வியாழன், 8 டிசம்பர், 2022

ஆட்டோ.. ஊபர் ஆட்டோ..

 ஊபர் குழப்பங்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது, எழுதி மாளாது போல!

நமக்கு புக் ஆன வாகனத்தின் ஓட்டுநர் அதை ரத்து செய்தால் அவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று செய்த்தாளில் மட்டும் செய்தி வந்தது.  அதைப்பற்றி சம்பந்தப்பட்ட - தெரிந்த - ஓட்டுநர்களிடம் 'ஜாரித்த' போது அப்படி எல்லாம் ஒன்றும் அவர்களுக்கு கழிவதில்லையாம்.  ஏமாளிகள் நுகர்வோர் மட்டுமே..  மாறாக சமீபத்தில் ஓட்டுநர் ஒருவர் ட்ரிப்பை ரத்து செய்ததில் எனக்கு ரூ 12.60 பைசா அபராதம் விதிக்கப்பட்ட தலைகீழ்க் கொடுமையை நான் (வழக்கம்போல) யாரிடமும் சொல்ல முடியாது.  நாம் பேச வேண்டிய கதவுகள் என்று எதுவுமே அங்கு இருக்காது.  தலையெழுத்து.

எதற்கு ஊபரில் செல்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும் அதே பதில்தான்...  தலையெழுத்து.  ஊபரை சில உபேர் என்றும் உச்சரிக்கிறார்கள்.  எனக்கு ஊபர் என்று சொல்லி பழகி விட்டது.  எப்படி உச்சரித்தால் என்ன?  கொள்ளைக்காரர்கள்.  எனக்கும் வேறு வழியில்லை.


சில நேரங்களில் ஒரே இடத்தில் நின்று புக் செய்தாலும் ஓட்டுநர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நின்று நம்மை அழைப்பார்கள்!  "இங்குதான் லிங்க் காட்டுகிறது" என்று சாதிப்பார்கள்!  நாம் இங்கும் அங்கும் அல்லாடவேண்டும். 

பயணத்தை ஆரம்பிக்கையில் எனக்கு காட்டப்பட்ட தொகையிலிருந்து பயணம் முடியும்போது மாறுபட்டு காட்டும் நேரங்கள் உண்டு.  அப்படிக் காட்டும் தொகை அதிகமாக இருந்தால் அது நியாயம் என்று காரணங்கள் ஏதாவது சொல்லி நம்மிடம் உரைப்பார்  ஓட்டுநர்.  குறைந்திருந்தால் அது தவறு, ஊபரில் ஏதோ தவறு என்று வாதிடுவார்.

சமீபத்தில் ஒரு பயணத்தில் எனக்கு ஊபரால் காட்டப்பட்ட தொகை 255 ரூபாய்.  பயணம் முடியும்போது ஓட்டுனரின் மொபைலில் "ஸ்ரீராமிடமிருந்து ரூ 44 பெற்றுக் கொள்ளவும்" என்று வந்ததும் அதை சட்டென அவர் மாற்றினார் என்றாலும் நான் பார்த்து விட்டேன்.  ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி, (முதலிலேயே எவ்வளவு தொகை காட்டுகிறது என்று பெரும்பாலும் கேட்டு வைத்துக் கொண்டு விடுகிறார்கள்) எனக்கு முதலில் காட்டிய தொகையைப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார்.  என் மொபைலில் என்ன காட்டுகிறது என்று பார்க்கக் காத்திருந்தேன்.  அது ட்ரிப் முடிந்து விவரம் காட்ட சற்று நேரம் எடுத்துக் கொள்ளும்.  அதேபோல நேரம் கொண்டு,  ஆட்டோக்காரர் கூப்பிட முடியாத தொலைவு சென்று மறைந்ததும்  ரூ 44 என்றது.  என்ன இழவு நிர்வாகமோ,  என்ன சஸ்பென்ஸோ...    இப்படி வந்தால் ஓட்டுனர்கள் ஒத்துக்கொள்வார்களா என்ன?  இதுவே 255 என்பது 270 அல்லது 275 என்று காட்டினால் சந்தோஷமாக வாங்குகிறார்கள்.

சென்ற வாரம் புக் ஆனவுடனேயே ஓட்டுநர் லைனுக்கு வந்தார்.  "30 ரூபாய் எக்ஸ்டரா தர்றீங்களா?"  நான் 20 எக்ஸ்டராவுக்கு ஒத்துக் கொண்டேன்.  வந்தார்.  முதலில் நான் பார்த்தது ஆட்டோ நம்பர்.  வேறு நம்பர்.  கேட்டால் ஆல்டர்நேட் எண் என்பார்கள்.  உட்காரும் சமயம்  PIN நம்பர் சொல்லும்போது மறுத்துவிட்டார்.  "வேண்டாம் சார், நான் ஊபரை க்ளோஸ் பண்ணிடறேன்.  பின் நம்பர் போடாமலேயே போவோம்" என்றார்.  அதற்கு அவர் சொன்ன காரணம் "ஊபர்ல பாக்கி வச்சிருக்கேன், அப்படியே எடுத்துக்குவான்"   

நான் நம்பவில்லை.

என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தவரை மடக்கி நிறுத்தி அவரை கேன்சல் செய்ய வைத்தேன்.  எவ்வளவு ரூபாய் என்று முதலிலேயே கேட்டு வைத்திருந்தார்.  நான் கேன்சல் செய்தால் 40% எனக்கு அபராதம்.  ஏனெனில் அவர் என்னிடம் வந்து விட்டார்.  எனக்கு இன்னொரு பழைய சம்பவமும் நினைவுக்கு வந்தது.  எழுதி இருக்கிறேன்.

ஒன்று ஒரே ஐடியில் இரண்டு பேர் ஓட்டவேண்டும்.  அதுதான் மாற்று நம்பர், அவர் பின் நம்பர் நோட் செய்யாமல் செல்ல முயற்சித்ததும், கேன்சல் செய்ததும்.  இவை அத்தனையையும் ஃபோனில் யாருக்கோ சொல்லிக்கொண்டே வந்தார்.  நான் போகுமிடம், பின் நம்பர், க்ளோஸ் செய்தது எல்லாவற்றையும் கேஷுவலாக சொன்னார்.  என் முந்தைய ஊபர் கசப்பு அனுபவங்களை அவரிடம் சொல்ல முயன்றபோது காது கொடுக்கவில்லை.  நான் சொல்லும் விவரங்களை அவர்கள் ரசிப்பதில்லை.  டீசல் என்றால் எப்படி, பெட்ரோல் என்றால் எப்படி, (இப்போது பெட்ரோலில் ஓடும் ஆட்டோக்களைக் காண்பது துர்லபம்) Gas விலை, (இப்போது கிட்டத்தட்ட முந்தைய விலைக்கு ஆறரை ரூபாய்  குறைந்துள்ளது) ஒரு லிட்டர் அல்லது கிலோவுக்கு புது ஆட்டோ / பழைய ஆட்டோ எவ்வளவு கிலோ மீட்டர் கொடுக்கும், LPG என்றால் எவ்வளவு கொடுக்கும், நைட்ரஜன் என்றால் எவ்வளவு கொடுக்கும், அது என்ன விலை, போன்ற விவரங்கள் ஆல் டீட்டெயில் ஐ நோ...!  கொரோனா ஆரம்பித்ததிலிருந்து பார்த்து வருகிறேனே...   மழுப்புவார்கள்.  ஆனால் நான் அறிந்ததை எல்லாம் மீறியும் விவரங்கள் இன்னும் அறிய உள்ளன!


இரண்டு, என் பெயர் காட்டியபோதே அவருக்கு நான் தரவேண்டிய பணம் ரூ 44 என்பது போல குறைத்துக் காட்டி இருக்கலாம்.  ஏன் நாற்பத்து நாலு என்றே சொல்கிறேன் என்றால், குறிப்பிட்ட தூரத்துக்கு தினசரி பிக்ஸடாக செல்பவர்களுக்கு அதேபோல சலுகைகளும் பிக்ஸடாக இருக்க வாய்ப்புண்டு.  அவர்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டவர்கள் என்பதால் சட்டென முடிவு செய்து இப்படி நடந்து கொண்டிருக்கலாம்.

நான் பயணம் முடிந்து இறங்கும்போது பணத்தைக் கொடுத்துவிட்டு "ஒன்று கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே" என்று இதைக் கேட்டே விட்டேன்.  கோபித்துக் கொண்டால் மட்டும் என்ன, வீட்டு மாப்பிள்ளையா அவர்?!  அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.  உடனே மறுக்கவில்லை.  கொஞ்ச நேரம் கழித்து மறுத்து விட்டு கிளம்பினார்.

உங்கள் அபிப்ராயம் என்ன?
====================================================================================================

திரு கந்தசாமி பகிர்விலிருந்து...

தனக்கு கிடைக்கும் மீடியா, மேடை, திரை... எதையும் பக்காவாகப் பயன்படுத்திக் கொள்வதில் வைரமுத்துவுக்கு நிகரில்லை. ஒருவரைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சாக்கில் தன் பெருமைகளை அதைவிடப் பிரமாதமாய் எடுத்து வைப்பதில் வித்தகர் வைரமுத்து. ஆனால் அவர் அப்படிச் செய்த ஒரு விஷயம், கேலிக்குரியதாகிவிட்டது. அது  மறைந்த தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடர்பானது. என்ன அது? இதோ ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி  வைரமுத்துவை 'வெளுத்து வாங்கி' எழுதியிருப்பதைப் படியுங்கள்: "சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று! அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது." -

நன்றி: பிலிம் பீட் தமிழ்
==============================================================================================================

அந்த ஆட்டோவின் பின்புறம் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முடிகிறதா?!


==================================================================================================================================================================================================================

எழுப்பும் மனிதர்கள்!


=========================================================================================================

காஃபி அலுத்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அல்லது சாப்பாடு அலுத்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அதைச் சரி செய்ய எளிய வழி ஒன்று உண்டு. சில நாட்களுக்கு காஃபியை நிறுத்துவது, சாப்பாடு வகையை மாற்றுவது இப்படி...  அப்புறம் சரியாகிவிடும்!  அதாவது எந்த விஷயம் ரசிக்கவில்லை, நன்றாயில்லை என்றாலும் கொஞ்ச நாளைக்கு அதை விட்டு விலகி இருப்போம் அல்லவா...

89 கருத்துகள்:

 1. காருக்கு ஆகும் செலவை நினைத்தால் இந்தப் பிரச்சனைகள் ஜுஜுபி

  பதிலளிநீக்கு
 2. வைரமுத்துவின் பெயர் மொத்தமாக மோசமாகி விட்டது. பத்தாததற்கு காணும் பெண்களிடம் வகைதொகையில்லா இளிப்பு, தொடர்பு என் பல செய்திகள். பணத்தை வீசுவதால் அவர் எழுத்தை வெளியிடுகின்றனர்

  பதிலளிநீக்கு
 3. ஊருக்குப் போனதால் பதிவை சீர் படுத்த முடியவில்லை என்று தோன்றுகிறது. 

  நீர் ஏன் மலையானது?
   சிலையாக வேண்டிதான். 

  எதைக் கண்டு உறைந்து நிற்கின்றன பனிப்பாறைகள். 
  உறைந்தது எதையும் கண்டதால் அல்ல. காணாததால். சூரியன் என்ற காதலனைக் காணாததால் .

  இணையமும் கூட அலுத்து விட்டது என்று ஒதுங்க முடியவில்லையே பாஸ். மாதம் 530 ரூ GST 18% உடன் கட்டுகிறேன். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி... ஜெயக்குமார் சாருக்கு கழுக்குக்கண்!

   தொலைக்காட்சி கூட இல்லாதிருக்கலாம், இணையம் இல்லாமல் இருக்க முடியாது!

   நீக்கு
  2. டிவி, இண்ட்டெர்நெட்,
   3 மொபைல்கள் (unlimited) எல்லாம் சேர்ந்து 'ஒன் ஏர்டெல்' என்ற பெயரில் மாதம்
   ரூ. 2350/- ஆகிறது எனக்கு. வீட்டில் அத்தனை கனெக்‌ஷனும் ஏர்டெல் குடையின் கீழ். இதை ஏர்டெல் ஃபேமலி என்கிறார்கள்.

   நீக்கு
  3. நாங்க ஏ சி டி ஃபேமிலியாக்கும்!!

   நீக்கு
 4. ஊபர், ஓலா -- என்று எல்லாத்திலேயும் உங்களுக்கு ஏற்படிருக்கிற அத்தனை தொந்தரவுகளும் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது தான். இருந்தாலும் 10 மைல் தொலைவில் இருந்து கொண்டு நடு மத்தியான வேளையில் வீட்டுக்கு வர வேண்டுமானால் சென்னையில் தனிப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் கேட்கும் தொகைக்கு ஊபர் காரில் போய்விடலாம் என்றே தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால்தானே ஜீவி ஸார், இத்தனையையும் மீறி அதைக் கட்டித் தொங்கி கொண்டிருக்கிறேன்...!

   நீக்கு
  2. பின்னே? அவர்களுக்கும் அது லாபம் தான். ஆனால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் .. ஊபர், ஓலா போட்டிருப்பதால் பயங்கர நஷ்டம் அடைந்து இருப்பதாக சொல்வார்கள்...

   நீக்கு
 5. காலைல சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறங்கினா, பக்திமயமா ஏகப்பட்ட ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் வருவாங்க. அவங்க சவாரி காசைச் சொல்லும்போதுதான் வண்டி ஓட்ட வந்தவங்க இல்லை, சொத்தைக் கொள்ளையடிக்க வந்தவங்கன்னு தெரியும்.

  அதற்கு ஊபர் ஓலா எவ்வளவோ பரவாயில்லை. இருந்தாலும் இவற்றை இன்னும் மேம்படுத்தலாம். இந்தியர்கள் குணத்திற்கு சேவையைச் சிறப்பாகத் தரமுடியாது (ஓட்டுநர்களின் ஏமாற்றுவேலை, நேர்மையின்மை, பேராசை போன்றவைதான். இவங்க சிங்கப்பூர் மலேஷியால ஓட்டினாங்கன்னா இரண்டாம்நாளே சிறைத்தண்டனை உறுதி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இம்மாதிரி சட்டங்கள் இங்கு கொண்டு வர முடியாதே என்பது ஏக்கமாகத்தான் இருக்கிறது

   நீக்கு
 6. ஆட்டோவின் பின்புறம்.... அவங்களுக்கு எப்போ சட்டம்னு ஒண்ணு இருந்தது?

  பதிலளிநீக்கு
 7. கிபி, கிமு மாதிரி கொரானாவிற்கு முன், கொரானாவிற்கு பின்
  என்று எல்லா நுகர்வோர்
  அயிட்டங்களிலும் விலை கூடியிருக்கிறது.
  மின்சாரம், சொத்து வரி, குடி நீர் வடிகால் வாரிய வரி -- இதெல்லாம் திமுக ஆட்சிக்கு முன் -- திமுக ஆட்சிக்குப் பின் என்று
  இரண்டு நிலைகளில்
  முந்தைய தொகைக்கு
  50% அதிகமாகியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. சில நேரங்களில் என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதே ஜெயகாந்தன் நினைவு வந்து விடுகிறது.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 10. // இவங்க சிங்கப்பூர் மலேஷியால ஓட்டினாங்கன்னா இரண்டாம்நாளே சிறைத் தண்டனை..//

  அன்றைக்கே கூட உள்ளே போகும் படியும் நேரலாம்..

  பதிலளிநீக்கு
 11. பாலகுமாரன் என்றால் பாலகுமாரன் தான். கல்கியில் வெளிவந்த அவரது இரண்டாவது சூரியன் நாவலை யாராவது வாசித்திருக்கிறீர்களா? வைரஒளி டாலடிக்கும் நாவல்.

  இ.சூ. பற்றி எபி சனிக்கிழமைக்கு நான் எழுதியதாக நினைவு.

  பதிலளிநீக்கு
 12. // அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும்,.. //

  இதை ஏற்கனவே படித்த மாதிரி இருக்கின்றது..

  இருந்தாலும் வயிர முத்தனார் இதிலெல்லாம் கில்லாடி..

  பதிலளிநீக்கு
 13. ஹிஹி.. எந்த அலுத்துப் போதலுக்கும் இந்த விட்டு விலகலே மருந்தாகும்.!!!!

  பதிலளிநீக்கு
 14. வீட்டு மாப்பிள்ளையா அவர்?! //

  ஹாஹாஹாஹா....மாப்பிள்ளையும் முறுக்கிக்குவாங்க....ஓ நீங்க 'வீட்டு' மாப்பிள்ளைன்றீங்களா!!!!

  //உங்கள் அபிப்ராயம் என்ன?//

  வரும்படியை விடாத மாப்பிள்ளை!

  கொள்ளை, ஏமாற்று வேலை ஸ்ரீராம்.

  ஊபர் ஓலா நஷ்டம்னு சொல்லிக்குவாங்க ஆனா நஷ்டம்னு சொல்லிட்டே அதுலதான் ஓட்டறாங்க!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நஷ்டம்னு சொன்னாதானே இன்னும் இருபது ரூபாய் எக்ஸ்டரா வாங்க முடியும்!

   நீக்கு
 15. இங்க ஊபர் ஓலா ஆட்டோக்கள் கொள்ளைன்னு அவங்க இனி ஊபர் ஓலா ல ஓட்டக் கூடாதுன்னு அரசு சொல்லிருக்கறதா செய்தி வந்தது அதுக்கு அப்புறம் இப்படி செய்தி

  Karnataka High Court allows Ola, Uber, Rapido to offer autorickshaw services by collecting 10% additional charge on fares fixed by government
  This will be a temporary measure till Karnataka Government fixes fares based on Motor Vehicles Aggregator Guidelines issued by Centre

  கீதா

  பதிலளிநீக்கு
 16. Uber, Ola - பெங்களூரு எப்படி...? அங்கும் பொங்கல் தானா...?

  சகோதரி கீதா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி முந்தைய கருத்தைப் பாருங்க.

   இதுவரை நாங்கள் ஊபர் ஓலா பயன்படுத்தியது அபூர்வம். பெரும்பாலும் பேருந்துகள்தான். சமீபத்தில்தான் பயன்படுத்தும் சூழல். ஓட்டுநர்கள் பிரச்சனை பண்ணவில்லை. ஆனால் ரேட் மிக மிக மிக மிக அதிகம். நம் வீட்டிலிருந்து 12 நிமிட நடையில் இருக்கும் மருத்துவமனைக்கு ஊபர், ஓலா கார்கள் 105, 102, 110 என்றுதான் சார்ஜ். அதுவும் நடக்க முடியாதவரை அழைத்துச் செல்தல் வருதல் என்பதால் கொடுத்துத்தானே ஆக வேண்டியிருக்கு. ஊபர் ஓலா ஆட்டோ சார்ஜ்ஜும் கிட்டத்தட்ட அதே...சாதாரண ஆட்டோக்கள் என்றால் நாம் மல்லுக்கு நிற்பார்கள். ஊபர்/ஓலா என்ன ரேட் காட்டியது என்பார்கள். அதைவிட 20 ரூ கூட்டித் தாருங்கள் என்பார்கள்.

   ஒரு சில சமயங்களில் மிகவும் நியாயமான ஊபர் ஓலா அல்லாத ஆட்டோக்கள் கிடைத்திருக்கின்றனதான்.

   பொதுப் பேருந்தில் நிறைய தூரம் அல்லது பல இடங்களுக்குப் பயணிக்க வேண்டும் என்றால் ரூ 70 கொடுத்து டே பாஸ் வாங்கி வைத்துக் கொண்டுவிடலாம். ஆதார் கார்டை காட்ட வேண்டும். இப்படித்தான் நாங்கள் பயணிப்பது.

   கீதா

   நீக்கு
 17. ஜெயகாந்தன் அவர்களின் பெண் சூப்பர் பதிலடி.

  கீதா

  பதிலளிநீக்கு
 18. ஆட்டோவின் பின் பக்கம் - ஹாஹாஹாஹா உண்மை விளம்பி!

  கீதா

  பதிலளிநீக்கு
 19. ஸ்ரீராம் ஊபர் ஓலாவுக்கே இப்படித் தினமும் கொடுப்பதே பயங்கரமா இருக்கே.

  கீதா

  பதிலளிநீக்கு
 20. ஜெயகாந்தன் விஷயம் முன்னர் இங்கு வாசித்தது போல நினைவு. அதனால் என்ன....

  கீதா

  பதிலளிநீக்கு
 21. முதல் பனிப்பாறை சிங்கம் அமர்ந்து வாயைத் திறந்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது

  நீர் ஏன்
  மலையானது//

  உறை குளிரினால்....

  மலை ஏன்
  சிலையானது.....

  இயற்கை கலையினால்...!!!

  ஏதோ ஒரு பாட்டு நினைவுக்கு வருதே!!! கேள்வியும் பதிலுமாய்.....அதில் பாடினால் ஃபிக்ஸ் ஆகுது...

  ரசித்தேன் படத்தினையும் உங்கள் வரிகளையும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இரண்டாவது படம்...

  இப்படி அலை எழும்புமே இல்லையா....5 தலையோ 10 தலையோ நாகம் படமெடுப்பது போல் அதை நினைவுபடுத்துகிறது.

  'ம்ம்ம் யாரும் இல்லைப்பா கொஞ்சம் துள்ளிக் குதிப்போம்'னு நினைச்சு அலை எழுந்து துள்ளப் போகும் போது....நம்மள மாதிரி ஒரு ஆள் 'ஆஹா அழகான ஷாட் எடுக்க வாய்ப்புன்னு' க்ளிக் பண்றதைப் பார்த்ததும்....அப்படியே நின்னுருச்சோ என்னவோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 23. கமலாக்கா வந்திருந்தா இன்னும் கற்பனையில் நிறைய எழுதியிருப்பாங்க!!!! இந்த உறை பனி படங்களுக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  அவர்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி. 

   கமலா அக்கா...  எப்படி இருக்கீங்க?

   நீக்கு
 24. ஒன்று மட்டும் தெரிகிறது ஜி
  நீங்கள் ஊபரோடு போராடி வாழ்கிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 25. எழுப்பும் மனிதர்கள் - அட நல்ல ஈசி பணி போல...வேலை இருந்தா சொல்லுங்க!!!!

  இந்தப் படமும் பார்த்தாப்ல நினைவு...
  ஹையோ இன்னிக்கு கீதாக்கு என்னாச்சு...மறதி கேஸு.... இன்னிக்கு..ஒரே அடியா மெமரி பின்னோக்கிப் போயிருச்சோ...!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. கடைசி பாரா அதே அதே....
  ஆனா காபி மட்டும் அலுக்கலயே எனக்கு.....
  சாப்பாடு மாத்திக்கலாம்....எனக்கு எப்போதுமே எதிலும் புதுசு புதுசா செய்வது ரொம்பப் பிடிக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. இன்றைய uber பதிவு, இப்படியும் ஏமாற்றுகிறார்களா என வியக்க வைக்கிறது...நல்ல வேளையாக நான் சென்னையில் இல்லை. எங்கள் சேலத்தில் என்ன ஒரு சிறப்பு என்றால், நீங்கள் எங்கு இருந்தாலும் அரை மணி நேரத்தில் டவுனுக்கு வந்துவிடலாம். இங்கும் பாலங்கள் வேலை நடை பெறுவதால் டிராபிக் ஜாம் ஆவது உண்டு. இருப்பினும் அங்கு போல இல்லை என நினைக்கிறேன். இங்கு வாடிக்கையாக வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்டு. ஏமாற்றுபவர்கள் மிக குறைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே சேலமா?  போன வாரம் சேலம் வந்து வந்தேனே..  அழகான ஊருங்க..  அப்புறம் எல்லா ஊர்லயும் எல்லா வியாபாரத்துலயும் பொய் இருக்குங்க...

   நீக்கு
  2. கோயம்புத்தூர் பகுதிகளில் ரெட் டாக்சி (திருச்சில எல்லாம் கீதாக்கா சொல்வாங்களே), கோ டாக்சி நன்றாகச் செயல்படுகின்றன.

   கீதா

   நீக்கு
 28. Knocker's uppers- சோம்பேறி மனிதர்களுக்காக....நமக்கு தான் கோழி கூவி எழுப்பிடுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோழி கூட வேண்டாங்க...   பயலாஜிக்கல் க்ளாக் எழுப்பிடுது.  இது ரொம்பப் பழைய காலத்துப் படம்.

   நீக்கு
 29. அருமையாய் காபியும், சுவைமிகுந்த உணவும் இருந்தாலும், சாப்பிட நேரம் இருப்பதில்லை ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு கையில் காஃபி, மறு கையில் வேலை..  கலக்கலாமே..    அதுசரி, அடுத்த படைப்பு ஒன்றும் அனுப்பப் காணோமே நீங்கள்..

   நீக்கு
 30. ஊபர் சில சமயங்களில் இங்கும் சிக்கும்.. பணத்தில் செலுத்துவதாக சொன்னால் உடனே வருவார்கள் . காட் பேமன்ற் என்றால் இழுத்து அடிப்பாங்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கார்ட் பேமெண்ட் என்றால் இங்கும் வரமறுக்கிறார்கள்.  என்ன கொடுமை தெரியுமா..

   நீக்கு
 31. கடவுளுக்கு நன்றி. இந்த ஊபர், ஓலாவிடம் எல்லாம் மாட்டிக்காமல் இருப்பதற்கு. இங்கே லோகல் ட்ரிப் என்றால் ரெட் டாக்சி தான். பாகேஜ் இருக்கு. பிரச்னை இல்லை. ஆட்டோ என்றாலும் தெரிந்த ஆட்டோக்காரங்க இருவர் இருக்காங்க. நம்பி அழைக்கலாம்.

  பதிலளிநீக்கு
 32. கடைசிப்படத்தில் உள்ளது போல் வென்டிலேலர்களைத் திறக்கும் கயிறு ராணுவக் கன்டோன்மென்ட் குடியிருப்புக்களில் உண்டு. மாலை ஆனால் இழுத்துச் சார்த்துவோம். காலையில் திறப்போம். அவ்வளவு உயரத்தில் இருக்கும் வென்டிலேஷன். அதற்கும் மேல் இரண்டு கூரைகள். ஒண்ணு ஃபால்ஸ் ரூஃப் எனப்படும் கலவையில் போட்டது. அதற்கு மேல் மரத்தால் ஆன கூரை. அதற்கும் மேல் ஓடு போட்ட அந்தக்காலத்து பிரிட்டிஷ் மாடல் கூரை.

  பதிலளிநீக்கு
 33. வைரமுத்து விஷயம் தினசரிகளில் கூடச் சிரிப்பாய்ச் சிரிச்ச நினைவு.

  பதிலளிநீக்கு
 34. யாரோ ஒரு ராக்ஷசன் வாயைத் திறக்கிறாப்போல் இரண்டாவது படமும், எகிப்திய மம்மியை நினைவூட்டும் முதல் படமும். என்னோட பார்வையில் இப்படித்தான் தெரியுது. அது சரி, இந்த வாரம் நகைச்சுவைத்துணுக்குகள் எதுவும் இல்லையா?

  பதிலளிநீக்கு
 35. ஊபர் ஓலா பழக்கமில்லை. எங்கள் பகுதியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

  எங்கள் பகுதியில் இருந்தால் உங்களுக்கு கேட்ட்கும் சார்ஜ் விட மூன்று மடங்கள் நான்கு மடங்கு கேட்க வாய்ப்புண்டு. மலைப்பிரதேசம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 36. பனி உறைந்து வடிவமாக இருக்கும் படங்கள் அழகாக இருக்கின்றன.

  இரண்டாவது படம் சுனாமியை நினைவுபடுத்துகிறது

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!