சனி, 24 டிசம்பர், 2022

நூறு ​ஏரி, நூறு குளம் மற்றும் நான் படிச்ச கதை=========================================================================================================


=============================================================================================================


==============================================================================================================


===============================================================================================================
=========================================================================================================== 

நான் படிச்ச கதை (JK)

அப்படித்தான்அதுஎனக்குக் கிடைத்தது!

கதையாசிரியர்: புஷ்பா தங்கதுரை

 

முன்னுரை


எச்சரிக்கை!!

இன்றைய கதை வயது வந்தவர்களுக்கு மட்டும். (வயது போனவர்களும் படிக்கலாம்). ஆகவே 18 வயதுக்குட்பட்டவர்கள் விலகிக் கொள்ளலாம். (அதைத்தானே நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்கிறோம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.)

ஸ்ரீ வேணுகோபாலன் யார் என்று தெரிந்திருந்தால் உங்களுக்கு புஷ்பா தங்கதுரையைப் பற்றியும் தெரிந்திருக்கும். பக்தி/சரித்திர/வரலாற்று கதைகளை எழுதும் ஸ்ரீ வேணுகோபாலன் தான்என் பெயர் கமலாபோன்ற சிவப்பு விளக்குத் தொடர் கதைகளை எழுதிய புஷ்பா தங்கதுரை.

இந்த கதையை, கதை என்பதா? நிஜம் என்பதா? இப்படியும் நடக்குமா? இப்படியும் நடந்ததா? என்ற கேள்விகளுக்கு நீங்களே பின்னூட்டத்தில் கூறினால் நன்றியுடையவனாவேன்.

இவர் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் எழுதிய ஒரு வரலாற்று சிறுகதை அடுத்த வாரம்.

 

அப்படித்தான்அதுஎனக்குக் கிடைத்தது!

 

- கோவிண்ட்! என்றார் மேனேஜர்.

 - யெஸ் சார்! என்றேன்.

- நாலு மணிக்கு ஏர்போர்ட் போகணும்.

- யெஸ் சார்!

-குணரத்னம் வர்றார். அடிஷனல் ஜாயின்ட் செக்ரெட்டரி! ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி! பெரிய புள்ளி!

- யெஸ் சார்!

- நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறார்.

- யெஸ் சார்!

- ‘கிளாஸ் வசதி கொடுக்கணும்!

வால்யூம் குறைத்துயெஸ் சார்! என்றேன்.

- என்ன, சுருதி இறங்குது?

- சார்! என்னைக் கொஞ்சம் பாருங்க!

பார்த்தார். அரை செகண்ட் அதிர்ச்சி.

- இன்னும் நீ குளிக்கலையா?

- இல்லை சார்! இப்பதான் சென்ட்ரல்ல குப்தா குடும்பத்தை விட்டுட்டுத் திரும்பறேன். குளிக்கலை; சாப்பிடலை. யார்ட்டே போய்ச் சொல்வேன், சார். பத்து வருஷமாச்சு! இதே பி.ஆர்.. போஸ்ட்ல கஷ்டப்படறேன்!

- புரியுதப்பா! அதெல்லாம் எம்.டி. செய்யணும். அவர் மனசுன்னா இளகணும்! இளகும். வேலையைச் செய்! தானா இளகுவாரு! அப்புறம், வர்றவர் வி.வி..பி! அவரால எம்.டி-க்கு எவ்வளவோ காரியம் ஆகணும். ரொம்ப ஜாக்கிரதையாக் கவனி! வெஜிடேரியன்! லிக்கர் சாப்பிடுவார். அப்புறம்ம்அதெல்லாமும் கவனிச்சுக்க!

- யெஸ் சார்!

பின்பு, எங்கள் நாட்டிங்ஹாம் கெஸ்ட்ஹவுசுக்கு ஒரு போன் அடித்தேன். சமையல்காரர், வேலைக்காரர், காவல்காரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தேன். மணி 12 அடித்ததும், மேனேஜரிடம் சொல்லிவிட்டு, ஆபீஸ் டொயோட்டாவில் வீட்டில் அழகாக வந்து இறங்கினேன். ஷவர் போட்டுக் குளித்துச் சாப்பிட்டு, சின்னத் தூக்கம் போட்டு, ஏர்போர்ட் போனேன்.

நாலு மணிக்கு கரெக்டாக ப்ளேன் வந்தது.

வந்தார் குணரத்னம். 55 இருக்கும். முகத்தில் வரிவரிவரி! கண் இடுங்கி, தலையெல்லாம் தார் பாலைவனமாகி, கன்னத்தில் ஆரம்பக் குழி விழுந்திருக்க,

ஒன்று, கடுமையாக உழைத்திருக்க வேண்டும்; அல்லது, நிறையவிளையாடியிருக்க வேண்டும்!

பெரிய சூட்கேஸை டிக்கி வயிற்றுள் போட்டு, அவரை பின் ஸீட்டில் ஏற்றிக்கொள்ள

சென்னையில் மழை, தண்ணீர், மின்சாரம், இலங்கை எல்லாம் பேசிவிட்டு, – நான் ரெஸ்ட்டுக்கு வந்திருக்கேன். யாருக்கும் நான் இருக்கிறதாகச் சொல்லாதே! என்றார்.

நாட்டிங்ஹாமில் போய் இறங்கினோம். உள்ளே டபுள் சூட்டில் அவர் உடைமைகளை வைத்து .சி-யைப் போட்டு, வெளியே வரும்போது மேஜை மீது இருந்த அந்தப் புத்தகத்தின் முகப்பு என் கண்ணில் பட்டது. சின்ன அதிர்ச்சி!

அதில் ஒரு தற்காலச் சாமியாரின் படமும், அவரது உபதேசத்தைக் குறிக்கும் தலைப்பும் இருந்தது.

உள்ளே போய் சமையல்காரரைப் பார்த்துமெனுபேசி, ஜமாய்க்கச் சொல்லி, விஸ்கி வகையறாக்கள் வந்துவிட்டனவா என்று பார்த்தேன். ஷிவாஸ் ரீகல் மூன்று பாட்டிலும், டின் பீர் வகைகளும், ஒரு ரம் பாட்டிலும், வரிசையாக சோடாக்களும் கப்போர்டில் குந்த வைத்திருந்தன. பிளேட்களில் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு வறுவல்கள் குவிந்திருந்தன.

அத்தனையும் என்னைத் திருப்தியாக்கிவிட, வி.வி..பி. அறைக்குள் மீண்டும் நுழைந்தேன். குணரத்னம் குளித்து, ஏதோ தோத்திரம் முணு முணுத்துக்கொண்டு இருந்தார். எனக்குச் சோதனை ஆரம்பமாகிவிட்டதுஅதெல்லாம்இவருக்கு விநியோகம் பண்ணலாமா?

- ஐஸ் பாக்ஸ் அனுப்பறேன்! என்றேன் மெள்ளமாக.

அவரும்ஹம்! என்றார் மெள்ளமாக.

- பாதாம்பருப்பு அனுப்பறேன்! என்றேன். ஈரத் துண்டோடு திரும்பினார்.

- ம்அப்புறம், உள்ளூர் எல்லாம் வேண்டாம்! என்றார்.

அப்படி வா, வழிக்கு! என்றது மனது!

- எல்லாம் ஃபாரின்தான் சார்! என்றேன்.

அந்தோணியின் பொன்வறுவலும் ஸ்காட்ச் பொன்னிறமும் எவரையுமே ஒருஅச்சாபுன்னகை போடவைக்கும். ஆனால், குணரத்னத்துக்கு ஒரு அரைக்கால் முறுவலாவது ஏற்பட வேண்டுமே! கிடையாது. முகத்தில் அதே விரக்தி! ‘சரிதாம் போஎன்கிற பார்வை.

வெளியில் வந்தேன். யோசனையோடு போன் முன் உட்கார்ந்தேன். எங்கள் கம்பெனி தரும் மாதாந்திர ரீ-டெய்னர் தொகை 20,000 ரூபாயில் நான்கு பெண்கள் சுகஜீவனம் நடத்தி வந்தார்கள்.

முதல் பெண் ரீடா. போன் போட் டேன். அவள் அம்மா பேசினாள். விஷயத்தைச் சொன்னதும், – என்ன ஸார்! நேத்தே சொல்லியிருக்கக் கூடாது? குழந்தை பெங்களூர் போயிருக்கா! என்றாள்.

இரண்டாவது மோகி! அவளது வேலைக்காரி பதில் சொன்னாள். மோகி குடும்பத்தோடு ஒரு கிரகப்பிர வேசத்துக்குப் போயிருக்கிறாள். ராத்திரிதான் திரும்பி வருவாள்.

மூன்றாவதும், நாலாவதும் போன் போட்டுப் பார்க்கக் கிடைக்கவில்லை.

ஆத்திரமாக வந்தது. காரைப் போட்டு நவநீகர் காலனிக்குப் போனேன். ஃப்ளாட்டில் சாதனா இருந்தாள். விஷயத்தைச் சொன்னேன். – ஐயோ, கோவிண்ட்! நான் லீவு! என்றாள்.

- லீவாவது, கீவாவது! உடனே வா! இல்லாட்டி என் மானம் போயிடும்! என்றேன்.

- ஐயோகோவிண்ட்! நான் லீவு! என்று சிரித்தாள். மரமண்டைக்குப் புரிந்தது.

புறப்பட்டேன். சிநேகா ஒருத்திதான் பாக்கி. பெசன்ட் நகரில் இருந்தாள். எச்..ஜி. வாசலில் பஸ்ஸரை அழுத்தினேன்.

ஒரு சின்னப் பெண் திறந்தாள். உள்ளே போய்ப் பார்க்க, சிநேகா கம்பளி போர்த்திப் படுத்திருந்தாள். நல்ல டெம்பரேச்சர். முகத்தைத் திறந்து, – ஸாரி, கோவிண்ட்! வேற யாரும் இல்லையா? என்றாள்.

தலையில் கை வைத்துக்கொண்டு, கெஸ்ட் ஹவு சுக்குத் திரும்பினேன்.

அறைக்கு வெளியே பார்த்ததும் திடுக்கிட்டேன் ஒரு ஷிவாஸ் ரீகலும், மூன்று சோடா பாட்டில்களும் வெளியே வந்திருந்தனகாலியாக! குணரத்னம் உள்ளே விளாசிக்கொண்டு இருந்தார். சூரன்! சீக்கிரத்தில் இவ்வளவையும் வெளியே அனுப்புகிறவர் இரவைச் சும்மாவிடுவாரா?

ஏழு, எட்டு, ஒன்பது என்று நேரம் ஓடிவிட்டது. குணரத்னம் சாப்பாடு முடித்துவிட்டு, உள்ளே கனைத்துக்கொண்டு இருந்தார்.

சாப்பாட்டுத் தட்டுக்களை எடுக்க வேலைக்காரி கதவைத் திறக்கப் போனாள்.

- வேணி, நில்லு! என்றேன். நின்றாள்.

24 வயது இருக்கும். பார்வைக்கு இன்னும் பதின் வயதுகளைத் தாண்டவில்லை. உடல் வாளிப்புள்ள வசீகரச் சதைப் பெருக்கு! நெளிவுகள் நிறைந்த அருமையான நாட்டுப்புறக் கட்டுமானம்!

கெஸ்ட் ஹவுஸில் இரண்டு வருடப் பழக்கம். நடக்கும் வேலைகள் அத்தனையும் அத்துப்படி! சின்ன வயசுதானே! புருஷன் வெளிநாட்டு வேலைக்குப் பறந்துவிட்டு இருந்தான். இங்கே வேலை செய்ததால் நிறைய ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் கனவு கண்டு இருந்தாள். அதன் ஜாடைகள் எனக்குத் தெரியும். சின்னச் சின்னப் பார்வைகளை என் பக்கம் தூண்டிவிடுவாள். ஒதுக்கமாக என் கண் படும்படி அடிக்கடி நிற்பாள். வி..பி. இரவுகளில் அந்தோணியும் ஐயரும்கூடத் தூங்கிவிடுவார்கள். ஆனால், இவள் என்னோடு முழித்திருந்து

- வேணி! எனக்கு ஒரு உதவி பண்ணணும்.

- செய்யறேன் ஸார்!

- தப்பா நினைச்சுக்க மாட்டியே?

- என்ன சார் இதுசொல்லுங்க, செய்யறேன்!

- இன்னிக்குச் சோதனையா நாலு பேரும் இல்லை. நான் ஏதாவது செய்யாட்டி என் வேலை போயிடும். எனக்கு வேற வழி தெரியலை. நீதான்நீதான் கொஞ்சம்

அவள் வெட்கத்தில் பக்கென்று சிரித்தாள். தயாரானாள். அவளை ஷவரில் குளிக்கவைத்து, புதுச் சேலை வாங்கி வந்து உடுத்தி, கூந்தலைப் பறக்கவிட்டு, சோளி இல்லாத வெறும் மேற்புறங்களைத் தண்ணீரில் சுளீர் என்று படும்படி வைத்து, இரண்டு ஸிந்தெடிக் முத்து வடங்களைக் கழுத்தில் போட்டு, அந்தரங்கங்களில் பெர்ஃப்யூம் ஸ்ப்ரே செய்து உள்ளே அனுப்பினேன்.

பின்பு, கதம் கதம் என்று மார்பு அடித்துக்கொள்ள, கோபத்தில் வெடித்துக்கொண்டு குணரத்னம் எப்போது வரப்போகிறார் என்று பயந்தபடி இருந்தேன்.

ஆனால், இரவு முழுவதும் அவரும் வரவில்லை. அவளும் வரவில்லை. அந்த ஒரே இரவை இரண்டு இரவாகஅல்ல, மூன்று இரவாகவே மாற்றினார் என்று காலையில் வேணியிடமிருந்து கேள்விப்பட்டதும்ரொம்பவும் சங்கோஜமாகவும், விநயத்தோடும் அறை வாசலிலேயே காத்திருந்தேன்.

குணரத்னம் குளித்து கிளித்து, நியமங்கள் முடித்து, முழு டிரெஸ்ஸில் விச்ராந்தியாக வெளியே வந்தார். ஒரு பெரிய கும்பிடு போட்டேன். என்னைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல், ஒரு அடி எடுத்துவைத்தவர், திரும்பினார்.

- நீங்கதான் பி.ஆர்.-வா?

- ஆமா, சார்!

- இதைப் போல எனக்கு யாரும் எங்கேயும் வசதி செய்து கொடுக்கலை. இதைப் போல ரொம்ப வித்தியாசமான அனுபவம் இதுக்கு முன்னால கிடைச்சதே இல்லை. வரேன்.

- சார்

- என்ன?

- பத்து வருஷமா பி.ஆர்.-வா இருக்கேன். எனக்கு ஒரு பிரமோ

- எம்.டி-கிட்டே சொல்றேன் என்றார் அழுத்தமாக!

அப்படித்தான்அதுஎனக்குக் கிடைத்தது!

- நவம்பர், 2009.

சுட்டி

சிறுகதைகள்-அது கிடைத்தது.

ஆசிரியர். புஷ்பா தங்கதுரை (1931-2013).


இந்தக் கதையை எழுதிய இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஸ்ரீ வேணுகோபாலன் இயற்பெயர். புஷ்பா தங்கதுரை புனைப் பெயர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதாத பத்திரிக்கையே  இல்லை எனலாம். அறிவியல், கிரைம், சமூகம் என பல தலைப்புகளில் அவருக்கே உரிய சிறப்பு நடையில் இவர் எழுதிய பல நாவல்கள் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

நீ நான் நிலா, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, என் பெயர் கமலா, எனது பீத்தல் குடை போன்றவை இவரது பிரபலப் படைப்புக்கள்.

ஸ்ரீ வேணுகோபாலன் என்ற தனது இயற்பெயரில் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தலபுராணங்களையும் எழுதியுள்ளார். அது பற்றிய விவரம் அடுத்த வாரம்.

கடுகு சார் இவருடன் கூட சென்னை GPO வில் வேலை பார்த்தவர். அவரைப் பற்றி ஒரு இரங்கற் கட்டுரை எழுதியுள்ளார்அவரைப்பற்றிய மேல்விவரங்கள் அதில் காணலாம் (சுட்டி)

 

39 கருத்துகள்:

 1. புஷ்பா தங்கதுரையின் இந்தக் 'கதை'யை இங்கு வெளிக்குக் கொண்டு வந்தமைக்கு பாராட்டுகள் ஜெஸி ஸார்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஐயா. கதை ஆய்வு என்றோ, விமரிசனம் என்றோ எதுவும் இல்லை என்பதை கவனித்தீர்களா? 
  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. புஷ்பா தங்கதுரை (ஶ்ரீவேணுகோபாலன்), கீழந்த்தம் (நெல்லை) கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊர் கடவுளின் பெயரும் அதுதான். இரண்டு நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தேன்.

  நான் என் அப்பாவுடன் கேகே நகர் (சென்னை) இல் இருந்தபோது, கே கே நகரில் வசித்து வந்த இவரைப் பார்த்துவருகிறேன் என்று சொல்லி அப்பா அவரைப்போய்ப் பார்த்துவந்தார் (அப்போ தைரியமாக அப்பாவிடம் நான் புஷ்பா தங்கதுரையின் விசிறி என்று சொல்லிக்கொள்ளவில்லை. எனக்கு சுஜாதா, பு.த, சாண்டில்யன், கடுகு போன்றவர்களின் எழுத்து பிடிக்கும்)

  பதிலளிநீக்கு
 4. இந்தக் கதை பற்றி எனக்கென்று ஒரு விமரிசனம் உண்டு. ஆனால் அது பற்றி இங்கு எழுதுவது வேஸ்ட்.
  புஷ்பா தங்கதுரைகளும் புதுமைப் பித்தனாகி விட முடியாது. எல்லா வகையான எழுத்துக்களும் எபியில்
  வெளிவந்து முட்டி மோதி சிறப்பானவைகள் பொலிவு பெற வேண்டும் என்ற அளவில் அதற்காகவே என் பாராட்டுகளும் ஜெஸி ஸார்.

  பதிலளிநீக்கு
 5. நடப்பதைப் பட்டவர்த்தனமாக சிறுகதை வடிவில் கொண்டுவந்துள்ளார்.

  இந்த மாதிரிக் கதைகள், குறுகிய காலப் புகழையும், பணத்தையும் கொண்டுவரும். ஆனால் எழுத்தாளன், நெடுங்காலப் புகழை அடைய இந்தமாதிரி எழுத்து உதவாது.

  மனதின் உணர்ச்சித் தூண்டலைக் குறிவைத்து எழுதப்படும் இத்தகைய எழுத்துகள் இளவயது வாசகனைக் கவரும். அவன் வளரும்போது இதன்மீதான ஆர்வம் குறைந்துவிடும்.

  புஷ்பா தங்கதுரை என்னு அறியப்பட்ட ஶ்ரீவேணுகோபாலன், அவரது திருவரங்கன் உலா போன்ற நாவல்களுக்காகவே நினைவுகூறப்படுகிறார்

  பதிலளிநீக்கு
 6. நல்ல எழுத்துகள் இருவகைப்படும். அப்பா, பையனைப் படிக்கச் சொல்லி, சிபாரிசு செய்யும் புத்தகங்கள், பரிசாக்க் கொடுக்கக்கூடிய புத்தகங்கள். இரண்டாவது வகை, எழுத்தாளர்களுக்கும் இலக்கிய ரசனை உள்ளவர்களுக்குமான சிறுகதை, நாவல்கள், ஆய்வு எழுத்துகள்.

  மற்ற எழுத்துகள் பொழுதைப் போக்கும் வகையானவை. இந்தக் கதை அதில் ஒன்று.

  கோதமன் சாருக்கே நெருடலாக இருந்த காரணத்தால், படம் போடவில்லை போலிருக்கு. ஜெ.. வின் எந்த ஓவியமும் இந்தக் கதைக்குப் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 7. Professi Nal lifeல், ஒருவனது பலகீனத்தை மற்றவர்கள் தங்கள் நலனுக்கு உபயோகிப்பர். எதிக்ஸோடு, நம் பலவீனம் எதையும் காட்டிக்கொள்ளாமல், நேர்மையாக இருந்தால், வாழ்க்கையின் பல நுகர்வுகளைக் காணாமல் வாழ்க்கையை நடத்தலாம். ஓய்வு பெற்றபிறகும் நம் மனதில் நாம் சம்பாதித்த பணம், நடந்துகொண்டவிதம் பலருக்கு உதவி செய்யமுடியாமல் இருந்தது என்று எதைப்பற்றியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழமுடியும்.

  பதிலளிநீக்கு
 8. மனதில் இந்தக் கதை இந்தத் தளத்துக்கானதல்ல என்ற நினைவும் எழுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கதையை எந்தப் பத்திரிகை பிரசுரித்திருக்கும், எந்தப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்காது என்று சொல்லுங்களேன் ஜீவி சார். அதுவே இதற்கான பதில்

   நீக்கு
  2. //இந்தத் தளத்துக்கானதல்ல என்ற நினைவும் எழுகிறது.//

   அதனால் தான் கட்டுரையின் முன்னுரையிலேயே A முத்திரை வைத்து விலகிக் கொள்ள விரும்புபவர்கள் விலகக்  கோரினேன். 

   Jayakumar

   நீக்கு
 9. பொழுது போக்குக் கதைகள் என்கிறீர்கள். அந்த 'பொழுது போக்கு'
  மற்றவர்களுக்குக் கூடாதா, என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் மனதளவில் எந்த வயது பிராக்கெட்டில் இருக்கிறோம் என்பதைப் பொருத்தது அது ஜீவி சார்.

   சமீப திருமண ரிசப்ஷனில் குத்துப்பாடல்களுக்கு ஆடியவர்களில் பையனின் தகப்பனாரும் (60) உண்டு. அவர் ஆடிய ஆட்டம் கண்டு அரங்கமே அதிர்ந்தது.

   நீக்கு
 10. புஷ்பா தங்கதுரைக்கும் ஒரு மனது இருக்கிறதில்லையா? அவர் விசிறியாய் இருப்பவர்களுக்காவது அது தெரியணும், இல்லயா? அந்த பி.ஆர்.ஓ.. தனக்கு என்ன உதவி தேவை என்று அந்த 24 வயசு வேணியிடம் சொன்னதும் அந்த வயசுப் பெண் அவன் கன்னத்தில் அறைய மாதிரி கதை இருந்திருந்தால் --
  திருவரங்கன் உலா
  எழுதியவரின் உயர்ந்த மனமாவது ஊருக்குத் தெரிந்திருக்குமில்லையா? இவர்கள் எழுத்து வியாபாரிகள். இதுவும் எழுதுவார்கள், அதுவும் எழுதுவார்கள். எதுவும் எழுதுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா... உண்மை. அதனால்தான் திருட்டுத்தனத்தில் காசு சம்பாதித்து கோயில் உண்டியலில் கொஞ்சம் போடுகிறார்ப்போல் அவர் திருவரங்கன் உலா எழுதினாரோ?

   நீக்கு
  2. அந்த வயசுப் பெண் அவன் கன்னத்தில் அறைய மாதிரி கதை இருந்திருந்தால் --//

   அட! கிட்டத்தட்ட நான் நினைத்தது போல்!!!

   கீதா

   நீக்கு
 11. ஓ திருமணம் செய்து கொள்ளவில்லையா... அப்போ சரி தான்...(!)

  பதிலளிநீக்கு
 12. நடத்துனர், ஓட்டுனரை பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 13. கதை பற்றிய பட்டி மன்றத்தில் பங்கெடுத்த நெல்லை சார், ஜீவி சார் ஆகியோருக்கு நன்றி. நெல்லை “இப்படியும் நடக்கலாம்” என்று அவரது கருத்தைக் கூறியிருக்கிறார். ஜீவி சார் ‘கதை’ என்று அடைப்புகளில் போட்டு இது கதை தான், கற்பனை தான் என்று விவாதிக்கிறார். இதற்கு இடையில் D D அவர்கள் “ஆசிரியர் திருமணமாகாதவர் “ என்று அழுந்தச் சொல்லி கதையின் கருப்பொருளை ஆசிரியர் கையாண்ட விதத்தை எடுத்து காட்டுகிறார்.

  ஆக மூவர் மாத்திரமே கருத்து கூறிய போதிலும் ஒவ்வொருவரும் முக்கிய பாயிண்டுகளை தொட்டுச் சென்றுள்ளனர். மகிழ்ச்சி

  ஜீவி சாரின் கேள்வியான “இந்தக் கதை எந்தப் பத்திரிகை பிரசுரித்திருக்கும் என்பதற்கு “என் பெயர் கமலா” பிரசுரித்த, அவரை புஷ்பா தங்கதுரை ஆக்கிய, அவரை ஒரு எழுத்து வியாபாரியாக்கிய தினமணி கதிர் ஆக இருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம்.

  பின்னூட்டங்களுக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி ஸாரின் கேள்வியானவா?

   இது என்ன புதுக்கரடி ஜெஸி ஸார்?

   -- தொடர்ச்சி கீழே படியுங்கள்..

   நீக்கு
 14. இவருடைய கதைகள் முன்பு படித்த நினைவு இல்லை.

  பதிலளிநீக்கு
 15. வரிசையாய் எல்லாப் பதிவுகளையும் படிச்சேன். நாட்களாகிவிட்டதால் கருத்திடவில்லை. இன்றைய பதிவில் எனக்குப் புஷ்பா தங்கதுரையின் நீ, நான், நிலா தான் ரொம்பப் பிடித்தது. மற்றபடி அவரின் பக்திப் புத்தகங்களும் படிச்சிருகேன். நல்ல வேளையாக யாரும் என்னைத் தேடிக் கொண்டு காவல் நிலையம் போகலை. :P

  பதிலளிநீக்கு
 16. ஆன்மிகம் வேறே, பக்தி வேறேனு தெரிஞ்சும் ஏன் அனைவரும் பக்திச்சுற்றுலாவை ஆன்மிகச் சுற்றுலா எனவும் பக்திக் கட்டுரைகள் எழுதுபவர்கள் ஆன்மிகக் கட்டுரைகள் எழுதுபவர் என்றும் சொல்கின்றனர். ஆன்மிகம் என்பது என்னைப் போன்றவர்களல் எட்ட முடியாத ஒன்று. ஆனால் பக்தி அப்படி இல்லை. கீழ்நிலையில் இருப்பவர்கள் கூட பக்தி செய்யலாம்.ஆன்மிகம் என்பது சமுத்திரம் எனில் பக்தி அதில் கலக்கும் ஒரு நதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆன்மிகம் என்ற வார்த்தையை இன்றைய கட்டுரையில் யார் எங்கே உபயோகித்திருக்கிறார்கள் என்று கூற முடியுமா?

   நீக்கு
  2. ஸ்ரீவேணுகோபாலன் ஆன்மிகமும் எழுதுவார்னு சொல்லி இருப்பதை வைத்துச் சொல்கிறேன்.

   நீக்கு
 17. எனக்கென்னவோ இவர் அலுவலகத்தில் இவரை விட ஜூனியர் ஒருவருக்கு ப்ரமோஷன் கொடுத்திருக்க வேண்டும், எனவே இவர் பேசுபவர் பேச்சைக் கேட்டு இவர் கதை  படைத்திருக்கலாம், அல்லது கடுப்பில் இப்படி கதை புனைந்திருக்கலாம் என்று தோன்றியது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கார்ப்பொரேட் உலகம் வித்தியாசமானது.

   நீக்கு
  2. நல்லதொரு விவாதத்தை நீர்த்துப் போகடிக்கிறீர்களே, ஸ்ரீராம். நியாயமா, இது?

   நீக்கு
 18. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று என்றாலும் விவசாயிகளின் உழைப்பை பாராட்ட வேண்டும் மற்றும் ஹலாமியையும். ஹலாமி பற்றி ஏற்கனவே வாசித்துவிட்டேன். நல்ல உதாரணம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 19. புஷ்பா தங்கதுரை அவர்களின் கதை கற்பனை என்றாலும் இப்படித்தான் நடக்கிறது என்பதும் மறுக்க முடியாது என்பது உண்மை. நேரடியாகவே அறிந்திருக்கிறேன்.

  உலகில் இப்படி நடக்கிறது போகட்டும்....உலகை மாற்ற முடியாது. ஆனால் அதற்காகப் பெண்கள் எல்லோருமே இப்படித்தானா என்ற கேள்வி எழுகிறது. அதுதான் எனக்கு மனதில் உறுத்தல் அந்த வளாகத்தைப் பார்த்துக் கொள்ளும் பெண் உட்பட....அட்லீஸ்ட் கதையிலேலும் அந்தப் பெண் துடைப்பைக்கட்டையைத் தூக்கிக் கொண்டு பத்ரகாளி அவதாரம் என்றில்லை என்றாலும் காரித் துப்பிவிட்டுச் சென்றால் என்று சொல்லியிருக்கலாமோ என்று....தோன்றியது....ம்ம்ம் என்ன அந்த பி ஆர் ஓவுக்குப் பிரமோஷன் கிடைத்திருக்காதாக இருக்கலாம்....

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 20. நான் எங்கே அந்தக் கேள்வியைக் கேட்டேன் ஜெஸி ஸார்?
  வெகுஜன பத்திரிகைகளின் மீதும்
  பழி போடக் கூடாது. அது பலதரப்பட்ட வாசகர்களுக்கானது என்பதால்.
  சொல்லப் போனால் 'திருவரங்கன் உலா'வும்
  நீங்கள் குறிப்பிடும் பத்திரிகையில் தான் தொடராக வந்தது.

  பதிலளிநீக்கு
 21. பாசிட்டிவ் செய்திகள் நன்று.
  பாராட்டி வாழ்த்துவோம்.
  புஷ்பாதங்கதுரை கதை படித்தேன்.

  பதிலளிநீக்கு
 22. ஒரு கதைக்கான சப்ஜெக்டை எந்த எழுத்தாளர் எப்படிக் கையாளுகிறார் என்பதைப் பொறுத்தது
  நம் மதிப்பீடுகளும்.

  புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' படித்திருக்கிறீர்களா?

  இதே சப்ஜெக்டை ஜெயகாந்தன் ஒருவிதத்தில், விந்தன் ஒருவிதத்தில், ஜெகசிற்பியன் ஒருவிதத்தில் என்று எழுதுவார்கள். அது தான் அந்தந்த எழுத்தாளர்களின் தனித்திறமை. சமூக அவலங்களை அவரவர் கையாளும் பொறுப்பு சம்பந்தப்பட்டது இது.

  இதெல்லாம் பற்றிய புரிதல் வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கதையை நீங்கள் இங்கு வெளியிட்டதை
  வரவேற்று பாராட்டினேன்
  ஜெஸி ஸார்.

  பதிலளிநீக்கு
 23. சங்குண்ணி கதைகளில் என்றால் 'இந்த மாதிரி' விஷயங்களை விழுந்து விழுந்து வாசிப்போம் பின்னூட்டம் போடுவோம்
  மற்றவர் எழுதியது என்றால் காணாமல் போய் விடுவோம் என்ற நிலையும் கூடாது.

  எபியில் வெளியாகும் விஷயங்களை நாம் அலசாமல் வேறு யார் அலசப் போகிறார்கள்?

  அந்த விதத்தில் இந்த தளத்தில் ஒதுங்கிப் போகாமல் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்த நம் அன்புக்குரிய நெல்லை பாராட்டுக்குரியவர்.
  எதையும் ஒதுக்கி விடாமல் எல்லா பொருள்களிலும் தன் கருத்துக்களை பதியும்
  அவர் ஆர்வம் எபிக்குக் கிடைத்த தனிச் செல்வம்.
  என் அன்பான வாழ்த்துக்கள் நெல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜீவி சார்... என் மனசுல பின்னூட்டம் போட்டு நம் கருத்தைத் தெரிவிக்கணும் என்று நினைத்தால் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டேன்.

   என் கட்சி, எந்த சப்ஜெக்டும் விலக்கப்பட/விலகிப்போகக்கூடிய சப்ஜெக்ட் அல்ல. அது நம் வாழ்வில் எப்போதாவது நடந்திருக்கும் பட்சத்தில், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில். We can't be hyppocratic

   நீக்கு
 24. பெரும்பாலும் 'நான் படித்த கதை' பகுதியில் பின்னூட்டங்களில் விவாதமோ, மற்ற கருத்துக்களோ வருவதில்லை. ஜெயகுமார் சார் இதனைக் கவனத்தில் கொள்ளணும்.

  பதிலளிநீக்கு
 25. ஸ்ரீராம், நீங்கள் முன்பு இப்படியானதொரு - கிட்டத்தட்ட - ஒரு உண்மைச் சம்பவம் கொஞ்சம் கதையாகச் சொல்லியிருந்த நினைவு....அலுவலக ஊழல்கள் என்று எழுதியிருந்த நினைவு. அந்த அதிகாரி கூட மனைவியிடம் மாட்டிக் கொள்வாரே!!!!! ஊட்டியோ கொடைக்கானலோ..சரியாக நினைவில்லை. ஆனால் கதை மட்டும் நினைவிருக்கிறது

  3, 4 வருடங்கள் இருக்கும் நீங்கள் எழுதி....

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!