வெள்ளி, 2 டிசம்பர், 2022

வெள்ளி வீடியோ : செண்பகமே பலரும் புகழ்ந்திட வேண்டும் செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும்

 இந்தப் பாடல் பெங்களுர் ரமணி அம்மாளே எழுதிய பாடல் என்கிறது இணையம்.  இசை டி ஏ கல்யாணம்.

இன்றும் ஒரு உற்சாகம் துள்ளும், அய்யப்பனை நினைந்துருக வைக்கும் பாடல் ஒன்று.  அடிக்கடி வானொலியில் கேட்டு ரசித்த பாடல்.

ஐயனே அன்பர்க்கு மெய்யனே இனி ஆதாரம் நீதானே ஆறுமுகன் சோதரனே ​
ஐயனே சபரி அய்யனே சரணம் அய்யனே அய்யன் அய்யனே அன்பர்க்கு மெய்யனே 
இனி ஆதாரம் நீதானே ஆறுமுகன் சோதரனே ​ஐயனே அன்பர்க்கு மெய்யனே

ஐயப்ப ஸ்வாமியே சரணம் என்று அனுதினமும் நினைத்தாலே இனியேது சரனம் இனியேது மரணம் 
ஐயப்ப ஸ்வாமியே சரணம் என்று அனுதினமும் நினைத்தாலே இனியேது சரனம் இனியேது மரணம் 
  ஐயனே சபரி அய்யனே சரணம் அய்யனே அய்யன் அய்யனே அன்பர்க்கு மெய்யனே  இனி ஆதாரம் நீதானே ஆறுமுகன் சோதரனே ​ஐயனே அன்பர்க்கு மெய்யனே
மோகினி பாலனே வா வா மோகன ரூபா நீ ஐயப்ப வா வா 
மோகினி பாலனே வா வா மோகன ரூபா நீ ஐயப்ப வா வா 
வில்லாளி வீரனே வா வா வீரமணிகண்டனே ஐயப்ப வா வா 
வில்லாளி வீரனே வா வா வீரமணிகண்டனே ஐயப்ப வா வா 
ஐயனே சபரி அய்யனே சரணம் அய்யனே அய்யன் அய்யனே அன்பர்க்கு மெய்யனே 
இனி ஆதாரம் நீதானே ஆறுமுகன் சோதரனே ​ஐயனே அன்பர்க்கு மெய்யனே

மணிகண்டா மணிகண்டா மாமலைவாசா மணிகண்டா 
மணிகண்டா மணிகண்டா மாமலைவாசா மணிகண்டா 
மோகினிபாலா மணிகண்டா மோகனரூபா மணிகண்டா 
மணிகண்டா மணிகண்டா மாமலைவாசா மணிகண்டா
வில்லாளி வீரா மணிகண்டா வீராதிவீரா மணிகண்டா 
மணிகண்டா மணிகண்டா மாமலைவாசா மணிகண்டா 
மணிகண்டா மணிகண்டா மாமலைவாசா மணிகண்டா 

ஸ்வாமியே அய்..  சரணம் ஐயப்பா...


===============================================================

பஹாடி இனிமையான ராகமா?  கேட்டுப் பாருங்களேன்.. ஆப் கி கசம் டைட்டில் ஸாங்கும், புது நெல்லு புது நாத்து படத்தில் வரும் 'பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி' பாடலும் கூட பஹாடி ராகம் என்று சொல்லக்கேட்ட ஞாபகம்.

1962 ல் வெளிவந்த திரைப்படம் அழகுநிலா.  முத்துராமன், கல்யாண்குமார், மாலினி ஆகியோர் நடித்த திரைப்படத்திற்கு இசை கே வி மகாதேவன்,  இன்று பகிரப்போகும் பாடலை பாடி இருப்பவர் பி பி ஸ்ரீனிவாஸ்.  பாடலை எழுதியவர் மருதகாசி.

சின்ன சின்ன ஊரணியாம் கொடுத்த பாதிப்பின் மீதி இருக்கும் பாடல்!

சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா

கண்மணியே நீ வளர்ந்து படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய் விளங்கிட வேண்டும்
கண்மணியே நீ வளர்ந்து படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய் விளங்கிட வேண்டும்
செண்பகமே பலரும் புகழ்ந்திட வேண்டும்
செண்பகமே பலரும் புகழ்ந்திட வேண்டும்
செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும் நீ
செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும்

சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா

கன்னியராம் தாரகைகள் கூட்டத்திலே நீ
வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும் நாள் வரவேண்டும்
கன்னியராம் தாரகைகள் கூட்டத்திலே நீ
வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும் நாள் வரவேண்டும்
கண்கவரும் கணவன் கிடைத்திட வேண்டும்
கண்கவரும் கணவன் கிடைத்திட வேண்டும்
காணும் ஆசைக் கனவெல்லாம் பலித்திட வேண்டும் - நான்
காணும் ஆசைக் கனவெல்லாம் பலித்திட வேண்டும்

46 கருத்துகள்:

 1. காலை வணக்கம்.

  ஐயப்ப சாமியே சரணம்
  உன் அடி தொழுதோம் சரணம்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம்
  அனைவருக்கும்..

  ஐயன் அருளால் வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.  நலமே விளைக..

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வீரமணி அவர்களது வருகைக்கு முன்பு வரை ஐயப்ப பஜனைகளில் ஒலித்துக் கொண்டிருந்தவை ரமணியம்மாள் பாடிய பாடல்களே.. இந்தப் பாடல் மிகவும் பிரசித்தம்..

  சாமியே சரணம் ஐயா... தர்ம சாஸ்தாவே சரணம் ஐயா..

  என்றொரு பாடலும் இருக்கின்றது..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லும் பாடலும் கேட்டிருக்கிறேன். இன்று பகிர "பந்தள நாட்டிலே அவதரித்தார்" பாடலைத் தேடினேன். கிடைக்கவில்லை.

   நீக்கு
 5. சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
  அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா..

  மிகவும் குளுமையான பாட்டு..

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய தனிப்பாடல் அருமையான பக்திப்பாடல் . பெங்களுர் ரமணியம்மாள் குரல் மிகவும் கம்பீரமானது. வார்த்தைகளை அழுத்தி தெளிவாக உச்சரிக்கும் விதம் அவர் பாடல்களை கேட்கத் தோன்றும். திரைப்படங்களில் பாடி நடித்த கே. பி சுந்தராம்பாள், எஸ் வரலட்சுமி போன்றவர்களை நினைவுபடுத்தும் குரல். இந்தப் பாடலை அடிக்கடி மெய்யுருகி கேட்டிருக்கிறேன். இது அவரே எழுதியதா? அருமையான பாடலுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூர்க்காரராய் இருந்தாலும் தமிழ் உச்சரிப்பு படுசுத்தமாய் இருக்கும்.  ஆமாம் அக்கா.  நன்றி.

   நீக்கு
 7. இரண்டும் சிறப்பான பாடல்களே...

  பதிலளிநீக்கு
 8. ஐம்பத்து ஐந்தாவது வயதில் தனது குழுவினருடன் சபரி மலை தரிசனம் செய்திருக்கின்றார் - ரமணியம்மாள்..

  தகவல்
  திரு அரவிந்த் சுப்பிரமணியம் அவர்கள்..

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இரண்டாவதாக பகிர்ந்த திரைப்படப் பாடல் விபரம், அதன் ராகம் என சேகரித்தது பாராட்டுக்குரியது. இந்தப் பாடலையும் கேட்டதாக நினைவு உள்ளது. பாடகர் பி. பி ஸ்ரீநிவாசனின் குரல் அதில் வரும் அர்த்தமுள்ள பாவங்கள் எப்போதுமே நன்றாக சேர்ந்து அமைந்து விடும். எனக்கு அவர் குரலில் வரும் அனைத்துப் பாடல்களுமே பிடிக்கும்.

  அந்தப் பாட்டில் குட்டி பத்மினி அவ்வளவு அழகாக உள்ளார். இப்போதுதான் இந்தப் பாடலை படத்தோடு பார்த்து ரசிக்கிறேன். இதுவரை இந்தப் படம் பெயர் தெரியாது.

  ஆக.... "சின்ன சின்ன" என்று அமைந்த குழந்தை பாடல்கள், தங்கள் நினைவுகளில் சேர்ந்து வந்த பாடல்கள் முதலிலும், இறுதியிலும் ஒரே மாதிரியான முதல் வார்த்தைகளோடு அமைந்து விட்டது ஆச்சரியமே.. ..! இன்று இரு பாடல்களுமே நன்றாக உள்ளது. தேர்ந்தெடுத்த தங்களது உழைப்பிற்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் பிடித்த பாடல் எனக்கு இது.  அனைவருக்கும் பிடிக்கும் என்றும் எதிர்பார்த்தேன்.  நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 10. சுபஸ்ரீ தணிகாசலம் தயாரிப்பில்
  கங்கை அமரன் நிகழ்ச்சி ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  அந்த பாதிப்பில்-

  அடுத்த வெள்ளிக்கு கேட்க விருப்பம்;

  'தேன் சிந்துதே வானம்..'

  பதிலளிநீக்கு
 11. இரண்டு பாடல்களையுமே கேட்ட நினைவு இல்லை. நல்ல பாடல்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைக்கும் அவர் மனைவிக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள். என்றென்றும் மன மகிழ்ச்சியோடும் பூரண ஆரோக்கியத்தோடும் வாழவும் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  2. நன்றி நெல்லை.  இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 12. அடுத்து ;

  'அந்தப்புறத்தில் ஒரு மகராணி'

  பதிலளிநீக்கு
 13. "பெண்"களூர் ரமணி அம்மாள் கச்சேரிகளை நேரிலேயே கேட்டிருந்தும் இந்தப் பாடல் நினைவில் வரலை. இன்னொரு பாடல் (கீழே சொல்லி இருப்பது) நினைவில் இருக்கு. இந்த அழகு நிலா எப்போ வந்ததுனே தெரியலை. இஃகி,இஃகி,இஃகி. ஆகவே பாடலும் கேட்ட நினைவு இல்லை. குட்டி பத்மினியின் நடிப்புக்குக் கேட்க வேண்டுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரமணி அம்மாள் பாடல் ரொம்ப பேமஸ் ஆச்சே...   எப்படி கேட்காமல் விட்டீர்கள்!

   நீக்கு
 14. பாடல்கள் இரண்டுமே நன்றாக இருக்கின்றன. முதல் பாடல் மிக அருமை. கேட்டுக்கொண்டே கருத்து எழுதிக் கொண்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 15. முரளி தம்பதியருக்கு இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.
  ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 16. அடுத்த விருப்பம்.

  பூஜைக்கேத்த பூவிது
  நேத்துத் தானே பூத்தது
  யாரிது..

  பதிலளிநீக்கு
 17. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 18. இன்றைக்கு எழுந்திருக்கும்போதே ஏனோ ' சின்ன சின்ன மூக்குத்தியாம்' பாடல் நினைவுக்கு வந்தது. உடனேயே அதன் தொடர்ச்சியாக ' சின்ன சின்ன ஊரணியாம்' பாடலும் நினைவில் எழுந்தது. இங்கே வந்து பார்த்தால் நீங்களும் இந்தப்பாடல் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள்! ஆச்சரியமாக இருந்தது!!
  இந்த அழகு நிலா பாடல் அப்போதெல்லாம் மிகவும் புகழ் பெற்ற பாடல். பாடலின் இனிமையை விட பாடல் வரிகள் புகழ் பெற்றவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சின்ன சின்ன ஊரணியாம் பாடலின் பாதிப்பில் மனதில் தொகுத்துக்கொண்ட பாடல்களை இதுவரை வெளியிட்டு விட்டேன்.  இனி வேறு பாடல்கள்!

   நீக்கு
 19. முதல் பாடலும் இரண்டாவது பாடலும் கேட்டு எவ்வளவு நாளாச்சு!!!

  முதல் பாடல் மிகவும் ரசித்த பாடல்....ஊரில் இந்த சீசனில் கண்டிப்பா ஐயப்பன் பாடல்கள், கட்டு கட்டும் போதும் போடுவதுன் டு.... நீங்க சொல்லிருக்காப்ல துள்ளல் பாடல். மணிகண்டா என்று தொடங்கும் இடமும் செமையா துள்ளல். கட்டு கட்டும் போது ஆடத் தொடங்கிவிடுவாங்க.

  கீதா

  பதிலளிநீக்கு
 20. ஐயப்பன் பாடல் கேட்டு சிலிர்த்ததுண்டு..
  சின்ன சின்ன ரோஜாவும் கேட்டிருக்கிறேன் .
  பாடல்கள் பகிர்ந்து விபரங்களும் தந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 21. திரு + திருமதி நெல்லை அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 22. பஹாடிராகம் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம், நீங்க பகிர்ந்திருக்கும் இந்தப் பாட்டு கேட்டு ரசித்த பாடல்.

  பஹாடி ராகத்தில் இளையராஜா இசையில் எங்கே என் ஜீவனே, மௌனமான நேரம், சீர் கொண்டுவா, வா வெண்ணிலா, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்...எல்லாப் பாடல்களுமே அருமையான பாடல்கள்

  கீதா

  பதிலளிநீக்கு
 23. நெல்லை உங்களுக்கும் உங்க ஹஸ்பண்டுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 24. நெல்லை அவர்களுக்கு இனிய திருமண நாள் - நல் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 25. நண்பர் நெல்லையார் அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!