என்று சொல்வது போல், மதங்கள், வரலாறு இது போன்றவைகளிலும் நாம் அறிந்த தெரிந்தவைகளில் உண்மைகள் இருக்கலாம் ஆனால் அதுமட்டும்தான் உண்மை என்று சொல்ல முடியாத நிலை. அதனால்தான் இப்போதெல்லாம் இது பற்றி பேசக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. பல்லவர்கள் பற்றி அரிய தகவல்கள். அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை, நெல்லைத்தமிழன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் துளசிதரன் சார்.... நமக்குச் சாதகமான விஷயங்களை வைத்துக்கொண்டு, பொழுதுபோக்க அல்லது அடுத்தவங்களை ஏளனம் பண்ணுவதற்கு, வரலாறு/மதத்தைப் பிடித்துத் தொங்கிவிடுகிறோம். 'நான் பெரியவன், என் நம்பிக்கை பெரியது' என்ற மனித மனத்தின் இயல்பு அது. இதுவே கொஞ்சம் வீறுகொண்டு எழும்போது, என் மதத்தில்/நம்பிக்கையில் நீ சேரவில்லை என்றால், என்னுடைய எதிரி நீ என்ற அளவிற்குச் சென்றுவிடுகிறது.

   நீக்கு
 26. இல்லற வாழ்வில் எல்லா நன்மைகளும் பயக்க இறை அருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன், நெல்லைத் தமிழன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 27. நல்லதோர் கட்டுரை படங்களும் நன்று. பலரும் பல தகவல்களை பரிமாறியுள்ளார்கள்.

  பதிலளிநீக்கு
 28. இந்தப் பதிவில் ---

  மொழி
  சமயங்கள்
  பற்றிய விவரிப்புகளில்
  எனக்கு பல மாறுபட்ட கருத்துக்கள்.
  அதையெல்லாம் விவரித்து விளக்கங்கள்
  கொடுக்க இந்த பின்னூட்ட பாணியும்
  சரிப்பட்டு வராது ஆதலால் இந்தப் பதிவை வாசித்தும் பின்னூட்டமிடவில்லை.
  ஒரு தகவலுக்காக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜீவி சார். உங்கள் கருத்தைக் குறிப்புகளாக எழுதியிருக்கலாம்.

   நீக்கு
 29. நல்லது நெல்லை. ஒரு கட்டுரை மாதிரி எழுதி எபியில் பிரசுரிக்க முயல்கிறேன். இந்தக் குறிப்பை கேஜிஜியும் ஸ்ரீராமும் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 30. அருமையான பதிவு. கோயில் தரிசனத்துடன் வரலாறும் சொன்னது அருமை.
  பயண கட்டுரை பயனுள்ள தகவல்கள் உள்ளது.

  நம் வலை அன்பர்கள் படும் உடல் துன்பமும் அறிந்தேன். அந்த துன்பத்திலிருந்து விடுபட சொன்ன குறிப்புகளும் அருமை.
  எனக்கும் பயன்படும்.

  நானும் இடுப்பு, முட்டி, கால் வலியில் அவதி படுகிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!